Sunday, September 23, 2018

knowledge, wisdom, prudence and intelligence

மேலேயுள்ள 4 சொற்களுக்கும் பொத்தாம் பொதுவாய் அறிவெனச் சொல்லவே நம்மிற் பலரும் பழகியுள்ளோம். ஓர்ந்து பார்த்தால் நுண்வேறுபாடுகள் உண்டு. இவற்றைப் பயிலும் ஆங்கிலக் கட்டுரையைத் தமிழில் மொழி பெயர்க்கையிலோ, அல்லது புதுக் கட்டுரை படைக்கையிலோ, விதப்பின்றிப் பொதுச் சொல்லில் முன்னொட்டியே ஒப்பேற்றுகின்றோம். முன்னொட்டுப் பழக்கம் இப்போதெல்லாம் தவிர்க்க வியலாது விரவிக் கொண்டுள்ளது. என்னைத் தப்பாக எண்ணாதீர். செருமன் கட்டுரைகளிற் சிலபோது காணும் ஊன்சர (sausage style) நடைபோல் இற்றைத் தமிழ்நடை மாறிவருகிறது. 

(ஒருவேளை நாம் கலைச்சொல்லாக்காது, சொற்றொடர்களை ஆக்குகிறோமோ? - என்ற ஐயமும் எனக்குண்டு.) பழந்தமிழ்ச் சொற்கள் பெரும்பாலும் ஈரசை, மீறின், மூன்றசை; அவற்றின் சொற்சுருக்கமும், எழுத்துச் சுருக்கமும் நமக்கு ஏனோ கைவராதுள்ளன.) 

ஆங்கிலத்தில் பல்வேறு புலச்சொற்கள் எழக் காரணம் அவரின் ஏரணமும், துல்லியப் பார்வையுமே. இதுநாள் வரை துல்லியம் பாராது, வெற்று வெளியை நிறைக்கும் சொற்களை நாம் பெய்வதும் நம் கலைச்சொற்கள் தடுமாறக் காரணமாகும். (மீள என்மேல் உங்களுக்குச் சினம் வரலாம். இந்நாலு சொற்களைத் எப்படிச் விதந்தோதலாம் என்று பார்ப்போம்.

know (v.) Old English cnawan (class VII strong verb; past tense cneow, past participle cnawen), "perceive a thing to be identical with another," also "be able to distinguish" generally (tocnawan); "perceive or understand as a fact or truth" (opposed to believe); "know how (to do something)," from Proto-Germanic *knew- (source also of Old High German bi-chnaan, ir-chnaan "to know"), from PIE root *gno- "to know."

ஞா என்பது தமிழில் ஓர் வினையடி. இது யா என்னும் வேரிலிருந்து யா>ஞா> நா என்று திரியும். இத் திரி விதியை ”யா” என்ற நூலின் மூலம் சொல்லாய்வு அறிஞர் ப.அருளி விளக்கியிருக்கிறார். தமிழில் சொற்பிறப்பு விதியொன்றை முதலில் நிலை நாட்டியவர் அவரே. மேற்சொன்ன விதி பல்வேறு சொற்களின் மூலம் நிறுவப்பட்டிருக்கிறது. நாமின்றும் பயன்படுத்தும் நாட்டம், நோட்டம், நோக்கு என்ற சொற்கள் கூட நா- என்ற கிளைவேரிலிருந்து கிளைத்தவையே. இவற்றிற்குக் காணுதலையொட்டி முதற்பொருள் இருந்தாலும் அறிவுப் பொருள் புழக்கங்களும் பழந்தமிழில் உண்டு. இங்கே நான் தரும் செய்தி அருளியின் நூலிலிருந்து தருவதாகும். 

நாட்டம் என்ற சொல் ஆராய்ச்சிப் பொருளில் (தொல்.பொருள்: 3;33;2), தொல். சொல்.குற்:78;5), (புறம்:25:14) ஆகியவற்றிலும், கணியமென்ற பொருளில் (பதிற்று.211) இலும், நாடுதல் என்பது ஆராய்தற் பொருளில் (குறள் 518:1), (குறள் 520:1) இலும், நாடாமை என்பது ஆராயாமைப் பொருளில் (குறள் 833:1) இலும், நாடுதல் என்பது ஆராய்தற் பொருளில் (நாலடி 15:2) இலும் வரும். நோட்டம் என்பது ”ஆராய்கை, மணி-பொன் முதலியவற்றை ஆய்ந்து தகுதியறிகை” ஆகிய பொருள்களிலும், நோட்டமாயிருத்தல் என்பது ”ஒன்றைப் பற்றி நோக்கமாகவே இருந்தல்” என்ற பொருளிலும் வரும்.

கண்ணோட்டம் என்ற சொல்லையும் இங்கே நினைத்துப் பார்க்கலாம். நோக்குதல் என்பது கருதற் பொருளில் குறள் 189 இல் வரும். கவனித்தற் பொருளில் (ஏலாதி.12) இல் வரும். நோக்கென்ற சொல் அறிவென்ற பொருளில் மதுரைக்: 517-518 இல் வரும், நோக்கம் என்ற சொல் அறிவென்ற பொருளில் (கலி 14:11), (மலை:75) ஆகிய இடங்களில் வரும். இது போகக் காண் என்ற வினையில் எழுந்த காட்சியும் அறிவு எனும் பொருளில் (புறம் 170:2-4, 213:4-6, 213:15, 214:1-3, முருகு 137,166, பெரும்.445, குறிஞ்சி 15-18, மலை 49,50, அகம் 73:8-10, 75:1-3, 215:7-10, 245:1,2 ஐங்.470, கலி,94:42,43, 120: 1-3, பரி.1:45,46) ஆகிய இடங்களில் வரும்.

நகரச் சொற்கள் நம்மிடம் புழக்கத்தில் இருந்தால் ஞகரவொலிப்பும் ஒரு காலந்தில் இருந்திருக்க முடியும். அப்படி நோக்கினால் ஞாதல், ஞாதம், ஞாவகம்>ஞாபகம், ஞானம் போன்ற சொற்களும் தமிழ் தான். இவற்றைச் சங்கதம் என்று சொல்லி நம்மை அறியாமல் விலக்குகிறோம். ஞாதல் என்பது ஞாவின் தொழிற் பெயர். ஞா, ஞோ போன்ற சொற்கள் உலகமெங்கும் இந்தையிரோப்பிய மொழிகளிலும்  இருக்கின்றன. இதனடிப்படையில் knowledge (n.) என்பதை ஞானம் என்றே நான் சொல்வேன்.

knowledge (n.) early 12c., cnawlece "acknowledgment of a superior, honor, worship;" for first element see know (v.). The second element is obscure, perhaps from Scandinavian and cognate with the -lock "action, process," found in wedlock.

-----------------------------------
அடுத்தது நாம் பார்க்கப் போவது wise என்ற சொல் .இதைக் கீழ்க்கண்டவாறு ஆங்கிலச் சொற்பிறப்பியல் அகரமுதலியிற் சொல்வர்.

wise (adj.) Old English wis "learned, sagacious, cunning; sane; prudent, discreet; experienced; having the power of discerning and judging rightly," from Proto-Germanic *wissaz (source also of Old Saxon, Old Frisian wis, Old Norse viss, Dutch wijs, German weise "wise"), from past participle adjective *wittos of PIE root *weid- "to see" (hence "to know"). Modern slang meaning "aware, cunning" first attested 1896. Related to the source of Old English witan "to know, wit."

விழித்தல் என்பதற்கு வெறுமே பார்த்திருத்தல் மட்டும் தமிழிற் பொருளில்லை. அவன் விழிப்பானவன் என்றால் புத்திசாலி, கவனித்துப் பார்ப்பவன் என்று பொருள். wise man = விழிப்பானவன். விழித்தவன் என்று பொருள். wise என்ற பெயரடைக்கு விழித்த என்பதே பொருள். இனி அடுத்த சொல்லைப் பார்ப்போம்.

wisdom (n.) Old English wisdom "knowledge, learning, experience," from wis (see wise (adj.)) + -dom. A common Germanic compound (Old Saxon, Old Frisian wisdom, Old Norse visdomr, Old High German wistuom "wisdom," German Weistum "judicial sentence serving as a precedent"). Wisdom teeth so called from 1848 (earlier teeth of wisdom, 1660s), a loan-translation of Latin dentes sapientiae, itself a loan-translation of Greek sophronisteres (used by Hippocrates, from sophron "prudent, self-controlled"), so called because they usually appear ages 17-25, when a person reaches adulthood.

இதை விழித்தம் அல்லது விழிப்பம் என்று சொல்லலாம்.
-------------------------------------
மூன்றாவது prudence (n.) இது providence (n.) என்ற சொல்லின் சுருக்கம். ஆங்கிலத்தில் இதன் சொற்பிறப்பியலைக் காணுவோம். prudence (n.) mid-14c. (c. 1200 as a surname), mid-14c., "intelligence; discretion, foresight; wisdom to see what is suitable or profitable;" also one of the four cardinal virtues, "wisdom to see what is virtuous;" from Old French prudence (13c.) and directly from Latin prudentia "a foreseeing, foresight, sagacity, practical judgment," contraction of providentia "foresight" (see providence).

இது போகப் providence (n.) என்றொன்றும் உண்டு. late 14c., "foresight, prudent anticipation," from Old French providence "divine providence, foresight" (12c.) and directly from Latin providentia "foresight, precaution, foreknowledge," from providentem (nominative providens), present participle of providere "look ahead, prepare, supply, act with foresight," from pro "ahead" (see pro-) + videre "to see" (from PIE root *weid- "to see").

prudence இற்குச் சரியான இணைச்சொல் முன்விழிப்பு. இதைத் தான் சுருக்கமாய் முனைப்பு என்று சொல்கிறோம்.
--------------------------------------
கடைசியில் intelligence (n.) late 14c., "the highest faculty of the mind, capacity for comprehending general truths;" c. 1400, "faculty of understanding, comprehension," from Old French intelligence (12c.) and directly from Latin intelligentia, intellegentia "understanding, knowledge, power of discerning; art, skill, taste," from intelligentem (nominative intelligens) "discerning, appreciative," present participle of intelligere "to understand, comprehend, come to know," from assimilated form of inter "between" (see inter-) + legere "choose, pick out, read," from PIE root *leg- (1) "to collect, gather," with derivatives meaning "to speak (to 'pick out words')."

மேலேயுள்ள விளக்கம் பார்த்தால் இடைத்தெரிவு என்பது சரியாகத் தோன்றும். இதையே வேறுமுறையில் அறிவென்று சுருங்கச் சொல்லுகிறோம்.
--------------------------------------
knowledge = ஞானம்
wisdom = விழிப்பம்
prudence = முனைப்பு
intelligence = அறிவு

அன்புடன்,
இராம.கி.

5 comments:

அறிவாயிரு. said...

"knowledge without wisdom is useless lumber" An old saying. தங்களின் சொற்பொருள் ஆய்வு படிக்க வேண்டிய, நினைவில் கொள்ள வேண்டிய ஒன்று. நன்றி.

VangalSam said...

Wisdom stems out of knowledge,
Prudence is Wisdom manifested at a higher plane,and,
Intelligence is an emancipated state of Wisdom, Prudence and Intelligence!

VangalSam said...

Wisdom stems out of knowledge,
Prudence is Wisdom manifested at a higher plane,and,
Intelligence is an emancipated state of Wisdom, Prudence and Intelligence!

Kotravan said...

Homo sapien என்பதை மாந்தன் அறிவன் என தமிழ்படுத்தலாமா?

Kotravan said...

ஞா என்பது ஆராய்தல் தவிர்த்து அறிதல் எனப் பொருள் கொள்ளுமா
ஞா-ஞாதல்- ஞாதம் என்றால் ஞாதம் எப்படி ஞானம் ஆனது?
ஞானம் என்பதற்கு பதில் நாம் ஞாதம் என பயன்படுத்தலாமா?
இல்லை, அறிவு எனவே பயன்படுத்தலாமா?