Saturday, January 01, 2022

பொத்திகைப் பயன்பாடு

2019 தொடக்கத்திலிருந்து ஒருமுறை பயனுறுத்தும் பொத்திகைகளுக்கான தடை (Ban of single use plastics)  என்பது கேட்க நன்றாகயிருக்கிறது. ஆனால் எந்த முன்னேற்பாடும், மாற்றுத் திட்டங்களும் இல்லாது அவற்றை மக்களோடு 6 மாதங்களாவது உரையாடி வழிமுறைகளை இறுதிசெய்யாது, “எடுத்தேன் கவிழ்த்தேன்” என அரசாங்கம் முன்வருவது சரியா? - என்ற சிந்தனை எழுகிறது. கீழே கொடுக்கப் பட்டுள்ள, தவிர்க்கப்பட வேண்டியவைகளைக் கவனித்துப் பார்த்தால், சிலவற்றைச் செய்யமுடியும் என்பதும் சிலவற்றில் நடைமுறைச் சிக்கல் எழலாம்.என்பதும் தென்படுகிறது. கீழே கொடுத்துள்ளவைகள் பற்றிய உங்கள் கருத்தைப் பகிருங்கள்.

உணவைப் பொட்டலங் கட்டப் பயன்படும் பொத்திகை  ஈடுகளும் படலங்களும் (Plastic sheets/films used for food wrapping).- தாளால் இதைச் செய்யமுடியும்.  

உணவிற்காக மேசைவிரிப்பாய்ப் பயன்படும் பொத்திகை ஈடுகள் (Plastic sheets used as Dining Table covers). -துணியால் இதைச் செய்யலாம்

பொத்திகை உறிஞ்சிகள் (Plastic straws) - தாள் இதற்கு மாற்றாகுமா? தெரியவில்லை 

பொத்திகைக் கொடிகள் (Plastic flags) தாளும் துணியும் மாற்றாகலாம்.

நீர்ப் பொக்கைகள்/பொதிகள் (Water pouches / packets) காட்டாக ஆவின்பால் இன்று பொத்திகைப் பொதியில் தான் மக்களுக்கு விற்கப்படுகிறது. நாளைக்கு இதை எதில் தருவார்? இப் படியாற்றத்தில் (application) மிகுந்த சிக்கலை நான் எதிர்பார்க்கிறேன்.  

எல்லாவிதத் தடிமன்களிலும் ஆன  தூக்குப்பைகள் (Carry bags of all thickness) - துணி, தாள், சணல், நார், ஓலைப் பைகள்

நெய்யாத பாலிப்புரொப்பிலீன் பைகள் (Non-woven polypropyline bags) - தூணி, தாள், சணல், நார், ஓலைப் பைகள்

பொத்திகை முலாங்கொண்ட தூக்குப் பைகள் (Plastic-coated carry bags) - துணி, தாள், சணல், நார், ஓலைப் பைகள்

பொத்திகை முலாங்கொண்ட தாள் தட்டுகள்/கோப்பைகள்/குவளைகள் (Plastic-coated paper plates/cups/tumblers) தாள். இதன் நடைமுறைச் சிக்கல் இன்னும் எனக்கு விளங்கவில்லை.

தெறுமங்கொள் தட்டுகள்/கோப்பைகள் (Thermocol plates/cups) தாள். இதன் நடைமுறைச் சிக்கல் இன்னும் எனக்கு விளங்கவில்லை.

அன்புடன்,

இராம.கி.

பி.கு. நெகிழி என்பது் தவறாகப் பொத்திகைகளுக்குப்  பயன்படுத்தப் படுகிறது. அதை நான் பயன் படுத்துவதில்லை. நெகிழி = elastic and not plastic பொத்திகை என்ற சொல்லின் ஆக்கத்தைக் கீழே விளக்குகிறேன். ..


No comments: