Saturday, May 02, 2020

சகட்டுப் பாகங்கள் - 2

Windows = காலதர்கள்

Glass = கிளர்
Front Right Side Door Glass = முன் வலச்சிறகுக் கிளர்
Front Left Side Door Glass = முன் இடச்சிறகுக் கிளர்
Rear Right Side Door Glass = பின் வலச்சிறகுக் கிளர்
Rear Left Side Door Glass = பின் இடச்சிறகுக் கிளர்
Rear Right Quarter Glass = பின் வலக் கால்வட்டக் கிளர்
Rear Left Quarter Glass = பின் இடக் கால்வட்டக் கிளர்
Sunroof = கதிர்க்கூரை
Sunroof motor = கதிர்க்கூரை நகர்த்தி
Sunroof Rail = கதிர்க்கூரை இருவுள்
Sunroof Glass = கதிர்க்கூரைக் கிளர்
Window motor = காலதர் நகர்த்தி
Window regulator = காலதர் சரிப்படுத்தி
Windshield (also called windscreen) = விண்டுக்கிடுகு ( விண்டுத் திரை)
Windshield washer motor (விண்டுக்கிடுகு வழிப்பு நகர்த்தி
Window seal = காலதர் செள்ளு

Low voltage/auxiliary electrical system and electronics தாழ் அழுத்த / துணை மின்னியற் கட்டகமும், மின்னியியல் கூறுகளும்

Audio/video devices ஒலிய/விழியக் கருவிகள்
Antenna assembly = தும்புச் சேர்க்கை (இங்கே கவனம் தும்பு என்பது Antenna. தும்பி என்பது trunk. தடுமாற்றம் தெரியுமானால் பொத்தை என்பதை boot இன் இணையாய்ப் பயனுறுத்தலாம்.
Antenna cable = தும்புக் கப்புழை / தும்பு வடம்
Radio and media player = வானொலி மிடைய இயக்கி (நான் ஊடகம் என்ற சொல்லை osmotic membrane என்பதைக் குறிக்கப் பயன்படுத்துகிறேன். media = மிடையங்கள்.)
Speaker = பேசி
Tuner = தொனிவி
Subwoofer = துணைத் தாழோசை பெருக்கி A subwoofer (or sub) is a loudspeaker designed to reproduce low-pitched audio frequencies
Video player = விழிய இயக்கி

Cameras = ஒளிக்கூடுகள்
Backup camera = மாற்று ஒளிக்கூடு
Dashcam = தட்டு ஒளிக்கூடு

Low voltage electrical supply system தாழ் அழுத்த மின் அளிப்புக் கட்டகம்

Alternator = அலைமின்னாக்கி
Battery = சேமக்கலதி சேமக்கலன் தொகுதி என்பது பிணைந்து சேமக்கலதி ஆயிற்று.
Performance Battery = உருவலிப்பு சேமக்கலதி
Battery Box = சேமக்கலதிப் பெட்டி
Battery Cable terminal - சேமக்கலதி கப்புழைக்கான தீர்முனை
Battery Cable =சேமக்கலதி கப்புழை
Battery Control system = சேமக்கலதி கட்டுறல் கட்டகம்
Battery Plate = சேமக்கலதி பட்டை
Battery tray = சேமக்கலதித் தட்டம்
Battery Cap = சேமக்கலதிக் கொப்பி
Sulphuric Acid (H2SO4) = கந்தகக் காடி
Distilled Water = துளித்த நீர்
Voltage regulator = மின்னழுத்தச் சீராக்கி

Gauges and meters

Ammeter = மின்னோட்ட மானி
Clinometer = சாய்வு மானி
Dynamometer = துனைம மானி
Fuel gauge = எரிகி காட்டி
Manometer = அழுத்த மானி
Hydrometer = நீரழுத்த மானி
Odometer (also called milometer or mileometers) = ஓட்ட மானி, மைலோ மானி
Speedometer = வேக மானி
Tachometer (also called rev counters) = சுற்று மானி
Temperature gauge = வெம்மை காட்டி
Tire pressure gauge = உருளி அழுத்தங் காட்டி
Vacuum gauge = வெற்றங் காட்டி
Voltmeter = மின்னழுத்தங் காட்டி
Water temperature meter = நீர் வெம்மை மானி
Oil pressure = எண்ணெய் அழுத்தம்

அன்புடன்,
இராம.கி.

No comments: