Tuesday, April 12, 2005

தமிழாசிரியரும், தமிழில் அறிவியற் சிந்தனையும்.

ஒருமுறை பெரிய எழுத்தாளர் ஒருவர் (அவர் யாரென்பது இப்போது முகமை அல்ல), தமிழாசிரியரின் பழம்பெருமைப் போக்கால் தான் தமிழில் அறிவியற் சிந்தனை வளரவில்லை என ஒரு மடற்குழு உரையாட்டில் சொன்னார். அவருக்கு விடைசொல்லும் முகமாக எழுதத் தொடங்கி,  பாதி விடையிறுத்த நான், வேறு வேலைகளில் ஆழ்ந்து போனதால்,  தொடராது விட்டேன். 

இப்படி விவாதம் விட்டுப்போனது பல முறை நடந்திருக்கிறது. அது என் குறை என்றும் உணர்கிறேன். இப்போது தமிழாசிரியர் மேல் எனக்கிருக்கும் குறையையும், அதே நேரத்தில் இற்றைத் தமிழில் அறிவியல் சிந்தனை குறைந்திருப்பதற்கு அவரைச் சொல்வதில் பொருளில்லை என்றும் சொல்ல முற்படுகிறேன்.

1960 களில் இருந்து பல தமிழாசிரியரை நெருங்கிப் பார்த்தவன் நான். அப்போது ஏறத்தாழ ஓர் இயக்கமாகவே அவர் இருந்தார். அவர் சொல்லுக்கு தமிழக ஊர்கள் எங்கிலும் பெருமதிப்பு இருந்தது. "தமிழய்யா சொல்லுக்கு மறு பேச்சிலை" என்ற உணர்வு அப்பொழுது மாநிலம் முழுதும் விரிந்து கிடந்தது.

1967 -ல் ஒரு பேரரசியல் மாற்றத்தைக் கொணர (அது இன்று விழலாய்ப் போனது இன்னொரு புலனம்.) அற்றை மாணவரோடு, அவரும் காரணமானார். இன்றோ பெரும்பாலும் தமிழசிரியர் மதிப்பிழந்து தமிழ்த் திரைப்படம், தாளிகைகள், மிடையங்கள் என எல்லாவற்றிலும் ஞாயமின்றிக் கேலிப் பொருளராய் ஆகிவிட்டார். (ஓர் உச்ச நடிகரின் முட்டாள் தனமான  திரைப் படத்தில் ”அங்கே வை இங்கே வை” என்று ஒரு தமிழாசிரியரைக் கேலிப் பொருள் ஆக்கியதை என்னால் மறக்க முடியவில்லை.) மதிப்பிழந்தவர் சொல்வது குமுகாயத்தில் எடுபடுமா, என்ன?

இற்றைத் திராவிட மொழி ஆய்வாளர், குறிப்பாகத் தமிழ்மொழி ஆய்வாளர், தமிழாசிரியர் கடினமான செயல்களில் ஈடுபடாமல் மேம்போக்காக, அரைத்த மாவையே அரைத்து, பட்டிமன்றம், கவியரங்கம், சமயவுரைகள், தமிழ்/தமிழர் புகழ் பாடுவது என எளிய காரியங்களையே செய்து கொண்டு உள்ளார். அதிலும் ஒரு சிறுபான்மையினர் சம்பாரிக்கும் பணத்தைக் குட்டி போட வைப்பதிலும் குறியாக உள்ளார். இவர் போன்றோருக்குத் தமிழ் என்பது பணம் சம்பாரிக்க ஒரு வழி.

இத்தகைய செயல்களைச் செய்யக்கூடாதென முற்றிலும் சொல்லமாட்டேன்; மிடையக்காரர் செய்யும் போது, தமிழாசிரியர் தமிழால் பிழைப்பதில் ஒரு தவறுமில்லை. ஆனால், தமிழாசிரியரில் கணிசமானோர் இதை மட்டுமே செய்வது பெரும் வருத்தமாகிறது. 

அதன் விளைவாக, குமுகாயம், வரலாறு, தமிழ் இலக்கியம், தமிழை முன்னெடுத்துச் செல்வது, 

இக்கால ஓட்டத்திற்கு ஏந்தாக தமிழுக்கு உரம் கொடுப்பது, 

புதுச் சொற்களை, புது இயலுமைகளை (possibilities), புதுப் பார்வைகளை, மறுபார்வைகளை கொண்டு தருவது 

போன்றவற்றைத் தமிழ் ஆசிரியர் அல்லாதோர் - குறிப்பாக வரலாற்றாளர், அறிவியலாளர், பொறியியலாளர், வழக்குரைஞர் ஆகிய இன்ன பிறர் தம் ஆர்வங் காரணமாய்ச் செய்கிறாரே ஒழியத் தமிழாசிரியர் செய்வது மிகக் குறைவு. அப்படியானால் mainstream tamilogists - where are they? இக்கேள்வி கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக உள்ளது.

இன்னொரு குறையும் சொல்ல வேண்டும். இற்றைத் தமிழாசிரியரின் ஒற்றைப் பரிமானம் என்னை வியக்கவைக்கிறது. 30/40 ஆண்டுகளுக்கு முன்னிருந்த தமிழ் ஆய்வாளர் குறைந்தது 3,4  (குறிப்பாகத் திராவிட) மொழிகளிலாவது தேர்ச்சி பெற்றிருந்தார். இற்றைக் கல்லூரித் தமிழாசிரியரோ தமிழை மட்டுமே அறிந்து (ஆங்கிலங் கூடச் சரியாக அறியாமல்) பிழைப்பை ஓட்டிவிட முடியும். 

இதற்கு மாறாக, இன்றைக்கும், ஐரோப்பிய நாடுகளில் ஒரு மொழிப் பேராசிரியர் தன் மொழி தவிர்த்து இன்னும் நாலைந்து மொழிகளாவது தெரிந்திருப்பார். நம்மூர்ப் பள்ளித் தமிழாசிரியரும் மொழியறிவில் குறைந்தே காணப்படுகிறார். வெறுமே பாடங்களைப் படித்து மதிப்பெண் எடுக்க வைக்கும் வேலையில் மட்டுமே தன்னை ஆட்படுத்திக் கொள்கிறார்.

ஒரு சமயம் திரு. தமிழண்ணல் சூரியத் தொலைக் காட்சியில் 'வணக்கம் தமிழகம்' என்ற பகுதியில் சொன்னார்: தொல்காப்பியத்தில் M.Phil பட்டம் வாங்கிய ஒருவர், தமிழண்ணல் வீட்டில் தொல்காப்பியப் பொத்தகம் முழுதாய் இருந்ததைக் கண்டு வியந்து போனாராம். 

தமிழண்ணல் அவரிடம் கேட்டாராம்: "இதில் என்ன வியப்பு? உங்கள் வீட்டிலும் இருக்குமல்லவா? அல்லது நூலகத்தில் பார்த்திருப்பீர்கள் தானே?" என்றாராம். அந்த இளம் ஆய்வியல் பட்டம் பெற்றவர் ”இல்லை” என்று சொல்ல, "அது எப்படித் தொல்காப்பியத்தைப் பாராமலே தொல்காப்பியத்தில் ஆய்வு செய்தீர்கள்?" என்று தமிழண்ணல் கேட்டாராம். 

"அதெல்லாம் மற்றவர் உரைகள், நூல்கள் ஆகியவற்றைப் பார்த்துச் செய்தது" என்றாராம் ஆய்வு செய்து பட்டம் வாங்கியவர். எப்படி இருக்கிறது கதை? மூலத்தைப் பார்க்காமலேயே, ஆய்வு செய்யும் அழகு இன்று பலரிடமும் உள்ளது. எல்லாம் 2 ஆம், 3 ஆம் நிலை உசாத் துணை(reference) நூல்களை வைத்து ஆய்வேடுகள் எழுதிவிடுகிறார். (காட்டாக சிலப்பதிகாரத்திற்கு உ.வே.சா. பதிப்பையோ, வேங்கடசாமி நாட்டார் உரையையோ படித்தவர், தமிழாசிரியரில் எவ்வளவு தேருவார்? )

தமிழில் ஆய்வு செய்வது என்பது இன்றைக்கெல்லாம் "கம்பனில் ஆறுகள்", "ஜெய காந்தனின் சமுதாயப் பார்வை", "பாரதிராஜாவின் திரைப் படத்தில் மண்வாசனை" என எளிதான அகத்தீடுகளைப் (subjects) பற்றி மட்டுமே என்றாகி விட்டது. (உடனே இத் தலைப்புக்களில் ஆய்வு செய்யக் கூடாதென நான் சொல்வதாக எண்ணாதீர். செய்யலாம்,  செய்யும் முறையில் தான் நம் கேள்வி.) 

அத்தகைய தலைப்புக்களிலும் இவர் எழுதும் ஆய்வு நூல்கள், "அவர் அது சொன்னார், இவர் இது சொன்னார் ....." என்று ஒரே அடியாக மேற்கோள்களை எடுத்துச் சொல்வதாக இருக்கிறதே ஒழிய, "இப்போது ஆய்வு செய்கிறவர் என்ன சொல்கிறார்? எப்படி மாறுபடுகிறார்? " - என அவற்றின் உட்பொருள்  சுருக்கி பொதுயீடாக (objective) கடைசி வரைக்கும் ஒன்றும் சொல்லுவதில்லை. 

ஆய்வுப் பொத்தக முடிவில், "இதனால் என்ன தெரிகிறது?" என்று தொடங்கி முன்னவர் சொன்னதையே, மீண்டும் தொகுத்துச் சொல்லி இப்போது ஆய்வு செய்கிறவர் மங்களம் பாடிவிடுவார். மொத்தத்தில், இது  ஆய்வுப் பொத்தகமா என ஆய்வேட்டை ஏற்ற பல்கலைக் கழகத்தின் தரம் பற்றி ஐயம் வந்து விடும். 

"தமிழாய்வுக்கு என்னய்யா செய்தீர்?" என்றால் நாம் பெறுவது பெருத்த ஏமாற்றமே. பெரும்பாலான ஆய்வுகள் மிசை(table) யில் செய்யும் ஆய்வுகளாகவே உள்ளன. தமிழைத் தவிர்த்து, இன்னொரு துறையை ஒட்டினாற் போல (தொல்லியல், கல்வெட்டியல், வரலாறு, நாணயவியல், அறிவியல், பொருளியல், குமுக வியல், மருத்துவம், இப்படி ஏதோ ஒன்றுடன் இணைந்ததாய்) ஆய்வுகளைச் செய்ய தமிழாசிரியர் தயங்குகிறார். 

வள்ளுவர் நூலின் சானன் உட்திரிவு (Shannon's entropy) என்ன? அதை சங்ககால உட் திரிவோடு பொருத்தி, மற்ற பதிணெண் கணக்கு நூல்களோடு ஒப்பிட்டு வள்ளுவன் காலத்தைச் சொல்ல முடியுமா? இதெல்லாம் தமிழாசிரியர் ஆய்வுக்குத் தொடர்பே இலாது உள்ளது.

தமிழாசிரியர் பற்றிய நம் ஏக்கத்தை எழுதத் தொடங்கினால் அதற்கு முடிவில்லை. ஏன், இணையத்திலே கூடத் தமிழாசிரியர் எத்தனை பேர் இருக்கிறார்? எனக்குச் சரியாகச் சொல்லத் தெரியவில்லை. மொழிவல்லார் நம்முடன் இங்கிருந்தால் தானே நாம் கலைச்சொல் ஆக்குவது சரியா என மொழிப் பார்வையில் சொல்ல முடியும். (நான் அவ்வப்போது கலைச் சொல் பற்றிப் பேசுவது ஒரு வகையில் ஆலையிலா ஊருக்கு இலுப்பைப்பூச் சர்க்கரையோ என்று கூட எனக்குப் பல நேரங்களில் எழுவதுண்டு.)

எல்லோரையும் போல, வாழ்க்கைப் பட்டம் அலைக்கழித்ததால், அதிலிருந்து மீள முடியாது, நொய்ந்து போய், தமக்கென்று இருந்த வரலாற்று உணர்வுப் பொறுப்பைத் தொலைத்து, நாட்டுப்புறங்களில் அவர்க்கு இயல்பாய்க் கிடைத்த தலைமைப் பொறுப்பிலிருந்து தமிழாசிரியர் விலகிப் போனார்  . 

அதே பொழுது, தமிழ்நாட்டில் தமிழ் அழிந்துவிடுமோ என்ற இற்றை நிலைக்கு அவர் காரணிகள் அல்லர் எனநான் உணருகிறேன். நம் எல்லோருக்கும் பொறுப்பிருக்கையில், நாம் தப்பித்து, நம்மில் நொய்ந்தவரை அடையாளங் காட்டி "அவரைச் சாடுக" என் மற்றார்க்குச் சொல்வதில் ஞாயமில்லை.

தமிழாசிரியரா, தமிழில் அறிவியல் பற்றிப் பேசுகிறார்? நானறிந்த வரை இல்லை. வெறும் நிழல்களோடு, பூஞ்சையானவரோடு பொருதப் பார்ப்பதில் பொருளில்லை என்று தான் சொல்ல முடியும். அந்த எழுத்தாளர் பொருத வேண்டியது நம் போன்று படித்த தமிழருடன்; தமிங்கிலரென ஆனவருடன்.

 வெறுமே நெட்டுருப் போட்டு 12 ஆம் வகுப்பு வரை ஒப்பேற்றும் பாடத்திட்டம் உருவாக்கியவருடன்; கல்வி அதிகாரிகளுடன்; அறியாமை நிறைந்த பெற்றோருடன் பொருத வேண்டும். இவர் தான் தமிழில் அறிவியல் சிந்தனையை வளர விடாது செய்கிறாரே ஒழிய, தமிழாசிரியர் அல்ல. 

கொண்டுவந்த பொருளை இருளில் வேறெங்கோ தொலைத்துவிட்டு வெளிச்சத்தில் தேடி அங்கிருந்தவரை அடையாளம் காண்பிப்பது சரியானதல்ல. தமிழாசிரியர் இற்றை நிலையில் நுணுக்கிலும் நுணுக்கு. பள்ளிக் கணக்கில் அவர் ஒரு பொருட்டே அல்ல.

ஆனையை விட்டுப் பூனையை நொந்து என்ன பலன்?

அன்புடன்,
இராம.கி.

In TSCII:

¾Á¢Æ¡º¢Ã¢Â÷¸Ùõ, ¾Á¢Æ¢ø «È¢Å¢Âü º¢ó¾¨ÉÔõ.

´ÕÓ¨È ¦Àâ ±Øò¾¡Ç÷ ´ÕÅ÷ («Å÷ ¡÷ ±ýÀÐ þô§À¡Ð Ó¸¨ÁÂ¡É ¦ºö¾¢ «øÄ), ¾Á¢Æ¡º¢Ã¢Â÷¸Ç¢ý ÀÆõ¦ÀÕ¨Áô §À¡ì¸¡ø ¾¡ý ¾Á¢Æ¢ø «È¢Å¢Âü º¢ó¾¨É ÅÇçŠþø¨Ä ±ýÚ ´Õ Á¼ü ÌØ ¯¨Ã¡ðÊø ¦º¡ýÉ¡÷. «ÅÕìÌ Å¢¨¼ ¦º¡øÖõ Ó¸Á¡¸ ±Ø¾ò ¦¾¡¼í¸¢, ´Õ À¡¾¢ Å¢¨¼Â¢Úò¾ ¿¡ý À¢ÈÌ §ÅÚ §Å¨Ä¸Ç¢ø ¬úóÐ §À¡É¾¡ø, À¢ýÉ¡ø ¦¾¡¼Ã¡Á§Ä §À¡öÅ¢ð§¼ý. þôÀÊ Å¢Å¡¾õ Å¢ðÎô §À¡ÉÐ ±ÉìÌô ÀÄÓ¨È ¿¼ó¾¢Õ츢ÈÐ. «Ð ±ýÛ¨¼Â Ì¨È ±ýÚõ ¯½÷ó¾¢Õ츢§Èý. þô¦À¡ØÐ ¾Á¢Æ¡º¢Ã¢Â÷¸û §Áø ±É츢ÕìÌõ ̨ȨÂÔõ, «§¾ §¿Ãò¾¢ø þý¨ÈÂò ¾Á¢Æ¢ø «È¢Å¢Âø º¢ó¾¨É ̨ÈóÐ þÕôÀ¾üÌ «Å÷¸¨Çî ¦º¡øÖž¢ø ¦À¡ÕÇ¢ø¨Ä ±ýÚõ ¦º¡øÄ ÓüÀθ¢§Èý.

1960 ¸Ç¢ø þÕóÐ ÀÄ ¾Á¢Æ¡º¢Ã¢Â÷¸¨Ç Á¢¸ ¦¿Õí¸¢ô À¡÷ò¾Åý ¿¡ý. «ô¦À¡ØÐ «Å÷¸û ¸¢ð¼ò¾ð¼ µ÷ þÂì¸Á¡¸§Å þÕó¾¡÷¸û. «Å÷¸û ¦º¡øÖìÌ ¾Á¢Æ¸ °÷¸û ±í¸¢Öõ ´Õ Á¾¢ôÒ þÕó¾Ð. "¾Á¢Æö¡ ¦º¡øÖìÌ ÁÚ §À¨Ä" ±ýÈ ¯½÷× «ô¦À¡ØÐ Á¡¿¢Äõ ±íÌõ ŢâóÐ ¸¢¼ó¾Ð. 1967 -ø ´Õ ¦ÀÕõ «Ãº¢Âø Á¡üÈò¨¾ì ¦¸¡ñÎ Åà («Ð þý¨ÈìÌ Å¢ÆÄ¡öô §À¡ÉÐ þý¦É¡Õ ÒÄÉõ.) «ý¨È Á¡½Å÷¸§Ç¡Î, «Å÷¸Ùõ ´Õ ¸¡Ã½Á¡ö þÕó¾¡÷¸û. þý§È¡ ¦ÀÕõÀ¡Öõ ¾Á¢Æº¢Ã¢Â÷¸û Á¾¢ôÀ¢ÆóÐ ¾Á¢úò ¾¢¨ÃôÀ¼õ, ¾¡Ç¢¨¸¸û, Á¢¨¼Âí¸û ¬¸¢Â ±øÄ¡ÅüÈ¢Öõ §¸Ä¢ô ¦À¡ÕÇáö ¬¸¢ Å¢ð¼¡÷¸û. Á¾¢ôÀ¢Æó¾Å÷¸û ¦º¡øÖÅÐ ÌÓ¸¡Âò¾¢ø ±ÎÀÎÁ¡, ±ýÉ?

þý¨ÈÂò ¾¢Ã¡Å¢¼ ¦Á¡Æ¢ ¬öÅ¡Ç÷¸û, ÌÈ¢ôÀ¡¸ò ¾Á¢ú ¦Á¡Æ¢ ¬öÅ¡Ç÷¸û, ¸ÊÉÁ¡É ¦ºÂø¸Ç¢ø ®ÎÀ¼¡Áø §Áõ§À¡ì¸¡¸, «¨Ãò¾ Á¡¨Å§Â «¨ÃòÐì ¦¸¡ñÎõ, ¾Á¢Æ¡º¢Ã¢Â÷¸û ÀðÊÁýÈõ, ¸Å¢ÂÃí¸õ, ºÁÂרøû, ¾Á¢ú/¾Á¢Æ÷ Ò¸ú À¡ÎÅÐ ±É Á¢¸ ±Ç¢¾¡É ¸¡Ã¢Âí¸¨Ç§Â ¦ºöÐ ¦¸¡ñÊÕ츢ȡ÷¸û. «¾¢ø ´Õ º¢È¢Â À¡ý¨Á¢É÷ ºõÀ¡Ã¢ìÌõ À½ò¨¾ì ÌðʧÀ¡¼ ¨ÅôÀ¾¢Öõ ÌȢ¡¸ þÕ츢ȡ÷¸û. þÅ÷¸ÙìÌò ¾Á¢ú ±ýÀÐ À½õ ºõÀ¡Ã¢ì¸ ´ÕÅÆ¢.

­ò¾¨¸Â ¦ºÂø¸¨Çî ¦ºöÂì ܼ¡Ð ±É ¿¡ý ÓüÈ¢Öõ ¦º¡øÄ Á¡ð§¼ý; Á¢¨¼Â측Ã÷¸û ¦ºöÔõ §À¡Ð, ¾Á¢Æ¡º¢Ã¢Â÷¸Ùõ ¾Á¢¨Æ ¨ÅòÐô À¢¨ÆôÀ¾¢ø ¾ÅÚ þø¨Ä. ¬É¡ø, ¾Á¢Æ¡º¢Ã¢Â÷¸Ç¢ø 90 Å¢Øì¸¡ðÎìÌõ §ÁüÀ𧼡÷ þ¨¾ò ¾¡ý ¦ºö¸¢È¡÷¸û. «¾ý Å¢¨ÇÅ¡¸, ÌÓ¸¡Âõ, ÅÃÄ¡Ú, ¾Á¢ú þÄ츢Âõ, ¾Á¢¨Æ Óý¦ÉÎòÐî ¦ºøÅÐ, ¾Á¢¨Æ þó¾ì ¸¡Ä µð¼ò¾¢üÌ ²ó¾¡¸ ¯Ãõ ¦¸¡ÎôÀÐ, Ò¾¢Â ¦º¡ü¸¨Ç, Ò¾¢Â þÂÖ¨Á¸¨Ç (possibilities), Ò¾¢Â À¡÷¨Å¸¨Ç, ÁÚÀ¡÷¨Å¸¨Ç ¦¸¡ñξÕÅÐ §À¡ýÈÅü¨Èò ¾Á¢ú ¬º¢Ã¢Â÷¸û «øÄ¡§¾¡÷ - ÌÈ¢ôÀ¡¸ ÅÃÄ¡üÈ¡Ç÷¸û, «È¢Å¢ÂÄ¡Ç÷¸û, ¦À¡È¢Â¢ÂÄ¡Ç÷¸û, ÅÆį̀û÷¸û ¬¸¢Â ­ýÉ À¢È÷ ¾¡ý ¾í¸ÙìÌ ¯ûÇ ¬÷Åí ¸¡Ã½Á¡öî ¦ºö¸¢È¡÷¸§Ç ´Æ¢Âò ¾Á¢Æ¡º¢Ã¢Â÷¸û ¦ºöÅÐ þø¨Ä. «ôÀÊ¡ɡø mainstream tamilogists - where are they? þó¾ì §¸ûÅ¢¾¡ý ¸¼ó¾ 30 ¬ñθÙìÌõ §ÁÄ¡¸ þ­Õ츢ÈÐ.

þý¦É¡Õ ̨ȨÂÔõ ¦º¡øÄ §ÅñÎõ. þý¨ÈÂò ¾Á¢Æ¡º¢Ã¢Â÷¸Ç¢ý ´ü¨Èô ÀâÁ¡Éõ. 30/40 ¬ñθÙìÌ Óý þÕó¾ ¾Á¢ú ¬öÅ¡Ç÷¸û ̨Èó¾Ð ãýÚ, ¿¡ýÌ (ÌÈ¢ôÀ¡¸ò ¾¢Ã¡Å¢¼) ¦Á¡Æ¢¸Ç¢Ä¡ÅÐ §¾÷ ¦ÀüÈ¢Õó¾É÷. þý¨ÈìÌ ¯ûÇ ¸øæÃ¢ò ¾Á¢Æ¡º¢Ã¢Â§Ã¡ ¾Á¢¨Æ ÁðΧÁ «È¢óÐ (¬í¸¢Äõ Ü¼î ºÃ¢Â¡¸ «È¢Â¡Áø) À¢¨Æô¨À µðÊÅ¢¼ ÓÊÔõ. ­¾üÌ Á¡È¡¸, þý¨ÈìÌõ ³§Ã¡ôÀ¢Â ¿¡Î¸Ç¢ø ´Õ ¦Á¡Æ¢ô §ÀẢâÂ÷ ¾ý ¦Á¡Æ¢ ¾Å¢÷òÐ þýÛõ ¿¡¨ÄóÐ ¦Á¡Æ¢¸Ç¡ÅÐ ¦¾Ã¢ó¾¢ÕôÀ¡÷. þ§¾ §À¡Ä ÀûÇ¢ò ¾Á¢Æ¡º¢Ã¢ÂÕõ ¦Á¡Æ¢ÂȢŢø ̨Èó§¾ ¸¡½ôÀθ¢È¡÷. ¦ÅÚ§Á À¡¼í¸¨Çô ÀÊòÐ Á¾¢ô¦Àñ ±Î츨ÅìÌõ §Å¨Ä¢ø ¾ý¨É ¬ðÀÎò¾¢ì ¦¸¡ûÙ¸¢È¡÷.

´Õ ºÁÂõ ¾¢Õ. ¾Á¢Æñ½ø ÝâÂò ¦¾¡¨Äì ¸¡ðº¢Â¢ø 'Žì¸õ ¾Á¢Æ¸õ' ±ýÈ À̾¢Â¢ø ¦º¡ýÉ¡÷: ¦¾¡ø¸¡ôÀ¢Âò¾¢ø M.Phil Àð¼õ Å¡í¸¢Â ´ÕÅ÷, ¾Á¢Æñ½ø Å£ðÊø ¦¾¡ø¸¡ôÀ¢Âô ¦À¡ò¾¸õ ÓØ¾¡ö þÕó¾¨¾ì ¸ñΠŢÂóÐ §À¡É¡Ã¡õ. ¾Á¢Æñ½ø «Åâ¼õ §¸ð¼¡Ã¡õ: "þ¾¢ø ±ýÉ Å¢ÂôÒ? ¯í¸û Å£ðÊÖõ þÕìÌõ «øÄÅ¡? «øÄÐ áĸò¾¢ø À¡÷ò¾¢ÕôÀ£÷¸û ¾¡§É?" ±ýȡáõ. «ó¾ þÇõ ¬öÅ¢Âø Àð¼õ ¦ÀüÈÅ÷ þø¨Ä ±ýÚ ¦º¡øÄ, "«Ð ±ôÀÊò ¦¾¡ø¸¡ôÀ¢Âò¨¾ô À¡Ã¡Á§Ä ¦¾¡ø¸¡ôÀ¢Âò¾¢ø ¬ö× ¦ºö¾£÷¸û?" ±ýÚ ¾Á¢Æñ½ø §¸ð¼¡Ã¡õ. "«¦¾øÄ¡õ ÁüÈÅ÷ ¯¨Ã¸û, áø¸û ¬¸¢ÂÅü¨Èô À¡÷òÐî ¦ºö¾Ð" ±ýȡáõ ¬ö× ¦ºöÐ Àð¼õ Å¡í¸¢ÂÅ÷. ±ôÀÊ þÕ츢ÈÐ ¸¨¾? ãÄò¨¾ô À¡÷측Á§Ä§Â, ¬ö× ¦ºöÔõ «ÆÌ þýÚ ÀÄâ¼õ þÕ츢ÈÐ. ±øÄ¡õ þÃñ¼¡õ ¿¢¨Ä, ãýÈ¡õ ¿¢¨Ä ¯º¡òШ½(reference) áø¸¨Ç ¨Åò§¾ ¬ö§Åθû ±Ø¾¢Å¢Î¸¢È¡÷¸û. (¸¡ð¼¡¸ º¢ÄôÀ¾¢¸¡Ãò¾¢üÌ ¯.§Å.º¡.Å¢ý À¾¢ô¨À§Â¡, §Åí¸¼º¡Á¢ ¿¡ð¼¡Ã¢ý ¯¨Ã¨Â§Â¡ ÀÊò¾Å÷¸û, ¾Á¢Æ¡º¢Ã¢Ââø 15 % Å¢Øì¸¡Î §¾ÚÁ¡ ±ýÀÐ §¸ûÅ¢ì ÌÈ¢)

¾Á¢Æ¢ø ¬ö× ¦ºöÅÐ ±ýÀÐ þý¨È즸øÄ¡õ "¸õÀÉ¢ø ¬Ú¸û", "¦ƒÂ ¸¡ó¾É¢ý ºÓ¾¡Âô À¡÷¨Å", "À¡Ã¾¢Ã¡ƒ¡Å¢ý ¾¢¨Ãô À¼ò¾¢ø ÁñÅ¡º¨É" ±É ±Ç¢¾¡É «¸ò¾£Î¸¨Çô (subjects) ÀüÈ¢ ÁðΧÁ ¦ºöÅÐ ±ýÈ¡¸¢ Å¢ð¼Ð. (¯¼§É þó¾ò ¾¨ÄôÒì¸Ç¢ø ¬ö× ¦ºöÂìܼ¡Ð ±ýÚ ¿¡ý ¦º¡øÖž¡¸ ±ñ½¢Å¢¼¡¾£÷¸û. ¦ºöÂÄ¡õ, ¬É¡ø ¦ºöÔõ ӨȢø ¾¡ý §¸ûÅ¢.) «ò¾¨¸Â ¾¨ÄôÒì¸Ç¢Öõ þÅ÷¸û ±ØÐõ ¬ö× áø¸û, "«Å÷ «Ð ¦º¡ýÉ¡÷, þÅ÷ þÐ ¦º¡ýÉ¡÷ ....." ±ýÚ ´§Ã «Ê¡¸ §Áü§¸¡û¸¨Ç ±ÎòÐî ¦º¡øÅ¾¡¸ þÕì̸¢È§¾ ´Æ¢Â, "þÅ÷¸û ±ýÉ ¦º¡øÄ ÅÕ¸¢È¡÷¸û?" - ±ýÚ «ÅüÈ¢ý ¯ð¦À¡Õ¨Çî ÍÕ츢 ¦À¡Ð£¼¡¸ (objective) ¸¨¼º¢ ŨÃìÌõ ´ýÚõ ¦º¡øÖž¢ø¨Ä. ¬ö×ô ¦À¡ò¾¸ò¾¢ý ÓÊÅ¢ø, "þ¾É¡ø ±ýÉ ¦¾Ã¢¸¢ÈÐ?" ±ýÚ ¦¾¡¼í¸¢ ÓýÉÅ÷¸û ¦º¡ýɨ¾§Â, Á£ñÎõ ¦¾¡ÌòÐî ¦º¡øÄ¢ þô¦À¡ØÐ ¬ö× ¦º¸¢ÈÅ÷ Áí¸Çõ À¡Ê Å¢ÎÅ¡÷. ¦Á¡ò¾ò¾¢ø, þÐ µ÷ ¬ö×ô ¦À¡ò¾¸Á¡ ±ýÚ ¿Á째 «ó¾ ¬ö§Å𨼠²üÚì ¦¸¡ñ¼ Àø¸¨Äì ¸Æ¸ò¾¢ý ¾Ãò¾¢ý §Áø ³Âõ ÅóРŢÎõ. "¾Á¢Æ¡ö×ìÌ ±ýÉö¡ ¦ºö¾£÷¸û?" ±ýÈ¡ø ¿¡õ ¦ÀÚÅÐ ¦ÀÕò¾ ²Á¡üÈõ ¾¡ý. ¦ÀÕõÀ¡Ä¡É ¬ö׸û Á¢¨ºÂ¢ø ¦ºöÔõ ¬ö׸ǡ¸§Å þÕ츢ýÈÉ. ¾Á¢¨Æò ¾Å¢÷òÐ, þý¦É¡Õ ШȨ ´ðÊÉ¡ü§À¡Ä (¦¾¡øÄ¢Âø, ¸ø¦ÅðÊÂø, ÅÃÄ¡Ú, ¿¡½ÂÅ¢Âø, «È¢Å¢Âø, ¦À¡ÕÇ¢Âø, ÌÓ¸Å¢Âø, ÁÕòÐÅõ, þôÀÊ ²§¾¡ ´ýÚ¼ý þ¨½ó¾¡ü§À¡Ä) ¬ö׸¨Ç ±Î츧оÁ¢Æ¡º¢Ã¢Â÷¸û ¾Âí̸¢È¡÷¸û. ÅûÙÅ÷ áÄ¢ý º¡Éý ¯ð¾¢Ã¢× (Shannon's entropy) ±ýÉ? «¨¾ ºí¸ ¸¡Ä ¯ð ¾¢Ã¢§Å¡Î ¦À¡Õò¾¢, ÁüÈ À¾¢¦½ñ ¸½ìÌ áø¸§Ç¡Î ´ôÀ¢ðÎ ÅûÙÅý ¸¡Äò¨¾î ¦º¡øÄ ÓÊÔÁ¡? þ¦¾øÄ¡õ ¾Á¢Æ¡º¢Ã¢Â÷¸û ¬ö×ìÌò ¦¾¡¼÷§À þøÄ¡¾¾¡ö þÕ츢ÈÐ.

¾Á¢Æ¡º¢Ã¢Â÷¸û ÀüȢ ¿õ ²ì¸ò¨¾ ±Ø¾ò ¦¾¡¼í¸¢É¡ø «¾üÌ ÓÊÅ¢ø¨Ä. ²ý, ¿õÓ¨¼Â ¾Á¢ú þ¨½Âò¾¢§Ä ¾Á¢Æ¡º¢Ã¢Â÷¸û ±ò¾¨É §À÷ ­Õ츢ȡ÷¸û? ±ÉìÌî ºÃ¢Â¡¸î ¦º¡øÄò ¦¾Ã¢ÂÅ¢ø¨Ä. ¦Á¡Æ¢ÅøÖ¿÷ þíÌ ¿õÓ¼ý ܼ þÕ󾡸 ¾¡§É ¿¡õ ¸¨Ä¡ø ¬ìÌÅÐ ºÃ¢Â¡ ±ýÚ ¦Á¡Æ¢ôÀ¡÷¨Å¢ø ¦º¡øÄ ÓÊÔõ. (¿¡ý «ùÅô§À¡Ð ¸¨Ä¡ø ÀüÈ¢ô §ÀÍÅÐ ´ÕŨ¸Â¢ø ¬¨Ä¢øÄ¡ °ÕìÌ þÖô¨Àôâî º÷츨ç¡ ±ýÈ ±ñ½õ ܼ ±ÉìÌ ÀÄ §¿Ãí¸Ç¢ø ±ØÅÐñÎ.)

±ø§Ä¡¨ÃÔõ §À¡Ä, Å¡ú쨸ô Àð¼õ «¨Äì¸Æ¢ò¾¾¡ø, «¾¢Ä¢ÕóÐ Á£Ç ÓÊ¡Áø, ¦¿¡öóÐ §À¡ö, ¾í¸ÙìÌ ±ýÚ þÕó¾ ÅÃÄ¡üÚ ¯½÷×ô ¦À¡Úô¨À Å¢ðÎò ¦¾¡¨ÄòÐ, ¿¡ðÎô ÒÈí¸Ç¢ø «Å÷¸ÙìÌ þÂü¨¸Â¡öì ¸¢¨¼ò¾ ¾¨Ä¨Áô ¦À¡ÚôÀ¢ø þÕóÐõ Ţĸ¢ô §À¡ÉÅ÷¸û ¾Á¢Æ¡º¢Ã¢Â÷¸û. «§¾ ¦À¡ØÐ, ¾Á¢ú¿¡ð椀 ¾Á¢ú «Æ¢óÐ §À¡öŢΧÁ¡ ±ýÈ þý¨È ¿¢¨ÄìÌ «Å÷¸û ¸¡Ã½¢¸§Ç «øÄ÷ ±ýÚ ¾¡ý ¿¡ý ¯½Õ¸¢§Èý. ¦À¡ÚôÒ ¿õ ±ø§Ä¡ÕìÌõ þÕìÌõ §À¡Ð, ¿¡õ ¾ôÀ¢òÐì ¦¸¡ñÎ, ¿õÁ¢ø ¦¿¡öó¾Å¨Ã «¨¼Â¡Çõ ¸¡ðÊ "«Å¨Ã «ÊÔí¸û" ±ýÚ ÁüÈÅ÷ìÌî ¦º¡øÖÅÐ ±ó¾ Ũ¸Â¢ø »¡Âõ ¬Ìõ?

¾Á¢Æ¡º¢Ã¢Â÷¸Ç¡, ¾Á¢Æ¢ø «È¢Å¢Âø ÀüÈ¢ô §À͸¢È¡÷¸û? ¿¡ÉÈ¢ó¾ Ũà ¸¢¨¼Â§Å ¸¢¨¼Â¡Ð. ¦ÅÚõ ¿¢Æø¸§Ç¡Î, ¦ÅòÐ §ÅðÎ츧ǡÎ, â墨¡ÉÅ÷¸§Ç¡Î ¦À¡Õ¾ô À¡÷ôÀ¾¢ø ¦À¡ÕÇ¢ø¨Ä ±ýÚ ¾¡ý ¿¡ý ¦º¡øÄ ÓÊÔõ. «ó¾ ±Øò¾¡Ç÷ ¦À¡Õ¾ §ÅñÊÂÐ ¿õ¨Áô §À¡ýÚ ÀÊò¾ ¾Á¢Æ÷¸Ù¼ý; ¾Á¢í¸¢Ä÷ ±É ¬ÉÅ÷¸Ù¼ý; ¦ÅÚ§Á ¦¿ðÎÕô §À¡ðÎ ÀýÉ¢Ãñ¼¡õ ÅÌôÒ Å¨Ã ´ô§ÀüÚõ À¡¼ò ¾¢ð¼ò¨¾ ¯Õš츢ÂÅ÷¸Ù¼ý; ¸øÅ¢ «¾¢¸¡Ã¢¸Ù¼ý; «È¢Â¡¨Á ¿¢¨Èó¾ ¦Àü§È¡÷¸Ù¼ý. þÅ÷¸û ¾¡ý ¾Á¢Æ¢ø «È¢Å¢Âø º¢ó¾¨É¨Â ÅÇà Ţ¼¡Áø ¦ºö¸¢ÈÅ÷¸§Ç ´Æ¢Â, ¾Á¢Æ¡º¢Ã¢Â÷¸û «øÄ. ¦¸¡ñÎÅó¾ ¦À¡Õ¨Ç þÕÇ¢ø ±í§¸¡ ¦¾¡¨ÄòÐÅ¢ðÎ ¦ÅÇ¢îºò¾¢ø §¾Ê «í¸¢Õó¾Å¨Ã «¨¼Â¡Çõ ¸¡ñÀ¢ìÌõ Ó¨È ºÃ¢Â¡É¾øÄ. ¾Á¢Æ¡º¢Ã¢Â÷¸û þý¨È ¿¢¨Ä¢ø ÑÏ츢Öõ ÑÏìÌ. ÀûÇ¢ì ¸½ì¸¢ø «Å÷¸û ´Õ ¦À¡Õð§¼ «øÄ.

¬¨É¨Â Å¢ðÎô â¨É¨Â ¦¿¡óÐ ±ýÉ ÀÄý?

«ýÒ¼ý,
þáÁ.¸¢.

வரமொன்று வேண்டும்

Iவரமொன்று வேண்டும்

(சோழிங்க நல்லூர் வருவதற்கு முன்னால் சென்னை அண்ணா நகரில் குடியிருந்தேன். அப்பொழுது இருந்த சூழ்நிலை பற்றி கொஞ்சம் ஆற்றாமையோடு சொன்னது இது. முற்றிலும் ஒரு நடுவருக்கப் பார்வை.)

நான்யார் என்குவீ ராயின் நானோ,

கோடியில் பிறந்தே மாடமா ளிகையில்
தேடிய செல்வம் தேய்ப்பனும் அல்லன்;
கோடியில் பிறந்தே கூவக் கரையினில்
வாடி வறண்டே மாள்வனும் அல்லன்;
மேவவும் பாவவும் மெய்யுறாத் துறக்கன்*3;
நாவலந் தீவினில் நான்ஒரு நடுவன்;
நடுவனின் வேண்டுகை பொருளற்றுத் தோன்றலாம்;
கொடுப்பதும் விடுப்பதும் கொடையோர்க்(கு) உகப்பு;

வரதனே! கணபுரத் தரசனே! இன்னுமோர்
வரமொன்று வேண்டும்; வாய்க்குமோ எனக்கு?

காலையில் எழும்பி கடன்களுக்(கு) இடையே,
வேலையிற் செலும்வரை வெம்புரை*4 அடித்து,
வாரிய நீர்*5க்கென வழிமேல் கருத்து,
தாரை நீர்பெறத் தாங்கலை*6 வருத்தி,
தளவீ(டு)*7 எங்கணும் துழவிப் பொருதி,
மழைவரம் அறிந்திடத் தொலைக்காட்சி பார்த்து,
அலைபடும் நாள் இனி அமையா திருக்க,
புழை*8தனிப் பொருத்தி எனக்கே எனக்காய்,

வரதனே! கணபுரத் தரசனே! இன்னுமோர்
வரமொன்று வேண்டும்; வாய்க்குமோ எனக்கு?

பணிக்கென இருவளை உந்திலே*9 ஏகையில்,
கணக்கிலாக் கூட்டம் கடுகி விரைந்திடும்
அகவளைச் சாலை*10யின் துரப்பிலே*11 சிக்கா(து),
இகந்து சீறிட, யாக்கையில் பொருத்தமாய்,
இணைத்த சிறகுகள் எடுத்தே விரித்து,
நினைத்த போதினில் நெடுந்தொலை நகர்வாய்,
பாடி*12யில் எழுந்த பாலம் தொடங்கி,
ஓடிப் பறந்தே உதயம்*13 போகவே,

வரதனே! கணபுரத் தரசனே! இன்னுமோர்
வரமொன்று வேண்டும்; வாய்க்குமோ எனக்கு?

வரவுகள் நாலு எனில் செலவுகள் நாலரை;
உறவுகள், அடுத்தவர், ஒப்பிடச் செய்வதால்,
காட்சிக் கிடங்காய் வீட்டையே மாற்றினால்,
தேட்டிய சம்பளம் மீத்தவா செய்யும்?
வெம்பிப் பிதுங்கி விழைவுகள் கூட்டி,
நம்பி உழன்று நாணும் போதிலே
தோதுகள் அறிந்து துணையாள் புரிதரப்
போதும் எமக்கெனும் பொந்திகை*14 கிடைக்கவே,

வரதனே! கணபுரத் தரசனே! இன்னுமோர்
வரமொன்று வேண்டும்; வாய்க்குமோ எனக்கு?

இத்தனை காலம் எத்தனை துன்பம்?
நத்தியர் வஞ்சம்; நயக்குறை; இழிவு;
நம்பிஏ மாந்தது; நடிப்பும் நழுவலும்;
கும்பியும் நெஞ்சும் குறுகிய கசப்பும்;
பொத்தித் துறக்க, பொதிவே*15 நினைக்க,
சித்தம் சீர்பட, செழுமை துலங்கிட,
உறுதியில் ஒன்றிட, உற்றவர் சேர்ந்திட,
மறதிநீர் மாந்தியே வாழ்வில் நிலைகொள,

வரதனே! கணபுரத் தரசனே! இன்னுமோர்
வரமொன்று வேண்டும்; வாய்க்குமோ எனக்கு?

இருக்கவோ அகவை எழுபதே சாலும்,
இருப்பினில் நோவுகள் எட்டா திருந்தால்!
நோவின் வலியோ, நுவலரின் இரட்டை
நாவினில் இருந்து நம்விதி தொலைப்பதால்!
நோவினில் நொய்ந்து சீரழி யாதே,
ஆவதில் நிறைந்து, அடைவதாய்த் தூங்கி,
அழும்பிய படியே சாயவும் வேண்டும்;
விழுமமே எச்சமாய் வீற்றிருக் கட்டும்;

வரதனே! கணபுரத் தரசனே! இன்னுமோர்
வரமொன்று வேண்டும்; வாய்க்குமோ எனக்கு?

அன்புடன்,
இராம.கி.

1. உணக்குதல் = சுடுதல்; இங்கு வனைந்த பானையைச் சுடுதல்
2. நடுவன் என்றவுடன் வழக்காடு மன்றம் பட்டிமண்டபம் போன்றவற்றின் நடுவர் என்று எண்ண வேண்டாம். இங்கே பாடுகிறவன் ஒரு நடுத்தர வருக்கன். அந்த அளவில் இந்த நடுவன் வேண்டும் சிறுவகை(?) வரங்களை இந்தச் சிறுங்(!?) கவிதை பட்டியல் இடுகிறது.
3. துறக்கன் = சொர்க்கத்தான்; இப்படி மேலே ஏகி மேவவும் முடியாது, கீழே பரவிப் பாவவும் முடியாது இருக்கும் துறக்கம் தான் திரிசங்கு சொர்க்கம் என்பது.
4. வெம்புரை = வறண்டு போன borewell
5. வாரிய நீர் = metro water
6. தாங்கல் = tanker
7. தள வீடு = apartment house
8. புழை = செயற்கைக் குளம் (அல்லது இயற்கைக் கழிமுகம் = backwaters). செயற்கைப் புழைக்கரத்தைத் தான் வடமொழிப் படுத்தி புஷ்கரம் என்று நம்மூர்ப் பெருமாள் கோயில்களில் சொல்லுகிறார்கள். (இதுபோன்ற புழைக்கரத்திற்கு அருகில் உள்ள ஆற்றில் இருந்து குளத்திற்கு கால்வாய் மூலம் நீர் வரத்து இருக்க வேண்டும்.)
9. இருவளை உந்து = two wheeler
10.அகவளைச் சாலை = inner ring road
11.துரப்பு = traffic
12.பாடி = சென்னை நகர் அகவளைச் சாலையின் வடபுலத்தில் உள்ள ஒரு பகுதி
13.உதயம் = சென்னை நகர் தென்புலத்தில் அசோக் நகர் முடிவில் இருக்கும் உதயம் திரையரங்கு. வட சென்னையில் உள்ள பாடியில் இருந்து உதயம் வரை மிகக் கூடுதலாய் இருக்கும் துரப்புத் தான் இந்தக் காலத்தில் காலை, மாலை நேரங்களில் சென்னையிலேயே அடர்ந்த துரப்பு. இதில் புகுந்து வெளிவருவது பெருமப் பயத்தனம் (ப்ரம்ம ப்ரயத்தனம் என்று வடமொழியில் இதைப் பெயர்ப்பார்கள்).
14.பொந்திகை = திருப்தி; satisfaction
15.பொதிவு = positive; பல இடங்களில் நேர்மறை என்ற சொல் positive என்பதற்குப் பொருந்தி வருவதில்லை. அதே பொழுது நேர்மறை என்ற சொல் directness என்பதற்கு மிகப் பொருந்தி நிற்கும். எனவே தான் நேர்மறை என்ற சொல்லை இங்கு ஆளத் தவிர்க்கிறேன். (அப்படி நேர்மறை என்ற சொல்லைச் சொல்ல வேண்டுமானால் மறை என்ற ஈற்றைத் தவிர்க்கலாம்; மாறாக, நேரிய என்றே சொல்லலாம்.)

In TSCII

ÅæÁ¡ýÚ §ÅñÎõ

(§º¡Æ¢í¸ ¿øæ÷ ÅÕžüÌ ÓýÉ¡ø ¦ºý¨É «ñ½¡ ¿¸Ã¢ø ÌÊ¢Õó§¾ý. «ô¦À¡ØÐ þÕó¾ Ýú¿¢¨Ä ÀüÈ¢ ¦¸¡ïºõ ¬üÈ¡¨Á§Â¡Î ¦º¡ýÉÐ þÐ. ÓüÈ¢Öõ ´Õ ¿ÎÅÕì¸ô À¡÷¨Å.)

¿¡ý¡÷ ±ýÌÅ£ á¢ý ¿¡§É¡,

§¸¡Ê¢ø À¢Èó§¾ Á¡¼Á¡ Ç¢¨¸Â¢ø
§¾Ê ¦ºøÅõ §¾öôÀÛõ «øÄý;
§¸¡Ê¢ø À¢Èó§¾ ÜÅì ¸¨Ã¢ɢø
Å¡Ê ÅÈñ§¼ Á¡ûÅÛõ «øÄý;
§ÁÅ×õ À¡Å×õ ¦ÁöÔÈ¡ò ÐÈì¸ý*3;
¿¡ÅÄó ¾£Å¢É¢ø ¿¡ý´Õ ¿ÎÅý;
¿ÎÅÉ¢ý §ÅñΨ¸ ¦À¡ÕÇüÚò §¾¡ýÈÄ¡õ;
¦¸¡ÎôÀÐõ Å¢ÎôÀÐõ ¦¸¡¨¼§Â¡÷ì(Ì) ¯¸ôÒ;

Åþ§É! ¸½ÒÃò ¾Ãº§É! þýÛ§Á¡÷
ÅæÁ¡ýÚ §ÅñÎõ; Å¡öì̧Á¡ ±ÉìÌ?

¸¡¨Ä¢ø ±ØõÀ¢ ¸¼ý¸Ùì(Ì) þ¨¼§Â,
§Å¨Ä¢ü ¦ºÖõŨà ¦ÅõÒ¨Ã*4 «ÊòÐ,
šâ ¿£÷*5ì¦¸É ÅÆ¢§Áø ¸ÕòÐ,
¾¡¨Ã ¿£÷¦ÀÈò ¾¡í¸¨Ä*6 ÅÕò¾¢,
¾ÇÅ£(Î)*7 ±í¸Ïõ ÐÆÅ¢ô ¦À¡Õ¾¢,
Á¨ÆÅÃõ «È¢ó¾¢¼ò ¦¾¡¨Ä측𺢠À¡÷òÐ,
«¨ÄÀÎõ ¿¡û þÉ¢ «¨Á¡ ¾¢Õì¸,
Ò¨Æ*8¾É¢ô ¦À¡Õò¾¢ ±É째 ±É측ö,

Åþ§É! ¸½ÒÃò ¾Ãº§É! þýÛ§Á¡÷
ÅæÁ¡ýÚ §ÅñÎõ; Å¡öì̧Á¡ ±ÉìÌ?

À½¢ì¦¸É þÕÅ¨Ç ¯ó¾¢§Ä*9 ²¨¸Â¢ø,
¸½ì¸¢Ä¡ì Üð¼õ ¸Î¸¢ Å¢¨Ãó¾¢Îõ
«¸Å¨Çî º¡¨Ä*10¢ý ÐÃôÀ¢§Ä*11 º¢ì¸¡(Ð),
þ¸óÐ º£È¢¼, ¡쨸¢ø ¦À¡Õò¾Á¡ö,
þ¨½ò¾ º¢È̸û ±Îò§¾ ŢâòÐ,
¿¢¨Éò¾ §À¡¾¢É¢ø ¦¿Î󦾡¨Ä ¿¸÷Å¡ö,
À¡Ê*12¢ø ±Øó¾ À¡Äõ ¦¾¡¼í¸¢,
µÊô ÀÈó§¾ ¯¾Âõ*13 §À¡¸§Å,

Åþ§É! ¸½ÒÃò ¾Ãº§É! þýÛ§Á¡÷
ÅæÁ¡ýÚ §ÅñÎõ; Å¡öì̧Á¡ ±ÉìÌ?

ÅÃ׸û ¿¡Ö ±É¢ø ¦ºÄ׸û ¿¡Ä¨Ã;
¯È׸û, «Îò¾Å÷, ´ôÀ¢¼î ¦ºöž¡ø,
¸¡ðº¢ì ¸¢¼í¸¡ö ţ𨼧 Á¡üȢɡø,
§¾ðÊ ºõÀÇõ Á£ò¾Å¡ ¦ºöÔõ?
¦ÅõÀ¢ô À¢Ðí¸¢ Å¢¨Æ×¸û ÜðÊ,
¿õÀ¢ ¯ÆýÚ ¿¡Ïõ §À¡¾¢§Ä
§¾¡Ð¸û «È¢óРШ½Â¡û Òâ¾Ãô
§À¡Ðõ ±Á즸Ûõ ¦À¡ó¾¢¨¸*14 ¸¢¨¼ì¸§Å,

Åþ§É! ¸½ÒÃò ¾Ãº§É! þýÛ§Á¡÷
ÅæÁ¡ýÚ §ÅñÎõ; Å¡öì̧Á¡ ±ÉìÌ?

þò¾¨É ¸¡Äõ ±ò¾¨É ÐýÀõ?
¿ò¾¢Â÷ Åïºõ; ¿Âį̀È; þÆ¢×;
¿õÀ¢² Á¡ó¾Ð; ¿ÊôÒõ ¿ØÅÖõ;
ÌõÀ¢Ôõ ¦¿ïÍõ ÌÚ¸¢Â ¸ºôÒõ;
¦À¡ò¾¢ò ÐÈì¸, ¦À¡¾¢§Å*15 ¿¢¨Éì¸,
º¢ò¾õ º£÷À¼, ¦ºØ¨Á ÐÄí¸¢¼,
¯Ú¾¢Â¢ø ´ýÈ¢¼, ¯üÈÅ÷ §º÷ó¾¢¼,
ÁȾ¢¿£÷ Á¡ó¾¢§Â Å¡úÅ¢ø ¿¢¨Ä¦¸¡Ç,

Åþ§É! ¸½ÒÃò ¾Ãº§É! þýÛ§Á¡÷
ÅæÁ¡ýÚ §ÅñÎõ; Å¡öì̧Á¡ ±ÉìÌ?

þÕ츧𠫏¨Å ±ØÀ§¾ º¡Öõ,
þÕôÀ¢É¢ø §¿¡×¸û ±ð¼¡ ¾¢Õ󾡸!
§¿¡Å¢ý ÅÄ¢§Â¡, ÑÅÄâý þÃð¨¼
¿¡Å¢É¢ø þÕóÐ ¿õÅ¢¾¢ ¦¾¡¨ÄôÀ¾¡ø!
§¿¡Å¢É¢ø ¦¿¡öóÐ º£ÃÆ¢ ¡§¾,
¬Å¾¢ø ¿¢¨ÈóÐ, «¨¼Å¾¡öò àí¸¢,
«ØõÀ¢Â Àʧ º¡Â×õ §ÅñÎõ;
Å¢ØÁ§Á ±îºÁ¡ö Å£üÈ¢Õì ¸ðÎõ;

Åþ§É! ¸½ÒÃò ¾Ãº§É! þýÛ§Á¡÷
ÅæÁ¡ýÚ §ÅñÎõ; Å¡öì̧Á¡ ±ÉìÌ?

«ýÒ¼ý,
þáÁ.¸¢.

1. ¯½ì̾ø = Íξø; þíÌ Å¨Éó¾ À¡¨É¨Âî Íξø
2. ¿ÎÅý ±ýÈ×¼ý ÅÆì¸¡Î ÁýÈõ ÀðÊÁñ¼Àõ §À¡ýÈÅüÈ¢ý ¿ÎÅ÷ ±ýÚ ±ñ½ §Åñ¼¡õ. þí§¸ À¡Î¸¢ÈÅý ´Õ ¿Îò¾Ã ÅÕì¸ý. «ó¾ «ÇÅ¢ø þó¾ ¿ÎÅý §ÅñÎõ º¢ÚŨ¸(?) ÅÃí¸¨Ç þó¾î º¢Úí(!?) ¸Å¢¨¾ ÀðÊÂø þθ¢ÈÐ.
3. ÐÈì¸ý = ¦º¡÷ì¸ò¾¡ý; þôÀÊ §Á§Ä ²¸¢ §ÁÅ×õ ÓÊ¡Ð, ¸£§Æ ÀÃÅ¢ô À¡Å×õ ÓÊ¡РþÕìÌõ ÐÈì¸õ ¾¡ý ¾¢Ã¢ºíÌ ¦º¡÷ì¸õ ±ýÀÐ.
4. ¦ÅõҨà = ÅÈñÎ §À¡É borewell
5. šâ ¿£÷ = metro water
6. ¾¡í¸ø = tanker
7. ¾Ç ţΠ= apartment house
8. Ò¨Æ = ¦ºÂü¨¸ì ÌÇõ («øÄÐ þÂü¨¸ì ¸Æ¢Ó¸õ = backwaters). ¦ºÂü¨¸ô Ò¨Æì¸Ãò¨¾ò ¾¡ý ż¦Á¡Æ¢ô ÀÎò¾¢ Ò‰¸Ãõ ±ýÚ ¿õã÷ô ¦ÀÕÁ¡û §¸¡Â¢ø¸Ç¢ø ¦º¡øÖ¸¢È¡÷¸û. (þЧÀ¡ýÈ Ò¨Æì¸Ãò¾¢üÌ «Õ¸¢ø ¯ûÇ ¬üÈ¢ø þÕóÐ ÌÇò¾¢üÌ ¸¡øÅ¡ö ãÄõ ¿£÷ ÅÃòÐ þÕì¸ §ÅñÎõ.)
9. þÕÅ¨Ç ¯óÐ = two wheeler
10.«¸Å¨Çî º¡¨Ä = inner ring road
11.ÐÃôÒ = traffic
12.À¡Ê = ¦ºý¨É ¿¸÷ «¸Å¨Çî º¡¨Ä¢ý żÒÄò¾¢ø ¯ûÇ ´Õ À̾¢
13.¯¾Âõ = ¦ºý¨É ¿¸÷ ¦¾ýÒÄò¾¢ø «§º¡ì ¿¸÷ ÓÊÅ¢ø þÕìÌõ ¯¾Âõ ¾¢¨ÃÂÃíÌ. ż ¦ºý¨É¢ø ¯ûÇ À¡Ê¢ø þÕóÐ ¯¾Âõ Ũà Á¢¸ì Üξġö þÕìÌõ ÐÃôÒò ¾¡ý þó¾ì ¸¡Äò¾¢ø ¸¡¨Ä, Á¡¨Ä §¿Ãí¸Ç¢ø ¦ºý¨É¢§Ä§Â «¼÷ó¾ ÐÃôÒ. þ¾¢ø ÒÌóÐ ¦ÅÇ¢ÅÕÅÐ ¦ÀÕÁô ÀÂò¾Éõ (ôÃõÁ ôÃÂò¾Éõ ±ýÚ Å¼¦Á¡Æ¢Â¢ø þ¨¾ô ¦ÀÂ÷ôÀ¡÷¸û).
14.¦À¡ó¾¢¨¸ = ¾¢Õô¾¢; satisfaction
15.¦À¡¾¢× = positive; ÀÄ þ¼í¸Ç¢ø §¿÷Á¨È ±ýÈ ¦º¡ø positive ±ýÀ¾üÌô ¦À¡Õó¾¢ ÅÕž¢ø¨Ä. «§¾ ¦À¡ØÐ §¿÷Á¨È ±ýÈ ¦º¡ø directness ±ýÀ¾üÌ Á¢¸ô ¦À¡Õó¾¢ ¿¢üÌõ. ±É§Å ¾¡ý §¿÷Á¨È ±ýÈ ¦º¡ø¨Ä þíÌ ¬Çò ¾Å¢÷츢§Èý. («ôÀÊ §¿÷Á¨È ±ýÈ ¦º¡ø¨Äî ¦º¡øÄ §ÅñÎÁ¡É¡ø Á¨È ±ýÈ ®ü¨Èò ¾Å¢÷ì¸Ä¡õ; Á¡È¡¸, §¿Ã¢Â ±ý§È ¦º¡øÄÄ¡õ.)

பணத்திற்கு எதிரான அறிவு

பணத்திற்கு எதிரான அறிவு

(கீழே உள்ள துணுக்கை, இணையத்தில் எங்கோ ஓரிடத்தில் படித்தேன். தமிழாக்கம் மட்டுமே என்னுடையது.)

"பொதினச் செயலீட்டாளர்கள் (business executives) அளவுக்கு பொறியாளரும் அறிவியலாரும், ஒரு நாளும் பணம் பண்ண மாட்டார்கள்" என்பது எல்லோர்க்கும் தெரிந்த ஒரு பட்டகை (fact). இது ஏன் உண்மையாகிறது என்பதற்கு இப்பொழுது ஒரு நிருவம் (proof) தரட்டுமா?

ஒவ்வொரு பொறியாளருக்கும் பொறியியற் படிப்பில் தெரிந்த ஒரு சமன்பாடு:
ஆற்றல் / நேரம் = புயவு

[புயவிக் கிடந்து (புய்ந்து கிடந்து, புதைந்து இருந்து) வெளிப்படுவது, உள்நின்று வெளிப்படுவது power. புயம் என்றால் தோள்; அது புஜம் என்ற வடமொழியில் திரியும். புயம் புடைத்தவன் = புயவாளி = powerful person; மாந்தப் புயவு = manpower; இயந்திரப் புயவு = machine power. தமிழ் அறிவியல் கட்டுரைகளில் இதுகாறும் ஆற்றலுக்கும் (energy) புயவுக்கும் (power), பொதுளுக்கும் (potential) ஒரே சொல்லைப் பயன்படுத்திக் குழறுபடி செய்துள்ளோம். தமிழில் அறிவியல் வளர வேண்டுமானால் சொற்களில் துல்லியம் கூட வேண்டும். பலவற்றையும் ஒன்றுபோல் சொல்லி ஒப்பேற்றாமல் இருப்பது நல்லது.]

உழைப்பும் (work) ஆற்றலும் (energy) ஒன்றுபோல் ஆனவை என்பதால், இந்தச் சமனை இன்னொரு விதமாய் எழுதலாம்.
உழைப்பு / நேரம் = புயவு

இனி இரண்டு கருதுகோள்களுக்கு வருவோம்.

முதற் கருதுகோள் (hypothesis)1: அறிவு என்பது புயவு (knowledge is power)
இரண்டாம் கருதுகோள் (hypothesis) 2: நேரம் என்பது பணம் (time is money)

அறிவு = புயவு என்ற முதல் கருதுகோளாலும், காலம் = பணம் என்ற இரண்டாவது கருதுகோளாலும், மேலே உள்ள சமன்பாட்டை வேறு முறையில் கீழே உள்ளவாறு எழுத முடியும்.

உழைப்பு / பணம் = அறிவு

இந்தச் சமன்பாட்டை, பணத்திற்காகச் சுளுவி (solve) எடுக்கும் படி திருப்பிப் போட்டால்

உழைப்பு / அறிவு = பணம்

மேலே உள்ள சமன் பாட்டில் அறிவின் விழுமம் (value) குறைந்தும் இருக்கலாம், நிறைந்தும் இருக்கலாம் அல்லவா? அதன்படி ஓர்ந்து பார்த்தால், "எவ்வளவு உழைப்பு இருந்தாலும், அறிவு என்பது சுழியை (zero level) நோக்கி அணுகினால், பணம் என்பது வரம்பிலி (infinity) நோக்கிப் போகும்" என்று அறிந்து கொள்கிறோம்.

முடிப்புரை:

எந்த அளவுக்குக் குறைந்த அறிவு இருக்கிறதோ, அந்த அளவுக்கு மிகுந்த பணத்தை நீங்கள் எந்த உழைப்பிலும் செய்யமுடியும். QED. :-)

பின் குறிப்பு:

ஆர்வார்டு கணக்கியல் படிப்பில் இருந்து பில் கேட்சு ஏன் நழுவிக் கொண்டார் என்பதற்கான காரணத்தை உன்னிப் பார்த்த போது, அவர் தம் இளம் அறிவியல் படிப்பில், எப்படியோ மேலே உள்ள நிருவத்தை அடையாளம் கண்டுகொண்டார் என்றும், அதற்குப் பின்னால், அறிவின்மையைத் தேடுவதிலேயே தன் வேலைச் சகட்டைப் (career) பணித்துக் கொண்டார் என்றும் கேள்வி :-).
-----------------------------------------------------------------------------------------------------

அன்புடன்,
இராம.கி.

Money versus Knowledge

FACT: Engineers and scientists will never make as much money as business executives. Now, there is a rigorous mathematical proof that explains why this is true--

Postulate 1: Knowledge is Power
Postulate 2: Time is Money

As every engineer knows:
WORK / TIME = POWER

Since Knowledge = Power (Postulate 1) and Time = Money (Postulate 2), we have--
WORK / MONEY = KNOWLEDGE

Transposing to solve for Money produces:
WORK / KNOWLEDGE = MONEY

Thus, as Knowledge approaches zero, Money approaches infinity regardless of the work done.

Conclusion: The Less you Know, the More you Make. Q.E.D.

Note: It has been speculated that the reason why Bill Gates dropped out of Harvard's math program was because he stumbled upon this proof as an undergraduate, and dedicated the rest of his career to the pursuit of ignorance.....

அன்புடன்,
இராம.கி.

In TSCII:

À½ò¾¢üÌ ±¾¢Ã¡É «È¢×

(¸£§Æ ¯ûÇ ÐÏ쨸, þ¨½Âò¾¢ø ±í§¸¡ µÃ¢¼ò¾¢ø ÀÊò§¾ý. ¾Á¢Æ¡ì¸õ ÁðΧÁ ±ýÛ¨¼ÂÐ.)

"¦À¡¾¢Éî ¦ºÂÄ£ð¼¡Ç÷¸û (business executives) «Ç×ìÌ ¦À¡È¢Â¡ÇÕõ «È¢Å¢ÂÄ¡Õõ, ´Õ ¿¡Ùõ À½õ Àñ½ Á¡ð¼¡÷¸û" ±ýÀÐ ±ø§Ä¡÷ìÌõ ¦¾Ã¢ó¾ ´Õ À𼨸 (fact). þÐ ²ý ¯ñ¨Á¡¸¢ÈÐ ±ýÀ¾üÌ þô¦À¡ØÐ ´Õ ¿¢ÕÅõ (proof) ¾ÃðÎÁ¡?

´ù¦Å¡Õ ¦À¡È¢Â¡ÇÕìÌõ ¦À¡È¢Â¢Âü ÀÊôÀ¢ø ¦¾Ã¢ó¾ ´Õ ºÁýÀ¡Î:
¬üÈø / §¿Ãõ = ÒÂ×

[ÒÂÅ¢ì ¸¢¼óÐ (ÒöóÐ ¸¢¼óÐ, Ò¨¾óÐ þÕóÐ) ¦ÅÇ¢ôÀÎÅÐ, ¯û¿¢ýÚ ¦ÅÇ¢ôÀÎÅÐ power. ÒÂõ ±ýÈ¡ø §¾¡û; «Ð Òƒõ ±ýÈ Å¼¦Á¡Æ¢Â¢ø ¾¢Ã¢Ôõ. ÒÂõ Ò¨¼ò¾Åý = ÒšǢ = powerful person; Á¡ó¾ô ÒÂ× = manpower; þÂó¾¢Ãô ÒÂ× = machine power. ¾Á¢ú «È¢Å¢Âø ¸ðΨøǢø þи¡Úõ ¬üÈÖìÌõ (energy) ÒÂ×ìÌõ (power), ¦À¡ÐÙìÌõ (potential) ´§Ã ¦º¡ø¨Äô ÀÂýÀÎò¾¢ì ÌÆÚÀÊ ¦ºöÐû§Ç¡õ. ¾Á¢Æ¢ø «È¢Å¢Âø ÅÇà §ÅñÎÁ¡É¡ø ¦º¡ü¸Ç¢ø ÐøÄ¢Âõ ܼ §ÅñÎõ. ÀÄÅü¨ÈÔõ ´ýÚ§À¡ø ¦º¡øÄ¢ ´ô§ÀüÈ¡Áø þÕôÀÐ ¿øÄÐ.]

¯¨ÆôÒõ (work) ¬üÈÖõ (energy) ´ýÚ§À¡ø ¬É¨Å ±ýÀ¾¡ø, þó¾î ºÁ¨É þý¦É¡Õ Å¢¾Á¡ö ±Ø¾Ä¡õ.
¯¨ÆôÒ / §¿Ãõ = ÒÂ×

þÉ¢ þÃñÎ ¸ÕЧ¸¡û¸ÙìÌ ÅÕ§Å¡õ.

Ó¾ü ¸ÕЧ¸¡û (hypothesis)1: «È¢× ±ýÀÐ ÒÂ× (knowledge is power)
þÃñ¼¡õ ¸ÕЧ¸¡û (hypothesis) 2: §¿Ãõ ±ýÀÐ À½õ (time is money)

«È¢× = ÒÂ× ±ýÈ Ó¾ø ¸ÕÐ §¸¡Ç¡Öõ, ¸¡Äõ = À½õ ±ýÈ þÃñ¼¡ÅÐ ¸ÕЧ¸¡Ç¡Öõ, §Á§Ä ¯ûÇ ºÁýÀ¡ð¨¼ §ÅÚ Ó¨È¢ø ¸£§Æ ¯ûÇÅ¡Ú ±Ø¾ ÓÊÔõ.

¯¨ÆôÒ / À½õ = «È¢×

þó¾î ºÁýÀ¡ð¨¼, À½ò¾¢ü¸¡¸î ÍÙÅ¢ ±ÎìÌõ (solve) ÀÊ ¾¢ÕôÀ¢ô §À¡ð¼¡ø

¯¨ÆôÒ / «È¢× = À½õ

§Á§Ä ¯ûÇ ºÁý À¡ðÊø «È¢Å¢ý Å¢ØÁõ (value) ̨ÈóÐõ þÕì¸Ä¡õ, ¿¢¨ÈóÐõ þÕì¸Ä¡õ «øÄÅ¡? «¾ýÀÊ µ÷óÐ À¡÷ò¾¡ø, "±ùÅÇ× ¯¨ÆôÒ þÕó¾¡Öõ, «È¢× ±ýÀÐ ÍÆ¢¨Â (zero level) §¿¡ì¸¢ «Ï¸¢É¡ø, À½õ ±ýÀÐ ÅÃõÀ¢Ä¢ (infinity) §¿¡ì¸¢ô §À¡Ìõ" ±ýÚ «È¢óÐ ¦¸¡û¸¢§È¡õ.

ÓÊôÒ¨Ã:

±ó¾ «ª×ìÌì ̨Èó¾ «È¢× þÕ츢ȧ¾¡, «ó¾ «Ç×ìÌ Á¢Ìó¾ À½ò¨¾ ¿£í¸û ±ó¾ ¯¨ÆôÀ¢Öõ ¦ºöÂÓÊÔõ. QED. :-)

À¢ý ÌÈ¢ôÒ:

¬÷Å¡÷Î ¸½ì¸¢Âø ÀÊôÀ¢ø þÕóÐ À¢ø §¸ðÍ ²ý ¿ØÅ¢ì ¦¸¡ñ¼¡÷ ±ýÀ¾ü¸¡É ¸¡Ã½ò¨¾ ¯ýÉ¢ô À¡÷ò¾ §À¡Ð, «Å÷ ¾õ þÇõ «È¢Å¢Âø ÀÊôÀ¢ø, ±ôÀʧ¡ §Á§Ä ¯ûÇ ¿¢ÕÅò¨¾ «¨¼Â¡Çõ ¸ñΦ¸¡ñ¼¡÷ ±ýÚõ, «¾üÌô À¢ýÉ¡ø, «È¢Å¢ý¨Á¨Âò §¾Îž¢§Ä§Â ¾ý §Å¨Äî º¸ð¨¼ô (career) À½¢òÐì ¦¸¡ñ¼¡÷ ±ýÚõ §¸ûÅ¢.
-----------------------------------------------------------------------------------------------------

«ýÒ¼ý,
þáÁ.¸¢.

Money versus Knowledge

FACT: Engineers and scientists will never make as much money as business executives. Now, there is a rigorous mathematical proof that explains why this is true--

Postulate 1: Knowledge is Power
Postulate 2: Time is Money

As every engineer knows:
WORK / TIME = POWER

Since Knowledge = Power (Postulate 1) and Time = Money (Postulate 2), we have--
WORK / MONEY = KNOWLEDGE

Transposing to solve for Money produces:
WORK / KNOWLEDGE = MONEY

Thus, as Knowledge approaches zero, Money approaches infinity regardless of the work done.

Conclusion: The Less you Know, the More you Make. Q.E.D.

Note: It has been speculated that the reason why Bill Gates dropped out of Harvard's math program was because he stumbled upon this proof as an undergraduate, and dedicated the rest of his career to the pursuit of ignorance.....

«ýÒ¼ý,
þáÁ.¸¢.

Monday, April 11, 2005

காதலுக்குக் கண்ணில்லை

காதலுக்குக் கண்ணில்லை.

கமலம் தம்புராட்டி என்ற என்ற ஒரு கதையில் ஓர் இனிய மலையாளக் கவிதையை மின்சுவடி மடற்குழுவில் திருவாட்டி. கமலாதேவி ஒரு சமயம் எழுதியிருந்தார். அதை தமிழாக்கம் இங்கே.

அன்புடன்,
இராம.கி.


ஸ்னேஹிக்கான் ஒரு நிமிஷம்
ஸ்வாஸிக்கானும் ஒரு நிமிஷம்
மோஹிக்கான் ஒரு நிமிஷம்
தாஹிக்கானும் ஒரு நிமிஷம்
போஹிக்கான் எத்ர நிமிஷங்ஙள் ?
ப்ரேமிக்கான் எத்ர நிமிஷங்ஙள் ?
ஜீவிதம் ஸ்தம்பிக்கான் மாத்ரம் எத்ர எத்ர நிமிஷங்ஙள்?
உஷ்,
ஞான் ஒரு ரஹஸ்யம் சொல்லட்டோ ,?
"ப்ரேமத்தினு கண்ணில்லா"

தமிழாக்கம்:

நேயத்திற் கொரு நுணியம்
ஊய்த்துவிட ஒரு நுணியம்
மோகமுற ஒரு நுணியம்
தாகமுற ஒரு நுணியம்
போகிக்க எத்தனையோ?
பொருவலுக்கும் எத்தனையோ?
வாழ்க்கையே நின்றவிழ
வாய்ப்பதுவும் எத்தனையோ?

உஷ்
கமுக்காய்ச் சொல்லிடவா?
"காதலுக்குக் கண்ணில்லை"¸¡¾ÖìÌì ¸ñ½¢ø¨Ä.

In TSCII:

¸ÁÄõ ¾õÒáðÊ ±ýÈ ±ýÈ ´Õ ¸¨¾Â¢ø µ÷ þɢ Á¨Ä¡Çì ¸Å¢¨¾¨Â Á¢ýÍÅÊ Á¼üÌØÅ¢ø ¾¢ÕÅ¡ðÊ. ¸ÁÄ¡§¾Å¢ ´Õ ºÁÂõ ±Ø¾¢Â¢Õó¾¡÷. «¨¾ ¾Á¢Æ¡ì¸õ þí§¸.

«ýÒ¼ý,
þáÁ.¸¢.


ЧɆ¢ì¸¡ý ´Õ ¿¢Á¢„õ
ŠÅ¡…¢ì¸¡Ûõ ´Õ ¿¢Á¢„õ
§Á¡†¢ì¸¡ý ´Õ ¿¢Á¢„õ
¾¡†¢ì¸¡Ûõ ´Õ ¿¢Á¢„õ
§À¡†¢ì¸¡ý ±òà ¿¢Á¢„í¹û ?
ô§ÃÁ¢ì¸¡ý ±òà ¿¢Á¢„í¹û ?
ƒ£Å¢¾õ оõÀ¢ì¸¡ý Á¡òÃõ ±òà ±òà ¿¢Á¢„í¹û?
¯‰,
»¡ý ´Õ ÆŠÂõ ¦º¡øÄ𧼡 ,?
"ô§ÃÁò¾¢Û ¸ñ½¢øÄ¡"

¾Á¢Æ¡ì¸õ:

§¿Âò¾¢ü ¦¸¡Õ ѽ¢Âõ
°öòÐÅ¢¼ ´Õ ѽ¢Âõ
§Á¡¸ÓÈ ´Õ ѽ¢Âõ
¾¡¸ÓÈ ´Õ ѽ¢Âõ
§À¡¸¢ì¸ ±ò¾¨É§Â¡?
¦À¡ÕÅÖìÌõ ±ò¾¨É§Â¡?
Å¡ú쨸§Â ¿¢ýÈÅ¢Æ
Å¡öôÀÐ×õ ±ò¾¨É§Â¡?

¯‰
¸Ó측öî ¦º¡øÄ¢¼Å¡?
"¸¡¾ÖìÌì ¸ñ½¢ø¨Ä"

வாரமும் நாள்காட்டும்

வாரமும் நாள்காட்டும்

திடீரென்று ஒரு நா மதியிடமிருந்து "ஞாவகம் இருங்குங்களா"ன்னு ஒரு அஞ்சல். ஒரு வாரம் வலைப்பதிவுகள்லே நீங்க தான் நாள்காட்டோ ணும்னாக! "என்னடா இது! ஓரமா`ஒரு பக்கம் இருந்து எதையோ எழுதிப் பேர் பண்ணிக்கிட்டு இருக்கிற நம்மளைக் கூப்பிட்டு நாளைக் காட்டச் சொல்றாகளே? இதை ஒத்துக்கணுமா"ன்னு முதல்லே ஒரு தயக்கம் வந்துச்சு; இருந்தாலும் "இந்த வேண்டுகோள் மதியிடமிருந்து வருகிறது. அன்புக்குக் கட்டுப்படல்லைன்னா அப்புறம் என்ன இருக்கு?"ன்னு ஒரு பொறி தட்டுச்சு. சரின்னு ஒத்துக்கிட்டேன்.

எங்கூர்ப் பக்கம் செவ்வாயிலே (கோயில் தேர்த்திருவிழாவை இப்படித்தான் சிவகங்கைப் பக்கம் சொல்றது) தேர்வடம் புடிக்க வாங்கன்னு சொன்னா வந்திரோணும். அப்படி வரலைன்னு, வச்சுக்குங்க; எல்லாருமாச் சேர்ந்து கட்சி கட்டிருவாய்ங்க. தேவகோட்டைப் பக்கம் கண்டதேவி கேள்விப் பட்டிருக்கிகளா? வருசம் பல ஆச்சு இன்னம் அங்கே செவ்வாயே காண்கலே!

(கண்டதேவி என்னங்க கண்டதேவி, இப்பச் சத்த முன்னாடித் தான் தமிழ்மணத்துலே பார்த்தேன். வலைப்பதிவுலேயும் கட்சி கட்டு நடக்குது போல. என்ன வசவு, என்னென்ன பேச்சு. ஆத்தாடி, வேண்டாம்யா. சொல்லைக் கொட்டுனா அள்ள முடியாது. ஆத்துலே கொட்டுனாலும் அளந்து கொட்டுன்னு சொல்லியிருக்காக. காசுன்னாலும் சொல்லுன்னாலும் ஒன்னுதான்யா. கொட்டாதீங்க. யாரும் இங்கே வெளிலே போக வேண்டாம்; எல்லாரும் கொஞ்சம் நாவைக் காத்து, வடம் புடிக்க வாங்க! ஊருன்னா நாலு வகையான ஆக்களும் இருப்பாக. இன்னைக்கிச் சண்டை போட்டு பங்காளிக நாளைக்கிக் கூடிக்கிறது தான். ஒன்னுக்குள்ளே ஒன்னா இருக்க வேண்டிய நேரத்துலே இப்படியே எல்லாரும் ஒருத்தொருக்கொருத்தர் வஞ்சு "எதுவும் சரியில்லே, நோவு வந்துருச்சு"ன்னு விட்டுட்டுப் போனா, அப்புறம் தேர் நகராது.)

வடம் புடிக்க வந்துட்டிகளா? அப்புறம் அது என்ன, வாரம், நாள்காட்டுறதுன்னு கேள்வி கேக்குறீகளோ? வேறே ஒன்னும் இல்லை, மானி (தோழர்னு அருத்தம்). வாரம்னா உரிமை. "இந்த ஒரு வாரம் நீ ஒளிரலாம், நாங்கள்லாம் நீ இருக்குற (இ)லக்கையே பார்ப்போம்; நீ குட்டிக்கரணம் அடிச்சுக் காட்டு"ன்னு இவுக உரிமை கொடுக்குறாக. நாம அந்த உரிமையை வாங்கிக்குறோம்.

தமிழ்லே வாரம், கிழமை, ஆழ்ச்சை அப்படி எதைச் சொன்னாலும் உரிமைன்னு அருத்தம்.

வாரத்துக்கு 10 குழி எடுத்திருக்குன்னா குத்தகைக்கு 10 குழி நிலம் எடுத்திருக்குன்னு பொருள். வாரக்காரன்னா உழுறதுக்கு உரிமை கொண்ட குடியானவன்னு அருத்தம். சோமவாரம்னா சோமனுக்கு (நிலவுக்கு) உரிமையான நாள். நமக்கடுத்து நம்ம சொத்துக்கு வாரம் கொண்டவன் நம்ம வாரிசுக் காரன். "இதுலேர்ந்து இதுவரைக்கும் இன்னாருக்கு உரிமை"ன்னு நிலத்திலே வரம்பு வரைஞ்சு அதை எழுத்து பூர்வமாகவும் வரைஞ்சு கொடுக்குறோமில்லே, அதுனாலே இது வாரம். It is a right marked on land and confirmed through writing.

இதே போல கிழார்னாலே உரிமை கொண்டவர்னு தான் பொருள்; அரிசில் கிழார்னா அரிசில்ங்குற ஊரிலே ஏகப்பட்ட நிலத்துக்குச் சொந்தக்காரர்னு சொல்லலாம். திங்கள் கிழமைன்னா, திங்களுக்கு உரிமையான கிழமை. நிலத்துலே கோடு கிழிச்சு, (கிள் ங்குற அடிச்சொல்லுக்கு நோண்டுவது, கீறுவதுன்னு பொருள். என்னைக் கிள்ளாதேன்னு சொல்றோமில்லையா? கிள்ளிலேர்ந்து வந்தது தான் கிழி. கிளவிக் கொடுத்துங்குறது கிளறிக் கொடுத்தது தான்; கிளவு>கிழவு>கிழா. கிளவுதல் = பேசுதல்ங்குற பொருள் இன்னொரு மாதிரிக் கிளைக்கும். அதையும் இந்த உரிமைப் பொருளையும் குழப்பிக்கப் படாது.) ஓலையிலே கிறுவிக் கொடுத்து (அதாவது கீர்ந்து கொடுத்து) உறுதி செய்யுற உரிமைக்கு கிழமைன்னு பேர்.

இதே போலத்தான் மலையாளத்திலே திங்ஙள் ஆழ்ச்சை என்று சொல்லுவாக. அது ஆள்>ஆழ்>ஆழ்ச்சை ன்னு நீளும். தமிழில் வரும் சில புணர்ச்சி விதிகள் பாதியா நடந்தாப்போல, மலையாளத்திலே வரும். ஆள் + சை = ஆட்சை ..... ஆட்சி ன்னு வந்தால் அது தமிழ். ஆழ்ச்சி ன்னு வந்தால் அது மலையாளம். (பல தமிழ்ச் சொற்களின் மூலம் கண்டுபிடிக்கோணும்னா மலையாளம், கன்னடம், தெலுங்கு கொஞ்சமாவது பழகியிருக்கோணும். இதெல்லாம் இன்னும் சரியாப் படிக்கமாட்டேங்குறோம்.) ஆளுதலும் உரிமைப் பொருளில் தான் வருது.

இந்தக் காலத் தமிழ்லே வாரம்கிற சொல்லை மட்டும் தான் பயில்றோம். ஆனால் ரொம்ப நாட்கள் முன்னாடி, கிழமைங்குற சொல்லும் 7 நாட்களைக் குறிக்கும் வகையில் பயன்பட்டிருக்கு.

அது எப்படி ஞாயிறு, திங்கள், செவ்வாய், அறிவன் (புதன்), வியாழன், வெள்ளி, காரி(சனி)ங்குற ஒரு ஒழுங்கு இந்தக் கிழமைக் கணக்கெடுப்பில் வந்ததுன்னு தெரியுமோ? சொல்லிடுறேன். அந்தக் காலத்திலே பெரும்பாலும் நம்மூர்லே புவி நடுவக் கொள்கைதான் (earth centric doctrine). 

ஏதோ ஒரு சில பகுதிகளில் மட்டும் சூரிய நடுவக் கொள்கை இருந்திருக்கலாம். அதாவது "நாம சுத்தலை, சூரியன்தான் நம்மைச் சுத்தி வருவதாக" நம் முன்னோர்கள் நினைச்சுக்கினாக. நம்ம எல்லோருக்கும் தெரியும். இருப்பதிலே புவிக்குத் தொலைவில் இருப்பது காரிக் கோள். அடுத்தது வியாழன், அடுத்தது செவ்வாய், அடுத்தது சூரியன், அடுத்தது வெள்ளி, அடுத்தது அறிவன். ஒவ்வொரு நாளிலும் ஒவ்வொரு மணியில் ஒவ்வொரு கோள் ஆட்சி செய்வதாய் முன்னோர்கள் கருதினாக. 

இந்தக் கணக்கின் தொடக்கம் காரிக் கிழமை. நம்மூரில் நாள் தொடங்குவது காலை ஆறு மணிக்கு. காரிக்கிழமை காலை 6 மணிக்கு காரியின் ஆட்சி (=கிழமை = வாரம்) 7 மணிக்கு வியாழன், 8 மணிக்கு செவ்வாய், 9 மணிக்கு சூரியன், 10 மணிக்கு வெள்ளி, 11 மணிக்கு அறிவன்; 12 மணிக்கு திங்கள்; அடுத்து பிற்பகல் 1 மணிக்கு மீண்டும் காரி ..... இப்படியே சுற்றிக் கொண்டு போனால் அடுத்த நாள் காலை ஆறு மணிக்கு ஞாயிறும், மூன்றாவது நாள் காலை 6 மணிக்குத் திங்களும், நாலாவது நாள் காலை ஆறுமணிக்குச் செவ்வாயும், ஐந்தாவது நாள் காலை அறிவனும், ஆறாவது நாள் காலை வியாழனும், ஏழாவது நாள் காலை வெள்ளியும் வந்து சேரும். 

ஆக நம்மூர்க் கணக்கின் படி காரிக் கிழமைதான் முதற்கிழமை; கடைசிலே வெள்ளிக் கிழமை (சுமேரியன், பாபிலோனியன், எகிப்து எல்லாமே இப்படித்தான். அதனால் தான் இன்றும் நடுவக் கிழக்கு நாடுகளில் (middle east countries) வாரம் இப்படி இருக்கிறது. நம்மூர்லேயும் வெள்ளிக் கிழமை கோயிலுக்குப் போவது வழக்கம் தானே! ஏன்னா அது வார இறுதி. என்னவோ தெரியலை, வெள்ளைக்காரன் வழக்கில் நாம மாறிப் போய், ஞாயிற்றுக் கிழமையை வார இறுதியா மாத்திப் போட்டோம். (மரபுக்கு முரண் தான்.)

பெரும் பொழுதுகளில் முதற்காலம் கூடக் கருத்த காலம் தான் (கார் காலம்). ஒரு காலத்துலே ஆவணி மாசத்துலே வருசம் தொடங்குனதா தொல்காப்பியம் கோடி காட்டுது. [அய்யய்யோ தொல்காப்பியம்னு சொல்லிப்புட்டனே? அப்புறம் மாட்டுவண்டிலே போறதா யாராச்சும் சொல்லப் போறாக. உண்மைலே மாட்டுவண்டிலே போறது தப்பில்லைங்க. அதுலே மட்டும் தான் போவேன்னாத் தப்பு. தேவைக்குந் தகுந்தாப்புலே மாட்டு வண்டிலேயும் போகலாம்; நீராவி இழுவைத் தொடரியிலும் (train with a steam engine) போகலாம்; தாரைப் பறனையிலும் (jet plane) போகலாம். ;-)].
 
சரி, இதுவரைக்கும் வாரம் பார்த்தாச்சு; வாரத்தில் ஓவ்வொரு கிழமைக்கும் எப்படிப் பேர் வந்துச்சுன்னு பார்த்தாச்சு. அப்புறம், அதென்ன நாள்காட்டுங்குறீகளோ? வேறே ஒண்ணும் இல்லை, நட்சத்திரம் தான். வானியல் பத்தி விவரமாச் சொல்லிக்கிட்டே வந்தேன், என்னோட காலங்கள் கட்டுரையிலே. நடுவுலே விட்டுப் போச்சு. தொடரோணும். 

நாள்காட்டு என்ற சொல்லின் வளர்ச்சி இப்படித்தான். நாள்காட்டு> நாள்காட்டம்> நாக்காட்டம்> நாக்காத்ரம்> நாக்ஷத்ரம்> நக்ஷத்ரம். வானியல் அறிவு நம்முர்லே தெற்கேர்ந்து தான் போனதுன்னு ஆழமா, அடிச்சுச் சொல்ல முடியும். இதைப் பெருமைக்குச் சொல்லலை. வானியற் சொற்களை ஆய்ஞ்சு பார்த்ததுனாலே சொல்றேன். அதைப் பத்திப் பேசுனா இங்கே நீண்டுரும். அதனாலே இப்போதைக்கு நாள்காட்டுக்கு வருவோம்.

நாளைக் காட்டுறது நாள்காட்டு. புவியிலேர்ந்து நிலவைப் பார்த்தா எந்த விண்மீன் பின்புலமாத் தெரியுதோ அதுதான் அன்றைய நாளைக் காட்டும் விண்மீன்.

"நிலவுக்குப் பின்னாடி சித்திரைமீன் தெரிஞ்சுது பாருங்க, அன்னைக்கித்தான் நான் அவுகளை அங்கை வச்சுப் பார்த்தேன் (பார்த்திகளா, வச்சுப் பாக்குறேங்குற திருநெவேலிப் பேச்சு எனக்கு உள்ளே வந்துருச்சு. சிவகங்கை, இராமநாதபுரம், விருதுநகர், நெல்லைப் பேச்செல்லாம் கொஞ்சம் நெருங்குனாப்புலே, என்னோட பேச்சு வழக்குலே மாறி மாறிக் கலந்து போகும்.) விளங்குதா உங்களுக்கு?"

அந்தக் காலத்துலே முதல்லே வானியல் கணக்கெல்லாம் சந்திரமானம் தான். சந்திரனை வைத்து மானிப்பது (அளவிடுதல் = மடுத்தல் = to meaure; மட்டுப் படலியே என்றால் நம் அளவீட்டிற்குள் வரவில்லையே என்று பொருள்.) சந்திரமானம். (எங்கெங்கெல்லாம் அளவிடுறது வருதோ அங்கெல்லாம் மானம்கிறது தமிழ்ல்லே வந்துரும். கட்டுமானம், செய்மானம், படிமானம், வெகுமானம், அனுமானம் - சொல்லிட்டே போகலாம்.) பின்னாலே சூரியச் சந்திர மானம் வந்தாலும், சந்திரமானங்குற அடிப்படை மறையலை; இன்னும் நம்மூரில் பழக்கத்திலே இருக்கு.

"என்னங்க, உங்க பையனுக்குக் கல்யாணமாமே?"
"ஆமாங்க, வைகாசி பதினெட்டு உத்திரட்டாதி நாள்"

இன்னமும் நாட்டுப்புறத்தில் இப்படித்தான் சொல்லுவாக. இது வெகு நாளையப் பழக்கம். கல்வெட்டுக்கள் பலதைப் பார்த்தாலும் அவற்றில் நாட்களை இப்படித் தான் குறிச்சிருப்பாக. (நம்முடைய பண்டிகைகளையும் நாள்காட்டை வச்சுத் தான் சொல்றோம். தைப்பூசம், பங்குனி உத்திரம், மாசி மகம், திருவோணம், திருவாதிரை, திருக்கார்த்திகை இப்படியே போகும்.) புவியில் இருந்து நிலவைப் பார்க்கும் போது தெரிகின்ற நாள்காட்டையே அந்த நாளுக்குப் பெயராக வைக்கிறது நம்மோடே நீண்டநாள் பழக்கம்.

நாள்காட்டு நூற்றுக் கணக்கில் இருந்தாலும் (இப்பொழுது தமிழ்மணக் கணக்குப் படி மொத்த நாள்காட்டு 464 என்று சொல்ல வேண்டுமோ? :-)) 28 விதப்பு நாள்காட்டுக் கூட்டங்களை (special astral families) முதலில் தனி அடையாளம் காட்டிப் பின் அவற்றில் ஒன்றை நீக்கி 27 ஐ நம் முன்னோர் வச்சுக்கினாக. ஒவ்வொரு நாள்காட்டுக் கூட்டத்திற்கும் மாந்தக் கண்ணிற்குத் தெரிகின்ற உருவகங்களையே பெயராகவும் வச்சாக. ஒவ்வொரு பொழுதிலும் ஒவ்வொரு நாள்காட்டு விதப்பாய் இருக்கும்.

நாள்காட்டுங்குறது வெறும் சொலிப்பு மட்டுமில்லே. நாள்காட்டுக்கள்ங்குற பின்புலங்களையும் வச்சுத்தான் புவி, சூரியன், நிலவு இன்னும் மற்ற கோள்களின் நகர்ச்சியே நம்மூர்லே கணிக்கிறாக.

ஒவ்வொரு நாள்காட்டும் ஒவ்வொரு விதம். அவை அண்டத்தில் நிறைஞ்சு கிடந்தாலும் சில நாள்காட்டுக்களை மட்டும் நாம் விதப்பாய் உணர்றோம். தமிழருக்கு திருவாதிரை, திருவோணம், கார்த்திகை போன்றவை ரொம்ப விதப்பானவை. உண்மையில் இவை தமிழனுக்கு மட்டுமல்லாமல், சுமேரியர், எகிப்தியர், மாயா, இன்னும் பழைய நாகரிகர் பலருக்கும் விதப்பானவையே திருவாதிரை தான் எகிப்தியரின் ஓரியன். கார்த்திகை தான் pleieades. ஆதிரைங்குற விதப்பான சொல்லே astra என்ற பொதுமைச்சொல்லுக்கு இணையா இருக்கு. மேலை மொழிகளில் star என்ற சொல்லுக்கு இணை இப்போத் தெரியுதா?

விண்ணில் மினுக்கும் இந்த ஆதிரைகள் இல்லைன்னா மாந்த அறிவு வளர்ந்திருக்குமாங்குறதே கேள்விக் குறிதான்.

அற்பனுக்குப் பவுசு வந்தா அர்த்த (இ)ராத்திரியிலே கொடைப்பிடிப்பானாம்னு சொல்லுவாக. 

குடையைப் பிடிச்சுக்கிட்டே உங்களுக்கு நாள் காட்டுறேன், வாங்க.

இன்னைக்கி பங்குனி மாசம் பரணி நாள். திங்கக்கிழமை.

அன்புடன்,
இராம.கி.

In TSCII:

Å¡ÃÓõ ¿¡û¸¡ðÎõ

¾¢Ë¦ÃýÚ ´Õ ¿¡ Á¾¢Â¢¼Á¢ÕóÐ "»¡Å¸õ þÕíÌí¸Ç¡"ýÛ ´Õ «ïºø. ´Õ Å¡Ãõ ŨÄôÀ¾¢×¸û§Ä ¿£í¸ ¾¡ý ¿¡û¸¡ð§¼¡ÏõÉ¡¸! "±ýɼ¡ þÐ! µÃÁ¡`´Õ Àì¸õ þÕóÐ ±¨¾§Â¡ ±Ø¾¢ô §À÷ Àñ½¢ì¸¢ðÎ þÕì¸¢È ¿õÁ¨Çì ÜôÀ¢ðÎ ¿¡¨Çì ¸¡ð¼î ¦º¡øÈ¡¸§Ç? þ¨¾ ´òÐì¸ÏÁ¡"ýÛ Ó¾ø§Ä ´Õ ¾Âì¸õ ÅóÐîÍ; þÕó¾¡Öõ "þó¾ §ÅñΧ¸¡û Á¾¢Â¢¼Á¢ÕóÐ ÅÕ¸¢ÈÐ. «ýÒìÌì ¸ðÎôÀ¼ø¨ÄýÉ¡ «ôÒÈõ ±ýÉ þÕìÌ?"ýÛ ´Õ ¦À¡È¢ ¾ðÎîÍ. ºÃ¢ýÛ ´òÐ츢ð§¼ý.

±íÜ÷ô Àì¸õ ¦ºùš¢§Ä (§¸¡Â¢ø §¾÷ò¾¢ÕŢơ¨Å þôÀÊò¾¡ý º¢Å¸í¨¸ô Àì¸õ ¦º¡øÈÐ) §¾÷żõ ÒÊì¸ Å¡í¸ýÛ ¦º¡ýÉ¡ Å󾢧áÏõ. «ôÀÊ ÅèÄýÛ, ÅîÍìÌí¸; ±øÄ¡ÕÁ¡î §º÷óÐ ¸ðº¢ ¸ðÊÕÅ¡öí¸. §¾Å§¸¡ð¨¼ô Àì¸õ ¸ñ¼§¾Å¢ §¸ûÅ¢ô ÀðÊÕ츢¸Ç¡? ÅÕºõ ÀÄ ¬îÍ þýÉõ «í§¸ ¦ºùÅ¡§Â ¸¡ñ¸§Ä!

(¸ñ¼§¾Å¢ ±ýÉí¸ ¸ñ¼§¾Å¢, þôÀî ºò¾ ÓýÉ¡Êò¾¡ý ¾Á¢úÁ½òÐ§Ä À¡÷ò§¾ý. ŨÄôÀ¾¢×§ÄÔõ ¸ðº¢ ¸ðÎ ¿¼ìÌÐ §À¡Ä. ±ýÉ Åº×, ±ý¦ÉýÉ §ÀîÍ. ¬ò¾¡Ê, §Åñ¼¡õ¡. ¦º¡ø¨Äì ¦¸¡ðÎÉ¡ «ûÇ ÓÊ¡Ð. ¬òÐ§Ä ¦¸¡ðÎÉ¡Öõ «ÇóÐ ¦¸¡ðÎýÛ ¦º¡øÄ¢Â¢Õ측¸. ¸¡ÍýÉ¡Öõ ¦º¡øÖýÉ¡Öõ ´ýÛ¾¡ý¡. ¦¸¡ð¼¡¾£í¸. ¡Õõ þí§¸ ¦ÅÇ¢§Ä §À¡¸ §Åñ¼¡õ; ±øÄ¡Õõ ¦¸¡ïºõ ¿¡¨Åì ¸¡òÐ, żõ ÒÊì¸ Å¡í¸! °ÕýÉ¡ ¿¡Ö Ũ¸Â¡É ¬ì¸Ùõ þÕôÀ¡¸. þý¨Éì¸¢î ºñ¨¼ §À¡ðÎ Àí¸¡Ç¢¸ ¿¡¨Ç츢ì ÜÊ츢ÈÐ ¾¡ý. ´ýÛìÌû§Ç ´ýÉ¡ þÕì¸ §ÅñÊ §¿ÃòÐ§Ä þôÀʧ ±øÄ¡Õõ ´Õò¦¾¡Õ즸¡Õò¾÷ ÅïÍ "±Ð×õ ºÃ¢Â¢ø§Ä, §¿¡× ÅóÐÕîÍ"ýÛ Å¢ðÎðÎô §À¡É¡, «ôÒÈõ §¾÷ ¿¸Ã¡Ð.)

żõ ÒÊì¸ ÅóÐðʸǡ? «ôÒÈõ «Ð ±ýÉ, Å¡Ãõ, ¿¡û¸¡ðÎÈÐýÛ §¸ûÅ¢ §¸ìÌÈ£¸§Ç¡? §Å§È ´ýÛõ þø¨Ä, Á¡É¢ (§¾¡Æ÷Û «Õò¾õ). Å¡ÃõÉ¡ ¯Ã¢¨Á. "þó¾ ´Õ Å¡Ãõ ¿£ ´Ç¢ÃÄ¡õ, ¿¡í¸ûÄ¡õ ¿£ þÕìÌÈ (þ)Ä쨸§Â À¡÷ô§À¡õ; ¿£ ÌðÊì¸Ã½õ «ÊîÍì ¸¡ðÎ"ýÛ þ׸ ¯Ã¢¨Á ¦¸¡ÎìÌÈ¡¸. ¿¡Á «ó¾ ¯Ã¢¨Á¨Â Å¡í¸¢ì̧ȡõ.

¾Á¢ú§Ä Å¡Ãõ, ¸¢Æ¨Á, ¬ú «ôÀÊ ±¨¾î ¦º¡ýÉ¡Öõ ¯Ã¢¨ÁýÛ «Õò¾õ.

Å¡ÃòÐìÌ 10 ÌÆ¢ ±Îò¾¢ÕìÌýÉ¡ Ìò¾¨¸ìÌ 10 ÌÆ¢ ¿¢Äõ ±Îò¾¢ÕìÌýÛ ¦À¡Õû. Å¡Ã측ÃýÉ¡ ¯ØÈÐìÌ ¯Ã¢¨Á ¦¸¡ñ¼ ÌÊ¡ÉÅýÛ «Õò¾õ. §º¡ÁÅ¡ÃõÉ¡ §º¡ÁÛìÌ (¿¢Ä×ìÌ) ¯Ã¢¨ÁÂ¡É ¿¡û. ¿Áì¸ÎòÐ ¿õÁ ¦º¡òÐìÌ Å¡Ãõ ¦¸¡ñ¼Åý ¿õÁ šâÍì ¸¡Ãý. "þЧÄ÷óÐ þÐŨÃìÌõ þýÉ¡ÕìÌ ¯Ã¢¨Á"ýÛ ¿¢Äò¾¢§Ä ÅÃõÒ Å¨ÃïÍ «¨¾ ±ØòÐ â÷ÅÁ¡¸×õ ŨÃïÍ ¦¸¡Îì̧ȡÁ¢ø§Ä, «ÐÉ¡§Ä þÐ Å¡Ãõ. It is a right marked on land and confirmed through writing.

þ§¾ §À¡Ä ¸¢Æ¡÷É¡§Ä ¯Ã¢¨Á ¦¸¡ñ¼Å÷Û ¾¡ý ¦À¡Õû; «Ã¢º¢ø ¸¢Æ¡÷É¡ «Ã¢º¢øíÌÈ °Ã¢§Ä ²¸ôÀð¼ ¿¢ÄòÐìÌî ¦º¡ó¾ì¸¡Ã÷Û ¦º¡øÄÄ¡õ. ¾¢í¸û ¸¢Æ¨ÁýÉ¡, ¾¢í¸ÙìÌ ¯Ã¢¨ÁÂ¡É ¸¢Æ¨Á. ¿¢ÄòÐ§Ä §¸¡Î ¸¢Æ¢îÍ, (¸¢û íÌÈ «Ê¡øÖìÌ §¿¡ñÎÅÐ, ¸£ÚÅÐýÛ ¦À¡Õû. ±ý¨Éì ¸¢ûÇ¡§¾ýÛ ¦º¡ø§È¡Á¢ø¨Ä¡? ¸¢ûÇ¢§Ä÷óÐ Åó¾Ð ¾¡ý ¸¢Æ¢. ¸¢ÇÅ¢ì ¦¸¡ÎòÐíÌÈÐ ¸¢ÇÈ¢ì ¦¸¡Îò¾Ð ¾¡ý; ¸¢Ç×>¸¢Æ×>¸¢Æ¡. ¸¢Ç×¾ø = §À;øíÌÈ ¦À¡Õû þý¦É¡Õ Á¡¾¢Ã¢ì ¸¢¨ÇìÌõ. «¨¾Ôõ þó¾ ¯Ã¢¨Áô ¦À¡Õ¨ÇÔõ ÌÆôÀ¢ì¸ô À¼¡Ð.) µ¨Ä¢§Ä ¸¢ÚÅ¢ì ¦¸¡ÎòÐ («¾¡ÅÐ ¸£÷óÐ ¦¸¡ÎòÐ) ¯Ú¾¢ ¦ºöÔÈ ¯Ã¢¨ÁìÌ ¸¢Æ¨ÁýÛ §À÷.

þ§¾ §À¡Äò¾¡ý Á¨Ä¡Çò¾¢§Ä ¾¢í¹û ¬ú ±ýÚ ¦º¡øÖÅ¡¸. «Ð ¬û>¬ú>¬ú ýÛ ¿£Ùõ. ¾Á¢Æ¢ø ÅÕõ º¢Ä Ò½÷ Å¢¾¢¸û À¡¾¢Â¡ ¿¼ó¾¡ô§À¡Ä, Á¨Ä¡Çò¾¢§Ä ÅÕõ. ¬û + ¨º = ¬ð¨º ..... ¬ðº¢ ýÛ Å󾡸 «Ð ¾Á¢ú. ¬ú ýÛ Å󾡸 «Ð Á¨Ä¡Çõ. (ÀÄ ¾Á¢úî ¦º¡ü¸Ç¢ý ãÄõ ¸ñÎÀ¢Ê째¡ÏõÉ¡ Á¨Ä¡Çõ, ¸ýɼõ, ¦¾ÖíÌ ¦¸¡ïºÁ¡ÅÐ ÀƸ¢Â¢Õ째¡Ïõ. þ¦¾øÄ¡õ þýÛõ ºÃ¢Â¡ô ÀÊì¸Á¡ð§¼í̧ȡõ.) ¬Ù¾Öõ ¯Ã¢¨Áô ¦À¡ÕÇ¢ø ¾¡ý ÅÕÐ.

þó¾ì ¸¡Äò ¾Á¢ú§Ä Å¡Ãõ¸¢È ¦º¡ø¨Ä ÁðÎõ ¾¡ý À¢ø§È¡õ. ¬É¡ø ¦Ã¡õÀ ¿¡ð¸û ÓýÉ¡Ê, ¸¢Æ¨ÁíÌÈ ¦º¡øÖõ 7 ¿¡ð¸¨Çì ÌÈ¢ìÌõ Ũ¸Â¢ø ÀÂýÀðÊÕìÌ.

«Ð ±ôÀÊ »¡Â¢Ú, ¾¢í¸û, ¦ºùÅ¡ö, «È¢Åý (Ò¾ý), Ţ¡Æý, ¦ÅûÇ¢, ¸¡Ã¢(ºÉ¢)íÌÈ ´Õ ´ØíÌ þó¾ì ¸¢Æ¨Áì ¸½ì¦¸ÎôÀ¢ø Åó¾ÐýÛ ¦¾Ã¢Ô§Á¡? ¦º¡øÄ¢Î§Èý. «ó¾ì ¸¡Äò¾¢§Ä ¿õã÷§Ä ÒÅ¢ ¿ÎÅì ¦¸¡û¨¸¾¡ý (earth centric doctrine). Ýâ ¿ÎÅì ¦¸¡û¨¸ ¸¢¨¼Â¡Ð. «¾¡ÅÐ "¿¡Á Íò¾¨Ä, ÝâÂý¾¡ý ¿õ¨Áî Íò¾¢ ÅÕž¡¸" ¿õ Óý§É¡÷¸û ¿¢¨ÉîÍ츢ɡ¸. ¿õÁ ±ø§Ä¡ÕìÌõ ¦¾Ã¢Ôõ. þÕôÀ¾¢§Ä ÒÅ¢ìÌò ¦¾¡¨ÄÅ¢ø þÕôÀÐ ¸¡Ã¢ì §¸¡û. «Îò¾Ð Ţ¡Æý, «Îò¾Ð ¦ºùÅ¡ö, «Îò¾Ð ÝâÂý, «Îò¾Ð ¦ÅûÇ¢, «Îò¾Ð «È¢Åý. ´ù¦Å¡Õ ¿¡Ç¢Öõ ´ù¦Å¡Õ Á½¢Â¢ø ´ù¦Å¡Õ §¸¡û ¬ðº¢ ¦ºöž¡ö Óý§É¡÷¸û ¸Õ¾¢É¡¸. þó¾ì ¸½ì¸¢ý ¦¾¡¼ì¸õ ¸¡Ã¢ì ¸¢Æ¨Á. ¿õãâø ¿¡û ¦¾¡¼íÌÅÐ ¸¡¨Ä ¬Ú Á½¢ìÌ. ¸¡Ã¢ì¸¢Æ¨Á ¸¡¨Ä 6 Á½¢ìÌ ¸¡Ã¢Â¢ý ¬ðº¢ (=¸¢Æ¨Á = Å¡Ãõ) 7 Á½¢ìÌ Å¢Â¡Æý, 8 Á½¢ìÌ ¦ºùÅ¡ö, 9 Á½¢ìÌ ÝâÂý, 10 Á½¢ìÌ ¦ÅûÇ¢, 11 Á½¢ìÌ «È¢Åý; 12 Á½¢ìÌ ¾¢í¸û; «ÎòÐ À¢üÀ¸ø 1 Á½¢ìÌ Á£ñÎõ ¸¡Ã¢ ..... þôÀʧ ÍüÈ¢ì ¦¸¡ñÎ §À¡É¡ø «Îò¾ ¿¡û ¸¡¨Ä ¬Ú Á½¢ìÌ »¡Â¢Úõ, ãýÈ¡ÅÐ ¿¡û ¸¡¨Ä 6 Á½¢ìÌò ¾¢í¸Ùõ, ¿¡Ä¡ÅÐ ¿¡û ¸¡¨Ä ¬ÚÁ½¢ìÌî ¦ºùÅ¡Ôõ, ³ó¾¡ÅÐ ¿¡û ¸¡¨Ä «È¢ÅÛõ, ¬È¡ÅÐ ¿¡û ¸¡¨Ä Ţ¡ÆÛõ, ²Æ¡ÅÐ ¿¡û ¸¡¨Ä ¦ÅûÇ¢Ôõ ÅóÐ §ºÕõ. ¬¸ ¿õã÷ì ¸½ì¸¢ý ÀÊ ¸¡Ã¢ì ¸¢Æ¨Á¾¡ý Ó¾ü¸¢Æ¨Á; ¸¨¼º¢§Ä ¦ÅûÇ¢ì ¸¢Æ¨Á (ͧÁâÂý, À¡À¢§Ä¡É¢Âý, ±¸¢ôÐ ±øÄ¡§Á þôÀÊò¾¡ý. «¾É¡ø ¾¡ý þýÚõ ¿ÎÅì ¸¢ÆìÌ ¿¡Î¸Ç¢ø (middle east countries) Å¡Ãõ þôÀÊ þÕ츢ÈÐ. ¿õã÷§ÄÔõ ¦ÅûÇ¢ì ¸¢Æ¨Á §¸¡Â¢ÖìÌô §À¡ÅÐ ÅÆì¸õ ¾¡§É! ²ýÉ¡ «Ð šà þÚ¾¢. ±ýɧš ¦¾Ã¢Â¨Ä, ¦Åû¨Ç측Ãý ÅÆì¸¢ø ¿¡Á Á¡È¢ô §À¡ö, »¡Â¢üÚì ¸¢Æ¨Á¨Â šà þÚ¾¢Â¡ Á¡ò¾¢ô §À¡ð§¼¡õ. (ÁÃÒìÌ ÓÃñ ¾¡ý.)

¦ÀÕõ ¦À¡ØÐ¸Ç¢ø Ó¾ü¸¡Äõ Ü¼ì ¸Õò¾ ¸¡Äõ ¾¡ý (¸¡÷ ¸¡Äõ). ´Õ ¸¡ÄòÐ§Ä ¬Å½¢ Á¡ºòÐ§Ä ÅÕºõ ¦¾¡¼íÌɾ¡ ¦¾¡ø¸¡ôÀ¢Âõ §¸¡Ê ¸¡ðÎÐ. [«öÂö§Â¡ ¦¾¡ø¸¡ôÀ¢ÂõÛ ¦º¡øÄ¢ôÒð¼§É? «ôÒÈõ Á¡ðÎÅñ椀 §À¡È¾¡ ¡áîÍõ ¦º¡øÄô §À¡È¡¸. ¯ñ¨Á§Ä Á¡ðÎÅñ椀 §À¡ÈÐ ¾ôÀ¢ø¨Äí¸. «Ð§Ä ÁðÎõ ¾¡ý §À¡§ÅýÉ¡ò ¾ôÒ. §¾¨ÅìÌó ¾Ìó¾¡ôÒ§Ä Á¡ðÎ ÅñʧÄÔõ §À¡¸Ä¡õ; ¿£Ã¡Å¢ þبÅò ¦¾¡¼Ã¢Â¢Öõ (train with a steam engine) §À¡¸Ä¡õ; ¾¡¨Ãô ÀȨÉ¢Öõ (jet plane) §À¡¸Ä¡õ. ;-)].

ºÃ¢, þÐŨÃìÌõ Å¡Ãõ À¡÷ò¾¡îÍ; Å¡Ãò¾¢ø µù¦Å¡Õ ¸¢Æ¨ÁìÌõ ±ôÀÊô §À÷ ÅóÐîÍýÛ À¡÷ò¾¡îÍ. «ôÒÈõ, «¦¾ýÉ ¿¡û¸¡ðÎíÌÈ£¸§Ç¡? §Å§È ´ñÏõ þø¨Ä, ¿ðºò¾¢Ãõ ¾¡ý. Å¡É¢Âø Àò¾¢ Å¢ÅÃÁ¡î ¦º¡øÄ¢ì¸¢ð§¼ Åó§¾ý, ±ý§É¡¼ ¸¡Äí¸û ¸ðΨâ§Ä. ¿Î×§Ä Å¢ðÎô §À¡îÍ. ¦¾¡¼§Ã¡Ïõ. ¿¡û¸¡ðÎ ±ýÈ ¦º¡øÄ¢ý ÅÇ÷ þôÀÊò¾¡ý. ¿¡û¸¡ðÎ> ¿¡û¸¡ð¼õ> ¿¡ì¸¡ð¼õ> ¿¡ì¸¡òÃõ> ¿¡ì„òÃõ> ¿ì„òÃõ. Å¡É¢Âø «È¢× ¿õÓ÷§Ä ¦¾ü§¸÷óÐ ¾¡ý §À¡ÉÐýÛ ¬ÆÁ¡, «ÊîÍî ¦º¡øÄ ÓÊÔõ. þ¨¾ô ¦ÀÕ¨ÁìÌî ¦º¡øÄ¨Ä. šɢÂü ¦º¡ü¸¨Ç ¬öïÍ À¡÷ò¾ÐÉ¡§Ä ¦º¡ø§Èý. «¨¾ô Àò¾¢ô §ÀÍÉ¡ þí§¸ ¿£ñÎÕõ. «¾É¡§Ä þô§À¡¨¾ìÌ ¿¡û¸¡ðÎìÌ ÅÕ§Å¡õ.

¿¡¨Çì ¸¡ðÎÈÐ ¿¡û¸¡ðÎ. ÒŢ¢§Ä÷óÐ ¿¢Ä¨Åô À¡÷ò¾¡ ±ó¾ Å¢ñÁ£ý À¢ýÒÄÁ¡ò ¦¾Ã¢Ô§¾¡ «Ð¾¡ý «ý¨È ¿¡¨Çì ¸¡ðÎõ Å¢ñÁ£ý.

"¿¢Ä×ìÌô À¢ýÉ¡Ê º¢ò¾¢¨ÃÁ£ý ¦¾Ã¢ïÍÐ À¡Õí¸, «ý¨É츢ò¾¡ý ¿¡ý «×¸¨Ç «í¨¸ ÅîÍô À¡÷ò§¾ý (À¡÷ò¾¢¸Ç¡, ÅîÍô À¡ì̧ÈýÛ ¾¢Õ¦¿ §ÅÄ¢ô §ÀîÍ ¯û§Ç ÅóÐÕîÍ. º¢Å¸í¨¸, þáÁ¿¡¾ÒÃõ, Å¢Õп¸÷, ¦¿ø¨Äô §ÀøÄ¡õ ¦¸¡ïºõ ¦¿ÕíÌÉ¡ôÒ§Ä, Á¡È¢ Á¡È¢ì ¸ÄóÐ §À¡Ìõ.) Å¢Çí̾¡ ¯í¸ÙìÌ?"

«ó¾ì ¸¡ÄòÐ§Ä Ó¾ø§Ä Å¡É¢Âø ¸½ì¦¸øÄ¡õ ºó¾¢ÃÁ¡Éõ ¾¡ý. ºó¾¢Ã¨É ¨ÅòÐ Á¡É¢ôÀÐ («ÇŢξø = ÁÎò¾ø = to meaure; ÁðÎôÀ¼Ä¢§Â ±ýÈ¡ø ¿õ «ÇÅ£ðÊüÌû ÅÃÅ¢ø¨Ä§Â ±ýÚ ¦À¡Õû.) ºó¾¢ÃÁ¡Éõ. (±í¦¸í¦¸øÄ¡õ «ÇÅ¢ÎÈÐ ÅÕ§¾¡ «í¦¸øÄ¡õ Á¡Éõ¸¢ÈÐ ¾Á¢úø§Ä ÅóÐÕõ. ¸ðÎÁ¡Éõ, ¦ºöÁ¡Éõ, ÀÊÁ¡Éõ, ¦ÅÌÁ¡Éõ, «ÏÁ¡Éõ - ¦º¡øÄ¢ð§¼ §À¡¸Ä¡õ.) À¢ýÉ¡§Ä Ýâ ºó¾¢ÃÁ¡Éõ Åó¾¡Öõ, ºó¾¢ÃÁ¡ÉíÌÈ «ÊôÀ¨¼ Á¨È¨Ä; þýÛõ ¿õãâø ÀÆì¸ò¾¢§Ä þÕìÌ.

"±ýÉí¸, ¨ÀÂÛìÌì ¸øÂ¡½Á¡§Á?"
"¬Á¡í¸, ¨Å¸¡º¢ À¾¢¦ÉðÎ ¯ò¾¢Ã𼡾¢ ¿¡û"

þýÉÓõ ¿¡ðÎôÒÈò¾¢ø þôÀÊò¾¡ý ¦º¡øÖÅ¡¸. þÐ ¦ÅÌ ¿¡¨ÇÂô ÀÆì¸õ. ¸ø¦ÅðÎì¸û ÀĨ¾ô À¡÷ò¾¡Öõ «ÅüÈ¢ø ¿¡ð¸¨Ç þôÀÊò¾¡ý ÌȢÕôÀ¡¸. (¿õÓ¨¼Â Àñʨ¸¸¨ÇÔõ ¿¡û¸¡ð¨¼ ÅîÍò¾¡ý ¦º¡ø§È¡õ. ¨¾ôâºõ, ÀíÌÉ¢ ¯ò¾¢Ãõ, Á¡º¢ Á¸õ, ¾¢Õ§Å¡½õ, ¾¢ÕÅ¡¾¢¨Ã, ¾¢Õì ¸¡÷ò¾¢¨¸ þôÀʧ §À¡Ìõ.) ÒŢ¢ø þÕóÐ ¿¢Ä¨Åô À¡÷ìÌõ §À¡Ð ¦¾Ã¢¸¢ýÈ ¿¡û¸¡ð¨¼§Â «ó¾ ¿¡ÙìÌô ¦ÀÂḠ¨Å츢ÈÐ ¿£ñ¼¿¡û ÀÆì¸õ.

¿¡û¸¡ðÎ áüÚì ¸½ì¸¢ø þÕó¾¡Öõ (þô¦À¡ØÐ ¾Á¢úÁ½ì ¸½ìÌô ÀÊ ¦Á¡ò¾ ¿¡û¸¡ðÎ 464 ±ýÚ ¦º¡øÄ §ÅñΧÁ¡? :-)) 28 Å¢¾ôÒ ¿¡û¸¡ðÎì Üð¼í¸¨Ç (special astral families) ӾĢø ¾É¢ «¨¼Â¡Çõ ¸¡ðÊô À¢ý ´ý¨È ¿£ì¸¢ 27 ³ ÅîÍ츢ɡ¸. ´ù¦Å¡Õ ¿¡û¸¡ðÎì Üð¼ò¾¢üÌõ Á¡ó¾ì ¸ñ½¢üÌò ¦¾Ã¢¸¢ýÈ ¯ÕÅ¸í¸¨Ç§Â ¦ÀÂḠ¬îÍ. ´ù¦Å¡Õ ¦À¡Ø¾¢Öõ ´ù¦Å¡Õ ¿¡û¸¡ðΠŢ¾ôÀ¡ö þÕìÌõ.

¿¡û¸¡ðÎíÌÈÐ ¦ÅÚõ ¦º¡Ä¢ôÒ ÁðÎÁ¢ø§Ä. ¿¡û¸¡ðÎì¸ûíÌÈ À¢ýÒÄí¸¨Ç ÅîÍò¾¡ý ÒÅ¢, ÝâÂý, ¿¢Ä× þýÛõ ÁüÈ §¸¡û¸Ç¢ý ¿¸÷§Â ¸½¢ì¸¢È¡¸.

´ù¦Å¡Õ ¿¡û¸¡ðÎõ ´ù¦Å¡ÕÅ¢¾õ. «¨Å «ñ¼ò¾¢ø ¿¢¨ÈïÍ ¸¢¼ó¾¡Öõ º¢Ä ¿¡û¸¡ðÎì¸¨Ç Å¢¾ôÀ¡ö ¯½÷§È¡õ. ¾Á¢ÆÕìÌ ¾¢ÕÅ¡¾¢¨Ã, ¾¢Õ§Å¡½õ, ¸¡÷ò¾¢¨¸ §À¡ýȨŠ¦Ã¡õÀ Å¢¾ôÀ¡É¨Å. ¯ñ¨Á¢ø þ¨Å ¾Á¢ÆÛìÌ ÁðÎÁøÄ¡Áø, ͧÁâÂ÷, ±¸¢ô¾¢Â÷, Á¡Â¡, þýÛõ À¨ÆÂ ¿¡¸Ã¢¸ÕìÌõ Å¢¾ôÀ¡É¨Å§Â ¾¢ÕÅ¡¾¢¨Ã ¾¡ý ±¸¢ô¾¢Ââý µÃ¢Âý. ¸¡÷ò¾¢¨¸ ¾¡ý pleieades. ¬¾¢¨ÃíÌÈ Å¢¾ôÀ¡É ¦º¡ø§Ä astra ±ýÈ ¦À¡Ð¨Á¡øÖìÌ þ¨½Â¡ þÕìÌ. §Á¨Ä ¦Á¡Æ¢¸Ç¢ø star ±ýÈ ¦º¡øÖìÌ þ¨½ þô§À¡ò ¦¾Ã¢Ô¾¡?

Å¢ñ½¢ø Á¢ÛìÌõ þó¾ ¬¾¢¨Ã¸û þø¨ÄýÉ¡ Á¡ó¾ «È¢× ÅÇ÷ó¾¢ÕìÌÁ¡íÌȧ¾ §¸ûÅ¢ì ÌÈ¢¾¡ý.

«üÀÛìÌô À×ÍÅó¾¡ «÷ò¾ (þ)áò¾¢Ã¢Â¢§Ä ¦¸¡¨¼ôÀ¢ÊôÀ¡É¡õ Û ¦º¡øÖÅ¡¸. ̨¼¨Âô À¢ÊîÍ츢𧼠¯í¸ÙìÌ ¿¡û ¸¡ðΧÈý, Å¡í¸.

þý¨É츢 ÀíÌÉ¢ Á¡ºõ Àý¢ ¿¡û. ¾¢í¸ì¸¢Æ¨Á.

«ýÒ¼ý,
þáÁ.¸¢.

Monday, April 04, 2005

காணவொரு காலம் வருமே! - 11

11. காண ஒரு காலம் வருமே!

எழுமூன்றில் இருப்புஎன்றும்(a), தொள்மூன்றிற் கிடப்புஎன்றும்(b)
எமைஈர்த்துத் தோற்றம் காட்டி
எஞ்சி அறுபான் தலத்தில் சங்கு சக்கரங் காட்டி
இயல்பாக நிற்குந் தெய்வை,
தொழுமுன்றில்(d) வடமூன்று(e), தென்ஏழு(f), மேல்பதினெட்(டு)
ஒன்றாக(g) அமைத்துக் காட்டி
தொடுகுணக்கில் விதப்பாக தொண்டுஎட்டு ஏழாகத்(h)
துய்யமுகம் செய்யுந் தெய்வை,
செழுமன்றில் கண்ணபுரக் கீழ்வீட்டில் நின்றுஆளும்
சௌரியனாய் நேர்ந்து கொண்டு,
செறிராம கி. இவனின் செய்பதிகம் தனைநாளும்
சேர்ந்துஓதிப் பரவி நின்றால்
கழுகுஒன்றில் ஊர்ந்தவனை(i), கவிநெஞ்சில் ஆர்ந்தவனைக்(j)
காணஒரு காலம் வருமே!
காவிரியின் ஓரத்தில் தேவியுடன் மேவியனைக்
காணஒரு காலம் வருமே!

இது 108 தலங்களிலும் இருக்கும் தெய்வை, கண்ணபுரத்துச் சௌரி ராசனாய் நேர்ந்து கொண்டு, இந்தப் பதிகத்தை ஓதிப் பரவினால் விண்ணவனை நேரே காணும் காலம் வரும் என்று உறுதி சொல்லும் பாடல்.

a. எழு மூன்று = 21 இடத்தில் இருந்த கோலம்
b. தொள் மூன்று = 27 இடத்தில் கிடந்த கோலம். தொள்>தொண்டு = ஒன்பது
c. அறுபான் தலம் = 60 இடத்தில் நின்ற கோலம்
d. தொழு முன்றில் = தொழுகின்ற பொது இடம்; அம்பலம், பொதியில், கோட்டம் போன்றதொரு சொல் முன்றில்; இங்கு அது கோயிலைக் குறிக்கிறது.
e. வட பால் முகம் பார்த்தது = 3 தலங்கள்
f. தென் பால் முகம் பார்த்தது = 7 தலங்கள்
g. மேற்கில் முகம் பார்த்தது = 18 + 1 தலங்கள்
h. குணக்கில் (கிழக்கில்) முகம் பார்த்தது = தொண்டு எட்டு ஏழு = 9*8+7 = 79 தலங்கள்
i. கழுகு ஒன்றில் ஊர்ந்தவன் = கருடன் மேல் ஊர்ந்தவன்
j. கவி = அனுமன் (வானர இனம் மட்டுமல்லாமல் அவன் சொல்லின் செல்வன், எனவே கவி. அனுமனின் நெஞ்சத்தில் ஆர்ந்தவன் இராமன்.

In TSCII:

11. ¸¡½ ´Õ ¸¡Äõ ÅÕ§Á!

±Ø ãýÈ¢ø þÕôÒ ±ýÚõ(a), ¦¾¡û ãýÈ¢ü ¸¢¼ôÒ ±ýÚõ(b)
±¨Á ®÷òÐò §¾¡üÈõ ¸¡ðÊ
±ïº¢ ÂÚÀ¡ý ¾Äò¾¢ø© ºíÌ ºì ¸Ãí ¸¡ðÊ
þÂøÀ¡¸ ¿¢üÌó ¦¾ö¨Å,
¦¾¡Ø ÓýÈ¢ø(d) ż ãýÚ(e), ¦¾ý ²Ø(f), §Áø À¾¢¦Éð(Î)
´ýÈ¡¸(g) «¨ÁòÐì ¸¡ðÊ
¦¾¡Î ̽츢ø Å¢¾ôÀ¡¸ ¦¾¡ñÎ ±ðÎ ²Æ¡¸ò(h)
Ðö Ӹõ ¦ºöÔó ¦¾ö¨Å,
¦ºØ ÁýÈ¢ø ¸ñ½ ÒÃì ¸£ú Å£ðÊø ¿¢ýÚ ¬Ùõ
¦ºªÃ¢ÂÉ¡ö §¿÷óÐ ¦¸¡ñÎ,
¦ºÈ¢ áÁ ¸¢. þÅÉ¢ý ¦ºö À¾¢¸õ ¾¨É ¿¡Ùõ
§º÷óÐ µ¾¢ô ÀÃÅ¢ ¿¢ýÈ¡ø
¸ØÌ ´ýÈ¢ø °÷ó¾Å¨É(i), ¸Å¢ ¦¿ïº¢ø ¬÷ó¾Å¨Éì(j)
¸¡½ ´Õ ¸¡Äõ ÅÕ§Á!
¸¡Å¢Ã¢Â¢ý µÃò¾¢ø §¾Å¢Ô¼ý §ÁިÉì
¸¡½ ´Õ ¸¡Äõ ÅÕ§Á!

þÐ 108 ¾Äí¸Ç¢Öõ þÕìÌõ ¦¾ö¨Å, ¸ñ½ÒÃòÐî ¦ºªÃ¢ áºÉ¡ö §¿÷óÐ ¦¸¡ñÎ, þó¾ô À¾¢¸ò¨¾ µ¾¢ô ÀÃŢɡø Å¢ñ½Å¨É §¿§Ã ¸¡Ïõ ´Õ ¸¡Äõ ÅÕõ ±ýÚ ¯Ú¾¢ ¦º¡øÖõ À¡¼ø.

a. ±Ø ãýÚ = 21 þ¼ò¾¢ø þÕó¾ §¸¡Äõ
b. ¦¾¡û ãýÚ = 27 þ¼ò¾¢ø ¸¢¼ó¾ §¸¡Äõ. ¦¾¡û>¦¾¡ñÎ = ´ýÀÐ
c. «ÚÀ¡ý ¾Äõ = 60 þ¼ò¾¢ø ¿¢ýÈ §¸¡Äõ
d. ¦¾¡Ø ÓýÈ¢ø = ¦¾¡Ø¸¢ýÈ ¦À¡Ð þ¼õ; «õÀÄõ, ¦À¡¾¢Â¢ø, §¸¡ð¼õ §À¡ýȦ¾¡Õ ¦º¡ø ÓýÈ¢ø; þíÌ §¸¡Â¢¨Äì ÌȢ츢ÈÐ.
e. ż À¡ø Ó¸õ À¡÷ò¾Ð – 3 ¾Äí¸û
f. ¦¾ý À¡ø Ó¸õ À¡÷ò¾Ð – 7 ¾Äí¸û
g. §Áü¸¢ø Ó¸õ À¡÷ò¾Ð – 18 + 1 ¾Äí¸û
h. ̽츢ø (¸¢Æì¸¢ø) Ó¸õ À¡÷ò¾Ð = ¦¾¡ñÎ ±ðÎ ²Ø = 9*8+7 = 79 ¾Äí¸û
i. ¸ØÌ ´ýÈ¢ø °÷ó¾Åý = ¸Õ¼ý §Áø °÷ó¾Åý
j. ¸Å¢ = «ÛÁý (Å¡Éà þÉõ ÁðÎÁøÄ¡Áø «Åý ¦º¡øÄ¢ý ¦ºøÅý, ±É§Å ¸Å¢. «ÛÁÉ¢ý ¦¿ïºò¾¢ø ¬÷ó¾Åý þáÁý.

Sunday, April 03, 2005

காணவொரு காலம் வருமோ - 10

10. சிறியோனின் சிற்றோலம்

நாராய ணாஎன்ற மந்திரத்தைக் கலிகன்றி(a)
நாள்எலாம் ஓத வைக்க,
நாச்சியரை(b) விரகத்தில் ஆழ்த்தியபின் நள்உறவில்
நம்பிகரம் நாட வைக்க,
வீராளன் செங்கீரை ஆடுவதை, விண்ணுசித்தர்
விரிபதிகம் பாட வைக்க,
வில்லாளர்(d) தாலாட்டில் வில்லானை(e)ப் பாடிவர
விழிரெண்டும் நீட வைக்க,
சீராளர் நம்மவரைத்(f) திருநாடே(g) ஈதுஎன்று
சிரந்தாழ்த்திச் சேர வைக்க,
செயலிட்ட பேராளன் சிறியனையும் ஆட்கொண்டு
சிற்றோலம் செய்ய வைத்தோ?
காராளர் வளநாட்டிற் கால்கொண்ட கருமணியைக்
காணஒரு காலம் வருமோ?
காவிரியின் ஓரத்தில் தேவியுடன் மேவிவரும்
கண்ணபுரச் சௌரி ராசா!

இது ஆழ்வார்கள் கண்ணபுரத்தானைப் பாடியதை எடுத்துரைத்து, இந்தச் சிறியவனையும் ஆட்கொண்டு சிற்றோசை எழுப்ப வைத்ததை வியந்து பாடியது.

a. கலிகன்றி = திருமங்கையாழ்வார் பாசுரங்களில் பெருத்த இடங்களில் தன்னை இப்படியே தான் அழைத்துக் கொள்ளுகிறார். அவருக்கு நாராயண மந்திரத்தை இறைவனே உரைத்தது திரு நரையூர் (நாச்சியார் கோயில்) என்றே சொல்வார். ஆனாலும் கண்ணபுரத்தான் இம்மந்திரத்தை நெடுகவும் ஓத வைத்ததாய் சிறுபால் ஒரு கருத்துண்டு. பெரிய திருமொழி எட்டாம் பத்தில் உள்ள நூறு பாடல்களும் கண்ணபுரத்தானுக்கே.
b. வட்டமாய்க் கோடிட்டு சோழிகளைத் தூக்கிஎறிந்து இரட்டைப்படை விழுந்தால் எண்ணியது நடக்கும் என்று ஆடுகிறார் நாச்சியார். ”தன் கைப்பற்றி, தன்னொடு கூட்டும் ஆகில் கூடிடு கூடலே” என்று ஏங்குகிறார். இப்படி நாட வைத்ததில் கண்ணபுரத்தானுக்கும் பங்குண்டு. (நாலாயிரப் பனுவல் 535) நள் உறவு = நெருங்கிய உறவு.
c. வீராளன் = விண்ணவன்; கண்ணபுரத்து அமுதான சிறுகுழந்தை செங்கீரை ஆடுவதைக் குதிகலித்து (குதுகலித்து), யசோதையாய்த் தன்னை பாவித்துப் விண்ணுசித்தர் பாடும் ஒரே ஒரு பாட்டு.
d. e. வில்லாளர் = சேரமான் குலசேகரர்; வில்லான் = இராமன்; ”மன்னுபுகழ் கோசலைதன் மணிவயிறு வாய்த்தவனே” என்ற இராகவனையே தாலாட்டும் பாடல் கண்ணபுரத்தில் எழுந்தது. விழி இரண்டும் நீடுதல் = கண் வளருதல் = துயில் கொள்ளல்; பத்துப் பாசுரமும் அருமையான தாலாட்டு. இராமனின் தோற்றரவு இந்த ஊரில் பெரிதும் போற்றப்படுவது.
f. g. நம்மவர் = நம்மாழ்வார். ”என்னை அடைய வில்லையே என்று நீர் கவலையுறுகிறீர்; உம்மை அடையாமல் குறைப்படுகிறவன் நானே; உனக்காகவே திருநாட்டை (பரம பதம்) விட்டு கண்ணபுரம் வந்திருக்கிறேன்” என்று இறைவனே சொல்கிறானாம். இங்கு சரணடைந்தால் அது வைகுன்றம் (வைகுந்தம்) போவதற்கு ஒப்பாகும் என்கிறார் சடகோபர்.

In TSCII:

10. º¢È¢§Â¡É¢ý º¢ü§È¡Äõ

¿¡Ã¡Â ½¡ ±ýÈ Áó¾¢Ãò¨¾ì ¸Ä¢¸ýÈ¢(a)
¿¡û ±øÄ¡õ µ¾ ¨Åì¸,
¿¡îº¢Â¨Ã(b) Ţøò¾¢ø ¬úò¾¢Â À¢ý ¿û ¯ÈÅ¢ø
¿õÀ¢ ¸Ãõ ¿¡¼ ¨Åì¸,
ţáÇý ¦ºí ¸£¨Ã ¬ÎŨ¾, Å¢ñÏ º¢ò¾÷©
Ţâ À¾¢¸õ À¡¼ ¨Åì¸,
Å¢øÄ¡Ç÷(d) ¾¡Ä¡ðÊø Å¢øÄ¡¨É(e)ô À¡Ê ÅÃ
ŢƢ ¦ÃñÎõ ¿£¼ ¨Åì¸,
º£Ã¡Ç÷ ¿õÁŨÃò(f) ¾¢Õ ¿¡§¼(g) ®Ð ±ýÚ
º¢Ãó ¾¡úò¾¢î §ºÃ ¨Åì¸,
¦ºÂĢ𼠧ÀáÇý º¢È¢Â¨ÉÔõ ¬ð¦¸¡ñÎ
º¢ü§È¡Äõ ¦ºö ¨Åò§¾¡?
¸¡Ã¡Ç÷ ÅÇ ¿¡ðÊü ¸¡ø ¦¸¡ñ¼ ¸Õ Á½¢¨Âì
¸¡½ ´Õ ¸¡Äõ ÅÕ§Á¡?
¸¡Å¢Ã¢Â¢ý µÃò¾¢ø §¾Å¢Ô¼ý §ÁÅ¢ÅÕõ
¸ñ½ÒÃî ¦ºªÃ¢ ạ!


þÐ ¬úÅ¡÷¸û ¸ñ½ÒÃò¾¡¨Éô À¡Ê¨¾ ±ÎòШÃòÐ, þó¾î º¢È¢ÂŨÉÔõ ¬ð¦¸¡ñÎ º¢ü§È¡¨º ±ØôÀ ¨Åò¾¨¾ Å¢ÂóÐ À¡ÊÂÐ.

a. ¸Ä¢¸ýÈ¢ = ¾¢ÕÁí¨¸Â¡úÅ¡÷ À¡ÍÃí¸Ç¢ø ¦ÀÕò¾ þ¼í¸Ç¢ø ¾ý¨É þôÀʧ ¾¡ý «¨ÆòÐì ¦¸¡ûÙ¸¢È¡÷. «ÅÕìÌ ¿¡Ã¡Â½ Áó¾¢Ãò¨¾ þ¨ÈÅ§É ¯¨Ãò¾Ð ¾¢Õ ¿¨Ãä÷ (¿¡îº¢Â¡÷ §¸¡Â¢ø) ±ýÚ ¾¡ý ¦º¡øÖÅ¡÷¸û. ¬É¡Öõ ¸ñ½ÒÃò¾¡ý þó¾ Áó¾¢Ãò¨¾ ¦¿Î¸×õ µ¾ ¨Åò¾¾¡ö º¢Ú À¡ø ´Õ ¸ÕòÐ ¯ñÎ. ¦Àâ ¾¢Õ¦Á¡Æ¢ ±ð¼¡õ Àò¾¢ø ¯ûÇ áÚ À¡¼ø¸Ùõ ¸ñ½ÒÃò¾¡Û째.
b. Åð¼Á¡öì §¸¡ÊðÎ §º¡Æ¢¸¨Çò à츢 ±È¢óÐ þÃð¨¼ô À¨¼ Å¢Øó¾¡ø ±ñ½¢ÂÐ ¿¼ìÌõ ±ýÚ ¬Î¸¢È¡÷ ¿¡îº¢Â¡÷. "¾ý ¨¸ôÀüÈ¢, ¾ý¦É¡Î ÜðÎõ ¸¢ø ÜÊΠܼ§Ä” ±ýÚ ²í̸¢È¡÷. þôÀÊ ¿¡¼ ¨Åò¾¾¢ø ¸ñ½ ÒÃò¾¡ÛìÌõ ÀíÌ ¯ñÎ. (¿¡Ä¡Â¢Ãô ÀÛÅø 535) ¿û ¯È× = ¦¿Õí¸¢Â ¯È×.
c. ţáÇý = Å¢ñ½Åý; ¸ñ½ ÒÃòÐ «Ó¾¡É º¢Ú ÌÆó¨¾ ¦ºí ¸£¨Ã ¬ÎŨ¾ì ̾¢¸Ä¢òÐ (ÌиĢòÐ), §º¡¨¾Â¡öò ¾ý¨É À¡Å¢òÐô Å¢ñÏ º¢ò¾÷ À¡Îõ ´§Ã ´Õ À¡ðÎ.
d. e. Å¢øÄ¡Ç÷ = §ºÃÁ¡ý Ìħº¸Ã÷; Å¢øÄ¡ý = þáÁý; "ÁýÛ Ò¸ú §¸¡º¨Ä ¾ý Á½¢ ÅÂ¢Ú Å¡öò¾Å§É” ±ýÈ þá¸Å¨É§Â ¾¡Ä¡ðÎõ À¡¼ø ¸ñ½ÒÃò¾¢ø ±Øó¾Ð. ŢƢ þÃñÎõ ¿£Î¾ø = ¸ñ ÅÇÕ¾ø = Тø ¦¸¡ûÇø; ÀòÐô À¡ÍÃÓõ «Õ¨ÁÂ¡É ¾¡Ä¡ðÎ. þáÁÉ¢ý §¾¡üÈÃ× þó¾ °Ã¢ø ¦ÀâÐõ §À¡üÈô ÀÎÅÐ.
f. g. ¿õÁÅ÷ = ¿õÁ¡úÅ¡÷. "±ý¨É «¨¼ÂÅ¢ø¨Ä§Â ±ýÚ ¿£÷ ¸Å¨ÄÔÚ¸¢È£÷; ¯õ¨Á «¨¼Â¡Áø ̨ÈôÀθ¢ÈÅý ¿¡§É; ¯É측¸§Å ¾¢Õ¿¡ð¨¼ (ÀÃÁ À¾õ) Å¢ðÎ ¸ñ½ÒÃõ Åó¾¢Õ츢§Èý” ±ýÚ þ¨ÈÅ§É ¦º¡øÖ¸¢È¡É¡õ. þíÌ ºÃ½¨¼ó¾¡ø «Ð ¨Å ÌýÈõ (¨ÅÌó¾õ) §À¡Å¾üÌ ´ôÀ¡Ìõ ±ý¸¢È¡÷ º¼§¸¡À÷.

காணவொரு காலம் வருமோ - 9

9. ஆதியவன் மூலம் ஓர்தல்

வாயாக(a)ப் பெருவிழவில் ஏழாம்நாள் பாற்(b)பொழுதில்
வரததலக் காப்பைக் காட்டி,
வளர்அல்லில்(c) அலர்மேவும் பெருமானின்(d) தோற்றத்தில்,
வனைகின்ற படைப்புங் காட்டி,
ஆயாகும் நாள்முடிவில் ஆம்முழுத்தம்(e) ஒருபொழுதில்,
அந்தம்எனச் சிவனும் காட்டி,
அருள்செய்யும் ஒருதலத்தில் அருச்சிக்கும் படிமத்தால்(f)
ஆதியவன் மூலம் ஓர்ந்து(g),
போயாகம்(h), போம்உயிரை, போம்இயற்கை, அத்தனையும்
பொன்அடியில் பொருந்தச் செய்து,
பொற்சரணம்(i) தேடாமல் புகழ்மாந்தித் தினவுஎடுத்துப்
போக்கியதைப் புறந்து தள்ளி,
காய்ஆகும் பூவானை(j), கருந்துளசி மேவானைக்
காணஒரு காலம் வருமோ?
காவிரியின் ஓரத்தில் தேவியுடன் மேவிவரும்
கண்ணபுரச் சௌரி ராசா!

இந்தப் பாடல் வைகாசி மாதம் திருக் கண்ணபுரத்தில் நடக்கும் பெரு விழவைப் பற்றிப் பேசுகிறது. விழாவின் ஏழாம் நாள் உலாத் திருமேனிக்கு 

பகல் முழுதும் விண்ணவத் தோற்றம் கொடுத்து, 
அன்று இரவில் படைப்புத் தோற்றத்தில் பெருமானாய்ச் சோடித்து, 
அடுத்த நாள் விடியு முன்னர் ஒரு முழுத்தம் சிவனாய்த் தோற்றம் காட்டி 

"ஆதிமூலம் என்பது ஒன்றே; மூன்று தொழில்களும் வேறில்லை; அத்தனையும் ஒரு தோற்றம் தான்" என்று நம்மை உணர வைக்கும் நிகழ்வு. 108 தலங்களிலும் கண்ணபுரத்தில் மட்டுமே இந்த ஒருமை காட்டப் படுகிறது.

a. நாள்காட்டுகள் (நட்சத்திரங்கள்) அவற்றின் தோற்றம் கொண்டே நம்மவரால் பெயரிடப் பட்டன. இந்தவகையில் வாயில்போன்ற தோற்றங் கொண்டது வைகாசி நாள்காட்டு. எந்த நாள்காட்டு பூரணை நிலவொடு பொருந்தியதோ, அந்தப் பெயரையே திங்களுக்கும் பெயரிடுவதும் நம்மூர் வழக்கம். 

அந்த வகையில் விசாக நாள்காட்டோடு பொருந்தியது வைகாசி மாதம். விசாகம் / வைகாசி என்ற சொற்கள் வாய் என்னும் சொல்லடியில் கிளைத்தவை. வாயகம்>வாயிகம்>வாசிகம்>விசாகம் என்ற திரிவும் (கடைசி மாற்றை அடி மாற்று (metathesis) என்று மொழியாளர் சொல்வார்), வாயிகை> வாசிகை> விசாகை> விசாகி>வைசாகி>வைகாசி என்று திரிவும் எண்ணிப் பார்க்கத் தக்கவை. 

இச்சொற்கள் தமிழ், வடமொழி ஆகிய இரண்டிற்குள்ளும் போய் வந்து கிளைத்ததால் இரு பிறப்பிகள் எனச் சொல்வார். இங்கே தமிழ் மூலத்தைக்  குறிக்கும் வகையில் வாயகம் என்ற முதற் படிமம் (வாயாகமாய் ஓசை நீட்டி) ஆளப் பட்டு வைகாசி மாதத்தைக் குறிக்கிறது.

b. பால் = பகல் ; c. வளர் அல் = வளர்கின்ற இரவு; d. பெருமன் > ப்ரம்மன் = முதல்வன்
e. ஆயாகும் நாள்முடிவில் ஆம் முழுத்தம் = இந்தியக் கணக்கின்படி, ஒரு நாள் என்பது கதிரவன் எழுகின்ற நேரத்தில் தொடங்குவது. 

ஒரு நாளை 60 நாழிகைகள் என்றும், 16 முழுத்தம் என்றும் பிரிப்பது உண்டு. ஒரு முழுத்தம் என்பது 3 3/4 நாழிகைகள் (அல்லது 1 1/2 மணி நேரம்) அடங்கியது. முழுத்தம் என்பதை வடமொழிப் படுத்தி முகூர்த்தம் என்றும் சொல்வார். 

ஆகின்ற நாள் முடிவில் ஆகும் கடைசி முழுத்தத்தில் இங்கே சம்மாரம் செய்யும் சிவனாகத் தோற்றம் காட்டப் படுகிறது.

f. படிமத்தின் வழி, மூலவனைப் பார்ப்பது சிவ, விண்ணவ நெறிகளில் தலையாயது. படிம அருச்சிப்பு என்பது ஓர் உருவகம். இறைவனை எங்கெங்கோ, விதவிதமாய் ஆவு>ஆக வைத்து ஆகனம் (=ஆவாகனம்) ஆக்கலாம் என்றாலும் படிமத்தில் ஆவாகனம் செய்வது இந்த நெறிகளில் முகமையான கூறு.
h. படிமங்கள் பலவாய்த் தோற்றம் அளித்தாலும் அவை ஒன்றே. ஆதி மூலமும் ஒன்றே என்பதை அழுத்தந் திருத்தமாய் நமக்கு உணர வைக்கும் விழா இந்த வைகாசி விழாவாகும்.
i. போய் ஆகம் > போயாகம் = இறப்பின் வழி போகின்ற உடல்
j. சரணாகுதி (=சரண் + ஆகுதி) என்ற கோட்பாடு விண்ணவத்தில் அடிப்படையானது. 

இந்தக் கோட்பாட்டில் விரிந்தது தான் இராமானுசரின் விதப்பொருமைக் கோட்பாடு. (அல்லது விதப்பு அல்லிருமை; விசிஷ்ட அத்வைதம்; அத்வைதம் என்பது இருமை அல்லாதது; எனவே அது அல்லிருமை ஆனது. துமித்தல் என்ற தமிழ் வினைச்சொல் த்வி என்று வடமொழியில் திரிந்து தோற்றம் காட்டும்.) 

உயிர் ஆதனும் (ஜீவாத்மா), பேர் ஆதனும் (பரமாத்மா) வெவ்வேறாய் ஆனவை அல்ல; அப்படித் தோற்றம் அளித்து நம் கண்ணுக்கு எதிரே அவை மாயம் காட்டுகின்றன. இரண்டும் ஒன்றே என அறுதியிட்டு உரைக்கும் நெறி சங்கரரின் அல் இருமைக் கோட்பாடு (அதாவது இருமை அல்லாதது; எனவே அது ஒருமை). 

சங்கரரின் அல்லிருமையில் இருந்து குறிப்பிடத்தக்க வகையில் விண்ணவம் மாறுபடும். எப்படி உடலை உயிர் செலுத்துகிறதோ, அதேபோல் உயிராதன்களை பெருமாதனே வழி நடத்துகிறது என்று விண்ணவம் இன்னொரு விதப்பொருமையைச் சொல்லும். உடலைப் போன்றே இயற்கை, உலகு, அண்டங்கள் ஆகியவையும் கருதப்படும். 

போகின்ற உடல், போகின்ற உயிர், போகின்ற இயற்கை ஆகிய எல்லாம் இறைவனில் பொருந்துவதே சரி. அதனால் தான் இது விதப்பான ஒருமை அல்லது முழுமை. இப்படிப் பொருந்தும் பொற் சரணம் தான் ஒவ்வொரு பத்தியாளனும் வேண்டுவது என்று விண்ணவத்தார் சொல்வார். 

இக்கருத்தை மிகவும் விரித்து எழுதலாமெனினும் இங்கு சுருங்கச் சொல்லி இருக்கிறேன். 

விதப்பு ஒருமைக்கும், சிவனியக் கோட்பாட்டிற்கும் (சைவ சித்தாந்தத்திற்கும்) மிக நுணுகிய வேறுபாடுண்டு. அதை இங்கு விரிப்பின் பெருகும்.
 
k. காய் ஆகும் பூ>காயாம்பூ = கருப்பாகும் பூ; காய் = கருப்பு காயாம்பூவின் தாவரவியல் பெயர் Memecylon umbellatum ஆகும். 

In TSCII:

9. ¬¾¢ÂÅý ãÄõ µ÷¾ø

š¡¸(a)ô ¦ÀÕ Å¢ÆÅ¢ø ²Æ¡õ ¿¡û À¡ü(b) ¦À¡Ø¾¢ø
Åþ ¾Äì ¸¡ô¨Àì ¸¡ðÊ,
ÅÇ÷ «øÄ¢ø(c) «Ä÷ §Á×õ ¦ÀÕÁ¡É¢ý(d) §¾¡üÈò¾¢ø,
Ũɸ¢ýÈ À¨¼ôÒí ¸¡ðÊ,
¬Â¡Ìõ ¿¡û ÓÊÅ¢ø ¬õ ÓØò¾õ(e) ´Õ¦À¡Ø¾¢ø,
«ó¾õ ±Éî º¢ÅÛõ ¸¡ðÊ,
«Õû ¦ºöÔõ ´Õ ¾Äò¾¢ø «ÕìÌõ ÀÊÁò¾¡ø(f)
¬¾¢ÂÅý ãÄõ µ÷óÐ(g),
§À¡ ¡¸õ(h), §À¡õ ¯Â¢¨Ã, §À¡õ þÂü¨¸, «ò¾¨ÉÔõ
¦À¡ý «Ê¢ø ¦À¡Õó¾î ¦ºöÐ,
¦À¡ü ºÃ½õ(i) §¾¼¡Áø Ò¸ú Á¡ó¾¢ò ¾¢É× ±ÎòÐô
§À¡ì¸¢Â¨¾ô ÒÈóÐ ¾ûÇ¢,
¸¡ö ¬Ìõ âÅ¡¨É(j), ¸Õó ÐǺ¢ §ÁÅ¡¨Éì
¸¡½ ´Õ ¸¡Äõ ÅÕ§Á¡?
¸¡Å¢Ã¢Â¢ý µÃò¾¢ø §¾Å¢Ô¼ý §ÁÅ¢ÅÕõ
¸ñ½ÒÃî ¦ºªÃ¢ ạ!

þó¾ô À¡¼ø ¨Å¸¡º¢ Á¡¾õ ¸ñ½ ÒÃò¾¢ø ¿¼ìÌõ ¦ÀÕ Å¢Æ× ÀüÈ¢ô §À͸¢ÈÐ. ŢơŢý ²Æ¡õ ¿¡û ¯Ä¡ò ¾¢Õ§ÁÉ¢ìÌ À¸ø ÓØÐõ Å¢ñ½Åò §¾¡üÈõ ¦¸¡ÎòÐ, «ýÚ þÃÅ¢ø À¨¼ôÒò §¾¡üÈò¾¢ø ¦ÀÕÁ¡É¡öî §º¡ÊòÐ, «Îò¾ ¿¡û Å¢ÊÔ ÓýÉ÷ ´Õ ÓØò¾õ º¢ÅÉ¡öò §¾¡üÈõ ¸¡ðÊ "¬¾¢ãÄõ ±ýÀÐ ´ý§È; ãýÚ ¦¾¡Æ¢Öõ §ÅÈ¢ø¨Ä; «ò¾¨ÉÔõ ´Õ §¾¡üÈõ ¾¡ý” ±ýÚ ¯½Ã ¨ÅìÌõ ¿¢¸ú×. 108 ¾Äí¸Ç¢Öõ ¸ñ½ ÒÃò¾¢ø ÁðΧÁ þó¾ ´Õ¨Á ¸¡ð¼ô Àθ¢ÈÐ.

a. ¿¡û ¸¡ðθû (¿ðºò¾¢Ãí¸û) «ÅüÈ¢ý §¾¡üÈõ ¦¸¡ñ§¼ ¿õÁÅáø ¦ÀÂâ¼ô Àð¼É. þó¾ Ũ¸Â¢ø 𢸠§À¡ýÈ §¾¡üÈí ¦¸¡ñ¼Ð ¨Å¸¡º¢ ¿¡û ¸¡ðÎ. ±ó¾ ¿¡û ¸¡ðÎ âè½ ¿¢Ä¦Å¡Î ¦À¡Õó¾¢Â§¾¡, «ó¾ô ¦À¨ç ¾¢í¸ÙìÌõ ¦ÀÂâÎÅÐõ ¿õã÷ ÅÆì¸õ. «ó¾ Ũ¸Â¢ø Å¢º¡¸ ¿¡û ¸¡ðÎô ¦À¡Õó¾¢ÂÐ ¨Å¸¡º¢ Á¡¾õ. Å¢º¡¸õ / ¨Å¸¡º¢ ±ýÈ ¦º¡ü¸û Å¡ö ±ýÛõ ¦º¡øÄÊ¢ø ¸¢¨Çò¾¨Å. š¸õ>š¢¸õ>Å¡º¢¸õ>Å¢º¡¸õ ±ýÚ ¾¢Ã¢×õ (¸¨¼º¢ Á¡ü¨È «Ê Á¡üÚ (metathesis) ±ýÚ ¦Á¡Æ¢Â¡Ç÷ ¦º¡øÖÅ¡÷¸û), 𢍏> Å¡º¢¨¸> Å¢º¡¨¸> Å¢º¡¸¢>¨Åº¡¸¢>¨Å¸¡º¢ ±ýÚ ¾¢Ã¢×õ ±ñ½¢ô À¡÷ì¸ò ¾ì¸¨Å. þó¾î ¦º¡ü¸û ¾Á¢ú, ż¦Á¡Æ¢ þÃñÊÖõ §À¡ö ÅóÐ ¸¢¨Çò¾¾¡ø þÕ À¢ÈôÀ¢¸û ±Éî ¦º¡øÖÅ¡÷¸û. þí§¸ ¾Á¢ú ãÄõ ÌÈ¢ìÌõ Ũ¸Â¢ø š¸õ ±ýÈ Ó¾ü ÀÊÁõ (š¡¸Á¡ö µ¨º ¿£ðÊ) ¬Çô ÀðÎ ¨Å¸¡º¢ Á¡¾ò¨¾ì ÌȢ츢ÈÐ.
b. À¡ø = À¸ø ; c. ÅÇ÷ «ø = ÅÇ÷¸¢ýÈ þÃ×; d. ¦ÀÕÁý > ôÃõÁý = Ó¾øÅý
e. ¬Â¡Ìõ ¿¡û ÓÊÅ¢ø ¬õ ÓØò¾õ = þó¾¢Âì ¸½ì¸¢ý ÀÊ ¿¡û ±ýÀÐ ¸¾¢ÃÅý ±Ø¸¢ýÈ §¿Ãò¾¢ø ¦¾¡¼íÌÅÐ. ´Õ ¿¡¨Ç 60 ¿¡Æ¢¨¸¸û ±ýÚõ, 16 ÓØò¾õ ±ýÚõ À¢Ã¢ôÀÐ ¯ñÎ. ´Õ ÓØò¾õ ±ýÀÐ 3 3/4 ¿¡Æ¢¨¸¸û («øÄÐ 1 1/2 Á½¢ §¿Ãõ) «¼í¸¢ÂÐ. ÓØò¾õ ±ýÀ¨¾ ż¦Á¡Æ¢ô ÀÎò¾¢ ÓÜ÷ò¾õ ±ýÚõ ¦º¡øÖÅ¡÷¸û. ¬¸¢ýÈ ¿¡û ÓÊÅ¢ø ¬Ìõ ¸¨¼º¢ ÓØò¾ò¾¢ø þí§¸ ºõÁ¡Ãõ ¦ºöÔõ º¢ÅÉ¡¸ò §¾¡üÈõ ¸¡ð¼ô Àθ¢ÈÐ.
f. ÀÊÁò¾¢ý ÅÆ¢, ãÄŨÉô À¡÷ôÀÐ º¢Å, Å¢ñ½Å ¦¿È¢¸Ç¢ø ¾¨Ä¡ÂÐ. ÀÊÁ «ÕôÒ ±ýÀÐ µ÷ ¯ÕŸõ. þ¨ÈÅ¨É ±í¦¸í§¸¡, Å¢¾ Å¢¾Á¡ö ¬× ¬¸Éõ (=¬Å¡¸Éõ) ¦ºöÂÄ¡õ ±ýÈ¡Öõ ÀÊÁò¾¢ø ¬Å¡¸Éõ ¦ºöÅÐ þÅüÈ¢ý Ó¸¨ÁÂ¡É ÜÚ.
h. ÀÊÁí¸û ÀÄÅ¡öò §¾¡üÈõ «Ç¢ò¾¡Öõ «¨Å ´ý§È. ¬¾¢ ãÄÓõ ´ý§È ±ýÚ «Øò¾ó ¾¢Õò¾Á¡ö ¯½Ã¨ÅìÌõ Ţơ þó¾ ¨Å¸¡º¢ Ţơ.
i. §À¡ö ¬¸õ > §À¡Â¡¸õ = §À¡¸¢ýÈ ¯¼ø
j. ºÃ½¡Ì¾¢ (=ºÃñ + ¬Ì¾¢) ±ýÈ §¸¡ðÀ¡Î Å¢ñ½Åò¾¢ø «ÊôÀ¨¼Â¡ÉÐ. þó¾ì §¸¡ðÀ¡ðÊø Ţâó¾Ð ¾¡ý þáÁ¡ÛºÃ¢ý Å¢¾ô¦À¡Õ¨Áì §¸¡ðÀ¡Î. («øÄРŢ¾ôÒ «øÄ¢Õ¨Á – Å¢º¢‰¼ «ò¨Å¾õ; «ò¨Å¾õ ±ýÀÐ þÕ¨Á «øÄ¡¾Ð; ±É§Å «øÄ¢Õ¨Á. ÐÁ¢ò¾ø ±ýÈ ¾Á¢ú Å¢¨Éî ¦º¡ø òÅ¢ ±ýÚ Å¼¦Á¡Æ¢Â¢ø ¾¢Ã¢óÐ §¾¡üÈõ ¸¡ðÎõ.) ¯Â¢÷ ¬¾Ûõ (ƒ£Å¡òÁ¡), ¦ÀÕõ ¬¾Ûõ (ÀÃÁ¡òÁ¡) ¦Åù§ÅÚ ¬É¨Å «øÄ; «ôÀÊò §¾¡üÈõ «Ç¢òÐ ¸ñÏìÌ ±¾¢§Ã Á¡Âõ ¸¡ðθ¢ýÈÉ. þÃñÎõ ´ý§È ±ýÚ «Ú¾¢ þðÎ ¯¨ÃìÌõ ¦¿È¢ ºí¸Ãâý «ø þÕ¨Áì §¸¡ðÀ¡Î («¾¡ÅÐ þÕ¨Á «øÄ¡¾Ð; ±É§Å ´Õ¨Á). Å¢ñ½Åõ þ¾¢ø ÌÈ¢ôÀ¢¼ò ¾ì¸ Ũ¸Â¢ø Á¡Ú ÀÎõ. ±ôÀÊ ¯¼¨Ä ¯Â¢÷ ¦ºÖòи¢È§¾¡, «§¾ §À¡Ä ¯Â¢Ã¡¾ý¸¨Ç ¦ÀÕÁ¡¾§É ÅÆ¢ ¿¼òи¢ÈÐ ±ýÚ Å¢¾ô¦À¡Õ¨Á ¦º¡øÖõ. ¯¼¨Äô §À¡ý§È þÂü¨¸, ¯ÄÌ, «ñ¼í¸û ¬¸¢Â¨ÅÔõ ¸Õ¾ôÀÎõ. §À¡¸¢ýÈ ¯¼ø, §À¡¸¢ýÈ ¯Â¢÷, §À¡¸¢ýÈ þÂü¨¸ ¬¸¢Â ±øÄ¡õ þ¨ÈÅÉ¢ø ¦À¡ÕóÐŧ¾ ºÃ¢. «¾É¡ø ¾¡ý þРŢ¾ôÀ¡É ´Õ¨Á «øÄÐ ÓØ¨Á. þôÀÊô ¦À¡ÕóÐõ ¦À¡ü ºÃ½õ ¾¡ý ´ù¦Å¡Õ Àò¾¢Â¡ÇÛõ §ÅñÎÅÐ ±ýÚ Å¢ñ½Åò¾¡÷ ¦º¡øÖÅ¡÷¸û. þó¾ ¸Õò¨¾ Á¢¸×õ ŢâòÐ ±Ø¾Ä¡õ ±ýÈ¡Öõ þíÌ ÍÕí¸î ¦º¡øÄ¢ þÕ츢§Èý. Å¢¾ôÒ ´Õ¨ÁìÌõ, º¢ÅÉ¢Âì §¸¡ðÀ¡ðÊüÌõ (¨ºÅ º¢ò¾¡ó¾ò¾¢üÌõ) Á¢¸ Ñϸ¢Â §ÅÚÀ¡§¼ ¯ñÎ. «¨¾ ŢâôÀ¢ý ¦ÀÕÌõ.
k. ¸¡ö ¬Ìõ â>¸¡Â¡õâ = ¸ÕôÀ¡Ìõ â; ¸¡ö = ¸ÕôÒ

Saturday, April 02, 2005

காணவொரு காலம் வருமோ - 8

8. காயாம் பூ அரணங்கள்

ஆஎன்று ஓலம்இட்ட ஆனைக்கோன் வீடுபெற
அருளியதோ கவித் தலத்தில்;
அலர்மங்கை தனைமணந்து ஆவிஎனப் பத்தருக்கு
ஆனதுவோ கண்ண மங்கை;
காயாத மகிழமரம், கண்துஞ்சாப் புளியமரம்,
கருஊறாக் கிணறு, இன்றும்
காத்திருந்தும் தோலாத கடுவழக்கு, வழிப்போக்காய்க்
காட்டியதோ கண்ணன் கட்டில்;
பாய்ஒருவர் நீள்படுக்க, பழகுஇருவர் அருகுஇருக்க,
படபடத்து மூவர் நிற்க,
பரந்தாமன் ஊடுருவப் பட்டுஅறிந்த நெருக்கம்அதைப்
பாடுவதோ கோவ லூரில்;
காயாம்பூ அரணங்கள் கைஒற்றாம்; மீதுஒன்றைக்
காணஒரு காலம் வருமோ?
காவிரியின் ஓரத்தில் தேவியுடன் மேவிவரும்
கண்ணபுரச் சௌரி ராசா!

கவித் தலம், கண்ண மங்கை, கண்ணங் குடி, கோவலூர் என்ற நாலைச் சொல்லி ஐந்தாவது கண்ண அரணத்தை (கிருஷ்ணாரண்யம்) கண்ண புரத்தில் தேடுகிறது இந்தப்பாடல். விண்ணவச் சுடராழி . எதிராசன் எழுதிய "108 வைணவ திவ்ய தேச தல வரலாறு" என்ற பொத்தகத்தில் உள்ள விவரங்கள் இந்தப் பாவிற்குப் பின்புலம்.

கவித்தலம்: பேராயக் கட்சியின் தலைவராய் இருந்த மூப்பனாரின் ஊர். இக்கோயிலுக்கு அவர் குடும்பத்தாரே  புரவலர். தஞ்சையில் இருந்து திருவையாறு வழியாக குடந்தை செல்லும் சாலையில் உள்ளது. கவித்தல் = வளைந்து கிடத்தல்; குடமுக்கைப் (கும்ப கோணம்) போல இங்கும் ஆறு வளைந்து கிடக்கிறது. ஆனைக்கோன் = யானை வேந்தன் (கய வேந்தன்>கஜேந்திரன்) "ஆதிமூலமே" என்று கூக்குரலிட்ட கய வேந்தனுக்கும், யானையைக் கவ்விய முதலைக்கும் வீடுபேறு அளித்த தலம். "ஆற்றங்கரை கிடக்கும் கண்ணன்" என்று திரு மழிசையாரால் பாடப் பெற்றது.

கண்ணமங்கை: திருச்சேறையில் இருந்து திருவாரூர் செல்லும் பாதையில் இருக்கிறது. பூதேவியை மணந்த இடமாய்ப் பல தலங்கள் சொல்லப் பெறும்; ஆனால் பாற்கடலில் இருந்து வெளிப்பட்ட சீதேவியை மணந்த இடங்கள் எனச் சொல்லப் பெறுபவை ஒருசிலவே. அவற்றில் கண்ண மங்கையும் ஒன்று. இங்குள்ள இறைவர் பெரும்புறக் கடலன் என்றும், நின்ற கோலத்தில் பத்தருக்கு ஆவி ஆனதால் பத்தராவிப் பெருமாள் என்றும் சொல்லப் படுகிறார். "கண்ணமங்கையுள் கண்டு கொண்டேன்" என்பது திரு மங்கையாரின் வாக்கு.

கண்ணன் கட்டு = திருக் கண்ணங் குடி: நாகை - திருவாரூர் வழியில் உள்ளது. வெண்ணெய்க் கண்ணனைக் கட்டிப் போட்டதால் குடியிருந்த தலம். உலக நாதன் என்று மூலவருக்குப் பெயர்.

கண்துஞ்சாப் புளி = உறங்காப் புளி; நாகைப் புத்த விகாரையில் இருந்து தங்கம் எடுத்து, திரு அரங்கம் புறப்பட்ட திருமங்கையார் கண்ணங் குடி வந்தார். நடந்த கால்கள் நோக, சாலை ஓரத்துச் சேற்று நிலத்தில் தங்கப் பொதியை மறைத்து விட்டு, அருகே உள்ள புளிய மரத்தின் அடியில் படுத்துறங்க எண்ணி, "நான் அயர்ந்தும் நீ தூங்காது, விழித்துக் காவல் இருக்க வேண்டும்" என்று புளிய மரத்திற்கே ஆணையிட்டாராம்; உறங்காது பொற்குவையைக் காத்த புளிய மரம் இன்று இல்லை; வயலும், சிறு மேடும் உள்ளன. அருகில் உள்ள புளிய மரங்கள் சற்று வேறு பட்டுக் காட்சி அளிக்கின்றன.

தோலா வழக்கு: பொற்குவை புதைத்த நிலத்தின் சொந்தக்காரன் வர, அந்த நேரத்தில் பொற் குவையை வெளியே எடுக்க முடியாமல், வழக்குப் பண்ணி அவனை நகர்த்தலாம் என்ற எண்ணத்தில் "இது என் நிலம்; பட்டயம் திருவரங்கத்தில் உள்ளது; போய் எடுத்து வருவேன்; ஒரு நாள் தங்க இடம் கொடுங்கள்" என்று ஐம்பேராயத்தாரிடம் (பஞ்சாயத்து என்பதன் பழைய பெயர் இதுதான்.) வழக்கிட்டுக் கேட்க, அவர்களும் ஒப்புக் கொள்ள, அடுத்த நாள் திருமங்கையார் ஊரை விட்டு அகல, வழக்கு கடைசி வரை முடியாது போனது. திருமங்கையாரும் திரும்பி வரவே இல்லை. ஐம் பேராயத்தாராலும் ஒப்புக் கொண்ட வாக்கை மீற முடியவில்லை; தோலா வழக்கு = தோற்க முடியாத வழக்கு; the stalemate case. இன்றுங் கூட ”தேரா வழக்குத் திருக் கண்ணங் குடி” என்றும் ஒரு சொலவடை உண்டு. இங்குள்ள ஊர் வழக்குகள் முடியாது போவதாகச் சொல்வார்.

ஊறாக் கிணறு: ஒரு நாள் தங்க இடங் கேட்ட திருமங்கையார், தாக மேலீட்டால் தண்ணீர் கேட்க, அங்கிருந்த பெண்கள் நீர்தர மறுக்க, கோவத்தில் "ஊரில் உள்ள கிணறுகளில் நீர் ஊறாமல் போக" என்று திருமங்கையார் கடுஉரை சொல்ல, இங்கு இன்றுங் கூட எந்தக் கிணற்றிலும் நீர் ஊறுவதில்லையாம்; தவறி ஊறினாலும் உப்பு நீரே கிடைக்கிறதாம்; ஒரே ஒரு புறனடையாய், கோயில் மடப்பள்ளிக் கிணற்றில் மட்டும் சற்று நன்னீர் உள்ளது.

காயாமகிழ்: கடு உரைக்குப் பின், பசி மயக்கம்; மகிழ மரத்தின் அடியில் படுத்தவரை யாரோ தட்டி எழுப்பி, "வழிப் போக்கரா, இந்தா உன் பசிக்கு உணவு" என்று கொடுக்க, அதை உண்டு, உறங்கிப் போகிறார். திரும்ப எழும் போது, மனம் குளிர்ந்து, உலகைக் கனிவாகப் பார்த்து, உண்டி கொடுத்தோனுக்குப் பகரியாய், ஓய்வு கொள்ள வாய்ப்புக் கொடுத்த மகிழ மரம் என்றும் காயாது பசுமையாய் இருக்கும் படி இனிய உரை செய்கிறார். போகும் வழியில் பெருமாளே தலையாரியாய்ப் இடை மறிக்க, தான் வழிப் போக்கன் என்றதால், தனக்கு வழிப் போக்கனாகவே சங்கும் சக்கரமும் தெரியக் கண்ணங்குடியான் காட்சி அளித்ததை அறிந்து வியக்கிறார்.

திருக்கோவலூர்: தென்பெண்ணைக் கரையில், நடுநாட்டில் உள்ள கண்ணன் தலம்; கண்ணன் கோவில்; கண்ண பெண்ணை (= கருத்த ஆறு; இந்தப் பெயர் கிருட்டிணா ஆற்றிற்கும் உண்டு.) மூலவர் திருவிக்கிரமர் ஆனாலும், உலாத் திருமேனியை கோவலன் என்றுதான் அழைக்கிறார். இந்த ஊர் வீட்டின் இடை கழியில் தான் முதலாழ்வார் மூவர் பற்றிய நிகழ்ச்சி நடந்தது. ஒருவர் படுக்க, இருவர் இருக்க, மூவர் நிற்க, நால்வர் நெருக்க என்ற நிகழ்ச்சி விண்ணவக் கதைகளில் பெருத்த முகன்மை பெற்றது. "வையம் தகளியாய்" என்று பொய்கையாரும், "அன்பே தகளியாய்" என்று பூதத்தாரும், "திருக்கண்டேன், பொன்மேனி கண்டேன்" என்று பேயாரும் பாடிய தலம் இது. நாலாயிரப் பனுவலின் முதல்எழுச்சி, இந்த ஊரில் தான் நடந்தது.

காயாம் பூ அரணங்கள் = காயாம் பூக் காடுகள்
கை ஒற்று = கையை ஒத்தது; எனவே ஐந்து என்ற பொருள் வரும்.

In TSCII:

8. ¸¡Â¡õ ⠫ýí¸û

¬ ±ýÚ µÄõ þð¼ ¬¨Éì §¸¡ý ţΠ¦ÀÈ
«ÕǢ§¾¡ ¸Å¢ò ¾Äò¾¢ø;
«Ä÷ Áí¨¸ ¾¨É Á½óÐ ¬Å¢ ±Éô Àò¾ÕìÌ
¬ÉЧš ¸ñ½ Áí¨¸;
¸¡Â¡¾ Á¸¢Æ ÁÃõ, ¸ñ Ðﺡô ÒǢ ÁÃõ,
¸Õ °È¡ì ¸¢½Ú, þýÚõ
¸¡ò¾¢ÕóÐõ §¾¡Ä¡¾ ¸Î ÅÆìÌ, ÅÆ¢ô §À¡ì¸¡öì
¸¡ðʧ¾¡ ¸ñ½ý ¸ðÊø;
À¡ö ´ÕÅ÷ ¿£û ÀÎì¸, ÀÆÌ þÕÅ÷ «ÕÌ þÕì¸,
À¼ À¼òÐ ãÅ÷ ¿¢ü¸,
ÀÃó¾¡Áý °ÎÕÅô ÀðÎ «È¢ó¾ ¦¿Õì¸õ «¨¾ô
À¡Îŧ¾¡ §¸¡Å æÃ¢ø;
¸¡Â¡õ ⠫ýí¸û ¨¸ ´üÈ¡õ; Á£Ð ´ý¨Èì
¸¡½ ´Õ ¸¡Äõ ÅÕ§Á¡?
¸¡Å¢Ã¢Â¢ý µÃò¾¢ø §¾Å¢Ô¼ý §ÁÅ¢ÅÕõ
¸ñ½ÒÃî ¦ºªÃ¢ ạ!

¸Å¢ò ¾Äõ, ¸ñ½ Áí¨¸, ¸ñ½í ÌÊ, §¸¡Åæ÷ ±ýÈ ¿¡¨Äî ¦º¡øÄ¢ ³ó¾¡ÅÐ ¸ñ½ «Ã½ò¨¾ (¸¢Õ‰½¡ÃñÂõ) ¸ñ½ ÒÃò¾¢ø §¾Î¸¢ÈÐ þó¾ô À¡¼ø. Å¢ñ½Åî ͼáƢ . ±¾¢Ã¡ºý ±Ø¾¢Â "108 ¨Å½Å ¾¢ù §¾º ¾Ä ÅÃÄ¡Ú" ±ýÈ ¦À¡ò¾¸ò¾¢ø ¯ûÇ Å¢ÅÃí¸û þó¾ô À¡Å¢üÌô À¢ýÒÄõ.

¸Å¢ò ¾Äõ: ¾ï¨ºÂ¢ø þÕóÐ ¾¢Õ¨ÅÂ¡Ú ÅÆ¢Â¡¸ Ì¼ó¨¾ ¦ºøÖõ º¡¨Ä¢ø ¯ûÇÐ. ¸Å¢ò¾ø = ŨÇóÐ ¸¢¼ò¾ø; ̼ Ó쨸ô (ÌõÀ §¸¡½õ) §À¡Ä þíÌõ ¬Ú ŨÇóÐ ¸¢¼ì¸¢ÈÐ. ¬¨Éì §¸¡ý = ¡¨É §Åó¾ý (¸Â §Åó¾ý>¸§ƒó¾¢Ãý) "¬¾¢ ãħÁ" ±ýÚ ÜìÌÃĢ𼠸 §Åó¾ÛìÌõ, ¡¨É¨Âì ¸ùŢ Ӿ¨ÄìÌõ ţΠ§ÀÚ «Ç¢ò¾ ¾Äõ. "¬üÈí ¸¨Ã ¸¢¼ìÌõ ¸ñ½ý" ±ýÚ ¾¢Õ ÁÆ¢¨ºÂ¡Ã¡ø À¡¼ô ¦ÀüÈÐ.

¸ñ½ Áí¨¸: ¾¢Õî §º¨È¢ø þÕóÐ ¾¢ÕÅ¡å÷ ¦ºøÖõ À¡¨¾Â¢ø þÕ츢ÈÐ. ⧾ި Á½ó¾ þ¼Á¡öô ÀÄ ¾Äí¸û ¦º¡øÄô ¦ÀÚõ; ¬É¡ø À¡ü ¸¼Ä¢ø þÕóÐ ¦ÅÇ¢ôÀð¼ º£§¾Å¢¨Â Á½ó¾ þ¼í¸û ±Éî ¦º¡øÄô ¦ÀÚÀ¨Å ´Õ º¢Ä§Å. «ÅüÈ¢ø ¸ñ½ Áí¨¸Ôõ ´ýÚ. þíÌûÇ þ¨ÈÅ÷ ¦ÀÕõ ÒÈì ¸¼Äý ±ýÚõ, ¿¢ýÈ §¸¡Äò¾¢ø Àò¾ÕìÌ ¬Å¢ ¬É¾¡ø Àò¾Ã¡Å¢ô ¦ÀÕÁ¡û ±ýÚõ ¦º¡øÄô Àθ¢È¡÷. "¸ñ½ Áí¨¸Ôû ¸ñÎ ¦¸¡ñ§¼ý" ±ýÀÐ ¾¢Õ Áí¨¸Â¡Ã¢ý Å¡ìÌ.

¸ñ½ý ¸ðÎ = ¾¢Õì ¸ñ½í ÌÊ: ¿¡¨¸ - ¾¢ÕÅ¡å÷ ÅÆ¢Â¢ø ¯ûÇÐ. ¦Åñ¦½öì ¸ñ½¨Éì ¸ðÊô §À¡ð¼¾¡ø ÌÊ¢Õó¾ ¾Äõ. ¯Ä¸ ¿¡¾ý ±ýÚ ãÄÅÕìÌô ¦ÀÂ÷.

¸ñ Ðﺡô ÒÇ¢ = ¯Èí¸¡ô ÒÇ¢; ¿¡¨¸ô Òò¾ Å¢¸¡¨Ã¢ø ¾í¸õ ±ÎòÐì ¦¸¡ñÎ ¾¢Õ «Ãí¸õ ÒÈôÀð¼ ¾¢ÕÁí¨¸Â¡÷ ¸ñ½í ÌÊ Åó¾¡÷. ¿¼ó¾ ¸¡ø¸û §¿¡¸, º¡¨Ä µÃòÐî §ºüÚ ¿¢Äò¾¢ø ¾í¸ô ¦À¡¾¢¨Â Á¨ÈòРŢðÎ, «Õ§¸ ¯ûÇ ÒǢ ÁÃò¾¢ý «Ê¢ø ÀÎòÐÈí¸ ±ñ½¢, "¿¡ý «Â÷óÐõ ¿£ àí¸¡Ð, ŢƢòÐì ¸¡Åø þÕì¸ §ÅñÎõ" ±ýÚ ÒǢ ÁÃò¾¢ü§¸ ¬¨½Â¢ð¼¡Ã¡õ; ¯Èí¸¡Ð ¦À¡ü ̨ŨÂì ¸¡ò¾ ÒǢ ÁÃõ þýÚ þø¨Ä; ÅÂÖõ, º¢Ú §ÁÎõ ¯ûÇÉ. «Õ¸¢ø ¯ûÇ ÒǢ ÁÃí¸û ºüÚ §ÅÚ ÀðÎì ¸¡ðº¢ «Ç¢ì¸¢ýÈÉ.

§¾¡Ä¡ ÅÆìÌ: ¦À¡ų̈ŠҨ¾ò¾ ¿¢Äò¾¢ý ¦º¡ó¾ì¸¡Ãý ÅÃ, «ó¾ §¿Ãò¾¢ø ¦À¡ü ̨Ũ ¦ÅÇ¢§Â ±Îì¸ ÓÊ¡Áø, ÅÆìÌô Àñ½¢ «Å¨É ¿¸÷ò¾Ä¡õ ±ýÈ ±ñ½ò¾¢ø "þÐ ±ý ¿¢Äõ; Àð¼Âõ ¾¢ÕÅÃí¸ò¾¢ø ¯ûÇÐ; §À¡ö ±ÎòÐ ÅÕ§Åý; ´Õ ¿¡û ¾í¸ þ¼õ ¦¸¡Îí¸û" ±ýÚ ³õ§ÀáÂò¾¡Ã¢¼õ (ÀﺡÂòÐ ±ýÀ¾ý À¨ÆÂ ¦ÀÂ÷ þо¡ý.) ÅÆì¸¢ðÎì §¸ð¸, «Å÷¸Ùõ ´ôÒì ¦¸¡ûÇ, «Îò¾ ¿¡û ¾¢ÕÁí¨¸Â¡÷ °¨Ã Å¢ðÎ «¸Ä, ÅÆìÌ ¸¨¼º¢ Ũà ÓÊ¡Р§À¡ÉÐ. ¾¢ÕÁí¨¸Â¡Õõ ¾¢ÕõÀ¢ ÅçŠþø¨Ä. ³õ §ÀáÂò¾¡Ã¡Öõ ´ôÒì ¦¸¡ñ¼ š쨸 Á£È ÓÊÂÅ¢ø¨Ä; §¾¡Ä¡ ÅÆìÌ = §¾¡ü¸ ÓÊ¡¾ ÅÆìÌ; the stalemate case. þýÚí ܼ §¾Ã¡ ÅÆìÌò ¾¢Õì ¸ñ½í ÌÊ ±ýÚõ ´Õ ¦º¡ÄŨ¼ ¯ñÎ. þíÌûÇ °÷ ÅÆì̸û ÓÊ¡Р§À¡Å¾¡¸î ¦º¡øÖÅ¡÷¸û.

°È¡ì ¸¢½Ú: ´Õ ¿¡û ¾í¸ þ¼í §¸ð¼ ¾¢ÕÁí¨¸Â¡÷, ¾¡¸ §ÁÄ£ð¼¡ø ¾ñ½£÷ §¸ð¸, «í¸¢Õó¾ ¦Àñ¸û ¿£÷¾Ã ÁÚì¸, §¸¡Åò¾¢ø "°Ã¢ø ¯ûÇ ¸¢½Ú¸Ç¢ø ¿£÷ °È¡Áø §À¡¸" ±ýÚ ¾¢ÕÁí¨¸Â¡÷ ¸Î ¯¨Ã ¦º¡øÄ, þíÌ þýÚí ܼ ±ó¾ì ¸¢½üÈ¢Öõ ¿£÷ °Úž¢ø¨Ä¡õ; ¾ÅÈ¢ °È¢É¡Öõ ¯ôÒ ¿£§Ã ¸¢¨¼ì¸¢È¾¡õ; ´§Ã ´Õ ÒÈɨ¼Â¡ö, §¸¡Â¢ø Á¼ô ÀûÇ¢ì ¸¢½üÈ¢ø ÁðÎõ ºüÚ ¿ýÉ£÷ ¯ûÇÐ.

¸¡Â¡ Á¸¢ú: ¸Î ¯¨ÃìÌô À¢ý, Àº¢ ÁÂì¸õ; Á¸¢Æ ÁÃò¾¢ý «Ê¢ø ÀÎò¾Å¨Ã ¡§Ã¡ ¾ðÊ ±ØôÀ¢, "ÅÆ¢ô §À¡ì¸Ã¡, þó¾¡ ¯ý Àº¢ìÌ ¯½×" ±ýÚ ¦¸¡Îì¸, «¨¾ ¯ñÎ, ¯Èí¸¢ô §À¡¸¢È¡÷. ¾¢ÕõÀ ±Øõ §À¡Ð, ÁÉõ ÌÇ¢÷óÐ, ¯Ä¨¸ì ¸É¢Å¡¸ô À¡÷òÐ, ¯ñÊ ¦¸¡Îò§¾¡ÛìÌô À¸Ã¢Â¡ö, µö× ¦¸¡ûÇ Å¡öôÒì ¦¸¡Îò¾ Á¸¢Æ ÁÃõ ±ýÚõ ¸¡Â¡Ð ÀͨÁ¡ö þÕìÌõ ÀÊ þɢ ¯¨Ã ¦ºö¸¢È¡÷. §À¡Ìõ ÅÆ¢Â¢ø ¦ÀÕÁ¡§Ç ¾¨Ä¡â¡öô þ¨¼ ÁÈ¢ì¸, ¾¡ý ÅÆ¢ô §À¡ì¸ý ±ýȾ¡ø, ¾ÉìÌ ÅÆ¢ô §À¡ì¸É¡¸§Å ºíÌõ ºì¸ÃÓõ ¦¾Ã¢Âì ¸ñ½í ÌÊ¡ý ¸¡ðº¢ «Ç¢ò¾¨¾ «È¢óРŢÂ츢ȡ÷.

¾¢Õ째¡Åæ÷: ¦¾ý ¦Àñ¨½ì ¸¨Ã¢ø, ¿Î ¿¡ðÊø ¯ûÇ ¸ñ½ý ¾Äõ; ¸ñ½ý §¸¡Å¢ø; ¸ñ½ ¦Àñ¨½ (= ¸Õò¾ ¬Ú; þó¾ô ¦ÀÂ÷ ¸¢Õðʽ¡ ¬üÈ¢üÌõ ¯ñÎ.) ãÄÅ÷ ¾¢ÕŢ츢ÃÁ÷ ¬É¡Öõ, ¯Ä¡ò ¾¢Õ§ÁÉ¢¨Â §¸¡ÅÄý ±ýÚ ¾¡ý «¨Æì¸¢È¡÷¸û. þó¾ °÷ Å£ðÊý þ¨¼ ¸Æ¢Â¢ø ¾¡ý ӾġúÅ¡÷ ãÅ÷ ÀüȢ ¿¢¸ú ¿¼ó¾Ð. ´ÕÅ÷ ÀÎì¸, þÕÅ÷ þÕì¸, ãÅ÷ ¿¢ü¸, ¿¡øÅ÷ ¦¿Õì¸ ±ýÈ ¿¢¸ú Å¢ñ½Åì ¸¨¾¸Ç¢ø ¦ÀÕò¾ Ó¸ý¨Á ¦ÀüÈÐ. "¨ÅÂõ ¾¸Ç¢Â¡ö" ±ýÚ ¦À¡ö¨¸Â¡Õõ, "«ý§À ¾¸Ç¢Â¡ö" ±ýÚ â¾ò¾¡Õõ, "¾¢Õì ¸ñ§¼ý, ¦À¡ý§ÁÉ¢ ¸ñ§¼ý" ±ýÚ §À¡Õõ À¡Ê ¾Äõ þÐ. ¿¡Ä¡Â¢Ãô ÀÛÅÄ¢ý Ó¾ø ±Øîº¢, þó¾ °Ã¢ø ¾¡ý ¿¼ó¾Ð.

¸¡Â¡õ ⠫ýí¸û = ¸¡Â¡õ âì ¸¡Î¸û
¨¸ ´üÚ = ¨¸¨Â ´ò¾Ð; ±É§Å ³óÐ ±ýÈ ¦À¡Õû ÅÃõ.

காணவொரு காலம் வருமோ - 7

7. கதம் எட்டும் ஓர் இடத்தில்

ஆற்றுஓரம் பொன்னிமடி, அரங்கினிலே சாய்ந்த படி,
அறிதுயிலில் பள்ளி கொண்டும்(a),
அலங்கார கோலத்தில் எழுமலையைத் தாண்டிஒரு
ஆட்சிநிலை உள்ளிக் கொண்டும்(b),
வீற்றுஓங்கும் கேழலாய்(c) வெம்புவியை மருப்பு(d)ஏற்றும்
விளையாட்டில் முகிழ்த்திக் கொண்டும்(e),
விண்ணவர்க்கும் மண்ணவர்க்கும் நடங்காட்ட விழைந்தபடி,
வெளுந்தோய மலையைக் கொண்டும்(f),
ஆற்றுஓடும் சாலகத்தும்(g), அலகநதை நேமிக்கா(டு)(h)
அருள்இலந்தைப் புரத்தி லேயும்(i),
அம்புநிறைப் புழைக்கரத்தும்(j), தான்தோன்றி(k)த் திருமேனி
அழகுறவே வெளித்து நிற்க,
கால்தாழச் சேர்ந்தார்க்கு கதம்எட்டும்(l) ஓர்இடத்தில்(m),
காணஒரு காலம் வருமோ?
காவிரியின் ஓரத்தில் தேவியுடன் மேவிவரும்
கண்ணபுரச் சௌரி ராசா!

நாராயணாய நமக என்ற எட்டெழுத்து மந்திரத்தைச் சிறப்பிட்டுக் குறிப்பிடும் எட்டுத் திருத்தலங்களை இந்தப் பாடல் பேசுகிறது.

a. திருவரங்கம்; b. திருவேங்கடம்
c. கேழல் = வராகம் (அவதாரம்), காட்டுப் பன்றி
d. மருப்பு = கொம்பு, தந்தம்
e. திருமுகிழ்நம்>திருமுகிணம்>திருமுசிணம்>ஸ்ரீ முஷ்ணம்; முகிழ்த்தது = தோன்றியது; பூவராகர் எனப் பெயர் கொண்ட மூலவர் திருமேனி மிகச் சிறியதாய் முகிழ்த்தது இந்தத் தலச்சிறப்பு;
f. திருத் தோய் மலை = திரு நீர் மலை; தோய் = பால், நீர்; நின்ற, இருந்த, கிடந்த கோலங்கள் மட்டும் அல்லாது, நடந்த கோலத்தையும் இங்கு காட்டியதாய்ச் சொல்லுவது விண்ணவர் மரபு. தோயத்து அத்தி = தோய்த்தத்தி> தோய்த்தாத்தி> தோத்தாத்தி> தோத்தாத்ரி; அத்தி = மலை; தென்பாண்டி நாட்டில் உள்ள வான மாமலை என்னும் சீவரமங்கை தான் தோத்தாத்திரி என்பாரும் உண்டு. அங்குமே தான் தோன்றித் திருமேனி உண்டு. இதுவா, அதுவா என்ற குழப்பம் பலருக்கும் உண்டு.
g. திருச் சாலக்கம்மம் = பனி மலையில் இருந்து வழிந்தோடும் கண்டகி நதிக்கரையில் சால மரங்கள் நிறைந்த கம்மம் சாலக்கம்மம்> சாலக்கமம்>சாலக்கிராமம்>சாளக்கிராமம். யால மரமே சால மரம் என்றும் ஆச்சா மரம் என்றும் இந்தக் காலத்தில் சொல்லப் படுகிறது. சாலக் கமம் என்பது கண்டகி ஆற்றில் கிடைக்கும் ஒரு விதக் கருஞ் சாயற் கல்லையும் குறிக்கும். It is a black stone containing a fossil ammonite
h. திரு நேமிக்காடு; நேமி = சக்கரம், வளையம்; நும்முதல்>நுமுதல்>நமுதல்>நமுகுதல் = குழைதல்; வளைதல்; நமுக = வணங்குக; நாராயணய நமக என்றால் "நாராயணனை வணங்குக" என்றே பொருள்; நமுக/நமக என்ற சொல்லை நாமம் என்ற பெயர்ப் பொருளாய்ப் பலரும் தவறாகப் புரிந்து கொள்கிறார்கள். நமுதல்>நெமுதல்>நேமி; காடு = அரணம்> ஆரணம்> ஆரண்யம்; வட மொழியில் இது நைமிச ஆரண்யம் என்று ஆகும்; இது அலக ந(ந்)தை ஆற்றின் கரையில் உள்ளது.
i. திரு இலந்தைப் புரம்; இலந்தை = பத்ரி என்னும் பத்ரி நாத்; பட்டை = இலை, ஓலைப் பட்டை; பட்டம்>பத்தம்>பத்ரம்; அலக நந்தையும் தோலி கங்கையும் புணரும் இடத்தில் அலக நந்தைக் கரையில் உள்ளது திரு இலந்தைப் புரம். இதைத் திரு அதரி என்றும் சொல்லுவதுண்டு. இருந்த கோலத்தில் இறைவன் ஆசானாய் அருள் புரியும் தலம்.
j. திருப் புழைக்கரம் = புஷ்கரம்; இந்தத் தலம் எங்கு உள்ளது என்று இதுவரை நான் அறிந்தேன் இல்லை. சிலர் இராசத்தானில் ஆச்மீருக்கு அருகில் உள்ள புஷகர் என்பார். அங்கு ஒரு தெற்கத்திப் பெருமாள் கோயில் உள்ளது. பிர்லா குடும்பத்தார் செலவழிக்கிறார். அங்கு இருக்கும் பட்டரும், விண்ணவ மரபும் இதுவே அதுவென்றும் சொல்கின்றனர். இதுதான் அதுவா என்ற ஐயம் எனக்குண்டு. அறிந்தவர்கள் விளக்க வேண்டும்.
k. தானே தோன்றுதல் = இங்கே இந்தத் திருமேனிகள் சொயம்புவாக(சுயம்புவாக), சொந்தாகக் கிடைத்ததாக ஐதீகம்; தானே தோன்றியவை = ஸ்வயம் வ்யக்த ஸ்தலம் வியத்தல்>வியி>விழி; சொந்தாய் வெளித்த தலம் = தானே வெளிப்பட்ட தலம்.
l. கதம் எட்டு = எட்டுக் கதங்கள் = எட்டு ஓசைகள்; விண்ணவனைக் குறிப்பிடும் எட்டெழுத்து; ஒவ்வோர் எழுத்தும் ஒரு திரு மேனியாய் எட்டு இடத்தில் எழுந்ததாம்.
m. எட்டுத் தான்தோன்றித் திருமேனிகளையும் ஓரிடத்தில் சேவிக்க வேண்டும் எனில் கண்ணபுரம் போனால் போதும் என்பது விண்ணெறியாளரின் நம்பிக்கை.

In TSCII:

7. ¸¾õ ±ðÎõ µ÷ þ¼ò¾¢ø

¬üÚ µÃõ ¦À¡ýÉ¢ ÁÊ, «Ãí¸¢É¢§Ä º¡öó¾ ÀÊ,
«È¢ Ð¢Ģø ÀûÇ¢ ¦¸¡ñÎõ(a),
«Äí¸¡Ã §¸¡Äò¾¢ø ±Ø Á¨Ä¨Âò ¾¡ñÊ ´Õ
¬ðº¢ ¿¢¨Ä ¯ûÇ¢ì ¦¸¡ñÎõ(b),
Å£üÚ µíÌõ §¸ÆÄ¡ö(c) ¦Åõ ÒÅ¢¨Â ÁÕôÒ(d) ²üÚõ
Å¢¨Ç¡ðÊø Ó¸¢úò¾¢ì ¦¸¡ñÎõ(e),
Å¢ñ½Å÷ìÌõ Áñ½Å÷ìÌõ ¿¼í ¸¡ð¼ Å¢¨Æó¾ ÀÊ,
¦ÅÙó §¾¡Â Á¨Ä¨Âì ¦¸¡ñÎõ(f),
¬üÚ µÎõ º¡Ä¸òÐõ(g), «Ä¸ ¿¨¾ §¿Á¢ì ¸¡(Î)(h)
«Õû þÄó¨¾ô ÒÃò¾¢ §ÄÔõ(i),
«õÒ ¿¢¨Èô Ò¨Æì ¸ÃòÐõ(j), ¾¡ý §¾¡ýÈ¢(k)ò ¾¢Õ §ÁÉ¢
«ÆÌȧЦÅÇ¢òÐ ¿¢ü¸,
¸¡ø ¾¡Æî §º÷ó¾¡÷ìÌ ¸¾õ ±ðÎõ(l) µ÷ þ¼ò¾¢ø(m),
¸¡½ ´Õ ¸¡Äõ ÅÕ§Á¡?
¸¡Å¢Ã¢Â¢ý µÃò¾¢ø §¾Å¢Ô¼ý §ÁÅ¢ÅÕõ
¸ñ½ÒÃî ¦ºªÃ¢ ạ!

¿¡Ã¡Â½¡Â ¿Á¸ ±ýÈ ±ð¦¼ØòÐ Áó¾¢Ãò¨¾î º¢ÈôÀ¢ðÎì ÌÈ¢ôÀ¢Îõ ±ðÎò ¾¢Õò¾Äí¸¨Ç þó¾ô À¡¼ø §À͸¢ÈÐ.

a. ¾¢ÕÅÃí¸õ; b. ¾¢Õ§Åí¸¼õ
c. §¸Æø = Åá¸õ («Å¾¡Ãõ), ¸¡ðÎô ÀýÈ¢
d. ÁÕôÒ = ¦¸¡õÒ, ¾ó¾õ
e. ¾¢ÕÓ¸¢ú¿õ>¾¢ÕÓ¸¢½õ>¾¢ÕÓº¢½õ>‚ Ó‰½õ; Ó¸¢úò¾Ð = §¾¡ýÈ¢ÂÐ; âÅá¸÷ ±Éô ¦ÀÂ÷ ¦¸¡ñ¼ ãÄÅ÷ ¾¢Õ§ÁÉ¢ Á¢¸î º¢È¢Â¾¡ö Ó¸¢úò¾Ð þó¾ò¾Äî º¢ÈôÒ;
f. ¾¢Õò §¾¡ö Á¨Ä = ¾¢Õ ¿£÷ Á¨Ä; §¾¡ö = À¡ø, ¿£÷; ¿¢ýÈ, þÕó¾, ¸¢¼ó¾ §¸¡Äí¸û ÁðÎõ «øÄ¡Ð, ¿¼ó¾ §¸¡Äò¨¾Ôõ þíÌ ¸¡ðʾ¡öî ¦º¡øÖÅРŢñ½Å÷ ÁÃÒ. §¾¡ÂòÐ «ò¾¢ = §¾¡öò¾ò¾¢> §¾¡öò¾¡ò¾¢> §¾¡ò¾¡ò¾¢> §¾¡ò¾¡òâ; «ò¾¢ = Á¨Ä; ¦¾ýÀ¡ñÊ ¿¡ðÊø ¯ûÇ Å¡É Á¡Á¨Ä ±ýÛõ º£ÅÃÁí¨¸ ¾¡ý §¾¡ò¾¡ò¾¢Ã¢ ±ýÀ¡Õõ ¯ñÎ. «í̧Á ¾¡ý §¾¡ýÈ¢ò ¾¢Õ§ÁÉ¢ ¯ñÎ. þÐÅ¡, «ÐÅ¡ ±ýÈ ÌÆôÀõ ÀÄÕìÌõ ¯ñÎ.
g. ¾¢Õî º¡Äì ¸õÁõ = ÀÉ¢ Á¨Ä¢ø þÕóÐ ÅÆ¢ó§¾¡Îõ ¸ñ¼¸¢ ¿¾¢ì¸¨Ã¢ø º¡Ä ÁÃí¸û ¿¢¨Èó¾ ¸õÁõ º¡Äì¸õÁõ>º¡Äì¸Áõ>º¡Ä츢áÁõ>º¡Ç츢áÁõ. Â¡Ä ÁçÁ º¡Ä ÁÃõ ±ýÚõ ¬îº¡ ÁÃõ ±ýÚõ þó¾ì ¸¡Äò¾¢ø ¦º¡øÄô Àθ¢ÈÐ. º¡Äì ¸Áõ ±ýÀÐ ¸ñ¼¸¢ ¬üÈ¢ø ¸¢¨¼ìÌõ ´Õ Å¢¾ì ¸Õï º¡Âü ¸ø¨ÄÔõ ÌÈ¢ìÌõ. It is a black stone containing a fossil ammonite
h. ¾¢Õ §¿Á¢ì ¸¡Î; §¿Á¢ = ºì¸Ãõ, ŨÇÂõ; ÑõÓ¾ø>ÑÓ¾ø>¿Ó¾ø>¿Ó̾ø = ̨ƾø; ŨǾø; ¿Ó¸ = Ží̸; ¿¡Ã¡Â½Â ¿Á¸ ±ýÈ¡ø "¿¡Ã¡Â½¨É Ží̸" ±ý§È ¦À¡Õû; ¿Ó¸/¿Á¸ ±ýÈ ¦º¡ø¨Ä ¿¡Áõ ±ýÈ ¦ÀÂ÷ô ¦À¡ÕÇ¡öô ÀÄÕõ ¾ÅÈ¡¸ô ÒâóÐ ¦¸¡û¸¢È¡÷¸û. ¿Ó¾ø>¦¿Ó¾ø>§¿Á¢; ¸¡Î = «Ã½õ> ¬Ã½õ> ¬ÃñÂõ; ż ¦Á¡Æ¢Â¢ø þÐ ¨¿Á¢º ¬ÃñÂõ ±ýÚ ¬Ìõ; þÐ «Ä¸ ¿(ó)¨¾ ¬üÈ¢ý ¸¨Ã¢ø ¯ûÇÐ.
i. ¾¢Õ þÄó¨¾ô ÒÃõ; þÄó¨¾ = Àòâ ±ýÛõ Àòâ ¿¡ò; À𨼠= þ¨Ä, µ¨Äô Àð¨¼; Àð¼õ>Àò¾õ>ÀòÃõ; «Ä¸ ¿ó¨¾Ôõ §¾¡Ä¢ ¸í¨¸Ôõ Ò½Õõ þ¼ò¾¢ø «Ä¸ ¿ó¨¾ì ¸¨Ã¢ø ¯ûÇÐ ¾¢Õ þÄó¨¾ô ÒÃõ. þ¨¾ò ¾¢Õ «¾Ã¢ ±ýÚõ ¦º¡øÖÅÐñÎ. þÕó¾ §¸¡Äò¾¢ø þ¨ÈÅý ¬º¡É¡ö «Õû ÒâÔõ ¾Äõ.
j. ¾¢Õô Ò¨Æì ¸Ãõ = Ò‰¸Ãõ; þó¾ò ¾Äõ ±íÌ ¯ûÇÐ ±ýÚ þÐŨà ¿¡ý «È¢ó§¾ý þø¨Ä. ¬É¡ø Å¢ñ½Å ÁÃÒ þôÀÊ µÃ¢¼ò¨¾î ¦º¡øÖ¸¢ÈÐ. «È¢ó¾Å÷¸û Å¢Çì¸ §ÅñÎõ.
k. ¾¡§É §¾¡ýÚ¾ø = þí§¸ þó¾ò ¾¢Õ§ÁÉ¢¸û ¦º¡ÂõÒÅ¡¸(ÍÂõÒÅ¡¸), ¦º¡ó¾¡¸ì ¸¢¨¼ò¾¾¡¸ ³¾£¸õ; ¾¡§É §¾¡ýȢ¨Š= ŠÅÂõ ùÂì¾ Š¾Äõ Å¢Âò¾ø>Ţ¢>ŢƢ; ¦º¡ó¾¡ö ¦ÅÇ¢ò¾ ¾Äõ = ¾¡§É ¦ÅÇ¢ôÀð¼ ¾Äõ.
l. ¸¾õ ±ðÎ = ±ðÎì ¸¾í¸û = ±ðÎ µ¨º¸û; Å¢ñ½Å¨Éì ÌÈ¢ôÀ¢Îõ ±ð¦¼ØòÐ; ´ù§Å¡÷ ±ØòÐõ ´Õ ¾¢Õ §Áɢ¡ö ±ðÎ þ¼ò¾¢ø ±Øó¾¾¡õ.
m. ±ðÎò ¾¡ý §¾¡ýÈ¢ò ¾¢Õ §ÁÉ¢¸¨ÇÔõ µÃ¢¼ò¾¢ø §ºÅ¢ì¸ §ÅñÎõ ±É¢ø ¸ñ½ ÒÃõ §À¡É¡ø §À¡Ðõ ±ýÀРŢñ¦½È¢Â¡Çâý ¿õÀ¢ì¨¸.

Friday, April 01, 2005

காணவொரு காலம் வருமோ - 6

6. தாள் எறியால் நெற்றி வடு

மதில்ஏழு; பெருவாயில்; மால்மேகன் கீழ்வீடு(a);
மாஅரங்கம் போல் இருக்கும்;
மண்டாடும் பேரழகைத் துண்டாட, வளநாடன்(b)
மதில்ஆறு போக்கச் சொன்னான்,
சிதைகல்லைக் கொத்தாகச் சேர்த்துஎடுத்து, மறுகோயில்
செய்குவதே நோக்க மாக;
சென்னி(c) மகன் செயல்ஒறுத்து, சேவடியார் சினம் ஓங்க,
செழுங்கோயில் அரையர்(d) வந்து,
"எதிரிகளைப் பொருதுஉலைக்க, அதிர்எறியும் ஆழிக்கை
எங்கள்முனம் பொய்யா ன..தோ?"(e)
என்றுஎறிந்த தாளத்தால்(f), நெற்றிவடு பட்டுவிட,
எகிறியதே திகிரி(g)! மன்னன்
கதிஅலைத்த பேராளன், காரழகுத் திருமேனி,
காணஒரு காலம் வருமோ?
காவிரியின் ஓரத்தில் தேவியுடன் மேவிவரும்
கண்ணபுரச் சௌரி ராசா!


சோழன் ஒருவன் கோயிலின் ஆறு மதில்களை உடைத்தது பொறுக்காமல், ஒரு பத்தர், பெருமாள் மீது கோவத்துடன் தாளத்தை எறிய, பெருமாளுக்கு நெற்றி வடு ஏற்பட்டு, பின் பத்தர் வேண்டு கோளுக்கு இணங்க, தன் திகிரியை எறிந்து சோழனைத் தொலைத்த கதை இந்தப் பாடலில் பேசப்படுகிறது.

a. கீழ் வீடு = 108 விண்ணவத் திருப் பதிகளில் கண்ணபுரம் மட்டுமே கீழ் வீடு என்று அழைக்கப் படும். அது முன்னே 7 மதில்களோடு திருவரங்கம் போல இருக்குமாம். இங்குள்ள மூலவர் பெயர் நீலமேகன் = மால்மேகன்
b. வள நாடன் = சோழன்
c. சென்னி = பூம்புகார்ப் பக்கம் ஆண்ட சோழமரபினர். (உறையூர் பக்கம் ஆண்டவர் கிள்ளி மரபினர்.)
d. கோயில் அரையர் = கோயிலில் இறைப் பணி செய்யும் அன்பர்; திரு அரங்கத்தில் அரையர் சேவை பார்த்தவருக்குத் தெரிந்திருக்கலாம்.
e. "பொருவரைமுன் போர் தொலைத்த பொன்னாழி மற்றொரு கை பொய்த்ததோ" என்று கேட்டதாக இங்கு ஐதீகம்.
f. தாளம் = இறைவர் புகழ் பாடிச் சேவை செய்யும் போது அரையர் கையில் இருந்த கைத்தாளம்.
g. திகிரி = சக்கரம்; திகிரியை எறிந்து மன்னனுக்குப் பாடம் கற்பித்த கதை இங்கே சொல்லப் படுகிறது.

In TSCII:

6. ¾¡û ±È¢Â¡ø ¦¿üÈ¢ ÅÎ

Á¾¢ø ²Ø; ¦ÀÕ Å¡Â¢ø; Á¡ø §Á¸ý ¸£ú Å£Î(a);
Á¡ «Ãí¸õ §À¡ø þÕìÌõ;
Áñ¼¡Îõ §ÀÃÆ¨¸ò Ðñ¼¡¼, ÅÇ ¿¡¼ý(b)
Á¾¢ø ¬Ú §À¡ì¸î ¦º¡ýÉ¡ý,
º¢¨¾ ¸ø¨Äì ¦¸¡ò¾¡¸î §º÷òÐ ±ÎòÐ, ÁÚ §¸¡Â¢ø
¦ºöÌŧ¾ §¿¡ì¸ Á¡¸;
¦ºýÉ¢© Á¸ý ¦ºÂø ´ÚòÐ, §ºÅÊ¡÷ º¢Éõ µí¸,
¦ºØí §¸¡Â¢ø «¨ÃÂ÷(d) ÅóÐ,
"±¾¢Ã¢¸¨Çô ¦À¡ÕÐ ¯¨Äì¸, «¾¢÷ ±È¢Ôõ ¬Æ¢ì ¨¸
±í¸û ÓÉõ ¦À¡ö¡ É..§¾¡?"(e)
±ýÚ ±È¢ó¾ ¾¡Çò¾¡ø(f), ¦¿üÈ¢ ÅÎ ÀðΠŢ¼,
±¸¢È¢Â§¾ ¾¢¸¢Ã¢(g)! ÁýÉý
¸¾¢ «¨Äò¾ §ÀáÇý, ¸¡ÃÆÌò ¾¢Õ§ÁÉ¢,
¸¡½ ´Õ ¸¡Äõ ÅÕ§Á¡?
¸¡Å¢Ã¢Â¢ý µÃò¾¢ø §¾Å¢Ô¼ý §ÁÅ¢ÅÕõ
¸ñ½ÒÃî ¦ºªÃ¢ ạ!


§º¡Æý ´ÕÅý §¸¡Â¢Ä¢ý ¬Ú Á¾¢ø¸¨Ç ¯¨¼ò¾Ð ¦À¡Ú측Áø, ´Õ Àò¾÷, ¦ÀÕÁ¡û Á£Ð §¸¡Åòмý ¾¡Çò¨¾ ±È¢Â, ¦ÀÕÁ¡ÙìÌ ¦¿üÈ¢ ÅÎ ²üÀðÎ, À¢ý Àò¾÷ §ÅñÎ §¸¡ÙìÌ þ½í¸, ¾ý ¾¢¸¢Ã¢¨Â ±È¢óÐ §º¡Æ¨Éò ¦¾¡¨Äò¾ ¸¨¾ þó¾ô À¡¼Ä¢ø §ÀºôÀθ¢ÈÐ.

a. ¸£ú ţΠ= 108 Å¢ñ½Åò ¾¢Õô À¾¢¸Ç¢ø ¸ñ½ÒÃõ ÁðΧÁ ¸£ú ţΠ±ýÚ «¨Æì¸ô ÀÎõ. «Ð Óý§É 7 Á¾¢ø¸§Ç¡Î ¾¢ÕÅÃí¸õ §À¡Ä þÕìÌÁ¡õ. þíÌûÇ ãÄÅ÷ ¦ÀÂ÷ ¿£Ä§Á¸ý = Á¡ø§Á¸ý
b. ÅÇ ¿¡¼ý = §º¡Æý
c. ¦ºýÉ¢ = âõÒ¸¡÷ô Àì¸õ ¬ñ¼ §º¡ÆÁÃÀ¢É÷. (¯¨Èä÷ Àì¸õ ¬ñ¼Å÷ ¸¢ûÇ¢ ÁÃÀ¢É÷.)
d. §¸¡Â¢ø «¨ÃÂ÷ = §¸¡Â¢Ä¢ø þ¨Èô À½¢ ¦ºöÔõ «ýÀ÷; ¾¢Õ «Ãí¸ò¾¢ø «¨ÃÂ÷ §º¨Å À¡÷ò¾ÅÕìÌò ¦¾Ã¢ó¾¢Õì¸Ä¡õ.
e. "¦À¡ÕŨÃÓý §À¡÷ ¦¾¡¨Äò¾ ¦À¡ýɡƢ Áü¦È¡Õ ¨¸ ¦À¡öò¾§¾¡?" ±ýÚ §¸ð¼¾¡¸ þíÌ ³¾£¸õ.
f. ¾¡Çõ = þ¨ÈÅ÷ Ò¸ú À¡Êî §º¨Å ¦ºöÔõ §À¡Ð «¨ÃÂ÷ ¨¸Â¢ø þÕó¾ ¨¸ò¾¡Çõ.
g. ¾¢¸¢Ã¢ = ºì¸Ãõ; ¾¢¸¢Ã¢¨Â ±È¢óÐ ÁýÉÛìÌô À¡¼õ ¸üÀ¢ò¾ ¸¨¾ þí§¸ ¦º¡øÄô Àθ¢ÈÐ.

காணவொரு காலம் வருமோ - 5

5. கணப் பொருத்தக் கணியன்

மணலூராம் தலைநகரில் முத்துவடப்(a) பாண்டியனார்
மனை,மக்கள் சூழ்ந்து நிற்க,
மாலவனைத் தொழுமுன்னர் செம்பொருநை(b) ஆற்றுள்ளே
மஞ்சணநீர்(c) ஆடும் பொழுதே,
புனல்கூடும்; பெருக்குஓடும்; பொங்கிவரும்; சுழல்மூளும்,
பொசுக்கென்று கவரு மாப்போல்;
புவிஆளும் மன்னவனை, உத்தமையாம் புதலாளை(d)
புழைக்குள்ளே(e) மறைத்து வைத்து,
கணபுரத்துத் திருக்குளத்தில் வரத கைத் தலங்(f) காட்டி
கண்நிமையில் எழுக வைத்தே,
காப்பு கை(g)ச் சோழரொடு கன்னியின் கைகோர்த்துக்,
கடிமணம் புரிய வைத்த,
கணப்பொருத்தக் கணியா!(h) உன் காரழகுத் திருமேனி
காணஒரு காலம் வருமோ?
காவிரியின் ஓரத்தில் தேவியுடன் மேவிவரும்
கண்ணபுரச் சௌரி ராசா!

இந்தப் பாடலில் சோழனுக்குப் பாண்டியன் மகளைப் பெருமாளே கணியனாய் வந்து மணமுடித்த கதை பேசப் படுகிறது.

a. வடமொழியில் சித்த சரவசு = முத்து மாலை/வடம் அணிந்தவன். தண் பொருநை ஆறு கடல் சேரும் முகத்தில் கொற்கைக்குப் பக்கத்தில் இருந்த ஊர் மணலூர்; கவாட புரம் அழிந்து கடலேறிய பாண்டியன் மணலூர் வந்து தண்டு கொண்டதாகத் தொன்மம் உண்டு. பின் கொற்கைக்கும், முடிவில் வைகை மதுரைக்கும் தலை நகரை மாற்றினார்கள்.
b. செம் பொருநை = தாம்பரப் பெருநை; இன்றையத் தாம்பர வருணி.
c. மஞ்சனம் = முழுகிக் குளித்தல்; மண்ணு மங்கலம் என்றும் இலக்கியம் பயிலும். திருமஞ்சனம் என்ற சொல் பெருமாள் கோயிலிலும், அபிசேகம் என்று வடமொழிப் படுத்தப்பட்ட "முழுக்கு" சிவன் கோயிலிலும் பயிலும். முங்கனம், மங்கனம் ஆகிப் பின் மஞ்சனம் ஆயிற்று. மஞ்சனம், மஞ்சள் நீர் என்று இங்கு ஆளப்படுகிறது. முங்குதல் தன்வினை; முழுக்குதல் பிறவினை.
d. புதல் = புதல்விக்கும், புதல்வனுக்கும் உள்ள பொதுச் சொல்; இங்கே புதலாள் = புதல்வி
e. புழை = backwaters; பெருக்கும் சுழலும் உள்ள புழை இங்கே குறிப்பிடப் படுகிறது.
f. வரத கைத்தலம் = வரத ஹஸ்தம்; சிற்பக் கலையில் ஓவ்வொரு செயலுக்கும் அடையாளம் காட்டி இறைப் படிம அடவுகள் அமைக்கப் பெறும். வரத கைத்தலம் என்பது அருள் பாலிக்கும் கை அடவு [இது கண்ணபுரத்தானின் விதப்பான கை அடவு. மற்ற பெருமாள் கோயில்களில் பெரும்பாலும் காப்புக் கைத் தலமே (அபய ஹஸ்தம்) காட்சியளிக்கும்.]
g. காப்பு கை = காப்புக் கைத் தலத்தின் சுருக்கம். இறைவனைப் போலவே அரசனும் திரு ஓலக்க மண்டபத்தில் காப்புக் கைத் தலம் காட்டுவான்.
h. கணப் பொருத்தக் கணியன்; திருமணப் பொருத்தங்களில் கணப் பொருத்தமே முதலாயது. ஒரு கணியன் (=சோதியன்) இதைத் தான் முதலில் பார்க்க வேண்டும். பாண்டியன் மகளை சோழனுக்கு முடிக்கக் கணப் பொருத்தம் பார்த்த கணியன் இந்தக் கருப்புச் சௌரிராசன்.

In TSCII:

5. ¸½ô ¦À¡Õò¾ì ¸½¢Âý

Á½æÃ¡õ ¾¨Ä ¿¸Ã¢ø ÓòРżô(a) À¡ñÊÂÉ¡÷
Á¨É, Áì¸û ÝúóÐ ¿¢ü¸,
Á¡ÄŨÉò ¦¾¡Ø ÓýÉ÷ ¦ºõ ¦À¡Õ¨¿(b) ¬üÚû§Ç
Áﺽ ¿£÷© ¬Îõ ¦À¡Ø§¾,
ÒÉø ÜÎõ; ¦ÀÕìÌ µÎõ; ¦À¡í¸¢ ÅÕõ; ÍÆø ãÙõ,
¦À¡Í즸ýÚ ¸ÅÕ Á¡ô§À¡ø;
ÒÅ¢ ¬Ùõ ÁýÉŨÉ, ¯ò¾¨Á¡õ Ҿġ¨Ç(d)
Ò¨ÆìÌû§Ç(e) Á¨ÈòÐ ¨ÅòÐ,
¸½ ÒÃòÐò ¾¢Õì ÌÇò¾¢ø Åþ ¨¸ò ¾Äí(f) ¸¡ðÊ
¸ñ ¿¢¨Á¢ø ±Ø¸ ¨Åò§¾,
¸¡ôÒ ¨¸(g)î §º¡Æ¦Ã¡Î ¸ýɢ¢ý ¨¸ §¸¡÷òÐì,
¸Ê Á½õ Òâ ¨Åò¾,
¸½ô ¦À¡Õò¾ì ¸½¢Â¡!(h) ¯ý ¸¡ÃÆÌò ¾¢Õ§ÁÉ¢
¸¡½ ´Õ ¸¡Äõ ÅÕ§Á¡?
¸¡Å¢Ã¢Â¢ý µÃò¾¢ø §¾Å¢Ô¼ý §ÁÅ¢ÅÕõ
¸ñ½ÒÃî ¦ºªÃ¢ ạ!

þó¾ô À¡¼Ä¢ø §º¡ÆÛìÌô À¡ñÊÂý Á¸¨Çô ¦ÀÕÁ¡§Ç ¸½¢ÂÉ¡ö ÅóÐ Á½ÓÊò¾ ¸¨¾ §Àºô Àθ¢ÈÐ.

a. ż¦Á¡Æ¢Â¢ø º¢ò¾ ºÃÅÍ = ÓòÐ Á¡¨Ä/żõ «½¢ó¾Åý. ¾ñ ¦À¡Õ¨¿ ¬Ú ¸¼ø §ºÕõ Ó¸ò¾¢ø ¦¸¡ü¨¸ìÌô Àì¸ò¾¢ø þÕó¾ °÷ Á½æ÷; ¸Å¡¼ ÒÃõ «Æ¢óÐ ¸¼§ÄȢ À¡ñÊÂý Á½æ÷ ÅóÐ ¾ñÎ ¦¸¡ñ¼¾¡¸ò ¦¾¡ýÁõ ¯ñÎ. À¢ý ¦¸¡ü¨¸ìÌõ, ÓÊÅ¢ø ¨Å¨¸ ÁШÃìÌõ ¾¨Ä ¿¸¨Ã Á¡üȢɡ÷¸û.
b. ¦ºõ ¦À¡Õ¨¿ = ¾¡õÀÃô ¦ÀÕ¨¿; þý¨ÈÂò ¾¡õÀà ÅÕ½¢.
c. ÁïºÉõ = ÓØ¸¢ì ÌÇ¢ò¾ø; ÁñÏ Áí¸Äõ ±ýÚõ þÄ츢Âõ À¢Öõ. ¾¢ÕÁïºÉõ ±ýÈ ¦º¡ø ¦ÀÕÁ¡û §¸¡Â¢Ä¢Öõ, «À¢§º¸õ ±ýÚ Å¼¦Á¡Æ¢ô ÀÎò¾ôÀð¼ "ÓØìÌ" º¢Åý §¸¡Â¢Ä¢Öõ À¢Öõ. Óí¸Éõ, Áí¸Éõ ¬¸¢ô À¢ý ÁïºÉõ ¬Â¢üÚ. ÁïºÉõ, Áïºû ¿£÷ ±ýÚ þíÌ ¬ÇôÀθ¢ÈÐ. Óí̾ø ¾ýÅ¢¨É; ÓØì̾ø À¢ÈÅ¢¨É.
d. Ò¾ø = Ò¾øÅ¢ìÌõ, Ò¾øÅÛìÌõ ¯ûÇ ¦À¡Ðî ¦º¡ø; þí§¸ Ҿġû = Ò¾øÅ¢
e. Ò¨Æ = backwaters; ¦ÀÕìÌõ ÍÆÖõ ¯ûÇ Ò¨Æ þí§¸ ÌÈ¢ôÀ¢¼ô Àθ¢ÈÐ.
f. Åþ ¨¸ò¾Äõ = Åþ †Š¾õ; º¢üÀì ¸¨Ä¢ø µù¦Å¡Õ ¦ºÂÖìÌõ «¨¼Â¡Çõ ¸¡ðÊ þ¨Èô ÀÊÁ «¼×¸û «¨Áì¸ô ¦ÀÚõ. Åþ ¨¸ò¾Äõ ±ýÀÐ «Õû À¡Ä¢ìÌõ ¨¸ «¼× [þÐ ¸ñ½ÒÃò¾¡É¢ý Å¢¾ôÀ¡É ¨¸ «¼×. ÁüÈ ¦ÀÕÁ¡û §¸¡Â¢ø¸Ç¢ø ¦ÀÕõÀ¡Öõ ¸¡ôÒì ¨¸ò ¾Ä§Á («À †Š¾õ) ¸¡ðº¢ÂÇ¢ìÌõ.]
g. ¸¡ôÒ ¨¸ = ¸¡ôÒì ¨¸ò ¾Äò¾¢ý ÍÕì¸õ. þ¨ÈŨÉô §À¡Ä§Å «ÃºÛõ ¾¢Õ µÄì¸ Áñ¼Àò¾¢ø ¸¡ôÒì ¨¸ò ¾Äõ ¸¡ðÎÅ¡ý.
h. ¸½ô ¦À¡Õò¾ì ¸½¢Âý; ¾¢ÕÁ½ô ¦À¡Õò¾í¸Ç¢ø ¸½ô ¦À¡Õò¾§Á ӾġÂÐ. ´Õ ¸½¢Âý (=§º¡¾¢Âý) þ¨¾ò ¾¡ý ӾĢø À¡÷ì¸ §ÅñÎõ. À¡ñÊÂý Á¸¨Ç §º¡ÆÛìÌ ÓÊì¸ì ¸½ô ¦À¡Õò¾õ À¡÷ò¾ ¸½¢Âý þó¾ì ¸ÕôÒî ¦ºªÃ¢Ã¡ºý.

Thursday, March 31, 2005

காணவொரு காலம் வருமோ - 4

4. முனையதரன் பொங்கல்

நினைவுற்ற நாளாக நெடியோனைத் தொழுகாமல்
நிமைசோரா முனைய தரையன்,
நேரத்தின் நீளத்தில், விண்ணகரம் சாத்தியதால்,
மனைமீண்டு, பூசை செய்ய,
மனையாட்டி பொங்கியதை அர்த்த யா மத்திலே,
மனதாரப் படையல் இடவே,
மணிஓசை கோயில்எழும்; மணங்கமழும்; ஊர்வியக்கும்;
மறுநாளிற் சொல்லி மகிழும்;
நனைஒழுகு நெய்யோடும், நறுங்கறிச் சரக்கோடும்
நழுவுபதப் பொங்கல் மூங்கி,
முனையதரன் பெயராலே முன்அர்த்த யாமத்தில்
மொய்ம்புகழைப் பாடி வரவே,
கனிநாவற் கதுப்பான காரழகுத் திருமேனி
காணஒரு காலம் வருமோ?
காவிரியின் ஓரத்தில் தேவியுடன் மேவிவரும்
கண்ணபுரச் சௌரி ராசா!

முனையதரன் பொங்கலின் பெருமையைப் பாடுவது இந்தப் பாடல். கண்ணபுரத்தின் சிறப்புக்களில் இந்தப் பொங்கலும் ஒன்று. ஒரு ஆழ்ந்த பத்தனுக்காய், இறைவனே நெருக்கம் காட்டி ஊராரை உணர வைப்பான் என்ற செய்தி, நம்மை அவனுக்கு நெருங்கியவனாயும், அவனை நமக்கு ஆதாரமாயும் காட்டுகிறது. விண்ணவத்தில் சொல்லப் படும் சரணாகுதியின் பெருமையே இதுதான்.

In TSCII:

4. ӨɾÃý ¦À¡í¸ø

¿¢¨É×üÈ ¿¡Ç¡¸ ¦¿Ê§Â¡¨Éò ¦¾¡Ø¸¡Áø
¿¢¨Á §º¡Ã¡ Өɠ¾¨ÃÂý,
§¿Ãò¾¢ý ¿£Çò¾¢ø, Å¢ñ½¸Ãõ º¡ò¾¢Â¾¡ø,
Á¨É Á£ñÎ, ⨺ ¦ºöÂ,
Á¨É¡ðÊ ¦À¡í¸¢Â¨¾ «÷ò¾ ¡ Áò¾¢§Ä,
Áɾ¡Ãô À¨¼Âø þ¼§Å,
Á½¢ µ¨º §¸¡Â¢ø ±Øõ; Á½í ¸ÁØõ; °÷ Å¢ÂìÌõ;
ÁÚ ¿¡Ç¢ü ¦º¡øÄ¢ Á¸¢Øõ;
¿¨É ´ØÌ ¦¿ö§Â¡Îõ, ¿Úí ¸È¢î ºÃ째¡Îõ
¿Ø× À¾ô ¦À¡í¸ø ãí¸¢,
ӨɾÃý ¦ÀÂá§Ä Óý «÷ò¾ ¡Áò¾¢ø
¦Á¡öõ Ò¸¨Æô À¡Ê ÅçÅ,
¸É¢ ¿¡Åü ¸ÐôÀ¡É ¸¡ÃÆÌò ¾¢Õ§ÁÉ¢
¸¡½ ´Õ ¸¡Äõ ÅÕ§Á¡?
¸¡Å¢Ã¢Â¢ý µÃò¾¢ø §¾Å¢Ô¼ý §ÁÅ¢ÅÕõ
¸ñ½ÒÃî ¦ºªÃ¢ ạ!

ӨɾÃý ¦À¡í¸Ä¢ý ¦ÀÕ¨Á¨Âô À¡ÎÅÐ þó¾ô À¡¼ø. ¸ñ½ÒÃò¾¢ý º¢ÈôÒì¸Ç¢ø þó¾ô ¦À¡í¸Öõ ´ýÚ. ´Õ ¬úó¾ Àò¾Û측ö, þ¨ÈÅ§É ¦¿Õì¸õ ¸¡ðÊ °Ã¡¨Ã ¯½Ã ¨ÅôÀ¡ý ±ýÈ ¦ºö¾¢, ¿õ¨Á «ÅÛìÌ ¦¿Õí¸¢ÂÅÉ¡Ôõ, «Å¨É ¿ÁìÌ ¬¾¡ÃÁ¡Ôõ ¸¡ðθ¢ÈÐ. Å¢ñ½Åò¾¢ø ¦º¡øÄô ÀÎõ ºÃ½¡Ì¾¢Â¢ý ¦ÀÕ¨Á§Â þо¡ý.

காணவொரு காலம் வருமோ - 3

3. வீடணர்க்காய் நின்ற கோலம்

வினைஅதிரத் தென்இலங்கை வேள்அரசைச்(a) சாய்த்தபினர்
வெற்றியுடன் பட்டம் ஏறி,
வீடணர்க்குப் பரிசாக அறிதுயிலின் திருமேனி
விழையோடு படிமம் தந்து,
நனைபொன்னி நல்அரங்கில் நல்லதிசை(b) பார்த்தவணம்
நள்ளி,குறுஞ் சிரிப்பைக் காட்டி,
"நான்நிற்கும் கோலத்தை கண்ணபுர மாநகரில்
நல்கிடுவேன் பார்க்க, நண்ப!"
எனச்சொல்லி ஈழவர்க்கும்(c), தண்டகர்க்கும்(d) கண்வருக்கும்(e)
எழுகருடப் பறவை யார்க்கும்(f),
எம்போன்ற அடியவர்க்கும், நின்றிருந்த கோலத்தில்,
எழில்காட்டும் நீல மேகா!(g)
கணப்போதும் மறவாஉன் காரழகுத் திருமேனி
காணஒரு காலம் வருமோ?
காவிரியின் ஓரத்தில் தேவியுடன் மேவிவரும்
கண்ணபுரச் சௌரி ராசா!

இராமர் பட்டமேறிய விழாவிற்குப் பின், வீடணருக்கு தன் கிடந்த கோலப் படிமத்தைக் கொடுத்து, அது திருவரங்கத்தில் நிலை கொண்ட காட்சிக்குப் பின், நின்ற கோலத்தைக் கண்ணபுரத்தில் காண் என்று இறைவன் சொல்லியதை எடுத்துக் கூறுகிறது இந்தப் பாடல்.

a. வேள் அரசு = இராவணன்
b. நல்ல திசை = கிழக்குத் திசை
c. ஈழவர் = இங்கே இலங்கையரசன் வீடணனைக் குறிக்கிறது. ஈழம் என்ற சொல்லும் இலங்கை என்ற சொல்லும் தீவு என்ற பொதுமைப் பொருளில் உள்ள சொற்கள். ஆங்கிலத்தில் உள்ள ஐலண்ட் என்ற சொல் கூட இவற்றோடு தொடர்பு உடையது தான். அவற்றை இங்கு விரிப்பின் பெருகும். இன்னொரு முறை பார்க்கலாம். வீடணருக்கு என இராமர் கருவறையைப் பார்த்தாற் போல் கண்ணபுரத்தில் தனிக் கருவறை உண்டு.
d. தண்டகர் = ஒரு முனிவர்; கண்ணபுரத்தில் மூலவரைப் பார்ப்பதாகக் கருவறையில் இவர் உருவம் இருக்கிறது.
e. கண்வர் = இவரும் ஒரு முனிவர். இவர் உருவமும் கருவறையில் இருக்கிறது.
f. கருடப் பறவை = பெருமாளின் ஊர்தி
g. நீல மேகன் = மூலவர் பெயர்.

In TSCII:

3. Å£¼½÷측ö ¿¢ýÈ §¸¡Äõ

Å¢¨É «¾¢Ãò ¦¾ý þÄí¨¸ §Åû «Ã¨ºî(a) º¡öò¾À¢É÷
¦ÅüÈ¢Ô¼ý Àð¼õ ²È¢,
Å£¼½÷ìÌô À⺡¸ «È¢ ТĢý ¾¢Õ§ÁÉ¢
Å¢¨Æ§Â¡Î ÀÊÁõ ¾óÐ,
¿¨É ¦À¡ýÉ¢ ¿ø «Ãí¸¢ø ¿øÄ ¾¢¨º(b) À¡÷ò¾Å½õ
¿ûÇ¢, ÌÚï º¢Ã¢ô¨Àì ¸¡ðÊ,
"¿¡ý ¿¢üÌõ §¸¡Äò¨¾ ¸ñ½Òà Á¡¿¸Ã¢ø
¿ø¸¢Î§Åý À¡÷ì¸, ¿ñÀ!"
±Éî ¦º¡øÄ¢ ®ÆÅ÷ìÌõ(c), ¾ñ¼¸÷ìÌõ(d) ¸ñÅÕìÌõ(e)
±Ø ¸Õ¼ô ÀȨŠ¡÷ìÌõ(f),
±õ §À¡ýÈ «ÊÂÅ÷ìÌõ, ¿¢ýÈ¢Õó¾ §¸¡Äò¾¢ø,
±Æ¢ø ¸¡ðÎõ ¿£Ä §Á¸¡!(g)
¸½ô §À¡Ðõ ÁÈÅ¡ ¯ý ¸¡ÃÆÌò ¾¢Õ§ÁÉ¢
¸¡½ ´Õ ¸¡Äõ ÅÕ§Á¡?
¸¡Å¢Ã¢Â¢ý µÃò¾¢ø §¾Å¢Ô¼ý §ÁÅ¢ÅÕõ
¸ñ½ÒÃî ¦ºªÃ¢ ạ!

þáÁ÷ Àð¼§ÁȢ ŢơŢüÌô À¢ý, Å£¼½ÕìÌ ¾ý ¸¢¼ó¾ §¸¡Äô ÀÊÁò¨¾ì ¦¸¡ÎòÐ, «Ð ¾¢ÕÅÃí¸ò¾¢ø ¿¢¨Ä ¦¸¡ñ¼ ¸¡ðº¢ìÌô À¢ý, "¿¢ýÈ §¸¡Äò¨¾ì ¸ñ½ÒÃò¾¢ø ¸¡ñ” ±ýÚ þ¨ÈÅý ¦º¡øÄ¢Â¨¾ ±ÎòÐì ÜÚ¸¢ÈÐ þó¾ô À¡¼ø.

a. §Åû «ÃÍ = þáŽý
b. ¿øÄ ¾¢¨º = ¸¢ÆìÌò ¾¢¨º
c. ®ÆÅ÷ = þí§¸ þÄí¨¸Âúý Å£¼½¨Éì ÌȢ츢ÈÐ. ®Æõ ±ýÈ ¦º¡øÖõ þÄí¨¸ ±ýÈ ¦º¡øÖõ ¾£× ±ýÈ ¦À¡Ð¨Áô ¦À¡ÕÇ¢ø ¯ûÇ ¦º¡ü¸û. ¬í¸¢Äò¾¢ø ¯ûÇ ³Äñð ±ýÈ ¦º¡ø ܼ þÅü§È¡Î ¦¾¡¼÷Ò ¯¨¼ÂÐ ¾¡ý. «Åü¨È þíÌ Å¢Ã¢ôÀ¢ý ¦ÀÕÌõ. þý¦É¡Õ Ó¨È À¡÷ì¸Ä¡õ. Å£¼½ÕìÌ ±É þáÁ÷ ¸ÕŨȨÂô À¡÷ò¾¡ü §À¡ø ¸ñ½ÒÃò¾¢ø ¾É¢ì ¸ÕÅ¨È ¯ñÎ.
d. ¾ñ¼¸÷ = ´Õ ÓÉ¢Å÷; ¸ñ½ÒÃò¾¢ø ãÄŨÃô À¡÷ôÀ¾¡¸ì ¸ÕŨÈ¢ø þÅ÷ ¯ÕÅõ þÕ츢ÈÐ.
e. ¸ñÅ÷ = þÅÕõ ´Õ ÓÉ¢Å÷. þÅ÷ ¯ÕÅÓõ ¸ÕŨÈ¢ø þÕ츢ÈÐ.
f. ¸Õ¼ô ÀȨŠ= ¦ÀÕÁ¡Ç¢ý °÷¾¢
g. ¿£Ä §Á¸ý = ãÄÅ÷ ¦ÀÂ÷.

Wednesday, March 30, 2005

காணவொரு காலம் வருமோ - 2

2. அயிரை மேட்டில் ஓரிரவு

வரையாத அழகோடு, வடிவான உருவோடு,
வலையரின் பத்து மினியாள்;
வளையாத வில்லையும், வகிடாத வாளையும்,
பழிக்கின்ற புருவ எழிலாள்;
புரையாத திரு மகளின் தோற்றரவில் முன் ஒரு நாள்
புலம் காட்டி நின்ற போது,
புல்லியே வதுவையுறப் போனதை இன்று அளவும்
புவனத்தில் யாரும் அறிய,
நுரையோடு திரை ஓங்கும் திரு மலையின் பட்டினத்தில்
நுளையோரின் மருக னாக,
நுண் அயிரை மேட்டிலே இரவெலாம் களிப்பதை,
நோக்கு நாள் எந்த நாளோ?
கரையோடு ஊர் உலவும் காரழகுத் திருமேனி
காண ஒரு காலம் வருமோ?
காவிரியின் ஓரத்தில் தேவியுடன் மேவிவரும்
கண்ணபுரச் சௌரி ராசா!

இரண்டாவது பாடல் பத்மினி நாச்சியார் என்னும் செம்படவ நாச்சியார் பற்றிப் பேசுகிறது. கண்ணபுரத்திற்கு 20 கிலோ மீட்டர் அருகில் உள்ள திருமலை ராயன் பட்டினத்தில் மீனவத் தலைவன் மகளாக திருமகளே வந்து பிறந்ததாக ஒரு தொன்மம் உண்டு. இந்தத் தோற்றரவில் (அவதாரத்தில்), தாயாரின் பெயர் பத்மினி. கண்ணபுரத் திருவிழாவின் ஒரு நிகழ்வாய் பெருமாள் பத்மினி நாச்சியாரைக் கைப் பிடிக்கும் விழா நடக்கிறது. பெருமாளுக்குச் சரம் (கைலி) கட்டி மீனவனாக மாற்றி ஊருலவுத் திருமேனி (உற்சவ மூர்த்தி) திருமலை ராயன் பட்டினம் போய்ச் சேரும். கடற்கரை மேட்டில், திருமாலை இருத்தி, மீனவர்கள் சுற்றி வந்து, கும்மாளம் போட்டு, இரவு முழுக்க தங்கள் மாப்பிள்ளையோடு கூத்தாடிக் கோலாகலமாக இருப்பது வழக்கம். "எங்கள் மாப்பிள்ளை, எங்கள் மாப்பிள்ளை" என்று ஊரே மெய் சிலிர்த்துப் போவது சில காலம் முன்பு வரை இருந்திருக்கிறது.

பூதேவி சீதையாகவும் ஆண்டாளாகவும் பிறந்த தோற்றரவுகள் (அவதாரங்கள்) பலரும் அறிந்தது போல் சீதேவியின் தோற்றரவுகள் பலராலும் அறியப்படவில்லை. புரைதல் = ஒப்புதல், பொருந்துதல்; புரையாத திருமகள் = ஒப்பு இல்லாத, தனக்கு நேர் இல்லாத திருமகள்; கரையோடு ஊருலவும் திரு மேனி = கண்ணபுரத்தில் இருந்து காவிரிக் கரையோரம் போய் பின் கடற்கரை ஓரத்தில் ஊருலாவும் பெருமாள்.

In TSCII:

2. «Â¢¨Ã §ÁðÊø µÃ¢Ã×

Ũá¾ «Æ§¸¡Î, ÅÊÅ¡É ¯Õ§Å¡Î,
ŨÄÂâý ÀòÐ Á¢É¢Â¡û;
ŨÇ¡¾ Å¢ø¨ÄÔõ, Ÿ¢¼¡¾ Å¡¨ÇÔõ,
ÀƢ츢ýÈ ÒÕÅ ±Æ¢Ä¡û;
Ҩá¾ ¾¢Õ Á¸Ç¢ý §¾¡üÈÃÅ¢ø Óý ´Õ ¿¡û
ÒÄõ ¸¡ðÊ ¿¢ýÈ §À¡Ð,
ÒøÄ¢§Â ÅШÅÔÈô §À¡É¨¾ þýÚ «Ç×õ
ÒÅÉò¾¢ø ¡Õõ «È¢Â,
Ѩç¡Π¾¢¨Ã µíÌõ ¾¢Õ Á¨Ä¢ý ÀðÊÉò¾¢ø
Ѩǧ¡âý ÁÕ¸ É¡¸,
Ññ «Â¢¨Ã §Áð椀 þæÅÄ¡õ ¸Ç¢ôÀ¨¾,
§¿¡ìÌ ¿¡û ±ó¾ ¿¡§Ç¡?
¸¨Ã§Â¡Î °÷ ¯Ä×õ ¸¡ÃÆÌò ¾¢Õ§ÁÉ¢
¸¡½ ´Õ ¸¡Äõ ÅÕ§Á¡?
¸¡Å¢Ã¢Â¢ý µÃò¾¢ø §¾Å¢Ô¼ý §ÁÅ¢ÅÕõ
¸ñ½ÒÃî ¦ºªÃ¢ ạ!

þÃñ¼¡ÅÐ À¡¼ø ÀòÁ¢É¢ ¿¡îº¢Â¡÷ ±ýÛõ ¦ºõÀ¼Å ¿¡îº¢Â¡÷ ÀüÈ¢ô §À͸¢ÈÐ. ¸ñ½ÒÃò¾¢üÌ 20 ¸¢§Ä¡ Á£ð¼÷ «Õ¸¢ø ¯ûÇ ¾¢ÕÁ¨Ä áÂý ÀðÊÉò¾¢ø Á£ÉÅò ¾¨ÄÅý Á¸Ç¡¸ ¾¢ÕÁ¸§Ç ÅóÐ À¢È󾾡¸ ´Õ ¦¾¡ýÁõ ¯ñÎ. þó¾ò §¾¡üÈÃÅ¢ø («Å¾¡Ãò¾¢ø), ¾¡Â¡Ã¢ý ¦ÀÂ÷ ÀòÁ¢É¢. ¸ñ½ÒÃò ¾¢ÕŢơŢý ´Õ ¿¢¸úÅ¡ö ¦ÀÕÁ¡û ÀòÁ¢É¢ ¿¡îº¢Â¡¨Ãì ¨¸ô À¢ÊìÌõ Ţơ ¿¼ì¸¢ÈÐ. ¦ÀÕÁ¡ÙìÌî ºÃõ (¨¸Ä¢) ¸ðÊ Á£ÉÅÉ¡¸ Á¡üÈ¢ °ÕÄ×ò ¾¢Õ§ÁÉ¢ (¯üºÅ ã÷ò¾¢) ¾¢ÕÁ¨Ä áÂý ÀðÊÉõ §À¡öî §ºÕõ. ¸¼ü¸¨Ã §ÁðÊø, ¾¢ÕÁ¡¨Ä þÕò¾¢, Á£ÉÅ÷¸û ÍüÈ¢ ÅóÐ, ÌõÁ¡ªõ §À¡ðÎ, þÃ× ÓØì¸ ¾í¸û Á¡ôÀ¢û¨Ç§Â¡Î Üò¾¡Êì §¸¡Ä¡¸ÄÁ¡¸ þÕôÀÐ ÅÆì¸õ. "±í¸û Á¡ôÀ¢û¨Ç, ±í¸û Á¡ôÀ¢û¨Ç" ±ýÚ °§Ã ¦Áö º¢Ä¢÷òÐô §À¡ÅÐ º¢Ä ¸¡Äõ ÓýÒ Å¨Ã þÕó¾¢Õ츢ÈÐ.

⧾Ţ º£¨¾Â¡¸×õ ¬ñ¼¡Ç¡¸×õ À¢Èó¾ §¾¡üÈÃ׸û («Å¾¡Ãí¸û) ÀÄÕõ «È¢ó¾Ð §À¡ø º£§¾Å¢Â¢ý §¾¡üÈÃ׸û ÀÄáÖõ «È¢ÂôÀ¼Å¢ø¨Ä. Ҩþø = ´ôÒ¾ø, ¦À¡Õóоø; Ҩá¾ ¾¢ÕÁ¸û = ´ôÒ þøÄ¡¾, ¾ÉìÌ §¿÷ þøÄ¡¾ ¾¢ÕÁ¸û; ¸¨Ã§Â¡Î °ÕÄ×õ ¾¢Õ §ÁÉ¢ = ¸ñ½ÒÃò¾¢ø þÕóÐ ¸¡Å¢Ã¢ì ¸¨Ã§Â¡Ãõ §À¡ö À¢ý ¸¼ü¸¨Ã µÃò¾¢ø °ÕÄ¡×õ ¦ÀÕÁ¡û.

Tuesday, March 29, 2005

ஒருங்குறி - இன்னுமொரு பார்வை

வரவேற்பிற்கு நன்றி. வதந்தி எழுப்பியாவது தாங்கள் நினைப்பதை முடித்துக் கொள்ளலாம் என்று சிலர் பார்க்கிறார்கள். ஒருங்குறி பற்றி ஏகப்பட்டது மடற்குழுக்களில் பேசியாகி விட்டது.

தமிழுக்கு என்று தனியிடம் கொடுத்திருப்பது தவிர இன்றைய ஒருங்குறியில் (அதாவது பழைய ISCII -யில்; ISCII க்கும், ஒருங்குறியில் உள்ள தமிழ்க் குறியேற்றத்திற்கும் வேறுபாடு கிடையாது, கிடையாது, கிடையாது. விவரம் தெரிந்தவர்கள் இதை அறிவார்கள்.) கீற்றுக்களின் (glyphs) அடிப்படையில் எழுந்த ISCII -யின் குறையைப் போக்குவதற்குத் தான் கீற்றுக்களின் அடிப்படையில் ஆன இன்னொரு குறியேற்றமான TSCII வந்தது. TSCII அந்த வகையில் கொஞ்ச நாட்களுக்கான இடைமுகம் தான்.

நாம் இறுதியில் கீற்றுக்களை விட்டெறிந்து முழுக் கீற்றெழுத்துக்களுக்கு (full characters) போகவேண்டும் என்ற கருத்து முகமையானது தான். ஆனால், இந்தக் கருத்தை உயர்த்திப் பிடித்த ஒருங்குறிச் சேர்த்தியம் இந்திய மொழிகளுக்கு என்ன செய்தது? "படிப்பது இராமாயணம்; இடிப்பது பெருமாள் கோயில்" என்றபடி மீண்டும் கீற்றுக்களின் அடிப்படையான குறையுள்ள ISCII யை இந்திய மொழிகளுக்காகத் தான் வைத்திருந்த பொந்துகளில் இட்டு அல்லவா நிரப்பியது? அதுவா முன்னேற்றம்? அது பின்னேற்றமல்லவா?

கீற்றுக்கள் எல்லாம் தமிழில் கீற்றெழுத்துக்கள் அல்ல. அவற்றிற்கு எனத் தமிழ் இலக்கணத்தில் தனியாய் ஒரு சிறப்பும் கிடையாது. அவை பற்றித் தொல்காப்பியமும் பேசாது, நன்னூலும் பேசாது. ஏன், எந்த இலக்கண நூலும் பேசாது. அதுதான் உண்மை; ஏனென்றால், அவை அந்தந்த உயிர்களை உணர்த்திக் காட்டும் பகரிகள் (substitutes). அவையும் அவற்றோடு தொடர்புடைய உயிர்களும் ஒரே உள்ளுருமத்தைத் (information) தான் காட்டுகின்றன. இந்த அடிப்படை மொழி உண்மையைக் கூடப் புரிந்து கொள்ளாமல் ஒரே உள்ளுருமத்திற்கு இரண்டு பொந்துகள் கொடுத்து முழுக் கீற்றெழுத்துக் குறியேற்றம் செய்ய வந்துவிட்டார்கள். (You cannot give two slots for the same content.)

அடுத்து வெவ்வேறு வகை எழுத்துகளுக்கு ஒருங்குறி என்று ஏற்படுத்தினால், வரிசைப்படுத்தும் நிரலி ஒன்றாக இருக்க வேண்டும். ஓவ்வொரு பாத்திக்கும் (partition) ஓவ்வொரு நிரலி எழுதக்கூடது. ஒருங்குறி என்று சொல்லிவிட்டு, உரோமன் எழுத்திற்கு ஒரு வரிசைப்படுத்தும் நிரலி, தமிழுக்கு இன்னொன்று, கொரியனுக்கு இன்னொன்று என்றால் இது ஒருங்குறியே இல்லை. வெறும் ஒட்டுக்குறி. வெறுமே பசை போட்டு ஒட்டிச் சேர்த்திருக்கும் குறி. அல்லது ஒன்றாகப் போட்டுக் கட்டி வைத்திருக்கும் புளிமூட்டைச் சாக்கு. (You should not resort to different sorting programmes for different scripts. Every script should be sorted by the same simple programme utilizing the address number of the slots.)

நான் எடுத்தடுத்துச் சொல்லிக் கொண்டே போகலாம், நண்பரே! என்னுடைய புரிதலில், present unicode arrangement as for as Indic Languages are concerned is atrocious.

"ஆனால், நமக்கென்று தனியிடம் கொடுத்திருக்கிறார்களே? உலாவியில் கண்டுபிடிக்க முடிகிறதே? ......" இப்படிச் சொல்லிச் சொல்லியே நம்மவர்கள் மகிழ்ச்சிப் பட்டுப் போகிறார்கள். இந்த ஒரு சிறப்பு இவர்கள் கண்ணை மறைத்துவிடுகிறது. அவர்களிடம் மற்ற சிக்கல்களைப் பற்றியே பேசமுடிவதில்லை.

பன்னாட்டுச் சொவ்வறை (software) நிறுவனங்களின் பாடு கொண்டாட்டம் தான். கல்லறை வரை காசொலி கேட்டுக் கொண்டே இருக்கும். ஏனென்றால், the road to hell is paved with good intentions.

அன்புடன்,
இராம.கி.

In TSCII

ÅçÅüÀ¢üÌ ¿ýÈ¢. Å¾ó¾¢ ±ØôÀ¢Â¡ÅÐ ¾¡í¸û ¿¢¨ÉôÀ¨¾ ÓÊòÐì ¦¸¡ûÇÄ¡õ ±ýÚ º¢Ä÷ À¡÷츢ȡ÷¸û. ´ÕíÌÈ¢ ÀüÈ¢ ²¸ôÀð¼Ð Á¼üÌØì¸Ç¢ø §Àº¢Â¡¸¢ Å¢ð¼Ð.

¾Á¢ØìÌ ±ýÚ ¾É¢Â¢¼õ ¦¸¡Îò¾¢ÕôÀÐ ¾Å¢Ã þý¨È ´ÕíÌȢ¢ø («¾¡ÅÐ À¨ÆÂ ISCII -¢ø; ISCII ìÌõ, ´ÕíÌȢ¢ø ¯ûÇ ¾Á¢úì ÌÈ¢§ÂüÈò¾¢üÌõ §ÅÚÀ¡Î ¸¢¨¼Â¡Ð, ¸¢¨¼Â¡Ð, ¸¢¨¼Â¡Ð. Å¢ÅÃõ ¦¾Ã¢ó¾Å÷¸û þ¨¾ «È¢Å¡÷¸û.) ¸£üÚì¸Ç¢ý (glyphs) «ÊôÀ¨¼Â¢ø ±Øó¾ ISCII -¢ý ̨ȨÂô §À¡ìÌžüÌò ¾¡ý ¸£üÚì¸Ç¢ý «ÊôÀ¨¼Â¢ø ¬É þý¦É¡Õ ÌÈ¢§ÂüÈÁ¡É TSCII Åó¾Ð. TSCII «ó¾ Ũ¸Â¢ø ¦¸¡ïº ¿¡ð¸Ùì¸¡É þ¨¼Ó¸õ ¾¡ý.

¿¡õ þÚ¾¢Â¢ø ¸£üÚì¸¨Ç Å¢ð¦¼È¢óÐ ÓØì ¸£ü¦ÈØòÐì¸ÙìÌ (full characters) §À¡¸§ÅñÎõ ±ýÈ ¸ÕòÐ Ó¸¨Á¡ÉÐ ¾¡ý. ¬É¡ø, þó¾ì ¸Õò¨¾ ¯Â÷ò¾¢ô À¢Êò¾ ´ÕíÌÈ¢î §º÷ò¾¢Âõ þó¾¢Â ¦Á¡Æ¢¸ÙìÌ ±ýÉ ¦ºö¾Ð? "ÀÊôÀÐ þáÁ¡Â½õ; þÊôÀÐ ¦ÀÕÁ¡û §¸¡Â¢ø" ±ýÈÀÊ Á£ñÎõ ¸£üÚì¸Ç¢ý «ÊôÀ¨¼Â¡É ̨ÈÔûÇ ISCII ¨Â þó¾¢Â ¦Á¡Æ¢¸Ù측¸ò ¾¡ý ¨Åò¾¢Õó¾ ¦À¡óиǢø þðÎ «øÄÅ¡ ¿¢ÃôÀ¢ÂÐ? «ÐÅ¡ Óý§ÉüÈõ? «Ð À¢ý§ÉüÈÁøÄÅ¡?

¡, ¢, £, ¤, ¥, ¦, §, ¨, ª §À¡ýÈ ¸£üÚì¸û ±øÄ¡õ ¾Á¢Æ¢ø ¸£ü¦ÈØòÐì¸§Ç «øÄ. «ÅüÈ¢üÌ ±Éò ¾Á¢ú þÄ츽ò¾¢ø ¾É¢Â¡ö ´Õ º¢ÈôÒõ ¸¢¨¼Â¡Ð. «¨Å ÀüÈ¢ò ¦¾¡ø¸¡ôÀ¢ÂÓõ §Àº¡Ð, ¿ýëÖõ §Àº¡Ð. ²ý, ±ó¾ þÄ츽 áÖõ §Àº¡Ð. «Ð¾¡ý ¯ñ¨Á; ²¦ÉýÈ¡ø, «¨Å «ó¾ó¾ ¯Â¢÷¸¨Ç ¯½÷ò¾¢ì ¸¡ðÎõ À¸Ã¢¸û (substitutes). «¨ÅÔõ «Åü§È¡Î ¦¾¡¼÷Ò¨¼Â ¯Â¢÷¸Ùõ ´§Ã ¯ûÙÕÁò¨¾ò (information) ¾¡ý ¸¡ðθ¢ýÈÉ. þó¾ «ÊôÀ¨¼ ¦Á¡Æ¢ ¯ñ¨Á¨Âì ܼô ÒâóÐ ¦¸¡ûÇ¡Áø ´§Ã ¯ûÙÕÁò¾¢üÌ þÃñÎ ¦À¡óиû ¦¸¡ÎòÐ ÓØì ¸£ü¦ÈØòÐì ÌÈ¢§ÂüÈõ ¦ºö ÅóÐÅ¢ð¼¡÷¸û. (You cannot give two slots for the same content.)

«ÎòÐ ¦Åù§ÅÚ Å¨¸ ±ØòиÙìÌ ´ÕíÌÈ¢ ±ýÚ ²üÀÎò¾¢É¡ø, Å⨺ôÀÎòÐõ ¿¢ÃÄ¢ ´ýÈ¡¸ þÕì¸ §ÅñÎõ. µù¦Å¡Õ À¡ò¾¢ìÌõ (partition) µù¦Å¡Õ ¿¢ÃÄ¢ ±Ø¾ìܼÐ. ´ÕíÌÈ¢ ±ýÚ ¦º¡øÄ¢Å¢ðÎ, ¯§Ã¡Áý ±Øò¾¢üÌ ´Õ Å⨺ôÀÎòÐõ ¿¢ÃÄ¢, ¾Á¢ØìÌ þý¦É¡ýÚ, ¦¸¡Ã¢ÂÛìÌ þý¦É¡ýÚ ±ýÈ¡ø þÐ ´ÕíÌÈ¢§Â þø¨Ä. ¦ÅÚõ ´ðÎìÌÈ¢. ¦ÅÚ§Á À¨º §À¡ðÎ ´ðÊî §º÷ò¾¢ÕìÌõ ÌÈ¢. «øÄÐ ´ýÈ¡¸ô §À¡ðÎì ¸ðÊ ¨Åò¾¢ÕìÌõ ÒÇ¢Âãð¨¼î º¡ìÌ. (You should not resort to different sorting programmes for different scripts. Every script should be sorted by the same simple programme utilizing the address number of the slots.)

¿¡ý ±Îò¾ÎòÐî ¦º¡øÄ¢ì ¦¸¡ñ§¼ §À¡¸Ä¡õ, ¿ñÀ§Ã! ±ýÛ¨¼Â Òâ¾Ä¢ø, present unicode arrangement as for as Indic Languages are concerned is atrocious.

"¬É¡ø, ¿Á즸ýÚ ¾É¢Â¢¼õ ¦¸¡Îò¾¢Õ츢ȡ÷¸§Ç? ¯Ä¡Å¢Â¢ø ¸ñÎÀ¢Êì¸ Óʸ¢È§¾? ......" þôÀÊî ¦º¡øÄ¢î ¦º¡øÄ¢§Â ¿õÁÅ÷¸û Á¸¢úô ÀðÎô §À¡¸¢È¡÷¸û. þó¾ ´Õ º¢ÈôÒ þÅ÷¸û ¸ñ¨½ Á¨ÈòÐŢθ¢ÈÐ. «Å÷¸Ç¢¼õ ÁüÈ º¢ì¸ø¸¨Çô ÀüÈ¢§Â §ÀºÓÊž¢ø¨Ä.

ÀýÉ¡ðÎî ¦º¡ùÅ¨È (software) ¿¢ÚÅÉí¸Ç¢ý À¡Î ¦¸¡ñ¼¡ð¼õ ¾¡ý. ¸øÄ¨È Ũà ¸¡¦º¡Ä¢ §¸ðÎì ¦¸¡ñ§¼ þÕìÌõ. ²¦ÉýÈ¡ø, the road to hell is paved with good intentions.

«ýÒ¼ý,
þáÁ.¸¢.

காணவொரு காலம் வருமோ - 1

சந்த வசந்தம் மடற்குழுவில் அவ்வப்போது எழுதி வந்த பாடல்கள் "காணவொரு காலம் வருமோ" என்ற தலைப்பில் ஒரு பதிகமாய்க் கிளைத்தன. கவிமாமணி இலந்தையார் இதைத் தொகுத்து ஒரு மின் பொத்தகமாய்ப் போடலாம் என்று சொன்னார். அதற்கு முதல் முயற்சியாய் இங்கு வலைப்பதிவில் போடுகிறேன். 

உங்கள் வாசிப்புக்கு. 

 அன்புடன், 
இராம.கி. 

1. பட்டனுக்குச் சௌரி காட்டல் 

 பண்டு ஒரு நாள் மூலவர்க்குச் சாத்துகின்ற மொய்ந் தொடையில் 
            படிந்திருந்த முடியைக் காட்டி, 
     பார்த்தவர்கள் பதறி எழ, பாராளும் பேரரசன் 
            பட்டனிடம் கேட்டு நிற்க, 
செண்டோ டும் திகிரியொடும் செறி முழங்கு சங்கமொடும் 
            செழுந் தேவி நால்வ ரோடும், 
     சீராளும் விண்ணவனின் சௌரியிலே வீழ்ந்தது எனச் 
            செப்பியதை உண்மை யாக்கி, 
வண்டு மிகு வாசம் வரும் கொண்டை மலர்த் தாசியிடம் 
            மாலையினை அழகு பார்த்த, 
     வழுவாத புரிசையினில் நழுவாத பட்டனுக்காய், 
             வரி தவழச் சௌரி காட்டும், 
கண்டவரும் விண்ட ஒணாக் காரழகுத் திருமேனி 
            காண ஒரு காலம் வருமோ? 
     காவிரியின் ஓரத்தில் தேவியுடன் மேவிவரும் 
            கண்ணபுரச் சௌரி ராசா! 

 முதல் பாடலில் உள்ளது தல வரலாறு. கணிகையின் தொடர்பில் சிக்கிய சீர்தரப் (ஸ்ரீதர) பட்டர், பெருமாளுக்கு உள்ள மாலையை கணிகைக்கு அணிவித்து அழகு பார்த்துப் பின் பெருமாளுக்கு இடுகிறார். இந்த வழக்கம் நெடு நாள் தொடர்கிறது. காய்ந்து போன மாலையில் ஒன்றிரண்டு முடி இழைகள் இருப்பதைப் பல நாட்கள் பார்த்து, ஓ ஏதோ, ஒன்று அமங்கலமாக நடந்து கொண்டு இருக்கிறதோ என்று மற்றவர்கள் பதறி மன்னவனிடம் (சோழனா எனத் தெரியவில்லை?) சொல்ல, அவன் பட்டரிடம் வினவ, "பெருமாள் தன்னைக் காப்பாற்றுவார்" என்ற ஆழ்ந்த நம்பிக்கையில் ஒரு நாளும் புரிசையில் (செய்முறையில்) தவறாத பட்டர் "பெருமாளுடைய சௌரியில் இருந்து வந்தது அந்த முடியிழை" என்று அடித்துச் சொல்ல, பத்தனுக்கு உதவும் வகையில், அதை மெய்ப்பிப்பது போல், சௌரி கொண்டு பெருமாள் காட்சியளித்ததாக தல வரலாறு கூறுகிறது. 

இந்தக்  கதை ஆண்டாளையும், அபிராமிப் பட்டரையும் கலந்தாற் போல் நமக்குத் தோற்றம் அழித்தாலும், இதைத் தான் நான் அங்கு கேட்டேன். இங்குள்ள பெருமாளின் அழகு கொள்ளை கொண்டு விடும் கரிய அழகு, எனவே காரழகுத் திருமேனி. மூலவரின் பெயர் நீல மேகப் பெருமாள். எனவே அவர் காரழகர் ஆனார். தேவியர் நால்வர். சீதேவி, பூதேவி போக, அவர்களுடைய தோற்றரவுகள் (பத்மினி, ஆண்டாள் என்னும் அவதாரங்கள்) ஆக இன்னும் இருவர். ஊருலவருக்குத் (உற்சவருக்கு) திருமஞ்சனம் செய்யும் போது நாலு நாச்சியாரையும் கூட வைத்துத் தான் செய்வார்கள். 

 தனிக் கோயில் நாச்சியார் / தாயாரின் பெயர் கண்ணபுர நாயகி. 

 In TSCII: 

 ºó¾ źó¾õ Á¼üÌØÅ¢ø «ùÅô§À¡Ð ±Ø¾¢ Åó¾ À¡¼ø¸û "¸¡½¦Å¡Õ ¸¡Äõ ÅÕ§Á¡" ±ýü ¾¨ÄôÀ¢ø ´Õ À¾¢¸Á¡öì ¸¢¨Çò¾É. ¸Å¢Á¡Á½¢ þÄó¨¾Â¡÷ þ¨¾ò ¦¾¡ÌòÐ ´Õ Á¢ý ¦À¡ò¾¸Á¡öô §À¡¼Ä¡õ ±ýÚ ¦º¡ýÉ¡÷. «¾üÌ Ó¾ø ÓÂüº¢Â¡ö þíÌ Å¨ÄôÀ¾¢Å¢ø §À¡Î¸¢§Èý. ¯í¸û Å¡º¢ôÒìÌ. «ýÒ¼ý, þáÁ.¸¢. 1. Àð¼ÛìÌî ¦ºªÃ¢ ¸¡ð¼ø ÀñÎ ´Õ ¿¡û ãÄÅ÷ìÌî º¡òи¢ýÈ ¦Á¡öó ¦¾¡¨¼Â¢ø ÀÊó¾¢Õó¾ ÓʨÂì ¸¡ðÊ, À¡÷ò¾Å÷¸û À¾È¢ ±Æ, À¡Ã¡Ùõ §ÀÃúý Àð¼É¢¼õ §¸ðÎ ¿¢ü¸, ¦ºñ§¼¡Îõ ¾¢¸¢Ã¢¦Â¡Îõ ¦ºÈ¢ ÓÆíÌ ºí¸¦Á¡Îõ ¦ºØó §¾Å¢ ¿¡øÅ §Ã¡Îõ, º£Ã¡Ùõ Å¢ñ½ÅÉ¢ý ¦ºªÃ¢Â¢§Ä Å£úó¾Ð ±Éî ¦ºôÀ¢Â¨¾ ¯ñ¨Á ¡츢, ÅñÎ Á¢Ì Å¡ºõ ÅÕõ ¦¸¡ñ¨¼ ÁÄ÷ò ¾¡º¢Â¢¼õ Á¡¨Ä¢¨É «ÆÌ À¡÷ò¾, ÅØÅ¡¾ Ò⨺¢ɢø ¿ØÅ¡¾ Àð¼Û측ö, Åâ ¾ÅÆî ¦ºªÃ¢ ¸¡ðÎõ, ¸ñ¼ÅÕõ Å¢ñ¼ ´½¡ì ¸¡ÃÆÌò ¾¢Õ§ÁÉ¢ ¸¡½ ´Õ ¸¡Äõ ÅÕ§Á¡? ¸¡Å¢Ã¢Â¢ý µÃò¾¢ø §¾Å¢Ô¼ý §ÁÅ¢ÅÕõ ¸ñ½ÒÃî ¦ºªÃ¢ ạ! Ó¾ø À¡¼Ä¢ø ¯ûÇÐ ¾Ä ÅÃÄ¡Ú. ¸½¢¨¸Â¢ý ¦¾¡¼÷À¢ø º¢ì¸¢Â º£÷¾Ãô (ŠÃ£¾Ã) Àð¼÷, ¦ÀÕÁ¡ÙìÌ ¯ûÇ Á¡¨Ä¨Â ¸½¢¨¸ìÌ «½¢Å¢òÐ «ÆÌ À¡÷òÐô À¢ý ¦ÀÕÁ¡ÙìÌ þθ¢È¡÷. þó¾ ÅÆì¸õ ¦¿Î ¿¡û ¦¾¡¼÷¸¢ÈÐ. ¸¡öóÐ §À¡É Á¡¨Ä¢ø ´ýÈ¢ÃñÎ ÓÊ þ¨Æ¸û þÕôÀ¨¾ô ÀÄ ¿¡ð¸û À¡÷òÐ, “²§¾¡, ´ýÚ «Áí¸ÄÁ¡¸ ¿¼óÐ ¦¸¡ñÎ þÕ츢ÈД ±ýÚ ÁüÈÅ÷¸û À¾È¢ ÁýÉÅÉ¢¼õ (§º¡ÆÉ¡ ±Éò ¦¾Ã¢ÂÅ¢ø¨Ä?) ¦º¡øÄ, «Åý Àð¼Ã¢¼õ Å¢ÉÅ, "¦ÀÕÁ¡û ¾ý¨Éì ¸¡ôÀ¡üÚÅ¡÷" ±ýÈ ¬úó¾ ¿õÀ¢ì¨¸Â¢ø ´Õ ¿¡Ùõ Ò⨺¢ø (¦ºöӨȢø) ¾ÅÈ¡¾ Àð¼÷ "¦ÀÕÁ¡Ù¨¼Â ¦ºªÃ¢Â¢ø þÕóÐ Åó¾Ð «ó¾ ÓÊ¢¨Æ" ±ýÚ «ÊòÐî ¦º¡øÄ, Àò¾ÛìÌ ¯¾×õ Ũ¸Â¢ø, «¨¾ ¦ÁöôÀ¢ôÀÐ §À¡ø, ¦ºªÃ¢ ¦¸¡ñÎ ¦ÀÕÁ¡û ¸¡ðº¢ÂÇ¢ò¾¾¡¸ ¾Ä ÅÃÄ¡Ú ÜÚ¸¢ÈÐ. ¸¨¾ ¬ñ¼¡¨ÇÔõ, «À¢Ã¡Á¢ô Àð¼¨ÃÔõ ¸Äó¾¡ü §À¡ø ¿ÁìÌò §¾¡üÈõ «Æ¢ò¾¡Öõ, þ¨¾ò ¾¡ý ¿¡ý «íÌ §¸ð§¼ý. þíÌûÇ ¦ÀÕÁ¡Ç¢ý «ÆÌ ¦¸¡û¨Ç ¦¸¡ñΠŢÎõ ¸Ã¢Â «ÆÌ, ±É§Å ¸¡ÃÆÌò ¾¢Õ§ÁÉ¢. ãÄÅâý ¦ÀÂ÷ ¿£Ä §Á¸ô ¦ÀÕÁ¡û. ±É§Å «Å÷ ¸¡ÃƸ÷ ¬É¡÷. §¾Å¢Â÷ ¿¡øÅ÷. º£§¾Å¢, ⧾Ţ §À¡¸, «Å÷¸Ù¨¼Â §¾¡üÈÃ׸û (ÀòÁ¢É¢, ñ¼¡û ±ýÛõ «Å¾¡Ãí¸û) ¬¸ þýÛõ þÕÅ÷. °ÕÄÅÕìÌò (¯üºÅÕìÌ) ¾¢ÕÁïºÉõ ¦ºöÔõ §À¡Ð ¿¡Ö ¿¡îº¢Â¡¨ÃÔõ ܼ ¨ÅòÐò ¾¡ý ¦ºöÅ¡÷¸û. ¾É¢ì §¸¡Â¢ø ¿¡îº¢Â¡÷ / ¾¡Â¡Ã¢ý ¦ÀÂ÷ ¸ñ½Òà ¿¡Â¸¢.