நீங்கள்கேட்ட முதற்சொல் tournament (n.) என்பது எல்லாவிதக் கும்மைகள், பொருதுகள், விளையாட்டுகளுக்கு இன்று பயனுறுத்தினாலும், ஒருகாலத்தில் மற்போரையே குறித்தது. contest, competition, league, knock-out ஆகிய சொற்களுங் கூட மற்போரில் கிளைத்தவையே. ஆங்கிலத்தில் "medieval martial arts contest," c. 1200 (figurative), c. 1300 (literal), from Old French tornement "contest between groups of knights on horseback" (12c.), from tornoier "to joust, tilt, take part in tournaments" (see tourney). Modern use, in reference to games of skill, is recorded from 1761.என்றும், tourney (n.) c. 1300, from Anglo-French turnei, Old French tornei "contest of armed men" (12c., Modern French tournoi), from tornoier "to joust, tilt" (see tourney (v.)). என்றும், tourney (v.) c. 1300, from Anglo-French turneier, Old French tornoier "to joust, tilt," literally "turn around," from Vulgar Latin *tornizare, from Latin tornare "to turn" (see turn (v.)). Related: Tourneying. என்றுஞ் சொல்வர். தவிர turn (n.) என்பதற்கும் c. 1200, "action of rotating," from Anglo-French tourn (Old French torn, tour), from Latin tornus "turning lathe;" also partly from turn (v.). Meaning "an act of turning, a single revolution or part of a revolution" is attested from late 15c. Sense of "place of bending" (in a road, river, etc.) is recorded from early 15c. Meaning "beginning of a period of time" is attested from 1853 (as in turn-of-the-century, from 1921 as an adjectival phrase).என்றே வரையறை சொல்வர். பாவாணர் பார்வையில் இவைபெல்லாம் வளைதற் பொருளில் எழுந்தவை.
மற்போரில் இருவர்கைகளும் மாற்றார் இடுப்பிற்கு மேலே படவேண்டும். இடுப்பின் கீழ் குத்துவதும், மாற்றான் கவட்டைக்குள் தன்காலைக் கொடுத்து அவனை விழுத்தாட்டுவதும் தவறான பிடிகளென்பார். தோள்வலு, கைவலு, உடல்வலு பயனுறுத்தி மாற்றானை நிலைகுலைய வைத்து விழுத்தாட்டி, அவன்முதுகு கீழே மண்தொடும்படியும், முகம் மேல்நோக்கும் படியும் ஆக்குவதே மற்போரில் வெற்றி/ தோல்வி நிருணயிக்கும். தவிர, வீழ்ந்துற்ற மாற்றானை அதேநிலையில் குறித்தநேரம் நிறுத்திவிட்டால் மல்லில் வென்றதாகப் பொருள்கொள்வர்.
(வாள், வேல், வில் என்ற) எல்லாச் சண்டைகளிலும் புற முதுகிட்டு ஓடுவதையும் தோல்வியெனக் கொள்வர். இருவகைகளிற் பார்த்தாலும், மாற்றானை விழுத்தாட்டி / திருப்பிப் போடுவதே வெற்றிக்கு அடையாளம்போலும். மேலே turn இற்கான பொருளையும் பாருங்கள். மல்லாத்தல் என்பது முதுகு படுக்கையிற் பட, முகம் மேலிருப்பதைக் குறிக்கும். (மல்லாக்கப்படுப்பதும், குப்புறப்படுப்பதும் சரியில்லை, ஒருக்களித்துப் படுப்பதே உடலுக்கு நல்லதென்று பல மருத்துவரும் சொல்வர்.)
ஒவ்வொரு மற்போட்டியும் ஏதோ குறிப்பிட்ட பிடியால் சிக்கவைத்து, எதிராளியை திருப்பிப்போட்டுத் தோற்கவைப்பது தான். தோலுதலென்பது துவலல்/துவளலில் தொடங்கும். மற்போரில் குறிப்பிட்ட விதமான பிடிகளில் இது இருக்கிறது. துறட்டு= திமிரமுடியாத, திரும்பமுடியாத அங்குசப் பிடி. ”ஒன்று இன்னொன்றிடம் மாட்டுஞ் சிக்கு/சிக்கல்” எனும் பொருளும் துறட்டிற்குண்டு. entanglement என்று சொல்வார். மீளமுடியாது மாட்டிக் கொள்வது. போட்டிக்கு இன்னொருசொல் துறட்டு. 18/19 ஆம் நூற்றாண்டு களிற்றான் ’போட்டி’ எழுந்துள்ளது. பிடிபோடலின் பிறவினையாகப் பிடியைத் தொக்கி போட்டு >போட்டி என்றாகியிருக்கிறது.
துறட்டுப்பிடி அமைப்பில் கொக்கியுடையது துறட்டி. இதே வகைக் கொக்கி செடில் கருவியிலுமுண்டு. (அம்மன்கோயில் விழாக்களில் நேர்த்திக் கடனுக்காகக் கயிறுகட்டி அதனிறுதியில் செடில்பொருத்தி முதுகிற்செருகித் தொங்குவார். பழனி, கோலாலம்பூர் பத்துமலை போன்றவற்றில் இதுபோல் கொக்கிகளை முதுகுத்தோலிற் செருகி காவடிதூக்குவதும், வண்டி யிழுப்பதும் உண்டு. கொக்கி என்றாலே மாட்டிக்கொள்வது தான். துறள்+த்+உ= துறட்டு. துல்>துரு>துறு>துறள் என இச்சொல்லடி வளரும். துறளணி= துறள்களின் வரிசை. tournament/tourney இற்கான பரிந்துறை துறளணி என்பதே. துறட்டு= போட்டிக்கான மாற்றுச்சொல். போட்டியைக் contest இற்கும் பந்தயத்தைக் competition இற்கும் ஈடாய்ப் பயனுறுத்தலாம்.
அடுத்தது. league (n.1). "alliance," mid-15c., ligg, from Middle French ligue "confederacy, league" (15c.), from Italian lega, from legare "to tie, to bind," from Latin ligare "to bind" (from PIE root *leig- "to tie, bind"). Originally among nations, subsequently extended to political associations (1846) and sports associations (1879). League of Nations first attested 1917 (created 1919). தமிழில் இழைத்தல் என்பது கட்டுதல், பின்னுதல் என்று பொருள் கொள்ளும். ஓர் இழையாக/இணைப்பாகச் சில குழுக்களைக் கொண்டுவந்து அவற்றை ஒருவரோடொருவர் மோதவிட்டு அவருக்குள் வெற்றி/ தோல்வி பார்ப்பதே. இதில் முகன்மையானது. ஓர் இழையில் ஒவ்வொரு குழுவிற்கும் சமன்மை, சுழலுமை என்பன முகனையானவை. எனவே A என்ற குழுவிற்கு, (A*B, A*C, A*D, B*C. B*D, C*D) என்று 6 போட்டிகள் இருந்தே தீரவேண்டும். இதேபோல் ஒவ்வொரு குழுவிற்கும் உண்டு. இழை நிலை முடிந்த பின் தான், வீழ்த்தாட்டு நிலைக்கு நகரவேண்டும்.
contest = போட்டி/துறட்டு
competition =பந்தயம்
tournament = துறளணி
league stage = இழை நிலை
knock-out stage வீழ்த்தாட்டு நிலை
Indian Primier League for Cricket = இந்தியப் பெரும் இழை
Pitch= பட்டிகை, Ground= ஆடுகளம், Field= புலம், Court= களம்
2) Game= கும்மை, Sport= பொருது ("பொருதும் கும்மாளமும்” http://valavu.blogspot.in/2008/06/blog-post.html)
3) Playing Positions: Goal Keeper= கவலாளி, Defender= வலுவெதிர்ப்பு [தொடர்புச் சொற்கள்: offence (வலுக்காட்டு), safety (சேமம்), security (பாதுகாப்பு), police (காவல்)], Center-Back= மையப் பின்னவர், Full-Back= முழுப் பின்னவர், Sweeper= பெருவளையர், Winger (Back)= பின்சிறகார், Winger (Midfield)= நடுப்புலச் சிறகார், Attacking Midfield= தாக்கு நடுப்புலம், Defensive Midfield= வலுவெதிர்ப்பு நடுப்புலம், Central Midfield= மைய நடுப்புலம், Striker= உதையர், Forward= முன்னவர்.
4) Referee, ஆட்ட மேலார், Umpire= நடுவர், Judge= நயவர்,
5) Other terms: Pass= கடவு, Cross= குறுக்கு, Dribble= கடையல். Kick= உதை, Free-Kick= பரியுதை, Goal-Kick= கவலுதை, Corner-Kick= முக்குதை, Kick-Off= உதைத் தொடக்கம், Shot= அடி, Header= தலையடி, Inswinger= உள்வளையடி, Tackle= தக்கிழு (எதிரி தக்கும்படி இழு) Throw(-in)= .உள்ளெறி, Foul= வழு, Penalty= பழுதி, onside= கூடுபக்கம், Offside= கூடாப்பக்கம், Marking = வரம்பு கட்டு (covering a particular opponent by one or more), Goal Post= கவல் போத்து, Penalty Box= பழுதிப் பெட்டி, Penalty Spot= பழுதிப் பொட்டு, Center Spot= மையப்பொட்டு,
துறட்டு என்பது சிவகங்கைப் பக்கத்தில் வேறொரு விதயத் தொடர்பில் வழக்கிலுள்ள சொல். துறட்டு>துரட்டு>துராட்டு>த்ராட்டு என்று சொல்வர். “என்னப்பா, என்னை பெரிய திராட்டுலே மாட்டுவிட்டு நீ பாட்டுக்கப் போய்ட்டே, அங்கேருந்து வெளிலே வர்றதுக்குள்ளே போதும் போதும்னு ஆயிருச்சு”. துறட்டு என்பது சிக்கு, சிக்கல் என்பது இந்தப் பேச்சில்,விளங்கும். marking = ஆளடைப்பு: எனக்கும் உகந்ததே. ஆனால் முன்சொன்ன எல்லாப் பரிந்துரைகளிலும் ஆளென்பதை வேண்டுமென்றே தவிர்த்திருந்தேன். நாளைப் பின்னே காற்பந்தாட்டம் பெண்களிடையிலும் பெருவலப் படலாம். அப்போது ஆண் என்பது சிக்கலாகலாம். ஆள்>ஆண் என்பதைக் குறிக்கலாம். பெண்ணியப் பார்வையில் சற்று ஓர்ந்து பாருங்கள்.
foot-trap க்கு கால்தடத்தை விட கால் தடையே மிகச்சரி. filament/league இரண்டையும் ஒருசேர இழை குறிப்பதில் நல்லது தான். இரண்டும் குறிப்பிட்ட கொத்துகளை/நூல்களை ஒருசேரப் பொருத்துவது தான். நூல்களைச் சிக்கலில்லாமல் ஒருங்குற அடுக்குவதே இழைதலாகும். இங்கும் பல்வேறு அணிகளை சிக்கலின்றி ஒருங்குற அடுக்குகிறோம். ஒவ்வொரு தொகுவமமும் (team) நூல் போலத்தான். striker க்கு வீறாளி என்றால் strike க்கு வீறு என்றா சொல்லமுடியும்? தவிர ஆளி என்ற பயன்பாடு ஆண் என்ற குறிப்பை உணர்த்தலாம். ஓர்ந்து பாருங்கள். to parry, joker, roster line-up, hattrick, advantage-rule ஆகியவற்றிற்குச் சற்று நேரங் கொடுங்கள். பின்னால் வருகிறேன். Jersey என்பது இடப்பெயரால் ஏற்பட்டிருக்கலாம். அதை மொழிபெயர்க்கவேண்டுமா? ஒலிபெயர்க்க வேண்டுமா?
கால்பந்து தொடர்பாய் வேறு சொற்களிருந்தால் சொல்லுங்கள். ஓர்ந்துபார்ப்போம்.
அன்புடன்,
இராம.கி.

No comments:
Post a Comment