Sunday, April 03, 2005

காணவொரு காலம் வருமோ - 9

9. ஆதியவன் மூலம் ஓர்தல்

வாயாக(a)ப் பெரு விழவில் ஏழாம் நாள் பாற்(b) பொழுதில்
வரத தலக் காப்பைக் காட்டி,
வளர் அல்லில்(c) அலர் மேவும் பெருமானின்(d) தோற்றத்தில்,
வனைகின்ற படைப்புங் காட்டி,
ஆயாகும் நாள் முடிவில் ஆம் முழுத்தம்(e) ஒருபொழுதில்,
அந்தம் எனச் சிவனும் காட்டி,
அருள் செய்யும் ஒரு தலத்தில் அருச்சிக்கும் படிமத்தால்(f)
ஆதியவன் மூலம் ஓர்ந்து(g),
போ யாகம்(h), போம் உயிரை, போம் இயற்கை, அத்தனையும்
பொன் அடியில் பொருந்தச் செய்து,
பொற் சரணம்(i) தேடாமல் புகழ் மாந்தித் தினவு எடுத்துப்
போக்கியதைப் புறந்து தள்ளி,
காய் ஆகும் பூவானை(j), கருந் துளசி மேவானைக்
காண ஒரு காலம் வருமோ?
காவிரியின் ஓரத்தில் தேவியுடன் மேவிவரும்
கண்ணபுரச் சௌரி ராசா!

இந்தப் பாடல் வைகாசி மாதம் கண்ண புரத்தில் நடக்கும் பெரு விழவு பற்றிப் பேசுகிறது. விழாவின் ஏழாம் நாள் உலாத் திருமேனிக்கு பகல் முழுதும் விண்ணவத் தோற்றம் கொடுத்து, அன்று இரவில் படைப்புத் தோற்றத்தில் பெருமானாய்ச் சோடித்து, அடுத்த நாள் விடியு முன்னர் ஒரு முழுத்தம் சிவனாய்த் தோற்றம் காட்டி "ஆதிமூலம் என்பது ஒன்றே; மூன்று தொழிலும் வேறில்லை; அத்தனையும் ஒரு தோற்றம் தான்" என்று உணர வைக்கும் நிகழ்வு. 108 தலங்களிலும் கண்ண புரத்தில் மட்டுமே இந்த ஒருமை காட்டப் படுகிறது.

a. நாள் காட்டுகள் (நட்சத்திரங்கள்) அவற்றின் தோற்றம் கொண்டே நம்மவரால் பெயரிடப் பட்டன. இந்த வகையில் வாயில் போன்ற தோற்றங் கொண்டது வைகாசி நாள் காட்டு. எந்த நாள் காட்டு பூரணை நிலவொடு பொருந்தியதோ, அந்தப் பெயரையே திங்களுக்கும் பெயரிடுவதும் நம்மூர் வழக்கம். அந்த வகையில் விசாக நாள் காட்டுப் பொருந்தியது வைகாசி மாதம். விசாகம் / வைகாசி என்ற சொற்கள் வாய் என்னும் சொல்லடியில் கிளைத்தவை. வாயகம்>வாயிகம்>வாசிகம்>விசாகம் என்று திரிவும் (கடைசி மாற்றை அடி மாற்று (metathesis) என்று மொழியாளர் சொல்லுவார்கள்), வாயிகை> வாசிகை> விசாகை> விசாகி>வைசாகி>வைகாசி என்று திரிவும் எண்ணிப் பார்க்கத் தக்கவை. இந்தச் சொற்கள் தமிழ், வடமொழி இரண்டிலும் போய் வந்து கிளைத்ததால் இரு பிறப்பிகள் எனச் சொல்லுவார்கள். இங்கே தமிழ் மூலம் குறிக்கும் வகையில் வாயகம் என்ற முதற் படிமம் (வாயாகமாய் ஓசை நீட்டி) ஆளப் பட்டு வைகாசி மாதத்தைக் குறிக்கிறது.
b. பால் = பகல் ; c. வளர் அல் = வளர்கின்ற இரவு; d. பெருமன் > ப்ரம்மன் = முதல்வன்
e. ஆயாகும் நாள் முடிவில் ஆம் முழுத்தம் = இந்தியக் கணக்கின் படி நாள் என்பது கதிரவன் எழுகின்ற நேரத்தில் தொடங்குவது. ஒரு நாளை 60 நாழிகைகள் என்றும், 16 முழுத்தம் என்றும் பிரிப்பது உண்டு. ஒரு முழுத்தம் என்பது 3 3/4 நாழிகைகள் (அல்லது 1 1/2 மணி நேரம்) அடங்கியது. முழுத்தம் என்பதை வடமொழிப் படுத்தி முகூர்த்தம் என்றும் சொல்லுவார்கள். ஆகின்ற நாள் முடிவில் ஆகும் கடைசி முழுத்தத்தில் இங்கே சம்மாரம் செய்யும் சிவனாகத் தோற்றம் காட்டப் படுகிறது.
f. படிமத்தின் வழி, மூலவனைப் பார்ப்பது சிவ, விண்ணவ நெறிகளில் தலையாயது. படிம அருச்சிப்பு என்பது ஓர் உருவகம். இறைவனை எங்கெங்கோ, வித விதமாய் ஆவு ஆகனம் (=ஆவாகனம்) செய்யலாம் என்றாலும் படிமத்தில் ஆவாகனம் செய்வது இவற்றின் முகமையான கூறு.
h. படிமங்கள் பலவாய்த் தோற்றம் அளித்தாலும் அவை ஒன்றே. ஆதி மூலமும் ஒன்றே என்று அழுத்தந் திருத்தமாய் உணரவைக்கும் விழா இந்த வைகாசி விழா.
i. போய் ஆகம் > போயாகம் = போகின்ற உடல்
j. சரணாகுதி (=சரண் + ஆகுதி) என்ற கோட்பாடு விண்ணவத்தில் அடிப்படையானது. இந்தக் கோட்பாட்டில் விரிந்தது தான் இராமானுசரின் விதப்பொருமைக் கோட்பாடு. (அல்லது விதப்பு அல்லிருமை; விசிஷ்ட அத்வைதம்; அத்வைதம் என்பது இருமை அல்லாதது; எனவே அல்லிருமை. துமித்தல் என்ற தமிழ் வினைச் சொல் த்வி என்று வடமொழியில் திரிந்து தோற்றம் காட்டும்.) உயிர் ஆதனும் (ஜீவாத்மா), பெரும் ஆதனும் (பரமாத்மா) வெவ்வேறு ஆனவை அல்ல; அப்படித் தோற்றம் அளித்து கண்ணுக்கு எதிரே மாயம் காட்டுகின்றன. இரண்டும் ஒன்றே என்று அறுதி இட்டு உரைக்கும் நெறி சங்கரரின் அல் இருமைக் கோட்பாடு (அதாவது இருமை அல்லாதது; எனவே ஒருமை). விண்ணவம் இதில் குறிப்பிடத் தக்க வகையில் மாறு படும். எப்படி உடலை உயிர் செலுத்துகிறதோ, அதே போல உயிராதன்களை பெருமாதனே வழி நடத்துகிறது என்று விதப்பொருமை சொல்லும். உடலைப் போன்றே இயற்கை, உலகு, அண்டங்கள் ஆகியவையும் கருதப்படும். போகின்ற உடல், போகின்ற உயிர், போகின்ற இயற்கை ஆகிய எல்லாம் இறைவனில் பொருந்துவதே சரி. அதனால் தான் இது விதப்பான ஒருமை அல்லது முழுமை. இப்படிப் பொருந்தும் பொற் சரணம் தான் ஒவ்வொரு பத்தியாளனும் வேண்டுவது என்று விண்ணவத்தார் சொல்லுவார்கள். இந்த கருத்தை மிகவும் விரித்து எழுதலாம் என்றாலும் இங்கு சுருங்கச் சொல்லி இருக்கிறேன். விதப்பு ஒருமைக்கும், சிவனியக் கோட்பாட்டிற்கும் (சைவ சித்தாந்தத்திற்கும்) மிக நுணுகிய வேறுபாடே உண்டு. அதை விரிப்பின் பெருகும்.
k. காய் ஆகும் பூ>காயாம்பூ = கருப்பாகும் பூ; காய் = கருப்பு

In TSCII:

9. ¬¾¢ÂÅý ãÄõ µ÷¾ø

š¡¸(a)ô ¦ÀÕ Å¢ÆÅ¢ø ²Æ¡õ ¿¡û À¡ü(b) ¦À¡Ø¾¢ø
Åþ ¾Äì ¸¡ô¨Àì ¸¡ðÊ,
ÅÇ÷ «øÄ¢ø(c) «Ä÷ §Á×õ ¦ÀÕÁ¡É¢ý(d) §¾¡üÈò¾¢ø,
Ũɸ¢ýÈ À¨¼ôÒí ¸¡ðÊ,
¬Â¡Ìõ ¿¡û ÓÊÅ¢ø ¬õ ÓØò¾õ(e) ´Õ¦À¡Ø¾¢ø,
«ó¾õ ±Éî º¢ÅÛõ ¸¡ðÊ,
«Õû ¦ºöÔõ ´Õ ¾Äò¾¢ø «ÕìÌõ ÀÊÁò¾¡ø(f)
¬¾¢ÂÅý ãÄõ µ÷óÐ(g),
§À¡ ¡¸õ(h), §À¡õ ¯Â¢¨Ã, §À¡õ þÂü¨¸, «ò¾¨ÉÔõ
¦À¡ý «Ê¢ø ¦À¡Õó¾î ¦ºöÐ,
¦À¡ü ºÃ½õ(i) §¾¼¡Áø Ò¸ú Á¡ó¾¢ò ¾¢É× ±ÎòÐô
§À¡ì¸¢Â¨¾ô ÒÈóÐ ¾ûÇ¢,
¸¡ö ¬Ìõ âÅ¡¨É(j), ¸Õó ÐǺ¢ §ÁÅ¡¨Éì
¸¡½ ´Õ ¸¡Äõ ÅÕ§Á¡?
¸¡Å¢Ã¢Â¢ý µÃò¾¢ø §¾Å¢Ô¼ý §ÁÅ¢ÅÕõ
¸ñ½ÒÃî ¦ºªÃ¢ ạ!

þó¾ô À¡¼ø ¨Å¸¡º¢ Á¡¾õ ¸ñ½ ÒÃò¾¢ø ¿¼ìÌõ ¦ÀÕ Å¢Æ× ÀüÈ¢ô §À͸¢ÈÐ. ŢơŢý ²Æ¡õ ¿¡û ¯Ä¡ò ¾¢Õ§ÁÉ¢ìÌ À¸ø ÓØÐõ Å¢ñ½Åò §¾¡üÈõ ¦¸¡ÎòÐ, «ýÚ þÃÅ¢ø À¨¼ôÒò §¾¡üÈò¾¢ø ¦ÀÕÁ¡É¡öî §º¡ÊòÐ, «Îò¾ ¿¡û Å¢ÊÔ ÓýÉ÷ ´Õ ÓØò¾õ º¢ÅÉ¡öò §¾¡üÈõ ¸¡ðÊ "¬¾¢ãÄõ ±ýÀÐ ´ý§È; ãýÚ ¦¾¡Æ¢Öõ §ÅÈ¢ø¨Ä; «ò¾¨ÉÔõ ´Õ §¾¡üÈõ ¾¡ý” ±ýÚ ¯½Ã ¨ÅìÌõ ¿¢¸ú×. 108 ¾Äí¸Ç¢Öõ ¸ñ½ ÒÃò¾¢ø ÁðΧÁ þó¾ ´Õ¨Á ¸¡ð¼ô Àθ¢ÈÐ.

a. ¿¡û ¸¡ðθû (¿ðºò¾¢Ãí¸û) «ÅüÈ¢ý §¾¡üÈõ ¦¸¡ñ§¼ ¿õÁÅáø ¦ÀÂâ¼ô Àð¼É. þó¾ Ũ¸Â¢ø š¢ø §À¡ýÈ §¾¡üÈí ¦¸¡ñ¼Ð ¨Å¸¡º¢ ¿¡û ¸¡ðÎ. ±ó¾ ¿¡û ¸¡ðÎ âè½ ¿¢Ä¦Å¡Î ¦À¡Õó¾¢Â§¾¡, «ó¾ô ¦À¨ç ¾¢í¸ÙìÌõ ¦ÀÂâÎÅÐõ ¿õã÷ ÅÆì¸õ. «ó¾ Ũ¸Â¢ø Å¢º¡¸ ¿¡û ¸¡ðÎô ¦À¡Õó¾¢ÂÐ ¨Å¸¡º¢ Á¡¾õ. Å¢º¡¸õ / ¨Å¸¡º¢ ±ýÈ ¦º¡ü¸û Å¡ö ±ýÛõ ¦º¡øÄÊ¢ø ¸¢¨Çò¾¨Å. š¸õ>š¢¸õ>Å¡º¢¸õ>Å¢º¡¸õ ±ýÚ ¾¢Ã¢×õ (¸¨¼º¢ Á¡ü¨È «Ê Á¡üÚ (metathesis) ±ýÚ ¦Á¡Æ¢Â¡Ç÷ ¦º¡øÖÅ¡÷¸û), š¢¨¸> Å¡º¢¨¸> Å¢º¡¨¸> Å¢º¡¸¢>¨Åº¡¸¢>¨Å¸¡º¢ ±ýÚ ¾¢Ã¢×õ ±ñ½¢ô À¡÷ì¸ò ¾ì¸¨Å. þó¾î ¦º¡ü¸û ¾Á¢ú, ż¦Á¡Æ¢ þÃñÊÖõ §À¡ö ÅóÐ ¸¢¨Çò¾¾¡ø þÕ À¢ÈôÀ¢¸û ±Éî ¦º¡øÖÅ¡÷¸û. þí§¸ ¾Á¢ú ãÄõ ÌÈ¢ìÌõ Ũ¸Â¢ø š¸õ ±ýÈ Ó¾ü ÀÊÁõ (š¡¸Á¡ö µ¨º ¿£ðÊ) ¬Çô ÀðÎ ¨Å¸¡º¢ Á¡¾ò¨¾ì ÌȢ츢ÈÐ.
b. À¡ø = À¸ø ; c. ÅÇ÷ «ø = ÅÇ÷¸¢ýÈ þÃ×; d. ¦ÀÕÁý > ôÃõÁý = Ó¾øÅý
e. ¬Â¡Ìõ ¿¡û ÓÊÅ¢ø ¬õ ÓØò¾õ = þó¾¢Âì ¸½ì¸¢ý ÀÊ ¿¡û ±ýÀÐ ¸¾¢ÃÅý ±Ø¸¢ýÈ §¿Ãò¾¢ø ¦¾¡¼íÌÅÐ. ´Õ ¿¡¨Ç 60 ¿¡Æ¢¨¸¸û ±ýÚõ, 16 ÓØò¾õ ±ýÚõ À¢Ã¢ôÀÐ ¯ñÎ. ´Õ ÓØò¾õ ±ýÀÐ 3 3/4 ¿¡Æ¢¨¸¸û («øÄÐ 1 1/2 Á½¢ §¿Ãõ) «¼í¸¢ÂÐ. ÓØò¾õ ±ýÀ¨¾ ż¦Á¡Æ¢ô ÀÎò¾¢ ÓÜ÷ò¾õ ±ýÚõ ¦º¡øÖÅ¡÷¸û. ¬¸¢ýÈ ¿¡û ÓÊÅ¢ø ¬Ìõ ¸¨¼º¢ ÓØò¾ò¾¢ø þí§¸ ºõÁ¡Ãõ ¦ºöÔõ º¢ÅÉ¡¸ò §¾¡üÈõ ¸¡ð¼ô Àθ¢ÈÐ.
f. ÀÊÁò¾¢ý ÅÆ¢, ãÄŨÉô À¡÷ôÀÐ º¢Å, Å¢ñ½Å ¦¿È¢¸Ç¢ø ¾¨Ä¡ÂÐ. ÀÊÁ «ÕôÒ ±ýÀÐ µ÷ ¯ÕŸõ. þ¨ÈÅ¨É ±í¦¸í§¸¡, Å¢¾ Å¢¾Á¡ö ¬× ¬¸Éõ (=¬Å¡¸Éõ) ¦ºöÂÄ¡õ ±ýÈ¡Öõ ÀÊÁò¾¢ø ¬Å¡¸Éõ ¦ºöÅÐ þÅüÈ¢ý Ó¸¨ÁÂ¡É ÜÚ.
h. ÀÊÁí¸û ÀÄÅ¡öò §¾¡üÈõ «Ç¢ò¾¡Öõ «¨Å ´ý§È. ¬¾¢ ãÄÓõ ´ý§È ±ýÚ «Øò¾ó ¾¢Õò¾Á¡ö ¯½Ã¨ÅìÌõ Ţơ þó¾ ¨Å¸¡º¢ Ţơ.
i. §À¡ö ¬¸õ > §À¡Â¡¸õ = §À¡¸¢ýÈ ¯¼ø
j. ºÃ½¡Ì¾¢ (=ºÃñ + ¬Ì¾¢) ±ýÈ §¸¡ðÀ¡Î Å¢ñ½Åò¾¢ø «ÊôÀ¨¼Â¡ÉÐ. þó¾ì §¸¡ðÀ¡ðÊø Ţâó¾Ð ¾¡ý þáÁ¡ÛºÃ¢ý Å¢¾ô¦À¡Õ¨Áì §¸¡ðÀ¡Î. («øÄРŢ¾ôÒ «øÄ¢Õ¨Á – Å¢º¢‰¼ «ò¨Å¾õ; «ò¨Å¾õ ±ýÀÐ þÕ¨Á «øÄ¡¾Ð; ±É§Å «øÄ¢Õ¨Á. ÐÁ¢ò¾ø ±ýÈ ¾Á¢ú Å¢¨Éî ¦º¡ø òÅ¢ ±ýÚ Å¼¦Á¡Æ¢Â¢ø ¾¢Ã¢óÐ §¾¡üÈõ ¸¡ðÎõ.) ¯Â¢÷ ¬¾Ûõ (ƒ£Å¡òÁ¡), ¦ÀÕõ ¬¾Ûõ (ÀÃÁ¡òÁ¡) ¦Åù§ÅÚ ¬É¨Å «øÄ; «ôÀÊò §¾¡üÈõ «Ç¢òÐ ¸ñÏìÌ ±¾¢§Ã Á¡Âõ ¸¡ðθ¢ýÈÉ. þÃñÎõ ´ý§È ±ýÚ «Ú¾¢ þðÎ ¯¨ÃìÌõ ¦¿È¢ ºí¸Ãâý «ø þÕ¨Áì §¸¡ðÀ¡Î («¾¡ÅÐ þÕ¨Á «øÄ¡¾Ð; ±É§Å ´Õ¨Á). Å¢ñ½Åõ þ¾¢ø ÌÈ¢ôÀ¢¼ò ¾ì¸ Ũ¸Â¢ø Á¡Ú ÀÎõ. ±ôÀÊ ¯¼¨Ä ¯Â¢÷ ¦ºÖòи¢È§¾¡, «§¾ §À¡Ä ¯Â¢Ã¡¾ý¸¨Ç ¦ÀÕÁ¡¾§É ÅÆ¢ ¿¼òи¢ÈÐ ±ýÚ Å¢¾ô¦À¡Õ¨Á ¦º¡øÖõ. ¯¼¨Äô §À¡ý§È þÂü¨¸, ¯ÄÌ, «ñ¼í¸û ¬¸¢Â¨ÅÔõ ¸Õ¾ôÀÎõ. §À¡¸¢ýÈ ¯¼ø, §À¡¸¢ýÈ ¯Â¢÷, §À¡¸¢ýÈ þÂü¨¸ ¬¸¢Â ±øÄ¡õ þ¨ÈÅÉ¢ø ¦À¡ÕóÐŧ¾ ºÃ¢. «¾É¡ø ¾¡ý þРŢ¾ôÀ¡É ´Õ¨Á «øÄÐ ÓبÁ. þôÀÊô ¦À¡ÕóÐõ ¦À¡ü ºÃ½õ ¾¡ý ´ù¦Å¡Õ Àò¾¢Â¡ÇÛõ §ÅñÎÅÐ ±ýÚ Å¢ñ½Åò¾¡÷ ¦º¡øÖÅ¡÷¸û. þó¾ ¸Õò¨¾ Á¢¸×õ ŢâòÐ ±Ø¾Ä¡õ ±ýÈ¡Öõ þíÌ ÍÕí¸î ¦º¡øÄ¢ þÕ츢§Èý. Å¢¾ôÒ ´Õ¨ÁìÌõ, º¢ÅÉ¢Âì §¸¡ðÀ¡ðÊüÌõ (¨ºÅ º¢ò¾¡ó¾ò¾¢üÌõ) Á¢¸ Ñϸ¢Â §ÅÚÀ¡§¼ ¯ñÎ. «¨¾ ŢâôÀ¢ý ¦ÀÕÌõ.
k. ¸¡ö ¬Ìõ â>¸¡Â¡õâ = ¸ÕôÀ¡Ìõ â; ¸¡ö = ¸ÕôÒ

No comments: