Wednesday, July 28, 2004

புறத்திட்டு நிதி - 5

இந்த அதிகாரத்தில் ஆண்டுப் பணப் பெருக்கு என்பது என்ன என்பதையும், பொதினப் பொலுவு (business profit) என்பது எப்படிக் கணக்கிடப் படுகிறது என்பதையும் பார்ப்போம்.

ஒவ்வொரு பொதினமும் தன்னுடைய புதுக்கக் கொண்மையை (production capacity) பெருக்காமல் வைத்துக் கொள்வதில்லை. ஒவ்வொரு ஆண்டும் எப்படியாவது பாடுபட்டு நேர்த்தித் திறன் (efficiency), புதிய நுட்பியல்(technology), பொறியியல் நெளிவுசுழிவுகள் (flexibilities) ஆகியவற்றைக் கொண்டு தன்னுடைய புதுக்க விளிம்புகளை (production limits) நகர்த்திக் கொண்டு புதுக்கக் கொண்மையைக் கூட்ட முயலுகிறது. இந்த முயற்சியில் தன் நிகரப் பண வருமானத்தில் இருந்து இன்னும் கொஞ்சம் செய்கலன்கள்(equipments) /எந்திரங்களு(machineries)க்கான செலவைக் கூட்டி ஆண்டிற்கான மொத்த முதலீட்டுச் செலவை (total capital expenditures) அதிகரிக்கிறது. எனவே பொதினத்தில் கிடைக்கும் ஆண்டுப் பணப் பெருக்கு (annual cash flow)என்பது கீழே வரும் சமன்பாட்டின் படியே அமைகிறது.

ஆண்டுப் பணப்பெருக்கு A(CF) = A(NCI) - A(TC) ----- சமன் 8

இதுவரை பொதினத்தின் வரவு செலவுகளைப் பணப்பெருக்கு (cash flow) என்ற நோக்கில் பார்த்தோம். இனி பொதினத்தின் வரவு செலவுகளை பொலுவு (profit) என்ற முறையில் பார்ப்போம்.

முதலில் பார்க்கவேண்டியது ஆண்டின் பொதுச் செலவு. இந்தச் செலவு இரண்டு வகைப் படும். முதல் வகைச் செலவு புதுக்கத்தை மானுறுத்தும் போது (மானுறுத்தல் = manufacturing) ஏற்படும் செலவு; இந்தச் செலவு புதுக்கத்தின் அளவைப் பொறுத்தது; புதுக்கம் கூடினால் இந்தச் செலவும் கூடும், புதுக்கம் குறைந்தால் இந்தச் செலவும் குறையும்; இன்னொரு வகைச் செலவு புதுக்கம் இருந்தாலும் இல்லாவிட்டாலும் பொதினத்தில் ஏற்படும் செலவாகும். ஒரு பொதினத்தில் ஆள், அம்பு, பேர் எல்லாம் வைத்துக் கொள்ளுகிறோமே அவற்றால்/அவர்களால் ஏற்படும் செலவு இந்தச் செலவு. இதனைப் பொதுச் செலவு என்று சொல்லுகிறோம்.

எனவே,

ஆண்டின் மொத்தச் செலவு = ஆண்டின் பொதுச்செலவு + ஆண்டின் மானுறுத்தச் செலவு

A(TE) = A(GE) + A(ME) ------ சமன் 9

இனி ஆண்டின் கூட்டப் பொலுவு (gross profit) என்பது விற்பனை(sales)யில் இருந்து, மானுறுத்தச் செலவு (manufacturing expenses), ஐந்தொகைச் சிட்டையில் (balance sheet) எழுதிக் கொள்ளும் ஆண்டுத் தேய்மானக் கொள்ளூகை (annual depreciation charge) போன்றவற்றைக் கழித்தால் வருவது. அதாவது,

ஆண்டின் கூட்டப் பொலுவு A(GP) = A(S) - A(ME) - A(BD) ------ சமன் 10

இப்படிக் கிடைக்கும் ஆண்டின் கூட்டப் பொலுவில் இருந்து ஆண்டின் பொதுச்செலவைக் கழித்தால் ஆண்டின் நிகரப் பொலுவு (annual net profit) கிடைக்கும்.

ஆண்டின் நிகரப் பொலுவு A(NP) = A(GP) - A(GE) ------- சமன் 11

இன்னொரு விதமாகப் பார்த்தால்,

ஆண்டின் நிகரப் பொலுவு A(NP) = A(CI) - A(BD) ------- சமன் 12

இனி, வருமான வரிக்குப் பிறகுள்ள ஆண்டு நிகர நிகரப் பொலுவு (annual net profit after tax) என்பது,

A(NNP) = A(NCI) - A(BD) ------- சமன் 13

என்று ஆகும். A(CI) மற்றும் A(NCI) என்பவை கையில் கிடைக்கக் கூடிய பண வருமானங்கள்; ஆனால் A(NP), A(NNP) போன்றவை ஐந்தொகைச் சிட்டையில் எழுதிக் கொள்ளும் ஆண்டுத் தேய்மானக் கொள்ளூகையைக் கழித்து வருவதால், கொஞ்சம் பிடிபடாதவை; ஒரு மாதிரி நெருடல் அல்லது வெறும் தோற்றம் அந்தத் தொகைகளில் இருக்கிறது. தேய்மானக் கொள்ளுகையை வேறு மாதிரிக் கணக்குச் செய்தால், பொலுவு குறைந்தோ, கூடவோ செய்யும்.

ஒரு பொதினம் நடத்துவுதில் ஆண்டுக் கடைசியில் கையில் எவ்வளவு பணவருமானம் (cash income) கிடைக்கிறது என்பது பொலுவு என்பதைக் காட்டிலும் முகமையான செய்தி; பொதினக் கணக்கிலே பொலுவைக் கூடக் காட்டி என்ன பலன்? கையிலே பணம் இருக்கிறதா என்பதுதான் கேட்கப் படவேண்டிய கேள்வி. வெறுங்கை முழம் போட்டா விதை போடக் காணுமா?

அன்புடன்,
இராம.கி.

In TSCII:

þó¾ «¾¢¸¡Ãò¾¢ø ¬ñÎô À½ô ¦ÀÕìÌ ±ýÀÐ ±ýÉ ±ýÀ¨¾Ôõ, ¦À¡¾¢Éô ¦À¡Ö× (business profit) ±ýÀÐ ±ôÀÊì ¸½ì¸¢¼ô Àθ¢ÈÐ ±ýÀ¨¾Ôõ À¡÷ô§À¡õ.

´ù¦Å¡Õ ¦À¡¾¢ÉÓõ ¾ýÛ¨¼Â ÒÐì¸ì ¦¸¡ñ¨Á¨Â (production capacity) ¦ÀÕ측Áø ¨ÅòÐì ¦¸¡ûž¢ø¨Ä. ´ù¦Å¡Õ ¬ñÎõ ±ôÀÊ¡ÅÐ À¡ÎÀðÎ §¿÷ò¾¢ò ¾¢Èý (efficiency), Ò¾¢Â ÑðÀ¢Âø(technology), ¦À¡È¢Â¢Âø ¦¿Ç¢×ÍƢ׸û (flexibilities) ¬¸¢ÂÅü¨Èì ¦¸¡ñÎ ¾ýÛ¨¼Â ÒÐì¸ Å¢Ç¢õÒ¸¨Ç (production limits) ¿¸÷ò¾¢ì ¦¸¡ñÎ ÒÐì¸ì ¦¸¡ñ¨Á¨Âì Üð¼ ÓÂÖ¸¢ÈÐ. þó¾ ÓÂüº¢Â¢ø ¾ý ¿¢¸Ãô À½ ÅÕÁ¡Éò¾¢ø þÕóÐ þýÛõ ¦¸¡ïºõ ¦ºö¸Äý¸û(equipments) /±ó¾¢Ãí¸Ù(machineries)ì¸¡É ¦ºÄ¨Åì ÜðÊ ¬ñÊü¸¡É ¦Á¡ò¾ ӾģðÎî ¦ºÄ¨Å (total capital expenditures) «¾¢¸Ã¢ì¸¢ÈÐ. ±É§Å ¦À¡¾¢Éò¾¢ø ¸¢¨¼ìÌõ ¬ñÎô À½ô ¦ÀÕìÌ (annual cash flow)±ýÀÐ ¸£§Æ ÅÕõ ºÁýÀ¡ðÊý Àʧ «¨Á¸¢ÈÐ.

¬ñÎô À½ô¦ÀÕìÌ A(CF) = A(NCI) - A(TC) ----- ºÁý 8

þÐŨà ¦À¡¾¢Éò¾¢ý ÅÃ× ¦ºÄ׸¨Çô À½ô¦ÀÕìÌ (cash flow) ±ýÈ §¿¡ì¸¢ø À¡÷ò§¾¡õ. þÉ¢ ¦À¡¾¢Éò¾¢ý ÅÃ× ¦ºÄ׸¨Ç ¦À¡Ö× (profit) ±ýÈ Ó¨È¢ø À¡÷ô§À¡õ.

ӾĢø À¡÷츧ÅñÊÂÐ ¬ñÊý ¦À¡Ðî ¦ºÄ×. þó¾î ¦ºÄ× þÃñΠŨ¸ô ÀÎõ. Ó¾ø Ũ¸î ¦ºÄ× ÒÐì¸ò¨¾ Á¡ÛÚòÐõ §À¡Ð (Á¡ÛÚò¾ø = manufacturing) ²üÀÎõ ¦ºÄ×; þó¾î ¦ºÄ× ÒÐì¸ò¾¢ý «Ç¨Åô ¦À¡Úò¾Ð; ÒÐì¸õ ÜÊÉ¡ø þó¾î ¦ºÄ×õ ÜÎõ, ÒÐì¸õ ̨Èó¾¡ø þó¾î ¦ºÄ×õ ̨ÈÔõ; þý¦É¡Õ Ũ¸î ¦ºÄ× ÒÐì¸õ þÕó¾¡Öõ þøÄ¡Å¢ð¼¡Öõ ¦À¡¾¢Éò¾¢ø ²üÀÎõ ¦ºÄÅ¡Ìõ. ´Õ ¦À¡¾¢Éò¾¢ø ¬û, «õÒ, §À÷ ±øÄ¡õ ¨ÅòÐì ¦¸¡ûÙ¸¢§È¡§Á «ÅüÈ¡ø/«Å÷¸Ç¡ø ²üÀÎõ ¦ºÄ× þó¾î ¦ºÄ×. þ¾¨Éô ¦À¡Ðî ¦ºÄ× ±ýÚ ¦º¡øÖ¸¢§È¡õ.

±É§Å,

¬ñÊý ¦Á¡ò¾î ¦ºÄ× = ¬ñÊý ¦À¡ÐÄ× + ¬ñÊý Á¡ÛÚò¾î ¦ºÄ×

A(TE) = A(GE) + A(ME) ------ ºÁý 9

þÉ¢ ¬ñÊý Üð¼ô ¦À¡Ö× (gross profit) ±ýÀРŢüÀ¨É(sales)¢ø þÕóÐ, Á¡ÛÚò¾î ¦ºÄ× (manufacturing expenses), ³ó¦¾¡¨¸î º¢ð¨¼Â¢ø (balance sheet) ±Ø¾¢ì ¦¸¡ûÙõ ¬ñÎò §¾öÁ¡Éì ¦¸¡û騸 (annual depreciation charge) §À¡ýÈÅü¨Èì ¸Æ¢ò¾¡ø ÅÕÅÐ. «¾¡ÅÐ,

¬ñÊý Üð¼ô ¦À¡Ö× A(GP) = A(S) - A(ME) - A(BD) ------ ºÁý 10

þôÀÊì ¸¢¨¼ìÌõ ¬ñÊý Üð¼ô ¦À¡ÖÅ¢ø þÕóÐ ¬ñÊý ¦À¡ÐĨÅì ¸Æ¢ò¾¡ø ¬ñÊý ¿¢¸Ãô ¦À¡Ö× (annual net profit) ¸¢¨¼ìÌõ.

¬ñÊý ¿¢¸Ãô ¦À¡Ö× A(NP) = A(GP) - A(GE) ------- ºÁý 11

þý¦É¡Õ Å¢¾Á¡¸ô À¡÷ò¾¡ø,

¬ñÊý ¿¢¸Ãô ¦À¡Ö× A(NP) = A(CI) - A(BD) ------- ºÁý 12

þÉ¢, ÅÕÁ¡É ÅâìÌô À¢ÈÌûÇ ¬ñÎ ¿¢¸Ã ¿¢¸Ãô ¦À¡Ö× (annual net profit after tax) ±ýÀÐ,

A(NNP) = A(NCI) - A(BD) ------- ºÁý 13

±ýÚ ¬Ìõ. A(CI) ÁüÚõ A(NCI) ±ýÀ¨Å ¨¸Â¢ø ¸¢¨¼ì¸ì ÜÊ À½ ÅÕÁ¡Éí¸û; ¬É¡ø A(NP), A(NNP) §À¡ýȨŠ³ó¦¾¡¨¸î º¢ð¨¼Â¢ø ±Ø¾¢ì ¦¸¡ûÙõ ¬ñÎò §¾öÁ¡Éì ¦¸¡û騸¨Âì ¸Æ¢òÐ ÅÕž¡ø, ¦¸¡ïºõ À¢ÊÀ¼¡¾¨Å; ´Õ Á¡¾¢Ã¢ ¦¿Õ¼ø «øÄÐ ¦ÅÚõ §¾¡üÈõ «ó¾ò ¦¾¡¨¸¸Ç¢ø þÕ츢ÈÐ. §¾öÁ¡Éì ¦¸¡ûÙ¨¸¨Â §ÅÚ Á¡¾¢Ã¢ì ¸½ìÌî ¦ºö¾¡ø, ¦À¡Ö× Ì¨È󧾡, ܼ§Å¡ ¦ºöÔõ.

´Õ ¦À¡¾¢Éõ ¿¼òÐ×¾¢ø ¬ñÎì ¸¨¼º¢Â¢ø ¨¸Â¢ø ±ùÅÇ× À½ÅÕÁ¡Éõ (cash income) ¸¢¨¼ì¸¢ÈÐ ±ýÀÐ ¦À¡Ö× ±ýÀ¨¾ì ¸¡ðÊÖõ Ó¸¨ÁÂ¡É ¦ºö¾¢; ¦À¡¾¢Éì ¸½ì¸¢§Ä ¦À¡Ö¨Åì Ü¼ì ¸¡ðÊ ±ýÉ ÀÄý? ¨¸Â¢§Ä À½õ þÕ츢Ⱦ¡ ±ýÀо¡ý §¸ð¸ô À¼§ÅñÊ §¸ûÅ¢. ¦ÅÚí¨¸ ÓÆõ §À¡ð¼¡ Å¢¨¾ §À¡¼ì ¸¡ÏÁ¡?

«ýÒ¼ý,
þáÁ.¸¢.

No comments: