Wednesday, April 27, 2005

பூதியல் (Physics) - 4

முதலில், எல்லோரும் இன்று பயன்படுத்தத் தொடங்கிய இயற்பியல் என்ற சொல், முன் பரிந்துரைத்த இயல்பியலில் இருந்து அச்சடிப்புப் பிழை போல எப்படி மாறி வந்தது என்பது என்னைப் போன்றோருக்கு விளங்கவில்லை. தமிழ் அகரமுதலிகள் எதிலும் இயற்பு என்ற சொல் கிடையவே கிடையாது. மாறாக இயல்பு என்ற சொல் உண்டு. பின் எப்படி இயல்பு, இயற்பு ஆனது? கொஞ்சம் அடிப்படைப் புணர்ச்சி இலக்கணம் பார்க்கலாமா?

இயல் + கை = இயற்கை. இங்கே வருமொழி வல்லின ஒலி பெற்றிருந்ததால் 'ல்' என்னும் எழுத்து 'ற்' எனப் புணர்ச்சியில் மாறியிருக்கிறது. இதே போல, இயல் +பலகை = இயற்பலகை, இயல் + பெயர் = இயற்பெயர் என்று தமிழில் ஆகும் என்பது எல்லோருக்கும் தெரிந்தது தான்.

ஆனால் இயல் + பு = இயல்பு என்று குணத்தைக் குறித்து வரும்போது "பு" என்ற ஈறு மெல்லிய வல்லொலி (bu) பெற்று ஒலிக்கப் பெறும்; அங்கே 'ல்' என்ற எழுத்து திரிவதற்கு வழியே இல்லை (குறிப்பாக bu என்ற ஒலி எழுந்த பின், அது தமிழர் வாயில் எழாது.) இயல் + பு = இயற்பு என்று வர வேண்டுமெனில் "பு" என்ற பலுக்கம் வலிந்த வல்லொலி (pu) யாக அமைய வேண்டும். அப்படியானால் 'பு' என்ற எழுத்து தனித்து நிற்கும் போது வலிந்தும் மெலிந்தும் இருவேறு வகையில் ஒலிக்குமா? தனித்து நிற்கும் போது ஓர் எழுத்துக்கு ஓர் ஒலி தான் என்ற தமிழ் பலுக்கும் முறைக்கு இது முரண் அல்லவா? அல்லது தனித்து நிற்கும் போது pu என்று ஒலித்து இயல்பு என்னும் போது bu என்று மாறி ஒலிக்குமா? இந்த இலக்கண முறை என்ன இருபதாம் நூற்றாண்டுத் தமிழா? அல்லது வடமொழியின் தாக்கத்தால் ஏற்பட்ட மாற்றமா? One cannot have two different end results with similar looking parts of the speech. இதில் ஏதோ ஒன்றுதான் சரியாய் இருக்கமுடியும்.

எனவே இதுநாள் வரை இருந்த இயல்பு>இயல்பியல் என்ற பலுக்கலை வைத்து, இயற்பியல் என்ற சொற்பிறழ்ச்சியைத் தூக்கி எறிவோம் என்று நான் சொல்கிறேன். பூதியல் என்று ஆளத் தயங்கினால் கூடக் குறைந்தது "இயல்பியல்" என்ற சொல்லுக்காவது வருவோம். பொருட்களின் இயல்பைச் சொல்வது இயல்பியல் என்றே அக்காலத்தில் நாங்கள் பெயரிட்டோ ம். அப்பொழுது, எம்போன்றோருக்கு மொழிநூல் அறிவு போதாது. ஆனால் தமிழ் ஆர்வம் மேலோங்கி இருந்தது. எனவே ஒரு பக்கம் மட்டுமே பார்த்து இது போன்று "இயல்பியல்" பெயரிட்டோ ம்.

இன்றைக்கு இயல்பு என்றால் எதன் இயல்பு எனக் கேட்கத் தோன்றுகிறது அல்லவா? nature of what? மாறாக பூதிகம்/பூதியல் எனும் போது, பூதங்களால் ஆன பொருள்களைப் படிக்கிற இயல் என்பது விளங்கும். இங்கே பூதங்கள் என்பதை அடிப்படைக் கூறுகளென்றே பொருள் கொள்ளவேண்டும். (வெறும் மேம்போக்காக, பகிடியாக, பூதம், பிசாசு என்று பொருள்கொள்ளக் கூடாது. அப்படிச் செய்வோமானால், இம்மொழியையும், முன்னோர் மரபையும் 3 முறைத் தலையைச் சுற்றி வங்காளவிரிகுடாவில் தூக்கி எரிந்துவிடலாம் :-)). Moreover, the word also creates curiosity. பூதம் என்று தொடங்கி மாந்தனின் புரிதலில் ஏற்பட்ட மாற்றங்களை ஆறாவது வகுப்பில் கூறிப் படிப்படியாக இன்று வரை ஏற்பட்டுள்ள புரிதல்களைச் சொல்லலாம். இந்த வகையில் பூதிகம்/பூதியல் என்ற சொல், பல்வேறு பயன்பாடுகளில் சொல்ல வாய்ப்பாக இருக்கும்.

மாறாக, இயல்பை வைத்துக் கொண்டால் physique, physical appearance, physical properties, physiotherapy, physician, physicist, metaphysics என ஒவ்வொன்றையும் இதே சொல்லால் குறிக்க இயலாது, ஒவ்வொன்றிற்கும் தனித்தனிச் சொற்களைத் தேடித் தடுமாறும் சூழ்நிலை வந்துசேரும். அதேபொழுது, பூதம் என்ற சொல் அதன் கிரேக்கம்/ இலத்தின் அடிப்படையிலே நமக்கும் அமைவதால் அது மேலே உள்ள எல்லா சொல்லாட்சிகளையும் தமிழில் சொல்ல மிக எளிதாக வளைந்து கொடுக்கிறது. இது போன்ற வளைதன்மையால் தான் இச் சொல்லை இப்பொழுது பரிந்துரைக்கிறேன்.

He has a well built physique
அவருக்கு நல்ல கட்டானப் பூதிகை. (இங்கே பூதிகை என்பது உடல் வாகு; body - பொதி என்பதோடு தொடர்பு கொண்டது.)
Its physical appearance is appealing.
அதன் பூதத் தோற்றம் ஈர்ப்பதாய் இருக்கிறது
The physical properties are quite few.
பூதக் குணங்கள் மிகக் குறைவு.
Why don't you take physiotherapy?
நீங்கள் ஏன் பூதிகைத் தேற்றை எடுக்கக் கூடாது?
He is not a Doctor; He is a Physician
அவர் ஓர் முனைவரல்ல; பூதிகர்
He is physicist.
அவர் பூதியலார்.
It is metaphysics and not physics
இது பூதியல் அல்ல; மேம்பூதியல்

இந்த அளவுக்குச் சுருக்கமாக பொருள் பொதிந்த வகையில் இயல்பை வைத்துக் கூற இயலாது. எனவே பூதிகம்>பூதிகவியல்>பூதியல் என்பது இயல்பியலைக் காட்டிலும் பெரிதும் பொருந்துகிறது என்றே இப்பொழுது எண்ணுகிறேன். தவிரவும், முரஞ்சியார் பாடலில், "ஐம்பெரும் பூதத்து இயற்கை போல" என்றுதானே வருகிறது? எனவே இயல்பிலிருந்து சொல்வதை விட பூதத்திலிருந்து சொல் உருவாவது தானே சிறந்தது?

இகம் என்ற பின்னொட்டு எப்படிச் சேருகிறது என்பதற்கு சில காட்டுகள் கேட்டிருந்தார் மணி. அவை இனி இங்கே தரப்படுகின்றன.

இகம் என்பது இம்மை. இருக்கிறது என்று பொருள். க/ய போலியில் அது இயம் என்றும் வரும். இங்கே இகம் என்ற புழக்கத்தை மட்டும் காட்டுகிறேன். இகுதல் = கீழே இருத்தல்; இகு>இகை என்ற பின்னொட்டையும் கவனியுங்கள். பூதங்களால் ஆன இயற்கை பூதிகம் (பூது+இகம்). அதே போல பூது + இயல் = பூதியல். பூத இயற்கை பற்றிப் படிப்பது பூதிகம்/பூதிகஇயல்/பூதியல். ஐம்பூதங்களின் அடிப்படையில் வருவது இவ்வுலகு என்று கொண்டே "ஐது" என்ற சொல் கூட நம்மூரில் எழுந்தது.

ஐது + இகம் = ஐதிகம் = செவிவழிச் செய்தி, உலகுரை, தொன்றுதொட்டு வரும் கேள்வி.
கண்>கணி>கண்+இகம்=கணிகம்; கண்ணுதல் = கணக்கிடுதல்
தணி>தணிகை
தனி>தனிகம் = கொத்துமல்லி
தாம்>தாம்பு>தாம்பிகம் = பகட்டு. (தாம்/தூம் என்று செலவழித்தான் எனும் போது, வெறும் ஒலிக்குறிப்பை முன்னிட்டுப் பகட்டைக் குறிக்கிறது. தாம்புவது, இப்படிச் செய்வதைக் குறிக்கும். தாம்பிகம் என்பது டாம்பிகம் என்று இன்று உருமாறி ஒலிக்கிறது.)

இனிப் புதிய சொற்களை உருவாக்கும் பணி இருக்கும் போது பழைய சொற்களை மாற்றுவது சரியா என்ற வாதத்தைப் பார்ப்போம்.

கலைச் சொற்கள் என்பவை ஏதோ வேதப் பொத்தகத்தில் இருப்பது போல் ஒலிகூட மாறா அளவுக்கு அப்படியே ஏற்றுப் புழங்கப்பட வேண்டியவை அல்ல. சிந்தனை வளரும்போது நம்முள் மாற்றம் ஏற்படத்தான் செய்யும்? நம் கண்ணெதிரிலே கணனி, கணினி என்றிருந்து, இன்று கணி மட்டும் போதும் என்று பலரும் சொல்லவில்லையா? மின்சார இயல் மின்னியல் ஆக வில்லையா? அதே போல உப அத்யட்சகர் துணைவேந்தர் ஆகவில்லையா? பத்திரிக்கை தாளிகை ஆகவில்லையா? ரிஜிஸ்தர் பதிவேடு ஆகவில்லையா? பாராளுமன்றம் நாடாளுமன்றம் ஆகவில்லையா? பொருளாதாரம் பொருளியல் ஆகவில்லையா? தாவரவியல் நிலத்திணையியல் ஆகி இன்று புதலியல் (botany) ஆகவில்லையா? இயக்குநர் நெறியாளர் ஆகவில்லையா? நிர்வாக இயல் மேலாண்மையியல் ஆகி மானகையியல் என்று ஆகக் கூடாதா? நான் சொற்களை அடுக்கிக் கொண்டு போகலாம்.

ஆனால், அடிப்படை என்னவென்று பார்ப்போம். தமிழில் எந்தக் காலத்திலும் பிரஞ்சு அகெடமி போல இச்சொற்களைத் தான் பயன்படுத்தவேண்டும்; இவற்றைப் பயன்படுத்தக் கூடாது என்று யாரும் சொல்ல வந்ததே கிடையாது. சங்க காலத்திலிருந்தே அப்படித்தான். There are no commissors in Tamil usage. எல்லாமே பரிந்துரைகள் தான். எந்தச் சொல் நிற்கும், எது மறையும் என்று யாராலும் கூற இயலாது. இதை முடிவு செய்பவர், அதைப் பயன் படுத்துவோர் மட்டுமே. சொல்லை ஆக்குபவர் அல்ல.

அக்காலத்தில் 80 களில், தினமணியோடு, உருப்படியாக, தமிழ்மணி என்ற துணைஇதழ் ஒன்றை ஒவ்வொரு வாரமும் வெளியிட்டு வந்தார். அதில் ஒரு தடவை, பா.ரா. சுப்பிரமணியன் என்பவர், "சொற்களின் வரவும் மறைவும்" என்ற தலைப்பில் அருமையான கட்டுரை வரைந்தார். அதில் கூறியது
........................................................................................................................................
"வையாபுரிப்பிள்ளை பதிப்பாசிரியராக இருந்து தமிழ் அகராதிக்கு ஒர் அனுபந்தத்தையும் 1939 -ல் வெளியிட்டார்.
-----
அனுபந்தத்தில் ஏறக்குறைய 13,350 சொற்கள் உள்ளன. இவற்றுள் ஏறத்தாழ 125 சொற்களுக்கு 'Mod' என்ற குறிப்பு வழங்கப் பட்டுள்ளன.
------
இந்த 125 'புதிய' சொற்களும் தற்காலத் தமிழில் வழங்கிவரவில்லை என்பதை முதற்கண் குறிப்பிட வேண்டும். தமிழ் அகராதியின் அனுபந்தம் வெளிவந்து 50 ஆண்டுகள் ஆகிவிட்டன. இதற்குள் 'புதிய' சொற்களுள் கணிசமான சொற்கள் வழக்கில் இருந்து மறைந்துவிட்டன! மறைந்து போன சொற்கள் எவை என்று பார்ப்பதற்கு முன் வழக்கில் நிலைத்துவிட்ட சொற்கள் சிலவற்றைப் பார்ப்போம்.

அரசியல், இரங்கற்பா, இரும்புப் பெட்டி, உண்ணா விரதம், எரிமலை, கூட்டுறவு, கைகுலுக்கு, சர்வாதிகாரி, தேர்தல், நடிகன், நடிகை, நேர்கோடு, நூல்நிலையம்
------
வேறு சில சொற்கள் தற்காலத் தமிழில் இன்னும் வழங்கிவருகின்றன என்றாலும் அவற்றிற்கு இணையாக வேறு சொல்லாக்கங்கள் வந்து விட்ட காரணத்தால் வழக்கில் குறைந்து விட்டன. பின்வரும் உதாரணங்களைப் பாருங்கள்.
சர்வகலாசாலை (பல்கலைக் கழகம்), சதமானம் (சதவிகிதம் அல்லது விழுக்காடு), அரசாங்கம் (அரசு), விஞ்ஞானம் (அறிவியல்)
------
இனி முற்றிலும் வழக்கில் இருந்து போய்விட்ட சொற்கள் எவை என்று பார்ப்போம். இந்தப் பட்டியல் நீண்டதாகையால் ஒரு சிலவற்றையே இங்கு தருகிறேன். அக்கினிப் பொறி (துப்பாக்கி), அபேதவாதம் (சமவுடைமை), இடிபூரா (ஜீனி), உதாந்திரம் (சிறுகுடல்), சீவசீவி (ஒட்டுண்ணீ), தார்ச்சூடன் (பாச்சை உருண்டை), புதினத்தாள் (செய்தித் தாள்), மைய நாட்டம் (புவி ஈர்ப்பு), ஜனசங்கியைக் கணக்கு (மக்கள் தொகைக் கணக்கெடுப்பு). அடைப்புக் குறிப்புக்குள் தற்காலத் தமிழ்ச் சொற்களை நான் கொடுக்கா விட்டால் இச்சொற்கள் குறிப்பிடும் பொருளை நீங்கள் அறிய முடியாது போய் இருக்கும்.
-------
மேற்கூறியவற்றில் இருந்து சில போக்குகளை நம்மால் கணிக்க முடியும்.

1. வழக்கில் நிலைக்காமல் போய்விட்ட சொற்களில் பெரும்பாலானவை சம்ஸ்கிருதச் சொற்கள் நிரம்பிய தொடர்களாக இருந்தன. சம்ஸ்கிருதமயமான தொடர்கள் வழக்கில் நிலைபெறுவது கடினம் என்னும் கணிப்பு பெரும்பாலும் சரியாக இருக்கும்.
2. தமிழ்ச் சொற்களான சிறு தொடர்களுக்கு வழக்கில் நிலைபெற்றுவிடும் வாய்ப்பு மிகுதி என்று கூறலாம் (உ-ம். எரிமலை, கூட்டுறவு) (வெள்ளித் தங்கம் (platinum) என்பதற்குப் பதிலாக 'வெண்பொன்' என்று உருவாக்கியிருந்தால் நிலைத்திருக்கலாமோ?)
3. ஏற்கனவே பழக்கமான சொற்களோடு சில விகுதிகளை இணைத்து உருவாக்கும் சொற்களும் வழக்கில் நிலைபெற்றுவிடும் வாய்ப்பு உடையவை (உ-ம். நடிகன், நடிகை, அரசியல்)
4. எந்தப் புதிய கருத்துக்களுக்காக அல்லது பொருளுக்காக புதிய சொல்லாக்கங்கள் உருவானதோ அந்தக் கருத்துக்களை அல்லது பொருள்களைத் தம் அளவில் மயக்கம் இல்லாமல் வெளிப்படுத்தக் கூடியவையாக இருக்குமானால் அவை வழக்கில் நிலைபெறும். (உ-ம். இரங்கற்பா, இரட்டை வரி).

வேறு முறையில் சொன்னால் புதிய கருத்துக்கும் (அல்லது பொருளுக்கும்) அதை வெளிப்படுத்தும் சொல்லாக்கத்திற்கும் உள்ள தொடர்பை அறிவது கடினமாக இருக்குமானால் அந்தத் தொடர்கள் நிலைபெறுவது அரிது. (உ-ம். 1. காவற்றலம், காவலை உடைய தலமா? காவலர்கள் இருக்கும் தலமா? காவலர் காக்கும் தலமா? 2. தார்ச்சூடன்: இது சூடன் அல்ல என்பதையும் தாரில் இருந்து செய்யப் படுவது என்பதையும் சூடன் போல் காற்றில் கரைந்துவிடக் கூடியது என்பதையும் காட்டக் கூடிய முறையில் சொல்லாக்கம் இல்லை.)
.................................................................................................................................................

மேலே காட்டிய கட்டுரைப் படிக்கும் போது, நமக்குப் புரிவது: எச்சொல் நிலைக்கும் என்பது குறுகியகாலத்தில் முடிவு செய்வதல்ல. உருவாகுகின்ற சொற்களின் தன்மையைப் பொறுத்தே அவை நிலைப்பதும் மறைவதும் அமையும். அதற்கு நடுவில் நாம் எல்லாம் சட்டாம்பிள்ளைகள் ஆவது எப்படி? சொற்கள் மாறிக் கொண்டே இருந்தால் நம்மை எல்லோரும் முட்டாள் என மாட்டார்களா என்று ஒரு சிலர் கேட்டீர்கள். நான் அப்படி எண்ணவில்லை. இது ஒரு தொடர்ச்சியான பணி என்றே எண்ணுகிறேன். "ஏதோ 5 ஆண்டுகள் வேலை செய்தால், அப்புறம் எல்லாமே தமிழில் வந்துவிடும், தமிழகத்தில் அறிவியலும் நுட்பியலும் பூத்துக் குலுங்கும்" என எண்ணிக் கொள்ளுவது ஒருவகையில் கருத்துமுதல் வாதம்தான். இது ஏறிச் சறுக்கி, முக்கி முனகி, மீண்டும் முன்சென்று, கிடுகுப் பொருணை (critical mass) வரும் வரை, தட்டுத் தடுமாறிப் பின் அப்படிப் பொதுக்கருத்து ஏற்பட்டவுடன், திடீரென்று சீறிப் பாயும் போராட்டம் என்றே சொல்லத் தோன்றுகிறது. இதில் ஏமாற்றங்களும், தோல்விகளும், கடின உழைப்பும் இருந்துகொண்டே இருக்கும். ஆனால் பொறுமை தேவை. வெற்றி ஏற்பட வெகு நாட்கள் ஆகலாம்.

நீங்கள் தான் பொறியாளர் ஆயிற்றே? ஒரு வளர்ச்சியில் புலப்படும் S - வளைவைப் பற்றிப் படித்திருப்பீர்களே? நாம் இப்பொழுது S- வளைவில் முதலில் தென்படும் வழுக்கு (lag) நிலையில் உள்ளோம். இது முடிந்து கிடுகு (critical) நிலை அடைந்தபின் மடக்குப் பெருகிற்கு (exponential growth) வருவோம். இப்பொழுது நீங்கள் எதிர்பார்க்கிற திறனாய்வுகள் எல்லாம் அப்பொழுது ஓடிப்போகும். எல்லாமே விரைவாக நடக்கும். சொற்கள் தானாக ஓடிவரும். அந்நிலை வரும்முன்னால், நமக்குள் சட்டம்போட்டு, நம்மைக் கடுமை யாக்கிக் கொண்டு, "இன்றிலிருந்து பயணம் இப்படித்தான்" என்று தமிழ் கூறும் நல்லுலகிற்குச் சொல்ல முடியாது. Committees do not rule; they only recommend. Till then, let us continue to have contrasting viewpoints coming up. I am sure the user public can discern the best and throw the rest.

முடிவாக என் இப்பொழுதைய ஈடுபாட்டையும் சொல்லவேண்டும். தமிழிய மொழிகளுக்கும் இந்தையிரோப்பிய மொழிகளுக்கும் இருக்கிற சொற்கள் ஒப்புமையில் நான் பெரிதும் ஆழ்ந்துபோய் உள்ளேன். ஆயிரத்திற்கும் மேல் உள்ள ஆங்கிலச் சொற்களுக்கு ஒலியிலும், பொருளிலும் இணையாகத் தமிழ்ச்சொற்கள் ஒப்பாக இருப்பது என்னை வியக்க வைக்கிறது. அதே பொழுது, இற்றைத் தமிழில் வேறு கருத்துக்களின் அடிப்படையில் அதே பொருளுள்ள வேறு சொற்கள் சில புழக்கத்தில் இருப்பதை அறிவேன். நான் ஒப்புமையில் கண்ட சொல்லைத் தான் ஏற்றுக்கொள்ள வேண்டுமென்று சொல்லவில்லை. இதையும் பாருங்கள்- வியப்பு வருகிறது என்கிறேன். காட்டு:

Stock. The word 'stock' originally denoted a 'tree -trunk'. It came from a prehistoric Germanic *stukkaz, which also produced German stock 'stick' and Swedish stock 'log'. The lineal semantic descent to the stocks, a punishment device made from large pieces of wood, is clear enough, but how stock came to be used for a 'supply, store' ( a sense first recorded in the 15 th century) is more of a mystery. It may be that a trademan's supply of goods was thought of metaphorically as a trunk of a tree, from which profits grew like branches; and another posiblity is that the usage was inspired by an unrecorded application of stock to a wooden storage chest or money box.

இதைப் படித்தவுடன் தேக்கு என்ற தமிழ்ச் சொல்லை நினைக்காமல் இருக்க முடியுமா? தேக்குமரம் என்ற விதுமைப் பொருளும், தேக்குவது என்ற வினைப் பொருளும் ஒருசேர வருவதைப் பாருங்கள். இன்றைக்கும் வைரம் பாய்ந்த தேக்குப் பெட்டிகள் பெட்டகமாக ஆகும்தானே? அவை stock ஆகக் கூடாதா?

இது serendipity யா? தெரியவில்லை. பல நூறு சொற்களிலா? - வியப்பாகிறது. You see, Mani and Chandra, I am romantic on one side, while an Engineer on the other side. Perhaps, I am wrong. And yet...........

எழுத்தாணி கீழெ குத்திட்டு நிக்குது; உத்தரத்துலெ நான் தொங்குறேன். சட்டம்பிள்ளை பார்த்துக்கிட்டே இருக்கார். ஏழேழு பிறவியிலும் ......

அன்புடன்,
இராம.கி.

In TSCII:

â¾¢Âø (Physics) - 4

ӾĢø, ±ø§Ä¡Õõ þýÚ ÀÂýÀÎò¾ò ¦¾¡¼í¸¢Â¢ÕìÌõ þÂüÀ¢Âø ±ýÈ ¦º¡ø, ÓýÉ¡ø ÀâóШÃò¾ þÂøÀ¢ÂÄ¢ø þÕóÐ «îºÊôÒô À¢¨Æ §À¡Ä ±ôÀÊ Á¡È¢ Åó¾Ð ±ýÀÐ ±ý¨Éô §À¡ý§È¡ÕìÌ Å¢Çí¸Å¢ø¨Ä. ¾Á¢ú «¸ÃӾĢ¸û ±¾¢Öõ þó¾ þÂüÒ ±ýÈ ¦º¡ø ¸¢¨¼Â§Å ¸¢¨¼Â¡Ð. Á¡È¡¸ þÂøÒ ±ýÈ ¦º¡ø ¯ñÎ. À¢ý ±ôÀÊ þÂøÒ þÂüÒ ¬ÉÐ? ¦¸¡ïºõ «ÊôÀ¨¼ô Ò½÷ þÄ츽õ À¡÷ì¸Ä¡Á¡?

þÂø + ¨¸ = þÂü¨¸. þí§¸ ÅÕ¦Á¡Æ¢ ÅøÄ¢É ´Ä¢ ¦ÀüÈ¢Õ󾾡ø 'ø' ±ýÛõ ±ØòÐ 'ü' ±Éô Ò½÷¢ø Á¡È¢Â¢Õ츢ÈÐ. þ§¾ §À¡Ä, þÂø +ÀĨ¸ = þÂüÀĨ¸, þÂø + ¦ÀÂ÷ = þÂü¦ÀÂ÷ ±ýÚ ¾Á¢Æ¢ø ¬Ìõ ±ýÀÐ ±ø§Ä¡ÕìÌõ ¦¾Ã¢ó¾Ð ¾¡ý.
¬É¡ø þÂø + Ò = þÂøÒ ±ýÚ Ì½ò¨¾ì ÌÈ¢òÐ ÅÕõ§À¡Ð "Ò" ±ýÈ ®Ú ¦ÁøĢ Åø¦Ä¡Ä¢ (bu) ¦ÀüÚ ´Ä¢ì¸ô ¦ÀÚõ; «í§¸ 'ø' ±ýÈ ±ØòÐ ¾¢Ã¢Å¾üÌ ÅÆ¢§Â þø¨Ä (ÌÈ¢ôÀ¡¸ bu ±ýÈ ´Ä¢ ±Øó¾ À¢ýÉ¡ø «Ð ¾Á¢Æ÷ š¢ø ±Æ¡Ð.) þÂø + Ò = þÂüÒ ±ýÚ Åà §ÅñΦÁýÈ¡ø "Ò" ±ýÈ ÀÖì¸õ ÅÄ¢ó¾ Åø¦Ä¡Ä¢ (pu) ¡¸ «¨Á §ÅñÎõ. «ôÀÊ¡ɡø 'Ò' ±ýÈ ±ØòÐ ¾É¢òÐ ¿¢üÌõ §À¡Ð ÅÄ¢óÐõ ¦ÁÄ¢óÐõ þÕ§ÅÚ Å¨¸Â¢ø ´Ä¢ìÌÁ¡? ¾É¢òÐ ¿¢üÌõ §À¡Ð µ÷ ±ØòÐìÌ µ÷ ´Ä¢ ¾¡ý ±ýÈ ¾Á¢ú ÀÖìÌõ Ó¨ÈìÌ þÐ ÓÃñ «øÄÅ¡? «øÄÐ ¾É¢òÐ ¿¢üÌõ §À¡Ð pu ±ýÚ ´Ä¢òÐ þÂøÒ ±ýÛõ §À¡Ð bu ±ýÚ Á¡È¢ ´Ä¢ìÌÁ¡? þó¾ þÄ츽 Ó¨È ±ýÉ þÕÀ¾¡õ áüÈ¡ñÎò ¾Á¢Æ¡? «øÄРż¦Á¡Æ¢Â¢ý ¾¡ì¸ò¾¡ø ²üÀð¼ Á¡üÈÁ¡? One cannot have two different end results with similar looking parts of the speech. þ¾¢ø ²§¾¡ ´ýÚ¾¡ý ºÃ¢Â¡ö þÕì¸ÓÊÔõ.

±É§Å þп¡û Ũà þÕó¾ þÂøÒ>þÂøÀ¢Âø ±ýÈ ÀÖì¸¨Ä ¨ÅòÐì ¦¸¡ñÎ þÂüÀ¢Âø ±ýÈ ¦º¡ü À¢Èú¨Âò à츢 ±È¢§Å¡õ ±ýÚ ¿¡ý ¦º¡øÖ¸¢§Èý. â¾¢Âø ±ýÚ ¬ûžüÌò ¾Âí¸¢É¡ø ܼì ̨Èó¾Ð "þÂøÀ¢Âø" ±ýÈ ¦º¡øÖ측ÅÐ Åէšõ. ¦À¡Õð¸Ç¢ý þÂø¨Àô ÀüÈ¢î ¦º¡øÅÐ þÂøÀ¢Âø ±ý§È «ó¾ì ¸¡Äò¾¢ø ¿¡í¸û ¦ÀÂâ𧼡õ. «ô¦À¡ØÐ, ±õ¨Áô §À¡ý§È¡ÕìÌ ¦Á¡Æ¢áø «È¢× §À¡¾¡Ð. ¬É¡ø ¾Á¢ú ¬÷Åõ §Á§Ä¡í¸¢ þÕó¾Ð. ±É§Å ´Õ Àì¸õ ÁðΧÁ À¡÷òÐ þÐ §À¡ýÚ "þÂøÀ¢Âø" ±ýÚ ¦ÀÂâ𧼡õ.

þý¨ÈìÌ þÂøÒ ±ýÈ¡ø ±¾Û¨¼Â þÂøÒ ±É ¿ÁìÌì §¸ð¸ò §¾¡ýÚ¸¢ÈÐ «øÄÅ¡? nature of what? Á¡È¡¸ â¾¢¸õ/â¾¢Âø ±ýÛõ §À¡Ð, â¾í¸Ç¡ø ¬É ¦À¡Õû¸¨Çô ÀüÈ¢ô ÀÊì¸¢È þÂø ±ýÀРŢÇíÌõ. þí§¸ â¾í¸û ±ýÀ¨¾ «ÊôÀ¨¼ì ÜÚ¸û ±ý§È ¦À¡Õû ¦¸¡ûǧÅñÎõ. (¦ÅÚõ §Áõ§À¡ì¸¡¸, À¸¢Ê¡¸, â¾õ, À¢º¡Í ±ýÚ ¦À¡Õû ¦¸¡ûÇì ܼ¡Ð. «ôÀÊ ±øÄ¡õ ¦ºö§Å¡Á¡É¡ø, þó¾ ¦Á¡Æ¢¨ÂÔõ, Óý§É¡÷ ÁèÀÔõ ãýÚ Ó¨Èò ¾¨Ä¨Âî ÍüÈ¢ Åí¸¡ÇŢâ̼¡Å¢ø à츢 ±Ã¢óÐÅ¢¼Ä¡õ :-)). Moreover, the word also creates curiosity. â¾õ ±ýÚ ¦¾¡¼í¸¢ Á¡ó¾É¢ý Òâ¾Ä¢ø ²üÀð¼ Á¡üÈí¸¨Ç ¬È¡ÅÐ ÅÌôÀ¢ø ÜÈ¢ô ÀÊôÀÊ¡¸ þýÚ Å¨Ã ²üÀðÎûÇ Òâ¾ø¸¨Çî ¦º¡øÄÄ¡õ. þó¾ Ũ¸Â¢ø â¾¢¸õ/â¾¢Âø ±ýÈ ¦º¡ø, Àø§ÅÚ ÀÂýÀ¡Î¸Ç¢ø ¦º¡øÄ Å¡öôÀ¡¸ þÕìÌõ.

Á¡È¡¸, þÂøÒ ±ýÀ¨¾ ¨ÅòÐì ¦¸¡ñ¼¡ø physique, physical appearance, physical properties, physiotherapy, physician, physicist, metaphysics ±É ´ù¦Å¡ý¨ÈÔõ «§¾ ¦º¡øÄ¡ø ÌÈ¢ì¸ þÂÄ¡Ð, ´ù¦Å¡ýÈ¢üÌõ ¾É¢ò ¾É¢î ¦º¡ü¸¨Çò §¾Ê즸¡ñÎ ¾ÎÁ¡Úõ Ýú¿¢¨Ä ÅóÐ §ºÕõ. «§¾ ¦À¡ØÐ, â¾õ ±ýÈ ¦º¡ø «¾ý ¸¢§Ãì¸õ/ þÄò¾¢ý «ÊôÀ¨¼Â¢§Ä ¿ÁìÌõ «¨Áž¡ø «Ð §Á§Ä ¯ûÇ ±øÄ¡ ¦º¡øġ𺢸¨ÇÔõ ¾Á¢Æ¢ø ¦º¡øÄ Á¢¸ ±Ç¢¾¡¸ ŨÇóÐ ¦¸¡Î츢ÈÐ. þÐ §À¡ýÈ Å¨Ç¾ý¨Á¡ø ¾¡ý þó¾î ¦º¡ø¨Ä ¿¡ý þô¦À¡ØÐ ÀâóШÃ츢§Èý.

He has a well built physique
«ÅÕìÌ ¿øÄ ¸ð¼¡Éô â¾¢¨¸. (þí§¸ â¾¢¨¸ ±ýÀÐ ¯¼ø Å¡Ì; body - ¦À¡¾¢ ±ýÀ§¾¡Î ¦¾¡¼÷Ò ¦¸¡ñ¼Ð.)
Its physical appearance is appealing.
«¾ý â¾ò §¾¡üÈõ ®÷ôÀ¾¡ö þÕ츢ÈÐ
The physical properties are quite few.
â¾ì ̽í¸û Á¢¸ì ̨È×.
Why don't you take physiotherapy?
¿£í¸û ²ý â¾¢¨¸ò §¾ü¨È ±Îì¸ì ܼ¡Ð?
He is not a Doctor; He is a Physician
«Å÷ µ÷ Ó¨ÉÅÃøÄ; â¾¢Â÷
He is physicist.
«Å÷ â¾¢¸Å¢ÂÄ¡÷ (â¾¢ÂÄ¡÷).
It is metaphysics and not physics
þÐ â¾¢¸õ (â¾¢Âø) «øÄ; §Áõâ¾¢¸õ (§Áõâ¾¢Âø)

þó¾ «Ç×ìÌî ÍÕì¸Á¡¸ ¦À¡Õû ¦À¡¾¢ó¾ Ũ¸Â¢ø þÂøÒ ±ýÀ¨¾ ¨ÅòÐì ÜÈ þÂÄ¡Ð. ±É§Å â¾¢¸õ/â¾¢¸Å¢Âø/â¾¢Âø ±ýÀÐ þÂøÀ¢Âø ±ýÀ¨¾ì ¸¡ðÊÖõ ¦ÀâÐõ ¦À¡Õóи¢ÈÐ ±ý§È ¿¡ý þô¦À¡ØÐ ±ñϸ¢§Èý. ¾Å¢Ã×õ, §Á§Ä ÓÃﺢ¡÷ À¡¼Ä¢ø, "³õ¦ÀÕõ â¾òÐ þÂü¨¸ §À¡Ä" ±ýÚ ¾¡§É ÅÕ¸¢ÈÐ? ±É§Å þÂøÀ¢ø þÕóÐ ¦º¡øŨ¾ì ¸¡ðÊÖõ â¾ò¾¢ø þÕóÐ ¦º¡ø ¯ÕÅ¡ÅÐ ¾¡§É º¢Èó¾Ð?

þ¸õ ±ýÈ À¢ý¦É¡ðÎ ±ôÀÊî §ºÕ¸¢ÈÐ ±ýÀ¾üÌ º¢Ä ¸¡ðθû §¸ðÊÕó¾¡÷ Á½¢. «¨Å þÉ¢ þí§¸ ¾ÃôÀθ¢ýÈÉ.

þ¸õ ±ýÀÐ þõ¨Á. þÕ츢ÈÐ ±ýÚ ¦À¡Õû. ¸/ §À¡Ä¢Â¢ø «Ð þÂõ ±ýÚõ ÅÕõ. þí§¸ þ¸õ ±ýÈ ÒÆì¸ò¨¾ ÁðΧÁ ¸¡ðθ¢§Èý. þ̾ø = ¸£§Æ þÕò¾ø; þÌ>þ¨¸ ±ýÈ À¢ý¦É¡ð¨¼Ôõ ¸ÅÉ¢Ôí¸û. â¾í¸Ç¡ø ¬É þÂü¨¸ â¾¢¸õ (âÐ+þ¸õ). «§¾ §À¡Ä âÐ + þÂø = â¾¢Âø. â¾ þÂü¨¸ ÀüÈ¢ô ÀÊôÀÐ â¾¢¸õ/â¾¢¸þÂø/â¾¢Âø. ³õâ¾í¸Ç¢ý «ÊôÀ¨¼Â¢ø ÅÕÅÐ þù×ÄÌ ±ýÚ ¦¸¡ñ§¼ "³Ð" ±ýÈ ¦º¡ø ܼ ¿õãâø ±Øó¾Ð.

³Ð + þ¸õ = ³¾¢¸õ = ¦ºÅ¢ÅÆ¢î ¦ºö¾¢, ¯Ą̈Ã, ¦¾¡ýÚ¦¾¡ðÎ ÅÕõ §¸ûÅ¢.
¸ñ>¸½¢>¸ñ+þ¸õ=¸½¢¸õ; ¸ñϾø = ¸½ì¸¢Î¾ø
¾½¢>¾½¢¨¸
¾É¢>¾É¢¸õ = ¦¸¡òÐÁøÄ¢
¾¡õ>¾¡õÒ>¾¡õÀ¢¸õ = À¸ðÎ. (¾¡õ/àõ ±ýÚ ¦ºÄÅÆ¢ò¾¡ý ±ýÛõ §À¡Ð, ¦ÅÚõ ´Ä¢ìÌÈ¢ô¨À ÓýÉ¢ðÎô À¸ð¨¼ì ÌȢ츢ÈÐ. ¾¡õÒÅÐ, þôÀÊî ¦ºöŨ¾ì ÌÈ¢ìÌõ. ¾¡õÀ¢¸õ ±ýÀÐ ¼¡õÀ¢¸õ ±ýÚ þýÚ ¯ÕÁ¡È¢ ´Ä¢ì¸¢ÈÐ.)

þÉ¢ô Ò¾¢Â ¦º¡ü¸¨Ç ¯ÕÅ¡ìÌõ À½¢ þÕìÌõ §À¡Ð À¨Æ ¦º¡ü¸¨Ç Á¡üÚÅÐ ºÃ¢Â¡ ±ýÈ Å¡¾ò¨¾ô À¡÷ô§À¡õ.

¸¨Äî ¦º¡ü¸û ±ýÀ¨Å ²§¾¡ ´Õ §Å¾ô ¦À¡ò¾¸ò¾¢ø þÕôÀÐ §À¡ø ´Ä¢Ü¼ Á¡È¡¾ «Ç×ìÌ «ôÀʧ ²üÚì ¦¸¡ñÎ ÒÆí¸ôÀ¼ §ÅñʨŠ«øÄ. º¢ó¾¨É ÅÇÕõ §À¡Ð ¿õÓû Á¡üÈõ ²üÀ¼ò¾¡ý ¦ºöÔõ. ¿õ ¸ñ¦½¾¢Ã¢§Ä ¸½É¢, ¸½¢É¢ ±ýÚ þÕóÐ, þýÚ ¸½¢ ÁðÎõ þÕó¾¡ø §À¡Ðõ ±ýÚ ÀÄÕõ ¦º¡øÄÅ¢ø¨Ä¡? Á¢ýº¡Ã þÂø Á¢ýÉ¢Âø ¬¸Å¢ø¨Ä¡? «§¾ §À¡Ä ¯À «òÂðº¸÷ Ш½§Åó¾÷ ¬¸Å¢ø¨Ä¡? Àò¾¢Ã¢ì¨¸ ¾¡Ç¢¨¸ ¬¸Å¢ø¨Ä¡? ⃢Š¾÷ À¾¢§ÅÎ ¬¸Å¢ø¨Ä¡? À¡Ã¡ÙÁýÈõ ¿¡¼¡ÙÁýÈõ ¬¸Å¢ø¨Ä¡? ¦À¡ÕÇ¡¾¡Ãõ ¦À¡ÕÇ¢Âø ¬¸Å¢ø¨Ä¡? ¾¡ÅÃÅ¢Âø ¿¢Äò¾¢¨½Â¢Âø ¬¸¢ þýÚ Ò¾Ä¢Âø (botany) ¬¸Å¢ø¨Ä¡? þÂìÌ¿÷ ¦¿È¢Â¡Ç÷ ¬¸Å¢ø¨Ä¡? ¿¢÷Å¡¸ þÂø §ÁÄ¡ñ¨Á¢Âø ¬¸¢ Á¡É¨¸Â¢Âø ±ýÚ ¬¸ì ܼ¡¾¡? ¿¡ý ¦º¡ü¸¨Ç «Îì¸¢ì ¦¸¡ñÎ §À¡¸Ä¡õ.

¬É¡ø, «ÊôÀ¨¼ ±ýɦÅýÚ À¡÷ô§À¡õ. ¾Á¢Æ¢ø ±ó¾ì ¸¡Äò¾¢Öõ À¢ÃïÍ «¦¸¼Á¢ §À¡Ä þó¾î ¦º¡ü¸¨Çò ¾¡ý ÀÂýÀÎò¾§ÅñÎõ; þÅü¨Èô ÀÂýÀÎò¾ì ܼ¡Ð ±ýÚ Â¡Õõ ¦º¡øÄ Å󾧾 ¸¢¨¼Â¡Ð. ºí¸ ¸¡Äò¾¢ø þÕó§¾ «ôÀÊò¾¡ý. There are no commissors in Tamil usage. ±øÄ¡§Á ÀâóШøû ¾¡ý. ±ó¾î ¦º¡ø ¿¢üÌõ, ±Ð Á¨ÈÔõ ±ýÚ Â¡Ã¡Öõ ÜÈ þÂÄ¡Ð. þ¨¾ ÓÊ× ¦ºöÀÅ÷¸û, «¨¾ô ÀÂýÀÎòЧš÷ ÁðΧÁ. ¦º¡ø¨Ä ¬ìÌÀÅ÷¸û «øÄ.

«ó¾ì ¸¡Äò¾¢ø 80 ¸Ç¢ø, ¾¢ÉÁ½¢§Â¡Î, ¯ÕôÀÊ¡¸, ¾Á¢úÁ½¢ ±ýÈ Ð¨½þ¾ú ´ý¨È ´ù¦Å¡Õ Å¡ÃÓõ ¦ÅǢ¢ðÎ Åó¾¡÷¸û. «¾¢ø ´Õ ¾¼¨Å, À¡.á. ÍôÀ¢ÃÁ½¢Âý ±ýÀÅ÷, "¦º¡ü¸Ç¢ý ÅÃ×õ Á¨È×õ" ±ýÈ ¾¨ÄôÀ¢ø µ÷ «Õ¨ÁÂ¡É ¸ðΨà ŨÃó¾¡÷. «¾¢ø ÜÈ¢ÂÐ
........................................................................................................................................
"¨Å¡ÒâôÀ¢û¨Ç À¾¢ôÀ¡º¢Ã¢ÂḠþÕóÐ ¾Á¢ú «¸Ã¡¾¢ìÌ ´÷ «ÛÀó¾ò¨¾Ôõ 1939 -ø ¦ÅǢ¢ð¼¡÷.
-----
«ÛÀó¾ò¾¢ø ²Èį̀È 13,350 ¦º¡ü¸û ¯ûÇÉ. þÅüÚû ²Èò¾¡Æ 125 ¦º¡ü¸ÙìÌ 'Mod' ±ýÈ ÌÈ¢ôÒ ÅÆí¸ô ÀðÎûÇÉ.
------
þó¾ 125 'Ò¾¢Â' ¦º¡ü¸Ùõ ¾ü¸¡Äò ¾Á¢Æ¢ø ÅÆí¸¢ÅÃÅ¢ø¨Ä ±ýÀ¨¾ Ó¾ü¸ñ ÌÈ¢ôÀ¢¼ §ÅñÎõ. ¾Á¢ú «¸Ã¡¾¢Â¢ý «ÛÀó¾õ ¦ÅÇ¢ÅóÐ 50 ¬ñθû ¬¸¢Å¢ð¼É. þ¾üÌû 'Ò¾¢Â' ¦º¡ü¸Ùû ¸½¢ºÁ¡É ¦º¡ü¸û ÅÆ츢ø þÕóÐ Á¨ÈóÐÅ¢ð¼É! Á¨ÈóÐ §À¡É ¦º¡ü¸û ±¨Å ±ýÚ À¡÷ôÀ¾üÌ Óý ÅÆ츢ø ¿¢¨ÄòÐŢ𼠦º¡ü¸û º¢ÄÅü¨Èô À¡÷ô§À¡õ.

«Ãº¢Âø, þÃí¸üÀ¡, þÕõÒô ¦ÀðÊ, ¯ñ½¡ Ţþõ, ±Ã¢Á¨Ä, ÜðÎÈ×, ¨¸ÌÖìÌ, º÷Å¡¾¢¸¡Ã¢, §¾÷¾ø, ¿Ê¸ý, ¿Ê¨¸, §¿÷§¸¡Î, áø¿¢¨ÄÂõ
------
§ÅÚ º¢Ä ¦º¡ü¸û ¾ü¸¡Äò ¾Á¢Æ¢ø þýÛõ ÅÆí¸¢ÅÕ¸¢ýÈÉ ±ýÈ¡Öõ «ÅüÈ¢üÌ þ¨½Â¡¸ §ÅÚ ¦º¡øÄ¡ì¸í¸û ÅóРŢ𼠸¡Ã½ò¾¡ø ÅÆ츢ø ̨ÈóРŢð¼É. À¢ýÅÕõ ¯¾¡Ã½í¸¨Çô À¡Õí¸û.
º÷Ÿġº¡¨Ä (Àø¸¨Äì ¸Æ¸õ), º¾Á¡Éõ (º¾Å¢¸¢¾õ «øÄРŢØ측Î), «Ãº¡í¸õ («ÃÍ), ŢﻡÉõ («È¢Å¢Âø)
------
þÉ¢ ÓüÈ¢Öõ ÅÆ츢ø þÕóÐ §À¡öŢ𼠦º¡ü¸û ±¨Å ±ýÚ À¡÷ô§À¡õ. þó¾ô ÀðÊÂø ¿£ñ¼¾¡¨¸Â¡ø ´Õ º¢ÄÅü¨È§Â þíÌ ¾Õ¸¢§Èý. «ì¸¢É¢ô ¦À¡È¢ (ÐôÀ¡ì¸¢), «§À¾Å¡¾õ (ºÁר¼¨Á), þÊâá (ƒ£É¢), ¯¾¡ó¾¢Ãõ (º¢Ú̼ø), º£Åº£Å¢ (´ðÎñ½£), ¾¡÷îݼý (À¡î¨º ¯Õñ¨¼), Ò¾¢Éò¾¡û (¦ºö¾¢ò ¾¡û), ¨Á ¿¡ð¼õ (ÒÅ¢ ®÷ôÒ), ƒÉºí¸¢¨Âì ¸½ìÌ (Áì¸û ¦¾¡¨¸ì ¸½ì¦¸ÎôÒ). «¨¼ôÒì ÌÈ¢ôÒìÌû ¾ü¸¡Äò ¾Á¢úî ¦º¡ü¸¨Ç ¿¡ý ¦¸¡Î측 Å¢ð¼¡ø þ¡ü¸û ÌÈ¢ôÀ¢Îõ ¦À¡Õ¨Ç ¿£í¸û «È¢Â ÓÊ¡Р§À¡ö þÕìÌõ.
-------
§ÁüÜÈ¢ÂÅüÈ¢ø þÕóÐ º¢Ä §À¡ì̸¨Ç ¿õÁ¡ø ¸½¢ì¸ ÓÊÔõ.

1. ÅÆ츢ø ¿¢¨Ä측Áø §À¡öŢ𼠦º¡ü¸Ç¢ø ¦ÀÕõÀ¡Ä¡É¨Å ºõŠ¸¢Õ¾î ¦º¡ü¸û ¿¢ÃõÀ¢Â ¦¾¡¼÷¸Ç¡¸ þÕó¾É. ºõŠ¸¢Õ¾ÁÂÁ¡É ¦¾¡¼÷¸û ÅÆ츢ø ¿¢¨Ä¦ÀÚÅÐ ¸ÊÉõ ±ýÛõ ¸½¢ôÒ ¦ÀÕõÀ¡Öõ ºÃ¢Â¡¸ þÕìÌõ.
2. ¾Á¢úî ¦º¡ü¸Ç¡É º¢Ú ¦¾¡¼÷¸ÙìÌ ÅÆ츢ø ¿¢¨Ä¦ÀüÚÅ¢Îõ Å¡öôÒ Á¢Ì¾¢ ±ýÚ ÜÈÄ¡õ (¯-õ. ±Ã¢Á¨Ä, ÜðÎÈ×) (¦ÅûÇ¢ò ¾í¸õ (platinum) ±ýÀ¾üÌô À¾¢Ä¡¸ '¦Åñ¦À¡ý' ±ýÚ ¯Õš츢¢Õó¾¡ø ¿¢¨Äò¾¢Õì¸Ä¡§Á¡?)
3. ²ü¸É§Å ÀÆì¸Á¡É ¦º¡ü¸§Ç¡Î º¢Ä Ţ̾¢¸¨Ç þ¨½òÐ ¯ÕÅ¡ìÌõ ¦º¡ü¸Ùõ ÅÆ츢ø ¿¢¨Ä¦ÀüÚÅ¢Îõ Å¡öôÒ ¯¨¼Â¨Å (¯-õ. ¿Ê¸ý, ¿Ê¨¸, «Ãº¢Âø)
4. ±ó¾ô Ò¾¢Â ¸ÕòÐì¸Ù측¸ «øÄÐ ¦À¡ÕÙ측¸ Ò¾¢Â ¦º¡øÄ¡ì¸í¸û ¯Õšɧ¾¡ «ó¾ì ¸ÕòÐì¸¨Ç «øÄÐ ¦À¡Õû¸¨Çò ¾õ «ÇÅ¢ø ÁÂì¸õ þøÄ¡Áø ¦ÅÇ¢ôÀÎò¾ì Üʨš¸ þÕìÌÁ¡É¡ø «¨Å ÅÆ츢ø ¿¢¨Ä¦ÀÚõ. (¯-õ. þÃí¸üÀ¡, þÃ𨼠Åâ).

§ÅÚ Ó¨È¢ø ¦º¡ýÉ¡ø Ò¾¢Â ¸ÕòÐìÌõ («øÄÐ ¦À¡ÕÙìÌõ) «¨¾ ¦ÅÇ¢ôÀÎòÐõ ¦º¡øÄ¡ì¸ò¾¢üÌõ ¯ûÇ ¦¾¡¼÷¨À «È¢ÅÐ ¸ÊÉÁ¡¸ þÕìÌÁ¡É¡ø «ó¾ò ¦¾¡¼÷¸û ¿¢¨Ä¦ÀÚÅÐ «Ã¢Ð. (¯-õ. 1. ¸¡ÅüÈÄõ, ¸¡Å¨Ä ¯¨¼Â ¾ÄÁ¡? ¸¡ÅÄ÷¸û þÕìÌõ ¾ÄÁ¡? ¸¡ÅÄ÷ ¸¡ìÌõ ¾ÄÁ¡? 2. ¾¡÷îݼý: þРݼý «øÄ ±ýÀ¨¾Ôõ ¾¡Ã¢ø þÕóÐ ¦ºöÂô ÀÎÅÐ ±ýÀ¨¾Ôõ ݼý §À¡ø ¸¡üÈ¢ø ¸¨ÃóÐÅ¢¼ì ÜÊÂÐ ±ýÀ¨¾Ôõ ¸¡ð¼ì ÜÊ ӨÈ¢ø ¦º¡øÄ¡ì¸õ þø¨Ä.)
.................................................................................................................................................

§Á§Ä ¸¡ðÊ ¸ðΨÃô ÀÊìÌõ §À¡Ð, ¿ÁìÌô ÒâÅÐ: ±ó¾î ¦º¡ø ¿¢¨ÄìÌõ ±ýÀÐ ÌÚ¸¢Â ¸¡Äò¾¢ø ÓÊ× ¦ºöÅÐ «øÄ. ¯Õš̸¢ýÈ ¦º¡ü¸Ç¢ý ¾ý¨Á¨Âô ¦À¡Úò§¾ «¨Å ¿¢¨ÄôÀÐõ Á¨ÈÅÐõ «¨ÁÔõ. «¾üÌ ¿ÎÅ¢ø ¿¡õ ±øÄ¡õ ºð¼¡õÀ¢û¨Ç¸û ¬ÅÐ ±ôÀÊ? ¦º¡ü¸û Á¡È¢ì ¦¸¡ñ§¼ þÕó¾¡ø ¿õ¨Á ±ø§Ä¡Õõ Óð¼¡û ±É Á¡ð¼¡÷¸Ç¡ ±ýÚ ´Õ º¢Ä÷ §¸ðË÷¸û. ¿¡ý «ôÀÊ ±ñ½Å¢ø¨Ä. þÐ ´Õ ¦¾¡¼÷îº¢Â¡É À½¢ ±ý§È ±ñϸ¢§Èý. "²§¾¡ 5 ¬ñθû §Å¨Ä ¦ºö¾¡ø, «ôÒÈõ ±øÄ¡§Á ¾Á¢Æ¢ø ÅóРŢÎõ, ¾Á¢Æ¸ò¾¢ø «È¢Å¢ÂÖõ ÑðÀ¢ÂÖõ âòÐì ÌÖíÌõ" ±ýÚ ±ñ½¢ì ¦¸¡ûÙÅÐ ´ÕŨ¸Â¢ø ¸ÕòÐÓ¾ø Å¡¾õ ¾¡ý. þÐ ²È¢î ºÚ츢, Ó츢 Óɸ¢, Á£ñÎõ Óý ¦ºýÚ, ´Õ ¸¢ÎÌô ¦À¡Õ¨½ (critical mass) ÅÕõ ŨÃ, ¾ðÎò ¾ÎÁ¡È¢ô À¢ý «ôÀÊô ¦À¡ÐÅ¡É ¸ÕòÐ ²üÀð¼×¼ý, ¾¢Ë¦ÃýÚ º£È¢ô À¡Ôõ ´Õ §À¡Ã¡ð¼õ ±ý§È ¦º¡øÄò §¾¡ýÚ¸¢ÈÐ. þ¾¢ø ²Á¡üÈí¸Ùõ, §¾¡øÅ¢¸Ùõ, ¸ÊÉ ¯¨ÆôÒõ þÕóÐ ¦¸¡ñ§¼ þÕìÌõ. ¬É¡ø ¦À¡Ú¨Á §¾¨Å. ¦ÅüÈ¢ ²üÀ¼ ¦ÅÌ ¿¡ð¸û ¬¸Ä¡õ.

¿£í¸û ¾¡ý ¦À¡È¢Â¡Ç÷ ¬Â¢ü§È? ´Õ ÅÇ÷¢ø ÒÄôÀÎõ S - ŨǨÅô ÀüÈ¢ô ÀÊò¾¢ÕôÀ£÷¸§Ç? ¿¡õ þô¦À¡ØÐ S- ŨÇÅ¢ø ӾĢø ¦¾óÀÎõ ÅØìÌ (lag) ¿¢¨Ä¢ø ¯û§Ç¡õ. þÐ ÓÊóÐ ¸¢ÎÌ (critical) ¿¢¨Ä «¨¼ó¾À¢ý Á¼Ìô ¦ÀÕ¸¢üÌ (exponential growth) Åէšõ. þô¦À¡ØÐ ¿£í¸û ±¾¢÷À¡÷ì¸¢È ¾¢ÈÉ¡ö׸û ±øÄ¡õ «ô¦À¡ØÐ µÊô §À¡Ìõ. ±øÄ¡§Á Å¢¨ÃÅ¡¸ ¿¼ìÌõ. ¦º¡ü¸û ¾¡É¡¸ µÊÅÕõ. «ó¾ ¿¢¨Ä ÅÕõ ÓýÉ¡ø, ¿ÁìÌû ºð¼õ §À¡ðÎ, ¿õ¨Áì ¸Î¨ÁÂ¡ì¸¢ì ¦¸¡ñÎ, "þýÈ¢ø þÕóÐ À½õ þôÀÊò¾¡ý" ±ýÚ ¾Á¢ú ÜÚõ ¿øÖĸ¢üÌî ¦º¡øÄ ÓÊ¡Ð. Committees do not rule; they only recommend. Till then, let us continue to have contrasting viewpoints coming up. I am sure the user public can discern the best and throw the rest.

ÓÊÅ¡¸ ±ýÛ¨¼Â þô¦À¡Ø¨¾Â ®ÎÀ¡ð¨¼Ôõ ¦º¡øħÅñÎõ. ¾Á¢Æ¢Â ¦Á¡Æ¢¸ÙìÌõ þó¨¾Â¢§Ã¡ôÀ¢Â ¦Á¡Æ¢¸ÙìÌõ þÕì¸¢È ¦º¡ü¸û ´ôÒ¨Á¢ø ¿¡ý ¦ÀâÐõ ¬úóÐ §À¡ö þÕ츢§Èý. ¬Â¢Ãò¾¢üÌõ §Áø ¯ûÇ ¬í¸¢Äî ¦º¡ü¸ÙìÌ ´Ä¢Â¢Öõ, ¦À¡ÕÇ¢Öõ þ¨½Â¡¸ò ¾Á¢úî ¦º¡ü¸û ´ôÀ¡¸ þÕôÀÐ ±ý¨É Å¢Âì¸ ¨Å츢ÈÐ. «§¾ ¦À¡ØÐ, þý¨ÈÂò ¾Á¢Æ¢ø §ÅÚ ¸ÕòÐì¸Ç¢ý «ÊôÀ¨¼Â¢ø «§¾ ¦À¡ÕÙûÇ §ÅÚ ¦º¡ü¸û º¢Ä ÒÆì¸ò¾¢ø þÕôÀ¨¾ «È¢§Åý. ¿¡ý ´ôÒ¨Á¢ø ¸ñ¼ ¦º¡ø¨Äò ¾¡ý ²üÚì ¦¸¡ûÇ §ÅñÎõ ±ýÚ ¦º¡øÄÅ¢ø¨Ä. þ¨¾Ôõ À¡Õí¸û- Å¢ÂôÒ ÅÕ¸¢ÈÐ ±ýÚ ¦º¡øÖ¸¢§Èý. ¸¡ðÎ:

Stock. The word 'stock' originally denoted a 'tree -trunk'. It came from a prehistoric Germanic *stukkaz, which also produced German stock 'stick' and Swedish stock 'log'. The lineal semantic descent to the stocks, a punishment device made from large pieces of wood, is clear enough, but how stock came to be used for a 'supply, store' ( a sense first recorded in the 15 th century) is more of a mystery. It may be that a trademan's supply of goods was thought of metaphorically as a trunk of a tree, from which profits grew like branches; and another posiblity is that the usage was inspired by an unrecorded application of stock to a wooden storage chest or money box.

þ¨¾ô ÀÊò¾×¼ý §¾ìÌ ±ýÈ ¾Á¢úî ¦º¡ø¨Ä ¿¢¨É측Áø þÕì¸ ÓÊÔÁ¡? §¾ìÌ ÁÃõ ±ýÈ Å¢Ð¨Áô ¦À¡ÕÙõ, §¾ìÌÅÐ ±ýÈ Å¢¨Éô ¦À¡ÕÙõ ´Õ §ºÃ ÅÕŨ¾ô À¡Õí¸û. þý¨ÈìÌõ ¨ÅÃõ À¡öó¾ §¾ìÌô ¦Àðʸû ¦Àð¼¸Á¡¸ ¬Ìõ ¾¡§É? «¨Å stock ¬¸ì ܼ¡¾¡?

þÐ serendipity ¡? ¦¾Ã¢ÂÅ¢ø¨Ä. ÀÄ áÚ ¦º¡ü¸Ç¢Ä¡? - Å¢ÂôÀ¡¸ þÕ츢ÈÐ. You see, Mani and Chandra, I am romantic on one side, while an Engineer on the other side. Perhaps, I am wrong. And yet...........

±Øò¾¡½¢ ¸£¦Æ Ìò¾¢ðÎ ¿¢ìÌÐ; ¯ò¾ÃòÐ¦Ä ¿¡ý ¦¾¡í̧Èý. ºð¼õÀ¢û¨Ç À¡÷òÐ츢𧼠þÕ측÷. ²§ÆØ À¢ÈŢ¢Öõ ......

«ýÒ¼ý,
þáÁ.¸¢.

No comments: