"தமிழ் தேசியம்" என்ற சொல்லில் உள்ள நேரடி வடமொழி சொல்லான தேசியம் என்பதை ஏற்போர். தமிழின் திசை சொல்லான திராவிடத்தை எதிர்க்கும் மனநிலை ஏன்? - என்று முதலிலும்,
“இவர்கள் கூறும் தமிழ் தேசியத்தில் "தேசியம்", (தேஷ் தேசி சுவதேசி) என்று வடமொழியில் உள்ளதை குறிப்பிட்டால் தமிழில் இருந்து தான் வடமொழி உருவாகியது என்று ஒரு ஏற்றுக்கொள்ள முடியாத கூற்றை முன்வைப்பர்கள்” - என்ற உங்கள் கட்டுரைக்கு நடுவிலும் வரும் 2 கூற்றுக்களைப் பார்த்தேன்.
சற்று அதிர்ந்து போனேன். உங்கள் முழுக் கட்டுரையையும் என்னால் மறுத்துக் கிடுக்க (critisize) முடியும் என்றாலும், நேரமின்மையால் அதைத் தவிர்க்கிறேன். பொறுமையாகச் சற்று ஆய்ந்திருந்தால் அடிப்படை உண்மை உங்களுக்கு விளங்கியிருக்கும். desh என்ற சொல் இந்தியத் துணைக்கண்டத்தில் மட்டுமே உண்டு. இந்தையிரோப்பியனில் அதற்கு இணையான cognates கிடையாது. கூகுள் செய்தால், கிடைக்கும் விடையை கீழே கொடுத்துள்ளேன். முதலில் அதைப் படித்து விடுங்கள். அப்புறம் என் விடை கீழே உள்ளது. காரணமில்லாது, ஒரு காலத்தில் திராவிடம் என்ற கருத்தை ஏற்ற எம் போன்றவர் இப்போது எதிர்க்கவில்லை.இனி எம் விடை.
-----------------------------
என் கேள்வி
Are there other Indo-european words corresponding to the word "desh" in Sanskrit?
-----------------------------
அதற்கு கூகுளின் செய் தெள்ளிகை சொல்லும் விடை கீழே.
There are no direct cognates of the Sanskrit word "deśha" (देश), meaning "land, place, or country," in most other branches of the Indo-European language family.
"Deśha" is an Indo-Aryan term, and while Sanskrit is an ancient Indo-European language, not all of its specific words have direct parallels in the European branches (such as Germanic, Romance, or Slavic languages).
The term and its derivatives are primarily found in languages of the Indian subcontinent and neighboring Indo-Iranian regions, such as:
Hindi, Bengali, and other modern Indo-Aryan languages use variations of desh (as seen in names like Bangladesh, "Land of Bengal").
Persian and Avestan, which belong to the Indo-Iranian branch, are close linguistic relatives and share a significant amount of vocabulary and grammatical structure with Sanskrit.
The concept of a "place" or "land" in other Indo-European languages generally stems from different Proto-Indo-European (PIE) roots. For instance, English "land" comes from a different Germanic root, and Latin terra (leading to Romance language words like tierra or terre) also has a separate origin.
Linguists use comparative methods to find cognates based on systematic sound changes from a hypothetical common ancestor (PIE), and in this case, no common PIE root for "desh" has been reconstructed across the diverse European and Indo-Aryan branches.
-------------------------------
இனி என் விடை கீழே தேசம் / தேசியம் என்பது தமிழில் எப்படி உருவானது என்று மட்டும் சொல்கிறேன். இதை https://valavu.blogspot.com/2008/04/2.html என்ற இடுகையில் குறிப்பிட்டிருந்தேன். இங்கு சிலவற்றை மட்டும் வெட்டி, ஒட்டியுள்ளேன்
---------------------------------
திக்கு, திகை, திசை என்று மூன்று சொற்களை ஒரு தொகுதியாகப் பார்க்கலாம். திரும்புதல் என்று முன்பார்த்த வினையின் அடிவேர்ச்சொல் துல்>தில் என்பதே.
தில்> திர்> திரு> திருக்கு,
தில்> திர்> திரு> திரும்பு,
தில்> திர்> திரு> திருத்து
எனப் பல்வேறு ஈறுகள் கொண்ட சொற்களை இங்கு எண்ணிப்பார்க்கலாம். அதே போல தில்> தில்க்குதல்> திக்குதல் என்பதும் to turn என்பதைக் குறிக்கும். ஒவ்வொரு திக்கும் ஒரு turning தான். இன்னொரு வளர்ச்சியில், தொடர்ந்து சீராய்ப் பேசிவந்த ஒருவன் மேற்கொண்டு அதே படி போக முடியாமல் தடுமாறுவதையும் திக்குதல் என்றே திசைப்பொருளில் (ஆனால் சிந்தனை ஒட்டத்தைக் குறிப்பது போல்) ஆள்கிறோம் அல்லவா? திரிகை என்பது change என்ற பொருளைக் குறிக்கும். திருகு என்ற சொல் கன்னடத்தில் turning, திசை என்பதைக் குறிக்கும்.
திக்கு என்பது திக்கை என்ற பெயர்ச்சொல்லை மேலும் உருவாக்கி, மீண்டும் திகைதல் என்ற வினைச்சொல்லையும் உருவாக்கும். சில இடங்களில் திக்கை என்பது, ஒரு ‘முட்டுத் திக்கை’ ஆகிவிடும். அதனால் திகை என்பதற்கு முடிவு, எல்லை என்ற பொருள்களும் அமையும். திகைதல் = முடிதல், தீர்தல்.(தீர்தல் என்பது கூடத் தில் எனும் வேரில் தோன்றிய சொல் தான்.) "அதன் விலை இன்னும் திகையவில்லை" என்பது தென்னாட்டு வழக்கு.
திகையம்> தெகையம்> தேயம்> தேசம் என்பது ஒரு திசையின் முடிவில் இருக்கும் இடம், மக்கள் கூட்டம்.
ஆகத் தேசம் என்ற சொல்லின் பிறப்பு தமிழில் உள்ளது. அதை அடையாளம் காணத்தான் ஆட்கள் இல்லை. பெருமை தெரியாமல் நாம் வெறுமையாய்க் கிடக்கிறோம். தேசத்தில் கிளைத்த சொற்கள் பல இந்திய மொழிகளில் உண்டு. இன்றைக்கு தேசம் என்பது nation என்றும், நாடு என்பது country என்றும் புரிந்து கொள்ளப் படுகிறது. இந்தியா என்பது ஒரு பல்தேச நாடு. இதில் ஒரு காலத்தில் 56 தேசங்கள் இருந்ததாய்ச் சொல்வது தொன்மம்.
தயக்கம்>தியக்கம் எனும் சொல் கூட திகு>தி்க்கு எனும் இச் சொற் குடும்பத்திற் சேர்ந்ததே. செய்வதறியாது நிற்கும் நிலையைக் குறிக்கும்.
ககர/சகரப் போலியில் திகை, திசையாகும். இற்றைத்தமிழில் பரவலாய் திசை அறியப்படும். திசையன்விளை = தென்பாண்டி நாட்டில் ஓர் ஊர்.
No comments:
Post a Comment