Thursday, April 28, 2005

தோல்பித்தவன்

ஒரு வார இறுதியில் காரிக் கிழமையன்று பிற்பகலில், பொழுது போகாமல், தொலைக்காட்சியில் வரும் ஓடைகளை மாற்றிக் கொண்டு இருந்தேன். கையில் தூரக்கட்டு (remote control) இருந்தால் ஓர் ஓடையில் (Channel) நிலைக்காமல் இப்படி மாற்றிக் கொண்டே இருக்கச் சொல்லும்; வீட்டுக்காரி பல தடவை சொல்லி இருக்கிறாள்; இன்னும் கேட்கிற படியாய் இல்லை; கெட்ட பழக்கம் தான், இருந்தாலும் மன நிலை அந்த நேரத்தில் அப்படி இருந்தது, எதிலும் நிலை கொள்ளவில்லை.

இந்த விவரம் கெட்ட அலைவில், திடீரென்று ஆசியா நெட் மலையாளத் தொலைக்காட்சி தூரக்கட்டில் அகப்பட்டது. மலையாளம் ஓரளவு தெரியும் என்பதால், சில போது, மலையாளத் திரைப்படங்களின் தொடக்கமும் முடிவும் அறியாமல் கூட, பார்க்கும் இடைப்பட்ட நேரத்தில் என்னை மறந்து ஆழ்ந்து போனது உண்டு. அன்றைக்கு ஒரு மோகன்லால் திரைப்படம். அழுத்தம் திருத்தமான ஒலிப்போடு மோகன்லால் மலையாளம் பேசும் பாணி என்னை எப்பொழுதுமே கவர்ந்தது உண்டு.

ஒரு இடத்தில் "ஞங்ஙளத் தோல்பிச்சவனை ஞான் தோல்பிக்கணும்" என்ற வாசகம் கேட்டு எங்கோ நெஞ்சுள் மணி ஒலிக்கத் தொடங்கியது; இப்படி ஒரு வினை தமிழில் ஏன் இல்லாது போனது? எப்போது தொலைத்தோம்? மனம் வேறொரு பக்கம் யோசிக்கத் தொடங்கியது. நாம் தொலைத்ததை மலையாளமாவது காப்பாற்றி வைத்திருக்கிறதே என்று நிறைவு கொண்டேன்.

நான் தோற்றேன்; தோற்கிறேன்; தோற்பேன் இப்படித் தமிழில் உண்டு. ஆனால் பிறவினை என்று வரும்போது நம்மை அறியாமல் பெயர்ச் சொல்லோடு துணை வினை போட்டு ஏன் சுற்றி வளைக்கிறோம்? "அவனை நான் தோற்கச் செய்தேன்" என்று சுற்றி வளைத்து ஏன் சொல்கிறோம்? இல்லாவிட்டால் "தோற்க வைத்தேன்" என்று சொல்லுகிறோம் இல்லையா? மலையாளத்தில் உள்ளது போல் தோற்பித்தேன் என்று எளிதாகச் சொல்லலாமே? என்ன ஆயிற்று நமக்கு? பகரம் வேண்டாம் என்றால் வகரம் இட்டுச் சொல்லலாமே! தோல்வித்தேன் என்று கூட ஏன் சொல்ல மாட்டேன் என்கிறோமே? "செய்தேன்/செய்வித்தேன்", "படித்தேன்/ படிப்பித்தேன்" என்று வரும் போது "தோற்றேன்/தோற்பித்தேன்" என்பது ஏன் தமிழில் வழக்கில்லாமற் போயிற்று?

எளிதாக இரண்டு மூன்று அசையில் சொல்லக் கூடிய வினைச் சொற்களை எல்லாம் இப்படித் தொலைத்தெறிந்து பெயர்ச்சொல்லோடு துணைவினை சேர்க்கும் பழக்கம் அளவிற்கு மீறி இந்தக் காலத் தமிழுக்கு எப்பொழுது வந்தது? 18, 19ம் நூற்றாண்டுகளிலா? தெரியவில்லை. இது ஒரு செயற்கையான சுற்றி வளைத்த கிரியோல் மொழியை உருவாக்குகிறது அல்லவா? யாராவது ஆராய்ச்சி பண்ணினால் தெரியக் கூடும்.

இந்தச் சிந்தனையில் எழுந்த, நண்பர்கள் செய்யக் கூடிய, ஒரு நல்ல உருப்படியான பணி பற்றிச் சொல்லலாம் என்று எண்ணுகிறேன். தமிழும் மலையாளமும் நன்கு அறிந்த ஒரு நண்பர் (என் மலையாள அறிவு அவ்வளவு ஆழமானது அல்ல; ஏதோ ஓரளவு ஒப்பேற்றிக் கொள்ளலாம் என்று வேண்டுமானால் சொல்லலாம்.) தனித்தோ, அல்லது இன்னொரு தமிழ் தெரிந்த மலையாள நண்பருடன் கூடியோ, தமிழில் உள்ள வினைச்சொற்கள், அதற்கு இணையான மலையாளச் சொற்கள், தமிழில் இல்லாத முறையில் மலையாளத்தில் அதைப் புழங்கும் பாங்கு, அதே புழக்கத்தைத் தமிழில் கொண்டுவர முடியுமானால் எப்படிக் கொண்டுவரலாம், அதற்கு உள்ள முன்னீடு என்று ஒரு பட்டியல் இடலாமே? அகர முதலி செய்பவர்களுக்கும் பயன்படுமே?

இது போன்ற ஒரு ஆக்கத்தை, தமிழுக்குச் செய்யும் நல்ல தொண்டை, தமிழ் உலகம் போன்ற மடற்குழுவில் உள்ள ஆவணக் காப்பில், அல்லது வலைப்பதிவில் இடலாம். வெறும் பேச்சு மட்டும் இல்லாமல் நம்முடைய பகுதி நேர உழைப்பும் நாட்படப் பயனாகுமே? யாராவது முன்வருவீர்களா?

மேலே சொன்னது போல் கன்னடத்திலும், தெலுங்கிலும் கூடச் செய்யலாம். தமிழுக்கு மிக நெருங்கியது மலையாளம், அடுத்தது கன்னடம். கொஞ்சம் தள்ளித் தெலுங்கு. இந்த மூன்று மொழிகளில் இருந்து, தமிழ் வளருவதற்காக, நாம் மீட்கவேண்டிய மொழி மரபுகள், புழக்கங்கள் மிகப் பல என்றே தோன்றுகிறது.

அன்புடன்,
இராம.கி.

In TSCII:

§¾¡øÀ¢ò¾Åý

´Õ Å¡Ã þÚ¾¢Â¢ø ¸¡Ã¢ì ¸¢Æ¨ÁÂýÚ À¢üÀ¸Ä¢ø, ¦À¡ØÐ §À¡¸¡Áø, ¦¾¡¨Ä측ðº¢Â¢ø ÅÕõ µ¨¼¸¨Ç Á¡üÈ¢ì ¦¸¡ñÎ þÕó§¾ý. ¨¸Â¢ø àÃì¸ðÎ (remote control) þÕó¾¡ø µ÷ µ¨¼Â¢ø (Channel) ¿¢¨Ä측Áø þôÀÊ Á¡üÈ¢ì ¦¸¡ñ§¼ þÕì¸î ¦º¡øÖõ; Å£ðÎ측â ÀÄ ¾¼¨Å ¦º¡øÄ¢ þÕ츢ȡû; þýÛõ §¸ð¸¢È ÀÊ¡ö þø¨Ä; ¦¸ð¼ ÀÆì¸õ ¾¡ý, þÕó¾¡Öõ ÁÉ ¿¢¨Ä «ó¾ §¿Ãò¾¢ø «ôÀÊ þÕó¾Ð, ±¾¢Öõ ¿¢¨Ä ¦¸¡ûÇÅ¢ø¨Ä.

þó¾ Å¢ÅÃõ ¦¸ð¼ «¨ÄÅ¢ø, ¾¢Ë¦ÃýÚ ¬º¢Â¡ ¦¿ð Á¨Ä¡Çò ¦¾¡¨Ä측𺢠àÃì¸ðÊø «¸ôÀð¼Ð. Á¨Ä¡Çõ µÃÇ× ¦¾Ã¢Ôõ ±ýÀ¾¡ø, º¢Ä §À¡Ð, Á¨Ä¡Çò ¾¢¨ÃôÀ¼í¸Ç¢ý ¦¾¡¼ì¸Óõ ÓÊ×õ «È¢Â¡Áø ܼ, À¡÷ìÌõ þ¨¼ôÀð¼ §¿Ãò¾¢ø ±ý¨É ÁÈóÐ ¬úóÐ §À¡ÉÐ ¯ñÎ. «ý¨ÈìÌ ´Õ §Á¡¸ýÄ¡ø ¾¢¨ÃôÀ¼õ. «Øò¾õ ¾¢Õò¾Á¡É ´Ä¢ô§À¡Î §Á¡¸ýÄ¡ø Á¨Ä¡Çõ §ÀÍõ À¡½¢ ±ý¨É ±ô¦À¡ØЧÁ ¸Å÷ó¾Ð ¯ñÎ.

´Õ þ¼ò¾¢ø "»í¹Çò §¾¡øÀ¢îºÅ¨É »¡ý §¾¡øÀ¢ì¸Ïõ" ±ýÈ Å¡º¸õ §¸ðÎ ±í§¸¡ ¦¿ïÍû Á½¢ ´Ä¢ì¸ò ¦¾¡¼í¸¢ÂÐ; þôÀÊ ´Õ Å¢¨É ¾Á¢Æ¢ø ²ý þøÄ¡Ð §À¡ÉÐ? ±ô§À¡Ð ¦¾¡¨Äò§¾¡õ? ÁÉõ §Å¦È¡Õ Àì¸õ §Â¡º¢ì¸ò ¦¾¡¼í¸¢ÂÐ. ¿¡õ ¦¾¡¨Äò¾¨¾ Á¨Ä¡ÇÁ¡ÅÐ ¸¡ôÀ¡üÈ¢ ¨Åò¾¢Õ츢ȧ¾ ±ýÚ ¿¢¨È× ¦¸¡ñ§¼ý.

¿¡ý §¾¡ü§Èý; §¾¡ü¸¢§Èý; §¾¡ü§Àý þôÀÊò ¾Á¢Æ¢ø ¯ñÎ. ¬É¡ø À¢ÈÅ¢¨É ±ýÚ ÅÕõ§À¡Ð ¿õ¨Á «È¢Â¡Áø ¦ÀÂ÷î ¦º¡ø§Ä¡Î Ш½ Å¢¨É §À¡ðÎ ²ý ÍüÈ¢ ŨÇ츢§È¡õ? "«Å¨É ¿¡ý §¾¡ü¸î ¦ºö§¾ý" ±ýÚ ÍüÈ¢ ŨÇòÐ ²ý ¦º¡ø¸¢§È¡õ? þøÄ¡Å¢ð¼¡ø "§¾¡ü¸ ¨Åò§¾ý" ±ýÚ ¦º¡øÖ¸¢§È¡õ þø¨Ä¡? Á¨Ä¡Çò¾¢ø ¯ûÇÐ §À¡ø §¾¡üÀ¢ò§¾ý ±ýÚ ±Ç¢¾¡¸î ¦º¡øÄÄ¡§Á? ±ýÉ ¬Â¢üÚ ¿ÁìÌ? À¸Ãõ §Åñ¼¡õ ±ýÈ¡ø ŸÃõ þðÎî ¦º¡øÄÄ¡§Á! §¾¡øÅ¢ò§¾ý ±ýÚ Ü¼ ²ý ¦º¡øÄ Á¡ð§¼ý ±ý¸¢§È¡§Á? "¦ºö§¾ý/¦ºöÅ¢ò§¾ý", "ÀÊò§¾ý/ ÀÊôÀ¢ò§¾ý" ±ýÚ ÅÕõ §À¡Ð "§¾¡ü§Èý/§¾¡üÀ¢ò§¾ý" ±ýÀÐ ²ý ¾Á¢Æ¢ø ÅÆ츢øÄ¡Áü §À¡Â¢üÚ?

±Ç¢¾¡¸ þÃñÎ ãýÚ «¨ºÂ¢ø ¦º¡øÄì ÜÊ Ţ¨Éî ¦º¡ü¸¨Ç ±øÄ¡õ þôÀÊò ¦¾¡¨Äò¦¾È¢óÐ ¦ÀÂ÷¡ø§Ä¡Î Ш½Å¢¨É §º÷ìÌõ ÀÆì¸õ «ÇÅ¢üÌ Á£È¢ þó¾ì ¸¡Äò ¾Á¢ØìÌ ±ô¦À¡ØÐ Åó¾Ð? 18, 19õ áüÈ¡ñθǢġ? ¦¾Ã¢ÂÅ¢ø¨Ä. þÐ ´Õ ¦ºÂü¨¸Â¡É ÍüÈ¢ ŨÇò¾ ¸¢Ã¢§Â¡ø ¦Á¡Æ¢¨Â ¯ÕÅ¡ì̸¢ÈÐ «øÄÅ¡? ¡áÅÐ ¬Ã¡ö Àñ½¢É¡ø ¦¾Ã¢Âì ÜÎõ.

þó¾î º¢ó¾¨É¢ø ±Øó¾, ¿ñÀ÷¸û ¦ºöÂì ÜÊÂ, ´Õ ¿øÄ ¯ÕôÀÊÂ¡É À½¢ ÀüÈ¢î ¦º¡øÄÄ¡õ ±ýÚ ±ñϸ¢§Èý. ¾Á¢Øõ Á¨Ä¡ÇÓõ ¿ýÌ «È¢ó¾ ´Õ ¿ñÀ÷ (±ý Á¨ÄÂ¡Ç «È¢× «ùÅÇ× ¬ÆÁ¡ÉÐ «øÄ; ²§¾¡ µÃÇ× ´ô§ÀüÈ¢ì ¦¸¡ûÇÄ¡õ ±ýÚ §ÅñÎÁ¡É¡ø ¦º¡øÄÄ¡õ.) ¾É¢ò§¾¡, «øÄÐ þý¦É¡Õ ¾Á¢ú ¦¾Ã¢ó¾ Á¨ÄÂ¡Ç ¿ñÀÕ¼ý Üʧ¡, ¾Á¢Æ¢ø ¯ûÇ Å¢¨É¡ü¸û, «¾üÌ þ¨½Â¡É Á¨Ä¡Çî ¦º¡ü¸û, ¾Á¢Æ¢ø þøÄ¡¾ ӨȢø Á¨Ä¡Çò¾¢ø «¨¾ô ÒÆíÌõ À¡íÌ, «§¾ ÒÆì¸ò¨¾ò ¾Á¢Æ¢ø ¦¸¡ñÎÅà ÓÊÔÁ¡É¡ø ±ôÀÊì ¦¸¡ñÎÅÃÄ¡õ, «¾üÌ ¯ûÇ ÓýɣΠ±ýÚ ´Õ ÀðÊÂø þ¼Ä¡§Á? «¸Ã ӾĢ ¦ºöÀÅ÷¸ÙìÌõ ÀÂýÀΧÁ?

þÐ §À¡ýÈ ´Õ ¬ì¸ò¨¾, ¾Á¢ØìÌî ¦ºöÔõ ¿øÄ ¦¾¡ñ¨¼, ¾Á¢ú ¯Ä¸õ §À¡ýÈ Á¼üÌØÅ¢ø ¯ûÇ ¬Å½ì ¸¡ôÀ¢ø, «øÄРŨÄôÀ¾¢Å¢ø þ¼Ä¡õ. ¦ÅÚõ §ÀîÍ ÁðÎõ þøÄ¡Áø ¿õÓ¨¼Â À̾¢ §¿Ã ¯¨ÆôÒõ ¿¡ðÀ¼ô ÀÂɡ̧Á? ¡áÅÐ ÓýÅÕÅ£÷¸Ç¡?

§Á§Ä ¦º¡ýÉÐ §À¡ø ¸ýɼò¾¢Öõ, ¦¾Öí¸¢Öõ Ü¼î ¦ºöÂÄ¡õ. ¾Á¢ØìÌ Á¢¸ ¦¿Õí¸¢ÂÐ Á¨Ä¡Çõ, «Îò¾Ð ¸ýɼõ. ¦¸¡ïºõ ¾ûÇ¢ò ¦¾ÖíÌ. þó¾ ãýÚ ¦Á¡Æ¢¸Ç¢ø þÕóÐ, ¾Á¢ú ÅÇÕžü¸¡¸, ¿¡õ Á£ð¸§ÅñÊ ¦Á¡Æ¢ ÁÃÒ¸û, ÒÆì¸í¸û Á¢¸ô ÀÄ ±ý§È §¾¡ýÚ¸¢ÈÐ.

«ýÒ¼ý,
þáÁ.¸¢.

7 comments:

வானம்பாடி said...

தோற்கடித்தல், தோற்கடித்தேன், தோற்கடித்தவன் என்ற சொற்கள் இருக்கிறதல்லவா.. எங்கள் பகுதிகளில் 'தோக்கடிச்சேன்' என்பது சாதாரணமாக பயன்பாட்டில் உள்ள ஒரு சொல்.

இராம.கி said...

அன்பிற்குரிய சுதர்சன்,

உங்கள் பின்னூட்டிற்கு நன்றி.

மேலே நான் கூறியது போல் துணைவினை போட்டுத்தான் நீங்கள் சொல்லுவதும் இருக்கிறது. "தோற்கச் செய்தேன், தோற்க வைத்தேன்" என்பது போல நீங்கள் சொல்லுவது "தோற்க அடித்தேன்>தோற்கடித்தேன்". இதையே இன்னும் விதவிதமாய்ச் சொல்லலாம். "தோற்கப் பண்ணினேன், தோற்க விட்டேன்" என்றும் சொல்லலாம். இப்படி வினையெச்சத்தோடு (அல்லது பெயர்ச்சொல்லோடு) இன்னொரு துணைவினை போடுவது நம்மொழியில் உள்ள வழக்கம் தான் என்றாலும், எல்லாவற்றிற்கும் அப்படியே செய்து கொண்டிருந்தால் மொழி கடினப்பட்டுப் போகும். மொழிநடை சிறக்க வேண்டுமானால் இது போலச் சுற்றிவளைத்துச் சொல்லுவது குறையவேண்டும்.

நான் சொல்ல வந்தது துணைவினை இல்லாமல் தோற்றல் என்ற தன்வினைச்சொல்லின் பிறவினைக் கிளவி. "படிப்பித்தேன், செய்வித்தேன், சொல்லுவித்தேன், பண்ணுவித்தேன்" என்பது போல வரக்கூடிய வினை. இது நம்மிடையே கொஞ்சம் கொஞ்சமாய் அழிந்துகொண்டே இருக்கிறது. அதைத் திருப்பிக் கொண்டுவரவேண்டும். மரபு மீட்சி ஆக வேண்டும். அதாவது மரபை மீட்பிக்க வேண்டும் (பார்த்தீர்களா, மீண்டும் பிறவினை.)

அன்புடன்,
இராம.கி.

வானம்பாடி said...

விளக்கத்திற்கு நன்றி ஐயா!

அன்புடன்
சுதர்சன்

வானம்பாடி said...

ஐயா!
இந்தத் தலைப்புக்கு தொடர்பில்லாத ஒரு கேள்வி. பின்னூட்டம் என்பதை நீங்கள் ஏன் பின்னூட்டு என்று குறிக்கிறீர்கள்? 'பின்னூட்டிட்டவர்' என்று சொல்வது 'பின்னூட்டமிட்டவர்' என்று சொல்வதைக் காட்டிலும் கடினமாக உள்ளதே?

அன்புடன்
சுதர்சன்

இராம.கி said...

நண்பரே!

தமிழில் "அம்" என்னும் ஈறு "பெரிய" என்ற பொருள் கொள்ளும்.
விளக்கு சிறியது, விளக்கம் பெரியது.
நிலை சிறியது, நிலையம் பெரியது,
முழக்கு சிறியது, முழக்கம் பெரியது.
இதே போல பின்னூட்டு என்பது சிறியது. பின்னூட்டம் என்பது பெரியது.

பின்னூட்டிட்டவர் என்று சொல்லத் தேவையில்லை. பின்னூட்டியவர் என்று சொல்லலாம். இங்கு கழகப் பேச்சாளர்கள் "அவன் வந்த போது" என்று சொல்லுதற்கு மாறாய் "அவன் வந்திட்ட போது" என்று இப்படி இட்டுப் போட்டுச் சொல்லுவார்கள். அது ஏதோ ஒரு பொரிம்பு (brand) போலச் செய்வார்கள். கொஞ்ச நேரம் கேட்டால், காதில் அது செயற்கையாய் ஒலிக்கும். கூடிய மட்டும் இட்டு போட்டுச் சொல்லுவதைத் தவிர்க்கலாம்.

அன்புடன்,
இராம.கி.

வித்யாசாகரன் (Vidyasakaran) said...

ஐயா,

இதுவும் இந்தப் பதிவுக்குத் தொடர்பில்லாததுதான். ஒருவேளை இதைப் பற்றி உங்களுக்கு ஏதாவது தோன்றினால், உங்களுக்கு நேரமிருந்தால் சில விவரங்களைத் தெரிந்து கொள்ளலாம் என்றுதான்.

கோவைப் பகுதித் தமிழில் 'ரவைக்கு' என்றால் ராத்திரிக்கு, இரவுக்கு என்று பொருள்.
மலையாளத்திலோ 'ராவிலெ' என்றால் காலையில் என்று பொருள். (ஆனால் 'அவளோட ராவுகள்' என்று ஒரு படம் இருப்பதாயும் கேள்விப்பட்டிருக்கிறேன்.)

தமிழில் 'வைகறை' என்றால் அதிகாலை.
மலையாளத்தில் 'வைகட்டு' என்றால் மாலை என்று பொருள்.
இதை நினைத்து நான் வியப்பதுண்டு.

ஆனால், http://www.thinnai.com/st0429054.html இந்தச் சுட்டியிலுள்ள சிறுகதையில், ரவைக்கு என்னும் வார்த்தையைக் 'காலையில்' என்னும் பொருள்படும்படி எழுதியிருக்கிறார்கள். எந்த வட்டார வழக்கு என்று என்னால் கண்டுபிடிக்க இயலவில்லை.

அ. இரவிசங்கர் | A. Ravishankar said...

விக்சனரியில் sell என்ற சொல்லுக்கு விற்பனை செய் என்று பொருள் போடப்பட்டிருந்த போது இதே போல் எனக்கு உறுத்தியது. ஏன் ஒரு வினையை விளக்க ஒரு பெயரோடு இன்னொரு வினையைச் சேர்க்க வேண்டும். இந்த வியாதி தான் ஆங்கிலச் சொற்களோடு பண்ணு சேர்த்து தமிழை பண்ணி மொழியாக மாற்றும் அவலத்துக்கு வழி வகுக்கிறது. எடுத்துக்காட்டுக்கு, decide பண்ணு, plan பண்ணு..இது எந்த அளவுக்குத் தப்போ அந்த அளவுக்கு தோற்கடி, விற்பனை செய் என்பதும் தப்பு. பேச்சு வழக்கில் இதை விய் (sell this) என்று சொல்லும் வழக்கம் எங்கள் ஊரில் உண்டு. ஆனால், விற்பனை என்பதற்கான மூலச் சொல் வில் என்றும் நெல்லை பகுதிகளில் இதை வில்லுங்களேன் என்று சொல்லும் வழக்கம் இருப்பதாகவும் என் நண்பர் சொன்னார். எப்படி இருந்தாலும் இந்த வில், விய் இரண்டுமே எழுத்து வழக்கில் இல்லாதது வருந்தத் தக்கது தான். இந்த வில்லுக்கும் வில்லங்கம் என்ற சொல்லுக்கும் தொடர்பு உண்டா? உங்கள் வலைப்பதிவு இடுகளைகளை கடந்த மூன்று மணி நேரமாகப் படித்து பின்னூட்டுக்கு மேல் பின்னூட்டாய் இட்டு விட்டேன். இப்போதைக்கு போதும் என நினைக்கிறேன். TSCII இல் உள்ள உங்கள் பதிவுகளை எப்படி படிப்பது எனத் தெரியவில்லை. சுரதாவின் பொங்குதமிழ் தவிர உங்கள் தளத்தில் இருந்தவாறே படிக்க ஏதேனும் வழி இருக்கிறதா?