Tuesday, April 08, 2025

கவடி> கbaடி

 கவள்>கவள்+து = கவட்டு என்பது நம் உடம்பில், இடுப்பிற்குக் கீழே இரண்டாய்ப் பிரியும் மூட்டுப் பகுதியைக் குறிக்கும். வேடிக்கைச் சொலவடையாய் “கந்தனுக்குப் புத்தி கவட்டுக்குள்ளே” என்கிறோம் அல்லவா? கவட்டு என்பது கவடு என்றும் சுருங்கும், கவட்டை என்றும் நீளும். கவட்டியென்றும் திரியும்.

எந்நேரமும் கூடும் கவட்டைப் போலவே ஒரு அணியினர் வியகம் (>வ்யூகம்) வகுத்து ”மறு அணியிலிருந்து பாடிக்கொண்டே ஏறி வருபவனைக் (ஏறாளி = rider)” கவைத்து அமுக்கிக் கட்டிப்போடும் ஆட்டத்தைக் கவடி என்கிறோம். எதிரணிக்காரன் பாடிவரும் பாட்டிலும் கூடக் “கவடி, கவடி” என்ற சொல் விடாது சொல்லப்படும். கவடி>கbaடியாகி இன்று இந்தியத் துணைக் கண்டம் எங்கணும் பரவி நிற்கிறது. 

கவடிப் பிடிப்பால் அந்த விளையாட்டிற்குப் பெயர் ஏற்பட்டது.

No comments: