Thursday, April 28, 2005

பழவூற்றியலும், வான்பூதியலும் (paleo-ontology and astro-physics)

ontology என்பது ஒரு மெய்ப்பொருளைக் கண்டு, அது எப்படி உண்டாயிற்று எனப் படிப்பது. மெய்ப்பொருள் என்பது அருவப் பொருளாகவும் இருக்கலாம்; உருவப் பொருளாகவும் இருக்கலாம். அருவப் பொருளாய் இருந்தால் அது இன்றைய மெய்யியலின் (philosophy) ஒரு பகுதியாய்ப் பேசப்படும். உருவப் பொருளாய் இருந்தால், மாந்தவியல் (Anthropology), தொல்பொருளியல் (archaeology) போன்றவற்றில் வரும். இங்கே palaeo என்பதற்கு இணையானது நம்முடைய பழைய என்பது தான். பழைய, தொலை என்ற சொற்கள் கிரேக்கத்திற்கும், தமிழுக்கும் இடையே இருக்கும் வியப்பான ஒற்றுமைச் சொற்கள்.

உள் என்னும் வேரடிப் பிறந்த சொல்தான் உண்டு (=உள்+ந்+து) என்பது. "அப்படி ஏதேனும் உண்டா? எப்படி உண்டாயிற்று?" இந்த ஆட்சிகளில் உண்டு என்பது கிட்டத்தட்டப் பெயர்ச் சொல்லாகவே (உண்மையில் இது ஒரு குறிப்பு வினை முற்று.) பயனாக்கி துணைவினைகளை வைத்துக் கொண்டு வினையாக்கி ஆளுகிறோம். உண்டோ டு தொடர்பு கொண்டதுதான் உண்மை என்னும் பெயர்ச்சொல். அதாவது உண்டாம் தன்மை என்னும் மெய்ப்பொருள். It is there. period. உணருதல் என்பது கூட உண்டு என்பதோடு தொடர்பு கொண்டதுதான். feeling the existence. இன்னும் தொடர்பான பல சொற்களை இங்கு சொல்லலாம். குறிப்பாக ஊன்றுதல், மற்றும் ஊற்று=மூலம், source என்ற சொல்லாட்சிகள் இங்கு நினைவிற்கு வருகின்றன.

மனதின் ஒரு முலையில் உண்டு/ஊன்று என்பதற்கும் onto என்பதற்கும் இடையில் உள்ள தொடர்பு தெரிகிறதா?

பழ ஊற்று = பழம் பொருட்களின் அடி மூலம்
பழவூற்றியல் = palaeontology
பழவூற்றியலாளர் = palaeontologist (அதாவது, மாந்த வரலாற்றின் பழைய ஊற்றுக்களைத் தேடுபவர்; ஊற்றின் பொருளைக் குறுக்கி நீரூற்றோடு மட்டும் இந்தக் காலத்தில் பொருத்திக் கொள்ளுவது நம்முடைய குறை.)

astro என்பது ஒரு காலத்தில் ஆதிரைதான். திருவாதிரை நாள்காட்டை (நட்சத்திரம்) உலகின் எகிப்து, சுமேரியா, மாயன், சிந்து போன்ற பல நாகரிகங்களும் கூர்ந்து கவனித்திருக்கின்றன. (சிவனின் அடையாளம் திருவாதிரை தானே?) அதனால் மேலையர் சொற்கட்டில், குறிப்பாக கிரேக்கத்தில், எகிப்தின் வழி வந்த அறிவால், ஆதிரை என்பதே விண்மீன்களைக் குறித்தது. இற்றைத் தமிழில் astro என்பதை விண் என்றும் வான் என்றுமே நாம் மொழிபெயர்க்கிறோம். அது ஆதிரை என்ற அளவிற்கு அளவுக்கு முற்றிலும் சரியில்லை என்றாலும் நமக்குப் பழகிவிட்டது.

physics = பூதியல் (ஐம்பூதங்களைப் பற்றிப் படிப்பது) வடமொழியில் இது பௌதிகம் என் மருவும். இற்றைக் காலத்தில் இயற்பியல் என்றும் சிலர் சொல்லுகிறார்கள். அது தவறான புழக்கம். ஒரு தொடர் கட்டுரையை பூதங்கள் பற்றித் தமிழுலகம் மடற்குழுவில் முன்பு எழுதினேன். அண்மையில் இதை வலைப்பதிவிலும் போட்டிருந்தேன். அதில் இந்த பெயர்க்காரணங்கள் பற்றி எழுதியிருகிறேன்.

astro-physics = வான் பூதியல்
astro-physicist = வான் பூதியலாளர்

இந்தச் சொற்களை எடுத்துக் கொள்வதும் கொள்ளாததும் உங்கள் உகப்பு.

அன்புடன்,
இராம.கி.

In TSCII:

ÀÆçüÈ¢ÂÖõ, Å¡ýâ¾¢ÂÖõ (paleo-ontology and astro-physics)

ontology ±ýÀÐ ´Õ ¦Áöô¦À¡Õ¨Çì ¸ñÎ, «Ð ±ôÀÊ ¯ñ¼¡Â¢üÚ ±Éô ÀÊôÀÐ. ¦Áöô¦À¡Õû ±ýÀÐ «ÕÅô ¦À¡ÕÇ¡¸×õ þÕì¸Ä¡õ; ¯ÕÅô ¦À¡ÕÇ¡¸×õ þÕì¸Ä¡õ. «ÕÅô ¦À¡ÕÇ¡ö þÕó¾¡ø «Ð þý¨È ¦Áö¢ÂÄ¢ý (philosophy) ´Õ À̾¢Â¡öô §ÀºôÀÎõ. ¯ÕÅô ¦À¡ÕÇ¡ö þÕó¾¡ø, Á¡ó¾Å¢Âø (Anthropology), ¦¾¡ø¦À¡ÕÇ¢Âø (archaeology) §À¡ýÈÅüÈ¢ø ÅÕõ. þí§¸ palaeo ±ýÀ¾üÌ þ¨½Â¡ÉÐ ¿õÓ¨¼Â À¨Æ ±ýÀÐ ¾¡ý. À¨ÆÂ, ¦¾¡¨Ä ±ýÈ ¦º¡ü¸û ¸¢§Ãì¸ò¾¢üÌõ, ¾Á¢ØìÌõ þ¨¼§Â þÕìÌõ Å¢ÂôÀ¡É ´üÚ¨Áî ¦º¡ü¸û.

¯û ±ýÛõ §ÅÃÊô À¢Èó¾ ¦º¡ø¾¡ý ¯ñÎ (=¯û+ó+Ð) ±ýÀÐ. "«ôÀÊ ²§¾Ûõ ¯ñ¼¡? ±ôÀÊ ¯ñ¼¡Â¢üÚ?" þó¾ ¬ðº¢¸Ç¢ø ¯ñÎ ±ýÀÐ ¸¢ð¼ò¾ð¼ô ¦ÀÂ÷î ¦º¡øÄ¡¸§Å (¯ñ¨Á¢ø þÐ ´Õ ÌÈ¢ôÒ Å¢¨É ÓüÚ.) ÀÂɡ츢 Ш½Å¢¨É¸¨Ç ¨ÅòÐì ¦¸¡ñΠŢ¨É¡츢 ¬Ù¸¢§È¡õ. ¯ñ§¼¡Î ¦¾¡¼÷Ò ¦¸¡ñ¼Ð¾¡ý ¯ñ¨Á ±ýÛõ ¦ÀÂ÷¡ø. «¾¡ÅÐ ¯ñ¼¡õ ¾ý¨Á ±ýÛõ ¦Áöô¦À¡Õû. It is there. period. ¯½Õ¾ø ±ýÀРܼ ¯ñÎ ±ýÀ§¾¡Î ¦¾¡¼÷Ò ¦¸¡ñ¼Ð¾¡ý. feeling the existence. þýÛõ ¦¾¡¼÷À¡É ÀÄ ¦º¡ü¸¨Ç þíÌ ¦º¡øÄÄ¡õ. ÌÈ¢ôÀ¡¸ °ýÚ¾ø, ÁüÚõ °üÚ=ãÄõ, source ±ýÈ ¦º¡øġ𺢸û þíÌ ¿¢¨ÉÅ¢üÌ ÅÕ¸¢ýÈÉ.

Áɾ¢ý ´Õ ӨĢø ¯ñÎ/°ýÚ ±ýÀ¾üÌõ onto ±ýÀ¾üÌõ þ¨¼Â¢ø ¯ûÇ ¦¾¡¼÷Ò ¦¾Ã¢¸¢È¾¡?

ÀÆ °üÚ = ÀÆõ ¦À¡Õð¸Ç¢ý «Ê ãÄõ
ÀÆçüÈ¢Âø = palaeontology
ÀÆçüÈ¢ÂÄ¡Ç÷ = palaeontologist («¾¡ÅÐ, Á¡ó¾ ÅÃÄ¡üÈ¢ý À¨Æ °üÚ츨Çò §¾ÎÀÅ÷; °üÈ¢ý ¦À¡Õ¨Çì ÌÚ츢 ¿£åü§È¡Î ÁðÎõ þó¾ì ¸¡Äò¾¢ø ¦À¡Õò¾¢ì ¦¸¡ûÙÅÐ ¿õÓ¨¼Â ̨È.)

astro ±ýÀÐ ´Õ ¸¡Äò¾¢ø ¬¾¢¨Ã¾¡ý. ¾¢ÕÅ¡¾¢¨Ã ¿¡û¸¡ð¨¼ (¿ðºò¾¢Ãõ) ¯Ä¸¢ý ±¸¢ôÐ, ͧÁâ¡, Á¡Âý, º¢óÐ §À¡ýÈ ÀÄ ¿¡¸Ã¢¸í¸Ùõ Ü÷óÐ ¸ÅÉ¢ò¾¢Õ츢ýÈÉ. (º¢ÅÉ¢ý «¨¼Â¡Çõ ¾¢ÕÅ¡¾¢¨Ã ¾¡§É?) «¾É¡ø §Á¨ÄÂ÷ ¦º¡ü¸ðÊø, ÌÈ¢ôÀ¡¸ ¸¢§Ãì¸ò¾¢ø, ±¸¢ô¾¢ý ÅÆ¢ Åó¾ «È¢Å¡ø, ¬¾¢¨Ã ±ýÀ§¾ Å¢ñÁ£ý¸¨Çì ÌÈ¢ò¾Ð. þü¨Èò ¾Á¢Æ¢ø astro ±ýÀ¨¾ Å¢ñ ±ýÚõ Å¡ý ±ýÚ§Á ¿¡õ ¦Á¡Æ¢¦ÀÂ÷츢§È¡õ. «Ð ¬¾¢¨Ã ±ýÈ «ÇÅ¢üÌ «Ç×ìÌ ÓüÈ¢Öõ ºÃ¢Â¢ø¨Ä ±ýÈ¡Öõ ¿ÁìÌô ÀƸ¢Å¢ð¼Ð.

physics = â¾¢Âø (³õâ¾í¸¨Çô ÀüÈ¢ô ÀÊôÀÐ) ż¦Á¡Æ¢Â¢ø þÐ ¦Àª¾¢¸õ ±ý ÁÕ×õ. þü¨Èì ¸¡Äò¾¢ø þÂüÀ¢Âø ±ýÚõ º¢Ä÷ ¦º¡øÖ¸¢È¡÷¸û. «Ð ¾ÅÈ¡É ÒÆì¸õ. ´Õ ¦¾¡¼÷ ¸ðΨè â¾í¸û ÀüÈ¢ò ¾Á¢Øĸõ Á¼üÌØÅ¢ø ÓýÒ ±Ø¾¢§Éý. «ñ¨Á¢ø þ¨¾ ŨÄôÀ¾¢Å¢Öõ §À¡ðÊÕó§¾ý. «¾¢ø þó¾ ¦ÀÂ÷측ýí¸û ÀüÈ¢ ±Ø¾¢Â¢Õ¸¢§Èý.

astro-physics = Å¡ý â¾¢Âø
astro-physicist = Å¡ý â¾¢ÂÄ¡Ç÷

þó¾î ¦º¡ü¸¨Ç ±ÎòÐì ¦¸¡ûÅÐõ ¦¸¡ûÇ¡¾Ðõ ¯í¸û ¯¸ôÒ.

«ýÒ¼ý,
þáÁ.¸¢.

1 comment:

இரா. செல்வராசு (R.Selvaraj) said...

உங்கள் பூதியல் பதிவுகளில் இருந்து வான்பூதியல் பதிவு வரை அனைத்தும் படித்து வருகிறேன். மீண்டும் படித்து, சொற்களைத் தொகுத்து வைத்துக் கொள்ளவேண்டும் என்று ஆவல் எழுகிறது. எப்படியும் இந்தப் பதிவுகள் இங்கு இருக்கும் என்பதால் மீண்டும் நேரம் இருக்கும்போது வந்து பார்த்துக் கொள்கிறேன். பொதுமையான புத்தகம் (பொத்தகம்?) நீங்கள் கொண்டு வரும்போது நிச்சயம் அதனைப் பெற்றுக் கொள்ளப் போகிறேன்.