Wednesday, April 01, 2020

exoskeleton = புறக்காழ்

ஒருமுறை நண்பர் Harinarayanan Janakiraman, exoskeleton க்கு இணையான தமிழ்ச் சொல்லை முகநூலிற் கேட்டிருந்தார். ஆங்கிலத்தில் skeleton (n.) என்பதற்கு

1570s, from Modern Latin sceleton "bones, bony framework of the body," from Greek skeleton soma "dried-up body, mummy, skeleton," from neuter of skeletos "dried-up" (also, as a noun, "dried body, mummy"), from skellein "dry up, make dry, parch," from PIE root *skele- "to parch, wither" (see sclero-). Skelton was an early variant form. The noun use of Greek skeletos passed into Late Latin (sceletus), hence French squelette and rare English skelet (1560s), Spanish esqueleto, Italian scheletro. The meaning "bare outline" is first recorded c. 1600; hence skeleton crew (1778), skeleton key, etc. Phrase skeleton in the closet "source of secret shame to a person or family" is from 1812 (the image is perhaps from the Bluebeard fable).

என்று சொற்பிறப்பியலில் விளக்கம் தருவார்.

விலங்கின் உடலை, அது இறந்தபின் சின்னாட்கள் போட்டுவைத்தால், சதை, தோல், அரத்தம் போன்றவை சிதைந்து காய்ந்து முடிவில் எலும்பு மட்டுமே மிஞ்சும். காய்த்தது>காழ்த்தது காழ் எனப் படும். (மேலேயுள்ள skele என்ற PIE சொல்லைப் பாருங்கள். காழ்த்தல் வினையையே அது குறிக்கிறது. தமிழிய இந்தையிரோப்பிய மொழிகளின் பழைய உறவைச் சொன்னால் வறட்டுத் தனமாய் தற்போது ஏற்காதவரே அதிகம். எல்லாம் வில்லியம் சோன்சின் (William jones) என்ற மேலையரின் கொள்கை படுத்தும் பாடு. அதிலிருந்து வெளிவரப் பலரும் தயங்குகிறார். இந்தையிரோப்பியம் தனி, தமிழியம் தனியென்பார். ஆனால் nostratic சிந்தனையுள்ளோர், ஆயிரக்கணக்கில் ஒப்புமைகளைப் பார்த்தபின்  அப்படி மேம்போக்காய் ஒதுக்கார். துணிந்து புதிதாய்க் காணும் ஒற்றுமைகளை விளக்க முயல்வார்.)

தமிழில் விலங்குக் காழின் நிறங்கருதி அதை எலும்பென்று சொல்கிறோம். இந்த எலும்பே ஓருடம்பிற்கு திண்மை (solidity) யையும், குலையாத் தன்மையையுங் கொடுக்கிறது. நாளா வட்டத்தில் காழ் என்னுஞ் சொல்லை நாம் மறந்து விலங்குகளுக்கு எலும்பை மட்டும் அடிச்சொல்லாய்ப் புழங்குகிறோம். ஆனால் திண்மை கருதிக் காழ் என்றுஞ் சொல்லலாம். காழின் பயன்பாடு புதலியலில் விதப்பாக உண்டு. ஓரறிவுயிரான மரங்கள், புல்களின் திண்மைக்கும் காழ் என்ற சொல்லாட்சியுண்டு.

புறக்காழ் எனவே புல் என மொழிப
அகக்காழ் எனவே மரம் என மொழிப

என்று தொல்காப்பியம் மரபியல் 86 ஆம் நூற்பாவில் வரும். கத்திரிச் செடித் தண்டின் அகக்காழே செடிக்குத் திண்மையைக் கொடுக்கிறது. தண்டின் வெளிப்புறம் மென்மையாய் இருக்கும். அதேபொழுது புற்களின் (காட்டு பனைமரம்) வெளிப்புறம் .காழ்த்தும், அகத்தில் மென்மையாயும் காட்சி யளிக்கும். தமிழில் அகக்காழ்/புறக்காழ் என்பதை அறிந்தோர் வெறுமே புதலியலில் மட்டுமே அதைப் பயன்படுத்துவர். என்னைக் கேட்டால் அதன் பொருளை நீட்டி, விலங்கியலிலும் பயில்விக்கலாம்.

அதாவது, காழ், இருவகையில் அமையும். ஒன்று உடலின் உள் இருக்கும் காழ். இதை அகக் காழ் (endo skeleton) எனலாம். இன்னொன்று உடலுக்கு வெளியில் அமையும் காழ். காட்டாக கோழி முட்டையில் வெளிப் பட இருக்கும் ஓடு புறக் காழ் [exoskeleton. An exoskeleton (from Greek έξω, éxō "outer" and σκελετός, skeletos "skeleton") is the external skeleton that supports and protects an animal's body, in contrast to the internal skeleton (endoskeleton) of, for example, a human. In usage, some of the larger kinds of exoskeletons are known as shells"] ஓடு என்பதை shell என்றும் அழைக்கிறோம்.

exoskeleton = புறக்காழ்
endoskeleton = அகக்காழ்.   

முட்டை பொரிக்குமுன், கோழிக் குஞ்சிற்கு அகக்காழ், புறக்காழ் என இரண்டும் அமைகிறது. பொரிக்கும் போது புறக்காழ் தொலைந்து அகக்காழ் மட்டுமே எஞ்சுகிறது.
 
அன்புடன்,
இராம.கி.

No comments: