பணத்திற்கு எதிரான அறிவு
(கீழே உள்ள துணுக்கை, இணையத்தில் எங்கோ ஓரிடத்தில் படித்தேன். தமிழாக்கம் மட்டுமே என்னுடையது.)
"பொதினச் செயலீட்டாளர்கள் (business executives) அளவுக்கு பொறியாளரும் அறிவியலாரும், ஒரு நாளும் பணம் பண்ண மாட்டார்கள்" என்பது எல்லோர்க்கும் தெரிந்த ஒரு பட்டகை (fact). இது ஏன் உண்மையாகிறது என்பதற்கு இப்பொழுது ஒரு நிருவம் (proof) தரட்டுமா?
ஒவ்வொரு பொறியாளருக்கும் பொறியியற் படிப்பில் தெரிந்த ஒரு சமன்பாடு:
ஆற்றல் / நேரம் = புயவு
[புயவிக் கிடந்து (புய்ந்து கிடந்து, புதைந்து இருந்து) வெளிப்படுவது, உள்நின்று வெளிப்படுவது power. புயம் என்றால் தோள்; அது புஜம் என்ற வடமொழியில் திரியும். புயம் புடைத்தவன் = புயவாளி = powerful person; மாந்தப் புயவு = manpower; இயந்திரப் புயவு = machine power. தமிழ் அறிவியல் கட்டுரைகளில் இதுகாறும் ஆற்றலுக்கும் (energy) புயவுக்கும் (power), பொதுளுக்கும் (potential) ஒரே சொல்லைப் பயன்படுத்திக் குழறுபடி செய்துள்ளோம். தமிழில் அறிவியல் வளர வேண்டுமானால் சொற்களில் துல்லியம் கூட வேண்டும். பலவற்றையும் ஒன்றுபோல் சொல்லி ஒப்பேற்றாமல் இருப்பது நல்லது.]
உழைப்பும் (work) ஆற்றலும் (energy) ஒன்றுபோல் ஆனவை என்பதால், இந்தச் சமனை இன்னொரு விதமாய் எழுதலாம்.
உழைப்பு / நேரம் = புயவு
இனி இரண்டு கருதுகோள்களுக்கு வருவோம்.
முதற் கருதுகோள் (hypothesis)1: அறிவு என்பது புயவு (knowledge is power)
இரண்டாம் கருதுகோள் (hypothesis) 2: நேரம் என்பது பணம் (time is money)
அறிவு = புயவு என்ற முதல் கருதுகோளாலும், காலம் = பணம் என்ற இரண்டாவது கருதுகோளாலும், மேலே உள்ள சமன்பாட்டை வேறு முறையில் கீழே உள்ளவாறு எழுத முடியும்.
உழைப்பு / பணம் = அறிவு
இந்தச் சமன்பாட்டை, பணத்திற்காகச் சுளுவி (solve) எடுக்கும் படி திருப்பிப் போட்டால்
உழைப்பு / அறிவு = பணம்
மேலே உள்ள சமன் பாட்டில் அறிவின் விழுமம் (value) குறைந்தும் இருக்கலாம், நிறைந்தும் இருக்கலாம் அல்லவா? அதன்படி ஓர்ந்து பார்த்தால், "எவ்வளவு உழைப்பு இருந்தாலும், அறிவு என்பது சுழியை (zero level) நோக்கி அணுகினால், பணம் என்பது வரம்பிலி (infinity) நோக்கிப் போகும்" என்று அறிந்து கொள்கிறோம்.
முடிப்புரை:
எந்த அளவுக்குக் குறைந்த அறிவு இருக்கிறதோ, அந்த அளவுக்கு மிகுந்த பணத்தை நீங்கள் எந்த உழைப்பிலும் செய்யமுடியும். QED. :-)
பின் குறிப்பு:
ஆர்வார்டு கணக்கியல் படிப்பில் இருந்து பில் கேட்சு ஏன் நழுவிக் கொண்டார் என்பதற்கான காரணத்தை உன்னிப் பார்த்த போது, அவர் தம் இளம் அறிவியல் படிப்பில், எப்படியோ மேலே உள்ள நிருவத்தை அடையாளம் கண்டுகொண்டார் என்றும், அதற்குப் பின்னால், அறிவின்மையைத் தேடுவதிலேயே தன் வேலைச் சகட்டைப் (career) பணித்துக் கொண்டார் என்றும் கேள்வி :-).
-----------------------------------------------------------------------------------------------------
அன்புடன்,
இராம.கி.
Money versus Knowledge
FACT: Engineers and scientists will never make as much money as business executives. Now, there is a rigorous mathematical proof that explains why this is true--
Postulate 1: Knowledge is Power
Postulate 2: Time is Money
As every engineer knows:
WORK / TIME = POWER
Since Knowledge = Power (Postulate 1) and Time = Money (Postulate 2), we have--
WORK / MONEY = KNOWLEDGE
Transposing to solve for Money produces:
WORK / KNOWLEDGE = MONEY
Thus, as Knowledge approaches zero, Money approaches infinity regardless of the work done.
Conclusion: The Less you Know, the More you Make. Q.E.D.
Note: It has been speculated that the reason why Bill Gates dropped out of Harvard's math program was because he stumbled upon this proof as an undergraduate, and dedicated the rest of his career to the pursuit of ignorance.....
அன்புடன்,
இராம.கி.
In TSCII:
À½ò¾¢üÌ ±¾¢Ã¡É «È¢×
(¸£§Æ ¯ûÇ ÐÏ쨸, þ¨½Âò¾¢ø ±í§¸¡ µÃ¢¼ò¾¢ø ÀÊò§¾ý. ¾Á¢Æ¡ì¸õ ÁðΧÁ ±ýÛ¨¼ÂÐ.)
"¦À¡¾¢Éî ¦ºÂÄ£ð¼¡Ç÷¸û (business executives) «Ç×ìÌ ¦À¡È¢Â¡ÇÕõ «È¢Å¢ÂÄ¡Õõ, ´Õ ¿¡Ùõ À½õ Àñ½ Á¡ð¼¡÷¸û" ±ýÀÐ ±ø§Ä¡÷ìÌõ ¦¾Ã¢ó¾ ´Õ À𼨸 (fact). þÐ ²ý ¯ñ¨Á¡¸¢ÈÐ ±ýÀ¾üÌ þô¦À¡ØÐ ´Õ ¿¢ÕÅõ (proof) ¾ÃðÎÁ¡?
´ù¦Å¡Õ ¦À¡È¢Â¡ÇÕìÌõ ¦À¡È¢Â¢Âü ÀÊôÀ¢ø ¦¾Ã¢ó¾ ´Õ ºÁýÀ¡Î:
¬üÈø / §¿Ãõ = ÒÂ×
[ÒÂÅ¢ì ¸¢¼óÐ (ÒöóÐ ¸¢¼óÐ, Ò¨¾óÐ þÕóÐ) ¦ÅÇ¢ôÀÎÅÐ, ¯û¿¢ýÚ ¦ÅÇ¢ôÀÎÅÐ power. ÒÂõ ±ýÈ¡ø §¾¡û; «Ð Òƒõ ±ýÈ Å¼¦Á¡Æ¢Â¢ø ¾¢Ã¢Ôõ. ÒÂõ Ò¨¼ò¾Åý = ÒÂÅ¡Ç¢ = powerful person; Á¡ó¾ô ÒÂ× = manpower; þÂó¾¢Ãô ÒÂ× = machine power. ¾Á¢ú «È¢Å¢Âø ¸ðΨøǢø þи¡Úõ ¬üÈÖìÌõ (energy) ÒÂ×ìÌõ (power), ¦À¡ÐÙìÌõ (potential) ´§Ã ¦º¡ø¨Äô ÀÂýÀÎò¾¢ì ÌÆÚÀÊ ¦ºöÐû§Ç¡õ. ¾Á¢Æ¢ø «È¢Å¢Âø ÅÇà §ÅñÎÁ¡É¡ø ¦º¡ü¸Ç¢ø ÐøÄ¢Âõ ܼ §ÅñÎõ. ÀÄÅü¨ÈÔõ ´ýÚ§À¡ø ¦º¡øÄ¢ ´ô§ÀüÈ¡Áø þÕôÀÐ ¿øÄÐ.]
¯¨ÆôÒõ (work) ¬üÈÖõ (energy) ´ýÚ§À¡ø ¬É¨Å ±ýÀ¾¡ø, þó¾î ºÁ¨É þý¦É¡Õ Å¢¾Á¡ö ±Ø¾Ä¡õ.
¯¨ÆôÒ / §¿Ãõ = ÒÂ×
þÉ¢ þÃñÎ ¸ÕЧ¸¡û¸ÙìÌ Åէšõ.
Ó¾ü ¸ÕЧ¸¡û (hypothesis)1: «È¢× ±ýÀÐ ÒÂ× (knowledge is power)
þÃñ¼¡õ ¸ÕЧ¸¡û (hypothesis) 2: §¿Ãõ ±ýÀÐ À½õ (time is money)
«È¢× = ÒÂ× ±ýÈ Ó¾ø ¸ÕÐ §¸¡Ç¡Öõ, ¸¡Äõ = À½õ ±ýÈ þÃñ¼¡ÅÐ ¸ÕЧ¸¡Ç¡Öõ, §Á§Ä ¯ûÇ ºÁýÀ¡ð¨¼ §ÅÚ Ó¨È¢ø ¸£§Æ ¯ûÇÅ¡Ú ±Ø¾ ÓÊÔõ.
¯¨ÆôÒ / À½õ = «È¢×
þó¾î ºÁýÀ¡ð¨¼, À½ò¾¢ü¸¡¸î ÍÙÅ¢ ±ÎìÌõ (solve) ÀÊ ¾¢ÕôÀ¢ô §À¡ð¼¡ø
¯¨ÆôÒ / «È¢× = À½õ
§Á§Ä ¯ûÇ ºÁý À¡ðÊø «È¢Å¢ý Å¢ØÁõ (value) ̨ÈóÐõ þÕì¸Ä¡õ, ¿¢¨ÈóÐõ þÕì¸Ä¡õ «øÄÅ¡? «¾ýÀÊ µ÷óÐ À¡÷ò¾¡ø, "±ùÅÇ× ¯¨ÆôÒ þÕó¾¡Öõ, «È¢× ±ýÀÐ ÍÆ¢¨Â (zero level) §¿¡ì¸¢ «Ï¸¢É¡ø, À½õ ±ýÀÐ ÅÃõÀ¢Ä¢ (infinity) §¿¡ì¸¢ô §À¡Ìõ" ±ýÚ «È¢óÐ ¦¸¡û¸¢§È¡õ.
ÓÊôÒ¨Ã:
±ó¾ «ª×ìÌì ̨Èó¾ «È¢× þÕ츢ȧ¾¡, «ó¾ «Ç×ìÌ Á¢Ìó¾ À½ò¨¾ ¿£í¸û ±ó¾ ¯¨ÆôÀ¢Öõ ¦ºöÂÓÊÔõ. QED. :-)
À¢ý ÌÈ¢ôÒ:
¬÷Å¡÷Î ¸½ì¸¢Âø ÀÊôÀ¢ø þÕóÐ À¢ø §¸ðÍ ²ý ¿ØÅ¢ì ¦¸¡ñ¼¡÷ ±ýÀ¾ü¸¡É ¸¡Ã½ò¨¾ ¯ýÉ¢ô À¡÷ò¾ §À¡Ð, «Å÷ ¾õ þÇõ «È¢Å¢Âø ÀÊôÀ¢ø, ±ôÀʧ¡ §Á§Ä ¯ûÇ ¿¢ÕÅò¨¾ «¨¼Â¡Çõ ¸ñΦ¸¡ñ¼¡÷ ±ýÚõ, «¾üÌô À¢ýÉ¡ø, «È¢Å¢ý¨Á¨Âò §¾Îž¢§Ä§Â ¾ý §Å¨Äî º¸ð¨¼ô (career) À½¢òÐì ¦¸¡ñ¼¡÷ ±ýÚõ §¸ûÅ¢.
-----------------------------------------------------------------------------------------------------
«ýÒ¼ý,
þáÁ.¸¢.
Money versus Knowledge
FACT: Engineers and scientists will never make as much money as business executives. Now, there is a rigorous mathematical proof that explains why this is true--
Postulate 1: Knowledge is Power
Postulate 2: Time is Money
As every engineer knows:
WORK / TIME = POWER
Since Knowledge = Power (Postulate 1) and Time = Money (Postulate 2), we have--
WORK / MONEY = KNOWLEDGE
Transposing to solve for Money produces:
WORK / KNOWLEDGE = MONEY
Thus, as Knowledge approaches zero, Money approaches infinity regardless of the work done.
Conclusion: The Less you Know, the More you Make. Q.E.D.
Note: It has been speculated that the reason why Bill Gates dropped out of Harvard's math program was because he stumbled upon this proof as an undergraduate, and dedicated the rest of his career to the pursuit of ignorance.....
«ýÒ¼ý,
þáÁ.¸¢.
6 comments:
நல்ல பதிவு.
சிறப்பான மொழிபெயர்ப்பு.:)[ஆனா பாதிக்கு மேல புரியல...பல வார்த்தைகள் இப்போத்தான் பாக்குறேன்]
தமிழ்ல எழுதினது புரியாம ஆங்கில மூலத்தை படிச்சப்புறம்தான் தெளிவாகுது...
நல்ல தமிழ் புரியமாட்டேங்குது.
என்ன கோராமை பாருங்க..
இவ்வளவுக்கும் +2 வரை தமிழ்தான் பயிற்று மொழி. இருந்துமென்ன பயன்?
என் தமிழ் அறிவை நினைத்து வெட்கமும் வேதனையும் தான் மிகுகின்றது.
நல்ல தமிழை தந்ததற்கு நன்றி.
க.கதிர்.
பொதினச் செயலீட்டாளர்கள் = business executives
பட்டகை = fact
நிருவம் = proof
புயவு = power
புயவாளி = powerful person
மாந்தப் புயவு = manpower
இயந்திரப் புயவு = machine power
ஆற்றல் = energy
பொதுள் = potential
கருதுகோள் = hypothesis
சுளுவி எடுக்கும் = solve
வேலைச் சகட்டு = career
விழுமம் = value
வரம்பிலி = infinity
ஒரு பதிவிலேயே எத்தனை தமிழ் வார்த்தைகள்!
பெருஞ்சித்திரனாரின் சில படைப்புகளைப் படித்திருக்கிறேன். சில கட்டுரைகள் உட்பட. அப்போதெல்லாம் தமிழ் நடைக்கு ஒரு தனியான ஒலி நயம் உண்டென்பதை உணர்ந்திருக்கிறேன். அந்த ஒலிநயம் மிக அந்தரங்கமான முறையில் என்னோடு ஒத்திசைவது போலவும் உணர்வேன். இதைதான் மொழிதரும் உணர்வு ரீதியான அனுபவமோ என்று எண்ணியிருக்கிறேன். நாம் பொதுவாக பயன்படுத்தும் தமிழ் (பொதுத் தமிழாக அறியப்படுவது) ஆங்கில வாக்கிய அமைப்பொடு ஒரு மொழிபெயர்ப்பு போல இருக்கிறதே தவிர இயல்பான தமிழ் நடையாக இல்லை என்று நினைப்பேன். இந்தியா-டுடே தமிழ் இதன் உச்சம்.
உங்கள் தமிழ் அந்த அனுபவத்தைத் தருகிறது.
//[புயவிக் கிடந்து (புய்ந்து கிடந்து, புதைந்து இருந்து) வெளிப்படுவது, உள்நின்று வெளிப்படுவது power. புயம் என்றால் தோள்; அது புஜம் என்ற வடமொழியில் திரியும். புயம் புடைத்தவன் = புயவாளி = powerful person; மாந்தப் புயவு = manpower; இயந்திரப் புயவு = machine power.//
இதுபோல சொல்லை கடைந்து [இலக்கிய மூலங்களில்ல் இருந்து, மக்கள் வழக்கில் இருந்து] வெளிக்கொண்டுவரும் வகையிலான அகராதிகள் தமிழில் இருக்கின்றனவா?
இப்படிப்பட்ட சொற்கள் தொகுக்கப்பட்டிருந்தால், விண்டோஸ் தமிழ்ப்படுத்தப்படும் போது பயன்படுத்தப்பட்டுருக்கலாமே. கணிணி வழியாக விரைவில் இச்சொற்கள் புழக்கத்துக்கு வர உதவியிருக்குமே என்று தோன்றுகிறது.
இந்தப் பதிவுக்கு நன்றி.
உங்களின் எழுத்துக்களை படிப்பதே ஒரு இனிய அனுபவம். தமிழின் அழகிற்க்கும் வன்மைக்கும் உங்களின் படைப்புக்கள் நல்ல சாட்ச்சி. தமிழின் மாணவர் ஆகிய நமக்கு உங்களின் எழுத்துக்கள் நல்ல பாடம், உதாரணம்.
அன்பிற்குரிய கதிர், தங்கமணி, நற்கீரன்
உங்கள் பின்னூட்டிற்கு நன்றி.
கதிர்:
தயங்காதீர்கள். கொஞ்சம் கொஞ்சமாய்த் தமிழ் பயிலுங்கள். சொல் தெரியும் போது பயன்படுத்துங்கள். தேடல் தொடர்ச்சியாக இருக்க வேண்டும். தமிழில் உரையாடுவதையும், எழுதுவதையும் விடாது கடைப்பிடியுங்கள். நாம் செய்யாவிட்டால் யாரும் செய்யமுடியாது. மிக எளிதில் தமிங்கிலம் புழங்கலாம். ஆனால் அது ஒருவழிப்பாதை. நம்மை முற்றிலும் ஆங்கிலத்தில் தான் கொண்டு செலுத்தும். ஏதேனும் சொற்கள் தடுமாறினால் கேளுங்கள், என்னால் முடிந்ததைச் சொல்லுகிறேன்.
தங்கமணி:
இது போன்ற சொற்களைத் தொகுக்க வேண்டும். இந்தத் தொகுப்பைச் செய்யச் சொல்லிப் பலரும் வற்புறுத்துகிறார்கள். அலுவ வேலை அழுத்தத்தில் இது முடியாது போய்விடுகிறது. என்றோ ஒரு நாள் செய்வேன். வேலைச் சகடு = career. கொஞ்ச நாட்களில் வேலை என்பதை விட்டுவிட்டுச் சகடு என்பதை மட்டுமே பயிலலாம். (சகடு என்பது வண்டி, சக்கரம், தடம் போன்றவற்றைக் குறிக்கும். இங்கே பொருள் நீட்சியில் career என்பதைக் குறிக்கிறது.) சகட்டு மேனி என்று நாம் பேச்சு வழக்கில் சொல்வது வேறொரு பொருள் குறித்தது. அங்கே சகட்டுதல் (= புரட்டுதல்) என்பது வினைச்சொல். சகட்டுமேனி என்பது வினைத்தொகை.
நற்கீரன்.
நல்ல தமிழ் என்பது நாம் பழகுவதைப் பொறுத்தது. புலம் பெயர்ந்த ஈழத் தமிழர்களுக்கு உள்ள பொறுப்புக்களில் ஒன்று, போன இடத்தில் தாங்கள் பேசும் தமிழைக் காப்பாற்றுவது. நீங்கள் எல்லாம் விட்டுவிட்டால், அப்புறம் மெல்லத் தமிழ் இனிச் சாகும்.
அன்புடன்,
இராம.கி.
// பெருஞ்சித்திரனாரின் சில படைப்புகளைப் படித்திருக்கிறேன். சில கட்டுரைகள் உட்பட. அப்போதெல்லாம் தமிழ் நடைக்கு ஒரு தனியான ஒலி நயம் உண்டென்பதை உணர்ந்திருக்கிறேன். அந்த ஒலிநயம் மிக அந்தரங்கமான முறையில் என்னோடு ஒத்திசைவது போலவும் உணர்வேன். இதைதான் மொழிதரும் உணர்வு ரீதியான அனுபவமோ என்று எண்ணியிருக்கிறேன். //
மேற்கண்ட தங்கமணி சகோதரரின் எண்ணமும் என் எண்ணமும் முழுமையாய் ஒத்திசைவதை உணர்கிறேன். இவண் இன்னொன்றையும் தெரிவிக்க விழைகிறேன். இந்த தங்கமணியார்தான் என் வளைத் தளத்தின் முதல் எழுத்தின் முதல் வாழ்த்துரையை எனக்கு வழங்கிய இனிய சகோதரர். என் மனம் மகிழும் இந்த தளத்திலும் அவர் போலும் கண்ணியமிக்க நல்லோர் பலரை தங்களின் பின்னூட்ட வாசகர்களாய் சந்திப்பது இதமான இனிமை பயக்கிறது.
வாழிய நீவீர்!
அன்புடன்
மன்னை மாதேவன்.
அன்பிற்குரிய மன்னை மகாதேவன்,
உங்கள் வலைப்பதிவு சிறக்க என் வாழ்த்துக்கள்.
அன்புடன்,
இராம.கி.
Post a Comment