Saturday, April 16, 2005

மூன்று கருத்தோட்டங்கள்

மூன்று கருத்தோட்டங்கள்

தமிங்கிலம் பற்றிய ஒன்றோடொன்று ஒட்டிய மூன்று கருத்தோட்டங்களை உங்களோடு பகிர்ந்து கொள்ளுகிறேன்.

முதல் கருத்தோட்டம்:

ஒரு சமயம் ஆனந்த விகடனில், ஒரு துணுக்குச் செய்தியில் கீழ்க்கண்டதைப் பார்த்தேன்.
------------------------------------------------------------------------
"சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழக விழாவில், சென்னைப் பல்கலைக் கழகத் துணைவேந்தர் பொற்கோ கூறியது:

தொல்காப்பியர் காலத்தில் இருந்தே தமிழுக்கும், பிற மொழிகளுக்கும் தொடர்பு இருந்திருக்கிறது. எத்தனையோ மொழிக்காரர்கள் இந்த நாட்டை ஆண்டிருக்கிறார்கள். அவர்கள் யாருமே தங்கள் மொழியைப் படிக்கச் சொல்லி நம்மைக் கட்டாயப் படுத்த வில்லை. வெள்ளைக்காரன் காலத்தில் கூட, தமிழ்நாட்டுக்கு அனுப்பப் பட்ட கலெக்டருக்கு இங்கிலாந்திலே தமிழ் கற்றுக் கொடுத்துத் தான் அனுப்பிவைத்தார்கள். ஆனால் நம்மவர்களே நம்மவர்களை ஆளத் தொடங்கிய பிறகுதான் ஆங்கிலத்தைப் படிக்கக் கட்டாயப்படுத்தப் பட்டோ ம்.

தமிழில் ஒரு கடிதம் எழுதினால், அதில் ஏதாவது தவறு இருக்கிறதா என்று யாரிடமும் காட்டுவதில்லை. ஆங்கிலத்தில் எழுதினால் பத்து பேரிடமாவது காட்டுகிறோம். ஆங்கிலத்தில் தவறு ஏற்பட்டுவிடக் கூடாது என்ற அளவுக்குப் பக்தி நமக்கு."
----------------------------------------------------------------------------
இனி இராம.கி:

இது எப்படி இருக்கு? ஆங்கிலம் பேச, எழுத நமக்கு 'Wren and Martin' வேண்டும். இந்தி மொழி பேச ஆர்வத்தோடு 'Rashtra Bhasha Bothana" தேடுவோம். ஆனால், தமிழுக்கு மட்டும், 'தமில் தானே' என்றால் எப்படி?

"இன்னாபா, ஆஸ்பிட்டல்லே வச்சு இஞ்சக்ஷ்ன் போட்டாண்டி இவரு பொழ்ச்சாரு, அப்பாலே கேசு டவ்ட்டுத்தான், இக்கும்",

"என்னா சொல்றிங்க மாமி, அவா அப்படியே பேஷிண்டே இருந்தா, I can not bear that, நானும் modern girl தானே, அவா feel பண்ணுனா பண்ணட்டும், I don't care".

நான் இப்படிக் குமுகத்தில் வெவ்வேறு ஆட்களை வைத்து உரையாடல் எழுதிக் கொண்டே போகலாம். ஆனால் செய்தி ஒன்று தான். எங்கு பார்த்தாலும் முடியாது, முடியாது என்று மொழியில் ஒரு தாழ்வு மனப்பான்மை. ஆங்கிலம் ஊடுறுவினால் தான், நம்மை மற்றவர் மதிப்பார்கள் என்று 100க்கு 99 பேர் எண்ணுகிறோம். இப்படிச் செய்வதைப் பலரும் ஒத்துக் கொண்டே போகிறோம். அதன் விளைவு தான் தமிங்கிலம். நமக்குள் இருப்பது அளவுக்கு மீறிய பொறுமையா? குடி உரிமையா? இப்படித் தான்தோன்றித் தனமாக ஆங்கிலத்தில் பேசினால், எழுதினால் ஆங்கில மிடையத்தார் பொறுத்துக் கொள்வார்களா? அதைத் தன்னிலைப் படுத்துவார்களா? மொத்தத்தில் இது எடுபடுமா? 100க்கு 5 மேனி தமிழ்ச் சொற்களைப் போட்டு இந்து நாளிதழுக்கு ஒரு கட்டுரை எழுதிப் பார்க்கட்டுமே? அதை இந்து ஏற்குமா? தள்ளுமா? [தமிங்கலம் பற்றிய உரையாடலுக்கு நடுவில் இதையும் எண்ணிப் பார்க்கலாம் என்று தோன்றியது. தமிழில் ஆங்கிலத்தைக் கலந்து பேசுவதைத் தமிங்கிலம் என்று சொல்லுகிறோம். இதே போல் ஆங்கிலத்தில் தமிழ் கலந்து பேசினால் அதற்கு என்ன பெயர்? tanglish - ஆ?)]

(குறிப்பு: ஆங்கிலத்தை ஒரு மொழியெனப் படிக்கக் கட்டாயப் படுத்தியது எனக்குச் சரி என்று தான் படுகிறது.)

இனி இன்னொரு கருத்தோட்டம்:

சூரியத் தொலைக் காட்சியில் "வணக்கம் தமிழகம்" என்றொரு நிகழ்ச்சி. இதில் "சிறப்பு விருந்தினர்" என்று ஒரு பகுதி. இதில் படிப்பாளிகள் தமிங்கிலம் பேசியே திளைக்கிறார்கள். நல்ல தமிழ் பேசவேண்டும் என்று பேச விளைகிறவர்கள் மிகச் சிலரே. பெரும்பாலும் அவர்கள் தமிழ் இலக்கியம், இசை, நாட்டுப் புறக் கலைகள், தமிழ் ஆர்வலர்கள் மட்டுமே. (இவர்களும் கூட ஆங்காங்கே கொஞ்சம் ஆங்கிலச் சொற்களைத் தூவினால் நல்லது என்று நினைக்கிறார்கள்.) இவர்களை நேர்வு காண்கிறவர்களும் (இப்பொழுது இருப்பவர்கள் சற்று முயலுகிறார்கள்; இதற்கு முன்னே இருந்தவர்கள் அப்படி இல்லை), காலத்திற்குத் தகுந்தாற் போல் மாறிக் கொள்வார்கள். எதிரில் உள்ளவர் நல்ல தமிழில் பேசுகிறார் என்றால் இவர்கள் ஓரளவு நல்ல தமிழில் அன்று பேசுவார்கள். மீறியும் இவர்களின் பழக்கச் சோம்பலுக்கு உட்பட்டு அவ்வப்போது தமிங்கிலம் வந்து விடும். எதிரே உள்ளவர் தமிழில் பதிலிறுக்க, இவர்கள் இதழைக் கடித்துக் கொண்டு சிவனே என்று நல்ல தமிழுக்கு வருவார்கள். மாறாக எதிராளி தமிங்கிலக் காரர் என்றால், இவர்களுக்குக் கொண்டாட்டம் தான். மொத்தத்தில், இவர்களுக்கு நல்ல தமிழ் தெரியாது என்பது அல்ல. அது ஏதோ ஒரு தரக் குறைவு என்று நினைக்கிறார்கள். இது போல ஏகப் பட்ட தமிழ்த் தொலைக்காட்சி அறிவிப்பாளர்கள் நுனிநாக்கு ஆங்கிலம் பேசினால் சிறப்பு என்று நினைக்கிறார்கள். (தெனாலி படம் நினைவு வருகிறதா? கமல் இது போன்ற அறிவிப்பாளரைக் கிண்டல் அடிப்பார்.)

புதிதாக நிலாத் தொலைக் காட்சி என்று ஒன்று சில ஆண்டுகளுக்கு முன் வந்தது. நல்ல தமிழில் பேசக்கூடிய, தமிழ் நாட்டில் மிகவும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய ஒருவர் தான் அதைத் தொடங்கினார். (இப்பொழுது வாழ்வின் அலைக்கழிப்பில் அவர் நொய்ந்து போனார். வருத்தமாய் இருக்கிறது. உலகம் இது தான். இவர் இன்னொரு தொலைக்காட்சியில் சிறிய பொறுப்பில் இப்பொழுது உள்ளார்.) அவருடைய தொலைக் காட்சியில் ஒரு நிகழ்ச்சி. "யங் கேர்ள் உலகம்" . இவரால் மகளிர் உலகம் என்றோ, இளம்பெண் உலகம் என்றோ அழைக்க முடியும் தான். ஆனால், தமிழில் செய்தால் பணம் வராது என்று நினைத்தார் போலும். இவரைப் போல் தான் பலரும் நினைக்கிறார்கள். தமிழ், தமிழ் என்று சொல்லுவதெல்லாம் வெறும் அரசியல் மேடைகளுக்கு. (அந்தக் காலத்தில் எழுபதுகளில் ஈழத்துப் பாப்பிசை என்று ஒன்று உண்டு. அதில் ஒரு பாட்டு: "என் சின்ன மாமியே, உன் சின்ன மகளெங்கே, பள்ளிக்குச் சென்றோளோ, படிக்கச் சென்றாளோ" என்று வரும். இப்பொழுது தொலைக் காட்சியில் "சின்னப் பெண் உலகம்" என்று சொன்னால் பட்டிக்காட்டாகி விடுமோ? சிரிப்பு வருகிறது.)

அண்மையில் ஆனந்த விகடன் "Siரிப்பு Maமே Siரிப்பு" என்று கூடப் போட்டுப் பார்த்தது. ஒரு இரண்டு மூன்று வாரமாய் சிரிப்பு, மாமே சிரிப்பு என்று அச்சிடத் தொடங்கிவிட்டது. ஒரு காலத்தில் F என்ற எழுத்தை கால், கொக்கி, சுழி, கொண்டை, கொம்பு எல்லாம் போட்டுத் தமிழ் எழுத்து மாதிரியே ஒரு மாதம் பாவித்து துக்ளக் இதழ் வெளிவந்தது. அப்புறம் நிறுத்திக் கொண்டார்கள். அதே போல ஒரேயடியாய்த் தமிங்கிலம் பழகிய சுமி சூப்பர் மார்க்கெட் என்ற கல்கியி வெளிவந்த பகுதி ஒரு காலத்திற்கு அப்புறம் தமிங்கிலம் குறைத்து வெளியிடப் பட்டது. இவையெல்லாம் தமிங்கில எழுத்துக்கு விடப்பட்ட வெள்ளோட்டங்கள். வெள்ளோட்டம் தோல்வி போலிருக்கிறது. விட்டுவிட்டார்கள். ஆனாலும் முயல்வது நிற்கவில்லை.

மூன்றாவது கருத்தோட்டம்:

ஒரு முறை கல்கி எழுதிய "பொன்னியின் செல்வன்" என்ற புதினத்தை கூத்துப் பட்டறையின் நெறியாளர் முத்துச்சாமி, திரைப்பட நடிகர் நாசர், தஞ்சை மற்றும் புதுச்சேரிப் பல்கலைக் கழக நாடகத் துறையைச் சேர்ந்தவர்கள், இன்னும் செவ்வியல் நாடகத்தின் பற்றாளர்கள் எல்லோரும் சேர்ந்து வேள்வி போல எடுத்துக் கொண்டு 'magic lantern' என்ற அமைப்பின் வழி நாடகமாக்கினார்கள். அதன் அரங்கேற்றம் YMCA விளையாட்டுக் கல்லூரி திறந்த வெளி அரங்கில் ஒரு தடவை நடந்தது. அரங்க அமைப்பு: திரைப்படக் காரர் தோட்டாத் தரணி. கிட்டத் தட்ட 4 1/2 மணி நேர நாடகம். மிகச் சிறப்பான நாடகம் தான்.

அதை நானும் என் துணைவியும் ஒருமுறை பார்க்கப் போயிருந்தோம். கிட்டத்தட்ட 400 பேர் இருந்திருப்பார்கள். அதில் நூற்றுக்கு 60 அல்லது 70 விழுக்காடு, எங்களைச் சுற்றிலும் தமிங்கிலர் தான். கூடவே 'cell phone' கள். (அடேடே, நானே தமிங்கிலம் எழுதிவிட்டேன், பாருங்கள்; எல்லாம் பழக்கம் தான் :-)). ஆட்டம் தொடங்கிற்று. அறிவிப்பாளர், நாடகத்தை மேடையில் ஏற்ற உதவினவர்களுக்கு நன்றி சொல்லுகிறார்.

"Ladies and Gentlemen, First of all I would like to thank so-and-so- blah-blah etc.,etc.".

புரவலர்களாய் இருந்த கும்பணிக் காரர்களூக்கு நன்றி சொல்லும் வரை முற்றிலும் ஆங்கிலம் தான். எனக்கு அருகில் இருந்தவர் தன் மனைவியிடம் சொல்லுகிறார்: "What a good backdrop yaar; உங்க மாமா, what did he say? twenty six லக்ஷமா? தோட்டா தரணியா did this? Superb இல்லே?" - இப்படிச் சொந்தச் செய்திகளையும் நாடகத்தைப் பற்றியும் தமிங்கிலத்தில் கதைத்துக் கொண்டே இருக்கிறார். அவர்கள் பையன் convent ஆங்கிலத்தில் மட்டுமே அவர்களோடு பேசுகிறான். தாயும் தகப்பனும் தமிங்கலத்தில் சம்பாஷிக்கிறார்கள்.

அது ஒரு விந்தையான வித்தை. ஏதோ கழைக்கூத்தாடி போல ஆங்கிலம் - தமிங்கிலம் என மாறி மாறி தாவிக் கொண்டே இருந்தால், சிந்தனையே குழப்பமாகிப் போகாதா? இவர்கள் எப்படிச் செய்கிறார்கள்? - ஏதிலார் என்று சங்க இலக்கியத்தில் சொல்லுவார்கள். இந்தத் தமிங்கிலக் காரர்கள் எந்த மண்ணோடு வருங்காலத்தில் தம்மை இறுத்திக் கொள்வார்கள்? தஞ்சாவூரா? திருநெல்வேலியா? சேலமா? சென்னையா? மும்பையா? தில்லியா? இல்லை Houston - ஆ? (ஈழத்தில் இருந்து புலம் பெயர்ந்தவர்களும் இந்தக் கதிக்கு வந்து சேரலாம். அது அவர்களின் கவனத்தைப் பொறுத்தது.) இதே போன்ற ஒரு காட்சியை எண்பதின் தொடக்கத்தில் Montreal -ல் இருந்த போது பார்த்திருக்கிறேன். தந்தை ஒரு பேராசிரியர். தாய் இல்லத்தரசி. மைலாப்பூர் அவர்களுக்குச் சொந்த ஊர். அவர்களுக்கு சந்தியா வந்தனமும் வேண்டும்; லால்குடி செயராமனின் கின்னரி இசையும் வேண்டும்; தமிழ்த் திரைப்படம், அரசியல் - எம்.சி.யார்/கருணாநிதி சண்டையும் - தெரிய வேண்டும். கணவனும் மனைவியும் தமிழ்-தமிங்கிலத்தில் பேசிக் கொள்வார்கள். பெண்ணும் (அப்போது 16 அகவை), பிள்ளையும் ( அப்போது 9அகவை) தங்களுக்குள்ளும், பெற்றோரிடத்தும் ஆங்கிலத்திலே பேசிக் கொள்வார்கள். (இந்தக் குடும்பத்தின் பிற்காலச் சிக்கலான முடிவை இன்று சொல்ல வேண்டாம்.) ஓரிரு முறை அவர்கள் வீட்டிற்கு விருந்துக்குப் போன போது வியந்தது உண்டு. இது எப்படி இயல்கிறது?

என்ன, கிட்டத்தட்ட 25 ஆண்டுகளுக்கு முன் இந்த நடைமுறையை வெளிநாட்டில் பார்த்தேன். வேடிக்கை என்று அப்போது நினைத்தேன். அது விரைவில் எதிர்காலமாகும், தமிழ்நாட்டிலேயே வந்து சேரும் என்று அப்போது தோன்றவில்லை. இப்பொழுது, என்னைச் சுற்றிலும் சென்னையிலேயே பார்க்கிறேன். வருக்கச் சூழலுக்குத் தக்க ஆங்காங்கு இந்தப் பழக்கம் விரவி யிருக்கிறது. இரண்டுங்கெட்டான் ஆன நடு வகுப்பில் இது உச்ச கட்ட நிலையில் இருக்கிறது. இவர்களால் தமிழைத் தொலைக்கவும் முடியவில்லை, பழகவும் முடியவில்லை. நாம் எங்கே போய்க்கொண்டிருக்கிறோம்?

பார்த்தீர்களா? நாடகம் பற்றியல்லவா சொல்லிக் கொண்டிருந்தேன். பக்கத்தில் இருந்த நான் ஒவ்வொரு முறையும் நாடக மேடையைப் பார்க்க வேண்டும் என்று முயற்சி செய்து பார்த்தேன்; ஆனால் அருகில் உள்ளவர்களின் தமிங்கிலக் கலைப்பு அவ்வப் பொழுது எங்களைக் கவனிக்க விட மாட்டேன் என்றது.

ஒரு கணம் எண்ணிப் பார்த்தேன். அந்த அறிவிப்பாளர் ஏன் அப்படி ஆங்கிலத்தில் அறிவிப்புச் செய்தார்? நடப்பதென்னவோ தமிழக வரலாற்றைப் பற்றிய கதை. அதை எழுதியதும் தமிழ் ஆசிரியர். அதை நாடகமாக உருவாக்கியதும் தமிழர்கள் தான். பார்ப்பது மட்டும் தமிங்கிலர் என்பதால் அவருக்கு ஒரு தயக்கம் வந்து விட்டதோ? இதைக் குழப்பம் என்று சொல்லுவதா? அடிமைத்தனம் என்று சொல்லுவதா? மோகம் என்று சொல்லுவதா?

இது இன்றைக்கு இசைக் கச்சேரிகளிலும் நடைபெறுகிறது. கேட்டால் கருநாடக இசை என்பது தமிழர்களுக்கு மட்டும் உரியது இல்லையாம். நாம் குறுகிய மொழி மனப்பான்மையில் இருந்து வெளியே வரவேண்டுமாம். மண்ணாங் கட்டி. சென்னையில் இருக்கும் பிறமொழி நடுவக்காரரும் தேவை காரணமாய்த் தமிழ் கற்றுத்தான் இருக்கிறார்கள். (அவர்களுடைய வேலைக்காரரிடம், காய்கறிக்காரியிடம், மளிகைக் கடைக்காரரிடம் பேசவேண்டுமே, எந்த சௌகார்ப்பேட்டை மார்வாடியும், ராயலசீமா நாயுடுகாரும் தமிழ் கற்றுக் கொண்டு தான் இருக்கிறார்கள்.) இருந்தாலும் மேடையில் அமர்ந்திருக்கும் புகழ் பெற்ற பாடகி ஆங்கிலத்தில், தான் என்ன பாடுகிறோம் என்று முன்னுரை கொடுப்பார். அப்புறம் தெலுங்கில் பாடுவார். முடியும் போது கொஞ்சணூண்டு தமிழில் பாடுவார்.

தமிழகத்தில் நிலவும் வட்டார நடைகளில் எனக்கு மிகவும் ஆர்வமுண்டு. பெரும்பாலும் ஒருவர் தமிழ் பேசும் தோரணையை வைத்து அவர் எந்தப் பக்கத்துக்காரர் என்று பெரும்பாலும் சொல்லிவிடுவேன். இந்தத் தமிங்கிலம் மட்டும் படிய மாட்டேன் என்கிறது. நான் தவறி விடுகிறேன். இந்தத் தமிங்கிலத்தை வாழ வைத்தவர்கள் யார்? வாழ வைக்கிறவர்கள் யார்? திராவிடக் கழகங்களே தடுமாறி தமிங்கிலத்திற்கு உறுதுணையாகிறார்களே, ஏன்? (இது பெரிய கதை. இதைச் சொல்லத் தொடங்கினால் நம் நாடித் துடிப்பு எகிறிவிடும். வேண்டாம் தவிர்த்து விடுகிறேன். மொத்தத்தில் ஏமாந்து போனோம்.)

அன்புடன்,
இராம.கி.

In TSCII:

ãýÚ ¸Õò§¾¡ð¼í¸û

¾Á¢í¸¢Äõ ÀüȢ ´ý§È¡¦¼¡ýÚ ´ðÊ ãýÚ ¸Õò§¾¡ð¼í¸¨Ç ¯í¸§Ç¡Î À¸¢÷óÐ ¦¸¡ûÙ¸¢§Èý.

Ó¾ø ¸Õò§¾¡ð¼õ:

´Õ ºÁÂõ ¬Éó¾ Å¢¸¼É¢ø, ´Õ ÐÏìÌî ¦ºö¾¢Â¢ø ¸£úì¸ñ¼¨¾ô À¡÷ò§¾ý.
------------------------------------------------------------------------
"¨ºÅ º¢ò¾¡ó¾ áüÀ¾¢ôÒì ¸Æ¸ ŢơŢø, ¦ºý¨Éô Àø¸¨Äì ¸Æ¸ò Ш½§Åó¾÷ ¦À¡ü§¸¡ ÜÈ¢ÂÐ:

¦¾¡ø¸¡ôÀ¢Â÷ ¸¡Äò¾¢ø þÕó§¾ ¾Á¢ØìÌõ, À¢È ¦Á¡Æ¢¸ÙìÌõ ¦¾¡¼÷Ò þÕó¾¢Õ츢ÈÐ. ±ò¾¨É§Â¡ ¦Á¡Æ¢ì¸¡Ã÷¸û þó¾ ¿¡ð¨¼ ¬ñÊÕ츢ȡ÷¸û. «Å÷¸û ¡էÁ ¾í¸û ¦Á¡Æ¢¨Âô ÀÊì¸î ¦º¡øÄ¢ ¿õ¨Áì ¸ð¼¡Âô ÀÎò¾ Å¢ø¨Ä. ¦Åû¨Ç측Ãý ¸¡Äò¾¢ø ܼ, ¾Á¢ú¿¡ðÎìÌ «ÛôÀô Àð¼ ¸¦Äì¼ÕìÌ þí¸¢Ä¡ó¾¢§Ä ¾Á¢ú ¸üÚì ¦¸¡ÎòÐò ¾¡ý «ÛôÀ¢¨Åò¾¡÷¸û. ¬É¡ø ¿õÁÅ÷¸§Ç ¿õÁÅ÷¸¨Ç ¬Çò ¦¾¡¼í¸¢Â À¢È̾¡ý ¬í¸¢Äò¨¾ô ÀÊì¸ì ¸ð¼¡ÂôÀÎò¾ô À𧼡õ.

¾Á¢Æ¢ø ´Õ ¸Ê¾õ ±Ø¾¢É¡ø, «¾¢ø ²¾¡ÅÐ ¾ÅÚ þÕ츢Ⱦ¡ ±ýÚ Â¡Ã¢¼Óõ ¸¡ðΞ¢ø¨Ä. ¬í¸¢Äò¾¢ø ±Ø¾¢É¡ø ÀòÐ §Àâ¼Á¡ÅÐ ¸¡ðθ¢§È¡õ. ¬í¸¢Äò¾¢ø ¾ÅÚ ²üÀðÎÅ¢¼ì ܼ¡Ð ±ýÈ «Ç×ìÌô Àì¾¢ ¿ÁìÌ."
----------------------------------------------------------------------------
þÉ¢ þáÁ.¸¢:

þÐ ±ôÀÊ þÕìÌ? ¬í¸¢Äõ §Àº, ±Ø¾ ¿ÁìÌ 'Wren and Martin' §ÅñÎõ. þó¾¢ ¦Á¡Æ¢ §Àº ¬÷Åò§¾¡Î 'Rashtra Bhasha Bothana" §¾Î§Å¡õ. ¬É¡ø, ¾Á¢ØìÌ ÁðÎõ, '¾Á¢ø ¾¡§É' ±ýÈ¡ø ±ôÀÊ?

"þýÉ¡À¡, ¬ŠÀ¢ð¼ø§Ä ÅîÍ þïºì‰ý §À¡ð¼¡ñÊ þÅÕ ¦À¡úÕ, «ôÀ¡§Ä §¸Í ¼ùðÎò¾¡ý, þìÌõ",

"±ýÉ¡ ¦º¡øÈ¢í¸ Á¡Á¢, «Å¡ «ôÀʧ §À„¢ñ§¼ þÕó¾¡, I can not bear that, ¿¡Ûõ modern girl ¾¡§É, «Å¡ feel ÀñÏÉ¡ Àñ½ðÎõ, I don't care".

¿¡ý þôÀÊì ÌÓ¸ò¾¢ø ¦Åù§ÅÚ ¬ð¸¨Ç ¨ÅòÐ ¯¨Ã¡¼ø ±Ø¾¢ì ¦¸¡ñ§¼ §À¡¸Ä¡õ. ¬É¡ø ¦ºö¾¢ ´ýÚ ¾¡ý. ±íÌ À¡÷ò¾¡Öõ ÓÊ¡Ð, ÓÊ¡Р±ýÚ ¦Á¡Æ¢Â¢ø ´Õ ¾¡ú× ÁÉôÀ¡ý¨Á. ¬í¸¢Äõ °ÎÚŢɡø ¾¡ý, ¿õ¨Á ÁüÈÅ÷ Á¾¢ôÀ¡÷¸û ±ýÚ 100ìÌ 99 §À÷ ±ñϸ¢§È¡õ. þôÀÊî ¦ºöŨ¾ô ÀÄÕõ ´òÐì ¦¸¡ñ§¼ §À¡¸¢§È¡õ. «¾ý Å¢¨Ç× ¾¡ý ¾Á¢í¸¢Äõ. ¿ÁìÌû þÕôÀÐ «Ç×ìÌ Á£È¢Â ¦À¡Ú¨Á¡? ÌÊ ¯Ã¢¨Á¡? þôÀÊò ¾¡ý§¾¡ýÈ¢ò ¾ÉÁ¡¸ ¬í¸¢Äò¾¢ø §Àº¢É¡ø, ±Ø¾¢É¡ø ¬í¸¢Ä Á¢¨¼Âò¾¡÷ ¦À¡ÚòÐì ¦¸¡ûÅ¡÷¸Ç¡? «¨¾ò ¾ýÉ¢¨Äô ÀÎòÐÅ¡÷¸Ç¡? ¦Á¡ò¾ò¾¢ø þÐ ±ÎÀÎÁ¡? 100ìÌ 5 §ÁÉ¢ ¾Á¢úî ¦º¡ü¸¨Çô §À¡ðÎ þóÐ ¿¡Ç¢¾ØìÌ ´Õ ¸ðΨà ±Ø¾¢ô À¡÷ì¸ðΧÁ? «¨¾ þóÐ ²üÌÁ¡? ¾ûÙÁ¡? [¾Á¢í¸Äõ ÀüȢ ¯¨Ã¡¼ÖìÌ ¿ÎÅ¢ø þ¨¾Ôõ ±ñ½¢ô À¡÷ì¸Ä¡õ ±ýÚ §¾¡ýÈ¢ÂÐ. ¾Á¢Æ¢ø ¬í¸¢Äò¨¾ì ¸ÄóÐ §ÀÍŨ¾ò ¾Á¢í¸¢Äõ ±ýÚ ¦º¡øÖ¸¢§È¡õ. þ§¾ §À¡ø ¬í¸¢Äò¾¢ø ¾Á¢ú ¸ÄóÐ §Àº¢É¡ø «¾üÌ ±ýÉ ¦ÀÂ÷? tanglish - ¬?)]

(ÌÈ¢ôÒ: ¬í¸¢Äò¨¾ ´Õ ¦Á¡Æ¢¦ÂÉô ÀÊì¸ì ¸ð¼¡Âô ÀÎò¾¢ÂÐ ±ÉìÌî ºÃ¢ ±ýÚ ¾¡ý Àθ¢ÈÐ.)

þÉ¢ þý¦É¡Õ ¸Õò§¾¡ð¼õ:

ÝâÂò ¦¾¡¨Äì ¸¡ðº¢Â¢ø "Žì¸õ ¾Á¢Æ¸õ" ±ý¦È¡Õ ¿¢¸ú. þ¾¢ø "º¢ÈôÒ Å¢Õó¾¢É÷" ±ýÚ ´Õ À̾¢. þ¾¢ø ÀÊôÀ¡Ç¢¸û ¾Á¢í¸¢Äõ §Àº¢§Â ¾¢¨Ç츢ȡ÷¸û. ¿øÄ ¾Á¢ú §Àº§ÅñÎõ ±ýÚ §Àº Å¢¨Ç¸¢ÈÅ÷¸û Á¢¸î º¢Ä§Ã. ¦ÀÕõÀ¡Öõ «Å÷¸û ¾Á¢ú þÄ츢Âõ, þ¨º, ¿¡ðÎô ÒÈì ¸¨Ä¸û, ¾Á¢ú ¬÷ÅÄ÷¸û ÁðΧÁ. (þÅ÷¸Ùõ ܼ ¬í¸¡í§¸ ¦¸¡ïºõ ¬í¸¢Äî ¦º¡ü¸¨Çò àŢɡø ¿øÄÐ ±ýÚ ¿¢¨É츢ȡ÷¸û.) þÅ÷¸¨Ç §¿÷× ¸¡ñ¸¢ÈÅ÷¸Ùõ (þô¦À¡ØÐ þÕôÀÅ÷¸û ºüÚ ÓÂÖ¸¢È¡÷¸û; þ¾üÌ Óý§É þÕó¾Å÷¸û «ôÀÊ þø¨Ä), ¸¡Äò¾¢üÌò ¾Ìó¾¡ü §À¡ø Á¡È¢ì ¦¸¡ûÅ¡÷¸û. ±¾¢Ã¢ø ¯ûÇÅ÷ ¿øÄ ¾Á¢Æ¢ø §À͸¢È¡÷ ±ýÈ¡ø þÅ÷¸û µÃÇ× ¿øÄ ¾Á¢Æ¢ø «ýÚ §ÀÍÅ¡÷¸û. Á£È¢Ôõ þÅ÷¸Ç¢ý ÀÆì¸î §º¡õÀÖìÌ ¯ðÀðÎ «ùÅô§À¡Ð ¾Á¢í¸¢Äõ ÅóРŢÎõ. ±¾¢§Ã ¯ûÇÅ÷ ¾Á¢Æ¢ø À¾¢Ä¢Úì¸, þÅ÷¸û þ¾¨Æì ¸ÊòÐì ¦¸¡ñÎ º¢Å§É ±ýÚ ¿øÄ ¾Á¢ØìÌ ÅÕÅ¡÷¸û. Á¡È¡¸ ±¾¢Ã¡Ç¢ ¾Á¢í¸¢Äì ¸¡Ã÷ ±ýÈ¡ø, þÅ÷¸ÙìÌì ¦¸¡ñ¼¡ð¼õ ¾¡ý. ¦Á¡ò¾ò¾¢ø, þÅ÷¸ÙìÌ ¿øÄ ¾Á¢ú ¦¾Ã¢Â¡Ð ±ýÀÐ «øÄ. «Ð ²§¾¡ ´Õ ¾Ãì ̨È× ±ýÚ ¿¢¨É츢ȡ÷¸û. þÐ §À¡Ä ²¸ô Àð¼ ¾Á¢úò ¦¾¡¨Ä측𺢠«È¢Å¢ôÀ¡Ç÷¸û ÑÉ¢¿¡ìÌ ¬í¸¢Äõ §Àº¢É¡ø º¢ÈôÒ ±ýÚ ¿¢¨É츢ȡ÷¸û. (¦¾É¡Ä¢ À¼õ ¿¢¨É× ÅÕ¸¢È¾¡? ¸Áø þÐ §À¡ýÈ «È¢Å¢ôÀ¡Ç¨Ãì ¸¢ñ¼ø «ÊôÀ¡÷.)

Ò¾¢¾¡¸ ¿¢Ä¡ò ¦¾¡¨Äì ¸¡ðº¢ ±ýÚ ´ýÚ º¢Ä ¬ñθÙìÌ Óý Åó¾Ð. ¿øÄ ¾Á¢Æ¢ø §ÀºìÜÊÂ, ¾Á¢ú ¿¡ðÊø Á¢¸×õ ±¾¢÷À¡÷ô¨À ²üÀÎò¾¢Â ´ÕÅ÷ ¾¡ý «¨¾ò ¦¾¡¼í¸¢É¡÷. (þô¦À¡ØÐ Å¡úÅ¢ý «¨Äì¸Æ¢ôÀ¢ø «Å÷ ¦¿¡öóÐ §À¡É¡÷. ÅÕò¾Á¡ö þÕ츢ÈÐ. ¯Ä¸õ þÐ ¾¡ý. þÅ÷ þý¦É¡Õ ¦¾¡¨Ä측ðº¢Â¢ø º¢È¢Â ¦À¡ÚôÀ¢ø þô¦À¡ØÐ ¯ûÇ¡÷.) «ÅÕ¨¼Â ¦¾¡¨Äì ¸¡ðº¢Â¢ø ´Õ ¿¢¸ú. "Âí §¸÷û ¯Ä¸õ" . þÅáø Á¸Ç¢÷ ¯Ä¸õ ±ý§È¡, þÇõ¦Àñ ¯Ä¸õ ±ý§È¡ «¨Æì¸ ÓÊÔõ ¾¡ý. ¬É¡ø, ¾Á¢Æ¢ø ¦ºö¾¡ø À½õ ÅáР±ýÚ ¿¢¨Éò¾¡÷ §À¡Öõ. þŨÃô §À¡ø ¾¡ý ÀÄÕõ ¿¢¨É츢ȡ÷¸û. ¾Á¢ú, ¾Á¢ú ±ýÚ ¦º¡øÖŦ¾øÄ¡õ ¦ÅÚõ «Ãº¢Âø §Á¨¼¸ÙìÌ. («ó¾ì ¸¡Äò¾¢ø ±ØÀиǢø ®ÆòÐô À¡ôÀ¢¨º ±ýÚ ´ýÚ ¯ñÎ. «¾¢ø ´Õ À¡ðÎ: "±ý º¢ýÉ Á¡Á¢§Â, ¯ý º¢ýÉ Á¸¦Çí§¸, ÀûÇ¢ìÌî ¦ºý§È¡§Ç¡, ÀÊì¸î ¦ºýÈ¡§Ç¡" ±ýÚ ÅÕõ. þô¦À¡ØÐ ¦¾¡¨Äì ¸¡ðº¢Â¢ø "º¢ýÉô ¦Àñ ¯Ä¸õ" ±ýÚ ¦º¡ýÉ¡ø ÀðÊ측𼡸¢ ŢΧÁ¡? º¢Ã¢ôÒ ÅÕ¸¢ÈÐ.)

«ñ¨Á¢ø ¬Éó¾ Å¢¸¼ý "SiâôÒ Ma§Á SiâôÒ" ±ýÚ Ü¼ô §À¡ðÎô À¡÷ò¾Ð. ´Õ þÃñÎ ãýÚ Å¡ÃÁ¡ö º¢Ã¢ôÒ, Á¡§Á º¢Ã¢ôÒ ±ýÚ «îº¢¼ò ¦¾¡¼í¸¢Å¢ð¼Ð. ´Õ ¸¡Äò¾¢ø F ±ýÈ ±Øò¨¾ ¸¡ø, ¦¸¡ì¸¢, ÍÆ¢, ¦¸¡ñ¨¼, ¦¸¡õÒ ±øÄ¡õ §À¡ðÎò ¾Á¢ú ±ØòÐ Á¡¾¢Ã¢§Â ´Õ Á¡¾õ À¡Å¢òÐ ÐìÇì þ¾ú ¦ÅÇ¢Åó¾Ð. «ôÒÈõ ¿¢Úò¾¢ì ¦¸¡ñ¼¡÷¸û. «§¾ §À¡Ä ´§ÃÂÊ¡öò ¾Á¢í¸¢Äõ ÀƸ¢Â ÍÁ¢ ÝôÀ÷ Á¡÷즸ð ±ýÈ ¸ø¸¢Â¢ ¦ÅÇ¢Åó¾ À̾¢ ´Õ ¸¡Äò¾¢üÌ «ôÒÈõ ¾Á¢í¸¢Äõ ̨ÈòÐ ¦ÅǢ¢¼ô Àð¼Ð. þ¨Å¦ÂøÄ¡õ ¾Á¢í¸¢Ä ±ØòÐìÌ Å¢¼ôÀð¼ ¦Åû§Ç¡ð¼í¸û. ¦Åû§Ç¡ð¼õ §¾¡øÅ¢ §À¡Ä¢Õ츢ÈÐ. Å¢ðÎÅ¢ð¼¡÷¸û. ¬É¡Öõ ÓÂøÅÐ ¿¢ü¸Å¢ø¨Ä.

ãýÈ¡ÅÐ ¸Õò§¾¡ð¼õ:

´Õ Ó¨È ¸ø¸¢ ±Ø¾¢Â "¦À¡ýɢ¢ý ¦ºøÅý" ±ýÈ Ò¾¢Éò¨¾ ÜòÐô Àð¼¨È¢ý ¦¿È¢Â¡Ç÷ ÓòÐÁ¢, ¾¢¨ÃôÀ¼ ¿Ê¸÷ ¿¡º÷, ¾ï¨º ÁüÚõ ÒÐâô Àø¸¨Äì ¸Æ¸ ¿¡¼¸ò ШȨÂî §º÷ó¾Å÷¸û, þýÛõ ¦ºùÅ¢Âø ¿¡¼¸ò¾¢ý ÀüÈ¡Ç÷¸û ±ø§Ä¡Õõ §º÷óÐ §ÅûÅ¢ §À¡Ä ±ÎòÐì ¦¸¡ñÎ 'magic lantern' ±ýÈ «¨ÁôÀ¢ý ÅÆ¢ ¿¡¼¸Á¡ì¸¢É¡÷¸û. «¾ý «Ãí§¸üÈõ YMCA Å¢¨Ç¡ðÎì ¸øæâ ¾¢Èó¾ ¦ÅÇ¢ «Ãí¸¢ø ´Õ ¾¼¨Å ¿¼ó¾Ð. «Ãí¸ «¨ÁôÒ: ¾¢¨ÃôÀ¼ì ¸¡Ã÷ §¾¡ð¼¡ò ¾Ã½¢. ¸¢ð¼ò ¾ð¼ 4 1/2 Á½¢ §¿Ã ¿¡¼¸õ. Á¢¸î º¢ÈôÀ¡É ¿¡¼¸õ ¾¡ý.

«¨¾ ¿¡Ûõ ±ý Ш½Å¢Ôõ ´ÕÓ¨È À¡÷ì¸ô §À¡Â¢Õ󧾡õ. ¸¢ð¼ò¾ð¼ 400 §À÷ þÕó¾¢ÕôÀ¡÷¸û. «¾¢ø áüÚìÌ 60 «øÄÐ 70 Å¢Ø측Î, ±í¸¨Çî ÍüÈ¢Öõ ¾Á¢í¸¢Ä÷ ¾¡ý. ܼ§Å 'cell phone' ¸û. («§¼§¼, ¿¡§É ¾Á¢í¸¢Äõ ±Ø¾¢Å¢ð§¼ý, À¡Õí¸û; ±øÄ¡õ ÀÆì¸õ ¾¡ý :-)). ¬ð¼õ ¦¾¡¼í¸¢üÚ. «È¢Å¢ôÀ¡Ç÷, ¿¡¼¸ò¨¾ §Á¨¼Â¢ø ²üÈ ¯¾Å¢ÉÅ÷¸ÙìÌ ¿ýÈ¢ ¦º¡øÖ¸¢È¡÷.

"Ladies and Gentlemen, First of all I would like to thank so-and-so- blah-blah etc.,etc.".

ÒÃÅÄ÷¸Ç¡ö þÕó¾ ÌõÀ½¢ì ¸¡Ã÷¸éìÌ ¿ýÈ¢ ¦º¡øÖõ Ũà ÓüÈ¢Öõ ¬í¸¢Äõ ¾¡ý. ±ÉìÌ «Õ¸¢ø þÕó¾Å÷ ¾ý Á¨ÉŢ¢¼õ ¦º¡øÖ¸¢È¡÷: "What a good backdrop yaar; ¯í¸ Á¡Á¡, what did he say? twenty six ćÁ¡? §¾¡ð¼¡ ¾Ã½¢Â¡ did this? Superb þø§Ä?" - þôÀÊî ¦º¡ó¾î ¦ºö¾¢¸¨ÇÔõ ¿¡¼¸ò¨¾ô ÀüÈ¢Ôõ ¾Á¢í¸¢Äò¾¢ø ¸¨¾òÐì ¦¸¡ñ§¼ þÕ츢ȡ÷. «Å÷¸û ¨ÀÂý convent ¬í¸¢Äò¾¢ø ÁðΧÁ «Å÷¸§Ç¡Î §À͸¢È¡ý. ¾¡Ôõ ¾¸ôÀÛõ ¾Á¢í¸Äò¾¢ø ºõÀ¡„¢ì¸¢È¡÷¸û.

«Ð ´Õ Å¢ó¨¾Â¡É Å¢ò¨¾. ²§¾¡ ¸¨ÆìÜò¾¡Ê §À¡Ä ¬í¸¢Äõ - ¾Á¢í¸¢Äõ ±É Á¡È¢ Á¡È¢ ¾¡Å¢ì ¦¸¡ñ§¼ þÕó¾¡ø, º¢ó¾¨É§Â ÌÆôÀÁ¡¸¢ô §À¡¸¡¾¡? þÅ÷¸û ±ôÀÊî ¦ºö¸¢È¡÷¸û? - ²¾¢Ä¡÷ ±ýÚ ºí¸ þÄ츢Âò¾¢ø ¦º¡øÖÅ¡÷¸û. þó¾ò ¾Á¢í¸¢Äì ¸¡Ã÷¸û ±ó¾ Áñ§½¡Î ÅÕí¸¡Äò¾¢ø ¾õ¨Á þÚò¾¢ì ¦¸¡ûÅ¡÷¸û? ¾ïº¡çá? ¾¢Õ¦¿ø§ÅĢ¡? §ºÄÁ¡? ¦ºý¨É¡? Óõ¨À¡? ¾¢øĢ¡? þø¨Ä Houston - ¬? (®Æò¾¢ø þÕóÐ ÒÄõ ¦ÀÂ÷ó¾Å÷¸Ùõ þó¾ì ¸¾¢ìÌ ÅóÐ §ºÃÄ¡õ. «Ð «Å÷¸Ç¢ý ¸ÅÉò¨¾ô ¦À¡Úò¾Ð.) þ§¾ §À¡ýÈ ´Õ ¸¡ðº¢¨Â ±ñÀ¾¢ý ¦¾¡¼ì¸ò¾¢ø Montreal -ø þÕó¾ §À¡Ð À¡÷ò¾¢Õ츢§Èý. ¾ó¨¾ ´Õ §ÀẢâÂ÷. ¾¡ö þøÄò¾Ãº¢. ¨ÁÄ¡ôâ÷ «Å÷¸ÙìÌî ¦º¡ó¾ °÷. «Å÷¸ÙìÌ ºó¾¢Â¡ Åó¾ÉÓõ §ÅñÎõ; Ä¡øÌÊ ¦ºÂáÁÉ¢ý ¸¢ýÉâ þ¨ºÔõ §ÅñÎõ; ¾Á¢úò ¾¢¨ÃôÀ¼õ, «Ãº¢Âø - ±õ.º¢.¡÷/¸Õ½¡¿¢¾¢ ºñ¨¼Ôõ - ¦¾Ã¢Â §ÅñÎõ. ¸½ÅÛõ Á¨ÉÅ¢Ôõ ¾Á¢ú-¾Á¢í¸¢Äò¾¢ø §Àº¢ì ¦¸¡ûÅ¡÷¸û. ¦ÀñÏõ («ô§À¡Ð 16 «¸¨Å), À¢û¨ÇÔõ ( «ô§À¡Ð 9«¸¨Å) ¾í¸ÙìÌûÙõ, ¦Àü§È¡Ã¢¼òÐõ ¬í¸¢Äò¾¢§Ä §Àº¢ì ¦¸¡ûÅ¡÷¸û. (þó¾ì ÌÎõÀò¾¢ý À¢ü¸¡Äî º¢ì¸Ä¡É ÓʨŠþýÚ ¦º¡øÄ §Åñ¼¡õ.) µÃ¢Õ Ó¨È «Å÷¸û Å£ðÊüÌ Å¢ÕóÐìÌô §À¡É §À¡Ð Å¢Âó¾Ð ¯ñÎ. þÐ ±ôÀÊ þÂø¸¢ÈÐ?

±ýÉ, ¸¢ð¼ò¾ð¼ 25 ¬ñθÙìÌ Óý þó¾ ¿¨¼Ó¨È¨Â ¦ÅÇ¢¿¡ðÊø À¡÷ò§¾ý. §ÅÊ쨸 ±ýÚ «ô§À¡Ð ¿¢¨Éò§¾ý. «Ð Å¢¨ÃÅ¢ø ±¾¢÷¸¡ÄÁ¡Ìõ, ¾Á¢ú¿¡ðʧħ ÅóÐ §ºÕõ ±ýÚ «ô§À¡Ð §¾¡ýÈÅ¢ø¨Ä. þô¦À¡ØÐ, ±ý¨Éî ÍüÈ¢Öõ ¦ºý¨É¢§Ä§Â À¡÷츢§Èý. ÅÕì¸î ÝÆÖìÌò ¾ì¸ ¬í¸¡íÌ þó¾ô ÀÆì¸õ Å¢ÃÅ¢ ¢Õ츢ÈÐ. þÃñÎí¦¸ð¼¡ý ¬É ¿Î ÅÌôÀ¢ø þÐ ¯îº ¸ð¼ ¿¢¨Ä¢ø þÕ츢ÈÐ. þÅ÷¸Ç¡ø ¾Á¢¨Æò ¦¾¡¨Äì¸×õ ÓÊÂÅ¢ø¨Ä, ÀƸ×õ ÓÊÂÅ¢ø¨Ä. ¿¡õ ±í§¸ §À¡ö즸¡ñÊÕ츢§È¡õ?

À¡÷ò¾£÷¸Ç¡? ¿¡¼¸õ ÀüÈ¢ÂøÄÅ¡ ¦º¡øÄ¢ì ¦¸¡ñÊÕó§¾ý. Àì¸ò¾¢ø þÕó¾ ¿¡ý ´ù¦Å¡Õ Ó¨ÈÔõ ¿¡¼¸ §Á¨¼¨Âô À¡÷ì¸ §ÅñÎõ ±ýÚ ÓÂüº¢ ¦ºöÐ À¡÷ò§¾ý; ¬É¡ø «Õ¸¢ø ¯ûÇÅ÷¸Ç¢ý ¾Á¢í¸¢Äì ¸¨ÄôÒ «ùÅô ¦À¡ØÐ ±í¸¨Çì ¸ÅÉ¢ì¸ Å¢¼ Á¡ð§¼ý ±ýÈÐ.

´Õ ¸½õ ±ñ½¢ô À¡÷ò§¾ý. «ó¾ «È¢Å¢ôÀ¡Ç÷ ²ý «ôÀÊ ¬í¸¢Äò¾¢ø «È¢Å¢ôÒî ¦ºö¾¡÷? ¿¼ôÀ¦¾ýɧš ¾Á¢Æ¸ ÅÃÄ¡ü¨Èô ÀüȢ ¸¨¾. «¨¾ ±Ø¾¢ÂÐõ ¾Á¢ú ¬º¢Ã¢Â÷. «¨¾ ¿¡¼¸Á¡¸ ¯Õš츢ÂÐõ ¾Á¢Æ÷¸û ¾¡ý. À¡÷ôÀÐ ÁðÎõ ¾Á¢í¸¢Ä÷ ±ýÀ¾¡ø «ÅÕìÌ ´Õ ¾Âì¸õ ÅóРŢ𼧾¡? þ¨¾ì ÌÆôÀõ ±ýÚ ¦º¡øÖž¡? «Ê¨Áò¾Éõ ±ýÚ ¦º¡øÖž¡? §Á¡¸õ ±ýÚ ¦º¡øÖž¡?

þÐ þý¨ÈìÌ þ¨ºì ¸î§ºÃ¢¸Ç¢Öõ ¿¨¼¦ÀÚ¸¢ÈÐ. §¸ð¼¡ø ¸Õ¿¡¼¸ þ¨º ±ýÀÐ ¾Á¢Æ÷¸ÙìÌ ÁðÎõ ¯Ã¢ÂÐ þø¨Ä¡õ. ¿¡õ ÌÚ¸¢Â ¦Á¡Æ¢ ÁÉôÀ¡ý¨Á¢ø þÕóÐ ¦ÅÇ¢§Â ÅçÅñÎÁ¡õ. Áñ½¡í ¸ðÊ. ¦ºý¨É¢ø þÕìÌõ À¢È¦Á¡Æ¢ ¿ÎÅ측ÃÕõ §¾¨Å ¸¡Ã½Á¡öò ¾Á¢ú ¸üÚò¾¡ý þÕ츢ȡ÷¸û. («Å÷¸Ù¨¼Â §Å¨Ä측Ãâ¼õ, ¸¡ö¸È¢ì¸¡Ã¢Â¢¼õ, ÁÇ¢¨¸ì ¸¨¼ì¸¡Ãâ¼õ §Àº§ÅñΧÁ, ±ó¾ ¦ºª¸¡÷ô§À𨼠Á¡÷Å¡ÊÔõ, áÂĺ£Á¡ ¿¡Ôθ¡Õõ ¾Á¢ú ¸üÚì ¦¸¡ñÎ ¾¡ý þÕ츢ȡ÷¸û.) þÕó¾¡Öõ §Á¨¼Â¢ø «Á÷ó¾¢ÕìÌõ Ò¸ú ¦ÀüÈ À¡¼¸¢ ¬í¸¢Äò¾¢ø, ¾¡ý ±ýÉ À¡Î¸¢§È¡õ ±ýÚ Óýۨà ¦¸¡ÎôÀ¡÷. «ôÒÈõ ¦¾Öí¸¢ø À¡ÎÅ¡÷. ÓÊÔõ §À¡Ð ¦¸¡ïºßñÎ ¾Á¢Æ¢ø À¡ÎÅ¡÷.

¾Á¢Æ¸ò¾¢ø ¿¢Ä×õ Åð¼¡Ã ¿¨¼¸Ç¢ø ±ÉìÌ Á¢¸×õ ¬÷ÅÓñÎ. ¦ÀÕõÀ¡Öõ ´ÕÅ÷ ¾Á¢ú §ÀÍõ §¾¡Ã¨½¨Â ¨ÅòÐ «Å÷ ±ó¾ô Àì¸òÐ측Ã÷ ±ýÚ ¦ÀÕõÀ¡Öõ ¦º¡øĢŢΧÅý. þó¾ò ¾Á¢í¸¢Äõ ÁðÎõ ÀÊ Á¡ð§¼ý ±ý¸¢ÈÐ. ¿¡ý ¾ÅÈ¢ Ţθ¢§Èý. þó¾ò ¾Á¢í¸¢Äò¨¾ Å¡Æ ¨Åò¾Å÷¸û ¡÷? Å¡Æ ¨Å츢ÈÅ÷¸û ¡÷? ¾¢Ã¡Å¢¼ì ¸Æ¸í¸§Ç ¾ÎÁ¡È¢ ¾Á¢í¸¢Äò¾¢üÌ ¯ÚШ½Â¡¸¢È¡÷¸§Ç, ²ý? (þÐ ¦Àâ ¸¨¾. þ¨¾î ¦º¡øÄò ¦¾¡¼í¸¢É¡ø ¿õ ¿¡Êò ÐÊôÒ ±¸¢È¢Å¢Îõ. §Åñ¼¡õ ¾Å¢÷òРŢθ¢§Èý. ¦Á¡ò¾ò¾¢ø ²Á¡óÐ §À¡§É¡õ.)

«ýÒ¼ý,
þáÁ.¸¢.

5 comments:

இராதாகிருஷ்ணன் said...

ஐயா, சொற்கள் தொடர்பான சில கேள்விகள்:

media என்பதற்கு இணையாக மிடையம் என்ற சொல்லைப் பயன்படுத்துகிறீர்கள்; ஊடகம் என்று சொல்லப்படுவது பொருத்தமானதில்லையா? (இதைப்பற்றி ஏற்கனவே எழுதியிருந்தால் சுட்டி கொடுங்கள்).

இந்த வாரப்பதிவொன்றில் inifinity-க்கு 'வரம்பிலி' என்று சொல்லியிருந்தீர்கள். 'முடிவிலி' என்று பள்ளியில் படித்ததாக நினைவு. பின்னது நுணுக்கம் குறைந்ததா?

இன்று 'ரோடு'ஆகிப் போய்விட்ட சாலை, தெரு, வீதி முதலான சொற்களுக்கான வித்தியாசங்களைப் பற்றி அவகாசம் கிடைக்கும்போது கொஞ்சம் எழுதி உதவுங்கள் (ஒன்றிரண்டு அகராதிகளில் கண்ட விளக்கம் திருப்தியளிப்பதாக இல்லை).

நிறையக் கேட்டுவிட்டேன், மன்னிக்கவும்!

காசி (Kasi) said...

பல தகவல்கள், அனுபவங்கள்... வாசிக்க ஆர்வமாயும், வாசித்தவுடன் வருத்தமாயும் இருக்கிறது. ஊதுகிற சங்கு ஊதப்படட்டும். நாளை நடப்பதை யாரறிவார்?

இராம.கி said...

அன்பிற்குரிய இராதாகிருஷ்ணன், காசி,

தங்கள் பின்னூட்டிற்கு நன்றி.

இராதாகிருஷ்ணன்:

ஊடகம் என்பதில் எனக்குள்ள குறை சிறியது. ஊடு போவது என்பது உள்ளே போவது. ஒன்றின் வழியாகப் போவது. ஊடுதல் = உள்ளுதல். துகிலியலில் (textile science) நெசவில் ஊடு நூல் என்பது weft yarn யைக் குறிக்கும். ஊடுதல் என்பது இன்னொரு கருத்தாய்க் காதலருக்குள் உள்ள பொய்க் கோவத்தைக் குறிக்கும். ஊடுசெல்லுதல் என்பது osmosis என்பதையும் குறிக்கும். இவை எல்லாவற்றிலும் உள்ளே சென்று புகுந்து போவது என்ற கருத்து இருக்கும். media என்பது அப்படி அல்ல. அது நடந்ததற்கும் நமக்கும் இடையில் இருப்பது. நாம் எந்த media -விற்குள்ளும் (இதற்குப் புறனடை இடையாற்று மிடையம் - interactive medium) போவது கிடையாது. ஆங்கிலத்தில் interactive என்ற சொல்லைப் போட்டுத்தான் medium என்ற பொதுப்பொருளை விதப்பாக மாற்ற முடிகிறது என்னும் போது medium என்பதற்கு ஊடுதல் என்ற பொருள் வரமுடியாது என்பது புரிகிறதா? மிடையம் என்பது தனித்து நிற்கும் போது பட்டுமையானது (stand alone medium is passive); அது ஆற்றுமையானது அல்ல (it is not active). மிடையம் என்பது ஒரு கண்ணாடி என்று வேண்டுமானால் புரிந்து கொள்ளலாம். இடை என்ற பொருள் வரும் படி மிடையம் என்று சொல்லுகிறேன். அகநானூற்றில் ஒரு பகுதி மணிமிடைப் பவளம். மணிகளுக்கு நடுவில் பவளம் என்றும், மணிகள் மிடைந்த (பொருந்திய) பவளம் என்றும் பொருள் கொள்ளும். ஆழ ஓர்ந்து பார்த்தல் மிடைதல் என்பதற்கும், ஊடுதல் என்பதற்கும் வேறுபாடு புரியும்.

infinity என்பதற்கு முடிவிலி, ஈறிலி, வரம்பிலி, கந்தழி, கடவை எனப் பல சொற்கள் பரிந்துரைக்கப் பட்டிருக்கின்றன. இவற்றில் கந்தழி என்பதைத் தவிர வேறு எது பரவினாலும் எனக்குச் சரிதான். கந்தழி என்பது தவறான புழக்கம்.

கந்து + அழி என்பது கந்தழி ஆகும். கந்து என்பது பற்றுக் கோடு அல்லது தூண், கம்பு போன்றவற்றைக் குறிக்கும். தன்னுடைய பற்றுக்கோட்டையே அழிக்கும் என்னும் போது கந்தழி என்பது நெருப்பைக் குறிக்கும். அது ஒன்றுதானே தான் சார்ந்திருக்கும் விறகு, மரம் இன்னபிற எரிபொருள்களை எரிதல் வினை முடிந்தபின் அழித்துப் போடுகிறது? கந்தன் என்ற முருகன் பெயரும் கம்பு என்ற பொருளில் தான் எழுந்தது. அந்தக் காலத்தில் ஒரு மரம், அல்லது குச்சியை நட்டு இறைவனை வழிபடுவது வழக்கம். எத்தனையோ கோயில்களில் தலமரம் இருக்கிறது அல்லவா?

கொடிநிலை, வள்ளி, கந்தழி என்று முதற்பொருள் மூன்றாக தொல்காப்பியம் சொல்லும். அதில் கொடிநிலை என்பது சூரியன். அது எங்கும் நகராமல் நிலைத்து நிற்கிறது. எனவே அது கொடிநிலை. வள்ளி என்பது தேய்ந்து வளரும் நிலவு. கந்தழி நெருப்பு.

சாலை, வீதி, தெருக்கள் பற்றி ஒருமுறை எழுத முயலுவேன்.

காசி:

தமிங்கிலப் பழக்கம் குறைவது நம் எல்லோர் கையிலும் இருக்கிறது. சொல்லுவதைச் சொல்லிக் கொண்டே இருப்போம். நாளடைவில் மாறும். மறைமலையார் இயக்கம் தொடங்கவில்லையானால், இன்று தமிழ் மணிமிடைப் பவளமாய், சங்கதம் பெரிதும் கலந்த தமிழாய் ஆகிப் போயிருக்கும். உங்களைப் போன்றவர்கள் இதற்கு உதவ வேண்டும்.

பேச்சிற்கு சொன்னது தான் எழுத்திற்கும். இன்றைய தமிழ் எழுத்து ஒருங்குறிப் பொந்துகளில் தமிழில் இல்லாத ஓசைகளுக்கெல்லாம் இடம் கேட்டு (காட்டாக z என்ற ஒலி) தமிழெழுத்தை கிரந்த எழுத்து வரிசையாக்கத் தமிழர்களே முயன்று கொண்டிருக்கிறார்கள். இதற்கு உத்தமம் நிறுவனமும் துணை போகிறது. கிரந்த எழுத்து நம்மூரில் எழுந்தது தான். அதைப் போற்ற வேண்டியது தான். ஆனால் கிரந்த எழுத்தும் தமிழ் எழுத்தும் ஒன்றா? கிரந்தம் சங்கதம் எழுதப் பிறந்தது. தமிழெழுத்து தமிழ் எழுதப் பிறந்தது. இரண்டையும் போட்டுக் குழப்பினால் எப்படி? இதை எங்கே போய் முட்டிக் கொள்வது? துக்ளக்கின் F முயற்சி போல் தான் இது. இவர்கள் என்ன செய்கிறார்கள் என்று இவர்களுக்கு விளங்குகிறதா?

தமிழில் எழுத்துப்பெயர்ப்பு பற்றி ஒரு நாள் எழுத வேண்டும் போல் தோன்றுகிறது.

அன்புடன்,
இராம.கி.

வசந்தன்(Vasanthan) said...

நன்றி ஐயா!
அருமையாகச் சொன்னீர்கள். ஆனால் முற்றாக நம்பிக்கை இழந்துவிடும் நிலையில் நானில்லை. இது பற்றி வாற கிழமை ஒரு பதிவு எழுதும் எண்ணமிருக்கிறது. முழுக்க முழுக்க என்னுடைய அனுபவம் சார்ந்து அப்பதிவு அமையும்

இராதாகிருஷ்ணன் said...

விளக்கமான பதிலுக்கு நன்றி ஐயா!