Saturday, August 02, 2014

ஒருங்குறியேற்றத்தின் போதாமை - பரத்தீடு

2010 ஆண்டு பிப்ரவரி 23-26 தேதிகளில் சென்னைப் பல்கலைக்கழகத்தில் கணினித்தமிழ்- பன்னாட்டுக் கருத்தரங்கம் ஒன்று நடைபெற்றது. அதில் ஒரு விருந்தினனாக நான் அழைக்கப்படிருந்தேன். அப்பொழுது வெளியிட்ட இப்பரத்தீடு ”ஒருங்குறியின் போதாமை” பற்றிய கிடுகுப்பார்வையை வைத்தது. அப் பரத்தீட்டை இப்பொழுது மீண்டும் உங்கள் பார்வைக்கு வைக்கிறேன்.

இற்றை நிலைமை கிட்டத்தட்ட அப்படியே இருக்கிறது. இன்னும் தமிழ் அனைத்தெழுத்துக் குறியீடு சவலைப் பிள்ளையாய் நிற்கிறது. ஒருங்குறிச் சேர்த்தியம் கண்டுகொள்ளவில்லை. தமிழக அரசும் ஆணை பிறப்பித்ததோடு சரி. உத்தமத்தின் எட்டாம் பணிக்குழு தன் அறிக்கையைச் சமர்ப்பித்ததோடு சரி. (உத்தமம் அதை பொதுப் பார்வையில் வைக்கக் கூட இல்லை.)

எங்கள் ஊர்ப்பக்கம் ஒரு சொலவடையுண்டு. “பார்ப்பாத்தியம்மா, மாடு வந்தது கட்டினாக் கட்டிக்கோ, கட்டாட்டிற் போ.” இங்கு தமிழர்கள் அந்தப் பார்ப்பாத்தியம்மா நிலையிற்றான் இருக்கிறார்கள். தறியிற் கட்டப்படாத மாடு அலைந்துகொண்டிருக்கிறது. சீர்கெட்டுப் போனால் யார் கவலைப் படப் போகிறார்கள்?ஒருங்குறிச் சேர்த்தியம் சிரித்துக்கொண்டேயிருக்கும்.  தமிழர்களுக்கே தமிழைப் பற்றிக் கவலையில்லை. அப்புறம் சேர்த்தியம் கவலைப்பட்டு யாருக்கு என்ன ஆதாயம்? .




அன்புடன்,
இராம.கி,

1 comment: