Tuesday, August 02, 2005

நீங்கில் தெறும்

இதுவரை அறிந்திராத அந்தத் துய்ப்பு சற்றுமுன் தான் நடந்தது. பெற்றோருக்கும், ஊராருக்கும் இவர்களின் உறவு தெரியாத களவு நிலையில், அந்த உறவும் கொஞ்சம் அளவு மீறி நிறைந்த பொழுதில், கனவோடையில் இருந்து நனவோடை புகுந்து இயல்பு நிலைக்கு வந்த நிலையில், கலவி உணர்வை மீண்டும் மீண்டும் மனத்திற்குள் அசை போட்டுக் கொண்டு மகிழ்ந்து போய், தனக்குள் குறுகுறுத்து எழுந்த வியப்பை இரண்டே வரியில் வெளிப் படுத்துகிறான் தலைவன்.

"என்ன நுகர்ச்சியடா இது? பொதுவா நெருப்புக்கு பக்கத்துலே போனா சுடும்; விலகுனா தண்ணுன்னு இருக்கும். ஆனா இங்கே மாறில்ல கிடக்கு; இவளை விட்டு அகன்று விலகி வந்தாச் சுடுது; நெருங்குனா, நிறைவா இருக்கு; சமயத்துலே கொஞ்சம் குளிரக் கூடச் செய்யுது. இப்படி ஒரு விதப்பான தீயை இவள் எங்கேயிருந்து பெற்றாள்? புரியலையே?"

என்ற வெளிப்பாட்டை திருக்குறளின் காமத்துப்பாலில் களவியல் பிரிவில் புணர்ச்சி மகிழ்தல் என்ற அதிகாரத்தில் வள்ளுவர் காட்டுகிறார். அவருடைய சொற்களில் இப்படிப் போகிறது அந்தக் குறள்.

நீங்கில் தெறூஉம் குறுகுங்கால் தண்ணென்னும்
தீ யாண்டு பெற்றாள் இவள்

- திருக்குறள் 1104.

மேலே உள்ள குறளில் "நீங்கில் தெறும்" (தெறூஉம் என்பது அளபெடை) என்பது "நீங்கினால் சுடும்" என்ற பொருள் கொள்ளூம். கிட்டத்தட்ட 2000 ஆண்டுகளுக்கு முந்திய திருக்குறளில் தெறுதல் என்ற வினை சுடுதல் என்ற பொருளில் ஆளப்பட்டிருக்கிறது. எனவே இது ஆங்கிலமோ என்று நாம் மயங்க வேண்டியது இல்லை. நம்முடைய சோம்பலால் தெறுதல் என்ற வினையின் ஆளுமையைக் குறைத்துவிட்டோ ம். அவ்வளவு தான். சுடுதல் என்ற பொருள் மட்டுமல்லாது, தெறுதல் என்பது காய்ச்சுதல் என்று கூடப் பொருள் கொள்ளும். தெறு/தெறுல் என்ற சொற்களும் சூடு, வெம்மை என்ற பொருட்பாடுகளை உணர்த்தும். துள்>தெள்>தெறு>தெறுதல் என்ற வளர்ச்சியில் இந்தச் சொற்கள் எழும்.

அண்மையில் தெறுமத்துனைமவியல் (thermodynamics) என்று நான் குறித்ததைப் பார்த்து, "இதிலே 'தெறும' என்பது வெப்பவியல்/thermal/thermo-இற்கு இணையான தமிழ்ச்சொல்லா அல்லது thermo அப்படியே தமிழ்ப்படுத்தப்பட்டுள்ளதா?" என ஷ்ரேயா என்ற ஒரு வலைப்பதிவர் கேட்டிருந்தார். இதுபோன்ற கேள்விகள் அவ்வப்பொழுது வந்து கொண்டுதான் இருக்கின்றன. என்னால் முடிந்ததற்கு மறுமொழிக்கிறேன்.

ஆங்கிலத்தில் heat, hotness, chill, cold, warm, mild hot, very hot, boil, temperature, caloric, thermal எனப் பலவிதமாய்ச் சொல்லுகிறோம். இதே சொற்களைத் தமிழில் சொல்லும் போது வெப்பம், குளிர் என்று ஒன்றிரண்டு சொற்களை மட்டுமே வைத்துப் புழங்கிக் கொண்டு மற்றவற்றை உருவாக்க அடைச் (adjective) சொற்களைச் சேர்த்து பொதுவாக ஏதோ ஒப்பேற்றிக் கொண்டிருக்கிறோம். இந்தக் காலத் தமிழ் இளையரின் சிக்கலே அவர்களுடைய தமிழ்ச் சொற்கள் தொகுதி குறைந்து போனது தான். காலமாற்றத்தால், தமிழ்மொழி அறிவு நம்மில் பலருக்கும் குறைந்து போனது. நமக்கிருக்கும் போக்கில் எல்லா இடத்தும் ஆங்கிலமே பேசி வாழ்க்கையை நடத்திக் கொண்டிருக்கிறோம். தமிழ் அறிவை வளர்த்துக் கொள்ள முயற்சி செய்யாத நிலையில், நமக்கு 2000, 3000 தமிழ்ச் சொற்கள் மட்டுமே தெரிந்து இருந்தால், நம்மை அறியாமலே தமிழோடு ஆங்கிலம் கலப்போம். அப்புறம் குறையை நம்மிடம் வைத்துக் கொண்டு "தமிழில் அதைச் சொல்ல முடியாது, இதைச் சொல்ல முடியாது" என்று கதைப்போம். நான் இன்றைய இளைஞரை வேண்டிக் கேட்டுக் கொள்ளுவது ஒன்றே ஒன்றுதான். "நிறையத் தமிழ் படியுங்கள்; உங்களுடைய தமிழ்ச் சொல் தொகுதியைக் கூட்டிக் கொள்ளுங்கள்."

மேலே கூறிய ஆங்கிலச் சொற்களின் இணையான தமிழ்ச் சொற்களை புலனத்தை விளக்கும் போதே கூற முயலுகிறேன். இது பூதியலின் அடிப்படைப் பாடமாகத் தெரிவதாய் உணர்ந்தால் என்னைப் பொறுத்துக் கொள்ளுங்கள்.

heat என்பதை இந்தக் காலப் பூதியல் (physics) ஒரு பெருணைப் (=புராணா, primitive) பொருளாகவே எடுத்துக் கொள்ளுகிறது. சூடு என்ற சொல்லும் கூட அதே பெருணைப் பொருளைத் தான் தமிழில் காட்டுகிறது. சூடேற்றல் = to heat. சூடாக இருந்தது என்னும் போது சூடு என்ற சொல் hotness என்ற இன்னொரு பெருணையைக் குறிப்பதை உணரலாம். hotness என்பதும் temperature என்பதும் ஒன்றிற்கொன்று சற்று வேறானவை. நம்மில் பலர் hotness என்பதைத் தெரிந்து கொள்ளாமலேயே temperature என்பதற்குத் தாவிவிடுகிறோம். எண்ணால் சொல்லாமல் temperature என்பதைக் குறிக்கமுடியாது. ஆனால் சூடுகளைக் குறிக்க வெறும் சொற்கள் போதும். சூடு என்பது உணரப்படுவது. அது வெவ்வேறு தகை (=தகுதி=quality)களைக் குறிப்பிடுகிறது. temperature என்பது எண்ணுதி (=quantity) யாகக் குறிப்பது.

மாந்த வாழ்வில் நாம் வெவ்வேறு சூடுகளைப் பட்டு அறிகிறோம். உறைந்து (உறைதல் = to freeze) கிடக்கும் பனிப்புள்ளிக்கும் கீழ் சில்லிட்டுக் (chill) கிடப்பது ஒருவகைச் சூடு; அப்புறம் அதற்குமேல் குளிர்ந்து (cold) கிடப்பது இன்னொரு சூடு; இன்னும் கொஞ்சம் மேலே வந்தால் வெதுப்பான (warm) ஒரு சூடு; இன்னும் மேலே போனால் இளஞ்சூடு (mild hot); அதற்கும் மேலே கடுஞ்சூடு (very hot); இன்னும் பேரதிகமாய் கொதிக்கும் (boiling) சூடு. இப்படி ஒவ்வொரு சூட்டையும் வெவ்வேறு சொற்களில் சொல்லி நம்மோடு இருப்பவருக்கு உணர்த்தப் பார்க்கிறோம். ஆனால் இந்தச் சொற்கள் ஒன்றிற்கொன்று உறழ்வானவை (relative). பொதுவாக, ஒவ்வொரு மாந்தனும் இந்தச் சூட்டுக்களை தன் மேனியில் வெவ்வேறு முறையில் தான் உணர முடியும். ஒருவர் உணர்ந்தது போல் இன்னொருவர் அப்படியே உணர முடியாது. எனக்கு குளிராக இருப்பது உங்களுக்கு வெதுப்பாக இருக்கலாம். உங்களுக்கு வெதுப்பாய் இருப்பது இன்னொருவருக்கு இளஞ்சூடாக இருக்கலாம். எனவே இதுதான் இந்தச் சூடு என்று உறுதிப்பாடோ டு யாராலும் சொல்ல முடிவதில்லை. இன்னொருவருக்குத் தெளிவாகப் புரியவைக்க முடிவதில்லை. மொத்தத்தில் வெறுஞ் சொற்களால் சூட்டின் அளவை உணர்த்துவது என்பது நமக்கு இயலாதது ஆகிறது. மாறாக எல்லோரும் ஒப்புக் கொள்ளக் கூடிய ஒரே ஒரு சூட்டை அடிப்படையாக வைத்து அதை ஒரு எண்ணோடு பொருத்திவைத்து பின்னால் மற்ற ஒவ்வொரு சூட்டையும் ஒவ்வொரு உரியல் எண்ணோடு (real number) உறழ்த்திக் காட்டினால் இந்தச் சூடுகளை எண்களாலேயே உணர வைக்க முடியும் என்று நம்முடைய பட்டறிவால் அறிந்து கொள்ளுகிறோம். அப்படி அமைகின்ற எண்களைத்தான் நாம் வெம்மை (temperature) என்று சொல்லுகிறோம்.

சூடுகள் என்ற கொத்தில் (set) இருக்கும் ஒவ்வொரு சூட்டிற்கும் ஒரு உரியல் எண்ணை பொருத்திக் காட்டும் ஒரு முகப்புத் (map) தான் வெம்மை (temperature) எனப்படுகிறது. அடிப்படை வெம்மை என்பது பனிப்புள்ளியாகவோ (ice point) கொதிப் புள்ளியாகவோ (boiling point) இருக்கலாம். இந்த வெம்மை முகப்பு (temperature map) என்பது ஒரே ஒரு முகப்பு என்றில்லை. நூற்றுக் கணக்கான முகப்புக்களை நாம் உருவாக்க முடியும். ஒவ்வொரு முகப்பும் ஒரு அளவுகோலை உருவாக்குகிறது. செண்டிகிரேடு அளவு கோல் என்பது ஒரு வித முகப்பு. இதில் பனிப்புள்ளி என்பது சுழி (zero) என்ற எண்ணால் குறிக்கப் படும். வாரன்ஃகீட் என்ற அளவுகோல் இன்னொரு முகப்பு. இதில் பனிப்புள்ளி 32 எனக் குறிக்கப் படும். கெல்வின் முகப்பு என்பது இன்னும் ஒரு அளவுகோல். இதில் பனிப்புள்ளி 273.16 என்று குறிக்கப்படும்.

ஒரு பொருளைச் சூடேற்றும் போது நாம் கொடுப்பது வெப்பம் (caloric). வெப்பம் என்பது ஆற்றல் (energy) வகைகளில் ஒரு வகை. வெப்பம் என்பது கனலி (calory) என்ற அலகால் அளக்கப் படுகிறது. ஒரு வளிமம் (gas) அல்லது நீர்மத்தைச் (liquid) சூடுபடுத்தும் போது அது விரிகிறது (expand); கூடவே அதன் வெம்மை(temperature)யும் கூடுகிறது. வளிமம் அல்லது நீர்மத்தைப் பொதுவாகப் பாய்மம் அல்லது விளவம் (fluid) என்று சொல்லுவோம். விரிய விரிய ஒரு விளவம் வெளி(space)யை நிறைக்கிறது. வெளியை நிறைத்தலைத்தான் வெள்ளுகிறது என்று சொல்லுகிறோம். வெள்ளுகின்ற அகற்சிக்கு வெள்ளம் (volume) என்று பெயர். வெள்ளப் பெருக்கு (volumetric increase) காலத் தொடர்ச்சியாக ஏற்பட்டால் அதைப் பாய்ச்சல் அல்லது விளவு (flow) என்று சொல்லுகிறோம்.

இதுவரை சொன்ன அத்தனை வினைகளையும் வெறுமே வெப்பவினை, சூட்டுவினை என்று சொல்லாமல் தெறுமவினை என்று சொல்லுவது பொதுமைப் பொருளையும், விதப்புச் சொற்களையும் தனித்தனியே வைத்துப் புழங்குவதால் தான். தெறுமம் தமிழே.

அன்புடன்,
இராம.கி.

In TSCII:

¿£í¸¢ø ¦¾Úõ

þÐŨà «È¢ó¾¢Ã¡¾ «ó¾ò ÐöôÒ ºüÚÓý ¾¡ý ¿¼ó¾Ð. ¦Àü§È¡ÕìÌõ, °Ã¡ÕìÌõ þÅ÷¸Ç¢ý ¯È× ¦¾Ã¢Â¡¾ ¸Ç× ¿¢¨Ä¢ø, «ó¾ ¯È×õ ¦¸¡ïºõ «Ç× Á£È¢ ¿¢¨Èó¾ ¦À¡Ø¾¢ø, ¸É§Å¡¨¼Â¢ø þÕóÐ ¿É§Å¡¨¼ ÒÌóÐ þÂøÒ ¿¢¨ÄìÌ Åó¾ ¿¢¨Ä¢ø, ¸ÄÅ¢ ¯½÷¨Å Á£ñÎõ Á£ñÎõ ÁÉò¾¢üÌû «¨º §À¡ðÎì ¦¸¡ñÎ Á¸¢úóÐ §À¡ö, ¾ÉìÌû ÌÚÌÚòÐ ±Øó¾ Å¢Âô¨À þÃñ§¼ Åâ¢ø ¦ÅÇ¢ô ÀÎòи¢È¡ý ¾¨ÄÅý.

"±ýÉ Ñ¸÷¼¡ þÐ? ¦À¡ÐÅ¡ ¦¿ÕôÒìÌ Àì¸òÐ§Ä §À¡É¡ ÍÎõ; Å¢ÄÌÉ¡ ¾ñÏýÛ þÕìÌõ. ¬É¡ þí§¸ Á¡È¢øÄ ¸¢¼ìÌ; þÅ¨Ç Å¢ðÎ «¸ýÚ Å¢Ä¸¢ Åó¾¡î ÍÎÐ; ¦¿ÕíÌÉ¡, ¿¢¨ÈÅ¡ þÕìÌ; ºÁÂòÐ§Ä ¦¸¡ïºõ ÌÇ¢Ãì Ü¼î ¦ºöÔÐ. þôÀÊ ´Õ Å¢¾ôÀ¡É ¾£¨Â þÅû ±í§¸Â¢ÕóÐ ¦ÀüÈ¡û? Òâ¨ħÂ?"

±ýÈ ¦ÅÇ¢ôÀ¡ð¨¼ ¾¢ÕìÌÈÇ¢ý ¸¡ÁòÐôÀ¡Ä¢ø ¸ÇÅ¢Âø À¢Ã¢Å¢ø Ò½÷ Á¸¢ú¾ø ±ýÈ «¾¢¸¡Ãò¾¢ø ÅûÙÅ÷ ¸¡ðθ¢È¡÷. «ÅÕ¨¼Â ¦º¡ü¸Ç¢ø þôÀÊô §À¡¸¢ÈÐ «ó¾ì ÌÈû.

¿£í¸¢ø ¦¾ê¯õ ÌÚÌí¸¡ø ¾ñ¦½ýÛõ
¾£ ¡ñÎ ¦ÀüÈ¡û þÅû

- ¾¢ÕìÌÈû 1104.

§Á§Ä ¯ûÇ ÌÈÇ¢ø "¿£í¸¢ø ¦¾Úõ" (¦¾ê¯õ ±ýÀÐ «Ç¦À¨¼) ±ýÀÐ "¿£í¸¢É¡ø ÍÎõ" ±ýÈ ¦À¡Õû ¦¸¡ûéõ. ¸¢ð¼ò¾ð¼ 2000 ¬ñθÙìÌ Óó¾¢Â ¾¢ÕìÌÈÇ¢ø ¦¾Ú¾ø ±ýÈ Å¢¨É Íξø ±ýÈ ¦À¡ÕÇ¢ø ¬ÇôÀðÊÕ츢ÈÐ. ±É§Å þÐ ¬í¸¢Ä§Á¡ ±ýÚ ¿¡õ ÁÂí¸ §ÅñÊÂÐ þø¨Ä. ¿õÓ¨¼Â §º¡õÀÄ¡ø ¦¾Ú¾ø ±ýÈ Å¢¨É¢ý ¬Ù¨Á¨Âì ̨ÈòÐŢ𧼡õ. «ùÅÇ× ¾¡ý. Íξø ±ýÈ ¦À¡Õû ÁðÎÁøÄ¡Ð, ¦¾Ú¾ø ±ýÀÐ ¸¡öî;ø ±ýÚ Ü¼ô ¦À¡Õû ¦¸¡ûÙõ. ¦¾Ú/¦¾Úø ±ýÈ ¦º¡ü¸Ùõ ÝÎ, ¦Åõ¨Á ±ýÈ ¦À¡ÕðÀ¡Î¸¨Ç ¯½÷òÐõ. Ðû>¦¾û>¦¾Ú>¦¾Ú¾ø ±ýÈ ÅÇ÷¢ø þó¾î ¦º¡ü¸û ±Øõ.

«ñ¨Á¢ø ¦¾ÚÁò¾¢ÉÅ¢Âø (thermodynamics) ±ýÚ ¿¡ý ÌÈ¢ò¾¨¾ô À¡÷òÐ, "þ¾¢§Ä '¦¾ÚÁ' ±ýÀÐ ¦ÅôÀÅ¢Âø/thermal/thermo-þüÌ þ¨½Â¡É ¾Á¢ú¡øÄ¡ «øÄÐ thermo «ôÀʧ ¾Á¢úôÀÎò¾ôÀðÎûǾ¡?" ±É ‰§Ã¡ ±ýÈ ´Õ ŨÄôÀ¾¢Å÷ §¸ðÊÕó¾¡÷. þЧÀ¡ýÈ §¸ûÅ¢¸û «ùÅô¦À¡ØÐ ÅóÐ ¦¸¡ñξ¡ý þÕ츢ýÈÉ. ±ýÉ¡ø ÓÊó¾¾üÌ ÁÚ¦Á¡Æ¢ì¸¢§Èý.

¬í¸¢Äò¾¢ø heat, hotness, chill, cold, warm, mild hot, very hot, boil, temperature, caloric, thermal ±Éô ÀÄÅ¢¾Á¡öî ¦º¡øÖ¸¢§È¡õ. þ§¾ ¦º¡ü¸¨Çò ¾Á¢Æ¢ø ¦º¡øÖõ §À¡Ð ¦ÅôÀõ, ÌÇ¢÷ ±ýÚ ´ýÈ¢ÃñÎ ¦º¡ü¸¨Ç ÁðΧÁ ¨ÅòÐô ÒÆí¸¢ì ¦¸¡ñÎ ÁüÈÅü¨È ¯ÕÅ¡ì¸ «¨¼î (adjective) ¦º¡ü¸¨Çî §º÷òÐ ¦À¡ÐÅ¡¸ ²§¾¡ ´ô§ÀüÈ¢ì ¦¸¡ñÊÕ츢§È¡õ. þó¾ì ¸¡Äò ¾Á¢ú þ¨ÇÂâý º¢ì¸§Ä «Å÷¸Ù¨¼Â ¾Á¢úî ¦º¡ü¸û ¦¾¡Ì¾¢ ̨ÈóÐ §À¡ÉÐ ¾¡ý. ¸¡ÄÁ¡üÈò¾¡ø, ¾Á¢ú¦Á¡Æ¢ «È¢× ¿õÁ¢ø ÀÄÕìÌõ ̨ÈóÐ §À¡ÉÐ. ¿Á츢ÕìÌõ §À¡ì¸¢ø ±øÄ¡ þ¼òÐõ ¬í¸¢Ä§Á §Àº¢ Å¡ú쨸¨Â ¿¼ò¾¢ì ¦¸¡ñÊÕ츢§È¡õ. ¾Á¢ú «È¢¨Å ÅÇ÷òÐì ¦¸¡ûÇ ÓÂüº¢ ¦ºö¡¾ ¿¢¨Ä¢ø, ¿ÁìÌ 2000, 3000 ¾Á¢úî ¦º¡ü¸û ÁðΧÁ ¦¾Ã¢óÐ þÕó¾¡ø, ¿õ¨Á «È¢Â¡Á§Ä ¾Á¢§Æ¡Î ¬í¸¢Äõ ¸Äô§À¡õ. «ôÒÈõ ̨Ȩ ¿õÁ¢¼õ ¨ÅòÐì ¦¸¡ñÎ "¾Á¢Æ¢ø «¨¾î ¦º¡øÄ ÓÊ¡Ð, þ¨¾î ¦º¡øÄ ÓÊ¡Ð" ±ýÚ ¸¨¾ô§À¡õ. ¿¡ý þý¨È þ¨Ç»¨Ã §ÅñÊì §¸ðÎì ¦¸¡ûÙÅÐ ´ý§È ´ýÚ¾¡ý. "¿¢¨ÈÂò ¾Á¢ú ÀÊÔí¸û; ¯í¸Ù¨¼Â ¾Á¢úî ¦º¡ø ¦¾¡Ì¾¢¨Âì ÜðÊì ¦¸¡ûÙí¸û."

§Á§Ä ÜȢ ¬í¸¢Äî ¦º¡ü¸Ç¢ý þ¨½Â¡É ¾Á¢úî ¦º¡ü¸¨Ç ÒÄÉò¨¾ Å¢ÇìÌõ §À¡§¾ ÜÈ ÓÂÖ¸¢§Èý. þÐ â¾¢ÂÄ¢ý «ÊôÀ¨¼ô À¡¼Á¡¸ò ¦¾Ã¢Å¾¡ö ¯½÷ó¾¡ø ±ý¨Éô ¦À¡ÚòÐì ¦¸¡ûÙí¸û.

heat ±ýÀ¨¾ þó¾ì ¸¡Äô â¾¢Âø (physics) ´Õ ¦ÀÕ¨½ô (=Òὡ, primitive) ¦À¡ÕÇ¡¸§Å ±ÎòÐì ¦¸¡ûÙ¸¢ÈÐ. ÝÎ ±ýÈ ¦º¡øÖõ ܼ «§¾ ¦ÀÕ¨½ô ¦À¡Õ¨Çò ¾¡ý ¾Á¢Æ¢ø ¸¡ðθ¢ÈÐ. ݧ¼üÈø = to heat. ݼ¡¸ þÕó¾Ð ±ýÛõ §À¡Ð ÝÎ ±ýÈ ¦º¡ø hotness ±ýÈ þý¦É¡Õ ¦ÀÕ¨½¨Âì ÌÈ¢ôÀ¨¾ ¯½ÃÄ¡õ. hotness ±ýÀÐõ temperature ±ýÀÐõ ´ýÈ¢ü¦¸¡ýÚ ºüÚ §ÅȡɨÅ. ¿õÁ¢ø ÀÄ÷ hotness ±ýÀ¨¾ò ¦¾Ã¢óÐ ¦¸¡ûÇ¡Á§Ä§Â temperature ±ýÀ¾üÌò ¾¡Å¢Å¢Î¸¢§È¡õ. ±ñ½¡ø ¦º¡øÄ¡Áø temperature ±ýÀ¨¾ì ÌÈ¢ì¸ÓÊ¡Ð. ¬É¡ø Ýθ¨Çì ÌÈ¢ì¸ ¦ÅÚõ ¦º¡ü¸û §À¡Ðõ. ÝÎ ±ýÀÐ ¯½ÃôÀÎÅÐ. «Ð ¦Åù§ÅÚ ¾¨¸ (=¾Ì¾¢=quality)¸¨Çì ÌÈ¢ôÀ¢Î¸¢ÈÐ. temperature ±ýÀÐ ±ñϾ¢ (=quantity) ¡¸ì ÌÈ¢ôÀÐ.

Á¡ó¾ Å¡úÅ¢ø ¿¡õ ¦Åù§ÅÚ Ýθ¨Çô ÀðÎ «È¢¸¢§È¡õ. ¯¨ÈóÐ (¯¨È¾ø = to freeze) ¸¢¼ìÌõ ÀÉ¢ôÒûÇ¢ìÌõ ¸£ú º¢øÄ¢ðÎì (chill) ¸¢¼ôÀÐ ´ÕŨ¸î ÝÎ; «ôÒÈõ «¾ü̧Áø ÌÇ¢÷óÐ (cold) ¸¢¼ôÀÐ þý¦É¡Õ ÝÎ; þýÛõ ¦¸¡ïºõ §Á§Ä Åó¾¡ø ¦ÅÐôÀ¡É (warm) ´Õ ÝÎ; þýÛõ §Á§Ä §À¡É¡ø þÇïÝÎ (mild hot); «¾üÌõ §Á§Ä ¸ÎïÝÎ (very hot); þýÛõ §Àþ¢¸Á¡ö ¦¸¡¾¢ìÌõ (boiling) ÝÎ. þôÀÊ ´ù¦Å¡Õ Ýð¨¼Ôõ ¦Åù§ÅÚ ¦º¡ü¸Ç¢ø ¦º¡øÄ¢ ¿õ§Á¡Î þÕôÀÅÕìÌ ¯½÷ò¾ô À¡÷츢§È¡õ. ¬É¡ø þó¾î ¦º¡ü¸û ´ýÈ¢ü¦¸¡ýÚ ¯ÈúšɨŠ(relative). ¦À¡ÐÅ¡¸, ´ù¦Å¡Õ Á¡ó¾Ûõ þó¾î ÝðÎì¸¨Ç ¾ý §Áɢ¢ø ¦Åù§ÅÚ Ó¨È¢ø ¾¡ý ¯½Ã ÓÊÔõ. ´ÕÅ÷ ¯½÷ó¾Ð §À¡ø þý¦É¡ÕÅ÷ «ôÀʧ ¯½Ã ÓÊ¡Ð. ±ÉìÌ ÌǢḠþÕôÀÐ ¯í¸ÙìÌ ¦ÅÐôÀ¡¸ þÕì¸Ä¡õ. ¯í¸ÙìÌ ¦ÅÐôÀ¡ö þÕôÀÐ þý¦É¡ÕÅÕìÌ þÇïݼ¡¸ þÕì¸Ä¡õ. ±É§Å þо¡ý þó¾î ÝÎ ±ýÚ ¯Ú¾¢ôÀ¡§¼¡Î ¡áÖõ ¦º¡øÄ ÓÊž¢ø¨Ä. þý¦É¡ÕÅÕìÌò ¦¾Ç¢Å¡¸ô Òâ¨Åì¸ ÓÊž¢ø¨Ä. ¦Á¡ò¾ò¾¢ø ¦ÅÚï ¦º¡ü¸Ç¡ø ÝðÊý «Ç¨Å ¯½÷òÐÅÐ ±ýÀÐ ¿ÁìÌ þÂÄ¡¾Ð ¬¸¢ÈÐ. Á¡È¡¸ ±ø§Ä¡Õõ ´ôÒì ¦¸¡ûÇì ÜÊ ´§Ã ´Õ Ý𨼠«ÊôÀ¨¼Â¡¸ ¨ÅòÐ «¨¾ ´Õ ±ñ§½¡Î ¦À¡Õò¾¢¨ÅòÐ À¢ýÉ¡ø ÁüÈ ´ù¦Å¡Õ Ýð¨¼Ôõ ´ù¦Å¡Õ ¯Ã¢Âø ±ñ§½¡Î (real number) ¯Èúò¾¢ì ¸¡ðÊÉ¡ø þó¾î Ýθ¨Ç ±ñ¸Ç¡§Ä§Â ¯½Ã ¨Åì¸ ÓÊÔõ ±ýÚ ¿õÓ¨¼Â Àð¼È¢Å¡ø «È¢óÐ ¦¸¡ûÙ¸¢§È¡õ. «ôÀÊ «¨Á¸¢ýÈ ±ñ¸¨Çò¾¡ý ¿¡õ ¦Åõ¨Á (temperature) ±ýÚ ¦º¡øÖ¸¢§È¡õ.

Ýθû ±ýÈ ¦¸¡ò¾¢ø (set) þÕìÌõ ´ù¦Å¡Õ ÝðÊüÌõ ´Õ ¯Ã¢Âø ±ñ¨½ ¦À¡Õò¾¢ì ¸¡ðÎõ ´Õ Ó¸ôÒò (map) ¾¡ý ¦Åõ¨Á (temperature) ±ÉôÀθ¢ÈÐ. «ÊôÀ¨¼ ¦Åõ¨Á ±ýÀÐ ÀÉ¢ôÒûǢ¡¸§Å¡ (ice point) ¦¸¡¾¢ô ÒûǢ¡¸§Å¡ (boiling point) þÕì¸Ä¡õ. þó¾ ¦Åõ¨Á Ó¸ôÒ (temperature map) ±ýÀÐ ´§Ã ´Õ Ó¸ôÒ ±ýÈ¢ø¨Ä. áüÚì ¸½ì¸¡É Ó¸ôÒì¸¨Ç ¿¡õ ¯ÕÅ¡ì¸ ÓÊÔõ. ´ù¦Å¡Õ Ó¸ôÒõ ´Õ «Çק¸¡¨Ä ¯ÕÅ¡ì̸¢ÈÐ. ¦ºñʸ¢§ÃÎ «Ç× §¸¡ø ±ýÀÐ ´Õ Å¢¾ Ó¸ôÒ. þ¾¢ø ÀÉ¢ôÒûÇ¢ ±ýÀÐ ÍÆ¢ (zero) ±ýÈ ±ñ½¡ø ÌÈ¢ì¸ô ÀÎõ. Å¡Ãý·¸£ð ±ýÈ «Çק¸¡ø þý¦É¡Õ Ó¸ôÒ. þ¾¢ø ÀÉ¢ôÒûÇ¢ 32 ±Éì ÌÈ¢ì¸ô ÀÎõ. ¦¸øÅ¢ý Ó¸ôÒ ±ýÀÐ þýÛõ ´Õ «Çק¸¡ø. þ¾¢ø ÀÉ¢ôÒûÇ¢ 273.16 ±ýÚ ÌÈ¢ì¸ôÀÎõ.

´Õ ¦À¡Õ¨Çî ݧ¼üÚõ §À¡Ð ¿¡õ ¦¸¡ÎôÀÐ ¦ÅôÀõ (caloric). ¦ÅôÀõ ±ýÀÐ ¬üÈø (energy) Ũ¸¸Ç¢ø ´Õ Ũ¸. ¦ÅôÀõ ±ýÀÐ ¸ÉÄ¢ (calory) ±ýÈ «Ä¸¡ø «Çì¸ô Àθ¢ÈÐ. ´Õ ÅÇ¢Áõ (gas) «øÄÐ ¿£÷Áò¨¾î (liquid) ÝÎÀÎòÐõ §À¡Ð «Ð Ţ⸢ÈÐ (expand); ܼ§Å «¾ý ¦Åõ¨Á(temperature)Ôõ Üθ¢ÈÐ. ÅÇ¢Áõ «øÄÐ ¿£÷Áò¨¾ô ¦À¡ÐÅ¡¸ô À¡öÁõ «øÄРŢÇÅõ (fluid) ±ýÚ ¦º¡ø֧šõ. Ţâ Ţâ ´Õ Å¢ÇÅõ ¦ÅÇ¢(space)¨Â ¿¢¨È츢ÈÐ. ¦ÅÇ¢¨Â ¿¢¨Èò¾¨Äò¾¡ý ¦ÅûÙ¸¢ÈÐ ±ýÚ ¦º¡øÖ¸¢§È¡õ. ¦ÅûÙ¸¢ýÈ «¸üº¢ìÌ ¦ÅûÇõ (volume) ±ýÚ ¦ÀÂ÷. ¦ÅûÇô ¦ÀÕìÌ (volumetric increase) ¸¡Äò ¦¾¡¼÷¡¸ ²üÀð¼¡ø «¨¾ô À¡öîºø «øÄРŢÇ× (flow) ±ýÚ ¦º¡øÖ¸¢§È¡õ.

þÐŨà ¦º¡ýÉ «ò¾¨É Å¢¨É¸¨ÇÔõ ¦ÅÚ§Á ¦ÅôÀÅ¢¨É, ÝðÎÅ¢¨É ±ýÚ ¦º¡øÄ¡Áø ¦¾ÚÁÅ¢¨É ±ýÚ ¦º¡øÖÅÐ ¦À¡Ð¨Áô ¦À¡Õ¨ÇÔõ, Å¢¾ôÒî ¦º¡ü¸¨ÇÔõ ¾É¢ò¾É¢§Â ¨ÅòÐô ÒÆíÌž¡ø ¾¡ý. ¦¾ÚÁõ ¾Á¢§Æ.

«ýÒ¼ý,
þáÁ.¸¢.