அண்மையில் “Cheetah, Jaguar, Leopard, Panther ஆகியவைகளுக்கு சிறுத்தை, சிறுத்தைப்புலி, சிவிங்கிப்புலி, பெருசிறுத்தை ஆகிய சொற்கள் மாற்றி மாற்றி பயன்படுத்தப்படுகிறது என்பதை அறிகிறேன்.. ஒவ்வொன்றுக்கும் சரியான சொல் கிட்டினால் நன்றாக இருக்கும்” என்று திரு. தாமரைச் செல்வன் முகநூல் சொற்களத்தில் கேட்டிருந்தார். இவையெலாம் நமக்குப் பழக்கமான புலியோடு தொடர்புடையன. எல்லாம் இந்தியாவில் கிடையாது. ஆனால் இந்தியாவின் பல்வேறு அகற் பகுதிகளில் புலி இருந்திருக்கிறது புலி பற்றி அறிந்த மாந்தர் எங்கிருந்தார் என்பதே இப்போதையக் கேள்வி. இதில் தொடக்கமாய்ப் பொ.உ.மு. 2600- 1800 வரை இந்திய வடமேற்கிலிருந்த சிந்து நாகரிகத்தில் புலித் தடயம் நன்றாகவே தெரிகிறது.
சிந்து நாகரிகம் தமிழரோடு தொடர்புடையதெனுங் கருத்து கொஞ்சங் கொஞ்சமாய் இப்போது வலுப்பெறுகிறது. (இதையேற்கும் நான் சிந்து சமவெளியிலிருந்து தெற்குநோக்கி தமிழர் வந்தார் என அண்மையில் சிலரால் பரப்பப்படும் தேற்றை ஏற்பவனில்லை. என் கருதுகோள், ”ஆதிச்ச நல்லூரும் சிந்துவெளியும் சமகால நாகரிகங்கள்”. இக் கருதுகோள் இன்னும் நிறுவப்பட வேண்டும்.) எனவே சிந்துவெளிப் புலிப்பெயர்களைத் தமிழ்வழி காண்பதில் தவறில்லை. பொ.உ.மு. 1500 க்கு அருகில் இந்தியாவில் நுழைந்த ஆரியருக்கு புலி பற்றித் தெரியாதென்றே இதுவரை அறிந்த இலக்கிய, வரலாற்றுச் செய்திகள் சொல்கின்றன.. வடமேற்கில் வேதமொழியார் நுழைந்த போது அறிந்த விலங்குகளில் புலியும் ஒன்று. (சிங்கம் இவருக்கு முன்பே தெரியும். நடுக்கிழக்கில் கிடைத்த பல ஆதாரங்களும் சிங்கத்தை உணர்த்திப் புலியை உணர்த்தவில்லை.) சங்கதப் புலிப்பெயர்கள் எல்லாம் பெரும்பாலும் தமிழிலிருந்து சென்றன போலவே தெரிகின்றன.
புலியின் தமிழ்ப் பெயர்கள் அதன் கூர்நகத்தால், பாய்ச்சலால், புல்லும் இயல்பால், வலிமையால் உருவானவை. உல்>உள்>உழு> உழுவை என்பது ”உள்ளும் நகமுள்ள புலி”க்கு ஒருபெயர். (உள் =கூர்மை, உள்>உளி = கூர்ங்கோல். உளி>உசி>ஊசி = கூர்ங்கம்பி, உள்>உளி>உளியம் = உளிபோன்று கூரிய நகமுள்ள கரடி. தவிர உள்>உழு>உகு>உகிர்= புலிநகம்.) தவிர உகிரம் என்பது கூர்நக விலங்கைக் குறிக்கும் அடுத்து, மாந்தரைத் தாக்கையில் அவரைப் புல்லுவது போலவே பாய்வதால், புலி. புலியடி வலிப்பதால் அது வல்மா; எனவே வல்லியம். வல்மா> வெல்மா ஆகும். வல்லை வயமென்றும் குறிப்போம். எனவே வயமா இன்னொரு சொல். பாய்மா= பாயும் மா. அடுத்து வய, உகிரம் என்ற 2 சொற்களைச் சங்கதம் கடன்வாங்கி அவர் வழியில் திரிக்கும். வய + உகிரம் >வ்ய+ உகிரம்>வ்யௌகிரம்>வ்யாக்ரம். இதை மீண்டுங் கடன்வாங்கித் தமிழில் வியாக்கிரம் ஆக்குவார்.
தாக்குவதால் புலி தாக்கு மா எனப்படும். அக்கால ஓலைகளில் ”தா” வின் கால்க் குறிக்கும் ரகரத்திற்கும் வேறுபாடு காணாது, தாக்குவைத் தரக்கென்று நிகண்டுகள் பதிவுசெய்யும். வேகமாய்ப் பாய்வதால், புலி வேய்ங்கை> வேங்கை ஆனது குயத்தல்= பதிதல். (குயவும் தொழிலார் குயவர்) பதியப் பட்ட வரி கொண்டதால் புலி, குயவரி ஆனது, அந்த வரி நேரே இலாது கொடுகிய (= வளைந்து) தால் அது கொடுவரி. முடிவில் சார்த்துலம் என்ற சொல்லுக்கு வருவோம் , உள்>உளம் என்பது நகத்திற்கு இன்னொரு சொல். எதிர்விலங்கில் பதியக் கூடிய (சாரக் கூடிய) அளவிற்கு நகங் கொண்டதால், புலிக்குச் சார்த்துளம் சரியான பெயரே. (சங்கதத் தாக்கில் இது சார்த்துலம் ஆகும்.). ஆங்கில tiger (n.) க்குக் கீழ்வரும் சொற்பிறப்புக் காட்டுவர்.
Old English tigras (plural), also in part from Old French tigre "tiger" (mid-12c.), both from Latin tigris "tiger," from Greek tigris, possibly from an Iranian source akin to Old Persian tigra- "sharp, pointed," Avestan tighri- "arrow," in reference to its springing on its prey, "but no application of either word, or any derivative, to the tiger is known in Zend." [OED]. Of tiger-like persons from c. 1500. The meaning "shriek or howl at the end of a cheer" is recorded from 1845, American English, and is variously explained. Tiger's-eye "yellowish-brown quartz" is recorded from 1886.
possibly from an Iranian source என்பது அறியாமையில் சொல்வது. புலி ஈரானில் இலாதபோது அவருக்குத் தெரிந்த சிந்துசமவெளி மக்களிடமிருந்து tiger க்கு ஆன சொல்லைக் கடன்வாங்கவே வாய்ப்புண்டு. சிந்துவெளிச் சொற்களைத் தமிழ்வழி தேர்வது தவறில்லை என்றும், புலிப் பெயர்கள் அதன் கூர்நகத்தால், பாய்ச்சலால், புல்லும் இயல்பால், வலிமையால் உருவானவை என்றும் மேலே அறிந்தோம். தமிழில் துள்>தள்>தய்>தை> தைத்தல் என்பது குத்தலைக் குறிக்கும். (துல்> துல்லு> துல்கு> துகு>துகை>தை என இணைத்தல், சேர்த்தல் பொருளை உணர்த்துவது வேறு வளர்ச்சி.) முள் தைத்தது என்கிறோம் இல்லையா? கூர்த்த புலிநகமும் ஆழத் தைக்கும். எனவே தைக்கும் நகம் (=உகிர்) தய்யுகிர் ஆகும். தய்யுகிர்> tigra என்ற பலுக்கல் பழம் பெர்சியனில் எளிதில் நடக்கும். இவற்றைக் கொண்டு புலியின் வெவ்வேறு வகைகளுக்குத் தனிப்பெயர்களைப் பரிந்துரைக்கலாம்.
தை என்பது குத்தும் நகத்தையும், நகங்கொண்ட விலங்கையும் குறிக்கும். மற்ற புலிவகைகளைக் காண்கையில் சிறுத்தை சற்றே சன்னமான சிறு ”தை விலங்கை”க் குறிக்கும்.. சிறு+தை = சிறுத்தை. இதையே ஆங்கிலத்தில் cheetah என்கிறார். இதன் சொற்பிறப்பாய், cheetah (n.) "large, spotted cat of India," 1704, from Hindi chita "leopard," from Sanskrit chitraka "hunting leopard, tiger," literally "speckled," from chitra-s "distinctively marked, variegated, many-colored, bright, clear" எனச் சங்கதம் வழி கொணர்ந்து from PIE *kit-ro-, from root *skai- "to shine, gleam, be bright;" see shine (v.)) + kayah "body," from PIE *kwei- "to build, make" எனத் தவறான விளக்கம் சொல்வர். வேதமொழி வழி விளக்கம் தேடுவது போகாத ஊருக்கு வழி தேடுவதாகும்.
அடுத்தது panther (n.) இதை early 13c., from Old French pantere "panther" (12c.), from Latin panthera, from Greek panther "panther, leopard," probably of Oriental origin. Folk etymology derivation from Greek pan- "all" + thēr "beast" led to many curious fables என்று ஆங்கிலச் சொற்பிறப்பு சொல்லும். probably of Oriental origin என்றவுடன் இந்தியாவிற்குள் வரத்தான் செய்யவேண்டும். நகத்தால் பறண்டுவதைக் கேள்விப்பட்டு உள்ளோமே? பறள் என்பது பகுதி. பறள்+ந்+து = பறண்டு. இதை இக்காலத்தில் ப்ராண்டு என்று சங்கத ஓசையில் சொல்வாரும் உண்டு. பறள் என்ற வினைப் பகுதியைப் பெயராக்கிப் பறண்டும் புலியைப் பறளென்றுஞ் சொல்லலாம். panther (n.) = பறள்.
அடுத்தது leopard. சிங்கம் புலி என்று 2 வேறு பெரும்பூனை இனங்கள் பொதுவாய்ப் புணராது. அதேபொழுது பெரும் விந்தையாய் இயற்கையிலோ, செயற்கையிலோ பெண்சிங்கத்தோடு ஆண்புலி சேர்ந்து பெற்ற இனமாய் leopard ஐச் சொல்வர் leopard (n.) late 13c. (early 13c. as a surname), "large cat of the wooded country of Africa and South Asia," from Old French lebard, leupart "leopard," heraldic or real (12c., Modern French léopard), from Late Latin leopardus, literally "lion-pard, lion-panther" (the animal was thought in ancient times to be a hybrid of these two species), from Greek leopardos, from leon "lion" (see lion) + pardos "male panther," which generally is said to be connected to Sanskrit prdakuh "panther, tiger." இதிலும் தேவையற்று சங்கதப் prdakuh வைக் கொணர்வர். மாறாக ஆண்புலியை உணர்த்த, பறள்/ பற(ண்)டு என்பதே போதும். சிங்கத்தின் இன்னொரு பெயர் யாளி என தனி இடுகையில் சொன்னேன். (https://valavu.blogspot.com/2018/08/blog-post_20.html) இரண்டையும் சேர்த்தால் யாளிப்பறள் அல்லது யாளிப்பறடு leopard க்கான பெயராகும்.
jaguar (n.) என்பது அமெரிக்காவில் பரவிக் கிடந்த ஒரு வகைப் புலி. big spotted cat of the Americas (Felis onca), c. 1600, from Portuguese jaguar, from Tupi jaguara, said in old sources to denote any large beast of prey ["tygers and dogs," in Cullen's translation of Abbe Clavigero's "History of Mexico"]. ஆக இது தய்யுகிரின் வேறு வடிவம். நாம் உகிரம் என்றே சொல்லிப் போகலாம்.
அன்புடன்,
இராம.கி.

No comments:
Post a Comment