Friday, February 22, 2008

சிலம்பில் வரலாறு - 1

இந்தக் கட்டுரைத் தொடரை எழுதத் தொடங்கிய காரணமே சிலப்பதிகாரத்தின் வஞ்சிக் காண்டமும், அதன் தொடர்ச்சியான செய்திகளும் ஆகும். "சேரன் செங்குட்டுவனின் காலம் என்ன? சிலம்பில் விவரிக்கப்படும் வடக்கு நோக்கிய படையெடுப்பு உண்மையிலேயே நடந்ததா? அல்லது அது வெறும் கதையா? (அதைக் கதை என்று சொல்லிச் சிலம்பின் காலத்தை கி.பி. 500 க்குப் பின் தள்ளும் ஆய்வாளர்கள் வையாபுரியாரில் இருந்து, இந்தக் கால இடது சாரிகள் வரை உண்டு. மதிப்பிற்குரிய பேரா. ரொமிலா தாப்பர் போன்றோரும் சிலம்பின் காலத்தைப் பெரிதும் பின் தள்ளுகிறார்கள். இதற்கு மாறாக, இலங்கைக் கயவாகுவுக்குச் சமகாலம் என்ற கருதுகோளில் கி.பி. 150 க்கு அருகில் செங்குட்டுவனின் காலத்தை வைக்கும் வழக்காறும் நம்மிடையே உண்டு.)

செங்குட்டுவன் வென்றதாகச் சொல்லப்படும் கனக விசயர் யார்? வடபுலத்து மன்னர்கள் என்று வஞ்சிக் காண்டத்துள் ஏழெட்டுப் பெயர்கள் சொல்லப் படுகிறதே, அவரெல்லாம் யார்? சிலம்பைப் படிக்கும் போது, மகதத்தில் மோரியர் ஆட்சி இல்லை என்று புரிகிறது; பிறகு யார் அப்போது மகதத்தை ஆண்டார்கள்? அந்தக் காலத்தில் பெரும்நகரமான பாடலிப் பட்டணத்திற்கு அருகில் செங்குட்டுவனோ, வில்லவன் கோதையோ போனார்களா? இமயமலையில் இருந்து செங்குட்டுவன் கல் எடுத்தான் என்றால், கிட்டத்தட்ட அந்த இடம் எங்கிருக்கலாம்? வஞ்சிக் காண்டத்தில் வரும் நூற்றுவர் கன்னர் என்பவர் யார்? நூற்றுவர் கன்னரின் கொடிவழியில் செங்குட்டுவனுக்குச் சம காலத்தில் இருந்த மன்னரின் பெயர் எது? செங்குட்டுவனுக்கு உதவி செய்யும் அளவுக்கு, ஆதிக்கம் பெற்றவராய், நூற்றுவர் கன்னர் எப்படி இருந்தார்கள்?" - இது போன்ற பல கேள்விகள் வஞ்சிக் காண்டம் படிக்கும் நமக்கு எழுகின்றன. ஒரு சில கேள்விகளுக்கு இந்தத் தொடரில் விடை காண முயல்கிறேன் (எல்லாக் கேள்விகளுக்கும் அல்ல.)

நாவலந்தீவின் தெற்கே இருக்கும் ஒரு சிறிய மன்னனான சேரலன் (நமக்கு நம் நாடு பெரிதென்றாலும், நாவலந்தீவில் சேர நாடு சின்னது தானே?) வடக்கே படையெடுத்துப் போக முற்படும் பொழுது தனக்கு வடக்கே இருக்கும் மன்னர்களில் ஏதேனும் ஒரு சிலரையாவது நட்புடையவர்களாய் ஆக்கிக் கொள்வது ஓர் அரசதந்திரம் தான்; இருந்தாலும் "நூற்றுவர் கன்னரோடு ஏன் அப்படி ஒரு தொடர்பு கொண்டான்? அவர் தவிர்க்க முடியாதவரா?" என்ற கேள்வி எண்ணிப் பார்க்க வேண்டியது. [சிலம்பில் ஏற்பட்ட வரலாற்று வேட்கையும் எனக்கு நூற்றுவர் கன்னரில் தான் தொடங்கியது.]

[இந்தத் தொடர் கொஞ்சம் விட்டு விட்டு வரக் கூடும். தொடர்ச்சியாய் வராமைக்குப் பொறுத்துக் கொள்ளுங்கள். இந்த ஆய்வு பற்றிய ஒரு சுருக்கத்தை, 3 மாதங்களுக்கு முன்னால் அமெரிக்க ஒன்றிய நாடுகளுக்குச் சென்றிருந்த போது, தெற்குக் கரோலினா மாநிலத்தின் தலைநகரான சார்லசுடனில் ஒரு நாள் மாலையில் நூலகம் ஒன்றில் எனக்காகக் கூடியிருந்த சில தமிழன்பர்களிடையே உரையாட்டில் சொல்லியிருந்தேன். அந்த உரையாடலை ஏற்பாடு செய்த நண்பர் சுந்தரவடிவேலுக்கும், உரையாடலில் பங்கு கொண்டோருக்கும் நன்றி கூறக் கடமைப் பட்டுள்ளேன். அங்கு சொன்னதற்கும் மேல் விரித்து, கூடிய மட்டும் சான்றுகளுடன் இங்கு சொல்ல முற்படுகிறேன்.]

1. வடபுலத்து வரலாற்றுக் களன்.

கேள்விகளை அலசுவதற்கு முன்னால், பழங்காலத்து, கிட்டத்தட்ட கி.மு. 200/100 அளவில் வடபுலத்து வரலாற்றுக் களனைப் புரிந்து கொள்ளுவது நல்லது.

சங்க காலம் தொடங்கியது, மோரியருக்கு முன்னால் மகதத்தில் ஆட்சி செய்த நந்தரின் சம காலமாகும். (இனிமேலும் கி.மு.300 ல் இருந்து கி.பி.300 என்று சங்க காலத்தைச் சுருக்க முடியாது. அதை கி.மு. 600/500 க்காவது நீள வைக்கும் சான்றுகள் இப்பொழுது கிடைத்துள்ளன.) சங்கப் பாடல்கள் ஒருசிலவற்றால் (மாமூலனார் பாடல் அகம் 251: 5, மாமூலனார் பாடல் அகம் 265: 4-6), தமிழ் மன்னரோடு நந்தர்கள் நல்ல உறவு கொண்டிருந்தார்கள் என்று அறிகிறோம்.

இந்த உறவு நந்தர்களுக்குப் பிறகு வந்த வம்ப மோரியரோடு தொடராமல், பகை ஏற்பட்டது. அசோகனின் தந்தையாகிய பிந்து சார மோரியன் தமிழர் எல்லை வரைக்கும் படையெடுத்து வந்திருப்பதும், நேரடி இல்லாத முறையில், சங்க இலக்கியத்தில் பதிவு செய்யப் பட்டிருக்கிறது (மாமூலனர் - அகம் 251: 12, அகம் 281:8; கள்ளில் ஆத்திரையனார் புறம் 175: 6-7, உமட்டூர் கிழார் மகனார் பரங்கொற்றனார் அகம் 69:10). அந்தப் படையெடுப்பு எல்லையிலேயே தடுக்கப் பட்டதால், அந்தத் தடுப்பு வலுவாக இருந்ததால், பின்னால் அசோகன், தெற்கே, அதற்கு மேல் வராமல் இருந்திருக்கிறான். இதன் விளைவால், தன் கல்வெட்டுக்களில் சேர, சோழ, பாண்டியர் மற்றும் அதிகரின் நாடுகளை எல்லையில் இருந்ததாய் அசோகன் குறித்திருக்கிறான். [மகதப் பேரரசு வென்றெடுத்த முந்நாளைய மக்களாட்சி (=சனபதம்), முடியாட்சி நாடுகள் பற்றியும் ஒருசில நுணவக் (minor) குறிப்புகளும் தமிழிலக்கியத்தில் பதிவு செய்யப்பட்டு இருக்கின்றன.]

மோரியரை வம்பர் என்று குறிப்பிட்டிருப்பதை இங்கு நாம் சரியாய் விளங்கிக் கொள்ள வேண்டும். வம்பர் என்பவர் வம்புடையவர் அல்ல; பழைய பொருளின் படி, அவர் புதியவர்; வம்பர் என்று சொன்னதாலேயே, சங்க காலம் என்பது மோரியருக்கு அருகில் இருந்திருக்க வேண்டும் என்று புரிந்து கொள்ள முடியும். "இப்பத் தான் புதுசா வந்தவங்க" என்று நாம் எப்போது சொல்லுவோம்? நாம் முன்னவராய் இருந்து, மற்றவர் புதிதாய் வந்தவராய் இருந்தால் தானே? அதோடு, நாமும் புதியவரும் குறிப்பிட்ட சம காலத்தில் இருந்தோம் என்பதால் தானே?

இந்த மோரியர் காலத்துச் சான்றுகளை மறுதலித்து, தமிழர் வரலாற்றைப் பின்னுக்குத் தள்ளியவர்களே, ரொமிலா தாப்பர் முதற்கொண்டு, இந்திய, மேலை ஆய்வாளர்களில் மிகுதி. நாவலந் தீவின் தெற்குக் கோடியில் இருக்கும் தமிழர்கள் மோரியருக்கும் முந்து பட்டவர்கள் என்பதை ஏற்பதிலும், சொல்லுவதிலும், ஏனோ பல வரலாற்றாளருக்கும் தொண்டைக்குள் அடைத்துக் கொண்டுவிடுகிறது. [இல்லாவிட்டால் குறைந்தது கி.மு.500 அளவில் தமிழி எழுத்திற்குத் தொல்லியற் சான்று அண்மையிற் கிடைத்த பின்னும், "அசோகன் பிரம்மி, அதிலிருந்து வந்த தமிழ் பிரம்மி" என்று சல்லியடித்துக் கொண்டிருப்பார்களா, என்ன?]

இது தவிர, ஆசீவகம் பற்றிய தொடர்பும் சங்க காலத் தொடக்கத்தை நந்தருக்கு அருகில் கொண்டு போகும். புத்த நெறி, செயின நெறிக்குச் சம காலத்தில் தோன்றி, பின் அந்த இரு நெறிகளிலும், (ஏன், நம்மூர் சிவ, விண்ணவ நெறிகளிலும் கூடச்) செரித்துக் கொள்ளப் பட்ட ஆசீவக நெறியின் தோற்றம் கி.மு 600க்கும் பிறகு என்றே இந்திய வரலாற்றில் புலப்படுகிறது. கிட்டத் தட்ட மற்ற நெறிகளுக்குள் ஆசீவகம் செரித்துக் கொள்ளப்பட்ட காலம். கி.பி. 400 ஆகும். ஆசீவக நெறி பற்றிய பரபற்றி(பரபக்தி)யாய் இல்லாமல், நேரடிப் பங்களிப்பான பாடல்கள் இந்தியாவில் தமிழகத்தில் மட்டுமே, அதுவும் சங்க இலக்கியத்தில், புறநானூற்றில் மட்டுமே, கிடைக்கின்றன. (பெரிதும் பேர்பெற்ற யாதும் ஊரே, யாவரும் கேளிர் என்ற கணியன் பூங்குன்றனார் பாடலும் ஓர் ஆசீவகப் பாடலே. சங்க இலக்கியத்தில் கிடக்கும் ஆசீவகப் பாடல்களைத் தொகுத்து விளக்கத்துடன் ஒரு கட்டுரை வரைய வேண்டும்.) ஆசீவக நெறி தமிழ்நாட்டில் தொடங்கியிருக்கப் பெருத்த வாய்ப்பு உண்டு என்றே ஆசீவகம் - தமிழர் தொடர்பு பற்றி மிக ஆழமாகப் பேசிய பேரா. க.நெடுஞ்செழியனும், வெங்காலூர் குணாவும் தங்கள் நூல்களில் சொல்லுகிறார்கள்.

அவர்களின் ஆய்வு முடிவுகளை ஏற்றுக் கொண்டால், சங்க இலக்கியம் என்பது ஆசீவக நெறியின் உச்ச காலத்திற்கு (நந்தர்-மோரியர் காலம்) சம காலத்தில் தொடங்கி இருக்க வேண்டும் என்றே சொல்ல வேண்டியிருக்கிறது. (இன்றைக்கோ ஆசீவக நெறி என்று ஒன்று தமிழ்கத்தில் இருந்தது என்றே அறியாமல், அதைச் செயின நெறிக்குள்ளேயே பொருத்திச் சொல்லுவதும், அதன் கருத்துக்களைச் செரித்துக் கொண்ட சிவ, விண்ணவ நெறிகளுக்குள் தேடுவதுமாய், மாறிப் போனது. மெய்யியல் உலகில் நம்முடைய பெருமை நமக்கே தெரியவில்லை. :-) ஊழ் பற்றி இன்றும் நிலவும் இந்திய அடிப்படைக் கருத்து ஆசீவக நெறிக்குச் சொந்தமானதே!)

மூன்றாவதான செய்தி, கி.மு. 2-ஆம் நூற்றாண்டைச் சேந்த கலிங்க அரசன் காரவேலன் என்பவன் தன்னுடைய அத்திகும்பாக் கல்வெட்டில் குறிப்பிட்டிருப்பதாகும். பதினேழு வரிகளைக் கொண்ட காரவேலன் கல்வெட்டில், 11-13 வது வரிகள் கிட்டத்தட்ட 1300 ஆண்டுகள் தமிழ் மூவேந்தர்கள் யாராலும் உடைக்க முடியாத ஒரு கூட்டு முன்னணி வைத்திருந்ததையும், அந்தக் கூட்டணியை அந்துவன் என்ற அரசன் முறியடித்துக் கொண்டு கொங்கு நாட்டைக் கைப்பற்றி, கழுதை கொண்டு மாற்றார் நிலத்தை உழுது அவமதித்ததையும், பின்னால் அந்த நாட்டை ஆவிக் குடியினரிடம் திருப்பிக் கொடுக்காமல், தானே வைத்துக் கொண்டு அங்கு வணிக நகரமாக pithumda (egg city; கருவூர்) என்பதை ஏற்படுத்தியதையும், பேசுகின்றன. அந்த நாட்டைப் பின்னால் காரவேலனும் பிடித்துச் சிறிது காலம் ஆட்சிசெய்ததையும் அந்தக் கல்வெட்டுக் குறிப்பிடுகிறது. மாற்றார் யாரும் 1300 ஆண்டுகள் நுழையமுடியாத தமிழர் எல்லைக்குள் தான் நுழைய முடிந்ததை ஒரு பெரிய சாதனையாகக் கலிங்க அரசன் கருதியதாலேயே, அதைப் பதிவு செய்திருக்கிறான். [இந்த அந்துவன் என்பவன் இரும்பொறை என்னும் சேரக் கிளையின் முதல் அரசனான அந்துவன் சேரல் இரும்பொறையாக இருக்க முடியும். இரும்பொறை மரபினர் இன்று ஆன்பொருநை - அமராவதி - ஆற்றங்கரையில் இருக்கும் கருவூரைத் தலைநகராய்க் கொண்டு ஆண்டவர்கள்.]

கலிங்க அரசன் குறித்திருந்த 1300 என்ற சொற்தொகுதியைப் பார்த்து "அப்படி ஒரு நீண்ட காலத்திற்கு ஒரு கூட்டணி இருந்திருக்க முடியாது" என்ற தற்சார்பு அவநம்பிக்கையில் அதை 113 என்று திருத்திப் படித்ததாக, காரவேலனின் கல்வெட்டைப் படியெடுத்துப் பின் படித்து விவரித்த காசி இந்து பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த, வடபுலத்து ஆய்வாளர்கள் ஆன கே.பி. ஜெய்ஸ்வாலும், பேரா. ஆர்.டி. பானர்ஜியும் கூறியிருக்கிறார்கள். இவர்களின் திருத்திய தற்சார்பு வாசிப்பிற்குப் பின்னால், 1300 ஆண்டுகள் என்ற கல்வெட்டில் இருந்த முதற் கூற்றை வரலாற்று ஆய்வாளர் மிகப் பலரும் மறந்து போனார்கள்; ஜெய்ஸ்வாலையும் பானர்ஜியையும் அப்படியே கிடுக்கின்றிப் (without criticism) பின்பற்றி கிளிப்பிள்ளை போல 113 ஆண்டுகள் என்றே பலரும் சொல்லி வருகிறார்கள். உண்மையில் ஓர்ந்து பார்த்தால், காரவேலனுக்கு 1300 ஆண்டுகளுக்கு முன்னால் தமிழ் மூவேந்தரின் ஆட்சி இருந்திருக்கப் பெருத்த வாய்ப்புண்டு.

இனி மோரியருக்குப் பின் உள்ள நிலையை அவதானிப்போம். அசோகரின் பேரனுக்குப் பின்னால், மகதப்பேரரசு சுருங்கி, சுங்கர்களின் ஆட்சிக்கு வந்து, வேத நெறி மீண்டும் தழைத்து, பிறகு அவர்களின் ஆட்சியும் கவிழ்ந்து, கன்வர்களின் ஆட்சி ஏற்பட்டது. கன்வர் ஆட்சியில் மகதம் என்பது அளவில் மிகச் சுருங்கி பாடலிக்கு அருகில் குறுகிய விரிவு கொண்டதாய் ஆகிப் போனது. இருந்தாலும் அவர்கள் அரசு, இமைய எல்லைக்கு அடியில் இருந்து, இமயத்தைக் காத்துக் கொண்டு தான் இருந்தது. அதே பொழுது, மகத அரசின் மாதண்ட நாயகர்கள் பலர் நடுவண் அரசின் அதிகாரத்தில் இருந்து பிரிந்து, தனித் தனியே தம் அரசுகளை ஏற்படுத்திக் கொண்டனர்.

அப்படி ஒரு மாதண்ட நாயகர் தான் இன்றைய மாராட்டியத்தில் கோதாவரி ஆற்றங்கரையில் இருக்கும் paithan (தமிழில் படித்தானம்) என்ற ஊரைத் தலைநகராய்க் கொண்ட சாதவா கன்னர் ஆவர். [சாதவா கன்னர், எல்லோரும் நினைப்பது போல ஆந்திரத்தில் தோன்றியவர் இல்லை. அந்தக் காலத்தில் ஆந்திர நாடு என்பது கிடையாது. அவர் மாராட்டியத்தில் தோன்றி, கொஞ்சம் கொஞ்சமாய் தம் அரசை விரித்து இன்றைக்கு 1800/2000 ஆண்டுகள் அளவில் தான் ஆந்திரத்திற்குள் ஊடுருவினர்.] கன்வரின் ஆட்சியைக் கவிழ்த்து மகத அரசையே தங்கள் கைக்குள் சாதவா கன்னர் கொண்டு வந்த நிலை கி.பி. 100 அளவிலேயே ஏற்பட்டது.

அதே காலத்தில், கலிங்கம் என்ற நாடு பாலூரைத் (இந்தக் கால ஒரியா மாநிலத்துப் பாரதீப்பைத்) தலைநகராய்க் கொண்டு இருந்தது. கலிங்க நாடு கடற்கரையை ஒட்டியது. அதன் மேற்கு எல்லைகள் காடுகளால் நிறைந்தது. அதன் தெற்கு (இன்றைய ஆந்திர மாநிலத்தின் நெய்தல் நிலம் தவிர மற்றவை எல்லாமே) முல்லையும் பாலையுமாய் இருந்ததால், தமிழர்களின் வடநாட்டுத் தொடர்பே பெரும்பாலும் கருநாடகம் வழியாகத்தான் இருந்தது. கருநாடகமும் சாதவா கன்னரின் அரசிற்குள் அடங்கியதே. கருநாடக மக்கள் கொடுங் கருநாடராய்ச் சிலம்பிலும் அதற்குப் பின்வந்த நூல்களிலும் சொல்லப் படுகின்றனர். கொடுமை என்பதற்கு இந்தக் காலப் பொருள் கொள்ளக் கூடாது. அவர் மொழி கொடுந்தமிழாய் இருந்ததையே அந்தச் சொற்றொடர் குறிக்கிறது. பழங் கன்னடம் என்பது பழந்தமிழுக்கு நெருங்கி, கொடுந்தமிழாய் இருந்தது. கன்னடத்தின் இப் பழநிலையை மறுப்பது தமிழருக்கும் வடபுலத்தாருக்கும் இருந்த தொடர்பையே மறுப்பதாகும்.

கி.மு.600ல் இருந்து கி.பி.300 வரை இந்திய அரசுகள் என்பவை இன்றைய ஆந்திரப் பிரதேசத்தையும், ஒரிசாவையும், சத்திசுகாரையும், சார்க்கண்ட், பீகார், வங்காளம் போன்ற இடங்களை முழுதும் ஆட்கொள்ளவில்லை. இந்த இடங்கள் எல்லாம் பெருங்காடுகளாய் இருந்தன. காடுகள் குறைந்திருந்த உத்திரப் பிரதேசம், ஓரளவு மத்தியப் பிரதேசம், குசராத், மாராட்டியம் போன்றவை வழியாகத்தான் வடக்கு/தெற்கு வணிகம் நடந்தது.

இந்தப் பாதைகள் வணிகத்துக்கு மட்டுமல்லாது, அரணம் (army) நகர்வதற்கும், கோட்டைகள் அமைத்துக் காவல் செய்வதற்கும் முகன்மையானவை. இந்தப் பாதைகளைக் கைக்குள் வைத்துக் கொள்ளாத எந்த்தப் பேரரசும் மிக எளிதில் குலைந்து போகும். அதே போல எந்த எதிரியும், இந்தப் பாதைகளைத்தான் முதலில் கைக்கொள்ளத் துடிப்பான். மாதண்ட நாயகர்கள் இந்தப் பாதைகளின் விளிம்புகளில் தான் பேரரசால் பணிக்கு அமர்த்தப் படுவார்கள். இந்தப் பாதைகள் பெருவழிகள் என்று வரலாற்றில் சொல்லப்படும். அப்படி அமைந்த பாதைகளில், உத்தர, தக்கணப் பாதைகள் பெரிதும் முகன்மையானவை.

வடமேற்கில் தக்கசீலம் தொடங்கி, நான்கு ஆறுகளைக் கடந்து (ஜீலம், செனாப், ராவி, சட்லஜ்) கங்கைக் கரை கடந்து அத்தினாபுரம் வழி, சாவத்தி, கபிலவாய்த்து, குசினாரா, வேசாலி, பாடலி வழியாக அரசகம் (முதல் இந்தியப் பேரரசான மகத்தின் தலைநகரான இராசகிருகம் - Rajgir) வரை வந்து சேருவதை உத்தர பாதை என்று சொல்லுவார்கள்.

இதே போல, கோதாவரியின் வடகரையில் இருக்கும் படித்தானம் (prathisthana>paithan; இன்றைய அவுரங்காபாதிற்கு அருகில் உள்ளது) தொடங்கி அசந்தா, எல்லோரா வழியாக வடக்கே நகர்ந்து, தபதி, நர்மதை ஆறுகளைக் கடந்து, நர்மதைக் கரையில் இருக்கும் மகேசர் வந்து, பின் கிழக்கே திரும்பி, குன்றுப் பகுதியில் (Gond country) இருக்கும் கோனாதா வந்து, உஞ்சைக்குப் (Ujjain) போய், பில்சா(Bhilsa) வந்து நேர்வடக்கே திரும்பி தொழுனை (=யமுனை) ஆற்றின் கரையில் இருக்கும் கோசாம்பி (kosam) வந்து, அயோத்தி என்ற சாகேதம் (Fyzaabaad) வந்து முடிவில் சாவத்தியில் சேருவது தக்கணப் பாதையாகும். (சாவத்தி கோசலத்தின் தலைநகர் கிட்டத்தட்ட நேபாள எல்லை. கோசலமும், மகதமும் கி.மு. 6ம் நூற்றாண்டில் ஒன்றிற்கொன்று போட்டி போட்டிருந்த நாடுகள்.)

உத்தர, தக்கணப் பாதைகள் போக, கங்கையை ஒட்டியே மேற்கே சென்றால் பாடலியில் இருந்து வாரணசி வழி, கோசாம்பியை அடையும் பெருவழியும் அந்தக் காலத்தில் முகன்மையான ஒன்றாகும்.

எந்த வடநாட்டுப் படையெடுப்பும் இந்த மூன்று பாதைகளைக் கணக்கில் எடுத்துக் கொள்ளாமல் நடக்க முடியாது.

சாதவா கன்னரைத் தான் சிலம்பு ஆசிரியர் நூற்றுவர் கன்னர் என்று குறிப்பிடுகிறார். சிலம்பில் நூற்றுவர் கன்னர் பற்றிய செய்தி கொஞ்சம் விதப்பானது. சாதவா கன்னரின் முகன்மை, அவர்கள் தக்கணப்பாதையின் வாயிலைக் காத்த மாதண்ட நாயகராய் இருந்ததாலே தான் ஏற்பட்டது. தவிர, அதே காரணத்தால், நூற்றுவர் கன்னரைத் தொடர்பு கொள்ளாமல், எந்தத் தமிழரசரும் வடக்கே படையெடுக்க முடியாத நிலை அந்தக் காலத்தில் இருந்தது. தமிழக வரலாற்றை இந்திய வரலாற்றோடு பொருத்திக் காட்ட முன்வந்து நிற்பது சாதவா கன்னர் என்னும் நூற்றுவர் கன்னர் பற்றிய செய்தியே.

வடமொழியில் சாதவாகன என்று எழுதும் போது நம்மை அறியாமல் சாத வாகன என்று பிரித்தே படிக்கிறோம். ஆனால், தமிழ் வழியே பார்த்தால், சாதவா கன்ன என்று படிப்பதே சரியாக இருக்கும். சதம் என்பது நூறு என்ற எண்ணைக் குறிக்கும் வடமொழிச் சொல் (அதே பொழுது, அந்தச் சொல்லின் வேரைத் தமிழிலேயே இனம் காணமுடியும். சடைத்தல், சதைத்தல் என்பது நொறுக்குதல்/நூறுதல் என்ற பொருட்பாடு கொண்ட சொற்கள். "அவனைப் போட்டுச் சாத்திட்டான்" என்று இன்றைய வழக்கிலும் சொல்லுகிறோம் அல்லவா? அந்தச் சாற்றுதல்/சாத்துதல் என்ற சொல்லுக்கு நொறுக்குதல் என்னும் பொருட்பாடு உள்ளது. நூறுதலின் பெயர்ச்சொல் நூறு. நூறுதல் என்பது பொடியாக்குதல் என்ற பொருள்படும். (hundred - நூறு என்ற சொல்லும் பொடி என்ற பொருளில் எழுந்தது தான். அதை வேறு ஒரு இடத்தில் பார்க்கலாம்.) சதைக்கப் பட்டதும் பொடி என்னும் சதம் தான். ஆக உட்கருத்து தமிழே. சதம்>சதவர்>சாதவர்>சாதவா = நூற்றுவர்.

கன்னர் என்பது கர்ணி என்று திரிகிறது. இங்கே காது, கன்னக்குழி போன்றவை பொருளற்றுப் போகின்றன. முதல் சாதவ கன்ன அரசன் சிமுகனைக் காட்டிலும் இரண்டாம் அரசன் கிருஷ்ணன் என விதப்பாகச் சொல்லப்படுகிறான். பாகத மொழியில் கிருஷ்ண என்பது கன்ன என்றே வரும். கன்னன் என்பது சோழன், பாண்டியன், சேரன் என்பது போல ஒரு குடிப்பெயராய் இருக்க முடியும்.

சந்தனம்/சாரல் பூசிய இனக்குழு சாரல் குலம்>சாரலன்>சேரலன் என்று ஆனது போல, சாம்பல் = பாண்டில் பூசிய இனக்குழு பாண்டிய குலம்>பாண்டியன் என்று ஆனது போல, கோழி நிறம் (= சிவந்த பொன்னிறம் அமிலச்செறிவைப் பொருத்து மஞ்சளும்/சிவப்புமாய் மாறும் வேதிப்பொருளின் நிறம்) பூசிய இனக்குழு கோழி>சோழிய குலம்>சோழியன் என்று ஆனது போல, கருநிறம் பொருந்திய/பூசிய இனக்குழு கருநன்>கன்னன் என்று ஆகியிருக்க வாய்ப்பு உண்டு.

[சேர, சோழ, பாண்டியர்களின் வெவ்வேறு குலப்பெயர்கள் எப்படி இனக்குழுப் பண்பை உணர்த்துகின்றன என்ற என் கட்டுரை இன்னும் முடியாது இருக்கிறது. பிறிதொரு நாள் பார்க்க வேண்டும். இன்றைக்கும் சாரல், திருநீறு, மஞ்சள்/குங்குமம் ஆகியவற்றின் தாக்கம் தமிழர்/மலையாளிகளிடையே இருப்பதை உணர்ந்தால் இனக்குழுப் பழக்கம் எங்கே இருந்து பிறந்தது என்று உணர முடியும். உறுதியாக சாரல், திருநீறு, மஞ்சள்/குங்குமம் என்ற கருத்து சமய நெறி சார்ந்த கருத்து அல்ல. அது இனக்குழு (tribal) சார்ந்த வழக்கம். இன்றைக்கும் ஆத்திரேலியப் பழங்குடிகள் பல்வேறு வண்னம் பூசித் தங்களை அடையாளம் காண்பிப்பதை ஓர்ந்து பார்க்கலாம். ஆத்திரேலியப் பழங்குடியினரும், பழந்தமிழரும் ஈனியல் முறையில் உறவு கொண்டவர் என்ற ஆய்வு முடிபை இங்கு ஒருசேரப் பார்க்கலாம்.]

நூற்றுவர் கன்னரின் முதல் தலைநகர் இன்றைய அவுரங்காபாதிற்கு அருகில் கோதாவரி ஆற்றின் வடகரையில் உள்ள படித்தானம்(>பயித்தானம்>பைத்தான்) என்று பார்த்தோம். நம்மூரில் ஆற்றங்கரையின் அருகில் உள்ள துறையை படித்துறை என்று சொல்வதில்லையா? படித்தானம் என்பதும் படித்துறை என்பதைப் போலத்தான். படித்தானத்திற்கு மேற்கில் விரைந்தால் இந்தக் கால லோனாவாலாவும், அந்தக் காலக் கார்லே குகைகளும் வந்துசேரும். (கார்லே குகையில் தான், இந்தியாவின் மிகப் பழமையான புத்த சேத்தியங்களில் ஒன்று (கி.மு.280) உள்ளது.)

கார்லேயில் இருந்து இன்னும் மேற்கே போனால் மேற்குக் கடற்கரையில் இருக்கும் சோபாரா துறைமுகம் வந்து சேரும். (இது இன்றைய மும்பைக்கு மிக அருகில் உள்ளது. இந்தக் கால இந்தியத் துறைமுகங்களில் பலவும் பழைய துறைமுகங்களுக்கு அருகில் எழுந்தவை தான்; காட்டாக முசிறி/கொச்சின், கொற்கை/காயல்பட்டினம்/தூத்துக்குடி, புகார்/நாகப்பட்டினம், பாலூர்/பாரதீப், தாமலித்தி/ஆல்தியா, சோபாரா/மும்பை, பாருகச்சா/பரூச்). சோபாரா துறைமுகம் (சோபாராவுக்குச் சற்று முன்னே கன்னேரிக் குகைகள்) நூற்றுவர் கன்னரின் ஆளுகைக்கு உட்பட்டு இருந்தது. நூற்றுவர் கன்னருக்கும் முன்னால், மகத அரசிற்கு முகன்மையாக சோபாராவும், நர்மதையின் கழிமுகத்தில் இருந்த பாரகச்சா(இந்தக் கால பரூச் Bhaarukaccha>Broach)வும் துறைமுகமாய் இருந்திருக்கிறன. இந்தத் துறைமுகங்கள் அரேபிய, உரோம வாணிகத்திற்கு உறுதுணையாய் இருந்தவை. இதே போல வங்க விரிகுடாவில் தாமலித்தி இருந்திருக்கிறது. அது கீழைக் கடல் வாணிகத்திற்குத் துணையாக இருந்திருக்கிறது.

சேரன் படையெடுப்பை விவரிக்கத் தேவையான களனை விவரித்த கையோடு, (நேரம் கிடைக்கும் போது உத்தர, தக்கணப்பாதைகளை வரைபடம் கொண்டு காட்ட முயல்வேன். இப்பொழுது படிப்போர் பொறுத்துக் கொள்ளுங்கள்.) சிலம்பிற்குள் செல்லுவோம். அதில் வரலாற்றுப் பின்புலம் கொண்ட செய்திகளை மட்டும் பார்ப்போம்.

பொதுவாய் சிலம்பில் இன்று நாம் காணும் எல்லாமே இளங்கோ எழுதியதல்ல. சிலம்பில் முன்பின்னாக ஓரிமை இல்லாமல் இருக்கும் பகுதிகளைக் கவனித்துப் பார்த்தால் ஒழிய நமக்கு எது இளங்கோ எழுதியது, எது அவர் எழுதாது என்று புரிபடாது போகலாம்.

முதலில் பதிகத்துக்குள் போவோம்.

அன்புடன்,
இராம.கி.

16 comments:

Anonymous said...

Dear Sir,

When no records or scriptures of Ajivakam has not survived to this day anywhere how can you say that the very concept of Uzh is a legacy of Ajivakam. No one has any proof of this matter, it may or it may not be so. You cannot determine what Ajivakam was about from one or two songs from the Sangam era.

I do not doubt the fact that some Sangam poets were Ajivakars, but you cannot use what some poets say define this is what Ajivakam was! You can use it to get a direction about what Ajivakam might have been, but that is all!

Let us take an example, while most Ajivakars did not believe in god. There were many who did like for example Goshala Mahakali (Siva devotee, some even say Mahakali was the founder of Ajivakam) and Vishnu Guptha (Vishnu devotee). Therefore, if we find some of their works do we conclude that Ajivakars were Siva or Vishnu Devotees?

In addition, we cannot say that Ajivakam came about in south India, because we have no proof. What we do know is that the most amounts of references about Ajivakam have been found in Sangam literature. However, we know that when compared to south India very few records have survived in north India. It may be due to this.

This may be because north India Ajivakars did not leave behind any written evidence. This may be because Ajivakam may have been more popular in South India. As I have pointed out, this can mean any number of things not just that Ajivakam came about in South India.

The Ajivakam sect reached its peak during the time of Asoka and not during the time of this father or grandfather. Then because of the evangelism of Asoka Buddhism swept both Ajivakam & Jainism off India, while Jainism was able to survive in some places, Ajivakam could not.

Sir, historians or other intellectuals should never be biased. We should never try to twist history to support our theories, but should let the history determine our theories. Never be hasty where history is concerned, see what has happened because some historians were hasty in Sri Lanka?

அரை பிளேடு said...

//இல்லாவிட்டால் குறைந்தது கி.மு.500 அளவில் தமிழி எழுத்திற்குத் தொல்லியற் சான்று அண்மையிற் கிடைத்த பின்னும், "அசோகன் பிரம்மி, அதிலிருந்து வந்த தமிழ் பிரம்மி" என்று சல்லியடித்துக் கொண்டிருப்பார்களா, என்ன?] //

பிரம்மி எழுத்து வடிவங்களுக்கும் தமிழ் வட்டெழுத்து வடிவங்களுக்கும் தொடர்பே இல்லை. பிரம்பியிலிருந்துதான் தமிழ் தனது எழுத்துருவை பெற்றது என்பது ஆயாசம் தருகிறது. விக்கிபீடியாவிலும் இவ்வாறே உள்ளது.

தமிழ் எழுத்துக்களின் தனித்தன்மை நிறுவப்படல் மிக அவசியம்.

Machi said...

\\இன்று ஆன்பொருநை - அமராவதி - ஆற்றங்கரையில் இருக்கும் கருவூரைத் தலைநகராய்க் கொண்டு ஆண்டவர்கள்.] \\

கருவூர் என்பது மருவி "கரூர்" என அழைக்கப்படுகிறது.

வெற்றி said...

ஐயா,
பதிவுக்கு மிக்க நன்றி. இதுவரை சிலப்பதிகாரம் படித்ததில்லை. உங்களின் இப் பதிவின் மூலம் கன சுவையான தகவல்களை அறிய முடிந்தது. அடுத்த தொடரை மிகவும் ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்.

Anonymous said...

//Dear Sir,

When no records or scriptures of Ajivakam has not survived to this day anywhere how can you say that the very concept of Uzh is a legacy of Ajivakam.//

and what you think is Aasivakam? It doesn't matter what you think, Aasivakam came from Tamils. See this is why it is better to say everything belongs to Tamils, instead of giving North Indians a 'chance,' then they go around saying 'boo yah everything is ours!'

Dude, you should stop being biased first. If Iraamaki wanted, he could have said everything is from Tamil but he didn't. He is stating the fact and we are very sorry that Lot of things did really come from Tamil and Tamils, too bad for you! HAHAH!

The British translated Buddhist scripts in English and Sinhala and brainwashed the Sinhalese. The whiteman always smart, look at what he did to India, instead of making Indians unite behind Subas Chandra Bosh or other rebels, he made Gandhi a popular guy and made all Indians his slave(don't ask how, lot of English books are published in India... hail our British fathers no?)

The British did the same thing in Sri Lanka. That got nothing to do with what Iraamaki is trying to say here. Let the Tamil analyze the Tamils' work, we are tired of foreigners trying to feed us puttu and soru, we want to taste it our self. bye bye

G.Ragavan said...

சிலம்பைத் தட்டுத் தடுமாறிப் படிக்கையில் உண்டான ஐயங்களும் எழுந்த கேள்விகளும் உங்கள் பதிவினால் தெளிவுறும் என்றே கருதுகிறேன். முதற்கண் அதற்கு நன்றி பல.

இந்தப் பாதைகளையும் பகுதிகளையும் கைவரைபடம் அளவிலாவது காட்ட முடியுமானால் மிக நன்றாக இருக்கும். செய்வதாக நீங்களே சொல்லியிருக்கின்றீர்கள். காத்திருக்கிறோம்.

குமரன் (Kumaran) said...

ஐயா. இந்தக் கட்டுரையை ஒரு முறை படித்திருக்கிறேன். அரக்கர் என்ற சொல்லைப் பற்றிய கட்டுரைத் தொடரில் இருந்த சில கருத்துகள் இங்கும் இருப்பதைக் காண முடிகிறது. ஆனால் இந்தக் கட்டுரை முழுக்க முழுக்கப் புரிந்துவிட்டது என்று சொல்ல இயலாது. கிடைத்த பதில்களை விட கேள்விகளே மிகுதி. நேரம் கிடைக்கும் போது இன்னொரு முறை படித்துப் பார்க்கிறேன். அப்போதும் தெளிவாகாத கேள்விகளைக் கேட்கிறேன். இயன்றால்/நேரமிருந்தால் பதில் சொல்லுங்கள்.

இராம.கி said...

Dear anonymous,

I would suggest that you read the books and articles published by Prof. K.Nedunjezian, of Tamil University, Tanjore along with those of Vengaaluur Guna.

My own understanding of Ajivikam and its relation to Tamil civilization has to be written down; I intend to do so in the coming years. In the article above, I have not quoted my own understanding. I only said that if the assertions by Nedunjcezian are true, then the timimg of the sangam period has to be reassessed.

I will take note of your criticisms and will reply to that in a separate article in future. Please bear with me till then. My present concentration is in Cilappathikaaram vanjikkaaNdam.

By the way, why you have to remain anonymous for stating your views? Let us talk to each other transparently.

With regards,
iraamaki

இராம.கி said...

அன்பிற்குரிய அரை பிளேடு,

தமிழி எழுத்துக்களுக்கும் தமிழ் வட்டெழுத்துக்களுக்கும் மிகுந்த தொடர்பு இருக்கிறது என்றே பல்வேறு தமிழ் கல்வெட்டு ஆய்வாளர்கள் சொல்கிறார்கள்.

தமிழி என்ற எழுத்து பல்லவர் காலத்தில் இருவகையாகப் பிரிந்து ஒன்று பல்லவர் நாட்டிலும், இன்னொன்று பாண்டிய நாட்டிலுமாய் இரு தோற்றங்கள் காட்டியது. பாண்டியர் நாட்டில் தோற்றம் காட்டிய எழுத்தே வட்டெழுத்தாக உருவெடுத்தது. பின்னால், பேரரசுச் சோழர்கள் பல்லவர்களுடைய எழுத்தை அப்படியே பின்பற்றினார்கள். பேரசுச் சோழர்கள் பாண்டிய நாட்டை வென்ற பிறகு, சிறிது சிறிதாக வட்டெழுத்தை ஒழித்து பல்லவர்கள் எழுத்தையே பாண்டிநாட்டில் புகுத்தினர். ஒரே மொழி இரண்டு எழுத்து என்ற நிலைத் தமிழ் நாட்டில் 500-கி.பி.1000 வரை இருந்தது. அதை முடிவுக்குக் கொண்டுவந்ததாய் ஆய்வாளர்கள் சோழன் இராசராசனையே அடையாளம் காட்டுவர். பின்னால் சுந்தர பாண்டியன் சோழரைத் தோற்கடித்து பாண்டிய ஆட்சியை 13 ஆம் நூற்றாண்டில் நிலைநாட்டிய போதும் கூட வட்டெழுத்தை அவன் மீண்டும் கொண்டுவந்து பெரிதும் பரிந்துரைக்கவில்லை. சோழர்களின் ஆணை தமிழ் எழுத்தைப் பொறுத்த மட்டும் நிலைபேறு கொண்டது. இன்றைய எழுத்து பேரசுச் சோழர் பரிந்துரைத்ததே. அதே பொழுது வட்டெழுத்தில் இருந்து உருவான கிரந்த எழுத்து இன்றைய மலையாள எழுத்தாய் வளர்ந்து நிற்கிறது. ஒரு முரண் நகையாய் அந்த எழுத்து காஞ்சிபுரத்திலும் சேரலத்திலும் பயிலப்பட்டு வடமொழி எழுதப் பயன்பட்டது. வட்டெழுத்து வட மொழிக்கு வாகாய் அமைந்தது. கிரந்த எழுத்தும் தமிழர்களின் பங்களிப்பே. அதைப் பற்றியும் நாம் பெருமைப்பட வேண்டும். ஆனால் ஒன்று மற்றொன்றைக் குலைப்பதாய் இருக்கக் கூடாது.

"தமிழியில் இருந்து பெருமி எழுந்தது" என்பது இன்னும் பல இந்திய ஆய்வாளர்களால் ஏற்றுக் கொள்ளப் படவில்லை. மாறாகத் தமிழில் பலரும் அவ்வாறு கொள்ளுகிறார்கள். ஆனாலும் ஐராவதம் மகாதேவன் போன்றோரும், அவருடைய பள்ளியினரும் இன்னும் "பெருமியில் இருந்தே தமிழி எழுந்தது" என்று சொல்லிவருகிறார்கள். இப்போது கல்வெட்டு ஆய்வாளர்களிடையே நடந்து கொண்டிருப்பது ஒரு தொடர்ச்சியான உரையாடல்.
எப்பொழுது ஒரு முடிவிற்கு வரும் என்று சொல்ல இயலாது. நான் புரிந்து கொண்டவரை, தமிழியின் முன்மையும், தனித்தன்மையும் கொஞ்சம் கொஞ்சமாய் உணரப்பட்டாலும், நாவலந்தீவு எங்கணும் ஏற்பதற்கு நாட்களாகும். ஏனென்றால் இந்து-இந்தி-இந்துத்துவம் என்ற போக்கு தம் அரசியல் காரணமாய் இதை ஏற்கவிடாது போகலாம்.

அன்புடன்,
இராம.கி.

இராம.கி said...

அன்பிற்குரிய குறும்பன்,

நீங்கள் சொன்னது போல் கருவூர் தான் கரூர் என்று இன்று அழைக்கப் படுகிறது.

அன்பிற்குரிய வெற்றி,

வருகைக்கும் கனிவிற்கும் நன்றி,

அன்புடன்,
இராம.கி.

இராம.கி said...

Dear anonymous2,

I take note of youe points too. Please bear with me for some time. I intend to write a separate series on Ajivikam

Till then,

iraamaki

இராம.கி said...

அன்பிற்குரிய இராகவன்,

இப்பொழுதுதான் என் அச்சியை, அச்சி - கண்ணி - படியாக்கி (printer - scanner - copier) யாக மாற்றியிருக்கிறேன். இந்தக் கருவியைப் பழகிக் கொண்ட பின்னால், வரைபடத்தைப் போடுகிறேன்.
(கண்ணித்தல் என்ற சொல்பற்றி:
ஒரு கண்ணுத் துணியில் கண்- கண்ணாய்ப் பார்த்து பின்னல் வேலை செய்வார்களே பழைய காலத்துப் பெண்கள், நினைவிருக்கிறதா, அப்படிக் கண்-கண்ணாய் ஒரு படத்தை உள்வாங்கிச் கணியில் சேமிக்கும் செயல் கண்ணித்தல் என்று ஆகும். வருடுதல் என்ற வினையை அது பொருத்தமில்லாத காரணத்தால், நான் புழங்குவதில்லை.)

உங்களுக்கு அவக்கரம் இருக்குமானால், அறிஞர் தருமானந்த கோசாம்பியின் கீழ்க்கண்ட நூலைப் பார்த்துக் கொள்ளுங்கள்.

The Culture and Civilization of Ancient India in historical outline - DD Kosambi, Vikas Publishing House, 576, Masjid Road, Jangpura, New Delhi 110014.

என்ற பொத்தகத்தில் 136-137 ஆம் பக்கத்தில் இருக்கும் வரைபடத்தைப் பார்த்துக் கொள்ளுங்கள். அந்த வரைபடத்தைத் தான் நான் கண்ணித்துப் போடவேண்டும்.

அன்பிற்குரிய குமரன்,

தொடரைப் படித்துவாருங்கள். உங்கள் கேள்விகளைக் குறித்து வைத்துக் கொள்ளுவேன். என்னால் இயன்றவரை மறுமொழி அளிப்பேன்.

அலுவல் ஓய்வு பெற்றபிறகு, மெதுவாகவே ஏதொன்றையும் செய்ய முடிகிறது. மறுமொழி அளிப்பதில் சுணக்கம் இருந்தால் பொறுத்துக் கொள்ளுங்கள்.

அன்புடன்,
இராம.கி.

Anonymous said...

Dear Rama.Ki,

You do not have reply in English for me, I write in English because I find it difficult to write in Tamil in my Computer, but I am trying to learn Tamil 99 so I may be able to write in Tamil in the future.

Actually, I have no wish to remain anonymous, but some people who visit these blogs do not possess the mental maturity to attack facts with facts, but try to attack those who hold opposing views personally.

I agree completely with you that the Sangam period extends beyond 3 BC as enunciated by some. Personally, I hold the view that the Sangam period must at least be old as or be older than the Egyptian Old Kingdom.

However, I do not agree with people who hold the view that Silambu is older than the Sri Lankan king Gajabahu.

தென்காசி சுப்பிரமணியன் Tenkasi Subramanian said...

சங்ககாலத்தை நீங்கள் முன்னுக்கு எடுத்துச்செல்ல கஜபாகு காலம்காட்டி முறைமை என்பதை நீங்கள் முதலில் உடைக்க வேண்டும். அதை வைத்துத்தான் சங்ககாலம் கி.பி. 250 என்று சங்ககால முடிவைக் கூட பின்னுக்குத் தள்ளுகிறார்கள் என்பேன் நான்.

என்னைப் பொறுத்தவரை சங்ககாலம் கி.பி. 1க்கு முன்னரே முடிந்துவிட்டது. சிலப்பதிகாரம் மணிமேகலையில் வரும் மூவேந்தரும் சங்ககால மூவேந்தரும் வேறு வேறு. கஜபாகுவை கூப்பிட்ட இரண்டாம் நூற்றாண்டு குட்டுவன் வேறு. பதிற்றுப்பத்தின் குட்டுவன் (in BC) வேறு.

தமிழன்மதம் ஆசிவகம் said...

தமிழர் மதம் "ஆசிவகம்" என்பதை உங்களின் பதிவு மூலம் தெரிந்து கொண்டேன் நன்றி ...!!! ஆசிவகம் மீண்டும் எழுப்பும் பணிகளை செய்து வருகிறோம் ....ஆசிவகம் மதம் பற்றிய முழு தகவலும் அளிக்க வேண்டுகிறேன்

VILMEENKODI said...

வில்லவர் மற்றும் பாணர்
____________________________________

பாண்டிய என்பது வில்லவர் மற்றும் பாண ஆட்சியாளர்களின பட்டமாகும். இந்தியா முழுவதும் பாணர்கள் அரசாண்டனர். இந்தியாவின் பெரும்பகுதி பாண ஆட்சியாளர்களால் ஆளப்பட்டது. இந்தியா முழுவதும் பாண்பூர் எனப்படும் ஏராளமான இடங்கள் உள்ளன. இவை பண்டைய பாணர்களின் தலைநகரங்கள் ஆகும். பாணர்கள் பாணாசுரா என்றும் அழைக்கப்பட்டனர்.

கேரளா மற்றும் தமிழ்நாட்டை ஆண்ட வில்லவரின் வடக்கு உறவினர்கள் பாணர்கள் ஆவர். கர்நாடகாவிலும் ஆந்திராவிலும் பாணர்கள் ஆண்டனர்.

வில்லவர் குலங்கள்

1. வில்லவர்
2. மலையர்
3. வானவர்

வில்லவரின் கடலோர உறவினர்கள் மீனவர் என்று அழைக்கப்பட்டனர்

4. மீனவர்

பண்டைய காலங்களில் இந்த அனைத்து துணைப்பிரிவுகளிலிருந்தும் பாண்டியர்கள் தோன்றினர். அவர்கள் துணை குலங்களின் கொடியையும் பயன்படுத்தினர். உதாரணத்திற்கு

1. வில்லவர் குலத்தைச் சேர்ந்த பாண்டியன் சாரங்கத்வஜ பாண்டியன் என்று அழைக்கப்பட்டார். அவர் ஒரு வில் மற்றும் அம்பு அடையாளமுள்ள கொடியை சுமந்தார்.

2. மலையர் குலத்தைச் சேர்ந்த பாண்டியன் மலையத்வஜ பாண்டியன் என்று அழைக்கப்பட்டார். அவர் மலை சின்னத்துடன் ஒரு கொடியை ஏந்தினார்.

3. வானவர் துணைப்பிரிவைச் சேர்ந்த பாண்டியன் ஒரு வில்-அம்பு அல்லது புலி அல்லது மரம் கொடியை ஏந்திச் சென்றார்.

4. மீனவர் குலத்தைச் சேர்ந்த பாண்டியன் ஒரு மீன் கொடியை ஏந்திச்சென்று தன்னை மீனவன் என்று அழைத்துக் கொண்டார்.

பிற்காலத்தில் அனைத்து வில்லவர் குலங்களும் ஒன்றிணைந்து நாடாள்வார் குலங்களை உருவாக்கின. பண்டைய மீனவர் குலமும் வில்லவர் மற்றும் நாடாள்வார் குலங்களுடன் இணைந்தது.


பிற்காலத்தில் வடக்கிலிருந்து குடிபெயர்ந்த நாகர்கள் தென் நாடுகளில் மீனவர்களாக மாறினர். அவர் வில்லவர்-மீனவர் குலங்களுடன் இனரீதியாக தொடர்புடையவர் அல்லர்.

வில்லவர் பட்டங்கள்
______________________________________

வில்லவர், நாடாள்வார், நாடார், சான்றார், சாணார், சண்ணார், சார்ந்நவர், சான்றகர், சாண்டார் பெரும்பாணர், பணிக்கர், திருப்பார்ப்பு, கவரா (காவுராயர்), இல்லம், கிரியம், கண நாடார், மாற நாடார், நட்டாத்தி, பாண்டியகுல ஷத்திரியர் போன்றவை.

பண்டைய பாண்டிய ராஜ்யம் மூன்று ராஜ்யங்களாகப் பிரிக்கப்பட்டது.

1. சேர வம்சம்.
2. சோழ வம்சம்
3. பாண்டியன் வம்சம்

அனைத்து ராஜ்யங்களையும் வில்லவர்கள் ஆதரித்தனர்.

முக்கியத்துவத்தின் ஒழுங்கு

1. சேர இராச்சியம்

வில்லவர்
மலையர்
வானவர்
இயக்கர்

2. பாண்டியன் பேரரசு

வில்லவர்
மீனவர்
வானவர்
மலையர்

3. சோழப் பேரரசு

வானவர்
வில்லவர்
மலையர்

பாணா மற்றும் மீனா
_____________________________________

வட இந்தியாவில் வில்லவர் பாணா மற்றும் பில் என்று அழைக்கப்பட்டனர். மீனவர், மீனா அல்லது மத்ஸ்யா என்று அழைக்கப்பட்டனர். சிந்து சமவெளி மற்றும் கங்கை சமவெளிகளில் ஆரம்பத்தில் வசித்தவர்கள் பாணா மற்றும் மீனா குலங்கள் ஆவர்.

பாண்டவர்களுக்கு ஒரு வருட காலம் அடைக்கலம் கொடுத்த விராட மன்னர் ஒரு மத்ஸ்யா - மீனா ஆட்சியாளர் ஆவார்.

பாண மன்னர்களுக்கு அசுர அந்தஸ்து இருந்தபோதிலும் அவர்கள் அனைத்து சுயம்வரங்களுக்கும் அழைக்கப்பட்டனர்.

அசாம்

சோனித்பூரில் தலைநகருடன் அசுரா இராச்சியம் என்று அழைக்கப்பட்ட ஒரு பாண இராச்சியம் பண்டைய காலங்களில் அசாமை ஆட்சி செய்தது.

இந்தியா முழுவதும் பாணா-மீனா மற்றும் வில்லவர்-மீனவர் இராச்சியங்கள் கி.பி .1500 வரை, நடுக்காலம், முடிவடையும் வரை இருந்தன.

மஹாபலி

பாணர் மற்றும் வில்லவர் மன்னர் மகாபாலியை தங்கள் மூதாதையராக கருதினர். மகாபலி பட்டத்துடன் கூடிய ஏராளமான மன்னர்கள் இந்தியாவை ஆண்டனர்.

வில்லவர்கள் தங்கள் மூதாதையர் மகாபலியை மாவேலி என்று அழைத்தனர்.

ஓணம் பண்டிகை

ஓணம் பண்டிகை ஒவ்வொரு ஆண்டும் கேரளாவை ஆண்ட மகாபலி மன்னர் திரும்பி வரும் நாளில் கொண்டாடப்படுகிறது. மாவேலிக்கரை, மகாபலிபுரம் ஆகிய இரு இடங்களும் மகாபலியின் பெயரிடப்பட்டுள்ளன.

பாண்டியர்களின் பட்டங்களில் ஒன்று மாவேலி. பாண்டியர்களின் எதிராளிகளாகிய பாணர்களும் மாவேலி வாணாதி ராயர் என்று அழைக்கப்பட்டனர்.

சிநது சமவெளியில் தானவர் தைத்யர்(திதியர்)

பண்டைய தானவ (தனு=வில்) மற்றும் தைத்ய குலங்கள் சிந்து சமவெளியிலுள்ள பாணர்களின் துணைப்பிரிவுகளாக இருந்திருக்கலாம். தைத்யரின் மன்னர் மகாபலி என்று அழைக்கப்பட்டார்.

இந்தியாவில் முதல் அணைகள், ஏறத்தாழ நான்காயிரம் ஆண்டுகளுக்கு முன்பு சிந்து நதியில் பாண குலத்தினரால் கட்டப்பட்டன.

ஹிரண்யகர்பா சடங்கு

வில்லவர்கள் மற்றும் பாணர் இருவரும் ஹிரண்யகர்பா விழாவை நிகழ்த்தினர். ஹிரண்யகர்பா சடங்கி்ல் பாண்டிய மன்னர் ஹிரண்ய மன்னரின் தங்க வயிற்றில் இருந்து வெளிவருவதை உருவகப்படுத்தினார்.
ஹிரண்யகசிபு மகாபலியின் மூதாதையர் ஆவார்.