biodegradable என்பது பற்றி ஒருமுறை 2017 மே- இல் முகநூலில் ஒருவர் கேட்டிருந்தார். ஆங்கிலச் சொற்பிறப்பு அகரமுதலியில் bio- என்பதற்கு, word-forming element, from Greek bios "one's life, course or way of living, lifetime" (as opposed to zoe "animal life, organic life"), from PIE root *gwei- "to live." The correct usage is that in biography, but in modern science it has been extended to mean "organic life" என்று போட்டிருப்பர்.
தமிழில் உய்தல் என்பது உயிரோடிருந்தலைக் குறிக்கும். உயிர் என்பது உய்யும் நிலை/இயக்கம்/பொருள். நாம்கொள்ளும் மெய்ம்ம (=தத்துவ) நிலைக்குத் தக்க இதன் பொருளைப் புரிந்துகொள்கிறோம்.

ஆன்ம வாதம் பேசுகிறவர் உயிர் உடலிலிருந்து வேறுபட்ட தனிப்பொருள் என்பார். உடலை உயிர்/ஆன்மா இயக்குகிறது என்பது அவர் வாதம். ஆன்ம வாதத்தை மறுப்பவரெனில் உடலின் இயக்கமே உயிராகும், அது தனிப்பொருளல்ல என்பார். இரண்டிற்கும் பொதுவாகச் சொன்னால் உயிரென்பது ஒரு நிலை என்றுஞ் சொல்லலாம்.
மூக்காலும் வாயாலும் காற்றை உள்ளிழுத்து வெளிவிடுகிறோமே அவ் வினைக்கு உய்தலென்று பெயர். அந்த உய்வு வினை நின்றுவிட்டால் உயிர் போய்விட்டதென்று பொருள்.
உயிருள்ள பொருட்களை உயிரி என்றுஞ் சொல்கிறோம். bio என்பதற்கு உய் என்பதே போதும் ஆயினும் பலரும் உயிரென்றே சொல்லிப் பழகி விட்டார். biologyக்கு உயிரியல் என்றே எழுதுகிறார். (பழக்கத்தின் காரணமாய் நானும் உயிரியலென்று எழுதியிருக்கிறேன்.) ஆனால் கருத்தா/கருவி/கருமம் என்று ஏரணம் பார்த்தால் உய்யியல் என்பதே சரி. பொதுவாக உய்/உய்வு/உயிர் என்ற மூன்று சொற்களையும் இடத்திற்கேற்றாற்போல் bio-விற்கு இணையாய்ப் பயன்படுத்தலாம் தான்.
biochemical = உயிர்வேதியல், (உய்வேதியலில் வரும் ய் என்பதைச் சொல்லக் கடினமாய் உள்ளது.)
biocide = உய்வெடுப்பி (இதை உயிர்க்கொல்லி என்பாருமுண்டு,) (உய்வு = life)
biodiversity = உய்வேற்றுமை
biogenesis = உய்யீனல், (உய் ஈனல்)
biography = உய்வரை (உய்க்கிறுவு என்றுகூடச் சொல்லுவேன்.)
biohazard = உய்யேதம், (உய் ஏதம்)
biomechanics = உயிர்மாகனம்,
bionics = உய்மின்னியியல்,
biosphere = உய்வுக்கோளம்,
biotechnology = உயிர்நுட்பியல்,
biotic = உய்யீடு .
அடுத்தது degrade. இதைச் சிதைவு என்றே பலருங் குறிப்பர். ஆனால் இங்கே செரித்தலை விரும்பக் காரணம். செரிக்கின்ற உயிரி தன் உய்வைத் தொடர்வது தான். சிதைவு என்பது பல்வேறு விசைகளாலும், இயக்கங்களாலும் சிதையலாம். அதில் ஓர் உயிரி பொருந்தியிருப்பதாய்க் குறிப்பிட்டுச் சொல்ல முடியாது. மட்குதல்> மக்குதல் என்பது உயிரிகளாலும், வேதிவினைகளாலும் நடக்கலாம். கிட்டத்தட்டச் சிதைவு போலத்தான். ஒரேயொரு வேறுவேடு. மட்குவது மண்ணோடு மண்ணாகிப் போகும். இங்கு என்னுடைய பரிந்துரை செரித்தலே,
அடுத்தது able (adj.) என்பது பற்றியாகும்.
"having sufficient power or means," early 14c., from Old French (h)able "capable; fitting, suitable; agile, nimble" (14c.), from Latin habilem, habilis "easily handled, apt," verbal adjective from habere "to hold" (see habit (n.)). "Easy to be held," hence "fit for a purpose." The silent h- was dropped in English and resisted academic attempts to restore it 16c.-17c. (see H), but some derivatives (such as habiliment, habilitate) acquired it via French. Able seaman, one able to do any sort of work required on a ship, may be the origin of this:
இதைத் தமிழில் கொள்ளுதல், கூடுதல் என்றே சொல்லமுடியும். நம்முடைய கொள்ளிற்கும் இந்தையிரோப்பிய have, hold என்பதற்கும் தொடர்புண்டு.
உய்ச்செரிக்கக் கூடிய/கூடியது = biodegradable. (உச்சரித்தலோடு குழம்பலாம். பலுக்கையில் சற்று கவனம் வேண்டும்.)
அன்புடன்,
இராம.கி.

No comments:
Post a Comment