Saturday, May 22, 2004

மாயக்கார சீட்டோ

[Miroslav Holub (b.1923) என்ற அறிவியலாரின் பாட்டு, Ian Milner, மற்றும் George Theiner ஆகியவர்களின் ஆங்கில மொழிபெயர்ப்பைத் தழுவியது.)

"மன்னவர் மகிழ்ந்திட, மாயமே செய்யவோ?
நீரினை மதுவாய் மாற்றவா? சொல்லுக!
நுணலெலாம் காற்படை நூறி உருக்கவா?
பூச்சிகள் பொதியிலார்? இதுவென்ன பெரிசு?
எலியெலாம் அமைச்சென எட்டியே செய்யவோ?"
குனிந்தவன் வணக்கம் கூடியே பார்த்தால்,
நகக்கணில் தெய்சிகள் என்னமாய் வளருது?
பரலும் பறவையோ தோளிலே அமருது!

அங்கே,
அரசர் சொல்லுவார்:

"வேறெதும் ஒன்றைக் கருத்திலே கொண்டுவா!"
"கறுத்ததாய் விண்மீன்"; கருத்திலே மலருது;
"உலர்நீர்?" எண்ணினான்; உவந்தே ஓடுது
"வைக்கோற் கரைகளே வழிவிடும் ஆறெதோ?"
வியக்குற கண்முனே விரிவதைக் காட்டினான்.

அப்பொழுது அங்குறும் மாணவன் கேட்டனன்;
"ஒன்றின் மேற்படும் சைன்மதி தருவிரோ?"

சீட்டோ முகமோ வெளிறியே போனது;
மன்னுக, இளைஞனே! மாற்றமே செய்யொணேன்;
சைன்மதிப் பென்றுமே இடையுறு நிலைதான்.
அடுநிலை ஒன்றுடன் நொய்நிலை ஒன்றுமாய்;
அதைமட் டொன்றும் விதக்கவே முடியேம்;

சுருங்கிய கூடென, சொல்லொலி குன்றி,
அரசவைப் பரிவா ரங்களின் இடையில்
மெதுவே விலகி மனையகம் நோக்கி
பையவே பையவே பாரர சிருந்து
செய்வது மாயவன் பெருவெளிப் பெயர்ச்சியே!

In TSCII:

[Miroslav Holub (b.1923) ±ýÈ «È¢Å¢Âġâý À¡ðÎ, Ian Milner, ÁüÚõ George Theiner ¬¸¢ÂÅ÷¸Ç¢ý ¬í¸¢Ä ¦Á¡Æ¢¦ÀÂ÷ô¨Àò ¾ØÅ¢ÂÐ.)

"ÁýÉÅ÷ Á¸¢úó¾¢¼, Á¡Â§Á ¦ºö§š?
¿£Ã¢¨É ÁÐÅ¡ö Á¡üÈÅ¡? ¦º¡øÖ¸!
ѽ¦ÄÄ¡õ ¸¡üÀ¨¼ áÈ¢ ¯Õì¸Å¡?
â¸û ¦À¡¾¢Â¢Ä¡÷? þЦÅýÉ ¦ÀâÍ?
±Ä¢¦ÂÄ¡õ «¨Áî¦ºÉ ±ðʧ ¦ºö§š?"
ÌÉ¢ó¾Åý Žì¸õ Üʧ À¡÷ò¾¡ø,
¿¸ì¸½¢ø ¦¾öº¢¸û ±ýÉÁ¡ö ÅÇÕÐ?
ÀÃÖõ ÀȨŧ¡ §¾¡Ç¢§Ä «ÁÕÐ!

«í§¸,
«Ãº÷ ¦º¡øÖÅ¡÷:

"§Å¦ÈÐõ ´ý¨Èì ¸Õò¾¢§Ä ¦¸¡ñÎÅ¡!"
"¸Úò¾¾¡ö Å¢ñÁ£ý"; ¸Õò¾¢§Ä ÁÄÕÐ;
"¯Ä÷¿£÷?" ±ñ½¢É¡ý; ¯Åó§¾ µÎÐ
"¨Å째¡ü ¸¨Ã¸§Ç ÅƢŢÎõ ¬¦È§¾¡?"
Å¢ÂìÌÈ ¸ñÓ§É Å¢Ã¢Å¨¾ì ¸¡ðÊÉ¡ý.

«ô¦À¡ØÐ «íÌÚõ Á¡½Åý §¸ð¼Éý;
"´ýÈ¢ý §ÁüÀÎõ ¨ºýÁ¾¢ ¾ÕÅ¢§Ã¡?"

º£ð§¼¡ Ó¸§Á¡ ¦ÅǢȢ§Â §À¡ÉÐ;
ÁýÛ¸, þ¨Ç»§É! Á¡üȧÁ ¦ºö¦Â¡§½ý;
¨ºýÁ¾¢ô ¦ÀýÚ§Á þ¨¼ÔÚ ¿¢¨Ä¾¡ý.
«Î¿¢¨Ä ´ýÚ¼ý ¦¿¡ö¿¢¨Ä ´ýÚÁ¡ö;
«¨¾Á𠦼¡ýÚõ Å¢¾ì¸§Å ÓʧÂõ;

ÍÕí¸¢Â Ü¦¼É, ¦º¡ø¦Ä¡Ä¢ ÌýÈ¢,
«Ãº¨Åô Àâš Ãí¸Ç¢ý þ¨¼Â¢ø
¦ÁЧŠŢĸ¢ Á¨É¸õ §¿¡ì¸¢
¨À§Š¨À§ŠÀ¡Ãà º¢ÕóÐ
¦ºöÅÐ Á¡ÂÅý ¦ÀÕ¦ÅÇ¢ô ¦ÀÂ÷§Â!

Miroslav Holub (b.1923)

Zito the magician
(Translated by Ian Milner and George Theiner)

To amuse His Royal Majesty,
he will change water into wine;
Frogs into footmen;
Beetles into bailiffs.
And make a Minister out of a rat.
He bows, and daisies grow from his finger-tips,
And a talking bird sits on his shoulder.

There,
Think up something else, demands His Royal Majesty.
Think up a black star. So he thinks up a black star.
Think up dry water. So he thinks up dry water.
Think up a river bound with straw-bands. So he does.

There,
Then along comes a student and asks: Think up sine alpha greater than one.
And Zito grows pale and sad: Terribly sorry.
Sine is between plus one and minus one.
Nothing you can do about that.
And he leaves the great Royal Empire,
Quitely weaves his way through the throng of courtiers,
to his home
in a nutshell.

Friday, May 21, 2004

மாற்றம்

இது ஒரு மாற்றம். வளவின் தோற்றம் மாறுகிறது. பின்னூட்டுக்களுக்கு இனிமேல் இடம் உண்டு.

In TSCII:

þÐ ´Õ Á¡üÈõ. ÅÇÅ¢ý §¾¡üÈõ Á¡Ú¸¢ÈÐ. À¢ýëðÎì¸ÙìÌ þÉ¢§Áø þ¼õ ¯ñÎ.