Sunday, October 05, 2003

சங்கப் பலகை

முயன்றால் முடியாதது ஒன்றும் இல்லை தான்.

இன்று அலுவத்தில் (office) இருந்து திரும்பி வந்து கொண்டிருக்கும் போது, ஒரு பேருந்தின் பின் பக்கம் தொங்கிக் கொண்டிருந்ததில் "சங்கப் பலகை" என்ற விளம்பரம் பார்த்தேன். இதைப் பற்றி முன்னரே முனைவர் சந்திர போசு தமிழ் உலகத்தில் (tamil ulagam e-mail list) தெரிவித்திருக்கிறார்.

"தமிழில் எழுத, படிக்க, தமிழ்க் கணினி" என்று விளம்பரம் செய்து குயவுப் பலகையோடு (key board) ஒரு பொதி வட்டைச் (compact disc) சேர்த்து ரூ 500 க்கு விற்பதாகச் சொல்லி நிறுவனத்தின் பெயரும், முகவரியும், தொலைபேசி எண்ணும் குறித்திருந்தனர். (compact disc - இதை குறுவட்டு, குறுந்தட்டு என்றெல்லாம் மொழி பெயர்ப்பதை என்னால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. அந்த வட்டின் குறு அளவு முகமையானதல்ல. அது இன்னும் கூடக் குறுகலாம்; யார் கண்டார்கள்? அதற்குள் பொதிந்திருக்கும் அடக்கம், பொதிப்புத் (compactness) தான் மிகப் பெரிது. அவ்வளவு விவரங்களை உள்ளே அடக்கிப் பொதித்திருப்பதால் தான் அது பொதிவட்டு. விட்டத்தால் எந்த அளவாக இருந்தாலும் அது பொதிவட்டுத் தான். )

அங்கும் இங்கும் துள்ளுந்திலும் (scooter), நகரி (மிதி) வண்டியிலும் (motor cycle), சீருந்திலும் (car), பேருந்திலும் (bus) பயணிக்கும் சென்னைக்காரர்களுக்கு, குறிப்பாக பாதைச் சந்திப்புகளில் (road junction) ஒளிச் சைகைக்காகக் (signal) காத்துக் கிடக்கும் நேரத்தில், பேருந்தின் பின்புறம் இது போன்ற விளம்பரங்களைப் பார்க்கத் தூண்டுவது ஒரு பெரிய மாறுகூற்று (marketing) உத்தி (tactic) தான். அதற்குப் பலன் உண்டு. இப்படி கணித்தமிழ் பரப்புவதில் அந்த உத்தி பயன்பட்டது எனக்கு வியப்பு.

அந்த நிறுவனத்தார் மென்மேலும் வளரட்டும். இது போன்ற உத்திகளை மற்ற தமிழ்க்கணி (tamil computer) வணிகர்கள் பயன்படுத்துவது தமிழகத்தில் கணியறிவைக் கூட்டுவதற்குப் பயன்படும். செய்வார்களா என்று தெரியாது. ஆண்டோ பீட்டர் போன்றவர்கள் ஓர்ந்து பார்க்க வேண்டும். மறைவாக நமக்குள்ளே பழங்கதைகள் பேசுவதில் பயனொன்றில்லை. விளம்பரம் இல்லாமல் இன்று எதுவும் இல்லை. வாய்பகரம் (trade-வியாபாரம்) செய்வதும் பகர்ச்சிக்கு (price - விலை பற்றிய இன்னொரு தமிழ்ச்சொல்) விற்பதும் குறைபட்டதல்ல.

புலம்பெயர் தமிழர்களுக்கு எளிதில் கணியின் அணுக்கம் (contact) இருப்பதால், இ-கலப்பை, முரசு அஞ்சல் போன்றவற்றை இலவயமாகக் (இலவசமாய்) கீழிறக்கி அஞ்சல் முறையில் பயன்படுத்தி தமிழில் எழுதுவது எளிதாக இருக்கலாம். TSCII வளரலாம். ஆனால், அதை இலவயமாகச் செய்ய முடியும் என்று சொல்லுவதற்குக் கூட இங்கே தமிழ்நாட்டில் ஆளில்லை. ரூ.25000 கொடுத்து கணி வைத்திருக்கிற தமிழ்நாட்டுத் தமிழருக்கு ரூ 500 ல் தமிழ் எழுத்துக்கள் உள்ள பொத்தான்கள் கொண்ட குயவுப் பலகையும் கொடுத்து இப்படி ஒரு பொதிவட்டையும் கொடுக்கும் போது சற்று விலை கூட என்றாலும் வாங்குவார்கள் என்றே தோன்றுகிறது. இப்படியாகத் தானே TAB தமிழ்நாட்டில் பரவுவது வியப்பில்லை. அதே பொழுது TSCII காரர்கள் இது போன்ற உத்திகளைக் கொண்டுவந்து தமிழ்நாட்டிற்குள் எப்பொழுது விற்பார்கள் என்று தெரியவில்லை. மாறுகூற்று உத்திகள் (marketing tactics) பற்றி அவர்கள் சிந்திக்கவில்லையா என்று தோன்றுகிறது.

கொஞ்சம் போட்டியைக் கொண்டு வாருங்கள், அய்யா! ரூ500, இந்தப் போட்டியில் ரூ.200 ஆகட்டும். நண்பர்களே, ஒருங்குறி விளையாட்டிற்கு இப்பொழுது நான் வரவில்லை. :-). இந்த மடலுக்குப் பின்னூட்டு செய்பவர்கள் தயவு செய்து அதைக் காட்டாதீர்கள். :-) வேறொரு மடலில் அதை விவாதிக்கலாம்.

அன்புடன்,
இராம.கி.

In TSCII:

ºí¸ô ÀĨ¸

ÓÂýÈ¡ø ÓÊ¡¾Ð ´ýÚõ þø¨Ä ¾¡ý.

þýÚ «ÖÅò¾¢ø (office) þÕóÐ ¾¢ÕõÀ¢ ÅóÐ ¦¸¡ñÊÕìÌõ §À¡Ð ´Õ §ÀÕó¾¢ý À¢ý Àì¸õ ¦¾¡í¸¢ì ¦¸¡ñÊÕó¾¾¢ø "ºí¸ô ÀĨ¸" ±ýÈ Å¢ÇõÀÃõ À¡÷ò§¾ý. þ¨¾ô ÀüÈ¢ Óýɧà ӨÉÅ÷ ºó¾¢Ã §À¡Í þíÌ ¾Á¢ú ¯Ä¸ò¾¢ø ¦¾Ã¢Å¢ò¾¢Õ츢ȡ÷.

"¾Á¢Æ¢ø ±Ø¾, ÀÊì¸, ¾Á¢úì ¸½¢É¢" ±ýÚ Å¢ÇõÀÃõ ¦ºöÐ ÌÂ×ô ÀĨ¸§Â¡Î (key board) ´Õ ¦À¡¾¢ Åð¨¼î (compact disc) §º÷òÐ å 500 ìÌ Å¢üÀ¾¡¸î ¦º¡øÄ¢ ¿¢ÚÅÉò¾¢ý ¦ÀÂÕõ, Ó¸ÅâÔõ, ¦¾¡¨Ä§Àº¢ ±ñÏõ ÌÈ¢ò¾¢Õó¾É÷. (compact disc - þ¨¾ ÌÚÅðÎ, ÌÚó¾ðÎ ±ý¦ÈøÄ¡õ ¦Á¡Æ¢ ¦ÀÂ÷ôÀ¨¾ ±ýÉ¡ø ²üÚì ¦¸¡ûÇ ÓÊÂÅ¢ø¨Ä. «ó¾ ÅðÊý ÌÚ «Ç× Ó¸¨Á¡ɾøÄ. «Ð þýÛõ ܼì Ìڸġõ; ¡÷ ¸ñ¼¡÷¸û? «¾üÌû ¦À¡¾¢ó¾¢ÕìÌõ «¼ì¸õ, ¦À¡¾¢ôÒò ¾¡ý Á¢¸ô ¦ÀâÐ. compactness. «ùÅÇ× Å¢ÅÃí¸¨Ç ¯û§Ç «¼ì¸¢ô ¦À¡¾¢ò¾¢ÕôÀ¾¡ø ¾¡ý «Ð ¦À¡¾¢ÅðÎ. Å¢ð¼ò¾¡ø ±ó¾ «ÇÅ¡¸ þÕó¾¡Öõ «Ð ¦À¡¾¢ÅðÎò ¾¡ý. )

«íÌõ þíÌõ ÐûÙó¾¢Öõ (scooter), ¿¸Ã¢ (Á¢¾¢)ÅñÊ (motor cycle), º£Õó¾¢Öõ (car), §ÀÕó¾¢Öõ (bus) À½¢ìÌõ ¦ºý¨É측Ã÷¸ÙìÌ, ÌÈ¢ôÀ¡¸ À¡¨¾î ºó¾¢ôҸǢø (road junction) ´Ç¢î ¨º¨¸ì¸¡¸ì (signal) ¸¡òÐì ¸¢¼ìÌõ §¿Ãò¾¢ø §ÀÕó¾¢ý À¢ýÒÈõ þÐ §À¡ýÈ Å¢ÇõÀÃí¸¨Çô À¡÷ì¸ò àñÎÅÐ ´Õ ¦Àâ Á¡ÚÜüÚ (marketing) ¯ò¾¢ (tactic) ¾¡ý. «¾üÌô ÀÄý ¯ñÎ. þôÀÊ ¸½¢ò¾Á¢ú ÀÃôÒž¢ø «ó¾ ¯ò¾¢ ÀÂýÀð¼Ð ±ÉìÌ Å¢ÂôÒ.

«ó¾ ¿¢ÚÅÉò¾¡÷ ¦Áý§ÁÖõ ÅÇÃðÎõ. þÐ §À¡ýÈ ¯ò¾¢¸¨Ç ÁüÈ ¾Á¢ú츽¢ Ž¢¸÷¸û ÀÂýÀÎòÐÅÐ ¾Á¢Æ¸ò¾¢ø ¸½¢ÂÈ¢¨Åì ÜðΞüÌô ÀÂýÀÎõ. ¦ºöÅ¡÷¸Ç¡ ±ýÚ ¦¾Ã¢Â¡Ð. ¬ñ§¼¡ À£ð¼÷ §À¡ýÈÅ÷¸û µ÷óÐ À¡÷ì¸ §ÅñÎõ. Á¨ÈÅ¡¸ ¿ÁìÌû§Ç ÀÆí¸¨¾¸û §ÀÍž¢ø À¦ɡýÈ¢ø¨Ä. Å¢ÇõÀÃõ þøÄ¡Áø þýÚ ±Ð×õ þø¨Ä. Å¡öÀ¸Ãõ (trade-Ţ¡À¡Ãõ) ¦ºöÅÐõ À¸÷ìÌ (price - Å¢¨Ä ÀüȢ þý¦É¡Õ ¾Á¢ú¡ø) Å¢üÀÐõ ̨ÈÀð¼¾øÄ.

ÒÄõ¦ÀÂ÷ ¾Á¢Æ÷¸ÙìÌ ±Ç¢¾¢ø ¸½¢Â¢ý «Ïì¸õ (contact) þÕôÀ¾¡ø, þ-¸Äô¨À, ÓÃÍ «ïºø §À¡ýÈÅü¨È þÄÅÂÁ¡¸ì (þÄźÁ¡¸ì) ¸£Æ¢È츢 «ïºø ӨȢø ÀÂýÀÎò¾¢ ¾Á¢Æ¢ø ±ØÐÅÐ ±Ç¢¾¡¸ þÕì¸Ä¡õ. TSCII ÅÇÃÄ¡õ. ¬É¡ø, «¨¾ þÄÅÂÁ¡¸î ¦ºö ÓÊÔõ ±ýÚ ¦º¡øÖžüÌì ܼ þí§¸ ¾Á¢ú¿¡ðÊø ¬Ç¢ø¨Ä. å.25000 ¦¸¡ÎòÐ ¸½¢ ¨Åò¾¢Õì¸¢È ¾Á¢ú¿¡ðÎò ¾Á¢ÆÕìÌ å 500 ø ¾Á¢ú ±ØòÐì¸û ¯ûÇ ¦À¡ò¾¡ý¸û ¦¸¡ñ¼ ÌÂ×ô ÀĨ¸Ôõ ¦¸¡ÎòÐ þôÀÊ ´Õ ¦À¡¾¢Åð¨¼Ôõ ¦¸¡ÎìÌõ §À¡Ð ºüÚ Å¢¨Ä ܼ ±ýÈ¡Öõ Å¡íÌÅ¡÷¸û ±ý§È §¾¡ýÚ¸¢ÈÐ. þôÀÊ¡¸ò ¾¡§É TAB ¾Á¢ú¿¡ðÊø ÀÃ×ÅРŢÂôÀ¢ø¨Ä. «§¾ ¦À¡ØÐ TSCII ¸¡Ã÷¸û þÐ §À¡ýÈ ¯ò¾¢¸¨Çì ¦¸¡ñÎÅóÐ ¾Á¢ú¿¡ðÊüÌû ±ô¦À¡ØРŢüÀ¡÷¸û ±ýÚ ¦¾Ã¢ÂÅ¢ø¨Ä. Á¡ÚÜüÚ ¯ò¾¢¸û (marketing tactics) ÀüÈ¢ «Å÷¸û º¢ó¾¢ì¸Å¢ø¨Ä¡ ±ýÚ §¾¡ýÚ¸¢ÈÐ.

¦¸¡ïºõ §À¡ðʨÂì ¦¸¡ñÎ Å¡Õí¸û, «ö¡! å500, þó¾ô §À¡ðÊ¢ø å.200 ¬¸ðÎõ. ¿ñÀ÷¸§Ç, ´ÕíÌÈ¢ Å¢¨Ç¡ðÊüÌ þô¦À¡ØÐ ¿¡ý ÅÃÅ¢ø¨Ä. :-) þó¾ Á¼ÖìÌô À¢ýëðÎ ¦ºöÀÅ÷¸û ¾Â× ¦ºöÐ «¨¾ì ¸¡ð¼¡¾£÷¸û. :-) §Å¦È¡Õ Á¼Ä¢ø «¨¾ Ţš¾¢ì¸Ä¡õ.

«ýÒ¼ý,
þáÁ.¸¢.

No comments: