Friday, April 01, 2005

காணவொரு காலம் வருமோ - 6

6. தாள் எறியால் நெற்றி வடு

மதில் ஏழு; பெரு வாயில்; மால் மேகன் கீழ் வீடு(a);
மா அரங்கம் போல் இருக்கும்;
மண்டாடும் பேரழகைத் துண்டாட, வள நாடன்(b)
மதில் ஆறு போக்கச் சொன்னான்,
சிதை கல்லைக் கொத்தாகச் சேர்த்து எடுத்து, மறு கோயில்
செய்குவதே நோக்க மாக;
சென்னி(c) மகன் செயல் ஒறுத்து, சேவடியார் சினம் ஓங்க,
செழுங் கோயில் அரையர்(d) வந்து,
"எதிரிகளைப் பொருது உலைக்க, அதிர் எறியும் ஆழிக் கை
எங்கள் முனம் பொய்யா ன..தோ?"(e)
என்று எறிந்த தாளத்தால்(f), நெற்றி வடு பட்டு விட,
எகிறியதே திகிரி(g)! மன்னன்
கதி அலைத்த பேராளன், காரழகுத் திருமேனி,
காண ஒரு காலம் வருமோ?
காவிரியின் ஓரத்தில் தேவியுடன் மேவிவரும்
கண்ணபுரச் சௌரி ராசா!


சோழன் ஒருவன் கோயிலின் ஆறு மதில்களை உடைத்தது பொறுக்காமல், ஒரு பத்தர், பெருமாள் மீது கோவத்துடன் தாளத்தை எறிய, பெருமாளுக்கு நெற்றி வடு ஏற்பட்டு, பின் பத்தர் வேண்டு கோளுக்கு இணங்க, தன் திகிரியை எறிந்து சோழனைத் தொலைத்த கதை இந்தப் பாடலில் பேசப்படுகிறது.

a. கீழ் வீடு = 108 விண்ணவத் திருப் பதிகளில் கண்ணபுரம் மட்டுமே கீழ் வீடு என்று அழைக்கப் படும். அது முன்னே 7 மதில்களோடு திருவரங்கம் போல இருக்குமாம். இங்குள்ள மூலவர் பெயர் நீலமேகன் = மால்மேகன்
b. வள நாடன் = சோழன்
c. சென்னி = பூம்புகார்ப் பக்கம் ஆண்ட சோழமரபினர். (உறையூர் பக்கம் ஆண்டவர் கிள்ளி மரபினர்.)
d. கோயில் அரையர் = கோயிலில் இறைப் பணி செய்யும் அன்பர்; திரு அரங்கத்தில் அரையர் சேவை பார்த்தவருக்குத் தெரிந்திருக்கலாம்.
e. "பொருவரைமுன் போர் தொலைத்த பொன்னாழி மற்றொரு கை பொய்த்ததோ" என்று கேட்டதாக இங்கு ஐதீகம்.
f. தாளம் = இறைவர் புகழ் பாடிச் சேவை செய்யும் போது அரையர் கையில் இருந்த கைத்தாளம்.
g. திகிரி = சக்கரம்; திகிரியை எறிந்து மன்னனுக்குப் பாடம் கற்பித்த கதை இங்கே சொல்லப் படுகிறது.
6. ¾¡û ±È¢Â¡ø ¦¿üÈ¢ ÅÎ

In TSCII:

6. ¾¡û ±È¢Â¡ø ¦¿üÈ¢ ÅÎ

Á¾¢ø ²Ø; ¦ÀÕ Å¡Â¢ø; Á¡ø §Á¸ý ¸£ú Å£Î(a);
Á¡ «Ãí¸õ §À¡ø þÕìÌõ;
Áñ¼¡Îõ §ÀÃƨ¸ò Ðñ¼¡¼, ÅÇ ¿¡¼ý(b)
Á¾¢ø ¬Ú §À¡ì¸î ¦º¡ýÉ¡ý,
º¢¨¾ ¸ø¨Äì ¦¸¡ò¾¡¸î §º÷òÐ ±ÎòÐ, ÁÚ §¸¡Â¢ø
¦ºöÌŧ¾ §¿¡ì¸ Á¡¸;
¦ºýÉ¢© Á¸ý ¦ºÂø ´ÚòÐ, §ºÅÊ¡÷ º¢Éõ µí¸,
¦ºØí §¸¡Â¢ø «¨ÃÂ÷(d) ÅóÐ,
"±¾¢Ã¢¸¨Çô ¦À¡ÕÐ ¯¨Äì¸, «¾¢÷ ±È¢Ôõ ¬Æ¢ì ¨¸
±í¸û ÓÉõ ¦À¡ö¡ É..§¾¡?"(e)
±ýÚ ±È¢ó¾ ¾¡Çò¾¡ø(f), ¦¿üÈ¢ ÅÎ ÀðΠŢ¼,
±¸¢È¢Â§¾ ¾¢¸¢Ã¢(g)! ÁýÉý
¸¾¢ «¨Äò¾ §ÀáÇý, ¸¡ÃÆÌò ¾¢Õ§ÁÉ¢,
¸¡½ ´Õ ¸¡Äõ ÅÕ§Á¡?
¸¡Å¢Ã¢Â¢ý µÃò¾¢ø §¾Å¢Ô¼ý §ÁÅ¢ÅÕõ
¸ñ½ÒÃî ¦ºªÃ¢ ạ!


§º¡Æý ´ÕÅý §¸¡Â¢Ä¢ý ¬Ú Á¾¢ø¸¨Ç ¯¨¼ò¾Ð ¦À¡Ú측Áø, ´Õ Àò¾÷, ¦ÀÕÁ¡û Á£Ð §¸¡Åòмý ¾¡Çò¨¾ ±È¢Â, ¦ÀÕÁ¡ÙìÌ ¦¿üÈ¢ ÅÎ ²üÀðÎ, À¢ý Àò¾÷ §ÅñÎ §¸¡ÙìÌ þ½í¸, ¾ý ¾¢¸¢Ã¢¨Â ±È¢óÐ §º¡Æ¨Éò ¦¾¡¨Äò¾ ¸¨¾ þó¾ô À¡¼Ä¢ø §ÀºôÀθ¢ÈÐ.

a. ¸£ú ţΠ= 108 Å¢ñ½Åò ¾¢Õô À¾¢¸Ç¢ø ¸ñ½ÒÃõ ÁðΧÁ ¸£ú ţΠ±ýÚ «¨Æì¸ô ÀÎõ. «Ð Óý§É 7 Á¾¢ø¸§Ç¡Î ¾¢ÕÅÃí¸õ §À¡Ä þÕìÌÁ¡õ. þíÌûÇ ãÄÅ÷ ¦ÀÂ÷ ¿£Ä§Á¸ý = Á¡ø§Á¸ý
b. ÅÇ ¿¡¼ý = §º¡Æý
c. ¦ºýÉ¢ = âõÒ¸¡÷ô Àì¸õ ¬ñ¼ §º¡ÆÁÃÀ¢É÷. (¯¨Èä÷ Àì¸õ ¬ñ¼Å÷ ¸¢ûÇ¢ ÁÃÀ¢É÷.)
d. §¸¡Â¢ø «¨ÃÂ÷ = §¸¡Â¢Ä¢ø þ¨Èô À½¢ ¦ºöÔõ «ýÀ÷; ¾¢Õ «Ãí¸ò¾¢ø «¨ÃÂ÷ §º¨Å À¡÷ò¾ÅÕìÌò ¦¾Ã¢ó¾¢Õì¸Ä¡õ.
e. "¦À¡ÕŨÃÓý §À¡÷ ¦¾¡¨Äò¾ ¦À¡ýÉ¡Æ¢ Áü¦È¡Õ ¨¸ ¦À¡öò¾§¾¡?" ±ýÚ §¸ð¼¾¡¸ þíÌ ³¾£¸õ.
f. ¾¡Çõ = þ¨ÈÅ÷ Ò¸ú À¡Êî §º¨Å ¦ºöÔõ §À¡Ð «¨ÃÂ÷ ¨¸Â¢ø þÕó¾ ¨¸ò¾¡Çõ.
g. ¾¢¸¢Ã¢ = ºì¸Ãõ; ¾¢¸¢Ã¢¨Â ±È¢óÐ ÁýÉÛìÌô À¡¼õ ¸üÀ¢ò¾ ¸¨¾ þí§¸ ¦º¡øÄô Àθ¢ÈÐ.

No comments: