Friday, May 14, 2010

மறவோம் மே - 18

ஓர் இல் நெய்தல் கறங்க, ஓர் இல்
ஈர்ந்தண் முழவின் பாணி ததும்பப்
புணர்ந்தோர் பூவணி அணியப் பிரிந்தோர்
பைதல் உண்கண் பனிவார் புறைப்பப்
படைத்தோன் மன்றவப் பண்பி லாளன்
இன்னாது அம்ம இவ்வுலகம்
இனிய காண்க இதன் இயல்பு உணர்ந்தோரே!

- புறம் 194; திணை பொதுவியல்; துறை: பெருங்காஞ்சி.
- பக்குடுக்கை நன்கணியார் பாடியது.

ஒரு மனையின் முன் சாவுப் பறை ஒலிக்கிறது.
ஒரு மனையின் முன் குளிர்ந்த முழவின் மேளம் ஒலிக்கிறது.

விழாவிற் கூடியோர் பூவணிந்து கொள்கிறார்கள்.
பிரிவிற்கு உட்பட்டோர் கண்பனித்து அழுகிறார்கள்.

இப்படியோர் நிலையை உலகிற் படைத்தவன் நிச்சயம் பண்பில்லாதவன்.

அம்மம்மா! கொடிது இவ்வுலகம்!
இதன் இயல்புணர்ந்தோர் இனிமையை மட்டுமே மனத்துள் காண்பார்கள்!!
------------------------------------

தமிழராய்ப் பிறந்த ஒவ்வொருவரும் மே 18 - பேரிழப்பை மறக்கமாட்டோம்.
இவ்விழப்பை எமக்களித்த சண்டாளர் தண்டனை அடைந்தே தீரவேண்டும்.
தமிழரே! ஒன்றுபடுக!

அன்புடன்,
இராம.கி.

2 comments:

சுந்தரவடிவேல் said...

அன்பின் இராம.கி அய்யா,
இப்பாடலுக்கு ஒரு மெட்டமைத்து மகனுக்குச் சொல்லிக் கொடுத்திருந்தேன். எங்களூர்ப் பொங்கல்விழாவில் பாடியிருக்கிறார், காணவும். உந்துதலைத் தந்த இவ்விடுகைக்காக நன்றி!
https://www.youtube.com/watch?v=ZqpwFbQjotg&feature=player_embedded#

இராம.கி said...

அன்பிற்குரிய சுந்தரவடிவேல்,

மாசிலனின் பாட்டைக் கேட்டேன். முழு உணர்வோடு பாடுகிறார். நம் பிள்ளைகளுக்கு இப்படி உணர்வுள்ள பாடல்களைக் கற்றுக் கொடுக்க வேண்டும். உங்கள் முயற்சியைத் தொடருங்கள்.

அன்புடன்,
இராம.கி.