Thursday, May 04, 2023

துளுத்து வந்த குடி.

துள்ளல்=அசைதல், குலுங்குதல், வெளிவருதல். துள்ளியது துளி. துளுத்தல்> தூர்த்தல்; நீரில் துளும்பி வெளிவருதல். திருச்செந்தூருக்கு அருகிலுள்ள துளுத்துக்குடி (>தூள்த்துக்குடி>) தூத்துக்குடியானது. (இவ்வூரும் முன்னொரு காலத்தில் கடலிலிருந்து வெளிவந்து நிலைத்ததே. தூத்துக்குடியின் நிலத்தடி நீர் கடல்நீரினுஞ் செறிவாய் ஒரு காலத்தில் கரிக்கும். அங்குள்ள உப்புத் தொழில் கடல்நீரை வைத்து முதலில் எழுந்ததல்ல, நெடுநாட் தங்கிச் அளவு கூடிய சூட்டாற் கடல்நீரின் உப்பு மேலுஞ் செறித்து, பின் புவிக்குள் ஊறிக் கீழிறங்கி நிலத்தடி நீராய் மாறியது.) 

இதேபோலக் கடல் தூர்ந்தெழுந்த நாடு துளுவிய/துளுவ நாடு ஆயிற்று. துளுவ நாடு சங்ககாலத் தொடக்கத்தில் தனித்திருந்து, பின்னால்  சேரநாட்டினுட் சேர்ந்தது, இன்றும் துளுநாட்டின் ஒரு பகுதி சேரலத்தில் ’மலபாராய்’ மீந்ததுள்ளது. 

No comments: