Wednesday, April 13, 2005

இன்று புதிதாய்ப் பிறந்தோம்

இன்று புதிதாய்ப் பிறந்தோம்

மேலே உள்ள சொலவடையை எழுத்தாளர் நா.பா தன் புதினம் ஒன்றில் (அது குறிஞ்சி மலரோ, பொன்விலங்கோ, எனக்கு இப்பொழுது நினைவுக்கு வரவில்லை) எழுதுவார். இந்தப் புதிதாய்ப் பிறக்கும் உணர்வு, பழையதையெல்லாம் அழித்துக் கழித்தபின் ஆர்வத்தோடு புதியதை எதிர்கொள்ளும் பாங்கு, நமக்கெல்லாம் மிகவும் தேவையான ஒரு பழக்கம். இந்த வாழ்வின் ஓட்டத்தில் விழுந்து எழுந்து, முக்கி முனகி, போராடித் தள்ளாடி, முன்வந்து நிற்கும் வேளையில் சோர்வு என்பது நம்மை அடைந்தாலும், மறுநாளைச் சந்திக்க வேண்டுமே என்னும் பொழுது இந்தப் புத்துணர்வு நமக்கு மிகத் தேவையாக இருக்கிறது.

சில குறிப்பிட்ட நாட்கள்- பொழுதுகள்- காலங்களில் இந்தப் புத்துணர்வைத் தூண்டுகிற நிகழ்வுகள் ஏற்படுவது உண்டு. அப்படி ஒரு நிகழ்வே ஆண்டுப் பிறப்பு. ஒரு பாவலன் சொன்னது போல், ஆண்டொன்று போனால் அகவை ஒன்றல்லவா போகிறது? வாழ்வில் எவ்வளவு கனவுகளைத் தேக்கி நாம் நனவாக்கத் துடிக்கிறோம்? இனி வரும் ஆண்டில் அதைச் செய்வோம், இதைச் செய்வோம் என்று உறுதி கொள்ளுகிறோம் அல்லவா? அந்த உறுதி இல்லையெனில் வாழ்வு ஏது?

உலகின் வெவ்வேறு பகுதிகளில் ஆண்டுப் பிறப்பு என்பது ஒரே காலத்தில் வருவது அல்ல. இது இடத்திற்கு இடம் மாறலாம்; ஏன் ஒரே நாட்டின் வரலாற்றில் காலத்துக்குக் காலம் கூட மாறலாம். ஆனாலும் ஆண்டுப் பிறப்பு என்பது அனைவரும் எதிர் நோக்குகின்ற ஒரு நிகழ்வு. பண்பாட்டுக் குழப்பத்தால் தமிழர்கள் இந்தக் காலத்தில் ஆங்கில ஆண்டுப் பிறப்பை மட்டுமே கொண்டாடுவது அதிகரித்தாலும், தமிழாண்டுப் பிறப்பை விழிவைத்து எதிர்கொள்ளுவோர் இன்னும் இருக்கிறார்கள்.

என்ன, திருப்பதியிலும், பழனியிலும், இன்னும் ஓராயிரம் கோயில்களிலும், இது போலக் கிறித்துவ தேவாலயங்களிலும், சனவரி முதல் நாளுக்குக் கூடும் கூட்டம் சித்திரை முதல் நாளுக்குக் கூடுமா என்பது அய்யம் தான். எந்தச் சமய நெறியாக இருந்தால் என்ன, தமிழனுக்கு உரிய சித்திரை நாளைக் கொண்டாட நம்மில் பலர், குறிப்பாக தமிங்கிலர் ஆகிப் போனவர்கள், ஏன் தயங்குகிறார்கள், வெட்கப் படுகிறார்கள்? இவர்கள் தனிப்பட்டுப் போனதாக உணர்கிறார்களோ? "உலகத்தோடு ஒட்ட ஒழுகல் என்பதன் பொருள் தம் தனித்தன்மையை இழப்பதுதானோ?" என்று ஒரோர் சமயம் உள்ளத்தை உறுத்துகிறது.

இருந்தாலும், விட்டகுறை தொட்ட குறை மறக்காத சில தமிழர்கள் சித்திரைத் திங்கள் பிறக்கும் நாளை ஆண்டுப் பிறப்பு என்று இன்னும் கொண்டாடிக் கொண்டுதான் இருக்கிறோம். அன்றைக்குக் கோயிலுக்கும், தேவாலயத்திற்கும், இன்னும் பள்ளிவாசலுக்கும் போய், "இறைவா, இந்த ஆண்டில் இன்னும் பல நல்ல செயல்களைச் செய்ய உறுதி கொடும் அய்யா" என்று வேண்டிக் கொள்ளுகிறோம். அன்று உறவினர்களையும், நண்பர்களையும் கூப்பிட்டு முகமன் கூறுகிறோம். வீட்டு வாசலில் கோலம் போடுகிறோம். மாந்தோரணம் கட்டுகிறோம். அந்த ஆண்டின் பெயரைக் கோலத்திற்கு அருகில் எழுதி வரவேற்கிறோம். வீட்டை முடிந்த வரையில் அழகு படுத்துகிறோம். (இந்த நாளில் தொலைக்காட்சிக்கு முன்னால் உட்கார்ந்து யாரோ ஒரு திரைப் படக் கலைஞனின் விடலைத் தனத்தை விழிநீர் தேங்க, வாய்நீர் வடியப் பார்த்து நேரத்தைக் கழிப்பது விழாவைச் சேர்ந்தது அல்ல; அது இன்னொரு வகை)

பனைவெல்லம் சேர்த்து, வேப்பம்பூப் பச்சடி வைக்கிறோம். ஒரு இனிப்பாவது அன்றையச் சமையலில் சேர்ந்து கொள்ளுகிறது. மறவாமல் அன்று பாயசம் வைக்கிறோம். முடிந்தால் ஒரு உளுந்து வடை. இன்னும் சிலர், குறிப்பாகத் தமிழகத் தென் மாவட்டத்தினர் காலையில் எழுந்தவுடன் பூசை அறைக்குப் போய் கண்ணாடி பார்க்கிறோம். பூசை வேளையில் புத்தாண்டிற்கான அஞ்சாங்கம் படிக்கிறோம். அந்த ஆண்டுப் பலன் என்று சொல்லப் பட்டதை அறிந்து கொள்ள முற்படுகிறோம். புத்தாடை, பூ, பழம் எனப் புதுக்கிட்டுப் பெரியவர்களிடம் வாழ்த்துப் பெறுகிறோம். ஊரெல்லாம் வலம் வந்து யாரைக் கண்டாலும் வழுத்திக் கொள்ளுகிறோம். இப்படி எல்லாம் செய்து "செல்வம் நம் வாழ்வில் பொங்கி வழியட்டும்" என்று இறையை வேண்டிக் கொள்ளுகிறோம்..

மேலே சொன்னதை ஒரு சில மாற்றங்களோடு இசுலாமியர், கிறித்தவர், சிவநெறியாளர், விண்ணெறியாளர், சமணர், புத்தர் என எல்லாச் சமயத்தினரும் செய்ய முடியும். ஏனென்றால், ஆண்டுப் பிறப்பு என்பது குமுகாயப் பழக்கம், பண்பாட்டுப் பழக்கம். அதைச் சமயம் தடுக்க இயலாது. ஓணம் என்று வந்தால் சேரலர் அனைவரும் அதைக் கொண்டாடவில்லையா? இதில் சமயம் குறுக்கே வருகிறதோ? இல்லையே! இந்த விவரம் கெட்ட ஆங்கில அடிமைத்தனம் ஊடே வந்து தடுக்கிறதோ? இல்லையே! ஏனென்றால், தமிழர் எல்லோருக்கும் உரியது தமிழ் ஆண்டுப் பிறப்பு அல்லவா?

இந்த நல்ல பழக்கத்தைக் கைக்கொள்ளும் நிலையில் நம் சிறார்கள் கேட்கும் கேள்விகளுக்கு நாம் விடை கூறக் கடமைப் பட்டுள்ளோம்.

தமிழ் ஆண்டுக் கணக்கு எப்படி வந்தது?

அந்தச் சிறார்களை எண்ணி, அவர்களுக்கு விடை சொல்லும் வகையால், கொஞ்சம் ஆழ்ந்து பார்ப்போமா? காலங்கள் என்ற இந்தத் தொடரின் முதல் விளக்கம்.

நம்மைச் சுற்றி எங்கும் நீக்கமற நிறைந்திருக்கும் இந்தப் பேரண்டத்தில் எங்கோ ஒரு மூலையில், ஒரு பால்வழி மண்டலத்தில் நம் சூரியக் குடும்பம் இருக்கிறது. இந்தச் சூரியக் குடும்பத்தில் முதல் கோளாக அறிவனும் (புதனும்), இரண்டாவது கோளாக வெள்ளியும், மூன்றாவது கோளாக நாம் வாழும் புவியும், நான்காவது கோளாக செவ்வாயும், 5-வது கோளாக வியாழனும், 6வது கோளாக காரி (சனி)யும் வலம் வருகின்றன. மூன்றாவது கோளான புவி தன்னைத் தானே உருட்டிக் கொண்டும், அதே பொழுது, சூரியனை வலமாகவும் வருகிறது. புவி தன்னை உருட்டிக் கொள்ளூம் நேரம் ஒரு நாள் என்றும், சூரியனை வலைத்து வரும் காலம் ஒரு ஆண்டு என்றும் அடிப்படையாகக் கொள்ளப் பட்டு மற்ற காலங்கள் இந்தப் பின்னணியிலேயே கணக்கிடப் படுகின்றன.

இந்த உருட்டுதலும், வலைத்தலும் ஆகிய இரண்டு அடிப்படைகளுக்கும் இடையே ஒரு ஒருப்பாடு உண்டு என்பதை நாம் எல்லோரும் அறிவோம். அதாவது சூரியனை வலைத்து வரும் ஒராண்டு வலயத்திற்குள், கிட்டத் தட்ட 365 1/4 தன்னுருட்டுகளையும் புவி செய்து விடுகிறது. ஒவ்வொரு தன்னுருட்டும் ஒரு நாளாகிறது.

இந்தத் தன்னுருட்டை முதற்கால மாந்தர்கள் எப்படி அறிந்திருக்க முடியும்?

கீழது மேலாய், மேலது கீழாய் இருளும் ஒளியும் மாறி மாறி வருகின்றன. பகலில் வெளிச்சம் கண்ணைக் கூச வைக்கிறது. எவ்வளவுதான் முயற்சித்தாலும், கண நேரத்திற்கு மேல் சூரியனைப் பார்க்க முடிவதில்லை. மாறாக, இருளில் வானம் கண் சிமிட்டுகிறது. குளிர்ந்த நிலா வானத்தில் எழுந்து குறிப்பிட்ட நேரம் பயணம் செய்து பின் மறைவதைப் பார்க்க முடிகிறது. அப்பொழுது மங்கிய ஒளி கலந்த இருள் என்பது மாந்தனின் அறிவு ஆர்வத்தைத் தூண்டுகிறது. பகல் என்பது பசிக்கு என்று ஆனவுடன், இருள் என்பது ஓய்வுக்கும் ஆய்வுக்கும் என்று ஆகிவிடுகிறது.

நாள் என்பது முதலில் இருளையே குறித்தது. இருளில் தொடங்கிப் பின் ஒளி வந்து மறுபடியும் இருள் வரும் வரை ஆகும் பொழுதை ஒரு நாள் என்று பழந்தமிழர் அழைத்தனர். ஒவ்வொரு இருட் பொழுதிலும் நிலவைப் பார்க்கும் போது அதன் பின் புலம் மாறுவதை தமிழ் மாந்தன் பார்த்தான். நிலவுக்குப் பின்னே இருக்கின்ற, கண்சிமிட்டி மின்னிடுகிற, ஒளிக் கூட்டத்தில் தனக்குத் தெரிந்த உருவகங்களை இவன் பார்த்தான். மின்னுவதை மீன் என்றே பழந்தமிழன் குறிப்பிட்டான்.

ஒரு மீன் வளைந்த முடப் பனையாகத் தெரிந்தது; இன்னொன்று எரியும் தழலாகத் தெரிந்தது; இன்னும் ஒன்று நீர் நிறைந்த குளமாகத் தெரிந்தது. இப்படியே இருபத்தெட்டுப் பின்புலங்களை (மீன்களை) அவனால் அடையாளம் காட்ட முடிந்தது. மீண்டும் மீண்டும் இந்தப் பின்புலங்கள் புவியைச் சுற்றுவதாகக் காட்சியளித்தன. எப்படி ஒடும் ஆற்றில் படகு போகும் போது இரு கரையிலும் இருக்கும் காட்சிகள் மறைந்து கொண்டே வந்து படகு நிலையாய் இருப்பது போல் தோற்றம் அளித்தாலும், "கரைகள் நிலையானவை; படகுதான் நகருகிறது" என்று பட்டறிந்து உணரமுடிந்ததோ (கணியர் ஆரிய பட்டா தன் வானியல் நூலில் இந்த உவமையைக் கூறுவார்), அது போல "புவி தன்னை உருட்டிக் கொள்ளுகிறது; இந்தப் பின் புலங்கள் நிலையாக உள்ளன" என்று பழந்தமிழ் மாந்தன் புரிந்து உணர்ந்தான்.

உண்மையில் இந்தப் பின் புலங்கள் அவனுக்கு நாள்காட்டும் அடையாளங்களாக நாள்காட்டுகளாக, நாள் மீன்களாகத் தெரிந்தன. (இந்த நாள்காட்டு வட நாட்டுப் பலுக்கு முறையால் நாள்காட்டு> நாட்காட்டு> நாட்காத்து> நாட்காத்தம்> நாக்கத்தம்> நாக்ஷத்தம்> நாக்ஷத்ரம்> நக்ஷத்ரம் என வடமொழியில் திரிந்தது. நாம் மீண்டும் தமிழ் ஒலிப் படுத்தி நட்சத்ரம் என வழங்குகிறோம்; இதற்கு நாள்காட்டையே வைத்துக் கொள்ளலாம்.) அந்தக் காலத்துக் கல்வெட்டுக்களில் நாள்காட்டு அடையாளமே குறிக்கப் பட்டு இருக்கும். இன்று இருப்பது போல திகதிகள் குறிப்பது வழக்கம் இல்லை.

இந்த 28 நாட்களில் நிலவு ஓளி மிகுந்து நிறைவடைந்து பூரித்தும் (பூரணித்தல்> பூரணம்> பௌரணம்> பௌர்ணமை இப்படி தமிழில் இருந்து வடமொழி போகும்.), பின் ஒளி குறைந்து, கருத்தும், அமைந்தும் (அமைவாதல்> அமைவாதை> அமவாதை> அமவாசை> அமாவாசை, மறுபடியும் வடமொழி மாற்றம்) நிலவு போகும் போக்கை தமிழ் மாந்தன் பார்த்தான். சொக்கிச் சொலித்து ஒளி கொடுக்கும் பக்கம் (சொக்கொளிப் பக்கம்>சொக்கிள பக்கம்>சொக்கில பக்கம்>சுக்ல பக்கம்> சுக்ல பக்ஷம்) 14 நாளும், கருத்த பக்கம் (கருவின பக்கம்>கருயின பக்கம்>கருஷ்ண பக்கம்>க்ருஷ்ண பக்ஷம்) 14 நாளும் ஆக, இரண்டு பக்கம் சேர்ந்தது ஒரு மாதம் என்றும் கொள்ள நேர்ந்தது. (இதை இரு பதினைந்து நாட்கள் எனக் கொண்டது இன்னும் பல காலம் சென்று ஏற்பட்ட பழக்கம்.) மதி என்னும் நிலவுதான் காலத்தை மதிக்கச் செய்தது. மாதம் என்ற சொல் பிறந்தது. மதித்தல் என்பது அளவு கொள்ளுதல் என்றே தமிழில் பொருள்படும். அதே போல மானித்தல் என்பதும் அளவிடுவதுதான். இந்தையிரோப்பிய மொழிகளில் மானித்தல்>month, monAt என்று ஆகும்.

நாளாவட்டத்தில் 28 நாள்காட்டுகளில் ஒரு நாள்காட்டை முற்றிலும் தெளிவாக அடையாளம் காண முடியாத நிலையில் 27 நாள்காட்டுகளே மிஞ்சின. (இவற்றின் தமிழ்ப் பெயர்களை இங்கே நான் விவரிக்கவில்லை.) ஒவ்வொரு நாள்காட்டிலும் பல விண்மீன் கூட்டங்கள் அடையாளம் காணப் பட்டன. இரவெல்லாம் வான வேடிக்கை தானே? பின் கூர்த்த மதியால் அடையாளம் காண்பது சரவலா என்ன? ஒரு வியப்பைப் பார்த்தீர்களா? பார்ப்பது மதியை (நிலவை); அதை மதிப்பது (அளவிடுவது) மதியால் (அறிவு, மூளை). இயல் மொழியான தமிழில் இப்படித்தான் சொற்கள் ஏற்படுகின்றன.

இந்த விண்மீன் கூட்டங்களை வெறொரு வகையில் உருவகப் படுத்தித் தொகுதிகளாக்கிய போது அவை 12 தொகுதிகளாகத் தெரிந்தன. அவை இரைந்து கிடந்த பக்குவம் இரைதி = தொகுதி> இராதி> இராசி ஆனது. ஒவ்வொரு இராசியும் வீடு என்றே பழைய மாந்தன் சொல்ல முற்பட்டான். பகலெல்லாம் பசிக்கு அலைந்து இரவில் இல் தேடி, தான் வருவது போல், இந்த விண்மீன் கூட்டங்களும் இரவில் வீடு தேடி வந்ததாக உருவகித்து அவை இருக்கும் அண்டவெளியை வீடு என்றே உரைத்தான். 12 தொகுதிகளும் 12 வீடுகளாகக் கொள்ளப் பெற்றன. ஒரு வீடு ஆடாக (மேழம்) த் தெரிந்தது; இன்னொன்று மாடாக (விடை)த் தெரிந்தது; மேலும் ஒன்று நண்டாகத் தெரிந்தது; இன்னும் மற்றொன்று சுறாமீனாகத் தெரிந்தது. இப்படி மேழம், விடை, ஆடவை, கடகம், மடங்கல், கன்னி, துலை, நளி, சிலை, சுறவம், கும்பம், மீனம் எனப் பன்னிரண்டு இராசிகளுக்கு பழைய தமிழன் பெயரிட்டான். இதன் விளக்கங்களைப் பின்னர் ஒரு முறை பார்ப்போம்.

மேலே சொன்ன 27 நாள்காட்டுக்களை இன்னும் பகுத்து 108 பாதங்கள் (பகுத்தது பாதம்) எனக் கொண்ட தமிழன், 12 வீடுகளையும் 108 பாதங்களோடு ஒப்பிட்டு ஒரு வீட்டில் ஒன்பது பாதம் என்று ஈவு வகுத்தான். இந்த வீடுகளும் நாள்காட்டுகளும், பாதங்களும் நம் புவியில் இருந்து பார்க்கும் விண்வெளியைப் புலம் பிரிக்கின்ற அடையாளங்கள். வடக்கு, கிழக்கு, தெற்கு, மேற்கு என்று புவியில் திசை பார்க்கிறோம் இல்லையா, அதைப் போன்ற விண்வெளியில் திசை காட்டும் அடையாளங்களே இந்த நாள்காட்டுகளும், இராசிகளும், பாதங்களும் என உணர வேண்டும். சூரியன் சித்திரையில் உதித்தது என்றால், சித்திரை நாண்மீன் இருக்கும் திசையில் காட்சியளித்தது என்று பொருள்.

இனி அடுத்து கோள்மீன்களுக்கு வருவோம். விண்மீன்களைப் போலவே ஒளிகொண்டு ஆனால் பெரிதாக ஊடகம் இல்லாது வெறும் கண்ணுக்கே கோளமாகக் காட்சியளித்தவை கோள்மீன்களாயின. அவைதான் அறிவன், வெள்ளி, செவ்வாய், வியாழன், காரி என்று அழைக்கப் பட்டன. அறிவன் கோள் பச்சைக் கூறு கலந்து தெரிந்தது. வெள்ளி வெள்ளையாகக் காட்சியளித்தது. செவ்வாய் செம்மை நிறத்தோடும், வியன்று அகலமான வியாழன் பொன் நிறத்தோடும், காரி கரு நிறத்தோடும் காட்சியளித்தன. இவற்றோடு கண்ணைக் கூசும் அளவு ஒளிறுகிற ஞாயிறும் (யா = இருள்; யா+இறு > ஞா+யிறு = இருளை இறுக்கும் கோள்; சுள் என்று எரிக்கும் கோள் சூரியன்) ஒரு கோளாகக் கொள்ளப் பெற்றது.

உண்மையில் புவியும் மற்ற கோள்களும் சூரியனையே சுற்றிவந்தாலும், புவியையே ஞாயிறும் மற்ற கோள்களும் சுற்றிவருவதாக நமக்குத் தோற்றம் அளிக்கின்றன. புவியில் இருந்து ஞாயிறு தவறிய மற்ற கோள்களைப் பார்த்தால் அவையெல்லாம் கிட்டத்தட்ட ஒரே தளத்தில் புவியைச் சுற்றி வருவதாகவே நமக்குத் தோற்றம் அளிக்கின்றன. இந்தச் சுற்றுத் தளமும் புவியின் நடுக் கோட்டுத் தளமும் ஒன்றாகவே நம் கண்ணுக்குத் தென்படுகின்றன.

இது தவிர புவியைச் சுற்றுவதாகத் தோற்றம் அளிக்கும் ஞாயிற்றின் சுற்றுத்தளம் புவிநடுக் கோட்டுத் தளத்தை 23.5 பாகையில் விழுந்து வெட்டுவது போலக் காட்சியளிக்கிறது. இந்த இரு தளங்களின் வெட்டு விழுப்பை "விழு" என்றே தமிழில் சொல்ல முற்பட்டனர். ஒரு வட்டத்தளம் இன்னொரு வட்டத்தளத்தை இரண்டு இடங்களில் அல்லவா வெட்டவேண்டும்? அதையொட்டி இரண்டு விழுக்கள் நமக்குப் புரிபடுகின்றன. ஒன்று மேழ விழு மற்றொன்று துலை விழு. அதாவது ஒரு விழு மேழ இராசி இருக்கும் திசையிலும், மற்றொன்று துலை இராசி இருக்கும் திசையிலும் காட்சியளித்தன.

புவி சூரியனைச் சுற்றுவது தான் உண்மைநிலை என்றாலும் சூரியன் புவியைச் சுற்றுவது போலத் தோற்றம் அளிக்கிறது என்று சொன்னோம் அல்லவா? அந்தப் புவியின் வலயமும் நேர் வட்ட வலயம் அல்ல. அது ஒரு நீள் வட்ட வலயம். இந்த நீள்வட்ட வலயத்தில் தான் புவி 365 1/4 நாளில் சூரியனைச் சுற்றி வருகிறது. அதில் வலயத்தில் ஓவ்வொரு சிறுபகுதியும் ஒரு நாளைக் குறிக்கும். ஒவ்வொரு நாள்பகுதியிலும் புவி வரும் போது, புவிக்கும், சூரியனுக்கும் இடையே உள்ள தொலைவைப் பொறுத்தே நாம் வெப்பத்தைப் பெறுகிறோம். அந்த நீள் வட்டத்தில் சூரியனுக்கு மிக அருகில் வரும் நாள் கோடை முடங்கல் (summer solstice) என்றும் சூரியனுக்கு மிகத் தொலைவில் இருக்கும் நாள் பனி முடங்கல் (winter solstice) என்றும் சொல்லப் பெறும்.

இரண்டு விழுக்களும், இரண்டு முடங்கலும் ஒன்றிற்கொன்று தொடர்பு கொண்டவை. இந்தப் புவி சுற்றும் வலயத்தில் மேழ விழுவும், துலை விழுவும் ஆன இரு புள்ளிகள் ஒன்றிற்கொன்று எதிரும் புதிரும் ஆனவை. அதே போல கோடை முடங்கலும், பனி முடங்கலும் ஆன இரு புள்ளிகள் எதிரும் புதிரும் ஆனவை. அதே பொழுது, முடங்கலும் விழுவும் 90 பாகைப் பிரிவைக் கொண்டவை. பனி முடங்கலில் தொடங்கிப் பார்த்தால், மேழ விழு 90 பாகை தள்ளியிருக்கும். அதனின்றும் 90 பாகையில் கோடை முடங்கல் இருக்கும். அதனின்றும் 90 பாகையில் துலைவிழு இருக்கும். முடிவில் 360 பாகை கடந்த பின் மீண்டும் பனி முடங்கல் வந்து சேரும்.

இந்தப் புவி வலயத்திற்கு தொடக்கம் என்று ஏதேனும் இருக்க முடியாது அல்லவா? ஆனாலும், தொடக்கம் ஒன்று வேண்டும் என்று மனித மனம் கேட்கிறதே? இங்குதான் பண்பாடு, பழக்கம் என்று ஒன்று வருகிறது. பனி முடங்கலில் தொடங்குவது மேல்நாட்டு முறை, பழக்கம். பனி முடங்கல் சனவரிக்கு அருகில் ஏற்படுகிறது.

மேழ விழுவில் தொடங்குவது தமிழர் முறை, பழக்கம். (இந்தியாவின் பல மாநிலங்களின் முறையும் கூட இது தான்). இன்னொரு வகையில் துலைவிழுவில் தொடங்கும் முறை சேரலத்தின் ஒரு பகுதியில் இருந்தது. அதை வேறொரு முறை பார்ப்போம்.

மேழம் (=மேடம்>மேஷம்) என்பது ஆடு என்றும் கூறப் படும். ஆட்டின் பருவம் ஆட்டை. நாம் பார்க்கும் முறையில் வலயத்தின் தொடக்கம் ஆட்டை என்பதால் வலயமே ஆட்டை ஆயிற்று. மூக்கொலி நுழைந்து ஆண்டும் ஆயிற்று.

மேஷாதி என்று வடமொழியில் ஒலி பெயர்ப்பர்.

இன்றைக்குச் சோதிடம் என்று சொல்லப் படும் சோதியம்(>சோதிஷம்>சோதிடம் = சோதி தரும் ஒளி மீன்களை வைத்து எதிர்காலம் கணிக்கும் இயல் = அதாவது கணியம்)

சோதியம் வானவியல், கணிப்பியல் என்று இரண்டாகப் பிரிந்தது. நாம் கணிப்பியலுக்குள் நாம் செல்லவில்லை. அந்தக் கால வானவியலை அறிய வேண்டுமானால் தமிழ்க் கணியத்தை அறியத்தான் வேண்டும்.

சரி! தமிழ் ஆண்டுப் பிறப்பு மேழவிழுவை ஒட்டி என்றால் அது மார்ச்சு 21ம் நாளை ஒட்டி அல்லவா வர வேண்டும்? ஏப்ரல் 14-ல் சொல்லிவைத்தாற் போல் ஒரே நாளாக எப்படி வருகிறது? இதை அடுத்தடுத்த பகுதிகளில் பார்க்கலாம்.

இந்த விளக்கத்தை முடிப்பதற்கு முன் பாவலரேறு பெருஞ் சித்திரனாரின் ஒரு பாடல். இது எல்லா விழாக்களுக்கும் பொருந்தும்.
----------------------------------------------------
நகையாகின்றே!
இது கொல் விழவே; நகையா கின்றே!
புதுமடிக் கலிங்கங் கதுமத் தாங்கி
உழுந்தின் கொழுமாப் புழுவை முக்கிப்
பயறு தலைப்பெய்த பாஅல் மிதவை
வயிறு முகந் தெரிய மாந்தி உயிர்ப்பறும்
அரம்ப மாக்கள் ஆடும்
உரந்தவிர் நாளின் ஒழுகிலா நிகழ்வே!

- நூறாசிரியம் - 20

பொழிப்பு:

இதுவோ விழா எனப் பெறுவது; நகை விளைகின்றது. புதிய மடியுடைய மெல்லுடையைப் பெருமையுடன் உடுத்து, உழுந்தினது கொழுவிய மாவினால் செய்த புழையுடைய பண்ணியத்தை முச்சு முட்ட உண்டு, பயறு பெரும்பான்மையுங் கலந்த பால் சேர்ந்த கும்மாயத்தை, வயிற்றின் முக முழுதும் எழுந்து தோன்றும் படி ஆர வுண்டு, செயலற்றுத் திரிதரும் விலங்கு போல்வார் ஆடிக் களிக்கும், அறிவு விலக்கப் பெற்ற முறையிலாத செயலே!

விரிப்பு:

இப்பாடல் புறம்.

புதிய உடையைப் பெருமையுடன் உடுப்பதுவும், பல பண்ணியங்களை வயிறு நிறையும் படி மாந்திச் செயலிலாது விலங்கு போல ஆரவாரத்தோடு ஆடிக் களிப்பதுவும் ஆகிய அறிவு தவிர்க்கப் பெற்ற முறையிலாதா இச் செயல் நகைப்பிற்குரியது ஆகும் அன்றி விழா எனப்படுவது ஆகாது என வலியுறுத்திப் பேசுவதாகும் இப்பாட்டு.

விழா என்று பொதுவிற் குறித்தமையான் குல சமய விலக்கின்றி நடைபெறும் எல்லா விழாக்களுக்கும் பொருந்துவதாகும் இக்கருத்து.

விழா உயர்ந்த நோக்கமும் பொதுமைப் பண்பும் மக்களிடத்துப் பரவ வேண்டி அமையப் பெறுவதாகும். அவையன்றி உடுப்பதும் உண்பதும் ஆரவாரித்தலும் செயலற்றுத் திரிதலும் ஆகிய தாழ்வும், தந்நலமும் மிக்க நோக்கம் கொண்டு விளங்கும் விழாக்கள், முறையில்லாத விலங்குச் செயல்களேயாம் என்று தெருட்டிக் கூறுவதாகும் இப்பாட்டு.

இது புறத்திணையும் பொருண்மொழிக் காஞ்சி என் துறையுமாகும்.

-----------------------------------------------------

என்ன பார்க்கிறீர்கள்?

ஆரவாரம் தகாது என்று பாவலர் ஏறு சொல்லவில்லை. உயர்ந்த நோக்கமும் பொதுமைப் பண்பும் கூடவே இருக்க வேண்டும் என்று தான் சொல்லுகிறார். ஆண்டுப் பிறப்பு என்பது அப்படி உள்ள ஒரு விழா தான்.

பிறக்கும் தமிழ்ப் புத்தாண்டில் எல்லா நலன்களும் பெற்றுச் சிறக்க என் வாழ்த்துக்கள்.

அன்புடன்,
இராம.கி.

In TSCII:

þýÚ Ò¾¢¾¡öô À¢È󧾡õ

§Á§Ä ¯ûÇ ¦º¡ÄŨ¼¨Â ±Øò¾¡Ç÷ ¿¡.À¡ ¾ý Ò¾¢Éõ ´ýÈ¢ø («Ð ÌȢﺢ Áħá, ¦À¡ýÅ¢Äí§¸¡, ±ÉìÌ þô¦À¡ØÐ ¿¢¨É×ìÌ ÅÃÅ¢ø¨Ä) ±ØÐÅ¡÷. þó¾ô Ò¾¢¾¡öô À¢ÈìÌõ ¯½÷×, À¨Æ¨¾¦ÂøÄ¡õ «Æ¢òÐì ¸Æ¢ò¾À¢ý ¬÷Åò§¾¡Î Ò¾¢Â¨¾ ±¾¢÷¦¸¡ûÙõ À¡íÌ, ¿Á즸øÄ¡õ Á¢¸×õ §¾¨ÅÂ¡É ´Õ ÀÆì¸õ. þó¾ Å¡úÅ¢ý µð¼ò¾¢ø Å¢ØóÐ ±ØóÐ, Ó츢 Óɸ¢, §À¡Ã¡Êò ¾ûÇ¡Ê, ÓýÅóÐ ¿¢üÌõ §Å¨Ç¢ø §º¡÷× ±ýÀÐ ¿õ¨Á «¨¼ó¾¡Öõ, ÁÚ¿¡¨Çî ºó¾¢ì¸ §ÅñΧÁ ±ýÛõ ¦À¡ØÐ þó¾ô Òòн÷× ¿ÁìÌ Á¢¸ò §¾¨Å¡¸ þÕ츢ÈÐ.

º¢Ä ÌÈ¢ôÀ¢ð¼ ¿¡ð¸û- ¦À¡Øиû- ¸¡Äí¸Ç¢ø þó¾ô Òòн÷¨Åò àñθ¢È ¿¢¸ú׸û ²üÀÎÅÐ ¯ñÎ. «ôÀÊ ´Õ ¿¢¸ú§Å ¬ñÎô À¢ÈôÒ. ´Õ À¡ÅÄý ¦º¡ýÉÐ §À¡ø, ¬ñ¦¼¡ýÚ §À¡É¡ø «¸¨Å ´ýÈøÄÅ¡ §À¡¸¢ÈÐ? Å¡úÅ¢ø ±ùÅÇ× ¸É׸¨Çò §¾ì¸¢ ¿¡õ ¿ÉÅ¡ì¸ò ÐÊ츢§È¡õ? þÉ¢ ÅÕõ ¬ñÊø «¨¾î ¦ºö§Å¡õ, þ¨¾î ¦ºö§Å¡õ ±ýÚ ¯Ú¾¢ ¦¸¡ûÙ¸¢§È¡õ «øÄÅ¡? «ó¾ ¯Ú¾¢ þø¨Ä¦ÂÉ¢ø Å¡ú× ²Ð?

¯Ä¸¢ý ¦Åù§ÅÚ À̾¢¸Ç¢ø ¬ñÎô À¢ÈôÒ ±ýÀÐ ´§Ã ¸¡Äò¾¢ø ÅÕÅÐ «øÄ. þÐ þ¼ò¾¢üÌ þ¼õ Á¡ÈÄ¡õ; ²ý ´§Ã ¿¡ðÊý ÅÃÄ¡üÈ¢ø ¸¡ÄòÐìÌì ¸¡Äõ ܼ Á¡ÈÄ¡õ. ¬É¡Öõ ¬ñÎô À¢ÈôÒ ±ýÀÐ «¨ÉÅÕõ ±¾¢÷ §¿¡ì̸¢ýÈ ´Õ ¿¢¸ú×. ÀñÀ¡ðÎì ÌÆôÀò¾¡ø ¾Á¢Æ÷¸û þó¾ì ¸¡Äò¾¢ø ¬í¸¢Ä ¬ñÎô À¢Èô¨À ÁðΧÁ ¦¸¡ñ¼¡ÎÅÐ «¾¢¸Ã¢ò¾¡Öõ, ¾Á¢Æ¡ñÎô À¢Èô¨À ŢƢ¨ÅòÐ ±¾¢÷¦¸¡û٧š÷ þýÛõ þÕ츢ȡ÷¸û.

±ýÉ, ¾¢ÕôÀ¾¢Â¢Öõ, ÀÆɢ¢Öõ, þýÛõ µÃ¡Â¢Ãõ §¸¡Â¢ø¸Ç¢Öõ, þÐ §À¡Äì ¸¢È¢òÐÅ §¾Å¡ÄÂí¸Ç¢Öõ, ºÉÅâ Ó¾ø ¿¡ÙìÌì ÜÎõ Üð¼õ º¢ò¾¢¨Ã Ó¾ø ¿¡ÙìÌì ÜÎÁ¡ ±ýÀÐ «öÂõ ¾¡ý. ±ó¾î ºÁ ¦¿È¢Â¡¸ þÕó¾¡ø ±ýÉ, ¾Á¢ÆÛìÌ ¯Ã¢Â º¢ò¾¢¨Ã ¿¡¨Çì ¦¸¡ñ¼¡¼ ¿õÁ¢ø ÀÄ÷, ÌÈ¢ôÀ¡¸ ¾Á¢í¸¢Ä÷ ¬¸¢ô §À¡ÉÅ÷¸û, ²ý ¾Âí̸¢È¡÷¸û, ¦Åð¸ô Àθ¢È¡÷¸û? þÅ÷¸û ¾É¢ôÀðÎô §À¡É¾¡¸ ¯½÷¸¢È¡÷¸§Ç¡? "¯Ä¸ò§¾¡Î ´ð¼ ´Ø¸ø ±ýÀ¾ý ¦À¡Õû ¾õ ¾É¢ò¾ý¨Á¨Â þÆôÀо¡§É¡?" ±ýÚ ´§Ã¡÷ ºÁÂõ ¯ûÇò¨¾ ¯Úòи¢ÈÐ.

þÕó¾¡Öõ, Å¢ð¼Ì¨È ¦¾¡ð¼ Ì¨È ÁÈ측¾ º¢Ä ¾Á¢Æ÷¸û º¢ò¾¢¨Ãò ¾¢í¸û À¢ÈìÌõ ¿¡¨Ç ¬ñÎô À¢ÈôÒ ±ýÚ þýÛõ ¦¸¡ñ¼¡Êì ¦¸¡ñξ¡ý þÕ츢§È¡õ. «ý¨ÈìÌì §¸¡Â¢ÖìÌõ, §¾Å¡ÄÂò¾¢üÌõ, þýÛõ ÀûǢšºÖìÌõ §À¡ö, "þ¨ÈÅ¡, þó¾ ¬ñÊø þýÛõ ÀÄ ¿øÄ ¦ºÂø¸¨Çî ¦ºö ¯Ú¾¢ ¦¸¡Îõ «ö¡" ±ýÚ §ÅñÊì ¦¸¡ûÙ¸¢§È¡õ. «ýÚ ¯ÈÅ¢É÷¸¨ÇÔõ, ¿ñÀ÷¸¨ÇÔõ ÜôÀ¢ðÎ Ó¸Áý ÜÚ¸¢§È¡õ. Å£ðÎ Å¡ºÄ¢ø §¸¡Äõ §À¡Î¸¢§È¡õ. Á¡ó§¾¡Ã½õ ¸ðθ¢§È¡õ. «ó¾ ¬ñÊý ¦À¨Ãì §¸¡Äò¾¢üÌ «Õ¸¢ø ±Ø¾¢ ÅçÅü¸¢§È¡õ. ţ𨼠ÓÊó¾ Ũâø «ÆÌ ÀÎòи¢§È¡õ. (þó¾ ¿¡Ç¢ø ¦¾¡¨Ä측ðº¢ìÌ ÓýÉ¡ø ¯ð¸¡÷óР¡§Ã¡ ´Õ ¾¢¨Ãô À¼ì ¸¨Ä»É¢ý Å¢¼¨Äò ¾Éò¨¾ ŢƢ¿£÷ §¾í¸, Å¡ö¿£÷ ÅÊÂô À¡÷òÐ §¿Ãò¨¾ì ¸Æ¢ôÀРŢơ¨Åî §º÷ó¾Ð «øÄ; «Ð þý¦É¡Õ Ũ¸)

À¨É¦ÅøÄõ §º÷òÐ, §ÅôÀõâô ÀîºÊ ¨Å츢§È¡õ. ´Õ þÉ¢ôÀ¡ÅÐ «ý¨ÈÂî º¨ÁÂÄ¢ø §º÷óÐ ¦¸¡ûÙ¸¢ÈÐ. ÁÈÅ¡Áø «ýÚ À¡Âºõ ¨Å츢§È¡õ. ÓÊó¾¡ø ´Õ ¯ÙóРŨ¼. þýÛõ º¢Ä÷, ÌÈ¢ôÀ¡¸ò ¾Á¢Æ¸ò ¦¾ý Á¡Åð¼ò¾¢É÷ ¸¡¨Ä¢ø ±Øó¾×¼ý ⨺ «¨ÈìÌô §À¡ö ¸ñ½¡Ê À¡÷츢§È¡õ. ⨺ §Å¨Ç¢ø Òò¾¡ñÊü¸¡É «ïº¡í¸õ ÀÊ츢§È¡õ. «ó¾ ¬ñÎô ÀÄý ±ýÚ ¦º¡øÄô À𼨾 «È¢óÐ ¦¸¡ûÇ ÓüÀθ¢§È¡õ. Òò¾¡¨¼, â, ÀÆõ ±Éô ÒÐ츢ðÎô ¦ÀâÂÅ÷¸Ç¢¼õ Å¡úòÐô ¦ÀÚ¸¢§È¡õ. °¦ÃøÄ¡õ ÅÄõ ÅóР¡¨Ãì ¸ñ¼¡Öõ ÅØò¾¢ì ¦¸¡ûÙ¸¢§È¡õ. þôÀÊ ±øÄ¡õ ¦ºöÐ "¦ºøÅõ ¿õ Å¡úÅ¢ø ¦À¡í¸¢ ÅÆ¢ÂðÎõ" ±ýÚ þ¨È¨Â §ÅñÊì ¦¸¡ûÙ¸¢§È¡õ..

§Á§Ä ¦º¡ýɨ¾ ´Õ º¢Ä Á¡üÈí¸§Ç¡Î þÍÄ¡Á¢Â÷, ¸¢È¢ò¾Å÷, º¢Å¦¿È¢Â¡Ç÷, Å¢ñ¦½È¢Â¡Ç÷, ºÁ½÷, Òò¾÷ ±É ±øÄ¡î ºÁÂò¾¢ÉÕõ ¦ºö ÓÊÔõ. ²¦ÉýÈ¡ø, ¬ñÎô À¢ÈôÒ ±ýÀÐ ÌÓ¸¡Âô ÀÆì¸õ, ÀñÀ¡ðÎô ÀÆì¸õ. «¨¾î ºÁÂõ ¾Îì¸ þÂÄ¡Ð. µ½õ ±ýÚ Åó¾¡ø §ºÃÄ÷ «¨ÉÅÕõ «¨¾ì ¦¸¡ñ¼¡¼Å¢ø¨Ä¡? þ¾¢ø ºÁÂõ ÌÚ째 ÅÕ¸¢È§¾¡? þø¨Ä§Â! þó¾ Å¢ÅÃõ ¦¸ð¼ ¬í¸¢Ä «Ê¨Áò¾Éõ °§¼ ÅóÐ ¾Î츢ȧ¾¡? þø¨Ä§Â! ²¦ÉýÈ¡ø, ¾Á¢Æ÷ ±ø§Ä¡ÕìÌõ ¯Ã¢ÂÐ ¾Á¢ú ¬ñÎô À¢ÈôÒ «øÄÅ¡?

þó¾ ¿øÄ ÀÆì¸ò¨¾ì ¨¸ì¦¸¡ûÙõ ¿¢¨Ä¢ø ¿õ º¢È¡÷¸û §¸ðÌõ §¸ûÅ¢¸ÙìÌ ¿¡õ Å¢¨¼ ÜÈì ¸¼¨Áô ÀðÎû§Ç¡õ.

¾Á¢ú ¬ñÎì ¸½ìÌ ±ôÀÊ Åó¾Ð?

«ó¾î º¢È¡÷¸¨Ç ±ñ½¢, «Å÷¸ÙìÌ Å¢¨¼ ¦º¡øÖõ Ũ¸Â¡ø, ¦¸¡ïºõ ¬úóÐ À¡÷ô§À¡Á¡? ¸¡Äí¸û ±ýÈ þó¾ò ¦¾¡¼Ã¢ý Ó¾ø Å¢Çì¸õ.

¿õ¨Áî ÍüÈ¢ ±íÌõ ¿£ì¸ÁÈ ¿¢¨Èó¾¢ÕìÌõ þó¾ô §ÀÃñ¼ò¾¢ø ±í§¸¡ ´Õ ã¨Ä¢ø, ´Õ À¡øÅÆ¢ Áñ¼Äò¾¢ø ¿õ ÝâÂì ÌÎõÀõ þÕ츢ÈÐ. þó¾î ÝâÂì ÌÎõÀò¾¢ø Ó¾ø §¸¡Ç¡¸ «È¢ÅÛõ (Ò¾Ûõ), þÃñ¼¡ÅÐ §¸¡Ç¡¸ ¦ÅûÇ¢Ôõ, ãýÈ¡ÅÐ §¸¡Ç¡¸ ¿¡õ Å¡Øõ ÒÅ¢Ôõ, ¿¡ý¸¡ÅÐ §¸¡Ç¡¸ ¦ºùÅ¡Ôõ, 5-ÅÐ §¸¡Ç¡¸ Ţ¡ÆÛõ, 6ÅÐ §¸¡Ç¡¸ ¸¡Ã¢ (ºÉ¢)Ôõ ÅÄõ ÅÕ¸¢ýÈÉ. ãýÈ¡ÅÐ §¸¡Ç¡É ÒÅ¢ ¾ý¨Éò ¾¡§É ¯ÕðÊì ¦¸¡ñÎõ, «§¾ ¦À¡ØÐ, Ý̢嬃 ÅÄÁ¡¸×õ ÅÕ¸¢ÈÐ. ÒÅ¢ ¾ý¨É ¯ÕðÊì ¦¸¡ûéõ §¿Ãõ ´Õ ¿¡û ±ýÚõ, ÝÃ¢Â¨É Å¨ÄòÐ ÅÕõ ¸¡Äõ ´Õ ¬ñÎ ±ýÚõ «ÊôÀ¨¼Â¡¸ì ¦¸¡ûÇô ÀðÎ ÁüÈ ¸¡Äí¸û þó¾ô À¢ýɽ¢Â¢§Ä§Â ¸½ì¸¢¼ô Àθ¢ýÈÉ.

þó¾ ¯ÕðξÖõ, ŨÄò¾Öõ ¬¸¢Â þÃñÎ «ÊôÀ¨¼¸ÙìÌõ þ¨¼§Â ´Õ ´ÕôÀ¡Î ¯ñÎ ±ýÀ¨¾ ¿¡õ ±ø§Ä¡Õõ «È¢§Å¡õ. «¾¡ÅÐ ÝÃ¢Â¨É Å¨ÄòÐ ÅÕõ ´Ã¡ñÎ ÅÄÂò¾¢üÌû, ¸¢ð¼ò ¾ð¼ 365 1/4 ¾ýÛÕðθ¨ÇÔõ ÒÅ¢ ¦ºöРŢθ¢ÈÐ. ´ù¦Å¡Õ ¾ýÛÕðÎõ ´Õ ¿¡Ç¡¸¢ÈÐ.

þó¾ò ¾ýÛÕ𨼠Ӿü¸¡Ä Á¡ó¾÷¸û ±ôÀÊ «È¢ó¾¢Õì¸ ÓÊÔõ?

¸£ÆÐ §ÁÄ¡ö, §ÁÄÐ ¸£Æ¡ö þÕÙõ ´Ç¢Ôõ Á¡È¢ Á¡È¢ ÅÕ¸¢ýÈÉ. À¸Ä¢ø ¦ÅÇ¢îºõ ¸ñ¨½ì ܺ ¨Å츢ÈÐ. ±ùÅÇ×¾¡ý ÓÂüº¢ò¾¡Öõ, ¸½ §¿Ãò¾¢üÌ §Áø Ýâ¨Éô À¡÷ì¸ ÓÊž¢ø¨Ä. Á¡È¡¸, þÕÇ¢ø Å¡Éõ ¸ñ º¢Á¢ðθ¢ÈÐ. ÌÇ¢÷ó¾ ¿¢Ä¡ Å¡Éò¾¢ø ±ØóÐ ÌÈ¢ôÀ¢ð¼ §¿Ãõ À½õ ¦ºöÐ À¢ý Á¨ÈŨ¾ô À¡÷ì¸ Óʸ¢ÈÐ. «ô¦À¡ØÐ Áí¸¢Â ´Ç¢ ¸Äó¾ þÕû ±ýÀÐ Á¡ó¾É¢ý «È¢× ¬÷Åò¨¾ò àñθ¢ÈÐ. À¸ø ±ýÀÐ Àº¢ìÌ ±ýÚ ¬É×¼ý, þÕû ±ýÀÐ µö×ìÌõ ¬ö×ìÌõ ±ýÚ ¬¸¢Å¢Î¸¢ÈÐ.

¿¡û ±ýÀРӾĢø þըǧ ÌÈ¢ò¾Ð. þÕÇ¢ø ¦¾¡¼í¸¢ô À¢ý ´Ç¢ ÅóÐ ÁÚÀÊÔõ þÕû ÅÕõ Ũà ¬Ìõ ¦À¡Ø¨¾ ´Õ ¿¡û ±ýÚ ÀÆó¾Á¢Æ÷ «¨Æò¾É÷. ´ù¦Å¡Õ þÕð ¦À¡Ø¾¢Öõ ¿¢Ä¨Åô À¡÷ìÌõ §À¡Ð «¾ý À¢ý ÒÄõ Á¡ÚŨ¾ ¾Á¢ú Á¡ó¾ý À¡÷ò¾¡ý. ¿¢Ä×ìÌô À¢ý§É þÕ츢ýÈ, ¸ñº¢Á¢ðÊ Á¢ýɢθ¢È, ´Ç¢ì Üð¼ò¾¢ø ¾ÉìÌò ¦¾Ã¢ó¾ ¯ÕÅ¸í¸¨Ç þÅý À¡÷ò¾¡ý. Á¢ýÛŨ¾ Á£ý ±ý§È ÀÆó¾Á¢Æý ÌÈ¢ôÀ¢ð¼¡ý.

´Õ Á£ý ŨÇó¾ Ó¼ô À¨É¡¸ò ¦¾Ã¢ó¾Ð; þý¦É¡ýÚ ±Ã¢Ôõ ¾ÆÄ¡¸ò ¦¾Ã¢ó¾Ð; þýÛõ ´ýÚ ¿£÷ ¿¢¨Èó¾ ÌÇÁ¡¸ò ¦¾Ã¢ó¾Ð. þôÀʧ þÕÀò¦¾ðÎô À¢ýÒÄí¸¨Ç (Á£ý¸¨Ç) «ÅÉ¡ø «¨¼Â¡Çõ ¸¡ð¼ ÓÊó¾Ð. Á£ñÎõ Á£ñÎõ þó¾ô À¢ýÒÄí¸û ÒÅ¢¨Âî ÍüÚž¡¸ì ¸¡ðº¢ÂÇ¢ò¾É. ±ôÀÊ ´Îõ ¬üÈ¢ø À¼Ì §À¡Ìõ §À¡Ð þÕ ¸¨Ã¢Öõ þÕìÌõ ¸¡ðº¢¸û Á¨ÈóÐ ¦¸¡ñ§¼ ÅóÐ À¼Ì ¿¢¨Ä¡ö þÕôÀÐ §À¡ø §¾¡üÈõ «Ç¢ò¾¡Öõ, "¸¨Ã¸û ¿¢¨Ä¡ɨÅ; À¼Ì¾¡ý ¿¸Õ¸¢ÈÐ" ±ýÚ Àð¼È¢óÐ ¯½ÃÓÊ󾧾¡ (¸½¢Â÷ ¬Ã¢Â À𼡠¾ý Å¡É¢Âø áÄ¢ø þó¾ ¯Å¨Á¨Âì ÜÚÅ¡÷), «Ð §À¡Ä "ÒÅ¢ ¾ý¨É ¯ÕðÊì ¦¸¡ûÙ¸¢ÈÐ; þó¾ô À¢ý ÒÄí¸û ¿¢¨Ä¡¸ ¯ûÇÉ" ±ýÚ ÀÆó¾Á¢ú Á¡ó¾ý ÒâóÐ ¯½÷ó¾¡ý.

¯ñ¨Á¢ø þó¾ô À¢ý ÒÄí¸û «ÅÛìÌ ¿¡û¸¡ðÎõ «¨¼Â¡Çí¸Ç¡¸ ¿¡û¸¡ðθǡ¸, ¿¡û Á£ý¸Ç¡¸ò ¦¾Ã¢ó¾É. (þó¾ ¿¡û¸¡ðΠż ¿¡ðÎô ÀÖìÌ Ó¨È¡ø ¿¡û¸¡ðÎ> ¿¡ð¸¡ðÎ> ¿¡ð¸¡òÐ> ¿¡ð¸¡ò¾õ> ¿¡ì¸ò¾õ> ¿¡‡ò¾õ> ¿¡‡òÃõ> ¿‡òÃõ ±É ż¦Á¡Æ¢Â¢ø ¾¢Ã¢ó¾Ð. ¿¡õ Á£ñÎõ ¾Á¢ú ´Ä¢ô ÀÎò¾¢ ¿ðºòÃõ ±É ÅÆí̸¢§È¡õ; þ¾üÌ ¿¡û¸¡ð¨¼§Â ¨ÅòÐì ¦¸¡ûÇÄ¡õ.) «ó¾ì ¸¡ÄòÐì ¸ø¦ÅðÎì¸Ç¢ø ¿¡û¸¡ðÎ «¨¼Â¡Ç§Á ÌÈ¢ì¸ô ÀðÎ þÕìÌõ. þýÚ þÕôÀÐ §À¡Ä ¾¢¸¾¢¸û ÌÈ¢ôÀÐ ÅÆì¸õ þø¨Ä.

þó¾ 28 ¿¡ð¸Ç¢ø ¿¢Ä× µÇ¢ Á¢ÌóÐ ¿¢¨ÈŨ¼óÐ ââòÐõ (âý¢ò¾ø> âýõ> ¦ÀªÃ½õ> ¦Àª÷½¨Á þôÀÊ ¾Á¢Æ¢ø þÕóРż¦Á¡Æ¢ §À¡Ìõ.), À¢ý ´Ç¢ ̨ÈóÐ, ¸ÕòÐõ, «¨ÁóÐõ («¨ÁÅ¡¾ø> «¨ÁÅ¡¨¾> «ÁÅ¡¨¾> «ÁÅ¡¨º> «Á¡Å¡¨º, ÁÚÀÊÔõ ż¦Á¡Æ¢ Á¡üÈõ) ¿¢Ä× §À¡Ìõ §À¡ì¨¸ ¾Á¢ú Á¡ó¾ý À¡÷ò¾¡ý. ¦º¡ì¸¢î ¦º¡Ä¢òÐ ´Ç¢ ¦¸¡ÎìÌõ Àì¸õ (¦º¡ì¦¸¡Ç¢ô Àì¸õ>¦º¡ì¸¢Ç Àì¸õ>¦º¡ì¸¢Ä Àì¸õ>ÍìÄ Àì¸õ> ÍìÄ À‡õ) 14 ¿¡Ùõ, ¸Õò¾ Àì¸õ (¸ÕÅ¢É Àì¸õ>¸Õ境 Àì¸õ>¸Õ‰½ Àì¸õ>ìÕ‰½ À‡õ) 14 ¿¡Ùõ ¬¸, þÃñÎ Àì¸õ §º÷ó¾Ð ´Õ Á¡¾õ ±ýÚõ ¦¸¡ûÇ §¿÷ó¾Ð. (þ¨¾ þÕ À¾¢¨ÉóÐ ¿¡ð¸û ±Éì ¦¸¡ñ¼Ð þýÛõ ÀÄ ¸¡Äõ ¦ºýÚ ²üÀð¼ ÀÆì¸õ.) Á¾¢ ±ýÛõ ¿¢Ä×¾¡ý ¸¡Äò¨¾ Á¾¢ì¸î ¦ºö¾Ð. Á¡¾õ ±ýÈ ¦º¡ø À¢Èó¾Ð. Á¾¢ò¾ø ±ýÀÐ «Ç× ¦¸¡ûÙ¾ø ±ý§È ¾Á¢Æ¢ø ¦À¡ÕûÀÎõ. «§¾ §À¡Ä Á¡É¢ò¾ø ±ýÀÐõ «ÇÅ¢ÎÅо¡ý. þó¨¾Â¢§Ã¡ôÀ¢Â ¦Á¡Æ¢¸Ç¢ø Á¡É¢ò¾ø>month, monAt ±ýÚ ¬Ìõ.

¿¡Ç¡Åð¼ò¾¢ø 28 ¿¡û¸¡ðθǢø ´Õ ¿¡û¸¡ð¨¼ ÓüÈ¢Öõ ¦¾Ç¢Å¡¸ «¨¼Â¡Çõ ¸¡½ ÓÊ¡¾ ¿¢¨Ä¢ø 27 ¿¡û¸¡ðθ§Ç Á¢ïº¢É. (þÅüÈ¢ý ¾Á¢úô ¦ÀÂ÷¸¨Ç þí§¸ ¿¡ý Å¢Åâì¸Å¢ø¨Ä.) ´ù¦Å¡Õ ¿¡û¸¡ðÊÖõ ÀÄ Å¢ñÁ£ý Üð¼í¸û «¨¼Â¡Çõ ¸¡½ô Àð¼É. þæÅøÄ¡õ Å¡É §ÅÊ쨸 ¾¡§É? À¢ý Ü÷ò¾ Á¾¢Â¡ø «¨¼Â¡Çõ ¸¡ñÀÐ ºÃÅÄ¡ ±ýÉ? ´Õ Å¢Âô¨Àô À¡÷ò¾£÷¸Ç¡? À¡÷ôÀÐ Á¾¢¨Â (¿¢Ä¨Å); «¨¾ Á¾¢ôÀÐ («ÇÅ¢ÎÅÐ) Á¾¢Â¡ø («È¢×, ã¨Ç). þÂø ¦Á¡Æ¢Â¡É ¾Á¢Æ¢ø þôÀÊò¾¡ý ¦º¡ü¸û ²üÀθ¢ýÈÉ.

þó¾ Å¢ñÁ£ý Üð¼í¸¨Ç ¦Å¦È¡Õ Ũ¸Â¢ø ¯ÕŸô ÀÎò¾¢ò ¦¾¡Ì¾¢¸Ç¡ì¸¢Â §À¡Ð «¨Å 12 ¦¾¡Ì¾¢¸Ç¡¸ò ¦¾Ã¢ó¾É. «¨Å þ¨ÃóÐ ¸¢¼ó¾ ÀìÌÅõ þ¨Ã¾¢ = ¦¾¡Ì¾¢> þá¾¢> þẢ ¬ÉÐ. ´ù¦Å¡Õ þẢÔõ ţΠ±ý§È À¨Æ Á¡ó¾ý ¦º¡øÄ ÓüÀð¼¡ý. À¸¦ÄøÄ¡õ Àº¢ìÌ «¨ÄóÐ þÃÅ¢ø þø §¾Ê, ¾¡ý ÅÕÅÐ §À¡ø, þó¾ Å¢ñÁ£ý Üð¼í¸Ùõ þÃÅ¢ø ţΠ§¾Ê Å󾾡¸ ¯ÕŸ¢òÐ «¨Å þÕìÌõ «ñ¼¦ÅÇ¢¨Â ţΠ±ý§È ¯¨Ãò¾¡ý. 12 ¦¾¡Ì¾¢¸Ùõ 12 ţθǡ¸ì ¦¸¡ûÇô ¦ÀüÈÉ. ´Õ ţΠ¬¼¡¸ (§ÁÆõ) ò ¦¾Ã¢ó¾Ð; þý¦É¡ýÚ Á¡¼¡¸ (Å¢¨¼)ò ¦¾Ã¢ó¾Ð; §ÁÖõ ´ýÚ ¿ñ¼¡¸ò ¦¾Ã¢ó¾Ð; þýÛõ Áü¦È¡ýÚ ÍÈ¡Á£É¡¸ò ¦¾Ã¢ó¾Ð. þôÀÊ §ÁÆõ, Å¢¨¼, ¬¼¨Å, ¸¼¸õ, Á¼í¸ø, ¸ýÉ¢, ШÄ, ¿Ç¢, º¢¨Ä, ÍÈÅõ, ÌõÀõ, Á£Éõ ±Éô ÀýÉ¢ÃñÎ þẢ¸ÙìÌ À¨Æ ¾Á¢Æý ¦ÀÂâð¼¡ý. þ¾ý Å¢Çì¸í¸¨Çô À¢ýÉ÷ ´Õ Ó¨È À¡÷ô§À¡õ.

§Á§Ä ¦º¡ýÉ 27 ¿¡û¸¡ðÎì¸¨Ç þýÛõ ÀÌòÐ 108 À¡¾í¸û (ÀÌò¾Ð À¡¾õ) ±Éì ¦¸¡ñ¼ ¾Á¢Æý, 12 ţθ¨ÇÔõ 108 À¡¾í¸§Ç¡Î ´ôÀ¢ðÎ ´Õ Å£ðÊø ´ýÀÐ À¡¾õ ±ýÚ ®× ÅÌò¾¡ý. þó¾ ţθÙõ ¿¡û¸¡ðθÙõ, À¡¾í¸Ùõ ¿õ ÒŢ¢ø þÕóÐ À¡÷ìÌõ Å¢ñ¦ÅÇ¢¨Âô ÒÄõ À¢Ã¢ì¸¢ýÈ «¨¼Â¡Çí¸û. żìÌ, ¸¢ÆìÌ, ¦¾üÌ, §ÁüÌ ±ýÚ ÒŢ¢ø ¾¢¨º À¡÷츢§È¡õ þø¨Ä¡, «¨¾ô §À¡ýÈ Å¢ñ¦ÅǢ¢ø ¾¢¨º ¸¡ðÎõ «¨¼Â¡Çí¸§Ç þó¾ ¿¡û¸¡ðθÙõ, þẢ¸Ùõ, À¡¾í¸Ùõ ±É ¯½Ã §ÅñÎõ. ÝâÂý º¢ò¾¢¨Ã¢ø ¯¾¢ò¾Ð ±ýÈ¡ø, º¢ò¾¢¨Ã ¿¡ñÁ£ý þÕìÌõ ¾¢¨ºÂ¢ø ¸¡ðº¢ÂÇ¢ò¾Ð ±ýÚ ¦À¡Õû.

þÉ¢ «ÎòÐ §¸¡ûÁ£ý¸ÙìÌ Åէšõ. Å¢ñÁ£ý¸¨Çô §À¡Ä§Å ´Ç¢¦¸¡ñÎ ¬É¡ø ¦À⾡¸ °¼¸õ þøÄ¡Ð ¦ÅÚõ ¸ñÏ째 §¸¡ÇÁ¡¸ì ¸¡ðº¢ÂÇ¢ò¾¨Å §¸¡ûÁ£ý¸Ç¡Â¢É. «¨Å¾¡ý «È¢Åý, ¦ÅûÇ¢, ¦ºùÅ¡ö, Ţ¡Æý, ¸¡Ã¢ ±ýÚ «¨Æì¸ô Àð¼É. «È¢Åý §¸¡û Àì ÜÚ ¸ÄóÐ ¦¾Ã¢ó¾Ð. ¦ÅûÇ¢ ¦Åû¨Ç¡¸ì ¸¡ðº¢ÂÇ¢ò¾Ð. ¦ºùÅ¡ö ¦ºõ¨Á ¿¢Èò§¾¡Îõ, Å¢ÂýÚ «¸ÄÁ¡É Ţ¡Æý ¦À¡ý ¿¢Èò§¾¡Îõ, ¸¡Ã¢ ¸Õ ¿¢Èò§¾¡Îõ ¸¡ðº¢ÂÇ¢ò¾É. þÅü§È¡Î ¸ñ¨½ì ÜÍõ «Ç× ´Ç¢Ú¸¢È »¡Â¢Úõ (¡ = þÕû; ¡+þÚ > »¡+Â¢Ú = þÕ¨Ç þÚìÌõ §¸¡û; Íû ±ýÚ ±Ã¢ìÌõ §¸¡û ÝâÂý) ´Õ §¸¡Ç¡¸ì ¦¸¡ûÇô ¦ÀüÈÐ.

¯ñ¨Á¢ø ÒÅ¢Ôõ ÁüÈ §¸¡û¸Ùõ Ýâ¨ɧ ÍüÈ¢Åó¾¡Öõ, ÒÅ¢¨Â§Â »¡Â¢Úõ ÁüÈ §¸¡û¸Ùõ ÍüÈ¢ÅÕž¡¸ ¿ÁìÌò §¾¡üÈõ «Ç¢ì¸¢ýÈÉ. ÒŢ¢ø þÕóÐ »¡Â¢Ú ¾ÅȢ ÁüÈ §¸¡û¸¨Çô À¡÷ò¾¡ø «¨Å¦ÂøÄ¡õ ¸¢ð¼ò¾ð¼ ´§Ã ¾Çò¾¢ø ÒÅ¢¨Âî ÍüÈ¢ ÅÕž¡¸§Å ¿ÁìÌò §¾¡üÈõ «Ç¢ì¸¢ýÈÉ. þó¾î ÍüÚò ¾ÇÓõ ÒŢ¢ý ¿Îì §¸¡ðÎò ¾ÇÓõ ´ýÈ¡¸§Å ¿õ ¸ñÏìÌò ¦¾ýÀθ¢ýÈÉ.

þÐ ¾Å¢Ã ÒÅ¢¨Âî ÍüÚž¡¸ò §¾¡üÈõ «Ç¢ìÌõ »¡Â¢üÈ¢ý ÍüÚò¾Çõ ÒÅ¢¿Îì §¸¡ðÎò ¾Çò¨¾ 23.5 À¡¨¸Â¢ø Å¢ØóÐ ¦ÅðÎÅÐ §À¡Äì ¸¡ðº¢ÂǢ츢ÈÐ. þó¾ þÕ ¾Çí¸Ç¢ý ¦ÅðΠŢØô¨À "Å¢Ø" ±ý§È ¾Á¢Æ¢ø ¦º¡øÄ ÓüÀð¼É÷. ´Õ Åð¼ò¾Çõ þý¦É¡Õ Åð¼ò¾Çò¨¾ þÃñÎ þ¼í¸Ç¢ø «øÄÅ¡ ¦Åð¼§ÅñÎõ? «¨¾¦Â¡ðÊ þÃñΠŢØì¸û ¿ÁìÌô ÒâÀθ¢ýÈÉ. ´ýÚ §ÁÆ Å¢Ø Áü¦È¡ýÚ Ð¨Ä Å¢Ø. «¾¡ÅÐ ´Õ Å¢Ø §ÁÆ þẢ þÕìÌõ ¾¢¨ºÂ¢Öõ, Áü¦È¡ýÚ Ð¨Ä þẢ þÕìÌõ ¾¢¨ºÂ¢Öõ ¸¡ðº¢ÂÇ¢ò¾É.

ÒÅ¢ Ýâ¨Éî ÍüÚÅÐ ¾¡ý ¯ñ¨Á¿¢¨Ä ±ýÈ¡Öõ ÝâÂý ÒÅ¢¨Âî ÍüÚÅÐ §À¡Äò §¾¡üÈõ «Ç¢ì¸¢ÈÐ ±ýÚ ¦º¡ý§É¡õ «øÄÅ¡? «ó¾ô ÒŢ¢ý ÅÄÂÓõ §¿÷ Åð¼ ÅÄÂõ «øÄ. «Ð ´Õ ¿£û Åð¼ ÅÄÂõ. þó¾ ¿£ûÅð¼ ÅÄÂò¾¢ø ¾¡ý ÒÅ¢ 365 1/4 ¿¡Ç¢ø Ýâ¨Éî ÍüÈ¢ ÅÕ¸¢ÈÐ. «¾¢ø ÅÄÂò¾¢ø µù¦Å¡Õ º¢ÚÀ̾¢Ôõ ´Õ ¿¡¨Çì ÌÈ¢ìÌõ. ´ù¦Å¡Õ ¿¡ûÀ̾¢Â¢Öõ ÒÅ¢ ÅÕõ §À¡Ð, ÒÅ¢ìÌõ, ÝâÂÛìÌõ þ¨¼§Â ¯ûÇ ¦¾¡¨Ä¨Åô ¦À¡Úò§¾ ¿¡õ ¦ÅôÀò¨¾ô ¦ÀÚ¸¢§È¡õ. «ó¾ ¿£û Åð¼ò¾¢ø ÝâÂÛìÌ Á¢¸ «Õ¸¢ø ÅÕõ ¿¡û §¸¡¨¼ Ó¼í¸ø (summer solstice) ±ýÚõ ÝâÂÛìÌ Á¢¸ò ¦¾¡¨ÄÅ¢ø þÕìÌõ ¿¡û ÀÉ¢ Ó¼í¸ø (winter solstice) ±ýÚõ ¦º¡øÄô ¦ÀÚõ.

þÃñΠŢØì¸Ùõ, þÃñÎ Ó¼í¸Öõ ´ýÈ¢ü¦¸¡ýÚ ¦¾¡¼÷Ò ¦¸¡ñ¼¨Å. þó¾ô ÒÅ¢ ÍüÚõ ÅÄÂò¾¢ø §ÁÆ Å¢Ø×õ, Ð¨Ä Å¢Ø×õ ¬É þÕ ÒûÇ¢¸û ´ýÈ¢ü¦¸¡ýÚ ±¾¢Õõ Ò¾¢Õõ ¬É¨Å. «§¾ §À¡Ä §¸¡¨¼ Ó¼í¸Öõ, ÀÉ¢ Ó¼í¸Öõ ¬É þÕ ÒûÇ¢¸û ±¾¢Õõ Ò¾¢Õõ ¬É¨Å. «§¾ ¦À¡ØÐ, Ó¼í¸Öõ Å¢Ø×õ 90 À¡¨¸ô À¢Ã¢¨Åì ¦¸¡ñ¼¨Å. ÀÉ¢ Ó¼í¸Ä¢ø ¦¾¡¼í¸¢ô À¡÷ò¾¡ø, §ÁÆ Å¢Ø 90 À¡¨¸ ¾ûǢ¢ÕìÌõ. «¾É¢ýÚõ 90 À¡¨¸Â¢ø §¸¡¨¼ Ó¼í¸ø þÕìÌõ. «¾É¢ýÚõ 90 À¡¨¸Â¢ø ШÄÅ¢Ø þÕìÌõ. ÓÊÅ¢ø 360 À¡¨¸ ¸¼ó¾ À¢ý Á£ñÎõ ÀÉ¢ Ó¼í¸ø ÅóÐ §ºÕõ.

þó¾ô ÒÅ¢ ÅÄÂò¾¢üÌ ¦¾¡¼ì¸õ ±ýÚ ²§¾Ûõ þÕì¸ ÓÊ¡Р«øÄÅ¡? ¬É¡Öõ, ¦¾¡¼ì¸õ ´ýÚ §ÅñÎõ ±ýÚ ÁÉ¢¾ ÁÉõ §¸ð¸¢È§¾? þí̾¡ý ÀñÀ¡Î, ÀÆì¸õ ±ýÚ ´ýÚ ÅÕ¸¢ÈÐ. ÀÉ¢ Ó¼í¸Ä¢ø ¦¾¡¼íÌÅÐ §Áø¿¡ðÎ Ó¨È, ÀÆì¸õ. ÀÉ¢ Ó¼í¸ø ºÉÅâìÌ «Õ¸¢ø ²üÀθ¢ÈÐ.

§ÁÆ Å¢ØÅ¢ø ¦¾¡¼íÌÅÐ ¾Á¢Æ÷ Ó¨È, ÀÆì¸õ. (þó¾¢Â¡Å¢ý ÀÄ Á¡¿¢Äí¸Ç¢ý Ó¨ÈÔõ ܼ þÐ ¾¡ý). þý¦É¡Õ Ũ¸Â¢ø ШÄÅ¢ØÅ¢ø ¦¾¡¼íÌõ Ó¨È §ºÃÄò¾¢ý ´Õ À̾¢Â¢ø þÕó¾Ð. «¨¾ §Å¦È¡Õ Ó¨È À¡÷ô§À¡õ.

§ÁÆõ (=§Á¼õ>§Á„õ) ±ýÀÐ ¬Î ±ýÚõ ÜÈô ÀÎõ. ¬ðÊý ÀÕÅõ ¬ð¨¼. ¿¡õ À¡÷ìÌõ ӨȢø ÅÄÂò¾¢ý ¦¾¡¼ì¸õ ¬ð¨¼ ±ýÀ¾¡ø ÅħÁ ¬ð¨¼ ¬Â¢üÚ. ã즸¡Ä¢ ѨÆóÐ ¬ñÎõ ¬Â¢üÚ.

§Á„¡¾¢ ±ýÚ Å¼¦Á¡Æ¢Â¢ø ´Ä¢ ¦ÀÂ÷ôÀ÷.

þý¨ÈìÌî §º¡¾¢¼õ ±ýÚ ¦º¡øÄô ÀÎõ §º¡¾¢Âõ(>§º¡¾¢„õ>§º¡¾¢¼õ = §º¡¾¢ ¾Õõ ´Ç¢ Á£ý¸¨Ç ¨ÅòÐ ±¾¢÷¸¡Äõ ¸½¢ìÌõ þÂø = «¾¡ÅÐ ¸½¢Âõ)

§º¡¾¢Âõ Å¡ÉÅ¢Âø, ¸½¢ôÀ¢Âø ±ýÚ þÃñ¼¡¸ô À¢Ã¢ó¾Ð. ¿¡õ ¸½¢ôÀ¢ÂÖìÌû ¿¡õ ¦ºøÄÅ¢ø¨Ä. «ó¾ì ¸¡Ä Å¡ÉÅ¢Â¨Ä «È¢Â §ÅñÎÁ¡É¡ø ¾Á¢úì ¸½¢Âò¨¾ «È¢Âò¾¡ý §ÅñÎõ.

ºÃ¢! ¾Á¢ú ¬ñÎô À¢ÈôÒ §ÁÆŢبŠ´ðÊ ±ýÈ¡ø «Ð Á¡÷îÍ 21õ ¿¡¨Ç ´ðÊ «øÄÅ¡ Åà §ÅñÎõ? ²ôÃø 14-ø ¦º¡øÄ¢¨Åò¾¡ü §À¡ø ´§Ã ¿¡Ç¡¸ ±ôÀÊ ÅÕ¸¢ÈÐ? þ¨¾ «Îò¾Îò¾ À̾¢¸Ç¢ø À¡÷ì¸Ä¡õ.

þó¾ Å¢Çì¸ò¨¾ ÓÊôÀ¾üÌ Óý À¡ÅħÃÚ ¦ÀÕï º¢ò¾¢Ãɡâý ´Õ À¡¼ø. þÐ ±øÄ¡ Ţơì¸ÙìÌõ ¦À¡ÕóÐõ.
----------------------------------------------------
¿¨¸Â¡¸¢ý§È!
þÐ ¦¸¡ø ŢƧÅ; ¿¨¸Â¡ ¸¢ý§È!
ÒÐÁÊì ¸Ä¢í¸í ¸ÐÁò ¾¡í¸¢
¯Øó¾¢ý ¦¸¡ØÁ¡ô ÒبŠÓ츢ô
ÀÂÚ ¾¨Äô¦Àö¾ À¡«ø Á¢¾¨Å
ÅÂ¢Ú Ó¸ó ¦¾Ã¢Â Á¡ó¾¢ ¯Â¢÷ôÀÚõ
«ÃõÀ Á¡ì¸û ¬Îõ
¯Ãó¾Å¢÷ ¿¡Ç¢ý ´Ø¸¢Ä¡ ¿¢¸ú§Å!

- áÈ¡º¢Ã¢Âõ - 20

¦À¡Æ¢ôÒ:

þЧš Ţơ ±Éô ¦ÀÚÅÐ; ¿¨¸ Å¢¨Ç¸¢ýÈÐ. Ò¾¢Â ÁÊÔ¨¼Â ¦ÁøÖ¨¼¨Âô ¦ÀÕ¨ÁÔ¼ý ¯ÎòÐ, ¯Øó¾¢ÉÐ ¦¸¡ØŢ Á¡Å¢É¡ø ¦ºö¾ Ò¨ÆÔ¨¼Â Àñ½¢Âò¨¾ ÓîÍ Óð¼ ¯ñÎ, ÀÂÚ ¦ÀÕõÀ¡ý¨ÁÔí ¸Äó¾ À¡ø §º÷ó¾ ÌõÁ¡Âò¨¾, Å¢üÈ¢ý Ó¸ ÓØÐõ ±ØóÐ §¾¡ýÚõ ÀÊ ¬Ã ×ñÎ, ¦ºÂÄüÚò ¾¢Ã¢¾Õõ Å¢ÄíÌ §À¡øÅ¡÷ ¬Êì ¸Ç¢ìÌõ, «È¢× Å¢Äì¸ô ¦ÀüÈ Ó¨È¢ġ¾ ¦ºÂ§Ä!

ŢâôÒ:

þôÀ¡¼ø ÒÈõ.

Ò¾¢Â ¯¨¼¨Âô ¦ÀÕ¨ÁÔ¼ý ¯ÎôÀÐ×õ, ÀÄ Àñ½¢Âí¸¨Ç ÅÂ¢Ú ¿¢¨ÈÔõ ÀÊ Á¡ó¾¢î ¦ºÂĢġРŢÄíÌ §À¡Ä ¬ÃÅ¡Ãò§¾¡Î ¬Êì ¸Ç¢ôÀÐ×õ ¬¸¢Â «È¢× ¾Å¢÷ì¸ô ¦ÀüÈ Ó¨È¢ġ¾¡ þî ¦ºÂø ¿¨¸ôÀ¢üÌâÂÐ ¬Ìõ «ýÈ¢ Ţơ ±ÉôÀÎÅÐ ¬¸¡Ð ±É ÅÄ¢ÔÚò¾¢ô §ÀÍž¡Ìõ þôÀ¡ðÎ.

Ţơ ±ýÚ ¦À¡ÐÅ¢ü ÌÈ¢ò¾¨Á¡ý ÌÄ ºÁ ŢÄ츢ýÈ¢ ¿¨¼¦ÀÚõ ±øÄ¡ Ţơì¸ÙìÌõ ¦À¡ÕóО¡Ìõ þì¸ÕòÐ.

Ţơ ¯Â÷ó¾ §¿¡ì¸Óõ ¦À¡Ð¨Áô ÀñÒõ Áì¸Ç¢¼òÐô ÀÃÅ §ÅñÊ «¨ÁÂô ¦ÀÚž¡Ìõ. «¨ÅÂýÈ¢ ¯ÎôÀÐõ ¯ñÀÐõ ¬Ãšâò¾Öõ ¦ºÂÄüÚò ¾¢Ã¢¾Öõ ¬¸¢Â ¾¡ú×õ, ¾ó¿ÄÓõ Á¢ì¸ §¿¡ì¸õ ¦¸¡ñΠŢÇíÌõ Ţơì¸û, ӨȢøÄ¡¾ Å¢ÄíÌî ¦ºÂø¸§Ç¡õ ±ýÚ ¦¾ÕðÊì ÜÚž¡Ìõ þôÀ¡ðÎ.

þÐ ÒÈò¾¢¨½Ôõ ¦À¡Õñ¦Á¡Æ¢ì ¸¡ïº¢ ±ý ШÈÔÁ¡Ìõ.

-----------------------------------------------------

±ýÉ À¡÷츢ȣ÷¸û?

¬ÃÅ¡Ãõ ¾¸¡Ð ±ýÚ À¡ÅÄ÷ ²Ú ¦º¡øÄÅ¢ø¨Ä. ¯Â÷ó¾ §¿¡ì¸Óõ ¦À¡Ð¨Áô ÀñÒõ ܼ§Å þÕì¸ §ÅñÎõ ±ýÚ ¾¡ý ¦º¡øÖ¸¢È¡÷. ¬ñÎô À¢ÈôÒ ±ýÀÐ «ôÀÊ ¯ûÇ ´Õ Ţơ ¾¡ý.

À¢ÈìÌõ ¾Á¢úô Òò¾¡ñÊø ±øÄ¡ ¿Äý¸Ùõ ¦ÀüÚî º¢Èì¸ ±ý Å¡úòÐì¸û.

«ýÒ¼ý,
þáÁ.¸¢.

3 comments:

Mookku Sundar said...

அய்யா..அருமையான விவரணை. சோதியத்தை பற்றி மணிப்பிரவாளத்தில் எழுதினாலே குழப்பமாக இருக்கும். இத்த்னை தூய தமிழில் எழுதி, அதை புரியவும் விளக்கி இருக்கிறீர்களே.. நடச்த்திர வாரமல்லாது மற்ற வாரங்களுக்கும் இந்தப் பொறுமை எனக்கு இருப்பதில்லையே என்று குற்ற உணர்வாக இருக்கிறது.

நன்றி.

அடுத்த பகுதிக்கு காத்திருக்கிறேன்

பி.கு: நான் மேஷம். என் தகப்பனார் துலாம். என்ன ஆச்சரியம். இருவருடைய குணங்களும் ஒன்றுக்கொன்று சுத்த்மாக தொடர்பே இல்லாதவை..!!! இந்த விடயத்தை இது நாள் வரை நான் கேள்விப்பட்டதில்லை.

Mannai Madevan said...

// "உலகத்தோடு ஒட்ட ஒழுகல் என்பதன் பொருள் தம் தனித்தன்மையை இழப்பதுதானோ?" என்று ஒரோர் சமயம் உள்ளத்தை உறுத்துகிறது. //

எனக்கும் இந்த மனக்கலக்கம் வந்ததுண்டு. ஒருவேளை வள்ளுவனிடமிருந்து வேறுபடத்தான் வேண்டுமோ என்ற அய்யத்தை நீக்கி, “எவற்றில் ஒட்ட ஒழுகல்” “எவற்றில் நம் தனித்தன்மை பேணல்” என வகைப்பிரிக்க நாம் கற்றுக்கொள்வோமானால் மயங்க வேண்டுவதில்லை என எண்ணுகிறேன்.


// விழா உயர்ந்த நோக்கமும் பொதுமைப் பண்பும் மக்களிடத்துப் பரவ வேண்டி அமையப் பெறுவதாகும். அவையன்றி உடுப்பதும் உண்பதும் ஆரவாரித்தலும் செயலற்றுத் திரிதலும் ஆகிய தாழ்வும், தந்நலமும் மிக்க நோக்கம் கொண்டு விளங்கும் விழாக்கள், முறையில்லாத விலங்குச் செயல்களேயாம் என்று தெருட்டிக் கூறுவதாகும் இப்பாட்டு. //

ஆகா! என்ன வரிகள் இவைகள்!

எண்ணித் தெளியுமா நம் தமிழுலகம்? ஆம் என்றே காத்திருப்போம்!
தங்கள் எழுத்துக்கள் அனைத்தும் வைர மகுடம் சூட்டப் படட்டும்.

அன்புடன்
மன்னை மாதேவன்.

இராம.கி said...

அன்பிற்குரிய மூக்கன், மன்னை மகாதேவன்

உங்கள் பின்னூட்டிற்கு நன்றி.

மூக்கன்:

புரிகிறது என்று சொல்லியிருக்கிறீர்களே? அதைக் கேட்டு மகிழ்ச்சி.

"இன்று புதிதாய்ப் பிறந்தோம்" என்ற இந்த இடுகை காலங்கள் என்ற தொடரின் முதல் பகுதி. இந்த வலைப்பதிவின் முதற்சில இடுகைகளில் அந்தத் தொடர் ஆறு பகுதிகள் வரை இருக்கிறது. 7வது பகுதி பாதி எழுதியதோடு இருக்கிரது. தொடரவேண்டும்.

துலை வீட்டுக்காரரும், மேழ வீட்டுக்காரரும் எதிர் எதிரா என்பது எனக்குச் சோதியம் வழித் தெரியாது. நான் தமிழர்க்குப் புரிந்த வானியலோடு அல்லவா நிறுத்திக் கொள்ளுகிறேன்?

சோதியத்தில் கணித்து எதிர்காலம் சொல்லுதல் பற்றி எனக்கு எதிராகச் சொல்லுதற்கோ, சார்பாகச் சொல்லுதற்கோ ஒன்றும் இல்லை. நான் இதில் நொதுமலாய் (neutral) இருக்கிறேன். ஏனென்றால் அது எனக்குப் புரிவதில்லை.

மன்னை மகாதேவன்:

உங்கள் பின்னூட்டில் இரண்டாவதாக மேற்கோள் காட்டி நீங்கள் விதப்பாகப் பாராட்டிய வரிகள் பாவலர் ஏறு எழுதியவை. அவருடைய "நூறாசிரியம்" படியுங்கள். ஒவ்வொரு பாட்டும், விளக்கமும் அருமை. படித்துப் படித்து வியக்கத் தக்கவை.

அன்புடன்,
இராம.கி.