Saturday, April 02, 2005

காணவொரு காலம் வருமோ - 8

8. காயாம் பூ அரணங்கள்

ஆ என்று ஓலம் இட்ட ஆனைக் கோன் வீடு பெற
அருளியதோ கவித் தலத்தில்;
அலர் மங்கை தனை மணந்து ஆவி எனப் பத்தருக்கு
ஆனதுவோ கண்ண மங்கை;
காயாத மகிழ மரம், கண் துஞ்சாப் புளிய மரம்,
கரு ஊறாக் கிணறு, இன்றும்
காத்திருந்தும் தோலாத கடு வழக்கு, வழிப் போக்காய்க்
காட்டியதோ கண்ணன் கட்டில்;
பாய் ஒருவர் நீள் படுக்க, பழகு இருவர் அருகு இருக்க,
பட படத்து மூவர் நிற்க,
பரந்தாமன் ஊடுருவப் பட்டு அறிந்த நெருக்கம் அதைப்
பாடுவதோ கோவ லூரில்;
காயாம் பூ அரணங்கள் கை ஒற்றாம்; மீது ஒன்றைக்
காண ஒரு காலம் வருமோ?
காவிரியின் ஓரத்தில் தேவியுடன் மேவிவரும்
கண்ணபுரச் சௌரி ராசா!

கவித் தலம், கண்ண மங்கை, கண்ணங் குடி, கோவலூர் என்ற நாலைச் சொல்லி ஐந்தாவது கண்ண அரணத்தை (கிருஷ்ணாரண்யம்) கண்ண புரத்தில் தேடுகிறது இந்தப் பாடல். விண்ணவச் சுடராழி . எதிராசன் எழுதிய "108 வைணவ திவ்ய தேச தல வரலாறு" என்ற பொத்தகத்தில் உள்ள விவரங்கள் இந்தப் பாவிற்குப் பின்புலம்.

கவித் தலம்: தஞ்சையில் இருந்து திருவையாறு வழியாக குடந்தை செல்லும் சாலையில் உள்ளது. கவித்தல் = வளைந்து கிடத்தல்; குட முக்கைப் (கும்ப கோணம்) போல இங்கும் ஆறு வளைந்து கிடக்கிறது. ஆனைக் கோன் = யானை வேந்தன் (கய வேந்தன்>கஜேந்திரன்) "ஆதி மூலமே" என்று கூக்குரலிட்ட கய வேந்தனுக்கும், யானையைக் கவ்விய முதலைக்கும் வீடு பேறு அளித்த தலம். "ஆற்றங் கரை கிடக்கும் கண்ணன்" என்று திரு மழிசையாரால் பாடப் பெற்றது.

கண்ண மங்கை: திருச் சேறையில் இருந்து திருவாரூர் செல்லும் பாதையில் இருக்கிறது. பூதேவியை மணந்த இடமாய்ப் பல தலங்கள் சொல்லப் பெறும்; ஆனால் பாற் கடலில் இருந்து வெளிப்பட்ட சீதேவியை மணந்த இடங்கள் எனச் சொல்லப் பெறுபவை ஒரு சிலவே. அவற்றில் கண்ண மங்கையும் ஒன்று. இங்குள்ள இறைவர் பெரும் புறக் கடலன் என்றும், நின்ற கோலத்தில் பத்தருக்கு ஆவி ஆனதால் பத்தராவிப் பெருமாள் என்றும் சொல்லப் படுகிறார். "கண்ண மங்கையுள் கண்டு கொண்டேன்" என்பது திரு மங்கையாரின் வாக்கு.

கண்ணன் கட்டு = திருக் கண்ணங் குடி: நாகை - திருவாரூர் வழியில் உள்ளது. வெண்ணெய்க் கண்ணனைக் கட்டிப் போட்டதால் குடியிருந்த தலம். உலக நாதன் என்று மூலவருக்குப் பெயர்.

கண் துஞ்சாப் புளி = உறங்காப் புளி; நாகைப் புத்த விகாரையில் தங்கம் எடுத்துக் கொண்டு திரு அரங்கம் புறப்பட்ட திருமங்கையார் கண்ணங் குடி வந்தார். நடந்த கால்கள் நோக, சாலை ஓரத்துச் சேற்று நிலத்தில் தங்கப் பொதியை மறைத்து விட்டு, அருகே உள்ள புளிய மரத்தின் அடியில் படுத்துறங்க எண்ணி, "நான் அயர்ந்தும் நீ தூங்காது, விழித்துக் காவல் இருக்க வேண்டும்" என்று புளிய மரத்திற்கே ஆணையிட்டாராம்; உறங்காது பொற் குவையைக் காத்த புளிய மரம் இன்று இல்லை; வயலும், சிறு மேடும் உள்ளன. அருகில் உள்ள புளிய மரங்கள் சற்று வேறு பட்டுக் காட்சி அளிக்கின்றன.

தோலா வழக்கு: பொற்குவை புதைத்த நிலத்தின் சொந்தக்காரன் வர, அந்த நேரத்தில் பொற் குவையை வெளியே எடுக்க முடியாமல், வழக்குப் பண்ணி அவனை நகர்த்தலாம் என்ற எண்ணத்தில் "இது என் நிலம்; பட்டயம் திருவரங்கத்தில் உள்ளது; போய் எடுத்து வருவேன்; ஒரு நாள் தங்க இடம் கொடுங்கள்" என்று ஐம்பேராயத்தாரிடம் (பஞ்சாயத்து என்பதன் பழைய பெயர் இதுதான்.) வழக்கிட்டுக் கேட்க, அவர்களும் ஒப்புக் கொள்ள, அடுத்த நாள் திருமங்கையார் ஊரை விட்டு அகல, வழக்கு கடைசி வரை முடியாது போனது. திருமங்கையாரும் திரும்பி வரவே இல்லை. ஐம் பேராயத்தாராலும் ஒப்புக் கொண்ட வாக்கை மீற முடியவில்லை; தோலா வழக்கு = தோற்க முடியாத வழக்கு; the stalemate case. இன்றுங் கூட தேரா வழக்குத் திருக் கண்ணங் குடி என்றும் ஒரு சொலவடை உண்டு. இங்குள்ள ஊர் வழக்குகள் முடியாது போவதாகச் சொல்லுவார்கள்.

ஊறாக் கிணறு: ஒரு நாள் தங்க இடங் கேட்ட திருமங்கையார், தாக மேலீட்டால் தண்ணீர் கேட்க, அங்கிருந்த பெண்கள் நீர்தர மறுக்க, கோவத்தில் "ஊரில் உள்ள கிணறுகளில் நீர் ஊறாமல் போக" என்று திருமங்கையார் கடு உரை சொல்ல, இங்கு இன்றுங் கூட எந்தக் கிணற்றிலும் நீர் ஊறுவதில்லையாம்; தவறி ஊறினாலும் உப்பு நீரே கிடைக்கிறதாம்; ஒரே ஒரு புறனடையாய், கோயில் மடப் பள்ளிக் கிணற்றில் மட்டும் சற்று நன்னீர் உள்ளது.

காயா மகிழ்: கடு உரைக்குப் பின், பசி மயக்கம்; மகிழ மரத்தின் அடியில் படுத்தவரை யாரோ தட்டி எழுப்பி, "வழிப் போக்கரா, இந்தா உன் பசிக்கு உணவு" என்று கொடுக்க, அதை உண்டு, உறங்கிப் போகிறார். திரும்ப எழும் போது, மனம் குளிர்ந்து, உலகைக் கனிவாகப் பார்த்து, உண்டி கொடுத்தோனுக்குப் பகரியாய், ஓய்வு கொள்ள வாய்ப்புக் கொடுத்த மகிழ மரம் என்றும் காயாது பசுமையாய் இருக்கும் படி இனிய உரை செய்கிறார். போகும் வழியில் பெருமாளே தலையாரியாய்ப் இடை மறிக்க, தான் வழிப் போக்கன் என்றதால், தனக்கு வழிப் போக்கனாகவே சங்கும் சக்கரமும் தெரியக் கண்ணங் குடியான் காட்சி அளித்ததை அறிந்து வியக்கிறார்.

திருக்கோவலூர்: தென் பெண்ணைக் கரையில், நடு நாட்டில் உள்ள கண்ணன் தலம்; கண்ணன் கோவில்; கண்ண பெண்ணை (= கருத்த ஆறு; இந்தப் பெயர் கிருட்டிணா ஆற்றிற்கும் உண்டு.) மூலவர் திருவிக்கிரமர் ஆனாலும், உலாத் திருமேனியை கோவலன் என்று தான் அழைக்கிறார்கள். இந்த ஊர் வீட்டின் இடை கழியில் தான் முதலாழ்வார் மூவர் பற்றிய நிகழ்ச்சி நடந்தது. ஒருவர் படுக்க, இருவர் இருக்க, மூவர் நிற்க, நால்வர் நெருக்க என்ற நிகழ்ச்சி விண்ணவக் கதைகளில் பெருத்த முகன்மை பெற்றது. "வையம் தகளியாய்" என்று பொய்கையாரும், "அன்பே தகளியாய்" என்று பூதத்தாரும், "திருக்கண்டேன், பொன்மேனி கண்டேன்" என்று பேயாரும் பாடிய தலம் இது. நாலாயிரப் பனுவலின் முதல் எழுச்சி, இந்த ஊரில் தான் நடந்தது.

காயாம் பூ அரணங்கள் = காயாம் பூக் காடுகள்
கை ஒற்று = கையை ஒத்தது; எனவே ஐந்து என்ற பொருள் வரம்.

In TSCII:

8. ¸¡Â¡õ ⠫ýí¸û

¬ ±ýÚ µÄõ þð¼ ¬¨Éì §¸¡ý ţΠ¦ÀÈ
«ÕǢ§¾¡ ¸Å¢ò ¾Äò¾¢ø;
«Ä÷ Áí¨¸ ¾¨É Á½óÐ ¬Å¢ ±Éô Àò¾ÕìÌ
¬ÉЧš ¸ñ½ Áí¨¸;
¸¡Â¡¾ Á¸¢Æ ÁÃõ, ¸ñ Ðﺡô ÒǢ ÁÃõ,
¸Õ °È¡ì ¸¢½Ú, þýÚõ
¸¡ò¾¢ÕóÐõ §¾¡Ä¡¾ ¸Î ÅÆìÌ, ÅÆ¢ô §À¡ì¸¡öì
¸¡ðʧ¾¡ ¸ñ½ý ¸ðÊø;
À¡ö ´ÕÅ÷ ¿£û ÀÎì¸, ÀÆÌ þÕÅ÷ «ÕÌ þÕì¸,
À¼ À¼òÐ ãÅ÷ ¿¢ü¸,
ÀÃó¾¡Áý °ÎÕÅô ÀðÎ «È¢ó¾ ¦¿Õì¸õ «¨¾ô
À¡Îŧ¾¡ §¸¡Å æâø;
¸¡Â¡õ ⠫ýí¸û ¨¸ ´üÈ¡õ; Á£Ð ´ý¨Èì
¸¡½ ´Õ ¸¡Äõ ÅÕ§Á¡?
¸¡Å¢Ã¢Â¢ý µÃò¾¢ø §¾Å¢Ô¼ý §ÁÅ¢ÅÕõ
¸ñ½ÒÃî ¦ºªÃ¢ ạ!

¸Å¢ò ¾Äõ, ¸ñ½ Áí¨¸, ¸ñ½í ÌÊ, §¸¡Åæ÷ ±ýÈ ¿¡¨Äî ¦º¡øÄ¢ ³ó¾¡ÅÐ ¸ñ½ «Ã½ò¨¾ (¸¢Õ‰½¡ÃñÂõ) ¸ñ½ ÒÃò¾¢ø §¾Î¸¢ÈÐ þó¾ô À¡¼ø. Å¢ñ½Åî ͼáƢ . ±¾¢Ã¡ºý ±Ø¾¢Â "108 ¨Å½Å ¾¢ù §¾º ¾Ä ÅÃÄ¡Ú" ±ýÈ ¦À¡ò¾¸ò¾¢ø ¯ûÇ Å¢ÅÃí¸û þó¾ô À¡Å¢üÌô À¢ýÒÄõ.

¸Å¢ò ¾Äõ: ¾ï¨ºÂ¢ø þÕóÐ ¾¢Õ¨ÅÂ¡Ú ÅƢ¡¸ Ì¼ó¨¾ ¦ºøÖõ º¡¨Ä¢ø ¯ûÇÐ. ¸Å¢ò¾ø = ŨÇóÐ ¸¢¼ò¾ø; ̼ Ó쨸ô (ÌõÀ §¸¡½õ) §À¡Ä þíÌõ ¬Ú ŨÇóÐ ¸¢¼ì¸¢ÈÐ. ¬¨Éì §¸¡ý = ¡¨É §Åó¾ý (¸Â §Åó¾ý>¸§ƒó¾¢Ãý) "¬¾¢ ãħÁ" ±ýÚ ÜìÌÃĢ𼠸 §Åó¾ÛìÌõ, ¡¨É¨Âì ¸ùŢ Ӿ¨ÄìÌõ ţΠ§ÀÚ «Ç¢ò¾ ¾Äõ. "¬üÈí ¸¨Ã ¸¢¼ìÌõ ¸ñ½ý" ±ýÚ ¾¢Õ ÁÆ¢¨ºÂ¡Ã¡ø À¡¼ô ¦ÀüÈÐ.

¸ñ½ Áí¨¸: ¾¢Õî §º¨È¢ø þÕóÐ ¾¢ÕÅ¡å÷ ¦ºøÖõ À¡¨¾Â¢ø þÕ츢ÈÐ. ⧾ި Á½ó¾ þ¼Á¡öô ÀÄ ¾Äí¸û ¦º¡øÄô ¦ÀÚõ; ¬É¡ø À¡ü ¸¼Ä¢ø þÕóÐ ¦ÅÇ¢ôÀð¼ º£§¾Å¢¨Â Á½ó¾ þ¼í¸û ±Éî ¦º¡øÄô ¦ÀÚÀ¨Å ´Õ º¢Ä§Å. «ÅüÈ¢ø ¸ñ½ Áí¨¸Ôõ ´ýÚ. þíÌûÇ þ¨ÈÅ÷ ¦ÀÕõ ÒÈì ¸¼Äý ±ýÚõ, ¿¢ýÈ §¸¡Äò¾¢ø Àò¾ÕìÌ ¬Å¢ ¬É¾¡ø Àò¾Ã¡Å¢ô ¦ÀÕÁ¡û ±ýÚõ ¦º¡øÄô Àθ¢È¡÷. "¸ñ½ Áí¨¸Ôû ¸ñÎ ¦¸¡ñ§¼ý" ±ýÀÐ ¾¢Õ Áí¨¸Â¡Ã¢ý Å¡ìÌ.

¸ñ½ý ¸ðÎ = ¾¢Õì ¸ñ½í ÌÊ: ¿¡¨¸ - ¾¢ÕÅ¡å÷ ÅƢ¢ø ¯ûÇÐ. ¦Åñ¦½öì ¸ñ½¨Éì ¸ðÊô §À¡ð¼¾¡ø ÌÊ¢Õó¾ ¾Äõ. ¯Ä¸ ¿¡¾ý ±ýÚ ãÄÅÕìÌô ¦ÀÂ÷.

¸ñ Ðﺡô ÒÇ¢ = ¯Èí¸¡ô ÒÇ¢; ¿¡¨¸ô Òò¾ Å¢¸¡¨Ã¢ø ¾í¸õ ±ÎòÐì ¦¸¡ñÎ ¾¢Õ «Ãí¸õ ÒÈôÀð¼ ¾¢ÕÁí¨¸Â¡÷ ¸ñ½í ÌÊ Åó¾¡÷. ¿¼ó¾ ¸¡ø¸û §¿¡¸, º¡¨Ä µÃòÐî §ºüÚ ¿¢Äò¾¢ø ¾í¸ô ¦À¡¾¢¨Â Á¨ÈòРŢðÎ, «Õ§¸ ¯ûÇ ÒǢ ÁÃò¾¢ý «Ê¢ø ÀÎòÐÈí¸ ±ñ½¢, "¿¡ý «Â÷óÐõ ¿£ àí¸¡Ð, ŢƢòÐì ¸¡Åø þÕì¸ §ÅñÎõ" ±ýÚ ÒǢ ÁÃò¾¢ü§¸ ¬¨½Â¢ð¼¡Ã¡õ; ¯Èí¸¡Ð ¦À¡ü ̨ŨÂì ¸¡ò¾ ÒǢ ÁÃõ þýÚ þø¨Ä; ÅÂÖõ, º¢Ú §ÁÎõ ¯ûÇÉ. «Õ¸¢ø ¯ûÇ ÒǢ ÁÃí¸û ºüÚ §ÅÚ ÀðÎì ¸¡ðº¢ «Ç¢ì¸¢ýÈÉ.

§¾¡Ä¡ ÅÆìÌ: ¦À¡ų̈ŠҨ¾ò¾ ¿¢Äò¾¢ý ¦º¡ó¾ì¸¡Ãý ÅÃ, «ó¾ §¿Ãò¾¢ø ¦À¡ü ̨Ũ ¦ÅÇ¢§Â ±Îì¸ ÓÊ¡Áø, ÅÆìÌô Àñ½¢ «Å¨É ¿¸÷ò¾Ä¡õ ±ýÈ ±ñ½ò¾¢ø "þÐ ±ý ¿¢Äõ; Àð¼Âõ ¾¢ÕÅÃí¸ò¾¢ø ¯ûÇÐ; §À¡ö ±ÎòÐ ÅÕ§Åý; ´Õ ¿¡û ¾í¸ þ¼õ ¦¸¡Îí¸û" ±ýÚ ³õ§ÀáÂò¾¡Ã¢¼õ (ÀﺡÂòÐ ±ýÀ¾ý À¨Æ ¦ÀÂ÷ þо¡ý.) ÅÆ츢ðÎì §¸ð¸, «Å÷¸Ùõ ´ôÒì ¦¸¡ûÇ, «Îò¾ ¿¡û ¾¢ÕÁí¨¸Â¡÷ °¨Ã Å¢ðÎ «¸Ä, ÅÆìÌ ¸¨¼º¢ Ũà ÓÊ¡Р§À¡ÉÐ. ¾¢ÕÁí¨¸Â¡Õõ ¾¢ÕõÀ¢ ÅçŠþø¨Ä. ³õ §ÀáÂò¾¡Ã¡Öõ ´ôÒì ¦¸¡ñ¼ š쨸 Á£È ÓÊÂÅ¢ø¨Ä; §¾¡Ä¡ ÅÆìÌ = §¾¡ü¸ ÓÊ¡¾ ÅÆìÌ; the stalemate case. þýÚí ܼ §¾Ã¡ ÅÆìÌò ¾¢Õì ¸ñ½í ÌÊ ±ýÚõ ´Õ ¦º¡ÄŨ¼ ¯ñÎ. þíÌûÇ °÷ ÅÆì̸û ÓÊ¡Р§À¡Å¾¡¸î ¦º¡øÖÅ¡÷¸û.

°È¡ì ¸¢½Ú: ´Õ ¿¡û ¾í¸ þ¼í §¸ð¼ ¾¢ÕÁí¨¸Â¡÷, ¾¡¸ §ÁÄ£ð¼¡ø ¾ñ½£÷ §¸ð¸, «í¸¢Õó¾ ¦Àñ¸û ¿£÷¾Ã ÁÚì¸, §¸¡Åò¾¢ø "°Ã¢ø ¯ûÇ ¸¢½Ú¸Ç¢ø ¿£÷ °È¡Áø §À¡¸" ±ýÚ ¾¢ÕÁí¨¸Â¡÷ ¸Î ¯¨Ã ¦º¡øÄ, þíÌ þýÚí ܼ ±ó¾ì ¸¢½üÈ¢Öõ ¿£÷ °Úž¢ø¨Ä¡õ; ¾ÅÈ¢ °È¢É¡Öõ ¯ôÒ ¿£§Ã ¸¢¨¼ì¸¢È¾¡õ; ´§Ã ´Õ ÒÈɨ¼Â¡ö, §¸¡Â¢ø Á¼ô ÀûÇ¢ì ¸¢½üÈ¢ø ÁðÎõ ºüÚ ¿ýÉ£÷ ¯ûÇÐ.

¸¡Â¡ Á¸¢ú: ¸Î ¯¨ÃìÌô À¢ý, Àº¢ ÁÂì¸õ; Á¸¢Æ ÁÃò¾¢ý «Ê¢ø ÀÎò¾Å¨Ã ¡§Ã¡ ¾ðÊ ±ØôÀ¢, "ÅÆ¢ô §À¡ì¸Ã¡, þó¾¡ ¯ý Àº¢ìÌ ¯½×" ±ýÚ ¦¸¡Îì¸, «¨¾ ¯ñÎ, ¯Èí¸¢ô §À¡¸¢È¡÷. ¾¢ÕõÀ ±Øõ §À¡Ð, ÁÉõ ÌÇ¢÷óÐ, ¯Ä¨¸ì ¸É¢Å¡¸ô À¡÷òÐ, ¯ñÊ ¦¸¡Îò§¾¡ÛìÌô À¸Ã¢Â¡ö, µö× ¦¸¡ûÇ Å¡öôÒì ¦¸¡Îò¾ Á¸¢Æ ÁÃõ ±ýÚõ ¸¡Â¡Ð ÀͨÁ¡ö þÕìÌõ ÀÊ þɢ ¯¨Ã ¦ºö¸¢È¡÷. §À¡Ìõ ÅƢ¢ø ¦ÀÕÁ¡§Ç ¾¨Ä¡â¡öô þ¨¼ ÁÈ¢ì¸, ¾¡ý ÅÆ¢ô §À¡ì¸ý ±ýȾ¡ø, ¾ÉìÌ ÅÆ¢ô §À¡ì¸É¡¸§Å ºíÌõ ºì¸ÃÓõ ¦¾Ã¢Âì ¸ñ½í ÌÊ¡ý ¸¡ðº¢ «Ç¢ò¾¨¾ «È¢óРŢÂ츢ȡ÷.

¾¢Õ째¡Åæ÷: ¦¾ý ¦Àñ¨½ì ¸¨Ã¢ø, ¿Î ¿¡ðÊø ¯ûÇ ¸ñ½ý ¾Äõ; ¸ñ½ý §¸¡Å¢ø; ¸ñ½ ¦Àñ¨½ (= ¸Õò¾ ¬Ú; þó¾ô ¦ÀÂ÷ ¸¢Õðʽ¡ ¬üÈ¢üÌõ ¯ñÎ.) ãÄÅ÷ ¾¢ÕŢ츢ÃÁ÷ ¬É¡Öõ, ¯Ä¡ò ¾¢Õ§ÁÉ¢¨Â §¸¡ÅÄý ±ýÚ ¾¡ý «¨Æ츢ȡ÷¸û. þó¾ °÷ Å£ðÊý þ¨¼ ¸Æ¢Â¢ø ¾¡ý ӾġúÅ¡÷ ãÅ÷ ÀüȢ ¿¢¸ú ¿¼ó¾Ð. ´ÕÅ÷ ÀÎì¸, þÕÅ÷ þÕì¸, ãÅ÷ ¿¢ü¸, ¿¡øÅ÷ ¦¿Õì¸ ±ýÈ ¿¢¸ú Å¢ñ½Åì ¸¨¾¸Ç¢ø ¦ÀÕò¾ Ó¸ý¨Á ¦ÀüÈÐ. "¨ÅÂõ ¾¸Ç¢Â¡ö" ±ýÚ ¦À¡ö¨¸Â¡Õõ, "«ý§À ¾¸Ç¢Â¡ö" ±ýÚ â¾ò¾¡Õõ, "¾¢Õì ¸ñ§¼ý, ¦À¡ý§ÁÉ¢ ¸ñ§¼ý" ±ýÚ §À¡Õõ À¡Ê ¾Äõ þÐ. ¿¡Ä¡Â¢Ãô ÀÛÅÄ¢ý Ó¾ø ±Ø, þó¾ °Ã¢ø ¾¡ý ¿¼ó¾Ð.

¸¡Â¡õ ⠫ýí¸û = ¸¡Â¡õ âì ¸¡Î¸û
¨¸ ´üÚ = ¨¸¨Â ´ò¾Ð; ±É§Å ³óÐ ±ýÈ ¦À¡Õû ÅÃõ.

No comments: