Thursday, January 09, 2014

தாளிகைச் சொற்கள்

ஒரு தனிமடலில் கேட்டிருந்த தாளிகைச் சொற்களுக்கான பட்டியல்.  இங்கு பலருக்கும் பயன்படட்டும் என்று கொடுத்துள்ளேன். 
 
magazine = தாளிகை
journal = இதழிகை
bullettin = குறிகை
gazette = பட்டிகை
newspaper, daily = நாளிதழ்
weekly = வாரிகை
monthly = மாதிகை
bimonthly = இருதி
periodical = பருதி
diary = நாளிகை
daybook = நாள்நூல்
record =  பதிகை
reporter = நுவலிகை
 
அன்புடன்,

இராம.கி.

2 comments:

அறிவியல் தமிழ் said...

அழகான தரமான சொற்கள் அய்யா... கண்டிப்பாக எங்கள் தளங்களில் பயன்படுத்த்துவோம்.

எனக்கு ஒரு கோரிக்கை forum என்பதற்கு மன்றம் என்று சொல்வது சரியா இல்லை காலத்தின் மாறுதலுக்கு ஏற்ப அதை புது பெயர் கொண்டு அழைக்கலாமா?

தயவு செய்து விளக்கம் தாருங்கள்

இவன்
http://poocharam.net/

கோவி.கண்ணன் said...

அன்புள்ள ஐயா,

(இந்த இடுகை தொடர்பற்ற சில ஐயங்கள்)

எனக்கு தெரிந்து சிவ / சைவ ஆகிய சொற்கள் 6 ஆம் நூற்றாண்டில் சேக்கிழார் காலத்தில் புழக்கத்தில் வந்தவை என்றே நினைக்கிறேன், சங்கப்பாடல்களில் சிவ - குறித்து பாடல்கள் இருப்பது போல் தெரியவில்லை, அல்லது வேறு சில பெயர்கள் சிவனைக்குறிக்கும்படி பாடப்பட்டிருக்கலாம்.

தமிழ் சிவன் அதன் சமயமாகியம் திரி சொல் சைவம் ஆகியவை தமிழிலிருந்து வடமொழிக்குச் சென்றவை, அப்படி இருக்கையில் வடமொழி இலக்கண நூல் பனானியின் காலம் 400 BCE என்கிறார்கள், பனானி இலக்கணத்தில் சிவ சூத்திரம் என்கிற பகுதி உண்டு.

எனவே பனானியின் வடமொழி இலக்கணம் தோன்றியதன் காலம் குறித்து தவறாக சொல்லப்படுகிறதா ?
பானானி 6 ஆம் நூற்றாண்டை சார்ந்ததா ?