ஒருமுறை சென்னையில் இருந்து மும்பைக்குப் போய்க் கொண்டிருந்த போது பறனையில், Sunday Times சூன் 8, 2003 நாளிதழைப் படிக்கும் வாய்ப்புக் கிடைத்தது. சுவாமியனாமிக்சு என்ற ஒரு நிரலை (column) திரு. சுவாமிநாதன் ச. அங்கலேசரிய அய்யர் (மயிலாடுதுறை நாடாளுமன்ற உறுப்பினர் மணி சங்கர அய்யரின் உடன் பிறந்தார்) இந்த இதழில் எழுதி வருகிறார். அவர் எழுதியதை இங்கு தமிழ்ப் படுத்தித் தருகிறேன்.
பொருளியல் பற்றியெல்லாம் தமிழ் மடற்குழுக்கள், வலைப்பதிவுகளில் நாம் ஏனோ பேச மாட்டேன் என்கிறோம். அதெல்லாம் சொல்ல ஆங்கிலத்தில் மட்டும் தான் முடியும் என்று எண்ணிக் கொண்டு விட்டோ மோ? தமிழில் இது போன்ற பலவற்றையும் தடையில்லாமல் எழுத முடியும் என்று எப்பொழுது எண்ணப் போகிறோம்? எப்பொழுது காட்டப் போகிறோம் என்ற ஆதங்கத்தில் இங்கு இந்தக் கட்டுரையை மொழி பெயர்த்திருக்கிறேன். மொழி பெயர்ப்பிற்கே உள்ள குறைகள் கீழே இருக்கலாம். குறை என்னுடையதே ஒழிய மொழியில் இல்லை.
மீண்டும் என் வேண்டுகோளை இங்கு முன்வைக்கிறேன். பல்வேறு புலனங்களில், துறைகளில் நாம் வேலை பார்க்கிறோம்; விருப்பம் கொள்ளுகிறோம். அவற்றில் இருந்து ஒவ்வொருவரும் ஓரளவாவது தமிழில் கொண்டுவர முயலுவோமே? வெறும் மரபு சார்ந்த வகையில் கதை, கவிதை, அரசியல், திரைப்படம் என்று எழுதித் தமிழின் வீச்சை ஏன் குறைத்துக் கொண்டு இருக்கிறோம் என்று எனக்குப் புலப்பட மாட்டேன் என்கிறது. தமிழ் என்பது ஒரு சில காரியங்களுக்கு மட்டும் தானா?
அன்புடன்,
இராம.கி.
------------------------------------------------------------
சட்டம் போட்டு ஏழ்மையைப் போக்க முடியாது.
ஏழ்மையைப் போக்குவதற்காக நான் கேள்விப்பட்ட பல முற்பொதி (proposal) களில், அரசு சாராத் தொண்டு நிறுவனங்களில் இருக்கும் என் நண்பர் ஒருவர் சொன்னது தான் மிக எளிமையானது. இந்த ஓர்மை கேட்பதற்கு மிக நளினமாகவும், வலியில்லாததாகவும் கூடத் தோற்றுகிறது. "அடிமட்டக் கூலியை முடிந்த மட்டும் கூட்டி, அதன் மூலம் எல்லோரையும் ஏன் ஏழ்மைக் கோட்டிற்கு மேல் கொண்டுவரக் கூடாது?" என்று அவர் கேட்டார்.
இந்த முற்பொதி வேலை செய்யுமோ என்று என்னைக் கேட்டால், செய்யாது என்று தான் நான் சொல்லுவேன்; ஏனென்றால் இதை நடைமுறைப் படுத்தும் போது, கூடவே எண்ணிப் பார்க்காத விளைவுகள் வந்து சேருமே? அப்பொழுது என்ன செய்வது? இது போன்ற முற்பொதிகளோடு கூடவே, நமைச்சல் கொடுக்கக் கூடிய, எப்படி முயன்றாலும் போய்த் தொலையாத, உடன் நிகழ் விதி ஒன்றும் இருக்கிறது என்பதை என் இளம்பருவ காலத்தில் தெரியாமல் இருந்தேன். குறிப்பாக, அந்தக் காலத்தில், மனமெல்லாம் பஞ்சடைத்துக் கிடந்த எழுவரற் கனவில் (liberal dream) இந்த உடன் நிகழ் விதி எனக்குப் புலப்படவே வில்லை. தவிரவும், ஏழ்மைக்காகத் திடீர் வாக்குகளைத் தேடிக் கொண்டிருந்த காலமல்லவா அது? ஏழ்மையைத் தொலைப்பது இப்படி எளிது என்றால், பல நூற்றாண்டுகளுக்கு முன்னால் அது ஏற்பட்டு இருக்குமே என்று கூட இளமையில் எனக்குத் தோன்றவில்லை.
துக்ளக் பேரரசர் இதுபோல ஒன்றைச் செய்ய முயன்றார். வெள்ளியும் செம்பும் ஒரே மதிப்புள்ளவை என்று ஓர் அரசாணையை அவர் பிறப்பித்தார். அந்த அரசாணை மூலம் செப்புக்காசுகளை வைத்திருக்கும் ஏழை மக்கள், வெள்ளியை வைத்திருப்பவர்களைப் போலவே பணக்காரர்கள் ஆகி விடுவார்கள் என்று அவர் நினைத்தார். ஆனால் உண்மையில் பணக்காரப் பொதினர்களே (businessmen) தங்களிடம் இருந்த செப்புக்காசுகளை அரசுக் கருவூலத்திடம் கொடுத்து மாற்றாக வெள்ளிக்காசுகளைப் பெற்றுக் கொண்டார்கள். மிக விரைவில் அரசின் கருவூலமே வெள்ளி இருப்பில் இல்லாமல் வெற்றாகிப் போனது. இதன் விளைவாக பணக்காரர்கள் மேலும் பணக்காரர்கள் ஆனார்கள்; ஏழைகள் என்றும் போல ஏழைகளாகவே சீரழிந்து கிடந்தார்கள். தான் அளித்த ஆணை, இப்படி எண்ணிப் பார்க்க முடியாத விளைவுகளை ஏற்படுத்தக் கூடும் என்று துக்ளக் பேரரசர் சிந்தித்துப் பார்க்கவும் இல்லை. ஆக மொத்தம் ஒரு அடிப்படைப் பொருளியல் விதியை துக்ளக் பேரரசர் சரியாகப் புரிந்து கொள்ளத் தவறிவிட்டார். வெள்ளி என்பது அரிதில் கிடைப்பது; செம்பு என்பதோ ஏராளமாகக் கொட்டிக் கிடப்பது. இந்த எளிய உண்மையை எந்தச் சட்டமும் போட்டு மாற்ற முடியாது.
இன்னும் கொஞ்சம் விளக்கமாகப் பார்ப்போம். ஒரு குறிப்பிட்ட மாநிலத்தில் கூலி வேளையாளுக்கான ஒரு நாட்கூலி 30 உருபாக்கள் என்று வைத்துக்கொள்ளுவோம். அதே பொழுது, ஓர் ஆண்டுக்கு 150 நாட்கள், கூலியாட்களுக்குக் கூலிவேலை கிடைக்கிறது என்றும் வைத்துக்கொள்ளுவோம். இந்த நிலையில், ஒரு வேலையாள் ஓர் ஆண்டுக்கு 4500 உருபாக்கள் மட்டுமே சம்பாதிப்பார். அப்படி இருந்தும் அவர் வறுமையிலேயே இருப்பார். இப்பொழுது, ஏழ்மையை ஒழிக்கவேண்டும் என்று எண்ணி நல்ல காரியம் செய்ய முற்பட்டு ஒரு முதல்வர் சட்டம் போட்டு மிகக் குறைந்த ஒரு நாள் கூலிவீதம் மாநிலம் எங்கணும் ரூ. 60 என்று ஆக்குகிறார் என்று வைத்துக் கொள்ளுவோமே? இப்பொழுது இந்த வகை உழைப்பாளர்கள் சம்பாதிப்பது இரட்டையாகுமா, என்ன?
இல்லைங்களே, உழைப்பு முதற்கொண்டு எதனொன்றின் விலையும் உயர்ந்தால், மிச்சமெல்லாம் பழைய படியே இருக்கும் போது, அதன் தேவை குறையத்தானே செய்யும்? கூலி வீதத்தை இரண்டு மடங்காக்கினால், முதலாளிகள் உழைப்பாளர்களைக் குறைக்கத் தொடங்குவார்களே? எல்லாவற்றையும் பொறிகளின் மூலம் செய்ய முற்படுவார்களே?, விளைப்பையே தானாட்டாக (automatic)க் கூட நடக்க வைப்பார்களே? இதன் மூலம் உழைப்பின் பயன்பாட்டைக் குறைப்பார்களே? இந்த நிலையில், பெரும் விளைப்புமை (productivity) உடைய வேலைகளைச் செய்கிற உழைப்பாளர்கள் மட்டுமே, கூட ஊதியம் பெற்று வேலையில் நிலைப்பார்கள். அதே பொழுது, பரவலாக இருக்கும் பெரும்பாலானோரின் வேலை பறி போகி விடும். முடிவில் கூலி வேலைக்காரர்கள் தங்களின் வேலைத் தேவை ஆண்டுக்கு 150 நாட்களில் இருந்து 70 நாட்களாகக் குறைந்து போகக் காண்பார்கள். இந்த நிலையில் அன்றாடக் கூலி இரண்டு மடங்காகியும், அவர்களின் ஆண்டு வருமானம் உண்மையில் குறைந்தல்லவா போகும்?
இத்தகைய மாற்றங்களின் நீண்ட நாள் விளைவுகள் இன்னும் மோசமாய் இருக்கும். உயர்கூலி நிலவும் மாநிலத்தில் முதலீட்டு செய்வதை முதலாளிகள் நிறுத்திக் கொள்வார்கள். மாறாக குறை கூலி நிலவும் மாநிலத்திற்குத் தங்கள் விளைப்பை மாற்றிக் கொள்வார்கள். இதுவும் மிக மோசமான நீண்டகால விளைவுகளை உருவாக்கும். ஏழ்மையைப் போக்கலாம் என்று நல்ல மனதோடு செய்த ஒரு காரியம் முடிவில் ஏழ்மையைக் கூட்டுவதற்கே வழி வகுக்கக் கூடும்.
மேலே சொன்னதைக் கண்டு அய்யப்பட்டால், கேரளாவின் எடுத்துக்காட்டைப் பாருங்கள். வரலாற்று வரிதியாக இந்த மாநிலம் தன்னை ஏழை மக்கள் பக்கம் சார்ந்ததாகவும், உழைப்பாளர் பக்கம் சார்ந்ததாகவும் மிக அதிகமான அளவுக்குக் காட்டி வந்திருக்கிறது. மிக விரிவான நிலச் சீர்திருத்தங்கள் இங்கு ஏற்பட்டிருக்கின்றன. நாட்டுப்புறங்களில் கூட தொழிலாளர் ஒன்றியங்கள் ஏற்படுத்தப்பட்டன. " தொடரி (train)யில் இருந்து இறங்கி இருவுள் நிலையத்தில் (Railway station) வரும் போது நம் சுமைகளை நாம் சுமக்கக் கூடாது, கூலியாள் வைத்துத்தான் சுமக்க வேண்டும்" என்ற அளவுக்குத் தடை போட வைத்த தொழிலாளர் ஒன்றியங்கள் எல்லா இடங்களிலும் "அது கூடாது; இது கூடாது" என்று விலக்குப் போட்டனர். இந்தியாவிலே மிக உயர்ந்த அளவுக்கு நாட்டுப்புறக் கூலிகள் உயர்த்தப் பட்டன. இப்படி எல்லாம் செய்து ஏழ்மையை ஒழித்து விடலாம் என்று அங்குள்ளவர்கள் நம்பினார்கள்.
ஆனால் மேலே கூறிய எண்ணிப் பாராத உடன் விளைவுகளின் விதி அங்கும் வேலை செய்யத் தொடங்கியது. ஏறிக் கொண்டே போகிற கூலி வீதங்களை முன்கொண்ட விவசாயிகள், உழைப்பு மிகவும் தேவைப்படும் நெல் போன்ற பயிர்வகைகளில் இருந்து விலகி உழைப்புக் குறைந்தே தேவைப்படும் தென்னை போன்ற பண்ணைப் பயிர்களுக்கு மாறினார்கள். எப்படியெல்லாம் மனித உழைப்பைக் குறைக்கலாம் என்று எண்ணிப் பார்த்து, புது வித ஆக்கங்களில் நுழைந்தார்கள். மாநிலத்தில் முதலிடு செய்வதைத் தொழில்முனைவோர் நிறுத்தினார்கள்.
இந்த உயர்கூலிகளின் காரணமாய், வழிவழியாக முந்திரியிலும், தென்னங் கயிற்றின் செய்முறையிலும் ஆயிரக்கணக்கில் ஈடுபட்ட கேரளத்தில் இருந்து, பட்டறைகளும், வேலைகளும், கூலி மிகக் குறைந்த தமிழ்நாட்டிற்குப் போய்ச் சேர்ந்தன. இதனால், மாநிலம் விட்டு மாநிலத்திற்கு விளைப்பை (produce) நகர்த்துவதை கேரள அரசு சட்டத்திற்குப் புறம்பாக ஆக்கியது. பொருளியல் மெய்ம்மைகளை மறுதலிக்கும் பல விதிகளைப் போல, இந்தச் சட்டமும் வேலை செய்யவில்லை. பெரும் அளவுக்கு விளைப்புகள் சட்டத்திற்குப் புறம்பாகத் தமிழ்நாட்டிற்குக் கடத்தப் பட்டன. வேலைகளும் பட்டறைகளும் தமிழ்நாட்டிற்கு கொஞ்சம் கொஞ்சமாக நகர்ந்தன.
இன்னும் மோசமாக, குறைந்த வேலைக்கு வேலை செய்ய தமிழ் உழைப்பாளர்களின் பெரும் வெள்ளம் முன்வந்தது; இதைக் கேரளத்தின் உயர்கூலிகளே ஊக்குவித்தன. பலனாக, உள்ளூர்காரர்களுக்கான வேலை வாய்ப்பு இன்னும் குறைந்தது.
இப்படியாக ஏழ்மையைக் குறைக்க வேண்டும் என்ற நல்ல குறிக்கோளோடு ஏற்படுத்திய கொள்கைகள் பொருளியற் தேக்கத்தை உருவாக்கின. திறமையுள்ள கேரளத்தார் வேலைக்காக மற்ற மாநிலங்களிலும், பிறகு அரபிய வளைகுடாப் பகுதியிலும் குடியேறத் தொடங்கினார்கள். இதனால் கேரளப் பொருளியல் வெளியேறியவர்கள் அனுப்பும் பணத்தை எதிர்பார்த்து நிற்கும் அஞ்சல் ஆணை (postal order)ப் பொருளியல் ஆக மாறிப் போனது. முடிவில் வெளியில் இருந்து கேரளத்திற்கு வந்து சேரும் பணம் மட்டும் ஓராண்டுக்கு ரூ. 15000 கோடி ஆனது; ஏழ்மையும் ஒருவகையில் விலகித் தான் போனது. ஆனால் என்ன விந்தை, உழைப்போருக்காகச் செய்யப் பட்ட கொள்கைகள் ஏழ்மையைக் குறைப்பதற்கு வேலை செய்யவேண்டிய வழி இதுவா?
இந்தியாவிலேயே மிகக் குறைந்த குழவி இறப்பும் (infant mortality), மிக உயர்ந்த எழுத்தறிவும் கொண்டது கேரளம். இத்தகைய பெருமிதமான குமுக அடையாளங்கள் இன்னொரு ஆசியப் புலியாவதற்கான பொந்திகை (potential)யைக் கொடுக்கின்றன. ஆனால், அப்படி ஆகாமல் கேரளம் வெறும் ஆசிய ஆமையாக ஆகிப் போனது. இதனால் தான் சொல்லுகிறேன், ஏழ்மையைச் சட்டம் போட்டுப் போக்க முடியாது. ஏன் என்பதைப் புரிந்து கொள்ள வேண்டுமானால், கேரளத்தைப் படியுங்கள்.
மோசமான விளைவுகளைப் பட்டறியாமல் எப்படி இரோப்பியர்களும் அமெரிக்களும் தங்கள் கூலி நிலவரத்தைக் கூட்டினார்கள் என்று சில வாசகர்கள் கேட்கலாம். அதன் விடை விளைப்புமை (productivity)யைக் கூட்டுவதில் இருக்கிறது. உழைப்பாளர்களின் விளைப்புமை கூடும் பொழுது, வேலை கொடுப்பவர்களுக்குக் கூடக் கூலி கொடுத்தும், போட்டியாளர்களுக்கு ஈடு கொடுத்துக் கட்டி வருகிறாற் போல் ஆகிறது. ஏழ்மையைக் குறைப்பதன் சூக்குமம் விளைப்புமையைக் கூட்டுவதிலேயே உள்ளது. அப்படிச் செய்வது கூலிகளை நெடுநாட்களுக்கு நிலைப்பதாக உயர்த்த வைக்கிறது. சட்டம் போடுவது அப்படிச் செய்யாது.
------------------------------------------------------------------
In TSCII:
´ÕÓ¨È ¦ºý¨É¢ø þÕóÐ Óõ¨ÀìÌô §À¡öì ¦¸¡ñÊÕó¾ §À¡Ð ÀȨÉ¢ø, Sunday Times Ýý 8, 2003 ¿¡Ç¢¾¨Æô ÀÊìÌõ Å¡öôÒì ¸¢¨¼ò¾Ð. ÍÅ¡Á¢ÂÉ¡Á¢ìÍ ±ýÈ ´Õ ¿¢Ã¨Ä (column) ¾¢Õ. ÍÅ¡Á¢¿¡¾ý º. «í¸§ÄºÃ¢Â «öÂ÷ (Á¢ġÎÐ¨È ¿¡¼¡ÙÁýÈ ¯ÚôÀ¢É÷ Á½¢ ºí¸Ã «öÂâý ¯¼ý À¢Èó¾¡÷) þó¾ þ¾Æ¢ø ±Ø¾¢ ÅÕ¸¢È¡÷. «Å÷ ±Ø¾¢Â¨¾ þíÌ ¾Á¢úô ÀÎò¾¢ò ¾Õ¸¢§Èý.
¦À¡ÕÇ¢Âø ÀüÈ¢¦ÂøÄ¡õ ¾Á¢ú Á¼üÌØì¸û, ŨÄôÀ¾¢×¸Ç¢ø ¿¡õ ²§É¡ §Àº Á¡ð§¼ý ±ý¸¢§È¡õ. «¦¾øÄ¡õ ¦º¡øÄ ¬í¸¢Äò¾¢ø ÁðÎõ ¾¡ý ÓÊÔõ ±ýÚ ±ñ½¢ì ¦¸¡ñΠŢ𧼡§Á¡? ¾Á¢Æ¢ø þÐ §À¡ýÈ ÀÄÅü¨ÈÔõ ¾¨¼Â¢øÄ¡Áø ±Ø¾ ÓÊÔõ ±ýÚ ±ô¦À¡ØÐ ±ñ½ô §À¡¸¢§È¡õ? ±ô¦À¡ØÐ ¸¡ð¼ô §À¡¸¢§È¡õ ±ýÈ ¬¾í¸ò¾¢ø þíÌ þó¾ì ¸ðΨè ¦Á¡Æ¢ ¦ÀÂ÷ò¾¢Õ츢§Èý. ¦Á¡Æ¢ ¦ÀÂ÷ôÀ¢ü§¸ ¯ûÇ Ì¨È¸û ¸£§Æ þÕì¸Ä¡õ. Ì¨È ±ýÛ¨¼Â§¾ ´Æ¢Â ¦Á¡Æ¢Â¢ø þø¨Ä.
Á£ñÎõ ±ý §ÅñΧ¸¡¨Ç þíÌ Óý¨Å츢§Èý. Àø§ÅÚ ÒÄÉí¸Ç¢ø, ШȸǢø ¿¡õ §Å¨Ä À¡÷츢§È¡õ; Å¢ÕôÀõ ¦¸¡ûÙ¸¢§È¡õ. «ÅüÈ¢ø þÕóÐ ´ù¦Å¡ÕÅÕõ µÃÇÅ¡ÅÐ ¾Á¢Æ¢ø ¦¸¡ñÎÅà ÓÂ֧š§Á? ¦ÅÚõ ÁÃÒ º¡÷ó¾ Ũ¸Â¢ø ¸¨¾, ¸Å¢¨¾, «Ãº¢Âø, ¾¢¨ÃôÀ¼õ ±ýÚ ±Ø¾¢ò ¾Á¢Æ¢ý ţ ²ý ̨ÈòÐì ¦¸¡ñÎ þÕ츢§È¡õ ±ýÚ ±ÉìÌô ÒÄôÀ¼ Á¡ð§¼ý ±ý¸¢ÈÐ. ¾Á¢ú ±ýÀÐ ´Õ º¢Ä ¸¡Ã¢Âí¸ÙìÌ ÁðÎõ ¾¡É¡?
«ýÒ¼ý,
þáÁ.¸¢.
------------------------------------------------------------
ºð¼õ §À¡ðÎ ²ú¨Á¨Âô §À¡ì¸ ÓÊ¡Ð.
²ú¨Á¨Âô §À¡ìÌžü¸¡¸ ¿¡ý §¸ûÅ¢ôÀð¼ ÀÄ Óü¦À¡¾¢ (proposal) ¸Ç¢ø, «ÃÍ º¡Ã¡ò ¦¾¡ñÎ ¿¢ÚÅÉí¸Ç¢ø þÕìÌõ ±ý ¿ñÀ÷ ´ÕÅ÷ ¦º¡ýÉÐ ¾¡ý Á¢¸ ±Ç¢¨Á¡ÉÐ. þó¾ µ÷¨Á §¸ðÀ¾üÌ Á¢¸ ¿Ç¢ÉÁ¡¸×õ, ÅĢ¢øÄ¡¾¾¡¸×õ ܼò §¾¡üÚ¸¢ÈÐ. "«ÊÁð¼ì ÜÄ¢¨Â ÓÊó¾ ÁðÎõ ÜðÊ, «¾ý ãÄõ ±ø§Ä¡¨ÃÔõ ²ý ²ú¨Áì §¸¡ðÊüÌ §Áø ¦¸¡ñÎÅÃì ܼ¡Ð?" ±ýÚ «Å÷ §¸ð¼¡÷.
þó¾ Óü¦À¡¾¢ §Å¨Ä ¦ºöÔ§Á¡ ±ýÚ ±ý¨Éì §¸ð¼¡ø, ¦ºö¡Р±ýÚ ¾¡ý ¿¡ý ¦º¡øÖ§Åý; ²¦ÉýÈ¡ø þ¨¾ ¿¨¼Ó¨Èô ÀÎòÐõ §À¡Ð, ܼ§Å ±ñ½¢ô À¡÷측¾ Å¢¨Ç׸û ÅóÐ §ºÕ§Á? «ô¦À¡ØÐ ±ýÉ ¦ºöÅÐ? þÐ §À¡ýÈ Óü¦À¡¾¢¸§Ç¡Î ܼ§Å, ¿¨Áîºø ¦¸¡Îì¸ì ÜÊÂ, ±ôÀÊ ÓÂýÈ¡Öõ §À¡öò ¦¾¡¨Ä¡¾, ¯¼ý ¿¢¸ú Å¢¾¢ ´ýÚõ þÕ츢ÈÐ ±ýÀ¨¾ ±ý þÇõÀÕÅ ¸¡Äò¾¢ø ¦¾Ã¢Â¡Áø þÕó§¾ý. ÌÈ¢ôÀ¡¸, «ó¾ì ¸¡Äò¾¢ø, ÁɦÁøÄ¡õ Àﺨ¼òÐì ¸¢¼ó¾ ±ØÅÃü ¸ÉÅ¢ø (liberal dream) þó¾ ¯¼ý ¿¢¸ú Å¢¾¢ ±ÉìÌô ÒÄôÀ¼§Å Å¢ø¨Ä. ¾Å¢Ã×õ, ²ú¨Á측¸ò ¾¢Ë÷ Å¡ì̸¨Çò §¾Êì ¦¸¡ñÊÕó¾ ¸¡ÄÁøÄÅ¡ «Ð? ²ú¨Á¨Âò ¦¾¡¨ÄôÀÐ þôÀÊ ±Ç¢Ð ±ýÈ¡ø, ÀÄ áüÈ¡ñθÙìÌ ÓýÉ¡ø «Ð ²üÀðÎ þÕì̧Á ±ýÚ Ü¼ þǨÁ¢ø ±ÉìÌò §¾¡ýÈÅ¢ø¨Ä.
ÐìÇì §ÀÃú÷ þЧÀ¡Ä ´ý¨Èî ¦ºö ÓÂýÈ¡÷. ¦ÅûÇ¢Ôõ ¦ºõÒõ ´§Ã Á¾¢ôÒûǨŠ±ýÚ µ÷ «Ãº¡¨½¨Â «Å÷ À¢ÈôÀ¢ò¾¡÷. «ó¾ «Ãº¡¨½ ãÄõ ¦ºôÒ측͸¨Ç ¨Åò¾¢ÕìÌõ ²¨Æ Áì¸û, ¦ÅûÇ¢¨Â ¨Åò¾¢ÕôÀÅ÷¸¨Çô §À¡Ä§Å À½ì¸¡Ã÷¸û ¬¸¢ Å¢ÎÅ¡÷¸û ±ýÚ «Å÷ ¿¢¨Éò¾¡÷. ¬É¡ø ¯ñ¨Á¢ø À½ì¸¡Ãô ¦À¡¾¢É÷¸§Ç (businessmen) ¾í¸Ç¢¼õ þÕó¾ ¦ºôÒ측͸¨Ç «ÃÍì ¸ÕçÄò¾¢¼õ ¦¸¡ÎòÐ Á¡üÈ¡¸ ¦ÅûǢ측͸¨Çô ¦ÀüÚì ¦¸¡ñ¼¡÷¸û. Á¢¸ Å¢¨ÃÅ¢ø «Ãº¢ý ¸ÕçħÁ ¦ÅûÇ¢ þÕôÀ¢ø þøÄ¡Áø ¦ÅüÈ¡¸¢ô §À¡ÉÐ. þ¾ý Å¢¨ÇÅ¡¸ À½ì¸¡Ã÷¸û §ÁÖõ À½ì¸¡Ã÷¸û ¬É¡÷¸û; ²¨Æ¸û ±ýÚõ §À¡Ä ²¨Æ¸Ç¡¸§Å º£ÃÆ¢óÐ ¸¢¼ó¾¡÷¸û. ¾¡ý «Ç¢ò¾ ¬¨½, þôÀÊ ±ñ½¢ô À¡÷ì¸ ÓÊ¡¾ Å¢¨Ç׸¨Ç ²üÀÎò¾ì ÜÎõ ±ýÚ ÐìÇì §ÀÃú÷ º¢ó¾¢òÐô À¡÷ì¸×õ þø¨Ä. ¬¸ ¦Á¡ò¾õ ´Õ «ÊôÀ¨¼ô ¦À¡ÕÇ¢Âø Å¢¾¢¨Â ÐìÇì §ÀÃú÷ ºÃ¢Â¡¸ô ÒâóÐ ¦¸¡ûÇò ¾ÅȢŢð¼¡÷. ¦ÅûÇ¢ ±ýÀÐ «Ã¢¾¢ø ¸¢¨¼ôÀÐ; ¦ºõÒ ±ýÀ§¾¡ ²Ã¡ÇÁ¡¸ì ¦¸¡ðÊì ¸¢¼ôÀÐ. þó¾ ±Ç¢Â ¯ñ¨Á¨Â ±ó¾î ºð¼Óõ §À¡ðÎ Á¡üÈ ÓÊ¡Ð.
þýÛõ ¦¸¡ïºõ Å¢Çì¸Á¡¸ô À¡÷ô§À¡õ. ´Õ ÌÈ¢ôÀ¢ð¼ Á¡¿¢Äò¾¢ø ÜÄ¢ §Å¨Ç¡Ùì¸¡É ´Õ ¿¡ðÜÄ¢ 30 ¯ÕÀ¡ì¸û ±ýÚ ¨ÅòÐ즸¡û٧šõ. «§¾ ¦À¡ØÐ, µ÷ ¬ñÎìÌ 150 ¿¡ð¸û, ÜĢ¡ð¸ÙìÌì ÜÄ¢§Å¨Ä ¸¢¨¼ì¸¢ÈÐ ±ýÚõ ¨ÅòÐ즸¡û٧šõ. þó¾ ¿¢¨Ä¢ø, ´Õ §Å¨Ä¡û µ÷ ¬ñÎìÌ 4500 ¯ÕÀ¡ì¸û ÁðΧÁ ºõÀ¡¾¢ôÀ¡÷. «ôÀÊ þÕóÐõ «Å÷ ÅÚ¨Á¢§Ä§Â þÕôÀ¡÷. þô¦À¡ØÐ, ²ú¨Á¨Â ´Æ¢ì¸§ÅñÎõ ±ýÚ ±ñ½¢ ¿øÄ ¸¡Ã¢Âõ ¦ºö ÓüÀðÎ ´Õ Ó¾øÅ÷ ºð¼õ §À¡ðÎ Á¢¸ì ̨Èó¾ ´Õ ¿¡û ÜĢţ¾õ Á¡¿¢Äõ ±í¸Ïõ å. 60 ±ýÚ ¬ì̸¢È¡÷ ±ýÚ ¨ÅòÐì ¦¸¡û٧š§Á? þô¦À¡ØÐ þó¾ Ũ¸ ¯¨ÆôÀ¡Ç÷¸û ºõÀ¡¾¢ôÀÐ þÃð¨¼Â¡ÌÁ¡, ±ýÉ?
þø¨Äí¸§Ç, ¯¨ÆôÒ Ó¾ü¦¸¡ñÎ ±¾¦É¡ýÈ¢ý Å¢¨ÄÔõ ¯Â÷ó¾¡ø, Á¢îº¦ÁøÄ¡õ À¨Æ Àʧ þÕìÌõ §À¡Ð, «¾ý §¾¨Å ̨ÈÂò¾¡§É ¦ºöÔõ? ÜÄ¢ Å£¾ò¨¾ þÃñÎ Á¼í¸¡ì¸¢É¡ø, ӾġǢ¸û ¯¨ÆôÀ¡Ç÷¸¨Çì ̨Èì¸ò ¦¾¡¼íÌÅ¡÷¸§Ç? ±øÄ¡Åü¨ÈÔõ ¦À¡È¢¸Ç¢ý ãÄõ ¦ºö ÓüÀÎÅ¡÷¸§Ç?, Å¢¨Çô¨À§Â ¾¡É¡ð¼¡¸ (automatic)ì ܼ ¿¼ì¸ ¨ÅôÀ¡÷¸§Ç? þ¾ý ãÄõ ¯¨ÆôÀ¢ý ÀÂýÀ¡ð¨¼ì ̨ÈôÀ¡÷¸§Ç? þó¾ ¿¢¨Ä¢ø, ¦ÀÕõ Å¢¨ÇôÒ¨Á (productivity) ¯¨¼Â §Å¨Ä¸¨Çî ¦ºö¸¢È ¯¨ÆôÀ¡Ç÷¸û ÁðΧÁ, ܼ °¾¢Âõ ¦ÀüÚ §Å¨Ä¢ø ¿¢¨ÄôÀ¡÷¸û. «§¾ ¦À¡ØÐ, ÀÃÅÄ¡¸ þÕìÌõ ¦ÀÕõÀ¡Ä¡§É¡Ã¢ý §Å¨Ä ÀÈ¢ §À¡¸¢ Å¢Îõ. ÓÊÅ¢ø ÜÄ¢ §Å¨Ä측Ã÷¸û ¾í¸Ç¢ý §Å¨Äò §¾¨Å ¬ñÎìÌ 150 ¿¡ð¸Ç¢ø þÕóÐ 70 ¿¡ð¸Ç¡¸ì ̨ÈóÐ §À¡¸ì ¸¡ñÀ¡÷¸û. þó¾ ¿¢¨Ä¢ø «ýÈ¡¼ì ÜÄ¢ þÃñÎ Á¼í¸¡¸¢Ôõ, «Å÷¸Ç¢ý ¬ñÎ ÅÕÁ¡Éõ ¯ñ¨Á¢ø ̨Èó¾øÄÅ¡ §À¡Ìõ?
þò¾¨¸Â Á¡üÈí¸Ç¢ý ¿£ñ¼ ¿¡û Å¢¨Ç׸û þýÛõ §Á¡ºÁ¡ö þÕìÌõ. ¯Â÷ÜÄ¢ ¿¢Ä×õ Á¡¿¢Äò¾¢ø ӾģðÎ ¦ºöŨ¾ ӾġǢ¸û ¿¢Úò¾¢ì ¦¸¡ûÅ¡÷¸û. Á¡È¡¸ Ì¨È ÜÄ¢ ¿¢Ä×õ Á¡¿¢Äò¾¢üÌò ¾í¸û Å¢¨Çô¨À Á¡üÈ¢ì ¦¸¡ûÅ¡÷¸û. þÐ×õ Á¢¸ §Á¡ºÁ¡É ¿£ñ¼¸¡Ä Å¢¨Ç׸¨Ç ¯ÕÅ¡ìÌõ. ²ú¨Á¨Âô §À¡ì¸Ä¡õ ±ýÚ ¿øÄ Áɧ¾¡Î ¦ºö¾ ´Õ ¸¡Ã¢Âõ ÓÊÅ¢ø ²ú¨Á¨Âì ÜðΞü§¸ ÅÆ¢ ÅÌì¸ì ÜÎõ.
§Á§Ä ¦º¡ýɨ¾ì ¸ñÎ «öÂôÀð¼¡ø, §¸ÃÇ¡Å¢ý ±ÎòÐ측ð¨¼ô À¡Õí¸û. ÅÃÄ¡üÚ Å⾢¡¸ þó¾ Á¡¿¢Äõ ¾ý¨É ²¨Æ Áì¸û Àì¸õ º¡÷󾾡¸×õ, ¯¨ÆôÀ¡Ç÷ Àì¸õ º¡÷󾾡¸×õ Á¢¸ «¾¢¸Á¡É «Ç×ìÌì ¸¡ðÊ Åó¾¢Õ츢ÈÐ. Á¢¸ Å¢Ã¢Å¡É ¿¢Äî º£÷¾¢Õò¾í¸û þíÌ ²üÀðÊÕ츢ýÈÉ. ¿¡ðÎôÒÈí¸Ç¢ø ܼ ¦¾¡Æ¢Ä¡Ç÷ ´ýÈ¢Âí¸û ²üÀÎò¾ôÀð¼É. " ¦¾¡¼Ã¢ (train)¢ø þÕóÐ þÈí¸¢ þÕ×û ¿¢¨ÄÂò¾¢ø (Railway station) ÅÕõ §À¡Ð ¿õ ͨÁ¸¨Ç ¿¡õ ÍÁì¸ì ܼ¡Ð, ÜĢ¡û ¨ÅòÐò¾¡ý ÍÁì¸ §ÅñÎõ" ±ýÈ «Ç×ìÌò ¾¨¼ §À¡¼ ¨Åò¾ ¦¾¡Æ¢Ä¡Ç÷ ´ýÈ¢Âí¸û ±øÄ¡ þ¼í¸Ç¢Öõ "«Ð ܼ¡Ð; þРܼ¡Ð" ±ýÚ Å¢ÄìÌô §À¡ð¼É÷. þó¾¢Â¡Å¢§Ä Á¢¸ ¯Â÷ó¾ «Ç×ìÌ ¿¡ðÎôÒÈì ÜÄ¢¸û ¯Â÷ò¾ô Àð¼É. þôÀÊ ±øÄ¡õ ¦ºöÐ ²ú¨Á¨Â ´Æ¢òРŢ¼Ä¡õ ±ýÚ «íÌûÇÅ÷¸û ¿õÀ¢É¡÷¸û.
¬É¡ø §Á§Ä ÜȢ ±ñ½¢ô À¡Ã¡¾ ¯¼ý Å¢¨Ç׸Ǣý Å¢¾¢ «íÌõ §Å¨Ä ¦ºöÂò ¦¾¡¼í¸¢ÂÐ. ²È¢ì ¦¸¡ñ§¼ §À¡¸¢È ÜÄ¢ Å£¾í¸¨Ç Óý¦¸¡ñ¼ Ţź¡Â¢¸û, ¯¨ÆôÒ Á¢¸×õ §¾¨ÅôÀÎõ ¦¿ø §À¡ýÈ À¢÷Ũ¸¸Ç¢ø þÕóРŢĸ¢ ¯¨ÆôÒì ̨Èó§¾ §¾¨ÅôÀÎõ ¦¾ý¨É §À¡ýÈ Àñ¨½ô À¢÷¸ÙìÌ Á¡È¢É¡÷¸û. ±ôÀʦÂøÄ¡õ ÁÉ¢¾ ¯¨Æô¨Àì ̨Èì¸Ä¡õ ±ýÚ ±ñ½¢ô À¡÷òÐ, ÒРŢ¾ ¬ì¸í¸Ç¢ø ѨÆó¾¡÷¸û. Á¡¿¢Äò¾¢ø ӾĢΠ¦ºöŨ¾ò ¦¾¡Æ¢øӨɧš÷ ¿¢Úò¾¢É¡÷¸û.
þó¾ ¯Â÷ÜÄ¢¸Ç¢ý ¸¡Ã½Á¡ö, ÅÆ¢ÅƢ¡¸ Óó¾¢Ã¢Â¢Öõ, ¦¾ýÉí ¸Â¢üÈ¢ý ¦ºöӨȢÖõ ¬Â¢Ã츽츢ø ®ÎÀð¼ §¸ÃÇò¾¢ø þÕóÐ, Àð¼¨È¸Ùõ, §Å¨Ä¸Ùõ, ÜÄ¢ Á¢¸ì ̨Èó¾ ¾Á¢ú¿¡ðÊüÌô §À¡öî §º÷ó¾É. þ¾É¡ø, Á¡¿¢Äõ Å¢ðÎ Á¡¿¢Äò¾¢üÌ Å¢¨Çô¨À (produce) ¿¸÷òÐŨ¾ §¸ÃÇ «ÃÍ ºð¼ò¾¢üÌô ÒÈõÀ¡¸ ¬ì¸¢ÂÐ. ¦À¡ÕÇ¢Âø ¦Áöõ¨Á¸¨Ç ÁھĢìÌõ ÀÄ Å¢¾¢¸¨Çô §À¡Ä, þó¾î ºð¼Óõ §Å¨Ä ¦ºöÂÅ¢ø¨Ä. ¦ÀÕõ «Ç×ìÌ Å¢¨ÇôÒ¸û ºð¼ò¾¢üÌô ÒÈõÀ¡¸ò ¾Á¢ú¿¡ðÊüÌì ¸¼ò¾ô Àð¼É. §Å¨Ä¸Ùõ Àð¼¨È¸Ùõ ¾Á¢ú¿¡ðÊüÌ ¦¸¡ïºõ ¦¸¡ïºÁ¡¸ ¿¸÷ó¾É.
þýÛõ §Á¡ºÁ¡¸, ̨Èó¾ §Å¨ÄìÌ §Å¨Ä ¦ºö ¾Á¢ú ¯¨ÆôÀ¡Ç÷¸Ç¢ý ¦ÀÕõ ¦ÅûÇõ ÓýÅó¾Ð; þ¨¾ì §¸ÃÇò¾¢ý ¯Â÷ÜÄ¢¸§Ç °ìÌÅ¢ò¾É. ÀÄÉ¡¸, ¯ûé÷¸¡Ã÷¸Ùì¸¡É §Å¨Ä Å¡öôÒ þýÛõ ̨Èó¾Ð.
þôÀÊ¡¸ ²ú¨Á¨Âì ̨Èì¸ §ÅñÎõ ±ýÈ ¿øÄ ÌȢ째¡§Ç¡Î ²üÀÎò¾¢Â ¦¸¡û¨¸¸û ¦À¡ÕÇ¢Âü §¾ì¸ò¨¾ ¯Õš츢É. ¾¢È¨ÁÔûÇ §¸ÃÇò¾¡÷ §Å¨Ä측¸ ÁüÈ Á¡¿¢Äí¸Ç¢Öõ, À¢ÈÌ «ÃÀ¢Â ŨÇ̼¡ô À̾¢Â¢Öõ ÌʧÂÈò ¦¾¡¼í¸¢É¡÷¸û. þ¾É¡ø §¸ÃÇô ¦À¡ÕÇ¢Âø ¦ÅÇ¢§ÂÈ¢ÂÅ÷¸û «ÛôÒõ À½ò¨¾ ±¾¢÷À¡÷òÐ ¿¢üÌõ «ïºø ¬¨½ (postal order)ô ¦À¡ÕÇ¢Âø ¬¸ Á¡È¢ô §À¡ÉÐ. ÓÊÅ¢ø ¦ÅǢ¢ø þÕóÐ §¸ÃÇò¾¢üÌ ÅóÐ §ºÕõ À½õ ÁðÎõ µÃ¡ñÎìÌ å. 15000 §¸¡Ê ¬ÉÐ; ²ú¨ÁÔõ ´ÕŨ¸Â¢ø Ţĸ¢ò ¾¡ý §À¡ÉÐ. ¬É¡ø ±ýÉ Å¢ó¨¾, ¯¨Æô§À¡Õ측¸î ¦ºöÂô Àð¼ ¦¸¡û¨¸¸û ²ú¨Á¨Âì ̨ÈôÀ¾üÌ §Å¨Ä ¦ºö§ÅñÊ ÅÆ¢ þÐÅ¡?
þó¾¢Â¡Å¢§Ä§Â Á¢¸ì ̨Èó¾ ÌÆÅ¢ þÈôÒõ (infant mortality), Á¢¸ ¯Â÷ó¾ ±Øò¾È¢×õ ¦¸¡ñ¼Ð §¸ÃÇõ. þò¾¨¸Â ¦ÀÕÁ¢¾Á¡É ÌÓ¸ «¨¼Â¡Çí¸û þý¦É¡Õ ¬º¢Âô ÒĢ¡žü¸¡É ¦À¡ó¾¢¨¸ (potential)¨Âì ¦¸¡Î츢ýÈÉ. ¬É¡ø, «ôÀÊ ¬¸¡Áø §¸ÃÇõ ¦ÅÚõ ¬º¢Â ¬¨Á¡¸ ¬¸¢ô §À¡ÉÐ. þ¾É¡ø ¾¡ý ¦º¡øÖ¸¢§Èý, ²ú¨Á¨Âî ºð¼õ §À¡ðÎô §À¡ì¸ ÓÊ¡Ð. ²ý ±ýÀ¨¾ô ÒâóÐ ¦¸¡ûÇ §ÅñÎÁ¡É¡ø, §¸ÃÇò¨¾ô ÀÊÔí¸û.
§Á¡ºÁ¡É Å¢¨Ç׸¨Çô Àð¼È¢Â¡Áø ±ôÀÊ þ§Ã¡ôÀ¢Â÷¸Ùõ «¦Áâì¸Ùõ ¾í¸û ÜÄ¢ ¿¢ÄÅÃò¨¾ì ÜðÊÉ¡÷¸û ±ýÚ º¢Ä Å¡º¸÷¸û §¸ð¸Ä¡õ. «¾ý Å¢¨¼ Å¢¨ÇôÒ¨Á (productivity)¨Âì ÜðΞ¢ø þÕ츢ÈÐ. ¯¨ÆôÀ¡Ç÷¸Ç¢ý Å¢¨ÇôÒ¨Á ÜÎõ ¦À¡ØÐ, §Å¨Ä ¦¸¡ÎôÀÅ÷¸ÙìÌì ܼì ÜÄ¢ ¦¸¡ÎòÐõ, §À¡ðÊ¡Ç÷¸ÙìÌ ®Î ¦¸¡ÎòÐì ¸ðÊ ÅÕ¸¢È¡ü §À¡ø ¬¸¢ÈÐ. ²ú¨Á¨Âì ̨ÈôÀ¾ý ÝìÌÁõ Å¢¨ÇôÒ¨Á¨Âì ÜðΞ¢§Ä§Â ¯ûÇÐ. «ôÀÊî ¦ºöÅÐ ÜÄ¢¸¨Ç ¦¿Î¿¡ð¸ÙìÌ ¿¢¨ÄôÀ¾¡¸ ¯Â÷ò¾ ¨Å츢ÈÐ. ºð¼õ §À¡ÎÅÐ «ôÀÊî ¦ºö¡Ð.
------------------------------------------------------------------
3 comments:
கட்டுரையை மொழிபெயர்த்தமைக்கு நன்றி. பல்வேறு துறைகளில் உள்ள நுணுக்கங்களை தமிழ்வழியாகப் பரிமாறிக் கொள்ளுமாறு நீங்கள் கூறும் யோசனை மிக வலுவான ஒன்று.
திரு.அய்யர் அவர்களின் வலதுசாரிப் பொருளியல் கொள்கைகளில் எனக்கு மிகுந்த உடன்பாடு கிடையாது. வறுமையொழிப்பைப் பற்றி கருத்து தெரிவிக்க, வணிக சார்புடைய திரு.ஆய்யர் அவர்கள் முனைந்ததுதான் வேடிக்கை. அரசின் ஆக்கபூர்வமான குறுக்கீடுகளால் வறுமை ஒழிப்பில் கவனிக்கத்தக்க முன்னேற்றங்களை அடைய இயலும். ஆரம்பக் கல்வி மற்றும் சுகாதார நிலையில் (அரசு ஈடுபாட்டால்) உயர்ந்துள்ள மாநிலங்களில் வறுமை குறைந்ததாகவே தெரியவருகிறது. குறைந்தபட்ச ஊதியம் நிறுவப் பட்டால் தொழிலாளர்களின் உழைப்புக்கேற்ற நியாய ஊதியமாவது கிடைத்து அவர்கள் சுரண்டப் படுவது தடைபடும். வணிக முதலைகள் / வலதுசாரியினருக்கு ஒவ்வாத இத்தகைய நடவடிக்கைகளை அவர்கள் எதிர்ப்பது இயற்கையே :) வறுமையை ஒழிக்க மக்கள் இன்னும் கடினமாக உழைக்க வேண்டும் என்ற அறிவுரை (காணப்படும் சுரண்டல்தனமான சூழலில்) குறும்புத்தனமான ஒன்றாகவே எனக்குப் படுகிறது.
உங்கள் பதிவுகளை மிகுந்த ஆர்வத்தோடு படித்தேன், குறிப்பாக, நீங்கள் எழுதிய யாழ் மற்றும் இசையைக் குறித்த தகவல்களை. உங்கள் தமிழ்ச்சேவை தொடர என் வாழ்த்துக்கள். :)
அருமையான கட்டுரையை அழகாக மொழிபெயர்த்துப்போட்டிருக்கிறீர்கள். நன்றி.
PRODUCTIVITY யை அதிகப்படுத்துவது குறித்து, சிங்கப்பூரின் லீ குவான் யூ அவர்கள் ஒரு முக்கியமான கருத்து சொன்னார். அது இங்கேயும் சரியாய் அமைந்திருக்கிறது.
நன்றி.
எம்.கே.குமார்.
தொழிலாளர்களுக்கு கூலி உயரவேண்டும் என்றால் என்ன செய்ய வேண்டும் என்பதற்கு ஓர் எளிய உதாரனம்.
ஒரு தொழிலாளிக்கு ஒரு தீப்பெட்டி செய்வதற்கு 10 காசு கூலி என்று வைத்துக்கொள்வோம். ஒரு நாளைக்கு 100 தீப்பெட்டி களை அவன் செய்தால் அவனுக்கு 100*10= 1000 காசு அல்லது 10 ரூபாய் கூலி கிடைக்கும். அந்த தொழிலாளி 100 க்கும் மேலாக ஒரு ஆயிரம் தீப்பெட்டி செய்வானானால் கூலி நூறு ரூபாயாக உயர்த்த முடியும். ஆனால் தொழிலாளி எப்படி 1000 தீப்பெட்டிகள் செய்வான். இங்குதான் மேலாளர்கள் புதிய உற்பத்தி முறைகளை கண்டுபிடிக்க வேண்டும். இயந்தரமாக்கல் அதன் உச்ச கட்டம்.
இயந்தரமாகினால் மற்ற தொழிலாளிகள் வேலைபோய்விடும்தான். ஆனால் மக்களின் தேவைகள் பெருகுவதால் எங்கேனும் ஒரு தொழிலில் ஆட்கள்் தேவைபடுவார்கள். தொழிலாளிகள் புதிய தேவைக்கு ஏற்ப தங்களை மேம்படுத்திக்கொள்ள வேண்டும். மேம்படுத்திக்கொள்ள விரும்பாதவர்கள்தான் பொதுவுடைமை் பேசுவார்கள்.
ராஜு ராஜேந்திரன்
சின்சின்னாட்டி,
Post a Comment