புலம்பெயர் தமிழர் எனும் போது அக்கூட்டுச் சொல்லில் வரும் புலம், தமிழர் காலங் காலமாய் தொன்று தொட்டு இருந்துவரும் தமிழகம், தமிழீழம் ஆகிய இரண்டையே குறிக்கிறது. இவ்விரு நிலங்கள் தவிர்த்து வேறு நிலங்களில் தமிழர் இன்று வசிக்கும்போது அவை புலம்பெயர்ந்த இடங்கள் ஆகின்றன. பெயர்தல் என்பது இடம்விட்டு இடம் நகர்தலைக் குறிக்கிறது. மரபு சார்ந்த இவ்விடங்களை விட்டு வேறுநிலங்களிற் குடியேறும்போது இவர் நாற்றுகள் ஆகின்றனர், வித்துகள் ஆகின்றனர். இலத்தீன் வழி உருவான diaspora என்ற ஆங்கிலச் சொல்
1876, from Gk. diaspora "dispersion," from diaspeirein "to scatter about, disperse," from dia- "about, across" (see dia-) + speirein "to scatter" (see sprout). The Greek word was used in Septuagint in Deut. xxviii.25. A Hebrew word for it is galuth "exile." Related: Diasporic.
என்று அமைகிறது. இதில் வரும் spore என்பது வித்துக்களைக் குறிக்கிறது. ஓர் இடத்தில் வித்தாகி இன்னோரிடத்தில் முளைவிடுகிறார். dia என்பது உலகின் குறுக்கே பல்வேறு இடங்களில் உள்ள இவரின் இருப்பைக் குறிக்கிறது.
sprout (v.)
O.E. -sprutan (in asprutan "to sprout"), from P.Gmc. *spreutanan (cf. O.S. sprutan, O.Fris. spruta, M.Du. spruten, O.H.G. spriozan, Ger. spreissen "to sprout"), from PIE base *sper- "to strew" (cf. Gk. speirein "to scatter," spora "a scattering, sowing," sperma "sperm, seed," lit. "that which is scattered;" O.E. spreawlian "to sprawl," -sprædan "to spread," spreot "pole;" Armenian sprem "scatter;" O.Lith. sprainas "staring;" Lett. spriezu "I span, I measure"). The noun is attested from c.1300.
diaspora விற்குத் தமிழ்ச்சொல் இணைதேடும் நாம் வெளிநாட்டார் புரிதலில் தொடங்கவேண்டியதில்லை. நம்புரிதல் வேறுபார்வையில் அமையலாம். காட்டாக, ”துமிக்க முடியாதது” என்பது மேல்நாட்டுப் பார்வை. அல்துமம்> அதுமம் = atom. அண்ணி/நெருங்கி அணுவிக் கிடப்பது தமிழர் பார்வை. அண்ணுதல்>அணு. இரண்டும் இருவேறு பார்வைகள் இருவேறு சொற்கள் இரண்டுஞ் சரியானவை. அவருடையது negation of an assertion. நம்முடையது affirmation of an assertion. ஒன்று உயர்த்தி மற்றது தாழ்த்தி என்ற பொருள் கிடையாது. இதேபோல diaspora விற்கான நம் சொல் வேறு பார்வையில் அமையலாம். ஆங்கிலச் சொல் dia எனும் வெளிப் புறத்திற் தொடங்குகிறது. தமிழர் பார்வை தமிழரின் மரபுப் புலத்தில் இருந்து தொடங்குகிறது.
வீரகேசரியின் ”புலச்சிதறல்” என்பது நல் தொடக்கம். ஆனால் சிதறல் என்று ஆக்கி வெறுமைப்பொருள் கட்டுவது சற்று நெருடலாய் இருக்கிறது. சிதறல் என்ற சொல்லைக் காட்டிலும் துளித்தல், தூவல், தெளித்தல் போன்றவையும், இன்னுஞ் சிறப்பாகத் தெறித்தல் என்ற சொல்லையும் எண்ணிப் பார்க்கலாம். தெறி என்பது சொல்லுதற்கு மிக எளிது ஈரெழுத்து நிறையசையால் ஆன இச்சொல் சொல்ல வந்த கருத்தைச் சுருக்கமாய்த் தந்துவிடும்.
புலத்தெறியர் = புலத்திலிருந்து தெறிக்கப் பட்ட மக்கள். = diaspora. தெறித்தது என்பது சிதறலைப் போல் வெறுமைப் பொருளைத் தோற்றுவிக்காது. அது உணர்த்தவுஞ் செய்யும்.
”கண்ணகி அணிமணிக் காற்சிலம் புடைப்ப
மன்னவன் வாய்முதற் தெறித்தது மணியே!”
என்பது சிலப்பதிகாரத்தில் வழக்குரை காதை அடிகளாகும். சிலம்பு தெறித்த போது பொட்டென உண்மையைத் தெரிவிக்கவும் செய்தது. சில நேரங்களிற் புலம் என்ற முன்னொட்டுச் சொல்லாட்சியிற் தேவையில்லை. தெறியர் என்ற சொல் கூட diaspora - வைச் சட்டென உணர்த்தும்.
”தெறிதமிழ்க் கூட்டம் இன்று வெளியில்நின்று தமிழினத்திற்கு உழைக்கிறது.”
.
பொதுவாய் இதுபோன்ற சொற்களைக் கொஞ்சகாலம் பழகியவுடன் மேலுஞ் சுருக்கலாம். காட்டாக அலுவலகத்தை அலுவமென்றும், தொழில் நுட்பத்தை நுட்பம்/நுட்பியல் என்றும், மின்சாரத்தை மின் என்றும் இன்று சுருக்குகிறோம் அல்லவா? அதுபோல் நாட்பட நாட்பட புலத்தை முன்னொட்டாய்ச் சொல்ல வேண்டாம். (weblog, blog ஆகவில்லையா? அதுபோல் தமிழிலும் ஆகலாம்.) தமிழ்நடை வளர இதுபோன்ற சுருக்கங்கள் பழக வேண்டும்.
அன்புடன்,
இராம.கி.

1 comment:
எனக்கு ஒருபக்கம் சிரிப்பு வருகுது, உந்த தெறிச்ச எண்ட சொல்லை நினைக்க.
பேச்சுவழக்கிலை —- தண்ணி தெறிக்கும்.
தெறிச்சவன் எண்டால் குழப்படிகாறன்.
தெறிப்பார் எண்டு திட்டினால் நாசமாய்ப்போவார் எண்ட கருத்து.
ஆரின்ரை வாக்கிலை சனி இருந்திச்சோ எண்டு வெப்பிசாரமாயும் கிடக்கு.
தெறிச்சதுகள் எண்டு சொல்லிச்சொல்லி எக்கணம் எங்கடை சனமெல்லாம் பலநாடுகளிலையும் தெறிச்சுப்போய்க் கிடக்கு.
Post a Comment