Sunday, April 24, 2005

பூதியல் (physics) - 1

பூதியல் (physics) - 1

ஒரு நாலைந்து ஆண்டுகளுக்கு முன் தமிழ் இணையம், பின்னால் அகத்தியர், தமிழ் உலகம் மடற்குழுக்களில் பல ஆழமான, சுவையான உரையாடல்கள் நடந்திருக்கின்றன. (அந்தக் குழுக்கள் இணையத் தமிழுக்கும், தமிழ் உரையாட்டுகளுக்கும் பெரும்பங்கு ஆற்றியிருக்கின்றன.) இது பூதியல் (physics) பற்றி நண்பர் கலிபோர்னியா மணி. மணிவண்ணன், அட்லாண்டா பெரியண்ணன் சந்திரசேகரனுடனும் எழுந்த உரையாடல். அதன் பயன்பாடு கருதி மீண்டும் இங்கு பதிகிறேன். (என்னுடைய பரிந்துரைச் சொல்லை அவர்கள் இருவரும் ஏற்கவில்லை. இருந்தாலும் அவர்கள் கேள்வி கேட்கவில்லை என்றால், இந்தக் கட்டுரை எழுந்திருக்காது.) இயல்பியல் என்ற சொல்லுக்கு மாறாய் இயற்பியல் என்ற தவறான புழக்கம் பெருத்தது பற்றியும் இந்தக் கட்டுரையில் பேசுகிறேன்.

கட்டுரை நீளமானதால், நான்காகப் பிரித்து அனுப்புகிறேன்.

அன்புடன்,
இராம.கி.

அன்பிற்குரிய மணி மற்றும் சந்திரா,

அந்தக் காலத்துலெ, திண்ணைப் பள்ளிக் கூடத்துலெ, தப்புத் தண்டா செய்யும் பையனுக்கு என்னென்னல்லாம் தண்டனைகள் தெரியுமோ?.

முதல்லெ வாசல்லெ நிற்க வைக்கிறது; அப்புறம் ஒத்தக் கால்லெ நிற்க வைக்கிறது; பின்னாடி தோப்புக் கரணம் போடவைக்கிறது; இன்னும் பெருசாத் தப்புப் பண்ணா, உள்ளங்கையிலெ பிரம்பாலெ பழுக்க வைக்கிறது, இப்படிக் கொஞ்சம் கொஞ்சமாக தண்டனெ ஏறிக்கிட்டெ போகும். தண்டனைகளிலேயே ஒசத்தி, கோதண்டம்-னு சொல்லுவாங்க.(பெயர் சரிதானான்னு ஞாபகம் இல்லெ.) அடியில் மணலெக் குமிச்சு அதிலெ எழுத்தாணியைச் செருகி வைச்சுப் பையனை உத்தரத்தில் கட்டித் தூக்கிவிட்டுருவாங்க. அப்படியே வெருண்டு, திகைச்சுச் சுருண்டு, மருண்டு, பேயறைஞ்ச நிலைதான். அழுகையையும் தாண்டிய நிலை; இனி எழேழ் பிறப்புக்கும் தப்புச் செய்வானா? மாட்டான்.

நல்ல வேளையாக உள்ளங்கை பழுத்ததோடு நான் தொடக்கப் பள்ளிக்கு, மூன்றாவது படிக்க வந்து விட்டேன். இப்போதுதான், கோதண்டத்திற்கு வந்து விட்டேனோ என்று தோற்றுகிறது. கூர்மையான எழுத்தாணி பாருங்கள் :-)

உரையாடலைத் தொடங்குவோம்.

முதலில் பூதம் என்ற சொல்லைப் பலுக்கும் போதே அது வடமொழியென்று தெரியாதா என்ற முதல் கேள்விக்கு வருவோம்.

நாம் ஒரு சொல்லைப் பலுக்கும் போது, நம்முடைய வட்டார வழக்கு, நாம் வளர்க்கப் பட்ட முறை, சுற்றம், நட்பு ஆகியவற்றின் தாக்கம் எப்பொழுதும் இருக்கத்தான் செய்யும். இதில் ஓரிமை (uniformity) வருவது நல்லது தான் என்றாலும் அது பெரும்பாலும் குமுகாயத்தில் ஏற்படுவதில்லை. ஒரு சாரார் பலுக்குவதைப் பார்த்து, அதையே எல்லோருக்கும் பொதுவென்று கருதி, இது தான் தமிழ், மற்றது தமிழல்ல என்று சட்டென்று சொல்ல முடியாது.

இணையான பொருட்களை ஜோடி என்றே தமிழ் நாட்டில் பலரும் சொல்லுகிறார்கள். அதனால், அது வடமொழியாகிவிடுமா? இல்லை என்று சொல்லி, 'சுவடி>சோடி>ஜோடி என்பதை ஆணித்தரமாக பாவாணர் நிறுவினார் அல்லவா? நில் என்னும் வேரடியில் பிறந்த நில்+து>நிற்று+அம்>நிற்றம்>நித்தம்>நிச்சம் என்ற சொல் இன்று நிச்சயம்/நிஜம் என்றே சொல்லப் படுகிறது. நிஜம் என்று கேட்டவுடன், அது வடமொழி என்று சொல்லமுடியுமா? வேட்டியை வேஷ்டி என்றும், கட்டத்தைக் கஷ்டம் என்றும், நொடு+அம்>நொட்டம்>நட்டம் என்பதை நஷ்டம் என்றும் பலர் சொல்லுகிறார்கள். அதனால் இவையெல்லாம் தலைகீழாக வந்தது என்றாகிவிடுமா? பாதிப்பு என்பதை ஈழத்தாரும், தென் தமிழ்நாட்டாரும் pA என்றே ஒலிப்பர். ஆனால் பெரும்பாலான வட தமிழகத்தார் வடமொழியின் தாக்கத்தால் 'bA' என்றே ஒலிப்பர். அதனால் பாதிப்பு என்ற சொல் வடமொழியில் இருந்து வந்தது என்று ஆகிவிடுமா? "செய்த போது" - இங்கே pO என்ற ஒலி. "செய்யும் போது" - இங்கே bO என்ற ஒலி, இந்த இரண்டும் உங்களுக்குத் தெரியாதது அல்ல.

சரி, போது என்ற சொல் தனித்து வரும் போது, 'pO' என்ற ஒலி தானே வர வேண்டும். ஒரு சாரார் அப்பொழுதும் 'bO' என்ற ஒலிப்பது தவறான பலுக்கல் தான்; இருந்தாலும் செய்கிறார்களே? ஏன், இசைப் பேரரசி எம்.எசு. சுப்புலட்சுமியும், அவர் தாக்கத்தால் இன்னும் பல இசைப் பெண்களும் தங்கள் தமிழிசைப் படைப்புகளில் 'ச' வை 'ஷ' என்றே பலுக்கினார்கள்/பலுக்குகிறார்கள். இவர்கள் இசையை விரும்பிக் கேட்கும் அதே நேரத்தில், இப்படிப் பலுக்குவதைக் கேட்டு நமக்கு இன்னொரு பக்கம் வெறுப்புப் பற்றிக் கொண்டு தான் வருகிறது; இருந்தாலும் அவர்கள் தவறாகப் பலுக்கிய சொற்கள் தமிழ் இல்லை என்று ஆகிவிடுமா? ஏன், ஒருகாலத்தில் தமிழம்>த்ரமிளம்>த்ரமிடம்>திரவிடம்>த்ராவிடம் என்பதைத் தலைகீழாகக் கொண்டு தொங்கியவர்களும் உண்டுதானே!

திரு.வே. அண்ணாமலை தொகுத்த "சங்க இலக்கியத் தொன்மக் களஞ்சியம்" என்ற நூலுக்கு (மெய்யப்பன் தமிழாய்வகம், 53, புதுத் தெரு, சிதம்பரம் 608001) எழுதிய அணிந்துரையில் திரு. தமிழண்ணல் சொல்லுவார்:

"எதையும் 'சமற்கிருதமயமாக்குதல்' எனும் ஒரு சூழல், ஒரு பேரியக்கமாகவே சில நூற்றாண்டுகள் நடைபெற்றன. இன்றைய ஆங்கில மோகம் போலச் சமற்கிருத மயமாக்குதலில், தமிழர்களே பேரார்வம் காட்டித் தங்கள் பண்பாட்டை- அடையாளத்தைத் தாங்களே அழித்துக் கொண்டனர்.

தங்கள் சிற்பக் கலையை வடமொழியில் எழுதிவைத்து, அவை தமிழர்க்குக் கடன்பெற்றுக் கிடைத்தவை என்பதுபோல் ஒரு தோற்றத்தை உண்டாக்கினர்.

தமிழகத்திற் போன்ற சிற்பக் கலையை வேறு எங்கும் காண முடியாது. கருநாடக இசையை அதன் முழுக் களையோடு வெளிப்படுத்த வல்ல, பெரு வங்கியமும் மத்தளமும் போன்ற கருவிகளையோ, இசை நுணுக்கத்தையோ வேறு எங்கும் காண்டல் அரிது.

தமிழகத்தில் பொலிவுடன் திகழும் நாட்டியக் கலை இங்கு தோன்றிச் சிறந்து வளர்ந்திருந்தமையை, சிலப்பதிகாரம் காட்டும்.

இவை அனைத்தும் இவை தோன்றி வளர்ந்து, செழிப்புற்ற இடத்திற்கு உரியனவேயன்றி, இவை எழுதி வைக்கப் பட்ட மொழிக்கு எவ்வாறு உரியனவாகும்? அஃது உண்மையெனில் 'வடமொழி' என்று அன்றே குறிக்கப்பட்ட வட நாட்டில் அல்லவா இவை இன்று சிறப்புற்றுக் காணப்படவேண்டும்?"

இதையே முன்னொருமுறை வேறொரு வகையிற் தமிழண்ணல் சொன்னார்: "வடமொழியில் உள்ளன வெல்லாம் வட மொழிக்கே உரிய சொற்கள் அல்ல; வடமொழியில் எழுதிவைக்கப் பட்டிருப்பனவெல்லாம் வடமொழிக்கே எனத் தனியுரிமையுடைய கலைகள், தத்துவங்கள் அல்ல. அவற்றில், தமிழர்களுடையன மிகப் பல. வடமொழி வெறுப்பால் நம்முடைய சொத்துக்களை இழந்துவிடாமல் காக்க வேண்டும். நாட்டியம் நமது - அதன் சாத்திரம் அங்குளது. கோபுரம் நமது - சிற்ப சாத்திரம் அம்மொழியில் உள்ளது. இசை நமது - விளக்கம் அங்குளது. இவ்வாறு பலவும் அம்மொழியில் காப்பாற்றிவைக்கப் பட்டுள்ளன."

இவ்வாறு எண்ணிப் பார்த்தால், நாம் எந்த அளவுக்கு மீட்டுருவாக்கம் செய்யும் போது வடமொழியைத் துளைத்துப் பார்க்க வேண்டும் என்பது புரியும். வெறும் ஒலிப்பை மட்டுமே வைத்துப் பார்க்கக் கூடாது. வட மொழிக் காரன் பூதம் என்ற சொல்லை பயனாக்கிய போது 'bUdham' என்று சொன்னது வியப்பே இல்லை. ஆனாலும் பூதம் என்ற சொல்லை தமிழ் தான் என்று நான் ஏன் சொல்லுகிறேன்?

இதற்கு, பூத வாதம் என்ற கோட்பாடு, இந்திய மெய்யறிவியல் (philosophy) வரலாற்றிற்றில் எங்கு சிறந்திருந்தது, எங்கு நிலைபெற்றிருந்தது என்று அறியவேண்டும். அதை இனிப் பார்ப்போம்.

இந்திய நாட்டின் மெய்யறிவியலில் இரண்டு விதமான போக்குகள் நெடு நாட்களாகவே உண்டு. ஒன்று உலகாய்தம். இது, தென்னாட்டில் பிறந்து, சிறந்து, கிளைத்து, துணைக்கண்டம் எங்கும் பரவியது. மற்றது ஆன்மீகவாதம். இதில் வடநாட்டுப் பங்களிப்பு மட்டும் அன்றி, தென்னாட்டுப் பங்களிப்பும் கணிசமாகவே இருந்து வந்திருக்கிறது. ஆன்மீக வாதத்திற்கும், உலகாய்தத்திற்கும் இடையே உள்ள தருக்கம் இன்று வரை நடந்து கொண்டு தான் இருக்கிறது. ஒரே ஒரு வேறுபாடு: தென்னகத்தில் இருந்து எழுந்த ஆன்மீக வாதங்கள் (குறிப்பாகச் சிவ நெறியும், மால் நெறியும்) உலகாய்தத்தின் தாக்கங்களை உள்ளடக்கித் தன்னகப் படுத்திக் கொண்டு தங்கள் வாதங்களை உயர்த்திப் பிடித்தன. ஆனால் வட நாட்டு மரபைப் பின்பற்றியோர் (வேத நெறியும், அதற்குப் பின் பின் வந்த வேதாந்தம், உபநிடதம், முடிவில் பிரசன்ன புத்தரான ஆதி சங்கரர் வரைக்கும்), உலகாய்தத்தை முற்றிலுமாக மறுத்து வந்திருக்கிறார்கள். வேத, வேதாந்தங்களை மறுத்த புத்த, சமண நெறியார் கூட தொடக்கத்தில் தென்னக உலகாய்தத்தில் இருந்து புறப்பட்ட சாங்கியம், சார்வாகம், ஆசீவகம், போன்றவற்றை அவ்வப் பொழுது சார்ந்து, பின் இரண்டிற்கும் நடுப்பட்ட நிலையை அடைந்திருக்கிறார்கள். இதே போலத்தான் குமரில பட்டரின் மீமாம்சையும், விதப்பியலாரும் (விசேடிகம்) வேத நெறியை மறுக்க விழைந்து பின் சமரசம் செய்து கொண்டு தங்கள் நிலையைத் தொடர்ந்தார்கள். இதையெல்லாம் நான் இங்கு விரிவாக விளக்குவதற்குப் பதிலாக, கீழே உள்ள நான்கு கட்டுரைகள்/நூல்களைப் படிக்குமாறு உங்களுக்குப் பரிந்துரைக்கிறேன்.

"இந்திய ஆன்மீக வாதம் - ஒரு அறிமுகம்" - தேவி பிரசாத் சட்டோ பாத்யாயா, பக் 94-145, "சோழர் வளர்த்த வேதக் கல்வி முதலிய கட்டுரைகள், தொகுப்பாசிரியர் வெ. கிருஷ்ண மூர்த்தி, திசம்பர் 99, ஆய்வு வட்ட வெளியீடு, D7/13, தமிழ்நாடு வீட்டுவசதி வாரியக் குடியிருப்பு, கோடம்பாக்கம், சென்னை -24,

"பழந்தமிழ் இலக்கியத்தில் பொருள்முதல் வாதக் கருத்துக்கள்" - நா. வானமாமலை, பக் 146 - 184, "சோழர் வளர்த்த வேதக் கல்வி முதலிய கட்டுரைகள், தொகுப்பாசிரியர் வெ. கிருஷ்ண மூர்த்தி, திசம்பர் 99, ஆய்வு வட்ட வெளியீடு, D7/13, தமிழ்நாடு வீட்டுவசதி வாரியக் குடியிருப்பு, கோடம்பாக்கம், சென்னை -24,

"தமிழ் இலக்கியத்தில் உலகாய்தம்" - முனைவர் க.நெடுஞ்செழியன், தமிழ்த்துறை, பெரியார் ஈ.வெ.ரா. கல்லூரி, திருச்சி, பதிப்பு- மனிதம் பதிப்பகம், 54, இராசாராம் சாலை, கலைஞர் நகர், திருச்சி - 21, சூன் 1990, விற்பனை உரிமை, பாரி நிலையம், 184, பிரகாசம் சாலை, சென்னை 600 108,

"உலகத் தோற்றமும் தமிழர் கோட்பாடும்" - - முனைவர் க.நெடுஞ்செழியன், தமிழ்த்துறை, பெரியார் ஈ.வெ.ரா. கல்லூரி, திருச்சி, பதிப்பு- மனிதம் பதிப்பகம், 54, இராசாராம் சாலை, கலைஞர் நகர், திருச்சி - 21, நவம்பர் 1996.

உலகாய்தத்தின் கடைப்பிடிகள் என பேராசிரியர் வானமாமலையார் மேலே உள்ள தன் கட்டுரை (பக்கம் 179)யில் கூறியது:

1. தொன்மையான இந்திய உலகாய்தர்கள் உலகம் உண்மையானது என்று நம்பினர். (அதாவது உலகம் மாயத் தோற்றமல்ல, உண்மையானது)
2. பொருள்களின் இயற்கை, செயல்கள், இவற்றின் அடிப்படையிலேயே வாழ்க்கை எழுகிறது.
3. உலக வாழ்க்கையின் பொருளாய்த அடிப்படையில் ஐம்பூதங்கள் உண்டு. (நான்கு எனக் கருதுவோரும் இருந்தனர்.)
4. ஐம்பூதங்களின் பல்வேறு வகையான சேர்க்கையால் பிரபஞ்சத்தின் பல்வேறு பொருள்களும், உயிரினங்களும் உண்டாகின்றன.
5. உணர்வும், உயிரும் ஒன்றே. அது ஐம்பூதச் சேர்க்கையால் உண்டாவதே. ஐம்பூதங்களின் ஒரு குறிப்பிட்ட விதமான சேர்க்கையால் உணர்வு என்ற குணம் பொருளில் தோன்றுகிறது.
6. உண்மையைக் காட்சிப் பிரமாணத்தால் அறியலாம். (காட்சி - Direct Perception)
7. காட்சியும் காட்சியை அடிப்படையாகக் கொண்ட அனுமானமும் அறிவைப் பெறும் வாயில்கள், அல்லது இவையே அறிவின் ஊற்றுக் கண்கள், காட்சியின்றி அனுமானம் இல்லை; அனுமானம் இன்றி அறிவு தோன்றுவதில்லை.

உலகாய்தத்தை மறுக்கவும் இழிவு படுத்தவும் எண்ணிய ஆன்மீக வாதிகளின் நூலில் இருந்தே, மேலே உள்ள இந்தக் கொள்கைகளை, "பூர்வ பட்சமாக" பெறுகிறோம். ஏனெனில், பல உலகாய்த நூல்கள், ஆன்மீகவாதிகளால் அழிக்கப் பட்டுவிட்டன. (முதல் முதலாக நேரடியாக உலகாய்த நூலை நண்பர் நா. கணேசன் பேரூர் ஆதீனத்திடம் இருந்து பெற்று, மதுரைத் திட்டத்தில் மின்னேற்றிய, விழுப்பரையன் மடல் பற்றி உங்களுக்குத் தெரிந்தது தான். இதுவும் தென்னாட்டில் இருந்து தான் கிட்டியது.)

ஆனாலும் உலகாய்தம் பன்னெடுங்காலமாய் இருந்திருக்க வேண்டும் என்று வானமாமலை சொல்லுகிறார்: "மிகவும் தொன்மையானது என்று அவ்வச் சமயவாதிகள் தங்கள் தத்துவத்தையே குறிப்பிடுவார்கள். அவ்வச் சமய வாதிகளின் புராதன நூல்கள் உலகாய்தத்தை மறுக்கின்றன. எனவே உலகாய்தம் என்ற தத்துவம் பிற தத்துவங்களின் புராதன நூல்களைப் பார்க்கிலும் தொன்மையானது என்று புலப்படும். வேத வாதம், சாங்கியம், மீமாசம், நியாயம், வைசேடிகம் முதலிய தத்துவங்களிலும் இது பழைமையானது."

இந்த உலகாய்தம் என்ற பூத வாதம் குறைந்தது கி.மு. 6 -ஆம் நூற்றாண்டில் தமிழ் நாட்டில் வழக்கில் இருந்ததை பேராசிரியர் அ.சக்கரவர்த்தி நயினார் தன் நீல கேசி முன்னுரையில் (1936, ஆங்கிலம், சென்னை) எழுதுகிறார்:

"ராஜ கிருகத்தின் அருகில் நாளந்தா என்னும் நகரில் மாதவன் என்னும் ஓர் பிராமணன் வாழ்ந்து வந்தான். அவனுக்கு 'கோஷ்டிலன்' என்ற மகனும், 'சாரி' என்ற மகளும் இருந்தனர்.

கோஷ்டிலன் பூத வாதக் கொள்கையைக் கற்றுக் கொள்வதற்காக தென்னாடு சென்றான். சாரி, தென்னிந்திய பிராமணன் ஒருவனை மணந்து கொண்டாள். அவன் பெயர் 'திஷ்யன்'. அவனுக்கு ஒரு மகன் பிறந்தான். அவனுக்கு உப திஷ்யன் என்று பெயரிட்டார்கள். அவர்களுடைய இரண்டாவது மகனுக்கு 'சாரி புத்தன்' என்று பெயர். அவர்கள் வாழ்ந்த ஊருக்குப் பக்கத்து ஊரில் 'மொக்கல்' என்றோர் பெண்ணுக்கு 'மொக்கலன்' என்னும் சிறுவன் இருந்தான். இருவரும் பல தத்துவங்களைக் கற்றார்கள். அவற்றுள் ஒன்று பூத வாதம். அவர்கள் இளைஞர்கள் ஆன பின்னர் புத்தரைப் பற்றிக் கேள்விப் பட்டு அவரையடைந்து அவருடைய சங்கத்தில் சேர்ந்தார்கள்."

சக்கரவர்த்தி நயினார் சமணர். இருந்த போதிலும் அவர் கி.மு. 6 -வது நூற்றாண்டிலேயே தென் இந்தியாவில் பூத வாதம் பிராமணர்கள் கற்கத் தகுந்த மதிப்புடைய தத்துவமாக இருந்தது என்பதை மேற் குறித்த செய்தியில் கூறுகிறார். அது மட்டுமல்லாமல் பூத வாதத்தை கற்பதற்காக வட இந்தியாவில் இருந்து தத்துவத்தைப் பயிலுகிற அறிஞர்கள் வந்தார்கள் என்ற செய்தி தென்னிந்தியாவில் பூத வாதம் செல்வாக்குப் பெற்றிருந்தது என்பதை விளக்கும். (வானமாமலை)

அன்றைக்கு இருந்த கல்விக் கடிகைகளில் தக்க சீலமும் (தட்ச சீலம்), நாளந்தாவும், காசியும் போல காஞ்சியும் படிப்பிற்குப் பெயர் போனது. காஞ்சீபுரம் பார்ப்பனக் கல்விக்குரிய இடமாக மட்டும் அல்லாமல் பிற் காலத்தில் பௌத்த சமயப் பண்பாட்டின் மையமாகவும் திகழ்ந்தது. இங்கே தமிழில் இருந்து நூல்களை வட மொழிக்கு மொழி பெயர்க்கும் வேலை பரவலாக நடந்து வந்தது. (பார்ப்பனர் திருமணத்தில் இன்றைக்கும் மாப்பிள்ளை, காசியாத்திரை போவேன் என்று பிகு பண்ணிக் கொண்டு போக, பெண்ணின் தந்தையோ, உடன்பிறந்தானோ, பெண்ணைக் கட்டிக் கொண்டு, பிறகு படிக்கப் போங்கள் என்று ஆற்றுப் படுத்தி அழைக்கும் சடங்கு அவர்களுக்குரிய படிப்பின் முகன்மையை உணர்த்துகிறது.)

இதே போல உலகாய்தத்தின் தொடர்பான தருக்கவியலும் (ஏரணம், அளவையியல், ஞயம்/நயம்/ஞாயம்/நாயம்/நியாயம் - Logic எல்லாம் ஒரேவகைப் பொருளை உணர்த்தும்; தருக்குதல் - ஒருவன் தன்னை மிகுத்துக் காட்டுதல், தன்னொடும் அவளொடும் தருக்கிய புணர்த்து - தொல். அகத்திணை 53. தருக்கு>தருக்கம்>தர்க்கம் என வடமொழிக்குச் சொல் பெயர்ந்தது பற்றி பாவாணர் விளக்கம் காட்டுவார்.), அதோடு இணைந்த பேச்சுக் கலையும் தமிழ் நாட்டில் பெரிதும் வளர்ந்திருந்தன. (காண்க, மேலே குறித்துள்ள முனைவர் நெடுஞ்செழியனின் நூல்கள்) இவற்றைக் கற்கவும் அன்று வடவர் தென்னகத்திற்கே வந்தனர்.

சங்க இலக்கியத்தில் இந்த உலக வாழ்க்கை நிலைத்தது. இதை விடுத்து வேறு வாழ்க்கை கிடையாது என்று அறிவுறுத்தும் துறைக்குப் பெயர் பொருண் மொழிக் காஞ்சி. அதை ஏன் காஞ்சி என்று சொன்னார்கள்? பொருள் நிலையானது என்று மொழிகிற இயலான பூதவியல் என்பது காஞ்சியில் கற்பிக்கப் பட்டதாலா?

சாங்கியம் என்ற கொள்கையின் மூலவர் கபிலர் என்று மெய்யறிவியல் (philosophy) பகரும்; இதுவும் பூத வாதத்தைச் சார்ந்ததே. சங்க இலக்கியத்தையும், அதில் கபிலர் பரம்பரையினருக்கு இருக்கும் செல்வாக்கையும், பின்னால் எழுந்த கபிலர் அகவல் என்ற உலகாய்தப் பாட்டையும் பார்க்க, கபிலர் என்பவரும் அவர் வழி வந்த அதே பெயரை உடைவர்களும் தமிழர்களாக இருக்க பெரும் அளவு வாய்ப்பு உள்ளது. முதல் கபிலரின் காலம் கி.மு. 7/8 நூற்றாண்டுகளாக இருக்க வேண்டும் என்று மெய்யறிவியலார் கருதுகிறார்கள்.

அது போல, பூத வாதத்தோடு, அணுக் கோட்பாட்டை மிகவும் முன்னிறுத்திப் பேசியது ஆசீவகம் என்று இந்திய மெய்யறிவியலில் தெரிவிக்கும். இந்தக் கொள்கையை முன்வைத்தவர் புத்தர் காலத்து, பக்குட காச்சாயனர். இவரும் புறம் -194 பாடல் எழுதிய பக்குடுக்கை நன்கணியாரும் ஒருவரே என பேராசிரியர் பெ.க. வேலாயுதம், தன்னுடைய "புராணம்- பொருளும் விளக்கமும்" என்ற நூலில் நிறுவுவார். ஆசீவகம் தமிழ் நாட்டில் இருந்து எழுந்ததே என "தமிழ்நாட்டு வரலாறு" நூல் (தமிழ்நாட்டுப் பாடநூல் நிறுவனம், சென்னை -6, 1983) குறிப்பிடும்.

சாங்கியம், யோகம், உலகாய்தம் என்ற மூன்றையும் சேர்த்து வடமொழியாளர்கள் ஆன்விக்சிகீ என்று அழைத்தனர். யோகத்தை பற்றி நான் இங்கு கூறினால் மிகவும் விரியும். அதனால் அதை விடுக்கிறேன். ஆன்விக்சிகீயின் மற்றொரு பெயர் HETU SASTRA. இதன் தமிழ் மூலம் 'ஏது சாற்றம்' எனப்படும். ஏது என்னும் தமிழ்ச் சொல் வினாப் பொருளைச் சுட்டுவதுடன் 'காரண காரியம்' என்னும் பொருளையும் தருவதாகும். (நிகழ்ந்தது நினைத்தற்கு ஏதுவும் ஆகும் - தொல்.அகத்திணை -46). சாற்றம்>சாத்தம்>சாத்திரம் என்று வான்மீகியார் முதற் கொண்டு எல்லா வடமொழியாளர்களும், ஒழுங்காக ஒரு வழி முறையில் அளவையியலின் படி சொல்ல வந்த கருத்தை நிறுவுவதை சாத்திரம் என்று கூறினர். சாற்றுவது என்பது ஆணித் தரமாகச் சொல்லுவது தானே!

இப்படிப் பட்ட "ஏது சாற்றம்" ஒரு சில வடவர்களால் ஏற்றுக் கொள்ளப் பட்ட போதே, மற்றவர்களால் (குறிப்பாக establishment scholars) சாடவும் பட்டது. விளைவாக, வடவரின் மிக முக்கிய நூலான மனு நீதியில் இது கண்டிக்கப் பட்டது. ஏனென்றால் தருக்க வாதிகள், வேத வேள்விகளை மறுத்தார்கள். இப்படிப் மறுப்பவர்களைச் சமுகத்தில் இருந்தே நீக்க வேண்டும் என்று மனு நூல் வற்புறுத்தியது. இந்தக் கட்டளையையும் மீறித் தருக்க வாதம் கற்ற பார்ப்பனர்கள் சில பொழுது சாதி நீக்கமே செய்யப்பட்டார்கள். தருக்க நூலில் உள்ள முப்பத்திரண்டு தந்திர உத்திகளை பேச்சுக் கலையின் கூறுகளாக தொல்காப்பியம் விரிவாக எடுத்துரைக்கிறது. இதை அப்படியே ஆன்வீக்சிகீயின் வழிமுறைகளாக வடமொழியாளர் குறிப்பார்கள் . (History of Indian Logic, Satish Chandra, Calcutta University, 1921) அதே உத்திகளை, மோரியர் காலத்தைச் (கி.மு.4-நூற்றாண்டு) சேர்ந்த கௌடில்யர் கூட தான் எழுதிய பொருள் நூலில் (அர்த்த சாத்திரம்) அப்படியே ஆளுகிறார். இதே போல கி.மு. 6-ம் நூற்றாண்டைச் சேர்ந்த வடமொழியில் அமைந்த சுசுருத சம்கிதை, சாரக சம்கிதை என்ற மருத்துவ நூல்களும் 32 தந்திர உத்திகளை அப்படியே கூறுகின்றன. இது போன்ற ஒப்புமைகளால் தான் தொல்காப்பியத்தின் காலம் குறைந்தது கி.மு. 7. ம் நூற்றாண்டாக இருக்க வேண்டும் என்று பலரும் சொல்லுகிறோம்.

இந்த உலகாய்தத்தோடு முற்றிலும் ஒத்துப் போய், தொல்காப்பிய, சங்க காலங்களில் அறம், பொருள், இன்பம் என்ற வாழ்வியற் கோட்பாட்டை மட்டுமே எடுத்துக் கொண்டு, 'வீடு' என்ற கருத்தை பற்றிப் பேசாத தமிழர்கள் "இந்த உலகம் உண்மையானது; மாயத் தோற்றம் அல்ல" என்ற அடிப்படையைப் போற்றினார்கள். (வீடு/சுவர்க்கம்/நிரயம் பற்றிப் பேசினாலே அது ஆன்மீக வாதத்திற்குக் கொண்டு போய்விடும்.) உபநிடதங்களின் காலமும் தொல்காப்பியத்தின் காலமும் கிட்டத்தட்ட ஒன்றுதான். பின் கி.மு. 400 அளவில், முன் எழுந்த உபநிடதங்கள் போல அல்லாது, தமிழ் மரபில் கூறுவது போலே, அறம், பொருள் பற்றிப் பேசிய கௌடில்யரின் நூலும் இந்தத் தாக்கத்தைக் குறிப்பாகக் காட்டுகிறது. "இந்தக் கௌடில்யத்தைத் தொகுத்த வாத்சாயனரும், தமிழ் மரபுக்கு உகந்த கந்தருவ மணத்தை உயர்த்தி காம சூத்திரம் (காமம் என்ற சொல்லே தமிழ் தான்) எழுதி இன்பம் பேணிய வாத்சாயனரும் ஒருவரே, வாத்சாயனரின் மற்றொரு பெயரான பக்சீல சுவாமி, அவர் தமிழர்" என்று உறுதி செய்வதாகவும் முனைவர் நெடுஞ்செழியன் நிறுவுவார். ஆக அர்த்த சாத்திரமும், காமசூத்திரமும், ஓரளவு தமிழ்மரபை ஒட்டி எழுந்தவையே. (நான் பொருள் நூலுக்குப் பரிந்து வரவில்லை. அதில் உள்ள வடவரின் கருத்துக்கள் பல இடங்களில் தமிழ் மரபுக்கு ஒவ்வாமல் இருக்கத்தான் செய்கின்றன.) இந்த வாத்சாயனரும் கூடக் காஞ்சிபுரத்தார் தான்.

ஆக உலகாய்தம், தருக்கவியல், பேச்சுக் கலை ஆகியவற்றிற்குப் பேர்போன இடம் அந்தக் காலத்தில் (கி.மு.700) கூட (ஒரு 40 ஆண்டுகளுக்கு முன் இருந்ததைப் போல) காஞ்சிபுரம் தான் :-).

In TSCII:

â¾¢Âø (Physics) - 1

´Õ ¿¡¨ÄóÐ ¬ñθÙìÌ Óý ¾Á¢ú þ¨½Âõ, À¢ýÉ¡ø «¸ò¾¢Â÷, ¾Á¢ú ¯Ä¸õ Á¼üÌØì¸Ç¢ø ÀÄ ¬ÆÁ¡É, ͨÅÂ¡É ¯¨Ã¡¼ø¸û ¿¼ó¾¢Õ츢ýÈÉ. («ó¾ì ÌØì¸û þ¨½Âò ¾Á¢ØìÌõ, ¾Á¢ú ¯¨Ã¡ðθÙìÌõ ¦ÀÕõÀíÌ ¬üȢ¢Õ츢ýÈÉ.) þÐ â¾¢Âø (physics) ÀüÈ¢ ¿ñÀ÷ ¸Ä¢§À¡÷ɢ¡ Á½¢. Á½¢Åñ½ý, «ðÄ¡ñ¼¡ ¦ÀâÂñ½ý ºó¾¢Ã§º¸ÃÛ¼Ûõ ±Øó¾ ¯¨Ã¡¼ø. «¾ý ÀÂýÀ¡Î ¸Õ¾¢ Á£ñÎõ þíÌ À¾¢¸¢§Èý. (±ýÛ¨¼Â ÀâóШÃî ¦º¡ø¨Ä «Å÷¸û þÕÅÕõ ²ü¸Å¢ø¨Ä. þÕó¾¡Öõ «Å÷¸û §¸ûÅ¢ §¸ð¸Å¢ø¨Ä ±ýÈ¡ø, þó¾ì ¸ðΨà ±Øó¾¢Õ측Ð.) þÂøÀ¢Âø ±ýÈ ¦º¡øÖìÌ Á¡È¡ö þÂüÀ¢Âø ±ýÈ ¾ÅÈ¡É ÒÆì¸õ ¦ÀÕò¾Ð ÀüÈ¢Ôõ þó¾ì ¸ðΨâø §À͸¢§Èý.

¸ðΨà ¿£ÇÁ¡É¾¡ø, ¿¡ý¸¡¸ô À¢Ã¢òÐ «ÛôÒ¸¢§Èý.

«ýÒ¼ý,
þáÁ.¸¢.

«ýÀ¢üÌâ Á½¢ ÁüÚõ ºó¾¢Ã¡,

«ó¾ì ¸¡ÄòЦÄ, ¾¢ñ¨½ô ÀûÇ¢ì ܼòЦÄ, ¾ôÒò ¾ñ¼¡ ¦ºöÔõ ¨ÀÂÛìÌ ±ý¦ÉýÉøÄ¡õ ¾ñ¼¨É¸û ¦¾Ã¢Ô§Á¡?.

Ó¾ø¦Ä Å¡ºø¦Ä ¿¢ü¸ ¨Å츢ÈÐ; «ôÒÈõ ´ò¾ì ¸¡ø¦Ä ¿¢ü¸ ¨Å츢ÈÐ; À¢ýÉ¡Ê §¾¡ôÒì ¸Ã½õ §À¡¼¨Å츢ÈÐ; þýÛõ ¦ÀÕº¡ò ¾ôÒô Àñ½¡, ¯ûÇí¨¸Â¢¦Ä À¢ÃõÀ¡¦Ä ÀØì¸ ¨Å츢ÈÐ, þôÀÊì ¦¸¡ïºõ ¦¸¡ïºÁ¡¸ ¾ñ¼¦É ²È¢ì¸¢ð¦¼ §À¡Ìõ. ¾ñ¼¨É¸Ç¢§Ä§Â ´ºò¾¢, §¸¡¾ñ¼õ-Û ¦º¡øÖÅ¡í¸.(¦ÀÂ÷ ºÃ¢¾¡É¡ýÛ »¡À¸õ þø¦Ä.) «Ê¢ø Á½¦Äì ÌÁ¢îÍ «¾¢¦Ä ±Øò¾¡½¢¨Âî ¦ºÕ¸¢ ¨ÅîÍô ¨À嬃 ¯ò¾Ãò¾¢ø ¸ðÊò à츢ŢðÎÕÅ¡í¸. «ôÀʧ ¦ÅÕñÎ, ¾¢¨¸îÍî ÍÕñÎ, ÁÕñÎ, §À¨Èïº ¿¢¨Ä¾¡ý. «Ø¨¸¨ÂÔõ ¾¡ñÊ ¿¢¨Ä; þÉ¢ ±§Æú À¢ÈôÒìÌõ ¾ôÒî ¦ºöÅ¡É¡? Á¡ð¼¡ý.

¿øÄ §Å¨Ç¡¸ ¯ûÇí¨¸ ÀØò¾§¾¡Î ¿¡ý ¦¾¡¼ì¸ô ÀûÇ¢ìÌ, ãýÈ¡ÅÐ ÀÊì¸ ÅóРŢð§¼ý. þô§À¡Ð¾¡ý, §¸¡¾ñ¼ò¾¢üÌ ÅóРŢ𧼧ɡ ±ýÚ §¾¡üÚ¸¢ÈÐ. Ü÷¨ÁÂ¡É ±Øò¾¡½¢ À¡Õí¸û :-)

¯¨Ã¡¼¨Äò ¦¾¡¼í̧šõ.

ӾĢø â¾õ ±ýÈ ¦º¡ø¨Äô ÀÖìÌõ §À¡§¾ «Ð ż¦Á¡Æ¢¦ÂýÚ ¦¾Ã¢Â¡¾¡ ±ýÈ Ó¾ø §¸ûÅ¢ìÌ Åէšõ.

¿¡õ ´Õ ¦º¡ø¨Äô ÀÖìÌõ §À¡Ð, ¿õÓ¨¼Â Åð¼¡Ã ÅÆìÌ, ¿¡õ ÅÇ÷ì¸ô Àð¼ Ó¨È, ÍüÈõ, ¿ðÒ ¬¸¢ÂÅüÈ¢ý ¾¡ì¸õ ±ô¦À¡ØÐõ þÕì¸ò¾¡ý ¦ºöÔõ. þ¾¢ø µÃ¢¨Á (uniformity) ÅÕÅÐ ¿øÄÐ ¾¡ý ±ýÈ¡Öõ «Ð ¦ÀÕõÀ¡Öõ ÌÓ¸¡Âò¾¢ø ²üÀΞ¢ø¨Ä. ´Õ º¡Ã¡÷ ÀÖìÌŨ¾ô À¡÷òÐ, «¨¾§Â ±ø§Ä¡ÕìÌõ ¦À¡Ð¦ÅýÚ ¸Õ¾¢, þÐ ¾¡ý ¾Á¢ú, ÁüÈÐ ¾Á¢ÆøÄ ±ýÚ ºð¦¼ýÚ ¦º¡øÄ ÓÊ¡Ð.

þ¨½Â¡É ¦À¡Õð¸¨Ç §ƒ¡Ê ±ý§È ¾Á¢ú ¿¡ðÊø ÀÄÕõ ¦º¡øÖ¸¢È¡÷¸û. «¾É¡ø, «Ð ż¦Á¡Æ¢Â¡¸¢Å¢ÎÁ¡? þø¨Ä ±ýÚ ¦º¡øÄ¢, 'ÍÅÊ>§º¡Ê>§ƒ¡Ê ±ýÀ¨¾ ¬½¢ò¾ÃÁ¡¸ À¡Å¡½÷ ¿¢ÚŢɡ÷ «øÄÅ¡? ¿¢ø ±ýÛõ §ÅÃÊ¢ø À¢Èó¾ ¿¢ø+Ð>¿¢üÚ+«õ>¿¢üÈõ>¿¢ò¾õ>¿¢îºõ ±ýÈ ¦º¡ø þýÚ ¿¢îºÂõ/¿¢ƒõ ±ý§È ¦º¡øÄô Àθ¢ÈÐ. ¿¢ƒõ ±ýÚ §¸ð¼×¼ý, «Ð ż¦Á¡Æ¢ ±ýÚ ¦º¡øÄÓÊÔÁ¡? §Åðʨ §Å‰Ê ±ýÚõ, ¸ð¼ò¨¾ì ¸‰¼õ ±ýÚõ, ¦¿¡Î+«õ>¦¿¡ð¼õ>¿ð¼õ ±ýÀ¨¾ ¿‰¼õ ±ýÚõ ÀÄ÷ ¦º¡øÖ¸¢È¡÷¸û. «¾É¡ø þ¨Å¦ÂøÄ¡õ ¾¨Ä¸£Æ¡¸ Åó¾Ð ±ýÈ¡¸¢Å¢ÎÁ¡? À¡¾¢ôÒ ±ýÀ¨¾ ®Æò¾¡Õõ, ¦¾ý ¾Á¢ú¿¡ð¼¡Õõ pA ±ý§È ´Ä¢ôÀ÷. ¬É¡ø ¦ÀÕõÀ¡Ä¡É ż ¾Á¢Æ¸ò¾¡÷ ż¦Á¡Æ¢Â¢ý ¾¡ì¸ò¾¡ø 'bA' ±ý§È ´Ä¢ôÀ÷. «¾É¡ø À¡¾¢ôÒ ±ýÈ ¦º¡ø ż¦Á¡Æ¢Â¢ø þÕóÐ Åó¾Ð ±ýÚ ¬¸¢Å¢ÎÁ¡? "¦ºö¾ §À¡Ð" - þí§¸ pO ±ýÈ ´Ä¢. "¦ºöÔõ §À¡Ð" - þí§¸ bO ±ýÈ ´Ä¢, þó¾ þÃñÎõ ¯í¸ÙìÌò ¦¾Ã¢Â¡¾Ð «øÄ.

ºÃ¢, §À¡Ð ±ýÈ ¦º¡ø ¾É¢òÐ ÅÕõ §À¡Ð, 'pO' ±ýÈ ´Ä¢ ¾¡§É Åà §ÅñÎõ. ´Õ º¡Ã¡÷ «ô¦À¡ØÐõ 'bO' ±ýÈ ´Ä¢ôÀÐ ¾ÅÈ¡É ÀÖì¸ø ¾¡ý; þÕó¾¡Öõ ¦ºö¸¢È¡÷¸§Ç? ²ý, þ¨ºô §ÀÃú¢ ±õ.±Í. ÍôÒÄðÍÁ¢Ôõ, «Å÷ ¾¡ì¸ò¾¡ø þýÛõ ÀÄ þ¨ºô ¦Àñ¸Ùõ ¾í¸û ¾Á¢Æ¢¨ºô À¨¼ôҸǢø 'º' ¨Å '„' ±ý§È ÀÖ츢ɡ÷¸û/ÀÖì̸¢È¡÷¸û. þÅ÷¸û þ¨º¨Â Å¢ÕõÀ¢ì §¸ðÌõ «§¾ §¿Ãò¾¢ø, þôÀÊô ÀÖìÌŨ¾ì §¸ðÎ ¿ÁìÌ þý¦É¡Õ Àì¸õ ¦ÅÚôÒô ÀüÈ¢ì ¦¸¡ñÎ ¾¡ý ÅÕ¸¢ÈÐ; þÕó¾¡Öõ «Å÷¸û ¾ÅÈ¡¸ô ÀÖ츢 ¦º¡ü¸û ¾Á¢ú þø¨Ä ±ýÚ ¬¸¢Å¢ÎÁ¡? ²ý, ´Õ¸¡Äò¾¢ø ¾Á¢Æõ>òÃÁ¢Çõ>òÃÁ¢¼õ>¾¢ÃÅ¢¼õ>òáŢ¼õ ±ýÀ¨¾ò ¾¨Ä¸£Æ¡¸ì ¦¸¡ñÎ ¦¾¡í¸¢ÂÅ÷¸Ùõ ¯ñξ¡§É!

¾¢Õ.§Å. «ñ½¡Á¨Ä ¦¾¡Ìò¾ "ºí¸ þÄ츢Âò ¦¾¡ýÁì ¸ÇﺢÂõ" ±ýÈ áÖìÌ (¦ÁöÂôÀý ¾Á¢Æ¡öŸõ, 53, ÒÐò ¦¾Õ, º¢¾õÀÃõ 608001) ±Ø¾¢Â «½¢óШâø ¾¢Õ. ¾Á¢Æñ½ø ¦º¡øÖÅ¡÷:

"±¨¾Ôõ 'ºÁü¸¢Õ¾ÁÂÁ¡ì̾ø' ±Ûõ ´Õ ÝÆø, ´Õ §ÀâÂì¸Á¡¸§Å º¢Ä áüÈ¡ñθû ¿¨¼¦ÀüÈÉ. þý¨È ¬í¸¢Ä §Á¡¸õ §À¡Äî ºÁü¸¢Õ¾ ÁÂÁ¡ì̾Ģø, ¾Á¢Æ÷¸§Ç §Àá÷Åõ ¸¡ðÊò ¾í¸û ÀñÀ¡ð¨¼- «¨¼Â¡Çò¨¾ò ¾¡í¸§Ç «Æ¢òÐì ¦¸¡ñ¼É÷.

¾í¸û º¢üÀì ¸¨Ä¨Â ż¦Á¡Æ¢Â¢ø ±Ø¾¢¨ÅòÐ, «¨Å ¾Á¢Æ÷ìÌì ¸¼ý¦ÀüÚì ¸¢¨¼ò¾¨Å ±ýÀЧÀ¡ø ´Õ §¾¡üÈò¨¾ ¯ñ¼¡ì¸¢É÷.

¾Á¢Æ¸ò¾¢ü §À¡ýÈ º¢üÀì ¸¨Ä¨Â §ÅÚ ±íÌõ ¸¡½ ÓÊ¡Ð. ¸Õ¿¡¼¸ þ¨º¨Â «¾ý ÓØì ¸¨Ç§Â¡Î ¦ÅÇ¢ôÀÎò¾ ÅøÄ, ¦ÀÕ Åí¸¢ÂÓõ Áò¾ÇÓõ §À¡ýÈ ¸ÕÅ¢¸¨Ç§Â¡, þ¨º ÑÏì¸ò¨¾§Â¡ §ÅÚ ±íÌõ ¸¡ñ¼ø «Ã¢Ð.

¾Á¢Æ¸ò¾¢ø ¦À¡Ä¢×¼ý ¾¢¸Øõ ¿¡ðÊÂì ¸¨Ä þíÌ §¾¡ýÈ¢î º¢ÈóÐ ÅÇ÷ó¾¢Õó¾¨Á¨Â, º¢ÄôÀ¾¢¸¡Ãõ ¸¡ðÎõ.

þ¨Å «¨ÉòÐõ þ¨Å §¾¡ýÈ¢ ÅÇ÷óÐ, ¦ºÆ¢ôÒüÈ þ¼ò¾¢üÌ ¯Ã¢ÂɧÅÂýÈ¢, þ¨Å ±Ø¾¢ ¨Åì¸ô Àð¼ ¦Á¡Æ¢ìÌ ±ùÅ¡Ú ¯Ã¢ÂÉÅ¡Ìõ? «·Ð ¯ñ¨Á¦ÂÉ¢ø 'ż¦Á¡Æ¢' ±ýÚ «ý§È ÌÈ¢ì¸ôÀð¼ ż ¿¡ðÊø «øÄÅ¡ þ¨Å þýÚ º¢ÈôÒüÚì ¸¡½ôÀ¼§ÅñÎõ?"

þ¨¾§Â Óý¦É¡ÕÓ¨È §Å¦È¡Õ Ũ¸Â¢ü ¾Á¢Æñ½ø ¦º¡ýÉ¡÷: "ż¦Á¡Æ¢Â¢ø ¯ûÇÉ ¦ÅøÄ¡õ ż ¦Á¡Æ¢ì§¸ ¯Ã¢Â ¦º¡ü¸û «øÄ; ż¦Á¡Æ¢Â¢ø ±Ø¾¢¨Åì¸ô ÀðÊÕôÀɦÅøÄ¡õ ż¦Á¡Æ¢ì§¸ ±Éò ¾É¢Ôâ¨ÁÔ¨¼Â ¸¨Ä¸û, ¾òÐÅí¸û «øÄ. «ÅüÈ¢ø, ¾Á¢Æ÷¸Ù¨¼ÂÉ Á¢¸ô ÀÄ. ż¦Á¡Æ¢ ¦ÅÚôÀ¡ø ¿õÓ¨¼Â ¦º¡òÐì¸¨Ç þÆóÐÅ¢¼¡Áø ¸¡ì¸ §ÅñÎõ. ¿¡ðÊÂõ ¿ÁÐ - «¾ý º¡ò¾¢Ãõ «íÌÇÐ. §¸¡ÒÃõ ¿ÁÐ - º¢üÀ º¡ò¾¢Ãõ «õ¦Á¡Æ¢Â¢ø ¯ûÇÐ. þ¨º ¿ÁÐ - Å¢Çì¸õ «íÌÇÐ. þùÅ¡Ú ÀÄ×õ «õ¦Á¡Æ¢Â¢ø ¸¡ôÀ¡üÈ¢¨Åì¸ô ÀðÎûÇÉ."

þùÅ¡Ú ±ñ½¢ô À¡÷ò¾¡ø, ¿¡õ ±ó¾ «Ç×ìÌ Á£ðÎÕÅ¡ì¸õ ¦ºöÔõ §À¡Ð ż¦Á¡Æ¢¨Âò ШÇòÐô À¡÷ì¸ §ÅñÎõ ±ýÀÐ ÒâÔõ. ¦ÅÚõ ´Ä¢ô¨À ÁðΧÁ ¨ÅòÐô À¡÷ì¸ì ܼ¡Ð. ż ¦Á¡Æ¢ì ¸¡Ãý â¾õ ±ýÈ ¦º¡ø¨Ä ÀÂɡ츢 §À¡Ð 'bUdham' ±ýÚ ¦º¡ýÉРŢÂô§À þø¨Ä. ¬É¡Öõ â¾õ ±ýÈ ¦º¡ø¨Ä ¾Á¢ú ¾¡ý ±ýÚ ¿¡ý ²ý ¦º¡øÖ¸¢§Èý?

þ¾üÌ, â¾ Å¡¾õ ±ýÈ §¸¡ðÀ¡Î, þó¾¢Â ¦ÁöÂȢŢÂø (philosophy) ÅÃÄ¡üÈ¢üÈ¢ø ±íÌ º¢Èó¾¢Õó¾Ð, ±íÌ ¿¢¨Ä¦ÀüÈ¢Õó¾Ð ±ýÚ «È¢Â§ÅñÎõ. «¨¾ þÉ¢ô À¡÷ô§À¡õ.

þó¾¢Â ¿¡ðÊý ¦ÁöÂȢŢÂÄ¢ø þÃñΠŢ¾Á¡É §À¡ì̸û ¦¿Î ¿¡ð¸Ç¡¸§Å ¯ñÎ. ´ýÚ ¯Ä¸¡ö¾õ. þÐ, ¦¾ýÉ¡ðÊø À¢ÈóÐ, º¢ÈóÐ, ¸¢¨ÇòÐ, Ш½ì¸ñ¼õ ±íÌõ ÀÃÅ¢ÂÐ. ÁüÈÐ ¬ýÁ£¸Å¡¾õ. þ¾¢ø ż¿¡ðÎô Àí¸Ç¢ôÒ ÁðÎõ «ýÈ¢, ¦¾ýÉ¡ðÎô Àí¸Ç¢ôÒõ ¸½¢ºÁ¡¸§Å þÕóÐ Åó¾¢Õ츢ÈÐ. ¬ýÁ£¸ Å¡¾ò¾¢üÌõ, ¯Ä¸¡ö¾ò¾¢üÌõ þ¨¼§Â ¯ûÇ ¾Õì¸õ þýÚ Å¨Ã ¿¼óÐ ¦¸¡ñÎ ¾¡ý þÕ츢ÈÐ. ´§Ã ´Õ §ÅÚÀ¡Î: ¦¾ýɸò¾¢ø þÕóÐ ±Øó¾ ¬ýÁ£¸ Å¡¾í¸û (ÌÈ¢ôÀ¡¸î º¢Å ¦¿È¢Ôõ, Á¡ø ¦¿È¢Ôõ) ¯Ä¸¡ö¾ò¾¢ý ¾¡ì¸í¸¨Ç ¯ûǼ츢ò ¾ýɸô ÀÎò¾¢ì ¦¸¡ñÎ ¾í¸û Å¡¾í¸¨Ç ¯Â÷ò¾¢ô À¢Êò¾É. ¬É¡ø ż ¿¡ðÎ ÁèÀô À¢ýÀüÈ¢§Â¡÷ (§Å¾ ¦¿È¢Ôõ, «¾üÌô À¢ý À¢ý Åó¾ §Å¾¡ó¾õ, ¯À¿¢¼¾õ, ÓÊÅ¢ø À¢ÃºýÉ Òò¾Ã¡É ¬¾¢ ºí¸Ã÷ ŨÃìÌõ), ¯Ä¸¡ö¾ò¨¾ ÓüÈ¢ÖÁ¡¸ ÁÚòÐ Åó¾¢Õ츢ȡ÷¸û. §Å¾, §Å¾¡ó¾í¸¨Ç ÁÚò¾ Òò¾, ºÁ½ ¦¿È¢Â¡÷ ܼ ¦¾¡¼ì¸ò¾¢ø ¦¾ýɸ ¯Ä¸¡ö¾ò¾¢ø þÕóÐ ÒÈôÀð¼ º¡í¸¢Âõ, º¡÷Å¡¸õ, ¬º£Å¸õ, §À¡ýÈÅü¨È «ùÅô ¦À¡ØÐ º¡÷óÐ, À¢ý þÃñÊüÌõ ¿ÎôÀð¼ ¿¢¨Ä¨Â «¨¼ó¾¢Õ츢ȡ÷¸û. þ§¾ §À¡Äò¾¡ý ÌÁÃ¢Ä Àð¼Ã¢ý Á£Á¡õ¨ºÔõ, Å¢¾ôÀ¢ÂÄ¡Õõ (Å¢§ºÊ¸õ) §Å¾ ¦¿È¢¨Â ÁÚì¸ Å¢¨ÆóÐ À¢ý ºÁúõ ¦ºöÐ ¦¸¡ñÎ ¾í¸û ¿¢¨Ä¨Âò ¦¾¡¼÷ó¾¡÷¸û. þ¨¾¦ÂøÄ¡õ ¿¡ý þíÌ Å¢Ã¢Å¡¸ Å¢ÇìÌžüÌô À¾¢Ä¡¸, ¸£§Æ ¯ûÇ ¿¡ýÌ ¸ðΨøû/áø¸¨Çô ÀÊìÌÁ¡Ú ¯í¸ÙìÌô ÀâóШÃ츢§Èý.

"þó¾¢Â ¬ýÁ£¸ Å¡¾õ - ´Õ «È¢Ó¸õ" - §¾Å¢ À¢Ãº¡ò ºð§¼¡À¡ò¡¡, Àì 94-145, "§º¡Æ÷ ÅÇ÷ò¾ §Å¾ì ¸øÅ¢ ӾĢ ¸ðΨøû, ¦¾¡ÌôÀ¡º¢Ã¢Â÷ ¦Å. ¸¢Õ‰½ ã÷ò¾¢, ¾¢ºõÀ÷ 99, ¬ö× Åð¼ ¦ÅǢ£Î, D7/13, ¾Á¢ú¿¡Î Å£ðÎź¾¢ šâÂì ÌÊ¢ÕôÒ, §¸¡¼õÀ¡ì¸õ, ¦ºý¨É -24,

"ÀÆó¾Á¢ú þÄ츢Âò¾¢ø ¦À¡ÕûÓ¾ø Å¡¾ì ¸ÕòÐì¸û" - ¿¡. Å¡ÉÁ¡Á¨Ä, Àì 146 - 184, "§º¡Æ÷ ÅÇ÷ò¾ §Å¾ì ¸øÅ¢ ӾĢ ¸ðΨøû, ¦¾¡ÌôÀ¡º¢Ã¢Â÷ ¦Å. ¸¢Õ‰½ ã÷ò¾¢, ¾¢ºõÀ÷ 99, ¬ö× Åð¼ ¦ÅǢ£Î, D7/13, ¾Á¢ú¿¡Î Å£ðÎź¾¢ šâÂì ÌÊ¢ÕôÒ, §¸¡¼õÀ¡ì¸õ, ¦ºý¨É -24,

"¾Á¢ú þÄ츢Âò¾¢ø ¯Ä¸¡ö¾õ" - Ó¨ÉÅ÷ ¸.¦¿Î了ƢÂý, ¾Á¢úòШÈ, ¦Àâ¡÷ ®.¦Å.á. ¸øæâ, ¾¢Õ, À¾¢ôÒ- ÁÉ¢¾õ À¾¢ôÀ¸õ, 54, þạáõ º¡¨Ä, ¸¨Ä»÷ ¿¸÷, ¾¢Õ - 21, Ýý 1990, Å¢üÀ¨É ¯Ã¢¨Á, À¡Ã¢ ¿¢¨ÄÂõ, 184, À¢Ã¸¡ºõ º¡¨Ä, ¦ºý¨É 600 108,

"¯Ä¸ò §¾¡üÈÓõ ¾Á¢Æ÷ §¸¡ðÀ¡Îõ" - - Ó¨ÉÅ÷ ¸.¦¿Î了ƢÂý, ¾Á¢úòШÈ, ¦Àâ¡÷ ®.¦Å.á. ¸øæâ, ¾¢Õ, À¾¢ôÒ- ÁÉ¢¾õ À¾¢ôÀ¸õ, 54, þạáõ º¡¨Ä, ¸¨Ä»÷ ¿¸÷, ¾¢Õ - 21, ¿ÅõÀ÷ 1996.

¯Ä¸¡ö¾ò¾¢ý ¸¨¼ôÀ¢Ê¸û ±É §ÀẢâÂ÷ Å¡ÉÁ¡Á¨Ä¡÷ §Á§Ä ¯ûÇ ¾ý ¸ðΨà (Àì¸õ 179)¢ø ÜÈ¢ÂÐ:

1. ¦¾¡ý¨ÁÂ¡É þó¾¢Â ¯Ä¸¡ö¾÷¸û ¯Ä¸õ ¯ñ¨Á¡ÉÐ ±ýÚ ¿õÀ¢É÷. («¾¡ÅÐ ¯Ä¸õ Á¡Âò §¾¡üÈÁøÄ, ¯ñ¨Á¡ÉÐ)
2. ¦À¡Õû¸Ç¢ý þÂü¨¸, ¦ºÂø¸û, þÅüÈ¢ý «ÊôÀ¨¼Â¢§Ä§Â Å¡ú쨸 ±Ø¸¢ÈÐ.
3. ¯Ä¸ Å¡ú쨸¢ý ¦À¡ÕÇ¡ö¾ «ÊôÀ¨¼Â¢ø ³õâ¾í¸û ¯ñÎ. (¿¡ýÌ ±Éì ¸ÕЧšÕõ þÕó¾É÷.)
4. ³õâ¾í¸Ç¢ý Àø§ÅÚ Å¨¸Â¡É §º÷쨸¡ø À¢ÃÀïºò¾¢ý Àø§ÅÚ ¦À¡Õû¸Ùõ, ¯Â¢Ã¢Éí¸Ùõ ¯ñ¼¡¸¢ýÈÉ.
5. ¯½÷×õ, ¯Â¢Õõ ´ý§È. «Ð ³õâ¾î §º÷쨸¡ø ¯ñ¼¡Å§¾. ³õâ¾í¸Ç¢ý ´Õ ÌÈ¢ôÀ¢ð¼ Å¢¾Á¡É §º÷쨸¡ø ¯½÷× ±ýÈ Ì½õ ¦À¡ÕÇ¢ø §¾¡ýÚ¸¢ÈÐ.
6. ¯ñ¨Á¨Âì ¸¡ðº¢ô À¢ÃÁ¡½ò¾¡ø «È¢ÂÄ¡õ. (¸¡ðº¢ - Direct Perception)
7. ¸¡ðº¢Ôõ ¸¡ðº¢¨Â «ÊôÀ¨¼Â¡¸ì ¦¸¡ñ¼ «ÛÁ¡ÉÓõ «È¢¨Åô ¦ÀÚõ š¢ø¸û, «øÄÐ þ¨Å§Â «È¢Å¢ý °üÚì ¸ñ¸û, ¸¡ðº¢Â¢ýÈ¢ «ÛÁ¡Éõ þø¨Ä; «ÛÁ¡Éõ þýÈ¢ «È¢× §¾¡ýÚž¢ø¨Ä.

¯Ä¸¡ö¾ò¨¾ ÁÚì¸×õ þÆ¢× ÀÎò¾×õ ±ñ½¢Â ¬ýÁ£¸ Å¡¾¢¸Ç¢ý áÄ¢ø þÕó§¾, §Á§Ä ¯ûÇ þó¾ì ¦¸¡û¨¸¸¨Ç, "â÷Å ÀðºÁ¡¸" ¦ÀÚ¸¢§È¡õ. ²¦ÉÉ¢ø, ÀÄ ¯Ä¸¡ö¾ áø¸û, ¬ýÁ£¸Å¡¾¢¸Ç¡ø «Æ¢ì¸ô ÀðÎÅ¢ð¼É. (Ó¾ø Ӿġ¸ §¿ÃÊ¡¸ ¯Ä¸¡ö¾ á¨Ä ¿ñÀ÷ ¿¡. ¸§½ºý §Àå÷ ¬¾£Éò¾¢¼õ þÕóÐ ¦ÀüÚ, ÁШÃò ¾¢ð¼ò¾¢ø Á¢ý§ÉüÈ¢Â, Å¢ØôÀ¨ÃÂý Á¼ø ÀüÈ¢ ¯í¸ÙìÌò ¦¾Ã¢ó¾Ð ¾¡ý. þÐ×õ ¦¾ýÉ¡ðÊø þÕóÐ ¾¡ý ¸¢ðÊÂÐ.)

¬É¡Öõ ¯Ä¸¡ö¾õ Àý¦ÉÎí¸¡ÄÁ¡ö þÕó¾¢Õì¸ §ÅñÎõ ±ýÚ Å¡ÉÁ¡Á¨Ä ¦º¡øÖ¸¢È¡÷: "Á¢¸×õ ¦¾¡ý¨Á¡ÉÐ ±ýÚ «ùÅî ºÁÂÅ¡¾¢¸û ¾í¸û ¾òÐÅò¨¾§Â ÌÈ¢ôÀ¢ÎÅ¡÷¸û. «ùÅî ºÁ š¾¢¸Ç¢ý Òá¾É áø¸û ¯Ä¸¡ö¾ò¨¾ ÁÚ츢ýÈÉ. ±É§Å ¯Ä¸¡ö¾õ ±ýÈ ¾òÐÅõ À¢È ¾òÐÅí¸Ç¢ý Òá¾É áø¸¨Çô À¡÷츢Öõ ¦¾¡ý¨Á¡ÉÐ ±ýÚ ÒÄôÀÎõ. §Å¾ Å¡¾õ, º¡í¸¢Âõ, Á£Á¡ºõ, ¿¢Â¡Âõ, ¨Å§ºÊ¸õ ӾĢ ¾òÐÅí¸Ç¢Öõ þÐ À¨Æ¨Á¡ÉÐ."

þó¾ ¯Ä¸¡ö¾õ ±ýÈ â¾ Å¡¾õ ̨Èó¾Ð ¸¢.Ó. 6 -¬õ áüÈ¡ñÊø ¾Á¢ú ¿¡ðÊø ÅÆ츢ø þÕ󾨾 §ÀẢâÂ÷ «.ºì¸ÃÅ÷ò¾¢ ¿Â¢É¡÷ ¾ý ¿£Ä §¸º¢ Óýۨâø (1936, ¬í¸¢Äõ, ¦ºý¨É) ±Øи¢È¡÷:

"რ¸¢Õ¸ò¾¢ý «Õ¸¢ø ¿¡Çó¾¡ ±ýÛõ ¿¸Ã¢ø Á¡¾Åý ±ýÛõ µ÷ À¢Ã¡Á½ý Å¡úóÐ Åó¾¡ý. «ÅÛìÌ '§¸¡‰ÊÄý' ±ýÈ Á¸Ûõ, 'º¡Ã¢' ±ýÈ Á¸Ùõ þÕó¾É÷.

§¸¡‰ÊÄý â¾ Å¡¾ì ¦¸¡û¨¸¨Âì ¸üÚì ¦¸¡ûžü¸¡¸ ¦¾ýÉ¡Î ¦ºýÈ¡ý. º¡Ã¢, ¦¾ýÉ¢ó¾¢Â À¢Ã¡Á½ý ´ÕÅ¨É Á½óÐ ¦¸¡ñ¼¡û. «Åý ¦ÀÂ÷ '¾¢‰Âý'. «ÅÛìÌ ´Õ Á¸ý À¢Èó¾¡ý. «ÅÛìÌ ¯À ¾¢‰Âý ±ýÚ ¦ÀÂâð¼¡÷¸û. «Å÷¸Ù¨¼Â þÃñ¼¡ÅÐ Á¸ÛìÌ 'º¡Ã¢ Òò¾ý' ±ýÚ ¦ÀÂ÷. «Å÷¸û Å¡úó¾ °ÕìÌô Àì¸òÐ °Ã¢ø '¦Á¡ì¸ø' ±ý§È¡÷ ¦ÀñÏìÌ '¦Á¡ì¸Äý' ±ýÛõ º¢ÚÅý þÕó¾¡ý. þÕÅÕõ ÀÄ ¾òÐÅí¸¨Çì ¸üÈ¡÷¸û. «ÅüÚû ´ýÚ â¾ Å¡¾õ. «Å÷¸û þ¨Ç»÷¸û ¬É À¢ýÉ÷ Òò¾¨Ãô ÀüÈ¢ì §¸ûÅ¢ô ÀðÎ «Å¨Ã¨¼óÐ «ÅÕ¨¼Â ºí¸ò¾¢ø §º÷ó¾¡÷¸û."

ºì¸ÃÅ÷ò¾¢ ¿Â¢É¡÷ ºÁ½÷. þÕó¾ §À¡¾¢Öõ «Å÷ ¸¢.Ó. 6 -ÅÐ áüÈ¡ñʧħ ¦¾ý þó¾¢Â¡Å¢ø â¾ Å¡¾õ À¢Ã¡Á½÷¸û ¸ü¸ò ¾Ìó¾ Á¾¢ôÒ¨¼Â ¾òÐÅÁ¡¸ þÕó¾Ð ±ýÀ¨¾ §Áü ÌÈ¢ò¾ ¦ºö¾¢Â¢ø ÜÚ¸¢È¡÷. «Ð ÁðÎÁøÄ¡Áø â¾ Å¡¾ò¨¾ ¸üÀ¾ü¸¡¸ ż þó¾¢Â¡Å¢ø þÕóÐ ¾òÐÅò¨¾ô À¢ָ¢È «È¢»÷¸û Åó¾¡÷¸û ±ýÈ ¦ºö¾¢ ¦¾ýÉ¢ó¾¢Â¡Å¢ø â¾ Å¡¾õ ¦ºøÅ¡ìÌô ¦ÀüÈ¢Õó¾Ð ±ýÀ¨¾ Å¢ÇìÌõ. (Å¡ÉÁ¡Á¨Ä)

«ý¨ÈìÌ þÕó¾ ¸øÅ¢ì ¸Ê¨¸¸Ç¢ø ¾ì¸ º£ÄÓõ (¾ðº º£Äõ), ¿¡Çó¾¡×õ, ¸¡º¢Ôõ §À¡Ä ¸¡ïº¢Ôõ ÀÊôÀ¢üÌô ¦ÀÂ÷ §À¡ÉÐ. ¸¡ïº£ÒÃõ À¡÷ôÀÉì ¸øÅ¢ìÌâ þ¼Á¡¸ ÁðÎõ «øÄ¡Áø À¢ü ¸¡Äò¾¢ø ¦Àªò¾ ºÁÂô ÀñÀ¡ðÊý ¨ÁÂÁ¡¸×õ ¾¢¸úó¾Ð. þí§¸ ¾Á¢Æ¢ø þÕóÐ áø¸¨Ç ż ¦Á¡Æ¢ìÌ ¦Á¡Æ¢ ¦ÀÂ÷ìÌõ §Å¨Ä ÀÃÅÄ¡¸ ¿¼óÐ Åó¾Ð. (À¡÷ôÀÉ÷ ¾¢ÕÁ½ò¾¢ø þý¨ÈìÌõ Á¡ôÀ¢û¨Ç, ¸¡º¢Â¡ò¾¢¨Ã §À¡§Åý ±ýÚ À¢Ì Àñ½¢ì ¦¸¡ñÎ §À¡¸, ¦Àñ½¢ý ¾ó¨¾§Â¡, ¯¼ýÀ¢È󾡧ɡ, ¦Àñ¨½ì ¸ðÊì ¦¸¡ñÎ, À¢ÈÌ ÀÊì¸ô §À¡í¸û ±ýÚ ¬üÚô ÀÎò¾¢ «¨ÆìÌõ º¼íÌ «Å÷¸ÙìÌâ ÀÊôÀ¢ý Ó¸ý¨Á¨Â ¯½÷òи¢ÈÐ.)

þ§¾ §À¡Ä ¯Ä¸¡ö¾ò¾¢ý ¦¾¡¼÷À¡É ¾Õì¸Å¢ÂÖõ (²Ã½õ, «Ç¨Å¢Âø, »Âõ/¿Âõ/»¡Âõ/¿¡Âõ/¿¢Â¡Âõ - Logic ±øÄ¡õ ´§ÃŨ¸ô ¦À¡Õ¨Ç ¯½÷òÐõ; ¾Õì̾ø - ´ÕÅý ¾ý¨É Á¢ÌòÐì ¸¡ðξø, ¾ý¦É¡Îõ «Å¦Ç¡Îõ ¾Õ츢 ҽ÷òÐ - ¦¾¡ø. «¸ò¾¢¨½ 53. ¾ÕìÌ>¾Õì¸õ>¾÷ì¸õ ±É ż¦Á¡Æ¢ìÌî ¦º¡ø ¦ÀÂ÷ó¾Ð ÀüÈ¢ À¡Å¡½÷ Å¢Çì¸õ ¸¡ðÎÅ¡÷.), «§¾¡Î þ¨½ó¾ §ÀîÍì ¸¨ÄÔõ ¾Á¢ú ¿¡ðÊø ¦ÀâÐõ ÅÇ÷ó¾¢Õó¾É. (¸¡ñ¸, §Á§Ä ÌÈ¢òÐûÇ Ó¨ÉÅ÷ ¦¿Î了ƢÂÉ¢ý áø¸û) þÅü¨Èì ¸ü¸×õ «ýÚ Å¼Å÷ ¦¾ýɸò¾¢ü§¸ Åó¾É÷.

ºí¸ þÄ츢Âò¾¢ø þó¾ ¯Ä¸ Å¡ú쨸 ¿¢¨Äò¾Ð. þ¨¾ Å¢ÎòÐ §ÅÚ Å¡ú쨸 ¸¢¨¼Â¡Ð ±ýÚ «È¢×ÚòÐõ ШÈìÌô ¦ÀÂ÷ ¦À¡Õñ ¦Á¡Æ¢ì ¸¡ïº¢. «¨¾ ²ý ¸¡ïº¢ ±ýÚ ¦º¡ýÉ¡÷¸û? ¦À¡Õû ¿¢¨Ä¡ÉÐ ±ýÚ ¦Á¡Æ¢¸¢È þÂÄ¡É â¾Å¢Âø ±ýÀÐ ¸¡ïº¢Â¢ø ¸üÀ¢ì¸ô À𼾡ġ?

º¡í¸¢Âõ ±ýÈ ¦¸¡û¨¸Â¢ý ãÄÅ÷ ¸À¢Ä÷ ±ýÚ ¦ÁöÂȢŢÂø (philosophy) À¸Õõ; þÐ×õ â¾ Å¡¾ò¨¾î º¡÷󾧾. ºí¸ þÄ츢Âò¨¾Ôõ, «¾¢ø ¸À¢Ä÷ ÀÃõÀ¨Ã¢ÉÕìÌ þÕìÌõ ¦ºøš쨸Ôõ, À¢ýÉ¡ø ±Øó¾ ¸À¢Ä÷ «¸Åø ±ýÈ ¯Ä¸¡ö¾ô À¡ð¨¼Ôõ À¡÷ì¸, ¸À¢Ä÷ ±ýÀÅÕõ «Å÷ ÅÆ¢ Åó¾ «§¾ ¦À¨à ¯¨¼Å÷¸Ùõ ¾Á¢Æ÷¸Ç¡¸ þÕì¸ ¦ÀÕõ «Ç× Å¡öôÒ ¯ûÇÐ. Ó¾ø ¸À¢Äâý ¸¡Äõ ¸¢.Ó. 7/8 áüÈ¡ñθǡ¸ þÕì¸ §ÅñÎõ ±ýÚ ¦ÁöÂȢŢÂÄ¡÷ ¸Õи¢È¡÷¸û.

«Ð §À¡Ä, â¾ Å¡¾ò§¾¡Î, «Ïì §¸¡ðÀ¡ð¨¼ Á¢¸×õ ÓýÉ¢Úò¾¢ô §Àº¢ÂÐ ¬º£Å¸õ ±ýÚ þó¾¢Â ¦ÁöÂȢŢÂÄ¢ø ¦¾Ã¢Å¢ìÌõ. þó¾ì ¦¸¡û¨¸¨Â Óý¨Åò¾Å÷ Òò¾÷ ¸¡ÄòÐ, Àì̼ ¸¡îº¡ÂÉ÷. þÅÕõ ÒÈõ -194 À¡¼ø ±Ø¾¢Â ÀìÌÎ쨸 ¿ý¸½¢Â¡Õõ ´Õŧà ±É §ÀẢâÂ÷ ¦À.¸. §ÅÄ¡Ô¾õ, ¾ýÛ¨¼Â "Òá½õ- ¦À¡ÕÙõ Å¢Çì¸Óõ" ±ýÈ áÄ¢ø ¿¢Ú×Å¡÷. ¬º£Å¸õ ¾Á¢ú ¿¡ðÊø þÕóÐ ±Ø󾧾 ±É "¾Á¢ú¿¡ðÎ ÅÃÄ¡Ú" áø (¾Á¢ú¿¡ðÎô À¡¼áø ¿¢ÚÅÉõ, ¦ºý¨É -6, 1983) ÌÈ¢ôÀ¢Îõ.

º¡í¸¢Âõ, §Â¡¸õ, ¯Ä¸¡ö¾õ ±ýÈ ãý¨ÈÔõ §º÷òРż¦Á¡Æ¢Â¡Ç÷¸û ¬ýŢ캢¸£ ±ýÚ «¨Æò¾É÷. §Â¡¸ò¨¾ ÀüÈ¢ ¿¡ý þíÌ ÜȢɡø Á¢¸×õ ŢâÔõ. «¾É¡ø «¨¾ Å¢Î츢§Èý. ¬ýŢ캢¸£Â¢ý Áü¦È¡Õ ¦ÀÂ÷ HETU SASTRA. þ¾ý ¾Á¢ú ãÄõ '²Ð º¡üÈõ' ±ÉôÀÎõ. ²Ð ±ýÛõ ¾Á¢úî ¦º¡ø Ţɡô ¦À¡Õ¨Çî ÍðÎÅмý '¸¡Ã½ ¸¡Ã¢Âõ' ±ýÛõ ¦À¡Õ¨ÇÔõ ¾Õž¡Ìõ. (¿¢¸úó¾Ð ¿¢¨Éò¾üÌ ²Ð×õ ¬Ìõ - ¦¾¡ø.«¸ò¾¢¨½ -46). º¡üÈõ>º¡ò¾õ>º¡ò¾¢Ãõ ±ýÚ Å¡ýÁ£¸¢Â¡÷ Ó¾ü ¦¸¡ñÎ ±øÄ¡ ż¦Á¡Æ¢Â¡Ç÷¸Ùõ, ´Øí¸¡¸ ´Õ ÅÆ¢ ӨȢø «Ç¨Å¢ÂÄ¢ý ÀÊ ¦º¡øÄ Åó¾ ¸Õò¨¾ ¿¢Ú×Ũ¾ º¡ò¾¢Ãõ ±ýÚ ÜÈ¢É÷. º¡üÚÅÐ ±ýÀÐ ¬½¢ò ¾ÃÁ¡¸î ¦º¡øÖÅÐ ¾¡§É!

þôÀÊô Àð¼ "²Ð º¡üÈõ" ´Õ º¢Ä żÅ÷¸Ç¡ø ²üÚì ¦¸¡ûÇô Àð¼ §À¡§¾, ÁüÈÅ÷¸Ç¡ø (ÌÈ¢ôÀ¡¸ establishment scholars) º¡¼×õ Àð¼Ð. Å¢¨ÇÅ¡¸, żÅâý Á¢¸ Ó츢 áÄ¡É ÁÛ ¿£¾¢Â¢ø þÐ ¸ñÊì¸ô Àð¼Ð. ²¦ÉýÈ¡ø ¾Õì¸ Å¡¾¢¸û, §Å¾ §ÅûÅ¢¸¨Ç ÁÚò¾¡÷¸û. þôÀÊô ÁÚôÀÅ÷¸¨Çî ºÓ¸ò¾¢ø þÕó§¾ ¿£ì¸ §ÅñÎõ ±ýÚ ÁÛ áø ÅüÒÚò¾¢ÂÐ. þó¾ì ¸ð¼¨Ç¨ÂÔõ Á£È¢ò ¾Õì¸ Å¡¾õ ¸üÈ À¡÷ôÀÉ÷¸û º¢Ä ¦À¡ØÐ º¡¾¢ ¿£ì¸§Á ¦ºöÂôÀð¼¡÷¸û. ¾Õì¸ áÄ¢ø ¯ûÇ ÓôÀò¾¢ÃñÎ ¾ó¾¢Ã ¯ò¾¢¸¨Ç §ÀîÍì ¸¨Ä¢ý Üڸǡ¸ ¦¾¡ø¸¡ôÀ¢Âõ Ţ⚸ ±ÎòШÃ츢ÈÐ. þ¨¾ «ôÀʧ ¬ýţ캢¸£Â¢ý ÅƢӨȸǡ¸ ż¦Á¡Æ¢Â¡Ç÷ ÌÈ¢ôÀ¡÷¸û . (History of Indian Logic, Satish Chandra, Calcutta University, 1921) «§¾ ¯ò¾¢¸¨Ç, §Á¡Ã¢Â÷ ¸¡Äò¨¾î (¸¢.Ó.4-áüÈ¡ñÎ) §º÷ó¾ ¦¸ªÊøÂ÷ ܼ ¾¡ý ±Ø¾¢Â ¦À¡Õû áÄ¢ø («÷ò¾ º¡ò¾¢Ãõ) «ôÀʧ ¬Ù¸¢È¡÷. þ§¾ §À¡Ä ¸¢.Ó. 6-õ áüÈ¡ñ¨¼î §º÷ó¾ ż¦Á¡Æ¢Â¢ø «¨Áó¾ ÍÍÕ¾ ºõ¸¢¨¾, º¡Ã¸ ºõ¸¢¨¾ ±ýÈ ÁÕòÐÅ áø¸Ùõ 32 ¾ó¾¢Ã ¯ò¾¢¸¨Ç «ôÀʧ ÜÚ¸¢ýÈÉ. þÐ §À¡ýÈ ´ôÒ¨Á¸Ç¡ø ¾¡ý ¦¾¡ø¸¡ôÀ¢Âò¾¢ý ¸¡Äõ ̨Èó¾Ð ¸¢.Ó. 7. õ áüÈ¡ñ¼¡¸ þÕì¸ §ÅñÎõ ±ýÚ ÀÄÕõ ¦º¡øÖ¸¢§È¡õ.

þó¾ ¯Ä¸¡ö¾ò§¾¡Î ÓüÈ¢Öõ ´òÐô §À¡ö, ¦¾¡ø¸¡ôÀ¢Â, ºí¸ ¸¡Äí¸Ç¢ø «Èõ, ¦À¡Õû, þýÀõ ±ýÈ Å¡úÅ¢Âü §¸¡ðÀ¡ð¨¼ ÁðΧÁ ±ÎòÐì ¦¸¡ñÎ, 'Å£Î' ±ýÈ ¸Õò¨¾ ÀüÈ¢ô §Àº¡¾ ¾Á¢Æ÷¸û "þó¾ ¯Ä¸õ ¯ñ¨Á¡ÉÐ; Á¡Âò §¾¡üÈõ «øÄ" ±ýÈ «ÊôÀ¨¼¨Âô §À¡üȢɡ÷¸û. (Å£Î/ÍÅ÷ì¸õ/¿¢ÃÂõ ÀüÈ¢ô §Àº¢É¡§Ä «Ð ¬ýÁ£¸ Å¡¾ò¾¢üÌì ¦¸¡ñÎ §À¡öÅ¢Îõ.) ¯À¿¢¼¾í¸Ç¢ý ¸¡ÄÓõ ¦¾¡ø¸¡ôÀ¢Âò¾¢ý ¸¡ÄÓõ ¸¢ð¼ò¾ð¼ ´ýÚ¾¡ý. À¢ý ¸¢.Ó. 400 «ÇÅ¢ø, Óý ±Øó¾ ¯À¿¢¼¾í¸û §À¡Ä «øÄ¡Ð, ¾Á¢ú ÁÃÀ¢ø ÜÚÅÐ §À¡§Ä, «Èõ, ¦À¡Õû ÀüÈ¢ô §Àº¢Â ¦¸ªÊøÂâý áÖõ þó¾ò ¾¡ì¸ò¨¾ì ÌÈ¢ôÀ¡¸ì ¸¡ðθ¢ÈÐ. "þó¾ì ¦¸ªÊøÂò¨¾ò ¦¾¡Ìò¾ Å¡òº¡ÂÉÕõ, ¾Á¢ú ÁÃÒìÌ ¯¸ó¾ ¸ó¾ÕÅ Á½ò¨¾ ¯Â÷ò¾¢ ¸¡Á Ýò¾¢Ãõ (¸¡Áõ ±ýÈ ¦º¡ø§Ä ¾Á¢ú ¾¡ý) ±Ø¾¢ þýÀõ §À½¢Â Å¡òº¡ÂÉÕõ ´ÕŧÃ, Å¡òº¡ÂÉâý Áü¦È¡Õ ¦ÀÂÃ¡É Àìº£Ä ÍÅ¡Á¢, «Å÷ ¾Á¢Æ÷" ±ýÚ ¯Ú¾¢ ¦ºöž¡¸×õ Ó¨ÉÅ÷ ¦¿Î了ƢÂý ¿¢Ú×Å¡÷. ¬¸ «÷ò¾ º¡ò¾¢ÃÓõ, ¸¡ÁÝò¾¢ÃÓõ, µÃÇ× ¾Á¢úÁèÀ ´ðÊ ±Øó¾¨Å§Â. (¿¡ý ¦À¡Õû áÖìÌô ÀâóÐ ÅÃÅ¢ø¨Ä. «¾¢ø ¯ûÇ Å¼Åâý ¸ÕòÐì¸û ÀÄ þ¼í¸Ç¢ø ¾Á¢ú ÁÃÒìÌ ´ùÅ¡Áø þÕì¸ò¾¡ý ¦ºö¸¢ýÈÉ.) þó¾ Å¡òº¡ÂÉÕõ Ü¼ì ¸¡ïº¢ÒÃò¾¡÷ ¾¡ý.

¬¸ ¯Ä¸¡ö¾õ, ¾Õì¸Å¢Âø, §ÀîÍì ¸¨Ä ¬¸¢ÂÅüÈ¢üÌô §À÷§À¡É þ¼õ «ó¾ì ¸¡Äò¾¢ø (¸¢.Ó.700) ܼ (´Õ 40 ¬ñθÙìÌ Óý þÕ󾨾ô §À¡Ä) ¸¡ïº¢ÒÃõ ¾¡ý :-).

No comments: