Monday, April 04, 2005

காணவொரு காலம் வருமே! - 11

11. காண ஒரு காலம் வருமே!

எழுமூன்றில் இருப்புஎன்றும்(a), தொள்மூன்றிற் கிடப்புஎன்றும்(b)
எமைஈர்த்துத் தோற்றம் காட்டி
எஞ்சி அறுபான் தலத்தில் சங்கு சக்கரங் காட்டி
இயல்பாக நிற்குந் தெய்வை,
தொழுமுன்றில்(d) வடமூன்று(e), தென்ஏழு(f), மேல்பதினெட்(டு)
ஒன்றாக(g) அமைத்துக் காட்டி
தொடுகுணக்கில் விதப்பாக தொண்டுஎட்டு ஏழாகத்(h)
துய்யமுகம் செய்யுந் தெய்வை,
செழுமன்றில் கண்ணபுரக் கீழ்வீட்டில் நின்றுஆளும்
சௌரியனாய் நேர்ந்து கொண்டு,
செறிராம கி. இவனின் செய்பதிகம் தனைநாளும்
சேர்ந்துஓதிப் பரவி நின்றால்
கழுகுஒன்றில் ஊர்ந்தவனை(i), கவிநெஞ்சில் ஆர்ந்தவனைக்(j)
காணஒரு காலம் வருமே!
காவிரியின் ஓரத்தில் தேவியுடன் மேவியனைக்
காணஒரு காலம் வருமே!

இது 108 தலங்களிலும் இருக்கும் தெய்வை, கண்ணபுரத்துச் சௌரி ராசனாய் நேர்ந்து கொண்டு, இந்தப் பதிகத்தை ஓதிப் பரவினால் விண்ணவனை நேரே காணும் ஒரு காலம் வரும் என்று உறுதி சொல்லும் பாடல்.

a. எழு மூன்று = 21 இடத்தில் இருந்த கோலம்
b. தொள் மூன்று = 27 இடத்தில் கிடந்த கோலம். தொள்>தொண்டு = ஒன்பது
c. அறுபான் தலம் = 60 இடத்தில் நின்ற கோலம்
d. தொழு முன்றில் = தொழுகின்ற பொது இடம்; அம்பலம், பொதியில், கோட்டம் போன்றதொரு சொல் முன்றில்; இங்கு கோயிலைக் குறிக்கிறது.
e. வட பால் முகம் பார்த்தது = 3 தலங்கள்
f. தென் பால் முகம் பார்த்தது = 7 தலங்கள்
g. மேற்கில் முகம் பார்த்தது = 18 + 1 தலங்கள்
h. குணக்கில் (கிழக்கில்) முகம் பார்த்தது = தொண்டு எட்டு ஏழு = 9*8+7 = 79 தலங்கள்
i. கழுகு ஒன்றில் ஊர்ந்தவன் = கருடன் மேல் ஊர்ந்தவன்
j. கவி = அனுமன் (வானர இனம் மட்டுமல்லாமல் அவன் சொல்லின் செல்வன், எனவே கவி. அனுமனின் நெஞ்சத்தில் ஆர்ந்தவன் இராமன்.

In TSCII:

11. ¸¡½ ´Õ ¸¡Äõ ÅÕ§Á!

±Ø ãýÈ¢ø þÕôÒ ±ýÚõ(a), ¦¾¡û ãýÈ¢ü ¸¢¼ôÒ ±ýÚõ(b)
±¨Á ®÷òÐò §¾¡üÈõ ¸¡ðÊ
±ïº¢ ÂÚÀ¡ý ¾Äò¾¢ø© ºíÌ ºì ¸Ãí ¸¡ðÊ
þÂøÀ¡¸ ¿¢üÌó ¦¾ö¨Å,
¦¾¡Ø ÓýÈ¢ø(d) ż ãýÚ(e), ¦¾ý ²Ø(f), §Áø À¾¢¦Éð(Î)
´ýÈ¡¸(g) «¨ÁòÐì ¸¡ðÊ
¦¾¡Î ̽츢ø Å¢¾ôÀ¡¸ ¦¾¡ñÎ ±ðÎ ²Æ¡¸ò(h)
Ðö Ӹõ ¦ºöÔó ¦¾ö¨Å,
¦ºØ ÁýÈ¢ø ¸ñ½ ÒÃì ¸£ú Å£ðÊø ¿¢ýÚ ¬Ùõ
¦ºªÃ¢ÂÉ¡ö §¿÷óÐ ¦¸¡ñÎ,
¦ºÈ¢ áÁ ¸¢. þÅÉ¢ý ¦ºö À¾¢¸õ ¾¨É ¿¡Ùõ
§º÷óÐ µ¾¢ô ÀÃÅ¢ ¿¢ýÈ¡ø
¸ØÌ ´ýÈ¢ø °÷ó¾Å¨É(i), ¸Å¢ ¦¿ïº¢ø ¬÷ó¾Å¨Éì(j)
¸¡½ ´Õ ¸¡Äõ ÅÕ§Á!
¸¡Å¢Ã¢Â¢ý µÃò¾¢ø §¾Å¢Ô¼ý §ÁިÉì
¸¡½ ´Õ ¸¡Äõ ÅÕ§Á!

þÐ 108 ¾Äí¸Ç¢Öõ þÕìÌõ ¦¾ö¨Å, ¸ñ½ÒÃòÐî ¦ºªÃ¢ áºÉ¡ö §¿÷óÐ ¦¸¡ñÎ, þó¾ô À¾¢¸ò¨¾ µ¾¢ô ÀÃŢɡø Å¢ñ½Å¨É §¿§Ã ¸¡Ïõ ´Õ ¸¡Äõ ÅÕõ ±ýÚ ¯Ú¾¢ ¦º¡øÖõ À¡¼ø.

a. ±Ø ãýÚ = 21 þ¼ò¾¢ø þÕó¾ §¸¡Äõ
b. ¦¾¡û ãýÚ = 27 þ¼ò¾¢ø ¸¢¼ó¾ §¸¡Äõ. ¦¾¡û>¦¾¡ñÎ = ´ýÀÐ
c. «ÚÀ¡ý ¾Äõ = 60 þ¼ò¾¢ø ¿¢ýÈ §¸¡Äõ
d. ¦¾¡Ø ÓýÈ¢ø = ¦¾¡Ø¸¢ýÈ ¦À¡Ð þ¼õ; «õÀÄõ, ¦À¡¾¢Â¢ø, §¸¡ð¼õ §À¡ýȦ¾¡Õ ¦º¡ø ÓýÈ¢ø; þíÌ §¸¡Â¢¨Äì ÌȢ츢ÈÐ.
e. ż À¡ø Ó¸õ À¡÷ò¾Ð – 3 ¾Äí¸û
f. ¦¾ý À¡ø Ó¸õ À¡÷ò¾Ð – 7 ¾Äí¸û
g. §Áü¸¢ø Ó¸õ À¡÷ò¾Ð – 18 + 1 ¾Äí¸û
h. ̽츢ø (¸¢Æ츢ø) Ó¸õ À¡÷ò¾Ð = ¦¾¡ñÎ ±ðÎ ²Ø = 9*8+7 = 79 ¾Äí¸û
i. ¸ØÌ ´ýÈ¢ø °÷ó¾Åý = ¸Õ¼ý §Áø °÷ó¾Åý
j. ¸Å¢ = «ÛÁý (Å¡Éà þÉõ ÁðÎÁøÄ¡Áø «Åý ¦º¡øÄ¢ý ¦ºøÅý, ±É§Å ¸Å¢. «ÛÁÉ¢ý ¦¿ïºò¾¢ø ¬÷ó¾Åý þáÁý.

No comments: