Sunday, January 02, 2005

ஆழிப் பேரலை

எப்பொழுதுமே ஒருவருக்கு இழப்பு ஏற்பட்டவுடன், உற்றார் உறவினர்கள் கூடி, ஈமச்சடங்கை முடித்து, பிண்டம் கொடுக்கும் வரை (அந்தக் காலத்தில் 16 நாட்கள், இந்தக் காலத்தில் 5 அல்லது 7 நாட்கள் வரை) "ஏன் இந்த இழப்பு ஏற்பட்டது, என்ன செய்திருக்கலாம், எது செய்யாமல் விட்டோ ம்" என்று ஆய்ந்து கொண்டிருப்பதில்லை; நீதி நெறி விளக்கம் சொல்லிக் கொண்டிருப்பதில்லை; வேண்டுமானால் ஈமச்சடங்கு முடியும் வரை தலைமாட்டில் விளக்கேற்றி, சிவநெறியாளர் வீட்டில் திருவாசகமும், விண்ணெறியாளர் வீட்டில் நாலாயிரப் பனுவலும் (இன்னும் இது போல விவிலியம், அல்லது குரான்) படித்துக் கொண்டிருப்போம்; இன்னும் மீறினால், காய நிலையாமை பற்றிய சித்தர் பாடல்களைப் பாராயணம் பண்ணிக் கொண்டு இருப்போம்.

உறுதியாக, இழப்பு ஏற்பட்டவருக்கு அறிவுரை சொல்லிக் கொண்டிருக்க மாட்டோ ம்; அதற்கு மாறாக, அந்த நேரத்தில் அவரோடு உடன் நின்று, தோள் கொடுத்து, ஆறுதல் சொல்லி, தேவைப்பட்டால் அவருடைய ஆற்றாமையை மறக்கடிக்கும் விதமாய் கொஞ்சம் ஒப்பாரியும் பாடி, அதே பொழுது அந்தச் சோகத்தில் இருந்து உடையவரை வெளிக்கொணரும் வகையில், வாழ்க்கையை இனிமேலும் கொண்டு செல்லுவதற்கு நம்பிக்கையை ஊட்டி, "நாங்கள் எல்லாம் இருக்கிறோம், உன்னை விட்டுவிடுவோமா?" என்று உறுதி அளித்துத் துணையாக இருப்பதில் தான் நம்மை நாமே ஈடுபடுத்திக் கொள்ளுவோம். இதுதான் நம்மூர் வழக்கம்.

சோகத்தின் நடுவில் "அன்றைக்கே அவர் சொன்னார்; இவர் சொன்னார்; கோள் சொல்லிற்று; மதம் சொல்லிற்று; நீ கேட்காமல் போனாய்; இன்றைக்கு எல்லாவற்றையும் இழந்து தவிக்கிறாய்; இது உனக்குத் ஒரு தண்டனை" என்று சொல்லுவதை நாகரிகம் பார்த்துத் தவிர்ப்போம். நண்பர்களுக்கு நான் சொல்லுவது புரியும் என்று எண்ணுகிறேன்.

இந்த மரபு நம்மில் இன்னும் சிலருக்குப் புரியாமல், இழப்பைப் பற்றிய அலசலை இழப்பு நடந்த மறுகணமே தொடங்கிவிடுகிறார்கள். இழப்பில் பாதிக்கப் பட்டவர் தன்னை இழந்து விடுகிற நேரத்தில், சுற்றி இருக்கிறவர்கள் கனிவு காட்ட வேண்டுமே ஒழிய, அறிவு காட்டக் கூடாது. அறிவு காட்டுவது பிண்டம் கொடுத்து முடித்த நாளுக்கு அடுத்த நாளில் வரவேண்டியது.

இன்றைக்கு ஏழாவது நாள்; இனிமேல் அலசலைத் தொடங்குங்கள்; அதில் ஒரு பொருள் இருக்கிறது.

அன்புடன்,
இராம.கி.

In TSCII:

±ô¦À¡ØЧÁ ´ÕÅÕìÌ þÆôÒ ²üÀð¼×¼ý, ¯üÈ¡÷ ¯ÈÅ¢É÷¸û ÜÊ, ®Áîº¼í¨¸ ÓÊòÐ, À¢ñ¼õ ¦¸¡ÎìÌõ Ũà («ó¾ì ¸¡Äò¾¢ø 16 ¿¡ð¸û, þó¾ì ¸¡Äò¾¢ø 5 «øÄÐ 7 ¿¡ð¸û ŨÃ) "²ý þó¾ þÆôÒ ²üÀð¼Ð, ±ýÉ ¦ºö¾¢Õì¸Ä¡õ, ±Ð ¦ºö¡Áø Ţ𧼡õ" ±ýÚ ¬öóÐ ¦¸¡ñÊÕôÀ¾¢ø¨Ä; ¿£¾¢ ¦¿È¢ Å¢Çì¸õ ¦º¡øÄ¢ì ¦¸¡ñÊÕôÀ¾¢ø¨Ä; §ÅñÎÁ¡É¡ø ®ÁíÌ ÓÊÔõ Ũà ¾¨ÄÁ¡ðÊø Å¢Ç째üÈ¢, º¢Å¦¿È¢Â¡Ç÷ Å£ðÊø ¾¢ÕÅ¡º¸Óõ, Å¢ñ¦½È¢Â¡Ç÷ Å£ðÊø ¿¡Ä¡Â¢Ãô ÀÛÅÖõ (þýÛõ þÐ §À¡Ä ŢŢĢÂõ, «øÄÐ Ìáý) ÀÊòÐì ¦¸¡ñÊÕô§À¡õ; þýÛõ Á£È¢É¡ø, ¸¡Â ¿¢¨Ä¡¨Á ÀüȢ º¢ò¾÷ À¡¼ø¸¨Çô À¡Ã¡Â½õ Àñ½¢ì ¦¸¡ñÎ þÕô§À¡õ.

¯Ú¾¢Â¡¸, þÆôÒ ²üÀð¼ÅÕìÌ «È¢×¨Ã ¦º¡øÄ¢ì ¦¸¡ñÊÕì¸ Á¡ð§¼¡õ; «¾üÌ Á¡È¡¸, «ó¾ §¿Ãò¾¢ø «Å§Ã¡Î ¯¼ý ¿¢ýÚ, §¾¡û ¦¸¡ÎòÐ, ¬Ú¾ø ¦º¡øÄ¢, §¾¨ÅôÀð¼¡ø «ÅÕ¨¼Â ¬üÈ¡¨Á¨Â ÁÈì¸ÊìÌõ Å¢¾Á¡ö ¦¸¡ïºõ ´ôÀ¡Ã¢Ôõ À¡Ê, «§¾ ¦À¡ØÐ «ó¾î §º¡¸ò¾¢ø þÕóÐ ¯¨¼ÂŨà ¦ÅǢ즸¡½Õõ Ũ¸Â¢ø, Å¡ú쨸¨Â þÉ¢§ÁÖõ ¦¸¡ñÎ ¦ºøÖžüÌ ¿õÀ¢ì¨¸¨Â °ðÊ, "¿¡í¸û ±øÄ¡õ þÕ츢§È¡õ, ¯ý¨É Å¢ðÎŢΧšÁ¡?" ±ýÚ ¯Ú¾¢ «Ç¢òÐò Ш½Â¡¸ þÕôÀ¾¢ø ¾¡ý ¿õ¨Á ¿¡§Á ®ÎÀÎò¾¢ì ¦¸¡û٧šõ. þо¡ý ¿õã÷ ÅÆì¸õ.

§º¡¸ò¾¢ý ¿ÎÅ¢ø "«ý¨È째 «Å÷ ¦º¡ýÉ¡÷; þÅ÷ ¦º¡ýÉ¡÷; §¸¡û ¦º¡øÄ¢üÚ; Á¾õ ¦º¡øÄ¢üÚ; ¿£ §¸ð¸¡Áø §À¡É¡ö; þý¨ÈìÌ ±øÄ¡Åü¨ÈÔõ þÆóÐ ¾Å¢ì¸¢È¡ö; þÐ ¯ÉìÌò ´Õ ¾ñ¼¨É" ±ýÚ ¦º¡øÖŨ¾ ¿¡¸Ã¢¸õ À¡÷òÐò ¾Å¢÷ô§À¡õ. ¿ñÀ÷¸ÙìÌ ¿¡ý ¦º¡øÖÅÐ ÒâÔõ ±ýÚ ±ñϸ¢§Èý.

þó¾ ÁÃÒ ¿õÁ¢ø þýÛõ º¢ÄÕìÌô Òâ¡Áø, þÆô¨Àô ÀüȢ «Äº¨Ä þÆôÒ ¿¼ó¾ ÁÚ¸½§Á ¦¾¡¼í¸¢Å¢Î¸¢È¡÷¸û. þÆôÀ¢ø À¡¾¢ì¸ô Àð¼Å÷ ¾ý¨É þÆóРŢθ¢È §¿Ãò¾¢ø, ÍüÈ¢ þÕ츢ÈÅ÷¸û ¸É¢× ¸¡ð¼ §ÅñΧÁ ´Æ¢Â, «È¢× ¸¡ð¼ì ܼ¡Ð. «È¢× ¸¡ðÎÅÐ À¢ñ¼õ ¦¸¡ÎòÐ ÓÊò¾ ¿¡ÙìÌ «Îò¾ ¿¡Ç¢ø ÅçÅñÊÂÐ.

þý¨ÈìÌ ²Æ¡ÅÐ ¿¡û; þÉ¢§Áø «Äº¨Äò ¦¾¡¼íÌí¸û; «¾¢ø ´Õ ¦À¡Õû þÕ츢ÈÐ.

«ýÒ¼ý,
þáÁ.¸¢.