Monday, January 11, 2021

முலை - 2

முலையை அடுத்து முலையிருக்கும் தளமான மார்பிற்கு வருவோம். இது மார்புக் கூட்டின் முன்பக்கம் (frontside of the chest). மார்பும் முலைச் சொற்பிறப்போடு தொடர்புற்றதே. 

முல்> மல் >மல்கு>மல்கு-தல்= பெருகிக் கிடத்தல். அதிகமாதல், நிறைதல், செழித்தல், 

மல் = வளம், மல்லை = வளம், பெருமை; மல்லல் = மிகுதி, பொலிவு, அழகு; 

நிலத்தில் மல்லிப் பெருகியது மலை. 

உடல் தசைகள் வளர்ந்து பெருகுவதை மல்லாகுதல் என்பார். மல் ஆனவன் மல்லன். மல்+தொழில்= மற்றொழில்= இருவேறு மல்லர் தம் வலிகளைக் காட்டிப் போர்புரிதல். 

மல்காத்தல்= மல்லாத்தல்= மல்லார்தல்= தன் மல்லைக் காட்டி மேனோக்கிக் கிடத்தல், மலர்ந்தாற் போல் கிடத்தல். (”மல்லாக்கப் படுக்காதே, ஒருக்களிச்சுப் படு” என்று பெரியோர் பிள்ளைகளுக்குச் சொல்வார்,.) , 

மல்ங்கியவள் (முலை எழத்தொடங்கிய நிலையில் உள்ளவள் ம(ல்)ங்கை>மங்கை எனப்படுவாள். 

மல்> மர்> மறு> மறம். மல்லைக் காட்டிப் போர்புரிவோன் மறவனென்றும். பெண் மறத்தி என்றும் சொல்லப்பட்டாள். மறவன், மறத்தி காட்டுந் திறன் மறமானது. 

மல்லம்= மல்லிக் கிடக்கும் கிண்ணம். (முலைக்கு இன்னொரு பெயர்),

பள்ளியறை; மலுந்து கிடத்தல்= மகுந்து கிடத்தல்.(சிவகங்கைப் பக்கம் பயிலும் சொல். நிறைந்து கிடப்பது என்று பொருள் கொள்ளும். 

மலர்= முலை போல் விரிந்தது. 

மலிதல், மலிர்தல்= மிகுதல், நிறைதல், விம்மல், to become large, பரத்தல். 

மலிபு= மிகுதி. 

முலையில் பால் ஒழுகுவதால், முல்லின் திரிவான மல்லில், ”மலிர்தல் = நீர் ஒழுகுதல்; மலிகு =நீர் ஒழுக்கு” போன்ற சொற்கள் எழும். 

”மலிகு” என்ற தமிழ்ச்சொல் இந்தையிரோப்பியன் milk ஓடு இணைவு காட்டும். 

பிள்ளை பெற்ற பெண்ணே, முலைப் பால் கொடுக்கமுடியும். பிள்ளை பெறவியலாத, பால் கொடுக்கவியலாத பெண் குமுகத்தில் மலடு எனப் பட்டாள். மலடி= மலடான பெண். மலடன்= பெண், பிள்ளை பெறுவதற்கு விந்து கொடுக்க இயலாத ஆண். மலட்டு ஆ = ஈன முடியாத பசு. மலட்டாறு = நீர் வற்றிய ஆறு. (இங்கே நீரும் பாலும் ஒப்பிடப் படுகின்றன.) 

மல்> மள்> மழ = மல்லி விரியும் இளமை  

மளமள= விரைவுக்குறிப்பு. பெருக்கம் குறிக்கவும் பயன்படும். ”மளமள என வளர்ந்தான்”. மளமள> மடமட. ”மடமட என நடந்தது”, 

மளிகை= விற்கவேண்டிப் பெருகிக்கிடக்கும் பலசரக்கு. 

மள்> மளு> மளுகு> மருகு> மருவு> மருபு> மார்பு. மார்பு என்ற சொல் முலையின் நீட்சியாய் வளர்ந்தது. மார்பை மாரென்றும் சுருங்கக் குறிப்பார். மார்க்கச்சை= முலைக்கச்சை. 

மார்பிற்கு வேறு சொற்களாய் அகலம், மருமம், ஆகம், உரல்/ம் என்பவற்றைத் திவாகரமும், இவற்றோடு நெஞ்சைச் சேர்த்துப் பிங்கலமும், சூடாமணி நிகண்டும் தரும். 

தொல்காப்பியத்தில் புழங்கும் ”நெஞ்சு”, திவாகரத்தில் விடுபட்டது, வியப்பைத் தருகிறது. மார்புக்கு மேல் முலை, முலைக்கு மேல் முலைக்கண். 

மார்பின் பின்னுள்ளது முதுகு/புறம். அகலமும், ஆகமும் ஒரேமாதிரி எழுந்தவை. 

உடம்பின் வெளித்தெரி உறுப்புகளில் மார்பே அகலமானது. அகல்> அகல்வு> அகவு> அகவம்> ஆவம்> ஆகம். 

மார்பின் 2 பரிமானக் குறிப்பு நெஞ்சு. துணி நெய்கையில் வார்ப்பு நூலும் (warp thread) ஊட்டு நூலும் (weft thread) பின்னிப் பிணைந்து நெய்யப் படும், 

நெய்வு> நெசவு. நெய்ந்தது> நெய்ஞ்சது> நெஞ்சு. நெஞ்சாங் கூடு = நெஞ்சோடு சேர்ந்த என்புக் கூடு (chest). ஆங்கிலச் சொற்பிறப்பும் இக் கூட்டுப்பொருளை அழுத்தும். chest (n.). Old English cest "box, coffer, casket," usually large and with a hinged lid, from Proto-Germanic *kista (source also of Old Norse and Old High German kista, Old Frisian, Middle Dutch, German kiste, Dutch kist), an early borrowing from Latin cista "chest, box," from Greek kistē "a box, basket," from PIE *kista "woven container" (Beekes compares Middle Irish cess "basket, causeway of wickerwork, bee-hive," Old Welsh cest).

அகலம், ஆகம் போல், மருமமும் மார்பும் ஒரேவிதச் சொற்பிறப்பைக் கொண்டவை.  

மருவுதல்= மார்பில் தழுவுதல். 

மருமகள்/ன் = தழுவிக் (ஏற்றுக்) கொண்ட மகள்/ன். 

மருவீடு = சம்பந்தி குடும்பம். 

மருவுகை= marriage. தமிழ், இந்தையிரோப்பிய உறவைப் பாருங்கள். ஆணும் பெண்ணும் தழுவும் போது, இணையும் பகுதி மருவு> மார்வு> மார்பு எனப் பட்டது. குறிப்பிட்ட விட்டத்திற்குச் செடியின் தண்டு வளர்ந்த பின், வளைக்க முடியாத திண்மையை அது பெறும். அதன்பின் அதை மருவ மட்டுமே முடியும். 

செடி மரமானதாய்ச் சொல்வோம்.. மருவக் கூடியது  மரம். மருவும் தேவையின்றி இளமையில் இருந்தபோது வளைத்துச் செழித்தது செழி> செடி.

மருவுதலுக்கு வேறு திரிவுமுண்டு. மகரம் வகரப்போலி ஆகையால் மருவுதல்>மருமுதல் ஆகும். அதில் உருவான பெயர்ச் சொல் தான் மருமம். 

மருமம் என்பது மம்மம் என்றும் திரியும். மம்மல் (mammal) என்பது முலையுள்ள பாலூட்டி விலங்கு .உர்>உறு என்பதும் உரல் = தழுவலைக் குறிக்கும். உரம் என்ற பெயர்ச் சொல் இதில் உருவானது, மார்பைக் குறிக்கும் இங்கு மேலே குறித்த எல்லாச் சொற்களும்  தழுவல் கருத்தில் உருவானவை ஆகும்.

மல்>மள்>மளு>மடு என்பது பசுவின் முலையைக் குறிக்கும். மடு>மடி என்ற நீட்சியும் அதே பொருள் கொள்ளும். masto, mazo போன்ற இந்தையிரோப்பியச் சொற்கள் மடுவொடு தொடர்புற்றவை. 

மடு கொடுக்கும் பருவங் கொண்டவள் மடந்தை. மங்கைக்கு அடுத்த பருவம். மடுத்தலுக்கு பால் ஊட்டுதல் என்றும் பொருள். 

பின்னால் உணவூட்டுதலுக்கும் இச்சொற்பொருள் நீண்டது. மடு> மடை, மடைத்தல், மடைப்பள்ளி  போன்ற சமையல் தொடர்பான சொற்கள் இப்படிக் கிளைத்தவையே. 

முள்> மள்> மட்டு என்பது ஒரு காலத்தில் பாலைக் குறித்திருக்கலாம் என ஊகிக்கிறோம் . இன்று அச்சொல் தேன், கள், சாறு, பருகம், மதுச் சாடி, மணம் என்ற பொருட்பாடுகளையே குறிக்கிறது. 

முட்டு> மட்டு  என்பது ”நிறைந்தது” என்றும் பொருள் கொள்ளும். மட்டு>மட்டம்= கள். 

மட்டு> மத்து> மத்தம்= களிப்பு. மத்து> மது - தேன், கள், பால் (இதுவும் இக் காலத்தில் பாலைக் குறிக்கவில்லை.) மத்தன்= பித்துப் பிடித்தவன்; மத்து = மயக்கம். 

மாந்தப் பாலுக்கு மாறாய், பசுவின் மடுவழியே பாலைக் கறக்கிறோம். இப்படி மடுக் கொடுக்கும் விலங்கு மாடு என்றே சொல்லப் பட்டது, முதலில் பசுவைக் குறித்துப் பின் காளையையும் குறிக்கும் பொதுப் பெயராயிற்று.

மடு, மடியைப் புரிந்துகொண்டால், ஏராளம் கலைச்சொற்களைப் படைக்க முடியும். கீழே மடுவைப் பயன்படுத்தியுள்ளேன். (மடியையும் பயனுறுத்தலாம்.) 

முதலில் வருவது gynecomazia (s) = கன்னுமடு ஆகல் , The abnormal proliferation or enlargement of the glandular component of breast tissues in males: Gynecomazia is strictly a male disease and is any growth of the adipose (fatty) and glandular tissue in a male breast. 

Not all breast growth in men is considered abnormal, just excess growth. gyneco என்பதைக்- கன்னுகை எனலாம். 

கன்றுதல்> கன்னுதல்= குட்டி போடுதல். கன்னி = பிள்ளை பெறக் கூடியவள். இன்று இப்பொருளோடு, மணமாகாதவள் என இன்னொரு வரையறையும் சேர்க்கிறோம். also gynaeco-, before a vowel gynec-, word-forming element meaning "woman, female," from Latinized form of Greek gynaiko-, combining form of gynē "woman, female," from PIE root *gwen- "woman."

அடுத்தது mastoplasia மடுப் பெருகை, mastoplastia (s) (noun). Enlargement of the breasts or the development of breast tissue: A mastoplasia is considered to be an abnormal multiplication or an increase in the number of normal cells of mammary gland tissue.

mazodynia மடுத் தினவு (s) (noun), A mazodynia is a pain in the breast.

mazologist மடுவியலார் (s) (noun), Someone who studies the animal class of Mammalia which refers to warm-blooded creatures that have body hair and feed milk to its young.

mazology மடுகளியல் (s) (noun), The branch of zoology that studies mammals which is a class of vertebrates with characteristics; such as, fur, blood, four-chambered hearts, and complex nervous systems.

mazomancy மடுக்குறிகை (s) (noun). Divination or predicting the future while observing babies when they are nursing. 2. Etymology: derived from the Greek mazos, "breast" and manteia, "prophecy".

mazomantist மடுக்குறியாளர் (s) (noun), Someone who predicts the future while watching a baby nursing milk from his or her mother.

mazopathy (s) மடு நோய் (noun), Any disease of the placenta or of the female breast.

mazophile (s) மடு விழையர் (noun), Someone who is sexually stimulated or excited by female breasts.

mazophilous (adjective) மடு விழை Pertaining to or referring to mammary mania or an excessive interest in breasts.

mazophily (s) (noun) மடு விழையம் A clinical term that is expressed when a person is sexually stimulated by female breasts and it is probably one of the most universal forms of sexual desires among normal men and teenage boys.

mazoplasia (s) மடுச் சிதைவு  degenerative condition (gradual deterioration) of breast tissue.

tetramastia, tetramazia (s) (nouns). நால்மடு A condition characterized by the presence, normal or abnormal, of four breasts or mammary glands: There are some animals that have tetramastias; however, it is extremely unusual for a human to have them.

mastoid (adj.) மடுகை "breast-shaped, teat-like, resembling a (female) breast or nipple," 1732, from Greek mastoeides "resembling a breast," from mastos "(woman's) breast" (see masto-) + -oeides "like," from eidos "form, shape" (see -oid). As a noun, 1800, from the adjective.

masto- மடு.மடி before vowels mast-, word-forming element meaning "female breast, mammary gland," from Greek mastos "woman's breast," from madan "to be wet, to flow," from PIE *mad- "wet, moist, dripping" (source also of Latin madere "be moist;" Albanian mend "suckle;"

இப்போது சொல்லுங்கள். முலை என்பது செகையுறுப்பா? முலையைப் பற்றிப் பேசிய ஆண்டாள் தவறா? எனக்கு அப்படித் தோன்றவில்லை. 

”பார்வையில் இருக்கிறது நம் புரிதல்”. [அவையில் சொல்லக் கூடாத கந்தனுக்கு ------ என்று தொடங்கும் பழமொழி ஒன்று எனக்கு நினைவுக்கு வருகிறது.] 

அன்புடன்,

இராம.கி. 


Sunday, January 10, 2021

முலை - 1

குத்து விளக்கெறியக் கோட்டுக்கால் கட்டில்மேல் 
மெத்தென்ற பஞ்ச சயனத்தின் மேலேறிக் 
கொத்தலர் பூங்குழல் நப்பின்னை கொங்கைமேல்  
வைத்துக் கிடந்த மலர்மார்பா ! வாய்திறவாய் ;  
மைத்தடங் கண்ணினாய் ! நீ உன் மணாளனை
எத்தனை போதும் துயிலெழ ஒட்டாய்காண் ; 
எத்தனை ஏலும் பிரிவாற்ற இல்லாயேல் 
தத்துவ மன்று தகவேல் ஓர் எம்பாவாய் 

என்ற ”திருப்பாவை 19 ஆம் பாட்டின் பொருள் புரிகிறதா? பெண் பக்தியாளரும், புலவருமான  "ஆண்டாள் "  பாடியது. எவ்வளவு SEXY யாக உள்ளது !!! மார்கழியில் இப் பாடலையே கடவுளுக்காகப் பாடுகிறார் !!!!!” என்று ஒரு முகநூல் இடுகையில்  பகுத்தறிவுத் திராவிடர் ஒருவர் கேலி பேசினார். அதிர்ந்து போனேன். ஒருவேளை இவர், ”கவிதைக்கு வீசை என்ன விலை?” கேட்பவரோ? - என்று கூடத் தோன்றியது.  

காலமெலாம் அகம், புறம் பேசிய தமிழரிடை,  இன்னுஞ் சொன்னால் தமக்கும் இறைவனுக்கும் நடுவே நாயக, நாயகி பாவத்தைப் பொருத்திப் பற்றியியக்கம் வளர்த்த தமிழரிடை, ”உடல் வருணணையே செய்யக் கூடாது, வெறுமே கட்டுப் பெட்டியாய்த் தோத்திரம்  மட்டுமே பாடு” என்கிறாரா? - என்றும் தோன்றியது. வேறொரு நண்பர் கேட்டதால்,  முலைத்தொடர் ஒன்றை இங்கு எழுத முற்படும் நானும் இவருக்குச் “செகையாளாய்த் (sexist)" தெரிவேனோ? என்னவோ?

ஆண்டாளே ஆபாசமெனில், (ஆப+ஆச= ஆபாச= முறையற்றது. சங்கதத்தில், “ஆப்”= அற்று. ஆச= ஆனது= முறை.)  நாமெங்கு போகிறோம்?  ”எது காதல்? எது காமம்? எது முறையற்றது?” என இவர்க்குச் சிறிதேனும் விளங்கியிருக்குமா? தெரியவில்லை. (எல்லா முறையற்ற செயல்களுக்கும் ”உரிமம் (licence)"வேண்டி நான் முழங்கவில்லை.) வாழ்வு முழுக்க வறட்டுப் பகுத்தறிவு பேசி  இலக்கியம் மறந்தாருக்கு என்ன தான் சொல்வது? வெறுமே நகர வேண்டியது தான், 

ஆணடாளைப் பார்ப்பனரென வையக் ”கொங்கைமேல் வைத்துக் கிடந்தது” இவருக்குச் சாக்காய் அமைந்ததுபோலும்,  ”கொங்கைமேல் கிடந்தது எதுவென ஓர்ந்து பார்த்தாரோ? பஞ்ச சயனமென்றது தவறா? நப்பின்னை யாரென இவர் அறிமோ? இயல்பு வாழ்க்கையைப் பேசும் இப்பாட்டைச் ”சிறுபிள்ளைகளுக்குச் சொன்னதெனத் தவறாய் எண்ணிக் கொண்டாரோ?” புரியவில்லை.   

இப்போதெல்லாம் ”விக்டோரியத் தூயவியம்” என்பது இங்கே வலிந்து பரப்பப் படுகிறதோ?- என்ற ஐயமும் என்னுள் எழுந்தது. 

”குலப்பெருமைக் (honor) கொலைகள், வெவ்வேறு சாதியார் மோதல், சாமியார் பின்னோடல்” எனக் குமுகாயம் சீரழிவதைக் காணுகையில், தமிழ்க் குமுகத்தில் அடித்தானவியம் ( fundamentalism) என்பது விரவி வருவதும் புலப்பட்டது. (வரலாற்றைப் பார்க்கின் 300, 400 ஆண்டுகள் இதில் ஆழ்ந்து தோய்ந்து தமிழ்க் குமுகம் சீரழிந்தது புலப்படும்.) 

இதே போக்கு எதிர்காலத்தில்  நீடிக்குமெனில், சங்க இலக்கியத்தையே தூக்கி நாம் கடாச வேண்டுமோ என்று கூடத் தோன்றும். இந்நிலையைத் தூண்டுவதில் தூயவிய இந்துத்துவரும், பகுத்தறிவுத் திராவிடரும் ஒன்றாய் இயங்குகிறார். இந்துத்துவர் கவிஞர் வைரமுத்தைச் சாடியதற்கும், பகுத்தறிவர் ஆண்டாளைச் சாடுவதற்கும் என்ன வேறுபாடு? 

”முலை”ப் புரிதலென்பது இன்று நேற்று எழுந்ததல்ல. ஆகப் பழஞ்சொல். பெண்ணோடு ஆணுக்கும் முலையிருப்பினும் (பருத்தது breast), இரு பாலருக்கும் பல்வகை உடற்கூற்று வேறுபாடுகளுண்டு, 

பெண்முலை சற்று விதப்பானது. ”கண்ணும் தோளும் முலையும் பிறவும்”- தொல்காப்பியம் சொல். கிளவி: 62/1; ”முலையும் முகனும் சேர்த்திக் கொண்டோன்” என்பது அதே நூலில்- பொருள். புறத்: 24/16 என்ற இடத்தில் வரும். எட்டுத்தொகை, பத்துப்பாட்டிலும் 189 இடங்களில் ”முலை”என்ற சொல் பேசப்படும். முலை பற்றிப் பேசியவரெலாம் வெறிபிடித்த செகையாளரா? 

காப்பியங்கள், தேவாரம், நாலாயிரப் பனுவல், இராம காதை, இற்றைக் கவிஞர், எழுத்தாளர் வரை நம்மூரில் முலை தொடர்ந்து பேசப்பட்டது. யாருக்கும் அது வெட்கமாய்த் தெரியவில்லை. 

கீழே தரப்படும் சொல்விளக்கத்தைப் பார்த்தால் நான் சொல்வது புரியும். ஆயினும் ”ஆண்டாள் சொல் SEXY” என்று பகுத்தறிவர் சொல்ல முற்படுவது விந்தைக் குற்றச்சாட்டு, இரோப்பா போய்வந்தபின் பெரியார் வெளியிட்ட திருமணக் கருத்துகளை எல்லாம் திராவிட நண்பர் இப்போது மறந்தார் போலும்.  சரி, முலையின் சொற்பிறப்பிற்கு வருவோம். 

முல்லி, முன்வந்தது முலை. 

நகிலமும் நுல்> நுகு> நுகில்> நகிலம்= முன்வந்தது என்றாகும். 

குல்> குள்> கொள்> கொண்+கை= கொங்கை, இது மேட்டைக் குறிக்கும். 

குல்> குள்> கொள்> கொண் +மை= கொண்மை> கொம்மை. இதுவும் மேட்டுப் பொருளில் எழுந்ததே. பறம்பு= மலை போன்றது.  

ஆண்முலைக்கு இல்லாத பெண்முலையின் விதப்பான துளையை ஒட்டிச் சொற்கள் அடுத்து எழும்பும். 

குள்> குய்> குயம்= துளையுள்ளது,  முலைத்துளை வழியே குழவிக்குத் தாய் பால் கொடுக்கிறாள் 

குல்> குரு> குருக்கண் என்பதும் ”துளையுள்ளதே”. 

சுல்> சொல்> சொள்> சொட்கு> சொக்கு> சொக்கம்> சொர்க்கம் = பால் சொட்டும் துளை. 

துல்> துன்> துனம்> தனம் = துளையுள்ளது, 

இன்னொரு வழியில் குல்> குள்> கொள்> கொண்> கொண்+கை = கொங்கை, = பால் கொண்டது என்றும் பொருளுண்டு. அதேபோல் கொம்மையும் ”பால் கொண்டதே”. நகிலமும் “பால் கொண்டதெனும்” பொருள் காட்டும். 

இன்னொரு கூட்டுச்சொல்லும் உண்டு. பயத்தல் = தருதல். பயம் =  முலை வழி தரும் பால். உதரம்= உதிக்குமிடம், வயிறு போன்றது. பயம்+உதரம் = பயோதரம் = பாலுதிக்கும் இடம். (பால்) தரும் மாடு = (பால்) பய(க்கும்) மாடு. 

பாலைத் தொக்கி, வெறுமே ஒரு பாலூட்டி விலங்கு பயப்பதை மட்டும் உணர்த்துவது பயு>பசு என்ற சொல்லாகும். இதுவும் தமிழே. அறியாதோர் இதைச் சங்கதம் என்பார். பயசெனினும்  பாலே. 

முலைக்கோள்= முலையைக் கொள்ளல்= பால் குடித்தல்; முலைக்கொள் = பால்குடி. நம்முடைய ”முலைக்கொள்” என்ற இந்தச் சொல் பெயராகவும் இயங்கும். முலைக்கொள்ளும் இந்தையிரோப்பிய ”milk” என்பதும் தொடர்பு காட்டுகின்றன. மேலையர் milk இன் சொற்பிறப்பைச் சரியாக விளக்கார்,

 முலை என்பது sexy உறுப்பா? தாயை உணர்த்தும் சினையுறுப்பா? இரண்டும் தான். பாலுட்டிகளான மாந்தரின் பிறப்பையும், உடலமைப்பையும் நாமே நமக்குள் கேலிசெய்ய முடியுமா?  

Why do we feel ashamed about breast? கொஞ்சம் உரியல் (real) நிலையை உணர்வோமே? முலையால் நாம் ஏராளமான சொற்களைப் பெற்றுள்ளோம்.  

அன்புடன்,

இராம.கி.


Friday, January 08, 2021

மாதுளை

இரானில் பொ.உ.மு.2500 இல்  தொடங்கி பின் எப்போதோ இந்தியா வந்த Punica granatum (பெர்சியனில் அந்நார்)  இன் தமிழ்ப்பெயரான ”மாதுளை”யின் சொற் பிறப்பியலை நேற்றொரு நண்பர் கேட்டார், பெர்சியப் பெயர், அழனியைக் குறிக்கும் anNar (அரபிச்சொல்) வழி  எழுந்திருக்கலாமெனச் சிலரும், பழத் தோலின் துரு (anar; பெர்சியன்) நிறப் பொருத்தத்தால் ”அந்நார்” எழுந்து இருக்கலாமெனச் சிலரும். பண்டை மெசபட்டோமிய அக்கேடியன் சொல் nurmû வோடும்,  சுமேரியன் சொல் nur அல்லது nurma வோடும் தொடர்பிருக்கலாமென சிலரும் சொல்வர். துருக்கி, அசேரி, இந்தி, பஞ்சாபி, உருது, குருது, புசுட்டோ போன்ற மொழிகளில் இன்றும் ”அந்நார்” திரிந்தவண்ணம் பயில்கிற்து,  

பல் விதைகளும், செவ் வழுக்கையும் (red-pulp) கொண்ட, பெரு உருண்டைப் பழத்தை பொ.உ. 1300 இலிருந்து  pomegranate என அழைக்கிறார். இலத்தீனில் ”பல்விதைப் பழம் (pomum granatum)” என்பார்,. pome= apple,fruit; grenate= having grains, from granum= grain (from PIE root *gre-no- "grain"). தமிழில் மொழிபெயர்த்தால் இது ”பல்குருணைப்” பழமாகும். பல மொழிகளிலும், தமிழிலும் கூடப் பழப்பெயர் அளவிறந்த விதையிருப்பால்  ஏற்பட்டுள்ளது. எப்போது இப்பழம் நம்மூர் வந்தது என்று தெரியவில்லை.  2300-2000 ஆண்டுகள்  காலப் பெரும்பாணாற்றுப் படையின் 308, 307 ஆம் அடிகளில், “சேதா நறு மோர் வெண்ணெயின் மாதுளத்து உருப்பு-உறு பசும் காய் போழொடு கறி கலந்து” என்று மாதுளங்காய் பேசப்படும். சிலம்பின் மதுரைக்காண்டம் 16/25 இலும் :”வாள் வரி கொடும் காய் மாதுளம் பசும் காய்” என்று இதே மாதுளங்காய் பேசப்படும். 

”ஓங்கு தெங்கு இலை ஆர் கமுகு இள வாழை மாவொடு மாதுளம் பல” என்பது அப்பர் தேவாரம் 201/3.  ”உடையார் கன மணியோடு ஒண் மாதுளம் பூ - நாலாயி” என்பது நாலாயிரப் பனுவலின் பெரியதிருமொழி :45/1. ”தங்கிய பொன் வடமும் தாள நன் மாதுளையின் பூவொடு பொன் மணியும் மோதிரமும் கிறியும்” என்பது அதே பெரியதிருமொழி 73/2. ”மாதுளம் கனியை சோதி வயங்கு இரு நிதியை வாச” என்பது இராமகாதை, பால காண்டம் மிகை:0 4/1. மாதுளையோடு கழுமுள் என்ற சொல்லையும் நிகண்டுகள் அடையாளங் காட்டும். பரல், காழ், வித்து என்பவற்றோடு ”முத்தும்”விதைகளை உணர்த்தும் முத்துப் பரல், முத்து வித்து எனும் சொல்லாட்சிகள் பார்த்தால் மாதுளையின் சொற்பிறப்பினுள் முத்தின் முகன்மை புரியும்.

முழுமுழு, மொழுமொழு, கொழுகொழு, கழுகழு என்பன ”உருள்” உணர்த்தும் இரட்டைக் கிளவிகள். ”முழு” என்பது நிறைவையும். கோண மூலையிலாத உருண்மையையுங் குறிக்கும். முழுத்து> முழ்த்து> முட்டு> முத்து என்பது ”முழு”வின் இயல்பு வளர்ச்சி, முட்டு>முட்டை, அடுத்த வளர்ச்சி.;  மொழு> மொழுத்து> மொழ்த்து> மொட்டு> மொத்து >மொத்தை= உருண்டை. இது வித்தையுங் குறிக்கும். முடிமழித்த தலையை மொட்டை என்கிறோமே? மழித்தல் கூட மொழுவித்தலில் பிறந்த சொல்லே. மொத்தம்= முழுமை.  மோத்தை= இளந்தேங்காய்; மொட்டு விரியாத பூ; மழுத்திருப்பது> மகத்திருப்பது> மாத்திருப்பது.> மாத்திரை= குளிகை. அளவைக் குறிக்கும் மாத்திரையும், குளிகையைக் குறிக்கும் மாத்திரையும் வெவ்வேறு பொருளன.

மொத்துளம்பழம்= முத்துகள் நிறைந்த பழம். முத்து விதப்பால் பழப்பெயர் உண்டானது, மொத்தளம்பழம்>மோதுளம் பழம்>மாதுளம்பழம்>மாதுளை. மோது,  உருண்டையைக் குறிக்கிறது. மோதகம்= கொழுக்கட்டை (”மோதகம்” சங்கதமெனச் சிலர் தவறாய் எண்ணுவார்.  அது தமிழே.) ”கவவொடு பிடித்த வகை அமை மோதகம்/தீம் சேற்று கூவியர் தூங்குவனர் உறங்க” என்பது மதுரைக் காஞ்சி 626,627. ”காழியர் மோதகத்து ஊழ் உறு விளக்கமும்” என்பது சிலப்பதிகாரம் புகார்க் காண்டம் :6/137. “முட்டா கூவியர் மோதக புகையும்” என்பது மதுரைக் காண்டம்: 13/123. முன்சொன்னது போல் குளிகை= உருண்டை; பெருங்குளிகையைக் குறிக்கும் கோளத்திற்கும் உருண்டைப் பொருளுண்டு. கொழுகொழு>கழுகழு = உருண்டையாக கள்>கழு>காழ் = விதை; கழுமும் உள் = விதைகள் நிறைந்தது; கழுமுள் = விதைகள் உள்ளியது, இச்சொல்லும் மாதுளம்பழம் போன்ற சொற்பிறப்புக் கொண்டதே. 

பரல், பல்லுக்கான பெயர், முத்துப்போல் பல் என்கிறோமில்லையா? பல், பல்+து= பற்று எனும் வினையின் பகுதி. (பல்= வெண்மை என்பது வழிநிலைப் பொரூள். கருத்துமுதல் காரணத்தால் சொற்கள் எழாது. பொருள்முதல் காரணத்தாலே சொற்கள் எழுகின்றன. பற்களின் முதல்வினை பற்றுதல் எனில்,  துண்டாகல் அடுத்தவினையாகும். துண்டி, துண்டாக்கும் பல்லிற்கு வேறு பெயராகும். துண்டி>தண்டி என்பது, சங்கதத்தில் தண்டின்> தந்தின் எனத்திரியும். தண்டி>தாடி>தாடை என்பது பல்லுள்ள எலும்புப்பகுதி, தந்தம் பல்லுணர்த்தும் சங்கதச்சொல். தாடிமாஃ என்பது பரல் போன்றமைந்த மாதுள மொட்டுக்களுக்கான பெயர். It's called daDim (दाडिम्) or daDimi (दाडिमी) in sanskrit. This is the root from where the Hindi/Marathi word 'dalimb' originates. dantabeeja दन्तबीज (the teeth seeded one) and rakhtabeeja रक्तबीज ( the red seeded one).

அன்புடன்,

இராம.கி.


Tuesday, January 05, 2021

கணையம் (pancreas)

இச்சொல்லுக்கான சொற்பிறப்பியலை நண்பர் ஒருவர் கேட்டிருந்தார். pancreas இன் பொருட்பாட்டைப் பார்க்குமுன், கணையத்திற்கான முந்தைப் பொருட் பாடுகள் என்ன என்று பார்க்கவேண்டும். அதில் முகன்மையானது முரட்டுக் கோட்டைக் கதவுகளை ஒட்டிவரும். ஒற்றைக் கதவாயின், நிலைச்சட்டத்தோடு (door frame) சேருமிடத்திலோ, இரட்டைக் கதவாயின், கதவுகள் சேருமிடத்திலோ நாம் பெரும்பாலும் தாளிடுவோம். தாள், தாள்ப்பாள்/தாழ்ப்பாள் என்பன தனித்த ஓருறுப்புகள் அல்ல. சில வளையங்களும், ஒரு தண்டும் சேர்ந்த கூட்டுச் சினையுறுப்பாகவே தாளைப் பயனுறுத்துவோம்.  

ஒற்றைக்கதவில் 2,3 வளையங்களையும்  நிலைச்சட்டத்தில் ஒரு வளையத்தையும் பொருத்துவர். இவ்வளையங்களுக்குள் சேர்ந்தாற்போல் தண்டு போகும். தண்டு ஒரே தடிமனில் இருக்கத் தேவையில்லை. தலை(க் குண்டு) பெரிதாகி உடல்சிறுத்து முடிவில் வால் ஒல்லியாகியும் இருக்கலாம். வளைய விட்டங்கள், தண்டின் குறுக்குச்செகுத்தம் (cross section) போகுமளவிற்கு இருந்தால் போதும், ஒரு தாளில் படம்போட்டு நான்சொல்வதைப் புரிந்து கொள்க. இதேபோல் தாழ்ப்பாளை இரட்டைக் கதவமைப்பிலும் செய்யலாம். இவ்வமைப்பில் று ஒவ்வொரு கதவிலும் ஒன்றுக்கு மீறிய வளையங்கள் இருக்கும். தாளிலுள்ள தண்டு, அடிப்படையில் நீண்ட கூம்புத்தண்டு தான்  

இது 2 கதவுகளை அல்லது 1 கதவு, நிலைச்சட்டத்தை இணைக்கிறது. இணைப்பதைக் கணுத்தல் என்றும் சொல்லலாம். கரும்பின் ஒவ்வொரு பகுதியும் கணுக்கியே வளர்கிறது. ஒவ்வொரு joint ஐயும் கணு என்கிறோம். கணுவின் வினைச்சொல் கணு-த்தல் என்றாகும்.  கணுவில் விளையும் இன்னொரு பெயர்ச்சொல் கணை. கள்>கண்>கணை என்பது கட்டும் தண்டு. இரு கதவுகளையோ, ஒரு கதவு-நிலைச்சட்டத்தையோ இது கட்டலாம். கள் எனும் வேர் கூட்டப்பொருளில், சேர்ப்புப் பொருளில், எழுந்தது. கணையில் பெரியது கணையம். தொடக்க காலத்தில் கணையம் என்பது, இரும்பால் ஆனதில்லை. பெரும் மரங்களால் ஆனது. இரும்புப் பயன்பாடு கொஞ்சங் கொஞ்சமாய்க் கூடியபின் ஏற்பட்டது. 

கோட்டைக் கதவுத் தாள்களில் பயன்படும் கணையத்தைக் கணையமரம் என்றும் சொன்னார். கணையமரத்தால் பூட்டப்பட்ட கோட்டைக் கதவுகளை உடைக்க ஒரு காலத்தில் யானைகள் பயன்பட்டன. பின் யானைகள் மோதி கதவுடைப்பதைத் தவிர்க்க, வலுவெதிர்ப்புத் தடந்தகை (defense strategy) ஆகக்  கதவுகளில் கூர்க்கூம்புகளைப் பதிக்கத் தொடங்கினார். பின் வலுக்காட்டும் தடந்தகை (offence strategy) ஆகப் யானைத் துதிக்கைகளில் பெருமரங்கள் பொருத்தி கோட்டைக்கதவுகளில் மோதத் தொடங்கினார். இதற்கு மாறாய் இன்னொரு வலுவெதிர்ப்புத் தடந்தகை எழுந்தது. நான் ஒவ்வொன்றாய் விவரித்துக் கொண்டே போகலாம். ஆனால் நீளும்.  ஒன்று மாற்றி ஒன்றென இத்தடந்தகைகள் வளர்ந்து கொண்டே போயின. கோட்டைப்போர்களில் (உழிஞை, நொச்சிப் போர்களில்) முதல்தொடக்கம் கோட்டைக் கதவை மூடித் தாளிடும் கணையமே. கணையம் பேசும் பாடல்கள் மிகுதி. 

இரும்புக் கணையம் கொல்லன் வார்ப்படத்தில் செய்யப்பட்டது. இன்றும் கணக்கற்ற கோயில்களில் கணையங்கள் (அவை நீண்ட உருளைத் தண்டுகளாகவோ, சதுரக் (square) குறுக்குச் செகுத்தம் (cross section) கொண்ட தண்டுகளாகவோ, செவ்வஃகக் (rectangular) குறுக்குச்செகுத்தம் கொண்ட பட்டைத் தண்டுகளாகவோ  அமையலாம்) அரசகோபுரக் கதவுகளை மூடி யுள்ளன. சாமணமாய் கோயிற் கதவுகளை மூடமுடியாது. பெரும் முயற்சி வேண்டும். நம் ஊர்ப்புறங்களில் பெருஞ்செல்வர் மாளிகைகளில், அரண்மனை வீடுகளில், இன்றும் கணையங்கள் உண்டு. செட்டிநாட்டில் பெரும்பாலான வீடுகளில் இவையுண்டு.  உடன் புரிந்துகொள்ளும் வகையில் ஒரு சிறு கணையை, விழியத்திற் காணும் படி கொடுத்துள்ளேன்.    https://www.facebook.com/watch/?v=1544571135592605. இன்னும் பென்னம்பெரிய கணையங்களைக் காட்டும்படி உங்களிடம் படம் இருந்தால் படிப்போர் கொடுங்கள்.



இப்போது கணையத்தோடு, pancreas க்கு ஏற்பட்ட உறவைப் பார்ப்போம். அடிப்படையில் இது ஓர் ஒப்பீடே. உடன் இணைத்துள்ள படங்களைப் பாருங்கள். கதவுகளைக் கணுக்கும் கணையம் போலவே ஒரு தலை, ஒரு கழுத்து, ஒரு உடல், ஒரு வால் இருக்கும் pancreas நம்முடைய கோட்டைக் கதவுக் கணையத்தோடு ஒப்புமை காட்டும். உடல் கணையம் என்பது உதரத்தில் (abdomen) உள்ள ஓர் உறுப்பு.  நாம் சாப்பிடும் உணவை   உடற் சில்களுக்கான எரிமமாய் (fuel for body cells) மாற்றும் உறுப்பாய்க் கணையம் வேலை செய்கிறது. செரிமானத்திற்கு உதவும் வகையில் இக்கணையத்தில் ஒரு புறச்சுரப்பி (exocrine) வங்கமும். (function) குருதிச் சர்க்கரையைக் கட்டுறுத்தும் (control) வகையில் ஓர் அகச்சுரப்பி (endocrine) வங்கமும் வேலை செய்கின்றன.  

ஆங்கிலத்தில் pancreas (n.) என்பதற்கு gland of the abdomen, 1570s, from Latinized form of Greek pankreas "sweetbread (pancreas as food), pancreas," literally "entirely flesh," from pan- "all" + kreas "flesh" (PIE root *kreue- "raw flesh"), probably so called for the homogeneous substance of the organ என்று சொற்பிறப்பியல் சொல்வார்.  *kreue- எனும் PIE வேருக்கு, “*kreuə-, Proto-Indo-European root meaning "raw flesh" என்று விளக்கம் சொல்வார். It is the hypothetical source of/evidence for its existence is provided by: Sanskrit kravis- "raw flesh," krura- "raw, bloody;" Greek kreas "flesh;" Latin crudus "bloody, raw; cruel," cruor "thick blood;" Old Irish cru "gore, blood," Middle Irish cruaid "hardy, harsh, stern;" Old Church Slavonic kry "blood;" Old Prussian krawian, Lithuanian kraūjas "blood;" Old English hreaw "raw," hrot "thick fluid, serum" என்றும் சொல்வர்.

https://valavu.blogspot.com/2021/01/heart-blood-4.html என்ற என் முந்தை இடுகையில் குரு> குரம்> உரம்= குருதி சார்ந்த வலிய தசை என்றும், blood க்கு மாற்றான gore (n.1) என்பதையும் பற்றிச் சொன்னேன். "thick, clotted blood," Old English gor "dirt, dung, filth, shit," a Germanic word (cognates: Middle Dutch goor "filth, mud;" Old Norse gor "cud;" Old High German gor "animal dung"), of uncertain origin பற்றியும் சொன்னேன்.  

இதையே, பேர்பெற்ற சொற்பிறப்பியலார் SKEAT தன் விளக்கத்தில்,  GORE (i), clotted blood, blood. (E.) It formerly meant also dirt or filth. It occurs in the sense of 'filthiness' in Allit. Poems, ed. Morris, ii. 306. <- A. S. gar, dirt, filth ; Grein, i. 520. + Icel. gor, gore, the cud in animals, the chyme in men. + Swed. gorr, dirt, matter. p. Allied to Icel. garnir, gorn, the guts ; Gk. xop5^, a string of gut, cord ; Lat. hira, gut, hernia, hernia. See Fick, i. 580; iii. 102; Curtius, i. 250. ^GHAR, of uncertain meaning. Hence Cord, Chord, Yarn, and Hernia are all related words. Der. gor-belly, q. v., gor-crow, q. v. Also gor-y, Macbeth, iii. 4. 51. G என்று குறிப்பார். 

இது ஒன்றும் தமிழுக்கு அயல் அல்ல. தமிழில் கோரம்  என்கிறோமே? அது என்னவென்று ஓர்ந்து பார்த்திருக்கிறீர்களா? குரு>குரம்>கோரம் என இச்சொல் குருதியோடு தொடர்பு காட்டும். cord என்பதை gore ஓடு ஸ்கீட் தொடர்பு உறுத்துவதையும் பாருங்கள். தமிழுக்கும் இந்தையிரோப்பியனுக்கும் கட்டாயம் ஏதோவொரு உறவு இருந்துள்ளது. நமக்கு அது புரிபடாது இருக்கிறது. மேலே குரம்>உரம் என்று தசைச்சொல்லுக்கும், குரு சார்ந்த அடையாளங் கண்டோமே? அதையும் நினைவு கொள்ளுங்கள்.  pancreas என்பதைக் ”முழுக்குருவம்” என்றும் பயன்பாடு கருதிச் சொல்லலாம். கணையம் என்ற உருவ ஒப்புமைப் பெயருக்கு மாற்றாய், இது பயன்பாட்டுப் பெயராய்  அமையும்.  pancreas ஓடு தொடர்புடைய மற்ற சொற்கள் creatine - குருவணை. குருதியில் இது எவ்வளவு இருக்கிறதென்று பார்ப்பர், நலமுள்ள ஆணுக்கு இது 0.7-1.3 mg/dL அளவிலும்,  பெண்ணுக்கு 0.6-1.1 mg/dL அளவிலும் இருக்கவேண்டும். creosote = குருவஞ் சேமி; cruel = குருவல்;  crude, raw = கரடு.

அன்புடன்,

இராம.கி. 






Monday, January 04, 2021

Dating

 "Dating ... தமிழ்ச்சொல் தாருங்களேன்!" என்று நண்பர் ஒருவர் கேட்டிருந்தார். அவருக்கு நானளித்த பரிந்துரை. 

-------------------

இதை அரும்பொழுக்கு என்று சொல்லலாம். காதல் அரும்பும் நிலை  என்பது முகிழ்ப்பதற்கு அடுத்த நிலை. அதேபொழுது அலர்வதற்கு முந்தைய நிலை. அரும்பும் நிலையில் ஒரு சிலர்க்குத் தெரியும். அலரும் நிலையில் பலருக்குத் தெரிந்துபோகும். சிலபோதுகளில் காதல் அரும்புவது முற்றிலும் நடவாது வெம்பியும் போகலாம். எதுவானாலும் அவனுக்கும் அவளுக்கும் மட்டுமே அது தெரியும். மிக நெருங்கிய நண்பர்க்கு சிலபோது அரும்பொழுக்கு தெரியலாம். அரும்பு +ஒழுக்கு = அரும்பொழுக்கு. dating என்பதை நேரடியாக மொழிபெயர்த்தால் சரிவராது. எனவே இப்படிச் சொல்கிறேன்.

---------------------

இன்னும் சுருக்கவேண்டுமெனில் அரும்பல் என்று கூடச் சொல்லலாம். “அவன் இப்பொழுது கொஞ்சநாளாய் ஒரு பெண்ணுடன் அரும்பலில் இருக்கிறான்.”


Saturday, January 02, 2021

கோள்கள்

நண்பர் ஒருவர் கோள்களுக்கான தமிழ்ப்பெயர்கள் கேட்டிருந்தார். இது எல்லோருக்கும் பயன்படக்கூடியது என்பதால் இங்கு இடுகிறேன்.

கதிரவனைச் சூரியன் என்று சொல்வதில் தவறில்லை. சூரியன் தமிழே. சுள்>சுர்>சூர்>சூரியன்.

புதன் (இதை அறிவன் என்றுஞ் சொல்வர். என்னைக்கேட்டால் புதன் தமிழே. புத்தியின் வேர்ச்சொல் புல்.  பொழுது புலர்ந்தது என்கிறோமே? இருளகன்று வெளிச்சம்/தெளிவு வருகிறது என்றுதானே பொருள்? புலவன்= அறிவில் தெளிந்தவன்.  புலமை= அறிவுத்தெளிவு. புலத்தன், புலத்தி, என்ற சொற்களின் ஊடேயுள்ள லகரத்தில் வரும் உயிர்மெய் இழிந்து புத்தன், புத்தி ஆகும்.  புத்தி பெண்பாலுக்கும், தெளிந்த அறிவிற்குமான சொல்லாகும். ஒரு செயலில், செய்தியில் நல்லது கெட்டது எனத் தெளிவுகாணும் அறிவு புத்தி எனப்படும். காரண, காரியம் தெரிந்தவன் புத்திசாலி எனப்படுவான். அறிவிற்கு அடுத்த நிலை புத்தி. Being familar is knowledge(அறிவு). Discerning the right from wrong is புத்தி..புத்தன்>புதன் என்று இச்சொல் மேலும் வளர்ச்சி காணும்). 

புதனுக்கு அடுத்த கோள்கள் வெள்ளி, புடவி எனும் புவி (இது சங்கதத்தில் ப்ருத்வி ஆகும். பும்மி/பொம்மி நிற்பது பூமி. இதுவும் தமிழ் தான்.), செவ்வாய், வியாழன். இவையெல்லாம் முற்றிலும் தமிழ்ச்சொற்களே. வியாழனுக்கு அடுத்தது சனி (இதைக் காரி என்றும் நிறங்கருதிச் சொல்வர். சனி என்பது தமிழ்மூலங் கொண்ட வடசொல். சுள்>சுண்>சுணங்குதல் = வினையில் சோர்தல், காலந் தாழ்த்தல். சுணை-தல்>சுனை-தல்= குழைதல், தாழ்-தல். சூரியனைச் சுற்ற 30 ஆண்டுகள் எடுத்துக்கொள்ளும் இக்கோள் மெதுவாய்ச் சுணங்கிச் சுற்றும். சுணைக்கும் கோள் சுணை>சுனை>சனி என்று வடக்கே சொல்லப்பெறும். நாம் சுணை என்றே தமிழ்வடிவில் சொல்லிக் கொள்ளலாம்). 

அடுத்துள்ள 3 கோள்களும் பிற்காலத்தில் கண்டுபிடிக்கப்பட்டவை. அவற்றை வானவம் (யுரேனசு = sky), வாரணம் (நெப்டியூன் = god of sea), வளவம் (புளுட்டோ. = god of wealth) என்று அஃறிணையாக்கிச் சொல்லலாம்.


Friday, January 01, 2021

குருதயமும் (heart) குருதியும் (blood) - 4

 குருதயத் தொடரில் தசை பற்றி ஏன் பேசவேண்டும்? - எனச் சிலர் கேட்கலாம். வேறொன்றுமில்லை. உடலுறுப்புகளைத் தசைவழி இயக்குகிறோமல்லவா? அதனால் பேசுகிறோம்.. குருதய இயக்கங் கூடத் தசைகளாலும், வேதிமாற்ற வெடிப்பியக்கத்தாலும் நடைபெறுவதே. முன்சொன்ன “லப்டப்”, ”குடுகுடு> குருகுரு” ஓசை கூட இப்படித்தான் எழுகிறது. எலும்பியக்கங்களுங் கூடத் தசைகளால் நடக்கின்றன. தசைகள் இயங்க, வளர, புதுப்பிக்கத் தேவையான சத்தைக் குருதியே கொணர்கிறது. ”ஊன்  தசை, தடி, தூ, பிசிதம், புளிதம், புலால், புலவு, புண் வள்ளுரம், விடக்கு” என்று தசைக்கு ஈடாய்ச் சூடாமணி நிகண்டு அடுக்கும். பிற்காலச் சொல்லான புளிதம் தவிர மற்றவை திவாகரம், பிங்கலத்திலுமுண்டு, இவற்றின் சொற்பிறப்புகள் எளிதே. 

உல்> ஊல்> ஊன் என்பது ”பற்றியதெனப்” பொருள்படும். (எலும்பைப் பற்றியது ஊன்). துள்>தள்>தயை>தசை= திரண்டது; துள்>தள்>தடு>தடி= திரண்டது. துள்> தூ= திரண்டது. புல்>புலவு= திரண்டது, புல்>புலால்= திரண்டது, புல்>புள்> புளிது> புளிதம்  = திரண்டது. புல்>புள்>புண் திரண்டது; பூதியும் பெரியது என்பதால்  திரண்டதென்றே பொருள் கொள்ளும் , பிள்> பிய்> பிய்து> பிய்தம்> பிசிதம் என்பது திரண்டதைப் பிள்ளக் கூடியது. இதே பொருளில், வள்ளுரம்= வள்ளக் கூடிய உரம் என்பதும் வரும்; வள்ளுதல்= வகிர்தல். குரு> குரம்> உரம்= குருதி சார்ந்த வலிய தசை.  விள்> விளக்கு> விடக்கு= பிளக்கக் கூடியது. வள்ளுதலும் விள்ளுதலும் ஒரு பொருட்சொற்களே. இதுபோக இற்றி, இறைச்சி என்பவையும் உண்டு. இற்றுதல் = முறித்தல். இறைத்தல்= இற்றக்கூடியது இறைச்சி. அடுத்து எலும்பை மூடியது முடை. முடைநாற்றமென இக்காலம் சொல்கிறோம். முடையும் இந்தை யிரோப்பிய meat உம் தொடர்புள்ளவை.  உல்> ஊல்> ஊழ்> ஊழ்த்தல் என்பதும் பற்றிக் கொண்டதையே குறிக்கும். உல்> ஊல்> ஊன்> ஊன்றுதலை இதோடு எண்ணிப் பாருங்கள். 

[ஊழ்தலின் கருத்துத் தொடர்பாய்த் தமிழிலக்கியத்தில் ஊழ்= நியதி= விதி என்பது, பற்றுக்கருத்தோடு தொடர்புற்று ஏற்படும். உயர்கணித வகைப்புச் சமன்பாடுகளைச் (differential equations) சுளுவெடுக்கையில் (to solve), தொடக்கக் கட்டியங்களையும்  (initial conditions), பிணிப்புக் கட்டியங்களையும் ( boundary conditions) விதிப்பார்கள். அவற்றை ஓர்ந்தால், அவை ஊழ்க் கட்டியங்கள் என்பது புலப்படும். ஊழைக் கட்டினால், எந்தச் செலுத்தமும் (process) வரையறுக்கப் (defined) பட்டுவிடும். உடலியல் தொடர்பான இக்கட்டுரையில் மெய்யியல் வேண்டாமெனத் தவிர்க்கிறேன்.அற்றுவிகம் (ஆசீவிகம்) பேசும் வேறு கட்டுரையில் இதை விளக்குவேன்.] 


அடுத்துக் குருதய இயக்கம் பார்ப்போம்.  உடலின் பல பாகங்களிலிருந்து வரும் அஃககம் (oxygen) இழந்த குருதி, உள்ளகக் குவி வழிநம் (interior vena cava) மூலமும், உம்பர்க் குவி வழிநம் (Superior Vena cava) மூலமும் வல அட்டத்துள் (right atrium. அட்டம்= மேல்/முன் அறை) நுழைந்து, முக்குயப்பு வாவி (Tricuspid valve) மூலம் வல வளைக்குள்  ( right ventricle) நுழைந்து, அழுத்தம் கூடியபின், புழைமுறு வாவி (pulmonary valve) வழி புழைமுறு எழுதைக்குள் (Pulmonary Artery) புகுந்து நுரையீரலுக்குப் போகும். அங்கு அஃககம் ஏறிய குருதி,  புழைமுறு வழிநம் (Pulmonary vein) மூலம்  இட அட்டத்துள் (Left Atrium) நுழைந்து மிடை வாவி (Mitral valve) மூலம் இட வளைக்குள் (Left venticle) நுழைந்து  எழுதை வாவி (Aortic valve) மூலம், எழுதத்துள் (Aorta) நுழைந்து, முடிவில் வெவ்வேறு உடற்பாகங்களுக்கு நாளங்கள் வழியே இறைக்கப் படுகின்றன  

(மேலுள்ளதில் cusp, pulmonary க்கான  கலைச்சொற்களைப் புரிந்து கொள்க. வெவ்வேறு 2 புள்ளிகளில் தொடங்கும் வளைவுகள் மூன்றாம்  பொதுப் புள்ளியில் முடிந்தால்,  முன்றாம் புள்ளியை cusp (a pointed end where two curves meet) என்பார்.  பானை செய்கையில், குயப்பின் (cusp) மூலமே குழிக்கிறோம். இனிப் pulmonary. எடையிலா நுரைபோல் அமைந்த நுரையீரல் (Lung), ஒரு பக்கம் காற்று நுண்ணறைகளும் இன்னொரு பக்கம் காற்றை ஈர்க்கும் குருதி நுண்குழாய்களும் கொண்டது. lung (n.) human or animal respiratory organ, c. 1300, from Old English lungen (plural), from Proto-Germanic *lunganjo- (source also of Old Norse lunge, Old Frisian lungen, Middle Dutch longhe, Dutch long, Old High German lungun, German lunge "lung"), literally "the light organ," from PIE root *legwh- "not heavy, having little weight" (source also of Russian lëgkij, Polish lekki "light;" Russian lëgkoje "lung") என்று சொற்பிறப்பியல் சொல்வார். 

இங்கு  நுரை என்பது, எடையிலாமையைக் குறிக்கும். நுரைக்குப் பகரியாய் இலவம்>இலகம் பஞ்சையும் உருவகிக்கலாம். இன்னொரு வகையில் இலுத்தல்> ஈல்த்தல்> ஈழ்த்தல்> ஈர்த்தல் என்பதையும், இலு>இழு>இழுங்கு என்பதையும் ஓர்ந்துபார்க்கலாம், நுரையைத் தொக்கி இழுங்கு (lung) என்றும் சொல்லலாம். இலகம், இழுங்கம் எனும் 2 சொற்களில் முன்னதை நான் பரிந்துரைப்பேன். இன்னொரு வகையில் புழை (= நுண்ணறை) நிறைந்தது புழைமம். இலகம், புழைமம் எனும் 2 சொற்களை நுரையீரலோடு சேர்த்தால் உடலியல் படிப்பு எளிதாகும். 

இலகம், குருதயம், உடற்பாகங்கள் என்று சுற்றும் குருதியில் பால்மம், வெள்ளணு, சிவப்பணு, சில பெருதங்கள் (proteins) உள்ளன. பெருதங்களிற் சில, குருதிக் குளுகலை (clotting) உண்டாக்கலாம். மாந்தவுடல் காயப்படும்/ வெட்டுறும் போது, குருதி சிதறுவதை, குளுகுவதைத் தவிர்க்கமுடியாது.   நீர்ம நிலையிலிருந்து அரைத் திண்மச் சளி ( gel) நிலைக்கு குருதி மாறுகையில், குருதிக் குளிகை (blood clot) ஏற்படும். அளவிற்கு மீறிய குருதியிழப்பைத் தடுக்கக் குளுகல் (Clotting) நடப்பது ஒருவகையில் நல்லதே, பேச்சுவழக்கில் குளுகலை அடைப்பு என்பார். குளிகை என்பது அடிப்படையில் கரடுதட்டிய உருண்டையே. நாளங்களுள் நகராக்  குளிகை எத்துயரையும் தராது; நகரும் குளிகையோ, தானே கரையாததால்,  பெரும் ஊற்றை (danger) விளைவிக்கும். இரத்த வழிநங்களிலும் (veins), எழுதைகளிலும் (arteries) உடற்சிக்கலையும், உயிருக்கு உலைவையும் கூட ஏற்படுத்தலாம். 

இக்குளிகைகள் குருதயத்திற்கோ,  இலகத்திகோ செலின், குருதியோட்டம் தடுத்து,. மருத்துவ அவக்கரம் (medical emergency) ஏற்படுத்தலாம்.  எழுதைக் குளுகல் சட்டெனச் சிக்கல் கொடுக்கும். வழிநக் குளுகலோ மெதுவாகச் சிக்கல் கொடுக்கும். அரிதாய் அமையும் பெருஞ்சிக்கல் வழிநக் குளுகலை , ”ஆழ் வழிநத்  திரம்பல் (deep vein thrombosis) என்பார். இதுபோன்ற ஆழ்சிக்கல் பெரிதும் கால்களில் தான் நடக்கிறது. தவிர, மேற்கைகள், இடைக்குழி (pelvis), நுரையீரல், மூளை ஆகியவற்றிலும் நடக்கலாம். மூளைக்குள் நடக்கும் குருதிக் குளுகலால், மூளையியக்கமே கூடத் தட்டுப்படலாம் (இதைத் ”தட்கிறது” எனவும் சொல்லலாம். பலரும் ”தட்(டு)கை” என்று சொல்லத் தயங்கி ”stroke” என்பார்.). இது போலும் மூளைத் தட்டுகையில், கனத்த திடீர்த் தலைவலியும், பேச்சு, காட்சித் தடுமாற்றமும் உண்டாகும்,

இனி இந்தையிரோப்பியன் மொழிகளிலுள்ள சில குருதிச் சொற்களைப்  பார்ப்போம். முதலில் வருவது blood க்கு மாற்றான gore (n.1) என்பதாகும். "thick, clotted blood," Old English gor "dirt, dung, filth, shit," a Germanic word (cognates: Middle Dutch goor "filth, mud;" Old Norse gor "cud;" Old High German gor "animal dung"), of uncertain origin என்று ஆங்கிலச் சொற்பிறப்பியலில் சொல்வார்.  இதையே, SKEAT தன் விளக்கத்தில்,  

GORE (i), clotted blood, blood. (E.) It formerly meant also dirt or filth. It occurs in the sense of 'filthiness' in Allit. Poems, ed. Morris, ii. 306. <- A. S. gar, dirt, filth ; Grein, i. 520. + Icel. gor, gore, the cud in animals, the chyme in men. + Swed. gorr, dirt, matter. p. Allied to Icel. garnir, gorn, the guts ; Gk. xop5^, a string of gut, cord ; Lat. hira, gut, hernia, hernia. See Fick, i. 580; iii. 102; Curtius, i. 250. ^GHAR, of uncertain meaning. Hence Cord, Chord, Yarn, and Hernia are all related words. Der. gor-belly, q. v., gor-crow, q. v. Also gor-y, Macbeth, iii. 4. 51. G என்று குறிப்பார். 

இது ஒன்றும் தமிழுக்கு அயல் அல்ல. தமிழில் கோரம்  என்கிறோமே? அது என்னவென்று ஓர்ந்து பார்த்திருக்கிறீர்களா? குரு>குரம்>கோரம் என்று இச்சொல் குருதியோடு தொடர்புடையது.cord என்பதை gore ஓடு ஸ்கீட் தொடர்பு உறுத்துவதையும் பாருங்கள். தமிழுக்கும் இந்தையிரோப்பியனுக்கும் கட்டாயம் ஏதோவொரு உறவு இருந்துள்ளது. நமக்கு அது புரிபடாது இருக்கிறது. மேலே குரம்>உரம் என்று தசைச்சொல்லுக்கு குரு சார்ந்த அடையாளங் கண்டோமே, அதையும் நினைவு கொள்ளுங்கள்.  

அடுத்தது hemoglobin (n.) also hæmoglobin, coloring matter in red blood cells, 1862, shortening of hæmatoglobin (1845), from Greek haimato-, combining form of haima (genitive haimatos) "blood" (see -emia) + globulin, a type of simple protein, from globule, formerly a word for "corpuscle of blood." இதற்கு இணையாய்ச் செங்கோளம் என்று சொன்னேன்.

குருதியின் அடிநீர்மமான plasma (n.) வைத் தமிழில் பால்மம் என்போம். (1712, "form, shape" (a sense now obsolete), a more classical form of earlier plasm; from Late Latin plasma, from Greek plasma "something molded or created," hence "image, figure; counterfeit, forgery; formed style, affectation," from plassein "to mold," originally "to spread thin," from PIE *plath-yein, from root *pele- (2) "flat; to spread.") 

பால்மத்திற்கு இன்னொரு சொல்லாய் serum (n.) என்பதை இந்தை யிரோப்பியனில் சொல்வார். ( 1670s, "watery animal fluid," from Latin serum "watery fluid, whey," from PIE verbal stem *ser- "to run, flow" (source also of Greek oros "whey;" Sanskrit sarah "flowing, liquid," sarit "brook, river"). First applied 1893 to blood serum used in medical treatments). சில மரங்களில் கீரினால்>கீறினால் கிடைக்கும் நீரைப் பால் என்றே தமிழில் சொல்வதுண்டு. பனம்பால், தென்னம் பால், போல அரப்பைப் (rubber) பாலும் உண்டு. இதைக் கீரம்>கீறம் என்றும் சொல்லலாம். இந்தக் கீரம் தான் வடக்கே கடனில் போய், க்ஷீரம் ஆகும். மீண்டும் கடன்வாங்கி குடிக்கும் பாலுக்கே சிலர் பழகுவார். க்ஷீரம் ஆங்கிலத்தில் serum ஆகியிருகிறது. நாம் பால்மம் என்றோ, கீரம் என்றோ பயிலலாம். ஏன் நம் சொல்லை விட்டுக்கொடுக்க வேண்டும்?     

இதுபோக, குருதியின் செம்மை நிறம் கருதி செங்க விளவம் (sanguine fluid) என்ற சொல்லும் புழங்கும். sanguinary (adj.) "characterized by slaughter," 1620s, possibly from French sanguinaire, or directly from Latin sanguinarius "pertaining to blood," from sanguis (genitive sanguinis) "blood," of unknown origin. Latin distinguished sanguis, the generic word, from cruor "blood from a wound" (related to English raw, from PIE root *kreue-).

இந்த வரையறைக்குள் வரும் cruor என்பது முன்சொன்ன கோரத்தோடு தொடர்புடையது,  

இன்னும் ஒரு சொல். vital fluid. இதை வாழ்வு விளவம் எனலாம். வாழ்வதற்குத் தேவையான விளவம். இன்னும் பல சங்கதச் சொற்களும் உண்டு, அவற்றை விளக்க இன்னொரு பகுதி வேண்டும்.

அன்புடன்,

இராம.கி.


Wednesday, December 30, 2020

drone

Middle English drane, drone, "male honeybee," from Old English dran, dræn, from Proto-Germanic *dran- (source also of Middle Dutch drane; Old High German treno; German Drohne, which is from Middle Low German drone), probably imitative (compare Lithuanian tranni, Greek thronax "a drone"). Given a figurative sense of "idler, lazy worker" (male bees make no honey) 1520s. Meaning "pilotless aircraft directed by remote control" is from 1946

drone என்ற சொல்லிற்கு male bee esp. male honey-bee, a person who lives on the labour of others, a pilotless aircraft or ship controlled by radio என்று 3 பொருள்களைப் பெரும்பாலான ஆங்கில அகரமுதலிகளில் கொடுத்திருப்பர். 3 ஆம் பொருள், முதற்பொருளின் ஒப்புமை கருதி ஏற்பட்டது. நேரேயிருந்து வலவன்போற் செலுத்தாது தூரத்தில் நின்று ஏதோவொரு நுட்பமுறையில் கட்டளையிட்டு மற்றவரை/கருவிகளைக் கொண்டு இயங்கவைக்கப்படும் கலன் இது. இச்சொல் முதலில் எழுந்தது பறனை நுட்பத்திற்றான். பார்ப்பதற்கு தேனீ போலிருந்து செயல்களைச் செய்ததால், தேனி ஒப்புமையில் 3 ஆம் பொருள் எழுந்தது. (பறனை நீட்சியாய்க் கப்பலும் கூட வரையறையில் கூறப்பட்டுள்ளதைக் கவனியுங்கள். பொருள்நீட்சிகள் இப்படி ஏற்படும்.) புது நுட்பியல் கருவிகளுக்கு ஒப்புமை வழியில் பெயரேற்படுவது இயல்பே. பெயரீட்டில் கருவிச் செயல்முறை விளக்கம் சொல்லத் தேவையில்லை. நாமேன் அப்படி எதிர்பார்த்துக் குழப்பிக் கொள்கிறோம்? தெரியவில்லை. இச்சொல் ஒரு பக்கம் உயிரியைக் குறித்து இன்னொரு பக்கம் கலனைக் குறித்தது. ஆங்கிலம் பேசுவோர் யாரும் இது போலும் ஒப்புமைப்பெயரை ஏற்கத் தயக்கம் காட்டுவதில்லை. தமிழராகிய நாம்மட்டும் ஏன் தயக்கம் காட்டுகிறோமென்று எனக்குப் புரியவில்லை.

ஆங்கிலச் சொல்விளக்கம் படித்தால், இச்சொல்லைத் தேனியம் என்றே சுருங்கச்சொல்லலாம். அதனால் ஏற்படும் பொருளும் சரியாகப் பொருந்தும். தேனிக்களில் பெரியது தேனியம். தேன் என்றாலே தேனீயையும் குறிக்கும் என்று திவாகரம் சொல்கிறது. நான் தேனியம் என்று சொன்னது தவறென்றால் தேனீயம் என்று கொள்ளுங்கள். பிறகு இதையும் தேன்+ஈயம் என்று பிரித்து தவறாய்ப் பொருள் கொள்ளாதீர். (ஒரு குவளை நீரைப் பாதி நிறைந்துள்ளது என்றுஞ் சொல்லலாம். பாதி நிறையவில்லை என்றுஞ் சொல்லலாம். ஒவ்வொன்றும் ஒரு பார்வை.) பறனையை உலோகப்பறவை என்கிறாரே? அதில் குற்றங் காண்கிறோமா? பறவையைப் (bird) பார்த்து அட்லாண்டா பெரி. சந்திரசேகரன் பறனை (aeroplane) என்ற சொல்லை உருவாக்கினார். இன்று பழகுகிறோம். 

இராம.கி. ஆங்கிலச்சொல்போல் தமிழ்ச்சொல் படைக்கிறார் என்ற மொண்ணை வாதத்திற்கு மாறாய் நான் மேலே கொடுத்த சொற்பிறப்பு விளக்கத்தை ஆழ்ந்து படியுங்கள். சொல்லின் உள்ளே ரகரம் நுழைப்பது இந்தையிரோப்பியப் பழக்கம். நான் ரகரத்தை எடுத்துப் பார்த்தேன். அவ்வளவு தான். drone இன் இடையில் ஒகர ஒலி ஆங்கிலத்தில் வருகிறது. மற்ற இரோப்பிய மொழிகளில் எகரவொலி உள்ளது. நான் இந்தையிரோப்பியத்திற்கும் தமிழியத்திற்கும் விட்டகுறை தொட்டகுறை உள்ளதென நம்புபவன். இந்தப் பின்புலத்தில் பார்த்தபொழுது, :தேனீ ஒப்புமை எனக்கு உடனே கிட்டியது. மேலையர் செய்தால் சரி. இராம.கி. செய்தால் தவறா? இது போலும் வாதங்களைக் கேட்டுக் கேட்டு எனக்குச் சலித்துப் போகிறது. எத்தனை நாள் தான் இப்படி நடக்கும்? பேசாமல் தமிழை ஒரேயடியாய் விட்டுவிட்டு வேறு புலங்களில் நான் ஈடுபடலாம் போல் தோன்றுகிறது. .


Monday, December 28, 2020

Kidney

----------------------------

kidney யைச் சிறுநீரகம் என்றே பொதுப்புலனில் சொல்வர். அதுவும் பொருத்தம் இலாத உப்புக்குச் சப்பாணிச் சொல் தான். (இயக்குநர் என்பது மாதிரி அச் சொல். இயக்குநர் என்பார் operator-ஆ, director- ஆ? ) அது என்ன சிறுநீர்? உடலில் இருந்து வேறேதும் பெருநீர் வெளியாகிறதோ? - என்ற கேள்வியெழும்.  சிறுநீர் என்பது ஒருசில உப்புகள் கரைந்த பால்மமே (plasma) அதை உமரிநீர் எனலாம். (உப்புக்கு இன்னொரு பெயர் உமரி) உமரிநீரைக் கையாளும் உறுப்பு = உமரி நீரகம். சிறுநீரகத்தை விட இது பொருத்தமான சொல். ஆனால் மருத்துவத்தில் பயனாகும் Nephrologyக்கு இது உதவாது. உமரிநீரகத்திற்குச் சரியான உடற் கூற்றுப் பெயரொன்றை நாம் தர வேண்டும். முயன்றால் கிடைக்கும். “கலைச் சொல்லே வேண்டாம்; எமக்குச் சிறுநீரகம் போதும்” என்று பாமரத்தனம் நாடுவோர்க்கு நான் சொல்வது விளங்காது.

பல்வேறு சிறு தூம்பு (tube)களும் அதைச்சுற்றி ஒரு கூடுங் (shell) கொண்டது உமரிநீரகமாகும். தூம்புகளின் வழிச்செல்லும் அரத்தத்தின் வேதிப்பொதுள் (chemical potential) தூண்டலால்,  சிவப்பணு , வெள்ளணு, ஒருசில பெருதங்கள் (proteins) ஆகியவற்றைத் தவிர, மிஞ்சியுள்ள பால்மம், உப்புகள் போன்றவை தூம்புப் படலம் (tube membrane) வழி, நூகமாய் (நுண்ணிதாய்) ஊடுறுவி, கூட்டுப் பக்கம் [ஊடுதலை ஊறுதல் எனலாம்] உமரி நீராய் வெளிப்படும், எனவே  உமரி நீரகத்தை நூவூறகம் என்பது மிகச் சிறந்த சொல்லாகும்.]

------------------------------------

என்று https://valavu.blogspot.com/2020/04/case.html இடுகையில் நான் சொன்னேன். இன்று வேறு ஏதோ தேடியபோது, ”நம்முடைய குழந்தை மருத்துவ முறையிலே ரோசனை, கஸ்தூரி முக்கியமானவை. ரோசனை என்பது பசுவினுடைய அட்ரினல் கிளாண்ட். கஸ்தூரி என்பது கஸ்தூரி மானுடைய அட்ரினல் கிளாண்ட். இக்கிளாண்ட்களை மருந்துகளோடு சேர்த்துக் கொடுத்தால் குழந்தைக்கு நோய்யெதிர்ப்புச் சக்தி உருவாகும்” என்ற பேரா. தொ. பரமசிவனின் கருத்தை திரு. ஒப்பிலாமணி அழகரின் பதிவில் படித்தேன்.  தொ.ப.வின் எந்த நூலில் இது வருகிறதென்று எனக்குத் தெரியவில்லை.  என் சிந்தனை ”ரோசனை” என்ற சொல்லின் தமிழ்த் தொடர்பு பற்றியது.  

கோரோசனைக்கு, ”பசு வயிற்றில் எடுக்கும் மஞ்சள்நிற மணப்பண்டம்” என அகரமுதலிகளில் சொல்வார். செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் பேரகரமுதலியில் ”கோ+அரிசனம் (மஞ்சள்)” என்று பிரித்து ”மாட்டின் மஞ்சள்நிற மணப் பொருள்” என்பார்.  ”கோரோசனை= மாட்டின் adrenal gland" எனும் Multi-disciplinary பார்வையை அங்கு கொடுப்பதில்லை. புதலியல், விலங்கியல், உடலியல் என எதையும் நமக்கு விளக்கிச் சொல்லார்.  இது ஒரு குறை. நம்மூர் அகரமுதலி எடுவிப்போர், பெரும்பாலும் மொழியறிவு கொண்ட சிறு குழுவினர் மட்டுமே. எடுவிப்போர் குழு (editors grpup)பெரிதாய் இருக்கும் ஆங்கில அகரமுதலிகளில் இக்குறைபாடு இருக்காது. கோரோசனைக்குப் பொருள்சொல்ல, அகராதிக் குழுவுக்கு நாட்டு மருத்துவ அறிவு வேண்டும் . 

ரோசனை என்ற சொல் எப்படி எழுந்தது? உல்>அல்>அர்>அரி = அழல், பொன், மஞ்சள் ஆகியவற்றின் நிறம். சிவப்புக் கலந்த அழல் நிறம் என்றுங் குறிப்பர்.  ”அரித்தேர் நல்கியும்” என்பது பெரும்பாண் 490 . அரித்தேர் = பொற்றகடு வேய்ந்த தேர். தவிர அரி= மடங்கல் என்பது மஞ்சள்நிற சிங்கத்தைக் குறிக்கும். அரன்= அழல்நிறச் சிவன், ”அரோகரா” என்பது சிவனை வேண்டிக் கூக்குரல் எழுப்புவது. அரக்கு = பொன் கலந்த சிவப்பு. அரியனம்>அரிசனம் = மஞ்சள். அரியகம்>அரிசகம் = மஞ்சள்நிறச் சரக்கொன்றை.  அரியாசம் = நறுமணச் சரக்கு (சிலம்பு 5:14 விற்கான அரும்பத உரையில் வரும் குறிப்பு.) அருணன் என்றாலும் அழல் நிறத்தவனே. ஐம்பூதங்களில் ஒன்றான நெருப்பெனும் பூதத்தை உணர்த்தும் சிவலிங்கம் அருணமலை>அண்ணாமலையில் உள்ளது. “அண்ணாமலைக்கு அரோகரா!” என்பது சிவநெறியார் முழக்கம்.  

சிறுநீரகம், உமரிநீரகம், நூவூறகம் என்று நாம் சொல்லும் உடலுறுப்பு அருணை நிறத்தில் உள்ளதால் அதை அருணையென்றும் சொல்லலாம். பேச்சு வழக்கில் அருணை= அருயனை> அருசனை> ரோசனை என்றமையும்.  வடபால் மொழிகளிலும் இக் கோரோசனை பயிலும்.  பேச்சுவழக்கில் ”கோரோசனை” என்கையில், நல்ல தமிழில், மாந்தனுக்குரிய உமரிநீரகத்தை “அருணை” என்று பயிலக்கூடாதா? kidney க்கு  உமரிநீரகம், நூவூறகம், அருணை என 3 சொற்கள் நம்மிடமிருந்தும், ”சிறுநீரகத்தை” ஏன் பயில்கிறோம்? தெரிய வில்லை.   

ஆங்கிலத்தில் renal (adj.) 1650s, from French rénal and directly from Late Latin renalis "of or belonging to kidneys," from Latin ren (plural renes) "kidneys," a word of of uncertain etymology, with possible cognates in Old Irish aru "kidney, gland," Welsh arenn "kidney, testicle," Hittite hah(ha)ari "lung(s), midriff." Also possibly related are Old Prussian straunay, Lithuanian strėnos "loins," Latvian streina "loins." "The semantic shift from 'loins' to 'kidneys' is quite conceivable" [de Vaan]என்று சொல்வர். “uncertain etymology” என்பதைக் கூர்ந்து கவனியுங்கள். 

அருணை கொண்டு, ஒருசில கூட்டுச்சொற்களுக்கும் வழிகாணலாம். renal disease= அருணை நோய், renal failure= அருணைப் பழுது. renal calculi= அருணைக் கற்கள். renal function= அருணை வங்கம். adrenal gland= அருணையடிச் சுரப்பி. (அருணையை அடுத்துள்ள சுரப்பி). renin = அருணையம் (அருணையடிச் சுரப்பியில் உள்ள ஊறல் -hormone).

அன்புடன்,

இராம.கி. 




Friday, December 25, 2020

-மானம் (-metry )

அறிவியலில் பல இடங்களில் வெவ்வேறு பொருட்களை, நிகழ்வுகளை, தன்மைகளை, அளக்கத் தலைப்படுவோம். பல்வேறு இயல்களிலும் (-logy) பல்வேறு -metryகள் உண்டு. ஆங்கிலத்தில் -metry என்பதை, word-forming element meaning "process of measuring," Middle English -metrie, from French -metrie, from Latin -metria, from Greek -metria "a measuring of," from -metros "measurer of," from metron "measure," from PIE root *me- (2) "to measure" என்று சொல்வர். PIE root *me- is the hypothetical source of/ evidence for its existence is provided by: Sanskrit mati "measures," matra "measure;" Avestan, Old Persian ma- "to measure;" Greek metron "measure," metra "lot, portion;" Latin metri "to measure.

-metry என்பது வெறும் PIE முடிப்புச்சொல் மட்டுமல்ல. (சங்கதத்தோடு அதைப் பொருத்துவது பெரும்பாலான இந்தையிரோப்பிய ஆய்வரின் வழக்கம்.)  தமிழியச் சொல்லும் கூடத் தான். A Dravidian Etymological Dictionary இல் வரும் ”மட்டம் (3811), முக-த்தல் 4001 போன்ற இட்டிகளை (entries) இவற்றோடு பொருத்துங்கள். இவற்றைக் காட்டிலும் முல்> முள்> முட்டு> மட்டு-தல்> மடு-த்தல் = அள-த்தல் என்ற வினைச்சொல்லை அவ்வகரமுதலி குறித்திருக்கலாம்.  ஏன், மல்>மால்>மா-த்தல் வினையைக் கூடக் குறித்திருக்கலாம்.  மானமெனும் ஈறு கிட்டியிருக்கும். மட்டி-த்தல்> மத்தி-த்தல்> மதி-த்தலென்றும் அவ்வினை வளர்ச்சிபெறும். மானம் என்பது (சிலபோது மதியம்) பெயர்ச்சொல்லாகி அளவையும், அளக்கும் தொழிலையும் தமிழில் குறிக்கும். (மானத்திற்கு மாறாய் மத்திகை என்றுங் குறிகலாம்.கீழே சில மானங்களைப் பட்டியல் இட்டுள்ளேன். இவை மட்டுமே அளவுமுறைகளல்ல. இவற்றிற்கு மேலுமுண்டு. 

முதலில் வருவது, hypsometry (n.) = உம்ப மானம்; "the measuring of altitudes," 1560s; உம்பம் = இடவுயரம். இடமல்லாதவற்றை வேறுவழியிற் சொல்வர். altimetry (n.) உயரமானம்  = "the art of measuring heights," 1690s, from Medieval Latin altimetria, from Latin alti- "high" (see alti-) + Greek -metria "a measuring of" (see -metry). 

அடுத்தது  craniometry (n.) கவாலமானம் "the measuring of skulls," 1844; மாந்தவியலில் கவாலங்களைக் கொண்டு பல்வேறு அளவுகள் செய்கிறார்.  அடுத்து கவாலம் மட்டுமின்றி, மாந்தவுடம்பின் பல்வேறு பகுதிகளை அளக்கும் மானமும் உண்டு. அதை anthropometry (n.) மாந்தவுறுப்பு மானம்  என்பார், "science of the measurement and dimensions of the parts of the human body," 1839, from anthropo- + -metry "a measuring of." 

அடுத்தது horometry (n.) ஓரைமானம் "art of the measurement of time," 1560s, from Greek hōra "any time or period" நம்மூர் ஓரைதான் கிரேக்கம் போனது. அது எல்லா நேரம். பொழுது, பருவம், காலங் குறிக்கும் பொதுச்சொல்லாக இருந்தது, இற்றைத் தமிழில் இப்பயன்பாட்டைத் தவிர்த்து ஓரை என்றால் இராசி என்று மட்டுமே பொருள் கொள்கிறோம். hour ஐக் குறிக்க மணி என்ற சொல்லைப் பயன் படுத்துகிறோம். அதுவோர் ஒப்புக்குச் சப்பாணி. bell எனுங் குறிப்பு. நம் சொல்லை நாமே இப்படி இழந்திருக்கிறோம். 

இன்னும் ஒன்று,  axonometric (adj.) அக்கன மத்திகை 1869, from axonometry "art of making a perspective representation of figures based on coordinate points" (1865), from Greek axon "axis, axle" அக்கம் = பக்கம், அச்சு. அன்னம்>அனம் = co-ordinate. அக்கனம் = side co-ordinate. Perspective representation= ஆழங்காட்டும்  வெளிப்பாடு, 

அடுத்து வேதியலின் stoichiometry(n.) தக்கைமானம் ”science of calculating the quantities of chemical elements involved in chemical reactions," 1807, from German Stöchiometrie (1792), coined by German chemist Jeremias Benjamin Richter (1762-1807) from Greek stoikheion "one of a row; shadow-line of a sundial," in plural "the elements" (from PIE *steigh- "to stride, step, rise") வேதிப்பொருள்கள் தக்க அளவிற்கு இருந்தால் தான், வேதிவினை தடையுறாது முற்றுமுழுதாய் நடக்கும்.  2 வேதிகள் இருந்தால், ஒன்றின் அளவிற்குத் தக்க இன்னொன்றின் அளவைப் பொருத்தி மதிப்பிடுவது, தக்கை மானம் எனப் படும்.  

இன்னொன்று biometry (n.) உய்யுமானம் 1831, "calculation of life expectancy" (obsolete); see bio- + -metry. Coined by Whewell, popularized 1860s by T.S. Lambert. Later, "application of mathematics to the study of biology" (1894). உய்தல் = வாழ்தல். உய்யும் பொருள்கள் வாழும்.  

இனி geometry (n.) இதைப் புவிமானம் அல்லது குவிமானம் எனலாம். குவிந்து திரண்டது குவியம், அல்லது குவலயம்.. இக்காலத்தில், வரலாற்றுச் சொற்பிறப்பியல் காட்டும் குவியைத் தவிர்த்து வடிவியல்/ அளவியல் என்றும் சொல்ல முற்பட்டு விட்டோம்   early 14c., also gemetrie, gemetry, from Old French geometrie (12c., Modern French géométrie), from Latin geometria, from Greek geometria "measurement of earth or land; geometry," from combining form of gē "earth, land" + -metria "a measuring of" 

அடுத்தது optometry (n.) தமிழில் கூர்ந்தபார்வை குறிக்க அஃகமென்ற சொல்லுண்டு. அஃகமானம் இதற்குச் சரிவரும். "measurement of the range of vision; measurement of the visual powers in general," 1886, from optometer (1738), name given to an instrument for testing vision, from opto- "sight," from Greek optos "seen, visible" (from PIE root *okw- "to see") + -metry "a measuring of." இன்னொன்று symmetry; ஒன்றுபோல் இன்னொன்று அமைவது. ஓர் உருவத்தின் ஒருபக்கம் போல் இன்னொன்று அமைவதையும் அப்படியே சொல்வர், சம்மானம்>சமானம் எனலாம். சமைதல் - ஒன்றுபோல்  இருத்தல். 

அடுத்தது trigonometry; முக்கோணத்தை இந்தையிரோப்பியன் trigona என்னும். ”மூன்று” எனும் இடுகையில்   (https://valavu.blogspot.com/2020/12/blog-post_23.html) துதியும் மூன்றும் ஒருபால் சொற்கள் என்று நிறுவியிருப்பேன் துதியும் துரி>த்ரியும் தொடர்புள்ளவை. முக்கோணமானம் என்பது  trigonometry க்குப் பொருந்தும்

அதுபோக, மா-த்தலோடு தொடர்புள்ள வேறுசில சொற்களும் உண்டு. amenorrhea= மாதவடி(ப்பு) நிற்றல்;  menarche மாதவடி பூப்பு; menopause மாதவடி நிற்பு;  menses= மாதவடி;  menstrual= மாதவடிப்பு;  menstruate= மாதவடி-த்தல்;  mensural= மாதவடி;  commensurate = மதியுறு-த்து;  meal(n.1)= "food, time for eating= உண்மதியம்; measure= மாத்திரை ; meniscus= மட்டிகை (மட்டத்தோடு தொடர்புற்றது);  Monday= மதிநாள்; month= மாதம்;  moon= மதி ;  piecemeal= துண்டுமானம்;  

diameter= ஊடுமானம்/விட்டம்; dimension= வடி/பரி மானம்; immense= மாவளவு;  isometric= இசைமான;   meter(n.1)= மடுகை (யாப்பில் அசை என்பர்) "poetic measure; meter (n.2)= மாத்திரி=  unit of length; centimeter= நுறியமாத்திரி;  meter(n.3)= மானி= device for measuring; thermometer= தெறுமமானி;  metric= மத்திகை;  metronome= மாத்திரை அளவி;  parameter= பரமானம்; ஓர் ஒக்கலிதி (equality) வேறிகள் போகப் பரமானங்களும் உண்டு. பரமானத்தைப் பரமத்திகை என்றுஞ் சொல்லலாம். parametric equation = பரமத்திக ஒக்கேற்றம் அல்லது பரமத்திகச் சமன்பாடு. pentameter= பந்தமானம்; பற்றுவது பந்தம் இப்பந்தமே வடபால் மொழிகளிலும் இந்தையிரோப்பியனிலும் ”பஞ்ச, பந்த” என்று பயிலும். perimeter= பரிமானம் ; semester= துவ்வ மானம் (சுருக்கமாய்த் துவ்வம்).; trimester = மும்மானம் அல்லது முப்பருவம் (சுருக்கமாய் முவ்வம்).

அன்புடன்,

இராம.கி.


Wednesday, December 23, 2020

மூன்று

கடந்த 70000 ஆண்டுகளில் எப்போது முகன மாந்தன் (modern man) ’எண்’ணத் தொடங்கினானென்பது அறிய ஒண்ணாதது. ”இரு விரல்கள், இரு பூனைகள், இரு பழங்கள்” என்ற அறிவை அப்பூதியாக்கி (to abstract) இரட்டுமைக் (two-ness) கருத்து எப்போது புரிந்ததோ அப்போதே எண் பற்றிய சிந்தனை அவனுக்கு எழுந்திருக்கலாம். 

ஒருவேளை 50000 / 60000 ஆண்டுகள் முன் முதல்மொழி தோன்றுகையில், (அதற்குமுன் மொழி எழுந்ததாய் இற்றை அறிவியல் கருதவில்லை.) மாந்தன் ’எண்ணத்’தொடங்கினானோ, என்னவோ? ”ஒன்று, இரண்டு, பல” என்றவாறு பொருத்தும், சேர்க்கும், இள்ளும், இணர்க்கும், இணைக்கும் போக்கு, கொஞ்சங் கொஞ்சமாய் ஏற்பட்டது கூட இள்> *இண்> எண் சிந்தனை (இதுவே என் புரிதல். எள்>எண் என இப்போது கருதுவதில்லை) வளர்ச்சிக்குக் காரணமாகலாம். 

புதிதாய்ப் பேசத்தொடங்கும் பிள்ளைகூட, “ஒன்று, இரண்டு, பல” என்றே முதலிற் புரிந்து கொள்வதாகவும், பின் சிச்சிறிதாய் அப்பூதி எண் (abstract number) கருத்தைப் புரிந்து கொள்வதாயும் குழவிவளர்ப்பு வல்லுநர் சொல்வர்.  

பல்வேறு தொல்முது குடியினரும், பெரும்பாலும் ஒன்று, இரண்டு, இரண்டொன்று, இரண்டிரண்டு, பல என எண்ணுவதையும், இரண்டொன்றை மூன்றாகவும், இரண்டிரண்டை நாலாகவும் சொல்வது பழங்குடியினருக்குச் சரவலாவதையும், The universal history of numbers என்ற 3 பொத்தகங்களில்  [Penguin Books India, 2005] Georges Ifrah காட்டி யிருப்பார். 

(இயன்றோர் இப் பொத்தகங்களைக் கட்டாயம் படியுங்கள். இணையத்தில் தமிழெண்கள் பற்றித் தப்பும் தவறுமாய்ப் பல செய்திகள் பரிமாறிக் கொள்ளப்படுகின்றன. Georges Ifrah இல் இருந்து வேறுபடலாம். ஆனால் அவரைப் படித்தபின் வேறுபடுங்கள். கற்பனையில் எண்ணாய்வுக் கோட்டை கட்டாதீர்கள்.) 

இதேபோல், பல்வேறு பொருட்தொகுதிகளை நம்முன் காட்டி அவற்றை ’எண்’ணிக் கணக்கிடாமல், பார்த்த அளவிலேயே “எத்தனை பொருட்கள் நமக்குத் தெரிகின்றன?” என வினவினால், நம்மில் பலரும் நாலுக்குமேல் இனங் காட்டத் தடுமாறுவதையும் நாலுக்குமேல் நினைவுகுன்றிப் ’பல’ என்று சொல்வதையும் அவர் சான்று காட்டுவார். 

இவ்விடுகை 3 ஐப் பற்றியது. (ஒந்து/ஒண்ணு/ஒன்னு எனும் 1 ஐப் பற்றி https://valavu.blogspot.com/2005/11/blog-post_03.html இடுகையில் சொன்னேன். ஈல்>ஈர்>ஈர்ந்து; ஈர்> இரு> இரள்> இரள்தல்> இரள்ந்து> இரண்டு எனும் 2 ஐப் பற்றிப் பல கட்டுரைகளில் எழுதியுள்ளேன். அவற்றைத் தொகுத்து ஒரு தனியிடுகை இடவேண்டும். 

 (உலகின் பல பழங்குடிகளும் (1,2, பல) என்றோ, (1,2,3, பல) என்றோ, எண்ணுவதில் தேங்கி நின்றார். இன்னுஞ் சில குடிகள் கைவிரல் கொண்டு, ஐந்து எனும் கருத்தீடு வரை வந்தார். ஐ, ஐது, ஐந்து, அய், செய் என்றும் தமிழிற் சொல்லப்படும் அள்>அய்>ஐ என்று இச்சொல் வளரும். அள்ளுதல்= சேர்த்தல். ஐந்து விரலும் சேர்த்தே அள்ளுகிறோம். 

அஞ்சென்பது ஐந்து> அய்ந்து> அய்ஞ்சின் பேச்சுவழக்கு. இன்னும் வளர்ச்சியடைந்தோர் மட்டுமே 4,6,7,8 ஆகியவற்றையும் எண்ணி வளர்ந்துள்ளார். பத்தும் ஒன்பது போன்றவை ஏற்பட்டது நீண்ட கதை. இவற்றைச்சொல்லாது 3 ஓடு நின்றுகொள்கிறேன்.

தமிழிய மொழிகளில்,  ”மூன்று” தமிழிலும், ”மூது” தெலுங்கிலும், ”மூறு” கன்னடத்திலும், ”மூ(ந்)நு” மலையாளத்திலும், ”முஜி” துளுவிலும், ”முண்ட்” கோண்டியிலும், ”மூண்டிங்” கொலாமியிலும், ”மூண்ட்” குருக்கிலும், ”முசி” பிராகுயிலும் பயிலும். 

https://www.etymonline.com/search?q=three இடுகையில்  இந்தையிரொப்பிய மொழிகளில் பயிலும் சொற்கள் சொல்லப்படும். (இந்தை யிரோப்பியன் குடும்பம் தமிழியக் குடும்பத்தோடு ஏதோ வகையில் தொடர்பு காட்டும். எனவே அதையும் தெரிந்து கொள்வது நல்லது தான். நம்மிடம் இருந்து அரேபியர் எண் வடிவத்தை  அறிந்து மேலையுலகில் பரப்பியதால், அதையும் ஆய்வது நல்லதே,  அடுத்த 3 பத்திகளில் இந்தையிரோப்பியன் செய்தி வருகிறது.

three (adj.,n.) "the number which is one more than two; a symbol representing this number;" Old English þreo, fem. and neuter (masc. þri, þrie), from Proto-Germanic *thrijiz (source also of Old Saxon thria, Old Frisian thre, Middle Dutch and Dutch drie, Old High German dri, German drei, Old Norse þrir, Danish tre), from nominative plural of PIE root *trei- "three" (source also of Sanskrit trayas, Avestan thri, Greek treis, Latin tres, Lithuanian trys, Old Church Slavonic trye, Irish and Welsh tri "three") என்பார். சொற்பிறப்பியலார் SKEAT கீழுள்ள்தைச் சொல்லி யிருப்பார்.   

THREE, two and one. (E.) M. E. thre, Wyclif, Matt, xviii. 20. A.S. thred, Matt, xviii. 20 ; other forms thrio, thri, thry, Grein, ii. 599. + Du. drie. +Icel.thrir (fem, thrjar, neut. thriu). +Dan.tre. +Swed.tre. +Goth.threis. +G.drei +Irish,Gael.,and W.tri. +Russ.tri. +Lat.tres, neut. tria +Gk. treis, neut. tria.+ Lithuan. trys (stem tri-). + Skt. tri. All from Aryan TRI, three (masc. TRAYAS, neut. TRIA) ; Fick, i. 604. 

Origin unknown; some have suggested the sense 'that which goes beyond,' as coming after 2. Cf. Skt. tri, to pass over, cross, go beyond, fulfil, complete. Perhaps it was regarded as a 'perfect' number, in favour of which much might be said. Der. three-fold, A.S. thrifeald, thriefeald, Alfred, tr. of Boethius,c. xxxiii. 4 (b. iii. met. 9); three-score, Much Ado, i.i.aoi; also thri-ce, q. v.; and see thir-d, thir-teen, thir-ty. From the same source are tri-ad, tri-angle, tri-nity, tri-pos, &c. See Tri-. Also tierce, terc-el, ter-t-ian, ter-t-i-ar-y.  

மேலே ”Origin unknown“ என்று சொல்வதைக் கவனியுங்கள். வட இந்திய மொழிகளிலும் ”திரிச்” சொற்களை மொழியறிஞர் அடுக்குவாரே தவிர, சொற்பிறப்பியல் என்னவென்று சொல்லார், 

இதை ஒழுங்கே முதலில் நமக்கு உணர்த்தியவர் பாவாணரே. 1, 2, 3, 5, 10, ஆகிய எண்களின் செய் அடையாளங்களும் அவற்றிற்கான பெயர்களும் மாந்த உறுப்புகளை வைத்தே எழுந்திருக்கலாம். 

இன்றுங் கூட, 1 ஐக் காட்ட, ஆள்காட்டி விரலையே பயன் படுத்துவோம்  2 ஐக் காட்ட, ஆள்காட்டி விரலும், நடுவிரலும் பயன்படும். 3 ஐக் காட்ட ஆள்காட்டி, நடுவண், மோதிர விரல்களைப் பயன்படும். மூவிரல் அடையாளத்தை விட, (2 துளைகள், 3 தோல்பிரிவுகள் கொண்ட). மூக்கைத்  தொடுவது 3 கோட்டை எளிதாய் அடையாளங் காட்டும். 

(கை எப்படி ஐந்தைக் காட்டியதோ, அதுபோல் இதுவும் முடியும்.. பழக்கந்தானே? ஓர்ந்துபாருங்கள்.) 

தொடக்கத்தில் உலகெங்கும் 3 இன் குறியீடாய் 3 கோடுகள் படுத்தோ, குத்திட்டோ, ஒரு முனையில் ஒட்டியோ கிடக்கும்  இன்று நாம் பயிலும் அரேபிய எண் வடிவு வளர்ந்த வகையையும் கூர்ந்து பாருங்கள். 2 துளை 3 தோல் உருவத்திற்கும் மூக்கிற்கும் உள்ள ஒப்புமை சட்டெனப் புரிந்துபோகும்  

சரி, மூக்கு, மூன்று ஆகிய சொற்கள் தமிழில் எப்படி எழுந்தன? முல், முன், முள், மூ, மூன்று என்பவை முன்வரல் பொருளில் எழுந்தவை. 

முல்லல்= முன்வரல். 

முல்>முன்= முன்மைக் கருத்து. 

முல்>முள்> முளு>முழு>முகுதல்= முன்வரல்; 

முகுதல்>முகுத்தல்= முன்வர வைத்தல் (பிறவினைச் சொல்); 

முகு>முகம்= தலையின் முற்பகுதி; 

முகு>முகரை= மூக்கும் வாயும் சேர்ந்த பகுதி; 

முகு> முக்கு> மூக்கு= முகத்தில் வாய்க்கும் முன்னுறுப்பு;  

முகஞ்சி>மூஞ்சி= மூக்கும் வாயும் சேர்ந்து முன்னீண்ட முகம்; 

முகனை= வீட்டின் முன்புறம்; main. முகனை= சொல்லின் முன் எழுத்து,  இதுவே, யாப்பில் திரிந்து மோனையாகும். முகப்பு = வீட்டின் முன்பகுதி. 

முகு-த்தல்>மூ-த்தல் ஆயினும் முன்வரல் பொருளைக் கொடுக்கும். அகவை உயர்வையும் உணர்த்தும்.

மூ(ல்)>மூ என்பது மூன்றின் பெயரடையது. முல்நுதல்>முன்னுதல்>மூனு>மூன்று என்பது எண் வளர்ச்சி. மூனு, மூணு என்றும் திரிவு காட்டும். முற்றை = triple. 

மூக்கு என்பது பறவை அலகையும், யானைத் துதிக்கையையும் குறிக்கும். கிண்ணியின் spout உம் மூக்கு எனப்படும்.  மூழ்த்தல்= மூட்டல்> மூத்தல்> மூத்திரம்= முன்னே பாய்ச்சும் சிறுநீர்; மூதம்= முன்னெழும் விந்து; மூதலித்தல்= முன்னிகழ்வை நிறுவிக் காட்டும் வினை,  மூரல்= முன்வரும் பல்;  முல்> மூல்> மூலம்= முன்வரும் முளை; மூலி/மூலிகை = முளைத்துவரும் வேர், இலை போன்றன. மருத்துவப் பொருள்கள். மூலிகம்> மூளிகம்> மூடிகம்> medicine (ஆங்கிலத்தில் சொற்பிறப்பு காட்டார்.)  

முன்வருவது இன்னொரு பொருளோடு முட்டும் முள்தல்>முட்டல்; மூலை = பக்கங்கள் முட்டும் corner. முள்ளுவது முழுகும் பின் மூழ்கும். முள்> மூழ். 

தமிழ் மூக்கைப் பார்த்த நாம், இனி ஆங்கில nose (n.) ஐப் பார்ப்போம்.  Middle English nose, from Old English nosu "the nose of the human head, the special organ of breathing and smelling," from Proto-Germanic *nuso- (source also of Old Norse nös, Old Frisian nose, Dutch neus, Old High German nasa, German Nase), from PIE root *nas- "nose." Used of beaks or snouts of animals from mid-13c.; of any prominent or projecting part supposed to resemble a nose from late 14c. (nose cone in the space rocket sense is from 1949). Meaning "sense of smell" is from mid-14c. Meaning "odor, scent" is from 1894. In Middle English, to have one's spirit in one's nose was to "be impetuous or easily angered" (c. 1400).

மேலே  any prominent or projecting part supposed to resemble a nose என்பதைப் பார்த்தால் to project- என்பதே மூக்குச் சொற்பிறப்பியலில் முன்மைக் கருத்தெனப் புரியும், 

முகர்தல், மூக்குச் சொற்பிறப்பிற்கான முதற்பொருளல்ல; மூக்கில் பெற்ற வழிப்பொருள். இதைக் குழப்புவது முறையல்ல, செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் பேரகரமுதலியில்  இக் குழப்பமுண்டு.  

(அந்த அகரமுதலியில் ஆய்ந்தால், ஏராளம் குறைகளுண்டு, ஆயினும் அதை  நாடத்தான் வேண்டும். எதிர்காலத்தில் புது எடுவிப்போர் - new editors- அதன் குறைகளைக் களையட்டும்)   

nose என்பது நமக்கு அயலில்லை. முன்வரும் மூக்கு முகர, நுகரப் போலியில் முதி>நுதி>நுசி>நொசி>நாசி ஆகும். இது வடபால் மொழிகளிலோ, இந்தை யிரோப்பியனிலோ கிட்டாது,  நுல்>நுள்>நுழு> நுகு என்ற வளர்ச்சியிலும் சொற்களுண்டு, 

தவிர, நுல்+தல் = நுற்றல்>நுற்றி>நெற்றி> நெத்தி என்பதை நோக்குங்கள். நுத்தி>நெத்தி என்றும் இது புரிந்துகொள்ளப் படும். நுது>நுதல் என்பதும் நெற்றியே. இச்சொற்களை எல்லாம் பார்க்கையில் நாசி எனக்குத் தமிழ் போலத் தான் தென்படுகிறது..  

இன், துகரச் சொற்களுக்கு வருவோம். முகரத்திற்கு நுகரம் ஒருவகை போலி எனில் நுகரத்திற்குத் துகரம் வேறுவகைப் போலி. 

துல்>துள்>துள்ளல்= முன்வரல். மாந்தர், விலங்கு, திண்மம், நீர்மம், வளிமம் என யாரும்/எதுவும் முன்வரலாம். 

துள்ளு>துளு<துளி= முன்னெழுந்து, பரப்புவிசையால் (surface force) சொட்டுச்சொட்டாய் நீர்மம் மாறுதல். 

துள்>தூள்>தூள்சு> தூசு> தூசி (திண்மத் துளி) 

துகள் என்பதும் தூள்தான், .

தூள்>தூள்வு>தூவுதல் என்பது துளிக்கும், தூளுக்கும் உண்டு. 

துளு>துளும்பு= முன்வரல். அடுத்த ளகர, டகரத் திரிவில் துளு> துடு> துடங்கு> துடக்கு> துடக்கம்>தொடக்கம்= முதலில் நேர்வது. துளு>துடு>துடி கிடக்கும் பரப்பு/பட்டை குறுக்குவெட்டில் முன்னெழுந்து துடிப்பது. துடு>துடுப்பு படகு நகரும்படி,  முன்வந்து நீரைப் பின் தள்ளுவது.

 துள்வு>துவு>துவங்குதல்>துவக்குதல்>துவக்கம். (தொடக்கம், துவக்கம் ஆகிய இரண்டும் தமிழே.) துவல்>துவலை>திவலை = நீர்த்துளி

அடுத்து, டகர, தகரத் திரிவிலும் இதே கருத்தீடு பயிலும். துத்தம் = குரலுக்கு மேல்வரும் இசைச்சுரம். துத்தரி = மேல்வரும் ஊதுகொம்பு. துத்தியம் = புகழ்ச்சி. துதம் = துதி முன்நிற்போரைப் புகழும் போற்றுதல். துதி = கம்பு, கோலின் நுனி. துருத்தி = ஆற்றிற்கும் முன்வந்து நீளும் நிலநீட்சி. துருத்தி = உறை (sheath). 

யானையின் மூக்கு துதிக்கரம் = துதிக்கை எனப்படும். துதி தமிழ் என்பதற்கு இந்த யானை மூக்கு ஒன்றே போது,. துந்தம்>துந்தி>தொந்தி (எருதின் முன் தள்ளிய வயிறு. நந்தி என்ற பெயரே துந்தி>தொந்தியை உணர்த்தும், மாந்தரின் முன்தள்ளிய வயிறும் தொந்தி எனப்படும். துந்துபி = பேரிகை  (இசைப் பல்லியத்தில் முன்நிற்கும் முழங்குகருவி. துளும்பு> துடும்பு> துதும்பு>ததும்பு 

டகர, ரகரத் திரிவிலும் பல சொற்களுண்டு. துருத்தல்> துரத்தல்= முன்னோக்கிச் செலுத்தல். துரிதல் = தேடுதல். துரு = மண்ணிலிருந்து மேல்வளர்ந்த மரம். துரு/துருசு = இரும்பின் மேல்மையும்  கறை. துருக்கப்பல் = துருத்தப்பல் = முன்வந்த பல். துருத்தி = ஆற்றிடைக் குறை, உலையூது கருவி. துருவம் = தேடுகை

மூக்கின் மறுபெயராய், துண்டத்தையும், நாசியையும் திவாகரமும், கூடவே கோணத்தையும் பிங்கலமும்.  ஆக்கிராணம் எனும் வடசொல்லை சூடாமணி நிகண்டும் சொல்லும்., துள்+ந்+து = துண்டு>துண்டம் = துளை கொண்ட பறவை யலகு , மூக்கு, துதிக்கை போன்றன. நாசி பற்றி மேலே சொல்லிவிட்டேன். குள்> கொள்> கோள்> கோண்> கோணம் = கூர்மையான ஏனத்தின் மூக்கு.  ஆக்கிராணம் என்பது கந்தம் = மணம் என்பதோடு தொடர்புடையதாய்த் தெரிகிறது.

இனி முடிவுரைக்கு வருவோம். துதி என்பது நம்மூரில் யானை மூக்கைக் குறித்தது. முக்கைக் குறிக்கும்படி ”துரி” என்பது நம்மூரில் இல்லைதான். ( அதனால் என்ன? சோழ>சோட>சோர என்ற திரிவில் ’சோழ’ மட்டுமே நம்மூரில் உண்டு.மற்ற இரண்டும் ’சோழ’ என்பதன் திரிவுகளென்று சொல்லாதிருக்க முடியுமா?) 

துரி>த்ரி>திரி என்பது இந்தையிரோப்பியனில் மூன்றைக் குறித்தது. திரியின் மூக்குத் தொடர்பை அவர் இன்று வரை அறியவில்லை. Origin unknown என்பார். ஆனால் நுதி>நுசி>நொசியை இன்றும் கூட மூக்கிற்கு இணையாய்ப் பயன்படுத்துவார். மூக்கு-நாசி- துதி என்பது தான் இக்கட்டுரையின் அடிக்குறிப்பு. மூன்று - திரி என்பது இந்த அடிக்குறிப்பால் ஏற்பட்ட விளைப்பு. 

கட்டுரையை முடிக்குமுன் இரு உதிரிச் செய்திகள். இங்கிலாந்தின் Teesdale, Swaledale பகுதிகளின் கிளைமொழியில் tether/ tethera என்றும் 3 (cardinal number three) பழைய எண்ணிக்கைக் கட்டகத்தில் ( old counting system) அழைக்கப் படுகிறது. அரபியில் 3 என்பது THALATHA- ثلاثة - THREE எனப்படும். துளதா>தலதா என்பதும் துளையோடு தொடர்பு காட்டும். 

அன்புடன், 

இராம.கி.


Monday, December 21, 2020

laboratory

 கீழே வரும் அத்தனை சொற்களுக்கும் சொற்பிறப்பு உழைத்தல் தான். to work.to exert the body, to toil, to go through pain, etc. செய்தல் என்றாலும் அதே பொருள் தான்.  செய்தல் என்பது to process என்பதற்கு இணையாகப் புழங்கி வருகிறேன். இந்த உழையத்திற்கு வந்து சேர எனக்கு நெடுநாட்கள் பிடித்தன. வேறு ஏதேதோ பயன்படுத்தி, அவையெல்லாம் கனவுலகச் சொற்கள் என்று தவிர்த்து முடிவில் இதற்கு வந்தேன். பல கூட்டுச் சொற்களுக்கு உழை என்பது புணர்ச்சியில் இணங்கிவரும். 

உழைத்தல் என்பது முயற்சி செய்தல், வருந்துதல் என்ற பொருட்பாடுகளைக் குறிக்கும். ஒரு குறிப்பிட்ட வேலையைத் திருப்பித் திருப்பிச் செய்து நேர்த்தியான செய்முறையைக் கண்டுபிடிப்பதையே laboriously working என்கிறோம். கண்டுபிடிப்பு என்பது வேறு; (அது நமக்குக் கனவைத் தரும், சாதிப்பைத் தரும்.) ஒழுங்கான செய்முறைகளுக்குத் தக்கத் தமக்குத் தாமே ஏற்படுத்திக் கொண்ட விதிகளிலிருந்து வழுவாது செய்யும் lab work வேறு. உழையப் பணிகளில் இருக்கும் dredgery உழையம் என்ற சொல்லில் வெளிப்படுகிறது. செய்களம் என்பது கனவு தரும் சொல். நான் என் ஆய்வுப் பட்டப் பணிக்காக அத்தகைய உழையத்தில் 3.5 - 4 ஆண்டுகள் புகுந்து வந்தபோது, ஒவ்வொரு உருப்படியான தரவுப் புள்ளியைத் தேடும் போது, இந்த உழைப்பு முதன்மையானது, எல்லாமே  10% inspiration, 90% perspiration என்று உணர்ந்தவன். அப்புறம் உங்கள் உகப்பு.     

அன்புடன்,

இராம.கி.

labor (n.) 

c.1300, "a task, a project;" later "exertion of the body; trouble, difficulty, hardship" (late 14c.), from O.Fr. labour (Fr. labeur), from L. laborem (nom. labor) "toil, pain, exertion, fatigue, work," perhaps originally "tottering under a burden," related to labere "to totter." Meaning "body of laborers considered as a class" (usually contrasted to capitalists) is from 1839. Sense of "physical exertions of childbirth" is 1590s, earlier labour of birthe (early 15c.); cf. Fr. en travail "in (childbirth) suffering" (see travail). Labor Day first marked 1882 in New York City.

labor (v.) 

late 14c., "perform manual or physical work; work hard; keep busy; take pains, strive, endeavor" (also "copulate"), from M.Fr. labourer, from L. laborare, from labor (see labor (n.)). The verb in modern French, Spanish, Portuguese means "to plow;" the wider sense being taken by the equivalent of English travail. Sense of "to endure pain, suffer" is early 15c., especially in phrase labor of child. Related: Labored; laboring.

laboratory 

c.1600, "building set apart for scientific experiments," from M.L. laboratorium "a place for labor or work," from L. laboratus, pp. of laborare "to work" (see labor).

labored 

"learned," mid-15c., pp. adj. from labor (v.).

laborer 

mid-14c., "manual worker," especially an unskilled one, agent noun from labor. Meaning "member of the working class, member of the lowest social rank" is from c.1400.

laborious 

late 14c., "hard-working, industrious," from O.Fr. laborieux (12c.), from L. laboriosus "toilsome, wearisome, troublesome," from labor (see labor (n.)). Meaning "costing much labor, burdensome" is from early 15c.; meaning "resulting from hard work" is mid-15c. Related: Laboriousness.

laboriously 

early 15c., "with difficulty, laboriously, slowly," from laborious + -ly (2). Meaning "earnestly, strongly" is from c.1500.


Saturday, December 19, 2020

உயர்கணிதப் பொதுக் குறிகளும், பொளிகளும்.

Penguin Dictionary of Mathematics என்றோர் அருமையான அகரமுதலி உண்டு. இயன்றோர் இணையத்தில் தேடிப் பாருங்கள். அதின் கடைசிப் பக்கத்தில் கொடுத்துள்ள 7 ஆம் பட்டியலில்  பொதுவான கணிதக் குறிகளையும் (common mathematical signs) பொளிகளையும்  (symbols) கொடுத்திருப்பர். இவற்றிற்கான சரியான கலைச் சொற்கள் இன்றி உயர்கணிதத்தைத் தமிழில் மேலெடுத்துச் செல்வது கடினம்.  பைம்புல மட்டத்திற்கும் (popular level) மேம்பட்டதாய் அறிவியலையும், நுட்பியலையும் தமிழில் சொல்லவேண்டுமெனில், உயர்கணிதத்தை விட்டுவிட்டு நகருவதும் கடினமே. 

பலரும் ”பைம்புல மட்டத்திற்கு மேல் தமிழ் ஏன் பயன்படவேண்டும்?” என்று ஒர்ந்து பார்க்க மறுக்கிறார். ”கலைச்சொற்கள் ஏன்? அவற்றின் வரையறைகள் என்ன?” என்று உணரவும் மறுக்கிறார். பொதுவான தாளிகைகளில், நாளிதழ்களில்  வரும் சொற்களைப் போல் ”பாமர நிலையிலேயே தமிழ் மொழி எந்நாளும் நிற்கட்டும்” என எண்ணவும் தலைப்படுகிறார். இச் சிந்தனையில் இருந்து நான் மாறுபட்டவன். தமிழில் எக்குறையும் இன்றி, உயர்கணிதம், அறிவியல், நுட்பியல் ஆகியவற்றை எதிர்கால மாணவர் தமிழ் வழி படிக்க வேண்டுமென்று விரும்புகிறேன். எனவே கீழ்வரும் சொற்கள் கட்டாயம் எனக்கு வேண்டும். குறிப்பிட்ட பட்டியலையும் அதில் வரும் கலைச்சொற்களுக்கு ஆன தமிழ் இணைச்சொற்களையும் கீழே கொடுத்துள்ளேன்.  


equals sign = ஒக்குமைக் குறி

inequality = ஒக்காமை

approximation = பக்கமடை

identity, congruence modulo n = ஒற்றம், n மூட்டுக் கூடுகை

plus sign பலைக் குறி; (https://valavu.blogspot.com/2010/04/3.html)

minus sign நுணைக் குறி 

plus/minus sign பலை/நுணைக் குறி

multiplication sign பெருக்கல் குறி

division sign = வகுத்தல் குறி

divisor = வகுதி

radical = மூலம் 

exponent = மடக்கு 

ratio = வீதம்

variation = வேற்றம்

interval = இடைவெளி

binomial coefficient இருமக் கெழு

summation sign = கூடுகைக் குறி

continued product தொடர்ப் பெருக்கு

integer part தொகுவப் பகுதி

n-tuple = n- மடை 

set = கொத்து

subset = உட்கொத்து

proper subset = முறையான உட்கொத்து

union = ஒன்றியம்

intersection = இடைச்செகுத்தம்

difference = விட்டாயம் (இதுவே விட்டாயம்>வித்தாயம்>வித்யாயம்>வித்யாசம் என்று சங்கதத்தில் மருவும். ஒன்றை விட்டு இன்னொன்று ஒன்றிலிருந்து இனொன்று என்று பொருளாகும். ஆயம் = மதிப்பு.)    

complement = உடன்படுவம் 

empty set = வெற்றுக் கொத்து

universal set = ஒருங்கக் கொத்து

cardinal number கட்டு எண்

power set = புயவுக் கொத்து

cartesian product = கார்ட்டீசப் பெருக்கு

and = உம்

or = அல்

not = இல்

implication = அடிப்படுகை

equivalence = ஒக்குமை

quantifier = எண்ணுதியாக்கி

function (map, mapping) = வங்கம் (முகப்பு, முகவுதல்) 

inverse function = தலைகீழ் வங்கம்

limit = எல்லை

asymptotic = ஒட்டுப் போலி

derivative = திரிவு 

partial derivative = பகுதித் திரிவு

integral = தொகை

multiple integral = பல்மடித் தொகை

vector = வேயர்

position vector = பொதிய வேயர்

absolute value = முற்றை மதிப்பு

scalar product = அளவர்ப் பெருக்கு

vector product = வேயர்ப் பெருக்கு

norm = நேர்வம்

determinant = தீர்மானன்

matrix = அணி

inverse (of a matrix) = அணியெதிர்

transpose = பொதிப்பெயர்ப்பு

complex conjugate = பலக்குக் சேர் உகத்து 

Hermitian conjugate = எர்மீசியச் சேர் உகத்து 

probability = பெருதகை

expectation = எதிர்பார்ப்பு

variance = வேறுகை

covariance = கூ வேறுகை

complex number = பலக்கெண்

modulus = மூட்டில்

argument = வெள்ளிமை

அன்புடன்,

இராம.கி.


 


Wednesday, December 16, 2020

குருதயமும் (heart) குருதியும் (blood) - 3

 (குருதி, எருவை, இரத்தம், உதிரம்), (சுடுவன்), (புண்ணீர்), (செந்நீர், சோரி, சோணிதம்), (நெய்த்தோர், கறை  என்ற 11 சொற்களை blood இன் தொடர்பாகத் திவாகரத்தின் 554 ஆம் நூற்பா குறிக்கும். மேலும், செம்பால், புலானீர் என்ற 2 சொற்களை பிங்கலமும், சூடாமணி நிகண்டும் குறிக்கும். அச்சொற்களை 5 தொகுதிகளாய்ப் புரிந்துகொள்ளலாம்) 

முதல்வகைச் சொற்களான குருதி, எருவை, இரத்தம், உதிரம் என்பவை குருதி யோட்ட ஒலியால் எழுந்தவை. நெஞ்சில் காதுவைத்துக் கேட்டால், குளுகுளு> குடுகுடு> குருகுரு ஒலிக்குறிப்பில் இரத்தவோட்டத்தை உணர்வோம். இதன்வழி ஓர்ந்தால், குரு-தல் வினை, ஓடுவினைக்குப் பகரியாகலாம். குருதும் (=ஓடும்) நீர்மம் குருதியாகும். படுதல்> படுவுதல் ஆவது போல், குருதலின் பொருள் கெடாது, குருவுதlலாகலாம்; குருவுதல்>கெருவுதல் என்றும் திரியலாம். கெருவதலிற் ககரங்கெட்டு, எருவுதல்>எருவை ஆகும். குருத்தல்> கெருத்தல்> இருத்தல்> இரத்தல் திரிவில், ககரங்கெட்டு இரத்தமாகும். (இரத்தம் X அரத்தம் வேறுபாட்டிற்குக் கீழே வருவேன்.) அடுத்துக் குளுகுளு>குடுகுடு என்பது குதுகுது ஆகலாம். ”குதி” வினை இதனிற் பிறக்கும். குதி> குதிர்> உதிர்> உதிரம் என்பதும் ககரங்கெட்டு உருவானதே. 

குருதிக்கான எல்லாச் சொற்களையும் செந்நிற வழிப் பெற்றதாய் ஒருகால் எண்ணினேன். https://valavu.blogspot.com/2020/07/blog-post.html, இப்போது என் புரிதல் மாறி விட்டது, எல்லா விலங்குக்குருதிகளும் சிவப்பில்லை. இருக்க வேண்டியதும் இல்லை. ”அரத்தம் சிவப்பு” என்பது வேட்டுவ மாந்தப் புரிதலில் முகன்மைக் குறிப்பில்லை. சிவப்பு, மாந்தருக்கு நேர்ந்த விதப்பு. விலங்குக் குருதிகள்  சிவப்பு (red), ஊதா (blue), பச்சை (green), மஞ்சள் (yellow), நரங்கை (orange), நீலம் (violet) எனப் பல நிறங்களிலும், நிறம் இலாதும் உண்டு. சில விலங்குகளின் அரத்தங்களில் செம்மைக் கோளங்களும் (hemoglobin), சிலவற்றின் அரத்தங்களில், வேறுவகை உய்ப்பு நிறமிகளும் (respiratory pigments), இன்னும் சிலவற்றில் உய்ப்பு நிறமிகளே இல்லாமலுமுண்டு, ஆனால் எல்லா விலங்குகளும் அரத்தவழி அஃககம் நகர்த்தும் (to transport oxygen) திறன் கொண்டவை.  விலங்குகளை வேட்டையாடிய மாந்தன் இதை உணர்ந்திருப்பான். சிவப்பால் குருதிக்குப் பெயர் வந்தது என்பது பட்டறிவிலாப் பார்வை. 

அடுத்தது சுடுவன். வெட்டுற்ற உடலில் வெளிவரும் குருதி, சுற்றுச்சூழல் வெம்மையை விடச் சற்றதிகம் சூடு காட்டும். சுடும் காரணத்தால் ஏற்படும் சொல் சுடுவன். புண் என்பதை 2 விதம் புரிந்துகொள்ளலாம். ஒன்று, புல்> புள்> புண்= திரண்ட தசை. இன்னொன்று புண் = வெட்டுக்காயம். புண்ணில் இருந்து வெளிப்படுவது புண்ணீர். 4 ஆம் தொகுதி மாந்தக் குருதியின் சிவப்பு நிறத்தால் எழுந்தது. செம் எனும் முன்னொட்டுப் பொருள் குருதியால் எழுந்ததல்ல; எரி/தீ குறித்த சுல் எனும் வேர்ச்சொல்லால் எழுந்தது. செந்நீர், செம்பால் போன்றவை சுல்> செல்> செள்> செய்> செய்ம்> செம் என்றெழுந்தவை. சுல்> சுள்> சொள்> சோள்> சோர்> சோரி= செங்குருதி. சுல்> சுள்> சொள்> சோள்> சோண்> சோணிதம்= செங்குருதி. சோணமலை= அருண மலை. சோணேசன்= அருணேசன்= அண்ணாமலையான், செந்நீர், செம்பால், சோரி, சோணிதம் போன்றவை மாந்தக் குருதி குறிக்கும் விதப்புச் சொற்கள்; குருதிக்கான பொதுச்சொற்கள் அல்ல. 

அடுத்தது நெய்த்தோரும், கறையும். உடம்புவிட்டு வெளியேறும் குருதி, நெய்ப் பசை காட்டும். துவர்தல்= ஒட்டல், உலர்தல். தரையில் விழுந்த குருதித்துளி தரையில் ஒட்டிக் காய்ந்து போகும். நெய்த்துவர்> நெய்த்தோர்.  இனி, காய்ந்த குருதி கறுத்துக் கறையாகும். அடுத்தது புலால்நீர். இதுவும்  ஒலிக்குறிப்பில் எழுந்ததே. (முதற்பகுதியில் ”குளுக், பளுக்” எனும் ஒலிக்குறிப்பைச் சொல்லி பளுக்கை blood-ஓடு தொடர்புறுத்தினேன். ”புலபுல” என்பது விரைவுக் குறிப்பு. “புலபுலெனக் கலகலெனப் புதல்வர்களைப் பெறுவீர்” என்பார் பட்டினத்தார். (178 ஆம் பாட்டு) (”பொலபொலென ஓடிவந்தான்”). புலவுதல்= ஓரிடம் விட்டு விலகல். தலைவி தலைவனை விட்டு, ஊடலால் விலகினாள்: புலவியது (= இடம்விட்டு விலகியது) புலவு= குருதி ‘புடை அவிழ்ந்த கூந்தல் புலவுத்தோய (சீவக 293) புலவு, புலா  என நீளும். புலா ஆலியது (=நிறைந்தது) புலால். (உடல் தசைக்கு நுண்குழாய் முலம் சத்துக் கொணர்வது குருதி.  புலால் நீர் = புலானீர் = குருதி.  குருதி போகத் தசையையும் அதன் திரட்சிப் பொருளில் புலவு, புலால் என்ற சொற்களால் அழைப்பர்.

புலாலுக்குப் புலை என்றும் பெயருண்டு, புலை= ஊன் ”புலையுள்ளி வாழ்தல்” இன். நாற். 13. புலைசு= புலால். புலைத்தொடர்பால், புலையன்/ஞன், புலைச்சி என்ற சொற்கள் எழுந்தன. கொல்லாமை விழைந்த செயினம் புலைத் தொழிலை  இழிவாய்ப் பார்த்தது. செயினம் மறுக்கவிழைத்த உத்தர மீமாஞ்சையும், சிவமும், விண்ணவமும், சமயப் போட்டியில் வெற்றி பெற, இதேநிலை எடுக்கும் தேவைக்குத் தள்ளப்பட்டன. சாதிநிலை இறுகிய பொ.உ. 3 ஆம் நூற்றாண்டில், இதுபோன்ற தவறான கண்ணோட்டங்கள் தமிழ்க் குமுகாயத்தில் பதிந்து போயின. புலத்து என்னும் இந்தையிரோப்பியச் சொல்லிற்கும் மேலே காட்டிய புலவு, புலா, புலால், புலை போன்ற சொற்களுக்கும் ஏதோவொரு உறவு இருப்பது போல் தான் தெரிகிறது. 

blood (n.) Old English blod "blood, fluid which circulates in the arteries and veins," from Proto-Germanic *blodam "blood" (source also of Old Frisian blod, Old Saxon blôd, Old Norse bloð, Middle Dutch bloet, Dutch bloed, Old High German bluot, German Blut, Gothic bloþ), according to some sources from PIE *bhlo-to-, perhaps meaning "to swell, gush, spurt," or "that which bursts out" (compare Gothic bloþ "blood," bloma "flower"), from suffixed form of root *bhel- (3) "to thrive, bloom." But Boutkan finds no certain IE etymology and assumes a non-IE origin. இதே கருத்தை பேர்பெற்ற ஆங்கிலச் சொற்பிறப்பியலார் Skeat உம் சொல்வார், 

Blood, gore (E) M.E. blod,blood Chaucer, C.T. 1548,A. S. blud (Grein). + Du. bloed. + Icel. blod. + Swed. blod. + Goth. bloth. + O. H. G. pluot, ploot. A. S. blowan, to blow, bloom, flourish (quite a distinct word from blow, to breathe, puff, though the words are related); cf. Lat. flarere, to flourish; see Curtius, i. 375. See Blow (2). ^f Blood seems to have been taken as the symbol of blooming, flourishing life. Der. blood-hound, blood-shed, blood-stone, blood-y, blood-i-ly, blood-i-ness ; also bleed, q. உண்மை எங்கோ ஒளிந்துகொண்டு உள்ளது.

இனி அரத்தம் என்ற சொல்லிற்கு வருவோம். இது எரி/தீக் கருத்தில் சுல்> உல்> உல> அல> அர என்ற வளர்ச்சியில் சிவப்புப் பொருளில் உருவானதாகும்.  ”அரத்தம் உடீஇ அணி பழுப்ப பூசி” என்பது திணை150:144/1. இதில் சிவப்பு ஆடை பேசப்படுகிறது, “அரத்த பூம் பட்டு அரை மிசை உடீஇ” - சிலம்பு, மது:14/86, “பொங்கு ஒளி அரத்த பூ பட்டு உடையினன்” - சிலம்பு, மது:22/46 என்ற இரு காட்டுகளில் சிவப்புப் பட்டாடை பேசப்படுகிறது. இதுவரை அரத்தம் = குருதி என்ற பொருளைக் காணோம்.   அடுத்து, 8 ஆம் நூற்றாண்டு சீவக சிந்தாமணியில் 

இன் அரத்த பட்டு அசைத்து இந்திரற்கும் புகழ்வு அரிதே - சிந்தா:1 173/4

அரத்த வாய் பவள செம் தாள் பெடை அன்னம் அழுவது ஒத்தாள் - சிந்தா:5 1385/4

பரவி ஊட்டிய பஞ்சு அரத்த களி - சிந்தா:12 2396/2

அள்ளி ஏந்திய அரத்த அல்குலார் - சிந்தா:13 2685/

அரத்தகம் அகம் மருளி செய்த சீறடி அளிய தம்மால் - சிந்தா:12 2459/1

அட்டு ஒளி அரத்தம் வாய் கணிகை அல்லது - சிந்தா:1 98/2

அ நுண் துகில் கல் அரத்தம் அல்குல் அது வருத்த - சிந்தா:7 1783/1

அல்லலுற்று அரத்தம் ஆர்ந்த சீறடி தொழுதிட்டானே - சிந்தா:9 2084/4

அஞ்சன நிறம் நீக்கி அரத்தம் போர்த்து அமர் உழக்கி - சிந்தா:10 2239/1

உகிர் வினை செய்து பஞ்சி ஒள் ஒளி அரத்தம் ஊட்டி - சிந்தா:12 2540/

என்ற எல்லாக் குறிப்புகளிலும் சிவப்பு நிறமே பேசப்படுகிறது. குருதி பற்றிய பேச்சே காணோம். அதாவது அரத்தத்திற்கு 8 ஆம் நூற்றாண்டுவரை குருதிப் பொருள் கிடையாது போலும்.  முதன்முதல் கம்பனின் இராமகாதையில் தான் இரத்தமும் அரத்தமும் தம் பொருளில் ஒன்று கலக்கின்ற்ன. 

அரத்த நோக்கினர் அல் திரள் மேனியர் - பால:14 37/1

வாள் அரத்த வேல் வண்டொடு கொண்டைகள் மயங்க - அயோ:1 53/3

அகல் மதில் நெடு மனை அரத்த ஆம்பல்கள் - அயோ:4 176/3

புக்கிலாதவும் பொழி அரத்த நீர் - கிட்:3 48/3

அண்ணல் அ இராவணன் அரத்த ஆடையன் - சுந்:3 40/3

பொங்கு அரத்த விழியோர் புடை சூழ - யுத்1:11 10/4

அண்ணல் வாள் அரக்கர்-தம் அரத்த பங்கிகள் - யுத்2:15 103/2

சேப்புற அரத்த செ வாய் செம் கிடை வெண்மை சேர - யுத்3:25 15/2

நீள் அரத்தங்கள் சிந்தி நெருப்பு உக நோக்கும் நீரான் - ஆரண்:10 164/2

அரத்தம் உண்டனையே மேனி அகலிகைக்கு அளித்த தாளும் - பால:21 5/1

பொங்கு அரத்தம் விழி வழி போந்து உக - ஆரண்:7 22/2

கம்பனுக்கு முன்னால் இரத்தம் வேறு, அரத்தம் வேறு என்பது வியப்பைக் கொடுக்கிறது.  திவாகரம் கூட அரத்தம் என்பதைச் “செங்குவளை, பவளம், அரக்கு, சிவப்பு” என்பதற்கே ஒப்பு ஆக்கும். பிங்கல நிகண்டே அதன்  3078 ஆம் நூற்பாவில், “கடம்புஞ் சுடுவனும் கழுநீர்ப் பெயரும் அரக்கும் செந்நிறமும் அரத்த மாகும்” என்று முதன்முதல் சுடுவனை அரத்தத்தோடு சேர்க்கும்.  இரு வேறு சொற்பிறப்பில் உருவான சொற்கள் பிங்கலத்தின் காலமான 10 ஆம் நூற்றாண்டில் தான் ஒன்றாகியுள்ளன. இன்றோ, ”இரத்தமே தப்பு” என்று சொல்லும் நிலைக்கு நம்மில் சிலர் வந்துள்ளோம். (நானும் ஒருகால் அப்படி எண்ணினேன். இப்பொழுது தவறென உணர்கிறேன்.) இருவேறு சொற்கள் ஒன்றானதை நாம் சரியாய் விளங்கிக் கொள்ள வேண்டும். 

இனி அடுத்த பகுதியில் தசை பற்றிய விளக்கங்களையும், குருதய உள்ளுறுப்புகளையும், குளுகல்(clotting)பற்றியும், இந்தையிரோப்பியன் மொழிகளிலுள்ள குருதி தொடர்பான சொற்களையும் பார்ப்போம்.

அன்புடன்,

இராம.கி.


Thursday, December 10, 2020

குருதயமும் (heart) குருதியும் (blood) - 2

”குருதியின் சொற்பிறப்பு பற்றிய விளக்கம் சொல்லுமுன், முன்பகுதியில் மறந்த, குருதயம் தொடர்பான, இரு வேறு செய்திகளைப் பற்றிச் சொல்ல வேண்டும். முதலில் வருவது. பிறங்கு, இறை, வரி/வரை, பொறி ஆகிய குருதயத்தின் இணைச் சொற்களைப் பற்றியது, (இதை அடையாளங் காண்பதில் தமிழ் அகராதிகளும் தடுமாறியுள்ளன. ஒத்திசைவு (consistensy) பார்க்காமலே சிலர் சொற்பொருள்களைப் பதிய முற்படுகிறார். கொஞ்சம் பொறுமையோடு நான் சொல்வதைக் கீழே படியுங்கள்.) இரண்டாவது மார்புக்கான சொற்களையும், அதில் வரும் நெஞ்சை குருதயத்தோடு குழப்பிக் கொள்வதையும் பற்றியதாகும்.  கீழே விளக்கமாய்ப் பார்ப்போம்.

“மெய்த்தகும் இறையே பிறங்கெனப் படுமே” என்பது 399 ஆம் திவாகர நூற்பா,  இதற்கு முன், ”உடல், பிணம், உடற்குறை, பாதம், காலடி, கரடு, கணைக்கால், முழந்தாள், தொடைப்பற்று, குறங்கு, அல்குல், இடை, மருங்குற்பக்கம், வயிறு, ஆண்குறி, பெண்குறி, தொப்பூழ், மார்பு, முலை, தேமல், கை, அகங்கை, விரல், நகம், தோள், முதுகு, தோள்மேல், கழுத்து, பிடர், பிறகு, முகம், உதடு, பல், எயிறு, சிரிப்பு, அண்ணம், கீழ்வாய்ப்புறம், உள்நா, நா, மூக்கு, கதுப்பு, கண், நெற்றி, புருவம், காது, தலை, முடி, பல்வேறு மயிர்கள், மயிர்ப்பரப்பு, மயிர்க்குழற்சி, மயிர்முடி, சடை” என வெளிப்படத் தெரியும் உடற்பாகங்களை, திவாகர நிகண்டின் மக்கட்பெயர்த் தொகுதி சொல்லும். . இவ்வரிசையை அடுத்து (வெளிப்படக் கண்ணுக்குத் தெரியும் உறுப்புகளுக்கும், கண்ணுக்குத் தெரியா உள்ளுறுப்புகளுக்கும் ஆன பொதுப்பெயரை நிகண்டு சொல்லும். 

இதையடுத்து,  ”சந்து (joint), இறை, உடல்தழும்பு (காயத்தின் அடையாளம்) , கழலை (கட்டி), நரம்பு (nerve), எலும்பு (bone), தலையோடு (கவாலம்), முழு எலும்பு (entire bone network), குடுமி (தலையில் பொருந்தும் மயிர்), கவால உச்சி, இந்திரியம் (reproductive glands), புலனறி கருவி (sensory perceptors)” எனும் உள்ளுறுப்புகளை திவாகர நிகண்டு விவரிக்கும். இப்படி வரும் ஒழுங்கு முறையால், ”பிறங்கு” என்பது  ஓர் “உள்ளுறுப்பு:” என்பது விளங்கும், பெரும்பாலான அகர முதலிகளில், பிறங்கின் பொருளாய் “விரலிறை” என்று குறிப்பார். விரல் எனும் வெளியுறுப்போடு இப்படிப் பிறங்கைப் பொருத்தி (20 ஆம் நூற்றாண்டு) அகராதி சொல்வது (9 ஆம் நூற்றாண்டு) நிகண்டிற்கு முரணாகிப் போகிறது. அப்படி எனில், இறை என்பதன் பொருள் தான் இங்கு என்ன? (இறைக்கு வேறு பொருள்களும் உண்டு.) 

”இறை-” எனும் வினைச்சொல்லிற்கு, ”தூவு, வீசு, எறி, பாய்ச்சு, தங்கு” போன்ற பொருள்களைச் சொல்வர். இறை- வினையடியில் பிறக்கும் பெயர்ச்சொற்கள் பல்வேறு உருபுகளையும், ஈறுகளையும் சேர்த்தே உருவாகும். காட்டு: இறைப்பி = pump. இதுவும் இறை-த்தொழிலில் ஏற்பட்டதே.  பழங்காலத்தில் “ப்பி” சேராத ”இறை” என்பது ஒருவேளை பாய்ச்சும் கருவியைக் குறித்ததோ? - என்ற இயல்பான ஐயம் நமக்கெழும். உடலுள் உறுப்பாகும் ஒரே இறைப்பி குருதயம் தானே? ஆக, ”இறையும்” குருதயம் தானா? ஏனெனில் தொடர்புள்ள இறு> இற்று> இற்றி; இறு> இறை> இறைச்சி போன்றவை எலும்போடு ஒட்டித் தங்கும் ஊனைக் குறிக்கின்றன. இறைச்சியின் ஊன் பொருளைக் கண்டே ”இறை” நோக்கி நான் ஓர்ந்துபார்க்க விழைந்தேன்,

சரி! “பிறங்கிற்கு என்ன பொருள்?” அதை வினை வழியே பார்ப்போம். பிறங்கின் 9 பொருள்களில் பெருகுதலும் (to overflow, inundate. மாய்ப்பதோர் வெள்ளம் போலும் -- பிறங்கி வந்து, கலித் 146), ஒலித்தலும் (to sound) நம்மைக் கவனிக்க வைக்கும். வெள்ளம்போல் ”இறை” அரத்தத்தை இறைக்கிறது. ”பிலக்” என்ற ஒலியோடும் அது செயற்படுகிறது, பிலக்>பிறக் என்பது ஒலிப்பில் மெலிந்து பிறங்கு ஆகலாம். ஓர்ந்து பார்த்தால், குருதயத்தைக் குறிக்க “பிறங்கு” எனும் சொல் முற்றிலும் பொருத்தமே. பிங்கலம் 1082 ஆம் நூற்பா, “பிறங்கு, வரி, பொறி, வரை, இறையாகும்” என்பதில் வரும் வரி, வரை என்பன அரத்த ஓட்டத்தால் எழுந்தவை. வரித்தல்/வரைத்தல் = ஓடுதல்.  பொறி என்பது அரத்தம் இறைக்கும் எந்திரத்தைக் குறிக்கும். குருதயமும் அது தானே?. இனி, 16 ஆம் நூ. சூடாமணி நிகண்டு,  பிறங்கையும் வரியையும் தவிர்த்து, தருபொறி, வரை என்ற சொற்களை மட்டும் காட்டும். ,

சென்ற பகுதியில் விட்டுப்போன இன்னொரு செய்தி மார்பின் (frontside of the chest) பெயர்கள் பற்றியதாகும்.  அகலம், மருமம், ஆகம், உரல்/ம் என்ற சொற்களைத் திவாகரமும், இவற்றோடு நெஞ்சைச் சேர்த்துப் பிங்கலமும், சூடாமணி நிகண்டும் தரும். தொல்காப்பியத்தில் புழங்கும் ”நெஞ்சு”, திவாகரத்தில் விடுபட்டது, வியப்பாகிறது. மார்புக்கு மேல் உள்ளது முலை, முலைக்கு மேல் உள்ளது முலைக்கண். மார்பின் பின்னுள்ளது முதுகு/புறம். இனி மார்பின் சொற்பிறப்பிற்கு வருவோம். அகலமும், ஆகமும் ஒரே மாதிரி எழுந்தவை. நம் உடம்பில் வெளிப்படத் தெரியும் உறுப்புகளில் மார்பே அகலமானது. அகல்> அகல்வு> அகவு> அகவம்> ஆவம்> ஆகம் என்பது அகலத்தின் இன்னொரு சொல்வளர்ச்சி, இனி நெஞ்சிற்கு வருவோம்.

நெஞ்சு என்பது மார்பின் 2 பரிமானக் குறிப்பு. ஒரு துணி நெய்கையில் வார்ப்பு நூலும் (warp thread) ஊட்டு நூலும் (weft thread) பின்னிப் பிணைந்து நெய்யப் படுகின்றன. நெய்தல் வினை, நெய்வு>நெசவு எனும் பெயர்ச்சொல்லை உருவாக்கும். நெய்ந்தது>நெய்ஞ்சது>நெஞ்சு என்பது மார்பின் 2 பரிமானக் குறியீடு, நெஞ்சாங்கூடு என்பது நெஞ்சோடு சேர்ந்த என்புக்கூடு (chest). ஆங்கிலச் சொற்பிறப்பும் இக் கூட்டுப் பொருளை அழுத்திச் சொல்லும். chest (n.). Old English cest "box, coffer, casket," usually large and with a hinged lid, from Proto-Germanic *kista (source also of Old Norse and Old High German kista, Old Frisian, Middle Dutch, German kiste, Dutch kist), an early borrowing from Latin cista "chest, box," from Greek kistē "a box, basket," from PIE *kista "woven container" (Beekes compares Middle Irish cess "basket, causeway of wickerwork, bee-hive," Old Welsh cest).

நெஞ்சாங்குலை என்பது நெஞ்சின் பின்னுள்ள குலை. எனவே heart என்று பொருள்படும். வாழை, தென்னை, பனை ஆகிய மரக்கள் குலைகள் தள்ளுவது போல், நெஞ்சுக்கூடு இங்கே குலை தள்ளியது. என்னைக் கேட்டால் நெஞ்சை heart இக்கு இணையாய்ப் பயன்படுத்துவது முற்றிலும் தவறான சொல்லாட்சி யாகும். நெஞ்சாஙுகுலை என்பதே சரியான சொல்லாட்சி. 

அகலம், ஆகம் போல், மருமமும் மார்பும் ஒரேவிதமான சொற்பிறப்புக் கொண்டவை.  மருவுதல் = தழுவுதல். மருமகள்/ன் = தழுவிக் (ஏற்றுக்) கொண்ட மகள்/ன். மருவீடு = சம்பந்தி குடும்பம். மருவுகை = marriage. ஆணும் பெண்ணும் தழுவும் போது, இணையும் பகுதி மருவு>மார்வு என்று சொல்லப்பட்டது. இன்னொரு வகையில் மகரம் வகரத்தின் போலியாகையால் மருவுதல் = மருமுதல் என்ற சொல்லும் உருவானது. மருமுதலில் உருவான பெயர்ச்சொல் மருமம். உர்>உறு என்பதும் உரல் = தழுவலைக் குறிக்கும். உரம் என்ற பெயர்ச் சொல் இதில் உருவானது, மார்பைக் குறிக்கும் எல்லாச் சொற்களும்  தழுவல் கருத்தில் உருவானவை ஆகும். மார்பு தொடர்பான சொற்களைக் குருதயம் தொடர்பாய்க் குறிக்கமுடியாது.  இதுவரை ஆய்ந்த அளவில், heart ஐக் குறிக்க, குருதயம், இருதயம், இதயம், இதம், நெஞ்சாங் குலை, தாமரைக் காய்,  குண்டிக் காய், போன்றவறோடு இறை, வரி, வரை, தருபொறியையும் சேர்க்கலாம். மொத்தம் 12 சொற்களை இப்படி நாம் குறிக்கலாம்.. இனிக் குருதிக்கு வருவோம்.

அன்புடன்,

இராம.கி.


Wednesday, December 09, 2020

Outlook Dec 14 2020 பக்கம் 74, 76 இல் வெளிவந்த ஒரு சில கணிமைக் கலைச்சொற்கள் (A few computer terms)



Applications Programming Interface படியாற்றங்களின் நிரவல் இடைமுகம்

Blockchain = கட்டைக்கணை;  chain = கணை (கண்ணி கண்ணியாய் கோத்துக் கணைத்தது கணை)

Cloud elasticity = கொளுவு நெகிழ்மை

Dark Web = இருட்டு வலை

Edge computing = ஓரக் கணிமை

File extension = கோப்பு நீட்சி

GNU/Linux = யுனிக்சு அல்லாத கட்டகம் / லெய்னசு 

Haptic = தொடுவாடல்

IoT = பொருள்களின் இணையம் 

Java = யாவா

Kernel Panic = கருப் பதறல் 

Machine learning  = எந்திரக் கற்றல்

Neuromorphic computing = நரமால்வுக் கணிமை

OLED - Organic Light-emitting electrode அலங்க ஒளி-விடு மின்னேக்கி

plug-in = செருகு நிரலி

Quantum Computing = கண்டக் கணிமை

RFID Radio-frequency Identification Tags வானொலிப் பருவெண் அடையாளத் தக்கைகள்

SaaS Software as a Service = சேவையாகச் சொவ்வறை

Trojan Horse = கரவுக் குதிரை

URL - Uniform Resource Locator ஒருங்கு ஊற்று இலக்கி 

Virtual Machine = மெய்நிகர் மாகனம்

WAN Wide-Area Network = விரிநில வலை

XML Extensible Markup Language = நீட்டுக் குறியீட்டு மொழி. 

Y2K = இரண்டாயிராவது ஆண்டுச் சிக்கல்





Monday, December 07, 2020

குருதயமும் (heart) குருதியும் (blood) - 1

"Heart-க்குத் தமிழில் புதுச்சொல் உருவாக்குவது குறித்து, நிகண்டியம் புலனக்குழுவில் ஒரு தருக்கம் நடந்தது. அதை இங்கு பகிர்கிறேன். Heartக்கு நெஞ்சு, நெஞ்சம், நெஞ்சாங்குலை போன்ற சொற்களிருந்தாலும், நெஞ்சுச்சளி, நெஞ்சகநோய் போன்றவற்றில் அது மார்பையே சுட்டுகிறது. 

நாளங்களுக்கு அரத்தம் பாய்ச்சும் கருவியை புதுப்பெயரால் அழைப்பது நன்று. கருவி அமைப்பு, செயல், தோற்றங் கருதிக் ’குருதியத்தை’ அங்கு பரிந்துரைத்தார். வேறு சொற்களைஒ பரிந்துரைக்க இயலுமா?” என நண்பர் பெஞ்சமின் பிராங்கிளின் முகநூலின் தமிழ்ச்சொல்லாய்வுக் குழுவில் கேட்டார்.

 ”15 ஆண்டுகள்முன் யாகூக்குழுக்களில் ”’குருதயத்தைப்’ பரிந்துரைத்தேன். . http://valavu.blogspot.com/2006/09/blog-post.html. குருதியத்தை விட, குருதயம் பொருந்தும்” என மறுமொழிந்தேன். உடன், குருதயத்தின் வேர்ச்சொல் விளக்கத்தை நண்பர் கேட்டார், 

”2006 க்குமுன் யாகூ மடற்குழுமங்களில் குறிப்பெழுதினேன். அம்மடல்களை இப்போது தேடுவது கடினம். என் பழங்கணிகளும் பழுதாகிவிட்டன. அகவை முற்றிய என் மூளையுள் மட்டுமே இப்போது விளக்கமுண்டு. (இதுவும் எவ்வளவு நாளைக்கோ?) மீண்டும் புதிதாய் எழுத முயல்கிறேன். இம்முறை கட்டுரையாக்கி வலைப்பதிவில் சேர்க்கிறேன். 

இக்கால மின்னாக்கச் சிக்கல் இதுவே. மின்னாக்கிய கட்டுரைகளின் அகவை கூடுவதிலை. புதுப்புது நுட்பியல், நடைமுறை வருவதால், பழைய ஆக்கங்கள் மாற்ற இயலாது போகின்றன. வெள்ளம் வந்த பின், போட்டது போட்டபடி வேறிடம் ஓடி, பழைய இடத்தில் இருந்தவற்றை நம் முன்னோர் தொலைத்தது போல் தான் இப்போதும் ஆகிறது. அது மண்ணுலகில். இது மின்னுலகில்” என விடையிறுத்தேன். இந்த இடுகையின் முதற்பகுதியில் குருதயத்தையும் அடுத்த பகுதியில்  குருதியையும் விளக்கமாய்ப் பாரப்போம். 

முன்மை, தோன்றல், பொருந்தல், நெருங்கல், குத்தல், தாக்கல், வளைதல், உள்ளொடுங்கல், கருமை போன்றவற்றைக் குல் எனும் வேர் குறிக்கும். முன்மையில் வழிப்பொருளாய் அசைவு, விரைவுப் பொருள்கள் வெளிப்படும். 

குல்> குலு> குலுங்கு என்பது அசைதலைக் குறிக்கும். குலுங்கலின் பிறவினை குலுக்கல். குலுகுலுத்தல், இன்னொரு வளர்ச்சி. குலுகுலு, குறுகுறு என்றும் திரிந்து,  உறுத்தலை உணர்த்தும்.  குலுகுலுப்பு = தினவு. குறுகுறுத்தல்= முணுமுணுத்தல், மனமுறுத்தல், தினவுறல். குறுகுறுப்பு, சுறுசுறுப்பு, விரைவு, தினவு, சினம், அச்சம் ஆகியவற்றைக் குறிக்கும். 

குலுகுலு> குளுகுளு என்பது நீர்க்கொதியின் ஊடே ஆவிக்குமிழ் எழுந்து வெடிக்கும் ஒலி. “பார்ப்பான் குண்டிகை மிகுந்த நீரும் குளுகுளு கொதித்ததன்றே” என்பது கம்ப.வருணனை.61. 

ழகரம்/ளகரம், முதலில் டகரமாயும், பின் ரகரமாயும் திரிவது பல சொற்களில் உண்டு. காட்டு: தமிழ்நாடு> ஆந்திரம்> ஒடியா போனால், சோழ மண்டலம்> சோட மண்டல> சோர மண்டல் ஆகிப் போகும். மேலையர் கோர மண்டல் என்பார், 

குளுகுளு> குடுகுடு> குருகுரு என்றாவது தமிழ்நாட்டிலும் உண்டு. குடுகுடுத்தல், ஒலித்தலையும் விரைவையும் குறிக்கும்.  அகவைகூடித் தளர்ந்து அசைவதைக் குடுகுடு என்பார். குடுகுடுப்பு= பரபரப்பு.  குடுக்குடுக்கெனல்= ஒலிக்குறிப்பு., குடுகுடெனல் = ஒலி, விரைவுக் குறிப்பு.  குருகுருத்தல்= நமைச்சல், நெஞ்சு உறுத்தல், தொண்டை கொப்பளிக்கும் ஓசை எழுதல், வேர்க்குரு உண்டாதல். 

குகரம் ககரமாயினும் அதே பொருள் காட்டும்.  கடுத்தல்= விரைந்து ஓடல், சினத்தல், கடுகடுத்தல்= சினத்தல், விறுவிறுப்போடு வலித்தல், கடுகதி = விரைவு. கடுகல் = விரைதல். கடுகுடுத்தல் = துடிதுடித்தல்; கடத்தல் = நகரல், ஓர் இடத்தைவிட்டுப் போதல்; கடிது = விரைந்து. கதித்தல் = விரைதல், கதி = velocity. 

நெஞ்சில் குருதயம் துடிப்பதை இக்கால நாளிதழில், “லப்டப்” என்றும், ”லபக், படக்” என்றும் இலக்கணம் மறுத்து எழுதுவார். ”குளுக், பளுக்” என்பது இலக்கணத்தோடு எழுதும் ஒலிக்குறிப்பு ”குளுக்குளுக்” என்பது ”குடுக்குடுக்” என்றும், “குருக்குருக்” என்றும் திரியும். (பளுக் என்பதை blood பற்றிப் பேசும் போது பார்ப்போம்,) 

நெஞ்சில் காதுவைத்துக் கேட்டால் குளுகுளு> குடுகுடு> குருகுரு ஒலியோடு அரத்தம் ஓடுவதை உணரலாம். இவ்வோசை நமக்கு மட்டுமின்றி, நம்மோடு நெருங்கிய இந்தையிரோப்பியக் குடும்பத்தாருக்கும் புலப்படும். ஸ்கீட் என்னும் பேர்பெற்ற ஆங்கிலச் சொற்பிறப்பியலார் heart இற்கு க் கீழ்வந்தவாறு சொற்பிறப்பு சொல்வார். (AN ETYMOLOGICAL DICTIONARY OF THE ENGLISH LANGUAGE- SKEAT)

HEART, the organ of the body that circulates the blood. (E.) M. E. herte, properly dissyllabic. 'That dwelled in his herte sike and sore, Gan faillen, when the herte felte deth.' Chaucer, C. T. A.S. heorte, fern. (gen. heortan), Grein, ii. 69. + Du. hart. + Icel. Ajarta. + Swed. hjerta. -f- Dan. Aierte. +Goth. hairto. -f- G. Aerz, O. H. G. herzd. + Irish cridhe. -f. Russ. serdtse. + Lat. cor (crude form cordi-). + Gk. xfjp, mpoia. +Skt. Arid, hridaya (probably corrupt forms for frid, fiidaya). p. The Gk. icapbia is also spelt Kpaoia, (Doric) and upaSir; (Ionic) ; this is connected with KpaSativ, KpaSaivuv, to quiver, shake; the orig. sense being that which quivers, shakes, or beats. ^ KARD, to swing about, hop, leap ; cf. Skt.Iturd, to hop, jump ; Fick, i. 47 ; Benfey, 197. Der. heart-ache, Hamlet, iii. I. 62; 

இங்கு கூர்ந்தறிய வேண்டியது “orig. sense being that which quivers, shakes, or beats” என்பதே. குருதயத்தை அதன் துடிப்பால் தானே உணர்கிறோம்? அத்துடிப்பின் ஒலிக்குறிப்பு குடுகுடு>குருகுரு என்பதே. 

குடுகுடுத்தல், விரைவோட்டத்தையும் ஒலித்தலையும் குறிக்கும். கடுத்தல், கடுகுதல், கடிதல், கதித்தல் போன்ற சொற்களும் அதேபொருள் கொண்டவை.  இதே நீட்சியில் குடுத்தல்>குருத்தல் என்ற வினை ஒரு காலம் இருந்திருக்கலாம். ஏனெனில் கடுத்தல் வினை இன்றுமுள்ளது,  

”குருத்தல் இன்றில்லையே? ஏன் சிவப்பு நிறம் வழியாக குருதயத்திற்குப் பெயர் ஏற்படக்கூடாது?” என்ற கேள்விகளும் நமக்கெழலாம். என் விடை எளிது. எல்லா விலங்கு அரத்தமும் சிவப்பாக இல்லை. இருக்க வேண்டியதுமில்லை. ”அரத்தம் சிவப்பு” என்பது வேட்டுவ மாந்தப் புரிதலில் முகன்மைக் குறிப்பில்லை. சிவப்பு என்பது மாந்தருக்கு நேர்ந்த ஒரு விதப்பு. அவ்வளவு தான். 

விலங்குக் குருதிகள்  சிவப்பு (red), ஊதா (blue), பச்சை (green), மஞ்சள் (yellow), நரங்கை (orange), நீலம் (violet) போன்ற பல நிறங்களிலும், அன்றேல் நிறமிலாதும் கூட உண்டு. சில விலங்குகளின் அரத்தத்தில் மாந்தர் போல் செம்மைக் கோளங்களும் (hemoglobin), வேறு சிலவற்றின் அரத்தத்தில், வேறு வகை உய்ப்பு நிறமிகளும் (respiratory pigments), இன்னும் சிலவற்றில் எந்த உய்ப்பு நிறமிகள் இல்லாமலுமுண்டு, 

ஆனால் எல்லா விலங்குகளும் அரத்தவழி அஃககம் நகர்த்தும் (to transport oxygen) திறன் கொண்டன. பல விலங்குகளை வேட்டையாடிய மாந்தன் இதைக் கட்டாயம் உணர்ந்திருப்பான். சிவப்பை வைத்தே குருதிக்குப் பெயர்வந்தது என்பது பட்டறிவில்லாப் பார்வை. 

சிவப்பைக் காட்டிலும்  “குளுகுளு> குடுகுடு> குருகுரு” ஓட்டவொலி முகன்மை.  குடுத்தல்>குருத்தல் என்பது பிறவினை வடிவம் = ஓடவைத்தல் என்று பொருள் கொள்ளும். இறைத்தல் = நீர்மம் பாய்ச்சல் என்பதும் இதே பொருள் காட்டும். 

(இறைப்பவர்க்கு ஊற்றுநீர் போல மிகும்” குறள் 1161.) pump இற்குச் சொல் ஆக்கையில் 1960 களில் இறைப்பியைப் பயன்கொண்டோம். வேகமாய்ச் சுழன்றாடும் பம்பரம் காணின், நீர்மத்தை  எம்பி ஏற்றும் செயலைப் பம்புதல் என்றும் சொல்லலாம். 

பம்பி கூடப் pump-இற்கு இன்னொரு இணைச்சொல் ஆகலாம். (சிவகங்கை மாவட்டம் தேவகோட்டைக்கு அருகில் அங்குமிங்கும் விரவியோடும் ஆற்றைப் பம்பாறு> பாம்பாறு என்பார். ”ஏன் பம்முகிறான்?” என்ற கூற்றையும் இங்கு எண்ணிப் பாருங்கள்) 

குருதயம் என்பது பெரும்பாலும் பழந்தமிழில் இருந்திருக்கும் என்றே ஊகிக்கிறோம். குருதயம், கெருதயம் என்றும் பேச்சுவழக்கில் சொல்லப்படும். அடுத்து, கெருதயம்> எருதயம்> இருதயம் என்று தமிழில் மீத்திருத்தம் பெறும். 

இது மேலும் பேச்சு வழக்கில் இருதயம்> இதயம்> இதம் என்று திரியும். [கெருதயம்> எர்தய> எர்தெ எனக் கன்னடத்தில் திரியும். எர்தெ> எழ்தே> எதே என்றும் அங்கு பலுக்கப்படும். தெலுங்கில் எத என்பதும் துளுவில் எதெ என்பதும் புழங்குகின்றன.] இதயம், இதம் என்ற சொற்கள் தேவாரம், திருவாசகத்தில் சொல்லாட்சி பெறும். 

சம்பந்தர் தேவாரம் சீகாழி : திருமாலைமாற்று: ”நேர் அகழ் ஆம் இதய ஆசு அழி தாய் ஏல் நன் நீயே நன் நீள் ஆய் உழி கா, காழி உளான் இன் நையே நினையே தாழ் இசையா தமிழாகரனே” 

சம்பந்தர் தேவாரம் திருத்தண்டலை நீணெறி: இகழும் காலன் இதயத்தும் என்னுளும் - தேவா-சம்:3332/1

அப்பர் தேவாரம் திருச்சிவபுரம் - திருத்தாண்டகம்: கானவன் காண் கானவனுக்கு அருள்செய்தான் காண் கருதுவார் இதயத்து கமலத்து ஊறும் - தேவா-அப்:2946/3

திருவாசகம் கீர்த்தித் திருஅகவல் 139 ஆம் அடி: இதம் சலிப்பு எய்தநின்று ஏங்கினர் ஏங்கவும் - திருவா:2/139

குருதயம், இருதயம், இதயம், இதம் போக தாமரைக்காய் (pericarp of the lotus. தாமரையில் நடுவில் உள்ள காய் போன்றது என்று நிறத்தாலும், அரத்த ஓட்டத்திற்கு நடுவம்  என்ற பொருளிலும் இச்சொல் எழுந்தது, 

குண்டிக்காய் [இது இதயம், நூவூறகம் (=சிறுநீரகம்), புட்டம் ஆகிய மூன்றிற்கும் ஒப்புமைப் பொரூளில் சொல்லப்படும்.]  என்ற இன்னொரு சொல்லும் உண்டு.  மார்பு பற்றிய சொற்களை அடுத்த பகுதியில் பார்ப்போம். அறிவியலில்  குருதயம், மார்பு போன்றவற்றைப் பயன்படுத்திக் கீழ்க்கண்ட சொற்களை உருவாக்கலாம். 

Thoracic Surgery மார்புக்கூட்டுப் பண்டுவம்

Congenital cardiac surgery கூடுற்ற குருதயப் பண்டுவம் (குருதியைக் கையாளுவது குருதயம். இது தமிழ் தான்.)

Pediatric cardiology குழவிக் குருதயவியல்

Cardiothoracic radiology குருதய மார்புக்கூட்டுக் கதிரியல்

Cardiovascular radiology குருதய நாளக் கதிரியல்

Chest radiology மார்புக் கதிரியல் 

Advanced heart failure & transplant cardiology குருதய இழப்பு, மாற்றுநடவுக்கான அடுவாங்கைக் குருதயவியல் (advance = அடுவாங்கை)

Cardiovascular Disease குருதய நாள நோய்

Clinical cardiac Electrophysiology ஆதுலக் குருதய மின்பூதிகையியல்

Cardiac Medicine குருதய மருத்துவம்

அடுத்த் பகுதியில் குருதி (blood) தொடர்பான சொற்களைக் காண்போம்.

அன்புடன்,

இராம.கி.