Tuesday, September 23, 2003

காலங்கள் - 5

நிலவோடும் பொழுதோடும்

சென்ற காரிக் கிழமையில் புதிய மாமல்லபுரம் சாலை வழியே சென்னையை நோக்கி நானும் என் மனைவியும் வந்து கொண்டிருந்தோம். அப்பொழுது திருவான்மியூரில் உள்ள மருந்தீசர் கோயிலுக்குப் போய் நெடுநாட்கள் ஆயிற்று, ஒரு முறை போய் வரலாம் என்று முடிவெடுத்துச் சென்றால் அங்கே சனிப் பிரதோசம் என்று ஒரே கூட்டம். இந்தப் பல்லவர் காலத்துக் கோயிலுக்கு ஐந்தாறு ஆண்டுகளுக்கு முன்னால் கூட அவ்வளவு கூட்டம் வராது. அன்றைக்கோ கூட்டம் அலை மோதியது. காலம் மாறிப் போயிற்று, போலும்! இப்பொழுதெல்லாம் சிவன் கோயில்களுக்குக் கூட்டம் எக்கச் சக்கமாகவே வருகிறது.

இந்தக் கோளால் கெடுதல், அந்தக் கோளால் கெடுதல் என்று ஒருவித மருட்டை ஊரெல்லாம் தெளித்து அதனால் ஊரெங்கும் மக்களைக் கூட்டி, சோதியர்களும், குருக்கள்மாரும் யாகம், ஓமம், பரிகாரம் என்று சக்கைப் போடு போடுகிறார்கள். விளைவு? வாழ்க்கையிற் சந்திக்கும் சரவல்களை ஏற்க முடியாமற் தடுமாறி, எங்காவது ஓரிடத்தில் பற்றுக்கோடு நாடி, ஆதரவு வேண்டி, நம்பிய சாமியார்களால் அலைக் கழிக்கப் பட்டு, முடிவில் இறைவனே சரண் என்று எல்லாத் தர மக்களும் கோயிலுக்குப் போகத் தொடங்கிவிட்டார்கள். இது சரியான சமய நம்பிக்கைக்கு அறிகுறியா என்பது தான் தெரியவில்லை.

மருந்தீசர் கோயிலுக்குள் கிட்டத்தட்ட எள் போட்டால் விழ முடியாத அளவுக்குக் கூட்டம். கோயிலின் உள்வட்டத்தில் வெள்ளி விடை (இடபம்) வாகனத்தில் இறைவனின் திருமேனி உலா நடைபெற்றுக் கொண்டிருந்தது. உலாவின் பின்னால் தேவாரம் பாடிய வண்ணம் சிவநெறித் தொண்டர்கள் சென்று கொண்டிருந்தார்கள். பாண்டியன் நின்றசீர் நெடுமாறனுக்கு வந்த சூலை நோயைக் குணப்படுத்திய "மந்திரமாவது நீறு" என்ற சம்பந்தர் தேவாரம் தொலைவில் நின்ற என் காதுகளுக்கு குறைந்த வெள்ளத்தில் விட்டுவிட்டு ஒலித்தது. ஊர்ப்பட்ட பேர் பூசனைப் பாடல்கள் அடங்கிய பொத்தகத்தைக் கையில் வைத்து கொண்டு கூடவே ஓதிக் கொண்டு போனார்கள். உலா நிலை கொள்ளும் வரை இருக்கவொண்ணாத காரணத்தால், அந்தக் கூட்டத்தின் நடுவிலும் இறைவனை வணங்கியபின், மெதுவாக உலா நகரும் பொழுது, நாங்களும் நகர்ந்து நடுவழியில் மேற்கு அரச கோபுரத்தைக் கடந்து வெளியே வந்தோம். கோயிலுக்குப் போய் வந்த அமைதியின் ஊடே, பிரதோசம் பற்றிய சிந்தனையில் வீட்டுக்கு வந்தும் ஆழ்ந்து இருந்தேன்.

நம்முடைய சமயச் சிந்தனைகளில் இந்த வடமொழி தான் எப்படி எல்லாம் தன் வயப் படுத்திக் கொண்டு நீக்கமற நிறைந்துவிட்டது? ஏதொன்றையும் வடமொழியின் துணையால் அன்றி தமிழால் தனித்து அறிய முடியா வண்ணம், எப்படி நாம் இந்த மொழியைத் தொலைத்தோம்? தமிழ் என்பது நம் கோயில்களுள் வெறுமே பொறுத்துக் கொள்ளும் ஓர் ஒட்டு மொழியாய் ஆகிப் போனதே? எங்கள் வீட்டுக்காரரும் கச்சேரிக்குப் போனார் என்பது போல தமிழில் அருச்சனை செய்யப்படும் என்று ஒப்புக்கு எழுதிப் போட்டு விட்டு, உண்மையில் அதை பெரும்பாலான குருக்கள்மார் செய்ய மறுப்பது தமிழருக்கு நேரடிச் சறுக்கல் தானே? எத்தனை தமிழ்க் குடிமகன்கள் வந்தும் என்ன பயன்?

சிந்தனை மேலும் இப்படி விரவுவதற்கு முன், இந்த பிரதோசத்தின் தமிழ் மூலம் தான் எது, இதை எப்படிக் காணுவது என்று சொல்ல முற்படுகிறேன்.

இந்தத் தொடரில் ஏற்கனவே புவியின் தன்னுருட்டல் (rotation), வலையம் (revolution), கிறுவாட்டம் (gyration), நெற்றாட்டம் (nutation) என்று நான்கு விதமான இயக்கங்கள் பற்றிப் பார்த்தோம். பல ஆண்டு காலப் புரிதல்களுக்குப் பின் புவியின் ஒவ்வொரு தன்னுருட்டலையும் நாள் என்று தமிழர்கள் சொல்லத் தொடங்கினோம். சூரியனைப் புவி சுற்றிவரும் வலையத்தின் காலத்தை ஒரு ஆண்டு என்று பெயரிட்டுக் கொண்டு, இந்தக் காலத்திற்குள் எத்தனை தன்னுருட்டுக்கள் நடக்கின்றன என்றும் கணக்கிட்டால் 365.256364 தன்னுருட்டுக்கள் என்று புலப்படும். இனி ஒவ்வொரு ஆண்டையும் அறவட்டாக 12 மாதங்கள் என்று பிரித்தால், ஒரு மாதம் என்பது 30.43803 நாட்கள் ஆகின்றது. மாத நாட்களை முழு நாட்கள் ஆக்குவதற்காகக் கூட்டியும் குறைத்தும் வைத்துக் கொள்ளுவது உண்டு. வெறும் வலையக் காலமான ஒரு ஆண்டை பன்னிரண்டு பங்காக்கி ஒவ்வொரு பங்கையும் சூரிய மான மாதம் என்று சொல்லுகிறோம்.

ஏற்கனவே புவி சுற்றி வரும் வலையத்தின் பின்புலமாக விண்மீன்கள் இரைந்து கிடப்பதையும் அவற்றை ஓரை அல்லது இராசி என்று அழைப்பதையும் நினைவு படுத்திக் கொள்ளுவோம். இந்த ஓரைகளை தமிழ் முறையில் மேழம், விடை, ஆடவை, கடகம், மடங்கல், கன்னி, துலை, நளி, சிலை, சுறவம், கும்பம், மீனம் என்று சொல்லுகிறோம். இதையே பாதி வடமொழிப் படுத்தி மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம், தனுஸ், மகரம், கும்பம், மீனம் என்று சொல்லுவார்கள். பாதி வடமொழிப் பேச்சே இன்றைக்கு நம்மில் பலருக்கும் பழக்கமாகிப் போனது, அதனால் இந்த வரிசைகளை இருமுறைப் படியும் கொடுத்திருக்கிறேன். முழுத் தமிழ்ச் சொற்களைக் கொஞ்சம் கொஞ்சமாக முயன்று பார்த்து நடைமுறைக்குக் கொண்டு வர வேண்டும்.

ஓரைகளின் பெயர்களையே சூரிய மான மாதத்திற்கும் பெயர்களாகச் சொல்லுவது கால காலமான மரபு. சூரிய மான மாதத்தை ஞாயிறு என்ற சொல்லால் அழைத்துச் சோழர் காலக் கல்வெட்டுக்களில் குறித்திருக்கிறார்கள். கடக ஞாயிறு, கும்ப ஞாயிறு என்று அவற்றில் சொற்கள் புழங்கும். சித்திரை, வைகாசி......பங்குனி என்ற பெயர் கொடுத்து அழைக்கும் மாதங்கள் சந்திர மானக் கணக்கில் வருபவை. இவற்றைத் திங்கள் மாதங்கள் என்போம். திங்கள் மாதங்களுக்கும் ஞாயிற்று மாதங்களுக்கும் இருக்கும் உறவைப் பின்னொரு அதிகாரத்தில் பார்ப்போம். இரண்டுவிதமான கணக்குகளும் சங்க காலம் தொட்டே நம்மிடம் இருந்து வருகின்றன.

அடுத்து வலையத்தைப் பற்றிய ஒரு செய்தி. உண்மையில் புவிதான் சூரியனைச் சுற்றி வருகிறது என்றாலும், சூரியனே நம்மைச் சுற்றி வலைத்து வருவது போல நமக்குத் தோற்றுகிறது. அப்படிப் புவியைச் சுற்றுவதாகத் தோற்றம் அளிக்கும் சூரியனின் சுற்றுத்தளம் புவியின் நடுக் கோட்டுத் தளத்தை 23.5 பாகையில் விழுந்து வெட்டுவது போலக் காட்சியளிக்கிறது. இந்த இரு தளங்களின் வெட்டு விழுப்பை "விழு" என்றே தமிழில் சொல்ல முற்பட்டனர். ஒரு வட்டத் தளம் இன்னொரு வட்டத் தளத்தை இரண்டு இடங்களில் அல்லவா வெட்டி விழ வேண்டும்? அதையொட்டி இரண்டு விழுக்கள் நமக்குப் புரிபடுகின்றன.

இரண்டாயிரத்து ஐநூறு ஆண்டுகளுக்கு முன்னால் நம் முன்னோருக்குத் தெரிந்த தோற்றத்தின் படி ஒரு விழு மேழ ஓரையைப் பின்புலமாகக் கொண்ட மேழ விழு. மற்றொன்று துலை ஓரையைப் பின்புலமாகக் கொண்ட துலை விழு. அதாவது ஒரு விழு மேழ இராசி இருக்கும் திசையிலும், மற்றொன்று துலை இராசி இருக்கும் திசையிலும் அப்பொழுது காட்சியளித்தன. அந்தப் பழைய பார்வையை இன்று வரை எடுத்துக் கொண்டு, இன்றைக்கு மேழவிழு மேழ ஓரையில் இருந்து கிறுவாட்டம் காரணமாய்த் தள்ளிப் போய் விட்டாலும், அறவட்டாகத் தமிழ்நாட்டு வழக்கின்படி ஆண்டுப்பிறப்பு என்பது மேழ ஓரையில் தொடங்குவதாகக் கொண்டே மாதங்களைக் கணக்கிடுகிறோம். அப்படித்தான் தமிழாண்டுப் பிறப்பு ஏப்ரல் 14 - ல் தொடங்குகிறது. இதைப் பற்றி முன்னே பேசியிருக்கிறோம்.

அடுத்து ஒரு நாளின் சிறுபகுதிகளைப் பற்றிப் பார்ப்போம். சங்க காலத்திற்குச் சில நூற்றாண்டுகள் முன்னால், ஒரு நாள் என்பதை 60 சிறு பகுதிகளாகவே பிரித்தார்கள். இந்த சிறு பகுதியைத்தான் நாழிகை என்று நம் முன்னவர்கள் சொன்னார்கள். ஒரு நாழிகை என்பது 24 நுணுத்தம்; இரண்டரை நாழிகைகள் என்பது ஒரு மணி நேரம். நாள் என்ற சொல் முதலில் 30 நாழிகைப் பொழுதாய் இருள் தொடங்கி இருள் முடிவதையே குறித்தது. பிறகு இருளில் தொடங்கி ஒளிவந்து மீண்டும் இருள் வரும் வரை உள்ள 60 நாழிகைப் பொழுதைக் குறித்தது. 30 நாழிகைப் பொழுதைக் குறிக்கும் இந்தச் சொல் 60 நாழிகைப் பொழுதைக் குறிப்பதாக நீண்ட பின்னர், 60 நாழிகைப் பொழுது எப்பொழுது தொடங்கினால் என்ன என்ற போக்கில் இந்தக் காலத்தில் ஒளிதொடங்கி இருள் வந்து மீண்டும் ஒளிதோன்றும் வரை உள்ள காலத்தை நாள் என்று சொல்லுகிறோம். சிலபொழுது இன்னும் சிறப்பாக நாள் என்ற சொல்லை காலை, பகல், எற்பாடு என்ற முத்தொகுதியைக் குறிக்கவும், அல் என்ற சொல்லை மாலை, யாமம், விடியல் என்ற முத்தொகுதியைக் குறிக்கவும் பயன்படுத்துகிறோம். அல்லை இரவு என்று தான் இந்தக் காலத்தில் குறிக்கிறோம்.

ஒரு நாளுக்கு ஆகும் மொத்த நேரத்தை 6 சிறு பொழுதுகளாகவும் ஒவ்வொரு சிறுபொழுதுக்கும் 10 நாழிகைகளாகவும் தொல்காப்பியர் காலத்திற்கு முன்னால் தமிழர்கள் பகுத்திருக்கிறார்கள். காலை, பகல், எற்பாடு, மாலை, யாமம், விடியல் (=வைகறை) என்ற இந்த ஆறு சிறு பொழுதுகளைச் சொல்லுவார்கள். ஒளி அடங்கும் ஏற்பாடு, இருள் தொடங்கும் மாலை ஆகியவை சந்திக்கும் நேரமும், இருள் குறையும் வைகறை, ஒளி தோன்றும் காலை ஆகியவை சந்திக்கும் நேரமும் மாந்த வாழ்க்கையில் ஏதோ ஒரு வகையில் நம்மை ஈர்க்கின்றன. எல் எனும் சூரியன் பட்டுக்கொண்டே வரும் நேரம் எற்பாடு. அந்த எற்பாட்டிற்கு அப்புறம் உள்ள 10 நாழிகைகளில் சூரியன் முற்றிலும் வலுவிழந்து தொய்ந்து போய் விடுகிறான். இருள் தொடங்குகிறது. அந்த நிலையில் இருளும் ஒளியும் முயங்கிக் கிடக்கும் 10 நாழிகைகள் மயங்குகின்ற நேரமாய், மயலுகின்ற நேரமாய், மயலையாய், மாலையாய் ஆகிப் போகிறது. பகலா, இரவா என்று மலங்குகின்ற நேரம் தான் மாலை. மலங்குவது என்பதும் மயங்குதலே. மல்>மர்>மருட்டு என்ற சொல்லும் இந்த வேரில் இருந்து எழுந்ததே.

இரவு மாந்தனுள் பலவிதமான உணர்வுகளைக் கொடுத்திருக்கிறது. அது ஓய்வுக்கும் ஆய்வுக்கும் மாந்தனை ஈடுபடுத்தியது போல், விதப்பாக மருட்டிற்கும் ஆளாக்கி இருக்கிறது. இன்றைக்கு நுட்பவியல் வளர்ந்து எல்லாவித ஏந்துகளும் வந்தபிறகும் கூட நமக்கு இரவு என்பது ஒரு மிரட்டலைக் கொடுக்கும் போது விலங்காண்டி நிலையில் இரவின் தொடக்கம் ஒரு மருட்சியைக் கொடுக்கும் தானே? இரவிற்கு முன் வரை விலங்காண்டி மாந்தன் விழிப்போடு இருந்து தற்காப்பைப் பேண முடியும். இரவு தொடங்கியவுடன் விலங்காண்டி மாந்தன் வலிவிழந்து அல்லவா போய்விடுவான்? பூச்சி பொட்டுக்கள் எந்த நேரமும் அவனைத் தாக்கலாமே? குறிப்பாக நாகங்கள், நச்சு, ஆலகாலம் பற்றிய மிரட்சி இன்றையக் காலம் வரை இந்திய வாழ்க்கையில் உண்டே? இந்த நாகங்களுக்கு எதிர் ஆயுதம் நெருப்பு ஒன்றே என்பது நாளாவட்டில் புலப்படுகிறது.

நாகங்கள் நெருப்பைக் கண்டு அஞ்சுவதால், கற்கால மாந்தன் தான் வாழும் குகையின் முன்னே வாயிலில் நெருப்பை எழுப்பி பூச்சி பொட்டுக்கள் நுழையாமல் இருக்க வழி செய்தான்; ஆனால் தூங்கும் போது நெருப்பு அணையாமல் இருக்க வேண்டுமே?. வேண்டிய விறகுகளைப் போட்டு வைத்தாலும் நெருப்பு அணையாமல் காப்பாற்ற வேண்டுமே? இதற்கு இறைவன் தான் துணை செய்ய வேண்டும் என்ற எண்ண மேலீட்டில் வேண்டிக் கொள்ளுகிறான். இலிங்கம்/தெய்வம் என்ற கருத்தும் சேயோன்/சிவன் என்ற முழுமுதல் இறைக்கருத்தும் நெருப்பில் இருந்து பிறந்தவை தான். இருள் தொடங்குமுன் நெருப்பை மூட்டி நெருப்பையே வணங்கித் தன்னைக் காப்பதற்கு பழங்கால மனிதன் இறைவனை வேண்டுவது மிக இயல்பான ஒரு போக்கு. நெருப்புத் தான் தெய்வத்தின் தோற்றம்; சிவனின் உருவம். தன்னை மீறிய ஒரு பேராற்றலே இறைவன் என்பதை உணர்ந்து, தான் துயின்ற பிறகு தன்னைக் காப்பாற்றிப் பின் இறைவன் தூங்குவதாகவும், காலைக்குச் சற்று முந்தி விடியலின் கடைசியில் தான் எழும்போது, இறைவனுக்கும் பள்ளி எழுச்சி செய்யவேண்டும் என்ற புரிதலும் தமிழ மாந்தனுக்கு வந்தது தன்னைப் போல் இறைவனை உருவகித்துப் பார்க்கும் பழக்கத்தால்தான். மாலைக்கு முன்னாலும், காலைக்கு முன்னாலும் இறைவனை வணங்குவது ஒரு வகையில் பன்னெடுங்காலம் விலங்காண்டி காலத்தில் இருந்த மிகப் பழைய பழக்கமாக இருந்திருக்க வேண்டும்.

எற்பாட்டின் முடிவிலும், மாலையின் தொடக்கிலுமாகக் கதிரவன் துய்கிறான், அதாவது சாய்கிறான். சூரியன் சாய்கிறச்சே என்பதை சாய்ரட்சை என்ற வடமொழிப் படுத்திப் பார்ப்பனர் சொல்லுவது உண்டு. துய்யுதல் என்பது சாய்தலையும், துயிலுதலையும், அழிதலையும் கூட உணர்த்தும். துய்யுதல் என்பது தொய்யுதல் என்றும் திரியும். தொய் என்னும் வினைப் பகுதியில் இருந்து தொய்வு என்ற பெயர்ச்சொல்லை ஆக்கிக் கொண்ட நாம் தொய்யம் என்ற இன்னொரு பெயர்ச்சொல்லைப் பேணாது விட்டோ ம். மாறாக, அதைக் கொஞ்சம் போல் திரித்து வடமொழி காப்பாற்றிக் கொண்டது.

நம்முடைய மாலையின் இன்னொரு பெயர் தான் தொய்யம். சூரியன் குறைப்பட்டுப் போன நேரத்தை தொய்யம்>தோயம்>தோஷம் என்றே வடமொழி அழைக்கிறது. முடிவில் குறைப்பட்டதெல்லாம் குற்றமாகி அதையும் தோஷம் என்றே வடமொழியினர் சொல்லுகின்றனர். (தமிழில் இன்னும் தொய் என்ற சொல் குற்றத்தை உணர்த்தி அகரமுதலிகளில் இருப்பதாலேயே தொய்யம் என்ற சொற்பிறப்பை உன்னித்து உணர முடிந்தது.) இந்தத் தொய்யத்திற்கு முந்திய (=புறம் உள்ள) ஐந்து நாழிகைகள் (அதாவது எற்பாட்டின் பின் பாதி) ஒரு நாளில் இருக்கும் புறத்தொய்ய நேரம் (இதுவே வடமொழியில் ப்ரதோஷ காலம்) என்று அழைக்கப் படுகிறது. இந்தப் புறத்தொய்யத்திற்கு இன்னொரு பரிமானம் உண்டு; அதைப் பற்றிக் கொஞ்சம் ஆழமாகப் பார்ப்போம்.

புவியின் தன்னுருட்டு சிறுபொழுதுகளுக்கும், புவியின் வலையம் பெரும்பொழுதுகளுக்கும் காரணமானது போல, புவியைச் சுற்றிவரும் நிலவின் இயக்கமும் மாந்தனுக்கு நடுத்தர அளவுப் பொழுதுகளை உணர்த்துகிறது. நெடுங்கால உள் நோக்கின் பின், தூரத்தில் இருக்கும் ஒரு விண்மீனொடு நிலவைச் சேர்த்துப் பார்த்து, பின் நிலவு புவியைச் சுற்றி வந்து, 360 பாகைச் சுற்றை முடித்து, மீண்டும் அதே விண்மீனோடு பொருந்திவரும் காலம் கிட்டத்தட்ட 27.3216615 நாட்கள் ஆவதை தமிழன் கூர்ந்து பார்த்திருக்கிறான். இந்தக் காலத்தை நிலவின் உடுப்பருவம் (sidereal period) என்றும் சந்திரமான மாதம் என்றும் இன்று சொல்லுகிறோம். இந்தக் கால அளவின் படி புவியில் இருந்து பார்க்கும் போது நிலவு ஒரு நாளுக்கு 360/27.3216615, அதாவது 13.17635825 பாகையைக் கடக்கிறது.

இதே ஒரு நாளில் சூரியன் எத்தனை பாகை கடக்கிறது என்று பார்ப்போம். புவி சூரியனை வலைப்பதற்கு 365. 256364 நாட்கள் ஆனால், அதற்குள் 360 பாகையைச் சுற்றினால், ஒரு நாளில் சூரியன் 360/365.256364 = 0.98560911 பாகையைக் கடக்கிறது என்று தானே பொருள்? இப்பொழுது எங்கோ தொலைவில் இருக்கும் இன்னொரு விண்மீனையும் நிலவையும் இணைத்துப் பார்ப்பதற்கு மாறாக ஒரு சூரிய மான மாதத்தில் ஏதோ ஒரு நாளில் நிலவையும் சூரியனையும் ஒன்று சேரப் பார்க்கிறோம் என்று வைத்துக் கொள்ளுவோம்; ஒன்று சேர்ந்திருந்ததற்கு அடுத்த நாள் பார்த்தால் சூரியன் 0.98560911 பாகை நகர்ந்திருக்கும். ஆனால் நிலவோ 13.17635825 பாகை கடந்திருக்கும். இந்தச் செலவில் நிலவுக்கும் சூரியனுக்கும் இடைப்பட்ட கோணத் தொலைவு 13.17635825 - 0.98560911= 12.19074914 பாகை ஆகியிருக்கும். இந்தக் கோணத்தொலைவு நீண்டுகொண்டே போய் 360 பாகை அளவுக்கு ஒரு சுற்று ஆக 29.5305888 நாட்கள் பிடிக்கும். இந்தப் பொழுதை, அதாவது புவியோடு நிலவும் சூரியனும் மீண்டும் ஒன்று சேரப் பொருந்திவரும் காலத்தைச் சூரியச் சந்திரமான மாதம் என்று அழைப்பார்கள்.

சூரியச் சந்திரமான மாதம் தான் இந்த நாவலந்தீவின் பைஞ்சாங்கம் (பஞ்சாங்கம்) எல்லாவற்றிற்கும் அடிப்படை. இதைப் புரிந்து கொள்ளவில்லை என்றால் நாவலந்தீவின் வானியலைப் புரிந்து கொள்ள முடியாது. சூரியன், நிலவு, புவி என்ற மூன்றும் ஒரே நேர் கோட்டில் வருவதில் இரண்டு விதமான ஒழுங்குகள் இருக்கின்றன. சூரியனுக்கும் புவிக்கும் இடையில் நிலவு வந்து விட்டால், நமக்கு அந்த நேரத்தில் நிலவின் மேல் மறுபளிக்கப் பட்ட ஒளி தெரிவதில்லை. நமக்கு நிலவு ஒளியற்றதாகத் தெரிகிறது. மாறாக சூரியனுக்கும் நிலவுக்கும் இடையில் புவி இருந்தால் நிலவு மிகுந்த ஒளியுள்ளதாகத் தெரிகிறது. நிலவிற்கு இன்னொரு தமிழ்ப் பெயர் உவா என்பது. ஒளியற்ற நிலவை அம(ந்த) உவா (விளக்கு அமந்து போச்சு என்றால் ஒளியில்லாமற் போயிற்று என்றுதானே பொருள்?) என்றும் ஒளி மிகுந்த நிலவை பூரித்த உவா>பூரணை உவா என்றும் சொல்லுகிறோம். அமை உவாவை அம உவை>அமவாய்>அமாவாய்>அமாவாஸ்>அமாவாசை என்றும் பூரணை உவாவை பௌர்ணவி>பௌர்ணமி என்றும் வடமொழியில் திரித்துச் சொல்லுகிறார்கள்.

நிலவு அமை உவாவில் இருந்து கொஞ்சம் கொஞ்சமாகப் பெரிதாகி பூரணை உவாவில் முழுதாகிப் பின் குறைந்துகொண்டே வந்து மீண்டும் அமை உவாவாகிறது. இந்த மாற்றத்திற்கான நாட்கள் தான் 29.5305888 நாட்கள். சூரியச் சந்திர மான மாதங்களை இப்படி அமை உவாவில் தொடங்கி அமை உவாவில் முடிவதாக கருதுவது அமைந்த கணக்கு. பூரணையில் தொடங்கி பூரணையில் முடிவதாகக் கருதுவது பூரணைக் கணக்கு.

அமைந்த கணக்கு கருநாடகம், ஆந்திரம், மராட்டியம் என்ற மூன்று மாநிலங்களிலும், பூரணைக் கணக்கு பீகார், உத்தரப் பிரதேசம், மத்தியப் பிரதேசம், இராசத்தானம், அரியானா, காசுமீர் போன்ற மாநிலங்களிலும் பின்பற்றப் படுகின்றன. குசராத்தும் ஒரு வகையில் அமைந்த கணக்கையே ஆனால் சில வேறுபாடுகளுடன் பின் பற்றுகிறது. திரிபுரா, அசாம், வங்காளம், தமிழ்நாடு, மாற்றும் கேரள மாநிலங்கள் பொதுக் காரியங்களுக்குச் சூரிய மாதத்தையும் (30.43803 நாட்கள்) விழாக்கள், சமயக் காரியங்களுக்கு சந்திரமானத்தையும் பின்பற்றுகின்றன. பழைய பஞ்ச திராவிடப் பகுதிகளும், இவர்களின் தாக்கம் இருந்த நாவலந்தீவின் கிழக்குப் பகுதிகளும் அமைந்த கணக்கையே பின் பற்றுவது ஒரு வரலாற்றுச் செய்தியைச் சொல்லுகிறது. அதை இங்கு விரிப்பின் பெருகும் என்பதால் விடுக்கிறேன்.

அமைந்த கணக்கின் படி சந்திரமான மாதங்கள் அமையுவாவில் தொடங்குகின்றன. அமையுவாவில் இருந்து பூரணை வரை உள்ள காலத்தைச் சொக்கொளிப் பக்கம் (சுக்ல பக்ஷம்) என்றும், பூரணையில் இருந்து திரும்பவும் அமையுவா வரும் வரை உள்ள காலம் கருவின பக்கம் (க்ருஷ்ண பக்ஷம்) என்றும் அழைக்கப் படுகிறது. ஆண்டைச் சூரிய மானத்தில் அறவட்டாக 12 ஆகப் பகுத்தது போல நிலவு போகும் வட்டப் பாதையை அறவட்டாக 30 பகுதியாகப் பிரிக்கிறோம். இதில் ஒவ்வொரு பகுதியும் 12 பாகை கொண்டது. இந்தப் பகுதிகளுக்குத் திகழிகள் என்று பெயர். நிலவு ஒவ்வொரு விதமாகத் திகழுகிறது, அல்லது ஒளி தருகிறது. திகழி மறுவித் திகதி என்று ஆகி இன்னும் திரிந்து வடமொழியில் திதி என்று சொல்லப் படுகிறது. சந்திர மானக் கணக்கின் படி நிலவின் சுற்று 30 திகழி/திகதி/திதிகள் அடங்கியது. ஒரு சூரிய மான மாதத்திற்கும் கிட்டத்தட்ட 30 நாட்கள் என்னும் போது பெயர்ப் பிறழ்ச்சியில் திகதி தேதியாகி சூரிய மானத்து நாட்களையும் குறிக்கத் தொடங்கிற்று. ஈழத்தார் இன்னும் திகதி என்ற சொல்லைக் காப்பாற்றி வருகிறார்கள். தமிழ்நாட்டில் தேதி என்று சொல்லிவருகிறோம். ஈழத்தார் சொல் இல்லையேல் இந்தச் சொற்பிறப்பைக் கண்டறிந்திருக்க முடியாது.

நிலவின் சொக்கொளிப் பக்கத்திற்கு 15 திகழிகளும், கருவின பக்கத்திற்கு 15 திகழிகளுமாக வைத்துக் கொண்டு உள்ளோம். ஒரு திகழியை நிலவு கடக்கும் நேரம் 1.015895762 நாட்கள். ஒரு நாளில் எப்படி ஒளிதோன்றும் நேரமும், இருள் தோன்றும் நேரமும் நம் முன்னவருக்கு ஆழ்ந்த குறிப்பானதாகத் தோன்றியதோ, அது போல நிலவு போகும் பாதையில் பூரணையும், அமையுவாவும் ஆழ்ந்த குறிப்புள்ளவையே. இன்னொரு விதமாகச் சொன்னால் எப்படி ஒரு நாளில் இரவு எழும் முன் உள்ள ஐந்து நாழிகைகள் முகமையாகிப் ஒரு நாளின் புறத்தொய்ய நேரம் ஆனதோ அது போலவே, 12 1/2 -இல் இருந்து 15 வது திகழி வரை உள்ள கிட்டத்தட்ட இரண்டரை நாட்கள், புறத்தொய்ய நாட்கள் ஆகின. சிறப்பாக 12 1/2 - ஆவது திகழி, புறத்தொய்ய நாள் ஆகி இன்றும் பைஞ்சாங்கத்தில் குறிக்கப் படுகிறது. ஒரு நாளில் மாலைக்கு முன்னாலும், காலைக்கு முன்னாலும் இருளை ஒட்டி எழுந்த மருட்டால் இறைவனை நாடித் தன்னைக் காப்பாற்றத் தமிழமாந்தன் பரவியது போலவே, அமையுவாவிற்கு முன்னும், பூரணைக்கு முன்னும் உள்ள புறத்தொய்ய நாளில் இறைவனை, குறிப்பாக இலிங்க வடிவினனான சிவனைத் தொழும் பழக்கம் தோன்றி இருக்கிறது.

அப்படியானால் திரு நீலகண்டம், பாற்கடல், ஆலகால நஞ்சு என்பதெல்லாம் என்னவாயிற்று என்று கேட்பீர்கள். தொன்மங்கள் என்பவை அடிப்படை உள்ளுறைகளை மூடினாற்போல் வைத்து கொஞ்சம் கதைப் போக்கில் சொல்ல முற்படும் புலனங்கள் என்றே என்னால் விடை சொல்ல முடியும். இந்தத் தொன்மங்களின் உட்பொருளைப் புரிந்து கொள்ள வேண்டுமே ஒழிய அவற்றை அப்படியே நடந்ததாகக் கொள்ளுவது நம்பிக்கையின் பாற்பட்டது என்றே சொல்ல வேண்டியிருக்கிறது.

புறத்தொய்ய நேரம், புறத்தொய்ய நாள் என்ற கருத்துக்கள் ஆழமானவை; வானவியலோடு தொடர்பு கொண்டவை; தமிழ் மாந்தனின் இறைத்தொழுகைக் காலம் பற்றிய அடிப்படைச் செய்தியைக் குறிப்பவை.

இதுபோல புறத்தோயை மாதமும் இருக்கிறது. அதைத் தான் உருமாற்றி புரட்டாசி மாதம் என்று சொல்லுகிறோம். மாதங்கள் பற்றிக் குறிக்கும் இன்னொரு அதிகாரத்தில் அதை விளக்கமாகப் பார்க்கலாம்.

அன்புடன்,
இராம.கி.
--------------------------------------------------------------------------------------------------------------------
இருளைக் கண்டு மருளுவது ஒரு வகை; இருளே சிலருக்கு இல்லாது போவது தெரியுமோ? சுவைக்க வேண்டிய பாவலர் ஏறு பெருஞ்சித்திரனாரின் ஒரு பாட்டு.

நல்லோர்க்கும் அஃதே

புரைமிகு உரைவாய்ப் புளிங்கள் நாற
முறை அறப் பழகும் முழு மாந்தர்க்கும்
இமையா நோக்கின் எல்லை காக்கும்
அமையாத் தோளின் பூட்கையோர்க்கும்
ஈன்றோர் இசைதர ஊன்றியோர் மணந்து
தலைநாள் புல்லிய கழி இளவோர்க்கும்
கை வளை உகுப்ப விழிநீர் கழல
மெய்கெடத் தணந்த மெல்லியலார்க்கும்
நெடுநிலை முன்றின் நிலாப்பனி நனைப்ப
அடுசுவர் ஒடுங்கும் அளியினோர்க்கும்
இலை ஆகின்றே இரவே
நல்லோர்க்கும் அஃதே நயந்திசின் நாடே!

நூறாசிரியம் - 84
பொழிப்பு:

குற்றம் மிகுந்த சொற்களைப் பேசுகின்ற வாயினின்றும் புளித்த கள்ளின் நாற்றம் வெளிப்பட, யாவரிடத்தும் ஒழுங்கின்றிப் பழகும் முட்டாள்களுக்கும்,
கண் இமையாது நோக்குதலால் நாட்டின் எல்லையைக் காத்து நிற்கும் எழுச்சி கொண்ட தோளையுடைய கொள்கை மறவர்கட்கும், பெற்றோர்தம் ஒப்புதலோடும் தம் உள்ளத்து வரித்தாரை மணந்து முதல் நாளில் கூடிய மிக்க இளமையுடையோருக்கும், முன்கை வளையலை நெகிழவிடவும், விழி நீர் வெளிப்படுத்தவும் யாக்கை பொலிவிழப்பவும், தம் வாழ்க்கைத் துணைவரைப் பிரிந்த மெல்லிய இயல்பினரான மகளிர்க்கும்; உயர்ந்த கட்டடங்களின் தாழ்வாரத்தே நிலாக்காலத்துப் பனி நனைத்தலால் பொருந்திய சுவரோரத்தில் குளிரால் ஒடுங்கிக் கிடக்கும் இரங்கத் தக்கார்க்கும், இராப்பொழுது இல்லாது ஒழிகின்றது. நாட்டு நலம் நாடிப் பாடுபடும் சான்றோர்க்கும் அந்நிலையேயாம்.

இப்பாடல் பொதுவியல் என்னும் புறத்திணையும், பொருண்மொழிக் காஞ்சி என்னும் துறையுமாம்.

வாழ்க வளமுடன்.

அன்புடன்,
இராம.கி.

In TSCII:

¸¡Äí¸û - 5

¿¢Ä§Å¡Îõ ¦À¡Ø§¾¡Îõ

¦ºýÈ ¸¡Ã¢ì ¸¢Æ¨Á¢ø Ò¾¢Â Á¡ÁøÄÒÃõ º¡¨Ä ÅÆ¢§Â ¦ºý¨É¨Â §¿¡ì¸¢ ¿¡Ûõ ±ý Á¨ÉÅ¢Ôõ ÅóÐ ¦¸¡ñÊÕ󧾡õ. «ô¦À¡ØÐ ¾¢ÕÅ¡ýÁ¢äâø ¯ûÇ ÁÕ󾣺÷ §¸¡Â¢ÖìÌô §À¡ö ¦¿Î¿¡ð¸û ¬Â¢üÚ, ´Õ Ó¨È §À¡ö ÅÃÄ¡õ ±ýÚ ÓʦÅÎòÐî ¦ºýÈ¡ø «í§¸ ºÉ¢ô À¢Ã§¾¡ºõ ±ýÚ ´§Ã Üð¼õ. þó¾ô ÀøÄÅ÷ ¸¡ÄòÐì §¸¡Â¢ÖìÌ ³ó¾¡Ú ¬ñθÙìÌ ÓýÉ¡ø ܼ «ùÅÇ× Üð¼õ ÅáÐ. «ý¨È째¡ Üð¼õ «¨Ä §Á¡¾¢ÂÐ. ¸¡Äõ Á¡È¢ô §À¡Â¢üÚ, §À¡Öõ! þô¦À¡Ø¦¾øÄ¡õ º¢Åý §¸¡Â¢ø¸ÙìÌì Üð¼õ ±ì¸î ºì¸Á¡¸§Å ÅÕ¸¢ÈÐ.

þó¾ì §¸¡Ç¡ø ¦¸Î¾ø, «ó¾ì §¸¡Ç¡ø ¦¸Î¾ø ±ýÚ ´ÕÅ¢¾ ÁÕ𨼠°¦ÃøÄ¡õ ¦¾Ç¢òÐ «¾É¡ø °¦ÃíÌõ Á츨Çì ÜðÊ, §º¡¾¢Â÷¸Ùõ, ÌÕì¸ûÁ¡Õõ ¡¸õ, µÁõ, À⸡Ãõ ±ýÚ ºì¨¸ô §À¡Î §À¡Î¸¢È¡÷¸û. Å¢¨Ç×? Å¡ú쨸¢ü ºó¾¢ìÌõ ºÃÅø¸¨Ç ²ü¸ ÓÊ¡Áü ¾ÎÁ¡È¢, ±í¸¡ÅÐ µÃ¢¼ò¾¢ø ÀüÚ째¡Î ¿¡Ê, ¬¾Ã× §ÅñÊ, ¿õÀ¢Â º¡Á¢Â¡÷¸Ç¡ø «¨Äì ¸Æ¢ì¸ô ÀðÎ, ÓÊÅ¢ø þ¨ÈÅ§É ºÃñ ±ýÚ ±øÄ¡ò ¾Ã Áì¸Ùõ §¸¡Â¢ÖìÌô §À¡¸ò ¦¾¡¼í¸¢Å¢ð¼¡÷¸û. þÐ ºÃ¢Â¡É ºÁ ¿õÀ¢ì¨¸ìÌ «È¢ÌȢ¡ ±ýÀÐ ¾¡ý ¦¾Ã¢ÂÅ¢ø¨Ä.

ÁÕ󾣺÷ §¸¡Â¢ÖìÌû ¸¢ð¼ò¾ð¼ ±û §À¡ð¼¡ø Å¢Æ ÓÊ¡¾ «Ç×ìÌì Üð¼õ. §¸¡Â¢Ä¢ý ¯ûÅð¼ò¾¢ø ¦ÅûÇ¢ Å¢¨¼ (þ¼Àõ) Å¡¸Éò¾¢ø þ¨ÈÅÉ¢ý ¾¢Õ§ÁÉ¢ ¯Ä¡ ¿¨¼¦ÀüÚì ¦¸¡ñÊÕó¾Ð. ¯Ä¡Å¢ý À¢ýÉ¡ø §¾Å¡Ãõ À¡Ê Åñ½õ º¢Å¦¿È¢ò ¦¾¡ñ¼÷¸û ¦ºýÚ ¦¸¡ñÊÕó¾¡÷¸û. À¡ñÊÂý ¿¢ýȺ£÷ ¦¿ÎÁ¡ÈÛìÌ Åó¾ Ý¨Ä §¿¡¨Âì ̽ôÀÎò¾¢Â "Áó¾¢ÃÁ¡ÅÐ ¿£Ú" ±ýÈ ºõÀó¾÷ §¾Å¡Ãõ ¦¾¡¨ÄÅ¢ø ¿¢ýÈ ±ý ¸¡Ð¸ÙìÌ Ì¨Èó¾ ¦ÅûÇò¾¢ø Å¢ðÎÅ¢ðÎ ´Ä¢ò¾Ð. °÷ôÀð¼ §À÷ ⺨Éô À¡¼ø¸û «¼í¸¢Â ¦À¡ò¾¸ò¨¾ì ¨¸Â¢ø ¨ÅòÐ ¦¸¡ñΠܼ§Å µ¾¢ì ¦¸¡ñÎ §À¡É¡÷¸û. ¯Ä¡ ¿¢¨Ä ¦¸¡ûÙõ Ũà þÕ츦šñ½¡¾ ¸¡Ã½ò¾¡ø, «ó¾ì Üð¼ò¾¢ý ¿ÎÅ¢Öõ þ¨ÈÅ¨É Å½í¸¢ÂÀ¢ý, ¦ÁÐÅ¡¸ ¯Ä¡ ¿¸Õõ ¦À¡ØÐ, ¿¡í¸Ùõ ¿¸÷óÐ ¿ÎÅƢ¢ø §ÁüÌ «Ãº §¸¡ÒÃò¨¾ì ¸¼óÐ ¦ÅÇ¢§Â Å󧾡õ. §¸¡Â¢ÖìÌô §À¡ö Åó¾ «¨Á¾¢Â¢ý °§¼, À¢Ã§¾¡ºõ ÀüȢ º¢ó¾¨É¢ø Å£ðÎìÌ ÅóÐõ ¬úóÐ þÕó§¾ý.

¿õÓ¨¼Â ºÁÂî º¢ó¾¨É¸Ç¢ø þó¾ ż¦Á¡Æ¢ ¾¡ý ±ôÀÊ ±øÄ¡õ ¾ý ÅÂô ÀÎò¾¢ì ¦¸¡ñÎ ¿£ì¸ÁÈ ¿¢¨ÈóÐÅ¢ð¼Ð? ²¦¾¡ý¨ÈÔõ ż¦Á¡Æ¢Â¢ý Ш½Â¡ø «ýÈ¢ ¾Á¢Æ¡ø ¾É¢òÐ «È¢Â ÓÊ¡ Åñ½õ, ±ôÀÊ ¿¡õ þó¾ ¦Á¡Æ¢¨Âò ¦¾¡¨Äò§¾¡õ? ¾Á¢ú ±ýÀÐ ¿õ §¸¡Â¢ø¸Ùû ¦ÅÚ§Á ¦À¡ÚòÐì ¦¸¡ûÙõ µ÷ ´ðÎ ¦Á¡Æ¢Â¡ö ¬¸¢ô §À¡É§¾? ±í¸û Å£ðÎ측ÃÕõ ¸î§ºÃ¢ìÌô §À¡É¡÷ ±ýÀÐ §À¡Ä ¾Á¢Æ¢ø «Õîº¨É ¦ºöÂôÀÎõ ±ýÚ ´ôÒìÌ ±Ø¾¢ô §À¡ðΠŢðÎ, ¯ñ¨Á¢ø «¨¾ ¦ÀÕõÀ¡Ä¡É ÌÕì¸ûÁ¡÷ ¦ºö ÁÚôÀÐ ¾Á¢ÆÕìÌ §¿ÃÊî ºÚì¸ø ¾¡§É? ±ò¾¨É ¾Á¢úì ÌÊÁ¸ý¸û ÅóÐõ ±ýÉ ÀÂý?

º¢ó¾¨É §ÁÖõ þôÀÊ Å¢ÃמüÌ Óý, þó¾ À¢Ã§¾¡ºò¾¢ý ¾Á¢ú ãÄõ ¾¡ý ±Ð, þ¨¾ ±ôÀÊì ¸¡ÏÅÐ ±ýÚ ¦º¡øÄ ÓüÀθ¢§Èý.

þó¾ò ¦¾¡¼Ã¢ø ²ü¸É§Å ÒŢ¢ý ¾ýÛÕð¼ø (rotation), ŨÄÂõ (revolution), ¸¢ÚÅ¡ð¼õ (gyration), ¦¿üÈ¡ð¼õ (nutation) ±ýÚ ¿¡ýÌ Å¢¾Á¡É þÂì¸í¸û ÀüÈ¢ô À¡÷ò§¾¡õ. ÀÄ ¬ñÎ ¸¡Äô Òâ¾ø¸ÙìÌô À¢ý ÒŢ¢ý ´ù¦Å¡Õ ¾ýÛÕð¼¨ÄÔõ ¿¡û ±ýÚ ¾Á¢Æ÷¸û ¦º¡øÄò ¦¾¡¼í¸¢§É¡õ. Ýâ¨Éô ÒÅ¢ ÍüÈ¢ÅÕõ ŨÄÂò¾¢ý ¸¡Äò¨¾ ´Õ ¬ñÎ ±ýÚ ¦ÀÂâðÎì ¦¸¡ñÎ, þó¾ì ¸¡Äò¾¢üÌû ±ò¾¨É ¾ýÛÕðÎì¸û ¿¼ì¸¢ýÈÉ ±ýÚõ ¸½ì¸¢ð¼¡ø 365.256364 ¾ýÛÕðÎì¸û ±ýÚ ÒÄôÀÎõ. þÉ¢ ´ù¦Å¡Õ ¬ñ¨¼Ôõ «ÈÅ𼡸 12 Á¡¾í¸û ±ýÚ À¢Ã¢ò¾¡ø, ´Õ Á¡¾õ ±ýÀÐ 30.43803 ¿¡ð¸û ¬¸¢ýÈÐ. Á¡¾ ¿¡ð¸¨Ç ÓØ ¿¡ð¸û ¬ìÌžü¸¡¸ì ÜðÊÔõ ̨ÈòÐõ ¨ÅòÐì ¦¸¡ûÙÅÐ ¯ñÎ. ¦ÅÚõ ŨÄÂì ¸¡ÄÁ¡É ´Õ ¬ñ¨¼ ÀýÉ¢ÃñÎ Àí¸¡ì¸¢ ´ù¦Å¡Õ Àí¨¸Ôõ Ýâ Á¡É Á¡¾õ ±ýÚ ¦º¡øÖ¸¢§È¡õ.

²ü¸É§Å ÒÅ¢ ÍüÈ¢ ÅÕõ ŨÄÂò¾¢ý À¢ýÒÄÁ¡¸ Å¢ñÁ£ý¸û þ¨ÃóÐ ¸¢¼ôÀ¨¾Ôõ «Åü¨È µ¨Ã «øÄÐ þẢ ±ýÚ «¨ÆôÀ¨¾Ôõ ¿¢¨É× ÀÎò¾¢ì ¦¸¡û٧šõ. þó¾ µ¨Ã¸¨Ç ¾Á¢ú ӨȢø §ÁÆõ, Å¢¨¼, ¬¼¨Å, ¸¼¸õ, Á¼í¸ø, ¸ýÉ¢, ШÄ, ¿Ç¢, º¢¨Ä, ÍÈÅõ, ÌõÀõ, Á£Éõ ±ýÚ ¦º¡øÖ¸¢§È¡õ. þ¨¾§Â À¡¾¢ ż¦Á¡Æ¢ô ÀÎò¾¢ §Á„õ, â„Àõ, Á¢ÐÉõ, ¸¼¸õ, º¢õÁõ, ¸ýÉ¢, ÐÄ¡õ, Å¢Õ¸õ, ¾ÛŠ, Á¸Ãõ, ÌõÀõ, Á£Éõ ±ýÚ ¦º¡øÖÅ¡÷¸û. À¡¾¢ ż¦Á¡Æ¢ô §À þý¨ÈìÌ ¿õÁ¢ø ÀÄÕìÌõ ÀÆì¸Á¡¸¢ô §À¡ÉÐ, «¾É¡ø þó¾ Å⨺¸¨Ç þÕÓ¨Èô ÀÊÔõ ¦¸¡Îò¾¢Õ츢§Èý. ÓØò ¾Á¢úî ¦º¡ü¸¨Çì ¦¸¡ïºõ ¦¸¡ïºÁ¡¸ ÓÂýÚ À¡÷òÐ ¿¨¼Ó¨ÈìÌì ¦¸¡ñÎ Åà §ÅñÎõ.

µ¨Ã¸Ç¢ý ¦ÀÂ÷¸¨Ç§Â Ýâ Á¡É Á¡¾ò¾¢üÌõ ¦ÀÂ÷¸Ç¡¸î ¦º¡øÖÅÐ ¸¡Ä ¸¡ÄÁ¡É ÁÃÒ. Ýâ Á¡É Á¡¾ò¨¾ »¡Â¢Ú ±ýÈ ¦º¡øÄ¡ø «¨ÆòÐî §º¡Æ÷ ¸¡Äì ¸ø¦ÅðÎì¸Ç¢ø ÌÈ¢ò¾¢Õ츢ȡ÷¸û. ¸¼¸ »¡Â¢Ú, ÌõÀ »¡Â¢Ú ±ýÚ «ÅüÈ¢ø ¦º¡ü¸û ÒÆíÌõ. º¢ò¾¢¨Ã, ¨Å¸¡º¢......ÀíÌÉ¢ ±ýÈ ¦ÀÂ÷ ¦¸¡ÎòÐ «¨ÆìÌõ Á¡¾í¸û ºó¾¢Ã Á¡Éì ¸½ì¸¢ø ÅÕÀ¨Å. þÅü¨Èò ¾¢í¸û Á¡¾í¸û ±ý§À¡õ. ¾¢í¸û Á¡¾í¸ÙìÌõ »¡Â¢üÚ Á¡¾í¸ÙìÌõ þÕìÌõ ¯È¨Åô À¢ý¦É¡Õ «¾¢¸¡Ãò¾¢ø À¡÷ô§À¡õ. þÃñÎÅ¢¾Á¡É ¸½ì̸Ùõ ºí¸ ¸¡Äõ ¦¾¡ð§¼ ¿õÁ¢¼õ þÕóÐ ÅÕ¸¢ýÈÉ.

«ÎòРŨÄÂò¨¾ô ÀüȢ ´Õ ¦ºö¾¢. ¯ñ¨Á¢ø ÒÅ¢¾¡ý Ýâ¨Éî ÍüÈ¢ ÅÕ¸¢ÈÐ ±ýÈ¡Öõ, Ý̢夃 ¿õ¨Áî ÍüÈ¢ ŨÄòÐ ÅÕÅÐ §À¡Ä ¿ÁìÌò §¾¡üÚ¸¢ÈÐ. «ôÀÊô ÒÅ¢¨Âî ÍüÚž¡¸ò §¾¡üÈõ «Ç¢ìÌõ ÝâÂÉ¢ý ÍüÚò¾Çõ ÒŢ¢ý ¿Îì §¸¡ðÎò ¾Çò¨¾ 23.5 À¡¨¸Â¢ø Å¢ØóÐ ¦ÅðÎÅÐ §À¡Äì ¸¡ðº¢ÂǢ츢ÈÐ. þó¾ þÕ ¾Çí¸Ç¢ý ¦ÅðΠŢØô¨À "Å¢Ø" ±ý§È ¾Á¢Æ¢ø ¦º¡øÄ ÓüÀð¼É÷. ´Õ Åð¼ò ¾Çõ þý¦É¡Õ Åð¼ò ¾Çò¨¾ þÃñÎ þ¼í¸Ç¢ø «øÄÅ¡ ¦ÅðÊ Å¢Æ §ÅñÎõ? «¨¾¦Â¡ðÊ þÃñΠŢØì¸û ¿ÁìÌô ÒâÀθ¢ýÈÉ.

þÃñ¼¡Â¢ÃòÐ ³áÚ ¬ñθÙìÌ ÓýÉ¡ø ¿õ Óý§É¡ÕìÌò ¦¾Ã¢ó¾ §¾¡üÈò¾¢ý ÀÊ ´Õ Å¢Ø §ÁÆ µ¨Ã¨Âô À¢ýÒÄÁ¡¸ì ¦¸¡ñ¼ §ÁÆ Å¢Ø. Áü¦È¡ýÚ Ð¨Ä µ¨Ã¨Âô À¢ýÒÄÁ¡¸ì ¦¸¡ñ¼ Ð¨Ä Å¢Ø. «¾¡ÅÐ ´Õ Å¢Ø §ÁÆ þẢ þÕìÌõ ¾¢¨ºÂ¢Öõ, Áü¦È¡ýÚ Ð¨Ä þẢ þÕìÌõ ¾¢¨ºÂ¢Öõ «ô¦À¡ØÐ ¸¡ðº¢ÂÇ¢ò¾É. «ó¾ô À¨Æ À¡÷¨Å¨Â þýÚ Å¨Ã ±ÎòÐì ¦¸¡ñÎ, þý¨ÈìÌ §ÁÆÅ¢Ø §ÁÆ µ¨Ã¢ø þÕóÐ ¸¢ÚÅ¡ð¼õ ¸¡Ã½Á¡öò ¾ûÇ¢ô §À¡ö Å¢ð¼¡Öõ, «ÈÅ𼡸ò ¾Á¢ú¿¡ðÎ ÅÆ츢ýÀÊ ¬ñÎôÀ¢ÈôÒ ±ýÀÐ §ÁÆ µ¨Ã¢ø ¦¾¡¼íÌž¡¸ì ¦¸¡ñ§¼ Á¡¾í¸¨Çì ¸½ì¸¢Î¸¢§È¡õ. «ôÀÊò¾¡ý ¾Á¢Æ¡ñÎô À¢ÈôÒ ²ôÃø 14 - ø ¦¾¡¼í̸¢ÈÐ. þ¨¾ô ÀüÈ¢ Óý§É §Àº¢Â¢Õ츢§È¡õ.

«ÎòÐ ´Õ ¿¡Ç¢ý º¢ÚÀ̾¢¸¨Çô ÀüÈ¢ô À¡÷ô§À¡õ. ºí¸ ¸¡Äò¾¢üÌî º¢Ä áüÈ¡ñθû ÓýÉ¡ø, ´Õ ¿¡û ±ýÀ¨¾ 60 º¢Ú À̾¢¸Ç¡¸§Å À¢Ã¢ò¾¡÷¸û. þó¾ º¢Ú À̾¢¨Âò¾¡ý ¿¡Æ¢¨¸ ±ýÚ ¿õ ÓýÉÅ÷¸û ¦º¡ýÉ¡÷¸û. ´Õ ¿¡Æ¢¨¸ ±ýÀÐ 24 ÑÏò¾õ; þÃñ¼¨Ã ¿¡Æ¢¨¸¸û ±ýÀÐ ´Õ Á½¢ §¿Ãõ. ¿¡û ±ýÈ ¦º¡ø ӾĢø 30 ¿¡Æ¢¨¸ô ¦À¡Ø¾¡ö þÕû ¦¾¡¼í¸¢ þÕû ÓÊŨ¾§Â ÌÈ¢ò¾Ð. À¢ÈÌ þÕÇ¢ø ¦¾¡¼í¸¢ ´Ç¢ÅóÐ Á£ñÎõ þÕû ÅÕõ Ũà ¯ûÇ 60 ¿¡Æ¢¨¸ô ¦À¡Ø¨¾ì ÌÈ¢ò¾Ð. 30 ¿¡Æ¢¨¸ô ¦À¡Ø¨¾ì ÌÈ¢ìÌõ þó¾î ¦º¡ø 60 ¿¡Æ¢¨¸ô ¦À¡Ø¨¾ì ÌÈ¢ôÀ¾¡¸ ¿£ñ¼ À¢ýÉ÷, 60 ¿¡Æ¢¨¸ô ¦À¡ØÐ ±ô¦À¡ØÐ ¦¾¡¼í¸¢É¡ø ±ýÉ ±ýÈ §À¡ì¸¢ø þó¾ì ¸¡Äò¾¢ø ´Ç¢¦¾¡¼í¸¢ þÕû ÅóÐ Á£ñÎõ ´Ç¢§¾¡ýÚõ Ũà ¯ûÇ ¸¡Äò¨¾ ¿¡û ±ýÚ ¦º¡øÖ¸¢§È¡õ. º¢Ä¦À¡ØÐ þýÛõ º¢ÈôÀ¡¸ ¿¡û ±ýÈ ¦º¡ø¨Ä ¸¡¨Ä, À¸ø, ±üÀ¡Î ±ýÈ Óò¦¾¡Ì¾¢¨Âì ÌÈ¢ì¸×õ, «ø ±ýÈ ¦º¡ø¨Ä Á¡¨Ä, ¡Áõ, Å¢ÊÂø ±ýÈ Óò¦¾¡Ì¾¢¨Âì ÌÈ¢ì¸×õ ÀÂýÀÎòи¢§È¡õ. «ø¨Ä þÃ× ±ýÚ ¾¡ý þó¾ì ¸¡Äò¾¢ø ÌȢ츢§È¡õ.

´Õ ¿¡ÙìÌ ¬Ìõ ¦Á¡ò¾ §¿Ãò¨¾ 6 º¢Ú ¦À¡Øиǡ¸×õ ´ù¦Å¡Õ º¢Ú¦À¡ØÐìÌõ 10 ¿¡Æ¢¨¸¸Ç¡¸×õ ¦¾¡ø¸¡ôÀ¢Â÷ ¸¡Äò¾¢üÌ ÓýÉ¡ø ¾Á¢Æ÷¸û ÀÌò¾¢Õ츢ȡ÷¸û. ¸¡¨Ä, À¸ø, ±üÀ¡Î, Á¡¨Ä, ¡Áõ, Å¢ÊÂø (=¨Å¸¨È) ±ýÈ þó¾ ¬Ú º¢Ú ¦À¡Øи¨Çî ¦º¡øÖÅ¡÷¸û. ´Ç¢ «¼íÌõ ²üÀ¡Î, þÕû ¦¾¡¼íÌõ Á¡¨Ä ¬¸¢Â¨Å ºó¾¢ìÌõ §¿ÃÓõ, þÕû ̨ÈÔõ ¨Å¸¨È, ´Ç¢ §¾¡ýÚõ ¸¡¨Ä ¬¸¢Â¨Å ºó¾¢ìÌõ §¿ÃÓõ Á¡ó¾ Å¡ú쨸¢ø ²§¾¡ ´Õ Ũ¸Â¢ø ¿õ¨Á ®÷츢ýÈÉ. ±ø ±Ûõ ÝâÂý ÀðÎ즸¡ñ§¼ ÅÕõ §¿Ãõ ±üÀ¡Î. «ó¾ ±üÀ¡ðÊüÌ «ôÒÈõ ¯ûÇ 10 ¿¡Æ¢¨¸¸Ç¢ø ÝâÂý ÓüÈ¢Öõ ÅÖÅ¢ÆóÐ ¦¾¡öóÐ §À¡ö Ţθ¢È¡ý. þÕû ¦¾¡¼í̸¢ÈÐ. «ó¾ ¿¢¨Ä¢ø þÕÙõ ´Ç¢Ôõ ÓÂí¸¢ì ¸¢¼ìÌõ 10 ¿¡Æ¢¨¸¸û ÁÂí̸¢ýÈ §¿ÃÁ¡ö, ÁÂÖ¸¢ýÈ §¿ÃÁ¡ö, Á¨Ä¡ö, Á¡¨Ä¡ö ¬¸¢ô §À¡¸¢ÈÐ. À¸Ä¡, þÃÅ¡ ±ýÚ ÁÄí̸¢ýÈ §¿Ãõ ¾¡ý Á¡¨Ä. ÁÄíÌÅÐ ±ýÀÐõ ÁÂí̾§Ä. Áø>Á÷>ÁÕðÎ ±ýÈ ¦º¡øÖõ þó¾ §Åâø þÕóÐ ±Ø󾧾.

þÃ× Á¡ó¾Ûû ÀÄÅ¢¾Á¡É ¯½÷׸¨Çì ¦¸¡Îò¾¢Õ츢ÈÐ. «Ð µö×ìÌõ ¬ö×ìÌõ Á¡ó¾¨É ®ÎÀÎò¾¢ÂÐ §À¡ø, Å¢¾ôÀ¡¸ ÁÕðÊüÌõ ¬Ç¡ì¸¢ þÕ츢ÈÐ. þý¨ÈìÌ ÑðÀÅ¢Âø ÅÇ÷óÐ ±øÄ¡Å¢¾ ²óиÙõ Åó¾À¢ÈÌõ ܼ ¿ÁìÌ þÃ× ±ýÀÐ ´Õ Á¢Ãð¼¨Äì ¦¸¡ÎìÌõ §À¡Ð Å¢Äí¸¡ñÊ ¿¢¨Ä¢ø þÃÅ¢ý ¦¾¡¼ì¸õ ´Õ ÁÕ𺢨Âì ¦¸¡ÎìÌõ ¾¡§É? þÃÅ¢üÌ Óý Ũà ŢÄí¸¡ñÊ Á¡ó¾ý ŢƢô§À¡Î þÕóÐ ¾ü¸¡ô¨Àô §À½ ÓÊÔõ. þÃ× ¦¾¡¼í¸¢Â×¼ý Å¢Äí¸¡ñÊ Á¡ó¾ý ÅĢŢÆóÐ «øÄÅ¡ §À¡öÅ¢ÎÅ¡ý? â ¦À¡ðÎì¸û ±ó¾ §¿ÃÓõ «Å¨Éò ¾¡ì¸Ä¡§Á? ÌÈ¢ôÀ¡¸ ¿¡¸í¸û, ¿îÍ, ¬Ä¸¡Äõ ÀüȢ Á¢Ã𺢠þý¨ÈÂì ¸¡Äõ Ũà þó¾¢Â Å¡ú쨸¢ø ¯ñ§¼? þó¾ ¿¡¸í¸ÙìÌ ±¾¢÷ ¬Ô¾õ ¦¿ÕôÒ ´ý§È ±ýÀÐ ¿¡Ç¡ÅðÊø ÒÄôÀθ¢ÈÐ.

¿¡¸í¸û ¦¿Õô¨Àì ¸ñÎ «ïÍž¡ø, ¸ü¸¡Ä Á¡ó¾ý ¾¡ý Å¡Øõ ̨¸Â¢ý Óý§É š¢Ģø ¦¿Õô¨À ±ØôÀ¢ â ¦À¡ðÎì¸û ѨÆ¡Áø þÕì¸ ÅÆ¢ ¦ºö¾¡ý; ¬É¡ø àíÌõ §À¡Ð ¦¿ÕôÒ «¨½Â¡Áø þÕì¸ §ÅñΧÁ?. §ÅñÊ ŢÈ̸¨Çô §À¡ðÎ ¨Åò¾¡Öõ ¦¿ÕôÒ «¨½Â¡Áø ¸¡ôÀ¡üÈ §ÅñΧÁ? þ¾üÌ þ¨ÈÅý ¾¡ý Ш½ ¦ºö §ÅñÎõ ±ýÈ ±ñ½ §ÁÄ£ðÊø §ÅñÊì ¦¸¡ûÙ¸¢È¡ý. þÄ¢í¸õ/¦¾öÅõ ±ýÈ ¸ÕòÐõ §º§Â¡ý/º¢Åý ±ýÈ ÓØÓ¾ø þ¨Èì¸ÕòÐõ ¦¿ÕôÀ¢ø þÕóÐ À¢Èó¾¨Å ¾¡ý. þÕû ¦¾¡¼íÌÓý ¦¿Õô¨À ãðÊ ¦¿Õô¨À§Â Å½í¸¢ò ¾ý¨Éì ¸¡ôÀ¾üÌ ÀÆí¸¡Ä ÁÉ¢¾ý þ¨ÈÅ¨É §ÅñÎÅÐ Á¢¸ þÂøÀ¡É ´Õ §À¡ìÌ. ¦¿ÕôÒò ¾¡ý ¦¾öÅò¾¢ý §¾¡üÈõ; º¢ÅÉ¢ý ¯ÕÅõ. ¾ý¨É Á£È¢Â ´Õ §Àáü餀 þ¨ÈÅý ±ýÀ¨¾ ¯½÷óÐ, ¾¡ý ТýÈ À¢ÈÌ ¾ý¨Éì ¸¡ôÀ¡üÈ¢ô À¢ý þ¨ÈÅý àíÌž¡¸×õ, ¸¡¨ÄìÌî ºüÚ Óó¾¢ Å¢ÊÂÄ¢ý ¸¨¼º¢Â¢ø ¾¡ý ±Øõ§À¡Ð, þ¨ÈÅÛìÌõ ÀûÇ¢ ±Ø ¦ºö§ÅñÎõ ±ýÈ Òâ¾Öõ ¾Á¢Æ Á¡ó¾ÛìÌ Åó¾Ð ¾ý¨Éô §À¡ø þ¨ÈÅ¨É ¯ÕŸ¢òÐô À¡÷ìÌõ ÀÆì¸ò¾¡ø¾¡ý. Á¡¨ÄìÌ ÓýÉ¡Öõ, ¸¡¨ÄìÌ ÓýÉ¡Öõ þ¨ÈÅ¨É Å½íÌÅÐ ´Õ Ũ¸Â¢ø Àý¦ÉÎí¸¡Äõ Å¢Äí¸¡ñÊ ¸¡Äò¾¢ø þÕó¾ Á¢¸ô À¨Æ ÀÆì¸Á¡¸ þÕó¾¢Õì¸ §ÅñÎõ.

±üÀ¡ðÊý ÓÊÅ¢Öõ, Á¡¨Ä¢ý ¦¾¡¼ì¸¢ÖÁ¡¸ì ¸¾¢ÃÅý Ðö¸¢È¡ý, «¾¡ÅÐ º¡ö¸¢È¡ý. ÝâÂý º¡ö¸¢È ±ýÀ¨¾ º¡öÃ𨺠±ýÈ Å¼¦Á¡Æ¢ô ÀÎò¾¢ô À¡÷ôÀÉ÷ ¦º¡øÖÅÐ ¯ñÎ. ÐöÔ¾ø ±ýÀÐ º¡ö¾¨ÄÔõ, Т־¨ÄÔõ, «Æ¢¾¨ÄÔõ ܼ ¯½÷òÐõ. ÐöÔ¾ø ±ýÀÐ ¦¾¡öÔ¾ø ±ýÚõ ¾¢Ã¢Ôõ. ¦¾¡ö ±ýÛõ Å¢¨Éô À̾¢Â¢ø þÕóÐ ¦¾¡ö× ±ýÈ ¦ÀÂ÷¡ø¨Ä ¬ì¸¢ì ¦¸¡ñ¼ ¿¡õ ¦¾¡öÂõ ±ýÈ þý¦É¡Õ ¦ÀÂ÷¡ø¨Äô §À½¡Ð Ţ𧼡õ. Á¡È¡¸, «¨¾ì ¦¸¡ïºõ §À¡ø ¾¢Ã¢òРż¦Á¡Æ¢ ¸¡ôÀ¡üÈ¢ì ¦¸¡ñ¼Ð.

¿õÓ¨¼Â Á¡¨Ä¢ý þý¦É¡Õ ¦ÀÂ÷ ¾¡ý ¦¾¡öÂõ. ÝâÂý ̨ÈôÀðÎô §À¡É §¿Ãò¨¾ ¦¾¡öÂõ>§¾¡Âõ>§¾¡„õ ±ý§È ż¦Á¡Æ¢ «¨Æ츢ÈÐ. ÓÊÅ¢ø ̨ÈôÀ𼦾øÄ¡õ ÌüÈÁ¡¸¢ «¨¾Ôõ §¾¡„õ ±ý§È ż¦Á¡Æ¢Â¢É÷ ¦º¡øÖ¸¢ýÈÉ÷. (¾Á¢Æ¢ø þýÛõ ¦¾¡ö ±ýÈ ¦º¡ø ÌüÈò¨¾ ¯½÷ò¾¢ «¸ÃӾĢ¸Ç¢ø þÕôÀ¾¡§Ä§Â ¦¾¡öÂõ ±ýÈ ¦º¡üÀ¢Èô¨À ¯ýÉ¢òÐ ¯½Ã ÓÊó¾Ð.) þó¾ò ¦¾¡öÂò¾¢üÌ Óó¾¢Â (=ÒÈõ ¯ûÇ) ³óÐ ¿¡Æ¢¨¸¸û («¾¡ÅÐ ±üÀ¡ðÊý À¢ý À¡¾¢) ´Õ ¿¡Ç¢ø þÕìÌõ ÒÈò¦¾¡ö §¿Ãõ (þЧŠż¦Á¡Æ¢Â¢ø ô羡„ ¸¡Äõ) ±ýÚ «¨Æì¸ô Àθ¢ÈÐ. þó¾ô ÒÈò¦¾¡öÂò¾¢üÌ þý¦É¡Õ ÀâÁ¡Éõ ¯ñÎ; «¨¾ô ÀüÈ¢ì ¦¸¡ïºõ ¬ÆÁ¡¸ô À¡÷ô§À¡õ.

ÒŢ¢ý ¾ýÛÕðÎ º¢Ú¦À¡ØиÙìÌõ, ÒŢ¢ý ŨÄÂõ ¦ÀÕõ¦À¡ØиÙìÌõ ¸¡Ã½Á¡ÉÐ §À¡Ä, ÒÅ¢¨Âî ÍüÈ¢ÅÕõ ¿¢ÄÅ¢ý þÂì¸Óõ Á¡ó¾ÛìÌ ¿Îò¾Ã «Ç×ô ¦À¡Øи¨Ç ¯½÷òи¢ÈÐ. ¦¿Îí¸¡Ä ¯û §¿¡ì¸¢ý À¢ý, àÃò¾¢ø þÕìÌõ ´Õ Å¢ñÁ£¦É¡Î ¿¢Ä¨Åî §º÷òÐô À¡÷òÐ, À¢ý ¿¢Ä× ÒÅ¢¨Âî ÍüÈ¢ ÅóÐ, 360 À¡¨¸î Íü¨È ÓÊòÐ, Á£ñÎõ «§¾ Å¢ñÁ£§É¡Î ¦À¡Õó¾¢ÅÕõ ¸¡Äõ ¸¢ð¼ò¾ð¼ 27.3216615 ¿¡ð¸û ¬Å¨¾ ¾Á¢Æý Ü÷óÐ À¡÷ò¾¢Õ츢ȡý. þó¾ì ¸¡Äò¨¾ ¿¢ÄÅ¢ý ¯ÎôÀÕÅõ (sidereal period) ±ýÚõ ºó¾¢ÃÁ¡É Á¡¾õ ±ýÚõ þýÚ ¦º¡øÖ¸¢§È¡õ. þó¾ì ¸¡Ä «ÇÅ¢ý ÀÊ ÒŢ¢ø þÕóÐ À¡÷ìÌõ §À¡Ð ¿¢Ä× ´Õ ¿¡ÙìÌ 360/27.3216615, «¾¡ÅÐ 13.17635825 À¡¨¸¨Âì ¸¼ì¸¢ÈÐ.

þ§¾ ´Õ ¿¡Ç¢ø ÝâÂý ±ò¾¨É À¡¨¸ ¸¼ì¸¢ÈÐ ±ýÚ À¡÷ô§À¡õ. ÒÅ¢ ÝÃ¢Â¨É Å¨ÄôÀ¾üÌ 365. 256364 ¿¡ð¸û ¬É¡ø, «¾üÌû 360 À¡¨¸¨Âî ÍüȢɡø, ´Õ ¿¡Ç¢ø ÝâÂý 360/365.256364 = 0.98560911 À¡¨¸¨Âì ¸¼ì¸¢ÈÐ ±ýÚ ¾¡§É ¦À¡Õû? þô¦À¡ØÐ ±í§¸¡ ¦¾¡¨ÄÅ¢ø þÕìÌõ þý¦É¡Õ Å¢ñÁ£¨ÉÔõ ¿¢Ä¨ÅÔõ þ¨½òÐô À¡÷ôÀ¾üÌ Á¡È¡¸ ´Õ Ýâ Á¡É Á¡¾ò¾¢ø ²§¾¡ ´Õ ¿¡Ç¢ø ¿¢Ä¨ÅÔõ Ýâ¨ÉÔõ ´ýÚ §ºÃô À¡÷츢§È¡õ ±ýÚ ¨ÅòÐì ¦¸¡û٧šõ; ´ýÚ §º÷ó¾¢Õó¾¾üÌ «Îò¾ ¿¡û À¡÷ò¾¡ø ÝâÂý 0.98560911 À¡¨¸ ¿¸÷ó¾¢ÕìÌõ. ¬É¡ø ¿¢Ä§Å¡ 13.17635825 À¡¨¸ ¸¼ó¾¢ÕìÌõ. þó¾î ¦ºÄÅ¢ø ¿¢Ä×ìÌõ ÝâÂÛìÌõ þ¨¼ôÀð¼ §¸¡½ò ¦¾¡¨Ä× 13.17635825 - 0.98560911= 12.19074914 À¡¨¸ ¬¸¢Â¢ÕìÌõ. þó¾ì §¸¡½ò¦¾¡¨Ä× ¿£ñΦ¸¡ñ§¼ §À¡ö 360 À¡¨¸ «Ç×ìÌ ´Õ ÍüÚ ¬¸ 29.5305888 ¿¡ð¸û À¢ÊìÌõ. þó¾ô ¦À¡Ø¨¾, «¾¡ÅÐ ÒÅ¢§Â¡Î ¿¢Ä×õ ÝâÂÛõ Á£ñÎõ ´ýÚ §ºÃô ¦À¡Õó¾¢ÅÕõ ¸¡Äò¨¾î ÝâÂî ºó¾¢ÃÁ¡É Á¡¾õ ±ýÚ «¨ÆôÀ¡÷¸û.

ÝâÂî ºó¾¢ÃÁ¡É Á¡¾õ ¾¡ý þó¾ ¿¡ÅÄó¾£Å¢ý ¨Àﺡí¸õ (Àﺡí¸õ) ±øÄ¡ÅüÈ¢üÌõ «ÊôÀ¨¼. þ¨¾ô ÒâóÐ ¦¸¡ûÇÅ¢ø¨Ä ±ýÈ¡ø ¿¡ÅÄó¾£Å¢ý šɢ¨Äô ÒâóÐ ¦¸¡ûÇ ÓÊ¡Ð. ÝâÂý, ¿¢Ä×, ÒÅ¢ ±ýÈ ãýÚõ ´§Ã §¿÷ §¸¡ðÊø ÅÕž¢ø þÃñΠŢ¾Á¡É ´Øí̸û þÕ츢ýÈÉ. ÝâÂÛìÌõ ÒÅ¢ìÌõ þ¨¼Â¢ø ¿¢Ä× ÅóРŢð¼¡ø, ¿ÁìÌ «ó¾ §¿Ãò¾¢ø ¿¢ÄÅ¢ý §Áø ÁÚÀÇ¢ì¸ô Àð¼ ´Ç¢ ¦¾Ã¢Å¾¢ø¨Ä. ¿ÁìÌ ¿¢Ä× ´Ç¢ÂüȾ¡¸ò ¦¾Ã¢¸¢ÈÐ. Á¡È¡¸ ÝâÂÛìÌõ ¿¢Ä×ìÌõ þ¨¼Â¢ø ÒÅ¢ þÕó¾¡ø ¿¢Ä× Á¢Ìó¾ ´Ç¢ÔûǾ¡¸ò ¦¾Ã¢¸¢ÈÐ. ¿¢ÄÅ¢üÌ þý¦É¡Õ ¾Á¢úô ¦ÀÂ÷ ¯Å¡ ±ýÀÐ. ´Ç¢ÂüÈ ¿¢Ä¨Å «(¨)Á(ó¾) ¯Å¡ (Å¢ÇìÌ «ÁóÐ §À¡îÍ ±ýÈ¡ø ´Ç¢Â¢øÄ¡Áü §À¡Â¢üÚ ±ýÚ¾¡§É ¦À¡Õû?) ±ýÚõ ´Ç¢ Á¢Ìó¾ ¿¢Ä¨Å ââò¾ ¯Å¡>âè½ ¯Å¡ ±ýÚõ ¦º¡øÖ¸¢§È¡õ. «(¨)Á ¯Å¡¨Å «Á ¯¨Å>«ÁÅ¡ö>«Á¡Å¡ö>«Á¡Å¡Š>«Á¡Å¡¨º ±ýÚõ âè½ ¯Å¡¨Å ¦Àª÷½Å¢>¦Àª÷½Á¢ ±ýÚõ ż¦Á¡Æ¢Â¢ø ¾¢Ã¢òÐî ¦º¡øÖ¸¢È¡÷¸û.

¿¢Ä× «¨Á ¯Å¡Å¢ø þÕóÐ ¦¸¡ïºõ ¦¸¡ïºÁ¡¸ô ¦À⾡¸¢ âè½ ¯Å¡Å¢ø Óؾ¡¸¢ô À¢ý ̨ÈóЦ¸¡ñ§¼ ÅóÐ Á£ñÎõ «¨Á ¯Å¡Å¡¸¢ÈÐ. þó¾ Á¡üÈò¾¢ü¸¡É ¿¡ð¸û ¾¡ý 29.5305888 ¿¡ð¸û. ÝâÂî ºó¾¢Ã Á¡É Á¡¾í¸¨Ç þôÀÊ «¨Á ¯Å¡Å¢ø ¦¾¡¼í¸¢ «¨Á ¯Å¡Å¢ø ÓÊž¡¸ ¸ÕÐÅÐ «¨Áó¾ ¸½ìÌ. âè½Â¢ø ¦¾¡¼í¸¢ âè½Â¢ø ÓÊž¡¸ì ¸ÕÐÅÐ âè½ì ¸½ìÌ.

«¨Áó¾ ¸½ìÌ ¸Õ¿¡¼¸õ, ¬ó¾¢Ãõ, ÁáðÊÂõ ±ýÈ ãýÚ Á¡¿¢Äí¸Ç¢Öõ, âè½ì ¸½ìÌ À£¸¡÷, ¯ò¾Ãô À¢Ã§¾ºõ, Áò¾¢Âô À¢Ã§¾ºõ, þáºò¾¡Éõ, «Ã¢Â¡É¡, ¸¡ÍÁ£÷ §À¡ýÈ Á¡¿¢Äí¸Ç¢Öõ À¢ýÀüÈô Àθ¢ýÈÉ. ̺áòÐõ ´Õ Ũ¸Â¢ø «¨Áó¾ ¸½ì¨¸§Â ¬É¡ø º¢Ä §ÅÚÀ¡Î¸Ù¼ý À¢ý ÀüÚ¸¢ÈÐ. ¾¢Ã¢Òá, «º¡õ, Åí¸¡Çõ, ¾Á¢ú¿¡Î, Á¡üÚõ §¸ÃÇ Á¡¿¢Äí¸û ¦À¡Ðì ¸¡Ã¢Âí¸ÙìÌî Ýâ Á¡¾ò¨¾Ôõ (30.43803 ¿¡ð¸û) Ţơì¸û, ºÁÂì ¸¡Ã¢Âí¸ÙìÌ ºó¾¢ÃÁ¡Éò¨¾Ôõ À¢ýÀüÚ¸¢ýÈÉ. À¨Æ Àïº ¾¢Ã¡Å¢¼ô À̾¢¸Ùõ, þÅ÷¸Ç¢ý ¾¡ì¸õ þÕó¾ ¿¡ÅÄó¾£Å¢ý ¸¢ÆìÌô À̾¢¸Ùõ «¨Áó¾ ¸½ì¨¸§Â À¢ý ÀüÚÅÐ ´Õ ÅÃÄ¡üÚî ¦ºö¾¢¨Âî ¦º¡øÖ¸¢ÈÐ. «¨¾ þíÌ Å¢Ã¢ôÀ¢ý ¦ÀÕÌõ ±ýÀ¾¡ø Å¢Î츢§Èý.

«¨Áó¾ ¸½ì¸¢ý ÀÊ ºó¾¢ÃÁ¡É Á¡¾í¸û «¨ÁÔÅ¡Å¢ø ¦¾¡¼í̸¢ýÈÉ. «¨ÁÔÅ¡Å¢ø þÕóÐ âè½ Ũà ¯ûÇ ¸¡Äò¨¾î ¦º¡ì¦¸¡Ç¢ô Àì¸õ (ÍìÄ À‡õ) ±ýÚõ, âè½Â¢ø þÕóÐ ¾¢ÕõÀ×õ «¨ÁÔÅ¡ ÅÕõ Ũà ¯ûÇ ¸¡Äõ ¸ÕÅ¢É Àì¸õ (ìÕ‰½ À‡õ) ±ýÚõ «¨Æì¸ô Àθ¢ÈÐ. ¬ñ¨¼î Ýâ Á¡Éò¾¢ø «ÈÅ𼡸 12 ¬¸ô ÀÌò¾Ð §À¡Ä ¿¢Ä× §À¡Ìõ Åð¼ô À¡¨¾¨Â «ÈÅ𼡸 30 À̾¢Â¡¸ô À¢Ã¢ì¸¢§È¡õ. þ¾¢ø ´ù¦Å¡Õ À̾¢Ôõ 12 À¡¨¸ ¦¸¡ñ¼Ð. þó¾ô À̾¢¸ÙìÌò ¾¢¸Æ¢¸û ±ýÚ ¦ÀÂ÷. ¿¢Ä× ´ù¦Å¡Õ Å¢¾Á¡¸ò ¾¢¸Ø¸¢ÈÐ, «øÄÐ ´Ç¢ ¾Õ¸¢ÈÐ. ¾¢¸Æ¢ ÁÚÅ¢ò ¾¢¸¾¢ ±ýÚ ¬¸¢ þýÛõ ¾¢Ã¢óРż¦Á¡Æ¢Â¢ø ¾¢¾¢ ±ýÚ ¦º¡øÄô Àθ¢ÈÐ. ºó¾¢Ã Á¡Éì ¸½ì¸¢ý ÀÊ ¿¢ÄÅ¢ý ÍüÚ 30 ¾¢¸Æ¢/¾¢¸¾¢/¾¢¾¢¸û «¼í¸¢ÂÐ. ´Õ Ýâ Á¡É Á¡¾ò¾¢üÌõ ¸¢ð¼ò¾ð¼ 30 ¿¡ð¸û ±ýÛõ §À¡Ð ¦ÀÂ÷ô À¢Èú¢ø ¾¢¸¾¢ §¾¾¢Â¡¸¢ Ýâ Á¡ÉòÐ ¿¡ð¸¨ÇÔõ ÌÈ¢ì¸ò ¦¾¡¼í¸¢üÚ. ®Æò¾¡÷ þýÛõ ¾¢¸¾¢ ±ýÈ ¦º¡ø¨Äì ¸¡ôÀ¡üÈ¢ ÅÕ¸¢È¡÷¸û. ¾Á¢ú¿¡ðÊø §¾¾¢ ±ýÚ ¦º¡øÄ¢ÅÕ¸¢§È¡õ. ®Æò¾¡÷ ¦º¡ø þø¨Ä§Âø þó¾î ¦º¡üÀ¢Èô¨Àì ¸ñ¼È¢ó¾¢Õì¸ ÓÊ¡Ð.

¿¢ÄÅ¢ý ¦º¡ì¦¸¡Ç¢ô Àì¸ò¾¢üÌ 15 ¾¢¸Æ¢¸Ùõ, ¸ÕÅ¢É Àì¸ò¾¢üÌ 15 ¾¢¸Æ¢¸ÙÁ¡¸ ¨ÅòÐì ¦¸¡ñÎ ¯û§Ç¡õ. ´Õ ¾¢¸Æ¢¨Â ¿¢Ä× ¸¼ìÌõ §¿Ãõ 1.015895762 ¿¡ð¸û. ´Õ ¿¡Ç¢ø ±ôÀÊ ´Ç¢§¾¡ýÚõ §¿ÃÓõ, þÕû §¾¡ýÚõ §¿ÃÓõ ¿õ ÓýÉÅÕìÌ ¬úó¾ ÌÈ¢ôÀ¡É¾¡¸ò §¾¡ýȢ§¾¡, «Ð §À¡Ä ¿¢Ä× §À¡Ìõ À¡¨¾Â¢ø âè½Ôõ, «¨ÁÔÅ¡×õ ¬úó¾ ÌÈ¢ôÒûǨŧÂ. þý¦É¡Õ Å¢¾Á¡¸î ¦º¡ýÉ¡ø ±ôÀÊ ´Õ ¿¡Ç¢ø þÃ× ±Øõ Óý ¯ûÇ ³óÐ ¿¡Æ¢¨¸¸û Ó¸¨Á¡¸¢ô ´Õ ¿¡Ç¢ý ÒÈò ¦¾¡ö §¿Ãõ ¬É§¾¡ «Ð §À¡Ä§Å, 12 1/2 -þø þÕóÐ 15 ÅÐ ¾¢¸Æ¢ Ũà ¯ûÇ ¸¢ð¼ò¾ð¼ þÃñ¼¨Ã ¿¡ð¸û, ÒÈò¦¾¡ö ¿¡ð¸û ¬¸¢É. º¢ÈôÀ¡¸ 12 1/2 - ¬ÅÐ ¾¢¸Æ¢, ÒÈò¦¾¡ö ¿¡û ¬¸¢ þýÚõ ¨Àﺡí¸ò¾¢ø ÌÈ¢ì¸ô Àθ¢ÈÐ. ´Õ ¿¡Ç¢ø Á¡¨ÄìÌ ÓýÉ¡Öõ, ¸¡¨ÄìÌ ÓýÉ¡Öõ þÕ¨Ç ´ðÊ ±Øó¾ ÁÕð¼¡ø þ¨ÈÅ¨É ¿¡Êò ¾ý¨Éì ¸¡ôÀ¡üÈò ¾Á¢ÆÁ¡ó¾ý ÀÃÅ¢ÂÐ §À¡Ä§Å, «¨ÁÔÅ¡Å¢üÌ ÓýÛõ, âè½ìÌ ÓýÛõ ¯ûÇ ÒÈò¦¾¡ö ¿¡Ç¢ø þ¨ÈŨÉ, ÌÈ¢ôÀ¡¸ þÄ¢í¸ ÅÊÅ¢ÉÉ¡É º¢Å¨Éò ¦¾¡Øõ ÀÆì¸õ §¾¡ýÈ¢þÕ츢ÈÐ.

«ôÀÊ¡ɡø ¾¢Õ ¿£Ä¸ñ¼õ, À¡ü¸¼ø, ¬Ä¸¡Ä ¿ïÍ ±ýÀ¦¾øÄ¡õ ±ýÉÅ¡ÔüÚ ±ýÚ §¸ðÀ£÷¸û. ¦¾¡ýÁí¸û ±ýÀ¨Å «ÊôÀ¨¼ ¯û٨ȸ¨Ç ãÊÉ¡ü§À¡ø ¨ÅòÐ ¦¸¡ïºõ ¸¨¾ô §À¡ì¸¢ø ¦º¡øÄ ÓüÀÎõ ÒÄÉí¸û ±ý§È ±ýÉ¡ø Å¢¨¼ ¦º¡øÄ ÓÊÔõ. þó¾ò ¦¾¡ýÁí¸Ç¢ý ¯ð¦À¡Õ¨Çô ÒâóÐ ¦¸¡ûÇ §ÅñΧÁ ´Æ¢Â «Åü¨È «ôÀʧ ¿¼ó¾¾¡¸ì ¦¸¡ûÙÅÐ ¿õÀ¢ì¨¸Â¢ý À¡üÀð¼Ð ±ý§È ¦º¡øÄ §ÅñÊ¢Õ츢ÈÐ.

ÒÈò¦¾¡ö §¿Ãõ, ÒÈò¦¾¡ö ¿¡û ±ýÈ ¸ÕòÐì¸û ¬ÆÁ¡É¨Å; Å¡ÉާġΠ¦¾¡¼÷Ò ¦¸¡ñ¼¨Å; ¾Á¢ú Á¡ó¾É¢ý þ¨Èò¦¾¡Ø¨¸ì ¸¡Äõ ÀüȢ «ÊôÀ¨¼î ¦ºö¾¢¨Âì ÌÈ¢ôÀ¨Å.

þЧÀ¡Ä ÒÈò§¾¡¨Â Á¡¾Óõ þÕ츢ÈÐ. «¨¾ò ¾¡ý ¯ÕÁ¡üÈ¢ ÒÃ𼡺¢ Á¡¾õ ±ýÚ ¦º¡øÖ¸¢§È¡õ. Á¡¾í¸û ÀüÈ¢ì ÌÈ¢ìÌõ þý¦É¡Õ «¾¢¸¡Ãò¾¢ø «¨¾ Å¢Çì¸Á¡¸ô À¡÷ì¸Ä¡õ.

«ýÒ¼ý,
þáÁ.¸¢.
--------------------------------------------------------------------------------------------------------------------
þÕ¨Çì ¸ñÎ ÁÕÙÅÐ ´Õ Ũ¸; þÕ§Ç º¢ÄÕìÌ þøÄ¡Ð §À¡ÅÐ ¦¾Ã¢Ô§Á¡? ͨÅì¸ §ÅñÊ À¡ÅÄ÷ ²Ú ¦ÀÕﺢò¾¢Ãɡâý ´Õ À¡ðÎ.

¿ø§Ä¡÷ìÌõ «·§¾

Ò¨ÃÁ¢Ì ¯¨ÃÅ¡öô ÒÇ¢í¸û ¿¡È
Ó¨È «Èô ÀÆÌõ ÓØ Á¡ó¾÷ìÌõ
þ¨Á¡ §¿¡ì¸¢ý ±ø¨Ä ¸¡ìÌõ
«¨Á¡ò §¾¡Ç¢ý â𨸧¡÷ìÌõ
®ý§È¡÷ þ¨º¾Ã °ýÈ¢§Â¡÷ Á½óÐ
¾¨Ä¿¡û ÒøĢ ¸Æ¢ þǧš÷ìÌõ
¨¸ Å¨Ç ¯ÌôÀ ŢƢ¿£÷ ¸ÆÄ
¦Áö¦¸¼ò ¾½ó¾ ¦ÁøÄ¢ÂÄ¡÷ìÌõ
¦¿Î¿¢¨Ä ÓýÈ¢ý ¿¢Ä¡ôÀÉ¢ ¿¨ÉôÀ
«ÎÍÅ÷ ´ÎíÌõ «Ç¢Â¢§É¡÷ìÌõ
þ¨Ä ¬¸¢ý§È þçÅ
¿ø§Ä¡÷ìÌõ «·§¾ ¿Â󾢺¢ý ¿¡§¼!

áÈ¡º¢Ã¢Âõ - 84
¦À¡Æ¢ôÒ:

ÌüÈõ Á¢Ìó¾ ¦º¡ü¸¨Çô §À͸¢ýÈ Å¡Â¢É¢ýÚõ ÒÇ¢ò¾ ¸ûÇ¢ý ¿¡üÈõ ¦ÅÇ¢ôÀ¼, ¡Åâ¼òÐõ ´Øí¸¢ýÈ¢ô ÀÆÌõ Óð¼¡û¸ÙìÌõ,
¸ñ þ¨Á¡Р§¿¡ì̾ġø ¿¡ðÊý ±ø¨Ä¨Âì ¸¡òÐ ¿¢üÌõ ±Ø ¦¸¡ñ¼ §¾¡¨ÇÔ¨¼Â ¦¸¡û¨¸ ÁÈÅ÷¸ðÌõ, ¦Àü§È¡÷¾õ ´ôÒ¾§Ä¡Îõ ¾õ ¯ûÇòÐ Åâò¾¡¨Ã Á½óÐ Ó¾ø ¿¡Ç¢ø ÜÊ Á¢ì¸ þǨÁÔ¨¼§Â¡ÕìÌõ, Óý¨¸ ŨÇ嬀 ¦¿¸¢ÆÅ¢¼×õ, ŢƢ ¿£÷ ¦ÅÇ¢ôÀÎò¾×õ ¡쨸 ¦À¡Ä¢Å¢ÆôÀ×õ, ¾õ Å¡ú쨸ò Ш½Å¨Ãô À¢Ã¢ó¾ ¦ÁøĢ þÂøÀ¢ÉÃ¡É Á¸Ç¢÷ìÌõ; ¯Â÷ó¾ ¸ð¼¼í¸Ç¢ý ¾¡úÅ¡Ãò§¾ ¿¢Ä¡ì¸¡ÄòÐô ÀÉ¢ ¿¨Éò¾Ä¡ø ¦À¡Õó¾¢Â ÍŧáÃò¾¢ø ÌǢáø ´Îí¸¢ì ¸¢¼ìÌõ þÃí¸ò ¾ì¸¡÷ìÌõ, þáô¦À¡ØÐ þøÄ¡Ð ´Æ¢¸¢ýÈÐ. ¿¡ðÎ ¿Äõ ¿¡Êô À¡ÎÀÎõ º¡ý§È¡÷ìÌõ «ó¿¢¨Ä§Â¡õ.

þôÀ¡¼ø ¦À¡ÐÅ¢Âø ±ýÛõ ÒÈò¾¢¨½Ôõ, ¦À¡Õñ¦Á¡Æ¢ì ¸¡ïº¢ ±ýÛõ ШÈÔÁ¡õ.

Å¡ú¸ ÅÇÓ¼ý.

«ýÒ¼ý,
þáÁ.¸¢.

1 comment:

Anonymous said...

Write more, thats all I have to say. Literally, it seems
as though you relied on the video to make your point. You obviously know what youre talking about, why throw away your intelligence on just posting videos to your site when you could be giving us
something enlightening to read?