Sunday, November 16, 2003

தமிழெனும் கேள்வி

இந்த ஆண்டு ஆகசுடு 15-ல் ”கணினியில் தமிழ்” என்ற விழிப்புணர்ச்சி விழாவை அமீரகத் தமிழர் சிலர் சேர்ந்து திருவாரூரில் நடத்தினார். பாராட்டப் படவேண்டிய நல்ல முயற்சி; இதுபோன்ற உருப்படியான நிகழ்வுகள் பல ஊர்களிலும் நடத்தப் படவேண்டும். கதை, கவிதை, இன்ன பிறவற்றை மட்டுமே நமக்குள் பேசிக் கொண்டு இருப்பதில் மட்டும் பலனில்லை. அதற்கு மேலும் உள்ளவை இது போன்ற விழிப்புணர்வு நிகழ்ச்சிகள். எதிர்காலத்தில் தமிழ் தொடர்ந்து வாழ நம் பங்களிப்புத் தேவை.

நிகழ்ச்சியின் பொழுது ஒரு நூலும் வெளியிடப் பட்டது. அப் பொத்தகத்தில் என் பங்களிப்பாக இருந்த கட்டுரையை உங்கள் வாசிப்பிற்காக இங்கு தருகிறேன்.

அன்புடன்,
இராம.கி.
------------------------------------------------------------------------------------------------
தமிழெனும் கேள்வி

அன்பிற்குரிய வாசகருக்கு,

இம் மலர் உமக்கு வந்துசேர்ந்து, இக் கட்டுரை வரைக்கும் விருப்பத்தோடு நீர் படிக்க முற்பட்டு இருப்பீரானால், தமிழ் மேல் உமக்கு ஏதோ ஒரு பற்று அல்லது அக்கறை உள்ளது என்றுதான் சொல்ல வேண்டும். அப்படியானால் உம்மோடு பேசலாம்; இன்னும் சொன்னால் பேசத்தான் வேண்டும்; உம் போன்றவருடன் கலந்துரையாடாமல் வேறு யாருடன் நான் உரையாடப் போகிறேன்?

தமிழ் மொழியைப் பேச, படிக்க, மற்றும் எழுத எங்கு கற்றுக் கொண்டீர்? உம் பெற்றோரிடம் இருந்தா, ஆசிரியரிடம் இருந்தா, அல்லது உமைச் சுற்றி உள்ள சுற்றம், நட்பில் இருந்தா? நீர் எந்த இடங்களில் எல்லாம் தமிழில் பேசுகிறீர்? எங்கெல்லாம் ஆங்கிலத்தில் பேசுகிறீர்? உம் நெடு நாளைய நண்பரையோ, அல்லது முன்பின் தெரியாத தமிழரையோ பார்க்கும் பொழுது, அக் கணத்தில் நீர் தமிழில் உரையாடுகிறீரா, அல்லது ஆங்கிலத்தில் உரையாடுகிறீரா?

நீர் பேசும் ஆங்கிலத்துள் உமை அறியாமல் தமிழ் ஊடுறுவுகிறதா? அப்படி ஊடுறுவினால் அதை ஒரு நாகரிகம் இல்லாத பட்டிக்காட்டுத் தனம் என்று எண்ணிக் கொஞ்சம் வெட்கப்பட்டு, அதைத் தவிர்க்க முயன்றுள்ளீரா? உம் ஆங்கில வன்மை கூடுதற்காகப் பல்வேறு பயிற்சிகள் செய்ய முற்பட்டுள்ளீரா? உம் வீட்டில் ஆங்கிலம் - ஆங்கிலம் அகரமுதலியை வைத்திருக்கிறீரா? உமக்குத் தெரியாத ஆங்கிலச் சொற்களைப் பயிலும்போது அவற்றின் பொருள் அறிய வேண்டிச் சட்டென்று அகர முதலியைத் தேடுகிறீரா?

ஆங்கிலப் பேச்சில் சிறக்க வேண்டும் என்ற ஒய்யார எண்ணத்தால் உந்தப் பெற்று, உச்சக் கட்டமாக, தம் பெற்றோரோடும் சுற்றத்தாரோடும் இருக்கும் உறவையே கூடச் சில போது முற்றிலும் துண்டித்துக் கொள்ளச் சிலர் முயல்வார்; அவ் விவரங்கெட்ட நிலைக்கு நீர் போனதுண்டோ ? ஆங்கிலம் அறியாப் பெற்றோர், சுற்றத்தார் வாடை உமக்கும், உம் பிறங்கடையருக்கும் (successors) வரக்கூடாது என்று நீர் எண்ணியதுண்டோ ?

உம் பேச்சில் தமிழ் மிகமிகக் குறைந்து இருந்தால் அது எதனால் ஏற்படுகிறது? தமிழும், தமிழன் என்ற அடையாளமும் வேண்டாம் என்று முடிவெடுத்து விலக்குகிறீரா? அல்லது சோம்பலாலும், கவனக் குறைவாலும், ஆங்கிலம் பழகினால் குமுகாயத்தில் ஒரு மேலிடம் கிடைக்கும் என்ற உந்துதலாலும் தமிழை விலக்குகிறீரா? தமிழ் என்பது ஒரு மொழி மட்டுமல்ல, அது தமிழ நாகரிகத்தின் கருவூலம் என்பதை மறுத்து, அது வெறும் கருத்துப் பரிமாற்ற மொழி, இனி வரும் நாட்களில் ஆங்கிலமே போதும் என்று எண்ணுகிறீரா?

இதற்கெல்லாம் ஆம் என நீர் விடையளித்தால் உம்மோடு மேற்கொண்டு நான் உரையாடுவதில் பொருளில்லை; மேற்கு இந்தியத் தீவுகளில் இருந்துகொண்டு நாலைந்து தலைமுறைக்கு அப்புறமும் தன் பெயரை முட்டம்மா என்று வைத்து, "தன் தாத்தா தண்டபாணிக்குக் கொஞ்சம் தமிழ்தெரியும்" என்று சொல்லித் தமிழில் பேச இயலாத ஒரு பெண்ணுக்கும் உமக்கும் மிகு வேறுபாடு இல்லை. வெகு விரைவில் நீர் எமை விட்டுப் பெருந் தொலைவு விலகிப் போய்விடுவீர்; என்றோ ஒருநாள் தமிழராய் இருந்ததற்காக உம்மோடு நாங்கள் அன்பு பாராட்ட முடியும். அவ்வளவே. எங்கிருந்தாலும் வாழ்க, வளமுடன்!

மாறாக மேலுள்ள கேள்விகளுக்கு ஆம் என்று சொல்லாது கொஞ்சமாவது தடுமாறினீர் என்றால் உம்மோடு உரையாடுவதில் இன்னும் பலன் உண்டு. அந்த எண்ணத்தினாலேயே மேலும் இங்கு உரையாடுகிறேன்.

சுற்றம், நட்பு போன்ற இடங்களில் நீர் தமிழ் பேசத் தவித்திருக்கிறீரா? அலுவல் தவிர்த்து மற்றோரோடு நீர் பேசும் உரையாடல்களில் எத்தனை விழுக்காடு தமிழில் இருக்கும்? அடிப்படை வாழ்க்கைச் செய்திகளில் உம்மால் தமிழில் உரையாட முடிகிறதா? தமிழ் பேசும்போது ஆங்கிலம் ஊடுறுவினால் அதைப் பட்டிக்காட்டுத் தனமென எண்ணாது, நாகரிகமென எண்ணுகிறீரா? அந்த ஊடுறுவலைத் தவிர்க்க முடியுமென அறிவீரோ? உம் வீட்டில் தமிழ்-தமிழ் அகரமுதலி உள்ளதா? தமிழ்- ஆங்கிலம் அகரமுதலி உள்ளதா? உமக்குத் தெரியாத் தமிழ்ச்சொற்கள் பயிலும்போது உடனே தமிழ்-தமிழ் அகரமுதலி தேடுகிறீரா?

உம் பெற்றோர் அறிந்த தமிழோடு உம் தமிழை ஒப்பிட்டால் இப்பொழுது அப் பேச்சில் தமிழ் எவ்வளவு தேறும்? 98 விழுக்காடாவது தேறுமா? இரண்டு விழுக்காடு குறைந்தாலேயே ஏழாம் தலைமுறையில் முக்கால் பங்கு தமிழ் "போயே போயிந்தி" என்று உமக்குத் தெரியுமா? எந்த ஒரு மொழியிலும் கிட்டத்தட்ட 85 விழுக்காடு வினையல்லாத பெயர், இடை மற்றும் உரிச் சொற்கள் என்றும் 15 விழுக்காடுகளே வினைச்சொற்கள் என்றும் உமக்குத் தெரியுமா? சொல்வளத்தைக் கூட்டுவது என்பது பெயர்ச்சொற்களை மேலும் மேலும் அறிந்துகொள்வதே என்று கேட்டிருக்கிறீரா? நம் ஊர்ப்பக்கம் நாம் கற்றுக் கொண்டவை கூடப் புழங்கிக் கொண்டே இருக்கவில்லை எனில் மறந்துவிடும் என்று அறிவீரா? வட்டாரத்திற்கு வட்டாரம், தமிழ் ஓரளவு மாறிப் புழங்குகிறது என்று தெரியுமா? இத் தமிழ் நிலைத்திருக்க நாம் என்னெவெலாம் செய்கிறோம் என எண்ணிப் பார்த்துள்ளீரா? தமிழ் என்பது நாம் பழகும் ஒரு மொழி என்பதோடு மட்டுமல்லாது, மேலும் சில கடமைகள் நமக்குண்டு என்று எண்ணிப் பார்த்துள்ளீரா? தமிழ் நமக்கு என்ன தருகிறது? தமிழுக்கு நாம் என்ன தருகிறோம் - என்ற இருபோக்கு நடைமுறையைக் கொஞ்சம் கூர்ந்து பார்ப்போம்.

மொழி என்பது கருத்துப் பரிமாறிக் கொள்ள ஒரு வகையான ஊடகம், மிடையம் என்பதை நாம் எல்லோரும் ஒப்புக் கொள்கிறோம். தமிழர்க்குப் பிறந்த ஒரு குழந்தையை அக் குழந்தையின் பெற்றோருடைய பண்பாட்டுத் தாக்கம் இல்லாத குமுகாயத்தில், தமிழறியாக் குமுகாயத்தில் வளர்த்தோம் எனில், அது தமிழப் பிள்ளையாக அன்றி, வேறுவகைப் பிள்ளையாகத் தான் வளரும்; ஆனால் தமிழ் என்பது வெறும் ஊடகமா? மீனுக்கு அதைச் சுற்றிலும் உள்ள நீர் வெறும் ஊடகமா? பின் புலமா? உப்பில்லாத நல்ல தண்ணீரில் வளர்ந்த கெண்டை மீனைக் கொண்டுபோய் உப்பங் கழியில் போட்டால் அது உயிர் வாழமுடியுமோ? பின்புலத்தை மீறிய வாழ்வுண்டோ ? ஊடகம், ஊடகம் என்று சொல்லி மொழியின் பங்கைக் குறைத்து விட்டோ ம் அல்லவா? மொழி என்பது ஊடகம் மட்டுமல்ல; அது பின்புலமும் கூட. இப் பின்புலம் ஒரு சூழ்நிலையை உருவாக்குகிறது. நம் சிந்தனையை ஒருவிதக் கட்டிற்குக் கொண்டுவருகிறது. நாம் மொழியால் கட்டுப்படுகிறோம். எல்லா மாந்தரும் தாம் வாழும் சூழ்நிலைக்கு ஏற்பத் தானே வாழமுடியும்? பிறக்கும் போது இருந்த பின்புலத்தின் தாக்கம் (அது பெற்றோர் வழியாகவோ, மற்றோர் வழியாகவோ) ஏற்பட்டபின், தமிழை ஒதுக்கி ஒரு தீவு போல வேறு மொழியின் பின்புலத்தில் வளர முடியுமோ? இப்பொழுது நீர் தமிழ் நாட்டில் பிறந்து விட்டீர், அல்லது வேறு நாட்டில் பிறந்தும் உம் பெற்றோர் தமிழ்ப் பின்புலத்தை விடாது காப்பாற்றி வருகிறார், இந்நிலையில் நீர் தமிழை விடமுடியுமா? ஒன்று கிணற்றைத் தாண்டாது இருக்கலாம், அல்லது முற்றிலும் தாண்டலாம்; இடைப் பட்ட நிலையில் பாதிக் கிணறு தாண்டி உயிர்வாழ முடியுமோ?

தமிழும் அது போலத்தான். தமிழ் எனும் பின்புலம் தமிழ்ப் பண்பாடு, இலக்கியங்கள், இலக்கணங்கள், சிந்தனைகள் ஆகிவற்றின் தொகுப்பைக் குறிக்கிறது. அவற்றைத் தெரிந்துகொள்ளாது தமிழ் அறியாதவனாக இருக்கலாம்; அன்றித் தெரிந்துகொண்டு தமிழ் அறிந்தவனாக இருக்கலாம். இடைப்பட்ட நிலை என்பது ஒருவகையில் ”திரிசங்கு சொர்க்கமே!” தமிழ் கற்பது என்பது ஒரு பண்பாட்டுத் தொடர்ச்சி. உம்மோடு இப்பழக்கம் நின்று போகவா நீர் இதைக் கற்றுக் கொண்டீர்? இல்லையே? வாழையடி வாழையாய் இம்மொழி பேசும் பழக்கம் தொடர வேண்டும் என்றுதானே உமக்கு மற்றவர் கற்றுக் கொடுத்தார்? அப்படியானால், இத் தொடர்ச்சியைக் காப்பாற்ற யாருக்கெல்லாம் நீர் தமிழ்பேசக் கற்றுக் கொடுத்தீர்? குழந்தையாய் இருந்த போது கற்றுக் கொண்ட "நிலா!நிலா! ஓடி வா" வையும், "கைவீசம்மா, கைவீசு" வையும் இன்னொரு தமிழ்க் குழந்தைக்கு நீர் கற்றுக் கொடுத்திருக்கிறீரா? வாலறுந்த நரி, சுட்ட பழம் - சுடாத பழம் போன்ற கதைகளை இன்னொருவருக்குச் சொல்லிக் கொடுத்தீரா? ஆத்திச்சூடி, திருக்குறள், நாலடியார் போன்றவற்றிலிருந்து ஒரு சிலவாவது மற்றவர்க்குச் சொல்ல முடியுமா? இக்கால பாரதி, பாரதிதாசன் ஏதாவது படித்திருக்கிறீரா? கொஞ்சம் மு.வ., கொஞ்சம் திரு.வி.க. படித்திருக்கிறீரா? ஓரளவாவது புதுமைப் பித்தன், மௌனி, இலா.ச.ரா, செயகாந்தன் படித்திருக்கிறீரா? பல்வேறு காலத் தமிழ்ப் பாட்டுக்கள், மற்றும் உரைநடைகளைப் படித்திருக்கிறீரா?

"தமிழ் சோறு போடுமா?" என்று சிலர் கேட்கிறார்; தமிழ் கற்றுக் கொடுக்கும் ஒரு சிலருக்குச் சோறு போடக் கூடும்; தமிழ்த் தாளிகைக்காரருக்குச் சோறு போடக் கூடும்; இன்னும் சிலருக்குச் சோறு போடக் கூடும்; ஆனால் பொதுவான மற்றவருக்குச் சோறு போடாவிட்டாலும், சிந்தனையைக் கற்றுக் கொடுக்கிறது என்று அறிவீரா? மேலே நானசொன்ன தமிழ் ஆக்கங்களை எல்லாம் படிக்கும் போது, தமிழ் வாழ்க்கை முறையைக் கற்றுக் கொள்ளுகிறீர் அல்லவா? ஏரணம் (logic) என்பது சிந்தனை வளர்ச்சியில் காரண காரியம் பார்க்கும் முறை; இதை வேறு ஒரு மொழியின் மூலம் கற்றுக் கொள்வது ஓரளவு முடியும் என்றாலும் தாய்மொழியில் கற்பது எளிது என்று அறிவீரா?

சிந்தனை முறை கூட மொழியால் மாறுகிறது என்று அறிவீரோ? நான் அவனைப் பார்த்தேன் என்று சொல்லும் போது கொஞ்சம் நின்று எண்ணிப் பார்த்துச் சொல்ல வேண்டியுள்ளது அல்லவா? செய்யும் பொருள், செயப்படும் பொருள் ஆகியவற்றை முன்னிலைப் படுத்திப் பிறகுதான் தமிழில் வினையைச் சொல்கிறோம். இந்திய மொழிகள் எல்லாவற்றிலும், குறிப்பாக தமிழிய மொழிகளில், இச் சிந்தனைமுறை இயல்பானது. இதை SOV (Subject - Object - Verb) என்று மொழியியலார் சொல்வார். மாறாக மேலை மொழிகளில் SVO - ”நான் பார்த்தேன் அவனை” என்ற முறையில் வாக்கியத்தை அமைக்க வேண்டும். SOV சிந்தனை முறை இருக்கும் ஒருவன் SVO பழக்கம் இருக்கும் ஒருவனைச் சட்டென்று புரிந்து கொள்வது கடினமே. சப்பானியர் முற்றிலும் SOV பழக்கம் உடையவர். அவர் வெள்ளைக் காரரைப் புரிந்து கொள்வதும், வெள்ளைக் காரர் சப்பானியரைப் புரிந்துகொள்வதும் மிகக் கடினம் என்பார். அதே பொழுது நாம் ஓரோ முறை இலக்கியத்தில் SVO முறையைப் பயன்படுத்துகிறோம். சீதையைப் பார்த்து வந்த சேதியைச் சொல்லும் அனுமன் இராமனிடம் சொல்வதாகக் கம்பன் சொல்வான்: "கண்டேன் சீதையை"; இதுபோன்ற சொல்லாட்சிகள் தமிழ் இலக்கியத்தில் பல இடங்களில் உண்டு. அதாவது பெரும்பான்மை SOV சிந்திக்கும் நாம் ஓரோ வழி SVO போலும் சிந்திக்கிறோம். இந்தியர் கிழக்கிற்கும் மேற்கிற்கும் இடையில் பாலமாக இருப்பது இதனால் தான் போலும். என்ன சொல்ல வருகிறேன் என்றால், மொழி நம் சிந்தனையைக் கட்டுப் படுத்துகிறது. ”நீர் உம் பெற்றோருக்கு எத்தனையாவது பிள்ளை?” என்ற கேள்வி தமிழில்  இயல்பாக எழும். ஆங்கிலத்தில் இதைச் சுற்றி வளைத்தே சொல்லவியலும். இதுபோல ஆங்கிலத்தில் சொல்வது சிலபோதுகளில் தமிழில் நேரடியாய்ச் சொல்ல முடியாது.

இந்தச் சிந்தனை ஒரு வகையில் பார்த்தால் பண்பாட்டு வருதியானது (ரீதியானது); மொழி வருதியானது. இதில் ஒரு மொழியின் வருதி உயர்ந்தது; இன்னொரு மொழியின் வருதி தாழ்ந்தது என்பது தவறான கூற்று. நம் வருதி நமக்கு உகந்தது என்பதை நாம் உணரவேண்டும்; இன்னும் சொன்னால் தமிழ் என்னும் வருதி தமிழனுக்கு ஒரு அடையாளம்; ஒரு முகவரி. தமிழ் நமக்கு இதைத்தான் கொடுக்கிறது.

சரி, தமிழுக்கு நாம் என்ன கொடுக்கிறோம்? அதாவது தமிழின் பண்பாட்டு வருதிக்கு நாம் என்ன செய்கிறோம்? நமக்கு அடுத்த தலைமுறையினருக்கு என்ன தருகிறோம்? இருக்கின்ற சொத்தோடு கூட, என்ன சேர்த்து வைத்துப் போகிறோம்? இன்றைக்குத் தமிழ் என்பது பழம் பெருமை பேசுதற்கும், பழைய இலக்கியம், இலக்கணம், அண்மைக்காலக் கதை, கவிதை, கட்டுரை, துணுக்குகள், கொஞ்சம் அரசியல், ஏராளம் திரைப்படம் பற்றி அறிய மட்டுமே பயன்பட்டு வருவது ஒரு பெருங்குறை என்று அறிவீரா? நம்மை அறியாமலேயே அலுவலுக்கு ஆங்கிலமும், நுட்பவியலுக்கு ஆங்கிலமும், மற்றவற்றிற்குத் தமிழும் என ஆக்கிவைத்திருப்பது எவ்வளவு சரி? புதுப் புது அறிவுகளைக் கலைகளைத் தமிழில் சொல்லவில்லை என்றால் தமிழ் குறைபட்டுப் போகாதா? அப்புறம் தமிழில் என்ன இருக்கிறது என்ற நம் பிறங்கடைகள் கேட்க மாட்டாரா? நாம் சொல்லிப் பார்த்து அதன் மூலம் மொழி வளம் கூட்டவில்லை என்றால் நம் மொழி பயனில்லாத ஒன்று என இன்னும் ஒரு தலை முறையில் அழிந்து போகாதா? நாம் தமிழுக்கு என்ன செய்தோம்? நமக்குத் தெரிந்த செய்திகளை, அறிவைத் தமிழில் சொல்லிப் பார்க்கிறோமா? ஆங்கிலம் தெரியாத நம் மக்களுக்குப் புரிய வைக்கிறோமா? எல்லாவற்றிற்கும் ஆங்கிலமே புழங்கி நம் எதிர்காலத்தை நாமே போக்கிக் கொள்ளுகிறோமே, அது எதனால்?

இந்தக் கட்டுரையில் கேள்விகளை மட்டுமே எழுப்பிக் கொண்டு இருக்கிறேன். அதற்கான விடைகளை நீங்கள் தேடவேண்டும் என்ற எண்ணம் கருதியே கேள்விகளை எழுப்புகிறேன். எண்ணிப் பாருங்கள்.

தமிழுக்கு நீர் என்ன செய்தீர்? கணி வழிக் கல்வி, கணிப் பயன்பாடு என எத்தனையோ படிக்கப் போகிறீர். இக் கணியுகத்திலும் தமிழ் தலை நிமிர்ந்து நிற்க முடியும், நீர் ஒத்துழைத்தால். செய்வீரா?

அன்புடன்,
இராம.கி.

In TSCII:

þó¾ ¬ñÎ ¬¸ÍÎ 15-ø ¸½¢É¢Â¢ø ¾Á¢ú ±ýÈ Å¢Æ¢ôÒ½÷ Ţơ¨Å «Á£Ã¸ò ¾Á¢Æ÷¸û º¢Ä÷ §º÷óÐ ¾¢ÕÅ¡åâø ¿¼ò¾¢É¡÷¸û. À¡Ã¡ð¼ô À¼§ÅñÊ ¿øÄ ÓÂüº¢; þЧÀ¡ýÈ ¯ÕôÀÊÂ¡É ¿¢¸ú׸û ÀÄ °÷¸Ç¢Öõ ¿¼ò¾ô À¼§ÅñÎõ. ¸¨¾, ¸Å¢¨¾, þýÉ À¢ÈÅü¨È ÁðΧÁ ¿ÁìÌû §Àº¢ì ¦¸¡ñÎ þÕôÀ¾¢ø ÁðÎõ ÀÄÉ¢ø¨Ä. «¾üÌ §ÁÖõ ¯ûǨŠþЧÀ¡ýÈ Å¢Æ¢ôÒ½÷× ¿¢¸ú¸û. ¾Á¢ú ±¾¢÷¸¡Äò¾¢ø ¦¾¡¼÷óÐ Å¡Æ ¿õ Àí¸Ç¢ôÒò §¾¨Å.

¿¢¸ú¢ý ¦À¡ØÐ ´Õ áÖõ ¦ÅǢ¢¼ô Àð¼Ð. «ó¾ô ¦À¡ò¾¸ò¾¢ø ±ý Àí¸Ç¢ôÀ¡¸ þÕó¾ ¸ðΨè ¯í¸û Å¡º¢ôÀ¢ü¸¡¸ þíÌ ¾Õ¸¢§Èý.

«ýÒ¼ý,
þáÁ.¸¢.
------------------------------------------------------------------------------------------------
¾Á¢¦ÆÛõ §¸ûÅ¢

«ýÀ¢üÌâ šº¸ÕìÌ,

þó¾ ÁÄ÷ ¯í¸ÙìÌ ÅóÐ §º÷óÐ, þó¾ì ¸ðΨà ŨÃìÌõ Å¢ÕôÀò§¾¡Î ¿£í¸û ÀÊì¸ ÓüÀðÎ þÕôÀ£÷¸Ç¡É¡ø, ¾Á¢ú §Áø ¯í¸ÙìÌ ²§¾¡ ´Õ ÀüÚ «øÄÐ «ì¸¨È þÕ츢ÈÐ ±ýÚ ¾¡ý ¦º¡øÄ §ÅñÎõ. «ôÀÊ¡ɡø ¯í¸§Ç¡Î §ÀºÄ¡õ; þýÛõ ¦º¡ýÉ¡ø §Àºò¾¡ý §ÅñÎõ; ¯í¸¨Çô §À¡ýÈÅ÷¸Ù¼ý ¸ÄóÐ ¯¨Ã¡¼¡Áø §ÅÚ Â¡Õ¼ý ¿¡ý ¯¨Ã¡¼ô §À¡¸¢§Èý?

¾Á¢ú ¦Á¡Æ¢¨Âô §Àº, ÀÊì¸, ÁüÚõ ±Ø¾ ±íÌ ¸üÚì ¦¸¡ñË÷¸û? ¯í¸û ¦Àü§È¡Ã¢¼õ þÕó¾¡, ¬º¢Ã¢Ââ¼õ þÕó¾¡, «øÄÐ ¯í¸¨Çî ÍüÈ¢ ¯ûÇ ÍüÈõ, ¿ðÀ¢ø þÕó¾¡? ¿£í¸û ±ó¾ þ¼í¸Ç¢ø ±øÄ¡õ ¾Á¢Æ¢ø §À͸¢È£÷¸û? ±í¦¸øÄ¡õ ¬í¸¢Äò¾¢ø §À͸¢È£÷¸û? ¯í¸û ¦¿Î ¿¡¨Ç ¿ñÀ¨Ã§Â¡, «øÄÐ ÓýÀ¢ý ¦¾Ã¢Â¡¾ ¾Á¢Æ¨Ã§Â¡ À¡÷ìÌõ ¦À¡ØÐ, «ó¾ì ¸½ò¾¢ø ¿£í¸û ¾Á¢Æ¢ø ¯¨Ã¡θ¢È£÷¸Ç¡, «øÄÐ ¬í¸¢Äò¾¢ø ¯¨Ã¡θ¢È£÷¸Ç¡?

¿£í¸û §ÀÍõ ¬í¸¢Äò¾¢üÌû ¯í¸¨Ç «È¢Â¡Áø ¾Á¢ú °ÎÚ׸¢È¾¡? «ôÀÊ °ÎÚŢɡø «¨¾ ´Õ ¿¡¸Ã¢¸õ þøÄ¡¾ ÀðÊì ¸¡ðÎò ¾Éõ ±ýÚ ±ñ½¢ì ¦¸¡ïºõ ¦Åð¸ô ÀðÎì ¦¸¡ñÎ, «¨¾ò ¾Å¢÷ì¸ ÓÂýÈ¢Õ츢ȣ÷¸Ç¡? ¯í¸û ¬í¸¢Ä Åý¨Á ÜΞü¸¡¸ô Àø§ÅÚ À¢üº¢¸û ¦ºö ÓüÀðÊÕ츢ȣ÷¸Ç¡? ¯í¸û Å£ðÊø ¬í¸¢Äõ - ¬í¸¢Äõ «¸ÃӾĢ¨Â ¨Åò¾¢Õ츢ȣ÷¸Ç¡? ¯í¸ÙìÌò ¦¾Ã¢Â¡¾ ¬í¸¢Äî ¦º¡ü¸¨Çô À¢Öõ §À¡Ð «ÅüÈ¢ý ¦À¡Õû «È¢Â §ÅñÊî ºð¦¼ýÚ «¸Ã ӾĢ¨Âò §¾Î¸¢È£÷¸Ç¡?

¬í¸¢Äô §Àø º¢Èì¸ §ÅñÎõ ±ýÈ ´ö¡à ±ñ½ò¾¡ø ¯ó¾ô ¦ÀüÚ, ¯îºì ¸ð¼Á¡¸, ¾í¸û ¦Àü§È¡§Ã¡Îõ ÍüÈò¾¡§Ã¡Îõ þÕìÌõ ¯È¨Å§Â Ü¼î º¢Ä §À¡Ð ÓüÈ¢Öõ ÐñÊòÐì ¦¸¡ûÇî º¢Ä÷ ÓÂÖÅ¡÷¸û; «ó¾ Å¢ÅÃí ¦¸ð¼ ¿¢¨ÄìÌ ¿£í¸û §À¡ÉÐñ§¼¡? ¬í¸¢Äõ «È¢Â¡ô ¦Àü§È¡÷, ÍüÈò¾¡Ã¢ý Å¡¨¼§Â ¯í¸éìÌõ, ¯í¸û À¢Èí¸¨¼¸ÙìÌõ (successors) ÅÃìܼ¡Ð ±ýÚ ¿£í¸û ±ñ½¢ÂÐñ§¼¡?

¯í¸û §Àø ¾Á¢ú Á¢¸ Á¢¸ì ̨ÈóÐ þÕó¾¡ø «Ð ±¾É¡ø ²üÀθ¢ÈÐ? ¾Á¢Øõ, ¾Á¢Æý ±ýÈ «¨¼Â¡ÇÓõ §Åñ¼¡õ ±ýÚ ÓʦÅÎòРŢÄì̸¢È£÷¸Ç¡? «øÄÐ §º¡õÀÄ¡Öõ, ¸ÅÉì ̨ÈÅ¡Öõ, ¬í¸¢Äõ ÀƸ¢É¡ø ÌÓ¸¡Âò¾¢ø ´Õ §ÁÄ¢¼õ ¸¢¨¼ìÌõ ±ýÈ ¯óоġÖõ ¾Á¢¨Æ Å¢Äì̸¢È£÷¸Ç¡? ¾Á¢ú ±ýÀÐ ´Õ ¦Á¡Æ¢ ÁðÎÁøÄ, «Ð ¾Á¢Æ ¿¡¸Ã¢¸ò¾¢ý ¸ÕçÄõ ±ýÀ¨¾ ÁÚòÐ, «Ð ¦ÅÚõ ¸ÕòÐô ÀâÁ¡üÈ ¦Á¡Æ¢, þÉ¢ ÅÕõ ¿¡ð¸Ç¢ø ¬í¸¢Ä§Á §À¡Ðõ ±ýÚ ±ñϸ¢È£÷¸Ç¡?

þ¾ü¦¸øÄ¡õ ¬õ ±ýÚ ¿£í¸û Å¢¨¼ÂÇ¢ò¾¡ø ¯í¸§Ç¡Î §Áü¦¸¡ñÎ ¿¡ý ¯¨Ã¡Îž¢ø ¦À¡Õû þø¨Ä; §ÁüÌ þó¾¢Âò ¾£×¸Ç¢ø þÕóЦ¸¡ñÎ ¿¡¨ÄóÐ ¾¨ÄÓ¨ÈìÌ «ôÒÈÓõ ¾ý ¦À¨à Óð¼õÁ¡ ±ýÚ ¨ÅòÐì ¦¸¡ñÎ "¾ý ¾¡ò¾¡ ¾ñ¼À¡½¢ìÌì ¦¸¡ïÝñÎ ¾Á¢ú ¦¾Ã¢Ôõ" ±ýÚ ¦º¡øÄ¢ò ¾Á¢Æ¢ø §Àº þÂÄ¡¾ ´Õ ¦ÀñÏìÌõ ¯í¸ÙìÌõ Á¢Ìó¾ §ÅÚÀ¡Î þø¨Ä. ¦ÅÌ Å¢¨ÃÅ¢ø ¿£í¸û ±í¸¨Ç Å¢ðÎô ¦ÀÕó ¦¾¡¨Ä× Å¢Ä¸¢ô §À¡öÅ¢ÎÅ£÷¸û; ±ý§È¡ ´Õ ¿¡û ¾Á¢Æáö þÕó¾¾ü¸¡¸ ¯í¸§Ç¡Î ¿¡í¸û «ýÒ À¡Ã¡ð¼ ÓÊÔõ. «ùÅǧÅ. ±í¸¢Õó¾¡Öõ Å¡ú¸, ÅÇÓ¼ý!

Á¡È¡¸ §Á§Ä ¯ûÇ §¸ûÅ¢¸ÙìÌ ¬õ ±ýÚ ¦º¡øÄ¡Áø ¦¸¡ïºÁ¡ÅÐ ¾ÎÁ¡È¢É£÷¸û ±ýÈ¡ø ¯í¸§Ç¡Î ¯¨Ã¡Îž¢ø þýÛõ ÀÄý ¯ñÎ. «ó¾ ±ñ½ò¾¢É¡§Ä§Â §ÁÖõ þíÌ ¯¨Ã¡θ¢§Èý.

ÍüÈõ, ¿ðÒ §À¡ýÈ þ¼í¸Ç¢ø ¿£í¸û ¾Á¢ú §Àºò ¾Å¢ò¾¢Õ츢ȣ÷¸Ç¡? «ÖÅø ¾Å¢÷òÐ Áü§È¡§Ã¡Î ¿£í¸û §ÀÍõ ¯¨Ã¡¼ø¸Ç¢ø ±ò¾¨É Å¢Ø측Π¾Á¢Æ¢ø þÕìÌõ? «ÊôÀ¨¼ Å¡úì¨¸î ¦ºö¾¢¸Ç¢ø ¯í¸Ç¡ø ¾Á¢Æ¢ø ¯¨Ã¡¼ Óʸ¢È¾¡? ¾Á¢ú §ÀÍõ §À¡Ð ¬í¸¢Äõ °ÎÚŢɡø «¨¾ô ÀðÊì ¸¡ðÎò ¾Éõ ±ýÚ ±ñ½¡Áø, ¿¡¸Ã¢¸õ ±ýÚ ±ñϸ¢È£÷¸Ç¡? «ó¾ °ÎÚŨÄò ¾Å¢÷ì¸ ÓÊÔõ ±ýÚ «È¢Å£÷¸§Ç¡? ¯í¸û Å£ðÊø ¾Á¢ú-¾Á¢ú «¸ÃӾĢ þÕ츢Ⱦ¡? ¾Á¢ú- ¬í¸¢Äõ «¸ÃӾĢ þÕ츢Ⱦ¡? ¯í¸ÙìÌò ¦¾Ã¢Â¡¾ ¾Á¢úî ¦º¡ü¸¨Çô À¢Öõ §À¡Ð ¯¼§É ¾Á¢ú-¾Á¢ú «¸ÃӾĢ¨Âò §¾Î¸¢È£÷¸Ç¡?

¯í¸û ¦Àü§È¡÷ «È¢ó¾ ¾Á¢§Æ¡Î ¯í¸û ¾Á¢¨Æ ´ôÀ¢ð¼¡ø þô¦À¡ØÐ «ó¾ô §Àø ¾Á¢ú ±ùÅÇ× §¾Úõ? 98 Å¢Ø측¼¡ÅÐ §¾ÚÁ¡? þÃñΠŢØ측Π̨È󾡧ħ ²Æ¡ÅÐ ¾¨ÄӨȢø Ó측ø ÀíÌ ¾Á¢ú "§À¡§Â §À¡Â¢ó¾¢" ±ýÚ ¯í¸ÙìÌò ¦¾Ã¢ÔÁ¡? ±ó¾ ´Õ ¦Á¡Æ¢Â¢Öõ ¸¢ð¼ò¾ð¼ 85 Å¢Ø측ΠިÉÂøÄ¡¾ ¦ÀÂ÷, þ¨¼ ÁüÚõ ¯Ã¢î ¦º¡ü¸û ±ýÚõ 15 Å¢Ø측θ§Ç Å¢¨É¡ü¸û ±ýÚõ ¯í¸ÙìÌò ¦¾Ã¢ÔÁ¡? ¦º¡øÅÇò¨¾ì ÜðÎÅÐ ±ýÀÐ ¦ÀÂ÷¡ü¸¨Ç §ÁÖõ §ÁÖõ «È¢óЦ¸¡ûÙŧ¾ ±ýÚ §¸ðÊÕ츢ȣ÷¸Ç¡? ¿õ °÷ôÀì¸õ ¿¡õ ¸üÚì ¦¸¡ñ¼¨Å ܼô ÒÆí¸¢ì ¦¸¡ñ§¼ þÕì¸Å¢ø¨Ä ±ýÈ¡ø ÁÈóÐÅ¢Îõ ±ýÚ «È¢Å£÷¸Ç¡? ¾Á¢ú Åð¼¡Ãò¾¢üÌ Åð¼¡Ãõ µÃÇ× Á¡È¢ô ÒÆí̸¢ÈÐ ±ýÚ ¦¾Ã¢ÔÁ¡? þó¾ò ¾Á¢ú ¿¢¨Äò¾¢Õì¸ ¿¡õ ±ý¦É¦ÅøÄ¡õ ¦ºö¸¢§È¡õ ±ýÚ ±ñ½¢ô À¡÷ò¾¢Õ츢ȣ÷¸Ç¡? ¾Á¢ú ±ýÀÐ ¿¡õ ÀÆÌõ ´Õ ¦Á¡Æ¢ ±ýÀ§¾¡Î ÁðÎÁøÄ¡Áø, §ÁÖõ º¢Ä ¸¼¨Á¸û ¿ÁìÌ ¯ñÎ ±ýÚ ±ñ½¢ô À¡÷ò¾¢Õ츢ȣ÷¸Ç¡? ¾Á¢ú ¿ÁìÌ ±ýÉ ¾Õ¸¢ÈÐ? ¾Á¢ØìÌ ¿¡õ ±ýÉ ¾Õ¸¢§È¡õ ±ýÈ þÕ§À¡ìÌ ¿¨¼Ó¨È¨Âì ¦¸¡ïºõ Ü÷óÐ À¡÷ô§À¡õ.

¦Á¡Æ¢ ±ýÀÐ ¸ÕòÐô ÀâÁ¡È¢ì ¦¸¡ûÇ ´Õ Ũ¸Â¡É °¼¸õ, Á¢¨¼Âõ ±ýÀ¨¾ ¿¡õ ±ø§Ä¡Õõ ´ôÒì ¦¸¡ûÙ¸¢§È¡õ. ¾Á¢Æ÷ìÌô À¢Èó¾ ´Õ ÌÆ󨾨 «ó¾ì ÌÆó¨¾Â¢ý ¦Àü§È¡÷¸Ù¨¼Â ÀñÀ¡ðÎò ¾¡ì¸õ þøÄ¡¾ ´Õ ÌÓ¸¡Âò¾¢ø, ¾Á¢ú «È¢Â¡¾ ´Õ ÌÓ¸¡Âò¾¢ø ÅÇ÷ò§¾¡õ ±ýÚ ¨ÅòÐì ¦¸¡ûÙí¸û, «Ð ¾Á¢Æô À¢û¨Ç¡¸ «øÄ¡Áø §ÅÚ Å¨¸ô À¢û¨Ç¡¸ò¾¡ý ÅÇÕõ; ¬É¡ø ¾Á¢ú ±ýÀÐ ¦ÅÚõ °¼¸Á¡? Á£ÛìÌ «¨¾î ÍüÈ¢Öõ ¯ûÇ ¿£÷ ¦ÅÚõ °¼¸Á¡? À¢ý ÒÄÁ¡? ¯ôÀ¢øÄ¡¾ ¿øÄ ¾ñ½£Ã¢ø ÅÇ÷ó¾ ´Õ ¦¸ñ¨¼ Á£¨Éì ¦¸¡ñÎ §À¡ö ¯ôÀí ¸Æ¢Â¢ø §À¡ð¼¡ø «Ð ¯Â¢÷ Å¡Æ ÓÊÔ§Á¡? À¢ý ÒÄò¨¾ Á£È¢Â ´Õ Å¡ú× ¯ñ§¼¡? °¼¸õ, °¼¸õ ±ýÚ ¦º¡øÄ¢ ¦Á¡Æ¢Â¢ý Àí¨¸ì ̨ÈòРŢ𧼡õ «øÄÅ¡? ¦Á¡Æ¢ ±ýÀÐ °¼¸õ ÁðÎÁøÄ; «Ð ´Õ À¢ýÒÄÓõ ܼ. þó¾ô À¢ý ÒÄõ ´Õ Ýú¿¢¨Ä¨Â ¯ÕÅ¡ì̸¢ÈÐ. «Ð ¿õ º¢ó¾¨É¨Â ´Õ Å¢¾ì ¸ðÊüÌì ¦¸¡ñÎÅÕ¸¢ÈÐ. ¿¡õ ¦Á¡Æ¢Â¡ø ¸ðÎô Àθ¢§È¡õ. Á¡ó¾Õõ ܼ ¾¡õ Å¡Øõ Ýú¿¢¨ÄìÌ ²üÀò¾¡§É þÕì¸ ÓÊÔõ? À¢ÈìÌõ §À¡Ð þÕìÌõ À¢ý ÒÄò¾¢ý ¾¡ì¸õ («Ð ¦Àü§È¡÷ ÅƢ¡¸§Å¡, Áü§È¡÷ ÅƢ¡¸§Å¡) ²üÀð¼À¢ý, ¾Á¢¨Æ ´Ð츢 ´Õ ¾£× §À¡Ä §Å¦È¡Õ ¦Á¡Æ¢Â¢ý À¢ýÒÄò¾¢ø ÅÇà ÓÊÔ§Á¡? þô¦À¡ØÐ ¿£í¸û ¾Á¢ú ¿¡ðÊø À¢ÈóРŢðË÷¸û, «øÄÐ §ÅÚ ¿¡ðÊø À¢ÈóÐõ ¯í¸û ¦Àü§È¡÷ ¾Á¢úô À¢ýÒÄò¨¾ Å¢¼¡Ð ¸¡ôÀ¡üÈ¢ ÅÕ¸¢È¡÷¸û, þó¾ ¿¢¨Ä¢ø ¿£í¸û ¾Á¢¨Æ Å¢¼ ÓÊÔÁ¡? ´ýÚ ¸¢½ü¨Èò ¾¡ñ¼¡Áø þÕì¸Ä¡õ, «øÄÐ ÓüÈ¢Öõ ¾¡ñ¼Ä¡õ; þ¨¼ô Àð¼ ¿¢¨Ä¢ø À¡¾¢ì ¸¢½ü¨Èò ¾¡ñÊ ¯Â¢÷ Å¡Æ ÓÊÔ§Á¡?

¾Á¢Øõ «Ð §À¡Äò¾¡ý. ¾Á¢ú ±Ûõ À¢ýÒÄõ ¾Á¢úô ÀñÀ¡Î, þÄ츢Âí¸û, þÄ츽í¸û, º¢ó¾¨É¸û ¬¸¢ÅüÈ¢ý ¦¾¡Ìô¨Àì ÌȢ츢ÈÐ. «Åü¨Èò ¦¾Ã¢óЦ¸¡ûÇ¡Áø ¾Á¢ú «È¢Â¡¾ÅÉ¡¸ þÕì¸Ä¡õ; «øÄÐ ¦¾Ã¢óÐ ¦¸¡ñÎ ¾Á¢ú «È¢ó¾ÅÉ¡¸ þÕì¸Ä¡õ. þ¨¼ôÀð¼ ¿¢¨Ä ±ýÀÐ ´ÕŨ¸Â¢ø ¾¢Ã¢ºíÌ ¦º¡÷츧Á! ¾Á¢ú ¸üÀÐ ±ýÀÐ ´Õ ÀñÀ¡ðÎò ¦¾¡¼÷. ¯í¸§Ç¡Î þó¾ô ÀÆì¸õ ¿¢ýÚ §À¡¸Å¡ ¿£í¸û þ¨¾ì ¸üÚì ¦¸¡ñË÷¸û? þø¨Ä§Â? Å¡¨ÆÂÊ Å¡¨Æ¡ö þó¾ ¦Á¡Æ¢ §ÀÍõ ÀÆì¸õ ¦¾¡¼Ã §ÅñÎõ ±ýÚ¾¡§É ¯í¸ÙìÌ ÁüÈÅ÷¸û ¸üÚì ¦¸¡Îò¾¡÷¸û? «ôÀÊ¡ɡø, þó¾ò ¦¾¡¼÷¨Âì ¸¡ôÀ¡üÈ Â¡Õ즸øÄ¡õ ¿£í¸û ¾Á¢ú §Àºì ¸üÚì ¦¸¡Îò¾£÷¸û? ÌÆó¨¾Â¡ö þÕó¾ §À¡Ð ¸üÚì ¦¸¡ñ¼ "¿¢Ä¡!¿¢Ä¡! µÊ Å¡" ¨ÅÔõ, "¨¸Å£ºõÁ¡, ¨¸Å£Í" ¨ÅÔõ þý¦É¡Õ ¾Á¢úì ÌÆó¨¾ìÌ ¿£í¸û ¸üÚì ¦¸¡Îò¾¢Õ츢ȣ÷¸Ç¡? Å¡ÄÚó¾ ¿Ã¢, Íð¼ ÀÆõ - ͼ¡¾ ÀÆõ §À¡ýÈ ¸¨¾¸¨Ç þý¦É¡ÕÅÕìÌî ¦º¡øÄ¢ì ¦¸¡Îò¾¢Õ츢ȣ÷¸Ç¡? ¬ò¾¢î ÝÊ, ¾¢ÕìÌÈû, ¿¡ÄÊ¡÷ §À¡ýÈÅüÈ¢ø þÕóÐ ´Õ º¢ÄÅ¡ÅÐ ÁüÈÅ÷ìÌî ¦º¡øÄ ÓÊÔÁ¡? þó¾ì ¸¡Ä À¡Ã¾¢, À¡Ã¾¢¾¡ºý ²¾¡ÅÐ ÀÊò¾¢Õ츢ȣ÷¸Ç¡? ¦¸¡ïºõ Ó.Å., ¦¸¡ïºõ ¾¢Õ.Å¢.¸. ÀÊò¾¢Õ츢ȣ÷¸Ç¡? µÃÇÅ¡ÅÐ ÒШÁô À¢ò¾ý, ¦ÁªÉ¢, Ä¡.º.á, ¦ºÂ¸¡ó¾ý ÀÊò¾¢Õ츢ȣ÷¸Ç¡? Àø§ÅÚ ¸¡Äò ¾Á¢úô À¡ðÎì¸û, ÁüÚõ ¯¨Ã¿¨¼¸¨Çô ÀÊò¾¢Õ츢ȣ÷¸Ç¡?

"¾Á¢ú §º¡Ú §À¡ÎÁ¡?" ±ýÚ º¢Ä÷ §¸ð¸¢È¡÷¸û; ¾Á¢ú ¸üÚì ¦¸¡ÎìÌõ ´Õ º¢ÄÕìÌî §º¡Ú §À¡¼ì ÜÎõ; ¾Á¢úò ¾¡Ç¢¨¸ì¸¡ÃÕìÌî §º¡Ú §À¡¼ì ÜÎõ; þýÛõ ´Õ º¢ÄÕìÌî §º¡Ú §À¡¼ì ÜÎõ; ¬É¡ø ¦À¡ÐÅ¡É ÁüÈÅÕìÌî §º¡Ú §À¡¼¡Å¢ð¼¡Öõ, º¢ó¾¨É¨Âì ¸üÚì ¦¸¡Î츢ÈÐ ±ýÚ «È¢Å£÷¸Ç¡? §Á§Ä ¿¡ý ¦º¡ýÉ ¾Á¢ú ¬ì¸í¸¨Ç ±øÄ¡õ ÀÊìÌõ §À¡Ð, ¾Á¢ú Å¡ú쨸 ӨȨÂì ¸üÚì ¦¸¡ûÙ¸¢È£÷¸û «øÄÅ¡? ²Ã½õ (logic) ±ýÀÐ º¢ó¾¨É ÅÇ÷¢ø ¸¡Ã½ ¸¡Ã¢Âõ À¡÷ìÌõ Ó¨È; þ¨¾ §ÅÚ ´Õ ¦Á¡Æ¢Â¢ý ãÄõ ¸üÚì ¦¸¡ûÙÅÐ µÃÇ× ÓÊÔõ ±ýÈ¡Öõ ¾¡ö¦Á¡Æ¢Â¢ø ¸üÀÐ ±Ç¢Ð ±ýÚ «È¢Å£÷¸Ç¡?

º¢ó¾¨É Ó¨È Ü¼ ¦Á¡Æ¢Â¡ø Á¡Ú¸¢ÈÐ ±ýÚ «È¢Å£÷¸§Ç¡? ¿¡ý «Å¨Éô À¡÷ò§¾ý ±ýÚ ¦º¡øÖõ §À¡Ð ¦¸¡ïºõ ¿¢ýÚ ±ñ½¢ô À¡÷òÐî ¦º¡øÄ §ÅñÊ þÕ츢ÈÐ «øÄÅ¡? ¦ºöÔõ ¦À¡Õû, ¦ºÂôÀÎõ ¦À¡Õû ¬¸¢ÂÅü¨È ÓýÉ¢¨Äô ÀÎò¾¢ô À¢È̾¡ý ¾Á¢Æ¢ø Å¢¨É¨Âî ¦º¡øÖ¸¢§È¡õ. þó¾¢Â ¦Á¡Æ¢¸û ±øÄ¡ÅüÈ¢Öõ, ÌÈ¢ôÀ¡¸ ¾Á¢Æ¢Â ¦Á¡Æ¢¸Ç¢ø, þó¾î º¢ó¾¨É Ó¨È þÂøÀ¡ÉÐ. þ¨¾ SOV (Subject - Object - Verb) ±ýÚ ¦Á¡Æ¢Â¢ÂÄ¡÷ ¦º¡øÖÅ¡÷¸û. Á¡È¡¸ §Á¨Ä ¦Á¡Æ¢¸Ç¢ø SVO - ¿¡ý À¡÷ò§¾ý «Å¨É ±ýÈ Ó¨È¢ø š츢Âò¨¾ «¨Áì¸ §ÅñÎõ. SOV º¢ó¾¨É Ó¨È þÕìÌõ ´ÕÅý SVO ÀÆì¸õ þÕìÌõ ´ÕŨÉî ºð¦¼ýÚ ÒâóÐ ¦¸¡ûÙÅÐ ¸ÊɧÁ. ºôÀ¡É¢Â÷¸û ÓüÈ¢Öõ SOV ÀÆì¸õ ¯¨¼ÂÅ÷¸û. «Å÷¸û ¦Åû¨Çì ¸¡Ã÷¸¨Çô ÒâóÐ ¦¸¡ûÙÅÐõ, ¦Åû¨Çì ¸¡Ã÷¸û ºôÀ¡É¢Â¨Ãô ÒâóЦ¸¡ûÙÅÐõ Á¢¸ì ¸ÊÉõ ±ýÀ¡÷¸û. «§¾ ¦À¡ØÐ ¿¡õ µ§Ã¡ Ó¨È þÄ츢Âò¾¢ø SVO ӨȨÂô ÀÂýÀÎòи¢§È¡õ. º£¨¾¨Âô À¡÷òÐ Åó¾ §º¾¢¨Âî ¦º¡øÖõ «ÛÁý þáÁÉ¢¼õ ¦º¡øÖž¡¸ì ¸õÀý ¦º¡øÖÅ¡ý: "¸ñ§¼ý º£¨¾¨Â"; þÐ §À¡ýÈ ¦º¡øġ𺢸û ¾Á¢ú þÄ츢Âò¾¢ø ÀÄ þ¼í¸Ç¢ø ¯ñÎ. «¾¡ÅÐ ¦ÀÕõÀ¡ý¨Á SOV ±ýÈ º¢ó¾¢ìÌõ ¿¡õ µ§Ã¡ ÅÆ¢ SVO ±ýÀÐ §À¡Öõ º¢ó¾¢ì¸¢§È¡õ. þó¾¢Â÷¸û ¸¢Æ츢üÌõ §Áü¸¢üÌõ þ¨¼Â¢ø À¡ÄÁ¡¸ þÕôÀÐ þ¾É¡ø ¾¡ý §À¡Öõ. ±ýÉ ¦º¡øÄ ÅÕ¸¢§Èý ±ýÈ¡ø, ¦Á¡Æ¢ ¿õ º¢ó¾¨É¨Âì ¸ðÎô ÀÎòи¢ÈÐ. ¿£ ¯ý ¦Àü§È¡ÕìÌ ±ò¾¨É¡ÅÐ À¢û¨Ç ±ýÈ §¸ûÅ¢ ¾Á¢Æ¢ø Á¢¸ þÂøÀ¡¸ ±Øõ. ¬í¸¢Äò¾¢ø þ¨¾î ÍüÈ¢ ŨÇòÐò¾¡ý ¦º¡øÄ þÂÖõ. þÐ §À¡Ä ¬í¸¢Äò¾¢ø ¦º¡øÖÅÐ º¢Ä§À¡Ð¸Ç¢ø ¾Á¢Æ¢ø §¿ÃÊ¡öî ¦º¡øÄ ÓÊ¡Ð.

þó¾î º¢ó¾¨É ´Õ Ũ¸Â¢ø À¡÷ò¾¡ø ÀñÀ¡ðÎ ÅÕ¾¢Â¡ÉÐ (㾢¡ÉÐ); ¦Á¡Æ¢ ÅÕ¾¢Â¡ÉÐ. þ¾¢ø ´Õ ¦Á¡Æ¢Â¢ý ÅÕ¾¢ ¯Â÷ó¾Ð; þý¦É¡Õ ¦Á¡Æ¢Â¢ý ÅÕ¾¢ ¾¡úó¾Ð ±ýÀÐ ¾ÅÈ¡É ÜüÚ. ¿õ ÅÕ¾¢ ¿ÁìÌ ¯¸ó¾Ð ±ýÀ¨¾ ¿¡õ ¯½Ã§ÅñÎõ; þýÛõ ¦º¡ýÉ¡ø ¾Á¢ú ±ýÛõ ÅÕ¾¢ ¾Á¢ÆÛìÌ ´Õ «¨¼Â¡Çõ; ´Õ Ó¸Åâ. ¾Á¢ú ¿ÁìÌ þ¨¾ò¾¡ý ¦¸¡Î츢ÈÐ.

ºÃ¢, ¾Á¢ØìÌ ¿¡õ ±ýÉ ¦¸¡Î츢§È¡õ? «¾¡ÅÐ ¾Á¢Æ¢ý ÀñÀ¡ðÎ ÅÕ¾¢ìÌ ¿¡õ ±ýÉ ¦ºö¸¢§È¡õ? ¿ÁìÌ «Îò¾ ¾¨ÄӨȢÉÕìÌ ±ýÉ ¾Õ¸¢§È¡õ? þÕ츢ýÈ ¦º¡ò§¾¡Î ܼ, ±ýÉ §º÷òÐ ¨ÅòÐô §À¡¸¢§È¡õ? þý¨ÈìÌò ¾Á¢ú ±ýÀÐ ÀÆõ ¦ÀÕ¨Á §À;üÌõ, À¨Æ þÄ츢Âõ, þÄ츽õ, «ñ¨Á측Äì ¸¨¾, ¸Å¢¨¾, ¸ðΨÃ, ÐÏì̸û, ¦¸¡ïºõ «Ãº¢Âø, ²Ã¡Çõ ¾¢¨ÃôÀ¼õ ÀüÈ¢ «È¢Â ÁðΧÁ ÀÂýÀðÎ ÅÕÅÐ ´Õ ¦ÀÕíÌ¨È ±ýÚ «È¢Å£÷¸Ç¡? ¿õ¨Á «È¢Â¡Á§Ä§Â «ÖÅø ±ýÀ¾üÌ ¬í¸¢ÄÓõ, ÑðÀÅ¢Âø ±ýÀ¾üÌ ¬í¸¢ÄÓõ, ÁüÈÅüÈ¢üÌò ¾Á¢Øõ ±É ¬ì¸¢¨Åò¾¢ÕôÀÐ ±ùÅÇ× ºÃ¢? ÒÐô ÒÐ «È¢×¸¨Çì ¸¨Ä¸¨Çò ¾Á¢Æ¢ø ¦º¡øÄÅ¢ø¨Ä ±ýÈ¡ø ¾Á¢ú ̨ÈÀðÎô §À¡¸¡¾¡? «ôÒÈõ ¾Á¢Æ¢ø ±ýÉ þÕ츢ÈÐ ±ýÈ ¿õ À¢Èí¸¨¼¸û §¸ð¸ Á¡ð¼¡÷¸Ç¡? ¿¡õ ¦º¡øÄ¢ô À¡÷òÐ «¾ý ãÄõ ¦Á¡Æ¢ ÅÇõ Üð¼Å¢ø¨Ä ±ýÈ¡ø ¿õ ¦Á¡Æ¢ ÀÂÉ¢øÄ¡¾ ´ýÚ ±ýÚ þýÛõ ´Õ ¾¨Ä ӨȢø «Æ¢óÐ §À¡¸¡¾¡? ¿¡õ ¾Á¢ØìÌ ±ýÉ ¦ºö§¾¡õ? ¿ÁìÌò ¦¾Ã¢ó¾ ¦ºö¾¢¸¨Ç, «È¢¨Åò ¾Á¢Æ¢ø ¦º¡øÄ¢ô À¡÷츢§È¡Á¡? ¬í¸¢Äõ ¦¾Ã¢Â¡¾ ¿õ Áì¸ÙìÌô Òâ ¨Å츢§È¡Á¡? ±øÄ¡ÅüÈ¢üÌõ ¬í¸¢Ä§Á ÒÆí¸¢ ¿õ ±¾¢÷¸¡Äò¨¾ ¿¡§Á §À¡ì¸¢ì ¦¸¡ûÙ¸¢§È¡§Á, «Ð ±¾É¡ø?

þó¾ì ¸ðΨâø §¸ûÅ¢¸¨Ç ÁðΧÁ ±ØôÀ¢ì ¦¸¡ñÎ þÕ츢§Èý. «¾ü¸¡É Å¢¨¼¸¨Ç ¿£í¸û §¾¼§ÅñÎõ ±ýÈ ±ñ½õ ¸Õ¾¢§Â §¸ûÅ¢¸¨Ç ±ØôÒ¸¢§Èý. ±ñ½¢ô À¡Õí¸û.

¾Á¢ØìÌ ¿£í¸û ±ýÉ ¦ºö¾£÷¸û? ¸½¢ ÅÆ¢ì ¸øÅ¢, ¸½¢ô ÀÂýÀ¡Î ±É ±ò¾¨É§Â¡ ÀÊì¸ô §À¡¸¢È£÷¸û. þó¾ì ¸½¢Ô¸ò¾¢Öõ ¾Á¢ú ¾¨Ä ¿¢Á¢÷óÐ ¿¢ü¸ ÓÊÔõ, ¿£í¸û ´òШÆò¾¡ø. ¦ºöÅ£÷¸Ç¡?

«ýÒ¼ý,
þáÁ.¸¢.

No comments: