Sunday, May 22, 2005

Liberty, Freedom, Independance

கீழே உள்ள மடல் அகத்தியர் மடற்குழுவில் மரு. செயபாரதி எழுதியதற்கு, மறுமொழியாய் எழுதியது.
-------------------------------------------------------------------------------
மரு.செயபாரதி எழுதியிருந்தார்:
"விடுதலைக்கும் சுதந்திரத்துக்கும் இடையே வித்தியாசம் இருக்கிறது. Liberty, Freedom, Independance ஆகியவற்றிற்கும் இடையே வித்தியாசம் உண்டு. சிந்தனைக்கு...."

சென்ற மடலில் liberal பற்றிய என் முன்நாள் மடலைத் திருப்பி அனுப்பியிருந்தேன். இனித் தொடர்ச்சி.

எழுவரல் என்பது liberal என்பதற்கு ஆவது போல் எழுவுதி என்பதே liberty என்பதற்குச் சரிவரும். இங்கே எழுவுதி என்பது எழ முடிகிற தன்மை; தாழாத தன்மை; யாராலும் தடுத்து நிறுத்த முடியாத தன்மை. ஆனால் இந்தச் சொல்லிற்கு ஈடாகச் சுதந்திரம், விடுதலை என்று பலரும் மாறி மாறிப் பயன்படுத்துகிறார்கள். துல்லியம் கருதினால் சொல்லாட்சிகளை மாற்றவேண்டும் என்றே நான் எண்ணுகிறேன். சில ஆங்கில வாக்கியங்களைப் பார்ப்போம்.

I have the liberty to do it.
அதைச் செய்ய எனக்கு எழுவுதி உண்டு.
They lost the liberty and became slaves.
எழுவுதியை இழந்து அடிமைகள் ஆனார்கள்.
Liberty is in-alienable birth right.
எழுவுதி என்பது என்னிடம் இருந்து அயலிக்க முடியாத பிறப்புரிமை.

இனி freedom என்ற சொல்லைப் பார்ப்போம். சொற்பிறப்பியலின் படி,

freedom:

The prehistoric ancestor of free was a term of affection uniting the members of a family in a common bond, and implicitly excluding their servants or slaves - those who were not 'free'. It comes ultimately from Indo -european *prijos, whose signification ' dear, beloved' is revealed in such collateral descendents as Sanskrit priyas ' dear', Russian 'prijatel' 'friend', and indeed English friend. Its Germanic offspring *frijaz, displays the shift from 'affection' to 'liberty,' as shown in German frei, Dutch vrij, Sweedish and Danish fri, and English free. Welsh rhydd 'free' comes from the same Indo-European source.

இந்த விளக்கத்தின் படி "தமிழில் உறவின்முறை என்று தென்மாவட்டங்களில் சொல்லுகிறார்கள் பாருங்கள், அந்த உறவின்முறையில் உள்ளவர்கள் எல்லாம் free; மற்றவர்கள் free இல்லாதவர்கள்". இந்த உறவின் முறையில் உள்ள நம்மவர்கள் எல்லாம் பரிவுள்ளவர்கள்; பரிவுக்கு உரியவர்கள். மற்றவர்கள் பரிவுக்கு உள்ளுறாதாவர்கள். "பால்நினைந்து ஊட்டும் தாயினும் சாலப் பரிந்து" என்ற பாட்டை எண்ணிப் பாருங்கள். பரிதல் என்பது உற்றவருக்கு உரியது. இந்தப் பரிவு நம் உறவுக்கும், வகுப்பினருக்கும், இனத்தவருக்கும், மொழியினருக்கும் நாட்டினருக்கும் மட்டும் அல்ல, மாந்தனாய்ப் பிறந்த எல்லோருக்கும் உரியது என்பது இன்றையச் சிந்தனை. இதில் பரியுடைமை என்பதே freedom. தமிழ் உடைமை கொண்டாடுவது தமிழுடைமை - tamildom; அரசன் உரிமை கொண்டாடுவது அரசனுடைமை - kingdom. இறைவர் எல்லோர் மேலும் உடைமை கொண்டவர் ஆதலால் அவர் உடையார். தஞ்சைப் பெருவுடையார் என்ற சொல்லை ஓர்ந்து பாருங்கள். அதைப் போலப் பரிய உரிமை கொண்டாடுவது பரியுடைமை.

"அவனுக்குப் பரிந்து நீ கேள்வி கேட்க வருகிறாயே?" என்றால் அவன் பரியுடைமையை நானோ, என் பரியுடைமையை அவனோ விட்டுக் கொடுக்க இயலாது என்றுதானே பொருள்? "நான் பரியாமல் வேறு யார் பரிவார்கள்? நான் அவன் உறவுக்காரன்; அவன் ஊர்க்காரன்; அவன் நாட்டுக்காரன்; அவன் மொழிக்காரன்; அவனும் மாந்தன் நானும் மாந்தன்" என்று இந்தப் பரியுடைமை நமக்குள்ளே விரியும். பரிதன்மை தான் freeness. அதைப் பரியுமை என்றும் சுருக்கிச் சொல்லலாம். பரிதன்மையை உடைமையாகக் கொண்டால் அது பரியுடைமை. இந்தப் பரியுடைமை என்பது நம்மோடு கூடப் பிறந்தது தான். இதைத் தான் விட்ட வெளித் தன்மை என்றும் விடுதலை என்றும் மொழி பெயர்க்கிறோம். ஒருவகையில் அது சரியென்றாலும், அடிப்படைப் பொருளை, விட்ட வெளித் தன்மை / விடுதலை என்பது, தனித்து நின்று, கொண்டு வரவில்லை என்றே நான் எண்ணுகிறேன். ஒரு குறுகிய அரங்கை (range) மட்டும் பார்த்து இந்தச் சொல் 19ம் நூற்றாண்டு, 20-ம் நூற்றாண்டுகளில் எழுந்திருக்கிறது. குறுகிய அரங்கு என்று ஏன் சொல்லுகிறேன் என்றால் விடுதலை என்னும் போது நாம் முன்னர் அடைபட்ட நிலை உள்ளே தொக்கி நிற்கிறது. அடைதலைக்குப் புறந்தலையாக, விடுதலை என்று என்னும் போது ஏதோ ஒரு குறை, ஒரு எதிர்மறைச் சொல் போலத் தொனிக்கிறது. பரியுடைமை என்பது நேரடியாக பரிந்து வரும் போக்கைச் சுட்டுகிறது.

எழுவுதியும் பரியுடைமையும் ஒன்றா என்றால் கிட்டத்தட்ட ஒன்றுதான்; ஆனால் ஒரு நுணுகிய வேறுபாடு உண்டு. எழுவுதியில் தன்முனைப் போக்கு முகமையானது. பரியுடைமையில் சுற்றியிருப்போரையும் கருதும் போக்கு முகமையானது. அடிமைத்தளையில் இருந்து பரியுடைமை நிலைக்கு வருகிறோம். இதைச் செய்ய எனக்கு எழுவுதி வேண்டும். எழுவுதியை நிலைநாட்டி அதன் மூலம் பரியுடைமையை அடைகிறோம்.

அடுத்து independence:

"புடலங்காய் பந்தலில் இருந்து தொங்குகிறது".
"நீல விதானத்து நித்திலப்பூம் பந்தற்கீழ் மாலை மாற்றினர்".

இப்படி பந்தல் என்பது மேலே இருந்து தொங்குகிறது. அது காலில் நிற்கலாம். மேலே மோட்டு வளையில் முட்டுக் கொடுத்தும் தொங்கலாம். பந்துதல் என்பதன் அடிப்படைப் பொருள் கட்டுவதே. அந்தக் கட்டுமானத்திற்குப் பெயர் பந்தல்/பந்தர். பந்தர் என்பது ஒலை, துணி, தகரம் எனக் கட்டும் பொருளுக்குத் தக்க அசையும்; ஆடும்; உயரும்; தாழும். இத்தகைய இயக்கம் மேலும் இல்லாமல், கீழும் இல்லாமல் நடுத்தர நிலையில் இருப்பதால் அது பந்தரித்தல் என்றும் பந்தரம் என்றும் அந்தரம் என்றும் உருத் திரியும். பந்தப் படுவது என்பது கட்டப் படுவதே. ஒன்றைச் சார்ந்து அல்லது அடுத்து, பந்தப்படுவதே depend எனப்படுகிறது. அதாவது பந்தடுத்து அல்லது பந்தப்பட்டு நிற்பது என்பதே இந்த depend என்ற நிலை. பந்தப்பட்ட நிலை என்பது dependent status. பந்தப்படா நிலை = independent status. அதாவது இன்னொன்றைச் சாராநிலை. இதைத் தன்காலிலே நிற்கும் நிலை என்று பொருள் கொண்டு வடமொழி வழியே சுவ தந்திரம் என்று மொழிபெயர்த்தார்கள். தனிப்பட்ட, தனிநிற்றல், தன்னாளுமை என்றே நல்ல தமிழில் மொழிபெயர்த்திருக்கலாம். வெறுமே independent என்று சொல்வதில் பொருள் வராது. independent of what என்ற கேள்வி உடனெயெழும். பல இடங்களில் இதற்கான விடை தொக்கி நிற்கலாம். இப்படித் தொக்கி நிற்கும் இடங்களில் விடுதலை என்பது சரியாக அமையக் கூடும்.

சில ஆங்கில வாக்கியங்களைப் பார்க்கலாம்.

India became independent in August 15, 1947.

இங்கே independent of British rule என்பது தொக்கி நிற்கிறது. எனவே இந்தியா 1947 -ல் ஆகசுடு 15 -இல் விடுதலை அடைந்தது என்று சொல்லலாம். அல்லது 1947- ஆகசுடு 15- இல் பந்தம் விடுத்தது என்றும் சொல்லலாம்.

There are 4 independent producers other than the MNC's for this drug in India.
இங்கே விடுதலையும் சரிவராது; சுதந்திரமும் சரி வராது. தனித்த, தனிப்பட்ட, சாராத, பந்திலாத போன்றவைதான் சரி வரும். தனிப்பட்ட/ தனித்த என்பது மிகச் சரியாகப் பொருந்தும்.

இந்தியாவில் இந்த மருந்திற்கு பன்னாட்டுக் குழுமங்களைத் தவிர்த்து 4 தனித்த விளைப்பாளிகள் உள்ளனர்.

independence = பந்திலாமை; தன்னாளுமை; விடுதலை

freedom என்பதற்கும் independence என்பதற்கும் ஒற்றுமைகள் நிறைய இருந்தாலும் நுணுகிய வேறுபாடும் உண்டு.

காட்டாகப் பரியுடைமை என்பது இனி இந்தியாவைப் பொறுத்த வரையில் எதிர்காலத்துக்கும் உண்டு; அதை எந்நாளும் கையாளலாம்; கூடவே அதைக் காப்பாற்ற வேண்டும். தன்னாளுமை என்பது வந்து சேர்ந்து விட்டது. இனி இழக்காத வரையில், அதைப் பற்றிக் கவலைப் படவேண்டாம்.

இதுவரை கூறிய விளக்கங்கள் போதும் என்று எண்ணுகிறேன். துல்லியம் கருதி கீழ்க்கண்ட சொற்களைத் தமிழில் புழங்கலாம் என்பது என் பரிந்துரை.

Liberty = எழுவுதி
freedom = பரியுடைமை
independence = பந்திலாமை; தன்னாளுமை; விடுதலை

அன்புடன்,
இராம.கி.In TSCII:

Liberty, Freedom, Independance

¸£§Æ ¯ûÇ Á¼ø «¸ò¾¢Â÷ Á¼üÌØÅ¢ø ÁÕ. ¦ºÂÀ¡Ã¾¢ ±Ø¾¢Â¾üÌ, ÁÚ¦Á¡Æ¢Â¡ö ±Ø¾¢ÂÐ.
-------------------------------------------------------------------------------
ÁÕ.¦ºÂÀ¡Ã¾¢ ±Ø¾¢Â¢Õó¾¡÷:
"Ţξ¨ÄìÌõ ;ó¾¢ÃòÐìÌõ þ¨¼§Â Å¢ò¾¢Â¡ºõ þÕ츢ÈÐ. Liberty, Freedom, Independance ¬¸¢ÂÅüÈ¢üÌõ þ¨¼§Â Å¢ò¾¢Â¡ºõ ¯ñÎ. º¢ó¾¨ÉìÌ...."

¦ºýÈ Á¼Ä¢ø liberal ÀüȢ ±ý Óý¿¡û Á¼¨Äò ¾¢ÕôÀ¢ «ÛôÀ¢Â¢Õó§¾ý. þÉ¢ò ¦¾¡¼÷.

±ØÅÃø ±ýÀÐ liberal ±ýÀ¾üÌ ¬ÅÐ §À¡ø ±Ø×¾¢ ±ýÀ§¾ liberty ±ýÀ¾üÌî ºÃ¢ÅÕõ. þí§¸ ±Ø×¾¢ ±ýÀÐ ±Æ Óʸ¢È ¾ý¨Á; ¾¡Æ¡¾ ¾ý¨Á; ¡áÖõ ¾ÎòÐ ¿¢Úò¾ ÓÊ¡¾ ¾ý¨Á. ¬É¡ø þó¾î ¦º¡øÄ¢üÌ ®¼¡¸î ;ó¾¢Ãõ, Ţξ¨Ä ±ýÚ ÀÄÕõ Á¡È¢ Á¡È¢ô ÀÂýÀÎòи¢È¡÷¸û. ÐøÄ¢Âõ ¸Õ¾¢É¡ø ¦º¡øġ𺢸¨Ç Á¡üȧÅñÎõ ±ý§È ¿¡ý ±ñϸ¢§Èý. º¢Ä ¬í¸¢Ä š츢Âí¸¨Çô À¡÷ô§À¡õ.

I have the liberty to do it.
«¨¾î ¦ºö ±ÉìÌ ±Ø×¾¢ ¯ñÎ.
They lost the liberty and became slaves.
±Ø×¾¢¨Â þÆóÐ «Ê¨Á¸û ¬É¡÷¸û.
Liberty is in-alienable birth right.
±Ø×¾¢ ±ýÀÐ ±ýÉ¢¼õ þÕóÐ «ÂÄ¢ì¸ ÓÊ¡¾ À¢ÈôÒâ¨Á.

þÉ¢ freedom ±ýÈ ¦º¡ø¨Äô À¡÷ô§À¡õ. ¦º¡üÀ¢ÈôÀ¢ÂÄ¢ý ÀÊ,

freedom:

The prehistoric ancestor of free was a term of affection uniting the members of a family in a common bond, and implicitly excluding their servants or slaves - those who were not 'free'. It comes ultimately from Indo -european *prijos, whose signification ' dear, beloved' is revealed in such collateral descendents as Sanskrit priyas ' dear', Russian 'prijatel' 'friend', and indeed English friend. Its Germanic offspring *frijaz, displays the shift from 'affection' to 'liberty,' as shown in German frei, Dutch vrij, Sweedish and Danish fri, and English free. Welsh rhydd 'free' comes from the same Indo-European source.

þó¾ Å¢Çì¸ò¾¢ý ÀÊ "¾Á¢Æ¢ø ¯ÈÅ¢ýÓ¨È ±ýÚ ¦¾ýÁ¡Åð¼í¸Ç¢ø ¦º¡øÖ¸¢È¡÷¸û À¡Õí¸û, «ó¾ ¯ÈÅ¢ýӨȢø ¯ûÇÅ÷¸û ±øÄ¡õ free; ÁüÈÅ÷¸û free þøÄ¡¾Å÷¸û". þó¾ ¯ÈÅ¢ý ӨȢø ¯ûÇ ¿õÁÅ÷¸û ±øÄ¡õ Àâ×ûÇÅ÷¸û; Àâ×ìÌ ¯Ã¢ÂÅ÷¸û. ÁüÈÅ÷¸û Àâ×ìÌ ¯ûÙÈ¡¾¡Å÷¸û. "À¡ø¿¢¨ÉóÐ °ðÎõ ¾¡Â¢Ûõ º¡Äô ÀâóÐ" ±ýÈ À¡ð¨¼ ±ñ½¢ô À¡Õí¸û. Àâ¾ø ±ýÀÐ ¯üÈÅÕìÌ ¯Ã¢ÂÐ. þó¾ô ÀÃ¢× ¿õ ¯È×ìÌõ, ÅÌôÀ¢ÉÕìÌõ, þÉò¾ÅÕìÌõ, ¦Á¡Æ¢Â¢ÉÕìÌõ ¿¡ðÊÉÕìÌõ ÁðÎõ «øÄ, Á¡ó¾É¡öô À¢Èó¾ ±ø§Ä¡ÕìÌõ ¯Ã¢ÂÐ ±ýÀÐ þý¨ÈÂî º¢ó¾¨É. þ¾¢ø Àâר¼¨Á ±ýÀ§¾ freedom. ¾Á¢ú ¯¨¼¨Á ¦¸¡ñ¼¡ÎÅÐ ¾Á¢Ø¨¼¨Á - tamildom; «Ãºý ¯Ã¢¨Á ¦¸¡ñ¼¡ÎÅÐ «ÃºÛ¨¼¨Á - kingdom. þ¨ÈÅ÷ ±ø§Ä¡÷ §ÁÖõ ¯¨¼¨Á ¦¸¡ñ¼Å÷ ¬¾Ä¡ø «Å÷ ¯¨¼Â¡÷. ¾ï¨ºô ¦ÀÕר¼Â¡÷ ±ýÈ ¦º¡ø¨Ä µ÷óÐ À¡Õí¸û. «¨¾ô §À¡Äô Àâר¼¨Á.

"«ÅÛìÌô ÀâóÐ ¿£ §¸ûÅ¢ §¸ð¸ ÅÕ¸¢È¡§Â?" ±ýÈ¡ø «Åý Àâר¼¨Á¨Â ¿¡§É¡, ±ý Àâר¼¨Á¨Â «Å§É¡ Å¢ðÎì ¦¸¡Îì¸ þÂÄ¡Ð ±ýÚ¾¡§É ¦À¡Õû? "¿¡ý Àâ¡Áø §ÅÚ Â¡÷ Àâš÷¸û? ¿¡ý «Åý ¯È×측Ãý; «Åý °÷측Ãý; «Åý ¿¡ðÎ측Ãý; «Åý ¦Á¡Æ¢ì¸¡Ãý; «ÅÛõ Á¡ó¾ý ¿¡Ûõ Á¡ó¾ý" ±ýÚ þó¾ô Àâר¼¨Á ¿ÁìÌû§Ç ŢâÔõ. Àâ¾ý¨Á ¾¡ý freeness. Àâ¾ý¨Á¨Â ¯¨¼¨Á¡¸ì ¦¸¡ñ¼¡ø «Ð ÀâԨ¼¨Á. þó¾ô ÀâԨ¼¨Á ±ýÀÐ ¿õ§Á¡Î ܼô À¢Èó¾Ð ¾¡ý. þ¨¾ò ¾¡ý Ţ𼠦ÅÇ¢ò ¾ý¨Á ±ýÚõ Ţξ¨Ä ±ýÚõ ¦Á¡Æ¢ ¦ÀÂ÷츢§È¡õ. ´ÕŨ¸Â¢ø «Ð ºÃ¢¦ÂýÈ¡Öõ, «ÊôÀ¨¼ô ¦À¡Õ¨Ç, Ţ𼠦ÅÇ¢ò ¾ý¨Á / Ţξ¨Ä ±ýÀÐ, ¾É¢òÐ ¿¢ýÚ, ¦¸¡ñÎ ÅÃÅ¢ø¨Ä ±ý§È ¿¡ý ±ñϸ¢§Èý. ´Õ ÌÚ¸¢Â «Ãí¨¸ (range) ÁðÎõ À¡÷òÐ þó¾î ¦º¡ø 19õ áüÈ¡ñÎ, 20-õ áüÈ¡ñθǢø ±Øó¾¢Õ츢ÈÐ. ÌÚ¸¢Â «ÃíÌ ±ýÚ ²ý ¦º¡øÖ¸¢§Èý ±ýÈ¡ø Ţξ¨Ä ±ýÛõ §À¡Ð ¿¡õ ÓýÉ÷ «¨¼Àð¼ ¿¢¨Ä ¯û§Ç ¦¾¡ì¸¢ ¿¢ü¸¢ÈÐ. «¨¼¾¨ÄìÌô ÒÈó¾¨Ä¡¸, Ţξ¨Ä ±ýÚ ±ýÛõ §À¡Ð ²§¾¡ ´Õ ̨È, ´Õ ±¾¢÷Á¨Èî ¦º¡ø §À¡Äò ¦¾¡É¢ì¸¢ÈÐ. Àâר¼¨Á ±ýÀÐ §¿ÃÊ¡¸ ÀâóÐ ÅÕõ §À¡ì¨¸î Íðθ¢ÈÐ.

±Ø×¾¢Ôõ ÀâԨ¼¨ÁÔõ ´ýÈ¡ ±ýÈ¡ø ¸¢ð¼ò¾ð¼ ´ýÚ¾¡ý; ¬É¡ø ´Õ Ñϸ¢Â §ÅÚÀ¡Î ¯ñÎ. ±Ø×¾¢Â¢ø ¾ýÓ¨Éô §À¡ìÌ Ó¸¨Á¡ÉÐ. Àâר¼¨Á¢ø ÍüȢ¢Õô§À¡¨ÃÔõ ¸ÕÐõ §À¡ìÌ Ó¸¨Á¡ÉÐ. «Ê¨Áò¾¨Ç¢ø þÕóÐ ÀâԨ¼¨Á ¿¢¨ÄìÌ ÅÕ¸¢§È¡õ. þ¨¾î ¦ºö ±ÉìÌ ±Ø×¾¢ §ÅñÎõ. ±Ø×¾¢¨Â ¿¢¨Ä¿¡ðÊ «¾ý ãÄõ Àâר¼¨Á¨Â «¨¼¸¢§È¡õ.

«ÎòÐ independence:

"Ò¼Äí¸¡ö Àó¾Ä¢ø þÕóÐ ¦¾¡í̸¢ÈÐ".
"¿£Ä Å¢¾¡ÉòÐ ¿¢ò¾¢Äôâõ Àó¾ü¸£ú Á¡¨Ä Á¡üÈ¢É÷".

þôÀÊ Àó¾ø ±ýÀÐ §Á§Ä þÕóÐ ¦¾¡í̸¢ÈÐ. «Ð ¸¡Ä¢ø ¿¢ü¸Ä¡õ. §Á§Ä §Á¡ðΠŨÇ¢ø ÓðÎì ¦¸¡ÎòÐõ ¦¾¡í¸Ä¡õ. Àóоø ±ýÀ¾ý «ÊôÀ¨¼ô ¦À¡Õû ¸ðÎŧ¾. «ó¾ì ¸ðÎÁ¡Éò¾¢üÌô ¦ÀÂ÷ Àó¾ø/Àó¾÷. Àó¾÷ ±ýÀÐ ´¨Ä, н¢, ¾¸Ãõ ±Éì ¸ðÎõ ¦À¡ÕÙìÌò ¾ì¸ «¨ºÔõ; ¬Îõ; ¯ÂÕõ; ¾¡Øõ. þò¾¨¸Â þÂì¸õ §ÁÖõ þøÄ¡Áø, ¸£Øõ þøÄ¡Áø ¿Îò¾Ã ¿¢¨Ä¢ø þÕôÀ¾¡ø «Ð Àó¾Ã¢ò¾ø ±ýÚõ Àó¾Ãõ ±ýÚõ «ó¾Ãõ ±ýÚõ ¯Õò ¾¢Ã¢Ôõ. Àó¾ô ÀÎÅÐ ±ýÀÐ ¸ð¼ô ÀÎŧ¾. ´ý¨Èî º¡÷óÐ «øÄÐ «ÎòÐ, Àó¾ô ÀÎŧ¾ depend ±ÉôÀθ¢ÈÐ. «¾¡ÅÐ Àó¾ÎòÐ «øÄÐ Àó¾ôÀðÎ ¿¢üÀÐ ±ýÀ§¾ þó¾ depend ±ýÈ ¿¢¨Ä. Àó¾ôÀð¼ ¿¢¨Ä ±ýÀÐ dependent status. Àó¾ôÀ¼¡ ¿¢¨Ä = independent status. «¾¡ÅÐ þý¦É¡ý¨Èî º¡Ã¡¿¢¨Ä. þ¨¾ò ¾ý¸¡Ä¢§Ä ¿¢üÌõ ¿¢¨Ä ±ýÚ ¦À¡Õû ¦¸¡ñΠż¦Á¡Æ¢ ÅÆ¢§Â ÍÅ ¾ó¾¢Ãõ ±ýÚ ¦Á¡Æ¢¦ÀÂ÷ò¾¡÷¸û. ¾É¢ôÀð¼, ¾É¢¿¢üÈø, ¾ýÉ¡Ù¨Á ±ý§È ¿øÄ ¾Á¢Æ¢ø ¦Á¡Æ¢¦ÀÂ÷ò¾¢Õì¸Ä¡õ. ¦ÅÚ§Á independent ±ýÚ ¦º¡øž¢ø ¦À¡Õû ÅáÐ. independent of what ±ýÈ §¸ûÅ¢ ¯¼¦É¦ÂØõ. ÀÄ þ¼í¸Ç¢ø þ¾ü¸¡É Å¢¨¼ ¦¾¡ì¸¢ ¿¢ü¸Ä¡õ. þôÀÊò ¦¾¡ì¸¢ ¿¢üÌõ þ¼í¸Ç¢ø Ţξ¨Ä ±ýÀÐ ºÃ¢Â¡¸ «¨ÁÂì ÜÎõ.

º¢Ä ¬í¸¢Ä š츢Âí¸¨Çô À¡÷ì¸Ä¡õ.

India became independent in August 15, 1947.

þí§¸ independent of British rule ±ýÀÐ ¦¾¡ì¸¢ ¿¢ü¸¢ÈÐ. ±É§Å þó¾¢Â¡ 1947 -ø ¬¸ÍÎ 15 -þø Ţξ¨Ä «¨¼ó¾Ð ±ýÚ ¦º¡øÄÄ¡õ. «øÄÐ 1947- ¬¸ÍÎ 15- þø Àó¾õ Å¢Îò¾Ð ±ýÚõ ¦º¡øÄÄ¡õ.

There are 4 independent producers other than the MNC's for this drug in India.
þí§¸ Ţξ¨ÄÔõ ºÃ¢ÅáÐ; ;ó¾¢ÃÓõ ºÃ¢ ÅáÐ. ¾É¢ò¾, ¾É¢ôÀð¼, º¡Ã¡¾, Àó¾¢Ä¡¾ §À¡ýȨž¡ý ºÃ¢ ÅÕõ. ¾É¢ôÀð¼/ ¾É¢ò¾ ±ýÀÐ Á¢¸î ºÃ¢Â¡¸ô ¦À¡ÕóÐõ.

þó¾¢Â¡Å¢ø þó¾ ÁÕó¾¢üÌ ÀýÉ¡ðÎì ÌØÁí¸¨Çò ¾Å¢÷òÐ 4 ¾É¢ò¾ Å¢¨ÇôÀ¡Ç¢¸û ¯ûÇÉ÷.

independence = Àó¾¢Ä¡¨Á; ¾ýÉ¡Ù¨Á; Ţξ¨Ä

freedom ±ýÀ¾üÌõ independence ±ýÀ¾üÌõ ´üÚ¨Á¸û ¿¢¨È þÕó¾¡Öõ Ñϸ¢Â §ÅÚÀ¡Îõ ¯ñÎ.

¸¡ð¼¡¸ô Àâר¼¨Á ±ýÀÐ þÉ¢ þó¾¢Â¡¨Åô ¦À¡Úò¾ Ũâø ±¾¢÷¸¡ÄòÐìÌõ ¯ñÎ; «¨¾ ±ó¿¡Ùõ ¨¸Â¡ÇÄ¡õ; ܼ§Å «¨¾ì ¸¡ôÀ¡üÈ §ÅñÎõ. ¾ýÉ¡Ù¨Á ±ýÀÐ ÅóÐ §º÷óРŢð¼Ð. þÉ¢ þÆ측¾ Ũâø, «¨¾ô ÀüÈ¢ì ¸Å¨Äô À¼§Åñ¼¡õ.

þÐŨà ÜȢ ŢÇì¸í¸û §À¡Ðõ ±ýÚ ±ñϸ¢§Èý. ÐøÄ¢Âõ ¸Õ¾¢ ¸£úì¸ñ¼ ¦º¡ü¸¨Çò ¾Á¢Æ¢ø ÒÆí¸Ä¡õ ±ýÀÐ ±ý ÀâóШÃ.

Liberty = ±Ø×¾¢
freedom = Àâר¼¨Á
independence = Àó¾¢Ä¡¨Á; ¾ýÉ¡Ù¨Á; Ţξ¨Ä

«ýÒ¼ý,
þáÁ.¸¢.

2 comments:

Anonymous said...

நீங்கள் குறிப்பிட்டபடி dom=உடைமை என மொழிபெயர்த்தால்,
UK என்பதை ஒன்றுசேர்ந்த அரசனுடைமை என்றா மொழிபெயர்ப்பது?
வித்யாசமாய்,விநோதமாய் ஒலிக்கிறது...
Martyrdom என்பதை என்ன சொல்லுவோம்?

nathan

Anonymous said...

ஐயா, அப்படியே நேரம் இருக்கையில்

நிவாரணம்
கட்டுமஸ்து
தார்மீகம்
யதார்த்தம்
எதேச்சை

இச்சொற்களுக்கான தமிழ் சொற்களை எழுதினால் நன்றாக இருக்கும்.

nathan