Thursday, October 16, 2003

தோல்பித்தவன்

சென்ற வாரத்திற்கு முந்திய காரிக் கிழமை (சனிக்கிழமை)யன்று பிற்பகலில் பொழுது போகாமல் தொலைக்காட்சியில் வரும் ஓடைகளை மாற்றிக் கொண்டு இருந்தேன். கையில் தூரக்கட்டு இருந்தால் ஓர் ஓடையில் நிலைக்காமல் இப்படி மாற்றிக் கொண்டே இருக்கச் சொல்லும்; வீட்டுக்காரி பல தடவை சொல்லி இருக்கிறாள்; இன்னும் கேட்கிற படியாய் இல்லை;
கெட்ட பழக்கம் தான், இருந்தாலும் மன நிலை அந்த நேரத்தில் அப்படி இருந்தது, எதிலும் நிலை கொள்ளவில்லை.

இந்த விவரம் கெட்ட அலைவில், திடீரென்று ஆசியா நெட் மலையாளத் தொலைக்காட்சி அகப்பட்டது. மலையாளம் ஓரளவு தெரியும் என்பதால், சில போது மலையாளத் திரைப்படங்களின் தொடக்கமும் முடிவும் அறியாமல் கூட, பார்க்கும் இடைப்பட்ட நேரத்தில் என்னை மறந்து ஆழ்ந்து போனது உண்டு. அன்றைக்கு ஒரு மோகன்லால் திரைப்படம். அழுத்தம் திருத்தமான ஒலிப்போடு மோகன்லால் மலையாளம் பேசும் பாணி என்னை எப்பொழுதுமே கவர்ந்தது உண்டு.

ஒரு இடத்தில் "ஞங்களைத் தோல்பிச்சவனை ஞான் தோல்பிக்கணும்" என்ற வாசகம் கேட்டு எங்கோ நெஞ்சுள் மணி ஒலிக்கத் தொடங்கியது; இப்படி ஒரு வினை தமிழில் ஏன் இல்லாது போனது? எப்போது தொலைத்தோம்? மனம் வேறொரு பக்கம் யோசிக்கத் தொடங்கியது. நாம் தொலைத்ததை மலையாளமாவது காப்பாற்றி வைத்திருக்கிறதே என்று நிறைவு கொண்டேன்.

நான் தோற்றேன்; தோற்கிறேன்; தோற்பேன் இப்படித் தமிழில் உண்டு. ஆனால் பிறவினை என்று வரும்போது நம்மை அறியாமல் பெயர்ச் சொல்லோடு துணை வினை போட்டு ஏன் சுற்றி வளைக்கிறோம்? அவனை நான் தோற்கச் செய்தேன் என்று சுற்றி வளைத்து ஏன் சொல்கிறோம்? இல்லாவிட்டால் தோற்க வைத்தேன் என்று சொல்லுகிறோம் இல்லையா? மலையாளத்தில் உள்ளது போல் தோற்பித்தேன் என்று எளிதாகச் சொல்லலாமே? என்ன ஆயிற்று நமக்கு? பகரம் வேண்டாம் என்றால் வகரம் இட்டுச் சொல்லலாமே! தோல்வித்தேன் என்று கூட ஏன் சொல்ல மாட்டேன் என்கிறோம்? செய்தேன்/செய்வித்தேன், படித்தேன்/ படிப்பித்தேன் என்று வரும் போது தோற்றேன்/தோற்பித்தேன் என்பது ஏன் வழக்கில்லாமற் போயிற்று?

எளிதாக இரண்டு மூன்று அசையில் சொல்லக் கூடிய வினைச் சொற்களை எல்லாம் இப்படித் தொலைத்தெறிந்து பெயர்ச் சொல்லோடு துணைவினை சேர்க்கும் பழக்கம் அளவிற்கு மீறி இந்தக் காலத் தமிழுக்கு எப்பொழுது வந்தது? 18, 19ம் நூற்றாண்டுகளிலா? தெரியவில்லை. இது ஒரு செயற்கையான சுற்றி வளைத்த கிரியோல் மொழியை உருவாக்குகிறது அல்லவா? யாராவது ஆராய்ச்சி பண்ணினால் தெரியக் கூடும்.

இந்தச் சிந்தனையில் எழுந்த, நண்பர்கள் செய்யக் கூடிய, ஒரு நல்ல உருப்படியான பணி பற்றிச் சொல்லலாம் என்று எண்ணுகிறேன். தமிழும் மலையாளமும் நன்கு அறிந்த ஒரு நண்பர் (என் மலையாள அறிவு அவ்வளவு ஆழமானது அல்ல; ஏதோ ஓரளவு ஒப்பேற்றிக் கொள்ளலாம் என்று வேண்டுமானால் சொல்லலாம்.) தனித்தோ, அல்லது இன்னொரு தமிழ் தெரிந்த மலையாள நண்பருடன் கூடியோ, தமிழில் உள்ள வினைச்சொற்கள், அதற்கு இணையான மலையாளச் சொற்கள், தமிழில் இல்லாத முறையில் மலையாளத்தில் அதைப் புழங்கும் பாங்கு, அதே புழக்கத்தைத் தமிழில் கொண்டுவர முடியுமானால் எப்படிக் கொண்டுவரலாம், அதற்கு உள்ள முன்னீடு என்று ஒரு பட்டியல் இடலாமே? அகர முதலி செய்பவர்களுக்கும் பயன்படுமே?

இது போன்ற ஒரு ஆக்கத்தை, தமிழுக்குச் செய்யும் நல்ல தொண்டை, தமிழ் உலகம் போன்ற மடற்குழுவில் உள்ள ஆவணக் காப்பில் இடலாம். வெறும் பேச்சு மட்டும் இல்லாமல் நம்முடைய பகுதி நேர உழைப்பும் நாட்படப் பயனாகுமே? யாராவது முன்வருவீர்களா?

மேலே சொன்னது போல் கன்னடத்திலும், தெலுங்கிலும் கூடச் செய்யலாம். தமிழுக்கு மிக நெருங்கியது மலையாளம், அடுத்தது கன்னடம். கொஞ்சம் தள்ளித் தெலுங்கு. இந்த மூன்று மொழிகளில் இருந்து, தமிழ் வளருவதற்காக, நாம் மீட்கவேண்டிய மொழி மரபுகள், புழக்கங்கள் மிகப் பல என்றே தோன்றுகிறது.

அன்புடன்,
இராம.கி.

In TSCII:

§¾¡øÀ¢ò¾Åý

¦ºýÈ Å¡Ãò¾¢üÌ Óó¾¢Â ¸¡Ã¢ì ¸¢Æ¨Á (ºÉ¢ì¸¢Æ¨Á)ÂýÚ À¢üÀ¸Ä¢ø ¦À¡ØÐ §À¡¸¡Áø ¦¾¡¨Ä측ðº¢Â¢ø ÅÕõ µ¨¼¸¨Ç Á¡üÈ¢ì ¦¸¡ñÎ þÕó§¾ý. ¨¸Â¢ø àÃì¸ðÎ þÕó¾¡ø µ÷ µ¨¼Â¢ø ¿¢¨Ä측Áø þôÀÊ Á¡üÈ¢ì ¦¸¡ñ§¼ þÕì¸î ¦º¡øÖõ; Å£ðÎ측â ÀÄ ¾¼¨Å ¦º¡øÄ¢ þÕ츢ȡû; þýÛõ §¸ð¸¢È ÀÊ¡ö þø¨Ä;
¦¸ð¼ ÀÆì¸õ ¾¡ý, þÕó¾¡Öõ ÁÉ ¿¢¨Ä «ó¾ §¿Ãò¾¢ø «ôÀÊ þÕó¾Ð, ±¾¢Öõ ¿¢¨Ä ¦¸¡ûÇÅ¢ø¨Ä.

þó¾ Å¢ÅÃõ ¦¸ð¼ «¨ÄÅ¢ø, ¾¢Ë¦ÃýÚ ¬º¢Â¡ ¦¿ð Á¨Ä¡Çò ¦¾¡¨Ä측𺢠«¸ôÀð¼Ð. Á¨Ä¡Çõ µÃÇ× ¦¾Ã¢Ôõ ±ýÀ¾¡ø, º¢Ä §À¡Ð Á¨Ä¡Çò ¾¢¨ÃôÀ¼í¸Ç¢ý ¦¾¡¼ì¸Óõ ÓÊ×õ «È¢Â¡Áø ܼ, À¡÷ìÌõ þ¨¼ôÀð¼ §¿Ãò¾¢ø ±ý¨É ÁÈóÐ ¬úóÐ §À¡ÉÐ ¯ñÎ. «ý¨ÈìÌ ´Õ §Á¡¸ýÄ¡ø ¾¢¨ÃôÀ¼õ. «Øò¾õ ¾¢Õò¾Á¡É ´Ä¢ô§À¡Î §Á¡¸ýÄ¡ø Á¨Ä¡Çõ §ÀÍõ À¡½¢ ±ý¨É ±ô¦À¡ØЧÁ ¸Å÷ó¾Ð ¯ñÎ.

´Õ þ¼ò¾¢ø "»í¸¨Çò §¾¡øÀ¢îºÅ¨É »¡ý §¾¡øÀ¢ì¸Ïõ" ±ýÈ Å¡º¸õ §¸ðÎ ±í§¸¡ ¦¿ïÍû Á½¢ ´Ä¢ì¸ò ¦¾¡¼í¸¢ÂÐ; þôÀÊ ´Õ Å¢¨É ¾Á¢Æ¢ø ²ý þøÄ¡Ð §À¡ÉÐ? ±ô§À¡Ð ¦¾¡¨Äò§¾¡õ? ÁÉõ §Å¦È¡Õ Àì¸õ §Â¡º¢ì¸ò ¦¾¡¼í¸¢ÂÐ. ¿¡õ ¦¾¡¨Äò¾¨¾ Á¨Ä¡ÇÁ¡ÅÐ ¸¡ôÀ¡üÈ¢ ¨Åò¾¢Õ츢ȧ¾ ±ýÚ ¿¢¨È× ¦¸¡ñ§¼ý.

¿¡ý §¾¡ü§Èý; §¾¡ü¸¢§Èý; §¾¡ü§Àý þôÀÊò ¾Á¢Æ¢ø ¯ñÎ. ¬É¡ø À¢ÈÅ¢¨É ±ýÚ ÅÕõ§À¡Ð ¿õ¨Á «È¢Â¡Áø ¦ÀÂ÷î ¦º¡ø§Ä¡Î Ш½ Å¢¨É §À¡ðÎ ²ý ÍüÈ¢ ŨÇ츢§È¡õ? «Å¨É ¿¡ý §¾¡ü¸î ¦ºö§¾ý ±ýÚ ÍüÈ¢ ŨÇòÐ ²ý ¦º¡ø¸¢§È¡õ? þøÄ¡Å¢ð¼¡ø §¾¡ü¸ ¨Åò§¾ý ±ýÚ ¦º¡øÖ¸¢§È¡õ þø¨Ä¡? Á¨Ä¡Çò¾¢ø ¯ûÇÐ §À¡ø §¾¡üÀ¢ò§¾ý ±ýÚ ±Ç¢¾¡¸î ¦º¡øÄÄ¡§Á? ±ýÉ ¬Â¢üÚ ¿ÁìÌ? À¸Ãõ §Åñ¼¡õ ±ýÈ¡ø ŸÃõ þðÎî ¦º¡øÄÄ¡§Á! §¾¡øÅ¢ò§¾ý ±ýÚ Ü¼ ²ý ¦º¡øÄ Á¡ð§¼ý ±ý¸¢§È¡õ? ¦ºö§¾ý/¦ºöÅ¢ò§¾ý, ÀÊò§¾ý/ ÀÊôÀ¢ò§¾ý ±ýÚ ÅÕõ §À¡Ð §¾¡ü§Èý/§¾¡üÀ¢ò§¾ý ±ýÀÐ ²ý ÅÆ츢øÄ¡Áü §À¡Â¢üÚ?

±Ç¢¾¡¸ þÃñÎ ãýÚ «¨ºÂ¢ø ¦º¡øÄì ÜÊ Ţ¨Éî ¦º¡ü¸¨Ç ±øÄ¡õ þôÀÊò ¦¾¡¨Äò¦¾È¢óÐ ¦ÀÂ÷î ¦º¡ø§Ä¡Î Ш½Å¢¨É §º÷ìÌõ ÀÆì¸õ «ÇÅ¢üÌ Á£È¢ þó¾ì ¸¡Äò ¾Á¢ØìÌ ±ô¦À¡ØÐ Åó¾Ð? 18, 19õ áüÈ¡ñθǢġ? ¦¾Ã¢ÂÅ¢ø¨Ä. þÐ ´Õ ¦ºÂü¨¸Â¡É ÍüÈ¢ ŨÇò¾ ¸¢Ã¢§Â¡ø ¦Á¡Æ¢¨Â ¯ÕÅ¡ì̸¢ÈÐ «øÄÅ¡? ¡áÅÐ ¬Ã¡ö Àñ½¢É¡ø ¦¾Ã¢Âì ÜÎõ.

þó¾î º¢ó¾¨É¢ø ±Øó¾, ¿ñÀ÷¸û ¦ºöÂì ÜÊÂ, ´Õ ¿øÄ ¯ÕôÀÊÂ¡É À½¢ ÀüÈ¢î ¦º¡øÄÄ¡õ ±ýÚ ±ñϸ¢§Èý. ¾Á¢Øõ Á¨Ä¡ÇÓõ ¿ýÌ «È¢ó¾ ´Õ ¿ñÀ÷ (±ý Á¨ÄÂ¡Ç «È¢× «ùÅÇ× ¬ÆÁ¡ÉÐ «øÄ; ²§¾¡ µÃÇ× ´ô§ÀüÈ¢ì ¦¸¡ûÇÄ¡õ ±ýÚ §ÅñÎÁ¡É¡ø ¦º¡øÄÄ¡õ.) ¾É¢ò§¾¡, «øÄÐ þý¦É¡Õ ¾Á¢ú ¦¾Ã¢ó¾ Á¨ÄÂ¡Ç ¿ñÀÕ¼ý Üʧ¡, ¾Á¢Æ¢ø ¯ûÇ Å¢¨É¡ü¸û, «¾üÌ þ¨½Â¡É Á¨Ä¡Çî ¦º¡ü¸û, ¾Á¢Æ¢ø þøÄ¡¾ ӨȢø Á¨Ä¡Çò¾¢ø «¨¾ô ÒÆíÌõ À¡íÌ, «§¾ ÒÆì¸ò¨¾ò ¾Á¢Æ¢ø ¦¸¡ñÎÅà ÓÊÔÁ¡É¡ø ±ôÀÊì ¦¸¡ñÎÅÃÄ¡õ, «¾üÌ ¯ûÇ ÓýɣΠ±ýÚ ´Õ ÀðÊÂø þ¼Ä¡§Á? «¸Ã ӾĢ ¦ºöÀÅ÷¸ÙìÌõ ÀÂýÀΧÁ?

þÐ §À¡ýÈ ´Õ ¬ì¸ò¨¾, ¾Á¢ØìÌî ¦ºöÔõ ¿øÄ ¦¾¡ñ¨¼, ¾Á¢ú ¯Ä¸õ §À¡ýÈ Á¼üÌØÅ¢ø ¯ûÇ ¬Å½ì ¸¡ôÀ¢ø þ¼Ä¡õ. ¦ÅÚõ §ÀîÍ ÁðÎõ þøÄ¡Áø ¿õÓ¨¼Â À̾¢ §¿Ã ¯¨ÆôÒõ ¿¡ðÀ¼ô ÀÂɡ̧Á? ¡áÅÐ ÓýÅÕÅ£÷¸Ç¡?

§Á§Ä ¦º¡ýÉÐ §À¡ø ¸ýɼò¾¢Öõ, ¦¾Öí¸¢Öõ Ü¼î ¦ºöÂÄ¡õ. ¾Á¢ØìÌ Á¢¸ ¦¿Õí¸¢ÂÐ Á¨Ä¡Çõ, «Îò¾Ð ¸ýɼõ. ¦¸¡ïºõ ¾ûÇ¢ò ¦¾ÖíÌ. þó¾ ãýÚ ¦Á¡Æ¢¸Ç¢ø þÕóÐ, ¾Á¢ú
ÅÇÕžü¸¡¸, ¿¡õ Á£ð¸§ÅñÊ ¦Á¡Æ¢ ÁÃÒ¸û, ÒÆì¸í¸û Á¢¸ô ÀÄ ±ý§È §¾¡ýÚ¸¢ÈÐ.

«ýÒ¼ý,
þáÁ.¸¢.

2 comments:

ரியோ said...

'எங்களை தோற்கடித்தவனை நாங்கள் தோற்கடிக்க வேண்டும்' என்று சொல்கிறோமே, அது தவறா?

இராம.கி said...

நண்பரே!

அது தவறில்லை. ஆனால் ”தோற்க அடித்தவன், தோற்க அடிக்கவேண்டும்” என்று துணைவினை போட்டுச் சொல்லுவதைக் கவனிக்கவில்லையா? அடித்தல் என்பது அங்கு துணைவினையாகப் பயிலுகிறது.

தோற்றல் என்பதை அப்படியே துணைவினையில்லாது பிறவினைச்சொல் ஆக்கவேண்டுமானால் தோற்பித்தவன் என்று சொல்லுவது நல்லது.

கொஞ்சம் ஆழ்ந்து யோசியுங்கள். இன்றையத் தமிழில் நம்மில் பலர் துணைவினை போட்டே பெரிதும் பழகிவிட்டோம். அதைவிட்டு வெளியே வாருங்கள்.

அன்புடன்,
இராம.கி.