Monday, April 11, 2005

காதலுக்குக் கண்ணில்லை

காதலுக்குக் கண்ணில்லை.

கமலம் தம்புராட்டி என்ற என்ற ஒரு கதையில் ஓர் இனிய மலையாளக் கவிதையை மின்சுவடி மடற்குழுவில் திருவாட்டி. கமலாதேவி ஒரு சமயம் எழுதியிருந்தார். அதை தமிழாக்கம் இங்கே.

அன்புடன்,
இராம.கி.


ஸ்னேஹிக்கான் ஒரு நிமிஷம்
ஸ்வாஸிக்கானும் ஒரு நிமிஷம்
மோஹிக்கான் ஒரு நிமிஷம்
தாஹிக்கானும் ஒரு நிமிஷம்
போஹிக்கான் எத்ர நிமிஷங்ஙள் ?
ப்ரேமிக்கான் எத்ர நிமிஷங்ஙள் ?
ஜீவிதம் ஸ்தம்பிக்கான் மாத்ரம் எத்ர எத்ர நிமிஷங்ஙள்?
உஷ்,
ஞான் ஒரு ரஹஸ்யம் சொல்லட்டோ ,?
"ப்ரேமத்தினு கண்ணில்லா"

தமிழாக்கம்:

நேயத்திற் கொரு நுணியம்
ஊய்த்துவிட ஒரு நுணியம்
மோகமுற ஒரு நுணியம்
தாகமுற ஒரு நுணியம்
போகிக்க எத்தனையோ?
பொருவலுக்கும் எத்தனையோ?
வாழ்க்கையே நின்றவிழ
வாய்ப்பதுவும் எத்தனையோ?

உஷ்
கமுக்காய்ச் சொல்லிடவா?
"காதலுக்குக் கண்ணில்லை"¸¡¾ÖìÌì ¸ñ½¢ø¨Ä.

In TSCII:

¸ÁÄõ ¾õÒáðÊ ±ýÈ ±ýÈ ´Õ ¸¨¾Â¢ø µ÷ þɢ Á¨Ä¡Çì ¸Å¢¨¾¨Â Á¢ýÍÅÊ Á¼üÌØÅ¢ø ¾¢ÕÅ¡ðÊ. ¸ÁÄ¡§¾Å¢ ´Õ ºÁÂõ ±Ø¾¢Â¢Õó¾¡÷. «¨¾ ¾Á¢Æ¡ì¸õ þí§¸.

«ýÒ¼ý,
þáÁ.¸¢.


Š§É†¢ì¸¡ý ´Õ ¿¢Á¢„õ
ŠÅ¡…¢ì¸¡Ûõ ´Õ ¿¢Á¢„õ
§Á¡†¢ì¸¡ý ´Õ ¿¢Á¢„õ
¾¡†¢ì¸¡Ûõ ´Õ ¿¢Á¢„õ
§À¡†¢ì¸¡ý ±òà ¿¢Á¢„í¹û ?
ô§ÃÁ¢ì¸¡ý ±òà ¿¢Á¢„í¹û ?
ƒ£Å¢¾õ Š¾õÀ¢ì¸¡ý Á¡òÃõ ±òà ±òà ¿¢Á¢„í¹û?
¯‰,
»¡ý ´Õ ÆŠÂõ ¦º¡øÄ𧼡 ,?
"ô§ÃÁò¾¢Û ¸ñ½¢øÄ¡"

¾Á¢Æ¡ì¸õ:

§¿Âò¾¢ü ¦¸¡Õ ѽ¢Âõ
°öòÐÅ¢¼ ´Õ ѽ¢Âõ
§Á¡¸ÓÈ ´Õ ѽ¢Âõ
¾¡¸ÓÈ ´Õ ѽ¢Âõ
§À¡¸¢ì¸ ±ò¾¨É§Â¡?
¦À¡ÕÅÖìÌõ ±ò¾¨É§Â¡?
Å¡ú쨸§Â ¿¢ýÈÅ¢Æ
Å¡öôÀÐ×õ ±ò¾¨É§Â¡?

¯‰
¸Ó측öî ¦º¡øÄ¢¼Å¡?
"¸¡¾ÖìÌì ¸ñ½¢ø¨Ä"

14 comments:

ஜெயந்தி சங்கர் (Jayanthi Sankar) said...

அன்புள்ள இராம.கி அய்யா, மலையாள கவிதை அழகாய் இருக்கிறதே என்று படித்துக்கொண்டே போனேன். பின்வந்த உங்களின் தமிழாக்காம் என்னை அப்படியே ஆச்சரியத்தில் பிரமிக்கவைத்துவிட்டது. உங்களின் சொல்வளத்திற்கும், சொற்சிக்கனத்திற்கும் புலமைக்கும் என் சிரம்தாழ்ந்த வணக்கங்கள். உங்களின் பதிவுகள் பின்வரும் சந்ததியினருக்குப் பொக்கிஷங்களாய் அமையும். வாழ்க உங்கள் அரும்பணி. அன்புடன், ஜெயந்தி

இராம.கி said...

அன்பிற்குரிய ஜெயந்தி சங்கர், மூர்த்தி,

என்னுடைய பாதி மலையாள அறிவில் இந்த மொழிபெயர்ப்பைச் செய்திருக்கிறேன். அடுத்துள்ள மூன்று (மலையாளம், கன்னடம், தெலுங்கு) மொழிகளில் நமக்குப் பழக்கம் கூடவேண்டும் என்பதில் எனக்கு உடன்பாடு உண்டு. நம்முடையதும் அவர்களுக்குத் தெரிவதில்லை; அவர்களுடையதும் நமக்குத் தெரிவதில்லை. முடிந்தமட்டும் இந்த முயற்சிகளில் நண்பர்கள் இறங்க வேண்டும். இரா. முருகன் ஒருமுறை நீலக்குயில் என்ற மலையாளப் பாட்டை அரையர் குழும்பில் இட்டார். அதையும் மொழிபெயர்த்து அங்கு இட்டேன். அதன் படி(copy)யைத் தேடி, மீண்டும் கிடைத்தால் இங்கு வலைப்பதிவில் போடுவேன்.

அன்புடன்,
இராம.கி.

Thangamani said...

நல்ல கவிதையும் அழகான தமிழும்.
நுணியம் என்ற சொல்லை இப்போதுதான் அறிகிறேன். நன்றாக இருக்கிறது. நன்றிகள்

இராம.கி said...

அன்பிற்குரிய தங்கமணி,

உங்கள் கனிவிற்கு நன்றி.

நுணுகுதல் என்ற வினையில் பிறந்தது தான் நுணிதல்; அதன் பெயர்ச்சொல் நுணியம். நுணுகுதலின் பிறவினை நுணுத்தல். நுணுத்தலில் பிறக்கும் பெயர்ச்சொல் நுணுத்தம். நகரமும் மகரமும் தமிழில் போலிகள். நுப்பது என்பதை முப்பது என்றும், நுனி என்பது முனி என்றும் சொல்லுகிறோம் இல்லையா? நுணுத்தம், முணுத்தம் ஆக்கும். Minute - இன் இணைச்சொல் இப்போது புரிகிறதா?

நுண்ணுதல் என்பதுதான் மூக்கொலி வேறுபாடில் நும்முதல் என்று ஆகும். நும்முதலின் பெயர்ச்சொல் நுமையம். இதைத் திரித்து நிமையம்>நிமியம்>நிமிஷம் என்று வடமொழி வழங்கும். நிமைத்தல் என்ற கண்துடிப்பிற்கும் நுமையத்திற்கும் தொடர்பு இல்லை. மோனியர் வில்லிம்சிலும் சரியான விளக்கம் கிடையாது.

நுணியம், நுமையம், நுணுத்தம் என எல்லாமே minute யைக் குறிப்பவை தான்.

நம்முடைய சொல்வளம் நம் வேரில் இருக்கிறது. சரியாகச் சொன்னால், தமிழ்க்கடை விரிந்து தான் கிடக்கிறது. கொள்வதற்குத் தான் ஆட்களைக் காணோம்.

அன்புடன்,
இராம.கி.

Chandravathanaa said...

இராம.கி அவர்களுக்கு
உங்களிடமிருந்து நாமறியாத பல புதிய புதிய சொற்கள் கிடைக்கின்றன.
உங்கள் பதிவுகளைப் படிப்பதற்கு மனது மிகவும் ஆர்வப் படுகிறது.
தொடர்ந்தும் தாருங்கள்.

நட்புடன்
சந்திரவதனா

Mookku Sundar said...

வரிகள் தனித்தனியே புரிந்தாலும், கவிதை மொத்த்மாய் சொல்லவருவது என்னவென்று விளங்கவில்லை..

காலக்கணக்கை கவிதை முழுக்க சொல்லிவிட்டு, கடைசியில் கண்ணில்லை என்று முடிக்கிறார்களே...
என்ன அர்த்தம் இதற்கு..??

இராம.கி said...

அன்பிற்குரிய சந்திரவதனா, மூக்கன்

பின்னூட்டிற்கு நன்றி.

சந்திரவதனா:

புதிய சொற்கள் என்று படைக்கக் காரணம், ஆங்கிலம் நம்மோடு ஊடுறுவும் போது அவற்றிற்கான இணைச்சொற்கள் நம்மிடம் இல்லை என்று சிலர் மயங்குறுவதால் தான். நாம் நம்முடைய வட்டாரச் சொற்களையும், கொஞ்சம் இலக்கியத்தையும், ஆழப்பார்த்து, சொல் மூலம் கண்டு பொருள் நீட்சி கொடுத்தால் மொழியின் ஆளுமையைக் கூட்ட முடியும்.

மூக்கன்:

ஒரு பெண்ணைப் பார்த்து நேயம் கொள்ளுவதோ, அவள் அழகைப் பார்த்து மூச்சு விடுவதோ, அவள் தனக்கே தனக்கு என்று மோகமுறுவதோ, அவள் இல்லையென்றால் தான் எங்கே என்று தாகம் கொள்ளுவதோ - இவை எல்லாம் உள்ளம் ஒட்டிய செயல்கள் ஆனாலும், இவை ஏற்படுவது ஒரு நுணியத்தில்.

ஆனால் போகிப்பதற்கும், அந்த போகத்தில் (கலவியில்) பொருந்தி நிற்பதற்கும் ஒரு நுணியம் போதுமா? அது எவ்வளவு நேரம் என்றும் சொல்ல முடியாது, ஏன், காலம் அங்கே அசைவில்லாமல் நின்று போகிறது, ஆகையால் அது எத்தனையோ என்று வியந்தாற்போல் சொல்லப் படுகிறது. ["The secen minutes" என்று ஒரு புதினம் படித்திருக்கிறீர்களா? Harold Robbins என்று நினைக்கிறேன். Remarkable narration. Especially the Seven minutes part. என்னடா இராமகி Harold Robbins பற்றிச் சொல்கிறாரே என்று வியப்போ? ஒரு காலத்தில் பித்தாய்க் கிடந்தேன்.]

அதே போல வாழ்க்கை நின்று அவிழ்வதும் கூட ஒரு நுணியம் என்றா நினைக்கிறீர்கள்? அப்படி ஒருவருக்குத் தோன்றக்கூடும்; ஆனால் அது எத்தனை காலம் என்று யார் சொல்லுவது? ஒவ்வொரு நுணியமும் நாம் வாழுகிறோம். ஆனால் சென்று போன நுணியம் நமக்குத் திரும்பக் கிடைக்குமா? எது வாழ்க்கை? சென்றதா? வருவதா? வாழ்க்கை நிலையாமை இங்கு குறிப்பால் உணர்த்தப் படுகிறது.

மொத்தத்தில் காதலுக்குக் கண்ணில்லை. எதெல்லாம் நுணியத்திற்கு மேல் நடக்க வேண்டுமோ, அது உளத்தளவில் இருந்த போதும், அது பற்றிச் சட்டென்று முடிவிற்கு வந்து விடுகிறோம்; ஆனால் கலவியும் வாழ்க்கையும்? அவை நுணியத்துள் முடியாதவை.

இந்தப் பாடல் காதலின் திடீர்த் தன்மையை, ஏன் என்று காரணம் சொல்ல முடியாததை, எந்த விதமான ஏரணமும் இல்லாததை, வியந்து பாடியது. ஆனாலும் முடிவில் பொருண்மொழிக் காஞ்சியைச் சொல்லி, ஒரு முரணையும் தொடுகிறது. இந்த முரண் தான் கவிதைக்கு நேர்த்தியைக் கொடுக்கிறது. அந்த முரண் இல்லையென்றால் இது வெறும் விவரிப்பு. கவிதை அல்ல.

அன்புடன்,
இராம.கி.

Mookku Sundar said...

விளக்கத்துக்கு நன்றி.

வசந்தன்(Vasanthan) said...

அடடா!
என்ன ஒரு அழகான நடை, அழகான தமிழ்.
கவிதையின் மொழிபெயர்ப்பு அருமையாயிருக்கிறது.

நுணியம் என்ற சொல்லை இன்றுதான் அறிந்தேன். மேலும் ஒரு சொல்லை துலக்க வெளிக்கிட்டு அப்படியே வேர் வழியே போய் ஒரு சுற்றுச் சுற்றிவந்து நிறுத்தும்போது நிறைய விசயங்கள் தெரிந்து கொண்டிருப்போம். உங்களிடமிருந்து நிறைய எதிர்பார்க்கிறேன்.

செக்கன் எனும் கால அளவைக்கு வினாடி என்பது சரிதானே? (வினாடியில் எந்த 'ன'கரம் என்பதும் என் குழப்பம்('ன''ந'))

வசந்தன்(Vasanthan) said...

ஐயா!
இன்னொரு கேள்வி.
வளவு என்று உங்கள் பக்கத்தின் முகவரி சொல்கிறது. இது எந்த அர்த்தத்தில்?
நாங்கள் வளவு என்பது காணியை. அதே பொருளில்தானா நீங்களும் பாவிக்கிறீர்கள்?

இராம.கி said...

அன்பிற்குரிய வசந்தன்,

நுணியம் என்பதன் வேர் நுல். இந்த நுல்லில் இருந்து நுணுகுதல், நுமுகுதல், நூகுதல் எனப் பலவினைகள் பிறக்கும். எல்லாமே micro, minute என்று மிகச் சிறிய அளவைகளைக் குறிக்கும். ஓரிரு மாதங்களின் முன் ஆச்சிமகன் தன் வலைப்பதிவில் microwave oven பற்றிச் சொல்லியிருந்தார். நூகலை அடுப்பு என்று microwave oven - யைச் சொல்லலாம் என்று அங்கு பின்னூட்டில் எழுதியிருந்தேன். nano என்பதற்கு நுண் என்பதை நீட்டி நூண் என்று சொல்லலாம். தமிழ் நெகிழ்ச்சியுள்ள மொழிதான். நமக்குத் தான் கொஞ்சம் ஆர்வம் வேண்டும். வேறொரு முறை அளவைகள் பற்றி எழுதுவேன்.

second என்பதை விநாடி [வினாடி என்பது தவறான பலுக்கல் (spelling)] என்று சொல்லுவதைக் காட்டிலும் நொடி என்று சொல்லுவது இன்னும் சிறக்கும்.

வளவு என்பது சிவகங்கைப் பக்கம் வீட்டிற்குள் இருக்கும் முற்றத்தை ஒட்டி வளைவாக வரும் பத்தியைக் குறிக்கும் சொல். இது வளைவாக சுற்றாக (இது சதுரம் தான்; ஆனாலும் சுற்றி) வருவதால், வளவு. நீங்கள் சொல்லும் பொருள் காணியைச் சுற்றி வளைத்து வரும் வரம்பைக் குறிக்கும். அடிப்படையில் வலம் வரும் இடங்கள் எல்லாம் வளவு தான். ஒரு கூட்டுக் குடும்பம் இப்படி ஒரு வளவில் குடியிருக்கும். ஒவ்வொரு நெற்றுக் குடும்பத்திற்கும் (nuclear family) தனித்தனி அறை வளவில் இருக்கும். சென்னை வரும் போது கிழக்குக் கடற்கரைச் சாலையில் இருக்கும் தட்சிணச் சித்திராவைப் பாருங்கள். அங்கு தமிழகத்தில் பல்வேறு வீட்டு அமைப்புக்களை அப்படியே முழுவுருவில் கட்டி வைத்திருக்கிறார்கள். பார்க்க வேண்டிய இடம் அது.

அன்புடன்,
இராம.கி.

Mannai Madevan said...

“கொள்வோன் கொள்வகை அறிந்து அவன் உளம் கொள
கோட்டம் இல் மனத்தின் நூல் ஈயும்" நல்லோன் நுமக்கு!
வணக்கங்கள்.

காதலில் மட்டுமல்ல சிலகாலம்
உளம் நிறை உணர்விலும்
“வாய்ச் சொற்கள் பயனற்று” போய்விடுமோ!

அன்புடன்
மன்னை மாதேவன்.

dondu(#11168674346665545885) said...

ஹரால்ட் ராபின்ஸ் அல்ல. இர்விங்க் வாலஸ்.
அன்புடன்,
டோண்டு ராகவன்

இராம.கி said...

அன்பிற்குரிய மன்னை மகாதேவன், இராகவன்

உங்கள் பின்னூட்டிற்கு நன்றி.

மகாதேவன்:

வாய்ச்சொற்கள் பயனற்றுப் போகத்தான் செய்யும்.

இராகவன்:

நீங்கள் எழுதியது சரி. என் நினைவுத் தடுமாற்றத்தில் இர்விங் வாலசிற்கு மாறாய் ஆரால்டு ராபின்சு என்று எழுதிவிட்டேன்.

அன்புடன்,
இராம.கி.