Friday, April 01, 2005

காணவொரு காலம் வருமோ - 5

5. கணப் பொருத்தக் கணியன்

மணலூராம் தலைநகரில் முத்துவடப்(a) பாண்டியனார்
மனை,மக்கள் சூழ்ந்து நிற்க,
மாலவனைத் தொழுமுன்னர் செம்பொருநை(b) ஆற்றுள்ளே
மஞ்சணநீர்(c) ஆடும் பொழுதே,
புனல்கூடும்; பெருக்குஓடும்; பொங்கிவரும்; சுழல்மூளும்,
பொசுக்கென்று கவரு மாப்போல்;
புவிஆளும் மன்னவனை, உத்தமையாம் புதலாளை(d)
புழைக்குள்ளே(e) மறைத்து வைத்து,
கணபுரத்துத் திருக்குளத்தில் வரத கைத் தலங்(f) காட்டி
கண்நிமையில் எழுக வைத்தே,
காப்பு கை(g)ச் சோழரொடு கன்னியின் கைகோர்த்துக்,
கடிமணம் புரிய வைத்த,
கணப்பொருத்தக் கணியா!(h) உன் காரழகுத் திருமேனி
காணஒரு காலம் வருமோ?
காவிரியின் ஓரத்தில் தேவியுடன் மேவிவரும்
கண்ணபுரச் சௌரி ராசா!

இந்தப் பாடலில் சோழனுக்குப் பாண்டியன் மகளைப் பெருமாளே கணியனாய் வந்து மணமுடித்த கதை பேசப் படுகிறது.

a. வடமொழியில் சித்த சரவசு = முத்து மாலை/வடம் அணிந்தவன். தண் பொருநை ஆறு கடல் சேரும் முகத்தில் கொற்கைக்குப் பக்கத்தில் இருந்த ஊர் மணலூர்; கவாட புரம் அழிந்து கடலேறிய பாண்டியன் மணலூர் வந்து தண்டு கொண்டதாகத் தொன்மம் உண்டு. பின் கொற்கைக்கும், முடிவில் வைகை மதுரைக்கும் தலை நகரை மாற்றினார்கள்.
b. செம் பொருநை = தாம்பரப் பெருநை; இன்றையத் தாம்பர வருணி.
c. மஞ்சனம் = முழுகிக் குளித்தல்; மண்ணு மங்கலம் என்றும் இலக்கியம் பயிலும். திருமஞ்சனம் என்ற சொல் பெருமாள் கோயிலிலும், அபிசேகம் என்று வடமொழிப் படுத்தப்பட்ட "முழுக்கு" சிவன் கோயிலிலும் பயிலும். முங்கனம், மங்கனம் ஆகிப் பின் மஞ்சனம் ஆயிற்று. மஞ்சனம், மஞ்சள் நீர் என்று இங்கு ஆளப்படுகிறது. முங்குதல் தன்வினை; முழுக்குதல் பிறவினை.
d. புதல் = புதல்விக்கும், புதல்வனுக்கும் உள்ள பொதுச் சொல்; இங்கே புதலாள் = புதல்வி
e. புழை = backwaters; பெருக்கும் சுழலும் உள்ள புழை இங்கே குறிப்பிடப் படுகிறது.
f. வரத கைத்தலம் = வரத ஹஸ்தம்; சிற்பக் கலையில் ஓவ்வொரு செயலுக்கும் அடையாளம் காட்டி இறைப் படிம அடவுகள் அமைக்கப் பெறும். வரத கைத்தலம் என்பது அருள் பாலிக்கும் கை அடவு [இது கண்ணபுரத்தானின் விதப்பான கை அடவு. மற்ற பெருமாள் கோயில்களில் பெரும்பாலும் காப்புக் கைத் தலமே (அபய ஹஸ்தம்) காட்சியளிக்கும்.]
g. காப்பு கை = காப்புக் கைத் தலத்தின் சுருக்கம். இறைவனைப் போலவே அரசனும் திரு ஓலக்க மண்டபத்தில் காப்புக் கைத் தலம் காட்டுவான்.
h. கணப் பொருத்தக் கணியன்; திருமணப் பொருத்தங்களில் கணப் பொருத்தமே முதலாயது. ஒரு கணியன் (=சோதியன்) இதைத் தான் முதலில் பார்க்க வேண்டும். பாண்டியன் மகளை சோழனுக்கு முடிக்கக் கணப் பொருத்தம் பார்த்த கணியன் இந்தக் கருப்புச் சௌரிராசன்.

In TSCII:

5. ¸½ô ¦À¡Õò¾ì ¸½¢Âý

Á½æáõ ¾¨Ä ¿¸Ã¢ø ÓòРżô(a) À¡ñÊÂÉ¡÷
Á¨É, Áì¸û ÝúóÐ ¿¢ü¸,
Á¡ÄŨÉò ¦¾¡Ø ÓýÉ÷ ¦ºõ ¦À¡Õ¨¿(b) ¬üÚû§Ç
Áﺽ ¿£÷© ¬Îõ ¦À¡Ø§¾,
ÒÉø ÜÎõ; ¦ÀÕìÌ µÎõ; ¦À¡í¸¢ ÅÕõ; ÍÆø ãÙõ,
¦À¡Í즸ýÚ ¸ÅÕ Á¡ô§À¡ø;
ÒÅ¢ ¬Ùõ ÁýÉŨÉ, ¯ò¾¨Á¡õ Ҿġ¨Ç(d)
Ò¨ÆìÌû§Ç(e) Á¨ÈòÐ ¨ÅòÐ,
¸½ ÒÃòÐò ¾¢Õì ÌÇò¾¢ø Åþ ¨¸ò ¾Äí(f) ¸¡ðÊ
¸ñ ¿¢¨Á¢ø ±Ø¸ ¨Åò§¾,
¸¡ôÒ ¨¸(g)î §º¡Æ¦Ã¡Î ¸ýɢ¢ý ¨¸ §¸¡÷òÐì,
¸Ê Á½õ Òâ ¨Åò¾,
¸½ô ¦À¡Õò¾ì ¸½¢Â¡!(h) ¯ý ¸¡ÃÆÌò ¾¢Õ§ÁÉ¢
¸¡½ ´Õ ¸¡Äõ ÅÕ§Á¡?
¸¡Å¢Ã¢Â¢ý µÃò¾¢ø §¾Å¢Ô¼ý §ÁÅ¢ÅÕõ
¸ñ½ÒÃî ¦ºªÃ¢ ạ!

þó¾ô À¡¼Ä¢ø §º¡ÆÛìÌô À¡ñÊÂý Á¸¨Çô ¦ÀÕÁ¡§Ç ¸½¢ÂÉ¡ö ÅóÐ Á½ÓÊò¾ ¸¨¾ §Àºô Àθ¢ÈÐ.

a. ż¦Á¡Æ¢Â¢ø º¢ò¾ ºÃÅÍ = ÓòÐ Á¡¨Ä/żõ «½¢ó¾Åý. ¾ñ ¦À¡Õ¨¿ ¬Ú ¸¼ø §ºÕõ Ó¸ò¾¢ø ¦¸¡ü¨¸ìÌô Àì¸ò¾¢ø þÕó¾ °÷ Á½æ÷; ¸Å¡¼ ÒÃõ «Æ¢óÐ ¸¼§ÄȢ À¡ñÊÂý Á½æ÷ ÅóÐ ¾ñÎ ¦¸¡ñ¼¾¡¸ò ¦¾¡ýÁõ ¯ñÎ. À¢ý ¦¸¡ü¨¸ìÌõ, ÓÊÅ¢ø ¨Å¨¸ ÁШÃìÌõ ¾¨Ä ¿¸¨Ã Á¡üȢɡ÷¸û.
b. ¦ºõ ¦À¡Õ¨¿ = ¾¡õÀÃô ¦ÀÕ¨¿; þý¨ÈÂò ¾¡õÀà ÅÕ½¢.
c. ÁïºÉõ = Óظ¢ì ÌÇ¢ò¾ø; ÁñÏ Áí¸Äõ ±ýÚõ þÄ츢Âõ À¢Öõ. ¾¢ÕÁïºÉõ ±ýÈ ¦º¡ø ¦ÀÕÁ¡û §¸¡Â¢Ä¢Öõ, «À¢§º¸õ ±ýÚ Å¼¦Á¡Æ¢ô ÀÎò¾ôÀð¼ "ÓØìÌ" º¢Åý §¸¡Â¢Ä¢Öõ À¢Öõ. Óí¸Éõ, Áí¸Éõ ¬¸¢ô À¢ý ÁïºÉõ ¬Â¢üÚ. ÁïºÉõ, Áïºû ¿£÷ ±ýÚ þíÌ ¬ÇôÀθ¢ÈÐ. Óí̾ø ¾ýÅ¢¨É; ÓØì̾ø À¢ÈÅ¢¨É.
d. Ò¾ø = Ò¾øÅ¢ìÌõ, Ò¾øÅÛìÌõ ¯ûÇ ¦À¡Ðî ¦º¡ø; þí§¸ Ҿġû = Ò¾øÅ¢
e. Ò¨Æ = backwaters; ¦ÀÕìÌõ ÍÆÖõ ¯ûÇ Ò¨Æ þí§¸ ÌÈ¢ôÀ¢¼ô Àθ¢ÈÐ.
f. Åþ ¨¸ò¾Äõ = Åþ †Š¾õ; º¢üÀì ¸¨Ä¢ø µù¦Å¡Õ ¦ºÂÖìÌõ «¨¼Â¡Çõ ¸¡ðÊ þ¨Èô ÀÊÁ «¼×¸û «¨Áì¸ô ¦ÀÚõ. Åþ ¨¸ò¾Äõ ±ýÀÐ «Õû À¡Ä¢ìÌõ ¨¸ «¼× [þÐ ¸ñ½ÒÃò¾¡É¢ý Å¢¾ôÀ¡É ¨¸ «¼×. ÁüÈ ¦ÀÕÁ¡û §¸¡Â¢ø¸Ç¢ø ¦ÀÕõÀ¡Öõ ¸¡ôÒì ¨¸ò ¾Ä§Á («À †Š¾õ) ¸¡ðº¢ÂÇ¢ìÌõ.]
g. ¸¡ôÒ ¨¸ = ¸¡ôÒì ¨¸ò ¾Äò¾¢ý ÍÕì¸õ. þ¨ÈŨÉô §À¡Ä§Å «ÃºÛõ ¾¢Õ µÄì¸ Áñ¼Àò¾¢ø ¸¡ôÒì ¨¸ò ¾Äõ ¸¡ðÎÅ¡ý.
h. ¸½ô ¦À¡Õò¾ì ¸½¢Âý; ¾¢ÕÁ½ô ¦À¡Õò¾í¸Ç¢ø ¸½ô ¦À¡Õò¾§Á ӾġÂÐ. ´Õ ¸½¢Âý (=§º¡¾¢Âý) þ¨¾ò ¾¡ý ӾĢø À¡÷ì¸ §ÅñÎõ. À¡ñÊÂý Á¸¨Ç §º¡ÆÛìÌ ÓÊì¸ì ¸½ô ¦À¡Õò¾õ À¡÷ò¾ ¸½¢Âý þó¾ì ¸ÕôÒî ¦ºªÃ¢Ã¡ºý.

No comments: