Tuesday, April 12, 2005

தமிழாசிரியர்களும், தமிழில் அறிவியற் சிந்தனையும்.

ஒருமுறை பெரிய எழுத்தாளர் ஒருவர் (அவர் யார் என்பது இப்போது முகமை அல்ல), தமிழாசிரியரின் பழம்பெருமைப் போக்கால் தான் தமிழில் அறிவியற் சிந்தனை வளரவில்லை என ஒரு மடற்குழு உரையாட்டில் சொன்னார். அவருக்கு விடைசொல்லுமுகமாக எழுதத்தொடங்கி,  பாதி விடையிறுத்த நான் வேறு வேலைகளில் ஆழ்ந்து போனதால்,  தொடராது விட்டேன். இப்படி விவாதம் விட்டுப்போனது பலமுறை நடந்திருக்கிறது. அது என் குறை என்றும் உணர்கிறேன். இப்போது தமிழாசிரியர் மேல் எனக்கிருக்கும் குறையையும், அதேநேரத்தில் இற்றைத் தமிழில் அறிவியல் சிந்தனை குறைந்திருப்பதற்கு அவரைச் சொல்வதில் பொருளில்லை என்றும் சொல்ல முற்படுகிறேன்.

1960 களில் இருந்து பல தமிழாசிரியரை நெருங்கிப் பார்த்தவன் நான். அப்போது ஏறத்தாழ ஓர் இயக்கமாகவே அவர் இருந்தார். அவர் சொல்லுக்கு தமிழக ஊர்கள் எங்கிலும் மதிப்பிருந்தது. "தமிழய்யா சொல்லுக்கு மறு பேச்சிலை" என்ற உணர்வு அப்பொழுது மாநிலம் எங்கும் விரிந்து கிடந்தது. 1967 -ல் ஒரு பெரும் அரசியல் மாற்றத்தைக் கொணர (அது இன்று விழலாய்ப் போனது இன்னொரு புலனம்.) அற்றை மாணவரோடு, அவரும் காரணம் ஆனார். இன்றோ பெரும்பாலும் தமிழசிரியர் மதிப்பிழந்து தமிழ்த் திரைப்படம், தாளிகைகள், மிடையங்கள் என எல்லாவற்றிலும் ஞாயமின்றிக் கேலிப் பொருளராய் ஆகிவிட்டார். (ஓர் உச்சநடிகரின் முட்டாள் திரைப் படத்தில் ஒரு தமிழாசிரியரைக் கேலிப்பொருளாக்கியதை என்னால் மறக்க முடியவில்லை.) மதிப்பிழந்தவர் சொல்வது குமுகாயத்தில் எடுபடுமா, என்ன?

இற்றைத் திராவிட மொழி ஆய்வாளர், குறிப்பாகத் தமிழ்மொழி ஆய்வாளர், தமிழாசிரியர் கடினமான செயல்களில் ஈடுபடாமல் மேம்போக்காக, அரைத்த மாவையே அரைத்து, பட்டிமன்றம், கவியரங்கம், சமயவுரைகள், தமிழ்/தமிழர் புகழ் பாடுவது என எளிய காரியங்களையே செய்து கொண்டு உள்ளார். அதிலும் ஒரு சிறுபான்மையினர் சம்பாரிக்கும் பணத்தைக் குட்டிபோட வைப்பதிலும் குறியாக உள்ளார். இவர் போன்றோருக்குத் தமிழ் என்பது பணம் சம்பாரிக்க ஒரு வழி.

இத்தகைய செயல்களைச் செய்யக்கூடாதென முற்றிலும் சொல்லமாட்டேன்; மிடையக்காரர் செய்யும் போது, தமிழாசிரியர் தமிழால் பிழைப்பதில் தவறு இல்லை. ஆனால், தமிழாசிரியரில் கணிசமானோர் இதையே செய்வது வருத்தமாகிறது. அதன் விளைவாக, குமுகாயம், வரலாறு, தமிழ் இலக்கியம், தமிழை முன்னெடுத்துச் செல்வது, தமிழை இக்கால ஓட்டத்திற்கு ஏந்தாக உரம் கொடுப்பது, புதிய சொற்களை, புதிய இயலுமைகளை (possibilities), புதிய பார்வைகளை, மறுபார்வைகளை கொண்டு தருவது போன்றவற்றைத் தமிழ் ஆசிரியர் அல்லாதோர் - குறிப்பாக வரலாற்றாளர், அறிவியலாளர், பொறியியலாளர், வழக்குரைஞர் ஆகிய இன்ன பிறர் தம் ஆர்வங் காரணமாய்ச் செய்கிறாரே ஒழியத் தமிழாசிரியர் செய்வது மிகக் குறைவு. அப்படியானால் mainstream tamilogists - where are they? இக்கேள்வி கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக உள்ளது.

இன்னொரு குறையும் சொல்ல வேண்டும். இற்றைத் தமிழாசிரியரின் ஒற்றைப் பரிமானம் வியக்கவைக்கிறது. 30/40 ஆண்டுகளுக்கு முன்னிருந்த தமிழ் ஆய்வாளர் குறைந்தது 3,4  (குறிப்பாகத் திராவிட) மொழிகளிலாவது தேர்ச்சி பெற்றிருந்தார். இற்றைக் கல்லூரித் தமிழாசிரியரோ தமிழை மட்டுமே அறிந்து (ஆங்கிலங்கூடச் சரியாக அறியாமல்) பிழைப்பை ஓட்டிவிட முடியும். இதற்கு மாறாக, இன்றைக்கும், ஐரோப்பிய நாடுகளில் ஒரு மொழிப் பேராசிரியர் தன் மொழி தவிர்த்து இன்னும் நாலைந்து மொழிகளாவது தெரிந்திருப்பார். நம்மூர்ப் பள்ளித் தமிழாசிரியரும் மொழியறிவில் குறைந்தே காணப்படுகிறார். வெறுமே பாடங்களைப் படித்து மதிப்பெண் எடுக்கவைக்கும் வேலையில் மட்டுமே தன்னை ஆட்படுத்திக் கொள்கிறார்.

ஒருசமயம் திரு. தமிழண்ணல் சூரியத் தொலைக் காட்சியில் 'வணக்கம் தமிழகம்' என்ற பகுதியில் சொன்னார்: தொல்காப்பியத்தில் M.Phil பட்டம் வாங்கிய ஒருவர், தமிழண்ணல் வீட்டில் தொல்காப்பியப் பொத்தகம் முழுதாய் இருந்ததைக் கண்டு வியந்து போனாராம். தமிழண்ணல் அவரிடம் கேட்டாராம்: "இதில் என்ன வியப்பு? உங்கள் வீட்டிலும் இருக்கும் அல்லவா? அல்லது நூலகத்தில் பார்த்திருப்பீர்கள் தானே?" என்றாராம். அந்த இளம் ஆய்வியல் பட்டம் பெற்றவர் இல்லை என்று சொல்ல, "அது எப்படித் தொல்காப்பியத்தைப் பாராமலே தொல்காப்பியத்தில் ஆய்வு செய்தீர்கள்?" என்று தமிழண்ணல் கேட்டாராம். "அதெல்லாம் மற்றவர் உரைகள், நூல்கள் ஆகியவற்றைப் பார்த்துச் செய்தது" என்றாராம் ஆய்வு செய்து பட்டம் வாங்கியவர். எப்படி இருக்கிறது கதை? மூலத்தைப் பார்க்காமலேயே, ஆய்வு செய்யும் அழகு இன்று பலரிடம் உள்ளது. எல்லாம் 2 ஆம், 3 ஆம் நிலை உசாத் துணை(reference) நூல்களை வைத்து ஆய்வேடுகள் எழுதிவிடுகிறார். (காட்டாக சிலப்பதிகாரத்திற்கு உ.வே.சா.வின் பதிப்பையோ, வேங்கடசாமி நாட்டாரின் உரையையோ படித்தவர்கள், தமிழாசிரியரில் எவ்வளவு தேருவார்? )

தமிழில் ஆய்வு செய்வது என்பது இன்றைக்கெல்லாம் "கம்பனில் ஆறுகள்", "ஜெய காந்தனின் சமுதாயப் பார்வை", "பாரதிராஜாவின் திரைப் படத்தில் மண்வாசனை" என எளிதான அகத்தீடுகளைப் (subjects) பற்றி மட்டுமே என்றாகி விட்டது. (உடனே இத்தலைப்புக்களில் ஆய்வு செய்யக் கூடாது எனநான் சொல்வதாக எண்ணிவிடாதீர். செய்யலாம், ஆனால் செய்யும் முறையில் தான் நம் கேள்வி.) அத்தகைய தலைப்புக்களிலும் இவர் எழுதும் ஆய்வு நூல்கள், "அவர் அது சொன்னார், இவர் இது சொன்னார் ....." என்று ஒரே அடியாக மேற்கோள்களை எடுத்துச் சொல்வதாக இருக்கிறதே ஒழிய, "இப்போது ஆய்வு செய்கிறவர் என்ன சொல்ல வருகிறார்?" - என அவற்றின் உட்பொருளைச் சுருக்கி பொதுயீடாக (objective) கடைசி வரைக்கும் ஒன்றும் சொல்லுவதில்லை. ஆய்வுப் பொத்தக முடிவில், "இதனால் என்ன தெரிகிறது?" என்று தொடங்கி முன்னவர் சொன்னதையே, மீண்டும் தொகுத்துச் சொல்லி இப்பொழுது ஆய்வு செய்கிறவர் மங்களம் பாடி விடுவார். மொத்தத்தில், இது  ஆய்வுப் பொத்தகமா என்று அந்த ஆய்வேட்டை ஏற்றுக் கொண்ட பல்கலைக் கழகத்தின் தரத்தின் மேல் ஐயம் வந்து விடும். "தமிழாய்வுக்கு என்னய்யா செய்தீர்?" என்றால் நாம் பெறுவது பெருத்த ஏமாற்றமே. பெரும்பாலான ஆய்வுகள் மிசை(table) யில் செய்யும் ஆய்வுகளாகவே இருக்கின்றன. தமிழைத் தவிர்த்து, இன்னொரு துறையை ஒட்டினாற் போல (தொல்லியல், கல்வெட்டியல், வரலாறு, நாணயவியல், அறிவியல், பொருளியல், குமுக வியல், மருத்துவம், இப்படி ஏதோ ஒன்றுடன் இணைந்ததாய்) ஆய்வுகளைச் செய்ய தமிழாசிரியர் தயங்குகிறார். வள்ளுவர் நூலின் சானன் உட்திரிவு (Shannon's entropy) என்ன? அதை சங்ககால உட் திரிவோடு பொருத்தி, மற்ற பதிணெண் கணக்கு நூல்களோடு ஒப்பிட்டு வள்ளுவன் காலத்தைச் சொல்ல முடியுமா? இதெல்லாம் தமிழாசிரியர் ஆய்வுக்குத் தொடர்பே இலாது உள்ளது.

தமிழாசிரியர் பற்றிய நம் ஏக்கத்தை எழுதத் தொடங்கினால் முடிவில்லை. ஏன், இணையத்திலே கூடத் தமிழாசிரியர் எத்தனை பேர் இருக்கிறார்? எனக்குச் சரியாகச் சொல்லத் தெரியவில்லை. மொழிவல்லுநர் இங்கு நம்முடன் இருந்தால் தானே நாம் கலைச்சொல் ஆக்குவது சரியா என மொழிப்பார்வையில் சொல்ல முடியும். (நான் அவ்வப்போது கலைச் சொல் பற்றிப் பேசுவது ஒருவகையில் ஆலையிலா ஊருக்கு இலுப்பைப்பூச் சர்க்கரையோ என்ற எண்ணம் கூட எனக்குப் பல நேரங்களில் எழுவதுண்டு.)

எல்லோரையும் போல, வாழ்க்கைப் பட்டம் அலைக்கழித்ததால், அதிலிருந்து மீள முடியாது, நொய்ந்து போய், தமக்கென்று இருந்த வரலாற்று உணர்வுப் பொறுப்பைத் தொலைத்து, நாட்டுப்புறங்களில் அவர்க்கு இயல்பாய்க் கிடைத்த தலைமைப் பொறுப்பில் விலகிப் போனவர் தமிழாசிரியர். அதே பொழுது, தமிழ்நாட்டில் தமிழ் அழிந்துவிடுமோ என்ற இற்றை நிலைக்கு அவர் காரணிகள் அல்லர் என்று தான் உணருகிறேன். பொறுப்பு நம் எல்லோருக்கும் இருக்கையில், நாம் தப்பித்து, நம்மில் நொய்ந்தவரை அடையாளங்காட்டி "அவரைச் சாடுக" என்று மற்றவர்க்குச் சொல்வது எவ்வகையிலும் ஞாயமில்லை.

தமிழாசிரியரா, தமிழில் அறிவியல் பற்றிப் பேசுகிறார்? நானறிந்த வரை இல்லை. வெறும் நிழல்களோடு, பூஞ்சையானவரோடு பொருதப் பார்ப்பதில் பொருளில்லை என்றுதான் சொல்ல முடியும். அந்த எழுத்தாளர் பொருத வேண்டியது நம்போன்று படித்த தமிழருடன்; தமிங்கிலர் என ஆனவருடன்; வெறுமே நெட்டுருப் போட்டு 12 ஆம் வகுப்பு வரை ஒப்பேற்றும் பாடத்திட்டம் உருவாக்கியவருடன்; கல்வி அதிகாரிகளுடன்; அறியாமை நிறைந்த பெற்றோருடன். இவர்தான் தமிழில் அறிவியல் சிந்தனையை வளரவிடாமல் செய்கிறாரே ஒழிய, தமிழாசிரியர் அல்ல. கொண்டுவந்த பொருளை இருளில் வேறெங்கோ தொலைத்துவிட்டு வெளிச்சத்தில் தேடி அங்கிருந்தவரை அடையாளம் காண்பிப்பது சரியானதல்ல. தமிழாசிரியர் இற்றை நிலையில் நுணுக்கிலும் நுணுக்கு. பள்ளிக் கணக்கில் அவர் ஒரு பொருட்டே அல்ல.

ஆனையை விட்டுப் பூனையை நொந்து என்ன பலன்?

அன்புடன்,
இராம.கி.

In TSCII:

¾Á¢Æ¡º¢Ã¢Â÷¸Ùõ, ¾Á¢Æ¢ø «È¢Å¢Âü º¢ó¾¨ÉÔõ.

´ÕÓ¨È ¦Àâ ±Øò¾¡Ç÷ ´ÕÅ÷ («Å÷ ¡÷ ±ýÀÐ þô§À¡Ð Ó¸¨ÁÂ¡É ¦ºö¾¢ «øÄ), ¾Á¢Æ¡º¢Ã¢Â÷¸Ç¢ý ÀÆõ¦ÀÕ¨Áô §À¡ì¸¡ø ¾¡ý ¾Á¢Æ¢ø «È¢Å¢Âü º¢ó¾¨É ÅÇçŠþø¨Ä ±ýÚ ´Õ Á¼ü ÌØ ¯¨Ã¡ðÊø ¦º¡ýÉ¡÷. «ÅÕìÌ Å¢¨¼ ¦º¡øÖõ Ó¸Á¡¸ ±Ø¾ò ¦¾¡¼í¸¢, ´Õ À¡¾¢ Å¢¨¼Â¢Úò¾ ¿¡ý À¢ÈÌ §ÅÚ §Å¨Ä¸Ç¢ø ¬úóÐ §À¡É¾¡ø, À¢ýÉ¡ø ¦¾¡¼Ã¡Á§Ä §À¡öÅ¢ð§¼ý. þôÀÊ Å¢Å¡¾õ Å¢ðÎô §À¡ÉÐ ±ÉìÌô ÀÄÓ¨È ¿¼ó¾¢Õ츢ÈÐ. «Ð ±ýÛ¨¼Â Ì¨È ±ýÚõ ¯½÷ó¾¢Õ츢§Èý. þô¦À¡ØÐ ¾Á¢Æ¡º¢Ã¢Â÷¸û §Áø ±É츢ÕìÌõ ̨ȨÂÔõ, «§¾ §¿Ãò¾¢ø þý¨ÈÂò ¾Á¢Æ¢ø «È¢Å¢Âø º¢ó¾¨É ̨ÈóÐ þÕôÀ¾üÌ «Å÷¸¨Çî ¦º¡øÖž¢ø ¦À¡ÕÇ¢ø¨Ä ±ýÚõ ¦º¡øÄ ÓüÀθ¢§Èý.

1960 ¸Ç¢ø þÕóÐ ÀÄ ¾Á¢Æ¡º¢Ã¢Â÷¸¨Ç Á¢¸ ¦¿Õí¸¢ô À¡÷ò¾Åý ¿¡ý. «ô¦À¡ØÐ «Å÷¸û ¸¢ð¼ò¾ð¼ µ÷ þÂì¸Á¡¸§Å þÕó¾¡÷¸û. «Å÷¸û ¦º¡øÖìÌ ¾Á¢Æ¸ °÷¸û ±í¸¢Öõ ´Õ Á¾¢ôÒ þÕó¾Ð. "¾Á¢Æö¡ ¦º¡øÖìÌ ÁÚ §À¨Ä" ±ýÈ ¯½÷× «ô¦À¡ØÐ Á¡¿¢Äõ ±íÌõ ŢâóÐ ¸¢¼ó¾Ð. 1967 -ø ´Õ ¦ÀÕõ «Ãº¢Âø Á¡üÈò¨¾ì ¦¸¡ñÎ Åà («Ð þý¨ÈìÌ Å¢ÆÄ¡öô §À¡ÉÐ þý¦É¡Õ ÒÄÉõ.) «ý¨È Á¡½Å÷¸§Ç¡Î, «Å÷¸Ùõ ´Õ ¸¡Ã½Á¡ö þÕó¾¡÷¸û. þý§È¡ ¦ÀÕõÀ¡Öõ ¾Á¢Æº¢Ã¢Â÷¸û Á¾¢ôÀ¢ÆóÐ ¾Á¢úò ¾¢¨ÃôÀ¼õ, ¾¡Ç¢¨¸¸û, Á¢¨¼Âí¸û ¬¸¢Â ±øÄ¡ÅüÈ¢Öõ §¸Ä¢ô ¦À¡ÕÇáö ¬¸¢ Å¢ð¼¡÷¸û. Á¾¢ôÀ¢Æó¾Å÷¸û ¦º¡øÖÅÐ ÌÓ¸¡Âò¾¢ø ±ÎÀÎÁ¡, ±ýÉ?

þý¨ÈÂò ¾¢Ã¡Å¢¼ ¦Á¡Æ¢ ¬öÅ¡Ç÷¸û, ÌÈ¢ôÀ¡¸ò ¾Á¢ú ¦Á¡Æ¢ ¬öÅ¡Ç÷¸û, ¸ÊÉÁ¡É ¦ºÂø¸Ç¢ø ®ÎÀ¼¡Áø §Áõ§À¡ì¸¡¸, «¨Ãò¾ Á¡¨Å§Â «¨ÃòÐì ¦¸¡ñÎõ, ¾Á¢Æ¡º¢Ã¢Â÷¸û ÀðÊÁýÈõ, ¸Å¢ÂÃí¸õ, ºÁÂרøû, ¾Á¢ú/¾Á¢Æ÷ Ò¸ú À¡ÎÅÐ ±É Á¢¸ ±Ç¢¾¡É ¸¡Ã¢Âí¸¨Ç§Â ¦ºöÐ ¦¸¡ñÊÕ츢ȡ÷¸û. «¾¢ø ´Õ º¢È¢Â À¡ý¨Á¢É÷ ºõÀ¡Ã¢ìÌõ À½ò¨¾ì ÌðʧÀ¡¼ ¨ÅôÀ¾¢Öõ ÌȢ¡¸ þÕ츢ȡ÷¸û. þÅ÷¸ÙìÌò ¾Á¢ú ±ýÀÐ À½õ ºõÀ¡Ã¢ì¸ ´ÕÅÆ¢.

­ò¾¨¸Â ¦ºÂø¸¨Çî ¦ºöÂì ܼ¡Ð ±É ¿¡ý ÓüÈ¢Öõ ¦º¡øÄ Á¡ð§¼ý; Á¢¨¼Â측Ã÷¸û ¦ºöÔõ §À¡Ð, ¾Á¢Æ¡º¢Ã¢Â÷¸Ùõ ¾Á¢¨Æ ¨ÅòÐô À¢¨ÆôÀ¾¢ø ¾ÅÚ þø¨Ä. ¬É¡ø, ¾Á¢Æ¡º¢Ã¢Â÷¸Ç¢ø 90 Å¢Ø측ðÎìÌõ §ÁüÀ𧼡÷ þ¨¾ò ¾¡ý ¦ºö¸¢È¡÷¸û. «¾ý Å¢¨ÇÅ¡¸, ÌÓ¸¡Âõ, ÅÃÄ¡Ú, ¾Á¢ú þÄ츢Âõ, ¾Á¢¨Æ Óý¦ÉÎòÐî ¦ºøÅÐ, ¾Á¢¨Æ þó¾ì ¸¡Ä µð¼ò¾¢üÌ ²ó¾¡¸ ¯Ãõ ¦¸¡ÎôÀÐ, Ò¾¢Â ¦º¡ü¸¨Ç, Ò¾¢Â þÂÖ¨Á¸¨Ç (possibilities), Ò¾¢Â À¡÷¨Å¸¨Ç, ÁÚÀ¡÷¨Å¸¨Ç ¦¸¡ñξÕÅÐ §À¡ýÈÅü¨Èò ¾Á¢ú ¬º¢Ã¢Â÷¸û «øÄ¡§¾¡÷ - ÌÈ¢ôÀ¡¸ ÅÃÄ¡üÈ¡Ç÷¸û, «È¢Å¢ÂÄ¡Ç÷¸û, ¦À¡È¢Â¢ÂÄ¡Ç÷¸û, ÅÆį̀û÷¸û ¬¸¢Â ­ýÉ À¢È÷ ¾¡ý ¾í¸ÙìÌ ¯ûÇ ¬÷Åí ¸¡Ã½Á¡öî ¦ºö¸¢È¡÷¸§Ç ´Æ¢Âò ¾Á¢Æ¡º¢Ã¢Â÷¸û ¦ºöÅÐ þø¨Ä. «ôÀÊ¡ɡø mainstream tamilogists - where are they? þó¾ì §¸ûÅ¢¾¡ý ¸¼ó¾ 30 ¬ñθÙìÌõ §ÁÄ¡¸ þ­Õ츢ÈÐ.

þý¦É¡Õ ̨ȨÂÔõ ¦º¡øÄ §ÅñÎõ. þý¨ÈÂò ¾Á¢Æ¡º¢Ã¢Â÷¸Ç¢ý ´ü¨Èô ÀâÁ¡Éõ. 30/40 ¬ñθÙìÌ Óý þÕó¾ ¾Á¢ú ¬öÅ¡Ç÷¸û ̨Èó¾Ð ãýÚ, ¿¡ýÌ (ÌÈ¢ôÀ¡¸ò ¾¢Ã¡Å¢¼) ¦Á¡Æ¢¸Ç¢Ä¡ÅÐ §¾÷ ¦ÀüÈ¢Õó¾É÷. þý¨ÈìÌ ¯ûÇ ¸øæâò ¾Á¢Æ¡º¢Ã¢Â§Ã¡ ¾Á¢¨Æ ÁðΧÁ «È¢óÐ (¬í¸¢Äõ Ü¼î ºÃ¢Â¡¸ «È¢Â¡Áø) À¢¨Æô¨À µðÊÅ¢¼ ÓÊÔõ. ­¾üÌ Á¡È¡¸, þý¨ÈìÌõ ³§Ã¡ôÀ¢Â ¿¡Î¸Ç¢ø ´Õ ¦Á¡Æ¢ô §ÀẢâÂ÷ ¾ý ¦Á¡Æ¢ ¾Å¢÷òÐ þýÛõ ¿¡¨ÄóÐ ¦Á¡Æ¢¸Ç¡ÅÐ ¦¾Ã¢ó¾¢ÕôÀ¡÷. þ§¾ §À¡Ä ÀûÇ¢ò ¾Á¢Æ¡º¢Ã¢ÂÕõ ¦Á¡Æ¢ÂȢŢø ̨Èó§¾ ¸¡½ôÀθ¢È¡÷. ¦ÅÚ§Á À¡¼í¸¨Çô ÀÊòÐ Á¾¢ô¦Àñ ±Î츨ÅìÌõ §Å¨Ä¢ø ¾ý¨É ¬ðÀÎò¾¢ì ¦¸¡ûÙ¸¢È¡÷.

´Õ ºÁÂõ ¾¢Õ. ¾Á¢Æñ½ø ÝâÂò ¦¾¡¨Äì ¸¡ðº¢Â¢ø 'Žì¸õ ¾Á¢Æ¸õ' ±ýÈ À̾¢Â¢ø ¦º¡ýÉ¡÷: ¦¾¡ø¸¡ôÀ¢Âò¾¢ø M.Phil Àð¼õ Å¡í¸¢Â ´ÕÅ÷, ¾Á¢Æñ½ø Å£ðÊø ¦¾¡ø¸¡ôÀ¢Âô ¦À¡ò¾¸õ Óؾ¡ö þÕó¾¨¾ì ¸ñΠŢÂóÐ §À¡É¡Ã¡õ. ¾Á¢Æñ½ø «Åâ¼õ §¸ð¼¡Ã¡õ: "þ¾¢ø ±ýÉ Å¢ÂôÒ? ¯í¸û Å£ðÊÖõ þÕìÌõ «øÄÅ¡? «øÄÐ áĸò¾¢ø À¡÷ò¾¢ÕôÀ£÷¸û ¾¡§É?" ±ýȡáõ. «ó¾ þÇõ ¬öÅ¢Âø Àð¼õ ¦ÀüÈÅ÷ þø¨Ä ±ýÚ ¦º¡øÄ, "«Ð ±ôÀÊò ¦¾¡ø¸¡ôÀ¢Âò¨¾ô À¡Ã¡Á§Ä ¦¾¡ø¸¡ôÀ¢Âò¾¢ø ¬ö× ¦ºö¾£÷¸û?" ±ýÚ ¾Á¢Æñ½ø §¸ð¼¡Ã¡õ. "«¦¾øÄ¡õ ÁüÈÅ÷ ¯¨Ã¸û, áø¸û ¬¸¢ÂÅü¨Èô À¡÷òÐî ¦ºö¾Ð" ±ýȡáõ ¬ö× ¦ºöÐ Àð¼õ Å¡í¸¢ÂÅ÷. ±ôÀÊ þÕ츢ÈÐ ¸¨¾? ãÄò¨¾ô À¡÷측Á§Ä§Â, ¬ö× ¦ºöÔõ «ÆÌ þýÚ ÀÄâ¼õ þÕ츢ÈÐ. ±øÄ¡õ þÃñ¼¡õ ¿¢¨Ä, ãýÈ¡õ ¿¢¨Ä ¯º¡òШ½(reference) áø¸¨Ç ¨Åò§¾ ¬ö§Åθû ±Ø¾¢Å¢Î¸¢È¡÷¸û. (¸¡ð¼¡¸ º¢ÄôÀ¾¢¸¡Ãò¾¢üÌ ¯.§Å.º¡.Å¢ý À¾¢ô¨À§Â¡, §Åí¸¼º¡Á¢ ¿¡ð¼¡Ã¢ý ¯¨Ã¨Â§Â¡ ÀÊò¾Å÷¸û, ¾Á¢Æ¡º¢Ã¢Ââø 15 % Å¢Ø측Π§¾ÚÁ¡ ±ýÀÐ §¸ûÅ¢ì ÌÈ¢)

¾Á¢Æ¢ø ¬ö× ¦ºöÅÐ ±ýÀÐ þý¨È즸øÄ¡õ "¸õÀÉ¢ø ¬Ú¸û", "¦ƒÂ ¸¡ó¾É¢ý ºÓ¾¡Âô À¡÷¨Å", "À¡Ã¾¢Ã¡ƒ¡Å¢ý ¾¢¨Ãô À¼ò¾¢ø ÁñÅ¡º¨É" ±É ±Ç¢¾¡É «¸ò¾£Î¸¨Çô (subjects) ÀüÈ¢ ÁðΧÁ ¦ºöÅÐ ±ýÈ¡¸¢ Å¢ð¼Ð. (¯¼§É þó¾ò ¾¨ÄôÒì¸Ç¢ø ¬ö× ¦ºöÂìܼ¡Ð ±ýÚ ¿¡ý ¦º¡øÖž¡¸ ±ñ½¢Å¢¼¡¾£÷¸û. ¦ºöÂÄ¡õ, ¬É¡ø ¦ºöÔõ ӨȢø ¾¡ý §¸ûÅ¢.) «ò¾¨¸Â ¾¨ÄôÒì¸Ç¢Öõ þÅ÷¸û ±ØÐõ ¬ö× áø¸û, "«Å÷ «Ð ¦º¡ýÉ¡÷, þÅ÷ þÐ ¦º¡ýÉ¡÷ ....." ±ýÚ ´§Ã «Ê¡¸ §Áü§¸¡û¸¨Ç ±ÎòÐî ¦º¡øž¡¸ þÕì̸¢È§¾ ´Æ¢Â, "þÅ÷¸û ±ýÉ ¦º¡øÄ ÅÕ¸¢È¡÷¸û?" - ±ýÚ «ÅüÈ¢ý ¯ð¦À¡Õ¨Çî ÍÕ츢 ¦À¡Ð£¼¡¸ (objective) ¸¨¼º¢ ŨÃìÌõ ´ýÚõ ¦º¡øÖž¢ø¨Ä. ¬ö×ô ¦À¡ò¾¸ò¾¢ý ÓÊÅ¢ø, "þ¾É¡ø ±ýÉ ¦¾Ã¢¸¢ÈÐ?" ±ýÚ ¦¾¡¼í¸¢ ÓýÉÅ÷¸û ¦º¡ýɨ¾§Â, Á£ñÎõ ¦¾¡ÌòÐî ¦º¡øÄ¢ þô¦À¡ØÐ ¬ö× ¦º¸¢ÈÅ÷ Áí¸Çõ À¡Ê Å¢ÎÅ¡÷. ¦Á¡ò¾ò¾¢ø, þÐ µ÷ ¬ö×ô ¦À¡ò¾¸Á¡ ±ýÚ ¿Á째 «ó¾ ¬ö§Å𨼠²üÚì ¦¸¡ñ¼ Àø¸¨Äì ¸Æ¸ò¾¢ý ¾Ãò¾¢ý §Áø ³Âõ ÅóРŢÎõ. "¾Á¢Æ¡ö×ìÌ ±ýÉö¡ ¦ºö¾£÷¸û?" ±ýÈ¡ø ¿¡õ ¦ÀÚÅÐ ¦ÀÕò¾ ²Á¡üÈõ ¾¡ý. ¦ÀÕõÀ¡Ä¡É ¬ö׸û Á¢¨ºÂ¢ø ¦ºöÔõ ¬ö׸ǡ¸§Å þÕ츢ýÈÉ. ¾Á¢¨Æò ¾Å¢÷òÐ, þý¦É¡Õ ШȨ ´ðÊÉ¡ü§À¡Ä (¦¾¡øÄ¢Âø, ¸ø¦ÅðÊÂø, ÅÃÄ¡Ú, ¿¡½ÂÅ¢Âø, «È¢Å¢Âø, ¦À¡ÕÇ¢Âø, ÌӸŢÂø, ÁÕòÐÅõ, þôÀÊ ²§¾¡ ´ýÚ¼ý þ¨½ó¾¡ü§À¡Ä) ¬ö׸¨Ç ±Î츧Š¾Á¢Æ¡º¢Ã¢Â÷¸û ¾Âí̸¢È¡÷¸û. ÅûÙÅ÷ áÄ¢ý º¡Éý ¯ð¾¢Ã¢× (Shannon's entropy) ±ýÉ? «¨¾ ºí¸ ¸¡Ä ¯ð ¾¢Ã¢§Å¡Î ¦À¡Õò¾¢, ÁüÈ À¾¢¦½ñ ¸½ìÌ áø¸§Ç¡Î ´ôÀ¢ðÎ ÅûÙÅý ¸¡Äò¨¾î ¦º¡øÄ ÓÊÔÁ¡? þ¦¾øÄ¡õ ¾Á¢Æ¡º¢Ã¢Â÷¸û ¬ö×ìÌò ¦¾¡¼÷§À þøÄ¡¾¾¡ö þÕ츢ÈÐ.

¾Á¢Æ¡º¢Ã¢Â÷¸û ÀüȢ ¿õ ²ì¸ò¨¾ ±Ø¾ò ¦¾¡¼í¸¢É¡ø «¾üÌ ÓÊÅ¢ø¨Ä. ²ý, ¿õÓ¨¼Â ¾Á¢ú þ¨½Âò¾¢§Ä ¾Á¢Æ¡º¢Ã¢Â÷¸û ±ò¾¨É §À÷ ­Õ츢ȡ÷¸û? ±ÉìÌî ºÃ¢Â¡¸î ¦º¡øÄò ¦¾Ã¢ÂÅ¢ø¨Ä. ¦Á¡Æ¢ÅøÖ¿÷ þíÌ ¿õÓ¼ý ܼ þÕó¾¡ø ¾¡§É ¿¡õ ¸¨Ä¡ø ¬ìÌÅÐ ºÃ¢Â¡ ±ýÚ ¦Á¡Æ¢ôÀ¡÷¨Å¢ø ¦º¡øÄ ÓÊÔõ. (¿¡ý «ùÅô§À¡Ð ¸¨Ä¡ø ÀüÈ¢ô §ÀÍÅÐ ´ÕŨ¸Â¢ø ¬¨Ä¢øÄ¡ °ÕìÌ þÖô¨Àôâî º÷츨ç¡ ±ýÈ ±ñ½õ ܼ ±ÉìÌ ÀÄ §¿Ãí¸Ç¢ø ±ØÅÐñÎ.)

±ø§Ä¡¨ÃÔõ §À¡Ä, Å¡ú쨸ô Àð¼õ «¨Äì¸Æ¢ò¾¾¡ø, «¾¢Ä¢ÕóÐ Á£Ç ÓÊ¡Áø, ¦¿¡öóÐ §À¡ö, ¾í¸ÙìÌ ±ýÚ þÕó¾ ÅÃÄ¡üÚ ¯½÷×ô ¦À¡Úô¨À Å¢ðÎò ¦¾¡¨ÄòÐ, ¿¡ðÎô ÒÈí¸Ç¢ø «Å÷¸ÙìÌ þÂü¨¸Â¡öì ¸¢¨¼ò¾ ¾¨Ä¨Áô ¦À¡ÚôÀ¢ø þÕóÐõ Ţĸ¢ô §À¡ÉÅ÷¸û ¾Á¢Æ¡º¢Ã¢Â÷¸û. «§¾ ¦À¡ØÐ, ¾Á¢ú¿¡ð椀 ¾Á¢ú «Æ¢óÐ §À¡öŢΧÁ¡ ±ýÈ þý¨È ¿¢¨ÄìÌ «Å÷¸û ¸¡Ã½¢¸§Ç «øÄ÷ ±ýÚ ¾¡ý ¿¡ý ¯½Õ¸¢§Èý. ¦À¡ÚôÒ ¿õ ±ø§Ä¡ÕìÌõ þÕìÌõ §À¡Ð, ¿¡õ ¾ôÀ¢òÐì ¦¸¡ñÎ, ¿õÁ¢ø ¦¿¡öó¾Å¨Ã «¨¼Â¡Çõ ¸¡ðÊ "«Å¨Ã «ÊÔí¸û" ±ýÚ ÁüÈÅ÷ìÌî ¦º¡øÖÅÐ ±ó¾ Ũ¸Â¢ø »¡Âõ ¬Ìõ?

¾Á¢Æ¡º¢Ã¢Â÷¸Ç¡, ¾Á¢Æ¢ø «È¢Å¢Âø ÀüÈ¢ô §À͸¢È¡÷¸û? ¿¡ÉÈ¢ó¾ Ũà ¸¢¨¼Â§Å ¸¢¨¼Â¡Ð. ¦ÅÚõ ¿¢Æø¸§Ç¡Î, ¦ÅòÐ §ÅðÎ츧ǡÎ, â墨¡ÉÅ÷¸§Ç¡Î ¦À¡Õ¾ô À¡÷ôÀ¾¢ø ¦À¡ÕÇ¢ø¨Ä ±ýÚ ¾¡ý ¿¡ý ¦º¡øÄ ÓÊÔõ. «ó¾ ±Øò¾¡Ç÷ ¦À¡Õ¾ §ÅñÊÂÐ ¿õ¨Áô §À¡ýÚ ÀÊò¾ ¾Á¢Æ÷¸Ù¼ý; ¾Á¢í¸¢Ä÷ ±É ¬ÉÅ÷¸Ù¼ý; ¦ÅÚ§Á ¦¿ðÎÕô §À¡ðÎ ÀýÉ¢Ãñ¼¡õ ÅÌôÒ Å¨Ã ´ô§ÀüÚõ À¡¼ò ¾¢ð¼ò¨¾ ¯Õš츢ÂÅ÷¸Ù¼ý; ¸øÅ¢ «¾¢¸¡Ã¢¸Ù¼ý; «È¢Â¡¨Á ¿¢¨Èó¾ ¦Àü§È¡÷¸Ù¼ý. þÅ÷¸û ¾¡ý ¾Á¢Æ¢ø «È¢Å¢Âø º¢ó¾¨É¨Â ÅÇà Ţ¼¡Áø ¦ºö¸¢ÈÅ÷¸§Ç ´Æ¢Â, ¾Á¢Æ¡º¢Ã¢Â÷¸û «øÄ. ¦¸¡ñÎÅó¾ ¦À¡Õ¨Ç þÕÇ¢ø ±í§¸¡ ¦¾¡¨ÄòÐÅ¢ðÎ ¦ÅÇ¢îºò¾¢ø §¾Ê «í¸¢Õó¾Å¨Ã «¨¼Â¡Çõ ¸¡ñÀ¢ìÌõ Ó¨È ºÃ¢Â¡É¾øÄ. ¾Á¢Æ¡º¢Ã¢Â÷¸û þý¨È ¿¢¨Ä¢ø ÑÏ츢Öõ ÑÏìÌ. ÀûÇ¢ì ¸½ì¸¢ø «Å÷¸û ´Õ ¦À¡Õ𧼠«øÄ.

¬¨É¨Â Å¢ðÎô â¨É¨Â ¦¿¡óÐ ±ýÉ ÀÄý?

«ýÒ¼ý,
þáÁ.¸¢.

3 comments:

முனைவர் அண்ணாகண்ணன் said...

நல்ல பதிவு. தமிழ் வகுப்புகளில் மாணவர்கள் பலர் ஆர்வத்துடன் பங்கேற்பது இல்லை. இந்நிலை மாறத் தமிழாசிரியர்கள் தங்கள் திறன்களை வளர்த்துக்கொள்ள வேண்டும்.

Mannai Madevan said...

// தமிழில் ஆய்வு செய்வது என்பது இன்றைக்கெல்லாம் "கம்பனில் ஆறுகள்", "ஜெய காந்தனின் சமுதாயப் பார்வை", "பாரதிராஜாவின் திரைப் படத்தில் மண்வாசனை" என எளிதான அகத்தீடுகளைப் (subjects) பற்றி மட்டுமே செய்வது என்றாகி விட்டது. (உடனே இந்தத் தலைப்புக்களில் ஆய்வு செய்யக்கூடாது என்று நான் சொல்லுவதாக எண்ணிவிடாதீர்கள். செய்யலாம், ஆனால் செய்யும் முறையில் தான் கேள்வி.) //

தங்களின் தெளிந்த நல் சிந்தைக்கு சான்றாய் நிற்கும் வரிகள்.

வாழ்த்தும், வணக்கமும்.

அன்புடன்
மன்னை மாதேவன்.

இராம.கி said...

அன்பிற்குரிய ஆச்சிமகன், மன்னை மகாதேவன்,

உங்கள் பின்னூட்டிற்கு நன்றி. உங்களுக்குத் தெரிந்த தமிழாசிரியர்களை வலைக்குள் கொண்டுவாருங்கள்.

அன்புடன்,
இராம.கி.