Saturday, April 02, 2005

காணவொரு காலம் வருமோ - 7

7. கதம் எட்டும் ஓர் இடத்தில்

ஆற்றுஓரம் பொன்னிமடி, அரங்கினிலே சாய்ந்த படி,
அறிதுயிலில் பள்ளி கொண்டும்(a),
அலங்கார கோலத்தில் எழுமலையைத் தாண்டிஒரு
ஆட்சிநிலை உள்ளிக் கொண்டும்(b),
வீற்றுஓங்கும் கேழலாய்(c) வெம்புவியை மருப்பு(d)ஏற்றும்
விளையாட்டில் முகிழ்த்திக் கொண்டும்(e),
விண்ணவர்க்கும் மண்ணவர்க்கும் நடங்காட்ட விழைந்தபடி,
வெளுந்தோய மலையைக் கொண்டும்(f),
ஆற்றுஓடும் சாலகத்தும்(g), அலகநதை நேமிக்கா(டு)(h)
அருள்இலந்தைப் புரத்தி லேயும்(i),
அம்புநிறைப் புழைக்கரத்தும்(j), தான்தோன்றி(k)த் திருமேனி
அழகுறவே வெளித்து நிற்க,
கால்தாழச் சேர்ந்தார்க்கு கதம்எட்டும்(l) ஓர்இடத்தில்(m),
காணஒரு காலம் வருமோ?
காவிரியின் ஓரத்தில் தேவியுடன் மேவிவரும்
கண்ணபுரச் சௌரி ராசா!

நாராயணாய நமக என்ற எட்டெழுத்து மந்திரத்தைச் சிறப்பிட்டுக் குறிப்பிடும் எட்டுத் திருத்தலங்களை இந்தப் பாடல் பேசுகிறது.

a. திருவரங்கம்; b. திருவேங்கடம்
c. கேழல் = வராகம் (அவதாரம்), காட்டுப் பன்றி
d. மருப்பு = கொம்பு, தந்தம்
e. திருமுகிழ்நம்>திருமுகிணம்>திருமுசிணம்>ஸ்ரீ முஷ்ணம்; முகிழ்த்தது = தோன்றியது; பூவராகர் எனப் பெயர் கொண்ட மூலவர் திருமேனி மிகச் சிறியதாய் முகிழ்த்தது இந்தத் தலச்சிறப்பு;
f. திருத் தோய் மலை = திரு நீர் மலை; தோய் = பால், நீர்; நின்ற, இருந்த, கிடந்த கோலங்கள் மட்டும் அல்லாது, நடந்த கோலத்தையும் இங்கு காட்டியதாய்ச் சொல்லுவது விண்ணவர் மரபு. தோயத்து அத்தி = தோய்த்தத்தி> தோய்த்தாத்தி> தோத்தாத்தி> தோத்தாத்ரி; அத்தி = மலை; தென்பாண்டி நாட்டில் உள்ள வான மாமலை என்னும் சீவரமங்கை தான் தோத்தாத்திரி என்பாரும் உண்டு. அங்குமே தான் தோன்றித் திருமேனி உண்டு. இதுவா, அதுவா என்ற குழப்பம் பலருக்கும் உண்டு.
g. திருச் சாலக்கம்மம் = பனி மலையில் இருந்து வழிந்தோடும் கண்டகி நதிக்கரையில் சால மரங்கள் நிறைந்த கம்மம் சாலக்கம்மம்> சாலக்கமம்>சாலக்கிராமம்>சாளக்கிராமம். யால மரமே சால மரம் என்றும் ஆச்சா மரம் என்றும் இந்தக் காலத்தில் சொல்லப் படுகிறது. சாலக் கமம் என்பது கண்டகி ஆற்றில் கிடைக்கும் ஒரு விதக் கருஞ் சாயற் கல்லையும் குறிக்கும். It is a black stone containing a fossil ammonite
h. திரு நேமிக்காடு; நேமி = சக்கரம், வளையம்; நும்முதல்>நுமுதல்>நமுதல்>நமுகுதல் = குழைதல்; வளைதல்; நமுக = வணங்குக; நாராயணய நமக என்றால் "நாராயணனை வணங்குக" என்றே பொருள்; நமுக/நமக என்ற சொல்லை நாமம் என்ற பெயர்ப் பொருளாய்ப் பலரும் தவறாகப் புரிந்து கொள்கிறார்கள். நமுதல்>நெமுதல்>நேமி; காடு = அரணம்> ஆரணம்> ஆரண்யம்; வட மொழியில் இது நைமிச ஆரண்யம் என்று ஆகும்; இது அலக ந(ந்)தை ஆற்றின் கரையில் உள்ளது.
i. திரு இலந்தைப் புரம்; இலந்தை = பத்ரி என்னும் பத்ரி நாத்; பட்டை = இலை, ஓலைப் பட்டை; பட்டம்>பத்தம்>பத்ரம்; அலக நந்தையும் தோலி கங்கையும் புணரும் இடத்தில் அலக நந்தைக் கரையில் உள்ளது திரு இலந்தைப் புரம். இதைத் திரு அதரி என்றும் சொல்லுவதுண்டு. இருந்த கோலத்தில் இறைவன் ஆசானாய் அருள் புரியும் தலம்.
j. திருப் புழைக்கரம் = புஷ்கரம்; இந்தத் தலம் எங்கு உள்ளது என்று இதுவரை நான் அறிந்தேன் இல்லை. சிலர் இராசத்தானில் ஆச்மீருக்கு அருகில் உள்ள புஷகர் என்பார். அங்கு ஒரு தெற்கத்திப் பெருமாள் கோயில் உள்ளது. பிர்லா குடும்பத்தார் செலவழிக்கிறார். அங்கு இருக்கும் பட்டரும், விண்ணவ மரபும் இதுவே அதுவென்றும் சொல்கின்றனர். இதுதான் அதுவா என்ற ஐயம் எனக்குண்டு. அறிந்தவர்கள் விளக்க வேண்டும்.
k. தானே தோன்றுதல் = இங்கே இந்தத் திருமேனிகள் சொயம்புவாக(சுயம்புவாக), சொந்தாகக் கிடைத்ததாக ஐதீகம்; தானே தோன்றியவை = ஸ்வயம் வ்யக்த ஸ்தலம் வியத்தல்>வியி>விழி; சொந்தாய் வெளித்த தலம் = தானே வெளிப்பட்ட தலம்.
l. கதம் எட்டு = எட்டுக் கதங்கள் = எட்டு ஓசைகள்; விண்ணவனைக் குறிப்பிடும் எட்டெழுத்து; ஒவ்வோர் எழுத்தும் ஒரு திரு மேனியாய் எட்டு இடத்தில் எழுந்ததாம்.
m. எட்டுத் தான்தோன்றித் திருமேனிகளையும் ஓரிடத்தில் சேவிக்க வேண்டும் எனில் கண்ணபுரம் போனால் போதும் என்பது விண்ணெறியாளரின் நம்பிக்கை.

In TSCII:

7. ¸¾õ ±ðÎõ µ÷ þ¼ò¾¢ø

¬üÚ µÃõ ¦À¡ýÉ¢ ÁÊ, «Ãí¸¢É¢§Ä º¡öó¾ ÀÊ,
«È¢ ТĢø ÀûÇ¢ ¦¸¡ñÎõ(a),
«Äí¸¡Ã §¸¡Äò¾¢ø ±Ø Á¨Ä¨Âò ¾¡ñÊ ´Õ
¬ðº¢ ¿¢¨Ä ¯ûÇ¢ì ¦¸¡ñÎõ(b),
Å£üÚ µíÌõ §¸ÆÄ¡ö(c) ¦Åõ ÒÅ¢¨Â ÁÕôÒ(d) ²üÚõ
Å¢¨Ç¡ðÊø Ó¸¢úò¾¢ì ¦¸¡ñÎõ(e),
Å¢ñ½Å÷ìÌõ Áñ½Å÷ìÌõ ¿¼í ¸¡ð¼ Å¢¨Æó¾ ÀÊ,
¦ÅÙó §¾¡Â Á¨Ä¨Âì ¦¸¡ñÎõ(f),
¬üÚ µÎõ º¡Ä¸òÐõ(g), «Ä¸ ¿¨¾ §¿Á¢ì ¸¡(Î)(h)
«Õû þÄó¨¾ô ÒÃò¾¢ §ÄÔõ(i),
«õÒ ¿¢¨Èô Ò¨Æì ¸ÃòÐõ(j), ¾¡ý §¾¡ýÈ¢(k)ò ¾¢Õ §ÁÉ¢
«ÆÌȧŠ¦ÅÇ¢òÐ ¿¢ü¸,
¸¡ø ¾¡Æî §º÷ó¾¡÷ìÌ ¸¾õ ±ðÎõ(l) µ÷ þ¼ò¾¢ø(m),
¸¡½ ´Õ ¸¡Äõ ÅÕ§Á¡?
¸¡Å¢Ã¢Â¢ý µÃò¾¢ø §¾Å¢Ô¼ý §ÁÅ¢ÅÕõ
¸ñ½ÒÃî ¦ºªÃ¢ ạ!

¿¡Ã¡Â½¡Â ¿Á¸ ±ýÈ ±ð¦¼ØòÐ Áó¾¢Ãò¨¾î º¢ÈôÀ¢ðÎì ÌÈ¢ôÀ¢Îõ ±ðÎò ¾¢Õò¾Äí¸¨Ç þó¾ô À¡¼ø §À͸¢ÈÐ.

a. ¾¢ÕÅÃí¸õ; b. ¾¢Õ§Åí¸¼õ
c. §¸Æø = Åá¸õ («Å¾¡Ãõ), ¸¡ðÎô ÀýÈ¢
d. ÁÕôÒ = ¦¸¡õÒ, ¾ó¾õ
e. ¾¢ÕÓ¸¢ú¿õ>¾¢ÕÓ¸¢½õ>¾¢ÕÓº¢½õ>‚ Ó‰½õ; Ó¸¢úò¾Ð = §¾¡ýÈ¢ÂÐ; âÅá¸÷ ±Éô ¦ÀÂ÷ ¦¸¡ñ¼ ãÄÅ÷ ¾¢Õ§ÁÉ¢ Á¢¸î º¢È¢Â¾¡ö Ó¸¢úò¾Ð þó¾ò¾Äî º¢ÈôÒ;
f. ¾¢Õò §¾¡ö Á¨Ä = ¾¢Õ ¿£÷ Á¨Ä; §¾¡ö = À¡ø, ¿£÷; ¿¢ýÈ, þÕó¾, ¸¢¼ó¾ §¸¡Äí¸û ÁðÎõ «øÄ¡Ð, ¿¼ó¾ §¸¡Äò¨¾Ôõ þíÌ ¸¡ðʾ¡öî ¦º¡øÖÅРŢñ½Å÷ ÁÃÒ. §¾¡ÂòÐ «ò¾¢ = §¾¡öò¾ò¾¢> §¾¡öò¾¡ò¾¢> §¾¡ò¾¡ò¾¢> §¾¡ò¾¡òâ; «ò¾¢ = Á¨Ä; ¦¾ýÀ¡ñÊ ¿¡ðÊø ¯ûÇ Å¡É Á¡Á¨Ä ±ýÛõ º£ÅÃÁí¨¸ ¾¡ý §¾¡ò¾¡ò¾¢Ã¢ ±ýÀ¡Õõ ¯ñÎ. «í̧Á ¾¡ý §¾¡ýÈ¢ò ¾¢Õ§ÁÉ¢ ¯ñÎ. þÐÅ¡, «ÐÅ¡ ±ýÈ ÌÆôÀõ ÀÄÕìÌõ ¯ñÎ.
g. ¾¢Õî º¡Äì ¸õÁõ = ÀÉ¢ Á¨Ä¢ø þÕóÐ ÅƢ󧾡Îõ ¸ñ¼¸¢ ¿¾¢ì¸¨Ã¢ø º¡Ä ÁÃí¸û ¿¢¨Èó¾ ¸õÁõ º¡Äì¸õÁõ>º¡Äì¸Áõ>º¡Ä츢áÁõ>º¡Ç츢áÁõ. Â¡Ä ÁçÁ º¡Ä ÁÃõ ±ýÚõ ¬îº¡ ÁÃõ ±ýÚõ þó¾ì ¸¡Äò¾¢ø ¦º¡øÄô Àθ¢ÈÐ. º¡Äì ¸Áõ ±ýÀÐ ¸ñ¼¸¢ ¬üÈ¢ø ¸¢¨¼ìÌõ ´Õ Å¢¾ì ¸Õï º¡Âü ¸ø¨ÄÔõ ÌÈ¢ìÌõ. It is a black stone containing a fossil ammonite
h. ¾¢Õ §¿Á¢ì ¸¡Î; §¿Á¢ = ºì¸Ãõ, ŨÇÂõ; ÑõÓ¾ø>ÑÓ¾ø>¿Ó¾ø>¿Ó̾ø = ̨ƾø; ŨǾø; ¿Ó¸ = Ží̸; ¿¡Ã¡Â½Â ¿Á¸ ±ýÈ¡ø "¿¡Ã¡Â½¨É Ží̸" ±ý§È ¦À¡Õû; ¿Ó¸/¿Á¸ ±ýÈ ¦º¡ø¨Ä ¿¡Áõ ±ýÈ ¦ÀÂ÷ô ¦À¡ÕÇ¡öô ÀÄÕõ ¾ÅÈ¡¸ô ÒâóÐ ¦¸¡û¸¢È¡÷¸û. ¿Ó¾ø>¦¿Ó¾ø>§¿Á¢; ¸¡Î = «Ã½õ> ¬Ã½õ> ¬ÃñÂõ; ż ¦Á¡Æ¢Â¢ø þÐ ¨¿Á¢º ¬ÃñÂõ ±ýÚ ¬Ìõ; þÐ «Ä¸ ¿(ó)¨¾ ¬üÈ¢ý ¸¨Ã¢ø ¯ûÇÐ.
i. ¾¢Õ þÄó¨¾ô ÒÃõ; þÄó¨¾ = Àòâ ±ýÛõ Àòâ ¿¡ò; À𨼠= þ¨Ä, µ¨Äô Àð¨¼; Àð¼õ>Àò¾õ>ÀòÃõ; «Ä¸ ¿ó¨¾Ôõ §¾¡Ä¢ ¸í¨¸Ôõ Ò½Õõ þ¼ò¾¢ø «Ä¸ ¿ó¨¾ì ¸¨Ã¢ø ¯ûÇÐ ¾¢Õ þÄó¨¾ô ÒÃõ. þ¨¾ò ¾¢Õ «¾Ã¢ ±ýÚõ ¦º¡øÖÅÐñÎ. þÕó¾ §¸¡Äò¾¢ø þ¨ÈÅý ¬º¡É¡ö «Õû ÒâÔõ ¾Äõ.
j. ¾¢Õô Ò¨Æì ¸Ãõ = Ò‰¸Ãõ; þó¾ò ¾Äõ ±íÌ ¯ûÇÐ ±ýÚ þÐŨà ¿¡ý «È¢ó§¾ý þø¨Ä. ¬É¡ø Å¢ñ½Å ÁÃÒ þôÀÊ µÃ¢¼ò¨¾î ¦º¡øÖ¸¢ÈÐ. «È¢ó¾Å÷¸û Å¢Çì¸ §ÅñÎõ.
k. ¾¡§É §¾¡ýÚ¾ø = þí§¸ þó¾ò ¾¢Õ§ÁÉ¢¸û ¦º¡ÂõÒÅ¡¸(ÍÂõÒÅ¡¸), ¦º¡ó¾¡¸ì ¸¢¨¼ò¾¾¡¸ ³¾£¸õ; ¾¡§É §¾¡ýȢ¨Š= ŠÅÂõ ùÂì¾ Š¾Äõ Å¢Âò¾ø>Ţ¢>ŢƢ; ¦º¡ó¾¡ö ¦ÅÇ¢ò¾ ¾Äõ = ¾¡§É ¦ÅÇ¢ôÀð¼ ¾Äõ.
l. ¸¾õ ±ðÎ = ±ðÎì ¸¾í¸û = ±ðÎ µ¨º¸û; Å¢ñ½Å¨Éì ÌÈ¢ôÀ¢Îõ ±ð¦¼ØòÐ; ´ù§Å¡÷ ±ØòÐõ ´Õ ¾¢Õ §Áɢ¡ö ±ðÎ þ¼ò¾¢ø ±Ø󾾡õ.
m. ±ðÎò ¾¡ý §¾¡ýÈ¢ò ¾¢Õ §ÁÉ¢¸¨ÇÔõ µÃ¢¼ò¾¢ø §ºÅ¢ì¸ §ÅñÎõ ±É¢ø ¸ñ½ ÒÃõ §À¡É¡ø §À¡Ðõ ±ýÀРŢñ¦½È¢Â¡Çâý ¿õÀ¢ì¨¸.

No comments: