உலக்கைப் பாலை மரம், 15-18 மீட்டர் உயரம் வரை வளரக்கூடியது என்றாலும், பல இடங்களில் 8 மீட்டர் அளவிலே தான் காணப் படுகிறது. மரத்தில் நிறைய முடிச்சுக்கள் இருக்கும். சிறுகிளைகள் உருவாகி, உதிர்ந்தபின் இப்படி முடிச்சுக்களாக ஏற்படுகின்றன. காய்ந்த சிறு கிளைகளின் காம்புப் பகுதிகள் முட்களைப் போன்றே இருக்கும். எப்பொழுதும் பசுமையாய் இருக்கும் பாலையிலைகள் தடித்த தோலுடன், 5.0-13.5 செ.மீ. நீளத்தோடும், 2.5-5.0 செ.மீ. அகலத்தோடும் முட்டை வடிவத்தில், நுனிப்பகுதி அரைவட்டமாயும், இருக்கின்றன. இலைச் சந்துகளின் இடையே, ஒரு செ.மீ. நீளக் காம்புடன், தனிப் பூவாகவோ, அன்றி 2-6 பூக்கள் அளவில் பூங்கொத்தாகவோ, வெண்மை நிறத்தோடும், சிறிது நறுமணத்தோடும், டிசம்பர் - சனவரியில் பூக்கின்றன. (அது என்னவோ, பெரும்பாலான பாலைத்திணை மரங்களின் பூக்கள் வெள்ளை நிறத்திலேயே இருக்கின்றன. பால் நிறம் வெள்ளை தானே?) பொதுவாக, மற்ற பாலை மரங்களைப் பார்க்கையில், உலக்கைப் பாலை அதிகமாய்ப் பூப்பதில்லை. அப்படிப் பூத்த பின்னர், 1.5 செ.மீ. விட்டத்தில் நீள் உருளை வடிவில் காய்கள் உருவாகி, முடிவில் அவையும் முதிர்ந்து, மஞ்சள் நிறக் கனிகளாகின்றன. ஒவ்வொரு கனியிலும் ஒரு விதை இருக்கும். பெரும்பாலும் சிறார்கள் சுவைக்கும் இந்தப் பாலைப் பழங்கள் ஒரு சில இடங்களில் விற்கப் படுகின்றன. (உலக்கைப் பாலையின் படத்தை அருகில் கொடுத்துள்ளேன்.)
குடசப் பாலை (Holarrhena antidysenterica) என்பதை குழிசிப் பாலை என்றும் சொல்லுவது உண்டு. (குழிசி = குடம்; குழிசிப்பாலை>குளசிப்பாலை>குளப்பாலை.) இதைக் குத்துப் பாலை, கசப்பு வெட்பாலை என்றும் கூடச் சிலர் சொல்லுவார்கள். "வடவனம் வாகை வான்பூங் குடசம்" என்று பல்வேறு பூக்களைச் சொல்லும் இடத்தில், குறிஞ்சிப் பாட்டின் 67 - ஆம் வரி சொல்லும். வான்பூ என்பது வெள்ளைப்பூ என்பதைக் குறிக்கும் ஒரு குறியீடு. இதே சொல்லாட்சி மணி:3.164; சிலப் 13.157 ஆகியவற்றிலும் காணப்படுகிறது. வடமொழியில் இந்தப் பாலையை குடஜ, கலிங்க என்று சொல்லுவார்கள்.
குடசப் பட்டை, மருந்துப் பொருளாயும் பயன்படுகிறது. குடச மது என்பது 12 1/2 சேர் (1சேர் என்பது இந்தக் கால வழக்கில் 280 கிலோ கிராம் ஆகும்.) மரப்பட்டை, உலர் திராட்சை 6 1/4 சேர், பேரிலை இலுப்பைப்பூ (Bassia latifolia; ஆலையில்லா ஊருக்கு இலுப்பைப்பூச் சர்க்கரை என்று கேள்விப் பட்டிருக்கிறீர்களா?) பெருங்குமிழ் மரப்பட்டை (Gmelina Arborea) ஆகிய இரண்டையும் ஒவ்வொன்றும் 80 தோலா (1 தோலா = 12 கிராம்) போட்டு 256 சேர் தண்ணீரைச் சேர்த்துக் கொதிக்க வைத்து, மொத்தக் கொள்ளளவும் 4ல் ஒன்றாகும் படி செய்து, வடிகட்டி, அதற்குப் பின்னால் பூக்கோளி விளக்கையின் (Woodfordia floribunda) பூக்களை 2 1/ 2 சேர் போட்டு, treacle 12 1/2 சேர் போட்டு குளிர்ந்த இடத்தில், மண்ணில் புதைத்து, ஒரு மாதம் நொதிக்க வைத்து எடுத்தால் கசப்பில்லாத ஒரு மது கிடைக்கும். அது விடாமல் பிய்த்துக் கொண்டு போகும் கழிச்சலுக்கும், வயிற்றாலைக்கும், மருந்தாக அமையும்.
குடசப்பாலை வறண்ட உலர்காடுகளைக் காட்டிலும், 500 மீட்டருக்கு மேல் உள்ள மலைப்பகுதிகளில், குறிப்பாக ஏலகிரி, சேர்வராயன் மலைகளில், வளர்கிறது. காடுகளை அழிக்கும் போது கடைசியில் அழிவதும், மீண்டும் துளிர்க்கும் போது முதலிற் துளிர்ப்பதும் குடசப்பாலை தான். இலைகளும் பூக்களும் அழகானவை. இலைகள் சிறுகாம்புடன், 15-30 செ,மீ.நீளமும், 5-15 செ,மீ.அகலமும் கொண்டு கரும்பச்சை நிறத்தில் இருக்கும். மார்ச்சு-மே மாதங்களில் குடசப்பாலை பூக்கும். பூங்கொத்துக்கள் நறுமணம் உடையவை. பூக்கள் 2.5 செ.மீ. அளவில் மரத்தில் பூச்செண்டுகள் போலக் காட்சியளிக்கும். 30 செ.மீ. நீளமுள்ள குடசப்பாலை நெற்றுக்கள் சோடி சோடியாய் உருவாகும். 0.6 செ.மீ. விட்டமுடைய நெற்றுக்கள் குழல் வடிவமுடையவை. ஒவ்வொரு நெற்றிலும் 1.25 செ.மீ. நீளமுள்ள விதைகள் 25-30 இருக்கும்.
அடுத்தது வெட்பாலை (= வெள்+பாலை; வெள்ளையான பாலை; Wrightia tinctoria). இதை நிலப்பாலை என்றும் சொல்லுவார்கள். தந்த நிறத்தில் உள்மரம் இருக்கும். இதை வைத்துக் கடைசல் வேலைகள் செய்ய முடியும். சமவெளிகளிலும், 1500 மீ வரை மலைப்பகுதிகளிலும் வெட்பாலை இருக்கும். 800 மீட்டருக்கும் மேல் மலைப்பகுதிகளில் கருப்பாலை (Wrightia Arborea) என்ற இன்னொரு வகை மரமும் இந்தியாவில் பல இடங்களில் உண்டு. வெட்பாலை தமிழ்நாட்டில் செவ்வல், சரளை, செம்புறை நிலங்களில் விளைகிறது. எங்கள் ஊர்ப்பக்கங்களிலும், மானாவரி நிலங்களில் வேலியோரமாய், மழை குறைந்த இடங்களிலும் வளர்கிறது. பல்வேறு இடங்களில் அழிஞ்சல் மரத்துடன் வளர்கிறது. செதில் செதிலாய் இருக்கும் சாம்பல் நிறப்பட்டை இந்த மரத்தை மூடிக் கிடக்கிறது. சிறுகாம்புடன், 6-14 செ.மீ. நீளம், 3-6 செ.மீ.அகலத்தில் இலைகள்லிருக்கின்றன. பூக்கள் நறுமணத்தோடு இருக்கும். பூந்தண்டு இரு கவட்டு முறையில் இணைந்திருக்கும். இரு சூல் இலைகளால் ஆன, ஒரு புற வெடிப்பில் கனிகள் உருவாகும். இரட்டையாக இணைந்த இக் கனிகள் 25-30 செ.மீ. நீளம், 0.6-1.2 செ.மீ. விட்டம் உடைய கொம்புகள் போலத் தோற்றம் அளிக்கும். சிறு வெண்மயிர் குஞ்சத்துடன் கூடிய விதைகள். இவற்றை அரிசிகள் என்பார்கள்.
குடசப்பாலையின் பட்டையுடன், வெட்பாலைப் பட்டையையும் கலந்து மேலே சொன்ன மது, காய்ச்சம் (காய்ச்சம் என்ற தமிழ்ச்சொல் தான் காஷாயம் என்று ஒரு விதமாய் ஒலித்து வடமொழியாக்கிக் காட்டுவார்கள். நல்ல தமிழ்ச்சொல்லை நாம் தொலைத்து நிற்கிறோம். தமிழ் மருத்துவச் சொற்கள் பலவும் தேடிப் புதுக்க வேண்டியவை. வெட்பாலையின் வெண்ணிறப் பூக்கள் சமவெளிகளில் சூலை-ஆகசுடு மாதங்களிலும், மலைப்பகுதிகளில் மார்ச்சு - மே மாதங்களிலும் பூக்கும்.
முசுக்கைப் பாலை (Wrightia tomentosa) என்ற இன்னொரு வகையும் எல்லா மாவட்ட முல்லை நில வறண்ட திறந்தவெளி நிலங்களில், உதிர்புக் காடுகளில் வளரக்கூடியது. ஆனால், இந்த வகை தெற்கே செல்லச் செல்ல தமிழகத்தில் அருகிக் காணப்படுகிறது.
குடசப் பாலையையோ, வெட்பாலையையோ, அவற்றின் காய்களை யானைத் தந்தத்தோடு ஒப்பிட்டுக் குறிக்கும் பாடல் வரிகள் நற்றிணை 107 -ல் முதலைந்து வரிகளாய் வருகின்றன.
"உள்ளுதொறும் நகுவேன்-தோழி! வள் உகிர்ப்
பிடி பிளந்திட்ட நார் இல் வெண்கோட்டுக்
கொடிறு போல் காய வால் இணர்ப் பாலை,
செல்வளி தூக்கலின், இலைதீர் நெற்றம்
கல் இழி அருவியின் ஒல்லென ஒலிக்கும்"
"தோழி, நினைக்கும் போதெல்லாம் சிரித்துக்கொள்வேன். காய்ந்து போன வெள்ளைப் பூங்கொத்து நிறைந்த பாலைமரம், ஊடே வரும் காற்றில் ஒடுங்கி அசைகிறது; அந்த அசைவில் மலையிலிருந்து விழும் அருவியோசை போல், இலை கொட்டிய நெற்றுக்கள் ஒன்றையொன்று முட்டி ஒலிக்கின்றன. அது எப்படி இருக்கிறது தெரியுமா? கூர்நகம் கொண்ட பெண்யானை பிளந்திட்ட நார் இல்லாத வெண்கோட்டுத் தந்தம் போல் இருந்தது".
அடுத்து ஏழிலைப் பாலையைப் பார்ப்போம்.
அன்புடன்,
இராம.கி.
Showing posts with label புதலியல் (botany). Show all posts

Tuesday, January 02, 2007
பாலை - தொடர்ச்சி - 1
"பாலையும் பண்ணும்" என்ற என் முந்தையப் பதிவிற்கு வந்த பின்னூட்டுக்கள் பலவும் பாலை மரங்களைப் பற்றியே எழுந்தன. பண்களைப் பற்றிய செய்திகளில் யாருக்கும் விழைவு ஏற்படாததில் எனக்கு வருத்தமே. இருந்தாலும் கேட்டவற்றிற்கு மறுமொழிக்க வேண்டும் எனத் தனியாக மரங்கள் பற்றி இங்கு பதிகிறேன்.
எப்படி நம்முடைய பண்பாடு, கலைகள் பற்றிய அறிவு தமிழ்மக்களிடையே கொஞ்சங் கொஞ்சமாய்க் குறைந்து வருகிறதோ, அதேபோல, சென்ற 50 ஆண்டு காலமாய், தமிழகச் சுற்றுப்புறம் பற்றிய புதலியல் (botany) அறிவும், இயற்கை அறிவும் நமக்குக் குறைந்து வருகிறதோ என்ற ஐயம் எனக்கு உண்டு. தமிழர்கள் என்போர் சிறிது சிறிதாய் மறைந்து, அவர்களுக்குப் பகரியாய் (substitute) தமிங்கிலர்கள் என்போர் உருவாவதன் உட்புலம், இந்த அறிவுக் குறைவிலும் அடங்கியிருக்கிறது என்றே நான் கருதுகிறேன். எங்கெங்கோ வேறு நாடுகளிலும், மாநிலங்களிலும் இருக்கின்ற பைன், தேவதாரு போன்ற மரங்களைப் பற்றியெல்லாம் படித்துத் தெரிந்து கொள்ளுகிற நாம், நம்மூர் மரங்களையும், உயிரிகளையும் பற்றித் தெரிந்து கொள்ள மாட்டேம் என்கிறோம். நம்முடைய பள்ளிப் பாடத்திட்டங்களும், கொஞ்சம் கொஞ்சமாய் "தமிழம்" என்ற உணர்வைக் குறைத்து, வெறுமையாக்கி, அதில் இந்தியம், உலகம்" என்ற பெரிய உணர்வுகளை மட்டுமே நிறைத்துக் கொண்டிருக்கின்றன. (இதைப் படிக்கும் ஒரு சில மீநிலைத் தேசப் பற்றாளர்கள், "ஆகா, இங்கே பார், ஒரு தேசத் துரோகி" என்று உடனே ஓடிவரக் கூடும். அவர்களுக்குச் சொல்லுவது இதுதான். "நான் ஒன்றும் இந்தியத்திற்கோ, உலகத்திற்கோ எதிராளி அல்ல. தமிழம் என்பதை அறியாமல் ஒதுக்கி, மற்றதை மட்டுமே பேசி, என்னை ஓர் உள்ளீடு அற்றவனாக, ஆக்கிக் கொள்வதில் எனக்கு உடன்பாடு இல்லை; அவ்வளவு தான். என்னைத் தமிழன் - இந்தியன் என்றே அடையாளம் கண்டு கொள்ளுகிறேன். தேசப்பற்று குறைந்தவன் என்று சிலர் கருதினால், இருந்துவிட்டுப் போகிறேன். பர்வா நஹிங்" :-))
அண்மைக் காலங்களாய் இந்திய (குறிப்பாகத் தமிழக) மரங்களைப் பற்றிப் பல பொத்தகங்கள் தமிழில் வந்துள்ளன. அவற்றில் சிலவற்றைப் பட்டியல் இட்டு இந்தத் தொடர்முடிவில் கொடுக்க எண்ணியுள்ளேன். பொங்கலுக்குச் சற்று முன்னால் சென்னையில் நடக்கும் பொத்தகக் கண்காட்சி / சந்தையில், இது போன்ற பொத்தகங்களை வாங்கிப் பயனுறும் படி பதிவர்களுக்குப் பரிந்துரைக்கிறேன். இவற்றை வாங்கி உங்கள் வீட்டு நூலகத்தில் வைத்து, அவ்வப்போது படித்துப் பார்த்து, நாம் போகும் இடங்களில் உள்ள மரங்களை அடையாளம் தெரிந்து கொள்ளுவது நல்லது. நம்மூர் இயற்கை அதன் வழியே புரியும். நம்மூர் என்ற பெருமிதமும் கூட அந்த அறிவால் வந்து சேரும். தமிழன் என்ற உணர்வுக்கு இந்த அறிவும் பெருமிதமும் ஒரு தேவையே. (இதே போல ஈழத்து மரங்கள் பற்றிய பொத்தகங்களும் தமிழ்நாட்டில் வந்து பரவினால் மற்றோரும் தெரிந்து கொள்ளலாம். தமிழக - தமிழீழச் செய்திப் பரிமாற்றம் இன்னும் கூடவேண்டும். அருகருகில் இருந்துகொண்டு உணர்வால் இப்படி இருவரும் விலகி நிற்பது நல்லதல்ல.)
இயற்கை அறிவுக் குறைச்சலுக்கு (என்னையும் சேர்த்துத்தான் சொல்லுகிறேன்.) இந்தப் பாலை மரமும் ஓர் எடுத்துக் காட்டு. கீறினால் பால் வரும் பல மரங்களுக்கு தமிழன் வைத்த பொதுப் பெயர் பாலையாகும். இலத்தீன் வழியே பெயரிடும் புதலியற் பெயரைப் போன்றது தான் இது. ஆனால் அதற்குச் சமமானதல்ல. பாலை என்ற சொல்லை இசையில் மட்டுமே பழந்தமிழன் கையாளவில்லை; திணைக்கும் கூடக் கையாண்டிருக்கிறான். நாலைந்து மரக் குடும்பங்களுக்கும் இந்தப் பெயர் ஏற்பட்டிருக்கிறது.
"முல்லையும் குறிஞ்சியும் முறைமையில் திரிந்து
நல்லியல்பு இழந்து நடுங்கு துயர் உறுத்துப்
பாலை என்பதோர் வடிவம் கொள்ளும்"
என்று சிலப்பதிகாரம் 11ம் காதையில் 60ம் வரியில் இருந்து பாலை நிலம் பற்றிய வரையறையை இளங்கோவடிகள் சொல்லுவார். முல்லை, குறிஞ்சி மட்டுமல்லாமல் மருதமும் கூடத் திரிந்து இன்றைக்குப் பாலைத் தோற்றம் காட்டுகின்றன. ஓராண்டிற்கு 8 மாதங்கள் கூடப் பாலைத் தோற்றம் காட்டும் நிலங்கள் தமிழகமெங்கும் விரவிக் கிடக்கின்றன. "பாலை தான் இன்றையத் தமிழகத்தின் முகமோ?" என்று கூடச் சிலபோது எனக்கு மருட்டாய்த் தோற்றுவது உண்டு.
உங்களுக்குத் தெரியுமா? சங்க இலக்கியத்தில் மிகுதியான பாட்டுக்கள், பாலைத்திணையில் தான் வருகின்றன. நானும் கூட ஒரு பாலைநாட்டான் தான். எங்கள் ஊர்ப் பக்கத்தில் இருக்கும் நிலத்தைப் பாலைநாடு என்றே நாட்டார்கள் (இவர் பெரும்பாலும் முக்குலத்தோர்) பெயரிட்டுச் சொல்லுவார்கள். இரண்டு பகுதி கொண்ட எங்கள் ஊரின் ஒரு பகுதிப் பெயர் கூடப் பாலையூர்/பாலையப்பட்டி தான் (இன்னொரு ஊர்ப் பகுதி கண்டனூர்). ஆனாலும் பாருங்கள் பாலையை அவ்வளவு கூர்ந்து அறியாமலேயே மேம்போக்காய் என் இளம் பருவத்தைக் கழித்திருக்கிறேன். இப்பொழுது அகவை முற்றிய நிலையில் ஓர்ந்து பார்த்தால், வெட்கமாக இருக்கிறது. கண் கெட்ட பிறகு, சூரிய வணக்கமாய் பாலை பற்றிப் பேசுகிறேன். எதற்கும் ஒரு காலம் வேண்டுமோ, என்னவோ? :-)
பல்வேறு பாலை மரங்கள் பற்றி இங்கு பேசவதாக இருக்கிறேன். ஒவ்வொன்றாய்ப் பார்ப்போம்.
பாலை என்று சொன்னவுடன், முதலில் நினைவிற்கு வருவது பாலைத் திணையைக் குறிக்கும் மூன்று மரங்கள்; ஒன்று. உலக்கைப் பாலை. (இதை மஞ்சப் பாலை என்றும் சிலர் சொல்லுவார்கள்). இரண்டாவது, குடசப்பாலை (Holarrhena antidysenterica). மூன்றாவது வெட்பாலை (Wrightia tinctoria.). பாலைத்திணையில் இந்த மூன்று அடிப்படை மரங்கள் போக அங்கு ஓமை, ஞெமை, மரா, குரா, யா எனப் பல மரங்களும் உண்டு. அவற்றின் தமிழ்ப்புலம் பற்றியும், அவற்றிற்கான ஆங்கிலப் புதலியற் பெயர்களையும் இங்கு பேசினால் பதிவு பெரிதும் நீண்டு போகும் என்பதால் அவற்றை விடுக்கிறேன்.)
உலக்கைப் பாலையை ஆங்கிலத்தில் Manilkara Hexandra அல்லது Mimusops hexandra என்று சொல்லுவார்கள். (பெரும்பாலும் Minusops என்பதையே புதலியலில் இப்பொழுது வழங்குகிறார்கள். Mimusops என்ற சொல்லுக்கு 'மாந்தக் குரங்கைப் போல' என்று பொருள். Wedge-leaved ape-flower என்ற பெயர் அதன் பூவிற்கு அப்படி வந்ததோ, என்னவோ? பூவில் ஆறு மகரந்தத் தண்டுகள் இருப்பதால், பின்னால் உள்ள hexandra என்ற பெயர் எழுந்தது.). தமிழில் புதலியல் ஒழுங்காய் வளர வேண்டுமானால், புதலியல் முறையில் அவற்றிற்குத் தமிழில் இரட்டைப் பெயரிட வேண்டும் என்று ஒரு சீரான முறையில், "தமிழ்நாட்டுத் தாவரங்கள்" என்ற பொத்தகத்தில், முன்னாள் தமிழக வனத்துறைத் தலைவர் ச.சண்முகசுந்தரம் இந்தப் பாலையைக் கணுப்பாலை மகிழம் என்று புதிய புதலியற் பெயர் வைத்து அழைப்பார்.
மகிழம் என்ற பொதுப்பெயர் ஏற்கனவே இன்னொரு வகையான இளஞ்சி மகிழத்தைக் (Mimusops elangi) குறிப்பிடும். இளஞ்சி மகிழத்தின் பூவும் அதன் நறுமணமும் பெரும் புகழ் கொண்டவை. நாகையில் இருந்து திருவாரூர் செல்லும் வழியில் ஆழியூருக்கு அருகில் உள்ள திருக்கண்ணங்குடி பெருமாள் கோயிலின் தலமரம் இந்த இளஞ்சி மகிழம் தான். (இளஞ்சி மகிழத்தைக் காயா மகிழ் என்று திருமங்கை ஆழ்வார் சிறப்பிப்பார்.) மகிழத்தை வடமொழியில் பகுள / வகுள என்று அழைப்பார்கள். நம்மாழ்வாருக்கு, வகுள ஆபரணர் (= மகிழத்தை அணிந்தவர்) என்ற பெயரும் உண்டு. ஒருவேளை பாலை>பால என்ற சொல், பகுல>பகுள>வகுள என்று வடபுலத்தில் ஆகி மீண்டும் தமிழகத்தில் நுழையும் போது மகிழம் என்ற பொதுப் பெயர் பெற்றதோ என்று விளங்கவில்லை. இன்னும் சான்று தேடிக் கொண்டு இருக்கிறேன். பகுத்தது பால் என்று தமிழில் திரிவதை எண்ணிப் பார்த்தால், நான் சொல்ல வருவது புரியும்.
இதே Mimusops மரக் குடும்பத்தில், மேலே சொன்ன இரு வகைகள் போக, இன்னும், இரு வகைகளாய் Mimusops kauki (வெளிரிய இலை கொண்ட மரம் kauki), Mimusops littoralis (திருமரைக்காட்டிற்கு அருகில் கடற்புறத்தில் பரந்து கிடந்ததால் இது littoralis) ஆகியவற்றையும் சொல்லுவார்கள். (மறுபடியும் ஓர் இடைவிலகல். அந்த ஊர் மறைக்காடு அல்ல; மரைக்காடு தான். கால காலமாய் நாம் எழுத்துப் பிழை செய்து, அதை வடமொழியிலும் முட்டாள்தனமாய் மொழிபெயர்த்து, வேதாரண்யம் என்று சொல்லி, எத்தனை நாள் தடுமாறிக் கட்டிக் கொண்டு, அலையப் போகிறோமோ தெரியவில்லை, உருப்படியாகப் பழைய பெயரை, இனிமேல் கையாளத் தொடங்கலாமே? அலையாத்திக் காடுகளில், மரை மான் மிகுதியாய் இருந்ததால், இது மரைக்காடு. பாடல் பெற்ற கோயில் என்பதால் திரு மரைக்காடு.)
மாராட்ட (Maharashtra) மாநிலத்தில் கொங்கணப் பகுதியிலும், கூர்ச்சர (Gujarat) மாநிலத்தில் காந்தேஷ் பகுதிகளிலும் உள்ள உலர்காடுகளிலும், தக்காணத்தில் கர்நாட்டிக் பகுதிகளிலும் இந்தப் பாலை மரங்கள் அதிகமாக உள்ளன. (கர்நாட்டிக் என்பது ஒரு வெள்ளைக்கார சொல்லாட்சி. கர்நாடக மாநிலத்திற்கும் அதற்கும் தொடர்பே இல்லை. விசாகப் பட்டினத்தில் தொடங்கித் தெற்கே கிழக்குக் கடற்கரை முழுக்க, குமரிமுனை வரைக்கும் உள்ள, பகுதியைத் தான் கர்நாட்டிக் என்று குழப்பமான வகையில் புவிவரைவில் - geography - அழைக்கிறார்கள். இதைச் சோழமண்டல / கோரமண்டலக் கடலோரம் என்றும் அழைப்பதுண்டு.)
கடல்மட்டத்தில் இருந்து 500 மீட்டர் உயர்பகுதி வரை புதர்க் காடுகளில், உலக்கைப் பாலையும், குடசப் பாலையும் வளர்கின்றனவாம். ஒரு காலத்தில் எங்கள் காரைக்குடிப் பகுதியில் இந்த மரங்கள் மிகுதியாக இருந்தன; இன்று அவை பெரும்பாலும் வெட்டப்பட்டு, மறைந்து வருகின்றன. கரும் புரசு (Chloroxylon swietenia) வளருகின்ற இடங்களில் எல்லாம் இந்தப் பாலை மரங்களைக் காணலாம். முன்னே சொன்ன, மரைக்காட்டுக் கடற்கரைப் பகுதியில் உள்ள இன்னொரு கடினமான பாலை மரத்தை Manilkara littoralis என்பார்கள். இதனை அந்தமான் துப்பாக்கிக் குண்டு மரம் (andaman bullet wood) என்றும் சொல்லுவது உண்டு.
கன்னடத்தில் பொதுவாகப் பாலையைப் பாலெ/ஹாலெ என்று அழைப்பார்கள். தெலுங்கிலும் இது போன்ற பெயரே உண்டு. மலையாளத்திலும் இதே பெயர். வடபுலத்தில் Ranjana என்று அழைப்பார்கள். "பாலை நின்ற பாலை நெடுவழி" என்று சிறுபாணாற்றுப் படை 11 - ஆம் வரியிலும், "பாலை சான்ற சுரம்" என்று மதுரைக் காஞ்சி 314 - ஆம் வரியிலும் காட்டுவார்கள். ஐங்குறு நூறு 317 - ஆம் பாட்டில்,
சூழ்கம் வம்மோ தோழி பாழ்பட்டுப்
பைதற வெந்த பாலை வெங்காட்டு
அருஞ்சுரம் இறந்தோர் தேஎத்துச்
சென்ற நெஞ்சே நீடிய பொருளே
"சூழ்ந்து வா தோழி! பசுமை இல்லாது வெந்து பாழ்பட்ட கொடிய பாலைக்காட்டு அருஞ்சுரத்தில் போன தலைவரிடம், தூதாய்ச் சென்ற என் நெஞ்சு விரைந்து திரும்பி வராது இருக்கிறது; காலமும் நீள்கின்றது. இதன் பொருள் என்ன வென்று தெரியவில்லையே? அதை ஆராய்வோம், வா" என்று தோழியிடம் உரைத்தாளாம். பொதுவாகப் பாலை நிலத்து மரங்கள் இப்படி ஒரு வெறுமை விதர்ப்பைக் காட்டுவதைச் சங்க இலக்கியம் நெடுகவும் அறியமுடியும்.
பெரும்பாலான பாலை நிலத்து நிலத்திணைகள், மேலே சொன்ன தமிழகக் கிழக்குக் கடற்கரையில் இருப்பதைப் போலவே தமிழீழக் கடலோரமும் இருக்கப் பெரும் வாய்ப்பு இருப்பதால், ஈழத்து நண்பர்களும், திரு.சுந்தரவடிவேலும், பாலை என்று முந்தையப் பதிவின் பின்னூட்டுக்களில் தெரிவித்த மரம் இந்த Mimusops மரங்களில் ஒன்றாகத்தான் இருக்கும் என்று எண்ணுகிறேன். (குறிப்பாக எந்தப் பாலை என்று என்னால் தெளிவாய்ச் சொல்ல முடியவில்லை. ஈழத்து நண்பர்களில் புதலியலாளர் யாரேனும் இருந்தால் உறுதி செய்யலாம்.)
[ஒரு கட்டுரை எழுதினால், இடை விலகிக் கொண்டே இருப்பது எனக்குப் பழக்கமாய் ஆகிவிட்டது. செய்திகள் ஓடிவந்து "சொல், சொல்" என்று ஆணையிட்டால், என்ன செய்வது? இதோ, இன்னொரு இடைவிலகல்.
இன்றைய கடல்வரைவியல் (oceanography), புவியியல் (geology) ஆய்வுகளைச் சங்க இலக்கியச் சான்றுகளோடு பொருத்திப் பார்த்தால், இந்தப் பக்கம் இராமேசுரம் தொடங்கி, மரைக்காடு முடியும் நிலப்பகுதிக்கும், அந்தப் பக்கம் தலைமன்னார் தொடங்கி யாழ்ப்பாணத்திற்குச் சற்று மேல் வரை முடியும் நிலப்பகுதிக்கும், இடைப்பட்டு, இதே போல நீரில் பாக் நீரிணைக்கும், மன்னார் வளைகுடாவுக்கும், இடைப்பட்ட கடல், ஆழம் குறைந்திருந்த காலங்களில் நிலமாய் இருந்திருக்க வேண்டும் என்பதை ஓர்ந்து பார்க்க முடியும். அப்படி நிலமாய் இருந்த காலத்தை உறுதி செய்வதில் தான் ஆய்வாளர்களிடம் வேறுபாடுகள் இருக்கின்றன. ஒருசில ஆய்வாளர்கள் அது 2500/3000 ஆண்டுகள் முன்னர் என்றும், இன்னும் சிலர் அது 8000 ஆண்டுகள் முந்தியது என்றும் சொல்லுகிறார்கள். எது சரி என்று இன்றைக்கு அறுதியாகச் சொல்ல முடியவில்லை. ஆனால் கடலுக்குள் அழிந்த இந்த நிலம் பழந்தமிழகத்தின் ஒரு பகுதியாய் இருந்தது. பாண்டியன் முடத் திருமாறன் தன் காலத்துக் கடல்கோளுக்கு அப்புறம், சோழனிடம் வவ்விக் கொண்ட முத்தூர்க் கூற்றம் என்பது, அழிந்து போன இந்தப் பகுதிக்கு அடுத்திருக்கும் இன்றைய ஆவுடையார் கோயில், தொண்டி, அறந்தாங்கி, பட்டுக்கோட்டை அடங்கியுள்ள பகுதியே.
அழிந்து போன இந்த நிலத் தொடர்பு இல்லையென்றால் ஈழத்தீவிற்கும், இந்தியத் துணைக்கண்டத்திற்குமான முற்று முழுதான தொடர்பைச் சரியாக விளக்க முடியாது. பாலை மரம் இரண்டு பக்கமும் பரவியது இந்தப் பழந்தமிழக நிலத் தொடர்பால் தான். ஆயிரம் தான் மற்றவர் சொன்னாலும், பழந்தமிழகத்தில் ஈழத்தீவும் ஒரு பகுதியே.]
அடுத்த பகுதிக்குப் போவோம்.

Saturday, December 23, 2006
பாலையும் பண்ணும்
இங்கு சென்னையில் சனவரி 5 -ல் இருந்து, 16 வரை பொத்தகக் கண்காட்சி நடக்கும். ஒவ்வொரு ஆண்டும் தவறாது கலந்து கொண்டு பொத்தகம் வாங்கும் பழக்கம் எனக்கு உண்டு. 2001- ல் நடந்த கண்காட்சியில் National Book Trust விரித்திருந்த கடையில் "மூலிகைகள்" என்ற பொத்தகத்தைப் பார்த்து, "நமக்குத் தான் இயற்கை அறிவு குறைத்து இருக்கிறதே, இதை வாங்கிக் கொஞ்சம் தெரிந்து கொள்ளலாம்" என்று வாங்கினேன். புரட்டிப் பார்த்த போதுதான் 'சுண்ணம் வாங்கப் போய் சொக்கத் தங்கம் வாங்கியிருக்கிறேன்' என்று புரிந்தது..
அதில் இருந்து ஒரு செய்தி.
---------------------------------------------------------------
பாலை (Chhatim)
விஞ்ஞானப் பெயர்: அல்ஸ்டோ னியா ஸ்கோலரிஸ் (Alstonia Scholaris (L) Br.)
குடும்பம்: அபோசயினேசி
மலையாளம்: பால
தெலுங்கு: பாலைக்
கன்னடம்: மத்தாலே
மராத்தி: சாத்வின், சைத்தான்
ஒரியா: சாதியானா
வங்காளி: சாத்திரம்
அஸ்ஸாமி: சாயிதென்
இந்தி: சாதின்
சமஸ்கிருதம்: ஸப்தபர்ணா
பாலையின் வணிகப் பெயர், பெருவழக்கிலான இந்தியப் பெயரைக் கொண்டது. இதன் சமஸ்கிருதப் பெயர் "ஒரு சுற்றில் 7 இலைகளைக் கொண்டது" என்ற பொருள்படும்.
விளக்கம்:
25மீ. உயரம் வரை வளரக் கூடிய இம்மரம் எப்போதும் பசுமையாக இருக்கும்; கசப்பான பாலைக் கொண்டது. மரப்பட்டை கடினமானது; கருஞ்சாம்பல் நிறம் உடையது. கிளைகள் வட்ட அடுக்காய் இருக்கும். மரத்தின் அடிப்பாகம் முட்டுக் கொடுக்கப் பட்டிருக்கும். இலைகள் 4 - 7 வரை வட்ட அடுக்காகவும், 10-20 செ.மீ. நீளத்தில் தோல் போன்றும் காணப்படும். பூக்கள் சிறியதாக, பசுமை கலந்த வெள்ளை நிறத்தில், நறுமணம் மிகுந்து, பல பூக்களையுடைய கொத்துக்களாய் இருக்கும். பழங்கள் மிகவும் நீளமாகவும் (30-60 செ.மீ) குறுகியும், ஒடுங்கியும் காணப்படும். அவை இணை இணையாகத் தொங்குவதுடன் அடர்த்தியான கொத்துக்களையும் அமைத்துக் கொள்ளூம்.
விளையும் இடம்:
இம்மரம் இந்தியா முழுவதும் ஈரப்பசை அதிகமான இடங்களில் காணப்படுகிறது.
மருத்துவப்பண்புகள்:
சாத்திம் (Chhatim) என்பது இம்மரத்தின் உலர்ந்த பட்டையாகும். இம்மருந்து நாட்பட்ட வயிற்றுப்போக்கு, வயிற்றுக்கடுப்பு ஆகியவற்றிற்கு உடனடியாகக் குணமளிக்காக் கூடியது. இது மற்ற மருந்துகளைப் போலன்றி மலேரியா காய்ச்சலைப் படிப்படியாக, வியர்வையோ, சோர்வோ ஏற்படாமல் குறைக்கிறது. இம்மருந்து தோல் வியாதிக்கும் ஏற்றது.
இம்மருந்து இயங்கு நரம்புகளைத் தாக்கி வாதத்தையும், பின்பு இரத்தக் கொதிப்பையும் ஏற்படுத்தும் எனக் கூறப்படுகிறது. சில பரிசோதனைகள் இம்மருந்தின் நோய் எதிர்ப்புச் சக்தியையும் உடலியக்க வினைகளையும் மறுத்துப் பேசுகின்றன.
மற்ற பயன்கள்:
இந்த மரமானது மட்ட ரகமான மரச் சாமான்கள் செய்யவும், கட்டுமானப் பெட்டிகள் செய்யவும், தேயிலை டப்பாக்கள், பென்சில், தீக்குச்சிகள் செய்யவும் பயன்படுகிறது. முன்னாட்களில் இது மர சிலேட்டுகள் செய்யவும் பயன்பட்டது. இதனால் இது ஸ்காலரிஸ் (Scholaris) என்ற சிறப்புப் பெயரால் வழங்கப் பட்டது.
--------------------------------------------------------
மேலே உள்ளதைப் படித்தால், இதைப் போய் சொக்கத் தங்கம் என்று சொல்கிறேனே என்று தோன்றும். காரணம் இருக்கிறது; அன்பர்கள் பொறுக்க வேண்டும். விளக்குகிறேன்.
மரத்தின் பெயர்க் காரணங்கள் பலவகைகளில் ஏற்படலாம். வெள்ளைக் காரன் சிலேட்டுப் பலகையின் பயனால் இம்மரத்திற்குப் பெயர் வைத்தது ஒரு வகை. ஏழு இலைகள் கொண்டது என்ற பெயரில் வடமொழியிலும், வட இந்திய மொழிகளிலும் பெயரிட்டது இன்னொரு வகை. மரத்தில் வரும் (கசப்பான) பாலின் பொருட்டுத் தமிழன் பெயரிட்டது மேலும் ஒரு வகை. (இந்தக் கன்னட 'மத்தாலே' எப்படி வந்தது என்று தான் புரியவில்லை.)

மரத்தில் பூ, காய், பழங்களைக் காட்டிலும் இலைகளே எடுப்பாக இருக்கின்றன. எனவே இந்த இலைகளும், அதன் வட்டமான சுற்றுக் கட்டும், அதை ஒடித்தால் காம்பின் அடியில் இருந்து வரும் பாலும் தான் மனக் கண்ணில் தைத்திருக்க வேண்டும்; அதனாலே இம்மாதிரிப் பெயர்கள் எழுந்திருக்க வேண்டும். நான் சொக்கத் தங்கம் என்றது. ஏழு இலைகளுக்கும், பாலுக்கும் நடுவில் உள்ள செய்திகளின் உள்ளடக்கம் பற்றியே. இதைப் பற்றி அறிய தமிழிசையைப் பற்றிச் சொல்ல வேண்டும்.
தமிழிசையின் அடிப்படை நரம்புகள்
குரல் (இன்றையக் குறியீடு - ச), துத்தம் (ரி), கைக்கிளை(க), உழை (ம), இளி (ப),
விளரி (த), தாரம் (நி). இதில் துத்தம், கைக்கிளை, உழை, விளரி, தாரம் என்ற 5 சுரங்கள் மெலிந்தும், வலிந்தும் ஒலிக்கக் கூடியவை. இவற்றையும் கணக்கில் கொண்டால் மொத்த அடிப்படைச் சுரங்கள் (நரம்புகள்) 12
ச, ரி1, ரி2, க1, க2, ம1, ம2, ப, த1, த2, நி1, நி2
இப் 12 நரம்புகளில் 7 நரம்புகள் கொண்டு பண்ணப் படுவது பெரும்பண் எனப்படும். வெறும் ஆறு நரம்புடையன பண்ணியல் ஆகும். இதே போல ஐந்து நரம்பின, திறம் எனப்படும்; நாலு நரம்பின, திறத்திறம் எனப்படும். தமிழிசையில் இருக்கிற எல்லாப் பண்களுமே 4-ல் இருந்து 7 சுரங்கள் கொண்டவையே. பண்களைச் சங்க காலத்தில் பாலையென்றும் அழைத்தார். இக்காலத்தில் இராகம் என அழைக்கிறோம். (அரங்க நாதன் இரங்க நாதன் ஆனது போல, அரத்தம் இரத்தம் ஆனது போல, அராகம் என்ற சொல்லைத்தான் இராகம் என்று தவறாக அழைக்கிறோம்.)

அக்காலத்தில் குறிப்பிட்ட பண்களை இசைக்க வேண்டி, விதப்பான (specific) யாழ்களையே (குறிப்பிட்ட தடிமன் (thickness), நீளம், இறுக்கம் (tension) கொண்ட கம்பிகளைச் சேர்த்துச்) செய்தனர். ஒவ்வொரு யாழிலும் ஒரு சில பண்களை மட்டுமே இசைக்க முடியும். நாளாவட்டத்தில் அளவு மிகுந்த பண்களை இசைக்க எண்ணி இன்னும் வளர்ச்சியுற்ற செங்கோட்டு யாழ் (இக் காலத்து வீணை, வீள்>ன்வீளை>வீணை, விண் என்று தெரிக்கும் கம்பி கொண்ட இசைக் கருவி), கோட்டு யாழ் (இக்காலத்துக் கோட்டு வாத்தியம், இசைக் கலைஞர் இரவிக்கிரணால் சித்ரவீணா என்று வடமொழிப்பெயர் சூட்டப்பட்ட கருவி) சீறியாழ் (somewhat resembling mandolin),பேரியாழ் போன்றவற்றைச் செய்தனர்.
தமிழிசையைப் பற்றி அறிய, சங்கம் மருவிய காலத்தில் சிலப்பதிகாரத்திற்கும் பின்னெழுந்த, சேறை அறிவனார் இயற்றிய, பஞ்ச மரபு இசை நூலைப் படிக்க வேண்டும். இதை அருட்செல்வர் நா.மகாலிங்கத்தின் உதவியுடன், சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகத்தினர் 1993-ல் வெளியிட்டிருக்கிறார்கள். இசைக்கலைச் செல்வர் முனைவர் வீ.ப.கா. சுந்தரனார் இந்நூலுக்கு நீண்ட விரிவுரை எழுதியுள்ளார். இந்த உரையில் குறிப்பிட்ட சில யாழ்கள் (பண்கள்) இவை:
முல்லையாழ் - செம்பாலை - அரிகாம்போதி - கார்-மாலை
ச ரி2 க2 ம1 ப த2 நி1
குறிஞ்சியாழ் - படுமலைபாலை - நடபைரவி - கூதிர்-யாமம் -
ச ரி2 க1 ம1 ப த1 நி1
நெய்தல்யாழ் - செவ்வழிப்பாலை - இருமத்திமத் தோடி - மாலை -
ச ரி1 க1 ம1 ம2 த1 நி1
பாலையாழ் - அரும்பாலை - சங்கராபரணம் - வேனில் -மதியம் -
ச ரி2 க2 ம1 ப த2 நி2
மருதயாழ் - கோடிப்பலை - கரகரப்பிரியா - முன்பனி -காலை -
ச ரி2 க1 ம1 ப த2 நி1
நெய்தல்யாழ் - விளரிப்பாலை - தோடி - மாலை -
ச ரி1 க1 ம1 ப த1 நி1
குரல்புணர் நல்யாழ் - மேற்செம்பாலை - கல்யாணி - இளவேனில் -
ச ரி2 க2 ம2 ப த2 நி2
இங்கே பாலையாழ் என்பது பாலை நிலத்திற்கு உரியது; வேனிற்காலத்திற்கும், நண்பகல் நேரத்திற்கும் உரியது என்று புரிகிறது. ஆனால், செம் பாலை, படுமலைப் பாலை, செவ்வழிப் பாலை, அரும் பாலை, கோடிப் பாலை, விளரிப் பாலை, மேற்செம் பாலை என்று எழுதும் போது வரும் பாலை என்ற சொல் எப்படிப் பிறந்தது என்று தான் புரியாமல் இருந்தது. முனைவர் வீ.ப. கா. சுந்தரம் சுரங்களைக் கொண்டு பகுக்கப் பட்ட இசை, எனவே பகல் > பால்> பாலை என்று எழுந்ததாகச் சொற்பிறப்புக் கூறுவார். அது எனக்குப் பல காலமாய் நெருடலாகவே இருந்தது.
மேலே இந்த மூலிகைகள் பொத்தகத்தைப் படித்தவுடன் தான், சொக்கத் தங்கத்தைக் கண்டிருக்கிறோம் என விளங்கியது. மறுபடியும் மேலே படியுங்கள்; பாலை மரத்தில் இலைகள் 4-க்குக் குறையாமல் இருந்து 7 -க்கு மிகாமல் இருக்குமாம். தமிழ் இசைப் பண்களிலும், சுரங்கள் 4 - ல் இருந்து 7 -க்குள் தான் இருக்கும்; வடமொழியிலும், வட இந்திய மொழிகளிலும் 7 (சுற்றிற்கு 7 வரிசை) என்பதை ஒட்டியே மரத்திற்குப் பெயரிட்டிருப்பதையும் பார்க்க வேண்டும். இந்த மரத்தின் இலைக் கட்டு வட்டமாக இருக்கும் என்பது போல, பண்களிலும் வட்டமாகச் சுரங்களை பெய்து பண்ணைப் பெயர்த்து எழுதுவதற்கு வட்டப் பாலை முறை என்றே பெயர். இது போல ஆயப்பாலை, சதுரப்பாலை, திரிகோணப்பாலை என்றும் மேலும் சில முறைகள் உண்டு. மொத்தத்தில் 15,456 பண்கள் உண்டு என வீ.ப.கா.சுந்தரம் சொல்வார். (இந்த எண்கணக்கை ஆய்ந்து பார்க்க முயன்றுகொண்டிருக்கிறேன். இன்னும் புரியவில்லை.)
சங்க காலம், அதற்கு முந்திய காலங்களில் வாழ்ந்த தமிழனின் பார்வை மிக நுணுக்கமாக இருந்திருக்கிறது. இயற்கையைக் கூர்ந்து நோக்கியே தமிழன் இசையை எழுப்பியிருக்கிறான் என்பது பலருக்கும் தெரிந்த கதை. கூடவே, பாலை என்ற பொதுப் பெயரும் கூட இயற்கையில் இருந்து, ஒப்பீட்டு முறையில், அவன் செய்த இசைப் பண்களுக்கும் இடப்பட்டிருக்கலாமோ என்று இப்பொழுது தோன்றுகிறது. இன்னும் எத்தனை வியப்பான செய்திகளை நாம் தேட வேண்டும்? நம் இயற்கையறிவு இன்னும் கூட வேண்டும் என்பதை உணர்கிறேன்.

பாலை மரத்தை யாராவது பார்த்திருக்கிறீர்களா? அதற்கு வேறு ஏதாவது பெயர் இந்தக் காலத்தில் உண்டா?
அன்புடன்,
இராம.கி.
அன்புடன்,
இராம.கி.
Subscribe to:
Posts (Atom)