faith, trust, belief, hope என்ற நான்கு சொற்களையும் நம்பிக்கை என்றே சொல்லி நகர்வது நம்மிடையே இருக்கும் ஒப்பேற்றும் போக்கால் அமைகிறது. தமிழில் விதப்பான சொற்களை அறிந்து கொள்ளாமல், பொதுமைச் சொற்களை மட்டுமே வைத்து எப்படியோ பூசிமெழுகிச் சொல்லிவிட்டு நகர்ந்து விடுகிறோம். நமக்குத் தெரிந்த தமிழ்ச் சொற்றொகுதிகளைக் கூட்டிக் கொள்ளாமல், தெரிந்த சொற்களையும் மறதி, சோம்பல், ”தமிழ் தானே?” என்ற அலட்சியம், பிறமொழிப் புலமை காட்ட விழையும் ஒயின்மை, ஆகியவற்றால் போக்கிக் கொண்டிருக்கிறோம்.
தமிழ்நடை துல்லியம் பெறவேண்டுமெனில் நம்மிடம் இருக்கும் தமிழ்ச் சொல் தொகுதிகளைக் கூட்டிக்கொள்ள வேண்டும். அதற்குத் தமிழ் அகர முதலிகளை விடாது புரட்டிக்கொண்டே இருக்கவேண்டும். கொஞ்சம் பழந்தமிழ் நூல்களை, குறிப்பாகச் சங்கம், திருமுறைகள், நாலாயிரப் பனுவல், கம்பன், இன்னும் பல நல்ல தமிழ்நூல்களைச் சொல்லாட்சிக்காகவே பயிலவேண்டும். தமிங்கிலம், மணிப்பவளம் போன்றவற்றைத் தவிர்க்க வேண்டும்.
சொல்துல்லியம் என்பது ஒரு தேடல். முதலில் faith இற்கு வருவோம்.
faith: c.1250, "duty of fulfilling one's trust," from O.Fr. feid, from L. fides "trust, belief," from root of fidere "to trust," from PIE base *bhidh-/*bhoidh- (cf. Gk. pistis; see bid). For sense evolution, see belief. Theological sense is from 1382; religions called faiths since c.1300. Faith-healer is from 1885. Old Faithful geyser named 1870 by explorer Gen. H.D. Washburn, Surveyor-General of the Montana Territory, in ref. to the regularity of its outbursts.
இதைப் பற்று என்று தமிழிற் சொல்லலாம். இதன் வேர் PIE வேரோடும் இணைந்துவரும். பற்று என்பது ஒரு ஆளின் மேலோ, ஒரு தெய்வத்தின் மேலோ, அன்றி ஒரு கொள்கையின் மேலோ, ஏற்படுவது. பற்றுக் கொண்டவரும், பற்றிற்குக் காரணமானவரும் தங்களுள் ஒருவருக்கொருவர் பிணைக்கப் பட்டதாகவே கருதிக் கொள்கிறார்கள். எனவே ஒருவர் மற்றவர்க்குக் கடமைப் பட்டதாகவும் கூட இந்த உறவு புரிந்து கொள்ளப் படுகிறது. the faithful = பற்றாளர்; yours faithfully = பற்றுடன்,
அடுத்த சொல் trust: c.1200, from O.N. traust "help, confidence," from P.Gmc. *traust- (cf. O.Fris. trast, Du. troost "comfort, consolation," O.H.G. trost "trust, fidelity," Ger. Trost "comfort, consolation," Goth. trausti "agreement, alliance"). Related to O.E. treowian "to believe, trust," and treowe "faithful, trusty" (see true). Meaning "businesses organized to reduce competition" is recorded from 1877. The verb (c.1225) is from O.N. treysta "to trust." Trust-buster is recorded from 1903. Trustee in the sense of "person who is responsible for the property of another" is attested from 1653. Trustworthy is first attested 1808.
தமிழில் நடந்தது என்னும் பொருளில் உறுதல், உற்றுதல் என்ற தன்வினை, பிறவினைச் சொற்கள் உண்டு. உற்றது என்பது truth என்ற பொருள் கொள்ளும். உண்மை என்ற மெய்ப்பொருள் சொல்லும் இதனின்று கிளைத்ததே. உற்றோர் என்பவர் those who are truthful to you. உற்றதில் இருந்து உறவு என்றசொல்லும் பிறந்தது. அரத்த உறவு கொண்டவர்கள் நமக்கு உண்மையோடு இருப்பார்கள் என்ற கருத்தில் முதலில் எழுந்து, பின் தலைகீழ் முறையில் உண்மையோடு இருப்பவரெல்லோம் உறவினர் போன்றவரே என்ற கருத்தில் உற்றோர் என்ற சொல் எழுந்தது. உற்றோர்/உற்றம் = the trustworthy, சுற்றோர்/சுற்றம் = relations மற்றோர்/மற்றம் = the others

------------ trust = ----------------------- உற்றம் [இதைச் சுற்றி வளைத்து அறக்கட்டளை என மொழிபெயர்த்துக் கொண்டிருக்கிறோம். charities என்பதற்கு மட்டும் அறக்கட்டளை என்ற சொல்லைப் பயன்படுத்தலாம்.] yours truly = உண்மையுடன் [இதை உற்றுடன் என்றுஞ் சொல்லலாம்.]
belief: c.1175, replaced O.E. geleafa, from W.Gmc. *ga-laubon (cf. O.S. gilobo, M.Du. gelove, O.H.G. giloubo, Ger. glaube), from *galaub- "dear, esteemed." The prefix was altered on analogy of the verb. The distinction of the final consonant from that of believe developed 15c. Belief used to mean "trust in God," while faith meant "loyalty to a person based on promise or duty" (a sense preserved in keep one's faith, in good (or bad) faith and in common usage of faithful, faithless, which contain no notion of divinity). But faith, as cognate of L. fides, took on the religious sense beginning in 14c. translations, and belief had by 16c. become limited to "mental acceptance of something as true," from the religious use in the sense of "things held to be true as a matter of religious doctrine" (c.1225).
ஒன்றை விரும்பி அதன்மேல் வயப்பட்டிருப்பது belief, அதிலிருந்து வழுவாமல் இருப்பதும் முகன்மையாகக் கருதப்படுகிறது.. வயத்தல் = விரும்புதல். வயப்பு என்ற சொல் belief என்பதற்கு மிகச் சரியாக இருக்கும். வயத்தல்/வயப்படுதல் என்ற வினைகளை ஒட்டி வயம்புதல் என்பது to believe என்பதைக் குறிக்கும் தன்வினைச் சொல்லாகும். ”அது நடக்கும் என்றே நான் வயம்புகிறேன்” = I believe that wi;l happen.
hope: O.E. hopian "wish, expect, look forward (to something)," of unknown origin, a general Low Ger. word (cf. O.Fris. hopia, M.L.G., M.Du. hopenதை ; M.H.G. hoffen "to hope" was borrowed from Low Ger. Some suggest a connection with hop (v.) on the notion of "leaping in expectation."
நம்பிக்கை என்ற சொல்லை இதற்கு இணையாய் ஆளலாம். நம்புதல் என்பது நள்>நய்>நயம்பு>நயம்புதல்> = விரும்புதல் என்ற வினையில் இருந்து திரிந்து எழுந்த சொல் என்று பாவாணர் சொல்லுவார். நயன்மை, நயதி>நீதி என்ற பிற சொற்களும் நயத்தல் வினையில் இருந்து பிறந்தவை. “இது நடக்கும் என்ற எதிர்பார்ப்பே” நம்புதலாகும். அந்த எதிர்பார்ப்பிற்குள் ஒரு விழைவும் அடங்கியிருக்கிறது. faith gives hope என்ற வாசகத்தைப் “பற்று நம்பிக்கையைத் தருகிறது” என்று மொழியாக்க முடியும்.
அன்புடன்,
இராம.கி.
1 comment:
மிகச்சிறந்த விளக்கம் ஐயா. என் நன்றிகளை உரித்தாக்குகின்றேன் ஐயா.
Post a Comment