Sunday, April 03, 2005

காணவொரு காலம் வருமோ - 10

10. சிறியோனின் சிற்றோலம்

நாராய ணா என்ற மந்திரத்தைக் கலிகன்றி(a)
நாள் எல்லாம் ஓத வைக்க,
நாச்சியரை(b) விரகத்தில் ஆழ்த்திய பின் நள் உறவில்
நம்பி கரம் நாட வைக்க,
வீராளன் செங் கீரை ஆடுவதை, விண்ணு சித்தர்ன
விரி பதிகம் பாட வைக்க,
வில்லாளர்(d) தாலாட்டில் வில்லானை(e)ப் பாடி வர
விழி ரெண்டும் நீட வைக்க,
சீராளர் நம்மவரைத்(f) திரு நாடே(g) ஈது என்று
சிரந் தாழ்த்திச் சேர வைக்க,
செயலிட்ட பேராளன் சிறியனையும் ஆட்கொண்டு
சிற்றோலம் செய்ய வைத்தோ?
காராளர் வள நாட்டிற் கால் கொண்ட கரு மணியைக்
காண ஒரு காலம் வருமோ?
காவிரியின் ஓரத்தில் தேவியுடன் மேவிவரும்
கண்ணபுரச் சௌரி ராசா!

இது ஆழ்வார்கள் கண்ணபுரத்தானைப் பாடியதை எடுத்துரைத்து, இந்தச் சிறியவனையும் ஆட்கொண்டு சிற்றோசை எழுப்ப வைத்ததை வியந்து பாடியது.

a. கலிகன்றி = திருமங்கையாழ்வார் பாசுரங்களில் பெருத்த இடங்களில் தன்னை இப்படியே தான் அழைத்துக் கொள்ளுகிறார். அவருக்கு நாராயண மந்திரத்தை இறைவனே உரைத்தது திரு நரையூர் (நாச்சியார் கோயில்) என்று தான் சொல்லுவார்கள். ஆனாலும் கண்ணபுரத்தான் இந்த மந்திரத்தை நெடுகவும் ஓத வைத்ததாய் சிறு பால் ஒரு கருத்து உண்டு. பெரிய திருமொழி எட்டாம் பத்தில் உள்ள நூறு பாடல்களும் கண்ணபுரத்தானுக்கே.
b. வட்டமாய்க் கோடிட்டு சோழிகளைத் தூக்கி எறிந்து இரட்டைப் படை விழுந்தால் எண்ணியது நடக்கும் என்று ஆடுகிறார் நாச்சியார். ”தன் கைப்பற்றி, தன்னொடு கூட்டும் ஆகில் கூடிடு கூடலே” என்று ஏங்குகிறார். இப்படி நாட வைத்ததில் கண்ண புரத்தானுக்கும் பங்கு உண்டு. (நாலாயிரப் பனுவல் 535) நள் உறவு = நெருங்கிய உறவு.
c. வீராளன் = விண்ணவன்; கண்ண புரத்து அமுதான சிறு குழந்தை செங் கீரை ஆடுவதைக் குதிகலித்து (குதுகலித்து), யசோதையாய்த் தன்னை பாவித்துப் விண்ணு சித்தர் பாடும் ஒரே ஒரு பாட்டு.
d. e. வில்லாளர் = சேரமான் குலசேகரர்; வில்லான் = இராமன்; ”மன்னு புகழ் கோசலை தன் மணி வயிறு வாய்த்தவனே” என்ற இராகவனையே தாலாட்டும் பாடல் கண்ணபுரத்தில் எழுந்தது. விழி இரண்டும் நீடுதல் = கண் வளருதல் = துயில் கொள்ளல்; பத்துப் பாசுரமும் அருமையான தாலாட்டு. இராமனின் தோற்றரவு இந்த ஊரில் பெரிதும் போற்றப் படுவது.
f. g. நம்மவர் = நம்மாழ்வார். ”என்னை அடையவில்லையே என்று நீர் கவலையுறுகிறீர்; உம்மை அடையாமல் குறைப்படுகிறவன் நானே; உனக்காகவே திருநாட்டை (பரம பதம்) விட்டு கண்ணபுரம் வந்திருக்கிறேன்” என்று இறைவனே சொல்லுகிறானாம். இங்கு சரணடைந்தால் அது வை குன்றம் (வைகுந்தம்) போவதற்கு ஒப்பாகும் என்கிறார் சடகோபர்.

In TSCII:

10. º¢È¢§Â¡É¢ý º¢ü§È¡Äõ

¿¡Ã¡Â ½¡ ±ýÈ Áó¾¢Ãò¨¾ì ¸Ä¢¸ýÈ¢(a)
¿¡û ±øÄ¡õ µ¾ ¨Åì¸,
¿¡îº¢Â¨Ã(b) Ţøò¾¢ø ¬úò¾¢Â À¢ý ¿û ¯ÈÅ¢ø
¿õÀ¢ ¸Ãõ ¿¡¼ ¨Åì¸,
ţáÇý ¦ºí ¸£¨Ã ¬ÎŨ¾, Å¢ñÏ º¢ò¾÷©
Ţâ À¾¢¸õ À¡¼ ¨Åì¸,
Å¢øÄ¡Ç÷(d) ¾¡Ä¡ðÊø Å¢øÄ¡¨É(e)ô À¡Ê ÅÃ
ŢƢ ¦ÃñÎõ ¿£¼ ¨Åì¸,
º£Ã¡Ç÷ ¿õÁŨÃò(f) ¾¢Õ ¿¡§¼(g) ®Ð ±ýÚ
º¢Ãó ¾¡úò¾¢î §ºÃ ¨Åì¸,
¦ºÂĢ𼠧ÀáÇý º¢È¢Â¨ÉÔõ ¬ð¦¸¡ñÎ
º¢ü§È¡Äõ ¦ºö ¨Åò§¾¡?
¸¡Ã¡Ç÷ ÅÇ ¿¡ðÊü ¸¡ø ¦¸¡ñ¼ ¸Õ Á½¢¨Âì
¸¡½ ´Õ ¸¡Äõ ÅÕ§Á¡?
¸¡Å¢Ã¢Â¢ý µÃò¾¢ø §¾Å¢Ô¼ý §ÁÅ¢ÅÕõ
¸ñ½ÒÃî ¦ºªÃ¢ ạ!


þÐ ¬úÅ¡÷¸û ¸ñ½ÒÃò¾¡¨Éô À¡Ê¨¾ ±ÎòШÃòÐ, þó¾î º¢È¢ÂŨÉÔõ ¬ð¦¸¡ñÎ º¢ü§È¡¨º ±ØôÀ ¨Åò¾¨¾ Å¢ÂóÐ À¡ÊÂÐ.

a. ¸Ä¢¸ýÈ¢ = ¾¢ÕÁí¨¸Â¡úÅ¡÷ À¡ÍÃí¸Ç¢ø ¦ÀÕò¾ þ¼í¸Ç¢ø ¾ý¨É þôÀʧ ¾¡ý «¨ÆòÐì ¦¸¡ûÙ¸¢È¡÷. «ÅÕìÌ ¿¡Ã¡Â½ Áó¾¢Ãò¨¾ þ¨ÈÅ§É ¯¨Ãò¾Ð ¾¢Õ ¿¨Ãä÷ (¿¡îº¢Â¡÷ §¸¡Â¢ø) ±ýÚ ¾¡ý ¦º¡øÖÅ¡÷¸û. ¬É¡Öõ ¸ñ½ÒÃò¾¡ý þó¾ Áó¾¢Ãò¨¾ ¦¿Î¸×õ µ¾ ¨Åò¾¾¡ö º¢Ú À¡ø ´Õ ¸ÕòÐ ¯ñÎ. ¦Àâ ¾¢Õ¦Á¡Æ¢ ±ð¼¡õ Àò¾¢ø ¯ûÇ áÚ À¡¼ø¸Ùõ ¸ñ½ÒÃò¾¡Û째.
b. Åð¼Á¡öì §¸¡ÊðÎ §º¡Æ¢¸¨Çò à츢 ±È¢óÐ þÃð¨¼ô À¨¼ Å¢Øó¾¡ø ±ñ½¢ÂÐ ¿¼ìÌõ ±ýÚ ¬Î¸¢È¡÷ ¿¡îº¢Â¡÷. "¾ý ¨¸ôÀüÈ¢, ¾ý¦É¡Î ÜðÎõ ¸¢ø ÜÊΠܼ§Ä” ±ýÚ ²í̸¢È¡÷. þôÀÊ ¿¡¼ ¨Åò¾¾¢ø ¸ñ½ ÒÃò¾¡ÛìÌõ ÀíÌ ¯ñÎ. (¿¡Ä¡Â¢Ãô ÀÛÅø 535) ¿û ¯È× = ¦¿Õí¸¢Â ¯È×.
c. ţáÇý = Å¢ñ½Åý; ¸ñ½ ÒÃòÐ «Ó¾¡É º¢Ú ÌÆó¨¾ ¦ºí ¸£¨Ã ¬ÎŨ¾ì ̾¢¸Ä¢òÐ (ÌиĢòÐ), §º¡¨¾Â¡öò ¾ý¨É À¡Å¢òÐô Å¢ñÏ º¢ò¾÷ À¡Îõ ´§Ã ´Õ À¡ðÎ.
d. e. Å¢øÄ¡Ç÷ = §ºÃÁ¡ý Ìħº¸Ã÷; Å¢øÄ¡ý = þáÁý; "ÁýÛ Ò¸ú §¸¡º¨Ä ¾ý Á½¢ ÅÂ¢Ú Å¡öò¾Å§É” ±ýÈ þá¸Å¨É§Â ¾¡Ä¡ðÎõ À¡¼ø ¸ñ½ÒÃò¾¢ø ±Øó¾Ð. ŢƢ þÃñÎõ ¿£Î¾ø = ¸ñ ÅÇÕ¾ø = Тø ¦¸¡ûÇø; ÀòÐô À¡ÍÃÓõ «Õ¨ÁÂ¡É ¾¡Ä¡ðÎ. þáÁÉ¢ý §¾¡üÈÃ× þó¾ °Ã¢ø ¦ÀâÐõ §À¡üÈô ÀÎÅÐ.
f. g. ¿õÁÅ÷ = ¿õÁ¡úÅ¡÷. "±ý¨É «¨¼ÂÅ¢ø¨Ä§Â ±ýÚ ¿£÷ ¸Å¨ÄÔÚ¸¢È£÷; ¯õ¨Á «¨¼Â¡Áø ̨ÈôÀθ¢ÈÅý ¿¡§É; ¯É측¸§Å ¾¢Õ¿¡ð¨¼ (ÀÃÁ À¾õ) Å¢ðÎ ¸ñ½ÒÃõ Åó¾¢Õ츢§Èý” ±ýÚ þ¨ÈÅ§É ¦º¡øÖ¸¢È¡É¡õ. þíÌ ºÃ½¨¼ó¾¡ø «Ð ¨Å ÌýÈõ (¨ÅÌó¾õ) §À¡Å¾üÌ ´ôÀ¡Ìõ ±ý¸¢È¡÷ º¼§¸¡À÷.

No comments: