Wednesday, December 29, 2004

எங்கள் யாருக்கும் வெட்கமில்லை

நடந்திருப்பதோ பெருஞ்சோகம்! பிணங்களைக் கண்டெடுத்தவாகில் இருக்கிறார்கள். "எத்தனை பேர் பிழைத்தார்கள், எத்தனை ஊர் அழிந்துபோனது"" என்று அலறிப் புடைத்துக் கொண்டிருக்கையில், "பெரியவாளைச் சிறையில் அடைத்தது தான் இயற்கையின் சீற்றத்திற்குக் காரணம்; பாபம் செய்ததால் தான் அல்லா இந்தத் தண்டனையை அளிக்கிறான்; கர்த்தரை வழிபடாததால் தான் இந்தச் சீரழிவு" என்று முட்டாள் தனமாய்ச் சிலர் மதம் பிடித்துப் புலம்பிக் கொண்டிருக்கும் போது எரிச்சல் மிகுந்து வருகிறது.

கூடவே இன்னொரு வகை மதம்பிடித்த சில அரசியல் வாதிகள், "அந்தக் கட்சிக்காரரின் அமைச்சர் வந்தார்; இந்த நடுவண் அமைச்சர் வரவில்லை; மாநில அரசின் செயற் பாடுகளில் குறை; நடுவண் அரசின் செயற்பாடுகளில் குறை;" என வெட்கமில்லாமால் கட்சி கட்டிக் கொண்டு "இன்னொருவன் கண் நொள்ளைக் கண்" என்று சொல்லிவிடுவதில் குறியாய் இருக்கிறார்கள். ஆக இவர்கள் எல்லோருமே வெட்கமில்லாமல், "எரிகிற வீட்டில் பிடுங்குவது ஆதாயம்" என்று பார்ப்பார்கள் போலும்.

சரி இது தான் இப்படி என்றால், தொலைக்காட்சிகளிலோ இசைக்கச்சேரி நிற்கவில்லை; பரிசளிப்பு; பட்டங்கள் வழங்குதல், தலையாட்டிக் கொள்ளுதல் என எதுவுமே நிற்கவில்லை; தொலைக்காட்சித் தொடர்கள் நிற்கவில்லை; விவரங் கெட்ட கூத்துக்கள் நிற்கவில்லை; ஆங்கிலப் புத்தாண்டிற்கு யாரோ ஒரு திரைப்பட நடிகையோ, நடிகனோ பினாத்திக் கொண்டு இருப்பார்கள்; அதை தொலைக்காட்சிகளும் ஒளிபரப்பிக் கொண்டு இருக்கும். மொத்தத்தில் இங்கே யாருக்கும் வெட்கமில்லை;

உள்ளுர் தொலைக்காட்சிகளின் நடத்தைதான் கேவலம் (NDTV ஒரு விதிவிலக்கு; அவர்களுக்காவது மனித நேயம் என்று ஒன்று மிஞ்சி இருக்கிறதே!) என்றால், வெளிநாட்டுத் தொலைக்காட்சிகளிலும் பிபிசி தவிர்த்து மற்றவற்றில் தமிழகத்தையும், ஈழத்தையும், சிங்களத்தையும், அந்தமான் நக்கவரத்தையும் தேடித்தான் பிடிக்க வேண்டும் போல இருக்கிறது.

இன்று, நடுத்தர வருக்கத்தைச் சேர்ந்த நண்பர் ஒருவர் கேள்வி கேட்டார்; அவரை யாரோ ஒருவர் கேள்வி கேட்டார்களாம்; எனவே என்னிடம் அதே அய்யப்பாட்டை முன்னிட்டுத் தான் விளங்கிக் கொள்ளக் கேட்கிறார்.

"இவ்வளவு தூரம் கடற்கரை ஓரமாய் பிணங்கள் விரவிக் கிடக்கிற நேரத்தில், கிணறுகளில் இருந்து இறைத்துப் பின் குடிநீர் ஆலைகளில் புட்டில்களில் அடைத்து நமக்கு விற்கும் குடிநீர் தூய்மையாக இருக்குமா? குறிப்பாக புட்டில்களில் அடைத்துவரும் குடிநீரைக் குடிக்கலாமா?"

எனக்குக் கோவம் பொத்துக் கொண்டு வந்தது. "அந்த ஆளிடம் போய்ச் சொல்லுங்கள். புரத மூலக்கூறுகள் மிகப் பெரிதானவை; குடிநீர் ஆலைகளில் உள்ள செய்முறையில், எதிர் ஊடுகைப் படலத்தின் நூகப் புரைகளை (micropores in the reverse osmosis membranes) மீறி இந்த மாசுகள் வந்து சேராது; எனவே புட்டில் நீரை நம்பகமாக வாங்கலாம்; மீறியும் அந்த ஆளுக்கு அய்யம் இருப்பின் வாங்கிய குடிநீரைக் கொதிக்க வைத்துக் குடிக்கச் சொல்லுங்கள்" என்றேன்.

ஊரெங்கும் ஒப்பாரி; ஒப்பாரிக்கிடையில் இப்படி கீறல் விழுந்த ஓலங்கள். கேட்டால் சொக ஆதாரமாம்; மண்ணாங்கட்டி. இப்படியும் சில பெருகபதிகள் (brahaspathis) இந்த நாட்டில் வசிக்கிறார்களே? மக்களின் மூடத்தனங்களுக்கு எல்லையே கிடையாதா? மனிதநேயம் என்பதே கிடையாதா? இறைவா, இவர்களுக்கு அறிவைக் கொடு.

அன்புடன்,
இராம.கி.

In TSCII:

¿¼ó¾¢ÕôÀ§¾¡ ¦ÀÕ狀¡¸õ! À¢½í¸¨Çì ¸ñ¦¼Îò¾Å¡¸¢ø þÕ츢ȡ÷¸û. "±ò¾¨É §À÷ À¢¨Æò¾¡÷¸û, ±ò¾¨É °÷ «Æ¢óЧÀ¡ÉÐ"" ±ýÚ «ÄÈ¢ô Ò¨¼òÐì ¦¸¡ñÊÕ쨸¢ø, "¦ÀâÂÅ¡¨Çî º¢¨È¢ø «¨¼ò¾Ð ¾¡ý þÂü¨¸Â¢ý º£üÈò¾¢üÌì ¸¡Ã½õ; À¡Àõ ¦ºö¾¾¡ø ¾¡ý «øÄ¡ þó¾ò ¾ñ¼¨É¨Â «Ç¢ì¸¢È¡ý; ¸÷ò¾¨Ã ÅÆ¢À¼¡¾¾¡ø ¾¡ý þó¾î º£ÃÆ¢×" ±ýÚ Óð¼¡û ¾ÉÁ¡öî º¢Ä÷ Á¾õ À¢ÊòÐô ÒÄõÀ¢ì ¦¸¡ñÊÕìÌõ §À¡Ð ±Ã¢îºø Á¢ÌóÐ ÅÕ¸¢ÈÐ.

ܼ§Å þý¦É¡Õ Ũ¸ Á¾õÀ¢Êò¾ º¢Ä «Ãº¢Âø Å¡¾¢¸û, "«ó¾ì ¸ðº¢ì¸¡Ãâý «¨Áîº÷ Åó¾¡÷; þó¾ ¿ÎÅñ «¨Áîº÷ ÅÃÅ¢ø¨Ä; Á¡¿¢Ä «Ãº¢ý ¦ºÂü À¡Î¸Ç¢ø ̨È; ¿ÎÅñ «Ãº¢ý ¦ºÂüÀ¡Î¸Ç¢ø ̨È;" ±É ¦Åð¸Á¢øÄ¡Á¡ø ¸ðº¢ ¸ðÊì ¦¸¡ñÎ "þý¦É¡ÕÅý ¸ñ ¦¿¡û¨Çì ¸ñ" ±ýÚ ¦º¡øĢŢΞ¢ø ÌȢ¡ö þÕ츢ȡ÷¸û. ¬¸ þÅ÷¸û ±ø§Ä¡Õ§Á ¦Åð¸Á¢øÄ¡Áø, "±Ã¢¸¢È Å£ðÊø À¢ÎíÌÅÐ ¬¾¡Âõ" ±ýÚ À¡÷ôÀ¡÷¸û §À¡Öõ.

ºÃ¢ þÐ ¾¡ý þôÀÊ ±ýÈ¡ø, ¦¾¡¨Ä측𺢸Ǣ§Ä¡ þ¨ºì¸î§ºÃ¢ ¿¢ü¸Å¢ø¨Ä; ÀâºÇ¢ôÒ; Àð¼í¸û ÅÆí̾ø, ¾¨Ä¡ðÊì ¦¸¡ûÙ¾ø ±É ±ÐקÁ ¿¢ü¸Å¢ø¨Ä; ¦¾¡¨Ä측ðº¢ò ¦¾¡¼÷¸û ¿¢ü¸Å¢ø¨Ä; Å¢ÅÃí ¦¸ð¼ ÜòÐì¸û ¿¢ü¸Å¢ø¨Ä; ¬í¸¢Äô Òò¾¡ñÊüÌ Â¡§Ã¡ ´Õ ¾¢¨ÃôÀ¼ ¿Ê¨¸§Â¡, ¿Ê¸§É¡ À¢É¡ò¾¢ì ¦¸¡ñÎ þÕôÀ¡÷¸û; «¨¾ ¦¾¡¨Ä측𺢸Ùõ ´Ç¢ÀÃôÀ¢ì ¦¸¡ñÎ þÕìÌõ. ¦Á¡ò¾ò¾¢ø þí§¸ ¡ÕìÌõ ¦Åð¸Á¢ø¨Ä;

¯ûÙ÷ ¦¾¡¨Ä측𺢸Ǣý ¿¼ò¨¾¾¡ý §¸ÅÄõ (NDTV ´Õ Å¢¾¢Å¢ÄìÌ; «Å÷¸Ù측ÅÐ ÁÉ¢¾ §¿Âõ ±ýÚ ´ýÚ Á¢ïº¢ þÕ츢ȧ¾!) ±ýÈ¡ø, ¦ÅÇ¢¿¡ðÎò ¦¾¡¨Ä측𺢸ǢÖõ À¢À¢º¢ ¾Å¢÷òÐ ÁüÈÅüÈ¢ø ¾Á¢Æ¸ò¨¾Ôõ, ®Æò¨¾Ôõ, º¢í¸Çò¨¾Ôõ, «ó¾Á¡ý ¿ì¸ÅÃò¨¾Ôõ §¾Êò¾¡ý À¢Êì¸ §ÅñÎõ §À¡Ä þÕ츢ÈÐ.

þýÚ, ¿Îò¾Ã ÅÕì¸ò¨¾î §º÷ó¾ ¿ñÀ÷ ´ÕÅ÷ §¸ûÅ¢ §¸ð¼¡÷; «Å¨Ã ¡§Ã¡ ´ÕÅ÷ §¸ûÅ¢ §¸ð¼¡÷¸Ç¡õ; ±É§Å ±ýÉ¢¼õ «§¾ «öÂôÀ¡ð¨¼ ÓýÉ¢ðÎò ¾¡ý Å¢Çí¸¢ì ¦¸¡ûÇì §¸ð¸¢È¡÷.

"þùÅÇ× àÃõ ¸¼ü¸¨Ã µÃÁ¡ö À¢½í¸û Å¢ÃÅ¢ì ¸¢¼ì¸¢È §¿Ãò¾¢ø, ¸¢½Ú¸Ç¢ø þÕóÐ þ¨ÈòÐô À¢ý ÌÊ¿£÷ ¬¨Ä¸Ç¢ø ÒðÊø¸Ç¢ø «¨¼òÐ ¿ÁìÌ Å¢üÌõ ÌÊ¿£÷ àö¨Á¡¸ þÕìÌÁ¡? ÌÈ¢ôÀ¡¸ ÒðÊø¸Ç¢ø «¨¼òÐÅÕõ ÌÊ¿£¨Ãì ÌÊì¸Ä¡Á¡?"

±ÉìÌì §¸¡Åõ ¦À¡òÐì ¦¸¡ñÎ Åó¾Ð. "«ó¾ ¬Ç¢¼õ §À¡öî ¦º¡øÖí¸û. Òþ ãÄìÜÚ¸û Á¢¸ô ¦À⾡ɨÅ; ÌÊ¿£÷ ¬¨Ä¸Ç¢ø ¯ûÇ ¦ºöӨȢø, ±¾¢÷ °Î¨¸ô À¼Äò¾¢ý á¸ô Ҩø¨Ç (micropores in the reverse osmosis membranes) Á£È¢ þó¾ Á¡Í¸û ÅóÐ §ºÃ¡Ð; ±É§Å ÒðÊø ¿£¨Ã ¿õÀ¸Á¡¸ Å¡í¸Ä¡õ; Á£È¢Ôõ «ó¾ ¬ÙìÌ «öÂõ þÕôÀ¢ý Å¡í¸¢Â ÌÊ¿£¨Ãì ¦¸¡¾¢ì¸ ¨ÅòÐì ÌÊì¸î ¦º¡øÖí¸û" ±ý§Èý.

°¦ÃíÌõ ´ôÀ¡Ã¢; ´ôÀ¡Ã¢ì¸¢¨¼Â¢ø þôÀÊ ¸£Èø Å¢Øó¾ µÄí¸û. §¸ð¼¡ø ¦º¡¸ ¬¾¡ÃÁ¡õ; Áñ½¡í¸ðÊ. þôÀÊÔõ º¢Ä ¦ÀÕ¸À¾¢¸û (brahaspathis) þó¾ ¿¡ðÊø ź¢ì¸¢È¡÷¸§Ç? Áì¸Ç¢ý ã¼ò¾Éí¸ÙìÌ ±ø¨Ä§Â ¸¢¨¼Â¡¾¡? ÁÉ¢¾§¿Âõ ±ýÀ§¾ ¸¢¨¼Â¡¾¡? þ¨ÈÅ¡, þÅ÷¸ÙìÌ «È¢¨Åì ¦¸¡Î.

«ýÒ¼ý,
þáÁ.¸¢.

Thursday, December 16, 2004

ஒருங்குறி - மறுமொழி

சங்கமம் 7வது தமிழ் இணைய மாநாட்டு சிறப்பிதழில் உத்தமம் நிர்வாகிகள் சிறப்பு வலைச் செவ்வி ஒன்றை அளித்திருந்தனர். அதற்கு மறுமொழியாக இப்பொழுதைய ஒருங்குறி பற்றி நான் எழுப்பிய சில கேள்விகளையும், கருத்துக்களையும்

http://www.e-sangamam.com/madal1.asp

என்ற சுட்டியில் படிக்கலாம்.

அன்புடன்,
இராம.கி.

In TSCII:

ºí¸Áõ 7ÅÐ ¾Á¢ú þ¨½Â Á¡¿¡ðÎ º¢ÈôÀ¢¾Æ¢ø ¯ò¾Áõ ¿¢÷Å¡¸¢¸û º¢ÈôÒ Å¨Äî ¦ºùÅ¢ ´ý¨È «Ç¢ò¾¢Õó¾É÷. «¾üÌ ÁÚ¦Á¡Æ¢Â¡¸ þô¦À¡Ø¨¾Â ´ÕíÌÈ¢ ÀüÈ¢ ¿¡ý ±ØôÀ¢Â º¢Ä §¸ûÅ¢¸¨ÇÔõ, ¸ÕòÐ츨ÇÔõ

http://www.e-sangamam.com/madal1.asp

±ýÈ ÍðÊ¢ø ÀÊì¸Ä¡õ.

«ýÒ¼ý,
þáÁ.¸¢.

Saturday, December 04, 2004

திண்ணைப் பள்ளிக்கூடம் - 3

ஒன்பான் இராக்கள் என்று இந்தக் கட்டுரையின் ஊடே இரண்டாம் பகுதியில் சொல்லும் போது வந்த "திகழிகள்" என்ற சொல்லைக் கண்டு திகைக்க வேண்டாம். புவியைச் சுற்றி நிலவு வரும் 360 பாகைகளில் ஒவ்வொரு முப்பது பாகை நகர்ச்சிக்கான நேரத்தையும் ஒரு திகழி என்றே இந்திய வானியல் கொள்ளுகிறது. (அதாவது நிலவு அத்தனை நேரம் ஒளி தந்து திகழ்கிறது. எனவே அந்த நேரம் ஒரு திகழி) இந்தத் திகழி>திகதியாகி ஈழத்தில் இன்றும் நிற்கிறது. இன்னும் திரித்து ககரத்தை ஹகரம் ஆக்கி அதையும் ஒலிக்காது முடிவில் நாம் திதிஎன்று ஆக்கி விட்டோ ம். இந்த வரையறையின் படி நிலவின் முழு வட்ட நகர்ச்சி 30 திகழியில் நடைபெறுகிறது. தமிழில் முதல் திகழியை அமையுவா (அமைகின்ற உவா அமையுவா>அமாவாசை) என்றும், அடுத்த திகழியை புதுமைத் திகழி என்றும் (புதுமை>ப்ரதமை; தமிழில் புதுமை, புதியது, புதுசு என்பது முதல் என்ற பொருளையும் கொடுக்கும்; மங்கலம் கருதித் தமிழில் பல நிகழ்வுகளில் ஒன்று என்று எண்களைத் தொடங்குவதில்லை. புதுசு, அல்லது முதல் என்றே தொடங்குவர். அறுவடையில் நெல்லை அளந்து போடும் போது பொலிசு என்று தான் தொடங்குவார்கள். இன்றைக்கு அதை வடமொழிப் படுத்தி இலாபம் என்று சொல்லுவதும் உண்டு. மாதத்தில் முதல் தேதி என்ன என்று தான் நாட்டுப்புறங்களில் சொல்லுவோம். இந்த மரபு தெரியாமல் இன்றைக்கு நகரத்தைச் சேர்ந்த பலரும் ஒன்றாம் தேதி என்று சொல்லுகிறார்கள். இது தமிழர் பழக்கம் அல்ல.) இதுபோல 14ம் திகழி கழிந்து 15ம் திகழியை பூரணை உவா (பூரணிக்கிற உவா பூரணை உவா; இதைப் பூரும் உவா> பூருவா என்றும் சொல்லுவது உண்டு; பூரணம்>பௌர்ணமி) என்றும் சொல்லுகிறோம்.

இந்திய வானியல் கணக்குகள் மூன்று வகையானவை; ஒன்று சந்திர மானம்; இன்னொன்று சூரிய மானம்; மூன்றாவது சந்திர சூரிய மானம். மானம் என்பது மானித்தல் (கணக்குப் போடுதல், அளவிடுதல்) என்ற வினைச்சொல்லின் வழிக் கிளைத்த பெயரைக் குறிக்கும். தமிழ்நாட்டிலும், சேரலத்திலும் சந்திர சூரிய மானத்தையே பின்பற்றுகிறோம். ஆந்திரத்தில் சந்திரமானம் மட்டுமே பின்பற்றப் படுகிறது.

நாளாவட்டத்தில் சந்திரமானத்தில் வந்து போகும் வரையறைகளையும், சூரியமானத்தில் வந்துபோகும் வரையறைகளையும் ஏதோ ஒரு மாதிரிக் கலந்து விரவிச் சொல்லும் போது சிலருக்கு அது குழப்பமாகவே இருக்கும். மாந்த வாழ்வில் ஒவ்வொரு இரவிலும் காணமுடிகிற நிலவின் நகர்ச்சி (அதன் வேகத்தால்) நமக்குச் சட்டென்று புலப்படும். இந்த நகர்ச்சியைப் பார்க்கும் போது, சூரிய நகர்ச்சி ஒப்பீட்டு அளவில் கொஞ்சம் இழுவை(slow)யானது. அதனால் அதை அவ்வளவு எளிதில் உணர முடிவதில்லை.

முதலில் மாதம் என்ற கருத்தீட்டைப் பார்ப்போம். மாதம் என்ற சொல் இன்றைக்குப் பொதுப்படையாக ஒரு month-யைக் குறித்தாலும் அந்தச்சொல்லின் வேர் மதி (நிலவு) என்ற சொல்லில், நிலவின் நகர்ச்சியில் இருந்து தான் கிளைத்தது. சந்திர மானக் கணக்கில் சூரியனுக்கும், புவிக்கும் இடையில் உவா (= நிலவு = சந்திரன்) வந்து அமை உவாவாய்த் (இருண்டு போன சந்திரன்) தொடங்கிப் பின் பூரணை உவாவாய் வளர்ந்து, மீண்டும் தேய்ந்து அடுத்த அமையுவா வரும் வரை உள்ள காலத்தை ஒரு மாதம் என்று புரிந்து பின் அதைத் திங்கள் (=நிலா) என்று சொல்லத் தொடங்கினார்கள். சித்திரைத் திங்கள், ஐப்பசித் திங்கள் என்ற சொற்கள் எல்லாம் இப்படி வந்தவை தான். சந்திர மானக் கணக்கில் 30 திகழிகள் அடங்கியது ஒரு சந்திர மாதம் அதாவது ஒரு திங்கள்.

மாதம் என்ற பருவத்தைப் புரிந்து கொண்டது நிலவின் நகர்ச்சியால் தான். பின்னால் இந்தச் சொல்லின் ஆட்சியை மேலும் நீட்டி சூரிய மானக் கணக்கிலும் அதே சொல்லைப் பயன்படுத்தினார்கள். அதாவது, சூரிய மானக் கணக்கில் ஒரு ஆண்டில் சூரியன் முழு வட்டமாய் நகர்வதாய்த் தோற்றம் அளிப்பதை (புவிதான் உண்மையாய் வட்டமாய் நகர்ந்தாலும்) அப்படியே ஏற்றுக் கொண்டு, இந்த நகர்ச்சித் தோற்றத்தில் பன்னிரண்டில் ஒரு பங்கான 30 பாகையைக் கடக்குகின்ற காலத்தையும் ஒரு மாதம் என்றே பின்னால் சொல்ல முற்பட்டார்கள்; இந்த மாதத்தைக் கல்வெட்டுகளில் விதப்பாய்க் குறிப்பதற்கென ஞாயிறு என்ற சொல்லைப் பயனாக்கி இருக்கிறார்கள்; கும்ப ஞாயிறு, துலை ஞாயிறு என்றெல்லாம் கல்வெட்டுக்களில் வரும். இதைத்தான் இன்னொரு வகையில் வடமொழிப்படுத்தி பன்னிரு ஆதித்தர்கள் (ஞாயிற்றர்களும் ஆதித்தர்களும் ஒலியால் இணைந்தவர்கள்; அதை இன்னொரு முறை பார்க்கலாம்) என்றும் அழைத்தார்கள். (இப்படிப் பல தமிழ்ச் சொற்களை வடமொழிப் படுத்தி நம்முடைய மூலம் காணவொட்டாமல் தொலைத்தது தமிழில் ஏராளம்.)

இப்படி ஞாயிற்று மாதங்களும், திங்கள் மாதங்களும் அடிப்படையில் வெவ்வேறு நேரப் பரிமானத்தைக் குறிப்பவை. இவற்றைப் பிரித்து உணரும் பழக்கம் இன்றைக்கும் சேரலத்தில் இருக்கிறது. நம் தமிழ்நாட்டில் தான் இந்தப் பழக்கத்தை விட்டு மாதங்களை குழப்பமானபடி பெயர் மாற்றி அழைக்கத் தொடங்கி விட்டோ ம்; களப்பிரர் காலத்தில் ஞாயிற்று மாதங்களை தனிப் பெயர்களாலும், திங்கள் மாதங்களை தனிப் பெயர்களாலும் அழைக்கும் வழக்கம் விட்டுப் போய், ஞாயிற்று மாதங்களை திங்கள் மாதங்களின் பெயராலேயே அழைக்கும் விந்தையான பழக்கம் நம்மூரில் ஏற்பட்டுப் போனது. (ஒருவேளை களப்பிரர்கள் வடுகர்கள் - கன்னட, ஆந்திரப் பகுதியாளர்கள், சந்திர மானத்தைக் கடைப்பிடிப்பவர்கள் என்பதால் ஏற்பட்டதோ என்னவோ?) இந்த மாற்றத்தின் விளைவால் தமிழ்நாட்டில் மேய மாதத்தை சித்திரை என்றும், சுறவ மாதத்தை தை என்றும், மீன மாதத்தைப் பங்குனி என்றும், இன்னும் இதுபோலவும் சொல்லத் தொடங்கிவிட்டோ ம். (இங்கே இரண்டு வரையறைகள் கலந்து கிடக்கின்றன.) இந்தக் குழப்பம் நமக்குப் புரிபட்டால் தான் நம்முடைய மரபு விழாக்களின் பொருள் புரியத் தொடங்கும். உண்மையில் சேரலத்தார் பழக்கம் தெரியவில்லையென்றால் பழைய மரபுகளை நாம் மீட்டெடுப்பது சிக்கலாய் இருக்கும். (சூரிய மான மாதங்களை ஞாயிற்று மாதங்களாய் அழைப்பது தான் சரி என்று உணர்ந்து இந்தக் காலத் தனித்தமிழ்த் தாளிகைகள் அப்படியே குறித்து வருகின்றன. இதன் பொருள் சித்திரை....பங்குனி போன்ற திங்கள் மாதங்கள் நமக்கு வேண்டாதவை என்று பொருளல்ல. அவற்றின் பயன்பாடு இன்னொருவிதம் என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.) [இந்தக் கட்டுரை நெடுகிலும் புரட்டாசித் திங்கள் என்றால் அது புரட்டாசி என்ற பெயர் கொண்ட சந்திர மான மாதம் என்றும், கன்னி ஞாயிறு என்றால் அது சூரிய மான மாதம் என்றும் புரட்டாசி மாதம் என்றால் கன்னி ஞாயிற்றிற்கு சந்திரமானப் பெயரிட்டு தமிழ்நாட்டில் மட்டும் அழைக்கும் சூரியச் சந்திர மான மாதம் என்று கொள்ள வேண்டுகிறேன்.]

இதே போல சூரியன் எழுந்து உயர்ந்து பின் வீழ்ந்து மீண்டும் எழும் வரை உள்ள நேரத்தைக் குறிக்க, இரண்டு விதமான சொற்கள் பொருள் நீட்சி பெற்றுள்ளன. சூரியன் விழுந்ததில் இருந்து மீண்டும் எழும் வரை உள்ள பொழுதைக் குறிக்கும் சொல்லான நாள் என்பது பொருள் நீட்சி பெற்று பகல்/இரவு இணைந்த பொழுதைக் குறித்தது. இதே போல நிலவின் 30 பாகை நகர்ச்சி நேரத்தைக் குறிக்கும் சொல்லான திகழி/திகதி நீட்டம் பெற்று தேதி என்றாகி சூரியனின் பகல்/இரவு இணைந்த பொழுதையும் குறித்தது. (வானியற் கலைச்சொற்கள் இப்படிக் குழப்பத்தில் இருந்து புழக்கம் காரணமாய்க் கூர்மை பெற்றுள்ளன.)

மாதங்களுக்கும் மேல் அடுத்துள்ள காலம் பெரும்பொழுது என்றும் இருது(>ருது) என்றும் தமிழரால் அறியப்பட்டது. இருது என்ற சொல் வடபுலத்தில் பரவியது. ஓராண்டின் பருவ காலங்களை ஈரிரு மாதங்களாய்ப் பிரித்து இளவேனில், வேனில், கார், கூதிர், முன்பனி, பின்பனி என்று ஆறு பெரும் பொழுதாக நம்மவர்கள் அழைத்திருந்தார்கள். இதையே வடநாட்டில் பசந்த இருது (>வசந்த ருது), கரும இருது (>கரிஷ்ம ருது), வழிய இருது (>வர்ஷ ருது), சொரித இருது (சரத் ருது), குமைந்த இருது(>ஹேமந்த ருது), சிதற இருது (>சிசிர ருது) என்று சொல்லுவார்கள். ஒவ்வொரு இருதும் இரண்டிரண்டு மாதங்கள். ஓராண்டைப் பெரும்பொழுதாய்ப் பிரிக்கும் போது மேலை நாட்டில் நான்காய்க் கொள்ளும் போது, நம்மூரில் மட்டும் (அதனால் வடபுலத்திலும்) ஆறு பெரும்பொழுதுகளாய் அறியப் பட்டன.

ஆனால் இந்த இருதுகள் என்ற பெரும்பொழுதுகள் இரண்டிரண்டு சூரிய மாதங்களைக் குறித்தனவா, அல்லது சந்திர மாதங்களைக் குறித்தனவா என்றால் அவை சூரிய மாதங்களைத்தான் குறித்திருக்க வேண்டும் என்று ஓர்ந்து சொல்லலாம். சூரியமான ஆண்டு என்பதைத் திருப்ப ஆண்டு (tropical year) என்றே மேலையர் சொல்லுவார்கள்; அதாவது புவியில் இருந்து சூரியனைப் பார்க்கும் போது அது சுறவத் திருப்பத்தில் (tropic of capricorn) தொடங்கி, வடக்கு நோக்கி நகர்ந்து புவிநடுக் கோட்டையும் தாண்டி கடகத் திருப்பம் (tropic of cancer) வரை வந்து பின் மீண்டும் தெற்கு நோக்கித் திரும்பி நகர்ந்து முடிவில் சுறவத் திருப்பத்தைத் தொடுவது வரை ஆகும் காலத்தை (ஒரு திருப்பக் கோட்டில் தொடங்கி இன்னொரு திருப்பக் கோட்டைத் தொட்டு மீண்டும் முதல் திருப்பக் கோட்டிற்கு வந்து சேரும் காலத்தை) ஒரு திருப்ப ஆண்டு அல்லது சூரியமான ஆண்டு என்று சொல்லுகிறோம். (பருவம் பார்த்துத் திரும்புகிற காரணத்தால் அது திருப்ப ஆண்டு. திருப்பம் என்ற சொல் turn என்பதற்கு இன்றைக்கும் நாட்டுப்புறத்தில் பயன்படும் சொல். turn என்பதற்கும் tropic என்பதற்கும் பெருத்த வேறுபாடு கிடையாது.)

tropics:
1391, "either of the two circles in the celestial sphere which describe the northernmost and southernmost points of the ecliptic," from L.L. tropicus "of or pertaining to the solstice" (as a noun, "one of the tropics"), from L. tropicus "pertaining to a turn," from Gk. tropikos "of or pertaining to a turn or change, or to the solstice" (as a noun, "the solstice"), from trope "a turning" (see trope). The notion is of the point at which the sun "turns back" after reaching its northernmost or southernmost point in the sky. Extended 1527 to the corresponding latitudes on the earth's surface (23 degrees 28 minutes north and south); meaning "region between these parallels" is from 1837. Tropical "hot and lush like the climate of the tropics" is first attested 1834.

இந்திய வானியலின் படி ஆண்டுகளிலே கூட மூன்று விதம் உண்டு. ஒன்று 12 சந்திர மாதங்கள் அடங்கிய ஒரு சந்திரமான ஆண்டு. இது 354.3670583 நாட்களைக் குறிக்கும். சந்திர மானத்தில் சந்திர மாதம் தான் அடிப்படை அலகு (basic unit). மாதத்தைப் பன்னிரண்டால் பெருக்கி வரும் சந்திர ஆண்டு என்ற அளவு ஒரு வழிப்பட்ட எண்ணளவு (derived quantity); முதற்பட்ட எண்ணளவு (primary quantity)அல்ல.

இரண்டாம் வகை ஆண்டு என்பது புவியில் இருந்து சூரியனையும் அதன் பின்புலனையும் பார்த்துப் பொருத்திக் கொண்டு பின் சூரிய நகர்ச்சிஒரு வட்டம் முடிந்த பின், அதே பொருத்தம் வரும் வரை காத்திருந்து நாட்களைக் கணக்கிடுவது. இந்தப் பொருத்தம் 365.24219878 நாட்களுக்கு ஒருமுறை நடக்கும். இப்படிப் பொருத்தம் நடக்கும் நேரம் ஓர் ஆண்டு எனப்படும். சூரிய மானத்தில் ஆண்டு என்பதுதான் முதற்பட்ட எண்ணளவு; மாதம் என்பது இங்கே வழிப்பட்ட எண்ணளவு; சூரிய மானத்தின் படி உள்ள ஆண்டைச் சூரிய ஆண்டு என்று இந்திய வானியலிலும், திருப்ப ஆண்டு (tropical year) என்று மேலை வானியலிலும் குறிப்பிடுவார்கள்.

மூன்றாவது முறையில் சூரியனுக்கு மாறாய், வேறு ஏதேனும் ஒரு விண்மீனை எடுத்துக் கொண்டு அந்த விண்மீன் நாம் அடிப்படையாய் எடுத்துக் கொண்ட 27 விண்மீன் கூட்டங்களோடு எப்படிப் பொருந்துகிறது, மீண்டும் ஒரு முழு வட்ட நகர்ச்சிக்குப் பிறகு அதே பொருத்தம் எத்தனை நாளில் வருகிறது என்று பார்ப்பார்கள். இந்தப் பொருத்தம் 365.25636556 நாட்களுக்கு ஒருமுறை நடக்கும். இந்த நேரத்தை ஓர் ஆதிரை ஆண்டு என்று சொல்லுவார்கள். (ஆதிரை - astra = விண்மீன்; குறிப்பாக நம் திருவாதிரை மீன் என்ற விதப்புச் சொல்லே பொதுமைப் பெயராய் நீட்சி பெற்றிருக்கிறது. திருவாதிரையைச் சிவனுக்கு உரியதாய்ச் சொன்னது இங்கு நினைவு கூறத் தக்கது; ஆதிரை ஆண்டு sideral year என்று மேலை மொழிகளில் சொல்லப் படும்)

ஆதிரை ஆண்டிற்கும், சூரிய ஆண்டிற்கும் இடையே மொத்த நாட்களில் சிறிது வேறுபாடு உண்டு. ஆதிரை ஆண்டின் தொடக்கம் என்பது கூர்ந்து கவனித்தால் மாற்றம் இல்லாது ஒரே நாளில் இருப்பது. ஆனால் சூரிய ஆண்டின் தொடக்கமோ கொஞ்சம் கொஞ்சமாய் முன் நகர்ந்து கொண்டே இருக்கிறது. புவியின் நகர்ச்சியைப் பார்க்கின்ற பார்வையாளர் புவியில் மேல் இல்லாமல் வானில் இருந்து பார்த்தால் ஆதிரை ஆண்டு என்பதுதான் சரியாக இருக்கும். ஏனென்றால் புவிக்கு தன்னுருட்டல் (rotation), வலயம் (revolution) போக கிறுவாட்டம் (gyration), நெற்றாட்டம் (nutation)என்ற இன்னும் இரு இயக்கங்கள் இருக்கின்றன. இவையே சூரிய ஆண்டின் தொடக்கத்தையே முன் நோக்கி நகர்த்திக் கொண்டு இருக்கின்றன. ஆதிரை ஆண்டிற்கும், சூரிய ஆண்டிற்கும் இடையே வேறுபாட்டைக் கணக்கிட்டால் சூரிய ஆண்டு ஆதிரை ஆண்டைக் காட்டிலும் 0.01416678 நாட்களின் முன்னேயே முடிந்துவிடும். இன்னொரு விதமாய்ப் பார்த்தால், திருப்ப ஆண்டின் நகர்ச்சி ஆதிரை ஆண்டின் நகர்ச்சியைக் காட்டிலும் 0.01396291 பாகையில் நகர்ச்சி கூடுதலாய் இருக்கும். அது மட்டுமல்ல; ஒவ்வொரு ஆண்டும் இந்த நகர்ச்சி வேறுபாடு முன்சென்று கொண்டே இருக்கும்; சேர்த்து வைத்துப் பார்க்கும் போது, 71.61832226 ஆண்டுகளில் இந்த நகர்ச்சி 1 பாகையும், 25782.59601 ஆண்டுகளில் இந்த நகர்ச்சி 360 பாகையாய் விலகி நகர்ந்து இருக்கும். இப்படித் திருப்ப ஆண்டு, ஆதிரை ஆண்டிலிருந்து விலகி முன்செல்வதைத் தான் புறச்செலவம் (precession) என்று வானியலில் சொல்லுவார்கள்.

இந்தப் புறச்செலவத்தைக் கணக்கிடாமல், நூற்றாண்டு கணக்கான நாட்டு வரலாறுகளையும், குமுக மரபுகளையும் சரியானபடி புரிந்து கொள்ள முடியாது. புறச்செலவம் காரணமாய் சூரியமான ஆண்டின் தொடக்கமும், பெரும்பொழுதுகளின் தொடக்கங்களும், இந்தக் காலத்தில் கிட்டத்தட்ட 24.35269482 நாட்கள் தள்ளிப் போய்விட்டன. காட்டாக சங்கம் மருவிய காலத்தில் (AD 285) இருந்த கணக்கின் படி ஏப்ரல் - 14ல் தொடங்க வேண்டிய இளவேனில் பருவம் இப்பொழுது மார்ச்சு 21-லேயே தொடங்கி விடுகிறது. (ஆனாலும் ஆண்டுத் தொடக்கத்தை இன்னும் பழைய பழக்கத்தை வைத்து ஏப்ரல் 14 என்றே சொல்லிவருகிறோம்.) இதே போல செப்டம்பர் 22 லேயே கூதிர் காலம் இப்பொழுது தொடங்கிவிடுகிறது. இருந்தாலும் நாம் பழைய முறைப்படி கூதிர் காலத்தை அக்டோ பர் 16 - ல் தொடங்குவதாய்ச் சொல்லிக் கொண்டு இருக்கிறோம்.

முன்னால் காலங்கள் என்ற கட்டுரைத் தொடரின் 5 - ஆம் அதிகாரத்தில் புறத்தொய்ய நேரம் (ப்ரதோஷ நேரம்), புறத்தொய்ய நாள் (ப்ரதோஷ நாள்), புறத்தொய்ய மாதம் (ப்ரதோஷ மாதம்) பற்றிச் சொல்லியிருந்தேன். புறத்தொய்ய சூரிய மாதம் தான் புறத்தொய்யை>புறத்தோயை>புறத்தோசி>புரட்டாசி என்று ஆகும். (ஏற்கனவே சொன்னது போல் கன்னி ஞாயிற்றைத் தமிழ்நாட்டில் புரட்டாசி மாதம் என்று சொல்லுகிறோம்.) தொய்யம் என்பது இருளை, மாலை நேரத்தைக் குறிக்கும். புறத்தொய்யை என்பது இருளுக்குச் சற்று முந்திய நிலை. நாள் கணக்கில் பார்த்தால் இருள் என்னும் தொய்யம் சூரியன் மறைந்ததிற்குப் பின் உள்ள நேரம். மாதக் கணக்கில் பார்த்தால் நிலவின் ஒளி தேய்ந்து வருவது ஒரு தொய்யம். ஆண்டுக் கணக்கில் பார்த்தால், கூதிர் காலம் தொடங்குவது இருள் சூழ்வதற்கு ஒப்பானது. புரட்டாசி மாதம் என்பது ஓர் ஆண்டின் மூன்றாம் பெரும்பொழுதான கார்காலத்தின் கடைசியாயும், கூதிர்காலம் தொடங்குவதற்கு சற்று முன்பாயும் உள்ள மாதம். எனவே தொய்யம் தொடங்குவதற்கு முன்னுள்ள புறத்தொய்ய மாதம். கூதிரின் முதல் சூரியச் சந்திர மாதம் அய்ப்பதி>அய்ப்பசி மாதம் ஆகும். (மேய், யா, யாடு என்பதெல்லாம் ஆட்டைக் குறிக்கும் சொற்கள். அய்ப்பதி என்பது வடமொழியில் அஜபதி>அஸுபதி என்று ஆகும். மீண்டும் தமிழ்ப்படுத்துவதில் அதை அசுபதி என்று சொல்லுவோம். அஜகம் என்றால் வடமொழியிலும் ஆடு என்ற பொருள் தான். தமிழில் சந்திரமானக் கணக்கில் உள்ள பெயரை சூரியச் சந்திர மான மாதத்திற்குப் பெயராய் அழைக்கிறோம்.)

இனி அடுத்த பகுதியில் மகார் நோன்பிற்கு வருவோம்.

அன்புடன்,
இராம.கி.

In TSCII:

´ýÀ¡ý þáì¸û ±ýÚ þó¾ì ¸ðΨâý °§¼ þÃñ¼¡õ À̾¢Â¢ø ¦º¡øÖõ §À¡Ð Åó¾ "¾¢¸Æ¢¸û" ±ýÈ ¦º¡ø¨Äì ¸ñÎ ¾¢¨¸ì¸ §Åñ¼¡õ. ÒÅ¢¨Âî ÍüÈ¢ ¿¢Ä× ÅÕõ 360 À¡¨¸¸Ç¢ø ´ù¦Å¡Õ ÓôÀÐ À¡¨¸ ¿¸÷îº¢ì¸¡É §¿Ãò¨¾Ôõ ´Õ ¾¢¸Æ¢ ±ý§È þó¾¢Â Å¡É¢Âø ¦¸¡ûÙ¸¢ÈÐ. («¾¡ÅÐ ¿¢Ä× «ò¾¨É §¿Ãõ ´Ç¢ ¾óÐ ¾¢¸ú¸¢ÈÐ. ±É§Å «ó¾ §¿Ãõ ´Õ ¾¢¸Æ¢) þó¾ò ¾¢¸Æ¢>¾¢¸¾¢Â¡¸¢ ®Æò¾¢ø þýÚõ ¿¢ü¸¢ÈÐ. þýÛõ ¾¢Ã¢òÐ ¸¸Ãò¨¾ †¸Ãõ ¬ì¸¢ «¨¾Ôõ ´Ä¢ì¸¡Ð ÓÊÅ¢ø ¿¡õ ¾¢¾¢±ýÚ ¬ì¸¢ Ţ𧼡õ. þó¾ ŨèȢý ÀÊ ¿¢ÄÅ¢ý ÓØ Åð¼ ¿¸÷ 30 ¾¢¸Æ¢Â¢ø ¿¨¼¦ÀÚ¸¢ÈÐ. ¾Á¢Æ¢ø Ó¾ø ¾¢¸Æ¢¨Â «¨ÁÔÅ¡ («¨Á¸¢ýÈ ¯Å¡ «¨ÁÔÅ¡>«Á¡Å¡¨º) ±ýÚõ, «Îò¾ ¾¢¸Æ¢¨Â ÒШÁò ¾¢¸Æ¢ ±ýÚõ (ÒШÁ>ôþ¨Á; ¾Á¢Æ¢ø ÒШÁ, Ò¾¢ÂÐ, ÒÐÍ ±ýÀÐ Ó¾ø ±ýÈ ¦À¡Õ¨ÇÔõ ¦¸¡ÎìÌõ; Áí¸Äõ ¸Õ¾¢ò ¾Á¢Æ¢ø ÀÄ ¿¢¸ú׸Ǣø ´ýÚ ±ýÚ ±ñ¸¨Çò ¦¾¡¼íÌž¢ø¨Ä. ÒÐÍ, «øÄÐ Ó¾ø ±ý§È ¦¾¡¼íÌÅ÷. «ÚŨ¼Â¢ø ¦¿ø¨Ä «ÇóÐ §À¡Îõ §À¡Ð ¦À¡Ä¢Í ±ýÚ ¾¡ý ¦¾¡¼íÌÅ¡÷¸û. þý¨ÈìÌ «¨¾ ż¦Á¡Æ¢ô ÀÎò¾¢ þÄ¡Àõ ±ýÚ ¦º¡øÖÅÐõ ¯ñÎ. Á¡¾ò¾¢ø Ó¾ø §¾¾¢ ±ýÉ ±ýÚ ¾¡ý ¿¡ðÎôÒÈí¸Ç¢ø ¦º¡ø֧šõ. þó¾ ÁÃÒ ¦¾Ã¢Â¡Áø þý¨ÈìÌ ¿¸Ãò¨¾î §º÷ó¾ ÀÄÕõ ´ýÈ¡õ §¾¾¢ ±ýÚ ¦º¡øÖ¸¢È¡÷¸û. þÐ ¾Á¢Æ÷ ÀÆì¸õ «øÄ.) þЧÀ¡Ä 14õ ¾¢¸Æ¢ ¸Æ¢óÐ 15õ ¾¢¸Æ¢¨Â âè½ ¯Å¡ (âý¢ì¸¢È ¯Å¡ âè½ ¯Å¡; þ¨¾ô âÕõ ¯Å¡> âÕÅ¡ ±ýÚõ ¦º¡øÖÅÐ ¯ñÎ; âýõ>¦Àª÷½Á¢) ±ýÚõ ¦º¡øÖ¸¢§È¡õ.

þó¾¢Â Å¡É¢Âø ¸½ì̸û ãýÚ Å¨¸Â¡É¨Å; ´ýÚ ºó¾¢Ã Á¡Éõ; þý¦É¡ýÚ Ýâ Á¡Éõ; ãýÈ¡ÅÐ ºó¾¢Ã Ýâ Á¡Éõ. Á¡Éõ ±ýÀÐ Á¡É¢ò¾ø (¸½ìÌô §À¡Î¾ø, «ÇŢξø) ±ýÈ Å¢¨É¡øÄ¢ý ÅÆ¢ì ¸¢¨Çò¾ ¦À¨Ãì ÌÈ¢ìÌõ. ¾Á¢ú¿¡ðÊÖõ, §ºÃÄò¾¢Öõ ºó¾¢Ã Ýâ Á¡Éò¨¾§Â À¢ýÀüÚ¸¢§È¡õ. ¬ó¾¢Ãò¾¢ø ºó¾¢ÃÁ¡Éõ ÁðΧÁ À¢ýÀüÈô Àθ¢ÈÐ.

¿¡Ç¡Åð¼ò¾¢ø ºó¾¢ÃÁ¡Éò¾¢ø ÅóÐ §À¡Ìõ Ũèȸ¨ÇÔõ, ÝâÂÁ¡Éò¾¢ø ÅóЧÀ¡Ìõ Ũèȸ¨ÇÔõ ²§¾¡ ´Õ Á¡¾¢Ã¢ì ¸ÄóРŢÃÅ¢î ¦º¡øÖõ §À¡Ð º¢ÄÕìÌ «Ð ÌÆôÀÁ¡¸§Å þÕìÌõ. Á¡ó¾ Å¡úÅ¢ø ´ù¦Å¡Õ þÃÅ¢Öõ ¸¡½Óʸ¢È ¿¢ÄÅ¢ý ¿¸÷ («¾ý §Å¸ò¾¡ø) ¿ÁìÌî ºð¦¼ýÚ ÒÄôÀÎõ. þó¾ ¿¸÷¨Âô À¡÷ìÌõ §À¡Ð, Ýâ ¿¸÷ ´ôÀ£ðÎ «ÇÅ¢ø ¦¸¡ïºõ þبÅ(slow)¡ÉÐ. «¾É¡ø «¨¾ «ùÅÇ× ±Ç¢¾¢ø ¯½Ã ÓÊž¢ø¨Ä.

ӾĢø Á¡¾õ ±ýÈ ¸Õò¾£ð¨¼ô À¡÷ô§À¡õ. Á¡¾õ ±ýÈ ¦º¡ø þý¨ÈìÌô ¦À¡ÐôÀ¨¼Â¡¸ ´Õ month-¨Âì ÌÈ¢ò¾¡Öõ «ó¾î¦º¡øÄ¢ý §Å÷ Á¾¢ (¿¢Ä×) ±ýÈ ¦º¡øÄ¢ø, ¿¢ÄÅ¢ý ¿¸÷¢ø þÕóÐ ¾¡ý ¸¢¨Çò¾Ð. ºó¾¢Ã Á¡Éì ¸½ì¸¢ø ÝâÂÛìÌõ, ÒÅ¢ìÌõ þ¨¼Â¢ø ¯Å¡ (= ¿¢Ä× = ºó¾¢Ãý) ÅóÐ «¨Á ¯Å¡Å¡öò (þÕñÎ §À¡É ºó¾¢Ãý) ¦¾¡¼í¸¢ô À¢ý âè½ ¯Å¡Å¡ö ÅÇ÷óÐ, Á£ñÎõ §¾öóÐ «Îò¾ «¨ÁÔÅ¡ ÅÕõ Ũà ¯ûÇ ¸¡Äò¨¾ ´Õ Á¡¾õ ±ýÚ ÒâóÐ À¢ý «¨¾ò ¾¢í¸û (=¿¢Ä¡) ±ýÚ ¦º¡øÄò ¦¾¡¼í¸¢É¡÷¸û. º¢ò¾¢¨Ãò ¾¢í¸û, ³ôÀº¢ò ¾¢í¸û ±ýÈ ¦º¡ü¸û ±øÄ¡õ þôÀÊ Åó¾¨Å ¾¡ý. ºó¾¢Ã Á¡Éì ¸½ì¸¢ø 30 ¾¢¸Æ¢¸û «¼í¸¢ÂÐ ´Õ ºó¾¢Ã Á¡¾õ «¾¡ÅÐ ´Õ ¾¢í¸û.

Á¡¾õ ±ýÈ ÀÕÅò¨¾ô ÒâóÐ ¦¸¡ñ¼Ð ¿¢ÄÅ¢ý ¿¸÷¡ø ¾¡ý. À¢ýÉ¡ø þó¾î ¦º¡øÄ¢ý ¬ðº¢¨Â §ÁÖõ ¿£ðÊ Ýâ Á¡Éì ¸½ì¸¢Öõ «§¾ ¦º¡ø¨Äô ÀÂýÀÎò¾¢É¡÷¸û. «¾¡ÅÐ, Ýâ Á¡Éì ¸½ì¸¢ø ´Õ ¬ñÊø ÝâÂý ÓØ Åð¼Á¡ö ¿¸÷ž¡öò §¾¡üÈõ «Ç¢ôÀ¨¾ (ÒÅ¢¾¡ý ¯ñ¨Á¡ö Åð¼Á¡ö ¿¸÷ó¾¡Öõ) «ôÀʧ ²üÚì ¦¸¡ñÎ, þó¾ ¿¸÷ò §¾¡üÈò¾¢ø ÀýÉ¢ÃñÊø ´Õ Àí¸¡É 30 À¡¨¸¨Âì ¸¼ì̸¢ýÈ ¸¡Äò¨¾Ôõ ´Õ Á¡¾õ ±ý§È À¢ýÉ¡ø ¦º¡øÄ ÓüÀð¼¡÷¸û; þó¾ Á¡¾ò¨¾ì ¸ø¦ÅðθǢø Å¢¾ôÀ¡öì ÌÈ¢ôÀ¾ü¦¸É »¡Â¢Ú ±ýÈ ¦º¡ø¨Äô ÀÂɡ츢 þÕ츢ȡ÷¸û; ÌõÀ »¡Â¢Ú, Ð¨Ä »¡Â¢Ú ±ý¦ÈøÄ¡õ ¸ø¦ÅðÎì¸Ç¢ø ÅÕõ. þ¨¾ò¾¡ý þý¦É¡Õ Ũ¸Â¢ø ż¦Á¡Æ¢ôÀÎò¾¢ ÀýÉ¢Õ ¬¾¢ò¾÷¸û (»¡Â¢üÈ÷¸Ùõ ¬¾¢ò¾÷¸Ùõ ´Ä¢Â¡ø þ¨½ó¾Å÷¸û; «¨¾ þý¦É¡Õ Ó¨È À¡÷ì¸Ä¡õ) ±ýÚõ «¨Æò¾¡÷¸û. (þôÀÊô ÀÄ ¾Á¢úî ¦º¡ü¸¨Ç ż¦Á¡Æ¢ô ÀÎò¾¢ ¿õÓ¨¼Â ãÄõ ¸¡½¦Å¡ð¼¡Áø ¦¾¡¨Äò¾Ð ¾Á¢Æ¢ø ²Ã¡Çõ.)

þôÀÊ »¡Â¢üÚ Á¡¾í¸Ùõ, ¾¢í¸û Á¡¾í¸Ùõ «ÊôÀ¨¼Â¢ø ¦Åù§ÅÚ §¿Ãô ÀâÁ¡Éò¨¾ì ÌÈ¢ôÀ¨Å. þÅü¨Èô À¢Ã¢òÐ ¯½Õõ ÀÆì¸õ þý¨ÈìÌõ §ºÃÄò¾¢ø þÕ츢ÈÐ. ¿õ ¾Á¢ú¿¡ðÊø ¾¡ý þó¾ô ÀÆì¸ò¨¾ Å¢ðÎ Á¡¾í¸¨Ç ÌÆôÀÁ¡ÉÀÊ ¦ÀÂ÷ Á¡üÈ¢ «¨Æì¸ò ¦¾¡¼í¸¢ Ţ𧼡õ; ¸ÇôÀ¢Ã÷ ¸¡Äò¾¢ø »¡Â¢üÚ Á¡¾í¸¨Ç ¾É¢ô ¦ÀÂ÷¸Ç¡Öõ, ¾¢í¸û Á¡¾í¸¨Ç ¾É¢ô ¦ÀÂ÷¸Ç¡Öõ «¨ÆìÌõ ÅÆì¸õ Å¢ðÎô §À¡ö, »¡Â¢üÚ Á¡¾í¸¨Ç ¾¢í¸û Á¡¾í¸Ç¢ý ¦ÀÂá§Ä§Â «¨ÆìÌõ Å¢ó¨¾Â¡É ÀÆì¸õ ¿õãâø ²üÀðÎô §À¡ÉÐ. (´Õ§Å¨Ç ¸ÇôÀ¢Ã÷¸û Åθ÷¸û - ¸ýɼ, ¬ó¾¢Ãô À̾¢Â¡Ç÷¸û, ºó¾¢Ã Á¡Éò¨¾ì ¸¨¼ôÀ¢ÊôÀÅ÷¸û ±ýÀ¾¡ø ²üÀ𼧾¡ ±ýɧš?) þó¾ Á¡üÈò¾¢ý Å¢¨ÇÅ¡ø ¾Á¢ú¿¡ðÊø §Á Á¡¾ò¨¾ º¢ò¾¢¨Ã ±ýÚõ, ÍÈÅ Á¡¾ò¨¾ ¨¾ ±ýÚõ, Á£É Á¡¾ò¨¾ô ÀíÌÉ¢ ±ýÚõ, þýÛõ þЧÀ¡Ä×õ ¦º¡øÄò ¦¾¡¼í¸¢Å¢ð§¼¡õ. (þí§¸ þÃñΠŨèȸû ¸ÄóÐ ¸¢¼ì¸¢ýÈÉ.) þó¾ì ÌÆôÀõ ¿ÁìÌô ÒâÀð¼¡ø ¾¡ý ¿õÓ¨¼Â ÁÃÒ Å¢Æ¡ì¸Ç¢ý ¦À¡Õû ÒâÂò ¦¾¡¼íÌõ. ¯ñ¨Á¢ø §ºÃÄò¾¡÷ ÀÆì¸õ ¦¾Ã¢ÂÅ¢ø¨Ä¦ÂýÈ¡ø À¨Æ ÁÃÒ¸¨Ç ¿¡õ Á£ð¦¼ÎôÀÐ º¢ì¸Ä¡ö þÕìÌõ. (Ýâ Á¡É Á¡¾í¸¨Ç »¡Â¢üÚ Á¡¾í¸Ç¡ö «¨ÆôÀÐ ¾¡ý ºÃ¢ ±ýÚ ¯½÷óÐ þó¾ì ¸¡Äò ¾É¢ò¾Á¢úò ¾¡Ç¢¨¸¸û «ôÀʧ ÌÈ¢òÐ ÅÕ¸¢ýÈÉ. þ¾ý ¦À¡Õû º¢ò¾¢¨Ã....ÀíÌÉ¢ §À¡ýÈ ¾¢í¸û Á¡¾í¸û ¿ÁìÌ §Åñ¼¡¾¨Å ±ýÚ ¦À¡ÕÇøÄ. «ÅüÈ¢ý ÀÂýÀ¡Î þý¦É¡ÕÅ¢¾õ ±ýÀ¨¾ ¿¡õ ÒâóÐ ¦¸¡ûÇ §ÅñÎõ.) [þó¾ì ¸ðΨà ¦¿Î¸¢Öõ ÒÃ𼡺¢ò ¾¢í¸û ±ýÈ¡ø «Ð ÒÃ𼡺¢ ±ýÈ ¦ÀÂ÷ ¦¸¡ñ¼ ºó¾¢Ã Á¡É Á¡¾õ ±ýÚõ, ¸ýÉ¢ »¡Â¢Ú ±ýÈ¡ø «Ð Ýâ Á¡É Á¡¾õ ±ýÚõ ÒÃ𼡺¢ Á¡¾õ ±ýÈ¡ø ¸ýÉ¢ »¡Â¢üÈ¢üÌ ºó¾¢ÃÁ¡Éô ¦ÀÂâðÎ ¾Á¢ú¿¡ðÊø ÁðÎõ «¨ÆìÌõ ÝâÂî ºó¾¢Ã Á¡É Á¡¾õ ±ýÚ ¦¸¡ûÇ §Åñθ¢§Èý.]

þ§¾ §À¡Ä ÝâÂý ±ØóÐ ¯Â÷óÐ À¢ý Å£úóÐ Á£ñÎõ ±Øõ Ũà ¯ûÇ §¿Ãò¨¾ì ÌÈ¢ì¸, þÃñΠŢ¾Á¡É ¦º¡ü¸û ¦À¡Õû ¿£ðº¢ ¦ÀüÚûÇÉ. ÝâÂý Å¢Øó¾¾¢ø þÕóÐ Á£ñÎõ ±Øõ Ũà ¯ûÇ ¦À¡Ø¨¾ì ÌÈ¢ìÌõ ¦º¡øÄ¡É ¿¡û ±ýÀÐ ¦À¡Õû ¿£ðº¢ ¦ÀüÚ À¸ø/þÃ× þ¨½ó¾ ¦À¡Ø¨¾ì ÌÈ¢ò¾Ð. þ§¾ §À¡Ä ¿¢ÄÅ¢ý 30 À¡¨¸ ¿¸÷ §¿Ãò¨¾ì ÌÈ¢ìÌõ ¦º¡øÄ¡É ¾¢¸Æ¢/¾¢¸¾¢ ¿£ð¼õ ¦ÀüÚ §¾¾¢ ±ýÈ¡¸¢ ÝâÂÉ¢ý À¸ø/þÃ× þ¨½ó¾ ¦À¡Ø¨¾Ôõ ÌÈ¢ò¾Ð. (Å¡É¢Âü ¸¨Ä¡ü¸û þôÀÊì ÌÆôÀò¾¢ø þÕóÐ ÒÆì¸õ ¸¡Ã½Á¡öì Ü÷¨Á ¦ÀüÚûÇÉ.)

Á¡¾í¸ÙìÌõ §Áø «ÎòÐûÇ ¸¡Äõ ¦ÀÕõ¦À¡ØÐ ±ýÚõ þÕÐ(>ÕÐ) ±ýÚõ ¾Á¢Æáø «È¢ÂôÀð¼Ð. þÕÐ ±ýÈ ¦º¡ø żÒÄò¾¢ø ÀÃÅ¢ÂÐ. µÃ¡ñÊý ÀÕÅ ¸¡Äí¸¨Ç ®Ã¢Õ Á¡¾í¸Ç¡öô À¢Ã¢òÐ þǧÅÉ¢ø, §ÅÉ¢ø, ¸¡÷, ܾ¢÷, ÓýÀÉ¢, À¢ýÀÉ¢ ±ýÚ ¬Ú ¦ÀÕõ ¦À¡Ø¾¡¸ ¿õÁÅ÷¸û «¨Æò¾¢Õó¾¡÷¸û. þ¨¾§Â ż¿¡ðÊø Àºó¾ þÕÐ (>źó¾ ÕÐ), ¸ÕÁ þÕÐ (>¸Ã¢‰Á ÕÐ), ÅƢ þÕÐ (>Å÷„ ÕÐ), ¦º¡Ã¢¾ þÕÐ (ºÃò ÕÐ), ̨Áó¾ þÕÐ(>§†Áó¾ ÕÐ), º¢¾È þÕÐ (>º¢º¢Ã ÕÐ) ±ýÚ ¦º¡øÖÅ¡÷¸û. ´ù¦Å¡Õ þÕÐõ þÃñÊÃñÎ Á¡¾í¸û. µÃ¡ñ¨¼ô ¦ÀÕõ¦À¡Ø¾¡öô À¢Ã¢ìÌõ §À¡Ð §Á¨Ä ¿¡ðÊø ¿¡ý¸¡öì ¦¸¡ûÙõ §À¡Ð, ¿õãâø ÁðÎõ («¾É¡ø żÒÄò¾¢Öõ) ¬Ú ¦ÀÕõ¦À¡Øиǡö «È¢Âô Àð¼É.

¬É¡ø þó¾ þÕиû ±ýÈ ¦ÀÕõ¦À¡Øиû þÃñÊÃñÎ Ýâ Á¡¾í¸¨Çì ÌÈ¢ò¾ÉÅ¡, «øÄÐ ºó¾¢Ã Á¡¾í¸¨Çì ÌÈ¢ò¾ÉÅ¡ ±ýÈ¡ø «¨Å Ýâ Á¡¾í¸¨Çò¾¡ý ÌÈ¢ò¾¢Õì¸ §ÅñÎõ ±ýÚ µ÷óÐ ¦º¡øÄÄ¡õ. ÝâÂÁ¡É ¬ñÎ ±ýÀ¨¾ò ¾¢ÕôÀ ¬ñÎ (tropical year) ±ý§È §Á¨ÄÂ÷ ¦º¡øÖÅ¡÷¸û; «¾¡ÅÐ ÒŢ¢ø þÕóÐ Ýâ¨Éô À¡÷ìÌõ §À¡Ð «Ð ÍÈÅò ¾¢ÕôÀò¾¢ø (tropic of capricorn) ¦¾¡¼í¸¢, żìÌ §¿¡ì¸¢ ¿¸÷óÐ ÒÅ¢¿Îì §¸¡ð¨¼Ôõ ¾¡ñÊ ¸¼¸ò ¾¢ÕôÀõ (tropic of cancer) Ũà ÅóÐ À¢ý Á£ñÎõ ¦¾üÌ §¿¡ì¸¢ò ¾¢ÕõÀ¢ ¿¸÷óÐ ÓÊÅ¢ø ÍÈÅò ¾¢ÕôÀò¨¾ò ¦¾¡ÎÅРŨà ¬Ìõ ¸¡Äò¨¾ (´Õ ¾¢ÕôÀì §¸¡ðÊø ¦¾¡¼í¸¢ þý¦É¡Õ ¾¢ÕôÀì §¸¡ð¨¼ò ¦¾¡ðÎ Á£ñÎõ Ó¾ø ¾¢ÕôÀì §¸¡ðÊüÌ ÅóÐ §ºÕõ ¸¡Äò¨¾) ´Õ ¾¢ÕôÀ ¬ñÎ «øÄÐ ÝâÂÁ¡É ¬ñÎ ±ýÚ ¦º¡øÖ¸¢§È¡õ. (ÀÕÅõ À¡÷òÐò ¾¢ÕõÒ¸¢È ¸¡Ã½ò¾¡ø «Ð ¾¢ÕôÀ ¬ñÎ. ¾¢ÕôÀõ ±ýÈ ¦º¡ø turn ±ýÀ¾üÌ þý¨ÈìÌõ ¿¡ðÎôÒÈò¾¢ø ÀÂýÀÎõ ¦º¡ø. turn ±ýÀ¾üÌõ tropic ±ýÀ¾üÌõ ¦ÀÕò¾ §ÅÚÀ¡Î ¸¢¨¼Â¡Ð.)

tropics:
1391, "either of the two circles in the celestial sphere which describe the northernmost and southernmost points of the ecliptic," from L.L. tropicus "of or pertaining to the solstice" (as a noun, "one of the tropics"), from L. tropicus "pertaining to a turn," from Gk. tropikos "of or pertaining to a turn or change, or to the solstice" (as a noun, "the solstice"), from trope "a turning" (see trope). The notion is of the point at which the sun "turns back" after reaching its northernmost or southernmost point in the sky. Extended 1527 to the corresponding latitudes on the earth's surface (23 degrees 28 minutes north and south); meaning "region between these parallels" is from 1837. Tropical "hot and lush like the climate of the tropics" is first attested 1834.

þó¾¢Â Å¡É¢ÂÄ¢ý ÀÊ ¬ñθǢ§Ä ܼ ãýÚ Å¢¾õ ¯ñÎ. ´ýÚ 12 ºó¾¢Ã Á¡¾í¸û «¼í¸¢Â ´Õ ºó¾¢ÃÁ¡É ¬ñÎ. þÐ 354.3670583 ¿¡ð¸¨Çì ÌÈ¢ìÌõ. ºó¾¢Ã Á¡Éò¾¢ø ºó¾¢Ã Á¡¾õ ¾¡ý «ÊôÀ¨¼ «ÄÌ (basic unit). Á¡¾ò¨¾ô ÀýÉ¢Ãñ¼¡ø ¦ÀÕ츢 ÅÕõ ºó¾¢Ã ¬ñÎ ±ýÈ «Ç× ´Õ ÅÆ¢ôÀð¼ ±ñ½Ç× (derived quantity); Ó¾üÀð¼ ±ñ½Ç× (primary quantity)«øÄ.

þÃñ¼¡õ Ũ¸ ¬ñÎ ±ýÀÐ ÒŢ¢ø þÕóÐ Ýâ¨ÉÔõ «¾ý À¢ýÒĨÉÔõ À¡÷òÐô ¦À¡Õò¾¢ì ¦¸¡ñÎ À¢ý Ýâ ¿¸÷´Õ Åð¼õ ÓÊó¾ À¢ý, «§¾ ¦À¡Õò¾õ ÅÕõ Ũà ¸¡ò¾¢ÕóÐ ¿¡ð¸¨Çì ¸½ì¸¢ÎÅÐ. þó¾ô ¦À¡Õò¾õ 365.24219878 ¿¡ð¸ÙìÌ ´ÕÓ¨È ¿¼ìÌõ. þôÀÊô ¦À¡Õò¾õ ¿¼ìÌõ §¿Ãõ µ÷ ¬ñÎ ±ÉôÀÎõ. Ýâ Á¡Éò¾¢ø ¬ñÎ ±ýÀо¡ý Ó¾üÀð¼ ±ñ½Ç×; Á¡¾õ ±ýÀÐ þí§¸ ÅÆ¢ôÀð¼ ±ñ½Ç×; Ýâ Á¡Éò¾¢ý ÀÊ ¯ûÇ ¬ñ¨¼î Ýâ ¬ñÎ ±ýÚ þó¾¢Â Å¡É¢ÂÄ¢Öõ, ¾¢ÕôÀ ¬ñÎ (tropical year) ±ýÚ §Á¨Ä Å¡É¢ÂÄ¢Öõ ÌÈ¢ôÀ¢ÎÅ¡÷¸û.

ãýÈ¡ÅРӨȢø ÝâÂÛìÌ Á¡È¡ö, §ÅÚ ²§¾Ûõ ´Õ Å¢ñÁ£¨É ±ÎòÐì ¦¸¡ñÎ «ó¾ Å¢ñÁ£ý ¿¡õ «ÊôÀ¨¼Â¡ö ±ÎòÐì ¦¸¡ñ¼ 27 Å¢ñÁ£ý Üð¼í¸§Ç¡Î ±ôÀÊô ¦À¡Õóи¢ÈÐ, Á£ñÎõ ´Õ ÓØ Åð¼ ¿¸÷ìÌô À¢ÈÌ «§¾ ¦À¡Õò¾õ ±ò¾¨É ¿¡Ç¢ø ÅÕ¸¢ÈÐ ±ýÚ À¡÷ôÀ¡÷¸û. þó¾ô ¦À¡Õò¾õ 365.25636556 ¿¡ð¸ÙìÌ ´ÕÓ¨È ¿¼ìÌõ. þó¾ §¿Ãò¨¾ µ÷ ¬¾¢¨Ã ¬ñÎ ±ýÚ ¦º¡øÖÅ¡÷¸û. (¬¾¢¨Ã - astra = Å¢ñÁ£ý; ÌÈ¢ôÀ¡¸ ¿õ ¾¢ÕÅ¡¾¢¨Ã Á£ý ±ýÈ Å¢¾ôÒî ¦º¡ø§Ä ¦À¡Ð¨Áô ¦ÀÂáö ¿£ðº¢ ¦ÀüÈ¢Õ츢ÈÐ. ¾¢ÕÅ¡¾¢¨Ã¨Âî º¢ÅÛìÌ ¯Ã¢Â¾¡öî ¦º¡ýÉÐ þíÌ ¿¢¨É× ÜÈò ¾ì¸Ð; ¬¾¢¨Ã ¬ñÎ sideral year ±ýÚ §Á¨Ä ¦Á¡Æ¢¸Ç¢ø ¦º¡øÄô ÀÎõ)

¬¾¢¨Ã ¬ñÊüÌõ, Ýâ ¬ñÊüÌõ þ¨¼§Â ¦Á¡ò¾ ¿¡ð¸Ç¢ø º¢È¢Ð §ÅÚÀ¡Î ¯ñÎ. ¬¾¢¨Ã ¬ñÊý ¦¾¡¼ì¸õ ±ýÀÐ Ü÷óÐ ¸ÅÉ¢ò¾¡ø Á¡üÈõ þøÄ¡Ð ´§Ã ¿¡Ç¢ø þÕôÀÐ. ¬É¡ø Ýâ ¬ñÊý ¦¾¡¼ì¸§Á¡ ¦¸¡ïºõ ¦¸¡ïºÁ¡ö Óý ¿¸÷óÐ ¦¸¡ñ§¼ þÕ츢ÈÐ. ÒŢ¢ý ¿¸÷¨Âô À¡÷츢ýÈ À¡÷¨Å¡Ç÷ ÒŢ¢ø §Áø þøÄ¡Áø Å¡É¢ø þÕóÐ À¡÷ò¾¡ø ¬¾¢¨Ã ¬ñÎ ±ýÀо¡ý ºÃ¢Â¡¸ þÕìÌõ. ²¦ÉýÈ¡ø ÒÅ¢ìÌ ¾ýÛÕð¼ø (rotation), ÅÄÂõ (revolution) §À¡¸ ¸¢ÚÅ¡ð¼õ (gyration), ¦¿üÈ¡ð¼õ (nutation)±ýÈ þýÛõ þÕ þÂì¸í¸û þÕ츢ýÈÉ. þ¨Å§Â Ýâ ¬ñÊý ¦¾¡¼ì¸ò¨¾§Â Óý §¿¡ì¸¢ ¿¸÷ò¾¢ì ¦¸¡ñÎ þÕ츢ýÈÉ. ¬¾¢¨Ã ¬ñÊüÌõ, Ýâ ¬ñÊüÌõ þ¨¼§Â §ÅÚÀ¡ð¨¼ì ¸½ì¸¢ð¼¡ø Ýâ ¬ñÎ ¬¾¢¨Ã ¬ñ¨¼ì ¸¡ðÊÖõ 0.01416678 ¿¡ð¸Ç¢ý Óý§É§Â ÓÊóÐÅ¢Îõ. þý¦É¡Õ Å¢¾Á¡öô À¡÷ò¾¡ø, ¾¢ÕôÀ ¬ñÊý ¿¸÷ ¬¾¢¨Ã ¬ñÊý ¿¸÷¨Âì ¸¡ðÊÖõ 0.01396291 À¡¨¸Â¢ø ¿¸÷ Üξġö þÕìÌõ. «Ð ÁðÎÁøÄ; ´ù¦Å¡Õ ¬ñÎõ þó¾ ¿¸÷ §ÅÚÀ¡Î Óý¦ºýÚ ¦¸¡ñ§¼ þÕìÌõ; §º÷òÐ ¨ÅòÐô À¡÷ìÌõ §À¡Ð, 71.61832226 ¬ñθǢø þó¾ ¿¸÷ 1 À¡¨¸Ôõ, 25782.59601 ¬ñθǢø þó¾ ¿¸÷ 360 À¡¨¸Â¡ö Ţĸ¢ ¿¸÷óÐ þÕìÌõ. þôÀÊò ¾¢ÕôÀ ¬ñÎ, ¬¾¢¨Ã ¬ñÊÄ¢ÕóРŢĸ¢ Óý¦ºøŨ¾ò ¾¡ý ÒÈÄÅõ (precession) ±ýÚ Å¡É¢ÂÄ¢ø ¦º¡øÖÅ¡÷¸û.

þó¾ô ÒÈÄÅò¨¾ì ¸½ì¸¢¼¡Áø, áüÈ¡ñÎ ¸½ì¸¡É ¿¡ðÎ ÅÃÄ¡Ú¸¨ÇÔõ, ÌÓ¸ ÁÃÒ¸¨ÇÔõ ºÃ¢Â¡ÉÀÊ ÒâóÐ ¦¸¡ûÇ ÓÊ¡Ð. ÒÈÄÅõ ¸¡Ã½Á¡ö ÝâÂÁ¡É ¬ñÊý ¦¾¡¼ì¸Óõ, ¦ÀÕõ¦À¡ØиǢý ¦¾¡¼ì¸í¸Ùõ, þó¾ì ¸¡Äò¾¢ø ¸¢ð¼ò¾ð¼ 24.35269482 ¿¡ð¸û ¾ûÇ¢ô §À¡öÅ¢ð¼É. ¸¡ð¼¡¸ ºí¸õ ÁÕŢ ¸¡Äò¾¢ø (AD 285) þÕó¾ ¸½ì¸¢ý ÀÊ ²ôÃø - 14ø ¦¾¡¼í¸ §ÅñÊ þǧÅÉ¢ø ÀÕÅõ þô¦À¡ØÐ Á¡÷îÍ 21-§Ä§Â ¦¾¡¼í¸¢ Ţθ¢ÈÐ. (¬É¡Öõ ¬ñÎò ¦¾¡¼ì¸ò¨¾ þýÛõ À¨Æ ÀÆì¸ò¨¾ ¨ÅòÐ ²ôÃø 14 ±ý§È ¦º¡øÄ¢ÅÕ¸¢§È¡õ.) þ§¾ §À¡Ä ¦ºô¼õÀ÷ 22 §Ä§Â ܾ¢÷ ¸¡Äõ þô¦À¡ØÐ ¦¾¡¼í¸¢Å¢Î¸¢ÈÐ. þÕó¾¡Öõ ¿¡õ À¨Æ ӨÈôÀÊ Ü¾¢÷ ¸¡Äò¨¾ «ì§¼¡À÷ 16 - ø ¦¾¡¼íÌž¡öî ¦º¡øÄ¢ì ¦¸¡ñÎ þÕ츢§È¡õ.

ÓýÉ¡ø ¸¡Äí¸û ±ýÈ ¸ðΨÃò ¦¾¡¼Ã¢ý 5 - ¬õ «¾¢¸¡Ãò¾¢ø ÒÈò¦¾¡ö §¿Ãõ (ô羡„ §¿Ãõ), ÒÈò¦¾¡ö ¿¡û (ô羡„ ¿¡û), ÒÈò¦¾¡ö Á¡¾õ (ô羡„ Á¡¾õ) ÀüÈ¢î ¦º¡øĢ¢Õó§¾ý. ÒÈò¦¾¡ö Ýâ Á¡¾õ ¾¡ý ÒÈò¦¾¡ö¨Â>ÒÈò§¾¡¨Â>ÒÈò§¾¡º¢>ÒÃ𼡺¢ ±ýÚ ¬Ìõ. (²ü¸É§Å ¦º¡ýÉÐ §À¡ø ¸ýÉ¢ »¡Â¢ü¨Èò ¾Á¢ú¿¡ðÊø ÒÃ𼡺¢ Á¡¾õ ±ýÚ ¦º¡øÖ¸¢§È¡õ.) ¦¾¡öÂõ ±ýÀÐ þÕ¨Ç, Á¡¨Ä §¿Ãò¨¾ì ÌÈ¢ìÌõ. ÒÈò¦¾¡ö¨Â ±ýÀÐ þÕÙìÌî ºüÚ Óó¾¢Â ¿¢¨Ä. ¿¡û ¸½ì¸¢ø À¡÷ò¾¡ø þÕû ±ýÛõ ¦¾¡öÂõ ÝâÂý Á¨Èó¾¾¢üÌô À¢ý ¯ûÇ §¿Ãõ. Á¡¾ì ¸½ì¸¢ø À¡÷ò¾¡ø ¿¢ÄÅ¢ý ´Ç¢ §¾öóÐ ÅÕÅÐ ´Õ ¦¾¡öÂõ. ¬ñÎì ¸½ì¸¢ø À¡÷ò¾¡ø, ܾ¢÷ ¸¡Äõ ¦¾¡¼íÌÅÐ þÕû ÝúžüÌ ´ôÀ¡ÉÐ. ÒÃ𼡺¢ Á¡¾õ ±ýÀÐ µ÷ ¬ñÊý ãýÈ¡õ ¦ÀÕõ¦À¡Ø¾¡É ¸¡÷¸¡Äò¾¢ý ¸¨¼º¢Â¡Ôõ, ܾ¢÷¸¡Äõ ¦¾¡¼íÌžüÌ ºüÚ ÓýÀ¡Ôõ ¯ûÇ Á¡¾õ. ±É§Å ¦¾¡öÂõ ¦¾¡¼íÌžüÌ ÓýÛûÇ ÒÈò¦¾¡ö Á¡¾õ. ܾ¢Ã¢ý Ó¾ø ÝâÂî ºó¾¢Ã Á¡¾õ «öôÀ¾¢>«öôÀº¢ Á¡¾õ ¬Ìõ. (§Áö, ¡, ¡Π±ýÀ¦¾øÄ¡õ ¬ð¨¼ì ÌÈ¢ìÌõ ¦º¡ü¸û. «öôÀ¾¢ ±ýÀРż¦Á¡Æ¢Â¢ø «ƒÀ¾¢>«…¤À¾¢ ±ýÚ ¬Ìõ. Á£ñÎõ ¾Á¢úôÀÎòО¢ø «¨¾ «ÍÀ¾¢ ±ýÚ ¦º¡ø֧šõ. «ƒ¸õ ±ýÈ¡ø ż¦Á¡Æ¢Â¢Öõ ¬Î ±ýÈ ¦À¡Õû ¾¡ý. ¾Á¢Æ¢ø ºó¾¢ÃÁ¡Éì ¸½ì¸¢ø ¯ûÇ ¦À¨à ÝâÂî ºó¾¢Ã Á¡É Á¡¾ò¾¢üÌô ¦ÀÂáö «¨Æ츢§È¡õ.)

þÉ¢ «Îò¾ À̾¢Â¢ø Á¸¡÷ §¿¡ýÀ¢üÌ Åէšõ.

«ýÒ¼ý,
þáÁ.¸¢.

Wednesday, December 01, 2004

செயேந்திரர்

தீபாவளி நாளின் மாலையில் இருந்து காஞ்சி செயேந்திரருக்கு நடக்கும் நிகழ்ச்சிகளைப் படித்துக் கொண்டும் பார்த்துக் கொண்டும் இருந்தேன். முதலில் பார்க்கும் போது ஒன்றும் புரியவில்லை; என்ன நடக்கிறது என்ற ஒரு திகைப்பும், பின் வியப்பும், ஒரு மாதிரி பொருந்தாத் தன்மையும் அடுத்தடுத்துத் தோன்றின. நடவடிக்கையின் ஆழம், அகலம் தெரியாமல் சட்டென்று கருத்துக் கூறுதல் தவறு, எனவே கொஞ்ச காலம் பொறுத்திருப்போம் என்று எண்ணி அமைந்திருந்தேன்.

சங்கராச்சரியார் செயேந்திரர் மேல் ஒரு பெரும் மதிப்பை நான் என்றும் கொண்டதில்லை என்றாலும் (நேரே பார்த்திருந்த ஒரு சில நிகழ்ச்சிகள் அவர்மேல் எனக்கு மதிப்புக் கொண்டு சேர்க்கவில்லை. அவரைக் குறைசொல்லத் தொடங்கினால் பலவற்றைச் சொல்ல முடியும் தான்.), கொலை வழக்கில் முதற் குற்றவாளியாகச் சொல்லப்படும் அளவிற்கு தரம் குறைந்து இருப்பாரா என்பதில் நான் கொஞ்சம் திகைத்துத் தான் போனேன். (இன்னும் குற்றம் நிருவிக்கப் படவில்லை; இப்பொழுது அரசு வழக்கறிஞரும் காவல் துறையும் செய்திருப்பது குற்றம் சாட்டுதலே.) செய்திகள் படிக்கப் படிக்க ஆழம் போய்க் கொண்டிருப்பதைப் பார்த்தால், மடத்தின் நடவடிக்கைகள் பெரிதும் புரையோடிப் போயிருக்கிறதோ என்றே உணரத் தலைப்படுகிறேன்.

(இந்த மடல் படிப்போருக்கு நான் ஒன்று சொல்லக் கடமைப் பட்டவன். நான் ஆதி சங்கரரின் கருத்தை ஏற்றவனில்லை. மாற்றுக் கருத்து உள்ளவன் என்றாலும் அல்லிருமை என்னும் அத்வைதம் ஒரு நெறி என்று படிக்கக் கற்றவன். இந்த நிலையில் இருந்தே நான் இந்த நிகழ்வினை நோக்குகின்றேன்.)

"பரமான்மா, உய்வான்மா என்று தனித்தனியாக ஓர் இருமை நிலை கிடையாது (அல் இருமை = அல் துவைதம் = அத்துவைதம் = இருமை அல்லாத நிலை); இரண்டும் ஒன்றுதான்; உலகில் இப்படித் தனித்துத் தெரியும் ஒவ்வொன்றும் கண்ணுக்கெதிரே தோன்றும் மாயத்தோற்றமே, உண்மை அல்ல; இறைவன் உன்னுள்ளேயே உள்ளான்" என்று சொல்லப் புகுந்த கொள்கையின் முன்னோடியார் இப்படி ஒரு நிலைக்கு வந்து சேர்ந்தது கூட இன்னொரு மாயத் தோற்றம் போலவே காட்சி அளிக்கிறது.

செயேந்திரர் எல்லா சுமார்த்தர்களுக்கும் அல்லாவிட்டாலும், குறிப்பிட்ட அளவு சுமார்த்தப் பெருமான்களின் (brahmins) குருவாய் இருப்பவர். (ஆதி சங்கரர் 4 மடங்களை ஏற்படுத்தினார், அந்த நாலு மடங்களில் ஒன்றான சிருங்கேரி மடத்தின் கும்பகோணக் கிளைதான் நூறு, நூற்றைம்பது ஆண்டுகளுக்கு முன்னால் காஞ்சிக்கு மாற்றலாகியது என ஒருசிலரும், இல்லையில்லை இது ஆதிசங்கரரே ஏற்படுத்திய ஐந்தாவது மடம், ஆதிசங்கரரே இதன் முதல் பீடத் தலைவர் என்றும் சிலர் மறுத்துக் கூறுவது உண்டு. அந்தச் சிக்கலுக்குள்ளும், காஞ்சி மடத்தின் பழமைக்குள்ளும் இப்பொழுது போகவேண்டாம். ஆனால் காஞ்சி மடத்திற்கும் சிருங்கேரி மடத்திற்கும் உள்ள சில அடிப்படைப் பிளவுகளாலும், பழைய பெரியவருக்கும், இவருக்கும் இடையே இருந்த நிலை-வேறுபாடுகளாலும் சுமார்த்த பார்ப்பனர்களிலேயே பலரும் இவரைக் கேள்வி கேட்டுக் கொண்டு இருந்தனர். இந்த நிலை நீறு பூத்த நெருப்பாகவே நெடுங்காலம் இருந்திருக்கிறது. நெருப்பு மடத்திற்குள்ளும் கனன்று கொண்டு இருந்திருக்கிறது என்று பலரும் சொன்னது உண்டு.)

சங்கர மடத்தின் தலைவர் என்பவருக்கு பொதுவாக இரண்டு பொறுப்புக்கள் உண்டு. முதலாய பொறுப்பு அல்லிருமைக் (அத்துவைதம்) கொள்கையை மக்களிடையே பரப்புவது. (அல்லிருமைக் காரர்களுக்கு கோயில் ஒரு பொருட்டல்ல; இன்னும் சொல்லப் போனால், கோயில் வழிபாடு என்பதை மீறி வரவேண்டும் என்று சொல்லக் கூடியவர்கள் அவர்கள். சிவ நெறி, விண்ணெறி அல்லாத வேத நெறியை ஊரெங்கும் பரப்பக் கடமை பூண்டவர்கள் அவர்கள்.) இரண்டாவது மடத்தின் சொத்துக்களை நிர்வகித்து வருவது. இரண்டு பொறுப்பையும் செய்யும் போது தாமரை இலைத் தண்ணீரின் மனப்பாங்கு மடத்தலைவருக்கு வந்து சேரவேண்டும். செயேந்திரர் எந்த அளவு முதற்பொறுப்பை நிறைவேற்றிக் கொண்டிருந்தார் என்பதில் பலருக்கும் கேள்விகள் உண்டு. இப்பொழுது இரண்டாவது பொறுப்பு அவரைப் பெரிய சிக்கலுக்குக் கொண்டு வந்திருக்கிறது.

பெருமான்களில் அல்லிருமைக் கொள்கையராயும் அல்லாமல், சிவநெறியாளராயும் அல்லாமல், விண்ணவ நெறியில் பிணைந்திருந்தவர்கள் அவரை ஒரு மாற்றாளராகவே பார்த்து வேறுபாடு கொள்வதும் உண்டு. (குறிப்பாக பஞ்சராத்திர ஆகமமுறைகளில் மூக்கை நுழைத்து திருப்பதிக் கோயிலொழுகு முறையில், சில மண்டபங்களை இடித்து இன்னும் ஒரு பெரிய சுற்று உருவாக்கலாம் என்று மாற்றம் சொன்னதும், விண்ணவ நெறித் தலைவர்களை ஒதுக்கி வைக்குமாப்போல பல கருத்துக்கள் சொல்லியதும் பல விண்ணவர்களுக்கு பிடிக்காமல் இருந்தது.) பெருமான்கள் அல்லாத மற்றவர்க்கு அவர் ஒரு நெருக்கம் இல்லாத விந்தையானவர். அவரோடு பலருக்கும் கருத்து வேறுபாடு; சில இடங்களில் கருத்து வேறுபாடு முற்றிப் பிணக்கே உண்டு; அவரைக் குறை சொன்னவர்கள் பலர். அது அரசியலில் மட்டும் இல்லை. ஆன்மீகத்தோடு மட்டும் நின்று கொள்ளாமல் அரசியலில் அவர் நுழைந்தது, குறிப்பாக இந்துத்துவ அரசியலில் நுழைந்தது ஆன்மீகம் சார்ந்த பல தமிழர்களுக்கு அவரைப் பிறனாக்கியது. கரூர் கோயிலின் குடமுழுக்கைத் தமிழில் செய்வதற்கு மாற்றுக் கருத்துச் சொல்லியது, மற்ற சிவநெறி மடங்களின் முனகலை எதிர்கொண்டது, கைம்பெண்கள், அலுவற் பெண்கள் ஆகியோர் பற்றிச் சொன்னது, ஆகியவை எல்லாம் "என்னது இவர் இப்படி?" என்னுமாப் போல் பலபேரின் நெற்றியைக் குறுக வைத்தது. அண்மைக் காலத்தில் தாழ்ந்தோருக்கு ஆதரவாய்ச் சில வாக்குகள் சொன்னாலும், சில செய்கைகள் செய்தாலும், அது உள்ளார்ந்த உரைப்பா, அல்லது வெறும் அரசியல்வாதித்தனமா என்ற கேள்வியையும் மக்கள் இடையே எழுப்பியது. இத்தனைக்கும் முந்தைய பெரியவர் குமுக மாற்றம் பற்றிச் சொல்லாமல் ஒரு பழமை நோக்கில் இருந்தவர்தான். அந்தக் கருத்துக்கள் ஏற்றுக் கொள்ள முடியாதவை தான். இருந்தாலும் யாரைக் கேட்டாலும் அவர்மேல் ஒரு மதிப்பு இருந்ததை உணர முடிகிறது. மாறாகச் செயேந்திரரோ சில மாற்றங்களை மடத்தின் நடவடிக்கையில் கொண்டு வந்தவர். இருந்தாலும், இவர்மேல் மதிப்புக் கூடியதாய் இந்த நிகழ்விற்குச் சற்று முன்னர் கூட பலரும் சொல்லக் காணோம்.

இந்த நிலையில் தான் இப்படிக் கொலை பற்றிய ஒரு குற்றச்சாட்டு எழுந்திருக்கிறது. குற்றச்சாட்டைப் பற்றி நான் எழுத முன்வரவில்லை. என் கேள்வி மடத்தின் அடிநிலை பற்றியது.

ஒரு துறவி என்பவர் மடத்திற்குச் சொத்துச் சேர்ப்பதிலும், பள்ளி, வேதபாடசாலை, மருத்துவ நிலையங்கள் என அறச்சாலைகள் வைப்பதில் ஈடுபட முற்பட்டு பணம், பணம், என்று அலைந்து "அதை இங்கு வாங்கு, இதை இங்கு போடு, இந்த நிலத்தை வாங்கு, இதை விற்றுவிடு" என்று உலகியற் செயல்களிலேயே துயில் நேரம் போக மற்ற நேரங்களில் மூழ்கி இருந்தால், "மடத்தின் அடித்தளம் சரிவதைத் தடுக்க முடியுமா?" என்ற கேள்வி எழுகிறது. சொத்து என்ற சிந்தனை (பழைய பெரியவர் காலத்தில் ரூ. 40 கோடி பெறுமான மடம் இன்றைக்கு ரூ. 2600 கோடிக்குச் சொத்து உள்ளதாக இருக்கிறது. செயேந்திரரே சொத்துப் பெருகியதைப் பெருமையாகச் சொல்லிக் கொள்கிறார்.) வந்த பிறகு அது தன்னை அறியாமல் அரசியல் களத்துள்ளும், மற்ற அரசியலாரோடு போட்டி போட்டுக் கொண்டும், அவர்களுடைய நெறிமுறையையே கையாள வைத்தும் செய்து விடுமே என்று தோன்றுகிறது. மடத்தை நிர்வகிக்கும் மானகை (management)யிலும் கூட இவர் தத்துப் பித்தென்று இருந்திருக்கிறார். மொத்தத்தில் இந்த மடம் ஒரு அரசியல் களமாய் ஆகிப் போனது. அரசியல் களத்தில் வேண்டாதவரைத் தட்டி வைப்பதும், மிரட்டி வைப்பதும், இன்னும் ஆளையே தீர்க்கும் அளவிற்குப் போவதும் இயல்பானது. இப்படி மடத்திற்கும் கட்சிகளுக்கும் வேறுபாடு இல்லாமல் போனது ஒரு கொடுமை அல்லவா? நாம் எல்லாம் அம்மாவையும், அய்யாவையும் பற்றிக் குறைசொல்லிக் கொண்டிருப்பதில் பயனில்லை. முட்டையில் இருந்து குஞ்சு வருவது உள்ளே நடக்கும் மாற்றத்தால். அது வெய்யிலில் பொரிக்கப் பட்டது என்பது அடுத்த நிலை. அரசியலார் அப்படித்தான் நடப்பார்கள். மடம் ஏன் அரசியலோடு தோழமை பூண்டது?

துறவென்று வந்தபிறகு எதைத் துறக்கிறார்கள்? குடும்பம், ஆசை, சொகம் எல்லாவற்றையும் அல்லவா துறக்க வேண்டும்? அப்புறம் என்ன சொந்தக்காரர்கள் தொடர்பு நீளுவது? மடத்திற்குள் சொந்தக்காரர்கள் வந்து கூடினால் அப்புறம் துறவாவது, ஒன்றாவது? என்றைக்குச் சொந்தம் உள்நுழைந்ததோ, அன்றே மடம் ஆட்டம் கண்டுவிடும் அல்லவா? இதில் பெரியவர், சின்னவர் என இரண்டு சங்கரர்களும் தவறிழைத்திருக்கிறார்கள். இளையவர் பற்றியும் விவரம் தெரிந்தவர்கள் ஏகப்பட்ட குறை சொல்லுகிறார்கள். குறிப்பாக, பெரியவரைப் பற்றிய இளையவருடைய மோனம் எத்தனையோ நமக்கு உணர்த்துகிறது. இருவருக்கும் இடையே ஒரு பங்காளிச் சண்டையே இருந்திருக்குமோ என்று கூட நமக்குத் தோன்றுகிறது. அடுத்தவரின் மேல் நம்பிக்கை நமக்கு வரவில்லை. பழைய பெரியவரின் கடைசிக் காலந் தொட்டு, இன்னும் சொன்னால் செயேந்திரர் தலைக்காவிரிக்குப் போனதில் இருந்து ஒரு இறுக்கமான சூழ்நிலை மடத்திற்குள் இருந்திருக்கிறது. அங்கு எல்லாமே ஒரு சடங்காய் இருந்திருக்கிறது. அடிப்படையில் ஒரு பிழை என்றோ ஏற்பட்டு, இன்று விடிந்திருக்கிறது. (பிழையின் ஒரு எடுத்துக் காட்டு: துறவு கொண்டு 50 ஆண்டு என்று விழாக் கொண்டாடியது. சென்னைப் பல்கலைக் கழக நூற்றாண்டு விழா மண்டபத்தில் கொண்டாடிய அந்த விழாவே ஒரு முரண்தொடை. துறவு கொண்டதிற்கு ஒரு விழா என்பது மடத்தனமாகத் தெரிகிறது.)

அல்லிருமை பற்றி ஒரு மணிநேரமாவது செயேந்திரர் பேசிக் கேட்டு எத்தனை நாளாயிருக்கும்? இவர் வேதம் படித்தது எல்லாம் என்னவாயிற்று? வெறுமே சடங்குகளிலும், பாத பூசைகளிலும், மலர்முடிகளிலும், தங்கச் சொரிவுகளிலும், சொத்து-நில ஆவணங்களிலும் இன்னபிறவற்றிலும் மூழ்கி ஆதி சங்கரரின் அடிப்படைக் கருத்தையே தொலைத்து முழுகிவிட்டாரே? அல்லிருமையை ஊருலகத்தில் பரப்ப முற்பட்டவர் இப்படிச் சிக்கி அலைக்கழிவது கொஞ்சம் விந்தையாக, ஏன் வருத்தமாகக் கூட, இருக்கிறது.

சாமியார்கள் பற்றிய மயக்கம் நம் மக்களுக்கு என்று போகுமோ தெரியவில்லை. எனக்கென்னமோ, இந்தச் சீரழிவின் வித்து நெடுங்காலம் முன்னமே ஏற்பட்டுவிட்டது என்றே தோன்றுகிறது. இரா. முருகன் சொன்னது போல் செயேந்திரர் மீண்டும் இருள்நீக்கி மகாதேவன் சுப்பிரமணியன் என்று ஆகுவதே சிறப்பு.

அன்புடன்,
இராம.கி.

In TSCII:

¾£À¡ÅÇ¢ ¿¡Ç¢ý Á¡¨Ä¢ø þÕóÐ ¸¡ïº¢ ¦º§Âó¾¢ÃÕìÌ ¿¼ìÌõ ¿¢¸ú¸¨Çô ÀÊòÐì ¦¸¡ñÎõ À¡÷òÐì ¦¸¡ñÎõ þÕó§¾ý. ӾĢø À¡÷ìÌõ §À¡Ð ´ýÚõ ÒâÂÅ¢ø¨Ä; ±ýÉ ¿¼ì¸¢ÈÐ ±ýÈ ´Õ ¾¢¨¸ôÒõ, À¢ý Å¢ÂôÒõ, ´Õ Á¡¾¢Ã¢ ¦À¡Õó¾¡ò ¾ý¨ÁÔõ «Îò¾ÎòÐò §¾¡ýÈ¢É. ¿¼ÅÊ쨸¢ý ¬Æõ, «¸Äõ ¦¾Ã¢Â¡Áø ºð¦¼ýÚ ¸ÕòÐì ÜÚ¾ø ¾ÅÚ, ±É§Å ¦¸¡ïº ¸¡Äõ ¦À¡Úò¾¢Õô§À¡õ ±ýÚ ±ñ½¢ «¨Áó¾¢Õó§¾ý.

ºí¸Ã¡îºÃ¢Â¡÷ ¦º§Âó¾¢Ã÷ §Áø ´Õ ¦ÀÕõ Á¾¢ô¨À ¿¡ý ±ýÚõ ¦¸¡ñ¼¾¢ø¨Ä ±ýÈ¡Öõ (§¿§Ã À¡÷ò¾¢Õó¾ ´Õ º¢Ä ¿¢¸ú¸û «Å÷§Áø ±ÉìÌ Á¾¢ôÒì ¦¸¡ñÎ §º÷ì¸Å¢ø¨Ä. «Å¨Ãì ̨Ȧº¡øÄò ¦¾¡¼í¸¢É¡ø ÀÄÅü¨Èî ¦º¡øÄ ÓÊÔõ ¾¡ý.), ¦¸¡¨Ä ÅÆ츢ø Ó¾ü ÌüÈšǢ¡¸î ¦º¡øÄôÀÎõ «ÇÅ¢üÌ ¾Ãõ ̨ÈóÐ þÕôÀ¡Ã¡ ±ýÀ¾¢ø ¿¡ý ¦¸¡ïºõ ¾¢¨¸òÐò ¾¡ý §À¡§Éý. (þýÛõ ÌüÈõ ¿¢ÕÅ¢ì¸ô À¼Å¢ø¨Ä; þô¦À¡ØÐ «ÃÍ ÅÆì¸È¢»Õõ ¸¡Åø ШÈÔõ ¦ºö¾¢ÕôÀÐ ÌüÈõ º¡ðξ§Ä.) ¦ºö¾¢¸û ÀÊì¸ô ÀÊì¸ ¬Æõ §À¡öì ¦¸¡ñÊÕôÀ¨¾ô À¡÷ò¾¡ø, Á¼ò¾¢ý ¿¼ÅÊ쨸¸û ¦ÀâÐõ Ҩç¡Êô §À¡Â¢Õ츢ȧ¾¡ ±ý§È ¯½Ãò ¾¨ÄôÀθ¢§Èý.

(þó¾ Á¼ø ÀÊô§À¡ÕìÌ ¿¡ý ´ýÚ ¦º¡øÄì ¸¼¨Áô Àð¼Åý. ¿¡ý ¬¾¢ ºí¸Ãâý ¸Õò¨¾ ²üÈÅÉ¢ø¨Ä. Á¡üÚì ¸ÕòÐ ¯ûÇÅý ±ýÈ¡Öõ «øÄ¢Õ¨Á ±ýÛõ «ò¨Å¾õ ´Õ ¦¿È¢ ±ýÚ ÀÊì¸ì ¸üÈÅý. þó¾ ¿¢¨Ä¢ø þÕó§¾ ¿¡ý þó¾ ¿¢¸úÅ¢¨É §¿¡ì̸¢ý§Èý.)

"ÀÃÁ¡ýÁ¡, ¯öÅ¡ýÁ¡ ±ýÚ ¾É¢ò¾É¢Â¡¸ µ÷ þÕ¨Á ¿¢¨Ä ¸¢¨¼Â¡Ð («ø þÕ¨Á = «ø Шžõ = «òШžõ = þÕ¨Á «øÄ¡¾ ¿¢¨Ä); þÃñÎõ ´ýÚ¾¡ý; ¯Ä¸¢ø þôÀÊò ¾É¢òÐò ¦¾Ã¢Ôõ ´ù¦Å¡ýÚõ ¸ñÏ즸¾¢§Ã §¾¡ýÚõ Á¡Âò§¾¡üȧÁ, ¯ñ¨Á «øÄ; þ¨ÈÅý ¯ýÛû§Ç§Â ¯ûÇ¡ý" ±ýÚ ¦º¡øÄô ÒÌó¾ ¦¸¡û¨¸Â¢ý Óý§É¡Ê¡÷ þôÀÊ ´Õ ¿¢¨ÄìÌ ÅóÐ §º÷ó¾Ð ܼ þý¦É¡Õ Á¡Âò §¾¡üÈõ §À¡Ä§Å ¸¡ðº¢ «Ç¢ì¸¢ÈÐ.

¦º§Âó¾¢Ã÷ ±øÄ¡ ÍÁ¡÷ò¾÷¸ÙìÌõ «øÄ¡Å¢ð¼¡Öõ, ÌÈ¢ôÀ¢ð¼ «Ç× ÍÁ¡÷ò¾ô ¦ÀÕÁ¡ý¸Ç¢ý (brahmins) ÌÕÅ¡ö þÕôÀÅ÷. (¬¾¢ ºí¸Ã÷ 4 Á¼í¸¨Ç ²üÀÎò¾¢É¡÷, «ó¾ ¿¡Ö Á¼í¸Ç¢ø ´ýÈ¡É º¢Õí§¸Ã¢ Á¼ò¾¢ý ÌõÀ§¸¡½ì ¸¢¨Ç¾¡ý áÚ, áü¨ÈõÀÐ ¬ñθÙìÌ ÓýÉ¡ø ¸¡ïº¢ìÌ Á¡üÈÄ¡¸¢ÂÐ ±É ´Õº¢ÄÕõ, þø¨Ä¢ø¨Ä þÐ ¬¾¢ºí¸Ã§Ã ²üÀÎò¾¢Â ³ó¾¡ÅÐ Á¼õ, ¬¾¢ºí¸Ã§Ã þ¾ý Ó¾ø À£¼ò ¾¨ÄÅ÷ ±ýÚõ º¢Ä÷ ÁÚòÐì ÜÚÅÐ ¯ñÎ. «ó¾î º¢ì¸ÖìÌûÙõ, ¸¡ïº¢ Á¼ò¾¢ý ÀƨÁìÌûÙõ þô¦À¡ØÐ §À¡¸§Åñ¼¡õ. ¬É¡ø ¸¡ïº¢ Á¼ò¾¢üÌõ º¢Õí§¸Ã¢ Á¼ò¾¢üÌõ ¯ûÇ º¢Ä «ÊôÀ¨¼ô À¢Ç׸ǡÖõ, À¨Æ ¦ÀâÂÅÕìÌõ, þÅÕìÌõ þ¨¼§Â þÕó¾ ¿¢¨Ä-§ÅÚÀ¡Î¸Ç¡Öõ ÍÁ¡÷ò¾ À¡÷ôÀÉ÷¸Ç¢§Ä§Â ÀÄÕõ þŨÃì §¸ûÅ¢ §¸ðÎì ¦¸¡ñÎ þÕó¾É÷. þó¾ ¿¢¨Ä ¿£Ú âò¾ ¦¿ÕôÀ¡¸§Å ¦¿Îí¸¡Äõ þÕó¾¢Õ츢ÈÐ. ¦¿ÕôÒ Á¼ò¾¢üÌûÙõ ¸ÉýÚ ¦¸¡ñÎ þÕó¾¢Õ츢ÈÐ ±ýÚ ÀÄÕõ ¦º¡ýÉÐ ¯ñÎ.)

ºí¸Ã Á¼ò¾¢ý ¾¨ÄÅ÷ ±ýÀÅÕìÌ ¦À¡ÐÅ¡¸ þÃñÎ ¦À¡ÚôÒì¸û ¯ñÎ. Ӿġ ¦À¡ÚôÒ «øÄ¢Õ¨Áì («òШžõ) ¦¸¡û¨¸¨Â Áì¸Ç¢¨¼§Â ÀÃôÒÅÐ. («øÄ¢Õ¨Áì ¸¡Ã÷¸ÙìÌ §¸¡Â¢ø ´Õ ¦À¡Õð¼øÄ; þýÛõ ¦º¡øÄô §À¡É¡ø, §¸¡Â¢ø ÅÆ¢À¡Î ±ýÀ¨¾ Á£È¢ ÅçÅñÎõ ±ýÚ ¦º¡øÄì ÜÊÂÅ÷¸û «Å÷¸û. º¢Å ¦¿È¢, Å¢ñ¦½È¢ «øÄ¡¾ §Å¾ ¦¿È¢¨Â °¦ÃíÌõ ÀÃôÀì ¸¼¨Á âñ¼Å÷¸û «Å÷¸û.) þÃñ¼¡ÅÐ Á¼ò¾¢ý ¦º¡òÐì¸¨Ç ¿¢÷Ÿ¢òÐ ÅÕÅÐ. þÃñÎ ¦À¡Úô¨ÀÔõ ¦ºöÔõ §À¡Ð ¾¡Á¨Ã þ¨Äò ¾ñ½£Ã¢ý ÁÉôÀ¡íÌ Á¼ò¾¨ÄÅÕìÌ ÅóÐ §ºÃ§ÅñÎõ. ¦º§Âó¾¢Ã÷ ±ó¾ «Ç× Ó¾ü¦À¡Úô¨À ¿¢¨È§ÅüÈ¢ì ¦¸¡ñÊÕó¾¡÷ ±ýÀ¾¢ø ÀÄÕìÌõ §¸ûÅ¢¸û ¯ñÎ. þô¦À¡ØÐ þÃñ¼¡ÅÐ ¦À¡ÚôÒ «Å¨Ãô ¦Àâ º¢ì¸ÖìÌì ¦¸¡ñÎ Åó¾¢Õ츢ÈÐ.

¦ÀÕÁ¡ý¸Ç¢ø «øÄ¢Õ¨Áì ¦¸¡û¨¸ÂáÔõ «øÄ¡Áø, º¢Å¦¿È¢Â¡ÇáÔõ «øÄ¡Áø, Å¢ñ½Å ¦¿È¢Â¢ø À¢¨½ó¾¢Õó¾Å÷¸û «Å¨Ã ´Õ Á¡üÈ¡ÇḧŠÀ¡÷òÐ §ÅÚÀ¡Î ¦¸¡ûÅÐõ ¯ñÎ. (ÌÈ¢ôÀ¡¸ ÀïºÃ¡ò¾¢Ã ¬¸ÁӨȸǢø ã쨸 ѨÆòÐ ¾¢ÕôÀ¾¢ì §¸¡Â¢¦Ä¡ØÌ Ó¨È¢ø, º¢Ä Áñ¼Àí¸¨Ç þÊòÐ þýÛõ ´Õ ¦Àâ ÍüÚ ¯ÕÅ¡ì¸Ä¡õ ±ýÚ Á¡üÈõ ¦º¡ýÉÐõ, Å¢ñ½Å ¦¿È¢ò ¾¨ÄÅ÷¸¨Ç ´Ð츢 ¨ÅìÌÁ¡ô§À¡Ä ÀÄ ¸ÕòÐì¸û ¦º¡øÄ¢ÂÐõ ÀÄ Å¢ñ½Å÷¸ÙìÌ À¢Ê측Áø þÕó¾Ð.) ¦ÀÕÁ¡ý¸û «øÄ¡¾ ÁüÈÅ÷ìÌ «Å÷ ´Õ ¦¿Õì¸õ þøÄ¡¾ Å¢ó¨¾Â¡ÉÅ÷. «Å§Ã¡Î ÀÄÕìÌõ ¸ÕòÐ §ÅÚÀ¡Î; º¢Ä þ¼í¸Ç¢ø ¸ÕòÐ §ÅÚÀ¡Î ÓüÈ¢ô À¢½ì§¸ ¯ñÎ; «Å¨Ãì Ì¨È ¦º¡ýÉÅ÷¸û ÀÄ÷. «Ð «Ãº¢ÂÄ¢ø ÁðÎõ þø¨Ä. ¬ýÁ£¸ò§¾¡Î ÁðÎõ ¿¢ýÚ ¦¸¡ûÇ¡Áø «Ãº¢ÂÄ¢ø «Å÷ ѨÆó¾Ð, ÌÈ¢ôÀ¡¸ þóÐòÐÅ «Ãº¢ÂÄ¢ø ѨÆó¾Ð ¬ýÁ£¸õ º¡÷ó¾ ÀÄ ¾Á¢Æ÷¸ÙìÌ «Å¨Ãô À¢Èɡ츢ÂÐ. ¸å÷ §¸¡Â¢Ä¢ý ̼ÓØ쨸ò ¾Á¢Æ¢ø ¦ºöžüÌ Á¡üÚì ¸ÕòÐî ¦º¡øÄ¢ÂÐ, ÁüÈ º¢Å¦¿È¢ Á¼í¸Ç¢ý Óɸ¨Ä ±¾¢÷¦¸¡ñ¼Ð, ¨¸õ¦Àñ¸û, «ÖÅü ¦Àñ¸û ¬¸¢§Â¡÷ ÀüÈ¢î ¦º¡ýÉÐ, ¬¸¢Â¨Å ±øÄ¡õ "±ýÉÐ þÅ÷ þôÀÊ?" ±ýÛÁ¡ô §À¡ø ÀħÀâý ¦¿üÈ¢¨Âì ÌÚ¸ ¨Åò¾Ð. «ñ¨Áì ¸¡Äò¾¢ø ¾¡ú󧾡ÕìÌ ¬¾ÃÅ¡öî º¢Ä Å¡ì̸û ¦º¡ýÉ¡Öõ, º¢Ä ¦ºö¨¸¸û ¦ºö¾¡Öõ, «Ð ¯ûÇ¡÷ó¾ ¯¨ÃôÀ¡, «øÄÐ ¦ÅÚõ «Ãº¢ÂøÅ¡¾¢ò¾ÉÁ¡ ±ýÈ §¸ûÅ¢¨ÂÔõ Áì¸û þ¨¼§Â ±ØôÀ¢ÂÐ. þò¾¨ÉìÌõ Óó¨¾Â ¦ÀâÂÅ÷ ÌÓ¸ Á¡üÈõ ÀüÈ¢î ¦º¡øÄ¡Áø ´Õ ÀƨÁ §¿¡ì¸¢ø þÕó¾Å÷¾¡ý. «ó¾ì ¸ÕòÐì¸û ²üÚì ¦¸¡ûÇ ÓÊ¡¾¨Å ¾¡ý. þÕó¾¡Öõ ¡¨Ãì §¸ð¼¡Öõ «Å÷§Áø ´Õ Á¾¢ôÒ þÕ󾨾 ¯½Ã Óʸ¢ÈÐ. Á¡È¡¸î ¦º§Âó¾¢Ã§Ã¡ º¢Ä Á¡üÈí¸¨Ç Á¼ò¾¢ý ¿¼ÅÊ쨸¢ø ¦¸¡ñÎ Åó¾Å÷. þÕó¾¡Öõ, þÅ÷§Áø Á¾¢ôÒì Üʾ¡ö þó¾ ¿¢¸úÅ¢üÌî ºüÚ ÓýÉ÷ ܼ ÀÄÕõ ¦º¡øÄì ¸¡§½¡õ.

þó¾ ¿¢¨Ä¢ø ¾¡ý þôÀÊì ¦¸¡¨Ä ÀüȢ ´Õ ÌüÈðÎ ±Øó¾¢Õ츢ÈÐ. ÌüÈð¨¼ô ÀüÈ¢ ¿¡ý ±Ø¾ ÓýÅÃÅ¢ø¨Ä. ±ý §¸ûÅ¢ Á¼ò¾¢ý «Ê¿¢¨Ä ÀüÈ¢ÂÐ.

´Õ ÐÈÅ¢ ±ýÀÅ÷ Á¼ò¾¢üÌî ¦º¡òÐî §º÷ôÀ¾¢Öõ, ÀûÇ¢, §Å¾À¡¼º¡¨Ä, ÁÕòÐÅ ¿¢¨ÄÂí¸û ±É «È¨Ä¸û ¨ÅôÀ¾¢ø ®ÎÀ¼ ÓüÀðÎ À½õ, À½õ, ±ýÚ «¨ÄóÐ "«¨¾ þíÌ Å¡íÌ, þ¨¾ þíÌ §À¡Î, þó¾ ¿¢Äò¨¾ Å¡íÌ, þ¨¾ Å¢üÚÅ¢Î" ±ýÚ ¯Ä¸¢Âü ¦ºÂø¸Ç¢§Ä§Â Тø §¿Ãõ §À¡¸ ÁüÈ §¿Ãí¸Ç¢ø ãú¸¢ þÕó¾¡ø, "Á¼ò¾¢ý «Êò¾Çõ ºÃ¢Å¨¾ò ¾Îì¸ ÓÊÔÁ¡?" ±ýÈ §¸ûÅ¢ ±Ø¸¢ÈÐ. ¦º¡òÐ ±ýÈ º¢ó¾¨É (À¨Æ ¦ÀâÂÅ÷ ¸¡Äò¾¢ø å. 40 §¸¡Ê ¦ÀÚÁ¡É Á¼õ þý¨ÈìÌ å. 2600 §¸¡ÊìÌî ¦º¡òÐ ¯ûǾ¡¸ þÕ츢ÈÐ. ¦º§Âó¾¢Ã§Ã ¦º¡òÐô ¦ÀÕ¸¢Â¨¾ô ¦ÀÕ¨Á¡¸î ¦º¡øÄ¢ì ¦¸¡û¸¢È¡÷.) Åó¾ À¢ÈÌ «Ð ¾ý¨É «È¢Â¡Áø «Ãº¢Âø ¸ÇòÐûÙõ, ÁüÈ «Ãº¢ÂÄ¡§Ã¡Î §À¡ðÊ §À¡ðÎì ¦¸¡ñÎõ, «Å÷¸Ù¨¼Â ¦¿È¢Ó¨È¨Â§Â ¨¸Â¡Ç ¨ÅòÐõ ¦ºöРŢΧÁ ±ýÚ §¾¡ýÚ¸¢ÈÐ. Á¼ò¨¾ ¿¢÷Ÿ¢ìÌõ Á¡É¨¸ (management)¢Öõ ܼ þÅ÷ ¾òÐô À¢ò¦¾ýÚ þÕó¾¢Õ츢ȡ÷. ¦Á¡ò¾ò¾¢ø þó¾ Á¼õ ´Õ «Ãº¢Âø ¸ÇÁ¡ö ¬¸¢ô §À¡ÉÐ. «Ãº¢Âø ¸Çò¾¢ø §Åñ¼¡¾Å¨Ãò ¾ðÊ ¨ÅôÀÐõ, Á¢ÃðÊ ¨ÅôÀÐõ, þýÛõ ¬¨Ç§Â ¾£÷ìÌõ «ÇÅ¢üÌô §À¡ÅÐõ þÂøÀ¡ÉÐ. þôÀÊ Á¼ò¾¢üÌõ ¸ðº¢¸ÙìÌõ §ÅÚÀ¡Î þøÄ¡Áø §À¡ÉÐ ´Õ ¦¸¡Î¨Á «øÄÅ¡? ¿¡õ ±øÄ¡õ «õÁ¡¨ÅÔõ, «ö¡¨ÅÔõ ÀüÈ¢ì ̨Ȧº¡øÄ¢ì ¦¸¡ñÊÕôÀ¾¢ø ÀÂÉ¢ø¨Ä. Óð¨¼Â¢ø þÕóÐ ÌïÍ ÅÕÅÐ ¯û§Ç ¿¼ìÌõ Á¡üÈò¾¡ø. «Ð ¦Åö¢Ģø ¦À¡Ã¢ì¸ô Àð¼Ð ±ýÀÐ «Îò¾ ¿¢¨Ä. «Ãº¢ÂÄ¡÷ «ôÀÊò¾¡ý ¿¼ôÀ¡÷¸û. Á¼õ ²ý «Ãº¢Â§Ä¡Î §¾¡Æ¨Á âñ¼Ð?

ÐȦÅýÚ Åó¾À¢ÈÌ ±¨¾ò ÐÈ츢ȡ÷¸û? ÌÎõÀõ, ¬¨º, ¦º¡¸õ ±øÄ¡Åü¨ÈÔõ «øÄÅ¡ ÐÈì¸ §ÅñÎõ? «ôÒÈõ ±ýÉ ¦º¡ó¾ì¸¡Ã÷¸û ¦¾¡¼÷Ò ¿£ÙÅÐ? Á¼ò¾¢üÌû ¦º¡ó¾ì¸¡Ã÷¸û ÅóÐ ÜÊÉ¡ø «ôÒÈõ ÐÈÅ¡ÅÐ, ´ýÈ¡ÅÐ? ±ý¨ÈìÌî ¦º¡ó¾õ ¯ûѨÆ󾧾¡, «ý§È Á¼õ ¬ð¼õ ¸ñÎÅ¢Îõ «øÄÅ¡? þ¾¢ø ¦ÀâÂÅ÷, º¢ýÉÅ÷ ±É þÃñÎ ºí¸Ã÷¸Ùõ ¾ÅÈ¢¨Æò¾¢Õ츢ȡ÷¸û. þ¨ÇÂÅ÷ ÀüÈ¢Ôõ Å¢ÅÃõ ¦¾Ã¢ó¾Å÷¸û ²¸ôÀð¼ Ì¨È ¦º¡øÖ¸¢È¡÷¸û. ÌÈ¢ôÀ¡¸, ¦ÀâÂŨÃô ÀüȢ þ¨ÇÂÅÕ¨¼Â §Á¡Éõ ±ò¾¨É§Â¡ ¿ÁìÌ ¯½÷òи¢ÈÐ. þÕÅÕìÌõ þ¨¼§Â ´Õ Àí¸¡Ç¢î ºñ¨¼§Â þÕó¾¢Õì̧Á¡ ±ýÚ Ü¼ ¿ÁìÌò §¾¡ýÚ¸¢ÈÐ. «Îò¾Åâý §Áø ¿õÀ¢ì¨¸ ¿ÁìÌ ÅÃÅ¢ø¨Ä. À¨Æ ¦ÀâÂÅâý ¸¨¼º¢ì ¸¡Äó ¦¾¡ðÎ, þýÛõ ¦º¡ýÉ¡ø ¦º§Âó¾¢Ã÷ ¾¨Ä측ŢâìÌô §À¡É¾¢ø þÕóÐ ´Õ þÚì¸Á¡É Ýú¿¢¨Ä Á¼ò¾¢üÌû þÕó¾¢Õ츢ÈÐ. «íÌ ±øÄ¡§Á ´Õ º¼í¸¡ö þÕó¾¢Õ츢ÈÐ. «ÊôÀ¨¼Â¢ø ´Õ À¢¨Æ ±ý§È¡ ²üÀðÎ, þýÚ Å¢Êó¾¢Õ츢ÈÐ. (À¢¨Æ¢ý ´Õ ±ÎòÐì ¸¡ðÎ: ÐÈ× ¦¸¡ñÎ 50 ¬ñÎ ±ýÚ Å¢Æ¡ì ¦¸¡ñ¼¡ÊÂÐ. ¦ºý¨Éô Àø¸¨Äì ¸Æ¸ áüÈ¡ñΠŢơ Áñ¼Àò¾¢ø ¦¸¡ñ¼¡Ê «ó¾ Ţơ§Å ´Õ ÓÃñ¦¾¡¨¼. ÐÈ× ¦¸¡ñ¼¾¢üÌ ´Õ Ţơ ±ýÀÐ Á¼ò¾ÉÁ¡¸ò ¦¾Ã¢¸¢ÈÐ.)

«øÄ¢Õ¨Á ÀüÈ¢ ´Õ Á½¢§¿ÃÁ¡ÅÐ ¦º§Âó¾¢Ã÷ §Àº¢ì §¸ðÎ ±ò¾¨É ¿¡Ç¡Â¢ÕìÌõ? þÅ÷ §Å¾õ ÀÊò¾Ð ±øÄ¡õ ±ýÉš¢üÚ? ¦ÅÚ§Á º¼í̸ǢÖõ, À¡¾ ⨺¸Ç¢Öõ, ÁÄ÷ÓʸǢÖõ, ¾í¸î ¦º¡Ã¢×¸Ç¢Öõ, ¦º¡òÐ-¿¢Ä ¬Å½í¸Ç¢Öõ þýÉÀ¢ÈÅüÈ¢Öõ ãú¸¢ ¬¾¢ ºí¸Ãâý «ÊôÀ¨¼ì ¸Õò¨¾§Â ¦¾¡¨ÄòÐ Óظ¢Å¢ð¼¡§Ã? «øÄ¢Õ¨Á¨Â °Õĸò¾¢ø ÀÃôÀ ÓüÀð¼Å÷ þôÀÊî º¢ì¸¢ «¨Äì¸Æ¢ÅÐ ¦¸¡ïºõ Å¢ó¨¾Â¡¸, ²ý ÅÕò¾Á¡¸ì ܼ, þÕ츢ÈÐ.

º¡Á¢Â¡÷¸û ÀüȢ ÁÂì¸õ ¿õ Áì¸ÙìÌ ±ýÚ §À¡Ì§Á¡ ¦¾Ã¢ÂÅ¢ø¨Ä. ±É즸ýɧÁ¡, þó¾î º£ÃƢŢý Å¢òÐ ¦¿Îí¸¡Äõ ÓýɧÁ ²üÀðÎÅ¢ð¼Ð ±ý§È §¾¡ýÚ¸¢ÈÐ. þá. ÓÕ¸ý ¦º¡ýÉÐ §À¡ø ¦º§Âó¾¢Ã÷ Á£ñÎõ þÕû¿£ì¸¢ Á¸¡§¾Åý ÍôÀ¢ÃÁ½¢Âý ±ýÚ ¬Ìŧ¾ º¢ÈôÒ.

«ýÒ¼ý,
þáÁ.¸¢.

Friday, November 19, 2004

மூடி களைந்து முகம் ஆடி பார்ப்பமோ?

ஒத்தி யெடுப்பு(1) ஊரைச் சுற்றிலும்;
சுத்திச் சுத்தி முகமூடி போட்டு,
ஊருள் அலைவது நாய்பட்ட வேலை;

எங்கு பார்த்தாலும் இன்னொரு வன்போல்,
ஏதொன்றும் எடுத்து இதமாய் ஒத்தி....
ஏரா ளம்பேர்; என்னவோர் அழற்சி?

ஆனாலும், இப்படி ஒத்தி உழல்வதை,
காணாது காண்பதாய் கைதட்டிக் களிப்பு;
ஒருவனைப் போலவே ஓரா யிரம்பேர்,
முகத்தை மூடி மூளுணர் வொளித்து;
யாருக்கும் இங்கே வெட்கமும் இல்லை;
எதையும் நோக்கிக் கவலையும் இல்லை;

நேற்றைய இரவில் பயணம் முடித்து,
அண்ணா முனையம்(2) வான்புகல்(3) நுழைந்து,
ஆரவா ரத்தொடு அணுகிய வர்களாய்,
பேச்சு, நடையுடை, பாவனை, எதிலும்
பெருகி விரவிய அமெரிக்கத் தோற்றம்;
"அஞ்சு மேனியில்(4) அடங்கிய தமிழை
ஆங்கிலம் பேசி அளவினால் தானே,
அவர்கள் மூடிகள் முகத்தில் நிலைக்கும்?"

இவர்களின் இலக்கியப் படிப்பறி வெல்லாம்
வான்புகல் இக்கிம் பாதாம் கடையின்
முன்னூறு உருபா தாள்கட்டு(5) அளவில்,
துள்ளிடு புதினமாய்த் தூவிய கவர்ச்சி;
உள்ளே மறைத்த காமஞ் சொட்டினால்
இன்னும் தெளிவாம் இலக்கியச் செறிவு;

புதினப் பொத்தகம் வாங்கா திருந்தால்,
அதற்குப் பகரியாய்(6) மானகைப்(7) பொத்தகம்;
இந்தவா ரம்தான் வெளியே வந்தது;
அன்றேல் இந்தியச் சாத்திரம் பற்றி
ஆரோ வெள்ளையர் அருளுரைத் தொகுப்புகள்;

இன்னும் அழுத்தி இவரிடம் கேட்டால்,
என்றோ தமிழில் படித்த மறந்த
புதுக்கவி தைகளும் ஐக்கூ வரிகளும்;
சமயத்தில் இவற்றை எழுதியும் காட்டுவர்;
சொற்களை மடித்துப் சொக்கட்டான் ஆட
வெள்ளையன் இவர்க்குச் சொல்லா திருப்பனோ?

பார்க்கும் திரைப்பட நெறியா ளுநரோ(8)
எங்கோ சுட்ட மெக்சிகப் படத்தையும்,
ஈரான், அங்கெரி பிரசீலியப் படத்தையும்,
மாற்றிப் போட்டு கலவையைச் செய்து,
நெறிஞர் என்ற முகமூடி பிழைப்பர்;
நடிகர், இசைஞர், கலைஞர் எல்லாம்
லெபனான், பிரஞ்சு, இன்னும் இதுபோல்
ஏதோ வொன்றை இங்கே கொணர்ந்து
சரக்கு விற்றால் சரியாய்ப் போச்சு;
திலகம் என்று சொல்லிட மாட்டொமோ?

நாமெலாம் நாமாய் இருப்பதெப் பொழுது?
இரவில் ஆவது இருந்து தொலைப்பமோ?
மூடி களைந்து முகம்ஆடி பார்ப்பமோ?

அன்புடன்,
இராம.கி.

1. ஒத்தியெடுப்பு = imitation
2. முனையம் = terminal
3. வான்புகல் = airport
4. அஞ்சு மேனி = 5%
5. தாள்கட்டு = paper-back
6. பகரி = substitute
7. மானகை = management
8. நெறியாளுநர் = director

In TSCII:

´ò¾¢ ¦ÂÎôÒ(1) °¨Ãî ÍüÈ¢Öõ;
Íò¾¢î Íò¾¢ Ó¸ãÊ §À¡ðÎ,
°Õû «¨ÄÅÐ ¿¡öÀ𼠧ŨÄ;

±íÌ À¡÷ò¾¡Öõ þý¦É¡Õ Åý§À¡ø,
²¦¾¡ýÚõ ±ÎòÐ þ¾Á¡ö ´ò¾¢....
²Ã¡ Çõ§À÷; ±ýɧš÷ «Æüº¢?

¬É¡Öõ, þôÀÊ ´ò¾¢ ¯ÆøŨ¾,
¸¡½¡Ð ¸¡ñÀ¾¡ö ¨¸¾ðÊì ¸Ç¢ôÒ;
´ÕŨÉô §À¡Ä§Å µÃ¡ ¢Ãõ§À÷,
Ó¸ò¨¾ ãÊ ãÙ½÷ ¦Å¡Ç¢òÐ;
¡ÕìÌõ þí§¸ ¦Åð¸Óõ þø¨Ä;
±¨¾Ôõ §¿¡ì¸¢ì ¸Å¨ÄÔõ þø¨Ä;

§¿ü¨È þÃÅ¢ø À½õ ÓÊòÐ,
«ñ½¡ Ó¨ÉÂõ(2) Å¡ýÒ¸ø(3) ѨÆóÐ,
¬ÃÅ¡ Ãò¦¾¡Î «Ï¸¢Â Å÷¸Ç¡ö,
§ÀîÍ, ¿¨¼Ô¨¼, À¡Å¨É, ±¾¢Öõ
¦ÀÕ¸¢ Å¢ÃŢ «¦Áâì¸ò §¾¡üÈõ;
"«ïÍ §Áɢ¢ø(4) «¼í¸¢Â ¾Á¢¨Æ
¬í¸¢Äõ §Àº¢ «ÇŢɡø ¾¡§É,
«Å÷¸û ãʸû Ó¸ò¾¢ø ¿¢¨ÄìÌõ?"

þÅ÷¸Ç¢ý þÄ츢Âô ÀÊôÀÈ¢ ¦ÅøÄ¡õ
Å¡ýÒ¸ø þ츢õ À¡¾¡õ ¸¨¼Â¢ý
ÓýëÚ ¯ÕÀ¡ ¾¡û¸ðÎ(5) «ÇÅ¢ø,
ÐûǢΠҾ¢ÉÁ¡öò àŢ ¸Å÷;
¯û§Ç Á¨Èò¾ ¸¡Áï ¦º¡ðÊÉ¡ø
þýÛõ ¦¾Ç¢Å¡õ þÄ츢Âî ¦ºÈ¢×;

Ò¾¢Éô ¦À¡ò¾¸õ Å¡í¸¡ ¾¢Õó¾¡ø,
«¾üÌô À¸Ã¢Â¡ö(6) Á¡É¨¸ô(7) ¦À¡ò¾¸õ;
þó¾Å¡ Ãõ¾¡ý ¦ÅÇ¢§Â Åó¾Ð;
«ý§Èø þó¾¢Âî º¡ò¾¢Ãõ ÀüÈ¢
¬§Ã¡ ¦Åû¨ÇÂ÷ «ÕÙ¨Ãò ¦¾¡ÌôÒ¸û;

þýÛõ «Øò¾¢ þÅâ¼õ §¸ð¼¡ø,
±ý§È¡ ¾Á¢Æ¢ø ÀÊò¾ ÁÈó¾
ÒÐì¸Å¢ ¨¾¸Ùõ ³ìÜ Åâ¸Ùõ;
ºÁÂò¾¢ø þÅü¨È ±Ø¾¢Ôõ ¸¡ðÎÅ÷;
¦º¡ü¸¨Ç ÁÊòÐô ¦º¡ì¸ð¼¡ý ¬¼
¦Åû¨ÇÂý þÅ÷ìÌî ¦º¡øÄ¡ ¾¢ÕôÀ§É¡?

À¡÷ìÌõ ¾¢¨ÃôÀ¼ ¦¿È¢Â¡ Ù¿§Ã¡(8)
±í§¸¡ Íð¼ ¦Á캢¸ô À¼ò¨¾Ôõ,
®Ã¡ý, «í¦¸Ã¢ À¢Ãº£Ä¢Âô À¼ò¨¾Ôõ,
Á¡üÈ¢ô §À¡ðÎ ¸Ä¨Å¨Âî ¦ºöÐ,
¦¿È¢»÷ ±ýÈ Ó¸ãÊ À¢¨ÆôÀ÷;
¿Ê¸÷, þ¨º»÷, ¸¨Ä»÷ ±øÄ¡õ
¦ÄÀÉ¡ý, À¢ÃïÍ, þýÛõ þЧÀ¡ø
²§¾¡ ¦Å¡ý¨È þí§¸ ¦¸¡½÷óÐ
ºÃìÌ Å¢üÈ¡ø ºÃ¢Â¡öô §À¡îÍ;
¾¢Ä¸õ ±ýÚ ¦º¡øÄ¢¼ Á¡ð¦¼¡§Á¡?

¿¡¦ÁÄ¡õ ¿¡Á¡ö þÕôÀ¦¾ô ¦À¡ØÐ?
þÃÅ¢ø ¬ÅÐ þÕóÐ ¦¾¡¨ÄôÀ§Á¡?
ãÊ ¸¨ÇóÐ Ó¸õ¬Ê À¡÷ôÀ§Á¡?

«ýÒ¼ý,
þáÁ.¸¢.

1. ´ò¾¢¦ÂÎôÒ = imitation
2. Ó¨ÉÂõ = terminal
3. Å¡ýÒ¸ø = airport
4. «ïÍ §ÁÉ¢ = 5%
5. ¾¡û¸ðÎ = paper-back
6. À¸Ã¢ = substitute
7. Á¡É¨¸ = management
8. ¦¿È¢Â¡Ù¿÷ = director

Thursday, November 18, 2004

திண்ணைப் பள்ளிக்கூடம் - 2

திண்ணைப் பள்ளிக்கூடம் என்பதை ஏட்டுப் பள்ளிக்கூடம் என்றும் எங்கள் ஊர்ப்பக்கம் சொல்லுவது உண்டு. ஏனென்றால் அந்தக் காலத்தில் இளம் அகவைப் படிப்பெல்லாம் ஏட்டில் தான் இருந்தது. ஏட்டில் ஆசிரியர் எழுதுவதை, நாம் முதலில் மனத்தால் சொல்லிப் பழகவேண்டும்; பின் மணலில் எழுதிப் பழகவேண்டும். இதுபோல், ஆத்திச்சூடி, கொன்றைவேந்தன், மூதுரை, குறள் என்று ஒவ்வொன்றாய்ப் படிப்பது பெருகும். (கூடவே வீடுகளில் தேவாரம், நாலாயிரப் பனுவல், சிவபுராணம், விநாயகர் அகவல் ஆகியவை படிப்பதும் உண்டு.) இது தவிர 16ம் வாய்பாடு வரை ஒப்பிக்க வேண்டும். கூட்டல், கழித்தல், பெருக்கல், வகுத்தல் என்று எண் கணக்குகள் கொஞ்சங் கொஞ்சமாய் விரியும். வர்க்க மூலம், பரப்பளவு, கன அளவு என்று கணக்கின் ஆழமும் கூடும். ஒவ்வொரு கணக்கும் நடைமுறைப் பயிற்சியில் படிப்பதே ஒழிய தேற்றம், நிரூபணம் என்ற கிரேக்க முறையில் போகாது. கிட்டத்தட்ட அவ்வளவு கணக்குகளும் அன்றாட வாழ்க்கையில் தொடர்பு கொண்டவையாகவே இருக்கும்; பறவைகள், மரங்கள், இயற்கை அறிவியல் ஆகிய படிப்புக்கள் மாணாக்கனின் இயல்பான வாழ்க்கையில் தெரியவேண்டியவை என்பதால் அவற்றைத் தனியே பள்ளியில் சொல்லிக் கொடுக்கும் வழக்கம் கிடையாது. இப்படி எண்ணும் எழுத்தும் தெரிந்துகொள்ளுவது ஒருவிதமான படிப்பு. இன்றைக்குப் பலரும் அத்தகைய படிப்பை ஒப்புக் கொள்ளாமற் போகலாம்.

ஏட்டில் எழுதித் தருவதை நாம் மணலில் எழுதுவதிலிருந்து, நாளா வட்டத்தில் கரும்பலகை, அதில் எழுதப் பயன்படும் குச்சி என நம்முடைய எழுதுபுலன்கள் விரியும். மணிக்கட்டு ஒடியும்படி எழுத்துப் பயிற்சி இருக்கும். ஒழுங்கான கையெழுத்து பழக்கத்திற்கு வரும்வரையில் விளம்பி எழுதும் பயிற்சியும் (ஆசிரியர் எழுதியதின் மேல் அப்படியே பின்பற்றி எழுதுவதை விளம்புதல் என்று சொல்லுவார்கள்), திரும்பித் திரும்பி பலமுறை உட்பொதிக்கும் (imposition) பயிற்சியும் இருக்கும். ஆசான் எழுதித் தர, எழுதித் தர, எத்தனை நாட்கள் அந்தப் பள்ளிக்கூடத்தில் படிக்கிறோமோ அதற்கேற்ப, ஏட்டுச் சுவடியின் கனம் கூடிவரும். பள்ளிக்கூடத்தில் சேரும் போது நாம் அறியும் சுவடி எழுத்து கிட்டத்தட்ட அரை அணுங்குழை (அங்குலம்) அளவுக்குக் கூட இருக்கும். நாளாக நாளாக, எழுத்தையும் எண்ணையும் நாம் நன்கு கற்று முடிந்த சூழ்நிலையில், ஏட்டில் உள்ள எழுத்தின் நறுக்களவு (size) கொஞ்சம் கொஞ்சமாய்ச் சுருங்கும்.

பொதுவாக ஏடு என்பது ஆசான் எழுதுவதற்கு மட்டுமே அந்தக் காலத்தில் இருந்தது. எழுத்தாணியைப் பிடித்து மாணவர்கள் ஏட்டில் எழுதப் பழகியதெல்லாம், எங்களுக்கு இரண்டு மூன்று தலைமுறைகள் முன்னால் நின்றிருக்க வேண்டும். புறனடையாக, அங்கொன்றும், இங்கொன்றுமாய்த் தனிப்படச் சிலர் ஏட்டில் எழுதப் பழகியிருக்கலாம். [எங்கள் பக்கத்தில், 30, 40 ஆண்டுகள் முன்பு வரை திருமண வீடுகளில் எழுதப்படும் பணத்து இருப்பு ஏடு, இசைகுடிமான ஏடு, போன்ற பரம்பரை ஏடுகளை ஒரு சிலர் மட்டும் எழுத்தாணியால் எழுதக் கற்றிருந்தார்கள். பின்னால் இவையும் மரக்கூழ்த் தாளில் வந்துவிட்டன. சிலர் இப்போது அச்சடித்தும் வெளியிடுகிறார்கள்.] ஒருகாலத்தில் வீட்டு வரவு செலவுக் கணக்குகள் கூட பனையோலையில் வீச்செழுத்தில் எழுதப்பட்டு வந்தன. [ஆனால் அதில் பதின்மக் கணக்கு (decimal accounting) இருக்காது; எல்லாமே பின்னக் கணக்குத்தான், கீழ்வாய் இலக்கம் தெரியாதவர்கள் இந்தக் கணக்குகளைப் படித்துப் புரிந்து கொள்ள முடியாது.] எழுத்தாணி பிடித்து எழுதும் கலை இப்பொழுது காப்பாற்றப் படாமல் அழிந்து கொண்டிருக்கிற ஒரு கலை. இன்றைக்கு அது பயன்படாமல் போனது நுட்பியலின் படி சரிதான் என்றாலும், வரலாற்றுத் தன்மை கருதி இது போன்ற கலைகளை காட்சிக் கூடங்களிலாவது காப்பாற்றியிருக்கலாம்.

எழுத்தாணி என்பதை நிகண்டுகளில் ஓலை தீட்டும் படை, கண்டம், ஊசி, இலேகை, எழுதுகோல், தூலிகை (துகிலிகை) என்றெல்லாம் சொல்லுவார்கள். கண்டம், ஊசி என்பன கூர்மைப் பொருளைக் குறிக்கின்றன. இல் என்ற வேரும் குறி, கூர் என்ற கூர்மைப் பொருளையே குறிக்கிறது. இல்>இலக்கு = குறி; இல்லென்னும் வேரில் இருந்து பிறந்த சொல்தான் இல்>இழு>எழு>எழுதுதல்; அதே போல இலக்கித்தல் என்பதும் எழுதுதலையே குறிப்பிடும். இழுப்பியது லிபி என்று வடபால் திரியும். இலக்கியது இலகை>இலேகை>இரேகை என்றும் பொருள் விரியும்; இலகுபவன்>இலேகன்>இலேகுகன் என்றும் சொல்லப் படுவான்.

ஏட்டுச்சுவடிகளில் இரண்டு விதங்கள் உண்டு. ஒன்று பள்ளிக்கூடத்தில் மாணாக்கர்கள் படிக்கப் பழகும் சுவடி. இன்னொன்று பெரிய நூல்கள், கணக்குகள் எழுதும் சுவடி.

முதலில் சுவடிகள் பற்றி ஒரு சில அடிப்படைச் செய்திகளைப் பார்ப்போம். எப்படி மண்ணில் அடி பதித்துத் தடம் பொறிப்பதைச் சுவடு என்று சொல்கிறோமோ, அதே போல எழுத்தின் தடம் பொறிப்பதும் சுவடி என்று ஆயிற்று. கால் தடம் எப்படி ஒன்றிற்கு மேல் அமைகிறதோ (குறைந்தது இரண்டு சுவடுகள் வரும் இல்லையா?) அது போல சுவடி என்ற சொல்லும் இரண்டையும், இரண்டிற்கும் மேலும் உள்ள தொகுதியையும் குறிக்கிறது. நாளாவட்டத்தில் சுவடி என்றாலே இரண்டு என்ற பொருள் கூட ஏற்பட்டது. சுவடி>சோடி என்றும் திரியும்.

சுவடி என்பது ஓலைகளால் ஆனது. ஓலை என்ற சொல்லிற்குத் தாள், இதழ், ஏடு, மடல், மாழை, தோடு என்ற ஒருபொருள் இணைச்சொற்களும் உண்டு. பனை ஓலையில் ஒரு காம்பு, இரண்டு தாள்கள் இருக்கும். (தாள்கள் என்ற சொல்லின் பொருட்பாடு பனையோலையோடு தொடங்கியது. தாள்>தாழை மடல் என்ற சொல்லாட்சி இன்னொரு வகை. இன்றையத் தமிழில் தாள் என்ற சொல் மரக்கூழால் ஆன எழுது பரப்பைக் குறிப்பதாய் பொருள் நீட்சி பெற்று விட்டது.) பனை ஓலையின் காம்பை எடுக்காமல் நீரில் ஊறப்போட்டுப் பின் ஓரங்களை தமக்கு வேண்டிய அளவு நறுக்கிப் பாடம் பண்ணி, பிறகு மாணாக்கர் சுவடியில் பயன்படுத்துவார்கள். ஓலையை ஒழுங்குற நறுக்கியோ, முறித்தோ, கிள்ளியோ செய்வதால், ஓலைக்கு நறுக்கு, முறி, கிள்ளாக்கு என்றும் பெயருண்டு.

ஒரு ஓலையின் நறுக்கு ஒரு முழம் (கிட்டத்தட்ட 16.5 அணுங்குழை) இருக்கும். நறுக்கின் அகலம் கிட்டத்தட்ட இரண்டு பெருவிரல் இருக்கும். (அதாவது ஒன்றரை அணுங்குழை; தமிழ் நீட்டல் அளவையின் படி 8 நெல் = 1 பெருவிரல்; 12 பெருவிரல் = 1 சாண்; 2 சாண் = 1 முழம்; 4 முழம் = 1 கோல் = 66 inches; 4 முழம் வேட்டி, 8 முழம் வேட்டி என்ற சொல்லாட்சிகளை நினைவு கொள்ளுங்கள்.) நீரில் போட்டுப் பின் பாடம் பண்ணுவதால், ஒரு தட்டை நிலை இந்த ஓலைகளுக்குக் கிடைக்கும். வேண்டிய அளவு நீளம் கொண்ட, கூடிய மட்டும் முறுக்கு அடையாத தட்டை ஓலைகளைச் சுவடிக்கெனப் பயன்படுத்த வேண்டும். நறுக்கிய ஓலைகளில் காம்பு இருப்பது இளையர் சுவடிக்கு ஒரு பாதுகாப்பைக் கொடுக்கும். காம்பு இருந்தாலும், இல்லாவிட்டாலும் அளவாக வெட்டிச் செய்யப்பட்ட ஓலைக்கு ஓலை-நறுக்கு என்று பெயர். வெவ்வேறு அளவில் வெவ்வேறு நறுக்கு. (ஓலை என்பது தான் கிட்டத்தட்ட folio என்ற ஆங்கிலச் சொல்லுக்கு இணையாக உள்ள தமிழ்ச்சொல். நறுக்கு என்ற சொல் ஆங்கிலத்தில் உள்ள size என்ற விதப்பான சொல்லுக்கு இணையாக இருக்கும். அளவு என்ற சொல்லை விதப்பாக இல்லாமல் பொதுமையாகப் பயன்படுத்துவது நல்லது. நறுக்குத் தெறித்தாற் போல என்ற சொலவடை size என்பதையே நடைமுறையில் குறிக்கிறது.)

மாணாக்கர் சுவடிகளில் பயன்படும் காம்புள்ள நறுக்குத் தாள்களின் உட்பக்கத்தில் எதுவும் எழுதுவதில்லை. மாறாக காம்பை நீக்கி, ஒவ்வொரு தாளையும் எழுது பொருளாக்கும் இன்னொரு வகையில் தாளின் தடிமனுக்கேற்ப இருபக்கமோ, ஒருபக்கமோ எழுத்தாணியால் எழுதுவது உண்டு. இந்த இரண்டாவது முறைதான் பெரிய சுவடிகளில் பயன்படும் முறை.

இரண்டு முறைகளிலுமே, ஓலையில் எழுதிய எழுத்துத் தெரியவேண்டும் என்பதற்காக கரித்தூளை நீரில் குழைத்து அப்புவது உண்டு. கூடவே மங்கலப் பொருளாய் மஞ்சளையும் அங்கங்கே சேர்த்துத் தடவும் போது படிக்கின்ற ஏடு பார்ப்பதற்கு ஒரு வண்ணக் கோலமாய் இருக்கும். ஓவ்வொரு ஆண்டும் சரசுவதி பூசையை ஓட்டி சந்தனத் தெளிப்பு பெறும் சுவடிகள் இன்னும் கொடுத்து வைத்தவை. அந்தக் கோலம் மணக்கவும் செய்யும்.

ஓலை நறுக்கில் கிட்டத்தட்ட 4-க்கு ஒருபங்கு அளவில் ஒரு துளை செய்யப்பட்டு, ஒரு நுனியில் முடிச்சுப் போட்ட கயிற்றை இந்தத் துளையில் கொடுத்து, ஓலைகள் சேரச்சேர நூற் கயிறால் கட்டுவார்கள். (விவாம் தெரிந்தவர்கள் இந்தத் தொலைவைச் சரியாகச் சொல்லலாம்.) பின்னால் சுவடிகள் சேர்த்துத் துணியால் கட்டப்பட்டு தூக்கிலோ, பரணிலோ இருத்தப் பெறும். எழுதப்பட்டது ஓரிரு ஓலைத்தாள்களாய் இருப்பின், அந்த ஓலைத்தாள்களைச் சுருட்டி ஒரு கொட்டானுக்குள் வைப்பார்கள்; இவற்றை ஓலைச்சுருள் என்று சொல்வார்கள்.

சுவடிகள் பற்றிச் சொன்னது இவ்வளவு போதும் என்று நினைக்கிறேன். இனி பள்ளிக்கூடத்தில் சேருவதைப் பார்ப்போம்.

படிப்பு என்பதை எண்ணும், எழுத்தும் என்பதாக மட்டுமே நம் முன்னோர் கருதவில்லை. பல்வேறு விற்றைகளைக் கற்பதையும் படிப்பு என்றே நினைத்தார்கள். (வில்+து = விற்று>வித்து; விற்று+ஐ = விற்றை>வித்தை; வித்து என்ற விதப்பான சொல்லுக்கு பொதுவான அறிவு என்ற பொருள் வந்தது பின்னால் ஏற்பட்டது. ஒவ்வொரு மொழியிலும் விதப்பான கருத்து/சொற்களில் இருந்தே பொதுமையான கருத்து/சொற்கள் எழும். வடமொழி உள்ள "வித்" என்னும் அடிச்சொல் வித்தைக்கு வேர்ச்சொல்லாக ஆகமுடியாது. வில் எனும் விதப்பு வேரில் இருந்து பிறந்த பொதுமைச்சொல் வித்தை. வில் என்பது காட்டுவிலங்காண்டி காலத்தில் எழுந்த குறுஞ்சொல். வில்விடுவதைச் சொல்லிக் கொடுப்பதே முதலில் அறிந்த வித்தை.) மொத்தத்தில் மாணவன் ஒருவன் ஆளாவதற்குத் தேவையான எல்லாவற்றையுமே ஒரு ஆசான் திண்ணைப் பள்ளிக்கூடத்தில் சொல்லிக் கொடுத்தார். (அய்யன், ஆயன், ஆயான்; அய்யன்>அச்சன்>ஆசான்>ஆசார்யன்>ஆச்சாரியன்>ஆசிரியன், அய்யன்>அஞ்ஞன்>அந்நன்>அண்ணன்>அண்ணாவி, அய்யன்>அஞ்ஞன்>அந்நன்>அந்தன்>அந்தணன்; அய்யன்>அச்சன்>அத்தன்> உப+அத்தன்>உபாத்யன் எனப் பலசொற்கள் தமிழில் இருந்தும் பின் வடமொழி வழியும் கிளைக்கும். எல்லாமே பெரியவன் என்ற பொருளில் எழுந்த சொற்கள். பெருமான்கள் (ஹகரத்தை ருகரத்திற்கு அடுத்துப் பலுக்கிக் கொணர்ந்தால் brahmans>brahmins = பார்ப்பனர்கள் என்று வந்துவிடும். வடபால் மொழிகளில் ஹகர ஒலி இப்படிப் பல இடங்களில் இயல்பாக உள் நுழையும்.) என்ற சொல்லும் பெரியவர்கள் என்ற பொருளையே கொடுக்கும். (தமிழை விடுத்து வடமொழி வழி வேறு வலிந்த பொருளையெல்லாம் கொடுக்கப் பார்ப்பது தேவையல்லாதது. தஞ்சைப் பெருகவுடையார் பிரகதீசர் ஆனது இந்தப் பெருமைச்சொல்லின் திரிவில் தான். சிவபெருமான், விண்ணவப் பெருமாள் எல்லாம் இப்படிச் சொல் விரிந்தது தான். சிவபெருமான் என்ற சொல் தான் வடமொழித் திரிவில் சு ப்ரமண்யன் என்று ஆகும். தமிழ்ச் சேயோனும் சிவனும் ஒன்றில் இருந்து இன்னொன்றாய்க் கிளைத்த கருத்துக்களே.)

நாளாவட்டத்தில் மற்ற கலைகளைச் சொல்லிக் கொடுக்கும் திறன் (அல்லது ஈடுபாடு) இல்லாத ஆசான்கள் (குறிப்பாகப் பார்ப்பன ஆசான்கள்) எண்ணும் எழுத்தும் மட்டுமே சொல்லிக் கொடுத்தார்கள். இதனால் எண்ணையும் எழுத்தையும் சொல்லிக் கொடுப்பதில் இருந்து மற்ற வித்தைகள் சொல்லிக்கொடுக்கும் ஆசான்கள் ஒதுங்கினார்கள். இப்படியாகப் பிள்ளைகளுக்குச் சொல்லிக் கொடுப்பதில் இதற்கு ஒரு ஆசான், அதற்கு ஒரு ஆசான் என்று ஒருவகை விதப்பேற்றம் (specialization) ஏற்பட்டது. இன்றையக் குமரி மாவட்டத்தில் உள்ள கொடிவழி ஆசான்கள் (இவர்களைத் தமிங்கிலப் படுத்தி master என்றும் சிலர் சொல்லுகிறார்கள்) சொல்லிக் கொடுக்கும் வருமக் கலை, சேரலத்தில் உள்ள களரிப் பயிற்று (இதைக் கூட இந்தக் காலத் தமிழ் ஊடகங்கள் களர்ப்பாயட் என்று ஆங்கிலத்தில் இருந்து வழுவாய் உணர்ந்து குழப்படி செய்கிறார்கள்; நல்ல தமிழ்ச்சொல் நாறடிக்கப் படுகிறது. தொப்பூள்க் கொடி அறுந்தால் நம் உறவு ஏதென்றே தெரியாமல் மரபைத் தொலைக்கிற நிலை தமிழ்நாட்டில் விரவிக் கிடக்கிறது.) போன்ற மரபுப் படிப்பு முறைகள், மதுரையை ஒட்டிய தென்பாண்டி மாவட்டங்களில் இருக்கும் சிலம்பப் பயிற்சி, வாள், வேல் போன்ற பயிற்சிகள், இன்னும் இது போன்ற மிச்ச சொச்சங்கள், வெல் பதின்ம (விசய தசமி) நாளின் போது தென்பாண்டி மண்டிலத்தில் கேரளசிங்க வளநாட்டில் (வெள்ளாற்றிற்கும், வைகைக்கும் இடைப்பட்ட பரப்பு இந்த வளநாடு; கிட்டத்தட்ட பழைய இராமநாதபுரம் மாவட்டம்; ஒவ்வொரு வளநாடும் இரு பெரும் ஆறுகளுக்கு இடைப்பட்டவை) செய்யும் கிலுக்கி குத்துதல், அம்பு போடுதல் போன்ற சில சடங்குகள், அகநானூறு 187 -ம் பாடலில் மாமூலனரால் சொல்லப்படும் பூந்தொடை விழா ஆகிய பல்வேறு செய்திகளும் "ஒருகாலத்தில் (குருகுலங்களின் தொடர்ச்சியான) திண்ணைப் பள்ளிக்கூடத்தில் எண்ணும் எழுத்தோடு, களரிப் பயிற்று, வருமக்கலை, வில், வாள் சிலம்பம் போன்ற படைக்கலப் பயிற்சிகள், பச்சிலை மருத்துவம், இன்ன பிறவையும் கற்றுக் கொடுத்திருக்க வேண்டும்" என்று நமக்கு உணர்த்துகின்றன. ஒரு பெரிய படிப்பு மரபு நம் குமுகாயத்தில் எங்கோ தடைப்பட்டுப் போயிருக்கிறது. வரலாற்று ஆராய்ச்சியால் இங்கே மீட்டெடுக்க வேண்டியது நிறைய இருக்கிறது.

இனி திண்ணைப் பள்ளிக்கூடத்தில் சேருகின்ற நிகழ்விற்கும் ஒன்பான் திகழிகள் அல்லது ஒன்பான் இராக்கள் (நவராத்திரி), வெல் பதின்மம் ஆகிவற்றிற்கும் ஏற்பட்ட தொடர்பை வானியல் வழிக் காலங்களின் அடிப்படையில் புரிந்து கொள்ளுவோம். (முன்னால் தமிழ் உலகம் மடற்குழுவில் காலங்கள் என்ற தொடரை எழுதிவந்தேன்; இன்னும் முடிவுறாமல் அந்தத் தொடர் ஒரு தொய்வோடு இருக்கிறது. இங்கே சொல்லுகிற ஒரு சில கருத்துக்கள் அங்கே விரிவாகச் சொல்லப் பட்டன.) அடுத்த மடலில் பார்ப்போம்.

அன்புடன்,
இராம.கி.

In TSCII:

¾¢ñ¨½ô ÀûÇ¢ìܼõ ±ýÀ¨¾ ²ðÎô ÀûÇ¢ìܼõ ±ýÚõ ±í¸û °÷ôÀì¸õ ¦º¡øÖÅÐ ¯ñÎ. ²¦ÉýÈ¡ø «ó¾ì ¸¡Äò¾¢ø þÇõ «¸¨Åô ÀÊô¦ÀøÄ¡õ ²ðÊø ¾¡ý þÕó¾Ð. ²ðÊø ¬º¢Ã¢Â÷ ±ØÐŨ¾, ¿¡õ ӾĢø ÁÉò¾¡ø ¦º¡øÄ¢ô ÀƸ§ÅñÎõ; À¢ý Á½Ä¢ø ±Ø¾¢ô ÀƸ§ÅñÎõ. þЧÀ¡ø, ¬ò¾¢îÝÊ, ¦¸¡ý¨È§Åó¾ý, ãШÃ, ÌÈû ±ýÚ ´ù¦Å¡ýÈ¡öô ÀÊôÀÐ ¦ÀÕÌõ. (ܼ§Å ţθǢø §¾Å¡Ãõ, ¿¡Ä¡Â¢Ãô ÀÛÅø, º¢ÅÒá½õ, Å¢¿¡Â¸÷ «¸Åø ¬¸¢Â¨Å ÀÊôÀÐõ ¯ñÎ.) þÐ ¾Å¢Ã 16õ Å¡öÀ¡Î Ũà ´ôÀ¢ì¸ §ÅñÎõ. Üð¼ø, ¸Æ¢ò¾ø, ¦ÀÕì¸ø, ÅÌò¾ø ±ýÚ ±ñ ¸½ì̸û ¦¸¡ïºí ¦¸¡ïºÁ¡ö ŢâÔõ. Å÷ì¸ ãÄõ, ÀÃôÀÇ×, ¸É «Ç× ±ýÚ ¸½ì¸¢ý ¬ÆÓõ ÜÎõ. ´ù¦Å¡Õ ¸½ìÌõ ¿¨¼Ó¨Èô À¢üº¢Â¢ø ÀÊôÀ§¾ ´Æ¢Â §¾üÈõ, ¿¢åÀ½õ ±ýÈ ¸¢§Ãì¸ Ó¨È¢ø §À¡¸¡Ð. ¸¢ð¼ò¾ð¼ «ùÅÇ× ¸½ì̸Ùõ «ýÈ¡¼ Å¡ú쨸¢ø ¦¾¡¼÷Ò ¦¸¡ñ¼¨Å¡¸§Å þÕìÌõ; ÀȨŸû, ÁÃí¸û, þÂü¨¸ «È¢Å¢Âø ¬¸¢Â ÀÊôÒì¸û Á¡½¡ì¸É¢ý þÂøÀ¡É Å¡ú쨸¢ø ¦¾Ã¢Â§ÅñʨŠ±ýÀ¾¡ø «Åü¨Èò ¾É¢§Â ÀûǢ¢ø ¦º¡øÄ¢ì ¦¸¡ÎìÌõ ÅÆì¸õ ¸¢¨¼Â¡Ð. þôÀÊ ±ñÏõ ±ØòÐõ ¦¾Ã¢óЦ¸¡ûÙÅÐ ´ÕÅ¢¾Á¡É ÀÊôÒ. þý¨ÈìÌô ÀÄÕõ «ò¾¨¸Â ÀÊô¨À ´ôÒì ¦¸¡ûÇ¡Áü §À¡¸Ä¡õ.

²ðÊø ±Ø¾¢ò ¾ÕŨ¾ ¿¡õ Á½Ä¢ø ±ØО¢Ä¢ÕóÐ, ¿¡Ç¡ Åð¼ò¾¢ø ¸ÕõÀĨ¸, «¾¢ø ±Ø¾ô ÀÂýÀÎõ Ì ±É ¿õÓ¨¼Â ±ØÐÒÄý¸û ŢâÔõ. Á½¢ì¸ðÎ ´ÊÔõÀÊ ±ØòÐô À¢üº¢ þÕìÌõ. ´Øí¸¡É ¨¸¦ÂØòÐ ÀÆì¸ò¾¢üÌ ÅÕõŨâø Å¢ÇõÀ¢ ±ØÐõ À¢üº¢Ôõ (¬º¢Ã¢Â÷ ±Ø¾¢Â¾¢ý §Áø «ôÀʧ À¢ýÀüÈ¢ ±ØÐŨ¾ Å¢ÇõÒ¾ø ±ýÚ ¦º¡øÖÅ¡÷¸û), ¾¢ÕõÀ¢ò ¾¢ÕõÀ¢ ÀÄÓ¨È ¯ð¦À¡¾¢ìÌõ (imposition) À¢üº¢Ôõ þÕìÌõ. ¬º¡ý ±Ø¾¢ò ¾Ã, ±Ø¾¢ò ¾Ã, ±ò¾¨É ¿¡ð¸û «ó¾ô ÀûÇ¢ìܼò¾¢ø ÀÊ츢§È¡§Á¡ «¾ü§¸üÀ, ²ðÎî ÍÅÊ¢ý ¸Éõ ÜÊÅÕõ. ÀûÇ¢ìܼò¾¢ø §ºÕõ §À¡Ð ¿¡õ «È¢Ôõ ÍÅÊ ±ØòÐ ¸¢ð¼ò¾ð¼ «¨Ã «ÏíÌ¨Æ («íÌÄõ) «Ç×ìÌì ܼ þÕìÌõ. ¿¡Ç¡¸ ¿¡Ç¡¸, ±Øò¨¾Ôõ ±ñ¨½Ôõ ¿¡õ ¿ýÌ ¸üÚ ÓÊó¾ Ýú¿¢¨Ä¢ø, ²ðÊø ¯ûÇ ±Øò¾¢ý ¿Úì¸Ç× (size) ¦¸¡ïºõ ¦¸¡ïºÁ¡öî ÍÕíÌõ.

¦À¡ÐÅ¡¸ ²Î ±ýÀÐ ¬º¡ý ±ØОüÌ ÁðΧÁ «ó¾ì ¸¡Äò¾¢ø þÕó¾Ð. ±Øò¾¡½¢¨Âô À¢ÊòÐ Á¡½Å÷¸û ²ðÊø ±Ø¾ô ÀƸ¢Â¦¾øÄ¡õ, ±í¸ÙìÌ þÃñÎ ãýÚ ¾¨ÄӨȸû ÓýÉ¡ø ¿¢ýÈ¢Õì¸ §ÅñÎõ. ÒÈɨ¼Â¡¸, «í¦¸¡ýÚõ, þí¦¸¡ýÚÁ¡öò ¾É¢ôÀ¼î º¢Ä÷ ²ðÊø ±Ø¾ô ÀƸ¢Â¢Õì¸Ä¡õ. [±í¸û Àì¸ò¾¢ø, 30, 40 ¬ñθû ÓýÒ Å¨Ã ¾¢ÕÁ½ ţθǢø ±Ø¾ôÀÎõ À½òÐ þÕôÒ ²Î, þ¨ºÌÊÁ¡É ²Î, §À¡ýÈ ÀÃõÀ¨Ã ²Î¸¨Ç ´Õ º¢Ä÷ ÁðÎõ ±Øò¾¡½¢Â¡ø ±Ø¾ì ¸üÈ¢Õó¾¡÷¸û. À¢ýÉ¡ø þ¨ÅÔõ ÁÃìÜúò ¾¡Ç¢ø ÅóÐÅ¢ð¼É. º¢Ä÷ þô§À¡Ð «îºÊòÐõ ¦ÅǢ¢θ¢È¡÷¸û.] ´Õ¸¡Äò¾¢ø Å£ðÎ ÅÃ× ¦ºÄ×ì ¸½ì̸û ܼ À¨É§Â¡¨Ä¢ø ţØò¾¢ø ±Ø¾ôÀðÎ Åó¾É. [¬É¡ø «¾¢ø À¾¢ýÁì ¸½ìÌ (decimal accounting) þÕ측Ð; ±øÄ¡§Á À¢ýÉì ¸½ìÌò¾¡ý, ¸£úÅ¡ö þÄì¸õ ¦¾Ã¢Â¡¾Å÷¸û þó¾ì ¸½ì̸¨Çô ÀÊòÐô ÒâóÐ ¦¸¡ûÇ ÓÊ¡Ð.] ±Øò¾¡½¢ À¢ÊòÐ ±ØÐõ ¸¨Ä þô¦À¡ØÐ ¸¡ôÀ¡üÈô À¼¡Áø «Æ¢óÐ ¦¸¡ñÊÕì¸¢È ´Õ ¸¨Ä. þý¨ÈìÌ «Ð ÀÂýÀ¼¡Áø §À¡ÉÐ ÑðÀ¢ÂÄ¢ý ÀÊ ºÃ¢¾¡ý ±ýÈ¡Öõ, ÅÃÄ¡üÚò ¾ý¨Á ¸Õ¾¢ þÐ §À¡ýÈ ¸¨Ä¸¨Ç ¸¡ðº¢ì ܼí¸Ç¢Ä¡ÅÐ ¸¡ôÀ¡üȢ¢Õì¸Ä¡õ.

±Øò¾¡½¢ ±ýÀ¨¾ ¿¢¸ñθǢø µ¨Ä ¾£ðÎõ À¨¼, ¸ñ¼õ, °º¢, þ§Ä¨¸, ±ØЧ¸¡ø, àÄ¢¨¸ (и¢Ä¢¨¸) ±ý¦ÈøÄ¡õ ¦º¡øÖÅ¡÷¸û. ¸ñ¼õ, °º¢ ±ýÀÉ Ü÷¨Áô ¦À¡Õ¨Çì ÌȢ츢ýÈÉ. þø ±ýÈ §ÅÕõ ÌÈ¢, Ü÷ ±ýÈ Ü÷¨Áô ¦À¡Õ¨Ç§Â ÌȢ츢ÈÐ. þø>þÄìÌ = ÌÈ¢; þø¦ÄýÛõ §Åâø þÕóÐ À¢Èó¾ ¦º¡ø¾¡ý þø>þØ>±Ø>±Øоø; «§¾ §À¡Ä þÄ츢ò¾ø ±ýÀÐõ ±Øо¨Ä§Â ÌÈ¢ôÀ¢Îõ. þØôÀ¢ÂРĢÀ¢ ±ýÚ Å¼À¡ø ¾¢Ã¢Ôõ. þÄ츢ÂÐ þĨ¸>þ§Ä¨¸>þ§Ã¨¸ ±ýÚõ ¦À¡Õû ŢâÔõ; þÄÌÀÅý>þ§Ä¸ý>þ§Ä̸ý ±ýÚõ ¦º¡øÄô ÀÎÅ¡ý.

²ðÎîÍÅʸǢø þÃñΠŢ¾í¸û ¯ñÎ. ´ýÚ ÀûÇ¢ìܼò¾¢ø Á¡½¡ì¸÷¸û ÀÊì¸ô ÀÆÌõ ÍÅÊ. þý¦É¡ýÚ ¦Àâ áø¸û, ¸½ì̸û ±ØÐõ ÍÅÊ.

ӾĢø ÍÅʸû ÀüÈ¢ ´Õ º¢Ä «ÊôÀ¨¼î ¦ºö¾¢¸¨Çô À¡÷ô§À¡õ. ±ôÀÊ Áñ½¢ø «Ê À¾¢òÐò ¾¼õ ¦À¡È¢ôÀ¨¾î ÍÅÎ ±ýÚ ¦º¡ø¸¢§È¡§Á¡, «§¾ §À¡Ä ±Øò¾¢ý ¾¼õ ¦À¡È¢ôÀÐõ ÍÅÊ ±ýÚ ¬Â¢üÚ. ¸¡ø ¾¼õ ±ôÀÊ ´ýÈ¢üÌ §Áø «¨Á¸¢È§¾¡ (̨Èó¾Ð þÃñÎ ÍÅθû ÅÕõ þø¨Ä¡?) «Ð §À¡Ä ÍÅÊ ±ýÈ ¦º¡øÖõ þÃñ¨¼Ôõ, þÃñÊüÌõ §ÁÖõ ¯ûÇ ¦¾¡Ì¾¢¨ÂÔõ ÌȢ츢ÈÐ. ¿¡Ç¡Åð¼ò¾¢ø ÍÅÊ ±ýÈ¡§Ä þÃñÎ ±ýÈ ¦À¡Õû ܼ ²üÀð¼Ð. ÍÅÊ>§º¡Ê ±ýÚõ ¾¢Ã¢Ôõ.

ÍÅÊ ±ýÀÐ µ¨Ä¸Ç¡ø ¬ÉÐ. µ¨Ä ±ýÈ ¦º¡øÄ¢üÌò ¾¡û, þ¾ú, ²Î, Á¼ø, Á¡¨Æ, §¾¡Î ±ýÈ ´Õ¦À¡Õû þ¨½î¦º¡ü¸Ùõ ¯ñÎ. À¨É µ¨Ä¢ø ´Õ ¸¡õÒ, þÃñÎ ¾¡û¸û þÕìÌõ. (¾¡û¸û ±ýÈ ¦º¡øÄ¢ý ¦À¡ÕðÀ¡Î À¨É§Â¡¨Ä§Â¡Î ¦¾¡¼í¸¢ÂÐ. ¾¡û>¾¡¨Æ Á¼ø ±ýÈ ¦º¡øġ𺢠þý¦É¡Õ Ũ¸. þý¨ÈÂò ¾Á¢Æ¢ø ¾¡û ±ýÈ ¦º¡ø ÁÃìÜÆ¡ø ¬É ±ØÐ ÀÃô¨Àì ÌÈ¢ôÀ¾¡ö ¦À¡Õû ¿£ðº¢ ¦ÀüÚ Å¢ð¼Ð.) À¨É µ¨Ä¢ý ¸¡õ¨À ±Î측Áø ¿£Ã¢ø °Èô§À¡ðÎô À¢ý µÃí¸¨Ç ¾ÁìÌ §ÅñÊ «Ç× ¿Ú츢ô À¡¼õ Àñ½¢, À¢ÈÌ Á¡½¡ì¸÷ ÍÅÊ¢ø ÀÂýÀÎòÐÅ¡÷¸û. µ¨Ä¨Â ´ØíÌÈ ¿Ú츢§Â¡, ÓÈ¢ò§¾¡, ¸¢ûÇ¢§Â¡ ¦ºöž¡ø, µ¨ÄìÌ ¿ÚìÌ, ÓÈ¢, ¸¢ûÇ¡ìÌ ±ýÚõ ¦ÀÂÕñÎ.

´Õ µ¨Ä¢ý ¿ÚìÌ ´Õ ÓÆõ (¸¢ð¼ò¾ð¼ 18 «Ïį́Æ) þÕìÌõ. ¿Ú츢ý «¸Äõ ¸¢ð¼ò¾ð¼ þÃñÎ ¦ÀÕÅ¢Ãø þÕìÌõ. («¾¡ÅÐ ´ýȨà «Ïį́Æ; ¾Á¢ú ¿£ð¼ø «Ç¨Å¢ý ÀÊ 8 ¦¿ø = 1 ¦ÀÕÅ¢Ãø; 12 ¦ÀÕÅ¢Ãø = 1 º¡ñ; 2 º¡ñ = 1 ÓÆõ; 4 ÓÆõ = 1 §¸¡ø = 72 inches; 4 ÓÆõ §ÅðÊ, 8 ÓÆõ §ÅðÊ ±ýÈ ¦º¡øġ𺢸¨Ç ¿¢¨É× ¦¸¡ûÙí¸û.) ¿£Ã¢ø §À¡ðÎô À¢ý À¡¼õ ÀñÏž¡ø, ´Õ ¾ð¨¼ ¿¢¨Ä þó¾ µ¨Ä¸ÙìÌì ¸¢¨¼ìÌõ. §ÅñÊ «Ç× ¿£Çõ ¦¸¡ñ¼, ÜÊ ÁðÎõ ÓÚìÌ «¨¼Â¡¾ ¾ð¨¼ µ¨Ä¸¨Çî ÍÅÊ즸Éô ÀÂýÀÎò¾ §ÅñÎõ. ¿Ú츢 µ¨Ä¸Ç¢ø ¸¡õÒ þÕôÀÐ þ¨ÇÂ÷ ÍÅÊìÌ ´Õ À¡Ð¸¡ô¨Àì ¦¸¡ÎìÌõ. ¸¡õÒ þÕó¾¡Öõ, þøÄ¡Å¢ð¼¡Öõ «ÇÅ¡¸ ¦ÅðÊî ¦ºöÂôÀð¼ µ¨ÄìÌ µ¨Ä-¿ÚìÌ ±ýÚ ¦ÀÂ÷. ¦Åù§ÅÚ «ÇÅ¢ø ¦Åù§ÅÚ ¿ÚìÌ. (µ¨Ä ±ýÀÐ ¾¡ý ¸¢ð¼ò¾ð¼ folio ±ýÈ ¬í¸¢Äî ¦º¡øÖìÌ þ¨½Â¡¸ ¯ûÇ ¾Á¢ú¡ø. ¿ÚìÌ ±ýÈ ¦º¡ø ¬í¸¢Äò¾¢ø ¯ûÇ size ±ýÈ Å¢¾ôÀ¡É ¦º¡øÖìÌ þ¨½Â¡¸ þÕìÌõ. «Ç× ±ýÈ ¦º¡ø¨Ä Å¢¾ôÀ¡¸ þøÄ¡Áø ¦À¡Ð¨Á¡¸ô ÀÂýÀÎòÐÅÐ ¿øÄÐ. ¿ÚìÌò ¦¾È¢ò¾¡ü §À¡Ä ±ýÈ ¦º¡ÄŨ¼ size ±ýÀ¨¾§Â ¿¨¼Ó¨È¢ø ÌȢ츢ÈÐ.)

Á¡½¡ì¸÷ ÍÅʸǢø ÀÂýÀÎõ ¸¡õÒûÇ ¿ÚìÌò ¾¡û¸Ç¢ý ¯ðÀì¸ò¾¢ø ±Ð×õ ±ØО¢ø¨Ä. Á¡È¡¸ ¸¡õ¨À ¿£ì¸¢, ´ù¦Å¡Õ ¾¡¨ÇÔõ ±ØÐ ¦À¡ÕÇ¡ìÌõ þý¦É¡Õ Ũ¸Â¢ø ¾¡Ç¢ý ¾ÊÁÛ째üÀ þÕÀ츧Á¡, ´ÕÀ츧Á¡ ±Øò¾¡½¢Â¡ø ±ØÐÅÐ ¯ñÎ. þó¾ þÃñ¼¡ÅРӨȾ¡ý ¦Àâ ÍÅʸǢø ÀÂýÀÎõ Ó¨È.

þÃñΠӨȸǢ֧Á, µ¨Ä¢ø ±Ø¾¢Â ±ØòÐò ¦¾Ã¢Â§ÅñÎõ ±ýÀ¾ü¸¡¸ ¸Ã¢òà¨Ç ¿£Ã¢ø ̨ÆòÐ «ôÒÅÐ ¯ñÎ. ܼ§Å Áí¸Äô ¦À¡ÕÇ¡ö ÁﺨÇÔõ «í¸í§¸ §º÷òÐò ¾¼×õ §À¡Ð ÀÊ츢ýÈ ²Î À¡÷ôÀ¾üÌ ´Õ Åñ½ì §¸¡ÄÁ¡ö þÕìÌõ. µù¦Å¡Õ ¬ñÎõ ºÃÍž¢ ⨺¨Â µðÊ ºó¾Éò ¦¾Ç¢ôÒ ¦ÀÚõ ÍÅʸû þýÛõ ¦¸¡ÎòÐ ¨Åò¾¨Å. «ó¾ì §¸¡Äõ Á½ì¸×õ ¦ºöÔõ.

µ¨Ä ¿Ú츢ø ¸¢ð¼ò¾ð¼ 4-ìÌ ´ÕÀíÌ «ÇÅ¢ø ´Õ Ð¨Ç ¦ºöÂôÀðÎ, ´Õ Ñɢ¢ø ÓÊîÍô §À¡ð¼ ¸Â¢ü¨È þó¾ò ШÇ¢ø ¦¸¡ÎòÐ, µ¨Ä¸û §ºÃà áü ¸Â¢È¡ø ¸ðÎÅ¡÷¸û. (Ţšõ ¦¾Ã¢ó¾Å÷¸û þó¾ò ¦¾¡¨Ä¨Åî ºÃ¢Â¡¸î ¦º¡øÄÄ¡õ.) À¢ýÉ¡ø ÍÅʸû §º÷òÐò н¢Â¡ø ¸ð¼ôÀðÎ à츢§Ä¡, Àý¢§Ä¡ þÕò¾ô ¦ÀÚõ. ±Ø¾ôÀð¼Ð µÃ¢Õ µ¨Äò¾¡û¸Ç¡ö þÕôÀ¢ý, «ó¾ µ¨Äò¾¡û¸¨Çî ÍÕðÊ ´Õ ¦¸¡ð¼¡ÛìÌû ¨ÅôÀ¡÷¸û; þÅü¨È µ¨ÄîÍÕû ±ýÚ ¦º¡øÅ¡÷¸û.

ÍÅʸû ÀüÈ¢î ¦º¡ýÉÐ þùÅÇ× §À¡Ðõ ±ýÚ ¿¢¨É츢§Èý. þÉ¢ ÀûÇ¢ìܼò¾¢ø §ºÕŨ¾ô À¡÷ô§À¡õ.

ÀÊôÒ ±ýÀ¨¾ ±ñÏõ, ±ØòÐõ ±ýÀ¾¡¸ ÁðΧÁ ¿õ Óý§É¡÷ ¸Õ¾Å¢ø¨Ä. Àø§ÅÚ Å¢ü¨È¸¨Çì ¸üÀ¨¾Ôõ ÀÊôÒ ±ý§È ¿¢¨Éò¾¡÷¸û. (Å¢ø+Ð = Å¢üÚ>Å¢òÐ; Å¢üÚ+³ = Å¢ü¨È>Å¢ò¨¾; Å¢òÐ ±ýÈ Å¢¾ôÀ¡É ¦º¡øÖìÌ ¦À¡ÐÅ¡É «È¢× ±ýÈ ¦À¡Õû Åó¾Ð À¢ýÉ¡ø ²üÀð¼Ð. ´ù¦Å¡Õ ¦Á¡Æ¢Â¢Öõ Å¢¾ôÀ¡É ¸ÕòÐ/¦º¡ü¸Ç¢ø þÕó§¾ ¦À¡Ð¨ÁÂ¡É ¸ÕòÐ/¦º¡ü¸û ±Øõ. ż¦Á¡Æ¢ ¯ûÇ "Å¢ò" ±ýÛõ «Ê¡ø Å¢ò¨¾ìÌ §Å÷¡øÄ¡¸ ¬¸ÓÊ¡Ð. Å¢ø ±Ûõ Å¢¾ôÒ §Åâø þÕóÐ À¢Èó¾ ¦À¡Ð¨Á¡ø Å¢ò¨¾. Å¢ø ±ýÀÐ ¸¡ðÎÅ¢Äí¸¡ñÊ ¸¡Äò¾¢ø ±Øó¾ ÌÚ了¡ø. Å¢øÅ¢ÎŨ¾î ¦º¡øÄ¢ì ¦¸¡ÎôÀ§¾ ӾĢø «È¢ó¾ Å¢ò¨¾.) ¦Á¡ò¾ò¾¢ø Á¡½Åý ´ÕÅý ¬Ç¡Å¾üÌò §¾¨ÅÂ¡É ±øÄ¡Åü¨ÈÔ§Á ´Õ ¬º¡ý ¾¢ñ¨½ô ÀûÇ¢ìܼò¾¢ø ¦º¡øÄ¢ì ¦¸¡Îò¾¡÷. («öÂý, ¬Âý, ¬Â¡ý; «öÂý>«îºý>¬º¡ý>¬º¡÷Âý>¬îº¡Ã¢Âý>¬º¢Ã¢Âý, «öÂý>«ï»ý>«ó¿ý>«ñ½ý>«ñ½¡Å¢, «öÂý>«ï»ý>«ó¿ý>«ó¾ý>«ó¾½ý; «öÂý>«îºý>«ò¾ý> ¯À+«ò¾ý>¯À¡òÂý ±Éô ÀĦº¡ü¸û ¾Á¢Æ¢ø þÕóÐõ À¢ý ż¦Á¡Æ¢ ÅÆ¢Ôõ ¸¢¨ÇìÌõ. ±øÄ¡§Á ¦ÀâÂÅý ±ýÈ ¦À¡ÕÇ¢ø ±Øó¾ ¦º¡ü¸û. ¦ÀÕÁ¡ý¸û (†¸Ãò¨¾ Õ¸Ãò¾¢üÌ «ÎòÐô ÀÖì¸¢ì ¦¸¡½÷ó¾¡ø brahmans>brahmins = À¡÷ôÀÉ÷¸û ±ýÚ ÅóÐÅ¢Îõ. żÀ¡ø ¦Á¡Æ¢¸Ç¢ø †¸Ã ´Ä¢ þôÀÊô ÀÄ þ¼í¸Ç¢ø þÂøÀ¡¸ ¯û ѨÆÔõ.) ±ýÈ ¦º¡øÖõ ¦ÀâÂÅ÷¸û ±ýÈ ¦À¡Õ¨Ç§Â ¦¸¡ÎìÌõ. (¾Á¢¨Æ Å¢ÎòРż¦Á¡Æ¢ ÅÆ¢ §ÅÚ ÅÄ¢ó¾ ¦À¡Õ¨Ç¦ÂøÄ¡õ ¦¸¡Îì¸ô À¡÷ôÀÐ §¾¨ÅÂøÄ¡¾Ð. ¾ï¨ºô ¦Àոר¼Â¡÷ À¢Ã¸¾£º÷ ¬ÉÐ þó¾ô ¦ÀÕ¨Á¡øÄ¢ý ¾¢Ã¢Å¢ø ¾¡ý. º¢Å¦ÀÕÁ¡ý, Å¢ñ½Åô ¦ÀÕÁ¡û ±øÄ¡õ þôÀÊî ¦º¡ø Ţâó¾Ð ¾¡ý. º¢Å¦ÀÕÁ¡ý ±ýÈ ¦º¡ø ¾¡ý ż¦Á¡Æ¢ò ¾¢Ã¢Å¢ø Í ôÃÁñÂý ±ýÚ ¬Ìõ. ¾Á¢úî §º§Â¡Ûõ º¢ÅÛõ ´ýÈ¢ø þÕóÐ þý¦É¡ýÈ¡öì ¸¢¨Çò¾ ¸ÕòÐ츧Ç.)

¿¡Ç¡Åð¼ò¾¢ø ÁüÈ ¸¨Ä¸¨Çî ¦º¡øÄ¢ì ¦¸¡ÎìÌõ ¾¢Èý («øÄÐ ®ÎÀ¡Î) þøÄ¡¾ ¬º¡ý¸û (ÌÈ¢ôÀ¡¸ô À¡÷ôÀÉ ¬º¡ý¸û) ±ñÏõ ±ØòÐõ ÁðΧÁ ¦º¡øÄ¢ì ¦¸¡Îò¾¡÷¸û. þ¾É¡ø ±ñ¨½Ôõ ±Øò¨¾Ôõ ¦º¡øÄ¢ì ¦¸¡ÎôÀ¾¢ø þÕóÐ ÁüÈ Å¢ò¨¾¸û ¦º¡øĢ즸¡ÎìÌõ ¬º¡ý¸û ´Ðí¸¢É¡÷¸û. þôÀÊ¡¸ô À¢û¨Ç¸ÙìÌî ¦º¡øÄ¢ì ¦¸¡ÎôÀ¾¢ø þ¾üÌ ´Õ ¬º¡ý, «¾üÌ ´Õ ¬º¡ý ±ýÚ ´ÕŨ¸ Å¢¾ô§ÀüÈõ (specialization) ²üÀð¼Ð. þý¨ÈÂì ÌÁâ Á¡Åð¼ò¾¢ø ¯ûÇ ¦¸¡ÊÅÆ¢ ¬º¡ý¸û (þÅ÷¸¨Çò ¾Á¢í¸¢Äô ÀÎò¾¢ master ±ýÚõ º¢Ä÷ ¦º¡øÖ¸¢È¡÷¸û) ¦º¡øÄ¢ì ¦¸¡ÎìÌõ ÅÕÁì ¸¨Ä, §ºÃÄò¾¢ø ¯ûÇ ¸Çâô À¢üÚ (þ¨¾ì ܼ þó¾ì ¸¡Äò ¾Á¢ú °¼¸í¸û ¸Ç÷ôÀ¡Âð ±ýÚ ¬í¸¢Äò¾¢ø þÕóÐ ÅØÅ¡ö ¯½÷óÐ ÌÆôÀÊ ¦ºö¸¢È¡÷¸û; ¿øÄ ¾Á¢ú¡ø ¿¡ÈÊì¸ô Àθ¢ÈÐ. ¦¾¡ôâûì ¦¸¡Ê «Úó¾¡ø ¿õ ¯È× ²¦¾ý§È ¦¾Ã¢Â¡Áø ÁèÀò ¦¾¡¨Äì¸¢È ¿¢¨Ä ¾Á¢ú¿¡ðÊø Å¢ÃÅ¢ì ¸¢¼ì¸¢ÈÐ.) §À¡ýÈ ÁÃÒô ÀÊôÒ Ó¨È¸û, ÁШè ´ðÊ ¦¾ýÀ¡ñÊ Á¡Åð¼í¸Ç¢ø þÕìÌõ º¢ÄõÀô À¢üº¢, Å¡û, §Åø §À¡ýÈ À¢üº¢¸û, þýÛõ þÐ §À¡ýÈ Á¢îº ¦º¡îºí¸û, ¦Åø À¾¢ýÁ (Å¢ºÂ ¾ºÁ¢) ¿¡Ç¢ý §À¡Ð ¦¾ýÀ¡ñÊ ÁñÊÄò¾¢ø §¸ÃǺ¢í¸ ÅÇ¿¡ðÊø (¦ÅûÇ¡üÈ¢üÌõ, ¨Å¨¸ìÌõ þ¨¼ôÀð¼ ÀÃôÒ þó¾ ÅÇ¿¡Î; ¸¢ð¼ò¾ð¼ À¨Æ þáÁ¿¡¾ÒÃõ Á¡Åð¼õ; ´ù¦Å¡Õ ÅÇ¿¡Îõ þÕ ¦ÀÕõ ¬Ú¸ÙìÌ þ¨¼ôÀð¼¨Å) ¦ºöÔõ ¸¢Ö츢 Ìòоø, «õÒ §À¡Î¾ø §À¡ýÈ º¢Ä º¼í̸û, «¸¿¡ëÚ 187 -õ À¡¼Ä¢ø Á¡ãÄÉáø ¦º¡øÄôÀÎõ â󦾡¨¼ Ţơ ¬¸¢Â Àø§ÅÚ ¦ºö¾¢¸Ùõ "´Õ¸¡Äò¾¢ø (ÌÕÌÄí¸Ç¢ý ¦¾¡¼÷¡É) ¾¢ñ¨½ô ÀûÇ¢ìܼò¾¢ø ±ñÏõ ±Øò§¾¡Î, ¸Çâô À¢üÚ, ÅÕÁ츨Ä, Å¢ø, Å¡û º¢ÄõÀõ §À¡ýÈ À¨¼ì¸Äô À¢üº¢¸û, À¨Ä ÁÕòÐÅõ, þýÉ À¢È¨ÅÔõ ¸üÚì ¦¸¡Îò¾¢Õì¸ §ÅñÎõ" ±ýÚ ¿ÁìÌ ¯½÷òи¢ýÈÉ. ´Õ ¦Àâ ÀÊôÒ ÁÃÒ ¿õ ÌÓ¸¡Âò¾¢ø ±í§¸¡ ¾¨¼ôÀðÎô §À¡Â¢Õ츢ÈÐ. ÅÃÄ¡üÚ ¬Ã¡ö¡ø þí§¸ Á£ð¦¼Îì¸ §ÅñÊÂÐ ¿¢¨È þÕ츢ÈÐ.

þÉ¢ ¾¢ñ¨½ô ÀûÇ¢ìܼò¾¢ø §ºÕ¸¢ýÈ ¿¢¸úÅ¢üÌõ ´ýÀ¡ý ¾¢¸Æ¢¸û «øÄÐ ´ýÀ¡ý þáì¸û (¿Åáò¾¢Ã¢), ¦Åø À¾¢ýÁõ ¬¸¢ÅüÈ¢üÌõ ²üÀð¼ ¦¾¡¼÷¨À Å¡É¢Âø ÅÆ¢ì ¸¡Äí¸Ç¢ý «ÊôÀ¨¼Â¢ø ÒâóÐ ¦¸¡û٧šõ. (ÓýÉ¡ø ¾Á¢ú ¯Ä¸õ Á¼üÌØÅ¢ø ¸¡Äí¸û ±ýÈ ¦¾¡¼¨Ã ±Ø¾¢Åó§¾ý; þýÛõ ÓÊ×È¡Áø «ó¾ò ¦¾¡¼÷ ´Õ ¦¾¡ö§Å¡Î þÕ츢ÈÐ. þí§¸ ¦º¡øÖ¸¢È ´Õ º¢Ä ¸ÕòÐì¸û «í§¸ Ţâš¸î ¦º¡øÄô Àð¼É.) «Îò¾ Á¼Ä¢ø À¡÷ô§À¡õ.

«ýÒ¼ý,
þáÁ.¸¢.

Wednesday, November 17, 2004

திண்ணைப் பள்ளிக்கூடம் - 1

முதலில் திண்ணை என்றால் என்னவென்று பார்ப்போம்.

நாட்டுப் புறங்களில் குறிப்பாகத் தென்தமிழ்நாட்டில் குடியிருக்கும் வீடு என்பது வானத்தைப் பார்த்த ஒரு முற்றம்; முற்றத்தைச் சுற்றிலும் ஒரு வளவு; வளவில் பல தூண்கள். வளவில் தூண்களின் மேல் ஒரு தாழ்வாரம். இன்னும் வளவைச் சுற்றிச் சில அறைகள் (இவையும் சில மாவட்டங்களில் வீடுகள் என்றே கூடச் சொல்லப் பெறும்.) வளவிற்கும் முன்னால் பட்டாலை; வளவிற்குப் பின்னால் இரண்டாம் கட்டு; (அடுப்படி என்பது இரண்டாம் கட்டில் இருக்கும்.) பட்டாலை, வளவு இரண்டையும் மூடுவது போல் தேக்கால் ஆன வீட்டின் கனத்த பெருங்கதவு இருக்கும். பெருங்கதவிற்கும் முன்னால் வீட்டின் முகப்பில் திண்ணை இருக்கும். திண்ணைக்கும் முன்னால் வெளிமுற்றம்; அதற்கும் முன்னால் வாசல். வாசலுக்கு முன்னால் தெரு அல்லது வீதி. திண்ணை என்பது வீட்டிற்குள் இருப்பவர்களுக்கு மட்டுமல்லாது வந்து போகும் வெளியாட்கள், விருந்தினருக்கும் உள்ளது தான்.

இங்கே நான் விரித்திருக்கும் அடவு (design) கூட்டியோ, குறைந்தோ, செல்வநிலைக்குத் தக்க மாறுபடும். பெரும்பாலும் காவிரி ஆற்றிற்குத் தெற்கே உள்ள வீடுகள் மேலே சொன்ன கூறுகளின் ஒருசிலவற்றையாவது கொண்டிருக்கும். தமிழ்நாட்டு வீடுகளின் அமைப்பை ஆராய்ந்து ஒரு கட்டிடவியலார் கட்டுரை படைப்பது நலமாய் இருக்கும். அது என்ன குறையோ தெரியவில்லை, அப்படி எல்லாம் செய்வதற்கு யாரும் முன்வர மாட்டேன் என்கிறார்கள். நம் எத்தனையோ மரபுகளைத் தொலைத்துக் கொண்டிருப்பதில் இதுவும் ஒன்று.

வளவு என்பது விழா நாட்கள் தவிர்த்து மற்ற நாட்களில் வீட்டாருக்கும், மிக நெருங்கிய வெளியாட்களுக்கு மட்டுமே உள்ளது. வளவிற்குள் மற்றவர்கள் சட்டென்று நுழைய மாட்டார்கள். திண்ணை என்பது யார் வேண்டுமானாலும் வரக் கூடியது. (கிட்டத்தட்ட இந்தக் கால drawing room போல அதனைப் புழங்கிக் கொள்வார்கள்.) திண்ணையில் சாய்ந்துகொள்ள சுவரோடு சுதையால் ஆன திண்டு இருக்கும். வீட்டின் தலைவர் பெரும்பாலும் பகல் நேரத்தில் திண்டில் சாய்ந்த வண்ணம் வெற்றிலைச் செல்லத்தோடு உட்கார்ந்து இருப்பார். வருவோர், போவோர் அவரோடு உரையாடுவது அங்கே தான்.

இது போன்ற வீடுகள் முன்னே சொன்னது போல் செல்வ நிலைக்குத் தக்க விரிந்தும் சுருங்கியும் இருந்தன. ஊரில் ஆசிரியர் வீட்டிலும் திண்ணைகள் இருந்தன. இந்தத் திண்ணைகளில் ஆசிரியர்கள் பள்ளிக் கூடங்களை வைத்து இருந்தனர். திண்ணையும் வெளிமுற்றமும் கலைகள் மற்றும் படிப்பிற்குப் போதுமானதாய் இருந்தன. ஒரு சிற்றூர் என்பதில் 20, 30 மாணாக்கர் இருப்பதே அரிது. அவருக்கு இந்த இடம் போதும். வெவ்வேறு அகவையில் இருந்த மாணவருக்கு ஒரே ஆசிரியர் பல்வேறு பாடங்களைச் சொல்லி வந்தார்.

இந்தப் பள்ளிக்கூடங்களில் ஆசிரியராய் இருந்தவர்கள் அந்தணர் அல்லது அறிவர் என்பவர் ஆவர். (அறிவர் என்பவரை குமரியில் வள்ளுவர் என்பார்கள்; திருக்குறள் ஆசிரியரும் இப்படி ஒரு குடியில் வந்தவர் தான். வள்ளுவர் என்பது அவருடைய இயற்பெயரல்ல. அது ஒரு குடிப்பெயர்; கிட்டத்தட்ட ஆசிரியர் - scholar என்றே நாம் வழக்கில் பொருள் கொள்ள வேண்டும்.) அந்தணர்/அறிவர் (scholar) தான் ஒரு ஊரில் உள்ள பிள்ளைகளுக்குப் பாடம் சொல்லிக் கொடுப்பவர்கள். இந்த ஆசிரியர்கள் பெருமானராய் (பிராமணராய்) இருக்க வேண்டிய தேவையில்லை. பார்ப்பனர் அல்லாதோரும் அந்தணர்/அறிவர் தான். பழந்தமிழ்ப் பாடல்களைச் சரியாகப் புரிந்து கொள்ளாத காரணத்தால் சிலருக்கு இந்தக் குழப்பம் ஏற்பட்டு, அந்தணர் என்றால் பார்ப்பனர் என்று சொல்ல முற்பட்டார்கள். அந்தணருக்குள் சில பார்ப்பனர் இருக்கலாம். ஆனால், பார்ப்பனர் எல்லோருமே அந்தணர் என்ற சொல்லுக்கு இணையானவர் அல்லர். (பார்ப்பனர் என்ற சொல்லின் பிறப்பை இங்கு சொல்ல முற்படவில்லை.)

இனி அந்தணர் என்ற சொல்லின் பிறப்பைப் பார்ப்போம். அந்தை என்பதற்கு அப்பன் என்றே பொருள் உண்டு என்று புலவர் இளங்குமரன் ஆழ்ந்த விளக்கத்தோடு நிறுவியிருக்கிறார். (தம்+அந்தை>தமந்தை>தகந்தை>தந்தை என்ற வளர்ச்சி தம்+அப்பன்>தமப்பன்>தகப்பன் என்பதைப்போல.) அந்தை என்ற சொல் வேறு ஒரு ஈறு பெற்று அந்தன் என்றும் ஆக முடியும். இது அத்தன்>அச்சன் என்ற சொற்களோடு மெல்லியல் இணை கொண்டது. ஐயன் என்பதும் தமிழில் அப்பன் என்ற பொருள் கொள்ளும். ஐயனில் இருந்து பணிவு காரணமாய் ஐயனார் என்ற சொல் பிறப்பது போல் அந்தனில் இருந்து மரியாதை கருதிப் பிறந்த சொல் அந்தனர். இதில் னகரம் திரிந்து அந்தணர் என்று ஆகும். அந்தன்>அந்தனர்>அந்தணர். அம்+தணர் என்று வலிந்து பிரித்துப் பொருள் கொள்வதெல்லாம் சங்கத முறையில் தமிழ்ச் சொல்லைக் குதறுவது ஆகும்.

பொதுவாக ஒரு குமுகத்தில் ஆசிரியர் என்பவரும் தந்தையின் இடத்தில் வைத்து போற்றப் படுகிறார். இவர் கல்விக்கு, படிப்பிற்கு, பண்பாடு சொல்லித் தருவதற்குத் தந்தை. மலையாளத்தில் கத்தோலிக்கத் துறவியும் father/அச்சன் என்று சொல்லப் படுவது இப்படித்தான். அதே போல ஆசிரியராய், படித்தவராய், அறிவை ஆள்பவராய், ஊரில் நல்லது கெட்டது பற்றி மக்களை நல்வழிப்படுத்துவராய் இருந்தவரும் அந்தணர் என்று தமிழில் சொல்லப் படுகிறார். கல்வி அச்சன்களே ஆசான்களாக மலையாளத்தில் அறியப் படுகிறார்கள். ஆசான் என்பவன் சங்கத வழக்கப் படி ரகர, யகரச் சேர்க்கையில் ஆச்சார்யன் ஆவான். மீண்டும் தமிழ்ப்படுத்தி ஆசிரியன் ஆவான். (மலையாள, கன்னட இன்னும் மற்ற தமிழிய மரபுகளை ஒதுக்கிவிட்டுப் பழந்தமிழ் மரபுகளை மீட்டெடுக்க முடியாது.)

தமிழ்நாட்டில் அந்தணர்/அறிவராய் இருந்தவர் ஒரு சில இடங்களில் ஓதுவாராயும், இன்னும் சில இடங்களில் வெவ்வேறு தொழில் தெரிந்தவராயும் மாறிப் போனார்கள். இன்னும் சிலர் பார்ப்பனருக்குள்ளேயே கரைந்தும் (குறிப்பாக சிவாச்சாரியார்கள் / ஆதி சைவர்கள் / சோழியர் எனச் சில கூட்டத்தார்) போயிருக்கலாம். ஆனால் ஆழப் பார்த்தால் இப்படி ஒரு குடியினர் இருந்தது நன்றாகவே புலப்படுகிறது. இதை ஏன் சொல்லுகிறேன் என்றால் திண்ணைப் பள்ளிக்கூடம் என்ற மரபோடு அந்தணர் என்பவர் பின்னிப் பிணைந்து இருக்கிறார்கள்.

எப்படிச் சமணத்துறவிகளோடு பள்ளிக்கூடம் என்ற சொல் தொடர்பு கொண்டதோ அதே போன்றது இது. இந்தத் திண்ணைப் பள்ளிக்கூடங்கள் எழுத்தும் எண்ணும் அல்லாது இலக்கியம், இலக்கணம், நீதிநெறி, கலைகள் ஆகியவற்றைக் கற்றுத் தந்த காலம் ஒன்று இருந்திருக்க வேண்டும். அவற்றின் மிச்ச சொச்சங்களை இன்னும் தென்குமரி மாவட்டத்திலும், கேரளத்திலும் பார்க்கிறோம். வர்மக்கலை, களரிப்பயிற்று, சிலம்பாட்டம் இன்னும் இவற்றைப் போல் பிறவும் திண்ணைப் பள்ளிக்கூடத்தில் சொல்லிக் கொடுக்கப் பட்டிருக்க வேண்டும். இது ஏன் என்று பின்னால் விளக்குகிறேன்.

இனி திண்ணைப் பள்ளிக்கூடம் பற்றிய என்னுடைய பட்டறிவை அடுத்த மடலில் சொல்ல முற்படுகிறேன்.

அன்புடன்,
இராம.கி.

In TSCII:

ӾĢø ¾¢ñ¨½ ±ýÈ¡ø ±ýɦÅýÚ À¡÷ô§À¡õ.

¿¡ðÎô ÒÈí¸Ç¢ø ÌÈ¢ôÀ¡¸ò ¦¾ý¾Á¢ú¿¡ðÊø ÌÊ¢ÕìÌõ ţΠ±ýÀÐ Å¡Éò¨¾ô À¡÷ò¾ ´Õ ÓüÈõ; ÓüÈò¨¾î ÍüÈ¢Öõ ´Õ ÅÇ×; ÅÇÅ¢ø ÀÄ àñ¸û. ÅÇÅ¢ø àñ¸Ç¢ý §Áø ´Õ ¾¡úÅ¡Ãõ. þýÛõ ÅǨÅî ÍüÈ¢î º¢Ä «¨È¸û (þ¨ÅÔõ º¢Ä Á¡Åð¼í¸Ç¢ø ţθû ±ý§È Ü¼î ¦º¡øÄô ¦ÀÚõ.) ÅÇÅ¢üÌõ ÓýÉ¡ø À𼡨Ä; ÅÇÅ¢üÌô À¢ýÉ¡ø þÃñ¼¡õ ¸ðÎ; («ÎôÀÊ ±ýÀÐ þÃñ¼¡õ ¸ðÊø þÕìÌõ.) À𼡨Ä, ÅÇ× þÃñ¨¼Ôõ ãÎÅÐ §À¡ø §¾ì¸¡ø ¬É Å£ðÊý ¸Éò¾ ¦ÀÕí¸¾× þÕìÌõ. ¦ÀÕí¸¾Å¢üÌõ ÓýÉ¡ø Å£ðÊý Ó¸ôÀ¢ø ¾¢ñ¨½ þÕìÌõ. ¾¢ñ¨½ìÌõ ÓýÉ¡ø ¦ÅÇ¢ÓüÈõ; «¾üÌõ ÓýÉ¡ø Å¡ºø. Å¡ºÖìÌ ÓýÉ¡ø ¦¾Õ «øÄРţ¾¢. ¾¢ñ¨½ ±ýÀРţðÊüÌû þÕôÀÅ÷¸ÙìÌ ÁðÎÁøÄ¡Ð ÅóÐ §À¡Ìõ ¦ÅǢ¡ð¸û, Å¢Õó¾¢ÉÕìÌõ ¯ûÇÐ ¾¡ý.

þí§¸ ¿¡ý Ţâò¾¢ÕìÌõ «¼× (design) Üðʧ¡, ̨È󧾡, ¦ºøÅ¿¢¨ÄìÌò ¾ì¸ Á¡ÚÀÎõ. ¦ÀÕõÀ¡Öõ ¸¡Å¢Ã¢ ¬üÈ¢üÌò ¦¾ü§¸ ¯ûÇ Å£Î¸û §Á§Ä ¦º¡ýÉ ÜڸǢý ´Õº¢ÄÅü¨È¡ÅÐ ¦¸¡ñÊÕìÌõ. ¾Á¢ú¿¡ðΠţθǢý «¨Áô¨À ¬Ã¡öóÐ ´Õ ¸ðʼŢÂÄ¡÷ ¸ðΨà À¨¼ôÀÐ ¿ÄÁ¡ö þÕìÌõ. «Ð ±ýÉ Ì¨È§Â¡ ¦¾Ã¢ÂÅ¢ø¨Ä, «ôÀÊ ±øÄ¡õ ¦ºöžüÌ Â¡Õõ ÓýÅà Á¡ð§¼ý ±ý¸¢È¡÷¸û. ¿õ ±ò¾¨É§Â¡ ÁÃÒ¸¨Çò ¦¾¡¨ÄòÐì ¦¸¡ñÊÕôÀ¾¢ø þÐ×õ ´ýÚ.

ÅÇ× ±ýÀРŢơ ¿¡ð¸û ¾Å¢÷òÐ ÁüÈ ¿¡ð¸Ç¢ø Å£ð¼¡ÕìÌõ, Á¢¸ ¦¿Õí¸¢Â ¦ÅǢ¡ð¸ÙìÌ ÁðΧÁ ¯ûÇÐ. ÅÇÅ¢üÌû ÁüÈÅ÷¸û ºð¦¼ýÚ Ñ¨Æ Á¡ð¼¡÷¸û. ¾¢ñ¨½ ±ýÀР¡÷ §ÅñÎÁ¡É¡Öõ ÅÃì ÜÊÂÐ. (¸¢ð¼ò¾ð¼ þó¾ì ¸¡Ä drawing room §À¡Ä «¾¨Éô ÒÆí¸¢ì ¦¸¡ûÅ¡÷¸û.) ¾¢ñ¨½Â¢ø º¡öóЦ¸¡ûÇ ÍŧáΠͨ¾Â¡ø ¬É ¾¢ñÎ þÕìÌõ. Å£ðÊý ¾¨ÄÅ÷ ¦ÀÕõÀ¡Öõ À¸ø §¿Ãò¾¢ø ¾¢ñÊø º¡öó¾ Åñ½õ ¦ÅüÈ¢¨Äî ¦ºøÄò§¾¡Î ¯ð¸¡÷óÐ þÕôÀ¡÷. Åէš÷, §À¡§Å¡÷ «Å§Ã¡Î ¯¨Ã¡ÎÅÐ «í§¸ ¾¡ý.

þÐ §À¡ýÈ Å£Î¸û Óý§É ¦º¡ýÉÐ §À¡ø ¦ºøÅ ¿¢¨ÄìÌò ¾ì¸ ŢâóÐõ ÍÕí¸¢Ôõ þÕó¾É. °Ã¢ø ¬º¢Ã¢Â÷ Å£ðÊÖõ ¾¢ñ¨½¸û þÕó¾É. þó¾ò ¾¢ñ¨½¸Ç¢ø ¬º¢Ã¢Â÷¸û ÀûÇ¢ì Ü¼í¸¨Ç ¨ÅòÐ þÕó¾É÷. ¾¢ñ¨½Ôõ ¦ÅÇ¢ÓüÈÓõ ¸¨Ä¸û ÁüÚõ ÀÊôÀ¢üÌô §À¡ÐÁ¡É¾¡ö þÕó¾É. ´Õ º¢üê÷ ±ýÀ¾¢ø 20, 30 Á¡½¡ì¸÷ þÕôÀ§¾ «Ã¢Ð. «ÅÕìÌ þó¾ þ¼õ §À¡Ðõ. ¦Åù§ÅÚ «¸¨Å¢ø þÕó¾ Á¡½ÅÕìÌ ´§Ã ¬º¢Ã¢Â÷ Àø§ÅÚ À¡¼í¸¨Çî ¦º¡øÄ¢ Åó¾¡÷.

þó¾ô ÀûÇ¢ìܼí¸Ç¢ø ¬º¢Ã¢Âáö þÕó¾Å÷¸û «ó¾½÷ «øÄÐ «È¢Å÷ ±ýÀÅ÷ ¬Å÷. («È¢Å÷ ±ýÀŨà ÌÁâ¢ø ÅûÙÅ÷ ±ýÀ¡÷¸û; ¾¢ÕìÌÈû ¬º¢Ã¢ÂÕõ þôÀÊ ´Õ ÌÊ¢ø Åó¾Å÷ ¾¡ý. ÅûÙÅ÷ ±ýÀÐ «ÅÕ¨¼Â þÂü¦ÀÂÃøÄ. «Ð ´Õ ÌÊô¦ÀÂ÷; ¸¢ð¼ò¾ð¼ ¬º¢Ã¢Â÷ - scholar ±ý§È ¿¡õ ÅÆ츢ø ¦À¡Õû ¦¸¡ûÇ §ÅñÎõ.) «ó¾½÷/«È¢Å÷ (scholar) ¾¡ý ´Õ °Ã¢ø ¯ûÇ À¢û¨Ç¸ÙìÌô À¡¼õ ¦º¡øÄ¢ì ¦¸¡ÎôÀÅ÷¸û. þó¾ ¬º¢Ã¢Â÷¸û ¦ÀÕÁ¡Éáö (À¢Ã¡Á½Ã¡ö) þÕì¸ §ÅñÊ §¾¨Å¢ø¨Ä. À¡÷ôÀÉ÷ «øÄ¡§¾¡Õõ «ó¾½÷/«È¢Å÷ ¾¡ý. ÀÆó¾Á¢úô À¡¼ø¸¨Çî ºÃ¢Â¡¸ô ÒâóÐ ¦¸¡ûÇ¡¾ ¸¡Ã½ò¾¡ø º¢ÄÕìÌ þó¾ì ÌÆôÀõ ²üÀðÎ, «ó¾½÷ ±ýÈ¡ø À¡÷ôÀÉ÷ ±ýÚ ¦º¡øÄ ÓüÀð¼¡÷¸û. «ó¾½ÕìÌû º¢Ä À¡÷ôÀÉ÷ þÕì¸Ä¡õ. ¬É¡ø, À¡÷ôÀÉ÷ ±ø§Ä¡Õ§Á «ó¾½÷ ±ýÈ ¦º¡øÖìÌ þ¨½Â¡ÉÅ÷ «øÄ÷. (À¡÷ôÀÉ÷ ±ýÈ ¦º¡øÄ¢ý À¢Èô¨À þíÌ ¦º¡øÄ ÓüÀ¼Å¢ø¨Ä.)

þÉ¢ «ó¾½÷ ±ýÈ ¦º¡øÄ¢ý À¢Èô¨Àô À¡÷ô§À¡õ. «ó¨¾ ±ýÀ¾üÌ «ôÀý ±ý§È ¦À¡Õû ¯ñÎ ±ýÚ ÒÄÅ÷ þÇíÌÁÃý ¬úó¾ Å¢Çì¸ò§¾¡Î ¿¢ÚŢ¢Õ츢ȡ÷. (¾õ+«ó¨¾>¾Áó¨¾>¾¸ó¨¾>¾ó¨¾ ±ýÈ ÅÇ÷ ¾õ+«ôÀý>¾ÁôÀý>¾¸ôÀý ±ýÀ¨¾ô§À¡Ä.) «ó¨¾ ±ýÈ ¦º¡ø §ÅÚ ´Õ ®Ú ¦ÀüÚ «ó¾ý ±ýÚõ ¬¸ ÓÊÔõ. þÐ «ò¾ý>«îºý ±ýÈ ¦º¡ü¸§Ç¡Î ¦ÁøÄ¢Âø þ¨½ ¦¸¡ñ¼Ð. ³Âý ±ýÀÐõ ¾Á¢Æ¢ø «ôÀý ±ýÈ ¦À¡Õû ¦¸¡ûÙõ. ³ÂÉ¢ø þÕóÐ À½¢× ¸¡Ã½Á¡ö ³ÂÉ¡÷ ±ýÈ ¦º¡ø À¢ÈôÀÐ §À¡ø «ó¾É¢ø þÕóÐ Á⡨¾ ¸Õ¾¢ô À¢Èó¾ ¦º¡ø «ó¾É÷. þ¾¢ø ɸÃõ ¾¢Ã¢óÐ «ó¾½÷ ±ýÚ ¬Ìõ. «ó¾ý>«ó¾É÷>«ó¾½÷. «õ+¾½÷ ±ýÚ ÅÄ¢óÐ À¢Ã¢òÐô ¦À¡Õû ¦¸¡ûŦ¾øÄ¡õ ºí¸¾ ӨȢø ¾Á¢úî ¦º¡ø¨Äì ̾ÚÅÐ ¬Ìõ.

¦À¡ÐÅ¡¸ ´Õ ÌÓ¸ò¾¢ø ¬º¢Ã¢Â÷ ±ýÀÅÕõ ¾ó¨¾Â¢ý þ¼ò¾¢ø ¨ÅòÐ §À¡üÈô Àθ¢È¡÷. þÅ÷ ¸øÅ¢ìÌ, ÀÊôÀ¢üÌ, ÀñÀ¡Î ¦º¡øÄ¢ò ¾ÕžüÌò ¾ó¨¾. Á¨Ä¡Çò¾¢ø ¸ò§¾¡Ä¢ì¸ò ÐÈÅ¢Ôõ father/«îºý ±ýÚ ¦º¡øÄô ÀÎÅÐ þôÀÊò¾¡ý. «§¾ §À¡Ä ¬º¢Ã¢Âáö, ÀÊò¾Åáö, «È¢¨Å ¬ûÀÅáö, °Ã¢ø ¿øÄÐ ¦¸ð¼Ð ÀüÈ¢ Áì¸¨Ç ¿øÅÆ¢ôÀÎòÐÅáö þÕó¾ÅÕõ «ó¾½÷ ±ýÚ ¾Á¢Æ¢ø ¦º¡øÄô Àθ¢È¡÷. ¸øÅ¢ «îºý¸§Ç ¬º¡ý¸Ç¡¸ Á¨Ä¡Çò¾¢ø «È¢Âô Àθ¢È¡÷¸û. ¬º¡ý ±ýÀÅý ºí¸¾ ÅÆì¸ô ÀÊ Ã¸Ã, ¸Ãî §º÷쨸¢ø ¬îº¡÷Âý ¬Å¡ý. Á£ñÎõ ¾Á¢úôÀÎò¾¢ ¬º¢Ã¢Âý ¬Å¡ý. (Á¨Ä¡Ç, ¸ýɼ þýÛõ ÁüÈ ¾Á¢Æ¢Â ÁÃÒ¸¨Ç ´Ð츢ŢðÎô ÀÆó¾Á¢ú ÁÃÒ¸¨Ç Á£ð¦¼Îì¸ ÓÊ¡Ð.)

¾Á¢ú¿¡ðÊø «ó¾½÷/«È¢Åáö þÕó¾Å÷ ´Õ º¢Ä þ¼í¸Ç¢ø µÐšáÔõ, þýÛõ º¢Ä þ¼í¸Ç¢ø ¦Åù§ÅÚ ¦¾¡Æ¢ø ¦¾Ã¢ó¾ÅáÔõ Á¡È¢ô §À¡É¡÷¸û. þýÛõ º¢Ä÷ À¡÷ôÀÉÕìÌû§Ç§Â ¸¨ÃóÐõ (ÌÈ¢ôÀ¡¸ º¢Å¡îº¡Ã¢Â¡÷¸û / ¬¾¢ ¨ºÅ÷¸û / §º¡Æ¢Â÷ ±Éî º¢Ä Üð¼ò¾¡÷) §À¡Â¢Õì¸Ä¡õ. ¬É¡ø ¬Æô À¡÷ò¾¡ø þôÀÊ ´Õ ÌÊ¢É÷ þÕó¾Ð ¿ýÈ¡¸§Å ÒÄôÀθ¢ÈÐ. þ¨¾ ²ý ¦º¡øÖ¸¢§Èý ±ýÈ¡ø ¾¢ñ¨½ô ÀûÇ¢ìܼõ ±ýÈ ÁçÀ¡Î «ó¾½÷ ±ýÀÅ÷ À¢ýÉ¢ô À¢¨½óÐ þÕ츢ȡ÷¸û.

±ôÀÊî ºÁ½òÐÈÅ¢¸§Ç¡Î ÀûÇ¢ìܼõ ±ýÈ ¦º¡ø ¦¾¡¼÷Ò ¦¸¡ñ¼§¾¡ «§¾ §À¡ýÈÐ þÐ. þó¾ò ¾¢ñ¨½ô ÀûÇ¢ìܼí¸û ±ØòÐõ ±ñÏõ «øÄ¡Ð þÄ츢Âõ, þÄ츽õ, ¿£¾¢¦¿È¢, ¸¨Ä¸û ¬¸¢ÂÅü¨Èì ¸üÚò ¾ó¾ ¸¡Äõ ´ýÚ þÕó¾¢Õì¸ §ÅñÎõ. «ÅüÈ¢ý Á¢îº ¦º¡îºí¸¨Ç þýÛõ ¦¾ýÌÁâ Á¡Åð¼ò¾¢Öõ, §¸ÃÇò¾¢Öõ À¡÷츢§È¡õ. Å÷Á츨Ä, ¸ÇâôÀ¢üÚ, º¢ÄõÀ¡ð¼õ þýÛõ þÅü¨Èô §À¡ø À¢È×õ ¾¢ñ¨½ô ÀûÇ¢ìܼò¾¢ø ¦º¡øÄ¢ì ¦¸¡Îì¸ô ÀðÊÕì¸ §ÅñÎõ. þÐ ²ý ±ýÚ À¢ýÉ¡ø Å¢Çì̸¢§Èý.

þÉ¢ ¾¢ñ¨½ô ÀûÇ¢ìܼõ ÀüȢ ±ýÛ¨¼Â Àð¼È¢¨Å «Îò¾ Á¼Ä¢ø ¦º¡øÄ ÓüÀθ¢§Èý.

«ýÒ¼ý,
þáÁ.¸¢.

Thursday, October 28, 2004

மீண்டும் ஒரு மழைக்காலம்

குண்டும் குழியுமாய் மண்டிக் கிடக்கும்
வண்டல் கழிநீர்; வாரிடும் சேறு;
வரிசையில் முளைத்த கட்டிட முகங்களைச்
சரிவாய்க் காட்டும் சாலையின் ஓரம்;
உந்துகள் எல்லாம் நடுவினில் ஒண்டிச்
சந்திலாச் சாலையில் சார்ந்திடும் பேரணி;
நடுவம் விலக்கி, நகர்ச்சியில் கலங்கி
முடுகிய கதியில் முந்துறும் வண்டிகள்;
முந்துற முயன்றும் முடங்கி மூச்சுறும்
நந்திய நகர்ச்சி மாநகர்த் துரப்பு;
இடையில் எதிரே வண்டி விளம்பரம்;
சடசடப் புகையில் தடுமாற்றப் படிப்பு;
"நாமினி இருவர் நமக்கோ ஒருவர்;
ஊம்எனத் தயவாய் ஒலியெழுப் புங்கள்!"
முன்னவன் செவிடென மொத்தையாய்ச் சொல்லி
என்னைப் பணிக்கிறான் என்பதாய் பூம்பூம்
ஒலியினை எழுப்பி ஒருக்களித் தேகி
வழியினை வாங்க வாதிடும் வண்டிகள்;
தானாய் இயங்கும் சைகை விளக்கினை
மானவப் படுத்தி மல்லாடும் காவலர்;
சாலையின் இடங்கை ஒழுங்கையில் விரவி
பாண்டிக் கட்டம் தாண்டிடும் மக்கள்;
பாண்டியை ஆடிப் பலநாள் ஆயிற்றாம்;
ஆண்டுக் கொருமுறை அதுநினை வாகிறார்!
"திரும்பியே பார்க்காமத் திருமலை ஏறணும்"
நொண்டி நுடங்கிக் கண்கட்டிக் கொண்டு
விண்டிய தெல்லாம் நினைவிருக் கிறதோ?
"சரியா?......." "சரி"
ஒருகுழி தாண்டி ஓரடி எட்டு
"சரியா?......." "சரி"
இன்னொரு குலுக்கல், இன்னொரு குதிப்பு;
"பழம் வந்தாயிற்றா?"
இத்தனை வேகச் சந்தடி நுழைந்தபின்,
இன்றைய அலுவல் இருமணிச் சுணக்கம்;
கண்களை மூடி ஆட்களைத் தேடும்
கண்ணாம் பூச்சிக் களவிளை யாட்டில்,
நாம்தான் சூரியன் தேடுகின் றோமா?
ஆம். அது நம்மைத் தேடுகின் றதுவோ?
ஈண்டொரு சுழற்சி; எங்களின் சென்னையில்
மீண்டுவந் துற்றது மாமழைக் காலம்

அன்புடன்,
இராம.கி.

In TSCII:

Á£ñÎõ ´Õ Á¨Æ측Äõ

"¿¡Á¢É¢ þÕÅ÷ ¿Á째¡ ´ÕÅ÷;
°õ±Éò ¾ÂÅ¡ö ´Ä¢¦ÂØô Òí¸û!"
ÓýÉÅý ¦ºÅ¢¦¼É ¦Á¡ò¨¾Â¡öî ¦º¡øÄ¢
±ý¨Éô À½¢ì¸¢È¡ý ±ýÀ¾¡ö âõâõ
´Ä¢Â¢¨É ±ØôÀ¢ ´Õì¸Ç¢ò §¾¸¢
ÅƢ¢¨É Å¡í¸ Å¡¾¢Îõ Åñʸû;
¾¡É¡ö þÂíÌõ ¨º¨¸ Å¢Ç츢¨É
Á¡ÉÅô ÀÎò¾¢ ÁøÄ¡Îõ ¸¡ÅÄ÷;
º¡¨Ä¢ý þ¼í¨¸ ´Øí¨¸Â¢ø Å¢ÃÅ¢
À¡ñÊì ¸ð¼õ ¾¡ñÊÎõ Áì¸û;
À¡ñʨ ¬Êô ÀÄ¿¡û ¬Â¢üÈ¡õ;
¬ñÎì ¦¸¡ÕÓ¨È «Ð¿¢¨É Å¡¸¢È¡÷!
"¾¢ÕõÀ¢§Â À¡÷측Áò ¾¢ÕÁ¨Ä ²ÈÏõ"
¦¿¡ñÊ Ñ¼í¸¢ì ¸ñ¸ðÊì ¦¸¡ñÎ
Å¢ñÊ ¦¾øÄ¡õ ¿¢¨ÉÅ¢Õì ¸¢È§¾¡?
"ºÃ¢Â¡?......." "ºÃ¢"
´ÕÌÆ¢ ¾¡ñÊ µÃÊ ±ðÎ
"ºÃ¢Â¡?......." "ºÃ¢"
þý¦É¡Õ ÌÖì¸ø, þý¦É¡Õ ̾¢ôÒ;
"ÀÆõ Åó¾¡Â¢üÈ¡?"
þò¾¨É §Å¸î ºó¾Ê ѨÆó¾À¢ý,
þý¨È «ÖÅø þÕÁ½¢î ͽì¸õ;
¸ñ¸¨Ç ãÊ ¬ð¸¨Çò §¾Îõ
¸ñ½¡õ âîº¢ì ¸ÇÅ¢¨Ç ¡ðÊø,
¿¡õ¾¡ý ÝâÂý §¾Î¸¢ý §È¡Á¡?
¬õ. «Ð ¿õ¨Áò §¾Î¸¢ý ÈЧš?
®ñ¦¼¡Õ ÍÆüº¢; ±í¸Ç¢ý ¦ºý¨É¢ø
Á£ñÎÅó ÐüÈÐ Á¡Á¨Æì ¸¡Äõ

«ýÒ¼ý,
þáÁ.¸¢.

Thursday, July 29, 2004

புறத்திட்டு நிதி - 6

இந்த அதிகாரத்தில் மானுறுத்திய புதுக்கிற்கு ஆகும் கொளுதகையை (cost of a manufatured product) எப்படிக் கணக்கிடுவது என்று பார்ப்போம்.

மானுறுத்தம் என்று சொல்லும் போது, "சில பொருள்கள் நேரடியாக மானுறுத்தத்தில் உள்ளே சேருகின்றன, சில பொருள்கள் நேரடியாகச் சேருவதில்லை" என்று நாம் அறிவோம். இதனால் ஓராண்டின் மானுறுத்தக் கொளுதகையை (manufacturing cost) அல்லது செலவை ஆண்டிற்கான நேரடி மானுறுத்தக் கொளுதகை (annual direct manufacturing cost), நேரிலா மானுறத்தக் கொளுதகை (annual indirect manufacturing cost) என இரண்டு கொளுதகைகளின் கூட்டுத் தொகையாய் பார்க்க வேண்டும்.

ஆண்டின் நேரடி மானுறுத்தக் கொளுதகை என்பது பொருள்களை உருவாக்கும் புதுக்க இயக்கத்தில் (production operation) நேரடியாய் நடக்கும் செலவு. சரி, இதில் ஏதெல்லாம் அடங்கும்? இந்தச் சரவரிசை கொஞ்சம் நீளமானது. கீழே வருவதைப் படிக்குமுன் சற்று மூச்சைப் பிடித்துக் கொள்ளுங்கள்.

முதலில் வருவது, நம் வளாகத்திற்குள் கொண்டுசேர்க்கும் வரையில் ஆகும் போக்குவரத்து மற்றும் இதர செலவுகள் சேர்ந்த இயற்பொருட்களுக்கான செலவு (expenses on raw materials till delivery);

இரண்டாவது, வினையாக்கம் (reaction) நடைபெறும் போது பயனாகும் வினையூக்கிகள் (catalysts) மற்றும் கரைமங்கள் (solvents) ஆகியவற்றிற்கான செலவு;

மூன்றாவது, மானுறுத்தலுக்கான இயக்க உழைப்பு (operating labour) இருக்கிறதே, அதற்காகும் செலவு;

நாலாவது, எந்த இயக்கத்தையும் மேற்பார்க்கும் இயக்க மேற்பார்வைக்கான (operating supervision) செலவு;

ஐந்தாவது, செயலாக்கத்தில் (process) பயன்படும் ஊடுழைகளுக்கான (utilities) செலவு;

ஆறாவது, இயக்கத்தின் போது பயன்படுத்தும் எந்திரங்கள், மற்றும் செய்கலன்களுக்காக நாம் விடாது செய்ய வேண்டிய இயக்கப் பேணல் (operating maintenance), மற்றும் பழுது (fault) வரும் போது அதை ஒக்கிடுவதற்காக (repair) ஆகும் செலவு;

ஏழாவது, பொதுவான இயக்க அளிப்புகள் (general operating supplies);

எட்டாவது, நாம் மானுறுத்தும் செயலாக்கத்தை முதலில் கண்டுபிடித்தவருக்கு சில போது கொடுக்கும் அரையங்கள்(royalties), அல்லது கண்டுபிடித்தவர் ஏதாவது காப்புரிமங்கள் (patents) வைத்திருந்தால் அதில் உரிமை பெருவதற்காக நமக்கு ஆகும் செலவு;

ஆக எட்டுவகையான செலவுகள் இதில் அடங்கும். இந்த நேரடி மானுறுத்தக் கொளூதகையை இன்னொரு வகையாய் பெருமிய கொளுதகை (primary cost) என்றும் சிலர் சொல்லுவது உண்டு. அதாவது இந்தக் கொளுதகை இல்லாமல் எந்த மானுறுத்தமும் நடைபெற முடியாது என்ற பொருளில் பெருமிய கொளுதகை என்ற சொல் ஆளப் படுகிறது.

இனி நேரிலா மானுறுத்தக் கொளுதகை என்பதைப் பார்க்கலாம். இது புதுக்க இயக்கத்தோடு நேரடித் தொடர்பு இல்லாததைக் குறிக்கும்.

இந்த இனத்தில் மானுறுத்தலோடு நேரடித் தொடர்பில்லாமல் ஆனால் பொதினம் நடத்துவதற்குத் தேவையான ஆட்களுக்காகக் கொடுக்கும் மேலிருப்புச் சம்பளம்(payroll overhead);

புதுக்குகள் (products), இயற்பொருட்கள் (raw materials), வினையாக்கத்தின் (reaction) இடையில் செய்கலன்களில் பெறப்படும் இடைப்பொருள்கள் (intermediates) ஆகியவற்றின் செறிவு (concentration), வினைக் கட்டுகள் (operating conditions), தரம் (quality) போன்றவற்றைச் சோதிப்பதற்கான கட்டுறல் சோதனைச்சாலை(control laboratory);

பொதுத் திணைக்கள மேலிருப்பு (general plant overhead),

புதுக்குகளை வாடிக்கையாளர்களிடம் கொண்டு சேர்க்கும்வரை அவற்றைப் பொத்தி (மூடி) அனுப்புவதற்கான பொத்தகை(package)ச் செலவு;

மற்றும் இயற்பொருட்கள், புதுக்குகள், செய்கலன்/இயந்திரங்களின் உதிரிப் பாகங்கள் அல்லது புணைகள் (spare parts or components) ஆகியவற்றைச் சேர்த்துவைத்து தேவைப்படும்போது பயன்படுத்துவதற்கு ஏந்தாய் (facilities) தொழிற்சாலைக்குள் ஏற்படுத்தும் திணைக்களத் தொழுவை ஏந்துகள் (plant storage facilities; தொழுதி = தொகுதி; தொழுவம் = ஆடுமாடுகளைச் சேர்த்து அடைத்துவைக்கும் இடம். தொழுவை = storage; உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்; மற்றெல்லாம் தொழுதுண்டு பின் செல்பவர்; இங்கே தொழுதுண்டு என்ற சொல்லாட்சிக்குத் தொகுதியுற்றுக் கூட்டமாய்ப் பின் செல்பவர் என்றே பொருள்; கும்பிட்டுப் பின் செல்பவர் என்ற பொருளாய்த் தவறாய்ப் புரிந்து கொள்ளுகிறோம். தொழுதுறுதல் = கூட்டமாய்ச் சேருதல்) பற்றிய செலவு;

என இன்னும் பலவற்றைச் சேர்க்க வேண்டும்.

இன்னும் இந்தச் செலவுகளோடு சேர்க்கப் படவேண்டியவை நிலைத்த முதலீட்டைப் (fixed capital) பொறுத்தவை. காட்டாகச்

சொத்துவரி (property taxes),
வாடகைப் பணம் (rent),
காப்புறுதி (insurance)

போன்றவை இப்படி நேரிலா மானுறுத்தக் கொளுதகையைச் சேரும். நேரிலா மானுறுத்தக் கொளுதகையை இன்னொரு விதமாய் மானுறுத்த மேலிருப்புக் கொளுதகை (manufacturing overhead cost) என்றும் சொல்லுவது உண்டு.

பொதுவாக கணக்காளர்கள் (accountants) எல்லாக் கொளுதகை(cost)களையும் நிலைத்த கொளுதகைகள் (fixed costs), வேறுபடு கொளுதகைகள் (variable costs) என்று பிரிப்பார்கள்.

அந்த வழியில், மானுறுத்தலோடு தொடர்பில்லாத பொதுச் செலவையும், ஆண்டின் நிலைத்த பொதுச் செலவு என்றும், ஆண்டின் வேறுபடு பொதுச் செலவு என்றும் பிரித்துப் பார்க்கலாம். இதே போல ஆண்டின் மானுறுத்தச் செலவையும் ஆண்டின் நிலைத்த மானுறுத்தச் செலவு, ஆண்டின் வேறுபடு மானுறுத்தச் செலவு என்று பிரித்துப் பார்க்கலாம்.

அடுத்த அதிகாரத்தில் கூட்டளிப்பு (contribution) என்பதைப் பார்ப்போம்.

அன்புடன்,
இராம.கி.

In TSCII:

þó¾ «¾¢¸¡Ãò¾¢ø Á¡ÛÚò¾¢Â ÒÐ츢üÌ ¬Ìõ ¦¸¡Ù¾¨¸¨Â (cost of a manufatured product) ±ôÀÊì ¸½ì¸¢ÎÅÐ ±ýÚ À¡÷ô§À¡õ.

Á¡ÛÚò¾õ ±ýÚ ¦º¡øÖõ §À¡Ð, "º¢Ä ¦À¡Õû¸û §¿ÃÊ¡¸ Á¡ÛÚò¾ò¾¢ø ¯û§Ç §ºÕ¸¢ýÈÉ, º¢Ä ¦À¡Õû¸û §¿ÃÊ¡¸î §ºÕž¢ø¨Ä" ±ýÚ ¿¡õ «È¢§Å¡õ. þ¾É¡ø µÃ¡ñÊý Á¡ÛÚò¾ì ¦¸¡Ù¾¨¸¨Â (manufacturing cost) «øÄÐ ¦ºÄ¨Å ¬ñÊü¸¡É §¿ÃÊ Á¡ÛÚò¾ì ¦¸¡Ù¾¨¸ (annual direct manufacturing cost), §¿Ã¢Ä¡ Á¡ÛÈò¾ì ¦¸¡Ù¾¨¸ (annual indirect manufacturing cost) ±É þÃñÎ ¦¸¡Ù¾¨¸¸Ç¢ý ÜðÎò ¦¾¡¨¸Â¡ö À¡÷ì¸ §ÅñÎõ.

¬ñÊý §¿ÃÊ Á¡ÛÚò¾ì ¦¸¡Ù¾¨¸ ±ýÀÐ ¦À¡Õû¸¨Ç ¯ÕÅ¡ìÌõ ÒÐì¸ þÂì¸ò¾¢ø (production operation) §¿ÃÊ¡ö ¿¼ìÌõ ¦ºÄ×. ºÃ¢, þ¾¢ø ²¦¾øÄ¡õ «¼íÌõ? þó¾î ºÃÅ⨺ ¦¸¡ïºõ ¿£ÇÁ¡ÉÐ. ¸£§Æ ÅÕŨ¾ô ÀÊìÌÓý ºüÚ ãô À¢ÊòÐì ¦¸¡ûÙí¸û.

ӾĢø ÅÕÅÐ, ¿õ ÅÇ¡¸ò¾¢üÌû ¦¸¡ñΧº÷ìÌõ Ũâø ¬Ìõ §À¡ìÌÅÃòÐ ÁüÚõ þ¾Ã ¦ºÄ׸û §º÷ó¾ þÂü¦À¡Õð¸Ùì¸¡É ¦ºÄ× (expenses on raw materials till delivery);

þÃñ¼¡ÅÐ, Å¢¨É¡ì¸õ (reaction) ¿¨¼¦ÀÚõ §À¡Ð ÀÂÉ¡Ìõ Å¢¨Éä츢¸û (catalysts) ÁüÚõ ¸¨ÃÁí¸û (solvents) ¬¸¢ÂÅüÈ¢ü¸¡É ¦ºÄ×;

ãýÈ¡ÅÐ, Á¡ÛÚò¾Öì¸¡É þÂì¸ ¯¨ÆôÒ (operating labour) þÕ츢ȧ¾, «¾ü¸¡Ìõ ¦ºÄ×;

¿¡Ä¡ÅÐ, ±ó¾ þÂì¸ò¨¾Ôõ §ÁüÀ¡÷ìÌõ þÂì¸ §ÁüÀ¡÷¨Åì¸¡É (operating supervision) ¦ºÄ×;

³ó¾¡ÅÐ, ¦ºÂÄ¡ì¸ò¾¢ø (process) ÀÂýÀÎõ °Î¨Æ¸Ùì¸¡É (utilities) ¦ºÄ×;

¬È¡ÅÐ, þÂì¸ò¾¢ý §À¡Ð ÀÂýÀÎòÐõ ±ó¾¢Ãí¸û, ÁüÚõ ¦ºö¸Äý¸Ù측¸ ¿¡õ Å¢¼¡Ð ¦ºö §ÅñÊ þÂì¸ô §À½ø (operating maintenance), ÁüÚõ ÀØÐ (fault) ÅÕõ §À¡Ð «¨¾ ´ì¸¢Îžü¸¡¸ (repair) ¬Ìõ ¦ºÄ×;

²Æ¡ÅÐ, ¦À¡ÐÅ¡É þÂì¸ «Ç¢ôÒ¸û (general operating supplies);

±ð¼¡ÅÐ, ¿¡õ Á¡ÛÚòÐõ ¦ºÂÄ¡ì¸ò¨¾ ӾĢø ¸ñÎÀ¢Êò¾ÅÕìÌ º¢Ä §À¡Ð ¦¸¡ÎìÌõ «¨ÃÂí¸û(royalties), «øÄÐ ¸ñÎÀ¢Êò¾Å÷ ²¾¡ÅÐ ¸¡ôÒâÁí¸û (patents) ¨Åò¾¢Õó¾¡ø «¾¢ø ¯Ã¢¨Á ¦ÀÕžü¸¡¸ ¿ÁìÌ ¬Ìõ ¦ºÄ×;

¬¸ ±ðÎŨ¸Â¡É ¦ºÄ׸û þ¾¢ø «¼íÌõ. þó¾ §¿ÃÊ Á¡ÛÚò¾ì ¦¸¡é¾¨¸¨Â þý¦É¡Õ Ũ¸Â¡ö ¦ÀÕÁ¢Â ¦¸¡Ù¾¨¸ (primary cost) ±ýÚõ º¢Ä÷ ¦º¡øÖÅÐ ¯ñÎ. «¾¡ÅÐ þó¾ì ¦¸¡Ù¾¨¸ þøÄ¡Áø ±ó¾ Á¡ÛÚò¾Óõ ¿¨¼¦ÀÈ ÓÊ¡Р±ýÈ ¦À¡ÕÇ¢ø ¦ÀÕÁ¢Â ¦¸¡Ù¾¨¸ ±ýÈ ¦º¡ø ¬Çô Àθ¢ÈÐ.

þÉ¢ §¿Ã¢Ä¡ Á¡ÛÚò¾ì ¦¸¡Ù¾¨¸ ±ýÀ¨¾ô À¡÷ì¸Ä¡õ. þÐ ÒÐì¸ þÂì¸ò§¾¡Î §¿ÃÊò ¦¾¡¼÷Ò þøÄ¡¾¨¾ì ÌÈ¢ìÌõ.

þó¾ þÉò¾¢ø Á¡ÛÚò¾§Ä¡Î §¿ÃÊò ¦¾¡¼÷À¢øÄ¡Áø ¬É¡ø ¦À¡¾¢Éõ ¿¼òОüÌò §¾¨ÅÂ¡É ¬ð¸Ù측¸ì ¦¸¡ÎìÌõ §ÁÄ¢ÕôÒî ºõÀÇõ(payroll overhead);

ÒÐì̸û (products), þÂü¦À¡Õð¸û (raw materials), Å¢¨É¡ì¸ò¾¢ý (reaction) þ¨¼Â¢ø ¦ºö¸Äý¸Ç¢ø ¦ÀÈôÀÎõ þ¨¼ô¦À¡Õû¸û (intermediates) ¬¸¢ÂÅüÈ¢ý ¦ºÈ¢× (concentration), Å¢¨Éì ¸ðθû (operating conditions), ¾Ãõ (quality) §À¡ýÈÅü¨Èî §º¡¾¢ôÀ¾ü¸¡É ¸ðÎÈø §º¡¾¨É¨Ä(control laboratory);

¦À¡Ðò ¾¢¨½ì¸Ç §ÁÄ¢ÕôÒ (general plant overhead),

ÒÐì̸¨Ç Å¡Ê쨸¡Ç÷¸Ç¢¼õ ¦¸¡ñÎ §º÷ìÌõŨà «Åü¨Èô ¦À¡ò¾¢ (ãÊ) «ÛôÒžü¸¡É ¦À¡ò¾¨¸(package)î ¦ºÄ×;

ÁüÚõ þÂü¦À¡Õð¸û, ÒÐì̸û, ¦ºö¸Äý/þÂó¾¢Ãí¸Ç¢ý ¯¾¢Ã¢ô À¡¸í¸û «øÄÐ Ò¨½¸û (spare parts or components) ¬¸¢ÂÅü¨Èî §º÷òШÅòÐ §¾¨ÅôÀÎõ§À¡Ð ÀÂýÀÎòОüÌ ²ó¾¡ö (facilities) ¦¾¡Æ¢üº¡¨ÄìÌû ²üÀÎòÐõ ¾¢¨½ì¸Çò ¦¾¡Ø¨Å ²óиû (plant storage facilities; ¦¾¡Ø¾¢ = ¦¾¡Ì¾¢; ¦¾¡ØÅõ = ¬ÎÁ¡Î¸¨Çî §º÷òÐ «¨¼òШÅìÌõ þ¼õ. ¦¾¡Ø¨Å = storage; ¯ØÐñÎ Å¡úÅ¡§Ã Å¡úÅ¡÷; Áü¦ÈøÄ¡õ ¦¾¡ØÐñÎ À¢ý ¦ºøÀÅ÷; þí§¸ ¦¾¡ØÐñÎ ±ýÈ ¦º¡øÄ¡ðº¢ìÌò ¦¾¡Ì¾¢ÔüÚì Üð¼Á¡öô À¢ý ¦ºøÀÅ÷ ±ý§È ¦À¡Õû; ÌõÀ¢ðÎô À¢ý ¦ºøÀÅ÷ ±ýÈ ¦À¡ÕÇ¡öò ¾ÅÈ¡öô ÒâóÐ ¦¸¡ûÙ¸¢§È¡õ. ¦¾¡ØÐÚ¾ø = Üð¼Á¡öî §ºÕ¾ø) ÀüȢ ¦ºÄ×;

±É þýÛõ ÀÄÅü¨Èî §º÷ì¸ §ÅñÎõ.

þýÛõ þó¾î ¦ºÄ׸§Ç¡Î §º÷ì¸ô À¼§ÅñʨŠ¿¢¨Äò¾ Ӿģð¨¼ô (fixed capital) ¦À¡Úò¾¨Å. ¸¡ð¼¡¸î

¦º¡òÐÅâ (property taxes),
Å¡¼¨¸ô À½õ (rent),
¸¡ôÒÚ¾¢ (insurance)

§À¡ýȨŠþôÀÊ §¿Ã¢Ä¡ Á¡ÛÚò¾ì ¦¸¡Ù¾¨¸¨Âî §ºÕõ. §¿Ã¢Ä¡ Á¡ÛÚò¾ì ¦¸¡Ù¾¨¸¨Â þý¦É¡Õ Å¢¾Á¡ö Á¡ÛÚò¾ §ÁÄ¢ÕôÒì ¦¸¡Ù¾¨¸ (manufacturing overhead cost) ±ýÚõ ¦º¡øÖÅÐ ¯ñÎ.

¦À¡ÐÅ¡¸ ¸½ì¸¡Ç÷¸û (accountants) ±øÄ¡ì ¦¸¡Ù¾¨¸(cost)¸¨ÇÔõ ¿¢¨Äò¾ ¦¸¡Ù¾¨¸¸û (fixed costs), §ÅÚÀÎ ¦¸¡Ù¾¨¸¸û (variable costs) ±ýÚ À¢Ã¢ôÀ¡÷¸û.

«ó¾ ÅƢ¢ø, Á¡ÛÚò¾§Ä¡Î ¦¾¡¼÷À¢øÄ¡¾ ¦À¡Ðî ¦ºÄ¨ÅÔõ, ¬ñÊý ¿¢¨Äò¾ ¦À¡Ðî ¦ºÄ× ±ýÚõ, ¬ñÊý §ÅÚÀÎ ¦À¡Ðî ¦ºÄ× ±ýÚõ À¢Ã¢òÐô À¡÷ì¸Ä¡õ. þ§¾ §À¡Ä ¬ñÊý Á¡ÛÚò¾î ¦ºÄ¨ÅÔõ ¬ñÊý ¿¢¨Äò¾ Á¡ÛÚò¾î ¦ºÄ×, ¬ñÊý §ÅÚÀÎ Á¡ÛÚò¾î ¦ºÄ× ±ýÚ À¢Ã¢òÐô À¡÷ì¸Ä¡õ.

«Îò¾ «¾¢¸¡Ãò¾¢ø Üð¼Ç¢ôÒ (contribution) ±ýÀ¨¾ô À¡÷ô§À¡õ.

«ýÒ¼ý,
þáÁ.¸¢.

Wednesday, July 28, 2004

புறத்திட்டு நிதி - 5

இந்த அதிகாரத்தில் ஆண்டுப் பணப் பெருக்கு என்பது என்ன என்பதையும், பொதினப் பொலுவு (business profit) என்பது எப்படிக் கணக்கிடப் படுகிறது என்பதையும் பார்ப்போம்.

ஒவ்வொரு பொதினமும் தன்னுடைய புதுக்கக் கொண்மையை (production capacity) பெருக்காமல் வைத்துக் கொள்வதில்லை. ஒவ்வொரு ஆண்டும் எப்படியாவது பாடுபட்டு நேர்த்தித் திறன் (efficiency), புதிய நுட்பியல்(technology), பொறியியல் நெளிவுசுழிவுகள் (flexibilities) ஆகியவற்றைக் கொண்டு தன்னுடைய புதுக்க விளிம்புகளை (production limits) நகர்த்திக் கொண்டு புதுக்கக் கொண்மையைக் கூட்ட முயலுகிறது. இந்த முயற்சியில் தன் நிகரப் பண வருமானத்தில் இருந்து இன்னும் கொஞ்சம் செய்கலன்கள்(equipments) /எந்திரங்களு(machineries)க்கான செலவைக் கூட்டி ஆண்டிற்கான மொத்த முதலீட்டுச் செலவை (total capital expenditures) அதிகரிக்கிறது. எனவே பொதினத்தில் கிடைக்கும் ஆண்டுப் பணப் பெருக்கு (annual cash flow)என்பது கீழே வரும் சமன்பாட்டின் படியே அமைகிறது.

ஆண்டுப் பணப்பெருக்கு A(CF) = A(NCI) - A(TC) ----- சமன் 8

இதுவரை பொதினத்தின் வரவு செலவுகளைப் பணப்பெருக்கு (cash flow) என்ற நோக்கில் பார்த்தோம். இனி பொதினத்தின் வரவு செலவுகளை பொலுவு (profit) என்ற முறையில் பார்ப்போம்.

முதலில் பார்க்கவேண்டியது ஆண்டின் பொதுச் செலவு. இந்தச் செலவு இரண்டு வகைப் படும். முதல் வகைச் செலவு புதுக்கத்தை மானுறுத்தும் போது (மானுறுத்தல் = manufacturing) ஏற்படும் செலவு; இந்தச் செலவு புதுக்கத்தின் அளவைப் பொறுத்தது; புதுக்கம் கூடினால் இந்தச் செலவும் கூடும், புதுக்கம் குறைந்தால் இந்தச் செலவும் குறையும்; இன்னொரு வகைச் செலவு புதுக்கம் இருந்தாலும் இல்லாவிட்டாலும் பொதினத்தில் ஏற்படும் செலவாகும். ஒரு பொதினத்தில் ஆள், அம்பு, பேர் எல்லாம் வைத்துக் கொள்ளுகிறோமே அவற்றால்/அவர்களால் ஏற்படும் செலவு இந்தச் செலவு. இதனைப் பொதுச் செலவு என்று சொல்லுகிறோம்.

எனவே,

ஆண்டின் மொத்தச் செலவு = ஆண்டின் பொதுச்செலவு + ஆண்டின் மானுறுத்தச் செலவு

A(TE) = A(GE) + A(ME) ------ சமன் 9

இனி ஆண்டின் கூட்டப் பொலுவு (gross profit) என்பது விற்பனை(sales)யில் இருந்து, மானுறுத்தச் செலவு (manufacturing expenses), ஐந்தொகைச் சிட்டையில் (balance sheet) எழுதிக் கொள்ளும் ஆண்டுத் தேய்மானக் கொள்ளூகை (annual depreciation charge) போன்றவற்றைக் கழித்தால் வருவது. அதாவது,

ஆண்டின் கூட்டப் பொலுவு A(GP) = A(S) - A(ME) - A(BD) ------ சமன் 10

இப்படிக் கிடைக்கும் ஆண்டின் கூட்டப் பொலுவில் இருந்து ஆண்டின் பொதுச்செலவைக் கழித்தால் ஆண்டின் நிகரப் பொலுவு (annual net profit) கிடைக்கும்.

ஆண்டின் நிகரப் பொலுவு A(NP) = A(GP) - A(GE) ------- சமன் 11

இன்னொரு விதமாகப் பார்த்தால்,

ஆண்டின் நிகரப் பொலுவு A(NP) = A(CI) - A(BD) ------- சமன் 12

இனி, வருமான வரிக்குப் பிறகுள்ள ஆண்டு நிகர நிகரப் பொலுவு (annual net profit after tax) என்பது,

A(NNP) = A(NCI) - A(BD) ------- சமன் 13

என்று ஆகும். A(CI) மற்றும் A(NCI) என்பவை கையில் கிடைக்கக் கூடிய பண வருமானங்கள்; ஆனால் A(NP), A(NNP) போன்றவை ஐந்தொகைச் சிட்டையில் எழுதிக் கொள்ளும் ஆண்டுத் தேய்மானக் கொள்ளூகையைக் கழித்து வருவதால், கொஞ்சம் பிடிபடாதவை; ஒரு மாதிரி நெருடல் அல்லது வெறும் தோற்றம் அந்தத் தொகைகளில் இருக்கிறது. தேய்மானக் கொள்ளுகையை வேறு மாதிரிக் கணக்குச் செய்தால், பொலுவு குறைந்தோ, கூடவோ செய்யும்.

ஒரு பொதினம் நடத்துவுதில் ஆண்டுக் கடைசியில் கையில் எவ்வளவு பணவருமானம் (cash income) கிடைக்கிறது என்பது பொலுவு என்பதைக் காட்டிலும் முகமையான செய்தி; பொதினக் கணக்கிலே பொலுவைக் கூடக் காட்டி என்ன பலன்? கையிலே பணம் இருக்கிறதா என்பதுதான் கேட்கப் படவேண்டிய கேள்வி. வெறுங்கை முழம் போட்டா விதை போடக் காணுமா?

அன்புடன்,
இராம.கி.

In TSCII:

þó¾ «¾¢¸¡Ãò¾¢ø ¬ñÎô À½ô ¦ÀÕìÌ ±ýÀÐ ±ýÉ ±ýÀ¨¾Ôõ, ¦À¡¾¢Éô ¦À¡Ö× (business profit) ±ýÀÐ ±ôÀÊì ¸½ì¸¢¼ô Àθ¢ÈÐ ±ýÀ¨¾Ôõ À¡÷ô§À¡õ.

´ù¦Å¡Õ ¦À¡¾¢ÉÓõ ¾ýÛ¨¼Â ÒÐì¸ì ¦¸¡ñ¨Á¨Â (production capacity) ¦ÀÕ측Áø ¨ÅòÐì ¦¸¡ûž¢ø¨Ä. ´ù¦Å¡Õ ¬ñÎõ ±ôÀÊ¡ÅÐ À¡ÎÀðÎ §¿÷ò¾¢ò ¾¢Èý (efficiency), Ò¾¢Â ÑðÀ¢Âø(technology), ¦À¡È¢Â¢Âø ¦¿Ç¢×ÍƢ׸û (flexibilities) ¬¸¢ÂÅü¨Èì ¦¸¡ñÎ ¾ýÛ¨¼Â ÒÐì¸ Å¢Ç¢õÒ¸¨Ç (production limits) ¿¸÷ò¾¢ì ¦¸¡ñÎ ÒÐì¸ì ¦¸¡ñ¨Á¨Âì Üð¼ ÓÂÖ¸¢ÈÐ. þó¾ ÓÂüº¢Â¢ø ¾ý ¿¢¸Ãô À½ ÅÕÁ¡Éò¾¢ø þÕóÐ þýÛõ ¦¸¡ïºõ ¦ºö¸Äý¸û(equipments) /±ó¾¢Ãí¸Ù(machineries)ì¸¡É ¦ºÄ¨Åì ÜðÊ ¬ñÊü¸¡É ¦Á¡ò¾ ӾģðÎî ¦ºÄ¨Å (total capital expenditures) «¾¢¸Ã¢ì¸¢ÈÐ. ±É§Å ¦À¡¾¢Éò¾¢ø ¸¢¨¼ìÌõ ¬ñÎô À½ô ¦ÀÕìÌ (annual cash flow)±ýÀÐ ¸£§Æ ÅÕõ ºÁýÀ¡ðÊý Àʧ «¨Á¸¢ÈÐ.

¬ñÎô À½ô¦ÀÕìÌ A(CF) = A(NCI) - A(TC) ----- ºÁý 8

þÐŨà ¦À¡¾¢Éò¾¢ý ÅÃ× ¦ºÄ׸¨Çô À½ô¦ÀÕìÌ (cash flow) ±ýÈ §¿¡ì¸¢ø À¡÷ò§¾¡õ. þÉ¢ ¦À¡¾¢Éò¾¢ý ÅÃ× ¦ºÄ׸¨Ç ¦À¡Ö× (profit) ±ýÈ Ó¨È¢ø À¡÷ô§À¡õ.

ӾĢø À¡÷츧ÅñÊÂÐ ¬ñÊý ¦À¡Ðî ¦ºÄ×. þó¾î ¦ºÄ× þÃñΠŨ¸ô ÀÎõ. Ó¾ø Ũ¸î ¦ºÄ× ÒÐì¸ò¨¾ Á¡ÛÚòÐõ §À¡Ð (Á¡ÛÚò¾ø = manufacturing) ²üÀÎõ ¦ºÄ×; þó¾î ¦ºÄ× ÒÐì¸ò¾¢ý «Ç¨Åô ¦À¡Úò¾Ð; ÒÐì¸õ ÜÊÉ¡ø þó¾î ¦ºÄ×õ ÜÎõ, ÒÐì¸õ ̨Èó¾¡ø þó¾î ¦ºÄ×õ ̨ÈÔõ; þý¦É¡Õ Ũ¸î ¦ºÄ× ÒÐì¸õ þÕó¾¡Öõ þøÄ¡Å¢ð¼¡Öõ ¦À¡¾¢Éò¾¢ø ²üÀÎõ ¦ºÄÅ¡Ìõ. ´Õ ¦À¡¾¢Éò¾¢ø ¬û, «õÒ, §À÷ ±øÄ¡õ ¨ÅòÐì ¦¸¡ûÙ¸¢§È¡§Á «ÅüÈ¡ø/«Å÷¸Ç¡ø ²üÀÎõ ¦ºÄ× þó¾î ¦ºÄ×. þ¾¨Éô ¦À¡Ðî ¦ºÄ× ±ýÚ ¦º¡øÖ¸¢§È¡õ.

±É§Å,

¬ñÊý ¦Á¡ò¾î ¦ºÄ× = ¬ñÊý ¦À¡ÐÄ× + ¬ñÊý Á¡ÛÚò¾î ¦ºÄ×

A(TE) = A(GE) + A(ME) ------ ºÁý 9

þÉ¢ ¬ñÊý Üð¼ô ¦À¡Ö× (gross profit) ±ýÀРŢüÀ¨É(sales)¢ø þÕóÐ, Á¡ÛÚò¾î ¦ºÄ× (manufacturing expenses), ³ó¦¾¡¨¸î º¢ð¨¼Â¢ø (balance sheet) ±Ø¾¢ì ¦¸¡ûÙõ ¬ñÎò §¾öÁ¡Éì ¦¸¡û騸 (annual depreciation charge) §À¡ýÈÅü¨Èì ¸Æ¢ò¾¡ø ÅÕÅÐ. «¾¡ÅÐ,

¬ñÊý Üð¼ô ¦À¡Ö× A(GP) = A(S) - A(ME) - A(BD) ------ ºÁý 10

þôÀÊì ¸¢¨¼ìÌõ ¬ñÊý Üð¼ô ¦À¡ÖÅ¢ø þÕóÐ ¬ñÊý ¦À¡ÐĨÅì ¸Æ¢ò¾¡ø ¬ñÊý ¿¢¸Ãô ¦À¡Ö× (annual net profit) ¸¢¨¼ìÌõ.

¬ñÊý ¿¢¸Ãô ¦À¡Ö× A(NP) = A(GP) - A(GE) ------- ºÁý 11

þý¦É¡Õ Å¢¾Á¡¸ô À¡÷ò¾¡ø,

¬ñÊý ¿¢¸Ãô ¦À¡Ö× A(NP) = A(CI) - A(BD) ------- ºÁý 12

þÉ¢, ÅÕÁ¡É ÅâìÌô À¢ÈÌûÇ ¬ñÎ ¿¢¸Ã ¿¢¸Ãô ¦À¡Ö× (annual net profit after tax) ±ýÀÐ,

A(NNP) = A(NCI) - A(BD) ------- ºÁý 13

±ýÚ ¬Ìõ. A(CI) ÁüÚõ A(NCI) ±ýÀ¨Å ¨¸Â¢ø ¸¢¨¼ì¸ì ÜÊ À½ ÅÕÁ¡Éí¸û; ¬É¡ø A(NP), A(NNP) §À¡ýȨŠ³ó¦¾¡¨¸î º¢ð¨¼Â¢ø ±Ø¾¢ì ¦¸¡ûÙõ ¬ñÎò §¾öÁ¡Éì ¦¸¡û騸¨Âì ¸Æ¢òÐ ÅÕž¡ø, ¦¸¡ïºõ À¢ÊÀ¼¡¾¨Å; ´Õ Á¡¾¢Ã¢ ¦¿Õ¼ø «øÄÐ ¦ÅÚõ §¾¡üÈõ «ó¾ò ¦¾¡¨¸¸Ç¢ø þÕ츢ÈÐ. §¾öÁ¡Éì ¦¸¡ûÙ¨¸¨Â §ÅÚ Á¡¾¢Ã¢ì ¸½ìÌî ¦ºö¾¡ø, ¦À¡Ö× Ì¨È󧾡, ܼ§Å¡ ¦ºöÔõ.

´Õ ¦À¡¾¢Éõ ¿¼òÐ×¾¢ø ¬ñÎì ¸¨¼º¢Â¢ø ¨¸Â¢ø ±ùÅÇ× À½ÅÕÁ¡Éõ (cash income) ¸¢¨¼ì¸¢ÈÐ ±ýÀÐ ¦À¡Ö× ±ýÀ¨¾ì ¸¡ðÊÖõ Ó¸¨ÁÂ¡É ¦ºö¾¢; ¦À¡¾¢Éì ¸½ì¸¢§Ä ¦À¡Ö¨Åì Ü¼ì ¸¡ðÊ ±ýÉ ÀÄý? ¨¸Â¢§Ä À½õ þÕ츢Ⱦ¡ ±ýÀо¡ý §¸ð¸ô À¼§ÅñÊ §¸ûÅ¢. ¦ÅÚí¨¸ ÓÆõ §À¡ð¼¡ Å¢¨¾ §À¡¼ì ¸¡ÏÁ¡?

«ýÒ¼ý,
þáÁ.¸¢.

Tuesday, June 29, 2004

புறத்திட்டு நிதி - 4

ஒரு பொதினத்தில் முகன்மையான வருமானம் (main revenue) என்பது விற்பனையில் கிடைக்கும் வருமானமே (sales revenue). மற்ற பணப் பெருக்க(cash flow)மெல்லாம் கொளுதகை(cost), கொளுதகை - எங்கும் நீக்கமற நிறைந்து நிற்கும் கொளுதகையே.

வருமானத்திற்கும் கொளுதகைக்கும் இருக்கும் உள்ள மீதந் தான் பொதினத்தின் சம்பாதிப்பு வருமானம் (earned revenue).

பொதுவாக வரலாற்றுக் கொளுதகை (historical cost) என்பது நடந்து முடிந்தது; எனவே அது ஏற்கனவே இருந்த நேர்த்தித் திறனைப் (efficiency) பொருத்தது. மாறாக, முன்தேர்ந்த கொளுதகை (pre-determined cost) என்பது இனி வரப்போகும் செலவைக் குறிப்பது. இந்த இரண்டு கொளுதகைகள் தான் எந்தக் கொளுதகுத்தலிலும் (costing) பயன்படுகின்றன. இவற்றை வைத்தே, குறிப்பாக முன்தேர்ந்த கொளுதகைக்கும், உரியாய் நடந்த கொளுதகை(real actual cost)க்கும் இடையே உள்ள வேறுபாடுகளை(differences)த் தெரிந்து கட்டுப்படுத்துவதே பணப்பகுப்பு கட்டுறல் (budgetory control) என்று மானகைப் படிப்பில் (management studies) சொல்லப் படுகிறது. ஒரு பொதினத்தை மானகைப் படுத்துவது என்பது இந்த வேறுபாடுகளைக் களைப்பதும் குறைப்பதுமே ஆகும்.

ஒரு பொதினத்தின் அன்றாட நடப்பு என்பது இது போன்ற வழமையான கணக்கீட்டுப் பழக்கமே (conventional accounting practice). நேரியலான கணக்கீட்டுப் பருவம் (normal accounting period) என்பது ஓராண்டு. இதை இந்தியா போன்ற நாடுகளில் ஏப்ரலிலிருந்தே பெரும்பாலும் தொடங்குவார்கள். ஆண்டுக் கணக்கு என்பது மார்ச்சு 31-ல் முடியும். ஒரு பொதினம் பொலுவோடு நடக்கிறதா என்று அறிய ஆண்டு வருமானத்தை, அதுவரை போட்ட முதலீட்டோ டு ஒப்பிட்டுச் சொல்லுவது வழக்கம். ஆனால் அவ்வளவு எளிமையாகப் பார்ப்பது பல சிக்கல்களையும், குழப்பத்தையும் உருவாக்குகிறது; ஏனெனில் இந்தச் சொற்களை பலரும் பல மாதிரிப் புரிந்துகொள்ளுகிறார்கள்.

இப்பொழுது ஒவ்வொரு கொளுதகையையும் விவரமாய்ப் பார்ப்போம்.

இனி வரும் பத்திகளில் ஆண்டுக் கொளுதகைகளையும் வருமானங்களையும் A என்ற குறியீட்டால் அழைப்போம். விற்பனையால் வரும் ஆண்டு வருமானத்தை - Annual Sales - A(S) என்றும், ஆண்டின் மொத்தச் செலவை - Annual total expenditure - A(TE) என்றும் சொல்லுவோம். அப்பொழுது,

ஆண்டுப் பண வருமானம் - Annual Cash Income - A(CI) = A(S) - A(TE) -----சமன் (5)

இந்த வருமானத்திற்கு அரசாங்கம் இடும் வருமான வரி - Income Tax A(IT) - யை இதிலிருந்து கழிக்க, ஆண்டு நிகரப் பண வருமானம் - Annual net cash income - கிடைக்கும்.

ஆண்டு நிகரப் பண வருமானம் A(NCI) = A(CI) - A(IT) -----சமன் (6)

அரசாங்க வருமான வரி என்பது வரிபோடக் கூடிய வருமானம் - taxable income - என்பதில் இருந்து கணக்குப் போட்டுக் கண்டுபிடிக்க வேண்டிய ஒன்று. இதற்காக, ஆண்டுப் பண வருமானத்தில் இருந்து தேய்மானக் கொள்ளுகை - depreciation charge A(D) - யையும், வேறு உள்ளேறுகை - Allowance A(A) -களையும் கழித்து வருவதையே வரிபோடக் கூடிய வருமானம் (taxable income) என்று சொல்லுகிறோம். இதில் ஒரு குறிப்பிட்ட விழுக்காட்டை வருமான வரி - income tax "t" - என்று சொல்லுவோம். இந்தியாவில் இது 35% ஆகும். எனவே,

ஆண்டு வருமான வரி - Annual Income Tax A(IT) = [A(CI) - A(D) - A(A)]*t -----சமன் (7)

மேலே உள்ள சமன் பாட்டில் t என்பது பின்ன வரிவீதத்தைக் (fractional tax rate) குறிக்கும். இங்கே வரி எவ்வளவு என்று கணிப்பதை மிக எளிமையாகச் சொல்லியிருக்கிறேன். உண்மையில் அது ஒவ்வொரு நாட்டிலும் விதிமுறைகளுக்குத் தகுந்தாற் போல் பெரிதும் பலக்கியதாய் (complex) இருக்கும். பலுக்குமைக்குள் (complexity) ஆழ்ந்து நாம் சொல்லவந்த செய்தி முழுகிப் போகக் கூடாது என்று எளிமையோடே இங்கு நின்று கொள்ளுகிறேன்.

அன்புடன்,
இராம.கி.

In TSCII:

ÒÈò¾¢ðÎ ¿¢¾¢ - 4

´Õ ¦À¡¾¢Éò¾¢ø Ó¸ý¨ÁÂ¡É ÅÕÁ¡Éõ (main revenue) ±ýÀРŢüÀ¨É¢ø ¸¢¨¼ìÌõ ÅÕÁ¡É§Á (sales revenue). ÁüÈ À½ô ¦ÀÕì¸(cash flow)¦ÁøÄ¡õ ¦¸¡Ù¾¨¸(cost), ¦¸¡Ù¾¨¸ - ±íÌõ ¿£ì¸ÁÈ ¿¢¨ÈóÐ ¿¢üÌõ ¦¸¡Ù¾¨¸§Â.

ÅÕÁ¡Éò¾¢üÌõ ¦¸¡Ù¾¨¸ìÌõ þÕìÌõ ¯ûÇ Á£¾ó ¾¡ý ¦À¡¾¢Éò¾¢ý ºõÀ¡¾¢ôÒ ÅÕÁ¡Éõ (earned revenue).

¦À¡ÐÅ¡¸ ÅÃÄ¡üÚì ¦¸¡Ù¾¨¸ (historical cost) ±ýÀÐ ¿¼óÐ ÓÊó¾Ð; ±É§Å «Ð ²ü¸É§Å þÕó¾ §¿÷ò¾¢ò ¾¢È¨Éô (efficiency) ¦À¡Õò¾Ð. Á¡È¡¸, Óý§¾÷ó¾ ¦¸¡Ù¾¨¸ (pre-determined cost) ±ýÀÐ þÉ¢ ÅÃô§À¡Ìõ ¦ºÄ¨Åì ÌÈ¢ôÀÐ. þó¾ þÃñÎ ¦¸¡Ù¾¨¸¸û ¾¡ý ±ó¾ì ¦¸¡Ù¾Ìò¾Ä¢Öõ (costing) ÀÂýÀθ¢ýÈÉ. þÅü¨È ¨Åò§¾, ÌÈ¢ôÀ¡¸ Óý§¾÷ó¾ ¦¸¡Ù¾¨¸ìÌõ, ¯Ã¢Â¡ö ¿¼ó¾ ¦¸¡Ù¾¨¸(real actual cost)ìÌõ þ¨¼§Â ¯ûÇ §ÅÚÀ¡Î¸¨Ç(differences)ò ¦¾Ã¢óÐ ¸ðÎôÀÎòÐŧ¾ À½ôÀÌôÒ ¸ðÎÈø (budgetory control) ±ýÚ Á¡É¨¸ô ÀÊôÀ¢ø (management studies) ¦º¡øÄô Àθ¢ÈÐ. ´Õ ¦À¡¾¢Éò¨¾ Á¡É¨¸ô ÀÎòÐÅÐ ±ýÀÐ þó¾ §ÅÚÀ¡Î¸¨Çì ¸¨ÇôÀÐõ ̨ÈôÀЧÁ ¬Ìõ.

´Õ ¦À¡¾¢Éò¾¢ý «ýÈ¡¼ ¿¼ôÒ ±ýÀÐ þÐ §À¡ýÈ ÅƨÁÂ¡É ¸½ì¸£ðÎô ÀÆ츧Á (conventional accounting practice). §¿Ã¢ÂÄ¡É ¸½ì¸£ðÎô ÀÕÅõ (normal accounting period) ±ýÀÐ µÃ¡ñÎ. þ¨¾ þó¾¢Â¡ §À¡ýÈ ¿¡Î¸Ç¢ø ²ôÃĢĢÕó§¾ ¦ÀÕõÀ¡Öõ ¦¾¡¼íÌÅ¡÷¸û. ¬ñÎì ¸½ìÌ ±ýÀÐ Á¡÷îÍ 31-ø ÓÊÔõ. ´Õ ¦À¡¾¢Éõ ¦À¡Ö§Å¡Î ¿¼ì¸¢È¾¡ ±ýÚ «È¢Â ¬ñÎ ÅÕÁ¡Éò¨¾, «ÐŨà §À¡ð¼ Ӿģ𧼡Π´ôÀ¢ðÎî ¦º¡øÖÅÐ ÅÆì¸õ. ¬É¡ø «ùÅÇ× ±Ç¢¨Á¡¸ô À¡÷ôÀÐ ÀÄ º¢ì¸ø¸¨ÇÔõ, ÌÆôÀò¨¾Ôõ ¯ÕÅ¡ì̸¢ÈÐ; ²¦ÉÉ¢ø þó¾î ¦º¡ü¸¨Ç ÀÄÕõ ÀÄ Á¡¾¢Ã¢ô ÒâóЦ¸¡ûÙ¸¢È¡÷¸û.

þô¦À¡ØÐ ´ù¦Å¡Õ ¦¸¡Ù¾¨¸¨ÂÔõ Å¢ÅÃÁ¡öô À¡÷ô§À¡õ.

þÉ¢ ÅÕõ Àò¾¢¸Ç¢ø ¬ñÎì ¦¸¡Ù¾¨¸¸¨ÇÔõ ÅÕÁ¡Éí¸¨ÇÔõ A ±ýÈ ÌȢ£ð¼¡ø «¨Æô§À¡õ. Å¢üÀ¨É¡ø ÅÕõ ¬ñÎ ÅÕÁ¡Éò¨¾ - Annual Sales - A(S) ±ýÚõ, ¬ñÊý ¦Á¡ò¾î ¦ºÄ¨Å - Annual total expenditure - A(TE) ±ýÚõ ¦º¡ø֧šõ. «ô¦À¡ØÐ,

¬ñÎô À½ ÅÕÁ¡Éõ - Annual Cash Income - A(CI) = A(S) - A(TE) -----ºÁý (5)

þó¾ ÅÕÁ¡Éò¾¢üÌ «Ãº¡í¸õ þÎõ ÅÕÁ¡É Åâ - Income Tax A(IT) - ¨Â þ¾¢Ä¢ÕóÐ ¸Æ¢ì¸, ¬ñÎ ¿¢¸Ãô À½ ÅÕÁ¡Éõ - Annual net cash income - ¸¢¨¼ìÌõ.

¬ñÎ ¿¢¸Ãô À½ ÅÕÁ¡Éõ A(NCI) = A(CI) - A(IT) -----ºÁý (6)

«Ãº¡í¸ ÅÕÁ¡É Åâ ±ýÀÐ Åâ§À¡¼ì ÜÊ ÅÕÁ¡Éõ - taxable income - ±ýÀ¾¢ø þÕóÐ ¸½ìÌô §À¡ðÎì ¸ñÎÀ¢Êì¸ §ÅñÊ ´ýÚ. þ¾ü¸¡¸, ¬ñÎô À½ ÅÕÁ¡Éò¾¢ø þÕóÐ §¾öÁ¡Éì ¦¸¡ûÙ¨¸ - depreciation charge A(D) - ¨ÂÔõ, §ÅÚ ¯û§ÇÚ¨¸ - Allowance A(A) -¸¨ÇÔõ ¸Æ¢òÐ ÅÕŨ¾§Â Åâ§À¡¼ì ÜÊ ÅÕÁ¡Éõ (taxable income) ±ýÚ ¦º¡øÖ¸¢§È¡õ. þ¾¢ø ´Õ ÌÈ¢ôÀ¢ð¼ Å¢Ø측𨼠ÅÕÁ¡É Åâ - income tax "t" - ±ýÚ ¦º¡ø֧šõ. þó¾¢Â¡Å¢ø þÐ 35% ¬Ìõ. ±É§Å,

¬ñÎ ÅÕÁ¡É Åâ - Annual Income Tax A(IT) = [A(CI) - A(D) - A(A)]*t -----ºÁý (7)

§Á§Ä ¯ûÇ ºÁý À¡ðÊø t ±ýÀÐ À¢ýÉ Åâţ¾ò¨¾ì (fractional tax rate) ÌÈ¢ìÌõ. þí§¸ Åâ ±ùÅÇ× ±ýÚ ¸½¢ôÀ¨¾ Á¢¸ ±Ç¢¨Á¡¸î ¦º¡øĢ¢Õ츢§Èý. ¯ñ¨Á¢ø «Ð ´ù¦Å¡Õ ¿¡ðÊÖõ Å¢¾¢Ó¨È¸ÙìÌò ¾Ìó¾¡ü §À¡ø ¦ÀâÐõ ÀÄ츢¾¡ö (complex) þÕìÌõ. ÀÖį̀ÁìÌû (complexity) ¬úóÐ ¿¡õ ¦º¡øÄÅó¾ ¦ºö¾¢ Óظ¢ô §À¡¸ì ܼ¡Ð ±ýÚ ±Ç¢¨Á§Â¡§¼ þíÌ ¿¢ýÚ ¦¸¡ûÙ¸¢§Èý.

«ýÒ¼ý,
þáÁ.¸¢.