உம்முதலெனில் பொருந்துதல், கூடுதலென்று பொருள் கொள்ளும். ”அவனும் நானும், இனியனுமாய் பள்ளிக்கூடம் சென்றோம்.” இங்கே உம் எனும் உருபு கூட்டப்பொருளைக் குறிக்கிறது. உம்>அம் என்றாகி, அம்முதலுங் கூடப் பொருந்தலைக் குறிக்கும். அம்>அமை; அமைதல் = பொருந்தல். தெலுங்கில் அம்முதல் என்பது "ஒருபொருளின் மதிப்பில் உடன்பட்டு விற்றல்" என்று பொருள்கொள்ளும். அம்முதலில் வந்ததே தமிழிலுள்ள சிறப்புச்சொல்லான அங்காடி. தெலுங்குச்சொல் தெரியாது போயிருந்தால், அங்காடி எப்படி வந்ததென நமக்குத் தெரியாமலே இருக்கும். உம்முதலின் முன்னே சகரம் சேர்த்தமையலாம். சும்>சும்மை என்பது மிகுதியைக் குறிக்கும். சும்மைக்கு முந்திய ’சும்முதல்’ எனும் வினைச்சொல் (கும்முதலைப் போல்) மிகுத்தலைக் குறித்திருக்க வேண்டும். [மிகுத்தலில் இருந்து கூட்டப்பொருளும் பருத்தற் பொருளும் இயல்பாக வரும்.] சும்முதல் தொடர்பான பெயர்ச் சொற்களைப் பதிந்த அகரமுதலிகள் வினைச்சொல்லைப் பதிவாக்கவில்லை. வியப்பு உறுகிறோம்.] சும்மையொட்டி, சுமை, சுமடு, சும்மாடு, சுமத்தலென்று பல்வேறு சொற்களும் அகரமுதலிகளிற் பதிவாகியுள்ளன.
சம் என்ற சொல்லிலிருந்து சமமென்ற சொல்லுமெழும். சமம்போன்ற அடிப்படைச்சொல்லைத் தமிழ் கடன்வாங்கியிருக்க வழியில்லை. சம்முதல், சமத்தல், சமலுதல் = ஒன்றைப்போல் இன்னொன்றாய் ஒருங்கிருத்தல் என்பதற்கான வினைச்சொல் இந்தையிரோப்பியனிலும் நேரடியாயில்லை. same என்ற பெயர்ச்சொல் மட்டுமே சுற்றிவளைத்துக் கூடுதல், உடனிருத்தல் பொருளில் எழுந்துள்ளது. உடன் இருப்பன ஒன்றுபோல் இருக்கவேண்டும் என்று புரிந்துகொள்கிறோம்.
.
perhaps abstracted from O.E. swa same "the same as," but more likely from O.N. same, samr "same," both from P.Gmc. *samon (cf. O.S., O.H.G., Goth. sama; O.H.G. samant, Ger. samt "together, with," Goth. samana "together," Du. zamelen "to collect," Ger. zusammen "together"), from PIE *samos "same," from base *sem- "one, together" (cf. Skt. samah "even, level, similar, identical;" Avestan hama "similar, the same;" Gk. hama "together with, at the same time," homos "one and the same," homios "like, resembling," homalos "even;" L. similis "like;" O.Ir. samail "likeness;" O.C.S. samu "himself"). O.E. had lost the pure form of the word; the modern word replaced synonymous ilk (q.v.).
இதேகருத்தையும் சமமென்ற சொல்லையும் மட்டுமின்றி, இன்னும் பல சொற்களையும் சேர்த்து ஒட்டுமொத்தமாக ’சமயம்’ என்ற தலைப்பில் நண்பர் ஆசீப்பின் வேண்டுகோளுக்கிணங்கி அவர்களின் கானல் சிறப்பிதழில் எழுதினேன். பின் அதை என் வலைப்பதிவிலும் பதிந்தேன். கீழே சுட்டிகள் கொடுத்திருக்கிறேன்.
http://valavu.blogspot.com/2006/03/1.html
http://valavu.blogspot.com/2006/03/2.html
http://valavu.blogspot.com/2006/03/3.html
http://valavu.blogspot.com/2006/03/4.html
http://valavu.blogspot.com/2006/03/5.html
http://valavu.blogspot.com/2006/03/6.html
இக்கட்டுரைத் தொடரிற் சொல்லியிருப்பதை மீண்டுஞ் சொல்வதிற் பொருள் இல்லை. எனவேதான் சுட்டிகள் கொடுக்கிறேன். சமமென்ற சொல்லிற்கு இணையாகத் திராவிட மொழிகள் பலவற்றிலும் [சமம் - மலையாளம், சம-கன்னடம், படகர், சமமு-தெலுங்கு] சொற்களுள்ளன. சமத்தை ஒட்டிய பல சொற்களும் மற்ற திராவிடமொழிகளிலுண்டு. அவற்றில் சிலவற்றை பர்ரோ-எமெனோவும் பதிவுசெய்துள்ளார். வெறும் ஒற்றைச்சொல்லை மட்டும் பார்க்கும் பழக்கத்தை அருள்கூர்ந்து நிறுத்தித் தொடர்புடைய பல்வேறு சொற்களைத் திராவிட மொழிகளிற் பார்க்கப் பழகுங்கள். இத்தனை மொழிகளில் இக்கருத்தும், கருத்தின் வளர்ச்சியும் இருந்தால் அது முந்து திராவிடத்திலும் இருந்திருக்குமென அறிவூகம் (intuition) சொல்லும். [முந்து தமிழென நான் சொன்னால் முன் சொன்னது போல் பலரும் ஏற்கார்.. பொதுவாகப் புகர் நிறத்தார், கருப்பர் சொல்லை மற்ற தமிழர் கேட்பதில்லை :-)))] அப்படிப் பட்ட முந்து திராவிடக் காலத்தில் வேதமொழி இந்தியாவினுள் நுழையவில்லை என்றே வரலாற்று மொழியியல் சொல்கிறது.
அப்படியும் மீறி முந்துதிராவிடத்திலும், இந்தையிரோப்பியத்திலும் ஒரே பொருளில் ஒருசொல் அமையுமானால் அது பழஞ்சொற்களின் மிச்ச சொச்சம் என்பதே அறிவிற்கு உகந்தது. திராவிட மொழிகளுக்கும், இந்தையிரோப்பிய மொழிகளுக்கும் இடையே ஏதோ உறவு முந்து பழங் காலத்தில் நாகரிகந் தோன்றுங் காலத்தில் இருந்திருக்கிறதென்று கருது கோள் கொண்டால் இதுபோல் ஒப்புமைகளை ஆராயலாம். [நான் அப்படி யொரு கருத்துக் கொண்டவன்.] மாறாக ஒப்புமைப் பொருள் சொல்லத் தமிழருக்குச் சொல் கிடையாதென்று அச்சடித்தாற்போல் வேதமோதி, ”வடமொழி மேடு, தமிழ் பள்ளம், மேட்டிலிருந்து பள்ளத்திற்கு நீர் பாய்ந்தது” என்று கிளிப்பிள்ளை போல் கூச்சலிட்டு முட்டுச் சந்திற்குள் முன்னும் பின்னும் போய் வந்து கொண்டிருக்கலாம். I take சமம் as common stock of Dravidian and Indo-European. Period. Such common stock is to be ascertained over a long period of research. முடிவாக same = சம என்றே நான் கொள்ளுகிறேன்.
சமம், சமன், சமல் என்பவை பல்வேறு ஈறுகளில் முடியும் ஒருபொருட் சொற்களில், சமம் என்பதையே பெருவாரியாகப் பயன்படுத்தி மற்ற இரண்டையும் இக்காலத் தமிழில் துறந்து கொண்டுள்ளோம். கும்முதல் = கூடுதல் போலவே சம்முதல் = கூடுதல் என்பதும் பிறந்தது. கூடும் பொருட்கள் ஏதோ ஒரு வகையில் ஒரே மாதிரி இருக்க வேண்டிய காரணத்தால், ”ஒன்று போலிருந்தல்” என்ற வழிப்பொருள் பிறந்தது. முதற் பொருள் கூடுதலே. இரண்டாம் பொருளே ஒன்றுபோல் இருத்தல். சம்மோடு தொடர்புடைய செம்முதலையும், அதையொட்டி செ, செம், செவ், செய் போன்ற முன்னொட்டுக்களையும், அவை உருவாக்கிய சொற்களையும் இங்கே எண்ணிப் பார்க்கலாம்.
Simulation = சமலுதல். செய்து பார்த்தல். சமைத்தல்
”ஒரு தடவை நெஞ்சுக்குள்ளே செய்ஞ்சுபாருங்களேன்? சமைச்சுப் பாருங்களேன்?” - என்று சொன்னால் பொருள் வழக்குத் தமிழில் விளங்கி விடும். எழுத்துத் தமிழில் சமலுதல் என்று சொல்லுங்கள்.
அன்புடன்,
இராம.கி.

No comments:
Post a Comment