Monday, March 23, 2020

188 மருத்துவ இயல்பெயர்கள்

ஒருமுறை நண்பர் மரு. மு.செம்மல் மருத்துவம் தொடர்பான வெவ்வேறு 188 இயல்பெயர்களை ஆங்கிலத்தில் கொடுத்து அவற்றின் தமிழாக்கங்களைக் கேட்டிருந்தார். அவருடைய முகநூல் பக்கத்தில் அவற்றை எழுதிய நான் என் முகநூல் பக்கத்திலும் அவற்றை வெளியிட்டேன். ஆனால் என் வலைப் பதிவில் சேமிக்காது விட்டேன். இப்போது அதைச் செய்கிறேன்.

1. F1. (General Anatomy) பொது உடற்கூற்றியல்
2. F2. (General Physiology) பொதுப் பூதிகையியல்  (பூதிகை = physique; physics = பூதியல். குழப்பம் வரக்கூடாது.)
3. F2a.(Cell Physiology) சில் பூதிகையியல் (சில் =cell)
4. F2b.(Allergy) ஒவ்வாமை
5. F2c.Immunology இகலியல்  (இகலுதல் = எதிர்த்தல், பகைத்தல், மாறுபடுதல். நோய் என்ற முன்னொட்டு இங்கு தொக்கிநிற்கிறது)
6. F3. (General Biochemistry) பொது உயிர்வேதியல்
7. F4. (General Pathology) பொது நோயியல்
8. F4A.(Anatomical pathology) உடற்கூற்று நோயியல்
9. F4B. Blood banking and transfusion medicine அரத்த வங்கியும், அரத்தமாற்று மருத்துவமும்
10. F4C. Chemical pathology வேதி நோயியல்
11. F4D. Clinical pathology ஆதுல நோயியல் (ஆதுலம் என்பது சோழர் காலக் கல்வெட்டுச்சொல். (clinic என்பதற்குப் பொருத்தமான சொல்)
12. F4E. Cytopathology சிலுதை நோயியல் (சில்லின் வேறுபாடு சிலுதை)
13. F4F. Forensic pathology புறவக நோயியல் (சட்டப் புறவம் = legal forum; ஒவ்வொரு முறையும் சட்டம் என்று சொல்லவேண்டாமென ஆங்கிலத்தில் தொகுப்பார். தமிழிலும் அதே.
14. F4G. Genetic pathology ஈன் நோயியல்
15. F4H. Hematology உதிரவியல்
16. F4.I. Immunopathology இகல் நோயியல்
17. F4J. Molecular pathology மூலக்கூற்று நோயியல்
AA Amyloidosis - F4J.1 மாவாயப் பொருளாதல்
Ab Amyloid - F4J.2 மாவாயப் பொருள்
18. F4K. Neuropathology நரம்பு நோயியல்
A68 (F4K.1)
19. F4L. Pediatric pathology குழவி நோயியல்
20. F5.  Basics of General Microbiology பொது நூக உயிரியலின் அடிப்டைகள் (நூக = micro)
21. F5A -   Bacteriology பட்டுயிரி இயல்
    F5A.1 - Abacterial பட்டுயிரி சாரா
22. F5B - Virology வெருவியியல்
23. F5C - Parasitology புறவூணியியல்
21. F6. Basics of General Forensic Medicine பொதுப் புறவக மருத்துவத்தின் அடிப்படைகள்.
22. F7. Basics of General Ophthalmology பொது விழியியல் அடிப்படைகள்
23. F7A. Anterior segment ophthalmology விழிப் பின்புறவியல்
24. F7B. Corenea ophthalmology விழிக்கருவியல்
25. F7C. Glaucoma ophthalmology விழிப்புரையியல்
26. F7D. Neuro-ophthalmology விழி நரம்பியல்
27. F7E. Ocular oncology விழி ஓங்கியல் (onco = ஓங்கு, tumer)
28. F7F. Oculoplastics/orbit விழிப் பொத்திகைகள் (elastic நெகிழி; plastic = பொத்திகை. இரண்டும் வெவ்வேறு. பலரும் தவறான சொல்லைப் பயனுறுத்துகிறார்.)
29. F7G. Ophthalmic Plastic & Reconstructive Surgery விழிப் பொத்திகை மருத்துவமும் மறுகட்டுமான மருத்துவமும்
30. F7H. Retina/uveitis விழித்திரை/ விழி பொங்குதல்
31. F7I. Strabismus/pediatric ophthalmology கோணப்பார்வை/ குழவி விழியியல்
32. F8. Basics of General Otorhinolaryngology பொது காது, மூக்கு, தொண்டையியல் அடிப்படைகள்
33. F9. Basics of General Surgery பொதுப் பண்டுவ அடிப்படைகள் (surgery = பண்டுவம்)
Abadies Sign - F9.1
34. F9A. Gastrointestinal surgery குடல்வயிற்றுப் பண்டுவம்
Aaron’s sign - F9A.1
35. F9B. Surgical critical care பண்டுவக் கிடுக்கக் கவனம்
36. F9C. Plastic surgery பொத்திகைப் பண்டுவம்
37. F9D. Craniofacial surgery கவாலமுகப் பண்டுவம்  (கவாலம்>கபாலம்)
38. F9E. Hand surgery கைப் பண்டுவம்
39. F9F. Neurological surgery நரம்பியல் பண்டுவம்
40. F9G. Oral and maxillofacial surgery வாய் - தாடைப் பண்டுவம்
41. F9H. Thoracic Surgery மார்புக்கூட்டுப் பண்டுவம்
42. F9.I. Congenital cardiac surgery கூடுற்ற குருதயப் பண்டுவம் (குருதியைக் கையாளுவது குருதயம். இது தமிழ் தான்.)
43. F9J. Vascular surgery நாளப் பண்டுவம்
44. F10. Basics of General Medicine பொது மருத்துவ அடிப்படைகள்
45. F11. Basics of General OBG பிள்ளைப் பேற்றியலின் அடிப்படைகள்
46. F11A. Female Pelvic medicine பெண் பள்ளவ மருத்துவம் (Pelvic = பள்ளவம். பள்ளமான இடம்)
47. F11B. Female Reconstructive surgery பெண் மறுகட்டுமானப் பண்டுவம்
48. F11C. Maternal-fetal medicine தாய்-மகப்பேற்று மருத்துவம்
49. F11D. Male Infertility ஆண் மகவாமை; (மகவுதல் = பிள்ளை பெறுதல்)
50. F11E. Female Infertility பெண் மகவாமை
51. F11F. Transgender Medicne பால்மாறி மருத்துவம்
52. F12.  Basics of General Pediatrics பொதுக் குழவியியல் அடிப்படைகள்
53. F12A. Adolescent medicine பூவார் மருத்துவம் (பூவார் = பூவாதவர்)
54. F12B. Child abuse pediatrics சிறார் புல்லுய்ப்பு - குழவி மருத்துவம் (use என்பதற்குப் பயன் என்பதை ஆளுவது நம்மில் ஊறிபோனாலும், சில இடங்களில் அது சரிவராது. உய்த்தல், நுகர்தல் போன்றவை அங்கு சரிவரலாம். use = உய்ப்பு abuse = புல்லுய்ப்பு)
55. F12C. Developmental-behavioral pediatrics வளர்ச்சி - நடப்பு  குழவி மருத்துவம் (அவன் நடப்பு சரியில்லையே என்னும் போது behavior என்றுதான் பொருள் கொள்ளுகிறோம்.)
56. F12D. Neonatal-perinatal medicine  புதுப்பிறப்பு - பிறப்புக்கால மருத்துவம்
57. F12E. Pediatric cardiology குழவிக் குருதயவியல்
58. F12F. Pediatric critical care medicine குழவிக்கான கிடுக்கக் கவன மருத்துவம்
59. F12G. Pediatric endocrinology குழவிக்கான உள்ளூற்றியல் (endocrine = உள்ளூறும் நீர்கள்.)
60. F12H. Pediatric gastroenterology குழவி குடல்வயிற்றியல்
61. F12J. Pediatric hematology-oncology குழவி உதிரவியல் - ஓங்கியல்
62. F12K. Pediatric infectious diseases குழவி ஒட்டுகை நோய்கள்
63. F12L. Pediatric nephrology குழவி நூவூறியல்
64. F12M. Pediatric pulmonology குழவி நுரையீரலியல்
65. F12N. Pediatric rheumatology குழவி மூட்டெரிவியல்
66. F12O. Pediatric sports medicine குழவி பொருது மருத்துவம் (sports = பொருதுகள்)
67. F12P. Pediatric transplant hepatology  குழவி  ஈரல் மாற்றியல்
68. F12Q. Pediatric rehabilitation medicine குழவி சரியாக்கல் மருத்துவம்
69. F13. Basics of General Dermatology பொதுச் சருமவியலின் அடிப்படைகள் (சருமம் தமிழ் தான்)
70. F14. Basics of General Anesthesiology பொது உணர்மயக்கியலின் அடிப்படைகள்
71. F14A. Critical Care Support Medicine கிடுக்கக் கவன ஆதரவு மருத்துவம்
72. F14B. Hospice and palliative care நோயக  வலியாற்றுக் கவனிப்பு
73. F14C. Pain Medicine வலிபோக்கு மருத்துவம்
74. F14D. Pediatric anesthesiology குழவி உணர்வு மயக்கியல்
75. F14E. Sleep medicine துயில் மருத்துவம்
76. F15.  Dermatology சருமவியல்
77. F15A. Dermatopathology சருமநோயியல்
78. F15B. Pediatric dermatology குழவிச் சருமவியல்
79. F15C. Procedural dermatology செய்முறைச் சருமவியல்
80. F16.  Diagnostic Radiology ஊடுஞானக் கதிரியல் (Diagnostic = ஊடுஞானம்)
81. F16A. Abdominal radiology அகட்டுக் கதிரியல் (abdomen = அகடு)
82. F16B. Breast imaging மார்பு நிழற்படம்
83. F16C. Cardiothoracic radiology குருதய மார்புக்கூட்டுக் கதிரியல்
84. F16D. Cardiovascular radiology குருதய நாளக் கதிரியல்
85. F16E. Chest radiology மார்புக் கதிரியல்
86. F16F. Emergency radiology அவக்கக் கதிரியல் (அவக்கரம் = Emergency என்பதை அவக்கம் என்று சுருக்கலாம்)
87. F16G. Endovascular surgical neuroradiology உள்நாளப் பண்டுவ நரம்புக்கதிரியல்
88. F16H. Gastrointestinal radiology குடல்வயிற்றுக் கதிரியல்
89. F16I. Genitourinary radiology கன்றிப்பு உமரிக் கதிரியல் (Genito = கன்றிப்பு)
90. F16J. Head and neck radiology தலை, கழுத்துக் கதிரியல்
91. F16K. Interventional radiology இடைநுழைக் கதிரியல்
92. F16L. Musculoskeletal radiology தசைச் சட்டகக் கதிரியல்
93. F16M. Neuroradiology நரம்புக் கதிரியல்
94. F16N. Nuclear radiology நெற்றுக் கதிரியல் (nucleus = நெற்று)
95. F16O. Pediatric radiology குழவிக் கதிரியல்
96. F16P.  Radiation oncology கதிரியக்க ஓங்கியல்
97. F16Q. Vascular and interventional radiology நாள, இடைநுழைக் கதிரியல்
98. F17A. Basics of General Emergency Medicine பொது அவக்க மருத்துவ அடிப்படைகள்
99. F17B. Anesthesiology related to Critical Care Medicine கிடுக்கக் கவன மருத்துவம் தொடர்பான உணர்மயக்கியல்
100. F17C Emergency Medical Services அவக்க மருத்துவ சேவைகள்
101. F17D Hospice and Palliative Medicine நோயக  வலியாற்றுக் கவனிப்பு
102. F17E Internal medicine / Critical care medicine உள்ளக மருத்துவம் / கிடுக்கக் கவன மருத்துவம்
103. F17F. Medical Toxicology மருத்துவ நச்சுயியல்
104. F17G. Pain medicine வலி மருத்துவம்
105. F17H. Pediatric Emergency Medicine குழவி அவக்க மருத்துவம்
106. F18. Sports Medicine பொருது மருத்துவம்
107. F19. Aviation Medicine பறப்பு மருத்துவம்
108. F20. Undersea and Hyperbaric Medicine ஆழ்கடல், மீயழுத்த மருத்துவம்
109. F21. Basics of General Family Medicine பொதுக் குடும்ப மருத்துவ அடிப்படைகள்
110. F22. Adolescent Medicine பூவார் மருத்துவம்
111. F23. Geriatric Medicine முதியோர் மருத்துவம்
112. F24. Basics of General Internal Medicine பொது உள்ளக மருத்துவ அடிப்படைகள்
113. F24A. Advanced heart failure & transplant cardiology குருதய இழப்பு, மாற்றுநடவுக்கான அடுவாங்கைக் குருதயவியல் (advance = அடுவாங்கை)
114. F24B. Cardiovascular Disease குருதய நாள நோய்
115. F24C. Clinical cardiac Electrophysiology ஆதுலக் குருதய மின்பூதிகையியல்
116. F24D. Critical Care Medicine கிடுக்கக் கவன மருத்துவம்
117. F25. Basics of General Endocrinology பொது உள்ளூற்றியலின் அடிப்படைகள்
118. F25A. Reproductive Endocrinology மறுபுதுக்க உள்ளூற்றியல்
119. F26. Diabetology இனிப்பு ஊடுகையியல் (ஊடுகை = osmosis)
120. F27. Metabolic Diseases செரிப்பொழிவு நோய்கள் (செரித்துப் பொழிவது = metabolite)
121. F28. Gastroenterology குடல்வயிற்றியல்
122. F29. Hematology உதிரவியல்
123. F30. Basics of General Oncology பொது ஓங்கியலின் அடிப்படைகள்
124. F30A. Gynecologic oncology பிள்ளைப்பேற்று ஓங்கியல்
125. F31. Infectious disease ஒட்டு நோய்கள்
126. F32. Interventional cardiology இடைநுழை குருதயவியல்
127. F33. Nephrology நூவூறியல் (நூகமாய் ஊடுதல்>ஊறுதல் நடப்பது kidney இல் என்பார். எனவே நூவூறகம் = சிறுநீரகம்.)
128. F34. Pediatric internal medicine குழவி உள்ளக மருத்துவம்
129. F35. Pediatric Surgery குழவிப் பண்டுவம்
130. F36. Pulmonary disease நுரையீரல் நோய்
131. F37. Cardiac Medicine குருதய மருத்துவம்
132. F38. General Orthopaedics பொது முடநீக்கியல்
133. F38A. Adult reconstructive orthopaedics பெரியோர் மறுகட்டுமான முடநீக்கியல்
134. F38B. Foot and ankle orthopaedics பாதம், கணுக்கால் முடநீக்கியல்
135. F38C. Orthopaedic surgery of the spine முதுகுத் தண்டு  முடநீக்கப் பண்டுவம்
136. F38D. Orthopaedic trauma (Excluding Sports) முடநீக்கக் காயம்
137. F38E. Rheumatology  மூட்டெரிவியல்
138. F38F. Pediatric orthopaedics குழவி முடநீக்கியல்
139. F39. Sleep medicine = துயில் மருத்துவம்
140. F40. Transplant hepatology ஈரல் மாற்றியல்
141. F41. Basics of General Genetics பொது ஈனியலின் அடிப்படைகள்
142. F41A. Biochemical genetics உயிர்வேதி ஈனியல்
143. F41B. Clinical cytogenetics ஆதுல சிலதை ஈனியல்
144. F41B. Clinical genetics ஆதுல ஈனியல்
145. F41C. Molecular genetic pathology மூலக்கூற்று ஈன் நோயியல்
146. F42. Brain injury medicine மூளைக் காய மருத்துவம்
147. F43. Child neurology குழவி நரம்பியல்
148. F44. Clinical neurophysiology ஆதுல நரம்புப் பூதிகையியல்
149. F45. Endovascular surgical neuroradiology உள்நாளப் பண்டுவ நரம்புக்கதிரியல்
150. F46. Neurodevelopmental disabilities நரம்பு வளர்ச்சித் திறன்குறைவுகள்
151. F47. Neuromuscular medicine நரம்புத்தசை மருத்துவம்
152. F48. Nuclear Medicine நெற்று மருத்துவம்
153. F49. Medical Physics மருத்துவப் பூதியல்
154. F50. General and Basic Pharmacology பொது, அடிப்படை மருந்தியல்
155. F51. Tamil Medicne தமிழ் மருத்துவம்
156. F52. Indian Medicine இந்திய மருத்துவம்
157. F53. Unani Medicine உனானி மருத்துவம்
158. F54. Acupressure Medicine அஃகு அழுத்த மருத்துவம்
159. F55. Infertility = பேறிலாமை
160. F56. Neuromuscular medicine நரம்புத்தசை மருத்துவம்
161. F57. Spinal cord injury medicine முதுகுத்தண்டுக் காய மருத்துவம்
162. F58. Medical toxicology மருத்துவ நச்சியல்
163. F59. Occupational medicine பணிசார் மருத்துவம்
164. F60. Public health medicine பொதுக்கொழுமை மருத்துவம் (கொழுமை = health. சுகாதாரம் பயன்படுத்துவதை விட இதைப் பயன்படுத்துவது நல்லது)
165. F61. General Basics of Psychiatry பேதாற்றியலின் பொது அடிப்படைகள்
166. F61A. Addiction psychiatry அட்டிதப் பேதாற்றியல்  அட்டித்தல்/அட்டிதம் = addiction)
167. F61B. Administrative psychiatry நிருவாகப் பேதாற்றியல்
168. F61C. Child and adolescent psychiatry குழவி, பூவார் பேதாற்றியல்
169. F61D. Community psychiatry குமுகப் பேதாற்றியல்
170. F61E. Consultation/liaison psychiatry உசாவல் பேதாற்றியல்
171. F61G. Emergency psychiatry அவக்கப் பேதாற்றியல்
172. F61H. Forensic psychiatry புறவகப் பேதாற்றியல்
173. F61.I. Geriatric psychiatry மூத்தோர் பேதாற்றியல்
174. F61J. Mental retardation psychiatry சிந்தனைத் தடைப்பாட்டுப் பேதாற்றியல்
175. F61K. Military psychiatry படைப் பேதாற்றியல்
176. F61L. Psychiatric research பேதாற்றியல் ஆய்வு
177. F62. General Urology பொது உமரியியல்  (உமரி நீர் = urine)
178. F62A. Pediatric urology குழவி உமரியியல்
179. F62B. Male Urology ஆன் உமரியியல்
180. F62C. Female urology பெண் உமரியியல்
181. F62D. Neurourology நரம்பியல்
182. F63. Psychosomatic medicine உளவுடல் மருத்துவம்
183. F64. Psychoendoimmunoneurology உள உள்ளிகல் நரம்பியல்
184. F65. Charles Darwin Works சார்லசு தார்வின் பணிகள்
185. F66. Sigmund Freud சிக்மண்ட் விராய்டு
186. F57. Spiritual Medicine ஆன்ம மருத்துவம்
187. F58. Holistic Medicine முழுமை மருத்துவம்
188. F59. Veterinary Medicine கால்நடை மருத்துவம்

1 comment:

கவிஞர்.வீ.சிவ ஓவியம். said...

ஐயா,
வணக்கம்.மிக அருமை