Friday, April 15, 2005

கொழுமை எண்கள்

கொழுமை எண்கள்

பொதுவாக நம் உடம்பின் நலம், அதன் கொழுமை(health) ஆகியவற்றைப் பற்றிக் குறிப்பிடும் போது நம்முடைய உயரம், எடை போன்றவற்றை மட்டுமே சொல்லுகிறோம். இது போக இன்னும் சிலவற்றை ஒரு சமயம் "Readers Digest" இல் படித்தேன். இப்படிக் கொழுமையைக் காட்டும் மற்ற சுட்டிகள் எவை?

(நலம் என்று சொல்லாமல், அதுவும் எங்கு பார்த்தாலும் அந்தச் சொல் பயிலப்பட்டும் கூட, கொழுமை என்று இங்கே சொல்வதற்குக் காரணம் உண்டு. well-being என்பது நலம். goodness என்று கூட நலம் என்ற சொல் பொருள் கொள்ளும். ஆனால் health என்பது வெறும் well-being ஆ? goodness ஆ? இல்லையே? அதற்கும் மேலானது அல்லவா? கொழுமை என்பது நலம் என்பதைக் காட்டிலும் விதப்பான சொல். உடல் நலம் என்று நீட்டிச் சொல்லாமல் விதப்பாக, சுருக்கமாகக் கொழுமை என்று புழங்குவது தமிழ்ப் பேச்சில் துல்லியம் கூட்டும். தமிழில் கூர்மையில்லாமல் மொழுங்கையாய்ப் பேசுவது ஏன்? கொழுமையின் பயன்பாடு தமிழில் இல்லாமல் இல்லை; "கொழு கொழு என்று இருக்கிறான், அவனுக்கென்ன குறை?" என்று சொல்கிறோமே? அது நலப் பொருளில் தானே? அந்தச் சொல்லை நீட்டுவதில் தவறென்ன? அதே பொழுது கொழுமை மிஞ்சினால் கொழுப்பு (அளவுக்கு மிஞ்சினால் அமுதமும் நஞ்சு என்பதைப் போல). கொழுமையை கொழுப்பு என்று சொன்னால் வேறு பொருள் வந்துவிடும். எனவே மைகார ஈற்றைக் கனமாகப் பலுக்க வேண்டும்.)

1. பொதி மடை எண்: (body mass index - BMI). இது உடம்பில் உள்ள கொழுப்பைப் பற்றிய ஓர் அளவீடு. உடம்பின் எடையைக் கிலோகிராமில் வைத்து, அதை மீட்டரில் அளவிட்ட உயரத்தின் இருமடக்கால் (to the power 2) [mass in kg /height in meters ^2] வகுத்து வரும் எண் இது. (பொத்துப் பொத்தென்று இருக்கிறான் பார். அந்தப் பொத்தை - பொதி - என்பது தான் உருவம் ஒரு பொருட்டில்லாத கனப்பொருள் - body. மட்டித்து இருத்தல் = பெருத்து இருத்தல். மடங்கி வருவது, மடைத்து வருவது என்பது பெருத்து வருவது - massive, மடை மடையாக வெள்ளம் வந்தது. எனவே mass என்பதை மடை என்கிறோம். மடை என்று சொல்லும் போது புவியீர்ப்பு நம் கணக்கில் வருவதில்லை. எடை, நிறை என்னும் போது புவியீர்ப்பு உள்ளே வந்துவிடும். மடையோடு புவியீர்ப்பு முடுக்கம் - acceleration due to gravity - சேரும் போது எடை, நிறை போன்றவற்றை உணர்கிறோம். கிலோகிராம் கணக்கு என்னும் போது எடையும், மடையும் ஒன்றாய்த் தோற்றும். பூதியல் - physics - தொடக்கப் பாடத்தை நினைவு கொள்ளுங்கள்)

(காட்டாக என் எடை 75 கிலோகிராம். என் உயரம் 1.74 மீட்டர்; எனவே என் பொதி மடை எண் = 75/(1.74*1.74) = 24.77). இந்த எண் 18.5ல் இருந்து 24.9க்குள் இருந்தால் உங்கள் உடம்பு அளவான கொழுமையில் இருக்கிறது. 25 - 29.9 க்குள் இருந்தால் உங்கள் உடம்பு அதிக எடை கொண்டதாக இருக்கிறது. 30ம் 30க்கு மேலும் இருந்தால் நீங்கள் ஓர் உப்பிய (obese) ஊதையான உடம்புக்காரர்.

2. இன்னொரு எண் இடையின் (அல்லது இடுப்பின்) சுற்றளவு. இந்த எண், ஓர் உடம்பின் அடிவயிற்றில் எவ்வளவு கொழுப்பு இருக்கிறது என்றும், அதன் மூலம் நெஞ்சு நோய் வருவதற்கான இக்கு(risk) எவ்வளவு என்றும் சுட்டுகிறது. (நடக்குமோ, நடக்காதோ என்பதை இக்கு வைத்துப் பேசுவதாகச் சொல்கிறோம் இல்லையா? அந்த இக்கு தான் risk என்பதற்கு இணையான சொல். இவ்வளவு இக்கு என்னால் தாங்க முடியாது - I cannot bear this much risk. அது ரொம்ப இக்கான வேலையம்மா. That is a risky job.) உங்களுடைய இடுப்பைச் சுற்றி ஒரு அளவுப் பட்டையைக் கொண்டு இடுப்பின் சுற்றளவு எவ்வளவு என்று பாருங்கள். அது பெண்களுக்கு 89 செண்டி மீட்டருக்கு மேலும், ஆண்களுக்கு 101 செண்டிமீட்டருக்கு மேலும் இருந்தால், நெஞ்சு நோய்க்கான இக்கு உங்களுடன் கூடவே இருக்கிறது என்று பொருள். இந்த இக்கைக் குறைப்பதற்கான வழியைப் பார்க்க வேண்டும்.

மூன்றாவது எண்ணைப் பற்றித் தெரிந்து கொள்ளுவதற்கு முன், நம்முடைய உடம்பின் ஒரு பகுதிக்குள்ள பெயரை இன்றையத் தமிழில் புழங்கத் தவறி விட்டோ ம் என்பதைப் புரிந்து கொள்ளவேண்டும். உடம்பின் அளவைப் பற்றிச் சொல்லும் போது சில போது வேடிக்கையாக, 36-24-36 என்று அணுங்குழை(அங்குலம்)க் கணக்கில் சொல்லுகிறோம் அல்லவா? இந்த எண் தொடரில், முதலில் இருக்கும் 36" என்பது மார்பு அளவு. 24" என்பது இடை அளவு. கடைசியில் இருக்கும் 36" என்பதை எது என்று மாந்த உடம்பில் நமக்கு அடையாளம் காட்டத் தெரியும். ஆனால் தமிழில் அந்தப் பெயரை என்ன சொல்லி அழைப்பது என்று மட்டும் தெரியாது. அதன் பெயர் ஒக்கலை. (நிகண்டுகளில் இந்தச் சொல் இன்னும் இருக்கிறது. வழக்கில் தான் விட்டுவிட்டோ ம்.) இந்த ஒக்கலையைத் தான் ஆங்கிலத்தில் hip என்கிறார்கள். இதை மறந்த காரணத்தால் hip, waist என இரண்டிற்குமே தமிழில் இடுப்பு என்று நிறையப் பேர் இப்பொழுது புழங்கிக் கொண்டு இருக்கிறார்கள். தற்கால அகரமுதலிகளிலும் அப்படியே வருகிறது. (இதே போல கால அளவுகளிலும் ஒரு சொல்லை விட்டுவிட்டோ ம். ஒரு நாளின் ஆறு சிறுபொழுதுகளில், காலை என்பது 6 மணியில் இருந்து 10 மணி, பகல் என்பது 10 மணியில் இருந்து 14 மணிவரை, எற்பாடு என்பது 14ல் இருந்து 18 வரை, மாலை என்பது 18ல் இருந்து 22 வரை, யாமம் என்பது 22 முதல் 2 வரை, வைகறை அல்லது விடியல் என்பது 2ல் இருந்து 6 வரை.லிந்தச் சொற்களில் எல் என்னும் சூரியன் படுகின்ற நேரமான எற்பாடு என்ற சொல்லையே இந்தக் காலத்தில் மறந்து மாலை என்ற சொல்லையே நீட்டிக் குழப்பிக் கொண்டிருக்கிறோம்.)

இப்படி மொழியை மறந்தால், அதன் சொல்லாட்சிகளைத் துறந்தால், நாம் யாரென்று சொல்லவே பிறகு மறந்துபோவோம். ஆங்காங்கு அப்புறம் ஆங்கிலம் நுழைத்து தமிங்கிலம் பேசுவோம். தமிங்கிலம் தழைப்பது இப்படித்தான். நம்முடைய மறதியால், சோம்பேறித் தனத்தால், அக்கறை இன்மையால் மட்டுமே இது நடக்கிறது. இதை யாரும் நம்மை செய்யச் சொல்லிக் கட்டாயப் படுத்தவில்லை. நாமே செய்கிறோம். எனவே தமிழ்ச் சொல்லாட்சிகளை நாம் ஒதுக்கக் கூடாது. மொழியைத் தொலைப்பது இப்படித்தான். எற்பாடு என்ற கால வேளையை மறந்தது போலவே, ஒக்கலை என்ற மாந்த உறுப்புச் சொல்லையும் இக்காலத் தமிழர் மறக்கிறோம். ஒக்கலைக்கும் கீழ் புட்டத்தை (buttocks)ச் சேர்த்தாற் போல் (புட்டம் என்பது இக்காலத் தமிழர் மறந்த சொல். புட்டம் என்று (அல்லது அதற்கு இணையான இன்னொரு தமிழ்ச்சொல்லை) சொல்லுவதற்கு வெட்கப்பட்டு, அதே பொழுது இடக்கர் அடக்கலாய் எழுதுவதாய் எண்ணிக் கொண்டு ஏகப்பட்ட எழுத்தாளர்கள், தாளிகைக்காரர்கள் அதன் வடமொழிப் பலுக்கலை எழுதிக் கொண்டு இருக்கிறார்கள். உடம்பில் பின்பக்கம் புடைத்து நிற்பது புட்டம். புட்டம்>ப்ருட்டம்>ப்ருஷ்டம். இதே போல மாந்த உறுப்புகளில் அவமானம், வெட்கம் என்று தாமாகக் கருதிக் கொண்டு தமிழ்ப்பெயரை ஒதுக்கும் படித்தவர்கள் மிகப் பலர்) இன்னும் ஒரு சுற்றளவு இருக்கிறது அது கொஞ்சம் தொய்வாக, சரிவாக, கோணலாக, ஆண்களுக்குக் குழாய்ச் சட்டை தைப்பதற்காகத் தையற்காரர் எடுக்கும் அளவு. இந்தச் சாய்வு முறை புரியாமல், புட்ட அளவையும் ஒக்கலை அளவையும் ஒன்றாகச் சிலர் குழம்பிக் கொள்வதும் உண்டு.

3. இடையளவிற்கும் ஒக்கலை அளவிற்கும் உள்ள வீதமே (waist-to-hip ratio) மூன்றாவது எண். (அதாவது இடுப்பின் அளவை ஒக்கலையின் அளவால் வகுத்து வரும் எண்) இந்த எண்ணும் நீங்கள் உங்கள் உடம்பில் எங்கு எடையைத் தேவையின்றிச் சுமக்கிறீர்கள் என்று காட்டுகிறது. இந்த எண் ஆண்களுக்கு 0.90 அல்லது அதற்கும் குறைவாக இருந்தால் சேமம் (safe) ஆனது. பெண்களுக்கு 0.80 அல்லது அதற்கும் குறைவாக இருந்தால் சேமமானது. (பெண்களின் மகப்பேறு, கருப்பை காரணமாய் பெண்களின் ஒக்கலை ஆணகளைக் காட்டிலும் கூடத்தான் இருக்கும்.)

அவ்வப்பொழுது, இப்படி வெவ்வேறு இயல்களின் வழியாய்ச் செய்திகளைத் தெரிந்து கொள்வதோடு தமிழையும் அறிவோம். இன்றைக்குக் கொழுமை அறிவியலைப் (health science) பார்த்தோம்.

அன்புடன்,
இராம.கி.

In TSCII:

¦¸¡Ø¨Á ±ñ¸û

¦À¡ÐÅ¡¸ ¿õ ¯¼õÀ¢ý ¿Äõ, «¾ý ¦¸¡Ø¨Á(health) ¬¸¢ÂÅü¨Èô ÀüÈ¢ì ÌÈ¢ôÀ¢Îõ §À¡Ð ¿õÓ¨¼Â ¯ÂÃõ, ±¨¼ §À¡ýÈÅü¨È ÁðΧÁ ¦º¡øÖ¸¢§È¡õ. þÐ §À¡¸ þýÛõ º¢ÄÅü¨È ´Õ ºÁÂõ "Readers Digest" þø ÀÊò§¾ý. þôÀÊì ¦¸¡Ø¨Á¨Âì ¸¡ðÎõ ÁüÈ Íðʸû ±¨Å?

(¿Äõ ±ýÚ ¦º¡øÄ¡Áø, «Ð×õ ±íÌ À¡÷ò¾¡Öõ «ó¾î ¦º¡ø À¢ÄôÀðÎõ ܼ, ¦¸¡Ø¨Á ±ýÚ þí§¸ ¦º¡øžüÌì ¸¡Ã½õ ¯ñÎ. well-being ±ýÀÐ ¿Äõ. goodness ±ýÚ Ü¼ ¿Äõ ±ýÈ ¦º¡ø ¦À¡Õû ¦¸¡ûÙõ. ¬É¡ø health ±ýÀÐ ¦ÅÚõ well-being ¬? goodness ¬? þø¨Ä§Â? «¾üÌõ §ÁÄ¡ÉÐ «øÄÅ¡? ¦¸¡Ø¨Á ±ýÀÐ ¿Äõ ±ýÀ¨¾ì ¸¡ðÊÖõ Å¢¾ôÀ¡É ¦º¡ø. ¯¼ø ¿Äõ ±ýÚ ¿£ðÊî ¦º¡øÄ¡Áø Å¢¾ôÀ¡¸, ÍÕì¸Á¡¸ì ¦¸¡Ø¨Á ±ýÚ ÒÆíÌÅÐ ¾Á¢úô §Àø ÐøÄ¢Âõ ÜðÎõ. ¾Á¢Æ¢ø Ü÷¨Á¢øÄ¡Áø ¦Á¡Øí¨¸Â¡öô §ÀÍÅÐ ²ý? ¦¸¡Ø¨Á¢ý ÀÂýÀ¡Î ¾Á¢Æ¢ø þøÄ¡Áø þø¨Ä; "¦¸¡Ø ¦¸¡Ø ±ýÚ þÕ츢ȡý, «ÅÛ즸ýÉ Ì¨È?" ±ýÚ ¦º¡ø¸¢§È¡§Á? «Ð ¿Äô ¦À¡ÕÇ¢ø ¾¡§É? «ó¾î ¦º¡ø¨Ä ¿£ðΞ¢ø ¾Å¦ÈýÉ? «§¾ ¦À¡ØÐ ¦¸¡Ø¨Á Á¢ïº¢É¡ø ¦¸¡ØôÒ («Ç×ìÌ Á¢ïº¢É¡ø «Ó¾Óõ ¿ïÍ ±ýÀ¨¾ô §À¡Ä). ¦¸¡Ø¨Á¨Â ¦¸¡ØôÒ ±ýÚ ¦º¡ýÉ¡ø §ÅÚ ¦À¡Õû ÅóÐÅ¢Îõ. ±É§Å ¨Á¸¡Ã ®ü¨Èì ¸ÉÁ¡¸ô ÀÖì¸ §ÅñÎõ.)

1. ¦À¡¾¢ Á¨¼ ±ñ: (body mass index - BMI). þÐ ¯¼õÀ¢ø ¯ûÇ ¦¸¡Øô¨Àô ÀüȢ µ÷ «ÇÅ£Î. ¯¼õÀ¢ý ±¨¼¨Âì ¸¢§Ä¡¸¢Ã¡Á¢ø ¨ÅòÐ, «¨¾ Á£ð¼Ã¢ø «ÇŢ𼠯ÂÃò¾¢ý þÕÁ¼ì¸¡ø (to the power 2) [mass in kg /height in meters ^2] ÅÌòÐ ÅÕõ ±ñ þÐ. (¦À¡òÐô ¦À¡ò¦¾ýÚ þÕ츢ȡý À¡÷. «ó¾ô ¦À¡ò¨¾ - ¦À¡¾¢ - ±ýÀÐ ¾¡ý ¯ÕÅõ ´Õ ¦À¡ÕðÊøÄ¡¾ ¸Éô¦À¡Õû - body. ÁðÊòÐ þÕò¾ø = ¦ÀÕòÐ þÕò¾ø. Á¼í¸¢ ÅÕÅÐ, Á¨¼òÐ ÅÕÅÐ ±ýÀÐ ¦ÀÕòÐ ÅÕÅÐ - massive, Á¨¼ Á¨¼Â¡¸ ¦ÅûÇõ Åó¾Ð. ±É§Å mass ±ýÀ¨¾ Á¨¼ ±ý¸¢§È¡õ. Á¨¼ ±ýÚ ¦º¡øÖõ §À¡Ð ÒŢ£÷ôÒ ¿õ ¸½ì¸¢ø ÅÕž¢ø¨Ä. ±¨¼, ¿¢¨È ±ýÛõ §À¡Ð ÒŢ£÷ôÒ ¯û§Ç ÅóÐÅ¢Îõ. Á¨¼§Â¡Î ÒŢ£÷ôÒ ÓÎì¸õ - acceleration due to gravity - §ºÕõ §À¡Ð ±¨¼, ¿¢¨È §À¡ýÈÅü¨È ¯½÷¸¢§È¡õ. ¸¢§Ä¡¸¢Ã¡õ ¸½ìÌ ±ýÛõ §À¡Ð ±¨¼Ôõ, Á¨¼Ôõ ´ýÈ¡öò §¾¡üÚõ. â¾¢Âø - physics - ¦¾¡¼ì¸ô À¡¼ò¨¾ ¿¢¨É× ¦¸¡ûÙí¸û)

(¸¡ð¼¡¸ ±ý ±¨¼ 75 ¸¢§Ä¡¸¢Ã¡õ. ±ý ¯ÂÃõ 1.74 Á£ð¼÷; ±É§Å ±ý ¦À¡¾¢ Á¨¼ ±ñ = 75/(1.74*1.74) = 24.77). þó¾ ±ñ 18.5ø þÕóÐ 24.9ìÌû þÕó¾¡ø ¯í¸û ¯¼õÒ «ÇÅ¡É ¦¸¡Ø¨Á¢ø þÕ츢ÈÐ. 25 - 29.9 ìÌû þÕó¾¡ø ¯í¸û ¯¼õÒ «¾¢¸ ±¨¼ ¦¸¡ñ¼¾¡¸ þÕ츢ÈÐ. 30õ 30ìÌ §ÁÖõ þÕó¾¡ø ¿£í¸û µ÷ ¯ôÀ¢Â (obese) °¨¾Â¡É ¯¼õÒ측Ã÷.

2. þý¦É¡Õ ±ñ þ¨¼Â¢ý («øÄÐ þÎôÀ¢ý) ÍüÈÇ×. þó¾ ±ñ, µ÷ ¯¼õÀ¢ý «ÊÅ¢üÈ¢ø ±ùÅÇ× ¦¸¡ØôÒ þÕ츢ÈÐ ±ýÚõ, «¾ý ãÄõ ¦¿ïÍ §¿¡ö ÅÕžü¸¡É þìÌ(risk) ±ùÅÇ× ±ýÚõ Íðθ¢ÈÐ. (¿¼ì̧Á¡, ¿¼ì¸¡§¾¡ ±ýÀ¨¾ þìÌ ¨ÅòÐô §ÀÍž¡¸î ¦º¡ø¸¢§È¡õ þø¨Ä¡? «ó¾ þìÌ ¾¡ý risk ±ýÀ¾üÌ þ¨½Â¡É ¦º¡ø. þùÅÇ× þìÌ ±ýÉ¡ø ¾¡í¸ ÓÊ¡Р- I cannot bear this much risk. «Ð ¦Ã¡õÀ þì¸¡É §Å¨ÄÂõÁ¡. That is a risky job.) ¯í¸Ù¨¼Â þÎô¨Àî ÍüÈ¢ ´Õ «Ç×ô À𨼨Âì ¦¸¡ñÎ þÎôÀ¢ý ÍüÈÇ× ±ùÅÇ× ±ýÚ À¡Õí¸û. «Ð ¦Àñ¸ÙìÌ 89 ¦ºñÊ Á£ð¼ÕìÌ §ÁÖõ, ¬ñ¸ÙìÌ 101 ¦ºñÊÁ£ð¼ÕìÌ §ÁÖõ þÕó¾¡ø, ¦¿ïÍ §¿¡öì¸¡É þìÌ ¯í¸Ù¼ý ܼ§Å þÕ츢ÈÐ ±ýÚ ¦À¡Õû. þó¾ þ쨸ì ̨ÈôÀ¾ü¸¡É ÅÆ¢¨Âô À¡÷ì¸ §ÅñÎõ.

ãýÈ¡ÅÐ ±ñ¨½ô ÀüÈ¢ò ¦¾Ã¢óÐ ¦¸¡ûÙžüÌ Óý, ¿õÓ¨¼Â ¯¼õÀ¢ý ´Õ À̾¢ìÌûÇ ¦À¨à þý¨ÈÂò ¾Á¢Æ¢ø ÒÆí¸ò ¾ÅÈ¢ Ţ𧼡õ ±ýÀ¨¾ô ÒâóÐ ¦¸¡ûǧÅñÎõ. ¯¼õÀ¢ý «Ç¨Åô ÀüÈ¢î ¦º¡øÖõ §À¡Ð º¢Ä §À¡Ð §ÅÊ쨸¡¸, 36-24-36 ±ýÚ «Ïį́Æ(«íÌÄõ)ì ¸½ì¸¢ø ¦º¡øÖ¸¢§È¡õ «øÄÅ¡? þó¾ ±ñ ¦¾¡¼Ã¢ø, ӾĢø þÕìÌõ 36" ±ýÀÐ Á¡÷Ò «Ç×. 24" ±ýÀÐ þ¨¼ «Ç×. ¸¨¼º¢Â¢ø þÕìÌõ 36" ±ýÀ¨¾ ±Ð ±ýÚ Á¡ó¾ ¯¼õÀ¢ø ¿ÁìÌ «¨¼Â¡Çõ ¸¡ð¼ò ¦¾Ã¢Ôõ. ¬É¡ø ¾Á¢Æ¢ø «ó¾ô ¦À¨à ±ýÉ ¦º¡øÄ¢ «¨ÆôÀÐ ±ýÚ ÁðÎõ ¦¾Ã¢Â¡Ð. «¾ý ¦ÀÂ÷ ´ì¸¨Ä. (¿¢¸ñθǢø þó¾î ¦º¡ø þýÛõ þÕ츢ÈÐ. ÅÆ츢ø ¾¡ý Å¢ðÎŢ𧼡õ.) þó¾ ´ì¸¨Ä¨Âò ¾¡ý ¬í¸¢Äò¾¢ø hip ±ý¸¢È¡÷¸û. þ¨¾ ÁÈó¾ ¸¡Ã½ò¾¡ø hip, waist ±É þÃñÊü̧Á ¾Á¢Æ¢ø þÎôÒ ±ýÚ ¿¢¨ÈÂô §À÷ þô¦À¡ØÐ ÒÆí¸¢ì ¦¸¡ñÎ þÕ츢ȡ÷¸û. ¾ü¸¡Ä «¸ÃӾĢ¸Ç¢Öõ «ôÀʧ ÅÕ¸¢ÈÐ. (þ§¾ §À¡Ä ¸¡Ä «Ç׸ǢÖõ ´Õ ¦º¡ø¨Ä Å¢ðÎŢ𧼡õ. ´Õ ¿¡Ç¢ý ¬Ú º¢Ú¦À¡ØиǢø, ¸¡¨Ä ±ýÀÐ 6 Á½¢Â¢ø þÕóÐ 10 Á½¢, À¸ø ±ýÀÐ 10 Á½¢Â¢ø þÕóÐ 14 Á½¢Å¨Ã, ±üÀ¡Î ±ýÀÐ 14ø þÕóÐ 18 ŨÃ, Á¡¨Ä ±ýÀÐ 18ø þÕóÐ 22 ŨÃ, ¡Áõ ±ýÀÐ 22 Ó¾ø 2 ŨÃ, ¨Å¸¨È «øÄРŢÊÂø ±ýÀÐ 2ø þÕóÐ 6 ŨÃ.Ä¢ó¾î ¦º¡ü¸Ç¢ø ±ø ±ýÛõ ÝâÂý Àθ¢ýÈ §¿ÃÁ¡É ±üÀ¡Î ±ýÈ ¦º¡ø¨Ä§Â þó¾ì ¸¡Äò¾¢ø ÁÈóÐ Á¡¨Ä ±ýÈ ¦º¡ø¨Ä§Â ¿£ðÊì ÌÆôÀ¢ì ¦¸¡ñÊÕ츢§È¡õ.)

þôÀÊ ¦Á¡Æ¢¨Â ÁÈó¾¡ø, «¾ý ¦º¡øġ𺢸¨Çò ÐÈó¾¡ø, ¿¡õ ¡¦ÃýÚ ¦º¡øħŠÀ¢ÈÌ ÁÈóЧÀ¡§Å¡õ. ¬í¸¡íÌ «ôÒÈõ ¬í¸¢Äõ ѨÆòÐ ¾Á¢í¸¢Äõ §Àͧšõ. ¾Á¢í¸¢Äõ ¾¨ÆôÀÐ þôÀÊò¾¡ý. ¿õÓ¨¼Â ÁȾ¢Â¡ø, §º¡õ§ÀÈ¢ò ¾Éò¾¡ø, «ì¸¨È þý¨Á¡ø ÁðΧÁ þÐ ¿¼ì¸¢ÈÐ. þ¨¾ ¡Õõ ¿õ¨Á ¦ºöÂî ¦º¡øÄ¢ì ¸ð¼¡Âô ÀÎò¾Å¢ø¨Ä. ¿¡§Á ¦ºö¸¢§È¡õ. ±É§Å ¾Á¢úî ¦º¡øġ𺢸¨Ç ¿¡õ ´Ðì¸ì ܼ¡Ð. ¦Á¡Æ¢¨Âò ¦¾¡¨ÄôÀÐ þôÀÊò¾¡ý. ±üÀ¡Î ±ýÈ ¸¡Ä §Å¨Ç¨Â ÁÈó¾Ð §À¡Ä§Å, ´ì¸¨Ä ±ýÈ Á¡ó¾ ¯ÚôÒî ¦º¡ø¨ÄÔõ þ측Äò ¾Á¢Æ÷ ÁÈ츢§È¡õ. ´ì¸¨ÄìÌõ ¸£ú Òð¼ò¨¾ (buttocks)î §º÷ò¾¡ü §À¡ø (Òð¼õ ±ýÀÐ þ측Äò ¾Á¢Æ÷ ÁÈó¾ ¦º¡ø. Òð¼õ ±ýÚ («øÄÐ «¾üÌ þ¨½Â¡É þý¦É¡Õ ¾Á¢ú¡ø¨Ä) ¦º¡øÖžüÌ ¦Åð¸ôÀðÎ, «§¾ ¦À¡ØÐ þ¼ì¸÷ «¼ì¸Ä¡ö ±ØО¡ö ±ñ½¢ì ¦¸¡ñÎ ²¸ôÀð¼ ±Øò¾¡Ç÷¸û, ¾¡Ç¢¨¸ì¸¡Ã÷¸û «¾ý ż¦Á¡Æ¢ô ÀÖì¸¨Ä ±Ø¾¢ì ¦¸¡ñÎ þÕ츢ȡ÷¸û. ¯¼õÀ¢ø À¢ýÀì¸õ Ò¨¼òÐ ¿¢üÀÐ Òð¼õ. Òð¼õ>ôÕð¼õ>ôÕ‰¼õ. þ§¾ §À¡Ä Á¡ó¾ ¯ÚôҸǢø «ÅÁ¡Éõ, ¦Åð¸õ ±ýÚ ¾¡Á¡¸ì ¸Õ¾¢ì ¦¸¡ñÎ ¾Á¢úô¦À¨à ´ÐìÌõ ÀÊò¾Å÷¸û Á¢¸ô ÀÄ÷) þýÛõ ´Õ ÍüÈÇ× þÕ츢ÈÐ «Ð ¦¸¡ïºõ ¦¾¡öÅ¡¸, ºÃ¢Å¡¸, §¸¡½Ä¡¸, ¬ñ¸ÙìÌì ÌÆ¡öî ºð¨¼ ¨¾ôÀ¾ü¸¡¸ò ¨¾Âü¸¡Ã÷ ±ÎìÌõ «Ç×. þó¾î º¡ö× Ó¨È Òâ¡Áø, Ò𼠫ǨÅÔõ ´ì¸¨Ä «Ç¨ÅÔõ ´ýÈ¡¸î º¢Ä÷ ÌÆõÀ¢ì ¦¸¡ûÅÐõ ¯ñÎ.

3. þ¨¼ÂÇÅ¢üÌõ ´ì¸¨Ä «ÇÅ¢üÌõ ¯ûÇ Å£¾§Á (waist-to-hip ratio) ãýÈ¡ÅÐ ±ñ. («¾¡ÅÐ þÎôÀ¢ý «Ç¨Å ´ì¸¨Ä¢ý «ÇÅ¡ø ÅÌòÐ ÅÕõ ±ñ) þó¾ ±ñÏõ ¿£í¸û ¯í¸û ¯¼õÀ¢ø ±íÌ ±¨¼¨Âò §¾¨Å¢ýÈ¢î ÍÁ츢ȣ÷¸û ±ýÚ ¸¡ðθ¢ÈÐ. þó¾ ±ñ ¬ñ¸ÙìÌ 0.90 «øÄÐ «¾üÌõ ̨ÈÅ¡¸ þÕó¾¡ø §ºÁõ (safe) ¬ÉÐ. ¦Àñ¸ÙìÌ 0.80 «øÄÐ «¾üÌõ ̨ÈÅ¡¸ þÕó¾¡ø §ºÁÁ¡ÉÐ. (¦Àñ¸Ç¢ý Á¸ô§ÀÚ, ¸Õô¨À ¸¡Ã½Á¡ö ¦Àñ¸Ç¢ý ´ì¸¨Ä ¬½¸¨Çì ¸¡ðÊÖõ ܼò¾¡ý þÕìÌõ.)

«ùÅô¦À¡ØÐ, þôÀÊ ¦Åù§ÅÚ þÂø¸Ç¢ý ÅƢ¡öî ¦ºö¾¢¸¨Çò ¦¾Ã¢óÐ ¦¸¡ûŧ¾¡Î ¾Á¢¨ÆÔõ «È¢§Å¡õ. þý¨ÈìÌì ¦¸¡Ø¨Á «È¢Å¢Â¨Äô (health science) À¡÷ò§¾¡õ.

«ýÒ¼ý,
þáÁ.¸¢.

14 comments:

Aruna Srinivasan said...

அறிவியல் சொற்களை மிக நன்றாக விளக்கியுள்ளீர்கள். மிக்க நன்றி. பேச்சு வழக்கில் இவற்றை உபயோகப்படுத்த முயற்சி செய்ய வேண்டும். ஆனால் எவ்வளவு தூரம் முடியும் என்று தெரியவில்லை. குறைந்த பட்சம் எழுதும்போதாவது இவற்றை உபயோகிக்கலாம்.

ROSAVASANTH said...

அன்புள்ள இராம கி ஐயாவிற்கு, மீண்டும் ஒரு இந்த பதிவிற்கு தொடர்பில்லாத ஒரு கேள்வி. உடனே பதிலளிக்க தேவையில்லை. ஆனால் நேரமிருந்தால் பின்னர் இதை ஒரு பதிவாக அளித்தால் பயனுள்ளதாக இருக்கும்.

பாணிணி இலக்கணம் எழுதிய காலம் கிமு 500 இருக்கும், தொல்காப்பியம் இதற்கு முந்தயது என்று நினைக்கிறேன். பாணிணியிடம் தொல்காப்பியத்தின் தாக்கம் எந்த அளவு இருந்தது என்பது குறித்து எழுத முடியுமா? இது மட்டுமில்லாமல் பொதுவாக வடமொழி இலக்கணம் மற்றும் சொற்களில் தமிழின் தாக்கம் குறித்து எழுதினாலும் பயனுள்ளதாய் இருக்கும். முந்தய பதிவில் நீக்கள் குறிப்பிட்டது போல நாம் வடமொழிச்சொல் என்று நினைக்கும் பல சொற்கள் தமிழில் இருந்து வேர் கொண்டிருக்கிறது. உலக அளவில் பாணிணி குறித்து பேசும் யாரும் தொல்காப்பியம் குறித்து பேசி கேட்டதில்லை. இது குறித்து நீங்கள் (நேரம் இருக்கும் போது) எழுதினால் பயனுள்ளதாய் இருக்கும். மிகவும் நன்றி.

Thangamani said...

மிகவும் பயனுள்ள அருமையான பதிவு. பல சொற்களை அறிந்துகொண்டேன். ஏற்பாடு (எல்+படுதல்), இக்கு, கொழுமை, ஒக்கலை, சேமம் (சேமக்க்கலன் என்ற வார்த்தையை கண்டிருகிறேன்) இப்படி பல வார்த்தைகள். மேகலைக்கும் ஒக்கலைக்கும் ஏதேனும் மொழியளவில் தொடர்பு உள்ளதா?

இந்த 3 வது எண்ணைப்பற்றி நான் முன்பு நண்பர்களிடம் சொல்லமுயன்றபோது இந்த ஒக்கலை என்ற சொல் இல்லாமல் இடை, இடுப்பு என்று தவித்துக்கொண்டிருந்தேன்.


ரோசா வசந்த் கேட்டதுகுறித்து நீங்கள் எழுதினால் மிகவும் நல்லது.

மிக்க நன்றி!

meenamuthu said...

\\இந்த ஒக்கலையைத் தான் ஆங்கிலத்தில் கிப் என்கிறார்கள். இதை மறந்த காரணத்தால் hip, waist என இரண்டிற்குமே தமிழில் இடுப்பு என்று நிறையப் பேர் இப்பொழுது புழங்கிக் கொண்டு இருக்கிறார்கள்\\

உண்மைதான்..
சிலவாரங்களுக்கு முன் என் பெண்களுக்கும் எனக்கும் இதே குழப்பம் அவர்கள் என்னைக் கேட்க அதற்கு சரியான பதில் தெரியாமல் நானும்
குழம்பிக் கொண்டிருந்தேன்.இன்று இந்தப் பதிவைப் படித்ததும்தான் தெளிவாகியது!!

நிறைய தெறிந்து கொள்ள முடிந்தது.நன்றி.

அன்புடன்
மீனா.

வசந்தன்(Vasanthan) said...

மிகவும் பெறுமதியான பதிவு. நன்றி ஐயா.

பத்மா அர்விந்த் said...

அறிவியல் சொற்களுக்கான தமிழ் அகராதி உள்ளதா? இல்லை எனில் நீங்கள் ஏன் தயாரித்து இணையத்தில் வெளியிடக்கூடாது? என்னைப் போன்றவர்களுக்கு உதவியாக இருக்கும். நன்றி

நற்கீரன் said...

தேன் துளி கேட்ட கேள்வியே எனதும். நீங்கள் பரிந்துரைக்கும் அகராதி எதுவாக இருக்கும்? எங்கே பெறலாம்? நன்றி.

achimakan said...

தங்களது பதிவுகள் ஒவ்வொன்றும் மொழியறிவை ஊட்டுகின்றன.

சிறுவனாக இருந்த போது நுாலகத்தில் படித்த, பாவலரேறு பெருஞ்சித்திரனாரின் தென்மொழி தமிழ்ச்சிட்டு போன்ற தாளிகைகள் நினைவுக்கு வருகின்றன.

வளரும் இளைய தலைமுறைக்குப் பயன்படுமாறு தங்கள் ஆக்கங்களை நுால்வடிவில் வெளியிட வேண்டும்.

இரா. செல்வராசு (R.Selvaraj) said...

கொழுமை வளமிக்க ஒரு சொல்லாய் இருக்கிறது. புதிதாகக் கற்றுக் கொண்டேன். நன்றி. Risk-இக்கு என்பதும் எனக்குப் பிடித்திருக்கிறது. அறிவியற் சொற்களென்றில்லாமல் இதுபோன்ற பொதுவான அன்றாடம் பயன்படுகிற சொற்களுக்குச் சரியான தமிழ் வார்த்தைகளை நீங்கள் அறிமுகப் படுத்துவதே என்னை மிகவும் கவர்கிறது.

"கொழுமிச்சம்பழம்" கூடப் பார்க்க ஆரோக்கியமாகத் தான் இருக்கும். உறவுமுறைகளில் கணவரின் உடன்பிறந்தோரைக் கொழுநன் கொழுந்தி என்பதுவும் இந்த வேரில் இருந்து தான் வந்திருக்கிறதோ? (கொழுந்தனார், கொழுந்தியாள் என்று வழங்கப்படும்).

இராதாகிருஷ்ணன் said...
This comment has been removed by a blog administrator.
இராதாகிருஷ்ணன் said...

மீண்டும் இக்கட்டுரையைப் பதித்தமைக்கு நன்றி!

எற்பாடு என்பதையெல்லாம் விட்டுவிட்டு 'முற்பகல்', 'பிற்பகல்' என்று படுத்திவிட்டோமே! :-(

அருணா அவர்கள் சொல்வதுபோல் குறைந்தபட்சம் எழுத்திலாவது நல்ல தமிழ்ச் சொற்கள் புழங்கவேண்டும்.

ஒக்கலைக்கும் இடுப்புக்குமான படவிளக்கம் பின்வரும் சுட்டியிலுள்ள படம்-3ல் உள்ளது: http://cahe.nmsu.edu/pubs/_c/C-227.html

இராம.கி said...

அன்பிற்குரிய அருணா, ரோசா வசந்த், தங்கமணி, மீனா, வசந்தன், தேன்துளி, நற்கீரன், ஆச்சிமகன், செல்வராஜ், இராதாகிருஷ்ணன் ஆகியோருக்கு நன்றி.

அருணா:

சொற்களைப் புழங்குவது நம் கையில் இருக்கிறது. எழுத்தில் முதலில் புழங்கினால், தயக்கம் போய், பேச்சில் புழங்கத் தொடங்குவோம். தமிழில் ஏதொன்றையும் சொல்ல நம் இயலுமைகளைக் கூட்ட வேண்டும் என்பதே என் முயற்சி.

எல்லோரையும் கேட்டுக் கொள்வது அது தான்.

ரோசா வசந்த்:

பாணினி - தொல்காப்பியன் ஆகியோர் தாக்கங்கள் எழுதுவதற்கு இப்பொழுது முடியுமா என்று தெரியவில்லை. சில மாதங்கள் கூட ஆகலாம். ஆனால் கவனத்தில் வைத்துக் கொள்ளுகிறேன்.

தங்கமணி:

மேகலைக்கும் ஒக்கலைக்கும் தொடர்பு இருக்கிறது. மேகலையை ஒக்கலையில் தான் அணிகிறார்கள். மேகலையைச் சிறுமிகளுக்கு இந்தக் காலத்திலும் பச்சிளம் அகவையில் போடுகிறார்கள். ஆலிலை போல வெள்ளியிலோ, செம்பிலோ செய்து (செல்வம் இருந்தால் பொன்னில் செய்து) அணிவிக்கிறார்களே அது மேகலை தான் (ஆலிலைக் கொடி என்பார்கள்.). பின்னால் இரண்டு மூன்று அகவையில் இதைப் போடுவது இந்தக் காலத்தில் பெரிதும் அரிது. வெட்கப்பட்டுக் கொண்டு நிறுத்திவிடுவார்கள். அந்தக் காலத்தில் பெரிய அகவையிலும் போட்டிருந்தார்கள் போலிருக்கிறது. பெண் நாணும் போது (அதாவது ஒக்கலையின் அளவு சுருங்கி ஒடுங்கும் போது) மேகலை கழன்று விழுந்தது என்று சொல்லுவதும் இந்தப் பொருளில் தான். (இராதாகிருஷ்ணன் காட்டியிருந்த சுட்டியில் உள்ள படத்தைப் பார்த்தால் நான் சொல்லுவது புரியும்.)

இந்தக் கால ஒழுக்க நெறி (morality) யை வைத்துக் கொண்டு அந்தப் பழம்பெருங் கால ஒழுக்கங்களை அளவிடக் கூடாது. நமக்கு வியப்பாக இருக்கும். சங்க காலப் பெண்கள் தங்கள் மார்புகளில் கச்சை அணிந்திருக்கவில்லை. வெறுமே மார்புக் காம்புகளை மட்டுமே மறைத்திருந்தார்கள். மேகலை என்ற அணியும் இந்தக் காலத்தில் பொருளற்றுத் தான் தெரியும். மூக்குத்தி பொருளற்றுப் போனதில்லையா, அதுபோல.

மீனா:

ஒக்கலை என்ற சொல் மீண்டும் புழக்கத்திற்கு கொண்டு வரவேண்டிய சொல். இதுபோல உடலுறுப்புச் சொற்கள் பலவற்றைப் புழங்காது விட்டுத் தொலைத்திருக்கிறோம். கணுக்கால் என்பதில், கணுத்தல்/கணுக்குதல் என்றால் என்னவென்று நினைக்கிறீர்கள்? to connect. கண்ணுதல்>கணுத்தல். கண்ணுதலின் வல்லோசைச் சொல் கட்டுதல். அதனால் தான் மணிக் கட்டு. இங்கே மணி என்பது சிறிய என்று பொருள் தரும். எங்கெல்லோம் எலும்புகளின் connection இருக்கிறதோ அங்கெல்லாம் கணுத்தல்/ கட்டுதல் என்ற வினை வந்து சேரும். (கரும்பில் உள்ள கணுவும் இதே பொருள் தான்.) இந்தக் காலத்தில் to connect என்ற சொல்லிற்குத் தமிழில் என்ன என்று தேடிக் கொண்டிருக்கிறோம். தொடர்பு என்று மொண்ணையாகச் சொல்லிக் கொண்டிருக்கிறோம். தொடுவதல்லவா தொடர்பு? தொடுவதும் கணுக்குவதும் ஒன்றா? தொன்னையில் நெய்யை வைத்துக் கொண்டு தேடிக்கொண்டு இருந்தால் எப்படி?

தேன்துளி:

தமிழில் அருங்கலைச்சொல் அகரமுதலி (Dictionary of Technical Terms) என்று ப. அருளியார் தொகுத்து தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழகம் வெளிக் கொணர்ந்திருக்கிறது. நல்ல முயற்சி. அருளியாரில் இருந்து சில சொற்களில் நான் வேறுபடுவேன். இருந்தாலும் அந்த அகரமுதலியைக் கையில் வைத்திருப்பது தேவையானது.

ஆச்சிமகன்:

நூல்வடிவில் வரவேண்டும் என்று பலரும் சொல்லுகிறார்கள். அலுவற்பணி முடிந்து ஓய்வு பெறும் காலத்தில் தான் இது வாய்க்குமோ என்னவோ? அது இறையருள்.

செல்வராஜ்:

கொழுநன், கொழுந்தன், கொழுந்தியா என்பது கொள்ளுதல் என்ற வினையில் பிறந்தது. கணவன் என்பது கூட கொழுநன் என்பதில் இருந்து பிறந்தது தான். அடுத்த இடுகை உறவுகள் பற்றியது. அதில் நீங்கள் கேட்ட சொற்களைத் தொட்டுள்ளேன்.

இராதாகிருஷ்ணன்:

மலையாளத்தில் படிஞாயிறு என்கிறார்களே அது மேற்குத் திசையைக் குறிக்கும். எற்பாட்டிற்கும் அதை இணையாகச் சொல்லலாம்.

உங்கள் அருமையான யாக்கை நுட்பியல் (fabric technology) சுட்டிக்கு நன்றி. இது போன்ற தையல் துறைச் செய்திகள் தமிழில் தருவதில்லை. யாரும் எழுத மாட்டேன் என்கிறோம். துகில் நுட்பியல் (textile technology), பன்னல் நுட்பியல் (spinning technology), படிய நுட்பியல் (fashion technology), தோரணைகள்/ஒயில்கள் (styles) இவை பற்றியெல்லாம் தமிழில் எழுதினால் எவ்வளவு நன்றாக இருக்கும்? தமிழில் இதைப் பற்றியெல்லாம் எழுத முடியாது என்று சொல்லிவிடுவோமோ?

அன்புடன்,
இராம.கி.

ROSAVASANTH said...

நன்றி, ஒரு வேண்டுகோளாய் பார்வைக்கு வைத்திருக்கிறேன். எப்போது இயலுமோ அப்போது எழுதுங்கள். சில மாதங்கள் எடுத்துகொண்டாலும் நல்லதே!

ந.குணபாலன் said...
This comment has been removed by the author.