Friday, May 20, 2005

masked facists and hard liberals - 2

இந்த வரிசையில் இது இரண்டாவது பகுதி

--------------------------------------------------------------------
அன்புள்ள பாலா,

"masked facsists and hard liberals" பற்றித் தமிழாக்கம் கேட்டிருந்தீர்கள். fascists பற்றி இந்த இழையில் முன் எழுதினேன். உங்களிடம் இருந்து மறுவினையோ, பின்னூட்டோ இல்லை; வேலை அதிகமோ? கேள்விகள் எழுப்புவதோடு நிறுத்திக் கொண்டுவிட்டீர்கள். இருந்தாலும், சொன்னதைச் செய்து விடவேண்டும் என்று எண்ணித் தொடர்கிறேன். இந்த இழையில், அடுத்த சொல்லாக, "liberals" பற்றி வருகிறேன்.

liberal, liberty போன்றவை ஒன்றுக்கொன்று தொடர்புடைய சொற்கள். நான் பெரிதும் எடுத்துக் காட்டும் "Dictionary of word origins" - இல்

"Latin word for 'free' was liber. It came from the same prehistoric source as Greek eleutheros 'free', which may have denoted 'people, nation' (in which case the underlying etymological meaning of the word would be 'being a member of the (free) people' as opposed to 'being a slave'). From liber was derived liberalis 'of freedom', which passed into English via Old French liberal. Its earliest English meanings were 'generous' and ' appropriate to the cultural pursuits of a 'free' man' (as in 'the liberal arts'). The connotations of 'tolerance' and 'lack of prejudice' did not emerge until th 18th century, and the word's use as a designation of a particulara political party in Britain dates from the early 19th century.

Also fom Latin liber came English libertine and liberty"

என்று குறித்திருக்கிறார். இச்சொல்லுக்குத் தமிழாக்கம் காணுவதற்கு முன், நாம் தமிழ்ச் சொற்கடலுக்குள் கொஞ்சம் ஆழம் புக வேண்டும். அடியாழம் போய் அங்கிருந்து மேல்வர வேண்டும். நாம் தொடங்கும் அடியாழம் தமிழில் உள்ள பல சொற்களுக்கு வித்தாக இருந்த அடிவேரான ஊகாரச் சுட்டு

இவ் ஊகாரச்சுட்டு முதலில் முன்மைநிலையையும், தோற்றப் பொருளையும், வெளிவிடுதலையும், பிறகு உயர்ச்சிப்பொருளையும் காட்டப் பயன்படுகிறது. இங்கே முன்னிலை, தோற்றப் பொருள்களைத் தவிர்த்து, வெளிவிடுதலையும், உயர்ச்சிப் பொருளை மட்டும் காட்ட விழைகிறேன்.

கீழேவரும் சொற்களில், நுணுகிய வகையில் ஒரு கருத்திலிருந்து இன்னொரு கருத்து கிளர்ந்து தொடர்ச்சியாகப் பொருள் நீட்சியாவதைப் பார்க்கலாம். இந்த இயல்பு மலர்ச்சியே, மொழியின் வளர்ச்சி. இதைப் புரிந்துகொண்டால், தமிழ் என்பது ஓர் இயற்கை மொழி; நாட்பட்ட மொழி என்பது புரிந்துவிடும். (வழக்கம் போல, மொழி ஞாயிறு பாவாணருக்கு நம் கடம்படுகிறோம்.)

ஊ>உ>உய்>உய்த்தல் = முன்தள்ளல், செலுத்துதல்
உய்>உயிர்; உயிர்த்தல் = மூச்சுவிடுதல்; மூச்சே உயிர்ப்பு எனப் பட்டது
ஊ>ஊது = காற்றிச் சேர்த்து வெளியிடு
ஊது>உது>உதை = காலால் முன் செலுத்து
உது>உந்து = முன் தள்ளூ

உய்>உய்தல் = முன் செல்லுதல், செல்லுதல்
உய்>உய்ம்பு>உயும்பு> உயம்பு = முன்செலுத்து; மேல் செலுத்து
உயம்பு>அம்பு = முன் செலுத்திய கூரான கம்பு
உய்>ஒய்; ஒய்தல் = செலுத்துதல்
உய்>எய்; எய்தல் = அம்பைச் செலுத்துதல்.

(வில்லில் இருந்து புறப்பட்ட அம்பு பரவளைவாய் (parabola) உயரப் போய் பின் தாழவந்து தாக்குவதை ஓர்ந்து பார்த்தால் விளங்கும். இந்த பரவளைவான போக்கே உயரச் செலுத்துதலையும், முன் செலுத்துதலையும் அடுத்தடுத்த பொருள் நீட்சியாகக் கொள்ள வகை செய்கிறது. பறவை, அம்பு போன்றவை இபடிப் பரவளைவாகப் போவதைக் கண்ணுற்ற ஆதி மனிதனுக்கு உயரச் செல்லுதலும், முன்னே செல்லுதலும் ஒன்று மற்றொன்றின் வளர்ச்சியாகவே தென்படும். அம்பு மட்டும் அன்றி, இற்றைக்கால ஏவுகணைகளும் இப்படியே பரவளைவாக எய்யப் படுகின்றன.)

உய்>உயங்கு> ஊங்கு = உயர்வு, மிகுதி
உய்>உயர்>உயரம்
உயர்>ஊர்; ஊர்தல் = ஏறுதல், ஏறிச் செல்லல்
ஊர்>ஊர்தி
ஊர்>ஊர்த்தம்> ஊர்த்வம் (வட மொழி); முயலகன் மேலேறித் தாண்டவம் ஆடியதால் அது ஊர்த்துவ தாண்டவம் (அத்தாண்டவத்தில் தன்னை மறந்தே, "இனித்தம் உடைய எடுத்த பொற்பாதமும் காணப் பெற்றால் மனித்தப் பிறவியும் வேண்டுவதோ இம்மாநிலத்தே!" என்ற வரிகள் கிளர்ந்தன.)

உய்>ஒய்>ஒய்யல் = உயர்ச்சி
ஒய்யல் >ஒய்யாரம் = உயர் நிலை ("ஒய்யாரக் கொண்டையாம் தாழம் பூவாம், உள்ளே இருக்குமாம் ஈரும் பேனும்" என்ற சொலவடையை எண்ணிப் பர்க்கலாம்.)
ஒய்>ஒயில் = ஒய்யாரம், உயரக் குதித்தாடும் கும்மி; ஒயிலாட்டம் = குதித்து ஆடும் ஆட்டம் (மயிலாட்டம் ஒரு மாதிரி, ஒயிலாட்டம் இன்னொரு மாதிரி.)
ஓய்>ஓய்ங்கு>ஓங்கு = உயரம் (ஓங்கி உலகளந்த உத்தமன் பேர்பாடி.......)
ஓங்கு>ஓக்கு>ஓக்கம் =உயரம், பெருமை
ஓய்>ஓய்ச்சு>ஓச்சு= உயர்த்து (கடிதோச்சி மெல்ல எறிக, குறள் 572)
ஓய்>ஓப்பு; ஓப்புதல் உயர்த்துதல்
ஓப்பு>ஓம்பு; ஓம்புதல் = உடல் உயருமாறு வளர்த்தல்; பேணுதல், காத்தல்
உய்>உய்கு>உக்கு>உக்கம் = தலை, கட்டித் தூக்கும் கயிறு

எய்>ஏ>ஏவு; ஏவுதல் = செலுத்துதல், தூண்டுதல்;
ஏவு>ஏவல்>ஏவலன்
ஏவு=அம்பு; ஏவு கணை
எய்>எயின்>எயினன் = அம்பு எய்யும் வேடர் குடி; குறிஞ்சி நில மக்கள்
எய்>எயில் = மறவர் இருந்து எய்யும் மதில்
உ>உன்; உன்னுதல் = உயர எழுதல்
உன்னு>உன்னதம் = உயர்ந்தது (உன்னதம் வடமொழி என்று பலரும் எண்ணிக் கொண்டிருக்கிறோம்.)
உன்னு>உன்னிப்பு = உயரம்

உயும்பு>உயும்புதல் = மேல் எழும்ப வைத்தல்
உயும்பு = jump (yu என்ற மாற்றொலியோடு பலுக்கிப்பார்க்கின்,  விளங்கும்)
உயும்பு>உசும்பு; உசும்புதல் = உறங்கியவன் மெல்ல உடம்பசைத்து எழுதல்
உசும்பு>உசுப்பு = உறக்கத்தில் இருந்து எழுப்பு (பிறவினை)

உய்>உய்கு>உகு>உகல்; உகலுதல் = அலையெழுதல்
உகல்>உகள்>உகளுதல் = குதித்தல் = உயர எழும்புதல்
உகு>உகை; உகைத்தல் = எழுதல், எழுப்புதல்; உயரக் குதித்தல்
குதி>கொதி; கொதித்தல் = உயர எழும்புதல் (பால் கொதி வந்திருச்சா?)
குது>கொது>கொந்து>கொந்து அளித்தல் = கடல் கிளர்ந்தெழல்
குது>குது களித்தல் = உயர எழும்பி மகிழல் (குதுகலித்தலென எழுதுவதும் உண்டு)

புளித்துப் பொங்குதலும், உவர்த்துப் பொங்குதலும் உயர எழுவதே.

உகு>உகின்>எகின் = புளி
உய்>உய்வு>உவு>உவர்>உவரி = உவர் நீர்க்கடல், திருச் செந்தூருக்கு அருகில் உள்ள ஒரு ஊர்
உவு>உவண் = உப்பு
உவணம் = உயரப் பறக்கும் பருந்து
உவணை = தேவர் உலகம்
உவச்சன்>ஓச்சன்>ஓசன் = தெய்வத்தை ஏத்துபவன்
உய்>உய்வு>உய்பு>உய்ப்பு>உப்பு; உப்புதல் = எழுதல், பருத்தல், வீங்குதல்
உப்பு>உம்பு>உம்பர் = மேல், மேலிடம், தேவர் (up, upper என்ற சொற்களும் அதே பொருளைத் தருகின்றன)

உய்>உய்து>உய்த்து>உத்து>உத்தம்>உத்தரம் = உயர்ந்த இடம்
உத்தரியம் = மேலாக அணிந்து கொள்ளும் துணி (வடமொழிச் சொல்)
உகு>உகத்தல் = உயர்தல் "உகப்பே உயர்வு" (தொல். உரியியல், 8)
உத்தம்>உச்சம் = உயர்ச்சி
உத்து>உச்சு>உச்சி = உச்சமான இடம்

ஏ>எ>எஃகுதல் = ஏறுதல்
ஏ>ஏகு>ஏகுதல் = மேலே செல்லுதல்
எக்குதல் = வெளித் தள்ளுதல்
எக்கர் = கடல் வெளித் தள்ளிய மணல் மேடு
எகிர்தல் = எழுதல், குதித்தல்
எய்>எய்ல்>எல் = வெளிவருதல்; இடைவிடாது நாள் தோறும் தோன்றி மறையும் கதிரவன்; (helios) ஒளி
எல்>எள்>எள்+து>எட்டு = உயர்ந்து அல்லது நீண்டு தொடு
எட்டு>எட்டம் = உயரம், தூரம் (சிவகங்கை மாவட்ட வழக்கு)
எட்டன் = உயர்ந்தோன்
ஏட்டன்>சேட்டன் = தமக்கு உயர்ந்தோன்; அண்ணன் (மலையாள வழக்கு)
சேட்டன்>சேத்தி>சேச்சி = அக்காள் (மலையாள வழக்கு)
எட்டர் = அரசனுக்கு நாழிகைக் க்ணக்குக் கூறும் ஏத்தாளர்
எட்டி = உயர்ந்தவன், சிறந்தவன், பண்டைத் தமிழரசர் வணிகர் தலைவனுக்கு வழங்கிய சிறப்புப் பட்டம்
எட்டி>செட்டி = வணிகன்
எட்டு>செட்டு = வணிகனின் தன்மை
எட்டி>ஏட்டி>சேட்டி>சிரேஷ்டி (வடமொழியில் வணிகனின் பெயர்)
ஏட்டு>சேட்டு = வடநாட்டு வ்ணிகன்

எட்டு>எடு = தூக்கு, நிறுத்து
எடுப்பு = உயர்வு
எடு>எடை = நிறை
எள்+னு= எண்ணு = மென்மேலும் கருது; கணக்கிடு
எண் = மென்மேலும் செல்லும் தொகை

எய்>எய்ம்பு>எம்பு; எம்புதல் =எழுதல், குதித்தல்
எய்>எய்வு>எவ்வு; எவ்வுதல் = எழுதல், குதித்தல்
எய்>எழு; எழுதல் = உயர்தல், கிளர்தல்
எழு>எழுவு; எழுவுதல் = எழச் செய்தல்
எழு>எழுச்சி = எழுந்த செயல்; எழு நிலை
எழு என்பது கட்டப் பட்ட நிலையில் இருந்து விடுபடும் நிலையையும் குறிப்பதே

எழுந்துநிற்கும் தோற்றம் பொலிவானதால், அது எழிலெனக் கூறப்படுகிறது.
உயரத்தில் இருக்கும் மேகம் எழிலி
உயரமான திரைச் சீலை = எழினி
எழல் = எழும்பல்
எழுமை = உயர்ச்சி
எழுவன் உயர்ந்தவன் ஆகிறான், எளியன் தாழ்ந்தவன் ஆகிறான்.
உயர்ந்த நிலை, மிகுதியான நிலையும் ஆனபடியால் அதற்குத் தாராளப் பொருளும் வந்துவிடுகிறது.

போதல், என்ற சொல் போதரல், போதருதல் என்று ஆவது போல் (இதற்கு கழக இலக்கியங்களில் ஏகப்பட்டதைக் காட்ட முடியும்), எழுதல் எழுதரலாகும். இப்படித் துணைவினை கொண்டு முடிப்பதும் ஒரு வழக்குத்தான். இளி என்றாலே இகழ்ச்சி. இளிவரல், இளிவரவு என்பதும் இகழ்ச்சிதான். இந்த வரல் என்பதும் துணைவினையாக வர இயலும். இப்படிப் புதிதாக அமைவது தான் எழுவரல்

எழுவல்>எழுவரல் = liberal

"இந்த வருசம் ரொம்ப மோசங்க; தேர்வு ரொம்பக் கடினம், எழுவரலா மதிப்பெண் (liberal-ஆ mark) போட்டாத் தான் பொழைக்கலாம்"

"என்ன படிக்கிறீங்க?"
"எழுவரற் கலைங்க; வரலாறு"

"தமிழகத்தில் குறிப்பிட்ட சில கட்சிகள் எழுவரற் பார்வை (liberal view) கொண்டவை; எல்லாவற்றையும் பொதுக்கையர் (fascists) என்ற சொல்ல முடியாது. இன்னும் சில கட்சிகள் எழுவரற் பார்வைக்கும் மேலாய்ப் புரட்சிப் பார்வை (revolutionary view) கொண்டவை. அவர்கள் தாழ்ந்த மக்கள் (dalit people ; தலித் என்று மராட்டிய வழக்கைப் பலுக்காமல், தமிழ் வழக்கையே சொல்லலாமே?) கட்சியாக இருந்தால் புரட்சி என்பது மறுக்காமல் இருக்கும்."

எழுவரல் என்னும் போது "ஏற்றுக் கொள்ளூம் தன்மை" (tolerance), "பிரித்துப் பார்க்காத தன்மை (lack of prejudice) போன்றவை கூடவே புலப்படும்.

"liberal" என்ற சொல்லுக்கு முலம் "எழுதல்" நம்மிடம் இருந்தாலும், இந்த வளர்ந்த கருத்து நமக்கு அண்மையில் வெளியில் இருந்து வந்தது தான்.

அன்புடன்,
இராம.கி.

In TSCII:

masked facists and hard liberals - 2

þó¾ Å⨺¢ø þÐ þÃñ¼¡ÅÐ À̾¢

--------------------------------------------------------------------
«ýÒûÇ À¡Ä¡,

"masked facsists and hard liberals" ÀüÈ¢ò ¾Á¢Æ¡ì¸õ §¸ðÊÕó¾£÷¸û. fascists ÀüÈ¢ þó¾ þ¨Æ¢ø Óý ±Ø¾¢§Éý. ¯í¸Ç¢¼õ þÕóÐ ÁÚÅ¢¨É§Â¡, À¢ýë𧼡 þø¨Ä; §Å¨Ä «¾¢¸§Á¡? §¸ûÅ¢¸û ±ØôÒŧ¾¡Î ¿¢Úò¾¢ì ¦¸¡ñÎÅ¢ðË÷¸û. þÕó¾¡Öõ, ¦º¡ýɨ¾î ¦ºöРŢ¼§ÅñÎõ ±ýÚ ±ñ½¢ò ¦¾¡¼÷¸¢§Èý. þó¾ þ¨Æ¢ø, «Îò¾ ¦º¡øÄ¡¸, "liberals" ÀüÈ¢ ÅÕ¸¢§Èý.

liberal, liberty §À¡ýȨŠ´ýÚ즸¡ýÚ ¦¾¡¼÷Ò¨¼Â ¦º¡ü¸û. ¿¡ý ¦ÀâÐõ ±ÎòÐì ¸¡ðÎõ "Dictionary of word origins" - þø

"Latin word for 'free' was liber. It came from the same prehistoric source as Greek eleutheros 'free', which may have denoted 'people, nation' (in which case the underlying etymological meaning of the word would be 'being a member of the (free) people' as opposed to 'being a slave'). From liber was derived liberalis 'of freedom', which passed into English via Old French liberal. Its earliest English meanings were 'generous' and ' appropriate to the cultural pursuits of a 'free' man' (as in 'the liberal arts'). The connotations of 'tolerance' and 'lack of prejudice' did not emerge until th 18th century, and the word's use as a designation of a particulara political party in Britain dates from the early 19th century.

Also fom Latin liber came English libertine and liberty"

±ýÚ ÌÈ¢ò¾¢Õ츢ȡ÷¸û. þó¾î ¦º¡øÖìÌò ¾Á¢Æ¡ì¸õ ¸¡ÏžüÌ Óý, ¿¡õ ¾Á¢úî ¦º¡ü¸¼ÖìÌû ¦¸¡ïºõ ¬Æõ Ò¸ §ÅñÎõ. «Ê¡Æò¾¢üÌô §À¡ö «í¸¢ÕóÐ ÅçÅñÎõ. ¿¡õ ¦¾¡¼íÌõ «Ê ¬Æõ ¾Á¢Æ¢ø ¯ûÇ ÀÄ ¦º¡ü¸ÙìÌ Å¢ò¾¡¸ þÕó¾ «Ê§ÅÃ¡É °¸¡Ãî ÍðÎ

þó¾ °¸¡Ãî ÍðΠӾĢø Óý¨Á ¿¢¨Ä¨ÂÔõ, §¾¡üÈô ¦À¡Õ¨ÇÔõ, ¦ÅǢŢξ¨ÄÔõ, À¢ÈÌ ¯Â÷ô ¦À¡Õ¨ÇÔõ ¸¡ð¼ô ÀÂýÀθ¢ÈÐ. þí§¸ ÓýÉ¢¨Ä, §¾¡üÈô ¦À¡Õû¸¨Çò ¾Å¢÷òÐ, ¦ÅǢŢξ¨ÄÔõ, ¯Â÷ô ¦À¡Õ¨Ç ÁðÎõ ¸¡ð¼ Å¢¨Æ¸¢§Èý.

¸£§Æ ÅÕõ ¦º¡ü¸Ç¢ø, Ñϸ¢Â Ũ¸Â¢ø ´Õ ¸Õò¾¢ø þý¦É¡Õ ¸ÕòÐ ¸¢Ç÷óÐ ¦¾¡¼÷¡¸ô ¦À¡Õû ¿£ðº¢Â¡Å¨¾ô À¡÷ì¸Ä¡õ. þó¾ þÂøÒ ÁÄ÷¾¡ý, ¦Á¡Æ¢Â¢ý ÅÇ÷. þ¨¾ô ÒâóÐ ¦¸¡ñ¼¡ø, ¾Á¢ú þÂü¨¸ ¦Á¡Æ¢; ¿¡ðÀð¼ ¦Á¡Æ¢ ±ýÀÐ ÒâóÐÅ¢Îõ. (ÅÆì¸õ §À¡Ä, ¦Á¡Æ¢ »¡Â¢Ú À¡Å¡½ÕìÌ ¿õ ¸¼õÀθ¢§È¡õ.)

°>¯>¯ö>¯öò¾ø = Óý¾ûÇø, ¦ºÖòоø
¯ö>¯Â¢÷; ¯Â¢÷ò¾ø = ãîÍŢξø; ã ¯Â¢÷ôÒ ±Éô Àð¼Ð
°>°Ð = ¸¡üÈ¢î §º÷òÐ ¦ÅǢ¢Î
°Ð>¯Ð>¯¨¾ = ¸¡Ä¡ø Óý ¦ºÖòÐ
¯Ð>¯óÐ = Óý ¾ûé

¯ö>¯ö¾ø = Óý ¦ºøÖ¾ø, ¦ºøÖ¾ø
¯ö>¯öõÒ>¯ÔõÒ> ¯ÂõÒ = Óý¦ºÖòÐ; §Áø ¦ºÖòÐ
¯ÂõÒ>«õÒ = Óý ¦ºÖò¾¢Â ÜÃ¡É ¸õÒ
¯ö>´ö; ´ö¾ø = ¦ºÖòоø
¯ö>±ö; ±ö¾ø = «õ¨Àî ¦ºÖòоø.

(Å¢øÄ¢ø þÕóÐ ÒÈôÀð¼ «õÒ ÀÃŨÇÅ¡ö (parabola) ¯ÂÃô §À¡ö À¢ý ¾¡Æ ÅóÐ ¾¡ìÌŨ¾ µ÷óÐ À¡÷ò¾¡ø Å¢ÇíÌõ. þó¾ ÀÃŨÇÅ¡É §À¡ì§¸ ¯ÂÃî ¦ºÖòо¨ÄÔõ, Óý ¦ºÖòо¨ÄÔõ «Îò¾Îò¾ ¦À¡Õû ¿£ðº¢Â¡¸ì ¦¸¡ûÇ Å¨¸ ¦ºö¸¢ÈÐ. ÀȨÅ, «õÒ §À¡ýȨŠþÀÊô ÀÃŨÇÅ¡¸ô §À¡Å¨¾ì ¸ñÏüÈ ¬¾¢ ÁÉ¢¾ÛìÌ ¯ÂÃî ¦ºøÖ¾Öõ, Óý§É ¦ºøÖ¾Öõ ´ýÚ Áü¦È¡ýÈ¢ý ÅÇ÷¡¸§Å ¦¾ýÀÎõ. «õÒ ÁðÎõ «øÄ¡Ð, þü¨Èì ¸¡Ä ²×¸¨½¸û ܼ þôÀÊò¾¡ý ÀÃŨÇÅ¡¸ ±öÂô Àθ¢ýÈÉ.)

¯ö>¯ÂíÌ> °íÌ = ¯Â÷×, Á¢Ì¾¢
¯ö>¯Â÷>¯ÂÃõ
¯Â÷>°÷; °÷¾ø = ²Ú¾ø, ²È¢î ¦ºøÄø
°÷>°÷¾¢
°÷>°÷ò¾õ> °÷òÅõ (ż ¦Á¡Æ¢); ÓÂĸý §Áø ²È¢ò ¾¡ñ¼Åõ ¬Ê¾¡ø «Ð °÷òÐÅ ¾¡ñ¼Åõ («ó¾ò ¾¡ñ¼Åò¾¢ø ¾ý¨É ÁÈóÐ ¾¡§É, "þÉ¢ò¾õ ¯¨¼Â ±Îò¾ ¦À¡üÀ¡¾Óõ ¸¡½ô ¦ÀüÈ¡ø ÁÉ¢ò¾ô À¢ÈÅ¢Ôõ §ÅñÎŧ¾¡ þó¾ Á¡¿¢Äò§¾!" ±ýÈ Åâ¸û ¸¢Ç÷ó¾É.)

¯ö>´ö>´öÂø = ¯Â÷
´öÂø >´ö¡Ãõ = ¯Â÷ ¿¢¨Ä ("´ö¡Ãì ¦¸¡ñ¨¼Â¡õ ¾¡Æõ âÅ¡õ, ¯û§Ç þÕìÌÁ¡õ ®Õõ §ÀÛõ" ±ýÈ ¦º¡ÄŨ¼¨Â ±ñ½¢ô À÷ì¸Ä¡õ.)
´ö>´Â¢ø = ´ö¡Ãõ, ¯ÂÃì ̾¢ò¾¡Îõ ÌõÁ¢; ´Â¢Ä¡ð¼õ = ̾¢òÐ ¬Îõ ¬ð¼õ (Á¢ġð¼õ ´Õ Á¡¾¢Ã¢, ´Â¢Ä¡ð¼õ þý¦É¡Õ Á¡¾¢Ã¢.)
µö>µöíÌ>µíÌ = ¯ÂÃõ (µí¸¢ ¯ÄÌ «Çó¾ ¯ò¾Áý §À÷À¡Ê.......)
µíÌ>µìÌ>µì¸õ =¯ÂÃõ, ¦ÀÕ¨Á
µö>µöîÍ>µîÍ= ¯Â÷òÐ (¸Ê§¾¡îº¢ ¦ÁøÄ ±È¢¸, ÌÈû 572)
µö>µôÒ; µôÒ¾ø ¯Â÷òоø
µôÒ>µõÒ; µõÒ¾ø = ¯¼ø ¯ÂÕÁ¡Ú ÅÇ÷ò¾ø; §ÀϾø, ¸¡ò¾ø
¯ö>¯öÌ>¯ìÌ>¯ì¸õ = ¾¨Ä, ¸ðÊò àìÌõ ¸Â¢Ú

±ö>²>²×; ²×¾ø = ¦ºÖòоø, àñξø;
²×>²Åø>²ÅÄý
²×=«õÒ; ²× ¸¨½
±ö>±Â¢ý>±Â¢Éý = «õÒ ±öÔõ §Å¼÷ ÌÊ; ÌȢﺢ ¿¢Ä Áì¸û
±ö>±Â¢ø = ÁÈÅ÷ þÕóÐ ±öÔõ Á¾¢ø
¯>¯ý; ¯ýÛ¾ø = ¯Âà ±Ø¾ø
¯ýÛ>¯ýɾõ = ¯Â÷ó¾Ð (¯ýɾõ ż¦Á¡Æ¢ ±ýÚ ÀÄÕõ ±ñ½¢ì ¦¸¡ñÎ þÕ츢§È¡õ.)
¯ýÛ>¯ýÉ¢ôÒ = ¯ÂÃõ

¯ÔõÒ>¯ÔõÒ¾ø = §Áø ±ØõÀ ¨Åò¾ø
¯ÔõÒ = jump (yu ±ýÈ þ¾ý Á¡üÚ ´Ä¢§Â¡Î ÀÖ츢ô À¡Õí¸û; Å¢ÇíÌõ)
¯ÔõÒ>¯ÍõÒ; ¯ÍõÒ¾ø = ¯Èí¸¢ÉÅý ¦ÁøÄ ¯¼õÒ «¨ºòÐ ±Ø¾ø
¯ÍõÒ>¯ÍôÒ = ¯Èì¸ò¾¢ø þÕóÐ ±ØôÒ (À¢ÈÅ¢¨É)

¯ö>¯öÌ>¯Ì>¯¸ø; ¯¸Ö¾ø = «¨Ä¦Âؾø
¯¸ø>¯¸û>¯¸Ù¾ø = ̾¢ò¾ø = ¯Âà ±ØõÒ¾ø
¯Ì>¯¨¸; ¯¨¸ò¾ø = ±Ø¾ø, ±ØôÒ¾ø; ¯ÂÃì ̾¢ò¾ø
̾¢>¦¸¡¾¢; ¦¸¡¾¢ò¾ø = ¯Âà ±ØõÒ¾ø (À¡ø ¦¸¡¾¢ Åó¾¢Õ?)
ÌÐ>¦¸¡Ð>¦¸¡óÐ>¦¸¡óÐ «Ç¢ò¾ø = ¸¼ø ¸¢Ç÷óÐ ±Ø¾ø
ÌÐ>ÌÐ ¸Ç¢ò¾ø = ¯Âà ±ØõÀ¢ Á¸¢úóÐ þÕó¾ø (ÌиĢò¾ø ±ýÚ ±ØÐÅÐõ ¯ñÎ)

ÒÇ¢òÐô ¦À¡í̾Öõ, ¯Å÷òÐô ¦À¡í̾Öõ ¯Âà ±ØÅо¡ý.

¯Ì>¯¸¢ý>±¸¢ý = ÒÇ¢
¯ö>¯ö×>¯×>¯Å÷>¯Åâ = ¯Å÷ ¿£÷츼ø, ¾¢Õî ¦ºóàÕìÌ «Õ¸¢ø ¯ûÇ ´Õ °÷
¯×>¯Åñ = ¯ôÒ
¯Å½õ = ¯ÂÃô ÀÈìÌõ ÀÕóÐ
¯Å¨½ = §¾Å÷ ¯Ä¸õ
¯Åîºý>µîºý>µºý = ¦¾öÅò¨¾ ²òÐÀÅý
¯ö>¯ö×>¯öÒ>¯öôÒ>¯ôÒ; ¯ôÒ¾ø = ±Ø¾ø, ÀÕò¾ø, Å£í̾ø
¯ôÒ>¯õÒ>¯õÀ÷ = §Áø, §ÁÄ¢¼õ, §¾Å÷ (up, upper ±ýÈ ¦º¡ü¸Ùõ «§¾ ¦À¡Õ¨Çò ¾Õ¸¢ýÈÉ)

¯ö>¯öÐ>¯öòÐ>¯òÐ>¯ò¾õ>¯ò¾Ãõ = ¯Â÷ó¾ þ¼õ
¯ò¾Ã¢Âõ = §ÁÄ¡¸ «½¢óÐ ¦¸¡ûÙõ н¢ (ż¦Á¡Æ¢î ¦º¡ø)
¯Ì>¯¸ò¾ø = ¯Â÷¾ø "¯¸ô§À ¯Â÷×" (¦¾¡ø. ¯Ã¢Â¢Âø, 8)
¯ò¾õ>¯îºõ = ¯Â÷
¯òÐ>¯îÍ>¯îº¢ = ¯îºÁ¡É þ¼õ

²>±>±·Ì¾ø = ²Ú¾ø
²>²Ì>²Ì¾ø = §Á§Ä ¦ºøÖ¾ø
±ì̾ø = ¦ÅÇ¢ò ¾ûÙ¾ø
±ì¸÷ = ¸¼ø ¦ÅÇ¢ò ¾ûǢ Á½ø §ÁÎ
±¸¢÷¾ø = ±Ø¾ø, ̾¢ò¾ø
±ö>±öø>±ø = ¦ÅÇ¢ÅÕ¾ø; þ¨¼Å¢¼¡Ð ¿¡û §¾¡Úõ §¾¡ýÈ¢ Á¨ÈÔõ ¸¾¢ÃÅý; (helios) ´Ç¢
±ø>±û>±û+Ð>±ðÎ = ¯Â÷óÐ «øÄÐ ¿£ñÎ ¦¾¡Î
±ðÎ>±ð¼õ = ¯ÂÃõ, àÃõ (º¢Å¸í¨¸ Á¡Åð¼ ÅÆìÌ)
±ð¼ý = ¯Â÷󧾡ý
²ð¼ý>§ºð¼ý = ¾ÁìÌ ¯Â÷󧾡ý; «ñ½ý (Á¨ÄÂ¡Ç ÅÆìÌ)
§ºð¼ý>§ºò¾¢>§ºîº¢ = «ì¸¡û (Á¨ÄÂ¡Ç ÅÆìÌ)
±ð¼÷ = «ÃºÛìÌ ¿¡Æ¢¨¸ì ì½ìÌì ÜÚõ ²ò¾¡Ç÷
±ðÊ = ¯Â÷ó¾Åý, º¢Èó¾Åý, Àñ¨¼ò ¾Á¢Æú÷ Ž¢¸÷ ¾¨ÄÅÛìÌ ÅÆí¸¢Â º¢ÈôÒô Àð¼õ
±ðÊ>¦ºðÊ = Ž¢¸ý
±ðÎ>¦ºðÎ = Ž¢¸É¢ý ¾ý¨Á
±ðÊ>²ðÊ>§ºðÊ>º¢§Ã‰Ê (ż¦Á¡Æ¢Â¢ø Ž¢¸É¢ý ¦ÀÂ÷)
²ðÎ>§ºðÎ = ż¿¡ðÎ ù½¢¸ý

±ðÎ>±Î = àìÌ, ¿¢ÚòÐ
±ÎôÒ = ¯Â÷×
±Î>±¨¼ = ¿¢¨È
±û+Û= ±ñÏ = ¦Áý§ÁÖõ ¸ÕÐ; ¸½ì¸¢Î
±ñ = ¦Áý§ÁÖõ ¦ºøÖõ ¦¾¡¨¸

±ö>±öõÒ>±õÒ; ±õÒ¾ø =±Ø¾ø, ̾¢ò¾ø
±ö>±ö×>±ù×; ±ù×¾ø = ±Ø¾ø, ̾¢ò¾ø
±ö>±Ø; ±Ø¾ø = ¯Â÷¾ø, ¸¢Ç÷¾ø
±Ø>±Ø×; ±Ø×¾ø = ±Æî ¦ºö¾ø
±Ø>±Ø = ±Øó¾ ¦ºÂø; ±Ø ¿¢¨Ä
±Ø ±ýÀÐ ¸ð¼ô Àð¼ ¿¢¨Ä¢ø þÕóРŢÎÀÎõ ¿¢¨Ä¨ÂÔõ ÌÈ¢ôÀ§¾

±ØóÐ ¿¢üÌõ §¾¡üÈõ ¦À¡Ä¢Å¡¸ þÕ츢ÈÐ. «Ð ±Æ¢ø ±ý§È ÜÈô Àθ¢ÈÐ.
¯ÂÃò¾¢ø þÕìÌõ §Á¸õ ±Æ¢Ä¢
¯ÂÃÁ¡É ¾¢¨Ãî º£¨Ä = ±Æ¢É¢
±Æø = ±ØõÀø
±Ø¨Á = ¯Â÷
±ØÅý ¯Â÷ó¾Åý ¬¸¢È¡ý, ±Ç¢Âý ¾¡úó¾Åý ¬¸¢È¡ý.
¯Â÷ó¾ ¿¢¨Ä, Á¢Ì¾¢Â¡É ¿¢¨ÄÔõ ¬ÉÀÊ¡ø «¾üÌò ¾¡Ã¡Çô ¦À¡ÕÙõ ÅóÐŢθ¢ÈÐ.

§À¡¾ø, ±ýÈ ¦º¡ø §À¡¾Ãø, §À¡¾Õ¾ø ±ýÚ ¬ÅÐ §À¡ø (þ¾üÌ ¸Æ¸ þÄ츢Âí¸Ç¢ø ²¸ôÀð¼¨¾ì ¸¡ð¼ ÓÊÔõ), ±Ø¾ø ±Ø¾Ãø ¬Ìõ. þôÀÊò Ш½Å¢¨É ¦¸¡ñÎ ÓÊôÀÐõ ´Õ ÅÆìÌò¾¡ý. þÇ¢ ±ýÈ¡§Ä þ¸ú
þÇ¢ÅÃø, þÇ¢ÅÃ× ±ýÀÐõ þ¸ú¾¡ý. þó¾ ÅÃø ±ýÀÐõ Ш½Å¢¨É¡¸ Åà þÂÖõ. þôÀÊô Ò¾¢¾¡¸ «¨ÁÅÐ ¾¡ý ±ØÅÃø

±ØÅø>±ØÅÃø = liberal

"þó¾ ÅÕºõ ¦Ã¡õÀ §Á¡ºí¸; §¾÷× ¦Ã¡õÀì ¸ÊÉõ, ±ØÅÃÄ¡ Á¾¢ô¦Àñ (liberal-¬ mark) §À¡ð¼¡ò¾¡ý ¦À¡¨Æì¸Ä¡õ"

"±ýÉ ÀÊ츢ȣí¸?"
"±ØÅÃü ¸¨Äí¸; ÅÃÄ¡Ú"

"¾Á¢Æ¸ò¾¢ø ÌÈ¢ôÀ¢ð¼ º¢Ä ¸ðº¢¸û ±ØÅÃü À¡÷¨Å (liberal view) ¦¸¡ñ¼¨Å; ±øÄ¡Åü¨ÈÔõ ¦À¡Ð쨸Â÷ (fascists) ±ýÈ ¦º¡øÄ ÓÊ¡Ð. þýÛõ º¢Ä ¸ðº¢¸û ±ØÅÃü À¡÷¨ÅìÌõ §ÁÄ¡öô ÒÃðº¢ô À¡÷¨Å (revilutionary view) ¦¸¡ñ¼¨Å. «Å÷¸û ¾¡úó¾ Áì¸û (dalit people ; ¾Ä¢ò ±ýÚ ÁáðÊ ÅÆ쨸ô ÀÖ측Áø, ¾Á¢ú ÅÆ쨸§Â ¦º¡øÄÄ¡§Á?) ¸ðº¢Â¡¸ þÕó¾¡ø ÒÃ𺢠±ýÀÐ ÁÚ측Áø þÕìÌõ."

±ØÅÃø ±ýÛõ §À¡Ð "²üÚì ¦¸¡ûéõ ¾ý¨Á" (tolerance), "À¢Ã¢òÐô À¡÷측¾ ¾ý¨Á (lack of prejudice) §À¡ýȨŠܼ§Å ÒÄôÀÎõ.

"liberal" ±ýÈ ¦º¡øÖìÌ ÓÄõ "±Ø¾ø" ¿õÁ¢¼õ þÕó¾¡Öõ, þó¾ ÅÇ÷ó¾ ¸ÕòÐ ¿ÁìÌ «ñ¨Á¢ø ¦ÅǢ¢ø þÕóÐ Åó¾Ð ¾¡ý.

«ýÒ¼ý,
þáÁ.¸¢.

No comments: